முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
நான் ஏன் நக்சலைட்டாக மாறக் கூடாது ? அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 41
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
சனிக்கிழமை, 12 மார்ச் 2011 09:42

 

இந்நாட்டின் மிகப் பெரிய சாபக்கேடு ஊழல்தான் என்பதை சவுக்கு எப்போதுமே சொல்லி வந்திருக்கிறது. ஊழலை எளிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்பதும் சவுக்கின் தெளிவான நிலைபாடு.

 

சிறிய அளவில் நடைபெறும் ஊழல்களை கண்டு கொள்ளாமல் சமரசம் செய்து கொண்டு அனுமதிப்பதுதான் மிகப் பெரிய ஆபத்தில் சென்று விடுகிறது.

 

ஆனால், நாம் அனைவருமே, ஊழலை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. அதுவும், ஆண்டிமுத்து ராசாவின் ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி ஊழலை நினைத்துப் பார்த்தால், இப்போது எந்த ஊழலுமே சாதாரணமாகத் தான் தோன்றுகிறது. ஆனால், சிறியதோ, பெரியதோ, ஊழல் ஊழல் தான்.

 

தங்கள் கடமையைச் செய்ய வேண்டிய கஸ்டம்ஸ் அதிகாரிகள், மும்பையில் லஞ்சம் வாங்கிக் கொண்டு, வாகனத்தை சோதனை செய்யாமல் அனுப்பியதால் தானே 1993 மும்பை குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு காரணமான ஆர்டிஎக்ஸ் வெடிமருந்தை கொண்டு வர முடிந்தது ?

 

இது போல பல்வேறு சம்பவங்களை உதாரணமாக சொல்லிக் கொண்டே போகலாம். இது போல ஒரு ஊழல் காரணமாக 66 ஏழை கிராம மக்கள் பார்வை இழந்தார்கள் என்பதை அறிந்தால் நெஞ்சு பதை பதைக்கவில்லை ?

 

மத்திய அரசு, தேசிய பார்வைக் குறைவு கட்டுப் பாட்டுத் திட்டத்தின் கீழ் ஆயிரக்கணக்கான கோடிகளை மாநிலங்களுக்கு ஒதுக்குகிறது. அந்த நிதியை வைத்து மாநிலங்கள் ஏற்படுத்தியுள்ள பார்வைக் குறைவு கட்டுப் பாட்டு அமைப்புகளின் மூலம், பல்வேறு கண் முகாம்களை அமைத்து, இலவச புரை நீக்கு அறுவை சிகிச்சை, இலவச கண்ணாடி போன்ற வேலைகளைச் செய்ய வேண்டும். மத்திய அரசு இது போல வழங்கும் நிதிகளை மாநில அரசின் தமிழ்நாடு பார்வைக் குறைவு கட்டுப்பாட்டுச் சங்கத்தின் மூலம் செலவிட்டு வந்தது, தமிழக அரசு.

 

தமிழக அரசின் இந்த அமைப்பு, தனியார் மருத்துவமனைகளோடு இணைந்து பல்வேறு முகாம்களை நடத்தி மத்திய அரசின் நிதியை செலவிடுவது வழக்கம்.

 

இதன் ஒரு பகுதியாக, 2008ம் ஆண்டு, திருச்சியில் உள்ள ஜோசப் கண் மருத்துவமனையோடு இணைந்து, தமிழக பார்வைக் குறைவு கட்டுப்பாட்டு சங்கம், விழுப்புரம் மாவட்டத்தில் இலவச கண் சிசிக்சை முகாம் ஒன்றை நடத்த திட்டமிடுகிறது.

 

இந்த திட்டத்துக்காக, துண்டறிக்கைகள் மூலம் பெரிய அளவில் விளம்பரம் செய்யப் படுகிறது. இலவச கண் சிகிச்சை முகாம் என்ற அறிவிப்பைப் பார்த்தவுடன் யார் வருவார்கள் ? கிராமப்புரத்தில் உள்ள ஏழைகள் ஓடோடி வந்தார்கள். ஒரு 100 பேர் வருகிறார்கள். அந்த 100 பேரும், கண் புரை ஏற்பட்ட முதியவர்கள்.

 

இந்த 100 பேரையும், ஜோசப் கண் மருத்துவமனையின் மருத்துவர் அஷோக் பரிசோதனை செய்கிறார். பரிசோதித்து அந்த 100 பேரில் 66 பேரை மட்டும் தேர்ந்தெடுக்கிறார்.   உங்களுக்கெல்லாம் அறுவை சிகிச்சை, அனைவரும் வாருங்கள் என்று அழைக்கிறார்.   அந்த 66 பேரும் நைனார்பாளையம் மற்றும் கடுவனூர் கிராமங்களைச் சேர்ந்தவர்கள்.   ஜோசப் மருத்துவமனை நிர்வாகத்தார், அவர்களை ஒரு வண்டியில் ஏற்றி பெரம்பலூர் ஏற்றிச் செல்ல எத்தனிக்கிறார்கள். அப்போது அந்த கிராமத்தினர், ‘அய்யா, இங்கேயே அறுவை சிகிச்சை செய்வீர்கள் என்றுதான் நாங்கள் கிளம்பி வந்தோம். அறுவை சிகிச்சை செய்வதால் நாங்கள் எங்கள் உறவினர்களைக் கூட அழைத்து வரவில்லை’ என்று தங்கள் சிரமங்களைத் தெரிவிக்கிறார்கள்.

 

ஆனால், ஜோசப் மருத்துவமனையின் டாக்டர்கள், உடனடியாக பெரம்பலூர் வாருங்கள் (அது எப்படி… மோசமான விஷயங்கள் அத்தனைக்கும் பெரம்பலூர் மையமாக இருக்கிறது ?) அங்கே அறுவை சிசிக்சை முடிந்தவுடன், உங்களை பத்திரமாக இதே இடத்தில் இறக்கி விட்டு விடுகிறோம் என்று தெரிவிக்கிறார்கள்.

 

இதை நம்பி அந்த 66 அப்பாவி கிராம மக்கள், பெரம்பலூர் செல்கிறார்கள். பெரம்பலூர் சென்று அறுவை சிகிச்சை நடந்தவுடன் அத்தனை மக்களின் கண்களிலும் தாங்க முடியாத எரிச்சல். அலறுகிறார்கள்….. அலற்றுகிறார்கள்…… வலி தாங்க முடியாமல் ஓலமிடுகிறார்கள்….

 

அந்த ஜோசப் மருத்துவமனை மருத்துவர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா ?   அத்தனை பேருக்கும், சொட்டு மருந்து கொடுத்து, ஓடிப் போங்கள் பிரச்சினை செய்யாதீர்கள் என்று துரத்துகிறார்கள். அவர்களை சொந்த கிராமத்தில் கூட இறக்கி விடாமல் கள்ளக் குறிச்சி என்ற ஊரில் இறக்கி விடுகிறார்கள். 15 நாட்கள் கழித்து வாருங்கள் அது வரை வராதீர்கள் என்ற மிரட்டல் வேறு….

 

இரண்டு நாள், மூன்று நாள் கழித்து, வலி பொறுக்க முடியாமல், பாதிக்கப்பட்ட கிராமத்தினர் ஒரு சிலர், மற்றொரு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுக்கையில் தான், தங்கள் பார்வை போய் விட்டது என்ற விபரம் தெரிய வருகிறது.   உலகமே இருண்டு விட்டதாக உணர்கிறார்கள். இருண்டு தானே போய் விட்டது ?

 

இந்தச் செய்தி எந்தப் பத்திரிக்கைகளிலும் வரவில்லை. ஒருமாதம் கழித்து இந்தச் செய்தி வெளிவருகிறது. செய்தி வந்ததும், மனித உரிமை ஆர்வலர்கள் இந்த பிரச்சினையை கையில் எடுத்து, உடனடியாக சம்பந்தப் பட்ட மருத்துவமனையின் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகிறார்கள்.

 

இதற்கு பிறகு, அக்டோபர் 2008ல் கர்ண மகாராஜா கருணாநிதி, பாதிக்கப் பட்ட அனைவருக்கும் தலா ஒரு லட்ச ரூபாய் நிவாரணமாக பிச்சை போடுகிறார். ஆனால் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் தவறான சிகிச்சை அளித்த மருத்தவர்களின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அளித்த புகாருக்கு எவ்வித நடவடிக்கையும் இல்லை.

 

இந்த நிலையில் தான், மனித உரிமை பாதுகாப்பு மையம் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடுக்கிறது. இந்த வழக்கு, வழக்கமான நீதிமன்ற வழக்குகளைப் போல அல்லாமல் ஒன்றரை ஆண்டுகளுக்குள்ளாகவே ஒரு நல்ல முன்னேற்றத்தைக் கண்டிருக்கிறது

 

இந்த வழக்கு பல்வேறு விசாரணைகளுக்குப் பிறகு, தலைமை நீதிபதி இக்பால் மற்றும், டி.எஸ்.சிவஞானம் அடங்கிய டிவிஷன் பென்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.

 

தலைமை நீதிபதி இக்பால், இச்சமூகத்தில் உள்ள சாதாரண மனிதனுக்கு உள்ள கோபத்தை பிரதிபலித்தார். சிறப்பாக ஒரு விஷயத்தைச் செய்தார். அது என்னவென்றால், மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தை தேசிய பார்வை குறைபாடு கட்டுப்பாட்டுத் திட்டம் அமல்படுத்தப் படும் விதம், எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப் படுகிறது, தமிழ்நாட்டில் எப்படி செயல்படுத்தப் பட்டது என்பது போன்ற விபரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யச் சொல்லி உத்தரவிட்டார்.

 

மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், ஜோசப் மருத்துவமனைக்கு ஒரு கோடியே, பதினைந்து லட்சத்து இருபத்தைந்தாயிரத்து இருநூற்று எண்பது ரூபாய் 2008-2009ம் ஆண்டுக்கு மட்டும் வழங்கப் பட்டுள்ளது.

 

மத்திய அரசு தாக்கல் செய்த அத்தனை ஆவணங்களையும் பரிசீலித்த நீதிபதிகள், தங்கள் தீர்ப்பை வியாழனன்று அளித்தனர். தங்களது தீர்ப்பில்,

 

“பூர்வாங்கமாக பார்க்கும் போது, இலவச கண் மருத்துவ முகாம் என்ற பெயரில், அறுவை சிகிக்கை என்று கோரி, பல கோடி ரூபாய்கள் கொள்ளையடிக்கப் பட்டுள்ளதாக தெரிகிறது.   மத்திய அரசு மாநில அரசுக்காக ஒதுக்கிய மொத்த நிதியில் பாதிக்கும் மேல் ஜோசப் மருத்துவமனைக்கு மட்டும் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. மத்திய அரசு ஒதுக்கும் நிதி எப்படி பயன்படுத்தப் படுகிறது என்பது எப்படி கண்காணிக்கப் படுகிறது என்பது எங்களுக்கு புரியவில்லை.

 

நிபுணர்கள் குழு, தங்களது அறிக்கையில் ஜோசப் மருத்துவமனைக்கு கண் புரை நீக்கு அறுவை சிகிச்சை செய்ய போதுமான வசதிகள் இல்லை என்று தெரிவித்த பிறகும், எந்த அடிப்படையில் பார்வைக் குறைவு கட்டுப்பாட்டு சங்கத்தின் தலைவராக உள்ள மாவட்ட ஆட்சியர், அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில், ஜோசப் மருத்துவமனை கண் சிகிச்சை முகாம் நடத்த எப்படி அனுமதி அளித்தார் என்பது எந்தச் சூழலில் என்பது எங்களுக்கு புரியவில்லை.”

 

என்று பதிவு செய்த நீதிபதிகள், உடனடியாக இந்த விவகாரத்தில் நடந்தது என்ன என்று, சிபிஐ விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டனர். சிபிஐ தனது விசாரணையில், இந்த 66 கிராமத்தினர் கண் பார்வை இழந்த இந்த விவகாரத்தில் மருத்துவர்களின் பொறுப்பு என்ன, மற்றவர்களின் பொறுப்பு என்ன என்பது குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், பொறுப்பானவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். மேலும், மத்திய அரசு வழங்கிய மொத்த நிதியில் பெரும் பகுதி, ஜோசப் மருத்துவமனைக்கு எப்படி ஒதுக்கப் பட்டது என்றும், அந்த நிதி எப்படி செலவிடப் பட்டது என்றும் ஆறு வார காலங்களுக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

 

இதையடுத்து சிபிஐ விசாரணை தொடங்கும் என்று தெரிகிறது.

 

இந்த விவகாரத்தில், உயர்நீதிமன்றம் தலையிட்டு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடாவிட்டால், ஏதாவதொரு முன்னேற்றம் ஏற்பட்டிருக்கும் என்று நினைக்கிறீர்களா ? ஸ்பெக்ட்ரத்தில் பணத்தை அடிப்பதை விடுங்கள்.   பார்வைக் குறைவை தடுக்க உருவாக்கப் படும் சங்கத்தில் கூடவா ஊழல் புரிவது ?

 

சவுக்கு லஞ்ச ஒழிப்புத் துறையில் பணியில் இருந்த காலத்தில், 1996ம் ஆண்டில், பி.ஆர்.பிந்து மாதவன் என்ற ஐஏஎஸ் அதிகாரி, Tamil Nadu Blindness Control Society மற்றும், Tamil Nadu AIDS Control Society ஆகிய இரண்டு அமைப்புகளின் நிதியையும் கையாடல் செய்ததும், அந்த சங்கங்கள் தயாரிக்கும் விளம்பரப் படங்களுக்கான ஒப்பந்தம் செய்வதில் அப்போது பல லட்ச ரூபாய் ஊழல் புரிந்ததும் தெரிய வந்தது. வழக்கமாக நடப்பதைப் போல, அந்த வழக்குகளிலும், எந்த முன்னேற்றமும் ஏற்படாமல், ஒருவரும் தண்டிக்கப் படாமல் மூடப் பட்டது. அந்த வழக்கில், பி.ஆர்.பிந்துமாதவன் ஐஏஎஸ் சிறைக்கு அனுப்பப் பட்டிருந்தால், இந்தத் தவறு ஒரு வேளை நடந்திருக்காது அல்லவா ?

 

யோசித்துப் பாருங்கள் தோழர்களே….. ! கண்பார்வை இழந்த இந்த ஏழை கிராமவாசிகள், ஏன் உங்களின் தந்தையாகவோ, சவுக்கின் தந்தையாகவோ இருக்கக் கூடாதா ?   நமது தாய்க்கும் தந்தைக்கும் அரசாங்கத்தின் அயோக்கியத்தனத்தின் காரணமாக கண்பார்வை போனால் என்ன கோபம் வரும் ? அந்தக் கோபம் தானே நக்சலைட்டுகளுக்கு வருகிறது ? தாயும், சகோதரிகளும், வன்புணர்ச்சி செய்யப் பட்ட கோபம் தானே விடுதலைப் புலிகளை ஆயுதம் தூக்க வைத்தது ?

 

கண்பார்வை இழந்த கிராமவாசிகளுக்கு, ஒரு லட்ச ரூபாயை பிச்சையாக வீசி விட்டு, சம்பந்தப் பட்ட அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கும் கருணாநிதி, தனது மகளுக்கோ, மனைவிக்கோ, ஒரு சிறிய நகரம் அளவுக்கு இருக்கும் அவரது குடும்ப உறுப்பினர்களில் ஒருவருக்கோ, இப்படி கண்பார்வை போனால், ஒரு லட்ச ரூபாய் வாங்கிக் கொண்டு, அமைதியாக இருப்பாரா ?

 

சம்பவம் நடந்த பொழுது பெரம்பலூர் கலெக்டராக இருந்தவர் அனில் மேஷராம்.   இவர் ஆண்டிமுத்து ராசாவின் நெருங்கிய கூட்டாளி என்பதும், பெரம்பலூர் விவசாயிகளின் நிலங்களை சாதிக் பாட்சாவின் க்ரீன் ஹவுஸ் ப்ரமொட்டர்ஸூக்காக, பறித்து எம்ஆர்எஃப் ஆலைக்கு வழங்கியவர் என்பதும் குறிப்பிடத் தகுந்தது.

 

நீதிமன்றம் இந்த நேர்வில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடாவிட்டால் என்ன நடந்திருக்கும் ?

 

எத்தனை கோடி ரூபாய் கொடுத்தாலும், கண் பார்வை இழப்பை சரி செய்ய முடியுமா ?

 

சொல்லுங்கள் நான் ஏன் நக்சலைட்டாக மாறக் கூடாது ?

 

 

 

Comments  

 
0 #59 subburaj 2011-03-18 19:01
yananga panrathu,makkal elavasathuku adimai ayetanga,votta panatha vangeketu thana poduranga,apara m arasiyalvathiya kochikerathu thappu
Quote
 
 
0 #58 satveka 2011-03-18 14:38
best of luck.
Quote
 
 
+2 #57 Karthikeyan 2011-03-15 22:03
சாவுக்கும் அதன்பால் மிகுந்த நண்பிக்கையும் மரியாதையும் கொண்ட என்னைபோன்ற இலைகர்களுக்கும் எண்ணுது வணக்கம் !

நாம் எல்லாருக்கும் இந்த வாழ்க்கை வாழவ்தற்காக , ஒரே நாளில் துப்பாக்கியை தூக்கிவிட்டு அதே துப்பாக்கியால் சாவதற்கல்ல .

துப்பாக்கியாலும ் ஏறததிலும் மலர்ந்த சுதந்திரங்கள் இன்னும்கூட அதே துப்பாக்கிகளுக் கு பின்னால்தான் இருக்கிறது.

அறிவு தான் மிகபெரிய ஆயுதம் , கல்விதான் அதற்கான சாவி. பொறுப்புள்ள நீங்கள் யாரையும் திசை திருப்பாமல், உங்கள் கோபத்தை அறிவோடு கலந்து ஒரு தூண்டுதலாக பரபுவீர்கலானால் , நீங்கள் எதிர்பார்க்கும் , நாங்கள் எதிர்பார்க்கும் அந்த புரட்சி ஒரு நாளில் மலரும்.

என்றும் உங்களோடு இருக்க விரும்பும் .....

தமிழன்
Quote
 
 
0 #56 balakrishnan 2011-03-15 12:47
http://www.dinamalar.com/district_detail.asp?id=205098
குட்டையாக மாறும் குளங்கள்; குறட்டை விடும் அதிகாரிகள்
Quote
 
 
+1 #55 pondumani 2011-03-15 07:59
You don't have to be a naxalite. Naxalite philosophy involves confrontation with law at serious levels. You can continue what you are already doing ie unearthing fraud and corruption. You may encourage people to video record whatever corrupt practice they see, including traffic police corruption, election fraud etc and post those videos. You will pose a serious challenge to TV channels.
Quote
 
 
+2 #54 Nithi 2011-03-14 10:28
WE ARE READY TO FOLLOW YOU......
Quote
 
 
0 #53 sathish77 2011-03-14 09:35
Prabadasan has spoken my mind. I agree we need a big humiliation and good lesson to learn. only then the citizens will change. forget about politicians.. they never change because they are no more humans.
Quote
 
 
0 #52 harakaraa 2011-03-14 06:22
dear savukku,
i am regular reader of your side, there is one somari who is copying your article and posting in his blogspot, pls find the link below

http://azifair-sirkali.blogspot.com/2011/03/blog-post_12.html?showComment=1300063827077#c4215609162859636743

regards
savukku reader
Quote
 
 
+5 #51 PKP 2011-03-14 02:03
மக்கள் சக்தியை ஒன்று சேர்க்காமல், எந்த ஒரு நியயமான புரட்சியயும் வெற்றி பெறாது.

துப்பாக்கி தூக்காமல் மக்களை ஒன்று திரட்ட போரடலாம்.

உரிமைகளை மறந்த ஆட்டு மந்தையாய் இலவசத்தை தேடி செல்லும் மலப்புலுக்கலாய் இருக்கிறான் என்பதை புரிய வைப்போம். புரிந்தால் புரட்சி தானாக வெடிக்கும். ஜனநாயகம் தானக வெற்றி பெரும்.

சமுதாய அவலங்களை அழிக்க நாம்மிடம் ஆயுதம் கொடுத்தாகி விட்டது. அது தான் தேர்தல் வாக்கு. இந்த ஆயுதத்தை பயன் படுத்த கேவலம் 100க்கும் 200க்கும் நம்மை கொல்ல நினைக்கும் கொலை காரனுக்கு விற்றால், யார் குற்றம்.

மாற வேண்டியது யார்? மக்களா அல்லது ஆள்பவனா?

உணர்ச்சி வசப்பட்டு முடிவால் யாருடைய வாழ்க்கையயும் வளப்பபடுத்தாது. மாறாக யாரின் நலனுக்காக் இந்த பாதையை தீமானிக்க நினைகிறீர்களோ அவர்களளே குற்றவாளியாக்க படுவீர்கள்.

மக்களுக்காக மாய்வது மகிழ்ச்சி தான். ஆனால் எடுத்து கொண்ட கொள்கை தோற்றுவிடும். மக்களுக்காக போராடக்கூடாது என்பதற்க்கு நீங்கள் முன்னுதாரனமாகி விடுவீர்கள்.

ஆதால், உண்மை வெற்றி கொள்ள வேண்டுமானால் மக்களின் மனமாற்றதிற்க்கு போரடுவோம். பிரட்ச்சனைகளை அவர்கள் முன்னால் எடுத்து செல்வோம். தீர்ப்பு எழுதுவது அவர்களாகட்டும்.
Quote
 
 
+1 #50 Raj_2011 2011-03-13 23:47
Dear Savukku,

In every real citizen there must be naxzal
personolity inside
all the acquist should be hang to death for
their mistakes
Quote
 
 
+1 #49 kuchi 2011-03-13 21:50
Quoting thangs:
Pl remember We got our freedom only by GANDHI-am way not by any other means.


No, it is not just because of Gandhi, but he is one of the reasons, the main reason was the second world war, the British empire became bankrupt after the costly WWII and United States lent money and pulled British Empire out of bankruptcy but it lost its empireship after the WWII because of its costly consequences and USA became the world empire after that. British not only pulled its ruling from India but from several parts of the world where it had colonies. So that was how we got freedom. Not just because of Gandhi only.
Quote
 
 
0 #48 ernill 2011-03-13 21:19
savukku,
I am absolutely with you on this topic. Even I have the same mind state when i see breach of law in the local, state or national level. I feel, the total route cause for this is the inefficiency of our legal system and the basic administration infrastructure. Correct me if I am wrong. Also I wanted to check with you one thing. I dont want to cast my vote to any party as I feel all are corrupted. For this I know there is an option of 49O. Last election when I asked for the 49O register I was seen as a brutal character not only by the election officers but by the political booth agents too. Initially they requested me, then started advising me and finally I was threatened by the local political rowdies. But I stood stubborn on my decision and I did 49O. My question is, as a citizen of a democratic country I feel I have the right to choose on my own. Then why the voting machine dont have the option for 49O. If it was there in the voting machine, I would not have faced an embarrassing situation in front of thousands of people standing on line for their vote. Cant this option be added to the voting machine. Please clarify if you know. Also please suggest how to type in Tamil while posting my comments. I love to record my comments in Tamil and not in English. I am sick of typing in English the language I hate most though I get my bread by it.
Quote
 
 
+6 #47 பார்த்திபன் 2011-03-13 18:22
Quoting PrabaaDaasan:
சவுக்கு அவர்களுக்கு நன்றி. என்னைப்போல் பிறரும் இதே கருத்தை கொண்டிருப்பதை பார்க்கும்போது எனக்கு மகிழ்ச்சியே. இபோதெல்லாம், இந்த இந்தியா என்ற நாட்டின்மீது எனக்கு பற்று அற்றுவிட்டது. கிரிகெட் விளையாட்டு தொடங்கி, இந்தியவிருக்கு ஒரு தோல்வி என்றால், என் மனம் ஆனந்தம் அடைகிறது. ஏனனெனில், இந்தியா ஒரு நல்ல பாடம் கற்க இதுபோன்ற மேலும் மிகபெரிய ஒரு தோல்வியை அது சந்திக்க வேண்டும் என நான் எண்ணுகிறேன். மிகப்பெரிய தோல்வி, பேரழிவு , ஒரு அவமானம் இவைகள் மட்டுமே ஒரு நாட்டின் மொத்த எண்ண ஓட்டத்தை மாற்றும். அது தனக்குத்தானே ஒரு சுய தேடலை செய்துகொண்டு அதன் தவறுகளை திருத்தும். அதுவரை, இந்த நாடு உருப்படாது.


மிகவும் சரி! இந்தியா ஒரு மிகப் பெரிய நஷ்டத்தை அடைந்தால் தான் இதற்கு ஒரு தீர்வு கிடைக்கும். சீனாவின் பலம் இலங்கையில் அதிகரித்து இந்திய கடற்படை தாக்கப்படும் காலம் வெகு தொலைவில் இல்லை. அது மிக மோசமான அளவில் இருக்க வேண்டும். அவர்களின் ஏஜண்டுகள் இந்தியாவினுள் அனுப்பப்பட்டு இந்திய பாதுகாப்பு கேள்விக் குறியாகும் காலமும் சீக்கிரம் ஏற்படும் என்பது எனது கணிப்பு.
Quote
 
 
+4 #46 manamulla tamilan 2011-03-13 13:21
சவுக்கு அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்
கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு பள்ளிக்கூட ஆசிரியரை சந்தித்தேன். உண்மையிலேயே தனது மாணவர்கள் சிறப்பாக வரவேண்டும் என்பதற்காக மிகவும் பிரயாசையுடன் பாடங்களை நடத்துபவர். விடுப்பு கூட எடுக்க மாட்டார். தனிப்பயிற்சியும ் பணத்திற்காக எடுக்க மாட்டார். இதுதவிர ஏழைக்குழந்தைகளு க்கு தன்னாலான உதவிகளை செய்து வருவபவர். மிகவும் ஏழ்மையான சூழலில் வாழந்து வரும் இவரை சந்தித்த அதே நேரத்தில் செய்தி தாள்களில் நல்லாசிரியர் விருது சிலருக்கு வழங்கப்பட்டதாக தகவல் வெளியிடப்பட்டிர ுந்தது.
அப்படி நல்லாசிரியர் விருது பெற்றவர்களில் மதுரையை சார்ந்த ராஜாராம் என்ற மதுரை அருகே உள்ள சமயநல்லூரில் அரசு பள்ளிக்கூடத்தில ் தொழில் கல்வி ஆசிரியராக வேலை பார்க்கும் இந்த ராஜராமுக்கு தமிழக அரசின் சார்பில் "நல்லாசிரியர்" விருது வழங்கப்பட்டிருந ்தது கண்டு அதிர்ச்சியடைந்த ேன். காரணம், இந்த ராஜாராம் என்பவர் மிகுந்த முக்குலத்தோர் சாதி வெறியர். மேலும் இவர் மதுரையில் தனது மனைவியை பள்ளிக்கூட முதல்வராக கொண்டு இரண்டு மெட்ரிகுலேசன் பள்ளிகளையும் நடத்தி வருகிறார். இந்த ராஜாராம் தான் இந்த இரண்டு பள்ளிகளுக்கும் தாளாளரும் கூட.
இவரது உடன்பிறந்த தம்பி ஜெயராம் என்பவர் மதுரை மாவட்ட தி.மு.க இளைஞரணி செயலாளர். இந்த ஒரே காரணத்திற்காக தான் வெறும் 44 வயதே ஆன ராஜாராமுக்கு 'நல்லாசிரியர்" விருது வழங்கப்பட்டது என்று மதுரையில் இருக்கும் அத்தனை ஆசிரியர்களிடத்த ிலும் புலம்பல் எழுந்தது. இரண்டு தனியார் பள்ளிகளை நடத்தி வரும் ஒரு நபருக்கு எப்படி நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது. இவர் தனது மனைவி பெயரில் இரண்டு பள்ளிக்கூடங்களை நடத்திக் கொண்டு கட்டண கொள்ளை அடிப்பது மதுரை முழுவதும் அறிந்த செய்தி.
நான் மேலே குறிப்பிட்ட அந்த ஏழ்மையான ஆசிரியர் உண்மையிலேயே நல்லாசிரியரா? அல்லது அரசாங்கத்தால் நல்லாசிரியல் விருது வழங்கப்பட்ட ராஜராம் போன்ற அரசு சம்பளத்தையும் வாங்கிகொண்டு, தனியாக இரண்டு பெரிய பள்ளிகளை நடத்தி கொள்ளை அடிக்கும் ராஜராம் போன்ற சாதி வெறியர்கள் நல்லாசிரியர்களா ? தி.மு.க களவாணிகளின் அராஜகத்திற்கு எல்லையே இல்லை என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம்.
உங்கள் அமைப்பு மூலம் இந்த பிரச்சனையை வெளிக்கொண்டு வருவீர்கள் என்று நம்புகிறேன்
நன்றி
Quote
 
 
+1 #45 mary 2011-03-13 11:08
prabakaran mattum mikavum suththamaaka erukka vendum enru ninaippavarkal aatchiyaalarkal mikavum correcta nadakkavendum enru ninaikka aarampiththaal thaan naadu munnerum kadavul kooda avathaaram eduththu vanmurayil thaan narakarkalai aliththaar appo avar enna theeviravaathi enraa solkirom avaridam poi enakku erankum kadavule enkirom makkal thaan thirunthanum. en annan prabakaran kadavul avathaaram thaan.
Quote
 
 
+1 #44 நக்சலைட் 2011-03-13 11:03
COME AND JOIN WITH US TO SAVE OUR PEOPLE. WE CAN CHANGE THIS WORLD.
Quote
 
 
+4 #43 Barathy 2011-03-13 10:51
Quoting PrabaaDaasan:
Quoting Baskar:
I see Savukku is pro-LTTE. Can he answer my following questions.

1. How can you justify Prabhakaran's eraducation of other tamil organizations like EPRF etc? You are terming tamil nadu tamilians as "thoppul kodi uravu" etc. But are they supposed to be your own brothers? So that he can be a single ruler of Tamil Eelam?
2. Rajiv Gandhi was killed by LTTE for the atrocities committed by IPKF. How can we believe, even after acquiring Tamil Eelam, he would have been friendly with India?


It is very simple, if you read history thoroughly, you can understand one point clearly, NEVER ALLOW ANY ETTAPPAN/THUROGIS/BACK STABBERS/TRAITORS. Even if you read the history of any ancient Tamil kings, they never pardoned any offspring of enemy kings or traitors. See now, what happened, the LTTE lost because, they allowed one traitors to escape (Karuna) which was a blunder mistake from LTTE.
For your second question, Rajive was not killed by LTTE. But, He was punished by LTTE for the atrocities that were committed by IPKF in another foreign county, it is called war crimes.

There is no organization called EPRF. That is EPRLF. Current minister Daglus also one of the member of that organization. He was a leader of the " Mandayan Grup". They eliminate the people who against the EPRLF. In 1992 he left EPRLF and stared EPDP. Still he is doing his Mandayan Group program is SL. Even you dont know the name of the organization, then how you know the all history or Srilankan Tamil. Please before write about Prabakaran, go and read the history
Quote
 
 
+4 #42 kudimagan 2011-03-13 07:38
Quoting PrabaaDaasan:
சவுக்கு அவர்களுக்கு நன்றி. என்னைப்போல் பிறரும் இதே கருத்தை கொண்டிருப்பதை பார்க்கும்போது எனக்கு மகிழ்ச்சியே. இபோதெல்லாம், இந்த இந்தியா என்ற நாட்டின்மீது எனக்கு பற்று அற்றுவிட்டது. கிரிகெட் விளையாட்டு தொடங்கி, இந்தியவிருக்கு ஒரு தோல்வி என்றால், என் மனம் ஆனந்தம் அடைகிறது. ஏனனெனில், இந்தியா ஒரு நல்ல பாடம் கற்க இதுபோன்ற மேலும் மிகபெரிய ஒரு தோல்வியை அது சந்திக்க வேண்டும் என நான் எண்ணுகிறேன். மிகப்பெரிய தோல்வி, பேரழிவு , ஒரு அவமானம் இவைகள் மட்டுமே ஒரு நாட்டின் மொத்த எண்ண ஓட்டத்தை மாற்றும். அது தனக்குத்தானே ஒரு சுய தேடலை செய்துகொண்டு அதன் தவறுகளை திருத்தும். அதுவரை, இந்த நாடு உருப்படாது.



Prabu, neengal nalla manidhan.
Quote
 
 
+2 #41 PrabaaDaasan 2011-03-13 02:24
Quoting Baskar:
I see Savukku is pro-LTTE. Can he answer my following questions.

1. How can you justify Prabhakaran's eraducation of other tamil organizations like EPRF etc? You are terming tamil nadu tamilians as "thoppul kodi uravu" etc. But are they supposed to be your own brothers? So that he can be a single ruler of Tamil Eelam?
2. Rajiv Gandhi was killed by LTTE for the atrocities committed by IPKF. How can we believe, even after acquiring Tamil Eelam, he would have been friendly with India?


It is very simple, if you read history thoroughly, you can understand one point clearly, NEVER ALLOW ANY ETTAPPAN/THUROGIS/BACK STABBERS/TRAITORS. Even if you read the history of any ancient Tamil kings, they never pardoned any offspring of enemy kings or traitors. See now, what happened, the LTTE lost because, they allowed one traitors to escape (Karuna) which was a blunder mistake from LTTE.
For your second question, Rajive was not killed by LTTE. But, He was punished by LTTE for the atrocities that were committed by IPKF in another foreign county, it is called war crimes.
Quote
 
 
+7 #40 PrabaaDaasan 2011-03-13 02:14
சவுக்கு அவர்களுக்கு நன்றி. என்னைப்போல் பிறரும் இதே கருத்தை கொண்டிருப்பதை பார்க்கும்போது எனக்கு மகிழ்ச்சியே. இபோதெல்லாம், இந்த இந்தியா என்ற நாட்டின்மீது எனக்கு பற்று அற்றுவிட்டது. கிரிகெட் விளையாட்டு தொடங்கி, இந்தியவிருக்கு ஒரு தோல்வி என்றால், என் மனம் ஆனந்தம் அடைகிறது. ஏனனெனில், இந்தியா ஒரு நல்ல பாடம் கற்க இதுபோன்ற மேலும் மிகபெரிய ஒரு தோல்வியை அது சந்திக்க வேண்டும் என நான் எண்ணுகிறேன். மிகப்பெரிய தோல்வி, பேரழிவு , ஒரு அவமானம் இவைகள் மட்டுமே ஒரு நாட்டின் மொத்த எண்ண ஓட்டத்தை மாற்றும். அது தனக்குத்தானே ஒரு சுய தேடலை செய்துகொண்டு அதன் தவறுகளை திருத்தும். அதுவரை, இந்த நாடு உருப்படாது.
Quote
 
 
-1 #39 Tamilan Shiva 2011-03-13 01:24
யொவ் சவுக்கு! சத்தமா பெசாதேய்யா... தே.பா.ச பாய்ந்து விட போவுது..
Quote
 
 
+3 #38 Deen 2011-03-13 00:38
Dear Shankar,
You have been started a revolution in tamilnadu politics.but if you become a naxalite it is easy to kill you in a encounter .so dont do it ?please..Because Peoples need the leaders who have intelligency rather then physical strenght .So Continue your fight wiht brain.Your message has to reach more and more tamil poor peoples ...So your Articles to be printed and distributed all over the tamilnadu among the poor and middle class peoples ..we will support you.....
Quote
 
 
+12 #37 குமார.இரவிக்குமார் 2011-03-12 21:20
நண்பரே, உங்கள் கோபம் நியாயமானது. ஆனால் உணர்ச்சிவசப்படா மல் சிந்தியுங்கள். கேரளாவிலும் தமிழ்நாட்டிலும் கோபப்பட்ட இளைஞர்களுக்கு (நக்சலைட்டுகளுக ்கு) நேர்ந்த முடிவு என்ன?ஆளும்முதலாளிகளு ம் அவர்களின் அடியாட்களான காக்கிச் சட்டைகளும் நடத்திய கோரத் தாண்டவத்தை மறந்து விட்டீர்களா? பாதிக்கப்பட்ட மக்கள் கோபப்படாமல் மற்றவர்கள் கோபப்படுவதால் பெரிதாக எந்த மாற்றமும் வந்து விடாது. போதையும் சதையும் மக்களின் கண்களை மறைக்கும் வரை எந்த”லைட்டும்” மக்களுக்கு வெளிச்சத்தை தராது
Quote
 
 
+6 #36 Ravi 2011-03-12 21:17
சவுக்கின் விரக்தி புரிகிறது. இன்னும் சொல்லப்போனால் இது போன்ற விரக்தி இந்த நாட்டை மக்களை நேசிக்கும் பலருக்கு இருக்கிறது. இந்த அரசியல் தலைவர்கள் தொடர்ந்து இந்த நாட்டை இது போலவே கொள்ளையடித்துக் கொண்டிருந்தால் இந்த அரசு அதிகாரிகள் இதுபோல் தொடர்ந்து மக்களை நசுக்கிக் கொண்டிருந்தால் உங்களைப் போல பலர் தாமாகவே நக்சலைட்டாக மாறும் நாள் தொலைவில் இல்லை
Quote
 
 
+5 #35 இளங்குமரன் 2011-03-12 21:01
நீங்கள் கேட்டுள்ள கேள்விக்கு ஆம் என்பதே பதில்....

நீங்கள் வெளியிடும் தகவல் நிறைய மக்களுக்குச் சென்று சேரவேண்டும்.

www.ezhutheni.org
Quote
 
 
+5 #34 kd 2011-03-12 20:16
சொல்லுங்கள் நான் ஏன் நக்சலைட்டாக மாறக் கூடாது ? சிந்தியுங்கள். எகிப்தை போல மக்கள் வீறு கொண்டு எழும் நாள் விரைவில் வரும் ஒவ்வொரு மனிதனும் ஒரு நக்சளைடாக மாறிவிடுவான்.
Quote
 
 
+3 #33 naantamilachi 2011-03-12 19:13
நாம் நக்சலைட்டாக மாறக் கூடாது, நாம் தமிழராக மாறினால் போதும்
Quote
 
 
+6 #32 BaluMahendran 2011-03-12 18:51
நெஞ்சு பொறுக்குதில்லைய ே , இந்த நிலை கெட்ட மனிதரை நினைந்துவிட்டால :oops:
Quote
 
 
-2 #31 muru2006 2011-03-12 18:26
see indian army, what are they doing in NORTH EAST INDIA now a days. They are getting expiriance in our people TAMIL Ealam
Quote
 
 
0 #30 ABBAS 2011-03-12 18:05
intha nattayum naattu makkalaiyum kapatha yarum illaiye
Quote
 
 
+1 #29 KK 2011-03-12 16:55
Savukku should focus on Tamilnadu election.This is the last chance to remove family rule.

We expect good articles and exposures so that DMK front can lose and be banished.Time is short and you can give directions to vote constituency wise. For example in Nagercoil only BJP can defeat DMK front
In other places AIADMK front. Please make only election analysis

This is a life or death for Tamils
Quote
 
 
+2 #28 Ashok12 2011-03-12 16:33
@Baskar,
If this a Gandhi Nation? What you have done to the organisation which killed ghandhi? did you have the guts to ban it? atleast?
Gandhi preched non-violence.. but at his age while he was having sex with his pregnant wife @ his father's funeral, My Dileepan and annai boopathi died out of fasting-not asking for free home land but atleast stop the rapings and killings of indian army.

You guys cheat ur own people and the entire world in the name of Gandhi
Quote
 
 
+2 #27 Dr. Boopathi 2011-03-12 16:28
loosing eye is nothing but loosing almost everything.. those poor people could be the sole bread winners of those families.. that Joseph eye hospital has done something terrifically wrong. sooner these kind of doctors and their hospitals weeded out better for the betterment of the society.

politicians and hospitals joining hands to loot money is not new. I personally have my own experience. When i was working in Cochin i myself had witnessed a hospital looting tsunami relief fund. within few months they looted about 2 crores out of 5 allotted to the whole state. think that in corruption TN politicians are big bros to kerala. :lol: :lol: :lol:
Quote
 
 
+13 #26 kamalmin 2011-03-12 14:51
பெரம்பலூர் ஜோசப் கண் மருத்துவமனை எந்த அடிப்படை வசதி இல்லாத தமிழக பேருந்து நிலையம் போன்றது .குற்றம் செய்த கண் திருடிகளின் கை வெட்டப்பட வேண்டும் .போலி ஜனநாயகம் தேவை இல்லாதது .சேவை என்ற போர்வையில் தவறு செய்பவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் , குற்றம் நடக்காமல் தடுக்க படவேண்டும்
Quote
 
 
-3 #25 malliga 2011-03-12 14:41
. . . not thing lik tis
Quote
 
 
-1 #24 malliga 2011-03-12 14:40
:oops: :oops: :oops:
Quote
 
 
+2 #23 கோவை பிரியன் 2011-03-12 13:50
மிக மிக சரியான கருத்து..மிக நீண்ட நாட்கள்ளுக்கு பிறகு சவுக்கு பழைய தரத்துடன் உள்ள ஒரு பதிவு .இருப்பினும் இதிலயும் தமிழ் தாத்தா பற்றி சிறிய வஞ்சம் வெளிபடுகிறது...
Quote
 
 
+8 #22 amoorthy 2011-03-12 13:50
துரோகிகளையே புலிகள் அழித்தார்கள். இன்று தமிழர்களை அழிக்க சிங்களத்துடன் இணைந்து செயல்படும் ஒட்டுக்குளுக்கள ை அன்றே அழித்திருந்தால் ,இன்று இறுதிப் போரின் பின்னர் தமிழர்கள் ஓரளவாவது நிம்மதியை பெற்றிருப்பார்க ள். இந்த ஒட்டுக் குளுக்கள் கருணாநிதி குடும்பம் போல் போலிகள் என்பதை மக்கள் இன்று உணர ஆரம்பித்து விட்டார்கள். விடுதலை,உரிமை என்று பேசிய இந்த ஒட்டுக் குளுக்கள் இன்று சிங்களத்தின் காலடிகளில் விழுந்து தமிழர்களை அழிக்கும் செயல்களில்,கடத் தல்,கொலை,கற்பளி ப்பு போன்ற கொடுமைகளில் ஈடுபடுவது தெரியவில்லையா. இராமன் என்ற மனிதனை,வாழ்ந்தி ருந்தால்,கடவுள் என்று சொல்லும் ஆன்மீகவாதிகள்,ப ிரபாகரன் மேல் குற்றம் சொல்வது என்ன நியாயம். உண்மைகளை மக்கள் முன் வைத்து மக்கள் விரோத சக்திகளை ஓரம் கட்டுங்கள் என்று சொல்லும் சவுக்கும் ஒரு விதத்தில் கடவுளே.
Quote
 
 
0 #21 Ashraf 2011-03-12 13:45
Realy its good article,
Quote
 
 
+6 #20 sakthy 2011-03-12 13:27
புலிகளின் காலப் பகுதியில் மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தார்கள். அதனால் தான் இப்போது கூட புலிகளை மக்கள் ஆதரிக்கிறார்கள் ,மீண்டும் புலிகள் வர வேண்டும் என்ற நிலைப்பாடுடன். இருக்கிறார்கள்.
ராஜீவ் காந்தியால் கொல்லப்பட இருபத்தையாயிரம் தமிழர்களை ஏன் நினைக்க மறுக்கிறார்கள். பெண்கள் மானபங்கப்படும் போது, அந்தப் பெண்களை இந்தியா ராணுவத்தின் கண்களில் படாதீர்கள் என்று எச்சரிக்கை செய்த தமிழக ராணுவ வீரனிடம் கேளுங்கள் இந்தியா ராணுவத்தின் கொடுமைகளை கதை கதையாக சொல்வான். epdp.eplrf, புலிகள் இல்லாத இன்றைய காலத்தில் சிங்களத்துடன் இணைந்து தமிழர்களின் இன அழிப்புக்கு துணை போகிறார்களே.இந்த இயக்கங்க்கள் போலிகள் என்பது இன்னுமா புரியவில்லை.
சிங்கள நாட்டைப் போல், நம் நாட்டில் ஆட்சியே பயங்கரவாதிகளாக( அரச பயங்கரவாதம்) இருக்கும் போது நக்சலைட் ஆக நாம் மாறுவதில் என்ன தவறு.
Quote
 
 
+26 #19 வெத்து வேட்டு 2011-03-12 13:07
சவுக்கு
நீங்கள் கூறியது மிகவும் சரியே. ஆனால் இங்கு மக்கள் தான் திருந்த வேண்டும் முதலில். லஞ்சம் குடுக்கவும் கூடாது வாங்கவும் கூடாது. இலவசத்தை பெற்று கொள்ளவும் கூடாது.
Quote
 
 
-2 #18 Baskar 2011-03-12 13:06
I totally agree with thangs. This is country of Gandhi. All we need is to infuse civic sense to young kids right at the age of 3. They will become good and change the nation.
If we start killing others like naxalite, we will become a dictator like LTTE leader Prabhakaran who eliminated other tamil organizations.

You call me traitor, I don't care. But can anybody confront this truth.
Quote
 
 
0 #17 Baskar 2011-03-12 13:01
I see Savukku is pro-LTTE. Can he answer my following questions.

1. How can you justify Prabhakaran's eraducation of other tamil organizations like EPRF etc? You are terming tamil nadu tamilians as "thoppul kodi uravu" etc. But are they supposed to be your own brothers? So that he can be a single ruler of Tamil Eelam?
2. Rajiv Gandhi was killed by LTTE for the atrocities committed by IPKF. How can we believe, even after acquiring Tamil Eelam, he would have been friendly with India?
Quote
 
 
+12 #16 ஈசன் 2011-03-12 12:53
Quoting thangs:
Pl remember We got our freedom only by GANDHI-am way not by any other means.


நமது சுதந்திரம் இரண்டாம் உலகப்போரின் போது இங்கிலாந்தும் அமெரிக்காவும் போட்டுக்கொண்ட ஒப்பந்தம் காரணமாக வந்தது. காந்தியால் வந்ததல்ல என்பது என் கருத்து. ஆனால் இந்த காந்தி நமக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தார் என்கிற கதை நன்றாகவும் நமக்கு பெருமையாகவும் உள்ளது. காந்தியம் பேசுவதற்கு இந்தியாவுக்கு யோக்கியதை கிடையாது. பசுமை வேட்டை பல உதாரணங்களின் ஒன்று.
Quote
 
 
+4 #15 sakthy 2011-03-12 12:51
நாட்டில் மனிதநேயம்,மனிதா பிமானம் எதுவும் இல்லாமல் போய் விட்டது. பணமும்,பதவியும் ,விருதுகளும் ஆட்டிப் படைக்கின்றன. இந்த மிருகத் தனமான(மன்னிக்கவ ும்.மிருகங்கள் கற்பளிப்பதில்லை ,மானபங்கம், கொள்ளை,ஊழல் செய்வதில்லை) செயல்கள் நாம் எவ்வளவு பேசினாலும்,எழுத ினாலும் குறையாது வளர்ந்து கொண்டிருக்கிறது . தந்தையே மகளை மானபங்கம் செய்வது போல், வேலியே பயிரை மேய்வது போல், பாதுகாப்பு கொடுக்க வேண்டியவர்களே அந்தக் கொடுமைகளை செய்கிறார்கள். உண்மையை,நீதியை, தர்மத்தை பணத்தால் வாங்கி விடுவதால், சட்டம்,நீதி கண்ணை மூடிக் கொள்கிறது. கருணாநிதியின் குடும்ப ஆட்சியிலேயே இப்படியான மோசமான செயல்கள் உருவாகி,வளர்க்க ப்பட்டன. வாக்குப் பெற பணத்தை கொடுப்பது போல்,பாதிக்கப்ப ட்ட எழைகளுக்கு பணத்தை கொடுத்து சரி செய்து விடுகிறார்கள். படிப்பறிவுடைய நம்மாலேயே எதுவும் செய்ய முடியாமல் திண்டாடும் போது,எழைகள் என்ன செய்வார்கள்.
இது ஒருபுறமிருக்க,க னிமொழி விசாரணை கண் துடைப்பு ஆகிவிடுமோ என்ற அச்சமும் இருக்கவே செய்கிறது. இந்நிலையில் நக்சலைட்டாக மாறுவதில் தப்பே கிடையாது.வாய் கட்டப்பட்ட நிலையில் துடித்துக் கொண்டிருக்கும் மக்களுக்காக போராளியாக நான் தயார்.
Quote
 
 
+13 #14 Velan, Madurai 2011-03-12 12:33
தீவிரவாதம் (நக்சலைட்டுகள்) பற்றி பேசுவதை சவுக்கு தவிர்க்க வேண்டும். மற்றபடி 1,76,00,00,00,(உ ண்மையிலே எதனை ௦ தெரியல) கடமை இருக்கு கொஞ்சநாள் அதிலே கவனமாக இருங்கள்.
Quote
 
 
+11 #13 ஊர்க்குருவி 2011-03-12 12:01
//சொல்லுங்கள் நான் ஏன் நக்சலைட்டாக மாறக் கூடாது ?// துணிச்சலுடன் சவுக்கு எழுப்பியிருக்கு ம் கேள்வி பல இளைஞர்களிடம் தீர்மானமாக இருப்பதாகத்தான் நடைபெறும் சம்பவங்கள் உறுதி கூறுகின்றன.களம் எப்படி அமைப்பது பக்க விளைவுகள் எப்படியிருக்கும ் என்பன புரியப்படாததால் தணல் நிலையில் மனவெழிச்சி தகித்துக்கொண்டி ருக்கிறது ஒருநாள் பற்றி எரியத்தான் போகிறது, அதற்கான மூலம் இந்திய அரசியல் என்பது உண்மையாக இருந்தாலும் இல்லையென்று இதே அரசியல் அன்றைக்கும் சாதிக்கத்தான் செய்யும்,
Quote
 
 
-2 #12 thangs 2011-03-12 11:38
Pl remember We got our freedom only by GANDHI-am way not by any other means.
Quote
 
 
0 #11 savukku friend 2011-03-12 11:38
கடலில் மீன் பிடிக்கச் செல்லும் இந்திய மீனவர்கள் சுடப்படுவதை தடுப்பதற்காக உறுதியான நடவடிக்கை எடுப்பதற்கு மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரிய மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.

சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் பி.புகழேந்தி பொதுநலன் வழக்கை தாக்கல் செய்திருந்தார். அதில், கடல் பகுதியில் இந்திய மீனவர்களை தாக்குகிறவர்கள் மற்றும் கொலை செய்கிறவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். அவர்களுக்கு தகுந்த பாதுகாப்பு அளிப்பதற்கு உறுதியான நடவடிக்கை எடுக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று அதில் கூறியிருந்தார்.


மேலும், கடந்த 20 ஆண்டுகளாக கொலை செய்யப்பட்ட மீனவர்கள் பற்றிய முழு தகவல்களை தமிழக அரசு கொடுத்திருந்தால ும், அந்த குற்றங்களை தடுப்பதற்கு மத்திய அரசு தவறிவிட்டது என்றும் அதில் புகழேந்தி தெரிவித்திருந்த ார்.


இந்த மனுவை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் விசாரித்தனர். மனுவை நேற்று தள்ளுபடி செய்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:


இதுபோன்ற கோரிக்கைகள் வைக்கப்பட்ட 2 மனுக்களை இந்த கோர்ட்டு விசாரித்து, அவற்றின் தகுதியின் அடிப்படையில் 24.2.11 அன்று தள்ளுபடி செய்தது. அந்த மனுக்களில் கூறப்பட்டுள்ள அதே கோரிக்கைகளையே வேறு வார்த்தைகளில் மனுதாரர் கோரியிருக்கிறார ். எனவே இந்த மனுவையும் தள்ளுபடி செய்வதற்கு நாங்கள் தயங்கவில்லை.


இந்த மனுவுக்கு பதில்மனுவை மத்திய அரசின் உதவி சொலிசிட்டர் ஜெனரல் ஜே.ரவீந்திரன் தாக்கல் செய்திருந்தார். அதில், 1980 ம் ஆண்டுகளில் கச்சத்தீவுக்கு செல்வதற்கு இந்திய மீனவர்களுக்கு விதிக்கப்பட்டிர ுந்த கட்டுப்பாடுகள், 2003 ம் ஆண்டில் தளர்த்தப்பட்டது .


மீனவர்கள் பாதுகாப்புக்காக இந்திய கடலோர காவல் படையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என்று அதில் கூறப்பட்டுள்ளது . மேலும், இந்த விவகாரம் இந்தியா இலங்கை ஆகிய இரு நாடுகளுக்கு இடையேயான நல்லுறவு சம்பந்தப்பட்ட விவகாரம் என்றும், இந்த உறவை மேம்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுப்பதாகவும் மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது .


எனவே இரு நாடுகள் உறவு சம்பந்தப்பட்ட விவகாரத்தில் நாங்கள் தலையிட விரும்பவில்லை. எனவே மனுவை தள்ளுபடி செய்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Quote
 
 
+7 #10 reader 2011-03-12 11:34
"ஓட்ட போட்டேன்னு சொல்லாதே. வித்தேன்னு சொல்லு"

அண்ணன் அஞ்சாசிங்கம் புட்டுபுட்டு வைக்கிறார்.
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 167 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday5142
mod_vvisit_counterYesterday10268
mod_vvisit_counterThis week47869
mod_vvisit_counterLast week80132
mod_vvisit_counterThis month250601
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12772720