முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்தொடர்புக்கு
+++
மூன்றா காரணம் ? அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 12
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
ஞாயிற்றுக்கிழமை, 06 மார்ச் 2011 08:26

இன்று மாலை நடந்த திமுக உயர்நிலைக் குழுக் கூட்டத்தில், ஐக்கிய முன்னணி அரசாங்கத்தில் இருந்து விலகிக் கொள்வதென்று திமுக முடிவெடுத்துள்ளதாகவும், மன்மோகன் அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு தருவதாகவும் முடிவெடுக்கப் பட்டு தீர்மானம் இயற்றப் பட்டுள்ளது.   இதற்கு காரணமாக கூறப்பட்டுள்ள விஷயம், முதலில் 60 இடங்களுக்கு ஒப்புக் கொண்டு பிறகு காங்கிரஸ் 63 வேண்டுமென்று கேட்கிறார்கள் என்பதுதான். மிக மிக முக்கியமான சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்கப் போகும் இரண்டு பெரிய கட்சிகள் வெறும் மூன்று சீட்டுகளுக்காகவா கூட்டணி உறவை முறித்துக் கொள்ளப் போகிறார்கள் ? நம்ப முடியவில்லை அல்லவா ?

திமுக காங்கிரஸ் இடையே இருந்த உறவு, 2ஜி விசாரணை தொடங்கியதிலிருந்தே உரசலில் இருந்தாலும், சட்டமன்றத் தேர்தலை இரண்டு கட்சிகளும் சேர்ந்தே சந்திக்கும் என்று சோனியாவும், கருணாநிதியும் மாற்றி மாற்றி சொல்லிக் கொண்டிருந்ததில் இருந்து இந்தச் சிறு சிறு உரசல்களைத் தாண்டி, கூட்டணி பேச்சுவார்த்தை சுமுகமாகவே அமையும் என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி வந்தனர்.

 1580083773_262b38544b_b

நேற்று நள்ளிரவு கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில், “…….அவ்வாறு கணக்கிட்ட போது காங்கிரஸ் கட்சிக்கு 51 இடங்கள் வந்தன. ஆனால் அந்த இடங்களை அதிகமாக்க வேண்டுமென்று கேட்ட காரணத்தால் 51 இடங்கள் என்பது 53 என்றாகி, பின்னர் 55 என்றாகி, 58 என்றாகி, கடைசியாக 60 இடங்கள் என்று குலாம் நபி ஆசாத் அவர்கள் மூலம் தெரிவிக்கப் பட்டது. அதனை மேல் இடத்திலே தெரிவித்து விட்டு உறுதி செய்வதாக கூறினார். ஆனால் அதன்படி அவர்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட வராததோடு இன்று இரவு தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு காங்கிரஸ் கட்சிக்கு 63 இடங்களை ஒதுக்க வேண்டுமென்றும், அந்த 63 இடங்களையும் அவர்களே நிச்சயித்துக் கேட்கும் தொகுதிகள் அத்தனையையும் தவ வேண்டுமென்றும் தெரிவிக்கின்றார்கள்.

….. காங்கிரஸ் கட்சி 60 இடங்கள் போதாதென்று 63 இடங்கள் என்று கேட்பதும் அதுவும் எந்தெந்த இடங்கள் என்று அவர்கள் கேட்பதையெல்லாம் கொடுக்க வேண்டுமென்று கேட்பதும் முறைதானா என்பதை அந்தக் கட்சிதான் முடிவு செய்ய வேண்டும்.

எனவே இது பற்றி 5.3.2011 அன்று மாலையில் நடைபெறவுள்ள உயர்நிலை செயல்திட்டக் குழுவிலே விவாதித்து தி.மு.கழகம் உரிய முடிவெடுக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று கூறியுள்ளார்.

இதன் பின்னணி தான் என்ன ?   வெறும் மூன்று சீட்டுகளுக்காக இந்தக் கூட்டணி முறிந்ததா ?

இந்தப் பின்னணியை ஆராய்வதற்கு சில ஆண்டுகள் பின்னோக்கிச் செல்ல வேண்டியிருக்கிறது.   2004 தேர்தலில் காங்கிரஸ் கட்சி திமுகவோடு கூட்டணி அமைத்தது.   அந்தத் தேர்தலில், காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்த மொத்த இடங்கள் 141. ஏறக்குறைய அதற்கு சமமாக 137 இடங்களை பிஜேபி பிடித்தாலும், மற்ற கட்சிகளின் ஆதரவு காங்கிரஸ் கட்சிக்கே கிடைத்ததால், ஆட்சி அமைத்தது.   மற்ற கட்சிகளின் ஆதரவின் அடிப்படையிலேயே மந்திரி சபை அமைக்க வேண்டிய நிர்பந்தத்தால், கூட்டணிக் கட்சிகளின் இழுத்த இழுப்புக்கெல்லாம் காங்கிரஸ் கட்சி வளைந்து கொடுக்க வேண்டியதாக இருந்தது.

அரசியலில் தன் முதல் படியை 2004 தேர்தலில் எடுத்து வைத்த, தொலைத் தொடர்புத் துறை தொடர்பாக பல்வேறு வியாபாரங்களில் ஈடுபட்டு வந்த தயாநிதி மாறனுக்கு மிக மிக முக்கியமான தொலைத் தொடர்புத் துறை வேண்டுமென்றும், இது தவிரவும், வருமானம் அதிகம் வரக்கூடிய மிகுந்த பசையான துறைகள் வேண்டுமெனவும், திமுக கொடுத்த நெருக்கடிகளுக்கு காங்கிரஸ் செவி சாய்ப்பதைத்தவிர அப்போது வேறு வழியில்லை. அந்த மந்திரி சபை அமைக்கும் சமயத்தில் கேட்ட துறைகளைத் தரவில்லை என்று, பத்திரிக்கையாளர்களை அழைத்து, காங்கிரஸ் தலைவர் ஜனார்த்தன் ரெட்டியோடு செய்து கொள்ளப் பட்ட இலாகா ஒதுக்கீடு தொடர்பான எழுத்துப் பூர்வமான ஒப்பந்தத்தை வெளியிட்டு, வெளிப்படையாக காங்கிரஸை மிரட்டினார் கருணாநிதி. பணிந்த காங்கிரஸ், மற்றொரு கூட்டணிக் கட்சியின் தலைவர் சந்திரசேகர ராவுக்கு ஒதுக்கப் பட்ட கப்பல் மற்றும் தரைவழிப் போக்குவரத்துத் துறையை பறித்து, அவரை இலாகா இல்லாத மந்திரியாக பல மாதங்கள் வைத்திருந்தது காங்கிரஸ் கட்சி.

அதன் பிறகு, மன்மோகனும், சோனியாவும், திமுகவை நம்பிக்கைக்குரிய கூட்டணிக் கட்சி என்று அவ்வப்போது அறிவித்து வந்தாலும், திமுகவின் இந்த மிரட்டல் போக்கை காங்கிரஸ் கட்சித் தலைமை மறக்கவேயில்லை.

இது நீறு பூத்த நெறுப்பாக இருந்தாலும், அமெரிக்காவுக்கு எழுதிக் கொடுத்த அடிமை சாசனத்தின் படி, அணு ஒப்பந்தம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டியிருந்ததாலும், மீண்டும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற நெருக்கடி இருந்ததாலும், பல்லைக் கடித்துக் கொண்டு, பொறுமையாக இருந்தது காங்கிரஸ்.

 1580097291_9ea7306f5a_b

காங்கிரஸ் கட்சியின் இந்த நெருக்கடியை பயன்படுத்தி, திமுக அமைச்சர்கள், வசூல் வேட்டையை நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு நடத்தினார்கள். இந்த வசூல் வேட்டைகள் அத்தனையும், காங்கிரஸ் தலைமைக்குத் தெரியும் என்றாலும், போதுமான எம்.பிக்கள் எண்ணிக்கை இல்லாததால், பல்லைக் கடித்துக் கொண்டு பொறுமையாக இருந்தார்கள்.

கப்பல் போக்குவரத்துத் துறையிலும், தரைவழிப் போக்குவரத்துத் துறையிலும் டி.ஆர்.பாலு ஒரு புறமும், ஆண்டிமுத்து மகன், சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறையில் மறுபுறமும் தொலைத் தொடர்புத் துறையில் தயாநிதி மாறன் மற்றொரு புறமும் பின்னிப் பெடலெடுத்துக் கொண்டிருந்தார்கள்.

சேர்ந்த நாள் முதலே, தயாநிதி மாறன், தனது விளையாட்டை தொடங்கினார். ராஜ் டிவிக்கு செய்தி ஒளிபரப்ப அனுமதி மறுத்ததில் தொடங்கி, டாடா டிஷ்நெட்டுக்கு அனுமதி மறுத்ததும், விஜய் டிவியில் வந்த செய்திகளை நிறுத்தியதும், புதிய சேனல்கள் திறக்க அனுமதி அளிக்காமல் தாமதப் படுத்தியதும், சன் குழுமத்திற்கு, இந்தியா முழுவதும் எஃப்எம் சேனல் தொடங்க லைசென்ஸ் பெற்றதும், தென்னிந்தியா முழுவதும், மொத்த ஊடகத்தை ‘கேடி சகோதரர்களின்’ கட்டுப் பாட்டில் கொண்டு வருவதற்கு எடுத்த முயற்சிகளும் காங்கிரஸ் கட்சிக்குத் தெரியாமல் இல்லை.

மாநிலத்தில் உள்ள உளவுத் துறையை விட, பல மடங்கு வலிமையானது மத்திய உளவுத் துறை. அத்துறைக்கு வேலையே, நாட்டில் உள்ள முக்கிய விஷயங்களை வேவு பார்ப்பதை விட, இந்த அமைச்சர்கள் யாரிடம் எவ்வளவு வாங்கிறார்கள், எந்த காண்ட்ராக்டுகள் வழங்குகிறார்கள், எந்த பெண்களுடன் உல்லாசமாக இருக்கிறார்கள், எங்கே குடிக்கிறார்கள் போன்ற விபரங்களை சேகரிப்பது தான். இது போல, எல்லா அரசுகளும் சேகரிப்பது வழக்கம்.   இப்படி சேகரித்த விபரங்கள் பத்திரமாக வைக்கப் பட்டிருக்கும்.   ஒரு அமைச்சரை ஒழித்துக் கட்ட வேண்டும் என்று எப்போது உளவுத் துறை நினைக்கிறதோ, அப்போது இந்த ஆதாரங்கள், திடீரென்று டிவி சேனல்களின் அலுவலகத்தை சென்றடையும். ஒரு மாநிலத்தின் உளவுத் துறையின் தலைவராக இருக்கும் ஜாபர் சேட்டுக்கே இத்தனை பேர் தொலைபேசியை ஒட்டுக் கேட்கும் திறமை இருக்கிறது என்றால், இந்தியாவையே ஆளும் உளவுத் துறைக்கு எத்தனை பேரின் தொலைபேசிகளை ஒட்டுக் கேட்கும் திறமை இருக்கும் ? ஜாபர் சேட் தொலைபேசி ஒட்பட…

இதே போல, திமுக அமைச்சர்களைப் பற்றியும், பல்வேறு விபரங்கள் சேகரிக்கப் பட்டுதான் இருந்தன. காங்கிரஸ் கட்சி மந்திரிகளை விட, திமுக மந்திரிகள் இவ்வளவு சம்பாதித்துக் கொண்டிருந்ததை, பல மடங்கு கூடுதலாக சம்பாதிப்பது காங்கிரஸ் கட்சிக்கும், சோனியாவுக்கும் மகிழ்ச்சியையா தரும் ?

அடுத்து நடந்ததுதான் மிகப் பெரிய நெருக்கடியாக அமைந்தது.   தயாநிதி மாறன் தான் முதலில், ஒரு மிகப்பெரிய தங்கச் சுரங்கத்துக்கு சாவியை கண்டுபிடித்தவர். அந்தத் தங்கச் சுரங்கம் தான் ஸ்பெக்ட்ரம்.

‘முதலில் வருபவருக்கே முன்னுரிமை’ என்ற ஒரு அயோக்கியத்தனமான வழிமுறையை கடைபிடித்து, ஸ்பெக்ட்ரத்தை பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களுக்கு விற்று ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை சம்பாதித்தார் மாறன். ஆனால், மாறன் சம்பாதித்தது, பெரிய அளவில் பிரச்சினை ஆகாமல், சுமூகமாகப் போனதற்கான காரணம், ஏற்கனவே செல்பேசி தொழிலில் இருக்கும், ஏர்டெல், ஏர்செல் போன்ற நிறுவனங்களுக்கு வழங்கியதால், இவர் மீது பெரிய அளவில் குற்றச் சாட்டுகள் வரவில்லை.   ஆனால், ரத்தன் டாடா என்ற சக்தி வாய்ந்த தொழில் அதிபரோடு நேரடியாக மோதியதன் மூலம் மிகப் பெரிய எதிரியை இவர் உருவாக்கிக் கொண்டார்.

 dayanidhi_maran

அடுத்து வருகிறார் ‘தகத்தகாய கதிரவன்’   மாறன் சகோதரர்களோடு ஏற்பட்ட பிணக்கை அடுத்து, தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக ஆன ஆண்டிமுத்து ராசா, வந்த நாள் முதலாகவே தனது வசூல் வேட்டையை தொடங்கினார். மாறன் போல, ராசா சாமர்த்தியசாலி இல்லை என்பதை அறிந்த தொழில் நிறுவனங்கள் ‘மிட்டாயைக் காண்பித்து திருவிழாவில் பிள்ளையைக் கடத்திக் கொண்டு போவது போல்’ ராசாவை பயன் படுத்தின இந்த நிறுவனங்கள். பணத்தை கண்ணில் காட்டியதும், அந்த நிறுவனங்கள் இழுத்த இழுப்புக்கெல்லாம் வளைந்து கொடுத்தார்.

வளைந்து கொடுத்து, வளைந்து கொடுத்து, வரலாறு காணாத ஊழல் புரிவதற்கு ஆணிவேராக இருந்தார் ராசா.   செல்பேசி சேவையில் ஏற்கனவே இருந்த பெரும் ஜாம்பவான்களை புறக்கணித்து, ரியல் எஸ்டெட் தொழில் செய்து வந்த நிறுவனங்கள், காய்கறி விற்கும் நிறுவனங்கள் போன்ற நிறுவனங்களுக்கு ஸ்பெக்ட்ரத்தை விற்றார் ராசா.

இதுவும் மத்திய உளவுத் துறை மூலம், காங்கிரசுக்கு தெரியத்தான் செய்தது.

ஈழப் போர் உச்சத்தில் இருந்த சமயத்தில் தினந்தோறும் ஆயிரக்கணக்கில் அப்பாவித் தமிழர்கள் கொன்று குவிக்கப் பட்ட விபரங்கள் நம்மைப் போலவே கருணாநிதியையும் வந்து அடையத்தான் செய்தது.   இந்தப் போர், தமிழகத்தில் மிகப் பெரிய எழுச்சியை உருவாக்கியது. இந்திய அரசின் மீது மக்களின் கோபம் திரும்பியது. இந்த நேரத்தில் கருணாநிதியும் அவர் குடும்பத்தினரும், ஸ்பெக்ட்ரம் பணத்தை அடுக்கி வைத்து அதன் மீது புரண்டு கொண்டிருந்தனர்.   மக்கள் போராட்டம் முழுமையடைந்து விடக் கூடாது என்பதால், அந்தப் போராட்டங்களை நீர்த்துப் போகச் செய்ய, புதிய புதிய போராட்டங்களை அறிவித்தார். இறுதி நேரத்தில் இலங்கைக்கு உயிர் காக்கும் மருந்துகளை கடத்த முயன்றவர்களை பிடித்து, அவர்கள் மீது பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நூற்றுக் கணக்கான இளைஞர்களை கைது செய்து சிறையில் அடைத்தது கருணாநிதி அரசு.

 karuna_evks

2009ல் மீண்டும் பாராளுமன்றத் தேர்தலை திமுவோடு கூட்டணி அமைத்துச் சந்தித்த காங்கிரஸ் கடந்த முறை போலல்லாமல், இந்த முறை தனது பலத்தை கூட்டிக் கொண்டது.   கடந்த முறை 141 இடங்களில் வென்ற காங்கிரஸ், இந்த முறை 206 இடங்களை வென்றது.   இதன் பிறகு தான் காங்கிரஸ் கட்சியின் மறுபக்கத்தை கருணாநிதி கண்டார்.   வஞ்சகத்தில் இவரை விஞ்ச ஆளே இல்லை என்று வியக்கும் அளவுக்கு வஞ்சகத்தை சோனியா வெளிப்படையாக காண்பிக்கத் தொடங்கினார்.

அந்த முகம், 60 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல் வாழ்வில் இருந்து பல்வேறு சூழ்ச்சிகளைப் பார்த்து, பல்வேறு சூழ்ச்சிகளை செய்து, மிகப் பெரிய அரசியல் நயவஞ்சகரான கருணாநிதியாலேயே சமாளிக்க முடியாமல் இருந்தது என்றால் அது மிகையில்லை.

தொடரும்.

Comments  

+1 #33 jai 2011-03-08 14:23
Nijam dhan savukku

Quoting tamil anban:
அன்புள்ள சவுக்கு ,,, யுவகிருஷ்ணா என்ற கருணாநிதியின் துதி பாடி ஒருவன் நமது சவுக்கு இணையதளத்தை தவறாக உபயோகபடுதுகிறான ். அவனது கீழ்த்தரமான வலைதளத்தை சவுக்கு மூலம் பரப்புகிறான். எல்லா செய்தி இணையதளங்களிலும் புகுந்து சர்ச்சையான விவாதங்களை பின்னுட்டம் இட்டு அதன் மூலம் அவனது கேவலமான வலைதளத்தை பிரபலபடுத்தி வருகிறான், இவனது பின்னுட்டங்களை பல செய்தி இணையதளங்களின் பார்த்திருக்கிற ேன், இப்பொழுது, இவன் நமது மதிப்பிற்கு உரிய சவுக்கிலும் நுழைந்து விட்டன. இவனை அனுமதிக்க முடியாது.. தயவு செய்து அவனது பின்னுட்டங்களை தவிர்க்குமாறும் , அவனது பின்னுட்டங்களை அகற்றுமாறும் சவுக்கின் ஒரு வருட வாசகன் என்ற வகையில் உரிமையுடன் கேட்கிறேன். இது சவுக்கின் ஒட்டுமொத்த வாசகர்களின் கருத்தாக ஏற்று கொண்டு இதை நிறைவேற்றுமாறும ் உரிமையுடன் கேட்டு கொள்கிறேன். சவுக்கின் பதிலையும் எதிர்பார்க்கிறே ன்.. உரிமையுடன் உங்கள் தம்பி..
Quote
 
+8 #32 tamil anban 2011-03-07 21:17

+5 #31 tamil anban 2011-03-07 21:13
அன்புள்ள சவுக்கு ,,, யுவகிருஷ்ணா என்ற கருணாநிதியின் துதி பாடி ஒருவன் நமது சவுக்கு இணையதளத்தை தவறாக உபயோகபடுதுகிறான ். அவனது கீழ்த்தரமான வலைதளத்தை சவுக்கு மூலம் பரப்புகிறான். எல்லா செய்தி இணையதளங்களிலும் புகுந்து சர்ச்சையான விவாதங்களை பின்னுட்டம் இட்டு அதன் மூலம் அவனது கேவலமான வலைதளத்தை பிரபலபடுத்தி வருகிறான், இவனது பின்னுட்டங்களை பல செய்தி இணையதளங்களின் பார்த்திருக்கிற ேன், இப்பொழுது, இவன் நமது மதிப்பிற்கு உரிய சவுக்கிலும் நுழைந்து விட்டன. இவனை அனுமதிக்க முடியாது.. தயவு செய்து அவனது பின்னுட்டங்களை தவிர்க்குமாறும் , அவனது பின்னுட்டங்களை அகற்றுமாறும் சவுக்கின் ஒரு வருட வாசகன் என்ற வகையில் உரிமையுடன் கேட்கிறேன். இது சவுக்கின் ஒட்டுமொத்த வாசகர்களின் கருத்தாக ஏற்று கொண்டு இதை நிறைவேற்றுமாறும ் உரிமையுடன் கேட்டு கொள்கிறேன்.
Quote
 
+2 #30 VIJAY_USA 2011-03-07 21:01
மூன்று காரணம் இல்லை. மூன்று குடும்பம் தான் காரணம்!
Quote
 
+1 #29 Man 2011-03-07 13:58
சவுக்கு வாசகர்களே, yuvakrishna அவரோட blogக்கு ஆள் புடிக்கிறார். dont fall for it.
Quote
 
+6 #28 anniyan 2011-03-07 03:12
Quoting pandiyan:
உன் வளைகபக்கதுக்கு இளுபத்ருக்கு இப்படி ஒரு ஏற்படா ? கழக வியாபராம் எல்லாம் இப்படி தான் இருக்கும். நீ ஆண்மை இருந்தால் மோத வேண்டியது CBI . அவர்கள் தான் raid ,arrrest எல்லாம் பண்ணுகின்றார்கள ் . இந்த நெஞ்சில் உரமிருந்தால், பாம்பு பல்லியுடன் படுத்து இருந்தவன் (நல்ல வீளை அந்த களத்தில் discovery சேனல் இல்லை ..) , நாடாவை உருவி பார் தெரியும் என்பது போன்ற வார்த்தை ஜாலம் எல்லாம் பழைய கதை. உனக்கு நெஞ்சில் உரமிருந்தால் நீ சிபிஐ மீது அல்லது உன் தலிவன் சிபிஐ மீது மான நஷ்ட வழக்கு போடுங்களன். சுவாமி க்கு நோட்டீஸ் மாத்ரி கமெடி யாக இல்லாமல்

திரு. பாண்டியன்
மிக நன்றாகச் சொன்னீர்கள். பெரியார் பச்சை பச்சையாக தமிழ்ப் பெண்களைப் பற்றி வர்ணித்தார். தலித் பெண்களை கேவலமாகப் பேசினார்..தங்கையின் காதல் என்று புத்தகம் எழுதினர். அதில் அண்ணன் தங்கையை உடலுறவை பற்றி எழுதினார். பிராமணர்களைத் திட்டினார். பெரு வெற்றி அடைந்தார்.

அண்ணாவோ, தன் நடிகையுடனான தகாத உறவை , 'நடிகை மைக்குப்பி.. பேனாவை விட்டு மையை எடுப்பதில் என்ன தவறு' என்று கூசாமல் மேடையில் சொன்னார்.. ஆரிய மாயை எழுதி பிராமணர்களைத் திட்டினார் ..பேரறிஞர் ஆனார்.

கருநாணநிதி பாவடை நாடவை அவிழ்த்துப் பார் என்றார்.. சட்டத்துப் புறம்பாக, திருவள்ளுவத்துக ்குப் புறம்பாக தகாத உறவு கொண்டார்.. பிராமணர்களைத் திட்டினார்.. கலைஞர் ஆனார்.. பெரும் பணக்காரர் ஆனார்.

அப்படியானால் தமிழ் நாட்டில் வெற்றி பெற என்ன தேவை? செக்சும் பிராமண எதிர்ப்பும் மட்டும்தானா?
Quote
 
+10 #27 RAJU 2011-03-07 00:42
மூன்றா காரணம் ?

yes.

மூன்று தான் காரணம் என்று ஒரு நாள்

கருணாநிதி சொல்வார்...

அந்த நாள், எந்த நாள் ?

CIT காலனி வீட்டில் CBI சோதனை நடக்கும் நாள் !!!!

ராசாத்தி அம்மாள், கனிமொழி கைது செய்யப்படும் நாள்...

கருணாநிதி பாஷையில்:

சோனியா - எழுத்து - 3

சிபிஐ (சோதனை) - எழுத்து - 3

CIT (காலனி)- எழுத்து - 3

தொகுதி பிரச்சனை - 3

திகார் (ஜெய்ல்) - 3

ஆமாம்!!!!! 3 மூலமாக ம்ம்ம்ம்முன் எச்சரிக்கையாம் .....(கொன்ஜம் 'லொல்லு சபா' MANOHAR ஸ்டைலில் சொல்லி பாருன்க)
Quote
 
+3 #26 Siva S 2011-03-06 23:17
Quoting யுவகிருஷ்ணா:
இங்கு நான் வைத்த பல கருத்துகளுக்கு சவுக்கின் ஜால்ராக்கள் அந்த கருத்துகளில் உள்ள உண்மையின் வெப்பம் தாங்க முடியாமல் என்னையும், என் தலைவனையும் ஏசுவதும் எழுதுவதுமாகவும் உள்ளனர். பாவம். பரவாயில்லை. என் வலைப்பக்கமான (www .luckylookonline .com )ல் கொடுக்கப் பட்ட என் தொடர்புகளை இங்கே சவுக்கின் ஜால்ராக்களுக்கு தந்துள்ளேன். கருத்து மோதலுக்கு நான் தயார். நெஞ்சில் உரமிருந்தால் நீங்கள் தயாரா?
மின்னஞ்சல் : yuvakrishna@gma il.com
கைப்பேசி :+919841354308

காத்திருக்கிறேன ் ஜால்ராக்களே...!!!

Aiyoo ramaa... ivanungalukku Karunanithi kudumbam mathiriye ellarum tharkuriu nenapu. Internet la ennama comedy panranunga paarunga... Yaarupa athu? Jaffer or Jagath?
Quote
 
+14 #25 காலவன் 2011-03-06 22:05
தம்பி யுவ கிருஷ்ணா... நீ வெளிக்கி போற அடைப்புல உக்காந்துகிட்டு என் ஏரியா வா வான்னு .. வடிவேல் மாறி எங்கள கூப்பிடாத அந்த நாறிப்போன இடங்களுக்கு சவுக்கு வாசகர்கள் வரமாட்டார்கள் நீ அங்கியே நாறிக்கிட்டு இரு இங்க வராத.. மலத்தில் நெளியும் புழுக்களுக்கு சவுக்கின் தளத்தில் என்ன வேலை.
Quote
 
+7 #24 RAJU 2011-03-06 21:16
Quoting யுவகிருஷ்ணா:
இங்கு நான் வைத்த பல கருத்துகளுக்கு சவுக்கின் ஜால்ராக்கள் அந்த கருத்துகளில் உள்ள உண்மையின் வெப்பம் தாங்க முடியாமல் என்னையும், என் தலைவனையும் ஏசுவதும் எழுதுவதுமாகவும் உள்ளனர். பாவம். பரவாயில்லை. என் வலைப்பக்கமான (www .luckylookonline .com )ல் கொடுக்கப் பட்ட என் தொடர்புகளை இங்கே சவுக்கின் ஜால்ராக்களுக்கு தந்துள்ளேன். கருத்து மோதலுக்கு நான் தயார். நெஞ்சில் உரமிருந்தால் நீங்கள் தயாரா?
மின்னஞ்சல் : yuvakrishna@gma il.com
கைப்பேசி :+919841354308

காத்திருக்கிறேன ் ஜால்ராக்களே...!!!

Mr. Yuvakrishna,

U r promoting your website through
savukku???

Dont induce savubrows(savuk ku-browsers) to vist your site ....
Quote
 
-2 #23 RAJU 2011-03-06 20:20
Quoting Sirutha:
யோவ் சவுக்கு என்னமோ ஊரு உலகத்துல எந்த அரசியல்வாதியும் பண்ணாததை திமுக செஞ்சதா பில்டப் கொடுத்துட்டு இருக்கியே. எப்படி இருந்தாலும் காங்கிரசுக்கு ஆப்பு தான். ஆமா இந்த காமரஜ் ஜாபர்சேட்டுன்னு அடிக்கடி பொலம்புறியே இவங்கலுக்கும் மக்களுக்கும் என்னய்யா சம்பந்தம் அவங்க மேல மக்களுக்கு வெறுப்பு வறதால யாருக்கு என்ன லாபம். மொதல்ல இவங்க எல்லாம் யாரு எந்த நாட்டு பிரதமருங்க. உங்க பக்கத்து வீட்டு காரங்களோட சண்டை போடுறதெல்லாம் இங்க கொண்டாந்து கொட்டுவியா..............

SIRUTHA,,

JAFFER SAIT, KAMARAJ ELLAM YARUNU THERIYADHA?

KALAIGNAR UKKANDHU SAVAARI SEIYRARLA CHAIR,, ADHULA IRUKRA WHELL MADHIRI..
WHEEL ILLANA CHAIR EPPADI NAGARUM ???

ANY MORE EXAMPLE U NEED?
Quote
 
+19 #22 Shankar D 2011-03-06 20:13
ஏய் யுவக்ருஷ்ணா, கருணா கும்பல்கிட்ட எவ்வளவுடா வாங்கி திங்கற நாயே. உன்னை மாதிரி பொறம்போக்குகளுக ்கு சவுக்குல இடமில்லை. உன் சைட்ல ஆள் இல்லன இங்க வந்து ஏன்டா ஒப்படி வைக்கிற
Quote
 
+10 #21 சித்திரகுப்தன் 2011-03-06 20:13
யுவகிருஷ்ணா 2011-03-06 13:56
இங்கு நான் வைத்த பல கருத்துகளுக்கு சவுக்கின் ஜால்ராக்கள் அந்த கருத்துகளில் உள்ள உண்மையின் வெப்பம் தாங்க முடியாமல் என்னையும், என் தலைவனையும் ஏசுவதும் எழுதுவதுமாகவும் உள்ளனர். பாவம். பரவாயில்லை. என் வலைப்பக்கமான (www .luckylookonline .com )ல் கொடுக்கப் பட்ட என் தொடர்புகளை இங்கே சவுக்கின் ஜால்ராக்களுக்கு தந்துள்ளேன். கருத்து மோதலுக்கு நான் தயார். நெஞ்சில் உரமிருந்தால் நீங்கள் தயாரா?
மின்னஞ்சல் : yuvakrishna@gma il.com
கைப்பேசி :+919841354308

காத்திருக்கிறேன ் ஜால்ராக்களே...!!!

பன்றியை கண்டால் ஒதுங்கித்தான் போகவேண்டும்.பக்கத்தில் வருகிறது என கட்டிப்ப்புரள முடியாது.சவுக்கினை முன் பின் பார்த்தது கிடையாது.ஜால்ரா அடிக்கவேண்டிய அவசிய்மும் இல்லை.காரணம்,சவுக்கு எங்களுக்கு குவட்ட்ர் பாட்டிலோ,கோழிபி ரியாணியோ வாங்கிகொடுப்பதி ல்லை,காரியம் சாதிப்பதற்கு.
Quote
 
+9 #20 pandiyan 2011-03-06 20:03
உன் வளைகபக்கதுக்கு இளுபத்ருக்கு இப்படி ஒரு ஏற்படா ? கழக வியாபராம் எல்லாம் இப்படி தான் இருக்கும். நீ ஆண்மை இருந்தால் மோத வேண்டியது CBI . அவர்கள் தான் raid ,arrrest எல்லாம் பண்ணுகின்றார்கள ் . இந்த நெஞ்சில் உரமிருந்தால், பாம்பு பல்லியுடன் படுத்து இருந்தவன் (நல்ல வீளை அந்த களத்தில் discovery சேனல் இல்லை ..) , நாடாவை உருவி பார் தெரியும் என்பது போன்ற வார்த்தை ஜாலம் எல்லாம் பழைய கதை. உனக்கு நெஞ்சில் உரமிருந்தால் நீ சிபிஐ மீது அல்லது உன் தலிவன் சிபிஐ மீது மான நஷ்ட வழக்கு போடுங்களன். சுவாமி க்கு நோட்டீஸ் மாத்ரி கமெடி யாக இல்லாமல்

Quoting யுவகிருஷ்ணா:
இங்கு நான் வைத்த பல கருத்துகளுக்கு சவுக்கின் ஜால்ராக்கள் அந்த கருத்துகளில் உள்ள உண்மையின் வெப்பம் தாங்க முடியாமல் என்னையும், என் தலைவனையும் ஏசுவதும் எழுதுவதுமாகவும் உள்ளனர். பாவம். பரவாயில்லை. என் வலைப்பக்கமான (www .luckylookonline .com )ல் கொடுக்கப் பட்ட என் தொடர்புகளை இங்கே சவுக்கின் ஜால்ராக்களுக்கு தந்துள்ளேன். கருத்து மோதலுக்கு நான் தயார். நெஞ்சில் உரமிருந்தால் நீங்கள் தயாரா?
மின்னஞ்சல் : yuvakrishna@gma il.com
கைப்பேசி :+919841354308

காத்திருக்கிறேன ் ஜால்ராக்களே...!!!
Quote
 
+12 #19 தமிழன்.. 2011-03-06 20:01
\\..இங்கு நான் வைத்த பல கருத்துகளுக்கு சவுக்கின் ஜால்ராக்கள் அந்த கருத்துகளில் உள்ள உண்மையின் வெப்பம் தாங்க முடியாமல் என்னையும், என் தலைவனையும் ஏசுவதும் எழுதுவதுமாகவும் உள்ளனர். பாவம். பரவாயில்லை. என் வலைப்பக்கமான (www .luckylookonline .com )ல் கொடுக்கப் பட்ட என் தொடர்புகளை இங்கே சவுக்கின் ஜால்ராக்களுக்கு தந்துள்ளேன். கருத்து மோதலுக்கு நான் தயார். நெஞ்சில் உரமிருந்தால் நீங்கள் தயாரா?
மின்னஞ்சல் : yuvakrishna@gma il.com
கைப்பேசி :+919841354308

காத்திருக்கிறேன ் ஜால்ராக்களே...!!!..\\..

அவ்வ்வ்வ்வ்...ங்கொய்யால...வாங்குன காசை விட அதிகமாக கூவுறாண்டா....

யாரு ஜால்ரான்னு உன்னோட பதிவுகளை நீயே உக்காந்து படி.. அதவிட்டுட்டு கப்பிதனமா இங்க வந்து கத்தாத.. முடிந்தால் மதிமுகவின் நாஞ்சில் சம்பத்திடம் விவாதத்திற்கு போ.. அவருக்கு பதில் சொல்லு எங்களை என்ன உன்ன மாதிரி அல்லக்கை என்று நினைக்கிறியா
Quote
 
+9 #18 சூதாடி 2011-03-06 18:39
Quoting Sirutha:
யோவ் சவுக்கு என்னமோ ஊரு உலகத்துல எந்த அரசியல்வாதியும் பண்ணாததை திமுக செஞ்சதா பில்டப் கொடுத்துட்டு இருக்கியே. எப்படி இருந்தாலும் காங்கிரசுக்கு ஆப்பு தான். ஆமா இந்த காமரஜ் ஜாபர்சேட்டுன்னு அடிக்கடி பொலம்புறியே இவங்கலுக்கும் மக்களுக்கும் என்னய்யா சம்பந்தம் அவங்க மேல மக்களுக்கு வெறுப்பு வறதால யாருக்கு என்ன லாபம். மொதல்ல இவங்க எல்லாம் யாரு எந்த நாட்டு பிரதமருங்க. உங்க பக்கத்து வீட்டு காரங்களோட சண்டை போடுறதெல்லாம் இங்க கொண்டாந்து கொட்டுவியா..............

அப்பு சிறுத்த
திருடனை பத்தி எழுதும்போது அவனோட அல்லைகை பதியும் தான் எழுத வேண்டி இருக்கும்..
ஒரு மனுஷன் தெனம் கண்ண முழிச்சு செய்திய தெரட்டி எழுதறான்.. அதை நோவாமா ஓசிலே
படிக்கிரதுமில்ல மே கொரை சொல்ல வந்துட்டே .. காசு குடுத்து வாங்கி படிக்கிற பத்திரிகைஎலே
இதெல்லாம் வந்த அங்க பொய் ஊளை விடு போ ..
Quote
 
+8 #17 sakthy 2011-03-06 18:20
யுவகிருஷ்ணா அண்ணா உங்களை நான் திட்டித் தீர்க்கப் போவதில்லை. நீங்கள் ஒன்றும் தெரியாத சிறு பிள்ளை. உங்களை பிரபலப் படுத்த தகவல்களை தந்துள்ளீர்கள். ஆனால் அண்ணா, நீங்கள் கொஞ்சம் அடம் பிடிக்கிறீர்கள் . வீட்டில் ஒரே பிள்ளை போல் இருக்கிறது. உண்மையை உணருங்கள். சிந்தியுங்கள். கி.வீ. ; சுபவீ போல் ஜால்றா போடாதீர்கள். இப்போது புரிகிறதா ஜால்றா என்றால் என்ன என்று. அதாவது உண்மையை தெரிந்திருந்தும ், தெரியாதது போல், கண்ணை மூடி பூனை பால் குடிக்குமே அது போல்,நடித்து ஆமா போடுவார்களே அவர்கள்.
Quote
 
+14 #16 Elan 2011-03-06 17:15
கருத்து கணிப்பின்படி அ இ அ தி மு க கூட்டணிக்கே இந்த தேர்தலில் வெல்லும் வாய்ப்பு உள்ளது! இதை உடைக்க, தி மு க மற்றும் காங்கிரஸ் டிராமாவே இது!

அ இ அ தி மு க விற்கு குழப்பத்தை ஏற்படுத்தி காங்கிரஸ் அ இ அ தி மு க கூட்டணியில் இடம்பெறசெய்து! தி மு க கூட்டணியில் ம தி மு க மற்றும் கம்யூனிஸ்ட் சேர்க்க செய்தால்! அ இ அ தி மு க கூட்டணி வெற்றிவாய்ப்பை தடுத்து, மறுபடியும் தமிழர்கள் அதறுவுடன் தி மு க ஆட்சி அமைக்க வழிவகுக்கும்!

தேர்தலுக்கு பிண் காங்கிரஸ் கூட்டணியில் தி மு க வை இணைய செய்து அவர்கள் கொள்ளைஅடிக்கும் வேலையை தொடங்குவார்கள், அதற்கு ஒரு டோகெனே டி ஆர் பாலு விடும் காங்கிரஸ் ஆட்சிக்கு வெளில் இருந்து அதரவு என்னும் அறிக்கை!

அ இ அ தி மு க இந்த வலையில் விழுமா என்பதே இப்போதைய கேள்வி!!!
Quote
 
+5 #15 nandu 2011-03-06 16:17
இந்த கிழவன் வேறு ஏதோ பெரிய திட்டம் வைத்து இருக்கிறான் ...உஷார் மக்களே..
தி மு க க்கு ஜால்ல்ரா அடிபவர்களே..விடுங்கடா நீங்க கொள்ளை அடிச்சது ..அடுத்து வேற யாரவது வந்து கொள்ளை அடிக்கட்டுமே ...நீங்க மாடும்தான் கொள்ளை அடிக்கணுமா .இது ஜனநாயக நாடுடா..
Quote
 
+8 #14 kali.krishna 2011-03-06 15:31
Quoting யுவகிருஷ்ணா:
இங்கு நான் வைத்த பல கருத்துகளுக்கு சவுக்கின் ஜால்ராக்கள் அந்த கருத்துகளில் உள்ள உண்மையின் வெப்பம் தாங்க முடியாமல் என்னையும், என் தலைவனையும் ஏசுவதும் எழுதுவதுமாகவும் உள்ளனர். பாவம். பரவாயில்லை. என் வலைப்பக்கமான (www .luckylookonline .com )ல் கொடுக்கப் பட்ட என் தொடர்புகளை இங்கே சவுக்கின் ஜால்ராக்களுக்கு தந்துள்ளேன். கருத்து மோதலுக்கு நான் தயார். நெஞ்சில் உரமிருந்தால் நீங்கள் தயாரா?
மின்னஞ்சல் : yuvakrishna@gma il.com
கைப்பேசி :+919841354308

காத்திருக்கிறேன ் ஜால்ராக்களே...!!!

நாங்கள் சவுக்கின் ஜால்ராக்கள் அல்ல நண்பரே. சவுக்கின் தோழர்கள். ஒருமித்த கருத்துகொண்டு ஒரே நோக்கத்திற்காக செயட்படுகிறவர்க ள் தோழர்கள். பிச்சை போட்டவன் எது சொன்னாலும் கேட்டுக்கொண்டு தலையாட்டுகிறவர் கள் ஜால்ராக்கள். இந்த 'ஜால்ராக்கள்' பதம் உங்களுக்குதான் கன கட்சிதமாக பொருந்துகிறது நண்பரே.......

அதோட உங்களை அண்மையில் ஒரு இடத்திலிருந்து விரட்டியச்சமே... அப்படி என்னதான் பண்ணீங்க.
Quote
 
+12 #13 வாலி 2011-03-06 15:19
Quoting யுவகிருஷ்ணா:
இங்கு நான் வைத்த பல கருத்துகளுக்கு சவுக்கின் ஜால்ராக்கள் அந்த கருத்துகளில் உள்ள உண்மையின் வெப்பம் தாங்க முடியாமல் என்னையும், என் தலைவனையும் ஏசுவதும் எழுதுவதுமாகவும் உள்ளனர். பாவம். பரவாயில்லை. என் வலைப்பக்கமான (www .luckylookonline .com )ல் கொடுக்கப் பட்ட என் தொடர்புகளை இங்கே சவுக்கின் ஜால்ராக்களுக்கு தந்துள்ளேன். கருத்து மோதலுக்கு நான் தயார். நெஞ்சில் உரமிருந்தால் நீங்கள் தயாரா?
மின்னஞ்சல் : yuvakrishna@gma il.com
கைப்பேசி :+919841354308

காத்திருக்கிறேன ் ஜால்ராக்களே...!!!

Mr யுவ ஓணான் .ஒன்னய யாரப்பா ரெலிபோன் நம்பர் எல்லாம் கேட்டா, ஒன் விளையாட்டுத்தனத ்தில ஒண்ணு கெடக்க ஒண்ணாகிடப்போவுத ு கொழந்தப்புள்ளயா ட்டம் அடம் புடிக்காத, கருணாநிதியென்ன எந்த மசிராண்டியா இருந்தாலும் பிழைன்னா இதுக்கு மேலயும் விமர்சிப்போம்,,

நீ திருடன் கருணாநிதியின் ஜால்ரா,, நீ எதிர்பார்ப்பது ஒண்ணும் நடக்கப்போவதில்ல ை மவனே , ஏன்னா கருத்து மோதலுக்கு கூப்பிடுறியே, ஓங் கருத்துத்தான் ஓம் பின்னூட்டம் மூலமா சவுக்குல சிரிக்குதே, என்ன செய்ய எவனுமே கணக்கில எடுத்துக்க மாட்டேங்கிறான். உன்கிட்ட என்ன கருத்த எங்களப்போல அறிவாளிகள் எதிர்பார்க்க முடியும், மொதல்ல கோவாலபுரத்துக்க ும் CID கொலனிக்கும் போயி கழுவிட்டு ஒக்காந்துக்க. தெருமா, குஞ்சாமணி, ராமதாசு மாமா, வருவாங்க பேசிட்டு கலஞ்சு போயிட்டே இரு திரும்பி இந்தப்பக்கம் வந்தே மவனே கட்டிப்போட்டு நலமடிச்சு அனுப்பிடுவோம்,,
Quote
 
+11 #12 jai 2011-03-06 15:04
தன்மான தளபதி குஞ்சா மணி: தலைவரே, கவலை படாதீங்க... நாளை நான் வேனும்ன ஒரு அறிக்கை விடுறேன், ஏழு ஆண்டு பந்தம் காரணமாய் மறு பரிசீலனை செய்து காங்கிரஸ் கட்சியை மறுபடியும் சேர்த்துட்டேன் அப்படின்னு.. இன்னா சொல்றீங்க ? ஒரு ஐநூறு ரூபா கொடுங்க, இந்த அறிக்கை விட்டுடறேன், போன அறிக்கை விட்டதற்கு வெறும் நூறு ரூபா, சரக்கு அடிக்க கூட பத்தல தலிவா ...

தொடை நடுங்கி திருமா : தலிவா எனக்கு நூறு ருபாய் கொடுத்தா போதும், நான் அறிக்கை விடுறேன்......

சிரிப்பு போலீஸ் ராமதாஸ்: அய்யா நான் அறிக்கை விடுகிறேன்.... எனக்கு நூறு ரூபா கூட வேண்டாம், என்ன கட்சில செர்ததர்கி உனக்கு கோயில் கட்டனும்..... உன் காலு செருப்பா இருக்கேன், அதுல்ல சானிய மட்டும் மிதிசுடாதே தலிவா .....

திருடர் குல திலகம் : என் உயிரினும் மேலான கூட்டணி தம்பிகளே, இன்று முலாயம் சிங்க் பதில் வந்தவுடன், நீங்கள் அனுப்ப வேண்டிய அறிக்கை உங்கள் தலைமைக்கு வந்து விடும்.... பொறுமை காக்கவும்......
Quote
 
-1 #11 Manoharan Thangavelu 2011-03-06 14:51
எது எப்படியோ. தமிழ் நாட்டில் காங்கிரஸ் தனக்கு குழி பறிக்கப் போவதை அதுவே முடிவு செய்யட்டும். நாடாளு மன்றத்துக்கு அதிக இடம் கேட்டால் அதில் சாணக்கியத்தனம் இருக்கும். சட்ட மன்றத்தில் என்ன கிழித்திருக்கிற ார்கள்? தனியாக தெனாவட்டு இருந்தால் நிற்கட்டும்.
Quote
 
+5 #10 KK 2011-03-06 14:28
Sunday, March 06,2011 02:03 PM, நல்லவன் said:
பிணாமி ராசாவை வைத்து ஸ்பெக்ட்ரம் மூலம் மட்டும் ஒரு லட்சத்து எண்பதாயிரம் கோடி ரூபாய் கல்லா கட்டுனோம். எதோ மணல் கொள்ளை, அரிசி கடத்தல், பாலம் கட்டுறது, பொதுப்பணித்துறை , போக்குவரத்து துறை என்று சில கோடிகள் பாத்தோம். தமிழகத்தில் தொழில் தொடங்கும் வெளிநாட்டு முதலாளிகளிடமிரு ந்து கொஞ்சம் கோடிகள் பிடுங்கினோம். இந்த நான்கரை ஆண்டுகளில் குறைந்தது ப‌த்து லட்சம் கோடி ரூபாய் மட்டும்தான் ஆட்டயப்போட்டிரு ப்போம். பத்து லட்சம் கோடி ரூபாய் அதாவது 225 பில்லியன் டாலர்கள். முப்பது வருடங்களில் 70 பில்லியன் டால்ர் ஆட்டயப்போட்ட முபாரக் எங்கே, நாலே வருடத்தில் 225 பில்லியன் டாலர்கள் ஆட்டயப்போட்ட எங்கள் தானைத்தலைவர் எங்கே? முப்பது வருடம் எங்கள் தலைவர் குடும்பத்திடம் தொடர்ந்து ஆட்சியை கொடுத்தால் அமெரிக்காவையே விலைக்கு வாங்கிவிடுவார்க ள்.......................................................... தன்மானம் சுயமரியாதை கிலோ என்ன விலை ?....திருடர்கள் போலிஸ் காரனிடம் மரியாதையினை எதிர் பார்க்கக் கூடாது ! கையில் மடியில் இருப்பதை அவன் கேட்பதை கொடுத்து விட்டு ஜெயிலில் அடைபட்டு களி தின்னாமல் தப்பித்துக் கொள்வது புத்திசாலித் தனம் ! இல்லையென்றால் திருட்டுப் பய பொண்டாட்டி...திருட்டுப் பய மக அப்படின்னு சொல்லி புடுச்சு தூக்கிக் கொண்டு போய் கம்பி என்ன போட்டுருவாங்க ! எதுக்கும் யோசுச்சு முடிவெடுங்க.................................................................................................................. தன்மானம் சுயமரியாதை கிலோ என்ன விலை ?....திருடர்கள் போலிஸ் காரனிடம் மரியாதையினை எதிர் பார்க்கக் கூடாது ! கையில் மடியில் இருப்பதை அவன் கேட்பதை கொடுத்து விட்டு ஜெயிலில் அடைபட்டு களி தின்னாமல் தப்பித்துக் கொள்வது புத்திசாலித் தனம் ! இல்லையென்றால் திருட்டுப் பய பொண்டாட்டி...திருட்டுப் பய மக அப்படின்னு சொல்லி புடுச்சு தூக்கிக் கொண்டு போய் கம்பி என்ன போட்டுருவாங்க ! எதுக்கும் யோசுச்சு முடிவெடுங
Quote
 
-40 #9 யுவகிருஷ்ணா 2011-03-06 13:56
இங்கு நான் வைத்த பல கருத்துகளுக்கு சவுக்கின் ஜால்ராக்கள் அந்த கருத்துகளில் உள்ள உண்மையின் வெப்பம் தாங்க முடியாமல் என்னையும், என் தலைவனையும் ஏசுவதும் எழுதுவதுமாகவும் உள்ளனர். பாவம். பரவாயில்லை. என் வலைப்பக்கமான (www .luckylookonline .com )ல் கொடுக்கப் பட்ட என் தொடர்புகளை இங்கே சவுக்கின் ஜால்ராக்களுக்கு தந்துள்ளேன். கருத்து மோதலுக்கு நான் தயார். நெஞ்சில் உரமிருந்தால் நீங்கள் தயாரா?
மின்னஞ்சல் : yuvakrishna@gma il.com
கைப்பேசி :+919841354308

காத்திருக்கிறேன ் ஜால்ராக்களே...!!!
Quote
 
+16 #8 abdul 2011-03-06 13:11
கருணாநிதி பிரகட்சிகளுக்கு ள் குழப்பத்தை உண்டுபண்ணி அக்கட்சிகளை உடைப்பதும்.அதில் ஒருசாராரை தனக்கு ஆதரவாக திருப்புவதும்.தனது கூட்டணி கட்சிகளையே தொகுதி பங்கீட்டின் போது நெருக்கடிக்கு உள்ளாக்கி ஏமாற்றுவதும் கருணாநிதிக்கு கைவந்த கலை இதுபோன்ற கருணாநிதியின் சூல்சிக்கும் நயவஞ்சக தனத்திற்கும் அவரது அடிப்பொடிகளின் மூலம் இது கலைஞரின் அரசியல் சாணக்கியத்தனம்.ராஜதந்திரம் என பேசவைப்பது.வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்பதற்கேற்ப காங்கிரஸ் கருணாநிதியை புலம்ப வைத்திருக்கிறது . காங்கிரஸ் கூட்டணியை முறித்துக்கொண்ட ு கருணாநிதி நிம்மதியாக தேர்தலை சந்திக்க போவதில்லை.அவர் மனதில் ஏற்படப்போகும் தோல்வி பயம் அவரை ஆட்டிப் படைத்து தேர்தல் முடிவு வருவதற்குள் வாழ்கையின் முடிவிற்கே அவர் வரக்கூடும்.எனவே அவர் காங்கிரஸ் உறவை உதாசீனப்படுத்தம ாட்டார்.காங்கிரஸ் கூட்டணியுடன் தேர்தலை சந்தித்தாலும் தனித்து ஆட்சி அமைக்கும் அளவுக்கு பெருபான்மை கிடைப்பது குதிரை கொம்புதான்.
Quote
 
+11 #7 Vikadakavi 2011-03-06 11:32
மிட்டாயைக் காண்பித்து திருவிழாவில் பிள்ளையைக் கடத்திக் கொண்டு போவது போல்’ - Super Savukku.

By seeing lot of new posts in last few days, I think our Savukku is doing well with his court cases. I cant wait to hear how Savukku is tackling his cases. Well done!
Quote
 
-8 #6 jinnah 2011-03-06 11:03
டெல்லிக்கு தமிழ்நாடு ஒரு sensitive ஸ்டேட் என்று உணர்த்திய கலைஞர் அவர்களுக்கும் புரட்சி தலைவி அவர்களுக்கும் நன்றி . நாமார்க்கும் அஞ்சோம் .எமனை வெல்வோம்.தமிழகம் ஒன்று பட்டால் டெல்லி நம் காலடியில். இது தி மு க மற்றும் அ தி மு க இரண்டு கட்சிகளுக்கும் பொருந்தும். எப்போதும் கடிவாளத்தை வைத்திருங்கள் அதை மக்களுக்காக மட்டும் பயன்படுத்துங்கள ் தலைவர் தலைவிகளே
Quote
 
-23 #5 Sirutha 2011-03-06 11:02
யோவ் சவுக்கு என்னமோ ஊரு உலகத்துல எந்த அரசியல்வாதியும் பண்ணாததை திமுக செஞ்சதா பில்டப் கொடுத்துட்டு இருக்கியே. எப்படி இருந்தாலும் காங்கிரசுக்கு ஆப்பு தான். ஆமா இந்த காமரஜ் ஜாபர்சேட்டுன்னு அடிக்கடி பொலம்புறியே இவங்கலுக்கும் மக்களுக்கும் என்னய்யா சம்பந்தம் அவங்க மேல மக்களுக்கு வெறுப்பு வறதால யாருக்கு என்ன லாபம். மொதல்ல இவங்க எல்லாம் யாரு எந்த நாட்டு பிரதமருங்க. உங்க பக்கத்து வீட்டு காரங்களோட சண்டை போடுறதெல்லாம் இங்க கொண்டாந்து கொட்டுவியா..............
Quote
 
+5 #4 ஈசன் 2011-03-06 10:09
கூட்டணி உடைந்தால் காங்கிரசுக்குத் தான் படுநட்டம். தமிழ்நாட்டில் ஒரு தொகுதியில் கூட வெல்லமுடியாது.
Quote
 
+1 #3 shueib 2011-03-06 10:03
read the below link. it is excellent

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=198939
Quote
 
+31 #2 Kumar.T 2011-03-06 09:36
காத்திருந்து வஞ்சம் தீர்ப்பதில் வல்லவர் இந்த சோனியா என்பதை கடந்த கால நிகழ்வுகள் மூலம் தெளிவாக தெரியும்.. இந்த ஒரு சோனியா பல கருணாநிதிக்கு சமம்...
சும்மா இல்ல "முசோலினி பரம்பரை" அப்பு... :-)
Quote
 
+26 #1 வாலி 2011-03-06 09:06
வல்லவனுக்கு வல்லவி (இத்தாலியிலும்) வையகத்திலும் உண்டு என்பதை முதலைக்கு உறைக்க உணர்த்தியிருக்க ிறது. மலைப்பாம்பை அடித்துப்போட்டு ள்ள இத்தாலி கீரி.
Quote
 
Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English

தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 109 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday1311
mod_vvisit_counterYesterday13577
mod_vvisit_counterThis week58888
mod_vvisit_counterLast week95167
mod_vvisit_counterThis month281148
mod_vvisit_counterLast month382199
mod_vvisit_counterAll days13197515