முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
அதிமுக கூட்டணி குழப்பத்தின் பின்னணிகள். அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 14
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
வெள்ளிக்கிழமை, 18 மார்ச் 2011 07:51

 

ஜப்பானைத் தாக்கிய ஆழிப்பேரலையைப் போல, தன்னிச்சையாக அ.தி.மு.க. தனது வேட்பாளர் பட்டியலை புதன்கிழமை வெளியிட்டபோது, அதிர்ந்து போய்விட்டனர் இடதுசாரிக் கட்சியினர். தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தும் அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரனும் வியப்பின் உச்சத்துக்குச் சென்றுவிட்டனர். எதற்காக இப்படி யாரையும் கேட்காமல், எந்தவித அறிவிப்பும் இல்லாமல் தடாலடியாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா இப்படி ஒரு முடிவை எடுத்தார் என்று தெரியாமல் கூட்டணிக் கட்சிகள் மட்டுமல்ல, அ.தி.மு.க.வினரே மிரண்டு போய்விட்டனர்.

÷வேடிக்கை என்னவென்றால், அண்ணா அறிவாலயத்தில் பல தி.மு.க. அமைச்சர்களேகூட இது உண்மையான அறிவிப்புதானா இல்லை ஏதாவது தவறு நேர்ந்து விட்டிருக்கிறதா என்று குழம்பிப் போய் தங்களுக்குள் பேசிக் கொண்டார்களாம். பல பத்திரிகை அலுவலகங்களிலிருந்து ஜெயா தொலைக்காட்சி நிலையத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இது நிஜமான பட்டியலா என்று மீண்டும் மீண்டும் விசாரித்த வண்ணம் இருந்தனர்.

 

4293346778_21fb94341d_o

÷ஒருவேளை யாராவது வேண்டுமென்றே தவறான ஈமெயில் அனுப்பிக் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சித்திருக்கிறார்களோ என்று பத்திரிகையாளர்களுக்கும் அ.தி.மு.க.வினருக்கும் சந்தேகம் ஏற்பட்டது. ஆனால், போயஸ் தோட்டத்திலிருந்து ஈமெயில் மூலம் மட்டுமல்லாமல் ஃபேக்ஸ் மூலமும் பட்டியல் ஜெயா தொலைக்காட்சிக்கும், நமது எம்.ஜி.ஆருக்கும் அனுப்பப்பட்டிருந்தது.

÷தே.மு.தி.க.வுடன் கூட்டணி முடிவானதுமே, தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று மக்கள் மத்தியில் பரவலாகவே பேச்சு வந்துவிட்டிருந்தது. வெற்றிக்களிப்பில் அ.தி.மு.க. அணி மிதந்து கொண்டிருக்கும்போது, தி.மு.க. அணியில் கூட்டணிக் குழப்பம் உச்சகட்டத்தில் இருந்தது. காங்கிரஸ் 63 தொகுதிகள் கேட்க, தி.மு.க. ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்து வெளியேறுவதாக அறிவிக்க, சமாதானம் ஏற்பட்டு காங்கிரஸ் கேட்ட 63 தொகுதிகளைக் கொடுத்து தி.மு.க. சமாதானம் பேசியதுடன், 119 தொகுதிகளில் மட்டுமே போட்டியிட்டு வெற்றி பெற்றால் கூட்டணி ஆட்சிதான் என்பதையும் உறுதிப்படுத்திவிட்டது.

÷மிகப்பெரிய பிரச்னைகளை எதிர்கொண்ட தி.மு.க. கூட்டணி, சமரசமாக உடன்பாடு செய்து கொண்டதுடன் சுமுகமாகத் தொகுதிகளையும் பங்கிட்டுக் கொண்டுவிட்டபோது, பிரச்னையே இல்லாமல் ஒத்த கருத்துடனும் தி.மு.க.வை வீழ்த்தியே தீரவேண்டும் என்கிற குறிக்கோளுடனும் இணைந்த அ.தி.மு.க. கூட்டணி, தன்னிச்சையாக அ.தி.மு.க. தனது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டதால் பிரச்னையை விலை கொடுத்து வாங்கியிருக்கிறது. இதற்குக் காரணம்தான் என்ன?

கடந்த 10 நாள்களாகவே அ.தி.மு.க. கூட்டணியில் பிரச்னையாகத் தொடர்வது ம.தி.மு.க.வின் நிலைமைதான்.

""கடந்த ஐந்து வருடங்களாக நாங்கள் அ.தி.மு.க.வுக்கு விசுவாசமாக இருந்திருக்கும்போது, முதலில் எங்களுக்கு இடங்களை ஒதுக்கிவிட்டுத்தானே மற்றவர்களைப் பற்றியே அவர் யோசித்திருக்க வேண்டும். அவருக்கு ஆட்சியைப் பிடிப்பது எவ்வளவு முக்கியமோ அதேபோல எங்களுக்குக் கட்சியை நடத்துவது முக்கியம். 6 சீட் வைத்துக் கொள், 9 சீட் தருகிறோம்' என்று கூறுவது எங்களை அவமானப்படுத்துவதாக இல்லையா? எங்கள் பொதுச் செயலாளர் வைகோ என்ன தவறு செய்தார் என்று நாங்கள் புறக்கணிக்கப்படுகிறோம்?'' என்கிற நியாயமான ஆதங்கம் ம.தி.மு.க.வினர் மத்தியில் நிறையவே இருக்கிறது.

÷இந்த நிலையில், பல முறை ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவுடன் அ.தி.மு.க. சார்பில் பலரும் பேசி சமாதானம் செய்ய முயற்சித்திருக்கிறார்கள். ஆனால் அவர்களில் ஒருவர்கூட வைகோவின் தரத்திற்கும், தகுதிக்கும் ஏற்றவராக இல்லை என்பதுதான் பிரச்னையை மேலும் சிக்கலாக்கியது.

÷கடைசியாக, புதன்கிழமை வைகோவை சந்தித்து சமாதானம் செய்ய அ.தி.மு.க. தரப்பிலிருந்து சசிகலாவின் மைத்துனர் (நடராஜனின் சகோதரர்) ராமச்சந்திரனும், தோட்டக்கலை கிருஷ்ணமூர்த்தியும் அனுப்பப்பட்டனர். இருவருமே "அம்மா'வின் ஏவலாளர்களாகச் சென்றார்களே தவிர, தன்னிச்சையாக சமரசம் பேசி ஜெயலலிதாவுடன் உடனுக்குடன் தொடர்பு கொண்டு முடிவெடுப்பவர்களாக அல்ல. மீண்டும் மீண்டும் நீங்கள் அம்மாவைப் பார்த்துப் பேசுங்கள் எல்லாம் முடிவாகிவிடும் என்று கிளிப்பிள்ளைபோலக் கெஞ்சினார்களே தவிர, வைகோவின் கேள்விகளுக்கும் கோரிக்கைகளுக்கும் அவர்களிடம் பதில் இல்லை.

÷""நான் கட்சியை நடத்த வேண்டும். எனக்குக் குறைந்தது 21 இடங்களாவது தருவதாக இருந்தால் சொல்லுங்கள். அதற்கான உத்தரவாதம் இருந்தால் நான் தோட்டத்துக்கு வந்து மேடமை சந்திக்கிறேன். இல்லையென்றால், என்னை மன்னித்துவிடுங்கள். நான் தனியாகப் போட்டியிட்டால், கடந்த தேர்தலில் விஜயகாந்தின் தே.மு.தி.க. பெற்ற வாக்குகளை இந்தத் தேர்தலில் நான் பெற்று, அடுத்த தேர்தலில் 41 இடங்கள் பேரம் பேசிக் கொள்கிறேன். நான் அங்கே வந்து உணர்ச்சி வசப்பட்டு ஏதாவது பேசி, எங்களுக்கிடையில் இருக்கும் நல்லுறவை கெடுத்துக் கொள்ள விரும்பவில்லை'' என்று கொஞ்சம்கூட ஆத்திரப்படாமல் சமாதானமாக இருவரையும் வைகோ அனுப்பி வைத்ததாகச் சொல்கிறார்கள்.

÷போயஸ் தோட்டம் வந்த ராமச்சந்திரனும், தோட்டக்கலை கிருஷ்ணமூர்த்தியும், ""வைகோ முரண்டு பிடிக்கிறார். 21 இடங்களுக்குக் குறைவாக இருந்தால் பேச மறுக்கிறார்'' என்று ஜெயலலிதாவிடம் கூறியதும் அவர் ஒரேயடியாக "அப்செட்'.

2803020564_6cd2b0bce0_b

÷ஜெயலலிதாவைப் பொறுத்தவரை அவருக்கு வைகோ தனது அணியில் இருக்கவும் வேண்டும். அவருக்கு அதிகபட்சம் 10 முதல் 15 இடங்களுக்கு மேல் தரவும் கூடாது என்பதுதான் எண்ணம். அதற்குக் காரணம் அதிக இடங்களை ஒதுக்கினால், போட்டியிடத் தகுதியான வேட்பாளர்கள் இல்லாமல் அந்த இடங்களில் ம.தி.மு.க. தோற்றுவிடும் என்று அவருக்கு ஏற்பட்டிருக்கும் அபிப்பிராயம்தான்.

÷இந்த முறை சசிகலா உள்ளிட்ட யாரையும் வேட்பாளர் பட்டியல் தயாரிப்பில் ஜெயலலிதா தலையிட அனுமதிக்கவில்லை என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள். அவருக்குப் பட்டியல் தயாரிப்பதில் உதவியாக இருந்தவர் சசிகலாவின் சித்தப்பா மாப்பிள்ளையான ராவணன் மட்டுமே.

÷ஜெயலலிதா 60 முதல் 70 இடங்களுக்கு ஒரு பட்டியல் தயாரித்து வைத்திருந்தாராம். ஜெயலலிதாவின் பட்டியல் அல்லாமல், சசிகலாவின் சகோதரர் திவாகரன், "புதிய பார்வை' நடராஜன், டி.டி.வி. தினகரன், டாக்டர் வெங்கடேஷ் என்று சசிகலா தரப்பு உறவினர்களின் சிபாரிசுடன் கூடிய ஒரு பட்டியலையும் தயாரித்து வைத்திருந்தாராம் ராவணன். அந்தப் பட்டியல்படி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து வெற்றி பெற்று வரும் திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி போன்ற தொகுதிகளுக்கு திவாகரன் சிபாரிசு செய்திருந்த அ.தி.மு.க.வினர் பெயரையும், கூட்டணிக் கட்சிகளின் தொகுதிகளுக்குக்கூட சசிகலா குடும்பத்தினருக்கு வேண்டியவர்களின் பெயர்களையும் இணைத்திருந்தார் அவர்.

÷""இன்று வளர்பிறையிலேயே பட்டியலை வெளியிடுங்கள். வைகோவுடன் பேசிக் கொள்ளலாம்'' என்று ஜெயலலிதாவிடமிருந்து உத்தரவு பிறந்ததும், ஜெயலலிதா தயாரித்து வைத்திருந்த பட்டியலை வெளியிடாமல், ராவணன் தயாரித்து வைத்திருந்த 160 பேர் கொண்ட பட்டியலை வெளியிட்டு விட்டதுதான் குழப்பத்துக்குக் காரணமாகி, இப்போது ஜெயலலிதாவை தர்மசங்கடத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

""பட்டியலை வெளியிட்டவர்கள் ஒரு பகுதியை மட்டும் வெளியிட்டிருக்கலாமே'' என்கிற பலரின் கேள்வியைத்தான் ஜெயலலிதாவும் போயஸ் கார்டனில் கேட்டு, அத்தனை பேரையும் டிரில் எடுத்துக் கொண்டிருக்கிறாராம்.

3335459439_154e7e47cb_o

""தவறு நடந்துவிட்டது என்றதும் ஏன் அந்த அம்மாவே எங்களைத் தொலைபேசியில் அழைத்துப் பேசக்கூடாது? ஜெயா தொலைக்காட்சியில் உடனேயே மாற்றுப் பட்டியல் வெளிவரும் என்று அறிவித்திருக்கலாமே?'' - இதுதான் இடதுசாரிக் கட்சித் தலைவர்களின் ஆவேசத்துக்குக் காரணம்.

÷ஜெயலலிதாவின் மிகப்பெரிய பலவீனம் கூட்டணிக் கட்சிகளுடன் சமரசம் பேசவும், எல்லோருக்கும் பொதுவான, அதேசமயம் ஜெயலலிதாவுடன் நேரடித் தொடர்புடைய ஒரு நபர் இல்லாததும்தான் என்று தெரிவித்தார் அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள முக்கியமான தலைவர் ஒருவர்.

÷""1998-ல் வாழப்பாடி ராமமூர்த்தி இருந்தார். 2001-ல் "விடுதலை' வீரமணி, "சோ' ராமசாமி, ஜி.கே. மூப்பனார் போன்றவர்கள் இருந்தனர். இப்போது ஜெயலலிதா முன்னால் கைகட்டி, வாய் பொத்தி நிற்கும் ஓ. பன்னீர்செல்வம், செங்கோட்டையன், ராமச்சந்திரன், கிருஷ்ணமூர்த்தி போன்றவர்கள்தான் இருக்கிறார்கள். இவர்களுக்குத் தங்களது சொந்தத் தொகுதிக்கு வெளியே என்ன அரசியல் தெரியும்?'' என்று கேட்கிறார் அவர்.

÷அவர் சொல்வதுபோல, மூத்த மார்க்சிஸ்ட் தலைவர் டி.கே. ரங்கராஜனை சசிகலாவிடமும், கிருஷ்ணமூர்த்தியிடமும் கூட்டணி பற்றிப் பேசச் சொல்வதும், வைகோ போன்ற தலைவர்களை சமாதானம் செய்ய ராமச்சந்திரனை அனுப்பியதும் அ.தி.மு.க. தரப்பின் பலவீனத்தை வெளிப்படுத்துகிறது. ஜெயலலிதாவுடன் நேரடித் தொடர்புடைய அரசியல். நெளிவு சுளிவுகள் தெரிந்த ஒருவர் கூட இல்லாத நிலையில் இதுபோன்ற கூட்டணிக் குழப்பங்களை அவரேயாவது நேரில் எதிர்கொள்ள முன்வர வேண்டும்.

÷""இப்போதும் ஒன்றும் குடி முழுகிப் போய்விடவில்லை. இன்று பேசும்போதுகூட விஜயகாந்த் சொன்னது, "நமது முதல் இலக்கு தி.மு.க.வை ஆட்சியிலிருந்து இறக்குவதுதான். முடிந்தவரை சமாதானமாகப் போக முயற்சிப்போம். இல்லையென்றால் மூன்றாவது அணி பற்றி யோசிப்போம்' என்பதுதான். ஜெயலலிதா மட்டும், விஜயகாந்த், வைகோ, ஜி. ராமகிருஷ்ணன், தா. பாண்டியன் போன்றவர்களுடன் தொலைபேசியில் நேரிடையாகத் தொடர்பு கொண்டு, அவர்களை அழைத்துப் பேசினால் பிரச்னை முடிந்துவிடும்'' என்கிறார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்.

÷அப்படியே சமரசம் ஏற்பட்டாலும், இனிமேல் அ.தி.மு.க. கூட்டணி ஒற்றுமையாக செயல்பட முடியுமா? முடியும் என்கிறார் இந்திய குடியரசுக் கட்சிப் பொதுச் செயலாளர் செ.கு. தமிழரசன்.

÷""ஒருவரை ஒருவர் தரக்குறைவாகத் தாக்கிப் பேசிய பா.ம.க.வும், தி.மு.க.வும், காங்கிரஸýம் தி.மு.க.வும் சமரசமாகி விட்டனர். இதெல்லாம் பிரசாரத்தில் காணாமல் போய்விடும். தொகுதிப் பங்கீட்டின்போது பிரச்னை ஏற்படாமல் இதுவரை எந்தக் கூட்டணியாவது இருந்திருக்கிறதா சொல்லுங்கள்?'' என்பது தமிழரசனின் கேள்வி.

÷கூட்டணிக் குழப்பத்தின் பின்னணி தெரிகிறது. குழப்பம் தீர வேண்டும் என்றால் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா இவர்களை நேரிடையாகத் தொடர்பு கொண்டு பேச வேண்டும் என்கிறார்களே, அது சாத்தியமா? அது சாத்தியமாகும்போது மட்டுமே மூன்றாவது அணி சாத்தியமில்லை என்று அறுதியிட்டுக் கூற முடியும்!

 நன்றி தினமணி

 

Comments  

 
+1 #35 தெலுங்கு நாயக்கன் 2011-03-25 22:49
@இனியவன்
Before writing about any community go back to library or speak to some one who know the history about this great "தெலுங்கு நாயக்கர்" ,they ruled more than a decade and finally gone down only because they appose British rule in tamilnadu/india. Don't use some rubbish words ,this also show the way how you have been boughtup.Also no one in India has rights to talk about any community because till now India is been ruled by "foreigners".
When you want to comment ,talk only about the individuals not the community!!!

One more point until all you guys expect some cheap free items from this politicians no one can save you guys!!!
Quote
 
 
0 #34 இனியவன் 2011-03-21 13:56
“தெலுங்கு நாயக்கர்” விஜயகாந்தை ரொம்பவும் தலையில் தூக்கி வைத்து ஆடுவது தேவையற்றது. இந்தத் தெலுங்கனை ஆதரிப்பது முழுக்க முழுக்க ஏனைய பதினாறு வகைத் தெலுங்குக் கூட்டமே. மற்றும் இவனைத் தெலுங்கனாக அறியாத, ஆட்சி மாற்றத்தினை விரும்பும் தமிழினத்தைச் சேர்ந்த நடுநிலையாளர்கள் தான். இன்னும் முழுமையாக ஒரு ஆணியையும் புடுங்க வில்லை. அதற்குள் வாங்கிய பெட்டிகளின்/கோடிகளின் கணக்கென்ன? அதைக் கொண்டு அடிக்கும் கூத்துக்களென்ன?

எதற்கு பெட்டி வாங்கினார் எனத் தெரியும் அனைவருக்கும். திருட்டு முன்னேற்ற கழகம் வெற்றி பெற, அ.தி.மு.க தோல்வி அடைய. வாக்குகளைச் சிதறடிக்க. “தெலுங்கு நாயுடு” வைக்கோவை நம்பாத வந்தேறித் தெலுகு இன மக்கள் இவனை நம்புவதிலிருந்த ே இவன் எவ்வளவு கேடு கேட்டவன் என்று தெரிய வில்லையா? இன்னும் அரசியலின் அடிச்சுவடியைக் கூடத் தொடாத இந்த “வந்தேறி தெலுங்கு” விஜயகாந்த் இதற்குள் அடித்திருக்கும் குட்டி கரணங்கள் தான் எத்தனை எத்தனை?

நிறைய பெட்டிகள்/கொடிகள் வாங்கிக் குவித்திருக்கும ் இவர் தான் ஊழலை ஒழிக்கப் போகிறாராம். நல்ல நகைச் சுவை. இது வரை அ.தி.மு.க விற்கு veliyil irunthu seythathai ullaye irunthu seyvatharku kodigalaich churuttiyirppaa n.

நல்ல குடிகாரர் என்பது அவர் கண்களைப் பார்த்தாலே தெரிந்து விடும். “குடிகாரன் பேச்சு விடிந்தால் போச்சு”.

ஒரு முடிவே பண்ணி விட்டீர்கள் போல் தெரிகிறது, தமிழனை தமிழனே ஆளத் தகுதியற்றவன் என்று.

இன்னுமொரு வந்தேறித் தலைமை தேவையில்லை. தமிழ்த் தலைவர்களை உருவாக்குவோம்.
“தியாகத்திரு. முத்துக்குமார்” கூறியதைப் போல தமிழ்த் தலைமை இல்லாததால் தான் தமிழினம் இன்றைக்கு இத்தனை இடர்பாடுகளைச் சந்தித்து வருகிறது. நம்மைச் சூழ்ந்து நிற்கும் தலைமைகள் அனைத்தும் வந்தேறிக் கூட்டத்திலிருந் து வந்தவர்களே. இருக்கும் தமிழ்த் தலைமைகளான மருத்துவர், தெருமா போன்றோர் கிடைக்கும் பதவி, பணத்திற்காக எதையும் செய்யத் துணிந்து விட்டார்கள். குலத்தின் கோடரிக் காம்பாக ஆகி விட்டனர். இனி மேல் நம்மிடமிருந்து தான் புதியதொரு தலைமை வர வேண்டும். அன்புடன், இனியவன்
Quote
 
 
+2 #33 jaya 2011-03-20 23:10
இந்த அம்மா இன்னும் இந்த சசியை கூடிக்கொண்டே திரிகிறதே .. இது ஜெயித்தால் இந்த மாபியா கும்பல் மறுபடி அட்டகாசம் செய்யுமே.
Quote
 
 
+2 #32 lakshmi 15 2011-03-19 12:33
ஜெயலலிதாவுக்கு கருணாநிதி எவ்வவவவவவவவவவவள வோ பரவாயில்லை!
Quote
 
 
+3 #31 Joseph 2011-03-19 11:03
DMK rule will continue whatever you say! NO ONE CAN CHANGE IT!
Quote
 
 
+3 #30 Joseph 2011-03-19 11:01
Please think twice If Ms.Jayalalitha returns to Power, situation gets worst than ever. Let DMK rule will continue. No one can Change it.
Quote
 
 
+2 #29 sundaram27 2011-03-19 10:12
அம்மாவின் துயரம் சசிகலா வகையறா தான்சசிகலாவையும ் அவரது குடும்பத்தினரைய ும் சற்று ஒதுக்கிவையுங்கள ேன்.இன்னும் என்ன என்ன கேளிக்கைகள் நடக்கப்போகிறதோக ூட்டணி கட்சிகளுக்கு ஜெயா செய்தது துரோகம்
Quote
 
 
+4 #28 மானஸ்தன் 2011-03-19 01:01
//////அதிக இடங்களை ஒதுக்கினால், போட்டியிடத் தகுதியான வேட்பாளர்கள் இல்லாமல் அந்த இடங்களில் ம.தி.மு.க. தோற்றுவிடும் என்று அவருக்கு ஏற்பட்டிருக்கும ் அபிப்பிராயம்தான ். //// என்னையா இது ஒரு காரணமா lament excuse. ஏன் தே மு தி க வில் 41 தகுதியான வேட்பாளர்கள் உள்ளார்களோ ? ஏன் admk மற்றும் பிற கூடணிகளிலும் தகுதியான வேட்பாளர்களா அத்தனி பேரும். தகுதி என்பது நிற்கும் வேட்பாளர்களில் இல்லை கட்சியின் கொள்கை , பலம், விசுவாசம் மற்ற சில குனதிசியங்களில் உள்ளது...
Quote
 
 
+5 #27 sella 2011-03-18 21:40
எல்லாம் தலைவிதி. இந்த அகம்பாவம் பிடித்த ஜெயலலிதாவையும் சப்போர்ட் பண்ண வேண்டி இருக்கு. நம்ம விதி ஒரு குடும்பத்திடம் இருந்து இன்னொரு குடும்பத்திடம் மாறபோகிறது.
Quote
 
 
+3 #26 purushoth 2011-03-18 17:37
I am reading Savukku for last 8 months.I reallly appreciate ur courage in opposing the DMK govt. I agree DMK is bad,corrupt and family centered party. But Jaya is worst and mindless person. No body can trust her. She has no credibility left in politics. Had u(Savukku) opposed Jaya like u do for MK, u would have been killed long time back. If She comes to power again, all(Vaiko,Seema an,Nedumaaran) will be under NSA. So Plz one request for Eelam sympathisers. Karuna betrayed Eelam tamils.its true. But jaya will do 100 times more harm to Eelam. Remember Cho is adviser to her. How both Eelam supporters & Cho support her. We must act intelligently. Defeat Congress as far as possible. Next aim is to defeat ADMK.She will align with Congress in no time.Remember wat she said at the peak of the war..Civilian casualties r very common in war..
Quote
 
 
0 #25 manasatchi 2011-03-18 16:05
Savukku only supporter of AIADMK. I will not come to this site again. gud buy to savukku. justify and rotate all four direction in your savkku(sattai).
Quote
 
 
+3 #24 Force 2011-03-18 16:03
த‌மிழ‌க வாக்காள‌ர்க‌ளில ் அதிக‌மாக வாக்க‌ளிக்காது ஒதுங்கி இருந்ய்ஹு வ‌ந்த‌ ம‌த்திய‌த‌ர‌ ம‌க்க‌ள், த‌ற்போதைய‌ (2006/2011) திமுக‌வின் குடும்ப‌ அர‌சிய‌ல், அதிகார‌ துஷ்பிட‌யோக‌ம், ச‌ர்வாதிகார‌ம், பொருளாதார‌ பின்ன‌டைவு, நில ஆக்கிர‌மிப்பு, விண்ணைத்தாண்டிய ‌ 2ஜி ஊழ‌ல், ஊட‌க‌ ஆக்கிர‌மிப்பு, த‌ல‌க்க‌ன‌ம், காவ‌ல்துறையின் கையால‌காத்தன‌ம் எனப் ப‌ல கார‌ண்ங்க‌ளால், இந்த‌ ஆட்சியின் மாற்ற‌த்திற்காய ் காத்திருக்கிறார ்க‌ள். திமுக கூட்ட‌ணியின் த‌வ‌றுக‌ள்தான், ஜெயாவின் ப‌ல‌ம். அவ‌ருக்கொன த‌னியாக‌ எந்த‌ ப‌ல‌மும் இல்லை அவரின் த‌னிச் செல்வாக்கும் ப‌லவீன‌மாய் ப‌ய‌னற்றுப் போன‌து தான். எதிரின் ப‌ல‌வீன‌த்தை இவ‌ரின் ப‌ல‌மாக மாற்றிக்கொள்ளும ் திற‌மையை அவ‌ரின் அக‌ங்கார‌த‌ன்மை வீண‌க்கிவிட‌க்க ூடாது. கிடைத்திருக்கும ் இந்த‌ வாய்ப்பை, கூட்டணி ம‌க்க‌ளுட‌ன் க‌ல‌ந்து இணைந்து ப‌ய‌ன்ப‌டுத்தின ால் அதிக‌ லாப‌ம் பெற‌ப்போவ‌து ஜெயா தான். மறுப‌டியும் த‌ன்னிச்சையாய் ந‌ட்ந்து கொண்டால், எதிர்கால‌த்தில் ஓய்வெடுக்க‌ப் போக‌ "கொட‌ நாடு ப‌ங்க‌ளா" கூட‌ இருக்காது. சூத‌ன‌ம‌ பொழிச்சுகிடுங்க ‌.
Quote
 
 
-4 #23 manasatchi 2011-03-18 16:01
Just note it Mr.mental savkku: 13-5-2011 DMK alliance swipe all 234 constitution this news will flash. jayalalitha escape from karnataka.
Quote
 
 
+2 #22 Sivakumar 2011-03-18 15:19
ஒருவழியாக அம்மையார் நவக்ரகங்களின் கட்டுப்பாட்டிலி ருந்து வெளியில் வந்து மதிமுக, வலது கம்யூனிஸ்ட், இடது கம்யூனிஸ்ட் ஆகியோருக்கு கேட்ட தொகிதிகளை கொடுத்துவிட்டார ். இதைப்போல் தேமுதிகவிற்கும் கொடுத்து, எல்லோரும் சுமுகமாக வேட்பாளர்களை அறிவித்து உடனடியாக பிரசாரத்தில் ஈடுபட வேண்டும்.
Quote
 
 
+1 #21 K Raman 2011-03-18 14:34
If what is mentioned in this article is correct, then Jayalalithaa should is not good enough hold any high office including that of a Chief Minister.

If someone does not even check or countercheck what comes out her own house and that too on a matter of this significance, then how can you trust her to run a State? If someone cannot even run a party properly then how can she run a big State with 6.5 Cr people?

Who is Ravanan? Why does he function from Jaya's house? Is he the senior most person in the Party? Is there no second level in the Party? IS it not proper for someone senior in the Party to counter-check what he releases on such an important matter? Is this the way she runs a party?

This article is written as an after-thought to ensure that she can use this trick to wriggle out of a clumsy situation!

So in my view, if she has issued this statement herself to shock her alliance partners, then she is not worthy of being a CM!

If she does not even know that this statement is being issued in her home, even then she is not worthy of being a CM!
Quote
 
 
0 #20 venka_thamizhan 2011-03-18 14:34
Savukku only supporter of AIADMK. I will not come to this site again. gud buy to savukku :-| :-| :-| :-| :-x :-x :-x :-x :-x :-x :-x :-x
Quote
 
 
+14 #19 Abdul Rahman - Dubai 2011-03-18 14:15
கட்டுரையாளர் திரு. அஜாதசத்ரு அவர்கள் மிக நன்றாக மழுப்பினாலும், தனது ஜெயா விசுவாசத்தை காட்ட மட்டும் மறக்கவில்லை. கூட்டணி கட்சிகளுக்கு ஜெயா செய்தது மாபெரும் துரோகம். அதை கண்டிப்பதை விட்டு விட்டு ஜெயாவுக்கு விசுவாசத்தைக் காட்டுவது தினமணியின் நடுநிலைக்கு ஏற்பட்ட ஒரு கரும்புள்ளி. அவமானம். சமீபத்தில் திமுக-வுக்கும் காங்கிரசுக்கும் ஏற்பட்ட பிரச்னையில் இதே தினமணி என்னமாய் குதித்து விளையாடியது என்பதையும் நடுநிலை வாசகர்கள் நன்றாகவே அறிவர்.
Quote
 
 
+10 #18 Shanmugam1 2011-03-18 13:22
சப்பைக்கட்டு என்பது இது தான். ஜெயலலிதாவை ஆட்சியில் உட்காரவைக்க ஏன் சிரமப்படுகிறீர் கள். அவள் வந்தால் உங்களுக்கும் உதைதான்.
Quote
 
 
+6 #17 Gopi BR 2011-03-18 12:36
This exactly shows that the party is not in control of Jaya.
Quote
 
 
+12 #16 tamilann 2011-03-18 12:13
savukku----admk's official website
Quote
 
 
+10 #15 sakthy 2011-03-18 11:56
எனது நேற்றைய கருத்திலும் இதையே தெரிவித்தேன். ஜெயலலிதா திருடத் தெரியாத ஒருவர். திருடி அகப்பட்டுக் கொள்ளும் ஒருவர். தன் பிடிவாதம்,அகங்க ாரம் இவற்றை குப்பைத் தொட்டியில் போட்டு விட்டு அரசியல் நடத்த வேண்டும். சில சமயங்களில் விட்டுக் கொடுத்து நடப்பது அவசியம். கடந்த கால தவறுகளை திருத்தி செயல்பட்டால் ஆட்சியும் கைக்கு வரும். ஊழல் ஆட்சியில் இருந்து மக்களையும் காப்பாற்ற முடியும்.ஜெயலலிதா ஆட்சியில் நடந்த ஊழல்கள் கருணாநிதி ஆட்சி ஊழலுடன் ஒப்பிடும் போது ஒரு வீதம் கூட இல்லை.
Quote
 
 
+10 #14 ஏழு. கலைக்கோவன் 2011-03-18 11:55
இப்பவே கண்ணகட்டுதே.
இன்னும் என்ன என்ன கேளிக்கைகள் நடக்கப்போகிறதோ

தம் மனதில் ஆழ பதிந்துள்ள மன அழுக்குகளை இன்னும் கூட அழிக்கபடவில்லை என்பதையே இதுகாட்டுகிறது. வெற்றி உறுதி என்றாலும், வெற்றி களிப்பில் விழுந்து விட வேண்டாம். DMKவை விழ்த்தியே ஆக வேண்டும், காங்கிரசுக்கு பீகார் மக்கள் கொடுத்த அடியை விட மிக பலமன அடி கொடுத்தே ஆகவேண்டும்.
Quote
 
 
+1 #13 anandan benjamin 2011-03-18 11:44
Jaya should learn from this. She should not allow M.K. to confuse the alliance by spreading false news through their media and through their intelligence officers. Keep intact with your alliance partners, Jaya. Have direct contacts. Donot rely on others. This time the success is yours. Even among blood brothers a lot of friction come when a common issue being discussed, then among political parties these are all common. Negotiate and finalize. When M.K. has dramaticed through offering resignation of his union ministers to threater Congress and surrendered at the last minite. Before M.K. s drama this nothing. A issue would besolved. good luck.
Quote
 
 
+17 #12 jagan 2011-03-18 11:34
கூட்டணி கட்சி தலைவர்களிடம் போனில் பேசக்கூட தயாராக இல்லாத இந்த அம்மா - ஆட்சியை ப்டிச்சு - பாவம் தமிழ் நாடு. :-x
Quote
 
 
+8 #11 மதன் 2011-03-18 11:33
சவுக்கின் இந்த செய்தியை அப்படியே திருடி, உல்டா பண்ணி இந்த தட்'ஸ் தமிழ்கார பன்னி போட்டிருக்கான்
Quote
 
 
+2 #10 m perumal 2011-03-18 11:26
Vaiko stood by her justifying all her actions some of them like unilateral announcement of JJ in extending olive branch to congress in 2G scam. MDMK walked out of the Assembly whenever AIDMK staged walk-out even for trivial matters. MDMK worked hard IN TIrumangalam bye-election. In short, betraying such a trusted ally shows JJ's diabolic shape of mind. Now she has unilaterally announced 160 seats and spreading the rumour tthat it was not she: only the Sasikala catus released the list. She sells rumour to cheat the communists and hoodwink Vijayakant.
Quote
 
 
+1 #9 BrokenHeart 2011-03-18 10:52
I'm a great fan of Savukku. This article somehow seem to take the blame out of Jayalalitha. Jayalalitha is an arrogant lady and no question about it. Now we are without option.
Quote
 
 
+14 #8 சுமன் 2011-03-18 10:31
சசிகலாவையும் அவரது குடும்பத்தினரைய ும் சற்று ஒதுக்கிவையுங்கள ேன்.
Quote
 
 
+5 #7 murugan.n 2011-03-18 10:31
Super update brother .best of luck
Quote
 
 
+11 #6 கோவை பிரியன் 2011-03-18 10:28
தோழர் சவுக்கு ரொம்பவும மெனக்கெட்டு அ.தி.மு.க இன் வெற்றிக்கு பாடுபட்டு வருகிறேர்கள். வாழ்த்துக்கள்
Quote
 
 
+29 #5 ஏகா.. 2011-03-18 10:08
தமிழக அரசியலில் பரிசுத்தமானவர் வைகோ !
Quote
 
 
-1 #4 Padman 2011-03-18 09:31
savukku this is for you. This should be in headlines.

http://www.youtube.com/watch?v=6G9o-Gc4WH8


Thank you,
Padmanaban
Quote
 
 
+8 #3 Padman 2011-03-18 09:27
சவுக்கு இதை நம்புகிறதா.... ?

ஜெ ஒரு மாயை உலகத்தில் இருக்கிறார். அவர் அப்படி இருப்பதால்தான் விஜயகாந்த் இந்த அளவிற்கு வளர்ந்திருக்கிற ார். இதுதான் ஜெ. திருந்த வழியேயில்லை.
Quote
 
 
+5 #2 pandiyan 2011-03-18 08:50
விடுதலை' வீரமணி, விடுதலை' வீரமணி, ha ha ha ha .. SAVUKKU. you have rights to make small changes in the articles. change it to KUNJAMANI or ADIMAI வீரமணி
Quote
 
 
+14 #1 Kumar.T 2011-03-18 08:44
சைனாவின் துயரம் மஞ்சள் நதி....
இந்த அம்மாவின் துயரம் சசிகலா வகையறா தான்...
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 161 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday13491
mod_vvisit_counterYesterday10268
mod_vvisit_counterThis week56218
mod_vvisit_counterLast week80132
mod_vvisit_counterThis month258950
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12781069