முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
இன்னுமா உன்ன இந்த ஊரு நம்புது ஜாபர் ? அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 14
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
வெள்ளிக்கிழமை, 25 மார்ச் 2011 23:10

 

 

கடந்த திங்கட்கிழமை பத்திரிக்கையாளர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மத்தியில் திடீர் பரபரப்பு......  ஜாபர் சேட்டை தலைமைத் தேர்தல் ஆணையம் சம்மன் அனுப்பி அழைததிருக்கிறது என்று....   இந்தச் செய்தி பத்திரிக்கையாளர்கள் பலருக்கு சவுக்கால் சொல்லப் பட்டவுடன், ஜாபர் சேட்டையே தொடர்பு கொண்டு கேட்டார்கள்.   உடனே ஜாபர் சேட்டுக்கு, "திருடனுக்கு தேள் கொட்டியது போல்" ஆனது.....  (இந்தப் பழமொழி இவருக்கென்றே உருவானது போலில்லை ?  )  இதையடுத்து டேமேஜ் கண்ட்ரோலில் இறங்கினார் ஜாபர் சேட்.

 

தமிழகத்தில் தினத்தந்தி என்பது, அரசு கெஜட் போல.....  தினத்தந்தியில் செய்தி வந்தால், அதை மறுத்துப் பேச ஆளே கிடையாது.  அந்த அளவுக்கு ஒரு சக்தி வாய்ந்த ஊடகம், தினத்தந்தி.  உயர் உயர் அதிகாரிகள் தகவல் சொன்னால் மட்டுமே தினத்தந்தியில் செய்தி வரும்.  சில சமயங்களில், தேவைப்பட்டால், கருணாநிதியிடமே தகவல் கேட்டு வெளியிடும் அளவுக்கு ஒரு வலிமையான ஊடகம் தினத்தந்தி.  ஜாபர் உடனடியாக என்ன செய்கிறார், தினத்தந்தியில் செய்தி வந்தால், ஊர் வாயை அடைத்தாற் போல் ஆகி விடும் என்று, தினத்தந்தி நிருபரிடம், ஒரு தகவலை கூறுகிறார். அந்த செய்தி, முதல் பக்கத்தில் வருமாறும் கேட்டுக் கொள்கிறார்.  தேர்தல் ஆணையம் ஜாபரை வரவழைத்தது, ஜாபர் டவுசரை கழற்றுவதற்காக.  ஆனால், ஜாபர், தந்தி நிருபரிடம், சட்டம் ஒழுங்கு விவாதம் நடத்துவதற்காக அழைத்திருக்கிறார்கள் என்று போட்டாரே ஒரு போடு.    சட்டம் ஒழுங்குக்கென்று, தனியாக ஒரு கூடுதல் டிஜிபி இருக்கும் போது, உளவுத் துறையைச் சேர்ந்த ஜாபரை எதற்காக அழைக்க வேண்டும் ? ஜாபர் என்ன அவ்ளோ பெரிய தில்லாலங்கடியா ?  இந்த ஆள் ஒரு டம்மி பீஸு என்பது சவுக்கு வாசகர்களுக்கு நன்கு தெரியும்.  ஆனால் இப்படி ஒரு பில்டப்பை கொடுத்தார் ஜாபர்.  'கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு' என்பார்கள்.  ஜாபரின் புளுகு, எட்டு மணி நேரம் கூட தாங்கவில்லை.    

IMG_0006

டெல்லி சென்று தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்தித்தவுடனேயே, ஜாபருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.   ஜாபரை அமரவைத்து, சராமாரியாக கேள்விகளால் துளைத்து எடுத்தார்கள்.   சவுக்கும் தன் பங்குக்கு, அன்று காலை 6 மணிக்கு, தலைமை தேர்தல் ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகளிடம், ஜாபர் பற்றிய புகாரையும், ஆதாரங்களையும், மின்னஞ்சல் மூலமாக அனுப்பி வைத்தது.   4 மணி நேரம்.  பின்னு பின்னென்று பின்னியிருக்கிறார்கள்.   முதலில் ஜிம்பிய ஜாபர் சேட், பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் திணறியுள்ளார்.   பிறகு, குழப்பி ஒரு வழியாக சமாளித்து, முடித்த போது, தேர்தல் ஆணையர்கள் ஜாபரை வெளியே அனுப்பி காத்திருக்கச் சொல்லி விட்டு, தங்களுக்குள் விவாதித்திருக்கிறார்கள்.  சிறிது நேரம் கழித்து ஜாபரை அழைத்த, தேர்தல் ஆணையர்கள், உங்களை மேற்கு வங்கத்திற்கு பாதுகாப்பு அதிகாரியாக நியமிக்க முடிவெடுத்திருக்கிறோம் என்று கூறுகிறார்கள்.   அதிர்ந்து போன ஜாபர் சேட், (மம்தா பேனர்ஜி போனையெல்லாம் ஒட்டுக் கேட்டா பின்னிடுவாங்க ஜாபர்)   தனது விருப்பமின்மையை தெரிவித்திருக்கிறார்.  இதில் உங்கள் விருப்பம் என்று எதுவும் இல்லை.  இது உத்தரவு, இதை மதிக்காவிட்டால், கடும் விளைவுகள் ஏற்படும் என்பதை மூத்த போலீஸ் அதிகாரியான உங்களுக்கு சொல்ல வேண்டியதில்லை என்று கூறியிருக்கிறார்கள்.  

 

இறுகிய முகத்துடன் வெளியே வந்த ஜாபர் சேட், அன்று டெல்லியிலேயே தங்கி, டெல்லியில் தனக்குத் தெரிந்த நண்பர்கள் அனைவரையும் சந்தித்து, இந்த உத்தரவை ரத்து செய்யுமாறு கேட்டிருக்கிறார். அனைவரும் உதவி செய்ய இயலாது என்று தெரிவித்திருக்கிறார்கள்.  ஒரு சிலர், மூடிக்கிட்டு, வெஸ்ட் பெங்கால் போ என்றும் சொல்லியிருக்கிறாக்கிறார்கள். மறுநாள் முழுவதும் டெல்லியில் தனது பகீரத முயற்சிகள் எதுவுமே வெற்றி பெறாததால், அன்று மாலை சென்னை திரும்பினார் ஜாபர். திரும்பி வந்ததும், யாருடனும் பேசவேயில்லை. மிகுந்த கோபமாயிருக்கிறார்.  இதற்குள், ஜாபர் மேற்கு வங்கம் செல்லும் தகவல் பரவியது.    பத்திரிக்கைகளை அழைத்து,   முதல் நாள் தந்தியில் பொய்ச் செய்தி வரவைத்தது போல, வரவைக்கக் கூட ஜாபரால் முடியவில்லை.   அமைதியாக இருந்திருக்கிறார்.

 

இதற்குள் தினத்தந்திக்காரர்கள், உஷாராகி விட்டனர்.  தன் மீது நடக்க இருக்கும் விசாரணையை மறைத்து, ஜாபர், பொய்ச்செய்தி வெளியிட வைத்ததாக கோபம் கொண்டனர்.   உண்மை என்ன என்று விசாரித்து எழுதுவோம் என்று விசாரித்து, நடந்த உண்மைகளை அப்படியே எழுதுகிறார்கள்.  


IMG_0008

IMG_0020


பூனைக்குட்டி வெளியே வந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார் ஜாபர் சேட்.    மறு நாள் காலை கருணாநிதியைச் சந்தித்தார் ஜாபர்.  கருணாநிதிக்கு ஜாபர் மீது கடும் கோபம் இருந்தாலும், தன்னையும் தன் குடும்பத்தையும் பற்றிய பல்வேறு தகவல்களை தெரிந்து வைத்துள்ள ஜாபர் சேட்டை விலக்கி வைத்தால் அதுவே பெரும் ஆபத்தாக முடியும் என்ப உணர்ந்து, கோர்ட்டுல கேஸ் போடுய்யா என்று கூறுகிறார்.

 

IMG_0023

 

 

இந்த செய்தியை எழுதிய செய்தியாளர் ஜாபரிடம் கருத்து கேட்ட போது, நான் திங்கட் கிழமை தேர்தல் ஆணையத்திற்கு சென்ற போது, என்னை வியாழனன்று வருமாறு ஒரு கடிதத்தை கொடுத்தனர்.  அந்தக் கடிதத்தின் படி நான் வியாழனன்று தேர்தல் ஆணையம் சென்றேன்.   அவர்கள் அந்தக் கடிதத்தை திரும்பப் பெற்றுக் கொண்டனர்.  நான் என் அலுவலகத்தில் தான் அமர்ந்திருக்கிறேன்.  கட்டாய விடுப்பில் செல்லும் திட்டமில்லை.  மேலும், தேர்தல் சமயத்தில் ஒரு அதிகாரி விடுப்பில் செல்லக் கூடாது என்று எங்கும் சொல்லவில்லையே ? என்று கூறியிருக்கிறார்.

 

ஜாபரு.... இதெல்லாம் ஒனக்கே ஓவரா தெர்ல ?   எலெக்ஷன் கமிஷன் லெட்டர் குடுத்தாங்களாம்.  இவரு அங்க போனாராம்..... அந்த லெட்டர திருப்பி வாங்கிக்கினாங்களாம்.  என்னாய்யா கலர் கலரா ரீல் உட்ற... ஜாபரை தேர்தல் ஆணையம் சம்மன் அனுப்பிய வரவழைத்தது.   அந்த சம்மனை திருப்பியெல்லாம் வாங்கவில்லை.  எதற்காக சம்மனை திருப்பி வாங்க வேண்டும் ?  சிம்பிளா சொன்னா லூசுத்தனமா இருக்கு ஜாபர்.....  இன்னைக்கு தேர்தல் ஆணையத்துக்கிட்டேர்ந்து தப்பிச்சுடலாம்னு மனப்பால் குடிக்கிறீங்களே.....   அமலாக்கப் பிரிவு விசாரணைன்னு ஒன்னு இருக்கே... அதுலேர்ந்து எப்படி தப்பிக்கப் போறீங்க....

வண்டி ஒரு நாள் ஓடத்தில் ஏறும், ஓடம் ஒரு நாள் வண்டியில் ஏறும் ஜாபர்.   இப்டியே.... நாம தர்பார் நடத்திக்கிட்டு இருக்கலாம்.   திருப்பி திமுக ஆட்சி வந்துடும்.  நம்பள யாரும் அசைக்க முடியாதுன்னு என்னா

ஜாபர் ஒனக்கு அப்டி ஒரு நம்பிக்கை... ?

தேர்தல் ஆணையம் ஜாபர் சேட்டின் விடுப்பு விண்ணப்பத்தின் மீது நடவடிக்கை எடுக்காமல் தாமதித்து வருவது குறித்து இன்றைய டெக்கான் க்ரானிக்கிள் நாளிதழில் முதல் பக்கத்தில் செய்தி வந்திருக்கிறது.

 

26_03_2011_001_036

 

தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திற்கு சோனியாவும், ராகுலும் வருகை தருகையில் தீவிரவாதிகள் தாக்க இருப்பதாக உளவுப் பிரிவுக்கு தகவல் வந்திருக்கிறது.  நான் மாற்றப் பட்டால், ராஜீவ் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தின் போது படுகொலை செய்யப் பட்டது போல, ஏதாவது நிகழலாம், நிகழ்ந்தால் நான்தான் அதற்கு பொறுப்பாக வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் ஜாபர் தெரிவித்ததாக செய்தி வந்திருக்கிறது. அப்டி ஏதாவது நடந்தா, உன்ன எப்டி கேப்பாங்க ?  உன்னத்தான் வெஸ்ட் பெங்காலுக்கு போன்னு அனுப்பிட்டாங்களே... ?  கம்முனு மூடிக்கிட்டு போக வேண்டியதுதானே... ?   யாரு உன்ன கேக்கப் போறா ?  ஓவரா பில்டப் குடுக்குறியே ஜாபர்... இது இல்லாம, இந்த டெர்ரர் அலர்ட்டெல்லாம் எப்படி உருவாகுதுன்னு எங்களுக்கும் தெரியும் பாஸு... மத்திய உளவுத்துறை எப்போதும் அனுப்பும் அலர்ட் தான் அது.  சோனியாவும் ராகுலும், இஸட் பிரிவு பாதுகாப்பு வளையத்தில் இருப்பதால், அவர்கள் எப்போது ஒரு மாநிலத்துக்கு சென்றாலும், அந்த மாநிலத்துக்கு டெர்ரர் அலர்ட் அனுப்புவது வழக்கமே.   புதிதாக, ரகசிய தகவல் ஏதாவது வந்தால், அதை சிறப்பு தகவலாக நேரடியாக மத்திய உளவுத்துறை அதிகாரிகள் மாநில உளவுத்துறையிடம் அளித்து விட்டு, உடனடியாக அந்த தகவலில் உள்ளவற்றை விசாரிப்பதற்கான ஏற்பாடுகளை செய்வார்கள்.

சொம்மா பீலாவா உட்டுனுக்கீறியே நைனா ?

ஞாபம் இருக்கிறதா ஜாபர்... ஒரு காலத்தில், ஜுனியர் விகடன் பத்திரிக்கையில் நான் என்ன நினைத்தாலும், அதை செய்தியாக வரவைப்பேன் என்று இறுமாப்போடு திரிந்தாயே ஜாபர்......  உனக்கு பிடிக்காத ஏகே.விஸ்வநாதன் என்ற அதிகாரி, அவரது ஆடிட்டரிடம், வருமான வரி கணக்குக்காக கொடுத்திருந்த ஆவணங்களை எடுத்து, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தாரா விஸ்வநாதன் என்று ஜுனியர் விகடனில் உனது அடிமை இரா.சரவணனை வைத்து செய்தி வர வைத்தாயே ஞாபகம் இருக்கிறதா ஜாபர். ?    பிறகு அந்த அதிகாரி, இது நானே, ஆடிட்டரிடம் கொடுத்த ஆவணங்கள்.  வருமான வரி கட்டுவதற்காக கொடுத்த ஆவணங்களை எப்படி ஊழல் சொத்து ஆவணங்கள் என்று செய்தி போடுகிறீர்கள் என்று கேள்வி எழுப்பிய பிறகு, உனது அடிமை, அந்தச் செய்திக்கு அப்படியே அந்தர் பல்டி அடித்து மறுப்பு செய்தி போட்டது ஞாபகம் இருக்கிறதா ஜாபர்.... ?

 

விகடன் நிறுவனத்தில் எனக்குத் தெரியாமல் எதுவுமே நடக்காது என்று இறுமாப்போடு திரிந்தாயே ஜாபர்...   விகடனின் எம்.டி., தொலைபேசியில் என்ன பேசுகிறார் என்பதை ஒட்டுக்கேட்டு, அதன் மூலம்,  விகடன் நிறுவனத்தையே விலைக்கு வாங்கி விட்டது போல இறுமாந்து இருந்தாயே ஜாபர்...... இன்று அதே ஜுனியர் விகடனில் உன்னைப் பற்றி அட்டைப் பட செய்தி வந்திருக்கிறது ஜாபர்.  தலைப்பு என்ன தெரியுமா ? "விடுமுறையில் போகிறாரா வீழ்த்தப் பட்ட ஜாபர் சேட் ?"  இதை எழுதியது யார் தெரியுமா ஜாபர்.... உனது அடிமை இரா.சரவணன் தான்.  

 large_wrapper

__Page_1

__Page_2

ஜுனியர் விகடனின் கவர் ஸ்டோரிக்காக, சென்னை நகரம் முழுக்க போஸ்டர்கள் அடித்து ஒட்டியிருக்கிறார்கள் ஜாபர்.   நீ கேவலமாக நடத்தி மரியாதை இல்லாமல் பேசுவாயே..... காவலர்களும், தலைமைக் காவலர்களும்.  அவர்கள் அத்தனை பேரும் படிப்பார்கள் ஜாபர்.....  விகடன் இணைய தளத்திலும் கிடைப்பதால், நீ தமிழ் தெரிந்த அணங்கோடு "சட்டம் ஓழுங்கு" விவாதம் நடத்தியிருந்தால், அந்த அணங்கும் இதைப் படிக்கும் ஜாபர்.   பர்வீன் அண்ணியும் படிப்பார்கள் ஜாபர்.   கல்லுரியில் உள்ள உனது மகளும் படிப்பார் ஜாபர்.  கல்லூரியில் உன் மகளின் நண்பர்கள் இதைப் படித்து விட்டு " என்னடி... உங்க டாடியப் பத்தி இவ்ளோ கேவலமா வந்துருக்கு ? உங்க டாடி ஒட்டுக் கேப்பாரா டி... -? " என்று உன் மகளைக் கேட்பார்களே ஜாபர்... கேட்பார்களே.... இதை நினைக்கும் போது சவுக்காலேயே தாங்க முடியவில்லையே.... இதை நீ எப்படி ஜாபர் தாங்கப் போகிறாய் ?  எப்படி தாங்கப் போகிறாய் ?

 

சாதிக்போல முடிவெடுக்க அந்த அளவுக்கு உனக்கு மான ரோஷமெல்லாம் இல்லை என்பது நன்கு தெரிந்தாலும், இத்தனை நாளா தாயா புள்ளையா பழகுன பாசத்துல சவுக்கு உனக்கு சொல்லும் அட்வைஸ்... மனமுடைந்து சாதிக் போல முடிவெடுத்து விடாதே ஜாபர்.... முடிவெடுத்து விடாதே....  சவுக்கால் அதைத் தாங்கவே முடியாது.

 

Comments  

 
-1 #37 K Raman 2011-03-28 14:53
Quoting சவுக்கு:
Dear brother Raman.... I understand your feelings. Jaffer is targeted not because he has done something against me. He is a threat to the democracy. He is a threat to Tamil Nadu. He is a threat to our fundamental rights. DMK and Karunanidhi are in this mess, only because of him. He is more evil, than you all can imagine. He is a VIRUS which has to be thoroughly destroyed. In fact, I view what you say in a different manner. If Jaffer is defeated, DMK is defeated.


Dear Savukku Sir : I fully appreciate and respect your sentiments. I used to work for a State Governments joint venture 3/4 years ago. And I have to admit that I am not at all surprised by the behaviour of Jafer Sait. Thats the way IAS and IPS guys behave. This character Jangid used to harass us because he wantted one ac to be fitted in his house which we refused...they are so cheap...but savukku, more than jaffer, i am really appalled and shocked by the conduct of two IAS officers whom i used to respect- Gnandesikan and Malathi!

I am yet so shocked that i cant believe that all this fraud can be conducted under her...i had the oppurtunity of interacting with her occassionally and now i am unable to rreconcile that behind that sincere person, there was this monster...how can she do this when she is suffering so much on health grounds...she can just retire in grace!

I am so sick of these officers that I have moved abroad now and live in UK...
Quote
 
 
+2 #36 ANBU 2011-03-27 18:58
சவுக்கு அண்ணா! பின்னீட்டீங்க... வாழ்த்துக்கள்...
Quote
 
 
+1 #35 devil 2011-03-27 14:51
jaffer ungaluku naan munadiyae solirukaen, jailuku pora offer pragasama irukunu
Quote
 
 
+2 #34 kvtd 2011-03-27 14:18
இந்த திறமையான அதிகாரி ஜாபர் மாற்றப்பட்டால், தேர்தல் கமிஷனை கண்டித்து தமிழ்நாட்டில் இருக்கும் ஒரு லட்சத்து 76 ஆயிரத்து காவலர்கள் தங்கள் பணியை ராஜினாமா செய்ய இருப்பதாக, மத்திய உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது! உன்னோட நிலைமை எப்படி இருக்குதேட, தையவு செஞ்சு தற்கொலை செஞ்சுடாத, உன்ன வெச்சு நிறைய காமடி படம் எடுக்க வேண்டும். மவனே பெங்கால போய் ஒட்டு கேட்ட உன்ன தொலச்சுருவங்க, ஓகே வா சமத்து, இனி போய் கருணாநிதியோட கால புடி, தேர்தல் வேலை எதாவது கொடுப்பார், இந்த பொளப்புக்கு போய் சாகுடா,ஐயோ! ஐயோ!
சேட்டூ..........ஆடி அடங்கும் வாழ்க்கையடா அதுக்குள்ள ஏந்தான் துள்ளுறியோ.மேற்கு வங்கத்து ஆளுங்க நம்மளை மாதிரியெல்லாம் கிடையாது. மொரட்டுப் பசங்க. இந்த "டாபர் சேட்" அங்கே போயி ஒட்டுக் கேட்டா, "முன்னாடி நீட்டிக் கொண்டு இருக்கிறதை" ஒட்ட வெட்டிப்புடுவான ுங்க. அட... நீட்டிக் கொண்டு என்று நான் சொல்வது மூக்கைத்தான். நீங்களா ஏதாச்சும் கற்பனை செய்தால் நான் என்ன பண்ணுவது?? expression of the police staffs grievances to this savukku web this is lesson to other high police officials
Quote
 
 
-1 #33 chembai 2011-03-27 13:39
hi

jaffer never commit suicide. If possible he ll eliminate all the persons with whom he is enjoying his power.

Good fiction.... :lol:
Quote
 
 
+6 #32 கணேஷ் குமார். 2011-03-27 06:39
சாதிக் மாதிரி முடிவா? அது என்னங்க? அவரு எங்கே முடிவெடுத்தாரு? சாதிக்கின் முடிவினை வேறு யாரோ இல்ல எடுத்தாங்க?

அய்யோ ஹய்யோ....!
Quote
 
 
+3 #31 ம.பொன்ராஜ் 2011-03-27 02:01
Quoting சைதை அஜீஸ்:
ஐயோ ஐயோ
யாரோ ஒரு வாசகர் சொன்னார்..."எழவு வீட்டில் வெட்டியான்தான் சந்தோஷப்படுவான் "... என்று.

அனால் இப்போதோ, எழவு விழுவதற்கு முன்பே சந்தோஷம் அடைகிறது. எழவு விழவேண்டும் என்று பிரார்த்திக்கிற து.

தெய்வம் நின்று கொல்லும்

நண்பர் சைதை 'தமிழரசி'....ச்சீ....அஜீஸ் அவர்களே...
ஜாபர் என்ற ஒற்றை எழவை பத்தி நீலிக் கண்ணீர் வடிக்கும் நீங்கள், ஜாபறினால் விழுந்த,விழுகின ்ற,விழப் போகும் எழவுகளை சுட்டிக் காட்டும் சவுக்கு உங்களுக்கு வேட்டியானாகத் தெரிகிறது? அப்படியானால் உங்கள் பார்வையில் 'தூக்கு தண்டனை' தீர்ப்பெழுதி பேனா முனையை உடைக்கும் அத்துணை நீதிபதிகளும் 'வெட்டியான்களா?' நல்லாவே கிச்சு கிச்சு மூட்டுறீங்க பாஸு :D :D :D .... நீங்கள் நினைப்பது போல 'ஜாபர்' செத்தால் 'சவுக்குக்கு' 170000 கோடி பணம் (அதாவது வெட்டியானின் சிதை கூலி) கிடைக்கும் என்பது உண்மை தான் :lol: . அப்படி ஒன்று நடக்கட்டும் அப்போது உங்களுடன் சேர்ந்து நானும் சொல்வேன் 'சவுக்கு' ஒரு வெட்டியான் என்று...! :P
Quote
 
 
+1 #30 ம.பொன்ராஜ் 2011-03-27 01:09
தேர்தல் ஆணையம் 'ஜாபரிடம்' என்ன சொல்லியிருக்கும ்? ஒரு கற்பனை.:
"யோவ்.... உளவுத்துறை அளவுக்கு நீ ஒர்த் இல்ல ஜாபர்... மொக்கை நீயுசை சொல்லி உன்னை நம்புன கெழடு கட்டைகளை டயர்டாக்கினது போதும்....இனிமேலும் 'நான் தான் தாதா'ன்னு வாடகை சைக்கிளை எடுத்துகிட்டு ஊரு ஊரா போய் தம்பட்டம் அடிப்பியே..அதை நிறுத்து....அதோட வேலைக்கும் ஒரு முழுக்கு போடு... அப்படி செஞ்சா உனக்கு குச்சி மிட்டாயும், குருவி ரொட்டியும் வாங்கி தரோம்...இல்லைனா தனியா செஸ் விளையாடி ராசாவுக்கு போரடிக்குதாம்...போறியா? அடுத்த 'செக்' உனக்கு தான்...ராசாவுக்கே 'செக்' வச்சுட்டானுங்க... 'ஜோக்கர்'...சாரி 'ஜாபர்' எல்லாம் எம்மாத்திரம்?"
Quote
 
 
+2 #29 பாண்டியன் 2011-03-26 23:44
என்னதான் செய்யப் போறாங்க. தேர்தல் வந்தது. 2ஜிய கைவிடப்போறோம். அடுத்து தேர்தல் முடிஞ்சு மந்திரி சபையில பிசியாயிட்டா இதயும் மறந்திடப்போறோம் . என்ன செய்யறது சொல்லுங்க. உங்கள மாதிரி ஆளுக மாட்டுக்குப் பின்னாடி தார்குச்சி குத்தறமாதிரி குத்தினாக்கூட ஓட்டுக்கூடத்தில நாங்க சரியா குத்தமாட்டோம்

- மகாபொதுஜனம்.
Quote
 
 
+3 #28 சவுக்கு 2011-03-26 23:20
Dear brother Raman.... I understand your feelings. Jaffer is targeted not because he has done something against me. He is a threat to the democracy. He is a threat to Tamil Nadu. He is a threat to our fundamental rights. DMK and Karunanidhi are in this mess, only because of him. He is more evil, than you all can imagine. He is a VIRUS which has to be thoroughly destroyed. In fact, I view what you say in a different manner. If Jaffer is defeated, DMK is defeated.
Quote
 
 
+4 #27 karthi 2011-03-26 22:05
Please change the black web page.We are not able read continuously.
Quote
 
 
+5 #26 Gopik 2011-03-26 22:04
Dear Brother savukku

It all happend because of you...your honest efforts will pay in different different methods...hats off sir...Mr Sait will go to jail because of you...please continue this...if you need any financial help let me know...send me an email...i willl send money everymonth sir..

Thanks
Quote
 
 
0 #25 Yahoo 2011-03-26 19:01
Nice Article
thanks
Quote
 
 
+14 #24 Suresh Raja 2011-03-26 18:26
ஏப்பா சவுக்கு, எதுக்கு இந்த கொலைவெறி? கூத்தர் ஏற்கனவே தேர்தல் கமிசன் வச்ச ஆப்பால உக்காரக்கூட முடியாம இருக்காரு. நீ வேற அமலாக்கப்பிரிவு , விசாரனைனு பீதிய கேளப்பிக்கிட்டு இருக்க! :cry: இத கூத்தர், வடிவேலு ஸ்டைல்ல சொன்னா எப்டி இருக்கும்?
"அங்க வச்சி அடிச்சு காலை ஓடிச்சது பத்தாதுன்னு அட்ரஸ் கேட்டு வீட்டுக்கே வரப்போறானா?? எடுரா வண்டிய.. போடுறா லீவ" :lol:
அப்புறம் சவுக்கோடா ஐடியா எல்லாம் நல்லாத்தான் இருக்கு. விட்டா வீட்டுக்கு போயி பேன்ல கயறுவரைக்கும் கட்டி குடுத்துட்டு வரும் போல.
ஆனா ஒண்ணு, இனிமே கூத்தரால ஓசில ஸ்டார் ஹோட்டல்ல துன்ன முடியாது. பாவம்..
Quote
 
 
+3 #23 K Raman 2011-03-26 18:13
Dear Mr Savukku :

As a brother, I have a suggestion.

You have to overcome your obsession with Jaffer Sait. When you have set your goal as that of seeing the end of Karunanidhi's rule, why are you loosing focus by spending your energy on Jaffer Sait? He may have done bad things to you...But that does not mean that you need to settle scores with him...I understand your feelings..

You know, Mr Savukku, they say, the day you set the goal of your own life to settle scores with your enemy, on that day you loose yourself to the enemy...dont waste your strengths on Jaffer Sait...He is too small a fry...such people will destroy themselves....

Focus your energies on getting rid of Karunanidhi...for that Tamils will be thankful to you...After all this, if you now say your fight was against Jaffer Sait, that is not impressive and there is no need for so many people to visit your website...at the end, it is a personal battle between him and you...and we are not interested in it beyond the issue of public propreity PERIOD...

So brother, take your battle to Karunanidhis level and focus on him...in the process, Jaffer Sait will also be defeated...

Hope you appreciate my comment and my liberty in saying that...i should be of your age only...and i respect you for your courage and strongly believe that this courage of yours should not be used for defeating jaffer sait but for the larger benefit of Tamils...

Best wishes
Quote
 
 
+3 #22 Godless 2011-03-26 17:47
Karunanidhi has furnished wrong details about his assets.he said her wife holds 60 lakh shares of Kalaignar TV.He has put its worth at 6 crore.Then how come he got loans worth 214 crore and paid back interest of 31 crores?Either you have undervalued your asset and lied in your nomination which is quite obvious.So pass this info to traffic Ramaswamy to protest his nomination and prima facie to challenge his eventual win in court.Or if this valuation is correct then he has got 2G money.I rest my case
Quote
 
 
0 #21 JP 2011-03-26 17:28
NICE
Quote
 
 
+9 #20 பாண்டி 2011-03-26 16:00
அடப்பாவிங்களா, நீங்களே தலைவருக்கு வீட்டு மாடிக்கு போய் கதவ நல்லா பூட்டிட்டு கருணாநிதி ரொம்ப ரொம்ப நல்லவர்னு லெட்டர் எழுதி வச்சிட்டு பேன்ல கயித்த மாட்டி தூக்குல தொங்குரதுக்கு ஐடியா குடுத்துருவீங்க போல. ஜாபரின் மரணம் கடுமையான நரக அவஸ்தைக்குப்பிற கே நிகழும்.
Quote
 
 
+6 #19 சரவெடி 2011-03-26 15:29
ஜாபர்
டவசர் எப்போ கலுடும்
Quote
 
 
+5 #18 jaya 2011-03-26 15:22
இன்று, அதிமுக டிக்கட் வேண்டி வருவோரிடம் பணத்தை வாங்கிக் கொண்டு, கோடிகளை குவிப்பவர்கள், நாளை திமுக ஆட்சியில் ஊழல் மன்னன்களாகத் திகழும், ஜாபர் சேட், ராதாகிருஷ்ணன், கண்ணாயிரம் போன்ற அதிகாரிகளிடம் நாளை வசூல் செய்து விட்டு, இவர்களுக்கு நாளை நல்ல பதவிகளை வாங்கிக் கொடுத்து, இவர்கள் மீது எந்த விசாரணையும் வராமல் தடுக்க மாட்டார்கள் என்று என்ன நிச்சயம் ?
AMMAVIDAM KELVI KETKIROM?
Quote
 
 
+6 #17 Force 2011-03-26 13:40
அமெரிக்க நிக்ஜ‌னின்(1972)"வாட்ட‌ர்கேட்" ஊழ‌ல், த‌மிழ‌கத்தின் த‌ற்போதைய‌ "ஜாப‌ர்சேட் ஊழ‌ல். இர‌ண்டும் தொலைபேசி ஒட்டுக் கேட்பு வ‌ழக்குத்தான். அதே முடிவு வ‌ருமா?
Quote
 
 
+24 #16 Abdul Rahman - Dubai 2011-03-26 13:29
மேற்கு வங்கத்து ஆளுங்க நம்மளை மாதிரியெல்லாம் கிடையாது. மொரட்டுப் பசங்க. இந்த "டாபர் சேட்" அங்கே போயி ஒட்டுக் கேட்டா, "முன்னாடி நீட்டிக் கொண்டு இருக்கிறதை" ஒட்ட வெட்டிப்புடுவான ுங்க. அட... நீட்டிக் கொண்டு என்று நான் சொல்வது மூக்கைத்தான். நீங்களா ஏதாச்சும் கற்பனை செய்தால் நான் என்ன பண்ணுவது??
Quote
 
 
0 #15 anandraj 2011-03-26 13:23
Really enjoyed reading this article
Quote
 
 
+12 #14 ஜோசப் 2011-03-26 13:08
இந்த திறமையான அதிகாரி ஜாபர் மாற்றப்பட்டால், தேர்தல் கமிஷனை கண்டித்து தமிழ்நாட்டில் இருக்கும் ஒரு லட்சத்து 46 ஆயிரத்து 809 காவலர்கள்(பெண் காவலர்கள் ஒப்புக் கொள்ளவில்லை) தங்கள் பணியை ராஜினாமா செய்ய இருப்பதாக, மத்திய உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது!
Quote
 
 
+3 #13 சவுக்கின் விசிறி 2011-03-26 13:05
பிரமாதமாக ஜாபரின் முதுகை ஜாபருக்கே காட்டி இருக்கிறீர்கள்.
அதற்கு வாழ்த்துக்கள். அதுவும், தான் இல்லாவிட்டால், தமிழ்நாட்டில் தலைவர்களுக்கு வேறு எந்த அதிகாரியாலும் பாதுகாப்பு தரமுடியாது என்ற ஆணவத்தையும் உரித்து காட்டீவிட்டீர்க ள். ஆனால், சாதிக் போல என்று அவரை நோகடித்தது சரியா சவுக்கு?
Quote
 
 
+1 #12 Force 2011-03-26 12:46
'கோலிய‌த்'தை வீழ்த்திய 'டேவிட்' நின‌வு வ‌ருகிற‌து, ஜாப‌ரின் த‌ற்போதைய‌ நிலைக்கு ச‌வுக்கின் ப‌ணி. அவ‌ரின் வீழ்ச்சிக்கான சாவு ம‌ணி (Death knell) கேட்க‌ துவ‌ங்கி விட்ட‌தா?
Quote
 
 
+1 #11 jaya 2011-03-26 12:38
ரொம்ப நல்லவன் மாதிரி வேஷம் கட்டுறது இந்த ஜாபருக்கு கைவந்த கலை. இவனை போல தான் ஷகீல் அக்தரும்
Quote
 
 
+2 #10 கண்டன் 2011-03-26 12:25
ஐயோ! ஐயோ!
சேட்டூ..........ஆடி அடங்கும் வாழ்க்கையடா அதுக்குள்ள ஏந்தான் துள்ளுறியோ.
Quote
 
 
0 #9 Dharma 2011-03-26 12:21
Nice Article Savuku ....
Quote
 
 
+6 #8 jaya 2011-03-26 12:04
Quoting சைதை அஜீஸ்:
ஐயோ ஐயோ
யாரோ ஒரு வாசகர் சொன்னார்..."எழவு வீட்டில் வெட்டியான்தான் சந்தோஷப்படுவான் "... என்று.

அனால் இப்போதோ, எழவு விழுவதற்கு முன்பே சந்தோஷம் அடைகிறது. எழவு விழவேண்டும் என்று பிரார்த்திக்கிற து.

தெய்வம் நின்று கொல்லும்


jaya quotes
யோவ் சும்மா இருயா.. இப்ப பொய் இழவு விளுகனும் சொல்லிட்டு இருக்க ....எலேச்டின் சமயம் இழவு விழுந்தால் ஒட்டு சிதறி திசை மேரி விடும்... நல்ல பேச்சு பேசு..
Quote
 
 
+1 #7 டவுசர்பாண்டி 2011-03-26 11:55
அடுத்த தூக்கு ரெடியாயிடுச்சு மாமோய்
Quote
 
 
+2 #6 smagesh 2011-03-26 11:49
Savukku !!

What happened to your "Irudhi Por ?!! "
No updates after that ??
Quote
 
 
+5 #5 jaya 2011-03-26 11:39
Quoting Nithi:
YOV SAVUKKU - YARU AVANA SATHIK POLA MUDIVU EDUPAAN ? AVAN KARUNANITHYA ANTHA MUDIVU EDUKA VACHURUVAN PARU......

புளுகுற JAFARKKUEY இவளவு காயம்னா... அடிபட்டவன் உயிரோடு இருப்பன்றே?
Quote
 
 
-16 #4 சைதை அஜீஸ் 2011-03-26 10:34
ஐயோ ஐயோ
யாரோ ஒரு வாசகர் சொன்னார்..."எழவு வீட்டில் வெட்டியான்தான் சந்தோஷப்படுவான் "... என்று.

அனால் இப்போதோ, எழவு விழுவதற்கு முன்பே சந்தோஷம் அடைகிறது. எழவு விழவேண்டும் என்று பிரார்த்திக்கிற து.

தெய்வம் நின்று கொல்லும்
Quote
 
 
+23 #3 செந்தில்குமார் 2011-03-26 10:21
ஐயோ ஜபார் சேட்டு,

உன்னோட நிலைமை எப்படி இருக்குதேட, தையவு செஞ்சு தற்கொலை செஞ்சுடாத, உன்ன வெச்சு நிறைய காமடி படம் எடுக்க வேண்டும். மவனே பெங்கால போய் ஒட்டு கேட்ட உன்ன தொலச்சுருவங்க, ஓகே வா சமத்து, இனி போய் கருணாநிதியோட கால புடி, தேர்தல் வேலை எதாவது கொடுப்பார், இந்த பொளப்புக்கு போய் சாகுடா, :lol: :-) ;-) 8) :-| :-*
Quote
 
 
+16 #2 jaya 2011-03-26 10:05
எப்ப இந்த ஜபார் மேட்டர் இ நீ விட போகிறாயோ தெரியவில்லை இவன் தான் மோசமான ஆளுன்னு எல்லோருக்கும் தெரியுமே. நீ ஏன் இவனஐக்கெல்லாம் போய் டைம் வேஸ்ட் பண்ணுகிறாய்? இன்னும் நிறைய மேட்டர் கள் இருக்குப்பா . சோ இந்த பன்னாடை பயலுக்கு போய் ஒரு பேஜ் ௨ பேஜ் எழுதி டைம் வேஸ்ட் பண்ணாதே
Quote
 
 
+10 #1 Nithi 2011-03-26 10:01
YOV SAVUKKU - YARU AVANA SATHIK POLA MUDIVU EDUPAAN ? AVAN KARUNANITHYA ANTHA MUDIVU EDUKA VACHURUVAN PARU......
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 83 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday4133
mod_vvisit_counterYesterday9391
mod_vvisit_counterThis week72689
mod_vvisit_counterLast week78861
mod_vvisit_counterThis month285508
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12807627