முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
திமுக: திருடர்களின் முன்னோடி கருணாநிதி அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 25
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
ஞாயிற்றுக்கிழமை, 27 மார்ச் 2011 08:09

கருணாநிதி….. இந்தக் கருணாநிதி எப்படியெல்லாம் ஊழல் செய்தார் என்பதை, திமுக ஆட்சியைப் பற்றி விரிவாக விவாதித்து விசாரணை நடத்திய நீதிபதி சர்க்காரியா தெளிவாக சொல்லியிருக்கிறார்.

இன்று கருணாநிதி தேர்தல் அதிகாரி முன்பு தாக்கல் செய்துள்ள, ஆவணங்களின் படி அவர் மனைவியின் சொத்துக்களோடு சேர்த்து, மொத்த மதிப்பு 41 கோடி. இந்தச் சொத்துக்களில், இவரின், மொரீஷியஸ் தீவின் மொத்த ஜனத்தொகை அளவு உள்ள, இவரது குடும்ப உறுப்பினர்களின் சொத்து சேராது. இவர், மனைவி தயாளு, துணைவி ராசாத்தியின் சொத்துக்கள் மட்டும் 41 கோடி…. இந்த 41 கோடியும் எப்படி வந்தது என்பது அனைவருக்கும் தெரியும். கருணாநிதி, மேடை மேடையாகப் பேசி, தமிழ்நாட்டைக் குட்டிச்சுவராக்கியதைத் தவிர வேறு எந்த தொழிலும், வேலையும் செய்யவில்லை என்பது நம் அனைவருக்கும் தெரியும். இன்று 41 கோடிக்கு அதிபதியாக இருக்கும் கருணாநிதி தன் வாழ்வை எப்படித் தொடங்கினார் தெரியுமா ? அவர் நெஞ்சுக்கு நீதியில் எழுதியதை பார்ப்போம்.

“குடியரசு துணை ஆசிரியனாக இரு என்று பெரியார் பணித்ததோடு மட்டுமல்லாமல், அந்த இதழில் என்னைக் கட்டுரைகள் எழுத அனுமதித்து அதைப் படித்து மகிழ்ந்தார். எனக்கு மாதம் நாற்பது ரூபாய் சம்பளம், அதில் பிற்பகலும் இரவும் பெரியார் வீட்டில் சாப்பிடுவதற்காக இருபது ரூபாய் பிடித்துக் கொள்வார்கள். காலைச் சிற்றுண்டி, மாலைச் சிற்றுண்டிக்கு மாதம் பத்து ரூபாய் ஆகி விடும். இதரச் செலவுகள் ஐந்து ரூபாய். மீதம் ஐந்து ரூபாயை என்னை அண்டி வந்த அருமை மனைவுக்கு பத்மாவிற்கு மாதந்தோறும் திருவாரூருக்கு மணியார்டர் செய்து வந்தேன்.”

“என் திருமணச் செலவுக்காக நான் எழுதிய தூக்கு மேடை நாடகத்தை அண்ண அவர்கள் தலைமையில் திருச்சியில் நடத்தினேன். நானே நடத்தேன். யாரிடமும் நாடகத்திற்காக நன்கொடை வசூலிக்கவில்லை.   நாடகத்தில் மிச்சப் பட்ட தொகை எண்ணூறு ரூபாய்.”

“என்னிடமிருந்த மணிப்பர்ஸை கண்ணதாசனிடம் கொடுத்து சேலத்திற்கு இரண்டு டிக்கட் வாங்கக் சொன்னேற். டிக்கட் வாங்கிக் கொண்டு, கண்ணதாசன் மணிப்பர்சை என்னிடம் கொடுத்தார். என்னய்யா பர்ஸ் காலியாக இருக்கிறதே என்று கேட்டேன். இரண்டாம் வகுப்பு டிக்கட்டுக்கு உமது பணம் சரியாக இருந்தது என்று கூறினார்.   ஐயையோ உம்மை யார் இரண்டாம் வகுப்பு டிக்கட் வாங்கச் சொன்னது… மூன்றாம் வகுப்பு போதாதா என்று நான் சலித்துக் கொண்டேன்.”

 DSC_9063

கண்ணதாசன் இரண்டாம் வகுப்பு டிக்கட் வாங்கியதால், மதிய உணவுக்கு காசில்லாமல், பட்டினியாகவோ இருவரும் ஊர் போய் சேர்ந்திருக்கிறார்கள்.

இப்படித்தான் தொடங்கியது கருணாநிதியின் பொது வாழ்வு. இப்போது கருணாநிதி தாக்கல் செய்திருக்கும் பிரமாண வாக்குமூலத்தின் படி, அவருக்கு இருக்கும் சொத்துக்களைப் பார்ப்போமா ?

கருணாநிதி கையில் உள்ள ரொக்கம் 15,000

இந்தியன் வங்கி கோடம்பாக்கம் கிளையில் நிரந்தர வைப்பு நிதி (Fixed Deposit) 3 கோடி, 1 கோடி, 33,920 ரூபாய், 13,15,232 ரூபாய்.

அடையாறு கரூர் வைஸ்யா வங்கி 13,74,664 ரூபாய்.

கர்நாடகா வங்கி வைப்பு நிதி 39,62,995 ரூபாய்.

இந்தியன் வங்கி ராயப்பேட்டை கையிருப்பு ரூபாய் 10,956

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மஹாலிங்கபுரம் ரூபாய். 11,135

இந்தியன் வங்கி கோடம்பாக்கம்           ரூபாய் 11,39,441

ராசாத்தி அம்மாளுடன் ஜாயின்ட் அக்கவுன்ட்.

இந்தியன் வங்கி ராஜா அண்ணாமலை ரூபாய் புரம் ரூபாய். 13,15,180

 2599182705_409ba8dba9_b

முதலில் மனைவி தயாளு அம்மாள்.

ரொக்க கையிருப்பு   ரூபாய் 30,000

நிரந்தர வைப்பு நிதி இந்தியன் வங்கி கோடம்பாக்கம் கிளை

1 கோடியே 20 லட்சம்.

3 கோடியே 50 லட்சம்

ரூபாய் 3,90,373

ரூபாய் 3,90,584

ரூபாய் 3,90,584

ரூபாய் 3,90,584

ரூபாய் 3,98,247

ரூபாய் 32,50,255

இந்தியன் வங்கி கொத்தவால் பாசார்

ரூபாய் 6,98,250

ரூபாய் 6,93,579

ரூபாய் 13,92,503

ரூபாய் 1,40,723

 vamsamaudio020710_48

கர்நாடகா வங்கி. கோடம்பாக்கம்

ரூபாய் 13,74,664

கரூர் வைஸ்யா வங்கி, கோடம்பாக்கம்

ரூபாய் 30 லட்சம்

ரூபாய் 90 லட்சம்

ரூபாய் 90 லட்சம்

ரூபாய் 90 லட்சம்

சேமிப்புக் கணக்கு கையிருப்பு, இந்தியன் வங்கி, கோடம்பாக்கம்

ரூபாய்.2,66,226

சேமிப்புக் கணக்கு கையிருப்பு, இந்தியன் வங்கி, கோடம்பாக்கம்

ரூபாய்.1,65,380

 kani-3

அடுத்து துணைவி ராசாத்தி அம்மாள்.

இந்தியன் வங்கி, ராஜா அண்ணாமலை புரம்

நிரந்தர வைப்பு நிதி.

ரூபாய் 15,00,000

ரூபாய் 33,04,087

ரூபாய் 1,14,93,325

ரூபாய் 10,55,641

ரூபாய் 6 கோடியே 67 லட்சத்து 53 ஆயிரத்து 14

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி, ராயப்பேட்டை

ரூபாய் 6 கோடியே 51 லட்சத்து 14 ஆயிரத்து 753

ரூபாய் 46,78,221

சேமிப்புக் கணக்கு, இந்தியன் வங்கி, ராஜா அண்ணாமலைபுரம்.

கையிருப்பு ரூ.11,378

தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி, ராயப்பேட்டை

ரூபாய்.4,84,027

தயாளு அம்மாள் வணிக முதலீடுகள்.

கலைஞர் டிவி பங்குகள் ரூபாய் 6 கோடியே 60 லட்சம்

ராசாத்தி அம்மாள் வணிக முதலீடுகள்

வெஸ்ட்கேட் லாஜிஸ்ட்டிக்ஸ் பங்கு 2 கோடியே 50 லட்சம்

சொந்தத் தொழில் முதலீடு

ரூபாய் 2 கோடியே 56 லட்சத்து 81 ஆயிரத்து 878

வாகனங்கள்.

தயாளு அம்மாள்.

ஹோண்டா அக்கார்டு கார்

ரூபாய்.16,02,321

இது வரை சொன்ன படி, கருணாநிதியின் மொத்த சொத்து மதிப்பு

ரூபாய் 4 கோடியே 96 லட்சத்து 56 ஆயிரத்து 855

மனைவி மற்றும் துணைவிகளின் சொத்து மதிப்பு

ரூபாய் 36 கோடியே, 2 லட்சத்து 47 ஆயிரத்து 287

இது போக தயாளு மற்றும் ராசாத்தியின் பெயரில் இருக்கும் அசையா சொத்துக்களின் மொத்த மதிப்பு

தயாளு ரூ.5,51,1000

ராசாத்தி ரூபாய் 3 கோடியே 14 லட்சத்து 38 ஆயிரத்து 628

கருணாநிதி, மனைவி, துணைவி ஆகியோரின் பெயரில் இருக்கும், சொத்துக்களின் மதிப்பு மட்டும் 44 கோடியே 18 லட்சத்து 93 ஆயிரத்து 770.

தன் பெயரில் மட்டும் பல கோடி சொத்துக்களை வைத்திருக்கும், ராசாத்தி அம்மாளின் நிதி நிலைமை என்ன என்பது குறித்து சர்க்காரியா விசாரணை அறிக்கையில் கூறியிருப்பது.

பட்டயக் கணக்கர் திரு.ஜெகதீசன் மூலமாக வருமானவரி அதிகாரிக்கு அனுப்பி 1973ம் ஆண்டு மார்ச் மாதம் 13ம் நாளிட்ட தனது கடிதத்தில் திருமதி தர்மா இந்த வீட்டை வாங்குவதற்காக அவர் கபாலியிடமிருந்து ரூ.40 ஆயிரம் கடன் வாங்கியதாகவும், எஞ்சியுள்ள 23 ஆயிரத்தை தனது சொந்த சேமிப்பிலிருந்து கட்டியதாகவும் கூறினார். ரூ.40 ஆயிரம் கொடுத்ததற்கு சான்றாக பதிவு பெறாத 1970ம் ஆண்டு ஜனவரி மாதம் 11ம் நாளிட்ட ஒப்பந்தம் ஒன்று இருக்கிறது. இது கபாலியின் பெயருக்கு அவர் எழுதிக் கொடுத்ததாகும்.   அதில் மேற்படி தொகை ரூ. 15 ஆயிரம் என்று மூன்று ஆறுமாதத் தவணைகளில் திருப்பிக் கொடுக்கப் படும் என்றம், அப்படிக் கொடுக்கத் தவறினால் மேற்படி சொத்தை கபாலிக்கு விற்று விடுவதாகவும் அதில் நிபந்தனை குறிப்பிடப்டிருந்தது. மேற்சொன்ன கடனைத் தவணைகளில் செலுத்த வேண்டும். இதற்குச் சான்றாக 1970ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 21ம் நாளில் திருமதி.தர்மாவால் எழுதிக் கொடுக்கப் பட்டது.”

எழுபதுகளில், ராசாத்தி அம்மாளிடம் 40 ஆயிரம் இல்லாமல், கடன் வாங்கியிருப்பதை கவனியுங்கள்.

ஏழைகள் வயிற்றில் அடித்து, பணத்தை கொள்ளையடிப்பது குறித்து, கருணாநிதி எழுதிய கவிதையை இந்த நேரத்தில் குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும்.

ந்த மாருதத் தாலாட்டில் உறங்குதற்கு
மாட மாளிகை கட்டி வாழ்கின்ற பெரியீர் !

பணம் பணம் பணமென்று பாட்டாளியின் வியர்வையிலே
தினம் தினம் குளியல் நடத்திக் குவிக்கின்றீர் செல்வத்தை !

பிணம் தின்னும் கழுகு போல நீவிர்;
பெருக்க வைக்கின்றீர் உமது வயிற்றை !

இருள் சூழ்ந்த வாழ்க்கையிலே ஏழைகளைத் தள்ளிவிட்டு
பொருள் தேடி அலைகின்றீர்: போதுமென்ற மனதின்றி!

வாழ்வில் பெருக்கல் ஒன்றையேக் குறிக்கோளாய்க் கொண்டோரே ;
வார்த்தையொன்று கேட்கின்றேன் பதில் சொல்வீர்!!

மாணிக்கப் பொரியலும் மரகதக் கூட்டுமா இலையிலிட்டு உண்கின்றீர்?
வைரத்தால் வறுவல் செய்து வைடூர்ய அவியலுடன்
முத்துப் பவளமெனும் மணிகளால் செய்திட்ட அரிசியையா
குத்தி உலையிலிட்டுக் குடற்பையை நிரப்புகின்றீர்?

என்றதொரு கருத்தமைந்த கேள்வியினைக்
குன்றமெனச் செல்வன் குவிக்கின்ற மனிதரிடம்;
மன்றமேறி அறிஞ்ர் அண்ணா கேட்டார் - அதனை
மறவாமல் என்றும் நாம் கேட்கின்றோம் !

உண்பது நாழி; உடுப்பவை இரண்டேயெனும்
உண்மைதனை உணர்ந்த பின்னும்,
வறுமையில் பலர் வாட; வளமிகு செல்வப்
பெருமையில் சிலர் ஆடல் நீதிதானோ?

உலகில் பிறந்தார் அனைவருக்கும்;
உடல், உள்ளத் தேவையெல்லாம்
ஒன்றாக இருக்கும் போது - இதனை
நன்றாகச் சிந்திக்காமல்
வெள்ளம் போல் பொருள் எதற்கு ஒருவன் சேர்த்தல் வேண்டும்?
பள்ளம் போல் வாழ்வினிலே பலர் எதற்குச் சாதல் வேண்டும்?

தனக்கே எலாம் எனும் தனியுடமை தகர்த்துத்
தரித்திரத்தை விரட்டுவதற்குத் தக்க வழி காண
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பும் பொதுமைக் கொள்கையினை
வகுத்தளித்து வையத்தில் இன்பம் காண்பது தன் வாழ்வெடுத்த பயனாகும்...!

கலைஞர் கருணாநிதி எழுதிய "சங்கத் தமிழ்" புத்தகத்திலிருந்து (பக்கம் 288)

Comments  

0 #47 ksvenggadaraman 2011-04-30 12:51
cash details
Quote
 
0 #46 ksvenggadaraman 2011-04-30 12:50
cash list
Quote
 
-1 #45 Ezhai Thamizhan 2011-04-04 10:13
Quoting Puthiyavan Raj:
ஏழைத்தமிழன், நான் என் நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் கேள்விப்பட்ட வரை ஒரு ரூபாய் கிலோ அரிசி, இலவச வண்ணத்தொலைக்காட ்சி பெட்டி தேவைப்படும் ஏழைகளுக்கு கிடைத்துள்ளது. தவறுகள் நடக்கலாம். எந்த திட்டத்திலும் நிறை குறை இருக்கும். நீங்கள் சொல்லிய மற்ற விசயங்கள் எனக்கும் மன வருத்தம் உண்டு. ஆனால் எல்லாவற்றையுக் சீர் தூக்கி பார்த்தால் நிச்சயம் அதிமுகவை விட திமுக ஆட்சி தான் சிறப்பாக இருக்கும். 5 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கொடுத்த கலைஞரை பாராட்ட உங்களுக்கு மனம் இல்லை. அதுவே உங்கள் நடு நிலையை கேள்விக்குறியாக ்குகிறது. வேலை நியமன தடை சட்டம் போட்டதோடு அல்லாமல், வேலை பார்த்தவரையும் பணி நீக்கம் செய்து அவர்கள் குடும்பங்களை கடும் துயரில் ஆழ்த்திய ஜெ. வின் கொடூர குணத்தை எண்ணிப்பாருங்கள ்.

சில ஆண்டுகள் முன்னால் சென்று பாருங்க - அம்மா 50 கோடி ஊழல் செய்ததை சன் TV தினம் தினம் போட்டு காட்டி தானே ஆட்சியை பிடித்தார் கலைஞர்? இப்போது அவர் எவ்வளவு ஊழல் செய்திருக்கிறார ்? ஒரு லட்சத்தி எழுபத்தைந்தாயிர ம் கோடி சார் - தமிழ் நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பதிருக்கு ம் ஒரு கோடி ருபாய் கொடுக்கலாம் இந்த பணத்தை வைத்து.. நாம் இருவரும் கோடீஸ்வரர்கள் ஆகி இருக்கலாம் அனால் உண்மை அதில்லையே. நீங்களும் சரி நானும் சரி தினமும் வேலைக்கு சென்றால் தானே நம் குடும்பத்திற்கு சோறு கிடைக்கும்?
Quote
 
0 #44 Ezhai Thamizhan 2011-04-04 10:12
திரு ராஜ் அவர்களே,
கலைஞர் 5 லட்சம் பேருக்கு வேலை கொடுத்தார் என்றால் எனக்கும் அதில் சந்தோஷம் தான். என்னுடைய பதிவில் நான் அவர் எந்த நல்லதுமே செய்யவில்லை என்று சொல்லவில்லையே? அவர் நாட்டுக்கு ஒரு நல்லது செய்தால் அவர் குடும்பத்திற்கு பத்து நல்லது செய்துகொள்கிறார ் அவ்வளவு தான்.

உங்கள் கேள்விக்கு பதில்:
எல்லாவற்றையும் சீர் தூக்கி பார்த்தல் தீ மூ கா ஆட்சி தான் சிறப்பாக இருக்குமா? ஆமாம் - கலைஞர் குடும்பத்திருக் கு சிறப்பாக தன இருக்கும். மக்களுக்கு இலவச TV கொடுத்து அதில் அவர்கள் கேபிள் TV பார்க்க வேண்டுமென்றால் அதற்க்கு அவர் குடும்ப நிறுவனத்திருக்க ு தான் பணம் தர வேண்டும்.
2 - யாரை ஜெயலலிதா வேலையிலிருந்து நீக்கினார்? வருடா வருடம் - X மற்றும் XII பரீட்சை பேப்பர் திருத்த வேண்டிய நேரத்தில் அரசு ஆசிரியர்கள் வேலை நிறுத்தம் செய்வார்கள் சம்பள உயர்வு கேட்டு. வருடா வருடம் தீபாவளி நேரம் பார்த்து அரசு பேருந்து ஓட்டுனர்கள் வேலை நிறுத்தம் செய்வார்கள் பண்டிகை காலத்தில் மக்கள் அவரவர் ஊருக்கு செல்ல கஷ்ட படுவார்கள் என்று நேரம் பார்த்து தங்களுக்கு ஊதிய உயர்வு வேண்டுமென்று போர்க்கொடி தூக்குவார்கள். இது செரியா? இவர்களை தானே அம்மா தண்டித்தார்கள்? உங்களுக்கு எப்படியோ தெரியாது. வருட வருடம் என் குடும்பத்தை தீபாவளி அன்று சந்திக்க பட்ட கஷ்டம் எனக்கு தான் தெரியும்.

நான் அம்மா கட்சி தொண்டன் அல்ல. ஆனால் கலைஞர் ஆட்சியில் அவர் குடும்பத்தின் பரிணாம வளர்ச்சியை பார்த்து - இதே புத்தியை நாட்டை மேம்படுத்த அவர் உபயோகித்திருந்த ால் நம் தமிழ் நாடு சுபிட்சம் அடைந்திருக்கும் .. அந்த ஆதங்கம் தான்.

அம்மா நல்லவர் என்று நான் சொல்லவே இல்லை. அவரிடமும் பல குறைகள் உள்ளன அனால் இவரைவிட கம்மியாக தான் ஊழல் செய்வார் என்று ஒரு நம்பிக்கை.
Quote
 
-2 #43 Puthiyavan Raj 2011-03-31 17:12
ஏழைத்தமிழன், நான் என் நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் கேள்விப்பட்ட வரை ஒரு ரூபாய் கிலோ அரிசி, இலவச வண்ணத்தொலைக்காட ்சி பெட்டி தேவைப்படும் ஏழைகளுக்கு கிடைத்துள்ளது. தவறுகள் நடக்கலாம். எந்த திட்டத்திலும் நிறை குறை இருக்கும். நீங்கள் சொல்லிய மற்ற விசயங்கள் எனக்கும் மன வருத்தம் உண்டு. ஆனால் எல்லாவற்றையுக் சீர் தூக்கி பார்த்தால் நிச்சயம் அதிமுகவை விட திமுக ஆட்சி தான் சிறப்பாக இருக்கும். 5 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கொடுத்த கலைஞரை பாராட்ட உங்களுக்கு மனம் இல்லை. அதுவே உங்கள் நடு நிலையை கேள்விக்குறியாக ்குகிறது. வேலை நியமன தடை சட்டம் போட்டதோடு அல்லாமல், வேலை பார்த்தவரையும் பணி நீக்கம் செய்து அவர்கள் குடும்பங்களை கடும் துயரில் ஆழ்த்திய ஜெ. வின் கொடூர குணத்தை எண்ணிப்பாருங்கள ்.
Quote
 
+1 #42 Ezhai Thamizhan 2011-03-30 09:46
தொடர்ச்சி..

8. ஒருவனுக்கு ஒருத்தி என்பது தமிழ் கலாசாரம், பண்பாடு. ஒரு மனைவி, ஒரு துணைவி வேயத்துக்கொண்டு உன் தலைவர் தமிழ் நாகரீகத்தை பற்றி விமர்சிக்கிறார் .. அப்படியென்றால் அனைவரும் ஒரு மனைவி ஒரு துணைவி வேயத்துக்கொள்ளல ாம் என்று பொருளா?
9. 5 லட்சம் பேருக்கு வேலை கொடுத்தார் என்று சொல்கிறீர்கள்.. அவர்களுக்கு அவருடைய சொந்த வங்கி கணக்கிலிருந்த சம்பளம் கொடுக்கிறார் உங்கள் தலைவர்? நாம் கட்டும் வரிப்பணம் தானே? என்னிடம் பணம் வாங்கி, எனக்கே அதை பரிசாக கொடுப்பதற்கு உனக்கு ஏனப்பா நான் பாராட்டுகள் தர வேண்டும்?
10. 63 தொகுதிகள் கேட்டதால் கூட்டணி முறிகிறது என்று சொல்லி ராஜினாமா கடிதத்தை கையில் எடுத்துக்கொண்டு ஒரு கும்பல் தில்லி சென்றது. சென்று சோனியா அம்மையாரை சந்தித்து அதே 63 தொகுதிகளை தந்துவிட்டு - மாபெரும் வெற்றி கூட்டணிக்கு என்று சொல்லிக்கொண்டு திரும்பினார்கள் . கேவலமாக இல்லை? 63 தந்து தான் ஆகவேண்டும் என்று தெரியும். அப்படி இருந்தும் எதற்கு இந்த நாடகம், எதற்கு இந்த மானம்கெட்ட பொழப்பு?

இதுவே போதும் என்று நினைக்கிறேன் ராஜ் அவர்களே. வேண்டுமென்றால் சொல்லுங்கள் இன்னமும் நிறைய கேள்விகள் இருக்கின்றன.
Quote
 
0 #41 Ezhai Thamizhan 2011-03-30 09:45
தொடர்ச்சி..

4. ஒருவரிடம் கடன் பெட்ட்ரார்கலம் அதை ஒரு வருடம் கழித்து திருப்பு கொடுத்து விட்டார்களாம். இதனால் இவர்களுக்கு ஊழலில் எந்த சம்பந்தமும் இல்லையம்? ஏன் தம்பி ராசா திருட்டு பணம் உன் கையில் இருக்குது என்று செய்து வந்த பிறகு அதை நீ வாங்கியவனிடம் வட்டியுடன் திருப்பி கொடுத்தால் அது நேர்மையின் வடிவமா? அந்த பணத்தை ஏன் திடீர் என்று CBI விசாரணை தொடங்கியதும் திருப்பி தரனும்? முன்னமே கொடுத்திருக்கலா மே? ஏன் கொடுக்கலை?
5. நம் மீனவர்கள் தினம் தினம் சின்கல ராணுவத்தினரால் தாக்க படுகின்றனர். அதை பற்றி உன் தலைவர் என்றாவது கவலை பட்டாரா? பிரதமருக்கு காதல் கடிதம் எழுதுவதை தவிர இந்த விஷயத்தில் உன் தலைவர் என்ன செய்திருக்கிறார ்? தேர்தல் வரப்போகிற நேரத்தில் ஒரு நாடக போராட்டம், கைது அவ்வளவு தான். நம் மீனவர்கள் உயிர் அவ்வளவு தான் மதிப்பா?
6. என் மனைவியும் மகளும் ஒரு நிறுவனத்தின் 80௦% பங்குதாரர்களாம் ஆனால் எனக்கும் அந்த நிறுவனத்திற்கும ் எந்த வித சம்பந்தமும் இல்லை என்று நான் சொன்னால் நீர் நம்புவீரா ராஜ்? அவர்கள் எடுக்கும் எந்தவித முடிவும் எனக்கு தெரியாது என்று நான் சொன்னால் நீங்கள் நம்புவீர்களா ராஜ்? நம்பினால் உங்களை விட பெரிய முட்டாளை நாம் பார்த்ததில்லை என்று சொல்லலாம்...
7. சினிமா, அரசியல், தொலைகாட்சி, ரேடியோ எல்லா துறையிலும் உங்கள் தலைவரின் ஏதாவதொரு குடும்ப மக்கள் ஆதிக்கம் செலுத்துகிறார்க ள். கிட்டத்தட்ட கட்ட பஞ்சாயத்து போல் அவர்கள் சொல்வது தன் சட்டம். சன் TV ஒரு படம் நன்றாக உள்ளது என்று சொன்னால் அந்த படம் ஓடும் இல்லையேன் அது ஓடாது என்ற ஒரு மமதை. எல்லா படமும் சன் Pictures தான் வெளியிடுகிறது. அவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது?
8. ஒருவனுக்கு ஒருத்தி என்பது தமிழ் கலாசாரம், பண்பாடு. ஒரு மனைவி, ஒரு துணைவி வேயத்துக்கொண்டு உன் தலைவர் தமிழ் நாகரீகத்தை பற்றி விமர்சிக்கிறார் .. அப்படியென்றால் அனைவரும் ஒரு மனைவி ஒரு துணைவி வேயத்துக்கொள்ளல ாம் என்று பொருளா?
Quote
 
0 #40 Ezhai Thamizhan 2011-03-30 09:44
ராஜ், நீங்கள் சொல்வதுபோல் கலைஞர் நமக்கு நன்மை செய்தார் என்று வைத்துக்கொள்வோம ். என்னுடைய சில கேள்விகளுக்கு பதில் கூற முடிகின்றதா என்று பாருங்கள்..

1. ஒரு கிலோ அரிசி ஒரு ருபாய் என்ற திட்டத்தின் மூலம் எத்துனை ஏழை எளிய மக்கள் பயன் பெற்றார்கள் என்று நீங்கள் சொல்வீர்கள். இந்த திட்டத்தால் எத்துனை தீ மூ கா மந்திரிகள் அந்த அரிசியை கடத்தி லாபம் சம்பாதித்தனர்? அதில் எவ்வளவு லாபம் உங்கள் தலைவருக்கு கிடைத்தது?
2. எல்லோருக்கும் இலவச TV என்று சொன்னார்கள். அந்த டிவி எத்தனை பேரை சென்றடைந்தது? எனக்கு வேண்டாமையா. நான் சொந்தமாக உழைத்து சம்பாதித்து TV வாங்கிக்கொள்கிற ேன். அனால் என் வீட்டில் வீட்டு வேலை செய்யும் அந்த ஏழை பெண்மணிக்கோ அல்லது என் தெருவின் முனையில் நின்று எல்லோரின் துணிகளையும் இஸ்திரி போடும் தொழிலாளிக்கோ அது கிடைக்கவில்லையே ? நானும் ஏன் பா உனக்கு இந்த TV கிடைக்கவில்லையா என்று கேட்டேன்? அதற்கு அவன் - சார் அந்த TV வேணும்னா முதல்ல நான் தீ மூ கா தொண்டனா நு கேக்குறாங்க. அதுக்கு மேல ருபாய் 1000 கொடுத்தா தராங்கலாம். அவ்ளோ பணத்துக்கு நா எங்க போவேன் சார் நு அவன் கேட்டான். காகிதத்தில் தங்களது தலைவரின் திட்டம் நன்றாக தன இருந்தது. அது அடித்தட்டு மக்கள் எத்தனை பேரை சென்று அடைந்தது?
3. காலம் காலமாக காவிரி நதி நமக்கும் கர்நாடகத்துக்கு ம் பிரச்சனையாக இருந்து வருகிறது. உச்ச நீதி மன்றம் ஆணை பிறப்பித்தும் நமக்கு வந்து சேர வேண்டிய தண்ணீர் நமக்கு வரவில்லையே? அது ஏன்? அந்த மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் கட்சியோ அல்லது நம் மாநிலத்தை ஆளும் தீ மூ கா வோ அல்லது அவர்களின் கூட்டணி கட்சியான தமிழக காங்கிரஸ் ஒ அதை பற்றி ஏன் பேச மறுக்கின்றனர்? தீ மூ கா மத்திய அரசில் ஒரு பங்கு தானே? அவர்களை தன் பேரனுக்கு மந்திரி பதவி கேட்கவோ அல்லது மகளின் மேல் CBI விசாரணை நடத்தாமல் இருக்கவோ நெருக்கடி செய்ய முடிகிறது அல்லவே? நம் தமிழ் மக்களின் நலம் கருதி காவிரி பிரச்னையில் ஏன் நெருக்கடி கொடுக்கவில்லை? மக்களின் நலத்தை விட குடும்ப நலம் பெரிதாகி போனது. இல்லையா?

To be continued...
Quote
 
0 #39 தமிழ்பேசும்இந்தியன் 2011-03-29 13:04
The chargesheet is also likely to name Tamil Nadu’s Chief Minister M Karunanidhi’s daughter Kanimozhi anjd his wife.

http://english.samaylive.com/nation-news/676484654/2g-scam-cbi-to-file-status-report-in-sc.html
Quote
 
-1 #38 To Raj. 2011-03-29 10:22
Quoting Puthiyavan Raj:
ஏழைத்தமிழன், கலைஞர் என்ன நன்மை செய்தாலும் அதில் குற்றம் கண்டுபிடிப்பது தானே உங்களைப்போன்றவர ்களின் நோக்கம். திருவிளையாடலில் நாகேஷ் சொல்வது போல, "பாட்டெழுதி பேர் வாங்கும் புலவர்கள் இருக்கிறார்கள். உங்களைப்போல குற்றம் கண்டு பிடித்தே பேர் வாங்கும் புலவர்களும் இருக்கிறார்கள்". இந்த 5 வருட கலைஞர் ஆட்சியில் 5 லட்சம் பேருக்கு வேலை கிடைத்துள்ளது. சென்னையில் கடல் நீரை குடி நீராக்கும் திட்டம், ராமனாதபுரத்தில் கூட்டுக்குடி நீர் திட்டம் வெற்றிகரமாக் செயல்படுத்தப்பட ்டுள்ளது... இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்.. ஆனால் நீங்கள் எதையும் ஒப்புக்கொள்ளப்ப ோவது இல்லை.. நல்லதை பாராட்டும் நல்லெண்ணமும் உங்களுக்கு இருக்கப்போவது இல்லை....

Mr. Raj. I donno for how many days you are going to support DMK. Rather than helping the people just think how mouch they have taken for them. Rather getting angry on your comments i doubt on you for all those statistics wherther you are in the inner circle of the paty.r
Quote
 
-2 #37 Puthiyavan Raj 2011-03-29 07:19
ஜெயா, உண்மை சுடுகிறதா? உங்கள் தலைவி பெயரை மட்டுமல்ல அவரைப்போன்ற ஆணவமும் உங்களிடம் இருக்கிறது அதான் கருத்தை கருத்தால் சந்திக்க முடியாமல் கருத்து சொல்லும் உரிமையை நிறுத்த சொல்கிறீர்கள். எத்தனை முறை சொன்னாலும் சிலருக்கு உறைப்பதில்லை அதான் மீண்டும் மீண்டும் சில உண்மைகளை சொல்ல வேண்டியதுள்ளது.
Quote
 
-1 #36 jaya 2011-03-28 23:22
Quoting annamalaiar:
Quoting Puthiyavan Raj:
இப்போது சவுக்கின் நடு நிலை முகமூடி கிழிந்து விட்டது. திமுக ஆட்சியில் நன்மையே இல்லை என்பது போல மனசாட்சி இல்லாமல் எழுதி இருக்கிறார். கலைஞர் அரசால் கட்டப்பட்ட ஜெமினி பாலம் உட்பட பாலங்களில் வசதியாக செல்லும்போது ஒரு கணம் மனசாட்சி நிச்சயம் சவுக்கை உலுக்கும். ஒரு உதாரணத்திற்கு, 35 வருடங்களுக்கு முன்பு முதல்முறை ஆட்சிக்கு வந்த போதே மனிதனை மனிதனே கைவண்டியில் வைத்து, மாடு போல இழுக்கும் அவலம் ஒழியட்டும் என்று கருணை உள்ள்த்துடன் கைரிக்ஷாக்களை ஒழித்து அவர்களுக்கு அரசு செலவில் சைக்கிள் ரிக்ஷா கொடுத்தவர் கலைஞர். ஆனால் ரிக்சாக்காரன் படத்தில் நடித்ததால் அந்த ரிக்ஷாக்காரர்கள ் கூட அதிமுகவிற்கு தான் ஓட்டு போட்டு இருப்பர். நன்றி கெட்ட உலகமடா நான் அறிந்த பாடமடா என்ற பாடல் வரிகள் ஞாபகத்திற்கு வருகிறது. திமுக ஆட்சியிலும் ஊழல் இருந்தாலும், மக்களுக்கு நன்மை தரும் பல நல்ல வளர்ச்சித்திட்ட ங்கள், வேலை வாய்ப்பு, தொழில்சாலைகள் எல்லாம் சிறப்பாக செயல்படுத்தப்பட ும். பொய் பொடா, பொய் கஞ்சா வழக்குகள் இருக்காது (தன்னுடைய ஒப்புதலை குறை கூறியதற்காக நீதிபதி மருமகன் மீதே கஞ்சா வழக்கு பதிவு செய்யப்பட்டது, கவர்னருக்கே பாதுகாப்பில்லாத சூழ் நிலை, அரசின் பழிவாங்க்கும் போக்கை கண்டித்த நீதிபதி மேலேயே கொலை, கற்பழிப்பு,.போலி சான்றிதழ் வழக்குகள் போடப்பட்டு மன உளைச்சல் கொடுக்கப்பட்டது , கோவிலை விட புனிதமான கல்விக்கூடத்தை (ராணி மேரிக்கல்லூரி) யை இடிப்பேன் என்று ஆணவ ஆட்டம் எல்லாம் யார் ஆட்சியில் என்று என்று சவுக்கு போன்றவர்கள் வாசகர்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்).

சவுக்கு தமிழினத்தலைவர் பிரபாகரன் அவர்களின் படத்தை போட்டு தமிழர்களை ஏமாற்றி வருகிறது. சவுக்கின் நோக்கங்கள் என்ன ? விடுதலை புலிகளை தடை செய்ததவர், நுற்றுக்கணக்கான ஈழ ஆதரவாளர்களை என்கவுண்டர் என்ற பெயரில் கொன்று குவித்த ஜெயலலிதாவை ஆட்சில் ஏற்ற்ற சவுக்கு பார்ப்பன பிண வாசனையுடன் சு சாமியின் திரைக்கு பின்னால் இயங்குகிறது. சவுக்கின் வேடம் வெளிச்சத்துக்கு வந்து விட்டது

PULICHU PULICHU OOSAL VADAI VARUTHU...UNNODA KARTHAI NIRUTHUKIRAYAA ILLAYA?
Quote
 
0 #35 jaya 2011-03-28 23:21
Quoting oandiyan:
see your ugly face in mirror after reading this...
கட்சிப் பணத்தில் பூமாலை வீடியோ இதழ் துவங்க கருணாநிதியால் அனுமதி அளிக்கப்பட்டது.அது தோல்வி அடையவே தனியார் தொலைக்காட்சி அனுமதியளிக்கப்ப ட்ட காலத்தில் சன் டிவிக்கு அனுமதியளிக்கப்ப ட்டது.

கட்சிப்பண்த்தில ் கட்சி அலுவலகத்தில் சன் டிவி தொடங்கப்பட்டு அதன் அரவணைப்போடு வளர்ந்தது.இது அனைவரும் அறிந்த வரலாறு

Quoting Puthiyavan Raj:
ஊர்க்குருவி, காமாலைக்கண்ணுடன ் பார்த்தால் எல்லாமே தவறாக தான் தெரியும். கலைஞர் ஆட்சிக்கு வருமுன் 25 வருடங்கள் கை வண்டி ரிக்ஷாக்கள் இருந்தன. ஆனால் அதை ஒழிக்க வேண்டும் என்ற கருணையும் அதற்கான நிதியும் கருணா நிதி ஆட்சியில் தான் இருந்தது. கருணா நிதி என்றால் கருணையும் இருக்கும் நிதியும் இருக்கும் என்பதை மெய்ப்பிக்கும் வகையில். தவறு செய்யாத மனிதனே உலகில் இல்லை. எனவே ஒருவர் செய்த நன்மை தீமை இரண்டயும் சீர் தூக்கி பார்த்து தான் முடிவெடுக்க வேண்டும். வள்ளுவர் கூட "குணம் நாடி குற்றமும் நாடி அவற்றுள் மிகை நாடி மிக்க கொளல்" என்று தான் அறிவுறுத்தி உள்ளார். கலைஞர் பற்றி இவ்வளவு குரோதம் ஏன்? 22 வருடங்களுகு முன்னாள், சைக்கிள் ரிக்ஷாவில் வீடு வீடாக சென்று வீடியோ கேசட் போட்டு பிழைப்பு நடத்தியவர் அது போல போயஸ் தோட்டமும் சென்றார். அவர் இன்று எத்தனை ஆயிரம் கோடிகளுக்கு அதிபதி? அதைப்பற்றி பேசுவீர்களா? 5 வருடங்களில் கலைஞர் ஆட்சியில் 5 லட்சம் பேருக்கு வேலை கிடைத்துள்ளது. ஆனால் ஜெயா வேலை நியமன தடை சட்டம் போட்டு இளைஞர் வாழ்வில் இருள் கவ்வ செய்தார். உங்களுக்கு யார் ஆட்சி வேண்டும்?

PULICHU PULICHU OOSAL VADAI VARUTHU...UNNODA KARTHAI NIRUTHUKIRAYAA ILLAYA?
Quote
 
-5 #34 Puthiyavan Raj 2011-03-28 19:00
ஏழைத்தமிழன், கலைஞர் என்ன நன்மை செய்தாலும் அதில் குற்றம் கண்டுபிடிப்பது தானே உங்களைப்போன்றவர ்களின் நோக்கம். திருவிளையாடலில் நாகேஷ் சொல்வது போல, "பாட்டெழுதி பேர் வாங்கும் புலவர்கள் இருக்கிறார்கள். உங்களைப்போல குற்றம் கண்டு பிடித்தே பேர் வாங்கும் புலவர்களும் இருக்கிறார்கள்". இந்த 5 வருட கலைஞர் ஆட்சியில் 5 லட்சம் பேருக்கு வேலை கிடைத்துள்ளது. சென்னையில் கடல் நீரை குடி நீராக்கும் திட்டம், ராமனாதபுரத்தில் கூட்டுக்குடி நீர் திட்டம் வெற்றிகரமாக் செயல்படுத்தப்பட ்டுள்ளது... இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்.. ஆனால் நீங்கள் எதையும் ஒப்புக்கொள்ளப்ப ோவது இல்லை.. நல்லதை பாராட்டும் நல்லெண்ணமும் உங்களுக்கு இருக்கப்போவது இல்லை....
Quote
 
+1 #33 குசும்பன். 2011-03-28 17:46
நான் நினைக்கிறேன் கிபி மிக மோசமான நாசகார அரசியல்வாதியும் , ஊழல் திருட்டில் உலகத்தை திடுக்கிடச்செய் து ஏமாற்றியவரும், எவ்வளவு விமர்சனங்கள் திட்டுக்கள் வந்தாலும் எருமை மாட்டின்மீது விழுந்த மழைபோல அசட்டை செய்பவரும். எந்தக்கேள்விக்க ும் எவருக்கும் புரியாத பாஷையில் பதிலளிப்பவரும். சட்டத்துக்கே கடுக்காய்கொடுத் து சின்னவீட்டை தனது உத்தியோகபூர்வமா ன வசஸ்தலமாக மாற்றியவரும், ஒரு சத முதலீடுல்லாமல் உண்மையை அப்படியே "திருட்டு முதலாளி கருணாநிதி" திமுக, என்ற கட்சிக்கொம்பனிய ை இன்னொருவருடமிரு ந்து ஏமாற்றி கைப்பற்றி 90 வயதாகும் இந்த வயோதிபத்திலும் ஊன்றுகோல் இல்லாமல் தள்ளுவண்டி உதவியுடன், 1700 பேருக்கு மேற்பட்ட குடும்ப உறுப்பினர்களை உலக் பணக்காரராக்கிய ஒருவர் தமிழ் நாட்டின் வித்தமிழ் முத்தகராகத்தான் இருக்கமுடியும்!
Quote
 
+1 #32 oandiyan 2011-03-28 11:44
see your ugly face in mirror after reading this...
கட்சிப் பணத்தில் பூமாலை வீடியோ இதழ் துவங்க கருணாநிதியால் அனுமதி அளிக்கப்பட்டது.அது தோல்வி அடையவே தனியார் தொலைக்காட்சி அனுமதியளிக்கப்ப ட்ட காலத்தில் சன் டிவிக்கு அனுமதியளிக்கப்ப ட்டது.

கட்சிப்பண்த்தில ் கட்சி அலுவலகத்தில் சன் டிவி தொடங்கப்பட்டு அதன் அரவணைப்போடு வளர்ந்தது.இது அனைவரும் அறிந்த வரலாறு

Quoting Puthiyavan Raj:
ஊர்க்குருவி, காமாலைக்கண்ணுடன ் பார்த்தால் எல்லாமே தவறாக தான் தெரியும். கலைஞர் ஆட்சிக்கு வருமுன் 25 வருடங்கள் கை வண்டி ரிக்ஷாக்கள் இருந்தன. ஆனால் அதை ஒழிக்க வேண்டும் என்ற கருணையும் அதற்கான நிதியும் கருணா நிதி ஆட்சியில் தான் இருந்தது. கருணா நிதி என்றால் கருணையும் இருக்கும் நிதியும் இருக்கும் என்பதை மெய்ப்பிக்கும் வகையில். தவறு செய்யாத மனிதனே உலகில் இல்லை. எனவே ஒருவர் செய்த நன்மை தீமை இரண்டயும் சீர் தூக்கி பார்த்து தான் முடிவெடுக்க வேண்டும். வள்ளுவர் கூட "குணம் நாடி குற்றமும் நாடி அவற்றுள் மிகை நாடி மிக்க கொளல்" என்று தான் அறிவுறுத்தி உள்ளார். கலைஞர் பற்றி இவ்வளவு குரோதம் ஏன்? 22 வருடங்களுகு முன்னாள், சைக்கிள் ரிக்ஷாவில் வீடு வீடாக சென்று வீடியோ கேசட் போட்டு பிழைப்பு நடத்தியவர் அது போல போயஸ் தோட்டமும் சென்றார். அவர் இன்று எத்தனை ஆயிரம் கோடிகளுக்கு அதிபதி? அதைப்பற்றி பேசுவீர்களா? 5 வருடங்களில் கலைஞர் ஆட்சியில் 5 லட்சம் பேருக்கு வேலை கிடைத்துள்ளது. ஆனால் ஜெயா வேலை நியமன தடை சட்டம் போட்டு இளைஞர் வாழ்வில் இருள் கவ்வ செய்தார். உங்களுக்கு யார் ஆட்சி வேண்டும்?
Quote
 
+5 #31 Ezhai Thamizhan 2011-03-28 09:21
தம்பி ராஜ் எத்துனை வாட்டி ஐயா சொல்வீர்கள் rikshaw கொடுத்தார் நு? அது 25 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்தது. இப்போ என்ன சென்சார்? ஒரு லட்சம் கோடி கொள்ளை அடிச்சார். அதா சொல்லு ராசா..

Quoting Puthiyavan Raj:
ஊர்க்குருவி, காமாலைக்கண்ணுடன ் பார்த்தால் எல்லாமே தவறாக தான் தெரியும். கலைஞர் ஆட்சிக்கு வருமுன் 25 வருடங்கள் கை வண்டி ரிக்ஷாக்கள் இருந்தன. ஆனால் அதை ஒழிக்க வேண்டும் என்ற கருணையும் அதற்கான நிதியும் கருணா நிதி ஆட்சியில் தான் இருந்தது. கருணா நிதி என்றால் கருணையும் இருக்கும் நிதியும் இருக்கும் என்பதை மெய்ப்பிக்கும் வகையில். தவறு செய்யாத மனிதனே உலகில் இல்லை. எனவே ஒருவர் செய்த நன்மை தீமை இரண்டயும் சீர் தூக்கி பார்த்து தான் முடிவெடுக்க வேண்டும். வள்ளுவர் கூட "குணம் நாடி குற்றமும் நாடி அவற்றுள் மிகை நாடி மிக்க கொளல்" என்று தான் அறிவுறுத்தி உள்ளார். கலைஞர் பற்றி இவ்வளவு குரோதம் ஏன்? 22 வருடங்களுகு முன்னாள், சைக்கிள் ரிக்ஷாவில் வீடு வீடாக சென்று வீடியோ கேசட் போட்டு பிழைப்பு நடத்தியவர் அது போல போயஸ் தோட்டமும் சென்றார். அவர் இன்று எத்தனை ஆயிரம் கோடிகளுக்கு அதிபதி? அதைப்பற்றி பேசுவீர்களா? 5 வருடங்களில் கலைஞர் ஆட்சியில் 5 லட்சம் பேருக்கு வேலை கிடைத்துள்ளது. ஆனால் ஜெயா வேலை நியமன தடை சட்டம் போட்டு இளைஞர் வாழ்வில் இருள் கவ்வ செய்தார். உங்களுக்கு யார் ஆட்சி வேண்டும்?
Quote
 
-21 #30 Puthiyavan Raj 2011-03-28 07:31

+6 #29 jaya 2011-03-27 23:40
Quoting annamalaiar:
சவுக்கு தமிழினத்தலைவர் பிரபாகரன் அவர்களின் படத்தை போட்டு தமிழர்களை ஏமாற்றி வருகிறது. சவுக்கின் நோக்கங்கள் என்ன ? விடுதலை புலிகளை தடை செய்ததவர், நுற்றுக்கணக்கான ஈழ ஆதரவாளர்களை என்கவுண்டர் என்ற பெயரில் கொன்று குவித்த ஜெயலலிதாவை ஆட்சில் ஏற்ற்ற சவுக்கு பார்ப்பன பிண வாசனையுடன் சு சாமியின் திரைக்கு பின்னால் இயங்குகிறது. சவுக்கின் வேடம் வெளிச்சத்துக்கு வந்து விட்டது

இப்படியே சொல்லி சொல்லிதானே அரியம் திராவிடம் என்றெல்லாம் பேசி பேசி தமிழனை மூளை மழுங்கடித்து ஒரு லட்சம் கோடி கடைசி பேரனுக்கும் இன்னும் வயதுக்குள் இருக்கும் பேரனுக்கும் சேர்த்து சொத்து செர்தகிவிட்டது? இன்னும் என்ன தான் வேண்டும் தி முக சொம்புகள/ ஒரு உண்மையான தி முக தொண்டன் எப்படி சாகிறான் என்று பாரு? இப்படி போனால் தமிழ்நாடு சுடுகாடு ஆகி எல்லோரும் சாக வேண்டியது தான்.
Quote
 
+3 #28 D.G.P.Shankar 2011-03-27 22:47
Quoting சவுக்கின் விசிறி:
கலைஞர் பேசுகிறார்:
கேட்டாயா உடன்பிறப்பே!
.............
இறுதியாக

தம்பி சவுக்கு !
நீயோர் இழுக்கு!
எனக்கு கிடையாது அப்பழுக்கு!
நீ எழுதுவதை போடு முழுக்கு!
இல்லையேல் உனக்கு சுளுக்கு!

கொஞ்சும் குஷ்பூவும் சுந்தருக்கே சொந்தமா? அடடா.............. என்ன அருமையாக சொன்னீர்கள் போங்கள்...........க க க போ....!!!!!!!!!!!!!!! !!
Quote
 
+13 #27 D.G.P.Shankar 2011-03-27 22:42
Quoting Ram Prasad:
சனீஸ்வர பகவான் கோவிலில் முதல்வர் மனைவி பரிகார பூஜை

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=213145

இத எதுக்கு கோயிலுக்கு போய் பணன்னும்? அவிங்க வீட்டுலயே அந்த கெழத்த ஒக்கார வச்சி பண்ணி இருக்கலாமே.....இத விட பெரிய சனி இந்த உலகத்தில் உந்டோஓஓஓ.........................
Quote
 
+1 #26 Kudimagan 2011-03-27 22:29
Savukku rocks...
Quote
 
+3 #25 DMK ku-ru-nai-nithi 2011-03-27 22:28
Quoting சவுக்கின் விசிறி:
கலைஞர் பேசுகிறார்:
கேட்டாயா உடன்பிறப்பே!
நான் சேர்க்கிறேனாம் சொத்து
அப்படி சொல்கிறவன் முகத்தில் விடு குத்து!

பட்டு வேட்டி அய்யருக்கு சொந்தமா?
குடும்ப ஆட்சி நேரு குடும்பத்துக்கு மட்டும் சொந்தமா?
கோடிகளும் கோபுரங்களும் புருணை சுல்தானுக்குத்த ான் சொந்தமா!
கொஞ்சும் குஷ்பூவும் சுந்தருக்கே சொந்தமா?

செங்கிஸ்கான் கொள்ளை
கோரிமுகமது கொள்ளை
கஜினிமுகமது கொள்ளை
சோமாலிய கொள்ளை-இவற்றை
வரலாற்றில் பிள்ளையாக படித்த போதே
கொள்ளை மீது
எல்லையில்லா கொள்ளை கொண்டேன்!

தனி ஒரு குடும்பம் கொள்ளையடிப்பதை தடுக்க நினைத்தால் இந்த ஜகத்தினை அழிப்போம் உடன் பிறப்பே!

இறுதியாக

தம்பி சவுக்கு !
நீயோர் இழுக்கு!
எனக்கு கிடையாது அப்பழுக்கு!
நீ எழுதுவதை போடு முழுக்கு!
இல்லையேல் உனக்கு சுளுக்கு!

kalakiteega arumai...
Quote
 
+16 #24 Ravi 2011-03-27 22:18
தமிழகத்தின் மிகப்பெரிய மோசடி மன்னன் இந்த கருணாநிதி. இவரது செல்வம் மலைக்க வைக்கிறது. இவர் படித்த அதே திருவாவூர் பள்ளியில் 3 வருடம் ஜூனியரான என் தந்தை வறுமை விரட்டியதால் சென்னை வந்து வாழக்கையில் போராடி ஒரு மத்திய அரசு அலுவலகத்தில் சேர்ந்து 35 வருடங்கள் நேர்மையாக உழைத்து எங்களை நேர்மையாக வளர்த்து அவர் ஓய்வு பெரும் போது அவரிடம் இருந்த பணம் 63000 ரூபாய். எந்த வித கெட்ட பழக்கமில்லாமல் வாயை கட்டி வயத்தை கட்டி இவர் இன்றும் தன் பென்சன் பணத்தை அதிகமாக செலவு செய்யாமல் சேமித்த பிறகு இன்று அவரது கணக்கில் இருப்பு 98000/- ருபாய் மட்டுமே. ஆனால் இந்த களவாணி ஊரை கொள்ளயடித்து கூத்தியாவை கொண்டு மேலும் கொள்ளையடித்து செலவழித்து இவரது புத்திர செல்வங்கள் குடித்து கொட்டமடித்து அழித்தது போக மிச்சமே 45 கோடிக்கு மேல்..அட ஆண்டவா

இந்த நாட்டில் நீதியும் நேர்மையும் குப்பைதானா.?
Quote
 
-20 #23 nellai 2011-03-27 22:13
சவுக்கு சங்கர் அவர்களே உங்களது தனிப்பட்ட வேறுபிற்காக ஒட்டு மொத்த மக்களையும் முட்டாளாக பார்க்கதே
Quote
 
+6 #22 ஊர்க்குருவி. 2011-03-27 21:57
Quoting Puthiyavan Raj:
இப்போது சவுக்கின் நடு நிலை முகமூடி கிழிந்து விட்டது. திமுக ஆட்சியில் நன்மையே இல்லை என்பது போல மனசாட்சி இல்லாமல் எழுதி இருக்கிறார்.
தம்பி Puthiyavan Raj உங்கள் பின்னூட்டங்களை பிரசுரித்து சவுக்கு தனது பத்திரிகை தர்மத்தை மதித்து காப்பாற்றினாலும ் என்போன்றவர்களுக ்கு உங்கள் கடி தாங்கமுடியவில்ல ை. உங்க கடி சொறிந்து தீர்க்கக்கூடியத ுமல்ல!//இப்போது சவுக்கின் நடு நிலை முகமூடி கிழிந்து விட்டது. திமுக ஆட்சியில் நன்மையே இல்லை என்பது போல மனசாட்சி இல்லாமல் எழுதி இருக்கிறார். கலைஞர் அரசால் கட்டப்பட்ட ஜெமினி பாலம் உட்பட பாலங்களில் வசதியாக செல்லும்போது ஒரு கணம் மனசாட்சி நிச்சயம் சவுக்கை உலுக்கும். ஒரு உதாரணத்திற்கு, 35 வருடங்களுக்கு முன்பு முதல்முறை ஆட்சிக்கு வந்த போதே மனிதனை மனிதனே கைவண்டியில் வைத்து, மாடு போல இழுக்கும் அவலம் ஒழியட்டும் என்று கருணை உள்ள்த்துடன் கைரிக்ஷாக்களை ஒழித்து அவர்களுக்கு அரசு செலவில் சைக்கிள் ரிக்ஷா கொடுத்தவர் கலைஞர். // என்று குழந்தைப்பிள்ளை கணக்கா எழுதியிருக்கிறீ ர்க்ள்.
1,ஜெமினி பாலம் ஒன்றும் கருணா தனது சொந்த செலவில் கட்டவில்லை,
2,ஜெமினி பாலம் மட்டுமல்ல சேர்த்து சிவாஜி பாலத்தையும் உளுந்தூர்பேட்டை யில் கட்டுவதற்குத்தா ன் கருணா திட்டமிட்டிருந் தார்.
ஜெமினிபாலத்துக் கு செலவழித்ததாக கணக்குகாட்டிய ++++கோடியில் அரைவாசி கருணா வீட்டு கல்லாவில் விழுந்துவிட்டது , பாலம் கட்டுவது ஒன்றும் இலாபாமில்லாமல் செய்யப்படவில்லை .
3,35 வருடத்துக்கு முன்னய கை வண்டி மாறி ஆட்டோ வந்தது காலமாற்றம் கருணாநிதியின் மாற்றமல்ல,, கருணா மாறாமல் இருப்பதுதான் காலக்கொடுமை.
4, பல பாலங்கள். தெருக்கள். குளங்கள். பள்ளிகள். பொன்றவற்றின் தேய்மானந்தான் CID கொலனியிலும் கோபாலபுரத்திலும ். சன் ரிவியிலும் ரெட் ஜெயண்ட் மூவியிலும். க்ளவுட் நைன் மூவியிலும். வோல்டாஸாகவும். ரோயல் ஃபெர்ணிச்சர்ஸ், ம்ற்றும் கலைஞர் ரிவி, இன்னும் ஆயிரம் தொழில்ப்பேட்டைய ாக வளர்ந்து நிற்கிறது. உங்க அழுகையைப்பார்த் தா கலைஞ்ரின் குடும்பத்தவர்கள ் ரிக்க்ஷா ஓட்டி பிழைப்பது போலல்லவா இருக்கிறது. நீங்கள் சூடம் ஏற்றி கருணாவை வழிபடுவதற்காக மற்றவர்களை அழைப்பது தவறு!
Quote
 
+2 #21 சைதை அஜீஸ் 2011-03-27 21:05
Quoting Puthiyavan Raj:
சைதை அஜீஸ், அடிப்படை சட்டம் தெரியாமல் பேச வேண்டாம். இரு தார மண சட்டப்படி, புகார் கொடுக்கும் உரிமை அவருடைய முதல் மனைவிக்கு மட்டும் தான் உள்ளது.

அப்படியா சவுக்கு?
இது சட்டமா அல்லது சட்டத்தில் உள்ள ஓட்டையா? அதனால் தான் பேறரிஞர் அண்ணா, சட்டம் ஒரு இருட்டரை என்று சொன்னாரோ?
Quote
 
+10 #20 உடன்பிறப்பு 2011-03-27 20:57
ஏழைகளின் வயிற்றில் அடித்து உண்ணும் எங்கள் தன்மான தலைவருக்கு "திருடர் குல திலகம்" என பெயர் இட்டு மகிழ்வதில் ஆனந்தம் அடைகிறோம்......
என்ன பண்ணினாலும் இந்த முட்டா பசங்க இவனுங்களுக்கு தான் ஒட்டு போடுவாங்க ......
Quote
 
-5 #19 Puthiyavan Raj 2011-03-27 16:01
சைதை அஜீஸ், அடிப்படை சட்டம் தெரியாமல் பேச வேண்டாம். இரு தார மண சட்டப்படி, புகார் கொடுக்கும் உரிமை அவருடைய முதல் மனைவிக்கு மட்டும் தான் உள்ளது.
Quote
 
+4 #18 balaganesh 2011-03-27 15:58
thirudar munnettra kazhagam
Quote
 
+2 #17 Ram Prasad 2011-03-27 15:54
சனீஸ்வர பகவான் கோவிலில் முதல்வர் மனைவி பரிகார பூஜை

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=213145
Quote
 
+2 #16 ramasami 2011-03-27 15:38
'சவுக்கு' அவர்களே, உமது பணி தொடரட்டும்.

கீழ்கண்ட சுட்டியில் ஒரு கனிமொழி-கருணாநிதி தொடர்பான செய்தி கொடுக்கப்பட்டுள ்ளது. முடிந்தால் படிக்கவும்.

கனிமொழி = வரதட்சிணை + கிவிதை + பேராசை + ஊழல்
http://othisaivu.wordpress.com/2011/03/27/post-2/
நன்றி.
Quote
 
+1 #15 pandiyan 2011-03-27 14:34
copy / past this ..from your same comment in other portal. you dont have brain to think based on current sivutations and register the comment. thoo thari ....Quoting Puthiyavan Raj:
இப்போது சவுக்கின் நடு நிலை முகமூடி கிழிந்து விட்டது. திமுக ஆட்சியில் நன்மையே இல்லை என்பது போல மனசாட்சி இல்லாமல் எழுதி இருக்கிறார். கலைஞர் அரசால் கட்டப்பட்ட ஜெமினி பாலம் உட்பட பாலங்களில் வசதியாக செல்லும்போது ஒரு கணம் மனசாட்சி நிச்சயம் சவுக்கை உலுக்கும். ஒரு உதாரணத்திற்கு, 35 வருடங்களுக்கு முன்பு முதல்முறை ஆட்சிக்கு வந்த போதே மனிதனை மனிதனே கைவண்டியில் வைத்து, மாடு போல இழுக்கும் அவலம் ஒழியட்டும் என்று கருணை உள்ள்த்துடன் கைரிக்ஷாக்களை ஒழித்து அவர்களுக்கு அரசு செலவில் சைக்கிள் ரிக்ஷா கொடுத்தவர் கலைஞர். ஆனால் ரிக்சாக்காரன் படத்தில் நடித்ததால் அந்த ரிக்ஷாக்காரர்கள ் கூட அதிமுகவிற்கு தான் ஓட்டு போட்டு இருப்பர். நன்றி கெட்ட உலகமடா நான் அறிந்த பாடமடா என்ற பாடல் வரிகள் ஞாபகத்திற்கு வருகிறது. திமுக ஆட்சியிலும் ஊழல் இருந்தாலும், மக்களுக்கு நன்மை தரும் பல நல்ல வளர்ச்சித்திட்ட ங்கள், வேலை வாய்ப்பு, தொழில்சாலைகள் எல்லாம் சிறப்பாக செயல்படுத்தப்பட ும். பொய் பொடா, பொய் கஞ்சா வழக்குகள் இருக்காது (தன்னுடைய ஒப்புதலை குறை கூறியதற்காக நீதிபதி மருமகன் மீதே கஞ்சா வழக்கு பதிவு செய்யப்பட்டது, கவர்னருக்கே பாதுகாப்பில்லாத சூழ் நிலை, அரசின் பழிவாங்க்கும் போக்கை கண்டித்த நீதிபதி மேலேயே கொலை, கற்பழிப்பு,.போலி சான்றிதழ் வழக்குகள் போடப்பட்டு மன உளைச்சல் கொடுக்கப்பட்டது , கோவிலை விட புனிதமான கல்விக்கூடத்தை (ராணி மேரிக்கல்லூரி) யை இடிப்பேன் என்று ஆணவ ஆட்டம் எல்லாம் யார் ஆட்சியில் என்று என்று சவுக்கு போன்றவர்கள் வாசகர்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்).
Quote
 
+10 #14 sakthy 2011-03-27 14:25
நிச்சயமாக சவுக்கின் முகத்தில் மட்டுமல்ல,முதுக ிலும் குத்த மாட்டோம். என்னைப் போன்ற பலரின் கண்களை திறந்து வைத்து,துரோகிகள ை அடையாளம் காட்டி, கருணாநிதியின் ஊழல்களை ஆதாரத்துடன் வெளிக் கொண்டு வந்த சவுக்குக்கு, தோளோடு தோள் நின்று, மக்கள் விரோத சக்திகளை மக்கள் நீதிமன்றின் முன் நிறுத்தி சாட்டை அடி கொடுக்க துணை நிற்போம்.இது உறுதி. வெறும் கருத்தல்ல.
Quote
 
-13 #13 annamalaiar 2011-03-27 14:10
Quoting Puthiyavan Raj:
இப்போது சவுக்கின் நடு நிலை முகமூடி கிழிந்து விட்டது. திமுக ஆட்சியில் நன்மையே இல்லை என்பது போல மனசாட்சி இல்லாமல் எழுதி இருக்கிறார். கலைஞர் அரசால் கட்டப்பட்ட ஜெமினி பாலம் உட்பட பாலங்களில் வசதியாக செல்லும்போது ஒரு கணம் மனசாட்சி நிச்சயம் சவுக்கை உலுக்கும். ஒரு உதாரணத்திற்கு, 35 வருடங்களுக்கு முன்பு முதல்முறை ஆட்சிக்கு வந்த போதே மனிதனை மனிதனே கைவண்டியில் வைத்து, மாடு போல இழுக்கும் அவலம் ஒழியட்டும் என்று கருணை உள்ள்த்துடன் கைரிக்ஷாக்களை ஒழித்து அவர்களுக்கு அரசு செலவில் சைக்கிள் ரிக்ஷா கொடுத்தவர் கலைஞர். ஆனால் ரிக்சாக்காரன் படத்தில் நடித்ததால் அந்த ரிக்ஷாக்காரர்கள ் கூட அதிமுகவிற்கு தான் ஓட்டு போட்டு இருப்பர். நன்றி கெட்ட உலகமடா நான் அறிந்த பாடமடா என்ற பாடல் வரிகள் ஞாபகத்திற்கு வருகிறது. திமுக ஆட்சியிலும் ஊழல் இருந்தாலும், மக்களுக்கு நன்மை தரும் பல நல்ல வளர்ச்சித்திட்ட ங்கள், வேலை வாய்ப்பு, தொழில்சாலைகள் எல்லாம் சிறப்பாக செயல்படுத்தப்பட ும். பொய் பொடா, பொய் கஞ்சா வழக்குகள் இருக்காது (தன்னுடைய ஒப்புதலை குறை கூறியதற்காக நீதிபதி மருமகன் மீதே கஞ்சா வழக்கு பதிவு செய்யப்பட்டது, கவர்னருக்கே பாதுகாப்பில்லாத சூழ் நிலை, அரசின் பழிவாங்க்கும் போக்கை கண்டித்த நீதிபதி மேலேயே கொலை, கற்பழிப்பு,.போலி சான்றிதழ் வழக்குகள் போடப்பட்டு மன உளைச்சல் கொடுக்கப்பட்டது , கோவிலை விட புனிதமான கல்விக்கூடத்தை (ராணி மேரிக்கல்லூரி) யை இடிப்பேன் என்று ஆணவ ஆட்டம் எல்லாம் யார் ஆட்சியில் என்று என்று சவுக்கு போன்றவர்கள் வாசகர்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்).

சவுக்கு தமிழினத்தலைவர் பிரபாகரன் அவர்களின் படத்தை போட்டு தமிழர்களை ஏமாற்றி வருகிறது. சவுக்கின் நோக்கங்கள் என்ன ? விடுதலை புலிகளை தடை செய்ததவர், நுற்றுக்கணக்கான ஈழ ஆதரவாளர்களை என்கவுண்டர் என்ற பெயரில் கொன்று குவித்த ஜெயலலிதாவை ஆட்சில் ஏற்ற்ற சவுக்கு பார்ப்பன பிண வாசனையுடன் சு சாமியின் திரைக்கு பின்னால் இயங்குகிறது. சவுக்கின் வேடம் வெளிச்சத்துக்கு வந்து விட்டது
Quote
 
-13 #12 annamalaiar 2011-03-27 14:06

+19 #11 சவுக்கு 2011-03-27 13:31
சவுக்கு விசிறி அவர்களே... பிரமாதம். கருணாநிதியின் கவிதையை விட, மிகச் சிறப்பாக இருக்கிறது. அப்படியே சந்தடி சாக்கில், சவுக்கின் முகத்தில் குத்து என்றும், சவுக்குக்கு சுளுக்கு என்றும், கருணாநிதிக்கு யோசனை வழங்கி விட்டீர்களோ என்ற சந்தேகமும் எழுகிறது.
Quote
 
+13 #10 sakthy 2011-03-27 13:18
ஏழைகள் பணத்தை கொள்ளை அடித்து வாழும் இந்த துரோகிக்கு இன்னுமா தண்டனை தரப்படவில்லை. இந்தத் தேர்தலில் தண்டனை கிடைக்கும் என எதிர் பார்க்கிறோம். அது மட்டும் போதாது. தனியாக இருந்த தவிக்க வேண்டும்.கண்ணீர் வடிக்க வேண்டும். எல்லோராலும் வெறுத்து ஒதுக்கப்பட வேண்டும்.
Quote
 
0 #9 KK 2011-03-27 11:56
OUTLOOK OPINION POLL PREDICTS AIADMK WIN
Tamilnadu Assembly Elections Opinion Poll – AIADMK Set for Return
March 17, 2011 · Author: editor· Category: /
The OUTLOOK-MDRA opinion poll for the forthcoming assembly elections in the state of Tamilnadu indicate that AIADMK headed by Jaylalitha will be back in power according to 54% of the people.

AIADMK has formed an alliance with DMDK (a party led by a popular former film star Vijaykanth). In the previous state election, DMDK was not part of any alliance and had won a single seat. However, it had garnered a vote share of ~8%, which is quite significant. Therefore, the DMDK-AIADMK alliance could meaningfully hurt DMK’s prospects. Another strong factor in support is, since 1984, DMK and AIADMK have led the government alternately.

Rampant Corruption together with high Inflation is likely to hurt the Congress DMK alliance. Alleged involvement of former telecom minister A. Raja (member of DMK party) in the 2G scam has hurt the party’s image.
Quote
 
+8 #8 சைதை அஜீஸ் 2011-03-27 11:26
தேர்த்தல் கமிஷனுக்கு ஒரு வேண்டுகோள். மனைவி உயிரோடு இருக்கும் போது மற்றொரு பெண்ணை மணப்பது, இந்திய சட்ட விதிப்படி, கிரிமினல் குற்றம். தாத்தா இந்திய சட்டத்தையே மதிக்காததால், இதையே ஒரு காரணமாக கருதி அவருடைய வேட்புமனுவை நிராகரிக்கவும். தாத்தா தனக்கு ஒரு மனைவிதான் என்று கூறி தகிடுதத்தம் பண்ணினால், வேட்புமனுவில் தவறான தகவல் (ராசாத்தி யாரு...அவருடைய சொத்தை ஏன் தன் மனுவில் குறிப்பிட்டார்?) தந்ததன் அடிப்படையில் வேட்புமனுவை நிராகரிக்கவும்.
இவ்வாறு செய்வதால் இரண்டு நன்மைகள் ஏற்படும்.
1. இதுவரை தோல்வியை சந்திக்காத தாத்தாவின் வேட்புமனுவையே நிராகரித்து, அவருக்கு ஓய்வு கொடுப்பது.
2. தேர்த்தல் கமிஷன் தன்னுடைய அதிகாரத்தை சரியாக பயன்படுத்தி மக்களுக்கு நன்மை செய்தல். அடுத்த முறை ஒழுக்கமில்லாதவர ்கள் தேர்த்தலில் போட்டியிட தயங்குவர்.
நம்புவோமா தேர்த்தல் கமிஷனை?
Quote
 
+1 #7 jaya 2011-03-27 11:22
இந்த நாதாரி அடிச்ச கொள்ளையை பற்றி ஊருக்கே தெரியுமே . இதுஒரு பேஜ்? டைம் வேஸ்ட்
Quote
 
+1 #6 ம.பொன்ராஜ் 2011-03-27 10:47
இப்படி தனித் தனியா பட்டியல் இடுவதற்கு பதிலாக கலைஞர் குடும்பத்தின் சொத்து என்று அந்த ஐந்து எழுத்து வார்த்தையை சொல்லியிருக்கலா ம் 'சவுக்கு'...!!!
Quote
 
+7 #5 Kumar.T 2011-03-27 10:02
ஆஹா அருமையான கவிதை..இதை படித்தவுடன் எனக்குள் ஒரு கவிதை ஊற்று பீறிட்டு வருகிறது...

அண்ணா சாலையில் வோல்டாஸ் நிலம் இருப்பதால் அதை அன்னமிட்டு பொங்கலிட்டு உண்ணத்தான் முடியுமா..!
வயற்று பசியாக இருப்பினும் நீ ராயல் பர்னிச்சர் கடையின் இறக்குமதி மர சாமான்களை மர கறி என எண்ணி உண்ண தான் முடியுமா..!
அல்லது பூங்கி ஆடையகத்தின் ஆடை அணிகலன்களை உண்டு பசியாரதான் முடியுமா..!
வறுமையில் பலர் வாட; வளமிகு நீலகிரியில் பல ஏக்கரில் எஸ்டேட் வாங்குவது நீதிதானோ?
வாங்கி போட்ட பொறியியல் கல்லூரிகளை தான் பொரியலாக்கி பசியாரதான் முடியுமா...!
தனக்கே எலாம் எனும் தனியுடமை தகர்த்துத் 230 கோடியை பல்லுயிர் ஓம்பும் பொருட்டு கலைஞர் டிவிக்கு கொடுத்து வையத்தில் இன்பம் காண்பது தன் வாழ்வெடுத்த பயனாகும்...! :-)
Quote
 
+11 #4 தமிழ் பண்டிதர் 2011-03-27 09:53
தி.மு.க = திருடர்களின் முன்னோடி கருணாநிதி

தலைப்பு பிரம்மாதமாகவும் பொருத்தமாகவும் உள்ளது.
Quote
 
+28 #3 சவுக்கின் விசிறி 2011-03-27 09:41
கலைஞர் பேசுகிறார்:
கேட்டாயா உடன்பிறப்பே!
நான் சேர்க்கிறேனாம் சொத்து
அப்படி சொல்கிறவன் முகத்தில் விடு குத்து!

பட்டு வேட்டி அய்யருக்கு சொந்தமா?
குடும்ப ஆட்சி நேரு குடும்பத்துக்கு மட்டும் சொந்தமா?
கோடிகளும் கோபுரங்களும் புருணை சுல்தானுக்குத்த ான் சொந்தமா!
கொஞ்சும் குஷ்பூவும் சுந்தருக்கே சொந்தமா?

செங்கிஸ்கான் கொள்ளை
கோரிமுகமது கொள்ளை
கஜினிமுகமது கொள்ளை
சோமாலிய கொள்ளை-இவற்றை
வரலாற்றில் பிள்ளையாக படித்த போதே
கொள்ளை மீது
எல்லையில்லா கொள்ளை கொண்டேன்!

தனி ஒரு குடும்பம் கொள்ளையடிப்பதை தடுக்க நினைத்தால் இந்த ஜகத்தினை அழிப்போம் உடன் பிறப்பே!

இறுதியாக

தம்பி சவுக்கு !
நீயோர் இழுக்கு!
எனக்கு கிடையாது அப்பழுக்கு!
நீ எழுதுவதை போடு முழுக்கு!
இல்லையேல் உனக்கு சுளுக்கு!
Quote
 
-30 #2 Puthiyavan Raj 2011-03-27 09:02
இப்போது சவுக்கின் நடு நிலை முகமூடி கிழிந்து விட்டது. திமுக ஆட்சியில் நன்மையே இல்லை என்பது போல மனசாட்சி இல்லாமல் எழுதி இருக்கிறார். கலைஞர் அரசால் கட்டப்பட்ட ஜெமினி பாலம் உட்பட பாலங்களில் வசதியாக செல்லும்போது ஒரு கணம் மனசாட்சி நிச்சயம் சவுக்கை உலுக்கும். ஒரு உதாரணத்திற்கு, 35 வருடங்களுக்கு முன்பு முதல்முறை ஆட்சிக்கு வந்த போதே மனிதனை மனிதனே கைவண்டியில் வைத்து, மாடு போல இழுக்கும் அவலம் ஒழியட்டும் என்று கருணை உள்ள்த்துடன் கைரிக்ஷாக்களை ஒழித்து அவர்களுக்கு அரசு செலவில் சைக்கிள் ரிக்ஷா கொடுத்தவர் கலைஞர். ஆனால் ரிக்சாக்காரன் படத்தில் நடித்ததால் அந்த ரிக்ஷாக்காரர்கள ் கூட அதிமுகவிற்கு தான் ஓட்டு போட்டு இருப்பர். நன்றி கெட்ட உலகமடா நான் அறிந்த பாடமடா என்ற பாடல் வரிகள் ஞாபகத்திற்கு வருகிறது. திமுக ஆட்சியிலும் ஊழல் இருந்தாலும், மக்களுக்கு நன்மை தரும் பல நல்ல வளர்ச்சித்திட்ட ங்கள், வேலை வாய்ப்பு, தொழில்சாலைகள் எல்லாம் சிறப்பாக செயல்படுத்தப்பட ும். பொய் பொடா, பொய் கஞ்சா வழக்குகள் இருக்காது (தன்னுடைய ஒப்புதலை குறை கூறியதற்காக நீதிபதி மருமகன் மீதே கஞ்சா வழக்கு பதிவு செய்யப்பட்டது, கவர்னருக்கே பாதுகாப்பில்லாத சூழ் நிலை, அரசின் பழிவாங்க்கும் போக்கை கண்டித்த நீதிபதி மேலேயே கொலை, கற்பழிப்பு,.போலி சான்றிதழ் வழக்குகள் போடப்பட்டு மன உளைச்சல் கொடுக்கப்பட்டது , கோவிலை விட புனிதமான கல்விக்கூடத்தை (ராணி மேரிக்கல்லூரி) யை இடிப்பேன் என்று ஆணவ ஆட்டம் எல்லாம் யார் ஆட்சியில் என்று என்று சவுக்கு போன்றவர்கள் வாசகர்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்).
Quote
 
+6 #1 kollai karan 2011-03-27 08:36
இலவசம் என்பதற்கு இரண்டு அர்த்தம் உண்டு, ஒன்று கையூட்டு, மற்றொன்று பிச்சை. இதில் நீ எந்த வகை?
Quote
 
Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English

தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 61 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday2810
mod_vvisit_counterYesterday10087
mod_vvisit_counterThis week2810
mod_vvisit_counterLast week78861
mod_vvisit_counterThis month215629
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12737748