முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
இலவசங்களின் திருவிழா திமுக தேர்தல் அறிக்கை அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 11
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
ஞாயிற்றுக்கிழமை, 20 மார்ச் 2011 06:52

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்றால் பெண்களின் சிரமங்களைக் குறைக்கும் வகையில் இலவசமாக கிரைண்டர் அல்லது மிக்சி வழங்கப்படும் என்று தி.மு.க. தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்றால் பெண்களின் சிரமங்களைக் குறைக்கும் வகையில் இலவசமாக கிரைண்டர் அல்லது மிக்சி வழங்கப்படும் என்று தி.மு.க. தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.

 

கடந்த தேர்தலில் இலவச கலர் டி.வி., இலவச எரிவாயு இணைப்பு வழங்கப்படும் என்று தி.மு.க. தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டது.

 

இந்த முறை இலவச கிரைண்டர் அல்லது மிக்சி, பரம ஏழைகளுக்கு மாதம் 35 கிலோ இலவச அரிசி, அரசுக் கல்லூரியில் தொழிற்கல்வி பயிலும் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு இலவச லேப்-டாப் (மடிக் கணினி) என ஏராளமான இலவசத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

 

சென்னையிலுள்ள அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தேர்தல் அறிக்கையை முதல்வர் கருணாநிதி சனிக்கிழமை வெளியிட, நிதியமைச்சர் க.அன்பழகன் பெற்றுக்கொண்டார். இந்த த் தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள வாக்குறுதிகள்:

 

வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள ஏழைகளான, "அந்தியோதயா' குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதந்தோறும் ஒரு கிலோவுக்கு ஒரு ரூபாய் அரிசி வழங்கப்பட்டு வருகிறது. இதை இனி இலவசமாகவே வழங்குவோம். இதன்மூலம் தமிழகத்திலே உள்ள 18.64 லட்சம் குடும்பங்கள் பயனடைவார்கள்.

 

குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம் ஒன்றுக்கு ஒரு கிலோ அயோடின் கலந்த உப்பு மானிய விலையில் வழங்கப்படும்.

DSC_9069

விடுபட்ட பயனாளிகள் அனைவருக்கும் இலவச எரிவாயு இணைப்புடன் கூடிய அடுப்புகளும், இலவச கலர் டி.வி.க்களும் வழங்கப்படும்.

 

இலவச லேப்டாப்: அரசுக் கல்லூரிகளிலும், அரசு உதவி பெறும் கல்லூரிகளிலும் தொழிற்கல்வி பயிலவரும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவ, மாணவியருக்கு முதலாம் ஆண்டிலேயே இலவசமாக மடிக்கணினி (லேப்டாப்) வழங்கப்படும். அரசு வேலைவாய்ப்புகளில் குடும்பத்தில் முதல் பட்டதாரிகளுக்கு முன்னுரிமை தருவோம்.

 

தமிழகத்தில் பல்கலைக்கழகங்களே இல்லாத மாவட்டங்கள் இல்லை என்ற உயர்ந்த நோக்கத்தோடு எல்லா மாவட்டங்களிலும் புதிய பல்கலைக்கழகங்களை அமைப்போம். அனைத்து மாவட்டங்களிலும் அரசு பொறியியல் கல்லூரிகள் தொடங்கும் நோக்கத்துடன், புதிய அரசு பொறியியல் கல்லூரிகளை உருவாக்குவோம்.

 

அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் வெளிநாடுகளில் வேலை தேடுவதற்கு வசதியாக ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், ஸ்பானிஷ், அரபி போன்ற மொழிகளைக் கற்றுத்தர ஏற்பாடு செய்வோம்.

 

மூத்த குடிமக்களுக்கு இலவச பஸ் பாஸ்: 60 வயதுக்கு மேற்பட்ட அனைத்து மூத்த குடிமக்களுக்கும் அரசு உள்ளூர் பஸ்களில் இலவச பஸ் பாஸ் வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்துவோம்.

 

நடக்க முடியாத முதியோருக்கு வீட்டுக்கே சென்று மருத்துவப் பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்யப்படும்.

 

முதியோர், ஆதரவற்ற பெண்கள், விதவைகள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கும் வழங்கப்பட்டுவரும் உதவித்தொகை மாதம் ரூ.750 ஆக உயர்த்தப்படும்.

 

இலவச வீடு கட்ட நிதி ரூ.1 லட்சம்: கலைஞர் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் கான்கிரீட் வீடுகள் கட்ட வழங்க இப்போது ரூ.75 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது. இது ஒரு லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும்.

 

கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் ஏற்கெனவே அடையாள அட்டைகள் வழங்கப்பட்ட அத்தனை குடும்பங்களுக்கும் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும். இந்த வீடுகளைப் பெற சிலருக்குத் தகுதியில்லை என்ற நிபந்தனையும் மறுபரிசீலனை செய்யப்படும்.

 

கோவை, மதுரை நகரங்களுக்கு மெட்ரோ ரயில்: சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக மெட்ரோ ரயில் திட்டம் இப்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. கோவை, மதுரை போன்ற பெருநகரங்களிலும் இந்தத் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

 

மதுரை, கோவை ஆகிய நகரங்களுக்கு புல்லட் ரயில் இயக்க நடவடிக்கை எடுக்கப்டும். சென்னையில் மெட்ரோ ரயில் திட்டத்தை மாமல்லபுரம் வரையில் நீட்டிக்க ஒரு பாதையும், ஸ்ரீபெரும்புதூர் வழியாக இருங்காட்டுக்கோட்டை வரை நீட்டிப்பதற்கான மற்றொரு பாதையையும் ஏற்படுத்துவோம்.

 

மினி பஸ்களின் எண்ணிக்கை அதிகமாக்க ஆவன செய்யப்படும்.

 

ஆன்-லைன் வர்த்தகத்துக்குத் தடை: சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதித்தால் சிறு வணிகர்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே, இந்தத் துறையில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்கக் கூடாது என்று வலியுறுத்துவோம்.

 

அத்தியாவசிய உணவுப் பொருள்களின் விலையேற்றத்துக்கும், தட்டுப்பாட்டிற்கும் முன்பேர ஊக வணிகம் (ஆன்-லைன் வர்த்தகம்) காரணமாக உள்ளது. எனவே, இதைத் தடைசெய்ய மத்திய அரசை வலியுறுத்துவோம்.

 

வெள்ளம், தீ போன்ற சீற்றங்களாலும், கலவரங்களாலும் பாதிப்புக்கு உள்ளாகும் வணிகர்களுக்கு, வணிகர் நல வாரியத்தின் மூலம் நிவாரணம் அளித்திட தேவையான திட்டங்கள் செயல்படுத்தப்படும். மருத்துவ உதவிகளும் வழங்க ஆவன செய்வோம்.

 

சென்னையில் துணை நகரம்:

சென்னை நகரின் நெரிசலைக் குறைக்க சென்னைக்கு அருகில் புதிய சென்னை துணை நகரம் உருவாக்குவோம்.

நகரங்களில் நடுத்தர, குறைந்த வருவாய்ப் பிரிவினைச் சேர்ந்தவர்கள் பயனடையத்தக்க விதத்தில் அரசால் அறிவிக்கப்படும் கட்டடங்களில் தனியார் நிறுவனங்களைக் கொண்டு குறைந்த செலவிலான வாடகைக் குடியிருப்பு திட்டம் செயல்படுத்துவோம்.

மாற்றுத் திறனாளிகள் எளிய முறையில் பயன்படுத்தும் வகையில் இனி கட்டப்படும் அனைத்துப் பொதுக்கட்டடங்கள், அரசு கட்டடங்கள் உரிய முறையில் வடிவமைக்கப்படுவதை கட்டாயமாக்கி சட்டம் இயற்றுவோம்.

 

இலவச டயாலிசிஸ்: சிறுநீரக பாதிப்புக்குள்ளான நோயாளிகளுக்கு இலவச ரத்த சுத்திகரிப்பு சிகிச்சை (டயாலிசிஸ்) அனைத்து மாவட்ட மருத்துவமனைகள், மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் வழங்க வசதிகளைச் செய்வோம். ஏழைகளுக்கு இலவசமாகவும், மற்ற வருவாய்ப் பிரிவினருக்கு குறைந்த செலவிலும் இந்தச் சிகிச்சையை அளிக்க வசதிகளைச் செய்வோம்.

 

தனியார் மருத்துவமனைகளில் நியாயமான கட்டணங்களை நிர்ணயம் செய்வதற்கு மருத்துவக் கட்டண ஒழுங்குமுறை ஆணையம் அமைப்போம் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் தி.மு.க. தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

 

இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வரும், தி.மு.க. பொருளாளருமான மு.க.ஸ்டாலின், முதன்மைச் செயலாளர் ஆர்க்காடு வீராசாமி, துணைப் பொதுச்செயலாளர்கள் துரைமுருகன், பரிதி இளம்வழுதி, சற்குண பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

Comments  

 
0 #19 jaya 2011-03-23 17:29
[quote name="Raj 26"]டிவி , லேப்டாப் , கிரைண்டர் ,மிக்ஸி அனைத்தும் இலவசமாக கிடைக்குமிடம் - திமுக எண்டர்பிரைசஸ்.[எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது )
Quote
 
 
0 #18 Tamilanatindia 2011-03-21 15:17
Seems like ADMK is announcing something similar this time... check in dinamalar!!!!!! !
Quote
 
 
+3 #17 devil 2011-03-21 14:31
ayya manjal thundu, inimale vaaliba passangaluku elavasa kanimozhi koduthakooda un aatchi nikaathu
Quote
 
 
+7 #16 ponmurugan 2011-03-20 22:19
இலவசங்கள் என்ற பெயரில் இவர் குடும்பம் அடிக்கும் கொள்ளை கொள்ளையோ கொள்ளை. இவர் அறிவித்தது உண்மை என்றால் இவர் குடும்பம் சம்பாதித்து சேர்த்து வைத்துள்ள பணத்திலிருந்து கொடுக்கச் சொல்லுங்கள் பார்ப்போம். ஏற்கனவே அளிக்கப்படும் என்ற இலவலசங்கள் இன்று வரை எந்த சலுகையும் முழுமையாக சென்று அடையவில்லை. இவர் டி.வி. கொடுப்பார், ஆனால் உருப்படியாக கிராமத்துக்கு மின்சாரம் துண்டிக்காமல் வழங்கச் சொல்லுங்கள். அப்புறம் டி.வி. கொடுக்கலாம்.
Quote
 
 
+8 #15 ராஜா 2011-03-20 21:26
இப்படியே இலவசங்களை கொடுத்து கொடுத்து தமிழ்நாட்டு மக்களை சோம்பேறி ஆக்க முயற்சிகிறார்கள ் ...... விவசாயம் உக்க படுத்த எந்த தகவலும் இதில் இல்லை .....
Quote
 
 
+10 #14 சைதை அஜீஸ் 2011-03-20 19:05
யாராலும் மறுக்க முடியாத உண்மை...கருணானிதி அறிவியல் ரீதியாக ஊழல் செய்பவர் என்று! னம்மில் எத்தனைப் பேர் புறங்கையை நக்காமல் இருக்கிறோம்!!! தாத்தா 96-ல் ஆட்சிக்கு வந்தபோது ஊழலை ஒழிக்க ஏகப்பட்ட case போட்டார் (சவுக்கைப் போல!) ஆனாலும் இன்று வரை முடிவு/நீதி கிடைக்கவில்லை. இதுவே அவருக்கு ஒரு தைரியத்தை கொடுத்துவிட்டது மேலும் ஊழல் செய்ய!!! நானும் ஒரு மாற்று வேண்டும் என்பதை விரும்புகிறேன். ஆனால் அந்த மாற்றம் ஜெயலலிதா இல்லை. முடிவெடுப்பதில் வல்லவர், ஆங்கில புலமை உள்ளவர், திறமைசாலி ...இதெல்லாம் ஜால்ரா கூட்டம் கூறுவது. எத்தனை முறை பன்னீர்செல்வம் அல்லது செங்கொட்டையன் அவர் முன்னால் பேசி இருப்பார்கள்? ஆங்கில புலமை உள்ளவர் நீதி மண்றத்தில் தமிழ் மொழிபெயர்ப்பு கேட்கிறார். திறமைசாலியோ தலைக்கனத்துடன் கூட்டணிக் கட்சிகளுக்கு தண்ணிக்காட்டுகி றார்!!! தாத்தாவுக்கு பின்னால் தன் குடும்பம் என்றால்...அம்மாவுக்குப் பின்னால் சசியின் குடும்பம்... ஒவ்வொரு முறையும் நாம் மறப்போம் மன்னிப்போம் என்றால் இவர்கள் திருந்துவதாக தெரியவில்லை. எனவே இருக்கிற திருடனில் ஒருவனையே நாம் தேர்ந்தெடுப்போம ்...அப்படியென்றால் அம்மாவைவிட தாத்தா எவ்வளவோ மேல்...வேறு வழி இல்லை
Quote
 
 
+12 #13 அ.சந்தர் சிங் 2011-03-20 16:51
தமிழ்நாடு என்பதை பிச்சைக்கார நாடு என்று மாறும் விரைவில்.
Quote
 
 
+1 #12 vasant 2011-03-20 16:34
Was expecting something related to TASMAC like 4 quarters free(or subsidized) per month because after cinema we have become addicted to TASMAC.
Quote
 
 
+15 #11 tamil anban 2011-03-20 16:04
தமிழகத்தில் பலமாக இருப்பது இரண்டு, ஒன்று பேய் மற்றொன்று பிசாசு.
திமுக என்னும் பேய் கடித்து வைக்கிறது, அதிமுக என்னும் பிசாசு பிராண்டி வைக்கிறது,
இதில் கடியை விட பிரான்டலே மேல் என்னும் நிலைக்கு மக்கள் வந்து விட்டார்கள்,
ஏன் இந்த அவல நிலை? நல்லவர்கள் யாருமே இந்த மக்களின் கண்ணுக்கு தெரியவில்லையா?
தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியாவிலும் இதே நிலைதான்.
இந்த நாட்டில் நம்மை ஆள ஒரு இந்தியனுக்கு கூட தகுதியில்லாமல் போய் விட்டது,
அதனால் தான் கண்டம் தண்டி வாழ்ந்த முண்டத்தை அழைத்து வந்து ஆள வைத்திருக்கிறார ்கள்,
Quote
 
 
0 #10 MDMK 2011-03-20 15:59
Dear Savukku readers, Please
BoyCot the election
Quote
 
 
+1 #9 perumal m 2011-03-20 14:15
PL INFORM ME HOW TO TYPE IN TAMIL.
Quote
 
 
-1 #8 subbu 2011-03-20 13:47
enum 5 andukalil tamilnatil entha kavala avala nelai kandipaha vuruvakum,makka la thoongikonda erukathirkal,el avsam nindruponal vungal nelai anna ahum,appothum yan maakalahava erukureer.satru makkalaha vazha mulungal,entha elaya samuthayathai matri amaikalam.
Quote
 
 
-1 #7 subbu 2011-03-20 13:43
pongada neengalum vunga arasiyalum,mana mkatta mada pundaikala elavasam, elavasam,yanda epad elavasam angera payarel,makkala i muttalaha vuruvakurenga,a thu sari,appathan neenga kudumbama santhu makkal panatthai kollai adika vasatheya erukku,makkalai arevudan sayalpada anna vazhi athai saiungal,athusa ri athuthan vungaluka ellaya apuram appuram appad satheyam?athanal ethuponra muttal makkalai mattuma vuruvakka mudium.
Quote
 
 
+10 #6 sakthy 2011-03-20 13:31
கருத்து எழுத முடியாமல் திணறுகிறேன். ஏமாற மக்கள் இருக்கும் வரை ஏமாற்ற தயாராக ஒரு கூட்டம் இருக்கிறது. நம் நாட்டுக்கு இப்படி ஒரு நிலையா. வெட்கமாகவும்,வே தனையாகவும்,கவலை யாகவும் இருக்கிறது. ஏழை மேலும் ஏழையாகிறான்.பணம் படைத்தவன் மேலும் பணத்த பெருக்கிக் கொண்டிருக்கிறான ். கல்வியும்,மருத் துவமும் வியாபாரமாக ஆகி விட்ட பின் மக்கள் சிந்திக்க முடியாமல் இலவசம் என்ற போதையில் மூழ்கிக் கிடக்கின்றான்ர் .
இந்த நிலையில் அ.தி.மு.க. கூட்டணி வேறு. மீண்டும் இலவசம்,உழல்,அரா ஜக சாக்கடையில் விழ வேண்டியது தானா
Quote
 
 
0 #5 ernill 2011-03-20 12:47
As I posted earlier, I am sick of conveying my thoughts in english. can anyone guide me how to type in tamil here which i like most. please....

On to the subject:

I am surprised why everyone is cursing and bouncing up on to the political parties when they announce freebies. How can you blame the political parties for giving these free items when you (we the common people) are not perfect. In tamil there is a saying "Oosi idam kodutthaa thaaney nool nuzhayum". Such a way till the public welcome and accept these free schemes, political parties will dare to announce it. It is a shame on tamil nadu public to accept such a free schemes instead of demanding for schemes which develop the individual status by constructive schemes and projects. People are corrupted. Buyers are compromising, so the sellers are giving non quality products. It is as simple as that. Few of my western friends asked me a simple question which made me to feel ashamed on behalf of the tamil nadu people. They asked me "how can you accept something coming to you at free of cost, without you working for it" if so "How do you respect yourself". I feel they are right. Many things needs to be changed before this cheap schemes to be vanished.
Quote
 
 
+16 #4 காலவன் 2011-03-20 12:37
தலைவரே நீங்கள் எந்த காலத்தில் நாட்டின் நலனுக்காக யோசிக்கபோகிறீர் கள்.. மிக்ஸி கிரைன்டரை உங்கள் பினாமிகளிடம் தயாரிக்கச்சொல்ல ி அரசுபணத்தில் வாங்கி இலவசமாக தரப்போகிறீர்களா ...? உங்கள எந்த மட்டமான வார்த்தையில திட்டுறதுன்னு தெரியல.... இவ்வளவு கேடுகெட்ட தலைவனா இருக்கீங்களே...திருந்தவேமாட்டீ ங்களா... நீர்பாசன திட்டங்கள் எதுவும் கிடையாது.. மின் உற்பத்தி திட்டங்கள் என்ன ஆனது..? உணவுபொருட்கள விலையேற்றத்தை கட்டுபடுத்த திட்டம் ஏதேனும் வைத்திருக்கிறீர ்களா..... அடுத்த ஐந்தாண்டில் சட்டம் ஒழுங்கு, போக்குவரத்தை கட்டுபடுத்துவது , உயர் கல்வியில் தமிழ், ஈழ அகதிகளின் அடிப்படை வாழ்வுரிமை, ஈழத்தமிழர்களின் உரிமைகள், எல்லாவற்றையும் விட தமிழக மருத்துவமனைகளின ் தரம் உயர்த்துதல் இவைகள் பற்றி உங்களுக்கோ, இந்த தினசரி பத்திரிகைகளுக்க ோ ஏதேனும் அக்கறை இருக்கா....? (மிக்ஸி,கிரைண்ட ர் என்று கொட்டை எழுத்தில் உங்களுக்கு சொம்பு தூக்குகிறார்கள் ), முதுமைக்கும்,கு ழந்தைகளுக்கும் வீடுதேடிவந்து மருத்துவம் செய்யலாம் (அப்படி பணிசெய்பவர்களுக ்கே கோட்டாவில் முதலீடம் தரலாம்) உங்களையும் அந்த அம்மாவையும் இந்த தமிழகம் தலைவராக பெற்றது தமிழகத்தின் இருண்டகாலம் என்றுதான் சொல்வேன். இலவசம் வேண்டாம் மனிதாபிமான அரசு வேண்டும்.
Quote
 
 
+4 #3 Raj 26 2011-03-20 10:55
டிவி , லேப்டாப் , கிரைண்டர் ,மிக்ஸி அனைத்தும் இலவசமாக கிடைக்குமிடம் - திமுக எண்டர்பிரைசஸ்.
Quote
 
 
-12 #2 Puthiyavan Raj 2011-03-20 09:39
பணக்காரர்களுக்க ும் தொழில் அதிபர்களுக்கும் அரசு பணம் கோடிக்கணக்கில் கடன் அல்லது இலவச நிலம் ஒதுக்கீடு (99 வருட குத்தகை, மாதம் ஒரு ரூபாய் வாடகை என்று நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலத்தை தொழிற்சாலை, மருத்துவமனை கட்ட கொடுப்பது இலவசம் தானே) என்று வழங்கப்படுகிறது . ஏழைகளுக்கு வீட்டிற்கு தேவையான அத்தியாவசியப்பொ ருள்கள், மாணவருக்கு தேவையான மடிக்கணினி போன்றவற்றை இலவசமாக வழங்குவதில் எந்த தவறுமில்லை. கலைஞர் கருணாநிதி ஆட்சி என்றால் கருணையும் இருக்கும் நிதியும் இருக்கும். 35 வருடங்களுக்கு முன்பே மனிதனை வண்டியில் வைத்து சக மனிதனே மாடு போல இழுக்கும் இழி நிலை ஒழியட்டும் என்று சொல்லி, கைவண்டிகளை ஒழித்து, அவர்களுக்கு இலவச சைக்கிள் ரிக்ஷா வழங்கியவர் கலைஞர். வங்கியில் தொழில் அதிபர்களும் வணிகர்களும் பல லட்சம் கோடி கடன் வாங்கி திருப்பி செலுத்துவதில்லை . ஆனால் ஏழைகளுக்கு அரசு இலவசமாக கொடுத்தால் மட்டும் பொருளாதாரம் பாதிக்கப்படுமா? அது மட்டுமல்ல, திமுக ஆட்சியில் இலவச திட்டங்கள் மற்றும் மக்கள் நலதிட்டங்கள், வேலை வாய்ப்பு, வளர்ச்சி திட்டங்கள் எதுவும் இலவச திட்டங்களால் தடைப்படுவது இல்லை. ஜெயா போல கஜானா காலி என்று புலம்பிக்கொண்டு , மக்களை வாட்டி வதைத்து, தான் மட்டும் அரசு பணத்தில் ஆடம்பரமாக தனி விமான பயணம், ஆயிரம் கார் பவனி, என்று அரசு பணத்தை வீண்டிப்பது இல்லை. ஜெயா போல் தனது சுய நலத்திற்காக அரசு பணத்தை வீணடிப்பது, எந்த வளர்ச்சி திட்டமும் செயல்படுத்தாது இருப்பதை விட கலைஞர் போல இலவசங்கள் கொடுத்தாலும் வளர்ச்சிதிட்டங் களையும் வெற்றிகரமாக செயல்பத்தும் அரசு தான் தமிழ் நாட்டிற்கு நல்லது.
Quote
 
 
+33 #1 மதன் 2011-03-20 07:34
மேலும் இலவசங்கள்:
கணவன் இல்லாதவர்களுக்க ு கணவன் இலவசம்;, மனைவி இல்லாதவர்களுக்க ு மனைவி இலவசம்;, பிள்ளைகள் இல்லாதவர்களூக்க ு பிள்ளைகள் இலவசம்;,கார் இல்லாதவர்களூக்க ு கார் இலவசம்; ஆனால் அறிவு இல்லாத தமிழ்நாட்டுக் கார்ன்களுக்கு அறிவு வர மட்டும் எதுவும் செய்ய மாட்டோம். இப்படி எல்லாவற்றையும் இலவசமாகத் தந்தால் தான், தமிழன் முன்னேறாமல் திண்ணைப் பேச்சுக்காரனாகவ ே இருப்பான். இலவசங்களை எதிர்க்கும் தேர்தல் சந்தர்ப்பவாதி ராமாதாஸ் என்ன சொல்லப் போகிறார்? கிழத்தின் அடிகளை வருடினால் போதும் என்கிறாரா?
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 123 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday4261
mod_vvisit_counterYesterday11260
mod_vvisit_counterThis week36720
mod_vvisit_counterLast week80132
mod_vvisit_counterThis month239452
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12761571