முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
சோழியன் குடுமி சும்மா ஆடாது…. அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 32
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
திங்கட்கிழமை, 28 மார்ச் 2011 01:31

கிராமங்களில் சோழியன் குடுமி சும்மா ஆடுமா என்று ஒரு பழமொழி உண்டு.   என்ன பொருள் என்றால், எதை எடுத்தாலும் ஒரு ஆதாயம் இல்லாமல் அந்தக் காரியத்தில் அவன் இறங்க மாட்டான் என்பது.

 

இன்று கருணாநிதியும், கழக உடன்பிறப்புகளும், திமுக அரசின் சாதனைகளைப் பாரீர், பாரீர், என்று தெருவெங்கும் கூவிக்கொண்டு இருக்கிறார்கள்.

 

பின்னூட்டம் இடும் அன்பர்கள் சிலரும், கருணாநிதி ஆட்சியில் நல்ல திட்டங்களே கொண்டு வரப்படவில்லையா என்று கேட்கிறார்கள்.

 

இந்தச் சாதனைகளில் குறிப்பிடத் தக்கன இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி கலைஞர் வீட்டு வசதித் திட்டம், கலைஞர் காப்பீட்டுத் திட்டம், ஒரு ரூபாய் அரிசி போன்றவை.   இதில் ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

 adfads

முதலில் இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டித் திட்டத்தை எடுத்துக் கொள்வோம்.

 

ஐந்து கட்டங்களாக, இது வரை ஒரு கோடியே 62 லட்சம் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் கொள்முதல் செய்யப் பட்டுள்ளன. அரசு காண்ட்ராக்டுகளைப் பொறுத்த வரை, குறைந்த டெண்டருக்கு ஒப்பந்தம் வழங்கினாலும், அதில் இரண்டு சதவிகித கமிஷன் கட்டாயம் உண்டு. இது போல, கட்டாயம் கமிஷன் கொடுத்தே ஆக வேண்டும். இந்த இரண்டு சதவிகிதம் எவ்வித விதி மீறலும் இல்லாமல், நியாயமாக டெண்டர் வழங்கினால். விதி மீறல் இருந்தால், இந்த இரண்டு சதவிகிதம் என்பது பத்து சதவிகிதம் வரை உயரும். ஒரு கலர் டிவி சராசரியாக 2300 ரூபாய் விலை வருகிறது.   மொத்தம் 1,62,28,000 கலர் டிவிக்கள். 1,62,28,000 X 2300 =

3732,44,00,000. இதில் இரண்டு சதவிகிதம் 74,64,88,000.   எவ்வளவு சாதாரணமாக 74 கோடியை அடித்திருக்கிறார்கள் பாருங்கள்.

 

மேலும், டெண்டரில் தவறான தகவல் கொடுத்ததற்காக உலக வங்கியால் 2013 வரை தடை செய்யப் பட்டது வீடியோகான் நிறுவனம். இந்த நிறுவனத்துக்கும், கணிசமான அளவு கலர் டிவி சப்ளை செய்வதற்கான ஆணைகள் வழங்கப் பட்டுள்ளன. வீடியோகானுக்கு வழங்கப் பட்ட ஆணைக்கான கமிஷன் நிச்சயமாக இரண்டு சதவிகிதத்திற்கு மேற்பட்டு தான் இருக்கும்.

 

இது தவிரவும், ஒரு வீட்டுக்கு கலர் டிவி வழங்கப் பட்டால், உடனடியான தேவை என்ன ?   கேபிள் இணைப்பு தானே ? தமிழகத்தில் மற்ற மாவட்டங்களில் இல்லாத அளவுக்கு, அதிகமாக கேபிள் இணைப்புகள் இருப்பது, சென்னை மாநகரில் தான்.   ஒரு வாதத்திற்காக, 1,62,28,000 கேபிள் இணைப்புகள் புதிதாக பெறப்படுகின்றன என்று வைத்துக் கொள்வோம். ஒரு கேபிள் இணைப்புக்கு 100 ரூபாய் வாங்குகிறார்கள். இதில் கணிசமான தொகை, சன் குழுமத்தின் சுமங்கலி கேபிள் விஷனுக்குப் போகிறது. ஒரு உதாரணத்திற்கு 100 ரூபாயில் 30 ரூபாய் சன் டிவிக்கு, அதாவது கருணாநிதியின் பேரன்களுக்குப் போகிறது என்று குறைந்த பட்ச அளவீட்டில் எடுத்துக் கொண்டாலும் கூட, 1,62,28,000 கலர் டிவிக்களில் 62 லட்சத்து சில்லரையை தவிர்த்து விட்டு, 1 கோடி என்று மட்டும் எடுத்துக் கொண்டால் கூட, சன் குழுமத்திற்கான மாதாந்திர வருமானம் மட்டும் 30 கோடி. எப்படி இருக்கிறது, இந்த நூதன ஊழல் ?   இதுதான் கருணாநிதி. அதனால் தான் அவர் பனங்காட்டு நரி என்று பாசத்தோடு அழைக்கப் படுகிறார்.

 

அடுத்தபடியாக கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தை எடுத்துக் கொள்ளலாம்.   இந்தியாவில், ஏழை மக்கள் அதிகம் இருப்பதால், அவர்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என்று, மத்திய அரசு பல்வேறு திட்டங்களை இயற்றி வருகிறது. பொது சுகாதாரத்துறை மற்றும் மருத்துவப் பணிகள் துறை என, தமிழ் நாட்டிலும் இலவச மருத்துவ சிகிச்சை வழங்கப் பட்டே வருகிறது. இந்த சுகாதாரத் துறையில் இன்னும் எத்தனை கோடிகளை முதலீடு செய்தாலும், தகும். அத்தனை பற்றாக்குறைகள் இருக்கின்றன. போதுமான செவிலியர்கள் நியமிக்கப் படுவதில்லை. மருத்துவர்கள், கட்டாய பணிக்காலம் முடிந்தவுடன், தனியார் மருத்துவமனைகளுக்கு சென்று விடுகிறார்கள்.   பல மருத்துவமனைகளில் மருத்துவர் பணியிடங்கள் காலியாக இருக்கின்றன.   இந்தக் குறைகளை சீர் செய்து, அரசு மருத்துவமனைகளை செம்மையாக்குவது ஒவ்வொரு அரசின் கடமை. இது ஒன்றும் செய்ய முடியாத காரியமே அல்ல. மிக மிக எளிதாக, புதிய மருத்துவர்களை தேர்ந்தெடுப்பதன் மூலமும், புதிய தலைமைச் செயலக கட்டிடத்தைக் கட்டுவதில் காட்டும் முனைப்பை மருத்துவமனைகள் கட்டுவதில் காட்டுவதன் மூலமும், எளிதாகச் செய்ய முடியும். மேலும், நிதிப் பற்றாக்குறை இருந்தாலும், அதையும் சமாளிக்க முடியும். சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைக்கப் படுகையில், அங்கே தொழில் தொடங்கும், பல்வேறு நிறுவனங்களுக்கு ஐந்தாண்டுகளுக்கு டாக்ஸ் ஹாலிடே என்று அழைக்கப் படும், வரி விலக்கு அளிக்கப் படுகிறது. இதன் மூலம், பந்நாட்டு நிறுவனங்கள் கோடிக்கணக்கில் லாபம் சம்பாதிக்கின்றன. அந்த நிறுவனங்களை, அரசு மருத்துவமனை கட்டித் தரும் பொறுப்பை ஏற்றுக் கொள்ளுமாறு கோரிக்கை வைத்தால், மனமுவந்து ஏற்றுக் கொள்ளும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. தேவைப்பட்டால், அந்த நிறுவனம் கட்டித் தரும் மருத்துவமனைக்கு அந்த நிறுவனத்தின் பெயரையே வைத்தாலும் தவறு இல்லை. ஆனால், இது எதையும் கருணாநிதி செய்யவில்லை. மாறாக, கலைஞர் காப்பீட்டுத் திட்டம் என்ற ஒரு கபோதித் திட்டத்தை இயற்றுகிறார். அதன் படி, ரேஷன் அட்டை வைத்திருப்பவர், இத்திட்டத்தில் ஒரு குறைந்த தொகை செலுத்தி உறுப்பினர் ஆனால், ஆண்டுதோறும், ஒரு லட்சம் வரை, இலவச அறுவை சிகிச்சையை எந்த தனியார் மருத்துவமனையிலும் மேற்கொள்ளலாம் என்பதே அந்தத் திட்டம். ரஷ்யாவிலும், ராமச்சந்திராவிலும், துட்டு கொடுத்து படித்த டாக்டர்களெல்லாம் தங்களிடம் உள்ள அளவில்லா பணத்தை வைத்து புற்றீசல் போல மருத்துவமனைகளை திறந்து, போணியாகாமல் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் அத்தனை பேருக்கும், அரசுப் பணத்தை சுரண்டிக் கொடுப்பதற்காக உருவாக்கப் பட்டதே இந்த கலைஞர் காப்பீட்டுத் திட்டம்.

 007-copy

அது என்னமோ தெர்ல… என்ன மாயமோ தெர்ல…. அரசு ஊழியர் இன்ஷுரன்சும் சரி, கலைஞர் காப்பீட்டுத் திட்ட இன்ஷுரன்சும் சரி. ஸ்டார் இன்ஷுரன்ஸ் நிறுவனத்திற்கே வழங்கப் பட்டுள்ளது. இந்த ஸ்டார் இன்ஷுரன்ஸ், துபாயில் உள்ள, ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சம்பந்தப்பட்டுள்ள எடிசலாட் நிறுவனத்தின் உரிமையாளருக்கு பெரும் பங்கு உள்ள நிறுவனம் என்பது கூடுதல் செய்தி. இந்த ஸ்டார் இன்ஷுரன்ஸ் ஊழலைப் பற்றி எழுதினால், தனிக் கட்டுரை எழுதும் அளவுக்கு ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன. நீங்கள் ஒரு தனியார் மருத்துவமனை வைத்திருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் மருத்துவமனையை கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின் படி அங்கீகரிக்கப் பட்ட மருத்துவமனையாக சேர்த்துக் கொள்வதற்கு, குறைந்த பட்சம் இரண்டு லட்ச ரூபாய் அளவுக்கு வசூல் செய்யப் பட்டுள்ளது. இப்படி லஞ்சம் கொடுத்து, உறுப்பினர் ஆகும் மருத்துவமனை பக்கம் ஏழை பாழைகள் தலைவலி என்று போனால், அவர்கள், படுக்க வைத்து, வயிற்றில் கத்தியை வைக்கிறார்கள். வைத்து விட்டு, ஸ்டார் இன்ஷுரன்ஸிடம் பணம் பெற்றுக் கொள்கிறார்கள். மிக மிக கொடுமையான ஊழல் மட்டுமல்ல இது. அயோக்கியத்தனமானதும் கூட. இந்த அயோக்கியத்தனத்தை தங்கள் சாதனையின் ஒரு பகுதியாக கருணாநிதி ஊர் ஊராக கூறி வருவது, கேலிக்கூத்தின் உச்சக் கட்டம்.

 

அடுத்து ஒரு ரூபாய் அரிசித் திட்டத்தை எடுத்துக் கொள்வோம். இந்த ஒரு ரூபாய் அரிசித் திட்டம் ஓரளவுக்கு விளிம்பு நிலை மக்களுக்கு பயன் தருகிறது என்பது உண்மைதான். ஆனால், விளிம்பு நிலை மக்களுக்காக மட்டும் பொது விநியோகத் திட்டம் செயல்படுவதில்லையே… ஏறக்குறைய ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைவருக்கும் தானே இந்தத் திட்டம் பொருந்தும்.

 

தமிழ்நாட்டில் 1 கோடியே 89 லட்சத்து 93 ஆயிரத்து 206 ரேஷன் கார்டுகள் இருக்கின்றன. இதில் ஒரு ரூபாய் அரிசிக்கு தகுதியான கார்டுகள் மட்டும் 1 கோடியே 78 லட்சம். இந்த குடும்ப அட்டைகளுக்கு வழங்கப் படும் ஒரு ரூபாய் அரிசியை 10 சதவிகிதத்திற்கு மேல் பயன்படுத்தப் படுவதில்லை.   மீதம் உள்ள 90 சதவிகிதத்தில், கேரளாவுக்கும் ஆந்திராவுக்கும் பெரும் பகுதி அரிசி கடத்தப் படுகிறது. கேரளாவில், தமிழ்நாட்டில் உபயோகிக்கத் தயங்கும், கொட்டையான அரிசியை பிடித்தமான உணவாக உண்பார்கள். ஒரு ரூபாய் அரிசியை ஐந்து ரூபாய்க்கு விற்றாலும் ஐந்து மடங்கு லாபம் இல்லையா ? இது போல அன்றாடம் அரிசிக் கடத்தல் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. அரசுக் கணக்குப் படியே, 2006-2007ல் மட்டும் பறிமுதல் செய்யப் பட்ட கடத்தல் அரிசி 1,18,343 க்விண்டால்கள்.   கடந்த ஐந்தாண்டுகளுக்கும் கணக்குப் போட்டுக் கொள்ளுங்கள். இது கருணாநிதியின் காவல்துறை பிடித்த அரிசியின் தொகை. பிடிக்காமல் வெற்றிகரமாக கடத்தப் பட்ட அரிசியின் அளவு, சொல்ல முடியாத அளவுக்கு உள்ளது.

 5-1

மேலும், சமீப காலங்களில், அரிசி மாவு அரைத்து ரெடி மேடாக விற்கும் கடைகள் பெருகியிருப்பதை பார்த்திருப்பீர்கள். ஒரு கிலோ மாவு 20 ரூபாய். 20 ரூபாய்க்கு மாவு தருபவர் பாசுமதி அரிசியிலா மாவு தயாரிப்பார். எல்லாம் இந்த ஒரு ரூபாய் அரிசி தான். மூன்று மடங்கு விலை கொடுத்து, ஒரு கிலோ மூன்று ரூபாய்க்கு வாங்கினாலும், ஒரு கிலோ மாவை 20 ரூபாய்க்கு விற்றால் எத்தனை கொள்ளை லாபம் பாருங்கள் ? இந்த அரிசிக்கான மானியத்தில் பெரும் பகுதி, மத்திய அரசால் வழங்கப் படுகிறது. இப்போது புரிகிறதா ஒரு ரூபாய் அரிசியின் மகிமை ?

 

108 ஆம்புலன்ஸ் சேவை. இந்த ஆம்புலன்ஸ் சேவை என்னவோ பார்ப்பதற்கு பயன் தருவது போல தோன்றினாலும், இதன் பிறப்பே சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.


47608

 

இந்த 108 ஆம்புலன்ஸ் சேவையை செயல்படுத்துவதற்காக, ஒப்பந்தம் செய்து ஆணை வழங்கப் பட்ட நிறுவனம், கருணாநிதி போல, கவனமாக திருடத் தெரியாமல் திருடி மாட்டிக் கொண்ட சத்யம் நிறுவன அதிபர் ராமலிங்க ராஜு வோடு. இந்த நிறுவனத்துக்கு இதற்கான ஆணை வழங்கப் பட்டதிலேயே பெரும் முறைகேடு நடந்திருப்பதாக, அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.   சத்யம் நிறுவனத்தின் முறைகேடுகள் வெளியே வராமல் இருந்திருக்குமானால், மேலும் பல திட்டங்களை சத்யம் நிறுவனத்தோடு செய்து கொள்ள கருணாநிதி தயாராக இருந்தார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

கலைஞர் வீட்டு வசதித் திட்டம். இந்தத் திட்டத்தின் கீழ், குடிசைகளாக இருக்கும் வீடுகளை கான்கிரீட் வீடுகளாக மாற்றித் தரும் திட்டம் இது. இந்த நேரத்தில் கலைஞர் பாராட்டு விழா ஒன்றில், குஞ்சாமணி பேசும் போது, கொடுக்குற தெய்வம் கூரையைப் பிச்சுகிட்டு கொடுக்கும் என்ற வாக்கைக் கூட கலைஞர் பொய்யாக்கி விட்டார். ஏனென்றால், கலைஞர் ஆட்சியில் கூரையே இல்லாமல் எல்லாமே கான்க்ரீட் வீடுகளாம்.

 1580092275_b44db4d2b7_b

குடிசைகளை மாற்றி கான்கிரீட் வீடுகளாக்குகிறோம் என்பதே ஒரு மோசடித் திட்டம். நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக சென்னை மாநகரின் சேரிப் பகுதிகள் என்று அழைக்கப் படும் பகுதிகளில் குடியிருந்த மக்களை, சென்னையை அழகுப் படுத்துகிறோம் என்று, அகற்றி, சென்னையிலிருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் கண்ணகி நகர் என்ற இடத்தில் வீடு கட்டித் தருவதற்கு பெயர் கலைஞர் வீட்டு வசதித் திட்டமா ?   சென்னை நகரின் மாநகராட்சிப் பள்ளிகளில் படித்துக கொண்டிருந்த அந்தக் குழந்தைகள் வேரோடு பிடுங்கப் பட்டு, கண்ணகி நகரில் சென்று தூர எறியப் படுவது வசதியா ?

 

சரி.. இதிலாவது காசு பார்க்காமல் இருப்பார்களா என்று பார்த்தால், இதிலும் காசுதான். “கலைஞருக்கு நன்றி….. கலைஞருக்கு நன்றி” என்று வீட்டு வசதித் திட்டத்தைப் பற்றி எப் எம் விளம்பரம் கேட்டிருப்பீர்கள். இந்த விளம்பரம் தொடர்பாக என்ன நடந்திருக்கிறது என்று பார்ப்போம்.

 

இத்திட்டத்திற்காக செய்யப் பட்ட விளம்பரத்திற்கான மொத்த தொகை, ஒரு கோடியே, 60 லட்சத்து, 71 ஆயிரத்து 827 ரூபாய்.   சரி. இத்திட்டத்திற்கு எதற்காக முதலில் விளம்பரம் ?   உங்கள் குடிசை வீட்டை கான்கிரீட் வீடாக மாற்றித் தருகிறோம், விண்ணப்பம் தாருங்கள் என்று அறிவிப்பு அந்தப் பகுதியில் வெளியிட்டால், அத்தனை பேரும் விண்ணப்பத்தோடு நிற்க மாட்டார்களா ? இதற்கு எதற்காக விளம்பரம்…. அதுவும், மக்கள் பணம் ஒன்றரை கோடியில் ? மேலும் இந்த விளம்பரங்கள் அனைத்தும் 2010-2011 ஆண்டில் மட்டும வழங்கப் பட்டுள்ளன. இந்த விளம்பரங்கள் தேர்தலை மனதில் வைத்து வெளியிடப்பட்டிருக்காதா என்ன ?   யோசித்துப் பாருங்கள். நமது வரிப்பணம், திமுக பிரச்சாரத்திற்கு எப்படி பயன்பட்டிருக்கிறது என்று ?

 

இந்த விளம்பரங்கள் வழங்கியதிலும் நேர்மை இல்லை. எப்எம் ரேடியோவில் வழங்கப் பட்ட விளம்பரங்களில் அதிகபட்ச தொகையான 9 லட்ச ரூபாயை பெற்றிருப்பது கேடி சகோதரர்களின் சூரியன் எப்எம்.

 img703

நாளிதழ் விளம்பரங்களில், தினத்தந்தி, இந்து, மாலைமலர் தவிர்த்து சொல்லிக் கொள்கிறார் போல, ஒரு நாளிதழும் இல்லை. சேம்பிளுக்கு சில நாளிதழ் பெயர்கள்.. குஞ்சாமணியின் விடுதலை, மணிச்சுடர், மதுரை மணி, எதிரொலி, தினச்சுடர், பிற்பகல், தினசரி, தினத்தூது, தினமுரசு போன்றவை.

 img701

விடுதலை ஏடையெல்லாம், குஞ்சாமணியே படிக்க மாட்டார். அப்புறம் எதற்காக அதற்கு விளம்பரம் ? தமிழ் நாளிதழ்களில் ஓரளவுக்கு நல்ல சர்குலேஷன் வைத்திருக்கும் தினமணியின் பெயர் இல்லை. கருணாநிதியின் கைக்கூலியாகவே மாறிப்போய் விட்ட, என்.ராமின் இந்த பத்திரிக்கையில் விளம்பரம் வந்திருக்கிறது. டெக்கான் க்ரோனிக்கிள், இந்தியன் எக்ஸ்பிரஸ் மற்றும் டைம்ஸ் ஆப் இந்தியாவுக்கு விளம்பரமே தரப்படவில்லை என்பது, கருணாநிதிக்கு ஜால்ரா போடாதவர்களுக்குத் தரும் எச்சரிக்கையே.

 

இப்படிப் பட்ட பின்னணியில் தான், கருணாநிதி அரசின் இந்த சாதனைகளை பார்க்க வேண்டும். இப்போது அடுத்ததாக மிக்சி, க்ரைண்டர், வாஷிங் மிஷின், ப்ரிட்ஜ், 35 கிலோ இலவச அரிசி என்ற இவர்களின் அறிவிப்பு மொத்த கஜானாவையும் காலி செய்யவோ என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது…….

 

இந்த ஆட்சி தொடர வேண்டுமா ?

 

Comments  

 
-1 #43 DMK Hero 2011-03-30 16:07
Oru Best conclusion sonna thappa eduthukatheenga ..
DMK la, Avanga kudumbam adikum velila theriathu.

ADMAK la, Mathavanga kudumbam adikum, aana maatikiduvanga

So, Thappa pannalum Nekka, Naasukka pannanum daaaaaaaaaaa
Quote
 
 
+1 #42 Naga 2011-03-30 16:03
Enna keta, yevan oruthan MLA, MP or CM aanalum kootam sekama, thannoda suya arivoda vela pathale pothum.......
Quote
 
 
0 #41 RS 2011-03-29 18:20
What is the alternative Savukku?
Anybody to guarantee that JJ has changed? We have seen how MDMK was ousted. JJ says the list of Candidates was released without her knowledge. If JJ is going to come Sasikala and co would benefit for sure and u would agree that. If there was a 3rd Allianz may be we could vote for. It is better for a known devil than an unknown one!!!
Quote
 
 
+3 #40 Alexander 2011-03-29 15:14
அன்பர்களே, இத்தனை வெட்டவெளிச்சமான உண்மை... இங்கே எனக்குத் தெரிந்து எவனும் ஆழும் தகுதியுள்ளவன் இல்லை... என் அண்ணன்(பிரபகாரன ்) போல் ஒருவன் களத்தில் வார வேண்டும்... இல்லயேல் ராணுவம் ஆள வேண்டும்.. அப்போது தான் இத்தகைய அரசியல் வாதிகளை பாடம் புகட்ட முடியும்

நன்றி - அலெக்ஸ்
Quote
 
 
0 #39 rohan 2011-03-29 14:59
Dear Kalki, what you have said is right. We do not have an alternative right now. Reason, we failed to acknowledge better leaders like Vaiko who is fighting for good cause.. be it Tamil issues or Sterlite or whatever. In today's world it is very difficult to run and maintain a party without winning in elections and we, "The People" let Vaiko down. But we have few promising alternatives in the future.. like Vaiko, Seeman and we may get some more. We should grab those opportunities.

Right now, the need of the hour is to completely destroy DMK and the whole family of MK. If you let them come back to power right now, they will do everything to cover up all their criminal activities. There is no better person to do this job except JJ. Let her finish them and we will wait and watch JJ and the activities of Sasi group. If things are bad.. we have to unite to elect a new leader a new party thereby ending both DMK and ADMK's atrocities forever. There is a little bit of time investment to be made.. but it might be worthy. If things are really really bad and unbearable in ADMK's rule, we might always get President's rule. This is my very humble opinion.
Quote
 
 
+3 #38 தம்பி திருச்சி 2011-03-29 14:41
தி.மு.க கவுன்சிலருக்கு திருச்சியில் அமைச்சர் முன் கன்னத்தில் அறைந்த பொதுமகன்.

நேற்று 28-3-2011 அன்று போக்குவரத்து துறை அமைச்சர் நேரு உறையூர் நெசவாளர் காலனியில் ஓட்டுக் கேட்ட போது உடன் சென்ற அந்த பகுதி கவுன்சிலருக்கு
குறைகளை சொன்ன போது சரி செய்ய வராத நீ எப்படி ஒட்டுக்கேட்டு வரலாம் என பொதுமகன் ஒருவர் பளார் என கன்னத்தில் விட்டுள்ளார்
அப்போது கே என் நேருவின் அருகில் இருந்தார் என்பது குறிபிடத்தக்கது .
Quote
 
 
+1 #37 kumar12 2011-03-29 08:53
Quoting Puthiyavan Raj:
ஜெயலலித்தா ஆட்சியில் செய்யாத ஊழல்களா? எந்த அரசியல் வாதி தான் ஊழல் செய்யவில்லை? ஊழலின் அளவு மாறும். அவ்வளவே.!மற்றபடி ஊழல் செய்யாத அரசியல் வாதியே கிடையாது. அப்படி ஒருவர் வரப் போவதும் இல்லை. மக்கள் தெளிவாக உள்ளனர். அவர்கள் சொல்வது "நீ எவ்வளவு அடித்தாய் என்பது எனக்கு முக்கியம் அல்ல. அப்படி அடித்தாலும் மக்களுக்கு என்ன செய்தாய் என்பதே முக்கியம்.' அப்படி பார்க்கையில் தமிழினத் தலைவர் கலைஞரே மக்களுக்கு நிறைய செய்துள்ளார். டி.வி டெண்டரிலோ, காப்பீட்டு திட்டத்திலோ ஊழல் இருக்கலாம். அனால் அது மக்களை போய் சேர்ந்தது என்பதை யாராலும் மறுக்க முடியாது. அது தான் கலைஞர்.

ஜால்ரா புதியவன் ராஜ் அவர்களே சரியாக சொன்னிர்கள். திட்டங்கள் மக்களுக்கே போகிறது. ஆம் கலைஞர் மக்களுக்கும் பேரன்களுக்கும் போகிறது.
Quote
 
 
+2 #36 Kalki 2011-03-29 04:46
Do you have a better alternate is the basic question ? Scams in schemes, its ur tax money etc etc..all these every one knows..What is the alternate Savukku is putting forward ? ..Savuku is only trying to brand DMK as bad..let it be..but how extreme you can go..it cannot come near the craziness of ADMK Amma ..Any objections to this statement ?
Quote
 
 
0 #35 ramasami 2011-03-28 23:27
மதிப்புக்குரிய 'சவுக்கு' அவர்களுக்கு வணக்கம். நன்றி எனது முந்தைய சுட்டியை அனுமதித்ததற்கு.

தங்களுக்குப் சரியாகப் பட்டால் இப்பின்னூட்டத்த ை பிரசுரிக்கவும்.

கனிமொழியின் துறைமுகப் பணி
http://othisaivu.wordpress.com/2011/03/28/post-3/

உங்கள் பணி தொடரட்டும்.
Quote
 
 
+1 #34 vaedhampudhidhu 2011-03-28 23:09
Quoting rameshkannan_ua e1978:
yov savukku antha pombala vanthu unnai potavula pottathan nee sari varuve
oru tamilina virothiyai(jaya ) yean ippadi support panre vekkamailla
unnai nadunilai vatthi nu ninachen
aana nee kannada avalukku support panre

Ava tamizh virothina indha telungan karunanidhiya enanu soluva? un ammavuku purushanna????
Sarithiratha konjam thirumbi paarungada. oosi illa illai votuku pitchai podra arisila pongi thinu polapa ootum una maadiri aalungaluku kovanatha uruvi dress thachu unakae ilavasamnu kodupaan apyum karunanidhi vaazhganu soluva..
Quote
 
 
+4 #33 உடன்பிறப்பு 2011-03-28 22:35
'கலைஞர்' என்பது ஒரு தமிழ் வார்த்தை ..... ஆனால் இந்த வார்த்தையை தனக்கே உரிய சொந்தமாக்கி கொண்டுள்ளார்... இது தான் தமிழில் ஒரு வார்த்தை அழிந்து போக காரணம்...... ஆயிரம் கலைஞர்கள் தமிழகத்தில் உள்ளனர், பின்பு இவரை மட்டுந ஏன் கலைஞர் என அழைக்க வேண்டும்.... ??? இவ்வாறு அழைப்பதை மக்கள் குறைக்க வேண்டும்.......
Quote
 
 
+2 #32 KK 2011-03-28 21:59
A JOKE ABOUT THANGABALU IN DINAMALAR VASAGAR
Arumugam Eswaran - Tirupur,இந்தியா 2011-03-28 17:12:01 IST Report Abuse
சுமார் இருபது ௦ வருடங்களுக்கு முன்பு வெளிநாட்டில் வேலை வாங்கித்தருகிறே ன் என்று பல பேரிடம் காசுவாங்கிக்கொண ்டு ரூ.ஒரு லட்சத்தை ஏப்பம் விட்டவர் தான் கோல்டன் மில்க். இவர் தற்போது தனது மனைவியிடமும் உன்னை எம்.எல்.ஏ.வாக ஆக்குகிறேன் எனக்கூறி மாமனாரிடம் இருந்து காசு வாங்கிக்கொண்டு, கடைசி நேரத்தில் காலை வாரிவிட்டு தானே எம்.எல்.ஏ.வாக முடிவெடுத்து விட்டார்..அட அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா...Rate it: 0 0 Share this comment
Quote
 
 
+3 #31 வெத்துவேட்டு 2011-03-28 20:26
Quoting DMDK:
பா.ம.க. வினர் 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை நாட்டில் உள்ள மரங்களை எல்லாம் வெட்டி நாசமாக்கினார்கள ். இப்போது பசுமை தாயகம் என்ற பெயரில் அமைப்பு தொடங்கி மரம் நடச் சொல்கின்றனர். மதுவை ஒழிப்போம், டாஸ்மாக் கடைகளை விரட்டுவோம் என கொள்கை வீராப்புடன் முழங்கியவர்கள் இன்று டாஸ்மாக் கடைகளை நடத்தும் தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துள்ளனர்.

குரங்கு மரம் விட்டு மரம் தாவுவது போல ஒவ்வொரு தேர்தலிலும் பா.ம.க. கூட்டணியை மாற்றிக் கொண்டே இருக்கிறது. தி.மு.க. ஆட்சியில் விலை வாசி உயர்வு, மின்வெட்டு போன்ற பிரச்சினைகளால் பொதுமக்கள் பல்வேறு தொல்லைகளுக்கு ஆளாகியுள்ளனர்.



எப்படி குடிகார விஜயகாந்த் , ஊற்றி குடுக்கும் அம்மாவின் பாதங்களில் சரணாகதி அடைந்தது போல.
Quote
 
 
+2 #30 தூயவன் 2011-03-28 20:17
நடக்கக்கூட தெம்பில்ல. இந்த நாடு கிழவர்கள் கையில் சிக்கி நாசமா போச்சு
Quote
 
 
+3 #29 jaya 2011-03-28 19:26
ஆக ஊழல் செய்தாலும் கிழவன் திட்டம் கொண்டு வருகிறார். என்று சில திமுக சொம்புகள் சொல்லுது. இலவசம் என்று சொல்லி அதில் கமிசன் பார்க்கும் பணம் யாரோடது.உன்னோடது.கிழவன் தன கைபனதைய போட்டு திட்டம் கொண்டு வரான்? அரசு பணம். உன் வரிப்பணம். இப்பவே ஒரு லட்சம் கடன் உள்ளது. இன்னும் இலவசம் கொடுத்தால் பத்து லட்சம் கோடி கடன் வரும். அதெல்லாம் உன் பயன், பேரன் தலையில் வந்து விழும.பர்வைல்லையா?
Quote
 
 
+3 #28 SURVEY 2011-03-28 18:43
காங். கருத்துக் கணிப்பில் 77 இடங்கள்

காங்கிரஸ் கட்சி சார்பில் நடத்தப்பட்ட ரகசிய கருத்துக் கணிப்பில் திமுக-காங் கூட்டணிக்கு 77 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என தெரிய வந்துள்ளதாம்.

அதிமுக கூட்டணிக்கு 152 இடங்கள் கிடைக்கும் என்றும் இதில் தெரிய வந்துள்ளதாம். இடதுசாரிகளுக்கு 4 இடங்களும், பாஜகவுக்கு ஒரு சீட்டும் கிடைக்கும் என இந்தக் கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளதா ம்.

புதுச்சேரியில் 11 இடங்கள்
புதுச்சேரியில் திமுக, காங்கிரஸ் கூட்டணிக்கு 11 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்றும் காங்கிரஸ் கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது . அதிமுக கூட்டணிக்கு 19 இடங்கள் கிடைக்குமாம்.
Quote
 
 
0 #27 DMK 2011-03-28 18:11
தமிழக கூடுதல் டிஜிபி எஸ். ஜாங்கிட், திருவள்ளூரில் உள்ள மத்திய போலீஸ் தேர்வு பள்ளியின் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டு ள்ளார்.

இதற்கான உத்தரவை அரசின் முதன்மைச் செயலர் கே. ஞானதேசிகன் இன்று பிறப்பித்துள்ளா ர்.

தமிழ்நாடு காவல்துறைக் கக்ழகத்தின் ஐ.ஜி.,யாக பி. பாலசுப்பிரமணியம ் நியமிக்கப்பட்டு ள்ளார்.

ஏ. பாரி, சமூக நீதி மற்றும் மனித உரிமைகளுக்கான டி.ஐ.ஜி.,யாக நியமிக்கப்பட்டு ள்ளார்.

சென்னை குற்றப்பிரிவு (சிறப்பு புலனாய்வுக் குழு) டி.ஐ.ஜி.,யாக ஒய். ஜான் நிக்கோல்சன் நியமிக்கப்பட்டு ள்ளார்.

காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த ஏ.ஜி. பாபு, காவல்துறை தலைமையகத்தில் உதவி ஐ.ஜி.,யாக நியமிக்கப்பட்டு ள்ளார்.

சென்னை போலீஸ் பயிற்சி பிரிவு௨க்கான எஸ்.பி.,யாக ஆர். சின்னசாமி நியமனம் செய்யப்பட்டுள்ள ார்.
Quote
 
 
+2 #26 DMDK 2011-03-28 18:10
பா.ம.க. வினர் 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை நாட்டில் உள்ள மரங்களை எல்லாம் வெட்டி நாசமாக்கினார்கள ். இப்போது பசுமை தாயகம் என்ற பெயரில் அமைப்பு தொடங்கி மரம் நடச் சொல்கின்றனர். மதுவை ஒழிப்போம், டாஸ்மாக் கடைகளை விரட்டுவோம் என கொள்கை வீராப்புடன் முழங்கியவர்கள் இன்று டாஸ்மாக் கடைகளை நடத்தும் தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துள்ளனர்.

குரங்கு மரம் விட்டு மரம் தாவுவது போல ஒவ்வொரு தேர்தலிலும் பா.ம.க. கூட்டணியை மாற்றிக் கொண்டே இருக்கிறது. தி.மு.க. ஆட்சியில் விலை வாசி உயர்வு, மின்வெட்டு போன்ற பிரச்சினைகளால் பொதுமக்கள் பல்வேறு தொல்லைகளுக்கு ஆளாகியுள்ளனர்.
Quote
 
 
0 #25 R.Puratchimani 2011-03-28 17:25
Good Analysis. 108 Ambulance issue lacks depth. I think this is a good scheme even if there is a scheme.
Over all your analysis is good. Keep it up your good work Savukku.
Quote
 
 
+12 #24 Kumar.T 2011-03-28 15:04
இங்கே கருத்து சொல்லும் சிலர் கருணாநிதி உழல் செய்தாலும் ஏதோ செய்கிறாரே என்று கேட்கிறார்கள்...
ஒன்று புரிந்து கொள்ளுங்கள் இங்கே செயல் படுத்தப்படும் எல்லா திட்டங்களுமே கடன் வாங்கித்தான் செய்யபடுகிறது... தற்போது வாங்கிய கடனுக்கு வட்டியாகவே மொத்த வருவாயில் 30% சென்று விடுகிறது மீதம் உள்ள வருவாயில் தான் வளர்ச்சி பணி, ஊதியம் என்று செலவாகிறது .. கடன் அதிகம் வாங்கும் போது வட்டி சுமை அதிகமாகி அது வளர்ச்சி பணியை பாதிக்கும்... இறுதியில் எல்லாத்துக்கும் சேர்த்து வரி போட்டு நமக்கு தான் கசப்பு மருந்து கொடுப்பார்கள்... :-)

வாங்கிய கடனில் வளர்ச்சி பணி செய்தால் அதில் இருந்து லாபம் வரும் ( உதாரணம் மெட்ரோ ரயில் திட்டம் ).
இலவச திட்டங்கள் எல்லாமே நம் எதிர் கால தலைமுறையிடம் இருந்து திருடி தான் நமக்கு கொடுக்க படுகிறது என்பதை முதலில் உணருங்கள்...
Quote
 
 
+3 #23 N Dayanithi 2011-03-28 13:57
Thanks for your kind information about this fraud government... keep moving...
We must take effort then only see the brightness in our life... don't expect the free things which is announced by fraud karunanidhi...
In West bengal, Mamta Banerjee Announced some schemes for people to defeat the government which is ruled by Communist last 24 years..there is no free things there.. SO

Think and vote
Quote
 
 
-9 #22 rameshkannan_uae1978 2011-03-28 13:19
yov savukku antha pombala vanthu unnai potavula pottathan nee sari varuve
oru tamilina virothiyai(jaya ) yean ippadi support panre vekkamailla
unnai nadunilai vatthi nu ninachen
aana nee kannada avalukku support panre
Quote
 
 
+4 #21 jaya 2011-03-28 13:17
[quote name="விகடகவி"]இந்த திராவிட கட்சிக்காரனுக, பார்பன எதிர்ப்பு, சுயமரியாதை இயக்கம் அப்படி இப்படின்னு மேடையில பேசி பேசியே ஆட்சியை பிடிச்சானுக. இப்போ பார்த்தால் இவனுக பண்ணுறது பார்பனுக அந்த காலத்துல பண்ணியதைவிட கொடுமையாக இருக்கு. எல்லாத்தையும் உருவிட்டு விட்டுடானுகளேய் யா. :sad:

உங்களை மாதிரி ஒரு நேர்மையான அதிகாரி எடுத்துச் சொல்லுறதனால் தான் மெத்த படிச்ச எங்களுக்கே புரியுது. கருணாநிதி ஒரு பிறவி ஊழல்வாதி. ஊழலிலேயே ஊரிப் போன ஒருவனால தான் இப்படியெல்லாம் புது புது ஊழல்களை செய்ய முடியும்.

இவன் பண்ணுறதையெல்லாம ் பார்த்துட்டு அந்த அம்மாவும் இந்த டெக்னிக்கையெல்ல ாம் ஃபாலோ பண்ணும். அது பண்ணாட்டியும் அந்த அம்மாவோட 'சகோதிரியும்', அந்த குண்டுப் பயலுகளும் பண்ணத்தான் போறானுக.

மக்களாகிய நாம களத்துல இறங்காதவரை இதுக்கு ஒரு முடிவு கட்ட முடியாது. பிரபுக்களை ஓட ஓட விரட்டி அடித்த பிரஞ்சு புரட்சி மாதிரி ஒன்னு பண்ணாமல் நமக்கு விடிவுகாலம் கிடையாது.[JAYA QUOTES:]
அட நாதாரி.. நீ இருப்பது எப்போதும் இலவச மயக்கத்தில் கிடக்கும் தமிழன் ஊரு. இங்கு பிரெஞ்சு புரட்சியா? ஒரு மன்னாங்கட்டியும ் வராது.. காசு கொடுத்தால் கூட வராது. ஒருவேளை டாஸ்மாக் கூடிக்கொண்டு போனால் வரலாம். போதை இறங்கியவுடன் மறுபடி ஏதானும். இல்லை என்றல் ஒன்னுமே ஒன்னுக்கு கூட வராது
--
Quote
 
 
-4 #20 jaya 2011-03-28 13:13
[quote name="Puthiyavan Raj"]ஜெயலலித்தா ஆட்சியில் செய்யாத ஊழல்களா? எந்த அரசியல் வாதி தான் ஊழல் செய்யவில்லை? ஊழலின் அளவு மாறும். அவ்வளவே.!மற்றபடி ஊழல் செய்யாத அரசியல் வாதியே கிடையாது. அப்படி ஒருவர் வரப் போவதும் இல்லை. மக்கள் தெளிவாக உள்ளனர். அவர்கள் சொல்வது "நீ எவ்வளவு அடித்தாய் என்பது எனக்கு முக்கியம் அல்ல. அப்படி அடித்தாலும் மக்களுக்கு என்ன செய்தாய் என்பதே முக்கியம்.' அப்படி பார்க்கையில் தமிழினத் தலைவர் கலைஞரே மக்களுக்கு நிறைய செய்துள்ளார். டி.வி டெண்டரிலோ, காப்பீட்டு திட்டத்திலோ ஊழல் இருக்கலாம். அனால் அது மக்களை போய் சேர்ந்தது என்பதை யாராலும் மறுக்க முடியாது. அது தான் கலைஞர்.[JAYA]
அட நாதாரி செலவு பண்ண பணம் யாருடாது? கிழவன் கையில் இருந்து செலவு செய்தனா? எல்லாம் நம்ம பணம்.. முதலில் சுய நினைவோடு கமெண்ட் போடு. டாஸ்மாக் போய்ட்டுவந்து எழுதாதே.
--
Quote
 
 
+4 #19 jaya 2011-03-28 13:11
[quote name="Hari"]16280000 X 100 = 162,80,00,000 என்ன கணக்கு என்று பார்க்கிறீகளா, கொடுக்கப்பட்ட இலவச டிவிகளுக்கு கேபிள் கனெக்சனால் வரும் தொகை. கேபிள் டிவி வருமானம் கலைஞர் குடும்பத்துக்கு ஒவ்வொரு மாதமும். அழகிரி ஒரு பக்கம், கலாநிதி ஒருபக்கம் என்று தமிழகத்தின் கேபிள் டிவி இணைப்பு இவர்கள் கையில் மாதம் 162 கோடி ரூபாய் வருமானம் இதில் செலவு போக எத்தனை கோடி கையில் நிற்கும் என்பதை கணக்கிட்டு கொள்ளுங்கள் ஒரு வருடத்திற்கு எத்தனை கோடி இந்த கேடிகளுக்கு கிடைக்கிறது என்பதையும் நீங்களே கணக்கிட்டுகொள்ள ுங்கள்.[jAYA quote]
இவர்களுக்கு என்னைய செலவு எல்லாமே ஓசிதான்.. பொம்பளை உட்பட...
Quote
 
 
+4 #18 jaya 2011-03-28 13:06
சிரிப்பு தான் வருகிறது! எம்.காந்தி, திருக்கழுக்குன் றத்திலிருந்து எழுதுகிறார்: முதியோருக்கு உடல்நலக் கோளாறு ஏற்பட்டால், வீட்டுக்கே வந்து, அரசு மருத்துவர்கள் சிகிச்சை செய்வர் என, ஆளுங்கட்சியின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. இதைக் கேட்கையில் சிரிப்பு தான் வருகிறது. அவசர சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைகளுக ்கு தூக்கிச் சென்றாலே, உடனடி சிகிச்சை செய்யப்படுவது இல்லை. சாதாரண நோயாக இருந்தால் கூட, "இங்கு முடியாது... தாலுகா மருத்துவமனைக்கு கொண்டு போங்கள்' என, தட்டிக் கழிப்பர். தாலுகா மருத்துவமனைக்கு ச் சென்றால், "மாவட்ட மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லுங்கள்' என அலைக்கழிப்பர். இவர்கள், வீட்டுக்கே வந்து சிகிச்சை அளிப்பராம்! 21ம் நூற்றாண்டின் சிறந்த நகைச்சுவை இது. முதியோரை, நோயுற்றவர்களை, எப்பாடுபட்டாவது அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல, உறவினர்கள், அண்டை அயலார் தயாராக உள்ளனர். அரசு மருந்துவமனையில் , மருத்துவர்களும் , தரமான மருத்துவ உபகரணங்களும், உயர்தர மருந்துகளும், தண்ணீரும் உள்ளதா என, மக்கள் கேள்வி எழுப்புகின்றனர் . தங்கள் வீட்டு நாய்க்கு அடிப்பட்டாலோ, நோயுற்றாலோ கூட, அரசு மருத்துவமனைகளுக ்கு, அரசியல்வாதிகள் எடுத்துச் செல்வதில்லை; தனியார் மருத்துவர்களையே நாடுகின்றனர். இந்த நிலை மாறினால், அரசு மருத்துவமனைகள் உருப்பட்டு, மக்களுக்கு பயன்படும். ஆட்சிக்கட்டிலில ் அமர ஆசைப்படுவோர், முதலில் இதற்கு உத்தரவாதம் தந்து, உறுதிமொழி அளிக்க வேண்டும்.
Quote
 
 
+3 #17 pandiyan 2011-03-28 13:00
THIS ARTICLE TITLE IS PERFECUTLY SUITS FOR YOU .....சோழியன் குடுமி சும்மா ஆடாது…. சோழியன் குடுமி சும்மா ஆடாது…. சோழியன் குடுமி சும்மா ஆடாது…. சோழியன் குடுமி சும்மா ஆடாது…. MAY BE YOU / FAMILY ARE BIG BENEFICIARY THATS WHY YOU ALWAYS SUPPORT DMK COURRPTIIONS. SO சோழியன் குடுமி சும்மா ஆடாது…. சோழியன் குடுமி சும்மா ஆடாது…. Quoting Puthiyavan Raj:
ஜெயலலித்தா ஆட்சியில் செய்யாத ஊழல்களா? எந்த அரசியல் வாதி தான் ஊழல் செய்யவில்லை? ஊழலின் அளவு மாறும். அவ்வளவே.!மற்றபடி ஊழல் செய்யாத அரசியல் வாதியே கிடையாது. அப்படி ஒருவர் வரப் போவதும் இல்லை. மக்கள் தெளிவாக உள்ளனர். அவர்கள் சொல்வது "நீ எவ்வளவு அடித்தாய் என்பது எனக்கு முக்கியம் அல்ல. அப்படி அடித்தாலும் மக்களுக்கு என்ன செய்தாய் என்பதே முக்கியம்.' அப்படி பார்க்கையில் தமிழினத் தலைவர் கலைஞரே மக்களுக்கு நிறைய செய்துள்ளார். டி.வி டெண்டரிலோ, காப்பீட்டு திட்டத்திலோ ஊழல் இருக்கலாம். அனால் அது மக்களை போய் சேர்ந்தது என்பதை யாராலும் மறுக்க முடியாது. அது தான் கலைஞர்.
Quote
 
 
+10 #16 jaya 2011-03-28 12:19
ஷ் ....ஷ்.... ஷ்.... இப்பவே கண்ணை கட்டுதே... இன்னும் 5 வருசமா? செல்லாது செல்லாது... கடைசி சொட்டு ரத்தம் வரை உறிஞ்ச்மல் விட மட்டாக போல இருக்கே....
Quote
 
 
+1 #15 Robert 2011-03-28 12:11
Ithu makkal arasu, thannal thanakaka thannalamatta than kudumbathukaka alum makkal arasu.
Valka karunavin kottam valarka avar kudumbam mattum.
Quote
 
 
+5 #14 Hari 2011-03-28 12:08
16280000 X 100 = 162,80,00,000 என்ன கணக்கு என்று பார்க்கிறீகளா, கொடுக்கப்பட்ட இலவச டிவிகளுக்கு கேபிள் கனெக்சனால் வரும் தொகை. கேபிள் டிவி வருமானம் கலைஞர் குடும்பத்துக்கு ஒவ்வொரு மாதமும். அழகிரி ஒரு பக்கம், கலாநிதி ஒருபக்கம் என்று தமிழகத்தின் கேபிள் டிவி இணைப்பு இவர்கள் கையில் மாதம் 162 கோடி ரூபாய் வருமானம் இதில் செலவு போக எத்தனை கோடி கையில் நிற்கும் என்பதை கணக்கிட்டு கொள்ளுங்கள் ஒரு வருடத்திற்கு எத்தனை கோடி இந்த கேடிகளுக்கு கிடைக்கிறது என்பதையும் நீங்களே கணக்கிட்டுகொள்ள ுங்கள்.
Quote
 
 
+1 #13 S.G 2011-03-28 12:06
i do not agree with you.

the benifit people has got is

No power supply, so many MNC are moving to Gujrath,
the medical scheme can be easily obtained by every common man by paying 200 rs per month . this isnt a big money fo a grown tamil nadu.

the growth tamilnadu has attained is not jus because of DMK, but it is because of the hard working people., the govt has tried to supress and make people blind by making them not to think n work.

Quoting Kalki:
Atleast DMK implements few schemes which people are getting benefit'd. Scam in those schemes is a different story.

And when DMK goes out and your JJ comes to power, are you promising better schemes are going to be formulated and implemented properly ?

ADMK cannot even form an alliance properly ? And you are asking us to trust they can rule the state properly.

DMK may have earned money by commissions with schemes, but Tamil Nadu has grown so much in the last 10 years. I personally know many people from my places who have beniefed by insurance scheme who are no way related to DMK.


If you close your eyes and shout the world is dark, its not our fault.

When you have only two choices to choose from, DMK or ADMK, Kalaingar or JJ, people would go for Kalaingar atleast he has some what reliable.

Please publish this.

From,

A common man
Quote
 
 
+3 #12 S.G 2011-03-28 12:03
you forgot to write about the after effect

1.the TV scheme, already power cut ., ithula intha cheap TV consume more power, so daily 2 hrs - 6 hrs power cut.

2. Rs1 rice scheme: they give rice for 1 rs and make u spend 100 rs for other ingredents., and also make you and your family member a drunk., so only then they get money for this scheme, so ppl get money at the cost of their health and thir husband health life.

3.some hospitals for geting money from scheme, they do false operation for poor to claim money,. so risking your life, you go to hospital and get worse day by day.

The tamil people are not beggers, we have a high heritage and history, by doing tis MK familoy is trying to make the rich n cultured tamils as poor n beggers, Please thisnk and VOTE.,
Quote
 
 
-22 #11 Puthiyavan Raj 2011-03-28 11:17
ஜெயலலித்தா ஆட்சியில் செய்யாத ஊழல்களா? எந்த அரசியல் வாதி தான் ஊழல் செய்யவில்லை? ஊழலின் அளவு மாறும். அவ்வளவே.!மற்றபடி ஊழல் செய்யாத அரசியல் வாதியே கிடையாது. அப்படி ஒருவர் வரப் போவதும் இல்லை. மக்கள் தெளிவாக உள்ளனர். அவர்கள் சொல்வது "நீ எவ்வளவு அடித்தாய் என்பது எனக்கு முக்கியம் அல்ல. அப்படி அடித்தாலும் மக்களுக்கு என்ன செய்தாய் என்பதே முக்கியம்.' அப்படி பார்க்கையில் தமிழினத் தலைவர் கலைஞரே மக்களுக்கு நிறைய செய்துள்ளார். டி.வி டெண்டரிலோ, காப்பீட்டு திட்டத்திலோ ஊழல் இருக்கலாம். அனால் அது மக்களை போய் சேர்ந்தது என்பதை யாராலும் மறுக்க முடியாது. அது தான் கலைஞர்.
Quote
 
 
+6 #10 இனியவன் 2011-03-28 11:09
கலைஞர் ஆட்சியில் மட்டுமில்லை. எந்த ஆட்சி வந்தாலும், நடுவணரசாக இருந்தாலும், மாநில அரசாக இருந்தாலும் திட்டங்கள் என்று கொண்டு வரப்பட்ட உடனேயே மக்கள் அச்சமடையுமாறு செய்வதில் இவர்களை மிஞ்ச ஆளில்லை. அதிலும் கலைஞர் விஞ்ஞான ஊழல் புரிவதில் மன்னரல்லவா? கருணா என்பது யார்? ஸ்பெக்ட்ரம் ஊழலின் தலைமை மூளை, பல லட்சம் கோடிகளின் அதிபதி, பல கொலை, கொள்ளை, என்கௌண்டர், கட்டப் பஞ்சாயத்துக்களி ன் நாயகன், நீதித்துறையின் தீர்ப்புகளின் பின்னாலே நடுநாயகமாக வீற்றிருக்கும் நீதியரசர், அரைகுறை ஆடைகளைக் கூட அணியத் துணியாத கேரளா, ஆந்திரா, கன்னட மற்றும் வடநாட்டுப் பெண்டிருடைய மடியிலேயே கொலுவிருக்கும் மன்னர் அல்லவா? எல்லாவற்றிற்கும ் மேலாக தமிழ் இனமே அழிந்தாலும் என் பேரனுக்கும், பிள்ளைக்கும், மருமகனுக்கும் (வேறு யாருங்க, நம்ம ராசா தான்) பதவி கிடைப்பதில் கவனம்!!! இந்தத் தெளுங்கனை நம்புவதில் இது மட்டுமே மிஞ்சும். எதைச் செய்தாலும் தனக்கு என்று பெருந்தொகை கிடைத்தால் போதும் என்று நினைக்கும் சகுனி. இவன் கண்ணை மூடும் வரையில் தமிழ்நாட்டுக்கு விடுதலை கிடையாது.
Quote
 
 
+2 #9 RangarajanPG 2011-03-28 10:53
IF GOD DOES REALLY EXIST, HE WILL PUNISH THE FAMILY MEMBERS OF KARUNANIDHI AND KARUNANIDHI HIMSELF IN A BRUTAL WAY. HE SHOULD NEVER GET BACK INTO POWER. HE SHOULD BE PUT IN THE GALLOWS ALONGWITH HIS FAMILY MEMBERS. THE PEOPLE WHO ONCE WERE WITH POWER SHOULD BE THROWN IN JAIL WITH NO PROPER FOOD AND CLOTHING. THIS SHOULD BE THE PUNISHMENT THESE PEOPLE SHOULD GET. GOD IS WATCHING.
Quote
 
 
+3 #8 சைதை அஜீஸ் 2011-03-28 10:46
மிகச் சரியான கட்டுரைதான் சவுக்கு. ஆனால் கடைசியாக ஒரு கேள்வி கேட்டீர்களே! இந்த ஆட்சி தொடரவேண்டுமா? என்று...
நானும் விரும்பவில்லைதா ன். ஆனால் என்ன மாற்று?
அம்மாவா?
தாத்தாவோ கண்ணுக்கு தெரிகிறார். இந்த அம்மாவோ மர்மமாக இல்லே இருக்கு. தன் கட்சி வேட்பாளர் பட்டியலே தனக்கு தெரியாமல் வெளியிடப்படுகிற து என்கிறார். ஏன் திருரங்கத்தில் போட்டியிடுகிறீர ் என்றால், விமான நிலையத்திலிருந் து இந்த தொகுதிதான் எனக்கு பக்கம் என்கிறார். தன் கூட்டணிக் கட்சிகளை மதிக்கவில்லை. இவரே காங்கிரஸுக்கு தாவ அல்லது தன் கூட்டணிக் கழுத்தை அறுத்து காங்கிரஸ்ஸுடன் ஓட நேரம் பார்த்துக் கொண்டு இருக்கிறார்.
மாற்றாக நினைத்த கேப்டனோ எத்தை தின்னால் பித்தம் தீரும் என்று எண்ணி கடைசியாக அம்மாவோடு இணைந்து (இந்த கூட்டணி காலாவதி ஆகிவிட்டடது என்று ஒரு செய்தி அம்மாவின் புதிய சுற்றுப்ப்பயணத் தால் ஏற்பட்டுள்ளது தனி விஷயம்)2011 ல் ஆட்சியைப் பிடிப்பதை விட்டு 41ல் திருப்தி அடைந்தார். வைகோ காணாமல் போய்விட்டார்/துரத்தப்பட்டார் . தெரியாத தேவதையைவிட தெரிந்த பேயே பரவாயில்லை என்று கூருவதை எண்ணி ஏதேனும் அதிசயம் நடந்து நாம் மீட்கப்படுவோமா என்று ஏங்கும் வாக்காளன்.
Quote
 
 
0 #7 Selva28 2011-03-28 09:22
//Atleast DMK implements few schemes which people are getting benefit'd. Scam in those schemes is a different story.//

TN is developing not because of the government, its because of the private entrepreneurs, its the same reason why the whole south India is growing fast. How giving free TV is helping the state in long term? What we need is less government, not more, government should just restrict itself in developing infrastructure, providing education etc.
Quote
 
 
+7 #6 விகடகவி 2011-03-28 08:00
இந்த திராவிட கட்சிக்காரனுக, பார்பன எதிர்ப்பு, சுயமரியாதை இயக்கம் அப்படி இப்படின்னு மேடையில பேசி பேசியே ஆட்சியை பிடிச்சானுக. இப்போ பார்த்தால் இவனுக பண்ணுறது பார்பனுக அந்த காலத்துல பண்ணியதைவிட கொடுமையாக இருக்கு. எல்லாத்தையும் உருவிட்டு விட்டுடானுகளேய் யா. :sad:

உங்களை மாதிரி ஒரு நேர்மையான அதிகாரி எடுத்துச் சொல்லுறதனால் தான் மெத்த படிச்ச எங்களுக்கே புரியுது. கருணாநிதி ஒரு பிறவி ஊழல்வாதி. ஊழலிலேயே ஊரிப் போன ஒருவனால தான் இப்படியெல்லாம் புது புது ஊழல்களை செய்ய முடியும்.

இவன் பண்ணுறதையெல்லாம ் பார்த்துட்டு அந்த அம்மாவும் இந்த டெக்னிக்கையெல்ல ாம் ஃபாலோ பண்ணும். அது பண்ணாட்டியும் அந்த அம்மாவோட 'சகோதிரியும்', அந்த குண்டுப் பயலுகளும் பண்ணத்தான் போறானுக.

மக்களாகிய நாம களத்துல இறங்காதவரை இதுக்கு ஒரு முடிவு கட்ட முடியாது. பிரபுக்களை ஓட ஓட விரட்டி அடித்த பிரஞ்சு புரட்சி மாதிரி ஒன்னு பண்ணாமல் நமக்கு விடிவுகாலம் கிடையாது.
Quote
 
 
+30 #5 அகோரி 2011-03-28 07:28
கருணாநிதி அய்யாவின் குடும்பத்திற்கு செய்வினை வைத்தாவது அவரை இந்த தேர்தலில் நிச்சயம் தோல்வியடைய செய்வோம். விரைவில் பாருங்கள் மோகினியின் விளையாட்டை. வெயிட் அண்ட் ஸீ.
Quote
 
 
+1 #4 KK 2011-03-28 07:27
HOPE THIS NEWS IS TRUE
The CBI is now set to book the stakeholders of the Kalaignar TV channel in connection with its probe into the 2G spectrum scam.

The CBI is planning to book not only Sharad Kumar, the managing dir-ector of the channel, who is already under scrutiny.

The agency is likely to name at least four persons as accused — former telecom minister A. Raja, his then personal secretary R.K. Chandolia, the then telecom secretary Sid-dhartha Behura and Shahid Balwa of Swan Telecom (now Etisalat-DB Telecom Private Ltd) — in its chargesheet to be filed on March 31.

“At least three companies — Unitech, Swan and Kalaignar TV — are also likely to be named in the chargesheet. The agency is also preparing to name at least two persons (reportedly stakeholders) from Kalaignar TV in the chargesheet”. All the accu-sed and three companies will be booked for forgery and cheating. The name of a Parliament member may be mentioned in the chargesheet for being a part of the telecom company, which is under scanner of the CBI, sources added.
Quote
 
 
0 #3 pandiyan 2011-03-28 07:19
FIRST CHANGE YOUR MINDSET. INDIRECTLY ALL YOUR HARD EARNING MONETY GOES AS BRIBE. THINK / USE BRAIN. EDUCTATION, LICENSE , BUILDING HOUSE, HIGHER EDUCATION, TAX TAX TAX , GETTING LICENSE. YOU PEOPLE ARE GETTING 2000 RS FREE BENEFIT AND PAYING MORE THAN 1L AS A BRIBE. AGRICULTURE IS STILL WORST. IF YOU BENEFITED PERSONALLY IN DMK GOVERNMENT THEN FINE BUT DONT SPOIL THE SOCIETY. Quoting Kalki:
Atleast DMK implements few schemes which people are getting benefit'd. Scam in those schemes is a different story.

And when DMK goes out and your JJ comes to power, are you promising better schemes are going to be formulated and implemented properly ?

ADMK cannot even form an alliance properly ? And you are asking us to trust they can rule the state properly.

DMK may have earned money by commissions with schemes, but Tamil Nadu has grown so much in the last 10 years. I personally know many people from my places who have beniefed by insurance scheme who are no way related to DMK.


If you close your eyes and shout the world is dark, its not our fault.

When you have only two choices to choose from, DMK or ADMK, Kalaingar or JJ, people would go for Kalaingar atleast he has some what reliable.

Please publish this.

From,

A common man
Quote
 
 
-17 #2 Kalki 2011-03-28 06:45
Atleast DMK implements few schemes which people are getting benefit'd. Scam in those schemes is a different story.

And when DMK goes out and your JJ comes to power, are you promising better schemes are going to be formulated and implemented properly ?

ADMK cannot even form an alliance properly ? And you are asking us to trust they can rule the state properly.

DMK may have earned money by commissions with schemes, but Tamil Nadu has grown so much in the last 10 years. I personally know many people from my places who have beniefed by insurance scheme who are no way related to DMK.


If you close your eyes and shout the world is dark, its not our fault.

When you have only two choices to choose from, DMK or ADMK, Kalaingar or JJ, people would go for Kalaingar atleast he has some what reliable.

Please publish this.

From,

A common man
Quote
 
 
+5 #1 MJ 2011-03-28 06:29
Itharku melum makkal intha bayangara kudumbathukku otu poduvargala?Is God really watching? JV-il etho narabali patri kazhugu solli erukkar. is that true Savukku. yaar enru adaiyalam kaati antha pei-iyum narabali kudukka vendum. seiyya mudiyuma?
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 153 விருந்தினர்கள் மற்றும் 1 உறுப்பினர்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday8019
mod_vvisit_counterYesterday11260
mod_vvisit_counterThis week40478
mod_vvisit_counterLast week80132
mod_vvisit_counterThis month243210
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12765329