முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
சாதிக்கிடம் சாதித்தவர்கள்.... அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 13
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
வெள்ளிக்கிழமை, 18 மார்ச் 2011 11:50

 

சாதிக் தற்கொலை செய்து கொண்டு இறந்து போனதைப் பற்றி பல்வேறு விவாதங்களும், கேள்விகளும், நம் அனைவரது இதயத்திலும் தொக்கிக் கொண்டு நிற்கிறது. இந்தக் கேள்விகளுக்கு விடை தெரியலாம், தெரியாமலும் போகலாம். சாதிக் மரணம் பற்றிய தனிக் கட்டுரை விரைவில் வரும். நேரக்குறைவின் காரணமாகவே எழுத இயலவில்லை.

 

ஆனால், இப்போது சாதிக்கிடம் காரியம் சாதித்தவர்களைப் பற்றிய தகவல் வந்துள்ளதால், அதை சவுக்கு வாசகர்களோடு உடனடியாக பகிர்ந்து கொள்ள வேண்டிய அவசரம் காரணமாக உடனடியாக இக்கட்டுரை எழுதப் படுகிறது.   சாதிக் பாட்சா, சிறிய அளவில் ரியல் எஸ்டேட் செய்து வந்ததும், பிறகு ஆண்டிமுத்து ராசா அமைச்சராக ஆன பிறகு, அதிகார வர்க்கம் அவருக்கு வேண்டிய காரியங்களை செய்து கொடுத்ததும், சவுக்கு வாசகர்கள் அறிந்ததே.

 

அதிகார வர்க்கம், ஆதாயம் இல்லாமல் காரியங்களை செய்து கொடுத்து விடுமா என்ன ? ரியல் எஸ்டேட் தொழில் என்றாலே, கட்டப் பஞ்சாயத்து, காவல்துறையை விட்டு மிரட்டுவது, ரவுடிகளை பயன்படுத்துவது என்பதெல்லாம் செய்யாமல் செய்ய முடியாது. குறுகிய காலத்திற்குள், ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை வளைத்துப் போட்டு, மிகப் பெரிய தொழில் அதிபரான சாதிக், காவல்துறையின் உதவி இல்லாமல் இதை சாதித்திருக்க முடியுமா என்றால் நிச்சயமாக இல்லை.

 

சாதிக்கின் தொழில் பெரம்பலூரோடு நிற்கவில்லை.   பெரம்பலூர் தாண்டி, தமிழகமெங்கும் விரிவுபடுத்தப் பட்டதோடல்லாமல், வெளிமாநிலங்களிலும், வெளி நாடுகளிலும் பரவிக் கிடக்கிறது.

 

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் நிலத்தை அபகரிக்க சாதிக்குக்கு, தமிழக காவல்துறையில் பல உயர் உயர் அதிகாரிகள் உதவி செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு கைமாறாக அத்தனை உயர்அதிகாரிகளுக்கும், சாதிக் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வீட்டு மனைகளையும், நிலங்களையும் வாங்கிக் கொடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த உயர் உயர் அதிகாரிகள்…..

 

 

1. அனில் மேஷ்ராம் ஐஏஎஸ்           கலெக்டர்

2. ஜெயந்த் கே. முரளி ஐபிஎஸ்        ஐஜி

3. எம்.ராமசுப்ரமணியம் ஐபிஎஸ்         ஐஜி

4. வி.ஏ.ரவிக்குமார் ஐபிஎஸ்             ஐஜி

5. எம்.பாண்டியன் ஐபிஎஸ்              எஸ்.பி

       6. ப்ரேம் ஆனந்த் சின்ஹா ஐபிஎஸ்          எஸ்.பி

           7. ஐ.ராசா, ஐபிஎஸ்                         கூடுதல் டிஜிபி

8. பொன்.மாணிக்கவேல், ஐபிஎஸ்       டிஐஜி

jiwal1

9. சங்கர் ஜிவால், ஐபிஎஸ்             ஐஜி

jafer_2

10. ஒட்டக் கூத்தர் என்கிற ஜாபர் சேட்   கூடுதல் டிஜிபி

 

எஸ்பி, ஐஜி, டிஐஜி, கூடுதல் டிஜிபின்னு பாரபட்சம் பாக்காமல் கொடுத்திருக்கிறார் சாதிக். நல்லவேளை, சாதிக் இப்போது உயிரோடு இல்லை.   உயிரோடு இருந்திருந்தால், கண்ணாயிரம், சாரங்கன், சேஷசாயி, சிவனாண்டி, லத்திக்கா சரண், துக்கையாண்டி, சுனில் குமார், ப்ரமோத் குமார், துரைராஜ், பெரியய்யா, சத்தியமூர்த்தி, பன்னீர்செல்வம், ஆசியம்மாள் என்று ஒரு பெரிய படையே கிளம்பியிருக்கும்.

 

இப்போதும் சொல்ல முடியாது…. சாதிக்கின் பிணத்தில் ஏதாவது ஒளித்து வைக்கப் பட்டிருக்கிறதா என்று தேடினாலும் தேடுவார்கள்.   ஆனால், இத்தனை பேருக்கும் லஞ்சமாக இடம் கொடுத்தும், இதை விட அதிகமானவர்களுக்கு லஞ்சமாக பணம் கொடுத்தும், யாரும் சாதிக்குக்கு, நெருக்கடி நேரத்தில் உதவி செய்ய முன்வரவில்லை.

 

சாதிக்கிடம் இப்படி பிச்சை எடுத்தவர்கள் அத்தனை பேரும், சாதிக் சிபிஐ ஆல் விசாரிக்கப் படுகிறார் என்று அறிந்த உடனேயே, ஓடிப் போய் ஒளிந்து கொண்டார்கள்.

 

ஒருவர் கூட உதவவில்லை. உதவாவிட்டாலும் பரவாயில்லை… ஆறுதலாக ஒரு வார்த்தைக் கூட பேசவில்லை.

 

இந்த அத்தனை அதிகாரிகளையும், சிபிஐ விசாரித்து, சாதிக்கிடம் வீட்டு மனையும் நிலமும் பெற்றவர்களிடம் இருந்து அதை பறிமுதல் செய்து, அந்த இடங்களை அரசுக் கணக்கில் சேர்க்க தேவையான நடவடிக்கைகளை செய்ய வேண்டும் என்று சவுக்கு சிபிஐ அதிகாரிகளை கேட்டுக் கொள்கிறது.

 

காங்கிரஸ் கட்சியின் கைப்பாவையாக சிபிஐ செயல்பட்டாலும், சிபிஐ அதிகாரிகள், தங்களுக்கு உள்ள, அதிகாரத்திற்குள், இந்த அதிகாரிகளின் புகார்களை விசாரிப்பதில் ஒன்றும் சிரமம் இருக்காது என்றே சவுக்கு கருதுகிறது. ராமசுப்ரமணியத்தையோ, ஜாபர் சேட்டையோ, சிபிஐ விசாரித்தால், நிச்சயம் அதைப்பற்றி சோனியாக கவலைப் படமாட்டார். இன்னும் சிபிஐ அதிகாரிகள் மீது சவுக்கு வைத்திருக்கும் நம்பிக்கையின் அடிப்படையிலேயே இந்த கோரிக்கையை விடுக்கிறது.

 

 

Comments  

 
+1 #18 vichu 2011-04-18 23:53
ponmanikavel itsa itru policeman.
Quote
 
 
+2 #17 கல்கியின் நந்தகி 2011-03-20 14:13
//8. பொன்.மாணிக்கவேல், ஐபிஎஸ் டிஐஜி

Are u sure Mr.Savukku ?
Quote
 
 
+1 #16 ம.பொன்ராஜ் 2011-03-19 18:08
செத்தது சாதிக் பாட்சா இல்லை (?!). மேலும் விவரங்களுக்கு http://tehelka.com/story_main49.asp?filename=Ws1703112GSPECTRUM.asp
Quote
 
 
0 #15 viajy 2011-03-19 10:55
Quoting R.V.S:
Ponmanikkavel? pls verify

hope ponmanikavel is in whitelist, please verify....
Quote
 
 
+1 #14 gjjjp 2011-03-18 23:01
savukku sir,
Pleaese re-check PONMANIKKAVEL!! !! too,because we admire him.
Quote
 
 
0 #13 pap 2011-03-18 22:46
:sigh:
hope everything settled between cong & Dmk so nothing is going to happen regarding 2G even they win or lose.
Quote
 
 
+1 #12 R.V.S 2011-03-18 18:05
Ponmanikkavel? pls verify
Quote
 
 
0 #11 unmai vendi 2011-03-18 17:02
savukku whats is this - is it true news
http://www.maalaimalar.com/2011/03/17174755/cbi-enquiry-sadiq-basha-suicid.html
Quote
 
 
+1 #10 KK 2011-03-18 15:31
On 16 March, Chennai Police Commissioner T Rajendran told the media he had not seen the body of Batcha. Sources in the Chennai police told TEHELKA that no police officer has seen the body. The police did not photograph the body either. The only explanation they have is that they went by the word of Batcha’s wife.



Dr V Dekal, Professor of Forensic Medicine told TEHELKA, “We don’t know if the body is that of Sadiq Batcha. We were told so by the police.”

A doctor from the Apollo hospital, where the family members first took the body, spoke to TEHELKA on the condition of anonymity and said he too cannot confirm the body as that of Batcha’s.

Two family members, Jaffar Ali and Jamal Mohammad, the younger and elder brothers of Batcha respectively, collected the body on 17 March. They refused to speak to the media. They then took the body for burial to Batcha’s hometown.

Dekal also raised doubts over the cause of death. He said the police sent papers citing the cause of death as hanging but other possibilities cannot be ruled out.

“We have sent tissue samples for pathology tests and the internal organs for chemical analysis to the forensic science laboratory. We have established that the cause of death is asphyxia,” says Dekal. “But these kinds of abrasions (the marks on the neck) can be made even after death. So we are awaiting the results of the tests.
Quote
 
 
+2 #9 Force 2011-03-18 15:20
An another Anna nagar Ramesh.
Quote
 
 
0 #8 VENKATKOVAI 2011-03-18 14:25
thodarattum,
Quote
 
 
+24 #7 அனானி 2011-03-18 13:44
சாதிக் பாட்சா வெளிநாடு சென்றுவிட்டார், அந்த உடல் வேரூ ஒருவருடையது என்ற பேச்சு உள்ளது. இது தொடர்பாக tehelka.comலும் ஒரு பதிவு வந்துள்ளது. இதைப்பற்றியும் உங்களது விரிவான பதிவை எதிர்பார்கிறேன் .
Quote
 
 
-2 #6 ramji 2011-03-18 13:33
Hello you can name thousand people but before that throughly investigate and publish the same.

I dont think Mr Pon Manika Vel will accept/indulge in such things.

Iam aware there are some Greedy people inside the department.

But there do also exists some Gods who protect ordinary citizens in Police Department
Quote
 
 
-17 #5 perambalooraan 2011-03-18 12:50
சாதாரண ஆளெல்லாம் ரியல் எஸ்டேட் தொழிலில் குறுகிய காலத்தில் பல கோடிகள் சம்பாதிப்பதை பார்த்திருக்கிற ோம் ஆனால் பதினைந்து வருடங்களாக தொழிலில் இருக்கும் அவரை ராசாவின் நண்பர் என்ற காரணத்தினால் அவரை பினாமி என்று எழுதி சிக்கலில் மாட்டிவிட்டு அப்ரூவர் ஆக்க சொல்லி நெருக்கடி கொடுத்து கொன்றுவிட்டு இப்ப அதிகாரிகள் மீது தவறு சொல்றீங்களே? வள்ளுவன் வாக்கு பொய்க்காதெனில் பிற்பகலில் அல்ல நண்பகலிலேயே கெடுவீர்கள்.அவர் செய்த ஒரே தவறு பெரம்பலூரில் புதிய திட்டங்கள் வருவது எங்கென்று தெரிந்து நிலம் வாங்கி போட்டதுதான் அந்த வகையில் அவருக்கு ராசா உதவினாலே போதும்.அவர் ஒரு நிறுவனம் ஆரம்பித்தது சமீபமாக இருந்தாலும் தொழிலில் பல வருடங்களாக இருந்தது அனைவரும் அறிந்ததே.அவர் குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்.
Quote
 
 
+15 #4 முகமூடி 2011-03-18 12:50
சிபிஐ இப்போது சோனியா வீட்டு கழிவறையை சுத்தம் செய்து வருவதாக கேள்வி. போங்க பாஸ் தமாஸ் பண்ணிக்கிட்டு இருக்கிங்க. சிபிஐ இதை எல்லாம் விசாரிக்காது. 2 ஜி ஊத்தி மூடி ரொம்ப நாள் ஆச்சு.
Quote
 
 
+7 #3 sakthy 2011-03-18 12:49
உண்மையை விசாரித்து வெளிக் கொண்டு வரக் கூட,அதை கோரிக்கையாக விடுக்க வேண்டிய நிலையில் நாமும் சிபிஐ யும் இந்த நாட்டில் அரசியல்வாதிகளிட ம் சிக்கி இருக்கிறோமே என்பதை நினைக்கும் போது வேதனையாக இருக்கிறது. சவுக்கின் இந்த கோரிக்கை சிபிஐ யை சென்றடையுமா.
Quote
 
 
0 #2 naan 2011-03-18 12:48
:sigh:
Quote
 
 
+2 #1 anbu 2011-03-18 12:14
very good investigation..this news 100% fact anbu
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 100 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday11231
mod_vvisit_counterYesterday14175
mod_vvisit_counterThis week68133
mod_vvisit_counterLast week80132
mod_vvisit_counterThis month270865
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12792984