|
2009ம் பாராளுமன்றத் தேர்தலுக்குப் பின் அமைச்சரவை உருவாக்கத்தின் போது, 2004 நினைப்பிலேயே இருந்த கருணாநிதிக்கு, காங்கிரஸின் மாறுபட்ட முகம் தெரியத் தொடங்கியது.
ஈழப் போர் முடிவுக்கு வந்து, தமிழகமெங்கும் ஒரு கனத்த அமைதி நிலவிக் கொண்டிருந்த போது, கருணாநிதி குடும்பத்தினர், நீரா ராடியாவோடு, யாருக்கு எந்த இலாகா என்று பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தனர். கருணாநிதி தனது பழைய பந்தாவை பயன்படுத்தி மீண்டும், அதே இலாக்காக்கள் வேண்டுமென நெருக்கடி கொடுத்தும், காங்கிரஸ் பணிவதாக இல்லை. ஆனாலும், ஏற்கனவே, பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய்களை கொள்ளையடித்து ருசி கண்ட கருணாநிதி, தொலைத் தொடர்புத் துறை வேண்டும் என்பதில் மட்டும் பிடிவாதமாக இருந்தார். ஆனால், காங்கிரஸ், தொலைத் தொடர்புத் துறையை கொடுப்பதில் சமரசம் செய்து கொண்டாலும், டி.ஆர்.பாலு, வேண்டாம் என்பதிலும், மீண்டும், வனம் மற்றும் சுற்றுச் சூழல் துறையை வழங்கப் போவதில்லை என்பதிலும் முனைப்பாக இருந்தது. புது தில்லி சென்ற கருணாநிதி, கேட்ட துறைகள் வழங்கப் படவில்லை என்றதும், எரிச்சலடைந்து, தனது 18 எம்பிக்களையும் அழைத்துக் கொண்டு, சென்னை திரும்பப் போவதற்கு தயாராக, விமான டிக்கட்டுகளை ப்ளாக் செய்தும் கூட, காங்கிரஸ் சமரசத்துக்கு தயாராக இல்லை.
கோபித்துக் கொண்ட புது மாப்பிள்ளை போல, கருணாநிதி, பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல், சென்னை திரும்பினார்.

கடந்த முறை போலவே, அனைத்து துறைகளிலும் பணத்தை அள்ளலாம் என்று, எதிர்ப்பார்த்திருந்த திமுகவுக்கு, பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. முக்கியமான டெண்டர் உள்ளிட்ட விவகாரங்களில், பிரதமர் மன்மோகன் அல்லது, பிரணாப் முகர்ஜி போன்ற முக்கிய அமைச்சர்கள் அடங்கிய அமைச்சரவைக் குழுதான் முடிவு செய்யும் என்ற விதி அமலுக்கு வந்ததும், திமுக அமைச்சர்கள் எந்த விவகாரத்திலும் காசு பார்க்க முடியாமல், கடும் எரிச்சலடைந்தனர்.
யுபிஏ 2 அரசு பதவியேற்றதிலிருந்தே, திமுகவுக்கும் கருணாநிதிக்கும் நெருக்கடி தான். இதன் நடுவே, 2008ல் பயனீர் நாளேடு, 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் நடந்த ஊழல்கள் குறித்து செய்திகள் வெளியிட்டதும், 2009ல் அந்த விஷயம் சூடு பிடிக்கத் தொடங்கியது. தொலைத் தொடர்புத் துறையை பெயருக்கு ராசாவுக்கு கொடுத்து விட்டு, ராசா பதவியேற்ற ஒரு சில மாதங்களிலேயே, அவரது தொலைத் தொடர்பு அமைச்சகத்தில் சிபிஐ சோதனைகள் நடத்தியது.
ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் திமுகவை ஒவ்வொரு கட்டத்திலும் நெருக்கடி கொடுத்து, நிலைகுலையச் செய்தது காங்கிரஸ். தொடர்ந்து பல்வேறு சமயங்களில், ஸ்பெக்ட்ரம் விவகாரம் உயிரோடு இருக்கும் வகையில், பத்திரிக்கைகளுக்கு பல்வேறு தகவல்களை கொடுத்துக் கொண்டிருந்தது காங்கிரஸ் கட்சி. இதன் நடுவே, தமிழகத்தில் காங்கிரஸ் கட்சித் தலைவர் ஈவிகேஎஸ்.இளங்கோவன், திமுக அரசு மீது சராமரியான தாக்கதல்களை தொடுக்கத் தொடங்கினார். இளங்கோவனின் சில வார்த்தைகள், திமுகவை நெளியச் செய்தது. ஒரு கட்டத்தில் இளங்கோவன், காங்கிரஸ் போட்ட பிச்சையில் திமுக தமிழகத்தில் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது என்று பேசினார்.

திமுக லேசாக அவ்வப்போது, இளங்கோவனின் பேச்சுகளுக்கு எதிர்ப்புக் குரல் கொடுத்தாலும், காங்கிரஸ் தலைமை இளங்கோவனை கட்டுப்படுத்துவதாக இல்லை. தமிழகம் வந்த ராகுல், ஒரு முறை கூட, கருணாநிதியை சந்திக்காதது மிக மோசமான ஈகோயிஸ்டான கருணாநிதிக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தியது.
மத்திய கணக்காயர் அறிக்கை 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி என்ற ஒரு தொகையை வரையறை செய்தது. இந்த அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப் படும் முன்பே, ஊடகங்களில் வெளியாகி புயலைக் கிளப்பியது. ராசா தான் இனி தப்ப முடியாது என்பதை உணர்ந்தார்.
திருச்சிக்கு காங்கிரஸ் கூட்டத்துக்கு வருகை தந்த சோனியா காந்தி, கருணாநிதியை சந்திப்பதை தவிர்க்கப் போகிறார் என்று அறிந்த கருணாநிதி, அவசர அவசரமாக சென்னை விமான நிலையம் சென்று, சோனியாவை சந்தித்து, காங்கிரசுக்கும் திமுகவுக்கும் உறவு பலமாக இருப்பது போல காண்பித்துக் கொண்டார். திருச்சி கூட்டத்தில் பேசிய சோனியா, ஒரு வார்த்தைக் கூட திமுக காங்கிரஸ் உறவைப் பற்றிப் பேசவில்லை.
உச்ச நீதிமன்றத்தில் ஸ்பெக்ட்ரம் விவகாரம் விசாரணைக்கு வந்ததிலிருந்தே, திமுகவுக்கு கடும் நெருக்கடி தொடங்கியது. உச்ச நீதிமன்றம், சிபிஐ ஐ சராமரியாக கேள்விக் கணைகளால் துளைத்து எடுக்கவும், சிபிஐ தனது விசாரணையை முடுக்கி விட்டது. அது வரை நத்தை வேகத்திலும், நகராமலேவும் இருந்த சிபிஐ, திடீரென்று வேகம் பிடிக்கத் தொடங்கியது. ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக பல்வேறு ஆவணங்கள், ஊடகங்களில் வெளி வரத் தொடங்கின. இந்த நடவடிக்கைகளையெல்லாம் பார்த்த கருணாநிதி காங்கிரஸ் கட்சியின் சூட்சுமங்களை மெல்ல மெல்ல புரிந்து கொண்டார். காங்கிரஸ் கட்சியை திருப்பி அடிக்கும் நிலையில் தாம் இல்லை என்பதையும் புரிந்து கொண்டார்.
ஸ்பெக்ட்ரம் விவகாரம் மிகப் பெரியதாக வெடித்ததும், ராசாவை காவு கொடுக்க வேண்டும் என்பதை புரிந்து கொண்ட கருணாநிதி, ராசாவை காப்பாற்ற நினைத்து முயற்சிகள் எடுத்தது உண்மையே. ஆனாலும், ராசா, முழுகும் நிலையில் இருக்கையில் கருணாநிதியின் முயற்சிகள் எதுவும் கைகூடவில்லை. ராசா பதவியை ராஜினாமா செய்ததோடு விவகாரம் முடிந்து விடும் என்று நினைத்திருந்த கருணாநிதி, அவர் டெல்லியில் இருக்கும் போதே ராசாவை 8 மணி நேரத்துக்கும் அதிகமாக விசாரித்ததும், சென்னை திரும்பிய இரண்டாவது நாள் கைது செய்ததும், காங்கிரசுடனான உறவு இறுதிக் கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது என்பதை உணர வைத்தது.
தொடர்ந்து கனிமொழி தொடர்பாகவும், ராசாத்தி அம்மாள் தொடர்பாகவும் ஏராளமான சொத்துகளை சேர்த்து வைத்திருக்கிறார்கள் என்பதை திட்டமிட்டு ஊடகங்களுக்கு மத்திய உளவுத் துறை வெளியிட்டுக் கொண்டே வந்தது.

க்ளைமாக்ஸாக, 2ஜி விவகாரத்தில் கலைஞர் டிவிக்கு 216 கோடி ரூபாய் கொடுத்திருந்த தகவல் ஊடகங்களில் வெளியானது. இதையடுத்து கலைஞர் டிவியில் நள்ளிரவு சோதனையும் நடைபெற்றது. சிபிஐ விசாரணையை துரிதப் படுத்தியதும், திரை மறைவில், இந்த விசாரணையிலிருந்து குடும்பத்தைக் காப்பாற்ற திமுக பல்வேறு பேரங்களை காங்கிரஸ் கட்சியோடு நடத்தினாலும், உச்சநீதிமன்றத்தை கை காட்டி காங்கிரஸ் ஒதுங்கிக் கொண்டது.
இந்தப் பின்னணியில் தான் தேர்தல் நெருங்கியது. கூட்டணிப் பேச்சுவார்த்தை தொடங்கியதும், காங்கிரஸ் ஐவர் குழுவை அமைத்தது. இந்த ஐவர் குழு தொடக்கம் முதலே, கெடுபிடியாகப் பேசியது. கடந்த முறை 51 இடங்கள் தந்தது போல, இந்த முறை முடியாது என்றும், குறைந்தது 90 இடங்களாவது வேண்டும் என்றும் கோடிட்டுக் காட்டியது.
காங்கிரசுக்கு நெருக்கடி கொடுக்க, கருணாநிதி காங்கிரசை கலந்தாலோசிக்காமலேயே, பாமகவுக்கு 31 இடங்கள் ஒதுக்கி அறிவிப்பு வெளியிட்டார். இது காங்கிரஸ் கட்சிளை கடும் எரிச்சலுக்கு ஆளாக்கியது. இந்த எரிச்சல், இதன் பின்னர் நடந்த பேச்சுவார்த்தையிலும் எதிரொலித்தது.
ஆனால், தாம் மிகப் பெரிய சாமர்த்தியசாலி என்று நினைத்துக் கொண்டிருக்கும் கருணாநிதி, காங்கிரசோடு பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கையிலேயே, கொங்கு முன்னேற்றப் பேரவைக்கு 7 இடங்களை ஒதுக்கினார்.
கருணாநிதியின் இந்த நடவடிக்கை திமுக காங்கிரஸ் உறவுக்கு, இறுதி அஞ்சலி செலுத்துவதாக அமைந்தது. இதையடுத்து காங்கிரஸ், தனது பிடியை மேலும் இறுக்கியது. ஏற்கனவே ஒப்புக் கொள்ளப் பட்ட 60 இடங்களுக்கு மேல் 63 இடங்களோடு, கூட்டணி மந்திரி சபை மற்றும் குறைந்த பட்ட செயல்திட்டம் என்ற நிபந்தனைகளை உறுதிப் படுத்தியது.
‘பொறுத்தது போதும் பொங்கி எழடா மகனே மனோகரா’ என்ற கருணாநிதியின் வசனத்தைப் போலவே, பொங்கி எழுந்து காங்கிரசை கண்டித்து அறிக்கை வெளியிட்டார் கருணாநிதி. இந்த அறிக்கையைப் பார்த்து, காங்கிரஸ் ஆதரவை வாபஸ் வாங்கிக் கொண்டால், மத்தியில் ஆட்சி கவிழும் நிலை உருவாகும் என்று அஞ்சி, காங்கிரஸ் மண்டியிடும் என்று தப்புக் கணக்கு போட்டார். ஆனால் காங்கிரஸ் அசருவதாக இல்லை. காங்கிரஸ் பணியும் என்பதாலேயே, ஆதரவு வாபஸ் என்று வெளிப்படையாக அறிவித்தாலும், திமுக மந்திரிகளின் ராஜினாமா கடிதத்தை பேக்ஸ் மூலம் அனுப்பாமல் தாமதித்தார் கருணாநிதி. எவ்வித முன்னேற்றமும் ஏற்படாததால், 7 அன்று காலை 6.30க்கு திமுக மந்திரிகள் டெல்லி கிளம்பிச் சென்று பிரதமரை சந்தித்து, ராஜினாமா கடிதத்தை கொடுக்க உள்ளார்கள்.
இதில் இந்த 3 இடங்கள் என்று கருணாநிதி வெளிப்படையாகச் சொன்ன காரணம் மட்டுமே உண்மையா என்றால் இல்லை. அடுத்தடுத்து நடக்கும் சிபிஐ விசாரணை நிச்சயமாக, கனிமொழியையும், தயாளுவையும் பாதிக்கும் என்பது கருணாநிதிக்கு நிச்சயம் தெரியும். மேலும் காங்கிரஸ் கேட்ட 63 இடங்களையும் கொடுத்து, கூட்டணி மந்திரி சபைக்கு ஒப்புக் கொண்டாலும் கூட, சிபிஐ விசாரணை தன் குடும்பத்தை நோக்கி வருவதை தவிர்க்க முடியாது என்பதை கருணாநிதி நன்றாகவே உணர்ந்திருக்கிறார்.

சிபிஐ வளையம் நெருக்கும் போது, ஆதரவு வாபஸ் என்றால், கடைநிலையில் இருக்கும் திமுக தொண்டன் கூட மதிக்க மாட்டான் என்பது அறிந்ததால் தான் கருணாநிதி, இப்போதே வாபஸ் என்று அறிவித்து விட்டார். இப்போது வாபஸ் பெற்றதால், குறைந்த பட்சம், திமுகவையாவது காப்பாற்றலாம், ஆனால், தாமதமாக வாபஸ் பெற்றால், கட்சியையும் இழக்க வேண்டி வரும் என்பதை நன்றாகவே உணர்ந்திருக்கிறார். இப்போது, மீண்டும் ‘வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது, தமிழ் மொழிக்கு ஆபத்து, ஈழத்தில் தமிழர்கள் முள்வேலி முகாமுக்குள் அடைபட்டிருக்கிறார்கள், மத்திய அரசு பாராமுகம் காட்டுகிறது, கச்சத்தீவை மீட்போம், மீனவர்கள் படுகொலையை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை’ என்பது போன்ற பழைய கோஷங்களோடு, மீண்டும் காங்கிரஸ் எதிர்ப்பு அரசியல் பண்ணலாம் என்ற நம்பிக்கையிலேயே கருணாநிதி இருக்கிறார்.
ஆனால், காங்கிரஸ் இதை விட சாதுர்யமாக, இப்போதே பாட்டாளி மக்கள் கட்சியை திமுக அணியிலிருந்து பிரிக்க பேச்சுவார்த்தையை தொடங்கி விட்டதாக தகவல்கள் கூறுகின்றன.
‘வினை விதைத்தவன் வினையைத் தானே அறுக்க முடியும் ? ‘ அதைப் போலவே தான் கருணாநிதியும் இன்று வினையை அறுத்துக் கொண்டிருக்கிறார்.

இந்த சதுரங்க ஆட்டத்தில், கிங் மேக்கராக இருந்த கருணாநிதி, சாதாரண சிப்பாயைப் போல, வெட்டி எரியப் படும் வரை காங்கிரஸ் கட்சி ஓயப் போவதில்லை. இந்த சதுரங்க ஆட்டத்தை டெல்லியிலிருந்து நடத்திக் கொண்டிருப்பவர் ராகுல் காந்தி என்று, புதுதில்லியில் விபரமறிந்தவர்கள் சொல்லுகிறார்கள். தொடக்கம் முதலே, கருணாநிதியை அறவே பிடிக்காதவரான ராகுல் காந்தி, கருணாநிதி எக்காரணம் கொண்டும் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில் மிக மிக உறுதியாக இருக்கிறார் என்றும் தகவல்கள் கூறுகின்றன.
இந்தத் தேர்தல், திமுகவின் இத்தனை ஆண்டுகால வரலாறில், மிகப் பெரிய சோதனை என்றால் அது மிகையில்லை.. இந்த சோதனையில் திமுக கரை சேருமா, இல்லை காட்டாற்று வெள்ளத்தோடு அடித்துச் செல்லப் படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். |
Comments
சமிபத்திய பதிவுகளில் எழுத்து பிழைகளும் அதிகமாக உள்ளன. சவுக்கு தங்களைப் பற்றி அறிந்து கொள்ள விரும்புகிறோம்.
Any problem ? We dont see any comment from you on a day of very significant political development. It is intriguing...Hope things are fine.
Regards
BY RAMAN KIRPAL
WHENEVER NEWS about the 2G spectrum scam erupts, the Congress is quick to react that its relationship with the DMK is not under strain. The DMK, on its part, is buying time till the CBI files its first chargesheet, in the hope that it will not name anybody from the DMK other than former telecom minister A Raja. But the CBI is determined to chargesheet members of the DMK’s first family — M Karunanidhi’s daughter Kanimozhi and second wife Dayalu Ammal. They are not to be charged with ‘criminal conspiracy’ but with ‘taking gratification for exercise of personal influence with public servant’ under Section 8 of the Prevention of Corruption Act.
If proven guilty, Kanimozhi and Dayalu will face punishment ranging from six months to five years. According to CBI sources, their crime is that they are shareholders and directors of Kalaignar TV, which took Rs. 200 crore from DB Realty promoter Shahid Balwa. This was allegedly Raja’s kickbacks for the 2G spectrum allocation.
To top it all, Kanimozhi did not mention her stakes in Kalaignar TV in her disclosure of assets to the Election Commission on 1 June 2007. Her affidavit only mentions that she has Rs. 6.40 crore in fixed deposits, Rs. 16.52 lakh and Rs. 1.96 lakh in two savings bank accounts, shares worth Rs. 3.50 lakh in West Gate Logistics, a Toyota Camry, gold and diamonds worth Rs. 3.61 lakh, a commercial building worth Rs. 1.61 crore at Anna Salai and a farmhouse worth Rs. 10 lakh at Pattukottai.
Where she slipped was on not declaring her stake in Kalaignar TV. Just five days before filing the disclosures, Kanimozhi and Dayalu had signed a deal with the channel.
http://www.tehelka.com/story_main49.asp?filename=Ne1203112G_SCAM.asp
Funny of this drama ..
If he decide to resign then he should do it imeediately by FAX. No need to wait for day or two..
New formula goes soft on Kanimozhi at Raja’s expense
Iftikhar Gilani
New Delhi
The Congress has blinked in the power tussle with the Dravida Munnetra Kazhagam (DMK), which had threatened on 5 March to pull out from the UPA2 government.
Almost at the last minute, Prime Minister Manmohan Singh is understood to have told his troubleshooter, Union Finance Minister Pranab Mukherjee, that he must do all he can to save the Congress-DMK alliance.
Consequently, a deal was hammered out suggesting that DMK head M Karunanidhi’s daughter Kanimozhi would not be arrested in the 2G spectrum case. Mukherjee’s call was received by Kanimozhi who translated it for her father and reported back his views. Both sides got engaged in hectic consultations at different levels to resolve
http://www.tehelka.com/story_main49.asp?filename=Ws070311DMK.asp
Read this article in the same issue of Tehelka about a possible deal between Cong and DMK whereby CBI would go slow on 2G, release Raja from jail and not interrogate Kanimozhi.
http://www.tehelka.com/story_main49.asp?filename=Ws070311DMK.asp
And the saddest part is that this compromise is being worked out by Manmohan Singhji, the cleanest and most honest Prime Minister we ever had. And surprisingly, the same is not the view of Congress President. So we now see why they are still talking and trying to sort the 'seat-sharing' issue!
Best of Luck for Tamil Nadu and India!
கருணாநிதி 63 எல்லாம் முடியாது 58 டே இல்லை இதற்கு மேல் மில்லி மீட்டர் கூட இடமில்லை என்று சொல்லி இருந்தாலும்
என்று சொன்னாலும், முதியவரின் செயலை எண்ணி வாடவேண்டாம்..நாங்கள் இருக்கிறோம் என்று சொல்லி இளைஞர்களான அழகிரி, தயாநிதி இருவரும் புடவை, அல்வாவுடன் சென்று சோனியாவை இல்லத்திலேயே சந்தித்தார்களாம ்.. கூட்டுறவு திருப்திகரம்.. வெற்றி எங்களுக்கே என்று சொல்லிவிட்டார்க ள்.
Please read this article in the recent issue of tehelka at http://www.tehelka.com/story_main49.asp?filename=Ws0703112G_SPECTRUM.asp
The article says that Mr Pranab's office specifically asked ED to go slow on questioning of suspects/witnesses in the 2G Spectrum case. The names of suspects/witnesses are also listed in the article. Fortunately, someone in the ED has forwarded a complaint to the Supreme Court to the notice of the Justices monitoring the case. The matter is now public.
Now we can understand why the extension of one day is taken by DMK and Cong to decide. They are feverishly negotiating how to save Karuna and Clan. I even suspect that monies might change hands for a cash-seat deal between Cong and DMK.
So let us not celebrate and give Congress party the kudos for being stubborn. They are past masters in negotiating and that is what they are doing.
If what is said in Tehelka is true, everything is falling in place now...
கடந்த ஐந்தாண்டுகால தமிழக ஆட்சி மிக சிறப்பான ஒன்று என்று என்று கடந்த 2009 பாராளுமன்றத் தேர்தலில் இருந்து குருட்டுத்தனமாக நம்பிக் கொண்டிருக்கிறார ்கள். -- உங்களது இந்த கட்டுரை இப்படி துவங்கியிருக்க வேண்டும் ஓலகபரமாத்மா அவர்களே..!!! அது சரி... ஜால்ரா அடிக்கிறதுன்னு ஆய்டுச்சு... அப்புறம் ஜான் என்ன? ஜான்சன் என்ன? அடி பின்னுங்க...!!! 'நான் ரொம்ப நல்லவன்'ன்னு கலைஞர் சொன்னா 'எங்ககிட்டயே காமெடி பண்றியான்னு' பெத்த மவனுகளே சோத்துல விஷம் வச்சி கொன்னுருவாணுக... இருந்தாலும் நீங்க ஜால்ரா அடிங்க..!!! அது உங்க கருத்துரிமை... ஆனால் போறபோக்குல மத்தவங்களை சொரன்டுற வேலையை விடுங்க... ஏன்னா 'எந்தவித நியாயம் அநியாயம் பார்க்காம' கருத்தெழுதும் உங்களுக்கோ, அல்லது உங்க தானை தலைவருக்கோ அந்த தகுதி கிடையாது....!!!" (குறிப்பு: தனது தானை தலைவரை விமர்சிக்கும் இந்த கருத்தை பதிய அனுமதித்த யுவகிருஷ்ணா, வேறொரு கட்டுரையில் யுவகிரிஷ்ணாவின் மேதாவி தனத்தை நான் விமர்சிக்கும் ஒரு கருத்தை வெளியிடவில்லை. தலைவனுக்கேற்ற தொண்டன். தலைவனையே மிஞ்சி விட்டான்.)
http://www.tehelka.com/story_main49.asp?filename=Ws0703112G_SPECTRUM.asp
Please translate and post this for savukku readers
http://athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=1017
Do you have any idea about this?
அன்புள்ள சவுக்கு நீங்கள் தீர்க்க தரிசியா? நீங்கள் சொன்ன மாதிரியே பாமக வுக்கு 28 தொகுதிகள் தான் கிடைக்கும் என்று செய்திகள் வருகிறது..
தினமலர் செய்தி "காங்கிரசுக்கு 63 இடங்கள் தர தி.மு.க., முன்வந்ததையடுத் து, இருகட்சிகளிடையே கூட்டணி ஒப்பந்தம் நாளை (மார்ச்
Dear Mr Savuku please explain about this article
jaya ?
This is a baseless allegation and denied. Please dont believe this. It is a diversionary tactics to take glare from 2g mega scam
Pls write about..Jaya's Black Money with Hasen Ali
http://www.mid-day.com/news/2011/mar/040311-Hasan-Ali-Khan-Woman-Politician.htm
இதோ சொல்ட்டாரு கவர்னரு ......உங்களுக்கு தேவைப்படும் போது தமிழர் என்ற வார்த்தையை பயன்படுத்துவீர் கள் .....உங்கள் தலைக்கு ஏதாவது ஆபத்து வந்தால் மட்டுமே உங்களுக்கு இந்த தமிழர் என்ற வார்த்தை தேவைப்படுகிறது .....தன்மானமுள்ள தலைவரே எங்க போனீங்க தமிழ் இனம் தடயமிலாமல் அழிக்கப்படும்போ து?......அப்ப என்ன ஓய்வில் இருந்தீங்களா?...இல்ல தொண்டை கரகரப்பல குரல் கொடுக்கமுடியலைய ா?...இப்போ உங்கள் ஆட்சிக்கு ஆபத்து என்ற போது மட்டும் தமிழர் , தமிழன் னு சும்மா கதை கவிதை எல்லாம் உட்டுட்டு இருகிறீர்கள் .....இத எங்க ஊருல எப்படி சொல்லுவாங்கனா குதிர கொள்ளுனா வாய திறக்குமாம் வைகோல்னா வாய மூடிக்குமாம் !!!!!!!!தமிழ் இனம் அளிக்கப்படும் போது காங்கிரசுடன் நீங்களும் சேர்ந்து கொண்டு காசுக்காக ஆசைப்பட்டு கைகட்டி வாய்பொத்தி அங்கெல்லாம் ஒன்னுமே நடக்கவில்லை என மூடிமரைதீர்கள்! !!!...இன்று அதே காங்கரஸ் உங்கள கழட்டி விட்டதும் தமிழன் உங்களுக்கு தேவைபடுகிறான் பிழைப்பை ஓட்ட!!!! மனுசன்னா எப்பவும் எங்கேயும் ஒரேமாதிரி பேசணும் ....வாக்கு சுத்தமாக இருக்கணும் ...இங்க தினம் ஒரு சொல்லு ...தினம் ஒரு செயல் .....அப்படி காச சேத்துதான் என்ன போகும்போது கொண்டுட்டே போகப்போறிங்க!!.இல்லைல ...அப்பறம் என்ன நாலுபேரு நம்ம பேர நாம போனபிறகும் பேசறமாதிரி நல்லது ஏதேனும் செஞ்சிட்டு போகவேண்டியது தான .....எதற்கு இந்த பொழப்பு ...இப்படி பேசிபேசிஎதான நம்ம இனத்தின் அழிவை நம் கண்முன்னாலேயே காட்டினாங்க ...பாவிங்க ...இப்ப காங்கிரசை கழட்டி விட்டத அன்னைக்கே செய்திருந்தால் அல்லது அன்னைக்கே கூட்டணியிலிருந் து வெளியேறியிருந்த ால் இப்ப தமிழனுக்காக கொடுக்கிற குரலை அன்றே கொடுத்திருந்தால ்?ஒரு இனத்தையே காத்த பெருமை உங்களையல்லவா வந்துசெர்த்திரு க்கும் !!!!காலாகாலத்தி ற்கும் வரலாறு உங்களைப்பற்றிதா ன் பேசிக்கொண்டிருக ்கும் ....காசு காசு காசு ...எல்லாமே பணம்தான்..
தேசிய பறவை மயில், தேசிய மரம் ஆலமரம்........தேசிய இளிச்சவாயன் தமிழன்?
தேசிய பறவை மயில், தேசிய மரம் ஆலமரம்........தேசிய இளிச்சவாயன் தமிழன்?
Mr Nanda : You are totally mistaken. I am neither a brahmin nor a 'Moovendar' even though I am a virulent critique Karuna. I too have problems with Jaya. I too believe that she has let down the Tamils. But atleast is consistent in her stand on the Tamil issue - she stands for a united Sri Lanka and and considers LTTE a terrorist group. She also feels that India should intervene if there is no solution.
What was Karunanishis' stand on Ealam Tamil issue? No one knows it. If you know, please educate us.
The most horrible thing he did was that 'unnaviradham' he enacted which completely diverted the attention of the people and the world to the enormous human tragedy that was unfolding in May 2009. To me, he is a demon - no two words about it.
When he talks about tamil 'pattru', why did he not withdraw his support to Congress then? Even today, across the world the Tamils are trying to bring Rajafuckse to justice. Has Karuna ever spoken anything about the crime against humanity committed by Rajafuckse? What has he done to regain the rights of the Tamils in Ealam? Did he influence the Indian Government to prod Rajafuckse? What is his approach? No one knows...
What about the 2G scam? When Raja was caught, karuna said Raja is a Dalit. Now everyone abuses Raja whereas the real beneficiaries are his family. So if someone opposes him, they are supporters of brahminism. If someone loots and get caught, he is a Dalit. Nonsense!
Karunanidhi is hellbent on dividing the Tamil society to perpetuate his family rule. You have exactly fallen into his trap. As an experienced politician, he could have bridged the communities. But he will not. Because 'oor rendupatta kooththaadikku kondatam'.
You can support Karuna and oppose Jaya.
But please dont give it a communal colour.
நன்றி தொடருங்கள் சவுக்கு.
என்ன செய்யரது.இலங்கையில் நடந்த இனப்படுக்கொலைக் கு கருணாநிதியும் உடந்தையாக இருந்துவிட்டார் என்பது உங்களுடைய வெறிக்குக்காரணம ். அதுக்கு பூனூலை ஆதரிப்பது எப்படி சரி. ஜெயலலிதாவை ஆதரித்து கருணாநிதியை வீழ்த்த நினைப்பது பாசிசம் தான் சந்தேகமும் இல்லை. ஏற்கனவே சோ,சுப்பரமணிசாம ி போன்ற தூரோனாச்சாரிகளி ன் பேச்சிலும், கருத்திலும்,புக ழிலும் முழுகி இருக்கும் ஜெயலலிதாவை ஆதரித்தால் தானே பூனூல் பெருகி இருக்கும் அதிகார வர்க்கத்தில் பெயர் எடுத்தால் தானே பப்ளிசிட்டி ஆக முடியும்.இலங்கையில் போர் நடந்துக்கொண்டு இருக்கும் போது தமிழ்மக்கள் இறந்துக்கொண்டு இருக்கும்போது போர் நடந்தால் உயிர்பலி என்பது தவிற்க முடியாது என்று சொன்ன ஜெயலலித்தாவை ஆதரிப்பது என்பதும் கூட்டிக்கொடுப்ப து என்பதும் ஒன்றுதான். ஒன்று திமுக அல்லது அதிமுக என்று சார்ந்து இருக்கிற உங்களைப்போல உள்ள ஈழ ஆதரவாளர்களால் தான் ஈழத்தின் போராட்டம் தடைப்பட்டு தத்தளித்துக்கொண ்டு இருக்கிறது. உங்களுக்கென்று ஒரு தனியான வழியோக்கொள்கையோ கிடையாது. யார் இடங்கெடுக்கிறார ்களோ அவர்களின் காலை நக்கிக்கொண்டு ஈழ விடுதலையை பேசுவதுதான் உங்களுடைய வேலையே. உனக்கு ஆதரவாக வரும் குரல் எல்லாமே,பூனூல்ப ோடரவனும்,மூவேந் தர் என்று சொல்லிக்கொண்டு இருக்கும் சாதிகாரர்கள் தான் என்பது பின்னோட்டங்களை பார்த்தாலே புரிந்து விடுகிறது.
ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தனது குடும்பத்தினரை சிபிஐ விசாரிக்கக் கூடாது என்ற திமுக தலைமையின் கோரிக்கையைப் பிரதமர் அலுவலகம் நிராகரித்து விட்டதும், இது குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் பேச முடியாத வகையில், ராகுல் காந்தி தரப்பு முட்டுக் கட்டை போட்டதும் தான் திமுகவின் கோபத்துக்குக் காரணம் என்று அவர்கள் கூறுகின்றனர்.
நீதிமன்ற நெருக்கடியால் அடுத்த சில நாட்களில் கனிமொழி மட்டுமன்றி கலைஞர் தொலைக்காட்சியி ன் முதலீட்டாளர் என்ற வகையில் முதல்வரின் மனைவி தயாளு அம்மாளையும் சிபிஐ கேள்வி கேட்க வேண்டிய நிலைமை ஏற்பட்டிருப்பதா ல் தான் திமுக இந்த முடிவுக்கு வந்துள்ளது. தொகுதிப் பங்கீட்டில் பிரச்சனையை உருவாக்கி அதை ஒரு காரணத்தை வைத்து கூட்டணியிலிருந் து வெளியேறி விட்டால், பின்னர் தங்களை சிபிஐ விசாரணை செய்தால், கூட்டணியிலிருந் து விலகியதால் காங்கிரஸ் தங்களை பழி வாங்குவதாகக் கூறிக் கொண்டு அனுதாபம் தேடிக் கொள்ளலாம் என திமுக நினைக்கிறது என்கிறார்கள் டெல்லி காங்கிரஸ் வட்டாரத்தில்.
NOW HE HAS ASKED HIS MINISTER TO RESIGN, AS THE CBI MAY REACH HIS DOOR STEP, SO FOR HIM IT IS HIS FAMILY AND NOT THE COUNTRY.
HE DID EVEN GO TO DELHI TO SPEAK ABOUT TAMILS, BUT HE VIITED DELHI ,TO GET THE BERTH IN MINISTRY , NOW SECOND TIME TO TALK ABOUT SEAT SHARING.
HOW CLEVER IS HE, N MADE TAMIL PEOPLE STUPID,
EVERYTHING HAS AN END, LETS PUT AN END TO THE FAMILY RULE OF MK AND HELP TAMILNADU .,
SEAT SHARING WILL BE FINALIZED.
BUT WITH ALL THIS DRAMA EVEN IF THEY FINALZIE SEAT SHARING CONGRESS WILL MAKE SURE DMK LOSES AND DMK WILL MAKE SURE CONGRESS LOSES
This Rahul Gandhi is a childish person. His party had relation with DMK, but he didnt want to meet DMK's leader. What sort of relation was that? It is like someone married a girl, but dont like to meet her father.
Rahul Gandhi is a great actor. But we already seen this type of politicians like MGR, MK and Laloo. When compared to them he is mere new born baby. He studied and lived in foreign countries in most of his life. Do you think he knows the troubles our middle-class and below-poverty-line people facing?
Even Oxford doctorate Manmohan Singh and P.Chidabaram doesnt care about common people. I dont believe Rahul.
India's unofficial 'Royal Family' - the Congress party blocks new leaders coming to Indian Politics as like DMK doing in Tamilnadu. We need to get rid of these two parties first, then other selfish parties including AIADMK, DMDK, etc. We are in the situation to produce new leaders.
http://mugamuddi.blogspot.com
(1) Congress
(2) DMK
Which one is prime to be elimated
Make a decision 'King' of king makers.
நானும் இந்த டேப் லீக் விஷயத்தில் மிகுந்த ஆச்சர்யம் அடைந்தேன். எப்படி இந்த டேப் களை காங்கிரசுக்கு சாதகமாக இருக்கும் அதிகாரிகள், சாதகமாக இருக்கும் பத்திரிகைகளே வெளியிடுகிறார்க ள், அதுவும் சுப்ரமணியன் சுவாமியின் மடலுக்கு காங்கிரஸ் ஒரு வருடமாய் பதில் சொல்லாமல் இருக்கும்போது என்று.
ஏன் அந்த அளவு கருணாநிதி மேல் ராகுலுக்கு ஆத்திரம்? இதற்கு ஏதாவது ரகஸ்ய காரணம் உண்டா?
Friends !! Please Read all my 10 Points !!
Brilliant Analysis...Totally agree with you...
சுவாரசியமான நடை !
smahesh மற்றும் K Raman நல்ல ஆய்வு.
அதனால் கூட்டணி உடையாது. அதுவும் இல்லாமல் ராமதாஸ் மனைவி மாதிரி அவர் கணவன் மாதிரி என்று வேறு பேசியிருக்கிறார ்.
அடுத்தது ப சிதம்பரம் துணைவி மாதிரி என்று சொல்வார். சோனியாவை வைத்து இந்த மாதிரி உதாரணம் சொல்லக்கூடாது என்று அவருக்கு தெரியும்.
An important angle needs to be looked at also!
Unless DMK comes back to power this time, the succession plan of Karuna will go haywire. Becos if DMK does not come back to power and Alagiri faction gets more seats than Stalin faction, which will be the case, then there will be an open revolt by Alagiri supporters. (There may be no future role for Kani - the brothers will hold her responsible for 2G-scam and sideline her)
So a final Stalin-Alagiri fight is inevitable. In such a fight, Alagiri may win and control of DMK may slip out of Stalin-KD combo. Thats what Karuna is worried about. He believes Stalin-KD combo has the smartness to run DMK in the long run. On the other hand, he thinks Alagiri may not run the party for long...Also Karuna knows Rahul (Cong's future) likes Stalin-KD combo and Rahul hates Alagiri. So Karuna would want DMK's future to rest with Stalin-KD combo so as to protect the family wealth and power. But for that to happen, Karuna has to become CM again and Stalin must succeed him.
Hence Karuna will continue his efforts till the very end to patch up with Cong even by accepting the conditions. Wait and watch!
However if Cong does not want a patch up, then Karuna family is in deep trouble! There are already signals that Cong may not patch up as mentioned by you. Kettakaalam, ponga!
Karuna has done to DMK what Gadaffi has done to Libya. After Karuna, there is no Jaya-like leader in DMK, outside the family, to run the party! Vaiko could have led DMK, but Karuna sent him out!!
So after Karuna, DMK will splinter into small groups - one joining ADMK, other joining Cong, other joining DMDK and a rump DMK may still exist for short time.
But there will be no DMK as we all know it! SAD END FOR ANNA's LEGACY!
இந்த மூன்று இடப் பிரச்சனைய பார்த்தா தென்னைமரத்தில் தேள் கொட்டியதற்கு பனை மரத்தில் நெரிகட்டிய கதைதான் நினைவுக்கு வருது...
அது இருக்கட்டும் தோழர்களே... தயாளம்மாளிடம் சிபிஐ விசாரணை பண்ணப் போறாங்கன்னு செய்தி வருது. எப்படிப்பட்ட அயோக்கியனுக்கும ் தன் தாயை சிறப்பா வைத்திருக்கனும் அப்படிங்கறது இயற்கை. ஆனால் இங்க பாருங்க தோழர்களே... ஒருத்தர் துணை முதல்வர்... இன்னொருத்தர் மத்திய மந்திரி... ஆனால் தாய்க்கு திருட்டுப்பட்டம ் வாங்கிக் கொடுத்துவிட்டார ்கள்... இதைவிட என்ன பெரிய இழப்பு ஒரு மனிதனுக்குத் தேவை? இவர்கள் நல்ல தலைவர்கள் இல்லைன்னுதான் நினைச்சிட்டிருந ்தோம்... இப்போ... நல்ல தனயனும் இல்லைன்னு உணர்த்தி விட்டுடாங்க... தாய் அப்படிங்கறது எவ்ளோ புனிதமானது... இப்படி கேவலப்படுத்திட் டாங்களே? கருணாநிதிக்கு பிறந்த எந்த பிள்ளையும் நல்ல பிள்ளை அல்ல அப்படிங்கறத விட கிழத்துக்கு பெரிய தண்டனை வேற ஒன்றுமில்லை... இன்னும் என்னென்ன பூதங்கள் வெளியில வரப்போகுதோ...
பேராசை பெரு நட்டம் என்ற முது மொழியை உணராது, கண் மூடித்தனமாக நடந்த எத்தனையோ பேரில் ஒருவராக ஒழிய போவது திண்ணம்...
RSS feed for comments to this post