|
சட்டப்பேரவை தேர்தலுக்காக அ.தி.மு.க. வெளியிட்ட வேட்பாளர் பட்டியலால் அந்த கூட்டணியில் உள்ள கட்சிகள் அனைத்தும் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளன.
அ.தி.மு.க. அணியில் தே.மு.தி.க.வுக்கு 41 தொகுதிகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 12, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 10, மனிதநேய மக்கள் கட்சிக்கு 3, புதிய தமிழகம் கட்சி, சமத்துவ மக்கள் கட்சி ஆகியவற்றுக்கு தலா 2, பார்வர்டு பிளாக், இந்திய குடியரசு கட்சி, கொங்கு இளைஞர் பேரவை, அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகம் ஆகிய கட்சிகளுக்கு தலா 1 என தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.
இந்நிலையில், கூட்டணிக் கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகளை ஒதுக்குவது என்பது பற்றிய ஆலோசனை சென்னை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் தே.மு.தி.க., மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், புதிய தமிழகம் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் தனித்தனியாக சந்தித்து தங்களுக்கு ஒதுக்க வேண்டிய தொகுதிகள் பற்றி விவாதித்தனர்.
பேச்சுவார்த்தையில் இறுதி முடிவு எட்டப்படாத நிலையில், அந்தக் கூட்டணியில் உள்ள கட்சிகள் அ.தி.மு.க.வுடன் அடுத்த சுற்று பேச்சு நடத்த காத்திருந்தன.
இந்நிலையில், யாரும் எதிர்பாராத வகையில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் போட்டியிடும் 160 தொகுதிகளுக்கான பட்டியலை அக்கட்சி பொதுச் செயலாளர் ஜெயலலிதா புதன்கிழமை மாலை வெளியிட்டார்.
இதில் கடந்த தேர்தலில் கூட்டணிக் கட்சிகள் வெற்றி பெற்ற பல தொகுதிகளை இப்போது அ.தி.மு.க. எடுத்துக் கொண்டிருப்பது தெரிய வருகிறது. அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் பேச்சு நடத்திய பின் அங்கிருந்து புறப்பட்ட கூட்டணி கட்சியினர் தங்கள் அலுவலகத்தில் நுழைந்த நேரத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியலும் வெளியானது. இதனால் அந்தக் கட்சி நிர்வாகிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
கடந்த தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்ற திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, நன்னிலம், சிவகங்கை, ஆலங்குடி, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய 6 தொகுதிகளிலும் இப்போது அ.தி.மு.க. வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இது தவிர அக்கட்சி இப்போது கேட்ட தொகுதிகளில் தளி உள்ளிட்ட ஓரிரு தொகுதிகளைத் தவிர மற்ற எல்லா தொகுதிகளிலும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.
இதேபோல் மார்க்சிஸ்ட் கட்சி கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற 9 தொகுதிகளில், திண்டுக்கல், பெரம்பூர், அரூர், திருப்பூர், நாகப்பட்டினம், மதுரை (தெற்கு) ஆகிய 6 தொகுதிகளில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும், அக்கட்சி கேட்டிருந்த கீழ்வேளூர் உள்ளிட்ட மிகப் பெரும்பாலான தொகுதிகளில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
டாக்டர் கிருஷ்ணசாமி தலைமையிலான புதிய தமிழகம் கட்சி, ஒட்டபிடாரம், வாசுதேவநல்லூர் ஆகிய தொகுதிகளைக் கேட்டு வந்ததாக செய்திகள் வெளியாயின. எனினும், இப்போது அவ்விரு தொகுதிகளிலும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.
அதேபோல், பார்வர்டு பிளாக் கட்சி கேட்டதாகக் கூறப்பட்ட உசிலம்பட்டி தொகுதிக்கும் அ.தி.மு.க. வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார்.
அ.தி.மு.க. தலைமையின் இந்த அறிவிப்பு அந்த கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளையும் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இது குறித்து மார்க்சிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் புதன்கிழமை இரவு வெளியிட்ட அறிக்கை:
அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் புதன்கிழமை நடத்திய பேச்சின்போது, கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற தொகுதிகளோடு, மேலும் வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளையும் ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம்.
அவர்கள் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுடன் கலந்தாலோசித்து விட்டு, புதன்கிழமை இரவே மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்துக்கு வந்து தொகுதிகள் பற்றி இறுதி செய்வதாக கூறினர்.
ஆனால், அடுத்த ஒரு மணி நேரத்தில் வெளியிடப்பட்ட அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியலில், கடந்த தேர்தலில் எங்கள் கட்சி வெற்றி பெற்ற 6 தொகுதிகள், நாங்கள் கேட்டு வரும் பிற தொகுதிகளுக்கும் சேர்த்து வேட்பாளர்களை அறிவித்துள்ளனர்.
இது மிகவும் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. இந்நிலையில், இப்போதைய நிலைமை குறித்து விவாதித்து முடிவுகளை மேற்கொள்ள, மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டம் அவசரமாக சென்னையில் வியாழக்கிழமை நடைபெறும் என்று ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலாளர் சி. மகேந்திரனிடம் கேட்டபோது, அ.தி.மு.க.வின் இந்த அறிவிப்பு சற்றும் எதிர்பாராதது. எனவே, இது பற்றி விவாதிக்க எங்கள் கட்சியின் மாநில நிர்வாகக் குழுக் கூட்டத்தை அவசரமாக சென்னையில் வியாழக்கிழமை கூட்டியுள்ளோம் என்றார்.
புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி கூறியது:
4 தொகுதிகளின் பெயர்களை கூறுமாறு எங்களிடம் கேட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள், அதிலிருந்து 2 தொகுதிகளை எங்களுக்கு ஒதுக்குவதாகக் கூறியிருந்தனர்.
இதன்படி, வாசுதேவநல்லூர், ஒட்டபிடாரம், சங்கரன்கோயில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய 4 தொகுதிகளின் பெயர்களைக் கொடுத்திருந்தோம். இப்போது, 4 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் எங்கள் கட்சியின் மாநில நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை சென்னையில் வியாழக்கிழமை கூட்டியுள்ளோம் என்றார் கிருஷ்ணசாமி.
தன்னிச்சையாக அதிமுக வேட்பாளர்களை அறிவித்திருப்பது தேமுதிக தரப்பிலும் எரிச்சலையும், அதிருப்தியையும் ஏற்படுத்தி இருக்கிறது. ""இப்படிப்பட்ட போக்கை அதிமுக தலைமை தொடருமானால், அந்தக்கட்சியுடன் கூட்டணி அமைத்து எப்படி செயல்பட முடியும்'' என்று மூத்த நிர்வாகிகளிடம் கட்சித் தலைவர் விஜயகாந்த் சலித்துக் கொண்டதாகக் கேள்வி.
இது தவிர, 160 தொகுதிகளுக்கு அ.தி.மு.க. வேட்பாளர்களை அறிவித்துள்ளதன் மூலம், இதுநாள் வரை அந்தக் கூட்டணியில் இடம்பெற்றிருந்த ம.தி.மு.க.வுக்கு இனி அந்தக் கூட்டணியில் இடமில்லை என்பது உறுதியாகி உள்ளது.
அதிருப்தியில் இருக்கும் இடதுசாரிக் கட்சிகளுடன் சேர்ந்து மதிமுக மூன்றாவது அணி அமைக்கும் முயற்சியில் இறங்குமா என்பது சனிக்கிழமை நடக்க இருக்கும் கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படலாம்.
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ள இந்த வேட்பாளர் பட்டியல், கூட்டணி கட்சிகள் மட்டுமின்றி, ஒட்டுமொத்த அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
நன்றி தினமணி |
Comments
Super Kavithai. thank you very much. please contribute more.
Quoting HARI:
இதிலும் கருணாநிதியின் பணம் விளையாடி இருக்குமோ?
அடிக்கடி ஏற்றுவேன் போதை-நான்
ஏ.சி. அறைக்குள் வாழும் பேதை
யாருக்கும் கொடுக்க மாட்டேன் மரியாதை..
பிடித்தது கொடநாடு
பிடிக்காதது தமிழ்நாடு- எனக்கு
யாரும் விளைவிக்க முடியாது கேடு
காரணம்,கட்சியில ் இருப்பதுகள் ஆடு, மாடு..
எனக்கு பிடிகாதது பாசம்
ரொம்பவே பிடிக்கும் மோசம்-நான்
நல்லா கட்டுவேன் வேஷம்
என் கட்சியை செய்வேன் நாசம்.
-இப்படிக்கு
போயஸ் பாப்பா.
நம்பிக்கைத் துரோகம் வெற்றி பெற்றதா சரித்திரமில்லை.
போனாப் போகுது அதுக்கு இது பரவாயில்லைன்னு நினச்சா... வரம் கொடுக்க வந்த வாக்காளர் தலையிலேயே கை வைக்க நினைக்கிறது ரொம்பத் தப்பு.
மகாபாரதத்தில் சகுனி ஆடிய ஆட்டத்திற்கும்... இப்போ ஜெ ஆடுகிற ஆட்டத்திற்கும் பெருசா வித்தியாசமில்லை . எதிர்ல ஆடறவங்க ஒன்னும் தர்மனுமில்லை... முழுசா நம்பி ஏமாற... இதுக்கு மேலயும் இந்த ஆட்டம் வேண்டாம்னு போயுடுவாங்க.
ஒருத்தருக்கு ஒதுக்கிட்டப் பிறகு அந்தத் தொகுதிய உங்களுக்கு மாற்றி கொடுத்தா முன்னாடி சீட் வாங்கினவர் எப்படி உங்களுக்கு உளமார தேர்தல் வேலை செய்வார்... கொஞ்சமா கூட அறிவு வேணாம்... நீ எல்லாம் என்னத்த அரசியல் பண்றன்னு ஒன்னும் விளங்கவில்லை.
பெண் புத்தி பின் புத்தின்னு தெளிவாயிடுச்சி... வேற என்னத்த சொல்றது?
ஜே திருடத் தெரியாது திருடுபவர். இவரின் குணங்கள் மற்றவரை நேரடியாகத் தாக்கும்.இதனால் உடனேயே மற்றவர்கள் புரிந்து கொண்டு விலகிக் கொள்ள முடியும்.ஆனால் கருணாநிதி அப்படியல்ல. குள்ளநரிக் குணம் படைத்தவர். கூட இருந்தே குளி பறிக்கக் கூடியவர்.இவர் விஷயத்தில் மிக அவதானம் தேவை.சமீப நாட்களாக நடந்து வரும் செயல்கள்,மாறன் குடும்பத்துடன் ஏற்பட்ட தகராறு,சம்பத்,ந ெடுன்செழியன்,அண ்ணா,எம்.ஜீ.ஆர். போன்றவர்களுடனான நிலைபாடுகள் இவை இவரின் குள்ளநரிக் குணத்தை காட்டும் சான்றுகள். திட்டம் போட்டு திருடும் இவர் எந்த நிமிடத்திலும் தனக்காக எவரையும் காட்டிக் கொடுக்கவும்,கவி ழ்க்கவும் தயங்காதவர். ஜே யுடன் எச்சரிக்கையாக நடந்து கொண்டால் தப்பிக்கலாம்,வி லகிக் கொள்ளலாம். ஆனால் கருணாநிதியுடன் அப்படி செய்ய முடியாது.எப்போது குணம் மாறும், கவிழ்த்து விடுவார் என்பதை சொல்ல முடியாது.கூட இருந்தே குளி பறிக்கும் கருணாநிதியை விட ஜே சிறிது சிறந்தவர்.
ஜே எதிரே வரும் வாகனம்,கண்டவுடன ் விலகிக் கொள்ளலாம்.கருணாநிதி பின்னே காரன் அடிக்காது வரும் வாகனம், விலகிக் கொள்ள முடியாது.அடிபட்டு குற்றுயிராய் அல்லது உயிர் போய் விட வேண்டியது தான்.
பேசித் தீர்த்து ஊழல் சக்கரவர்த்தியை வீழ்த்துவதே இன்றைய முதல் செயல் திட்டமாகும்.
Third front should seal this move and teach a lesson to this lady back driven by CHO.
Ganpa Singapore
ஜெயலலிதா புடவைகட்டிய கருணாநிதி,,,,,,
2. மக்கள் தமது சொந்த உணர்வின் காரணமாக கருணாநிதியை எதிர்ப்பது ஆரோக்கியமானதா, இல்லை இந்த மொட்டை பாஸ் புரோக்கரது லாபி வேலை காரணமாக எதிர்ப்பது போல சித்தரிப்பது ஆரோக்கியமானதா? முதலாளிகளுக்கு ஆதரவாக யாரெல்லாம் அமைச்சர்கள் என்று நீரா ராடியா தீர்மானிப்பதற்க ும், பார்ப்பனியத்துக ்கு ஆதரவான கூட்டணியை இவர் தீர்மானிக்கிறார ் என்பதற்கும் என்ன வேறுபாடு?
3. தனது படங்களுக்கான டிக்கெட்டுகள் பிளாக்கில் விற்பனை செய்யப்படுவதன் மூலமே கோடிஸ்வரரான ரஜினி எனும் நடிகனுக்கு, தமிழக மக்களின் தலைவிதியை நிர்ணயிக்கும் தேர்தல் குறித்து பேசுவதற்கு கூட தகுதி இல்லை. அடுத்த படத்தில் அண்டார்டிகாவில் ஏதோ இந்தி நடிகையுடன் கையைக் காலை அசைத்து ஆடப்போகிற இந்த சுயநலவாதிக்கு ஏதோ பெரும் வாய்ஸ் இருப்பதாகவும், அதை கண்டு தமிழகமே அஞ்சி நடுங்குவதாகவும் ஜூ.வி ஒரு தேர்ந்த மாமா போல சித்தரிப்பது பச்சையான அயோக்கியத்தனம்.
4.சொல்லப்போனால் ரஜினிக்கு இப்படி ஒரு வாய்ஸ் பவர் இருப்பதாகவும், அதனால் அவர் கட்சி ஆரம்பித்து தமிழகத்தை காப்பாற்ற வேண்டும் என்ற கதையை உருவாக்கி வெளியிட்டு இன்று வரை அது வரலாற்றில் இடம்பெற்றிருப்ப தற்கு காரணமே துக்ளக் சோதான்.
பொது அரங்கில் இத்தகைய சகுணிகளும், வாய்ஸ் ஸ்டார்களும் என்று தூக்கியெறியப்பட ுகிறார்களோ அன்றுதான் தமிழகம் ஆரோக்கியமான அரசியல் பாதையில் அடியெடுத்து வைக்க முடியும். கருணாநிதி, ஜெயா போன்ற கார்ப்பரேட் கம்பெனிகளையும் வீழ்த்த முடியும். இல்லையேல் நமது தலையெழுத்தை ரஜினி, சோ போன்ற பாசிசக் கோமாளிகள்தான் தீர்மானிக்கப் போவதாக நம்மை மாற்றிவிடுவார்க ள். அதை அடிமைத்தனம் என்றும் அழைக்கலாம்.
நன்றி
வினவு
வை.கோ தயவுசெய்து மூன்றாம் அணி அமைத்து அதை வழி நடத்தி செல்ல வேண்டும் அந்த கரும் பன்னி விஜயகாந்த் ஐ கூட்டணியில் தாம்தான் ஏதோ பெரிய தலை என்ற மிதப்பில் கூட்டணி தலைவர் வேணும் , சி.எம் கேண்டிடேட் அப்படின்னு பிதற்றும். அதனால அதை சேர்க்க கூடாது.
1 thing is clear that Vaiko support is becoming visible. Kudos to Vaiko
ஆனால், அவர் அறிவித்த அந்த பட்டியலில் தொகுதி மறுசீரமைப்பில் நீக்கப்பட்ட சேரன்மகாதேவி, சாத்தான்குளம், கடலாடி, இளையான்குடி, சமயநல்லூர் ஆகிய தொகுதிகளும் இடம் பெற்றிருந்தன. இதன்மூலம் இல்லாத தொகுதிகளில் போட்டியிடப் போவதாக அவர் அறிவித்துள்ளார் .
m.k and j.j should be defeated
இப்போதும் கூட, நாளை (19 பிப்ரவரி 2011) பௌர்ணமி, அதுவும் நிலவு பூமிக்கு மிக அருகில் வேறு வருகிறதாம். கேட்கவே வேண்டாம். ஓட்டு பிரிந்து மீண்டும் திருடர்கள் ஆட்சி வந்தால் அதற்கு ஜெயலலிதா மட்டுமே காரணமாக இருக்கும்.தமிழர்களும், தமிழகமும் வீழ்ச்சியடைய காரணமாக இருந்தார் என்று வரலாறு சொல்லும்.
It is very strange!. MDMK matters for ADMK to capture the DMK's regime. Mr Vaiko is a true political leader, he could add strength to ADMK if it gets power to govern TN.
So it may end up contesting 230 seats.
DMK-Congress got lifeline by default
AIADMK arguement is that- DMDK without symbol can't win more seats
Marxist/CPI always win by AIADMK support.So constituencies dont matter
MDMK betrayal is something unimaginable
Let us hope by afternoon all ends well
RSS feed for comments to this post