முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
கைது செய்யப் படுவாரா காமராஜ் ? அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 15
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
வியாழக்கிழமை, 31 மார்ச் 2011 02:16
 
நக்கீரன் காமராஜ் ‘குருமாராஜ்’ என்ற பெயரில் சவுக்கு வாசகர்களுக்கு நன்கு அறிமுகமானவர். திமுக ஆட்சியில் நடைபெற்றுள்ள ஊழல்களில் பல வகையில் பங்கெடுத்தவர். கருணாநிதியைப் போலவே, இவருக்கும் திமுக நிரந்தரமாக ஆட்சியில் இருக்கப் போவதாக ஒரு நம்பிக்கை இருந்தது.

ஸ்பெக்ட்ரம் உள்ளிட்ட பல்வேறு ஊழல்களில் ஈடுபட்ட கருணாநிதியை விட, காமராஜ் மிக மிக மோசமானவர். ஏனென்றால், கருணாநிதி அரசு, கடந்த ஐந்தாண்டுகளாக ஈடுபட்டு வந்த பல்வேறு ஊழல்களை மறைத்து, அரசுக்கு நற்சான்று வழங்கியதோடல்லாமல், மக்கள் அந்த ஊழல்களைப் பற்றி கண்டுகொள்ளாமல் இருப்பதற்கு, செக்ஸ், கிளுகிளுப்பு போன்ற விஷயங்களை பத்திரிக்கையில் எழுதி, பணம் பார்த்ததோடல்லாமல், எதிர்க்கட்சிகளைப் பற்றி மட்டும் பக்கம் பக்கமாக எழுதினார்.   பாமக வை, திமுக கூட்டணியை விட்டு விலக்கிய போது, அதற்கு காரணமாக சொல்லப் பட்ட காடுவெட்டி குரு பேசிய பேச்சை அப்படியே வெளியிட்டு, கருணாநிதிக்கு ஜால்ரா அடித்தார்.

 IMG_9359

நக்கீரன் பத்திரிக்கை என்பது எதிர்ப்புக்களில் உருவானது. நக்கீரன் பத்திரிக்கை சந்தித்தது போன்ற அடக்குமுறைகளை, இந்தியாவில் எந்தப் பத்திரிக்கையுமே சந்தித்திருக்காது என்று உறுதியாகக் கூறலாம். இத்தனை அடக்குமுறைகளையும் தாண்டி, நக்கீரன் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறதென்றால், அதற்குக் காரணம், ஆட்சியில் நடைபெறும் பல்வேறு ஊழல்களை வெளியிட்டதுதான்.

ஆனால், நக்கீரனின் ஜெயலலிதா எதிர்ப்பு என்பது, கோபாலை நடுநிலை தவற வைத்தது. ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்துக்கு, பைப் மூலம் பீர் வரவைக்கிறார்கள் என்று பொய்ச் செய்தி வெளியிடும் அளவுக்கு நக்கீரன் தரம் தாழ்ந்தது.

2006ல் திமுக ஆட்சிக்கு வந்தது முதலாகவே, காமராஜ், பணம் சம்பாதிக்கத் தொடங்கினார்.   காமராஜுக்கு, கருணாநிதியுடன் ஏற்பட்ட நெருக்கம் அதிகமாக, அதிகமாக, செல்வாக்கும் அதிகாரமும் பெருகியது. இந்த அதிகாரத்தை பயன்படுத்தி, சொத்து வாங்கிக் குவிப்பதிலும், கட்டப் பஞ்சாயத்து செய்வதிலும், தீவிரமாக ஈடுபட்டார் காமராஜ். ஆளுங்கட்சியின் ஊதுகுழலாக ஆகிப் போனதால், நக்கீரன் நடத்த பெரிய அளவில் மெனக்கிட வேண்டியதில்லை.

அதனால், இணை ஆசிரியராக இருந்த காமராஜுக்கு, ரியல் எஸ்டேட், கட்டப் பஞ்சாயத்து, காவல் துறை அதிகாரிகள் நியமனம், உயர் அதிகாரிகளோடு நெருக்கமான பழக்கம் என்று தன் வாழ்க்கையை மாற்றிக் கொண்டார். ஸ்பெக்ட்ரம் ஊழலில், முக்கியப் பங்கு வகித்த காமராஜ் ஆண்டிமுத்து ராசாவுக்கு உதவியாக அந்த ஊழல் பணத்தை முதலீடு செய்வதில், பெரும் உதவிகள் செய்து, தானும் ஒரு கணிசமான பங்கை அடித்தார்.

ஊடகங்களில் ஸ்பெக்ட்ரம் பற்றிய செய்திகள் வரத் தொடங்கியவுடன், காமராஜின் கவனம் மீண்டும் நக்கீரன் பக்கம் வந்தது.   ஊரே, ஸ்பெக்ட்ரம் ஊழலைப் பற்றி எழுதிக் கொண்டிருக்கும் போது, நக்கீரனில் மட்டும் ஆ.ராசாவுக்கு ஆதரவாக செய்திகள் வெளியிடப் பட்டது.   நக்கீரனை படிப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து போனாலும், விடாமல் ஆ.ராசா நல்லவர், தலித் தலைவர், தகத்தகாய கதிரவன் என்று அள்ளி விட்டுக் கொண்டிருந்தார் காமராஜ்.

Gopal-Nakkeeran

தான் கஷ்டப்பட்டுக் கட்டிய சாம்ராஜ்யம், கண் முன்னே சரிவதைக் கண்டு, கோபாலும், எவ்வித வருத்தமும் தெரிவிக்காமல், காமராஜின் அயோக்கியத்தனங்களுக்கு, ஜால்ரா போட்டுக் கொண்டிருந்தார். பத்திரிக்கையாளர் வட்டாரங்களில் விசாரிக்கையில், ஸ்பெக்ட்ரம் ஊழலில் கோபாலுக்கும் கணிசமான ஒரு பங்கு கொடுக்கப் பட்டிருப்பதாகவும், இல்லையென்றால், ஸ்பெக்ட்ரமில் ஊழலே நடைபெறவில்லை என்றும், ராசாவுக்கு ஆதரவாக எழுதப் பட்ட அத்தனை செய்திகளையும் அமைதியாக கோபால் வேடிக்கை பார்க்கும் மனிதரல்ல என்று தெரிவிக்கின்றனர்.   (கோபால் ஸ்பெக்ட்ரம் பணத்தை அவர் மீசையில ஒளிச்சு வச்சுருப்பாரோ ?)

தமிழ்நாட்டில், வீட்டு வசதி வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள, பல்வேறு வீட்டு மனைகளையும், நிலங்களையும், சமூக சேவகர் என்ற பெயரில் வளைக்க அதிகார மையத்தில் உள்ள ஒரு கூட்டம், திட்டம் போட்டு, பணிகளை துவக்கிய போது, அத்திட்டத்தில் முழுமையாக பங்கேற்ற காமராஜ், தனது மனைவிக்கும், திருவான்மியூரில் இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை, பாதி விலைக்கு பெற்றார். அந்த வீட்டு மனையை ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் நிறுவனத்துடன் கூட்டு ஒப்பந்தம் போட்டதன் மூலம், பல கோடி ரூபாய் லாபத்தைப் பார்த்தார். இது போல பத்திரிக்கையாளர் என்ற பெயரில், அரசியல்வாதியை விட, மிக மிக மோசமான செயல்களில் இறங்கத் தொடங்கினார்.

பகட்டும், படோடாபமும், காமராஜ் கண்ணை மறைத்தன.   ஜாபர் சேட்டின் நட்பு, காமராஜை தன்னை ஒரு சக்ரவர்த்தியாகவே கருத வைத்தது. தன்னுடைய தொலைபேசி ஒட்டுக் கேட்கப் பட்ட போது மட்டும் துடிதுடித்து, ஜாபர் சேட்டை சந்தித்து கடுமையாக கோபப் பட்ட காமராஜ், கடுமையான மனித உரிமை மீறலாக, முக்கிய நபர்களின் தொலைபேசிகள் அத்தனையும், சட்ட விரோதமாக ஒட்டுக் கேட்கப் பட்ட போது, அதைத் தட்டிக் கேட்காதது மட்டுமல்ல, அந்த உரையாடல்களில் உள்ள தகவல்களை ஜாபர் சேட் பகிர்ந்து கொள்ளும் போது, அவைகளை கேட்டு திளைத்தார்.

 1-2

ஜாபர் சேட்டின் அத்தனை அயோக்கியத்தனங்களுக்கும் துணையாக நின்றார். காமராஜின் நெருக்கடியான நேரங்களில் தோளோடு தோள் நின்ற பத்திரிக்கையாளர்கள் இந்த அதிகார போதை காரணமாக விலகிப் போன போது கூட காமராஜ் கவலைப் படாமல், பத்திரிக்கையாள தோழர்களை விட, ஜாபர் சேட்டின் நட்பே பிரதானம் என்று கருதினார்.

ஸ்பெக்ட்ரம் ஊழல் உச்சக் கட்டத்தில் இருந்த போது, அது போல ஊழலே நடைபெறவில்லை என்று நக்கீரனில் தொடர்ந்து எழுதியதோடல்லாமல் ஊடகப் பேரவை என்ற போர்வையில், ஸ்பெக்ட்ரம் ஊழலில் ஆண்டிமுத்து ராசா, தலித் என்பதால் குற்றம் சாட்டுகிறார்கள் என்று கூட்டம் நடத்தினார்.

காமராஜைப் பற்றி, சவுக்கு தொடர்ந்து எழுதி வந்த போதெல்லாம், சவுக்குக்கு தெரிந்த பத்திரிக்கையாளர்களே, காமராஜைப் பற்றி சவுக்கு அபாண்டமாக எழுதுவதாக, கடிந்து கொண்டார்கள். காமராஜ் சவுக்கு பதிவுகளைப் பற்றி கடும் கோபம் அடைந்து, சவுக்கைப் பற்றி தனிப்பட்ட அவதூறு பிரச்சாரங்களில் இறங்கினார்.

ஆனால், இதற்கெல்லாம் விடையாக, காமராஜ் வீடு, ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக சிபிஐ அதிகாரிகளால் சோதனையிடப் பட்ட போதுதான், முதன் முதலாக, சவுக்கு அவதூறாக எழுதவில்லை என்பதை அந்தப் பத்திரிக்கையாளர்கள் புரிந்து கொண்டார்கள்.   ஆனாலும், தனது தவறை திருத்திக் கொள்ளாமல், காமராஜ், சவுக்கு மீதான வழக்கை துரிதப் படுத்துவதிலும், வழக்கில் எப்படியாவது தண்டனை பெற்றுத் தரவேண்டும் என்ற பழிவாங்கும் நோக்கிலும் செயல்படத் தொடங்கினார்.

சவுக்கு காமராஜ் போல, திருட்டுத் தனமாக போலி சமூக சேவகர் சான்றிதழ் தயாரித்து, வீட்டு மனை ஒதுக்கீடு பெற்றதற்காக வழக்கை சந்திக்கவில்லை. ஸ்பெக்ட்ரம் ஊழலில் பங்கு வகித்ததற்காக வழக்கை சந்திக்கவில்லை.   லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநரை மிரட்டி, ஒரு எதிர்க்கட்சித் தலைவர் மீது பொய் வழக்கு போட உத்தரவிட்ட ஒரு தலைமைச் செயலாளரின் உரையாடலை வெளியிட்டதாகத் தான் வழக்கு.   இந்த வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருப்பதால், இது குறித்து எதுவும் கூற விரும்பவில்லை என்றாலும், இது போல ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டால், சவுக்கு இந்தக் குற்றத்தை செய்து மீண்டும் சிறை செல்ல தயாராகவே இருக்கிறது, மீண்டும் காவல்துறையின் கட்டுப்பாட்டில் விழும் அடிகளுக்கும் தயாராகவே இருக்கிறது என்பதை காமராஜுக்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறது மக்களுக்கு உண்மையை தெரிவிக்க வேண்டும் என்பது, இந்தத் துன்பங்களையெல்லாம் விட முக்கியம்.   உலக வல்லரசுகள் அத்தனையும், கொலை செய்ய துடித்து விரட்டு விரட்டென்று விரட்டும் போது, ஜுலியன் அசாஞ்ஜ் தொடர்ந்து கேபிள்களை வெளியிடவில்லையா ? அவருக்கு என்ன பணத்தின் மீது ஆசையா? புகழின் மீது ஆசையா ?

இத்தனையும் செய்த காமராஜை மன்னித்து விடலாம். ஆனால், சாதிக் பாட்சாவின் மரணத்தில் காமராஜ் வகித்த பங்கை மன்னிக்கவே முடியாது.

பெரிய அளவில் படிப்பறிவில்லாத சாதிக் பாட்சா காமராஜ், ஆண்டிமுத்து ராசா போன்றவர்களையெல்லாம் நம்பினார்.   சாதிக்குக்கு பணத்தின் மீது மிகுந்த ஆர்வம் இருந்தாலும், மான மரியாதைக்கு அஞ்சினார். தன் பெண்டாட்டி பிள்ளைகள் நன்றாக இருக்க வேண்டும் என்று விரும்பினார்.

 16VBG_SADIQ_BASHA_504136f

சாதிக் இறப்பதற்கு பத்து நாட்களுக்கு முன் நடந்த சம்பவங்கள், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளன.   சாதிக் பாட்சாவை சிபிஐ தொடர்ந்து விசாரித்து வந்தது. சாதிக் கொடுத்த தகவல்களின் அடிப்படையிலேயே, ஆண்டிமுத்து ராசா, பல்வா போன்றவர்கள் கைது செய்யப் பட்டதாக ராசாவுக்கு நெருக்கமானவர்கள் நம்பினார்கள். இவ்வாறு நம்பியவர்களில் ராசாவின் அண்ணன் கலியபெருமாளும் ஒருவர்.

சாதிக் சிபிஐயிடம் உண்மையை சொல்லியிருக்காவிட்டால், ஆண்டிமுத்து ராசா, சிறைக்கே போயிருக்க மாட்டார் என்று முட்டாள்த் தனமாக நம்பிக் கொண்டிருந்தார்கள்.

கலியபெருமாள், சாதிக் இறப்பதற்கு ஒரு வாரம் முன்பு நடந்த சம்பவங்கள் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன.

சாதிக்குக்கு, ஒரு பக்கம் சிபிஐ நெருக்கடி என்றால், மற்றொரு பக்கம், ராசா குடும்பத்தார் மற்றும் ராசாவின் நண்பர்கள் கொடுத்த நெருக்கடி.   இந்த நெருக்கடிகள் பத்தாது என்று, சாதிக்கை சிபிஐ பிடியிலிருந்து காப்பாற்றுகிறேன் என்று, சில உயர் போலீஸ் அதிகாரிகள் வேறு, போலி வாக்குறுதிகளை கொடுத்து பணம் பறித்திருக்கிறார்கள்.

சாதிக் இறப்பதற்கு முன், தினமும் அவரை தொடர்பு கொண்ட, ஆண்டிமுத்து ராசாவின் அண்ணன் கலியபெருமாள், கடும் சொற்களால் சாதிக்கை மிரட்டியுள்ளார். “உன்னையெல்லாம் என் தம்பி நம்புனதுக்கு தாண்டா இப்போ அவன் ஜெயில்ல இருக்கான்.   உன்னை இவ்ளோ பெரிய ஆளா ஆக்குனதே தப்புடா.   மரியாதையா போயி, சிபிஐல சொன்னதையெல்லாம் மாத்திச் சொல்லு. இல்லன்னா உயிரோடவே இருக்க மாட்ட..   என் தம்பியே ஜெயிலுக்கு போயிட்டான், நீ மட்டும் இன்னும் ஒன் பொண்டாட்டியோட ஜாலியா இருக்கியாடா…… சிபிஐலே உன் ஸ்டேட்மென்ட வாபஸ் வாங்கலன்னா, என்ன நடக்கும்னே சொல்ல முடியாது” என்று கடுமையாக பேசியுள்ளார். “அண்ணே, ராஜா அண்ணணுக்கு போயி நான் துரோகம் செய்வேனா…. நான் இப்போ வச்சுருக்கறது எல்லாமே அவரு போட்ட பிச்சை.. நான் எப்படின்னே அவருக்கு துரோகம் செய்வேன்.. நான் சிபிஐ கிட்ட ஒன்னுமே சொல்லண்ணே “ என்று சாதிக் அளித்த பதில்கள், கலியபெருமாளை சிறிதும் அசைக்கவில்லை.

கலியபெருமாளின் நெருக்கடியிலிருந்து தப்பிப்பதற்கு, சாதிக் நம்பியது காமராஜ்.

 IMG_9357

குற்றவாளிகளை விசாரிக்கும் போது, அமெரிக்காவில், “குட் காப், பேட் காப்” என்று ஒரு தந்திரத்தை கடைபிடிப்பார்கள். பேட் காப் என்று அழைக்கப் படும் காவல் அதிகாரி, குற்றவாளியை அடிப்பதற்கு பாய்வார். கடும் வார்த்தைகளால் திட்டுவார். இதைக் கண்டு குற்றவாளி கலக்கமடைந்திருக்கும் போது, குட் காப் அதிகாரி, அன்பாக, நட்போடு குற்றவாளியிடம் பேசுவார். அவன் அப்படித்தான் எல்லாரையும் அடிப்பான். என்னிடம் உண்மையை சொல்லி விடு. நான் உனக்கு ஒன்னும் ஆகாம, அவன்கிட்டேர்ந்து காப்பாற்றுகிறேன் என்று வாக்குறுதி கொடுத்து, உண்மையை குற்றவாளியிடமிருந்து வாங்குவார்கள்.

அதைப் போலத்தான் சாதிக்கிடம், இந்த தந்திரத்தை பயன்படுத்தியுள்ளதாக தெரிகிறது-

கலியபெருமாள் ஒரு பக்கம் திட்ட, மற்றொரு பக்கம் காமராஜ் ஆதரவாக பேசி, சாதிக்கை தன்னுடைய வாக்குமூலத்தை வாபஸ் பெறுமாறு வற்புறுத்தியுள்ளார்.

சாதிக், இறப்பதற்கு முன் ஏழு முதல் பத்து நாட்கள், காமராஜ், தினமும், சாதிக் வீட்டிற்கு சென்றுள்ளார். காமராஜின் செல்பேசி ஆவணங்கள், காமராஜ் சாதிக் வீட்டிற்கு சென்று, சாதிக்கோடு ஒன்றாக கிளம்பி நான்கு மணி நேரத்திற்கு மேல் ஒன்றாக இருந்ததை உறுதிப் படுத்துகின்றன.

தினமும், சாதிக் வீட்டுக்கு சென்ற காமராஜ், சாதிக்கை அழைத்துக் கொண்டு, சென்னையிலுள்ள ஒரு பிரபல கிளப்பில், தினமும் சரக்கடித்துள்ளார்.   அப்போது, சாதிக் மனம் விட்டு, “அண்ணே… நான் சாகுறதத் தவிர வேற வழியில்லைண்னே…. சிபிஐ ஒரு பக்கம் நெருக்குது… கலியபெருமாள் அண்ணே அதப் புரிஞ்சுக்காம, ரொம்ப மோசமா பேசுறாருண்ணே…. என் வொய்ஃப பத்தியெல்லாம் மோசமா பேசுறாருண்ணே….. நீங்க கொஞ்சம் சொல்லுங்கண்ணே….“ என்று அழுதிருக்கிறார்.

காமராஜ், “அவரு சொல்றபடி, உன் ஸ்டெட்மென்ட வாபஸ் வாங்கிடு.. சிபிஐ கிட்ட, எனக்கு எதுவும் தெரியாதுன்னு சொல்லிடு… அவரு ஏன் உன்ன திட்டப் போறாரு“ என்று கூறியுள்ளார். “ கொஞ்ச நாள் சமாளிச்சுடு… அப்புறம் நம்ப கவர்மெண்ட் திரும்ப வந்துடும். தலைவர்கிட்ட சொல்லி, காங்கிரஸ்க்கு நெருக்கடி கொடுத்து, கேசை ஆறப்போட்டுடலாம்….“ என்று காமராஜ் அன்பாகப் பேசியே, மிரட்டியுள்ளார்.

ஏறக்குறைய பத்து நாட்களுக்கும் மேலாக காமராஜிடம் பேசியும், கலியபெருமாளின் வசவுகள் நிற்காததால், யாருமே நம்மை காப்பாற்றப் போவதில்லை என்பதை உணர்ந்த சாதிக், மனமுடைந்தே தற்கொலை முடிவுக்கு வந்திருப்பதாக சென்னை மாநகர காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 kamaraj_5

சாதிக்கின் செல்பேசி ஆவணங்கள், காமராஜ் மற்றும் கலியபெருமாள் தொடர்ந்து சாதிக்கோடு தொடர்பில் இருந்ததற்கான ஆதாரங்களை மட்டுமல்லாமல், இரண்டு காவல்துறை உயர் அதிகாரிகள், சாதிக் இறப்பதற்கு முதல் நாள் பேசியுள்ள தகவலும் வந்திருக்கிறது.

அத்தனை விவகாரங்களும், சிபிஐ விசாரணைக்கு வழக்கு மாற்றப் பட்டதும் வெளி வரும் என்று எதிர்ப்பார்க்கப் படுகிறது. காமராஜ் சிபிஐ யால் விசாரிக்கப் பட்டவுடன், சாதிக் மரணத்தில் அவரின் பங்கைப் பொறுத்து, தேவைப் பட்டால் கைது செய்யப் படுவார் என்று சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உச்ச நீதிமன்றத்தில், வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், சாதிக் மரணத்தைப் பற்றிய சந்தேகத்தை எழுப்பியிருப்பதைத் தொடர்ந்து, விசாரணை தீவிரமடையும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Comments  

0 #37 jaya 2011-04-02 12:09
Quoting nritamil:
Everybody knows how DMK win May 2009 election. My family was not able to vote for the election because there were rowdies and gundas in the election booth doing galatta..

Kalaignarukku nanri....
Kalaignarin thiruttu tanathukku nanri...

Quoting Puthiyavan Raj:
கே கே.... ஹா ஹா...ஹா... நானும் அந்த கருத்துக்கணிப்ப ு பார்த்தேன். உங்களுக்கு பதில் சொல்லுமுன் இவர்க்ள் மே 2009 நாடாளுமன்ற கருத்துக்கணிப்ப ு எப்படி இருந்தது என்று அறிந்து கொள்ள இணையதளத்தில் தேடினேன். நான் எப்போதுமே ஆதாரத்துடன் தான் பேச வேண்டும் என்று நினைப்பவன். மே 2009 கருத்துக்கணிப்ப ு படி திமுக கூட்டணிக்கு 18, அதிமுக கூட்டணிக்கு 21 ஆனால் நடந்தது என்ன? திமுக கூட்டணி 27 அதிமுக கூட்டணி 12 கிடைத்தது. நக்கீரன் கருத்துக்கணிப்ப ு தான் பல முறை உண்மையாகி உள்ளது. அவர்கள் கருத்துக்கணிப்ப ு படி திமுக கூட்டணி 146 தொகுதிகளில் வெல்லும் . (மதிமுக அதிமுகவிலிருந்த ு விலகும் முன் எடுத்த கருத்துக்கணிப்ப ு, எனவே திமுக கூட்டணியின் வெற்றி வாகை எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது.)

----------------------------------------
யோவ் நீ எந்த வருசத்தில இருக்க... நக்கீரன் எல்லாம் மார்க்கெட் இல் இல்லை. எதாவது சொல்லணும் என்பதற்காக கமெண்ட் போடாதே.. உன்னை நான் பார்த்துக்கொண்ட ே தான் வருகிறேன் . நீ ஓவர் ஆக புளுகறே. மே 13 க்கு அப்புறம் உன் டோவ்சர் கிளியபோவது நிச்சயம...
Quote
 
+1 #36 nritamil 2011-04-01 15:48
Everybody knows how DMK win May 2009 election. My family was not able to vote for the election because there were rowdies and gundas in the election booth doing galatta..

Kalaignarukku nanri....
Kalaignarin thiruttu tanathukku nanri...

Quoting Puthiyavan Raj:
கே கே.... ஹா ஹா...ஹா... நானும் அந்த கருத்துக்கணிப்ப ு பார்த்தேன். உங்களுக்கு பதில் சொல்லுமுன் இவர்க்ள் மே 2009 நாடாளுமன்ற கருத்துக்கணிப்ப ு எப்படி இருந்தது என்று அறிந்து கொள்ள இணையதளத்தில் தேடினேன். நான் எப்போதுமே ஆதாரத்துடன் தான் பேச வேண்டும் என்று நினைப்பவன். மே 2009 கருத்துக்கணிப்ப ு படி திமுக கூட்டணிக்கு 18, அதிமுக கூட்டணிக்கு 21 ஆனால் நடந்தது என்ன? திமுக கூட்டணி 27 அதிமுக கூட்டணி 12 கிடைத்தது. நக்கீரன் கருத்துக்கணிப்ப ு தான் பல முறை உண்மையாகி உள்ளது. அவர்கள் கருத்துக்கணிப்ப ு படி திமுக கூட்டணி 146 தொகுதிகளில் வெல்லும் . (மதிமுக அதிமுகவிலிருந்த ு விலகும் முன் எடுத்த கருத்துக்கணிப்ப ு, எனவே திமுக கூட்டணியின் வெற்றி வாகை எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது.)
Quote
 
0 #35 pandiyan 2011-04-01 10:24
5L jobs, how much salary they are getting? how much they have paid as a brige to get those jobs??? use brain .. always dont copy / paste same content again and again. do youd have medical FREE card. you people should use that card only but your leader goes to LONDON for treatment...

Quoting Puthiyavan Raj:
NRI Tamil, Kalaingar's government has provided jobs to 5 lakh youth. So your referring to the proverb - teach a man how to catch fish.. is fulfilled and certainly you are misquoting it in your desperation to to find fault with the DMK. I never say DMK is not corrupt. I only say both DMK and ADMK are corrupt but in DMK rule, at least the development work of State is tremendous and employment generation is also done unlike the ADMK misrule notorious for recruitment ban, mass arbitrary dismissal of employees, fake Ganja fake POTA cases, stupid and arrogant attempt to destroy an educational institute (Queen Mary's college) - so your lament that politician does not want people to study and become able to think is applicable to Jaya only not to DMK.
Quote
 
0 #34 சித்திரகுப்தன் 2011-04-01 08:56
அப்படின்னா, விரைவி குருமாராஜும் உத்திரத்தில் தொங்கினாலும் ஆச்சரியமில்லை?நக்கீரன் ஒரு குப்பை பத்திரிக்கையாகி நீண்ட நாட்களாகிவிட்டத ு.அது துடைக்கக்கூட லாயக்கு இல்லை.
Quote
 
0 #33 Puthiyavan Raj 2011-04-01 08:32
கே கே.... ஹா ஹா...ஹா... நானும் அந்த கருத்துக்கணிப்ப ு பார்த்தேன். உங்களுக்கு பதில் சொல்லுமுன் இவர்க்ள் மே 2009 நாடாளுமன்ற கருத்துக்கணிப்ப ு எப்படி இருந்தது என்று அறிந்து கொள்ள இணையதளத்தில் தேடினேன். நான் எப்போதுமே ஆதாரத்துடன் தான் பேச வேண்டும் என்று நினைப்பவன். மே 2009 கருத்துக்கணிப்ப ு படி திமுக கூட்டணிக்கு 18, அதிமுக கூட்டணிக்கு 21 ஆனால் நடந்தது என்ன? திமுக கூட்டணி 27 அதிமுக கூட்டணி 12 கிடைத்தது. நக்கீரன் கருத்துக்கணிப்ப ு தான் பல முறை உண்மையாகி உள்ளது. அவர்கள் கருத்துக்கணிப்ப ு படி திமுக கூட்டணி 146 தொகுதிகளில் வெல்லும் . (மதிமுக அதிமுகவிலிருந்த ு விலகும் முன் எடுத்த கருத்துக்கணிப்ப ு, எனவே திமுக கூட்டணியின் வெற்றி வாகை எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது.)
Quote
 
-1 #32 kvtd 2011-04-01 07:39
Definitely after Assembly election result several (particularly Politicians, Police officers, Collectors and etc.,) will commit suicide
Quote
 
-5 #31 Puthiyavan Raj 2011-03-31 21:52
NRI Tamil, Kalaingar's government has provided jobs to 5 lakh youth. So your referring to the proverb - teach a man how to catch fish.. is fulfilled and certainly you are misquoting it in your desperation to to find fault with the DMK. I never say DMK is not corrupt. I only say both DMK and ADMK are corrupt but in DMK rule, at least the development work of State is tremendous and employment generation is also done unlike the ADMK misrule notorious for recruitment ban, mass arbitrary dismissal of employees, fake Ganja fake POTA cases, stupid and arrogant attempt to destroy an educational institute (Queen Mary's college) - so your lament that politician does not want people to study and become able to think is applicable to Jaya only not to DMK.
Quote
 
0 #30 KK 2011-03-31 21:34
HEADLINES TODAY-ORG SURVEY
JAYA SET TO SWEEP TAMILNADU- AIADMK 164 seats DMK 68 seats
As corruption charges multiply, the DMK and its partner Congress are facing a crisis of mammoth proportions. The Headlines Today-ORG opinion poll set out to map the anger of the population of Tamil Nadu. Here's what it found:

The first question was: Is corruption an important issue in these elections? Fifty-one of the population believes it is, while 34 per cent believe it is not.

Jayalalithaa has moved past Karunanidhi to be viewed as the more favoured candidate for chief ministership. Her 37 per cent approval rating gives her almost a 3 per cent lead over the present chief minister.

In fact, Karunanidhi's administration is now considered far more corrupt than the one provided by Jayalalithaa, with 39 per cent of those polled saying Karuna's government was more corrupt, while 21 per cent say it was the one ruled by Jaya.
Look at how the tide has turned. ORG now projects the ADMK alliance romping home with 164 seats, while Congress and DMK will suffer a huge setback winning just 68 seats with Others getting 2 seats
Quote
 
-1 #29 LL 2011-03-31 20:46
One month wait for the counting day. I known wireless technology. Whether the Voting machines are saf?. Can DMK/Congress do something to it wirelessly during this one month period to swing the results in their favour. Atleast in some random booths independant organisations should check these voting machines what is ur opnion
Quote
 
-1 #28 pandiyan 2011-03-31 19:00
AIADMK குற்றச்சாட்டு இன்னும் நிரூபிக்கப்படவி ல்லை. poyi vellia parru. ilavasam podhum.

Quoting Puthiyavan Raj:
பாண்டியன், தினகரன் பத்திரிகை அலுவலகம் எரித்து அதில் 3 அப்பாவி உயிர்கள் பலியானதயும் தா.கி. கொலை செய்யப்பட்டதையு ம் நான் வன்மையாக கண்டிக்கிறேன். அதில் குற்றச்சாட்டு இன்னும் நிரூபிக்கப்படவி ல்லை. அது மட்டுமல்ல, தா.கி. கொலையில் அழகிரியை சம்பந்தப்படுத்த ி காவலர்கள் அடித்து உதைத்து சித்திரவதை செய்ததால் தான் அழகிரி பெயரை சொன்னேன் என்று அதிமுக ஆட்சியிலேயே நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டவர் வாக்கு மூலம் கொடுத்தார் அதை நீதிபதியும் பதிவு செய்துவிட்டார். மேலும் ஜெயா ஆட்சியில் எத்தனை பொய் கஞ்சாவழக்குகள், பொய் பொடா வழக்குகள் போடப்பட்டன என்பது நாடறிந்த உண்மை. தினகரன் அலுவலகம் எரித்து கொலை செய்தவர்கள், தா.கி.யை கொலை செய்தவர்கள் யாராக இருந்தாலும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்பது தான் என் விருப்பமும்.
Quote
 
+5 #27 nritamil 2011-03-31 18:44
Puthiyavan Raj மனசாட்சியை தொட்டு சொல்லு கருணாநிதி எந்த ஒரு ஊழலும் செய்யலையா? அப்பழுக்கற்றவரா ?

இலவச TV, Grinder, Mixie கொடுப்பதை விட்டு இலவச கல்வி, மருத்துவம் கொடுக்கலாமே!!

Give a man a fish and you feed him for a day; teach a man to fish and you feed him for a lifetime.

அதை விட்டுட்டு மக்களை பிட்ச்சைக்காரர் கள் மற்றும் சோம்பேறிகள் ஆக்குராரு.

அது ஒண்ணும் இல்லை மக்கள் எல்லா நல்ல படிச்சு அறிவு வந்தா இவரு செய்யுர ஊழல் எல்லாம் தெரியும் இல்லை.

DMKவை ஆதரிக்கிற எல்லோருமே:
1.முட்டாள் பசங்க (OR)
2.அவங்களும் கருணாவை போல FRAUD பசங்க.
Quote
 
+2 #26 K.RAMESH 2011-03-31 18:41
SADHIQ FACE NOT SHOWN BY ANY MEDIA.THEY ARE PLAYING WITH OTHERS DEAD BODY.
Quote
 
0 #25 aha 2011-03-31 17:03
alagiri aavi vitta rowdikal thaakki moondru per kolai enbathu sun tv velivitta seithi. Avarukkuthaan manithaabinamam mikunthu ullatho?avar kaiyil thamilnaadu sikkundaal naadu naasam aakum.Maanakaraatchi therthal vanmurai entha manithaabimaani yaal nadathap pattathu??

Quoting Puthiyavan Raj:
சக பத்திரிகையாளருக ்கு ஒரு சோதனை என்றால் என்ன குரூரமான சந்தோஷம் சிலருக்கு. கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் உயிரை மீட்டதில் நக்கிரன் கோபால் பங்கை யாரும் மறக்க முடியாது. மனித உயிர் விலை மதிப்பற்றது. பணம் கொடுக்கப்பட்டு ராஜ் குமார் மீடகப்பட்டு இருக்கலாம். ஆனால் அவரை உயிருடன் மீட்டது சாதனை தான். அது மட்டுமல்ல, முன்பு வீரப்பன் கடத்திய இன்னொரு சம்பவத்தில் 9 உயிர்களை காப்பாற்றியவர் நக்கீரன் கோபால். ஆனால் ஜெ. ஆட்சியில் முன்னாள் அமைச்சர் நாகப்பா கடத்தப்பட்ட போது நாகப்பா மனைவி ஜெ. விடம் தன் கணவர் உயிரை மீட்க உயிர்பிச்சை கேட்டார். ஆனால் அவரை சந்திக்க கூட நேரம் ஒதுக்கப்படவில்ல ை. ஆணவப்போக்காலும் , அகந்தையாலும் நாகபபா உட்பட சில காவல் துறை அதிகாரிகளும் பரிதாபமாக உயிர் இழந்தனர். அப்போது ஈவிகேஎஸ் இள்ங்கோவன் கூட ஜெயா மனித உயிர்களை மதிக்காதவர் என்று சாடினார்.
Quote
 
-6 #24 Puthiyavan Raj 2011-03-31 16:54
பாண்டியன், தினகரன் பத்திரிகை அலுவலகம் எரித்து அதில் 3 அப்பாவி உயிர்கள் பலியானதயும் தா.கி. கொலை செய்யப்பட்டதையு ம் நான் வன்மையாக கண்டிக்கிறேன். அதில் குற்றச்சாட்டு இன்னும் நிரூபிக்கப்படவி ல்லை. அது மட்டுமல்ல, தா.கி. கொலையில் அழகிரியை சம்பந்தப்படுத்த ி காவலர்கள் அடித்து உதைத்து சித்திரவதை செய்ததால் தான் அழகிரி பெயரை சொன்னேன் என்று அதிமுக ஆட்சியிலேயே நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டவர் வாக்கு மூலம் கொடுத்தார் அதை நீதிபதியும் பதிவு செய்துவிட்டார். மேலும் ஜெயா ஆட்சியில் எத்தனை பொய் கஞ்சாவழக்குகள், பொய் பொடா வழக்குகள் போடப்பட்டன என்பது நாடறிந்த உண்மை. தினகரன் அலுவலகம் எரித்து கொலை செய்தவர்கள், தா.கி.யை கொலை செய்தவர்கள் யாராக இருந்தாலும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்பது தான் என் விருப்பமும்.
Quote
 
0 #23 pandiyan 2011-03-31 16:04
DINAKARAN KOLAI என்றால் என்ன குரூரமான சந்தோஷம் சிலருக்கு. Thaa Kee Kolai
என்றால் என்ன குரூரமான சந்தோஷம் சிலருக்கு. மனித உயிர் விலை மதிப்பற்றது. மனித உயிர் விலை மதிப்பற்றது. மனித உயிர் விலை மதிப்பற்றது.
Quoting Puthiyavan Raj:
சக பத்திரிகையாளருக ்கு ஒரு சோதனை என்றால் என்ன குரூரமான சந்தோஷம் சிலருக்கு. கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் உயிரை மீட்டதில் நக்கிரன் கோபால் பங்கை யாரும் மறக்க முடியாது. மனித உயிர் விலை மதிப்பற்றது. பணம் கொடுக்கப்பட்டு ராஜ் குமார் மீடகப்பட்டு இருக்கலாம். ஆனால் அவரை உயிருடன் மீட்டது சாதனை தான். அது மட்டுமல்ல, முன்பு வீரப்பன் கடத்திய இன்னொரு சம்பவத்தில் 9 உயிர்களை காப்பாற்றியவர் நக்கீரன் கோபால். ஆனால் ஜெ. ஆட்சியில் முன்னாள் அமைச்சர் நாகப்பா கடத்தப்பட்ட போது நாகப்பா மனைவி ஜெ. விடம் தன் கணவர் உயிரை மீட்க உயிர்பிச்சை கேட்டார். ஆனால் அவரை சந்திக்க கூட நேரம் ஒதுக்கப்படவில்ல ை. ஆணவப்போக்காலும் , அகந்தையாலும் நாகபபா உட்பட சில காவல் துறை அதிகாரிகளும் பரிதாபமாக உயிர் இழந்தனர். அப்போது ஈவிகேஎஸ் இள்ங்கோவன் கூட ஜெயா மனித உயிர்களை மதிக்காதவர் என்று சாடினார்.
Quote
 
0 #22 thanam 2011-03-31 14:13
kamaraj entraa peyarai vaithukondu Karmaveerar Kamarajukku kalangam erpaduthum ivani thookil poda vendum
Quote
 
-3 #21 Puthiyavan Raj 2011-03-31 13:50
பிரபல ஜோதிடர் என்ற பெயரில் எழுதி இருப்பவருக்கு: , செய்திக்கு சம்பந்தம் இல்லாமல் கருத்து எழுதுகிறீர்கள். மேலும் உங்கள் கருத்து மிகவும் கண்ணியக்குறைவாக இருக்கிறது. ஜெ. கூடத்தான் கலைஞரை விட அதிகமாக இலவசம் கொடுக்கப்போவதாக சொல்லி இருக்கிறார். அதையும் இப்படி உங்கள் அருவெறுப்பான கற்பனையுடன் கலந்து எழுதுவீர்களா? இருபது வருடங்களுக்கு மேலாக சொந்த மனைவியையே பார்க்க முடியவில்லை என்று ந்டராஜன் சொல்லி இருக்கிறார். அவர் யாருடன் இருக்கிறார். அவருக்கு ஏன் இந்த அவல நிலை என்று மற்றவர்கள் கேட்டால் உங்களால் பதில் சொல்ல முடியுமா?
Quote
 
-6 #20 Puthiyavan Raj 2011-03-31 13:19
சக பத்திரிகையாளருக ்கு ஒரு சோதனை என்றால் என்ன குரூரமான சந்தோஷம் சிலருக்கு. கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் உயிரை மீட்டதில் நக்கிரன் கோபால் பங்கை யாரும் மறக்க முடியாது. மனித உயிர் விலை மதிப்பற்றது. பணம் கொடுக்கப்பட்டு ராஜ் குமார் மீடகப்பட்டு இருக்கலாம். ஆனால் அவரை உயிருடன் மீட்டது சாதனை தான். அது மட்டுமல்ல, முன்பு வீரப்பன் கடத்திய இன்னொரு சம்பவத்தில் 9 உயிர்களை காப்பாற்றியவர் நக்கீரன் கோபால். ஆனால் ஜெ. ஆட்சியில் முன்னாள் அமைச்சர் நாகப்பா கடத்தப்பட்ட போது நாகப்பா மனைவி ஜெ. விடம் தன் கணவர் உயிரை மீட்க உயிர்பிச்சை கேட்டார். ஆனால் அவரை சந்திக்க கூட நேரம் ஒதுக்கப்படவில்ல ை. ஆணவப்போக்காலும் , அகந்தையாலும் நாகபபா உட்பட சில காவல் துறை அதிகாரிகளும் பரிதாபமாக உயிர் இழந்தனர். அப்போது ஈவிகேஎஸ் இள்ங்கோவன் கூட ஜெயா மனித உயிர்களை மதிக்காதவர் என்று சாடினார்.
Quote
 
+7 #19 jaya 2011-03-31 11:10
Quoting pasekar:
பத்திரிக்கையாளன ் என்கிற போர்வையை வைத்துகொண்டு ஆடும் ஆட்டமெல்லாம் இன்னும் எவ்வளவு நாட்களுக்கு நீடிக்கும்? சாதிக் சந்தித்த அதே நிலையை இந்த காமராஜும் ஏன் சந்திக்க மாட்டார்? ஆளும் கட்சிக்கு ஆதரவாய் கருத்துரைத்து அதன் பலனை பெருக்கிகொள்ளும ் இந்த பொறுக்கிகள் ஒரு நாள் இல்லை என்றாலும் ஒரு நாள் நிச்சயம் அதற்க்கான பலனை அனுபவித்தே ஆகவேண்டும். இந்த நபரின் சொத்து விவரங்களை சவுக்கு வெளியிட வேண்டும். இவனது சம்பளம் எவ்வளவு எப்படி இவ்வளவு சொத்துக்களை வாங்கினான் என்பதையெல்லாம் தெள்ள தெளிவாய் சவுக்கு தெரியபடுத்தி இவனது முக மூடியை கிழித்தெறிய வேண்டும். நாடு நாசமாய் போனால் நமக்கென்ன..நமது கஜானாவை நிரப்புன் வழி பார்ப்போம் என்பவநேல்லாம் ஓர் பத்திரிகைகாரனா? அடே அடே நீங்கள் எல்லாம் வைரைத்தையும், வைடூரியத்தையும் பொறியல் செய்தா விளுங்கபோகிண்றீ ர்கள்? தங்கத்தை தாளித்தா உன்னபோகின்றீர்க ள்? பணத்தை கரைத்தா குடித்து மாயப்போகிண்றீர் கள்? ஊரை அடித்து கொள்ளையடிப்போரே உங்கள் குடும்பம் நாசமாய் போகாதா என்றுதான் எல்லோருமே விடும் சாபம் சும்மா விடுமா? உங்கள் பிள்ளை பெண்டுகளை அந்த வயிறு எரிந்து விடும் சாபம் சும்மா விட்டு விடுமா? நீ தூக்கிலே தொங்கும் நாள்தான் பத்திரிக்கைக்கே விடிவு காலமாய் இருக்கும். நாசமாய் போக மாட்டாயா? குடும்பம் விளங்குமா? மண்ணை வாரி தூற்றுகின்றேன்.!!

jayar quotes:::::
இந்த பன்னாடையை திட்டி உங்கள் தகுதியை ஏன் குறைத்து கொள்ளுகிரிர்கள் . கொஞ்சம் late ஆகும் உண்மை எல்லாம் வெளிவர. அவ்வளவுதான். சாதிக் சாபம் யாரையும் சும்மா விடாது. இந்த கிழவன், ராசா, கனி, ஜாபர் எல்லோரையும் சேர்த்துதான்
Quote
 
0 #18 arumuga 2011-03-31 11:05
thodarattum savukkin sevai
Quote
 
+11 #17 Nadaga priyan... 2011-03-31 10:38
நவீன பாரதியின் தேர்தல் கீதம்!

இலவசம்! இலவசம்! இலவசம்!

குறவரோடு செட்டியாருக்கும ் ஐயருக்கும் இலவசம்!

கிரைண்டரோடு மிக்ஸ்சியோடு டிவியும் இலவசம்!

இலவசம் இலவசம் இலவசம்

ஆடுமாடு அண்டா குண்டா அனைத்துமே இலவசம்!

சாதம் பொங்க அரிசியும் அடுப்பும் கூட இலவசம்!

வாலிபர்க்கும் வயோதிகர்க்கும் "இடுப்பும்" - "கூட" இலவசம்!

இலவசம்! இலவசம்! இலவசம்!

காண்டம் முதல் கம்ப்யுட்டர் வரை இலவசமோ இலவசம்!

பிள்ளை இல்லா மக்களுக்கு பிள்ளைகளும் இலவசம்!

தமிழகம் போல் தேசம் உண்டோ தரணியிலே சொல்லுவீர்!

கவலை இன்றி குவாட்டர் அடித்து குப்புற படுத்து உறங்குவீர்!
Quote
 
+7 #16 nritamil 2011-03-31 10:28
நக்கீரன் பத்திரிக்கைக்கு என் வேண்டுகோள் முதலில் உங்கள் பத்திரிக்கை பெயரை மாற்றுங்கள் மற்றும் "நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே" என்ற வாசகத்தை நீக்குங்கள். இந்த வாசகத்தை வைத்து கொள்ள உங்களுக்கு எந்த அருகதையும் இல்லை. உங்கள் நடுநிலையை எப்போதோ தவற விட்டீர்கள்.

smagesh சொன்னது போல் கோபால் நிச்சயமாக, ராஜ்குமார் கடத்தலில் பெரும் தொகையை அமுக்கி கொண்டார்.
spectrum ஊழலில் கூட கோபால் பெரும் தொகை அமுக்கி இருப்பார். காமராஜ் மற்றும் ஜெகத் காஸ்பேர் இரண்டு பெறுமே கோபலுடன் தொடர்பு உடையவர். இரண்டு பெரும் ஊழலில் விசாரிக்கப்பட்ட ுள்ளனர்.

நக்கீரனில் கோபால் எழுதும் 'யுத்தம்' தொடர் கட்டுரை படித்தால் அப்படியே கண்ணை கட்டும். இவர் தான் தமிழ்நாட்டிலையே முக்கியமான நபர் போலவும் இவர் தான் பெரிய உத்தமர் போலவும் எழுதி இருப்பார் பாருங்க யப்பா யப்பா யப்பா...

Also this article points that sadik batcha is really dead?? I don't think so!!!
Quote
 
0 #15 AMDHARAN 2011-03-31 09:54
Dear Savukku
Hats off to ur courage and fearless chracter. You always Dare like kiran bedi
May God give u strength to fight evil
amdharan
Quote
 
+4 #14 Anonymous 2011-03-31 09:48
உலக கோப்பை இறுதி போட்டியில் தமிழின விரோதிகள் இந்தியா இலங்கை மோதுகிறது.அதை உண்மை தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும்.
Quote
 
+7 #13 முகுசன் 2011-03-31 09:39
அடே காமராஜ்,
பெருந்தலைவர் பேரவச்சிக்கிட்ட ு ஏண்டா இப்பிடி அட்டூழியம் பண்றே. ஒன்னோட மூஞ்ச பாக்க பாக்க கெட்ட வார்த்தை அருவி மாதிரி கொட்டுது. ஆனா எழுதனும்னு உக்காந்தா, அந்த வார்த்த, வார்த்தைதான் முட்டுது.
Quote
 
+9 #12 ramasami 2011-03-31 08:55
'சவுக்கு' அவர்களே, நல்ல இடுகை.

நீங்கள் சொல்வது சரிதான் - ஆனால் என்னுடைய சில நண்பர்கள் இந்த கோபாலை ஒரு Ralph Nader என்று இன்னமும் நினைத்துக் கொண்டிருக்கிறார ்கள்! என்ன அறியாமை!

கோபால் ஒன்றும் அப்பாவியோ அல்லது 'காமராஜைப் பொறுத்துக்கொள்ள வேண்டிய' கட்டாயத்திலோ இல்லை என நினைக்கிறேன். பல வருடங்கள் முன்பு ராஜ்குமார் என்கிற நடிகர் (கன்னடம்) வீரப்பனால் கடத்தப்பட்ட நிகழ்ச்சியின் போது, இந்த கோபாலும் 'பேச்சு வார்த்தை' அணியில் இருந்தார். கன்னட இதழ்களில் / ஊடகங்களில் இவர் கருணாநிதியுடன் சேர்ந்து, ராஜ்குமார் குடும்பமும் (+ கர்நாடக அரசாங்கமும்!) கொடுத்த பணயப் பணத்தில் பெரிய அளவில் 'ஆட்டையப் போட்டது' பற்றி வந்த செய்திகள் குறித்து சில நண்பர்கள் என்னிடம் சொல்லியிருந்தார ்கள் - இந்த திருட்டுப்பண விவரங்கள் எனக்கு சட்டென்று ஞாபகம் வரவில்லை. :-( அச்சமயம் வீரப்பன்கூட கோபால் ஏமாற்றியதைப் பற்றி வருத்தப்பட்டதாக கேள்வி. (இந்தக் கடைசி விவரம், சரி பார்க்க வேண்டும்)

அரசியலில் எவ்வளவு சதிக் கதைகள், ஆங்கில conspiracy theories தோற்க வேண்டும்! நமது வானளாவிய கற்பனையைக் கூட விஞ்சி விடும் இந்த உண்மைகள், மிகவும் அயர்ச்சி தருபவை...

இன்னொரு இடுகை - முடிந்தால் படிக்கவும்:

திமுகவின் ஆரம்ப நாட்களும், தொடரும் பொம்பளைப் பொறுக்கிகளும்…
http://othisaivu.wordpress.com/2011/03/31/post-6/
Quote
 
+6 #11 krishna123 2011-03-31 08:53
"இது போல ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டால், சவுக்கு இந்தக் குற்றத்தை செய்து மீண்டும் சிறை செல்ல தயாராகவே இருக்கிறது"

You are the Brave Man... Salute you savukku
Quote
 
+15 #10 kuchi USA 2011-03-31 08:29
இவனையெல்லாம் ஒரு இருவது வருசமாவது உள்ளே வைக்கணும் !!, பத்திரிக்கை துறையில் இவனைப்போன்ற ஊழல் பேர்வழிகளை மன்னிக்கவே கூடாது !!! எப்படி இருந்த நக்கீரன் பத்திரிக்கை இப்போ மஞ்சள் பத்ரிக்கையாகி விட்டது, என்ன கொடும சார் இது ?
Quote
 
+15 #9 அகோரி 2011-03-31 07:43
நான் இதுநாள் வர சவுக்கு வெப்சைட்ட பத்தோட பதினன்ஜாவதா நெனச்சி படிச்சிக்கிட்டு வந்தேன். பரவால்ல, சவுக்குக்கு இம்புட்டு பவர் இருக்கா? வாழ்த்துக்கள். தூள் கெளப்புங்க சவுக்கு. உங்களுக்கு தெய்வபலம் நிச்சயம் கிடைக்கும் என்பதை என் மனதார கூறி வாழ்த்துகிறேன்.
Quote
 
+8 #8 தாவுத் இப்ராகிம் 2011-03-31 07:23
காமராஜ், கொஞ்சம் பொறுடா. எலக்சன் முடியட்டும். அப்புறம் ஒன்ன கவனிச்சிக்கிறேன ். இப்போதைக்கு கலைஞர ஆட்சிலருந்து கீழ ஏறக்கனும். அதுக்கான வேலைகள்ல மும்முரமா இறங்கிருக்கேன். மே பதினஞ்சு வர கண்ணுல அம்புடாத. அடுத்த சங்கு ஒனக்குத்தான்.
Quote
 
+12 #7 anbu 2011-03-31 07:20
அன்புள்ள சவுக்கு,
வணக்கம்.. நக்கீரன் கோபால், பொடாவில் கைது செய்த போது, காமராஜர் அரங்கத்தில் கண்டன கூட்டம் நடத்தப்பட்டது. கண்டன கூட்டம் நடத்த, பத்திரிகையாளர் பாதுகாப்பு அமைப்பு, மூத்த பத்திரிகையாளர் ஜவஹர் தலைமையில் தொடங்கப்பட்டு, பெரிய அளவில் வசூல் செய்யப்பட்டது. முதல் வசூல் தற்போதை எம்.பியும், மத்திய அமைச்சருமான ஜெகத்ரட்சகன் இவர் கொடுத்த பணத்தில்தான் காமராசர் அரங்கத்திற்கு வாடகை மற்றும் முன்பணம் செலுத்தப்பட்டது ..
உளுந்தூர்பேட்டை கந்தசாமியை வைத்து, 2004ல்பெரம்பலூர ில் கரும்பு விவசாயிகள் மாநாடு நடத்தினார் காமராஜ்..காமராஜின் சித்தப்பா பெரம்பலூரில் விவசாய சங்கத்தலைவர்.. கரும்பு விவசாயிகள் மாநாட்டிற்கு காமராஜ் வசூல் செய்த பணம் சுமார் ரூ20 இலட்சம்..
காமராஜ் பத்திரிகையாளர் என்ற பெயரில் திமுக தலைவர் கருணாநிதியை கையில் வைத்துக்கொண்டு நடத்தி கட்டப்பஞ்சாய்த் து தர்பாருக்கு அளவே இல்லை..
Quote
 
+12 #6 பிரபல ஜோதிடர் 2011-03-31 07:20
ஐயா கலைஞர் அவர்களே, என்னை மன்னித்து விடுங்கள். நீங்கள் இந்த தேர்தலில் ஜெயிப்பதற்கு வாய்ப்புகள் இல்லை. கோச்சார கிரகங்கள் ஜெயலலிதாவின் ஜாதகத்தில் வலுவாக உள்ளது. இந்த தேர்தலில் ஜெயலலிதா நிச்சயம் ஜெயிப்பார் என்பதை என்னால் ஆணித்தரமாக நிரூபிக்க முடியும். நீங்கள் உங்களுடைய பொஞ்சாதியவே இலவசமாக் குடுத்தாலும் நீங்கள் இந்த தேர்தலில் தோற்றுத்தான் போவீர்கள். நான் சொல்வதை நம்ப முடியவில்லை என்றால் பொறுத்திருந்து பாருங்கள். வெயிட் அண்ட் ஸீ
Quote
 
+16 #5 anbu 2011-03-31 06:56
அன்புள்ள சவுக்கு,
வணக்கம்..சாதிக்பாட்சா தற்கொலைக்கு முதல் நாள் இரவு 11.30 வரை பேசிக்கொண்டு இருந்தது நக்கீரன் இணை காமராஜ்தான் என்று அவர் மனைவி பெரம்பலூரில் கூறினார். அடுத்த நாள் மதியம் சாதிக்பாட்சாவின ் சென்னை வீட்டுக்கு காமராஜின் பினாமி ரகுபதி உள்ளிட்ட மூவர் வந்து துணி மற்றும் முக்கிய பொருட்களை எடுத்து சென்றார்கள்.. சாதிக்பாட்சாவின ் மனைவி தற்போது பெரம்பலூரில் இல்லை. இதன் பின்னணியிலும் காமராஜ்தான் உள்ளார்..
சாதிக்பாட்சா தற்கொலை செய்து கொண்ட போது, காமராஜ், அப்போலா மருத்துவமனைக்கு சென்றுவிட்டு, அங்கிருந்து ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு வந்தார், அப்போது காமராஜ் செல்போனில், அவருடை கிளாஸ் மெட் மணிமாறன்(கோசி. மணியின் மகன் நடத்தும் கன்ஸ்டரக்சன் நிறுவனத்தில் பாட்னர்) தொடர்பு கொண்டு பேசினார், காமராஜ் செல்போனில் பேசியதை(9677091352), சிபிஐ எடுத்தால் சாதிக்பாட்சா தற்கொலைக்கு பின்னணியில் இருந்தவர் காமராஜ் என்பது வெளிச்சத்துக்கு வரும்
Quote
 
+14 #4 smagesh 2011-03-31 06:51
நக்கீரன் கோபால் , வீரப்பன் விவகாரத்தில் , ராஜ்குமார் கடத்தலில் - வீரபனை தூண்டிவிட்டு , அதில் ஒரு பெரும் பங்கை அப்பொழுதே அடித்துவிட்டார் .
இது கருணாநிதிக்கு அப்பொழுதே தெரிந்து இருந்தாலும் , அந்த ப்றேச்சனையின் முக்கியம் கருதியும், கோபால் தன்னுடைய ஜால்ராதான் என்பதாலும் அமைதியாக இருந்துவிட்டார் . இந்த சித்தி அப்பொழுதே அரசல்
புரசலாக வெளி வந்தது.
Quote
 
+14 #3 pasekar 2011-03-31 05:18
பத்திரிக்கையாளன ் என்கிற போர்வையை வைத்துகொண்டு ஆடும் ஆட்டமெல்லாம் இன்னும் எவ்வளவு நாட்களுக்கு நீடிக்கும்? சாதிக் சந்தித்த அதே நிலையை இந்த காமராஜும் ஏன் சந்திக்க மாட்டார்? ஆளும் கட்சிக்கு ஆதரவாய் கருத்துரைத்து அதன் பலனை பெருக்கிகொள்ளும ் இந்த பொறுக்கிகள் ஒரு நாள் இல்லை என்றாலும் ஒரு நாள் நிச்சயம் அதற்க்கான பலனை அனுபவித்தே ஆகவேண்டும். இந்த நபரின் சொத்து விவரங்களை சவுக்கு வெளியிட வேண்டும். இவனது சம்பளம் எவ்வளவு எப்படி இவ்வளவு சொத்துக்களை வாங்கினான் என்பதையெல்லாம் தெள்ள தெளிவாய் சவுக்கு தெரியபடுத்தி இவனது முக மூடியை கிழித்தெறிய வேண்டும். நாடு நாசமாய் போனால் நமக்கென்ன..நமது கஜானாவை நிரப்புன் வழி பார்ப்போம் என்பவநேல்லாம் ஓர் பத்திரிகைகாரனா? அடே அடே நீங்கள் எல்லாம் வைரைத்தையும், வைடூரியத்தையும் பொறியல் செய்தா விளுங்கபோகிண்றீ ர்கள்? தங்கத்தை தாளித்தா உன்னபோகின்றீர்க ள்? பணத்தை கரைத்தா குடித்து மாயப்போகிண்றீர் கள்? ஊரை அடித்து கொள்ளையடிப்போரே உங்கள் குடும்பம் நாசமாய் போகாதா என்றுதான் எல்லோருமே விடும் சாபம் சும்மா விடுமா? உங்கள் பிள்ளை பெண்டுகளை அந்த வயிறு எரிந்து விடும் சாபம் சும்மா விட்டு விடுமா? நீ தூக்கிலே தொங்கும் நாள்தான் பத்திரிக்கைக்கே விடிவு காலமாய் இருக்கும். நாசமாய் போக மாட்டாயா? குடும்பம் விளங்குமா? மண்ணை வாரி தூற்றுகின்றேன்.!!
Quote
 
+6 #2 aravindh 2011-03-31 05:11
May this Kuruma Raj news will give more blogs in the upcoming new accounts year
Quote
 
+12 #1 Ravi, USA 2011-03-31 03:47
//குற்றவாளிகளை விசாரிக்கும் போது, அமெரிக்காவில், “குட் காப், பேட் காப்” என்று ஒரு தந்திரத்தை கடைபிடிப்பார்கள ். பேட் காப் என்று அழைக்கப் படும் காவல் அதிகாரி, குற்றவாளியை அடிப்பதற்கு பாய்வார். கடும் வார்த்தைகளால் திட்டுவார். இதைக் கண்டு குற்றவாளி கலக்கமடைந்திருக ்கும் போது, குட் காப் அதிகாரி, அன்பாக, நட்போடு குற்றவாளியிடம் பேசுவார். அவன் அப்படித்தான் எல்லாரையும் அடிப்பான். என்னிடம் உண்மையை சொல்லி விடு. நான் உனக்கு ஒன்னும் ஆகாம, அவன்கிட்டேர்ந்த ு காப்பாற்றுகிறேன ் என்று வாக்குறுதி கொடுத்து, உண்மையை குற்றவாளியிடமிர ுந்து வாங்குவார்கள்.
//

Wow! I am really impressed with your profound knowledge on stuff that happens not only in INdia but also elsewhere! Your example on 'Good Cop, Bad Cop' is commendable!
Quote
 
Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English

தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 181 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday7253
mod_vvisit_counterYesterday11112
mod_vvisit_counterThis week28452
mod_vvisit_counterLast week80132
mod_vvisit_counterThis month231184
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12753303