முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
காக்க காக்க கனிமொழியை காக்க….. நோக்க நோக்க திஹாரை நோக்க அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 22
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
வியாழக்கிழமை, 24 மார்ச் 2011 12:11

 

பக்திப் பரவசமான தலைப்பாக இருக்கிறது என்றுதானே பார்க்கிறீர்கள்.   இந்தத் தலைப்பின் முதல் பாதியை முணுமுணுத்துக் கொண்டிருப்பது, கருணாநிதியின் குடும்பத்தார்.   திடீரென்று அத்தனை பேருக்கும் பகுத்தறிவு வேஷத்தைத் தாண்டியும், பக்தி பீறிட்டுக் கொண்டு வருகிறது.

 

கடந்த வாரம், சிஎன்என் ஐபிஎன் தொலைக்காட்சி சிபிஐ உச்சநீதிமன்றத்தின் ஒப்புதலுக்கு சமர்ப்பிக்கும் குற்றப் பத்திரிக்கையில், கனிமொழி, மற்றும் கலைஞர் டிவி மேலாண் இயக்குநர் சரத்குமார் பெயர்கள் இடம் பெறும் என்று, நேற்று ஹெட்லைன்ஸ் டுடே செய்தி வெளியிட்டது.

 

நேற்றைய நாளேடுகளில் வெளி வந்திருக்கும் செய்தியோ, கலைஞர் டிவி எம்டி சரத்குமார் பெயர் மட்டும் தான் குற்றப் பத்திரிக்கையில் இடம் பெறும் என்று தெரிவிக்கின்றது.   கலைஞர் டிவியில், சரத் குமார் ஒரு சாதாரண வேலையாள். ஊழியர். 20 சதவிகித பங்கை வைத்திருப்பதாலேயே, கலைஞர் டிவியில் எல்லா முடிவுகளையும் அவர் எடுப்பார் என்று கூற முடியாது. அந்த நிறுவனத்தில் பெரும்பான்மை பங்கு வைத்திருக்கக் கூடிய, தயாளுவுக்கும், கனிமொழிக்கும் இல்லாத பொறுப்பு சரத்குமாருக்கு வந்திருக்க வாய்ப்பில்லை.

 DSC_0159

சரி இந்த விவகாரத்தின் பின்னணி என்ன என்று ஆராய்ந்தால், வரக்கூடிய தகவல்கள் இந்திய ஜனநாயகத்தின் மீதும், நீதித்துறையின் மீதும் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்துவதாக உள்ளது.

 karunanidhi_dhayalu_ammal

 

தயாளு, சிபிஐ கேள்வி கேட்கும் போது, இதே போல வாயை வைத்திருந்திருப்பாரோ

கருணாநிதியின் கண்களாகவும், காதுகளாகவும், இருக்கும், ஜாபர் சேட் கருணாநிதியின் குடும்பத்தினரை பாதுகாக்க பல்வேறு வேலைகளிள் ஈடுபட்டாலும், டெல்லியில் ஜாபர் சேட்டுக்கு அந்த அளவுக்கு செல்வாக்கு இல்லை. ஆனால், காவல்துறையில், யாரை, எப்படி, எப்போது பிடிப்பது என்பது, அரிச்சுவடி. அந்த வகையில், கருணாநிதி குடும்பத்தினரை பாதுகாக்க, ஜாபர் சேட் தேர்ந்தெடுத்த நபர், முகம்மது ஷகீல் அக்தர்.

 IMG_8801

 

முகம்மது ஷகீல் அக்தர்

யார் இந்த முகம்மது ஷகீல் அக்தர்…. ? இவர் 1989ம் ஆண்டு நேரடியாக தேர்ந்தெடுக்கப் பட்ட ஐபிஎஸ் அதிகாரி. அல் உம்மா இயக்கத்தைச் சேர்ந்த இமாம் அலி உள்ளிட்டோரை பெங்களுரில் சுட்டுக் கொன்ற போது இவர் பிரபலமானார். இமாம் அலியை சுட்டுக் கொன்றதால், இவரது உயிருக்கு ஆபத்து என்று வந்த உளவுத் துறையின் தகவலை அடுத்து, மத்திய அரசுப் பணிக்கு டெல்லி செல்கிறார்.

 

ஷகீல் அக்தர், பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர். பீகார் மாநிலத்தில் லல்லு கட்சியைச் சேர்ந்த ஒரு அமைச்சரோடு மிகுந்த நெருக்கம் உள்ளது, ஷகீல் அக்தரின் குடும்பம். அந்த செல்வாக்கைப் பயன்படுத்தி, அப்போது மத்திய அமைச்சராக இருந்த சத்ருக்கன் சின்ஹாவிடம், கப்பல் போக்குவரத்து துறையின் சிறப்பு அதிகாரியாக பணியில் சேர்கிறார்.

 

பிறகு, திமுகவைச் சேர்ந்த ரகுபதி உள்துறையின் மத்திய இணை அமைச்சர் ஆனதும், அவருக்கு செயலாளராக ஆகிறார் அக்தர். மத்திய அமைச்சரின் செயலாளர் என்ற முறையில், ஐபி என்று அழைக்கப் படும் மத்திய உளவுத் துறையின் ரகசிய அறிக்கைகளும், நாகா தீவிரவாதிகளோடு நடத்தப் படும் பேச்சுவார்த்தை குறித்த விபரங்களும், ஷகீல் அக்தருக்கு வரும்.

 

இவ்வாறு பணியாற்றிக் கொண்டிருக்கையில், ஷகீல் அக்தருக்கு வெளிநாட்டைச் சேர்ந்த ஒரு பெண்ணோடு நெருங்கிய தொடர்பு ஏற்படுகிறது. அந்தப் பெண்ணோடு ஷகீல் அக்தர் “நெருங்கிப்” பழகுகிறார்.   அந்த நெருக்கமான பழக்கத்தில், ஷகீல் அக்தர் தனது பாஸ்போர்ட்டைதொலைத்து விடுகிறார்.   புதிய பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிக்கும் போது, பழைய பாஸ்போர்ட் எங்கே என்று கேட்டால் தொலைந்து போய் விட்டது என்கிறார். உடனடியாக இவர் மீது மத்திய உளவுத் துறையும், ‘ரா’ வும், கண்காணிப்பைத் தீவிரப் படுத்தின. கண்காணித்த போது, அந்த ஆங்கில அணங்கோடு, ஷகீல் அக்தர், டெல்லியின் பிரபல நட்சத்திர ஓட்டல்களிலும், கெஸ்ட் ஹவுஸ்களிலும் நடத்திய ‘சட்டம் ஒழுங்கு’ விவாதத்தைப் பற்யிய தகவல்களை உளவுத்துறை புகைப்பட ஆதாரங்களோடு கண்டுபிடித்தது. கண்டு பிடித்ததும், ஷகீல் அக்தர் கைது செய்யப்படும் நிலைக்கு ஆளானார்.

 IMG_8798

அரசியல் வாதிகளோடு தொடர்பு இருக்கும் அதிகாரிகளை யார்தான் என்ன செய்ய முடியும் ?

 

உடனே லாலு பிரசாத் யாதவ், கருணாநிதியிடம் பேசி, இரவோடு இரவாக, ஷகீல் அக்தர், தமிழ்நாட்டுக்கு மாற்றப்படுகிறார். இது குறித்து அப்போது ஜெயலலிதா, இரவோடு இரவாக மாற்றப் பட்ட மர்மம் என்ன என்று அறிக்கை வெளியிட்டார். அதற்கு, கருணாநிதியின் பதில் என்ன தெரியுமா ?

 1580963828_4ea23b4ece_b

“ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் ஷகீல் அக்தருக்கு மெடல் குடுத்திருக்கிறார்” அதனால், அந்த அம்மையாரின் குற்றச் சாட்டை ஏற்றுக் கொள்ள முடியாது” என்று. (கருமம், கருமம்) இதற்கு ஜெயலலிதா வெளியிட்ட பதில் அறிக்கையில்

 

“உளவுத்துறைக்கு ஷகீல் அக்தர் மீது ஏன் சந்தேகம் வந்தது?. அவர் இரவோடு இரவாக ஏன் தமிழக பணிக்கு மாற்றப்பட்டார் என்பதுதான்இப்போதைய பிரச்சினை. இதற்கு ரகுபதியும், மத்திய அரசும்தான் பதில் சொல்ல வேண்டும். ஆனால் அவர்கள் அமைதியாக இருக்க கருணாநிதிஅவசரப்பட்டு பதிலளித்து முன்னுக்குப் பின் முரணாக பேசுவதால் அவர்கள் மீது சந்தேகம் மேலும் வலுக்கிறது.

 

அவருக்கு நான் வீரப் பதத்தகம் வழங்கியதாக கருணாநிதி கூறுகிறார். குடியரசுத் தலைவரின் வீரப் பதக்கத்தை பெறுபவர்களை தேர்வு செய்யதனியாக ஒரு குழு இருக்கிறது.

 

அந்த குழுவின் பரிந்துரையின் பேரில்தான் பதக்கம் பெறுவோர் தேர்ந்தெடுக்கப்படுவர். பின்னர் அவர்களை குடியரசுத் தலைவர் அங்கீகரித்து,அதன் பின்னர் சம்பிரதாய முறையில் பதக்கம் அளிக்கப்படுகிறது. அப்படித்தான் ஷகீல் அக்தருக்கும் பதக்கம் வழங்கப்பட்டது. ஆனால் ஏதோ, நான்தான் தேர்வு செய்தது போல கருணாநிதி பேசியுள்ளார்.

 

மத்திய அரசுப் பணியிலிருந்து மாநிலங்களுக்குத் திரும்பும் அதிகாரிகளை குறைந்தது சில வாரங்களாவது காத்திருப்போர் பட்டியலில்வைத்திருப்பார்கள். ஆனால் இரவோடு இரவாக, மின்னல் வேகத்தில் ஷகீல் அக்தர் பதவிக்கு வருகிறார் என்றால், அதற்கான பின்னணி என்ன?எத்தனை அதிகாரிகளுக்கு இவ்வாறு சில மணித் துளிகளில் மாநிலத்திற்கு வரவழைத்து கருணாநிதி பதவி கொடுத்திருக்கிறார் என்பதை அவர்பட்டியலிட வேண்டும்.

 

ஷகீல் அக்தரின் பழைய புகைப்படத்தைக் காட்டி அப்போது நல்லவர் என்று சொல்வதும் எந்த விதத்தில் நியாயம்? அவரை அவசர அவசரமாக பணிஅமர்த்த வேண்டிய அவசியம் என்ன? அதற்கான நிர்ப்பந்தம் என்ன?

 

சந்தேகம் என்றால் ரகுபதி ஓடி ஒளிய வேண்டிய அவசியமோ, கருணநிதி இரவோடு இரவாக பதவி கொடுக்க வேண்டிய அவசியமோ என்ன?

 

ஷகீல் அக்தரை கருணாநிதி விழுந்தடித்துப் பாதுகாக்கிறார் என்றால், அதில், ஆழமான, பயங்கரமான, கற்பனைக்கும் எட்டாத, கண்ணுக்குப்புலப்படாத பல மர்மங்கள் இருக்கும் என்பது அதிகார வர்க்கத்தில் உள்ளவர்களின் கருத்தாகும்.

 

இத்தனை பேரும் கருணாநிதியும், ரகுபதியும் நான் அனுப்பி வைக்கும் ஒருவர் கேட்கும் கேள்விகளுக்கு பத்திரிக்கையாளர்கள், டிவி நிருபர்கள்முன்னிலையில், முன் பதில் சொல்லத் தயாரா ?”

 

என்று கேட்டார் ஜெயலலிதா. அதற்குப் பிறகு, இந்தச் சம்பவங்கள் மறக்கப் பட்டு, ஷகீல் அக்தர், ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரியாக வேடமிட்டு இன்று வரை நடமாடி வருகிறார்.

 

பேக்ரவுண்ட் போதுமா ? இந்த ஷகீல் அக்தரிடம் தான், கனிமொழியையும், தயாளுவையும் காப்பாற்றும் பொறுப்பு ஒப்படைக்கப் பட்டிருக்கிறது. அதற்கான காரணம், டெல்லியில் நீண்ட காலம் பணியாற்றியதனால், அவருக்கு உள்ள டெல்லி தொடர்புகள்.

 

அதற்காக நேரடியாக ஷகீல் யாரையும் தொடர்பு கொண்டு விட முடியாதல்லவா ? இதற்கு ஜாபர் சேட் வழி செய்து கொடுத்தார். இந்த ஆண்டு காவல் அதிகாரிகளுக்கான பதக்கங்கள் வழங்கும் பட்டியலில், ஜாபருக்கு, சர்வதேச சட்ட விருது ஒன்று வழங்கப் பட்டது. இந்த விருதை வழங்கியது, சர்வதேச சட்ட வல்லுனர்கள் அமைப்பு என்ற ஒரு அமைப்பு. இந்த அமைப்பு, ஒரு டுபாக்கூர் அமைப்பு.   சட்ட வல்லுநர்கள் என்ற பெயரை வைத்துக் கொண்டு, நீதிபதிகளுக்கு ப்ரோக்கர்களாக செயல்படுவதுதான்.   இதன் தலைவர், டாக்டர் (?????) ஆதிஷ் அகர்வாலா. இவர் வகிக்கும் பதவிகளை பட்டியலிடுகிறேன் பாருங்கள். இவர் ஒரு நாள் கூட கோட் போட்டு, நீதிமன்றத்தில் வாதாடியதே இல்லை என்பது கூடுதல் தகவல்.

 

jaff

Chairman, All India Bar Association
Convener, Indian Council of Jurists 
Chairman, India Legal Information Institute
Secretary General, All India Senior Advocates Association

Senior Additional Advocate General, Govt. of Haryana
Additional Advocate General, Govt. of Punjab
Sr. Central Govt. Counsel, Supreme Court of India
Member, Bar Council of Delhi
Ex. Vice-Chairman, Bar Council of India
Ex. Vice-President, Supreme Court Bar Association
Ex. Additional Advocate General, Govt of Uttar Pradesh

 

மகாநதி படத்தில், ஹனீபா, விசிட்டிங் கார்டுகளை எடுத்து கமலிடம் காண்பிப்பது நினைவுக்கு வருகிறதா ? இந்த டுபாக்கூர் அமைப்பின் தமிழ்நாட்டுப் பிரதிநிதி, ஒரு டுபாக்கூர் வழக்கறிஞர் சங்கத்தை நடத்தி வரும், பிரபாகரன் என்ற வழக்கறிஞர். இந்த பிரபாகரன், பல உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு ப்ரோக்கராக செயல்பட்டு வருகிறார் என்பது உயர்நீதிமன்ற வட்டார தகவல்.

 

02ndjvn01_SC_Addl_A_492825e

டாக்டர் ஆதிஷ் அகர்வாலா

சமீபத்தில் சென்னையில் நடந்த ஒரு கருத்தரங்கத்தில் கலந்து கொள்வதற்கு ஒரு உச்சநீதிமன்ற நீதிபதி வந்திருந்தார். சென்னை உயர்நீதிமன்றத்தைச் சேர்ந்த நேர்மையான வழக்கறிஞர்கள் அவரை சந்தித்து, “நீங்கள் இப்படிப்பட்ட ஒரு டுபாக்கூர் சங்கம் நடத்தும் விழாக்களில் பங்கெடுத்து, அந்த சங்கத்துக்கு அங்கீகாரம் வழங்கக் கூடாது” என்று கேட்டுக் கொண்டனர்.   அதற்கு அந்த உச்ச நீதிமன்ற நீதிபதி என்ன சொன்னார் தெரியுமா ? “பிரபாகரன் நேர்மையற்றவர் என்றால், நீங்கள் மட்டும் நேர்மையானவர்களா ? ஒரு உச்ச நீதிமன்ற நீதிபதியைச் சந்தித்து இப்படிப் பேச உங்களுக்கு என்ன துணிச்சல் ? நான் அந்த விழாவில் கலந்து கொள்ளத்தான் செய்வேன்.. என்னை யாரும் தடுக்க முடியாது” என்று கூறினார். எதற்கு மூடி மறைப்பானேன்… அந்த உச்ச நீதிமன்ற நீதிபதி வேறு யாருமல்ல…. உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகும் வாய்ப்பு உள்ள சதாசிவம் தான் அது.

 

இந்த பிரபாகரன், சமீபத்தில் சீனாவில் நடந்த சர்வதேச சட்ட வல்லுனர்களின் (???????) சென்னையைச் சேர்ந்த, டைம்ஸ் ஆப் இந்தியா நாளேட்டில் பணியாற்றி சமீபத்தில் ராஜினாமா செய்த சுப்ரமணி என்ற பத்திரிக்கையாளரை மட்டும், செலவு செய்து சீனா அழைத்துச் சென்றார் என்பது கூடுதல் தகவல்.

 

சரி விஷயத்திற்கு வருவோம். இந்த ஆதிஷ் அகர்வாலா, ஜாபர் சேட்டுக்கு, சர்வதேச சட்ட வல்லுனர்கள் குழுமம் அளிக்கும் விருது ஒன்றை வழங்குகிறார். அந்த விருதில், அச்சமில்லாமல் பணியாற்றி, தீவிரவாதத்தையும், குற்றங்களையும், ஒழித்து தேசிய அளவில், மிகச் சிறப்பான பெயரை பெற்று, காவல் துறையில் ஒரு நீங்காத இடத்தைப் பிடித்தார் என்பதுதான் அந்த விருது. இந்த விருதை ஆதிஷ் அகர்வாலா வழங்குகிறார்.

 Jaffer_important_picture

இதற்கு ஜாபர் கைமாறு செய்ய வேண்டாமா ? செய்தார். அது என்னவென்றால், ஆதிஷ் அகர்வாலாவை தமிழகத்தின் கூடுதல் அரசு வழக்கறிஞராக நியமனம் செய்தது. (Additional Advocate General). இந்த பதவியை ஆதிஷ் அகர்வாலாவின் பதவிப் பட்டியலோடு சேர்த்து படியுங்கள். இந்த நியமனம் எப்போது வழங்கப் பட்டது தெரியுமா ? தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை வெளியிட்ட அன்று.   அறிவிப்பு வெளி வந்த பிறகு.   முன் தேதியிட்டு இந்த அறிவிப்பு வெளியிடப் பட்டது. இதற்கான அரசாணை வெளிப்படையாக வழங்கப் படாமல், மறைத்து வைக்கப் பட்டது கூடுதல் தகவல்.

 Jaffer-important-picture

இந்த ஆதிஷ் அகர்வாலாவைத் தான் ஷகீல் அக்தரை தொடர்பு கொள்ள வைத்திருக்கிறார். ஆதிஷ் அகர்வாலா மூலமாக, மற்றொரு டெல்லி வழக்கறிஞரைத் தொடர்பு கொண்டு, சிபிஐ தாக்கல் செய்யும் குற்றப் பத்திரிக்கையில், கனிமொழியின் பெயரையும், தயாளுவின் பெயரையும் சேர்க்காமல் இருக்க ஏற்பாடு செய்யும் பொறுப்பு ஷகீல் அக்தரிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது.

 

முதலில் சவுக்குக்கு இந்த தகவல் வந்த போது, இதை நம்பவில்லை. உச்சநீதிமன்றம் கண்காணித்துக் கொண்டிருக்கும் ஒரு வழக்கில் எப்படி இவ்வளவு தைரியமாக இதைச் செய்வார்கள் என்று நம்பவே முடியவில்லை.   மேலும் உச்ச நீதிமன்றம் குற்றப் பத்திரிக்கையை ஆய்வு செய்த பிறகுதான், சிபிஐ நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய முடியும். அப்படி இருக்கும் போது, இவ்வளவு தைரியமாக எப்படிச் செய்வார்கள் என்று சந்தேகமாக இருந்தது.

 IMG_8799

ஆனால், தினமணியிலும், மற்ற நாளேடுகளிலும் வரும் செய்தி, சரத்குமார் மீது மட்டும் குற்றப் பத்திரிக்கை என்பது.   மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் உருவாக்கும், செய்தி.   ஆனால் மனம் தளரலாமா ? இந்தத் தகவலை, சுப்ரமணியன் சுவாமிக்கும், உச்ச நீதிமன்றத்தில் ஸ்பெக்ட்ரம் வழக்கை நடத்தி வரும் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்களுக்கும் சவுக்கு அனுப்பியுள்ளது.   (நாங்களும் விடமாட்டோமுல்ல…)

 

Comments  

 
0 #32 titus thavamani 2011-05-26 21:06
ஸ்ஸ்ஸ்ஸ் .... இப்பவே கண்ணை கட்டுதே
Quote
 
 
0 #31 இனியவன் 2011-04-02 09:18
அருமை சவுக்கு. நன்றாகச் சுழல்கிறது. எங்களின் ஆதரவு எப்போதும் உண்டு உங்களின் இந்த அரிய பணிக்கு. உங்களுக்கு உதவி செய்யக் காத்திருக்கிறோம ். கேபிள் டிவியை ஒழித்து/ அரசுடைமையாக்குவ து என்பது கருணாவின் அத்தனை ஆட்டங்களையும் நிறுத்தியிருக்க ும் ஒரு நொடி. தேர்தலுக்குப் பின்னான செயாவின் ஆட்சியில் வேறு எதுவும் நிகழ்கிறதோ, இல்லையோ இது கண்டிப்பாக நடக்கும், நடக்க வேண்டும். இதில் செயாவின் சுயநலத்தோடு, உலகத் தமிழ் மக்களின் பொது நலமும் கலந்து இருப்பதால் பாராட்டுக்கள். முயற்சியில் வெற்றியடைய வாழ்த்துக்கள். நாம் நமது சமூகக் கடமையைச் செய்வோம் அதற்காக. இனியவன்
Quote
 
 
0 #30 vaedhampudhidhu 2011-03-29 00:17
Quoting முத்து:
இந்த ஜாபர் கைப்புள்ளைய இன்னுமா காருண்ய திலகம் கருணாநிதியும் அவர்கள் குடும்பம் நம்புது.
சிபிஐ ரெய்டு வாராதுன்னு சொன்னது இந்த கைப்புள்ளதான்
ராசாவை கைது செய்யமாட்டாங்கன ்னு சொன்னதும் இந்த கைப்புள்ளதான்
அறிவாலயம் பக்கம் சிபிஐ வரவே முடியாதுன்னு சொன்னதும் இந்த கைப்புள்ளதான்
அப்புறம், என்னை தேர்தல் கமிஷன் தமிழ்நாட்டு சட்டம்-ஒழுங்கை பத்தி கேட்டு என்னை கவர்னராக்க முடிவு செஞ்சிருக்குன்ன ு சொல்லிட்டு போய், கைப்புள்ளை டெல்லியில குனிய வச்சி குமறி எடுத்திருக்காங் க...
அட போங்க பாஸூ.... இந்த கைப்புள்ள டீம் போய் கனிமொழியை காப்பாத்திடுமா.

Sandaina sattai kiliyathaan seiyum.. sandaila kiliyatha sattai enga iruku... ayyo ayyyo......
Quote
 
 
+1 #29 jaya 2011-03-26 16:00
Quoting chochochuweet:
This magazine is run by SUbramanian and Swamy Co. :P :D

OK WHAT IS WRONG IN THIS? YOU PEOPLE ARE RUNNING LOT OF MAZINES. wHY NOT WE?
Quote
 
 
-4 #28 chochochuweet 2011-03-26 09:36
This magazine is run by SUbramanian and Swamy Co. :P :D
Quote
 
 
0 #27 jaya 2011-03-25 20:55
Quote
 
 
0 #26 Manikandan Vathan Ch 2011-03-25 14:52
Dear editor,
The comments about Prabhakar in this article amounts to criminal contempt of court.

While I am an ardent believer of the freedom of expression,I certainly feel that there is an unprovoked and unwarranted need to term him as a broker of supreme court judges.

If he is really a broker, and if the rest of the lot including you and me 24 carat gold, please tell tell us of 1 deal that he brokered with a judge of the supreme court or even that of a munsif court.

Otherwise please delete the unwarranted comment, since that shall be in the best interests of one and all.

With a deep sense of hurt.

An admirer of your other efforts - MANIKANDAN VATHAN CHETTIAR
ADVOCATE.
Quote
 
 
+1 #25 CHIEF JUSTICE 2011-03-25 13:05
DEAR SAVUKKU
THERE IS ADDITIONAL NEWS TO YOUR REPORT. WHEN THE SAID PRABHAKHARN- BROKER OF CHENNAI HIGH COURT- WENT TO CHINA FOR S*X TOUR IN THE GARB OF INTERNATIONAL COUNCIL OF JURISTS!!!!!, KNOW WHO WENT ALONG WITH THEM?????. SUPREME COURT JUDGE SIRPURKKAR. AND THERE WAS A FUNNY ARTICLES ABOUT THE SAID VISITS IN THE HINDU PAPER.
Quote
 
 
+1 #24 WellWisher 2011-03-25 00:23
God Bless Savukku and we want your service for our country. There are so many people reading your all the posting. So there are more support for your action towards corruption and all other issue for better nation and better life for every people.
Quote
 
 
0 #23 D.G.P.Shankar 2011-03-24 23:58
திரு சவுக்கு அவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள ்ள லிங்கில் உள்ள மு.க. வின் கவிதையை பிரசுரிக்குமாறு கேட்டுகொள்கிறேன ்,,,,,,
இந்த கவிதை பல வருடங்களுக்கு முன்பு தனக்கே கச்சிதமாக பொருந்துமாறு மு.க. எழுதி உள்ளது.....

http://www.facebook.com/l.php?u=http%3A%2F%2Ftamilnenjamhifs.blogspot.com%2F2009%2F06%2Fblog-post_14.html&h=2f486
Quote
 
 
+6 #22 shri nivas 2011-03-24 22:52
நிறைய கிளை தகவல்கள் உள்ளது விரிவாக எழுதவும். பாஸ்போர்ட் காணமல் போனது?இரவோடு மாற்றல் காரணம்? உங்கள் சாட்டை மேலும் சுழல்க ....
Quote
 
 
+4 #21 வாலி. 2011-03-24 22:02
கருணாநிதி தன் நலனுக்காக எவரையும் எப்படியும் பயன்படுத்தக்கூட ியவர். முகம்மது ஷகீல் அக்தர், ஜாபர் சேட், போன்றவர்களும் இலாபம் இல்லாமல் எதையும் செய்யப்போவதுமில ்லை. அந்த சட்டவிரோத செயல்ப்பாடுகள் சமூகத்திலுள்ள அடிமட்ட பாமரனை தாக்கும்போது அவனால் குறிப்பிட்ட நெருக்கடியிலிரு ந்து இந்த சர்வாதிகாரிகளை எதிர்க்க முடியாமல் சாதிக் பாட்சா தேடிய முடிவுக்கு போவதற்கு வாய்ப்புண்டு, ஆனால் கருணாநிதிக்கு சங்கடம் ஏதாவது வருமாகவிருந்தால ் இந்த அதிகாரிகள்தான் பலிக்கடாவாகப்போ வதை இவர்களே உணரவேண்டும். இன்றைய நிலையில் கருணாவுக்கு தேவையெல்லாம் தனது மனைவி. துணைவி. மகள் கனிமொழி. காப்பாற்றப்பட வேண்டும் என்ற வெறியில் இருக்கிறார். கூட்டுச்சேர்ந்த அரசியல்வாதி ஆராசாவின் கதை அஸ்தமனமாகிவிட்ட து ஒரு சான்று, அடுத்து கலைஞர் ரிவி மனேஜர் சரத்தும் சக்கரத்துள் மாட்டப்பட்டுவிட ்டார்.கருணா தன்மீது கயிறு விழும்வரை சுற்றியுள்ள அனைவரையும் நிச்சியம் காவுகொடுப்பார், , பாவம் வடிவேலு புரியாத்தனமான ஆர்வக்கோளாறால் தனது சினிமா ரசிகர்கள் மற்றும் சினிமா சம்பந்தப்பட்டவர ்களை இழந்து விட்டார். ஜாபர் சேட்டும் கவனிப்பு புள்ளியில் சிக்கிவிட்டார் , முகம்மது ஷகீல் அக்தர்.இப்போ தப்பித்தாலும் இலேசாக தப்பிவிடப்போவதி ல்லை, காலம் நிச்சியம் இவர்கள் அனைவரையும் தனது வளையத்துக்குள் கொண்டுவரும்.
Quote
 
 
+1 #20 Cargo Force 2011-03-24 21:36
Very investigative & interesting + thrilling report too.
Quote
 
 
+2 #19 Saravanamuthan 2011-03-24 21:09
மொத்தத்தில் இந்திய அரசியலினதும் அதிகார மையங்களினதும் சகல சந்து பொந்துகளிலும் இருக்கும் அரசியல்வாதிகளும ் அதிஉயர் அதிகாரிகளும் மொள்ளமாரிகளும் பிற்போக்கட்காரர ்க்களும்தான் இந்த சீத்துவத்தில் 2020 இல் வல்லரசு கனவு வேறு.
Quote
 
 
+6 #18 முகுசன் 2011-03-24 20:29
இறைவா, கனிமொழி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் என்ற செய்தி விரைவில் சவுக்கு வெப்சைட்டில் வெளிவர நீதான் அருள் புரியணும்.
Quote
 
 
+8 #17 முகுசன் 2011-03-24 20:27
கடவுளே, சவுக்கு எடுக்கும் நடவடிக்கைகளுக்க ு உறுதுணையாக இருந்து காக்கணும் இறைவா. உனது திருவருள் எப்பொழுதும் சவுக்குக்கு கிடைக்க வேண்டும். சீக்கிரமே, கனிமொழியும் சிறையில் அடைக்கப்படவேண்ட ும் இறைவா. உனது திருவருளே துணை.
Quote
 
 
0 #16 Maamallan 2011-03-24 16:55
Savukku, you really a great. But please take care of yourself. All the best.
Quote
 
 
+7 #15 KK 2011-03-24 15:52
"ஆனால், தினமணியிலும், மற்ற நாளேடுகளிலும் வரும் செய்தி, சரத்குமார் மீது மட்டும் குற்றப் பத்திரிக்கை என்பது. மிகுந்த அதிர்ச்சியையும் , வேதனையையும் உருவாக்கும், செய்தி. ஆனால் மனம் தளரலாமா ? இந்தத் தகவலை, சுப்ரமணியன் சுவாமிக்கும், உச்ச நீதிமன்றத்தில் ஸ்பெக்ட்ரம் வழக்கை நடத்தி வரும் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்களுக் கும் சவுக்கு அனுப்பியுள்ளது. (நாங்களும் விடமாட்டோமுல்ல"

Subramnian swamy should introduce Savukku to national scene. Subbu is a great whistle blowere and subbu savukku combination will keep Jaya and Karuna in check.

By the by please write an article on assets of DMK ministers which increased over 750 times in one case
Quote
 
 
+6 #14 முத்து 2011-03-24 15:32
இந்த ஜாபர் கைப்புள்ளைய இன்னுமா காருண்ய திலகம் கருணாநிதியும் அவர்கள் குடும்பம் நம்புது.
சிபிஐ ரெய்டு வாராதுன்னு சொன்னது இந்த கைப்புள்ளதான்
ராசாவை கைது செய்யமாட்டாங்கன ்னு சொன்னதும் இந்த கைப்புள்ளதான்
அறிவாலயம் பக்கம் சிபிஐ வரவே முடியாதுன்னு சொன்னதும் இந்த கைப்புள்ளதான்
அப்புறம், என்னை தேர்தல் கமிஷன் தமிழ்நாட்டு சட்டம்-ஒழுங்கை பத்தி கேட்டு என்னை கவர்னராக்க முடிவு செஞ்சிருக்குன்ன ு சொல்லிட்டு போய், கைப்புள்ளை டெல்லியில குனிய வச்சி குமறி எடுத்திருக்காங் க...
அட போங்க பாஸூ.... இந்த கைப்புள்ள டீம் போய் கனிமொழியை காப்பாத்திடுமா.
Quote
 
 
+7 #13 ஜேம்ஸ் 2011-03-24 15:24
சவுக்கின் அயரா உழைப்பிர்க்கு என் வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்.
நாலா பக்கமும் சுழலட்டும் உன் சவுக்கு. அநீதியை சுட்டெரிக்க வாழ்த்துக்கள்.
Quote
 
 
-2 #12 Abdul Rahman - Dubai 2011-03-24 14:51
சாமீயோவ்... காடை கவுதாரி வாங்கிக்கோ சாமீ... சுத்தமான மலை தேனு வாங்கிக்கோ சாமீ... மயில் காலு தைலம் வாங்கிக்கோ சாமீ.... புலி நகம் செயினு வாங்கிக்கோ சாமீ... உனக்கு வேற ஏதாச்சும் வேணும்னா எனக்கு ஒரு ஈ-மெயிலு அனுப்பு சாமீ... மத்த மத்த விவரங்களுக்கு என்னோட FACE-BOOK பாரு சாமீ.... இன்னா சாமீ இப்புடி பாக்குறே? இது நம்ம தலீவரு குடுத்தது சாமீ...
Quote
 
 
+7 #11 jaya 2011-03-24 14:23
இவர்கள் எல்லாம் என்ன தைரியத்தில் இப்படியெல்லாம் செய்கிறார்கள் . சு. சுவாமி தலையிட்டால் பார்ப்பான் என்கிறார்கள் . ஆண்டவன் இருக்கிறன இல்லையா என்பது மே 13 க்கு பிறகு தெரிந்துவிடும்.
Quote
 
 
+1 #10 thanavel 2011-03-24 14:14
savukku is ready for blackships
Quote
 
 
+16 #9 Suresh Raja 2011-03-24 14:03
கடைசி ரெண்டு வரிய படிக்கிறதுக்கு முன்னாடி என்னடா பதிவு பொசுக்குனு முடிஞ்சு போச்சுன்னு நெனச்சேன்... படிச்ச பிறகு, அப்பாடா என்ன ஒரு நிம்மதி (என்ன ஒரு வில்லத்தனம்!) :)
கலக்கு சவுக்கு...
Quote
 
 
+12 #8 Abdul Rahman - Dubai 2011-03-24 13:56
இந்த பதிவை படிக்கும்போது, கிரிக்கெட் மேட்ச் பார்ப்பது போல இருந்தது.

ஆட்டம் சொதப்பாலாகி தோல்வி நிச்சயம் என்றும், இருக்கும் கடைசி ஒரு பந்தில் 'பௌன்ட்ரி' போட்டால் மட்டுமே வெற்றி என்று இருக்கும் நிலையில், சவுக்கு அந்த கடைசி ஒரு பந்தை *சிக்ஸர்* போட்டது மாதிரி, நாங்களும் "விடமாட்டோமுல்ல… " என்று அடித்து விளையாடுவது படு சூப்பர்....!!!!

நன்றி + வாழ்த்துக்கள் சவுக்கு!!!!
Quote
 
 
+5 #7 நாய் சேகர் 2011-03-24 13:54
Favorable for DMK: தமிழ நாடு மக்களின் அரியாமை, இலவசன்களின் மீதான மோகம், தேர்தல் தில்லு முல்லு, பண பலம், அடியாட்களின் பலம், வாக்குக்கு பணம், அரசு ஊழியர்களின் ஆதரவு, காங்கிரசு கூட்டணி, vaiko not in the race, JJ aanavam, sasikala's influence etc

இது தவிர சில நல்ல திட்டகஙகள் 108 ஆம்புலன்சு தி மு க எதிரானவை: ஸ்பெக்ட்ரம் ஊழல், குடும்ப ஊழல், சட்டம் ஒழுஙகு, கட்டப்பஞாயத்து, ரவுடிகளின் ராஜ்யம், ஊழலோ ஊழல் எங்கும் ஊழல், சொத்து குவிப்பு, கொடுகோலாடசி, நாதாரி தனமான போக்கு, எதிர் கட்சிகளின் கூட்டணி, மக்களின் வெறுப்பு, விலைவாசி, மின்சார தட்டுபாடு, இலவசஙகலால் விவசாய வேலைக்கு ஆட்கலின்மை, குடும்ப பிரச்சினை, மஞ்சதுண்டின் கேவலமான பேச்சு, கூட்டணிக்குள் நிலவும் குழிபரிப்பு , ந்ம்பாமை

Results forecast:
அ தி மு க : 115
தே தி மு க : 29
கமயூனிஸ்ட் : 11
இதர : 4

தி மு க : 51
காங்கிரஸ் : 11
கொ மு க : 5
பா ம க : 5
வி சி : 2

சுயேச்சய்கள் : Rest of the seats
Quote
 
 
+7 #6 Arif 2011-03-24 13:42
somebody should move supreme court for arresting Kanimozhi and Dayalu.Talk of silence partners Non sense as they are beneficiaries.Now a days even the wives of corrupt officials are arrested as the get bene fit.The family looted worse than what history has told.
Quote
 
 
+8 #5 shanmuganathan v 2011-03-24 13:30
savukku nee yaru summma gilli illla!!!!!!!!!! !!!!!!!!!!!!!
Quote
 
 
+8 #4 bmwsiva 2011-03-24 13:23
இப்பவே கண்னகட்டுதே..!
Quote
 
 
+13 #3 KK 2011-03-24 13:16
I am happy that Savukku is taking it up with Subramanian Swamy and Prashant Bhushan. This is sure to produce good results
Please keep us updated

KK
Quote
 
 
+12 #2 சைதை அஜீஸ் 2011-03-24 13:13
thats the spirit...keep it up savukku
Quote
 
 
+28 #1 sakthy 2011-03-24 13:13
நாமும் படித்து விட்டு தூங்கமாட்டோமுல் ல. தெரிந்தவர்களுக் கு சொல்வோமுல்ல. சவுக்குக்கு துணையாக இருப்போமுல்ல.
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 121 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday5916
mod_vvisit_counterYesterday11112
mod_vvisit_counterThis week27115
mod_vvisit_counterLast week80132
mod_vvisit_counterThis month229847
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12751966