முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
பகுத்தறிவுப் பகலவன், அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 15
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
செவ்வாய்க்கிழமை, 05 ஏப்ரல் 2011 00:00

 

ரியர் - திராவிடர் யுத்தம் ஆரம்பம் ஆகிவிட்டது!’ என்ற

கருணாநிதியின் போர்ப் பிரகடனத்தைப் படிக்கும்போதே புல்லரிக்கிறது!

''நான் பாப்பாத்தி'' என்றும், ''ராமர் பிறந்த அயோத்தியில் கோயிலைக் கட்டாமல், வேறு எந்த இடத்தில் கோயில் கட்ட முடியும்?'' என்றும் கேட்ட ஜெயலலிதா.... ஆரியர் படைக்குத் தலைமை தாங்க முழுத் தகுதி படைத்தவர் என்பதை மறுப்பதற்கு இல்லை. ஆனால், திராவிடர் படைக்குத் தலைமை தாங்க கருணாநிதிக்கு இருக்கும் தகுதியை ஏற்பதற்கு இல்லை!

''பகுத்தறிவைப் பற்றிக் கவலைப்படாமல் எம்.ஜி.ஆர். கட்சி நடத்தினார். நாங்களோ பகுத்தறிவாளர்கள்!'' என்கிறார் கருணாநிதி. எம்.ஜி.ஆர். மைசூர் தாய் மூகாம்பிகையை வணங்கியது வெளிப்படையான செய்தி.  ஆனால், 'மறைமுகமான பக்தி நடவடிக்கைகள் கருணாநிதியிடமோ, அவரது குடும்பத்தினரிடமோ, மூத்த நிர்வாகிகளிடமோ இல்லை!’ என்று அவரால் சொல்ல முடியுமா?

 

கடலூர் ஆதிசங்கர் நெற்றியில் குங்குமம் வைத்து கருணாநிதிக்கு முன்னால் காட்சி தந்தார். வியர்வையால் குங்குமம் நனைந்து வடிந்த காட்சி, கருணாநிதிக்கு ரத்தமாகத் தெரிந்தது. பதறிப்போனவராக ஆதிசங்கரைக் கிண்டல் அடித்தார். 'உங்களுக்குப் பக்கத்தில் இருக்கும் பி.டி.ஆர்.பழனிவேல்ராசன் எப்போதும் குங்குமத்துடன்தானே காட்சி தருகிறார்?’ என்று நிருபர்கள் கேட்டார்கள். ''அது பரம்பரைப் பொட்டு. இது பஞ்சத்துக்கு வைத்த பொட்டு!'' என்று விளக்கம் அளித்தார் கருணாநிதி. 'பரம்பரையோ பஞ்சத்துக்கோ பொட்டும் விபூதியும் வைப்பது தவறு’ என்று எத்தனை தி.மு.க-காரர்கள் இன்று நினைக்கிறார்கள்?

''பெரிய கருப்பனை ஏன் அறநிலையத் துறைக்கு அமைச்சர் ஆக்கினேன் தெரியுமா? அவர் கோயிலில் விழுந்து விழுந்து வணங்குவதைப் பார்த்துத்தான்!'' என்று கருணாநிதியே கம்பீரமாகக் காரணம் சொன்ன பிறகு... அடுத்த முறையும், 'அந்தத் துறையே தனக்குக் கிடைக்க வேண்டும்’ என்று பெரிய கருப்பன் இன்னும் பெரிய கும்பிடு போட மாட்டாரா என்ன?

 22nov_dmk

இன்று வரைக்கும் கருணாநிதியின் மஞ்சள் சால்​வைக்கும், சிவப்புக் கல் பவழ மோதிரத்துக்கும் சரியான விளக்கம் இல்லை. தேர்தலுக்கு முன்பும், வெற்றிக்குப் பின்பும் குல தெய்வம் கோயிலுக்குப் போகாமல் கருணாநிதி குடும்பம் இருந்தது உண்டா?

இந்த முறை தேர்தல் பிரசாரத்துக்குப் புறப்படுவதற்கு முன்னதாக, அவரது வாகனத்தின் முன்பு தேங்காய் உடைத்துக் கிளப்பியதன் மர்மம் என்ன?

கடந்த ஒரு மாதமாக தமிழகத்தின் முக்கியக் கோயில்களுக்கு விஜயம் செய்யும் மாஜி நடிகை ஒருவர், யார் பெயரில் சிறப்பு அர்ச்சனை செய்து வருகிறார் என்பதையாவது கருணாநிதியை ஆதரிக்கும் பகுத்தறிவாளர்களுக்கு 'ஈரோட்டுக் கண்ணாடி’ காட்டிக் கொடுத்ததா?  ராஜாத்தி அம்மாளின் நேர்த்திக்கடனை நிறைவேற்றுவதற்காக 77 ஜோடிகளுக்கு இலவசத் திருமணம் நடத்த திருவேற்காடு கருமாரியம்மன் கோயிலுக்குள் கருணாநிதி சென்றதில் இருந்து ஆரம்பிக்கிறது இறங்குமுகம். அது ராகு காலம், எமகண்டம் பார்த்து தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்வதில் போய் முடிந்திருக்​கிறது.

எவ்வளவு நிறைந்த நாளில் தாக்கல் செய்தாலும், தமிழ்நாட்டின் நிதிநிலையில் துண்டு விழாமல் தடுக்க முடியுமா என்ன?

இதற்குப் பிறகும், தேர்தல் பொதுக்கூட்டங்​களில் கருணாநிதி தனது பகுத்தறிவு, திராவிடர் இயக்கம், பெரியார் என்ற வார்த்தைகளை உச்சரிப்பதுதான் ஆச்சர்யமானது!

ஈரோடு கூட்டத்தில் பேசிய கருணாநிதி, ''இது நான் வளர்ந்த குருகுலம்!'' என்கிறார். சேலத்திலோ, ''எங்களுடைய கொள்கையிலே, எங்களுடைய லட்சியங்​களிலே... ஒரு சிறு மாசும் ஏற்படுவதற்கு, எங்கள் உயிர் இருக்கிற வரையிலே விட மாட்டோம்... விட மாட்டோம்... விட மாட்டோம்!'' என்று சூளுரை மேற்கொண்டார் கருணாநிதி.

karunanidhi2

புட்டபர்த்தி சாய்பாபா, கோபாலபுரம் வீட்டில் எழுந்தருளி மோதிரம் வரவழைத்துக் கொடுத்தபோதும், வீட்டு வாசலில் ஜக்கி வாசுதேவ் வைத்த மரத்துக்குத் தண்ணீர் ஊற்றியபோதும், மாதா அமிர்தானந்தமயி உடன் ஒரே மேடையைப் பகிர்ந்துகொண்டபோதும், வேலூருக்கே சென்று தங்கக் கோயில் நாராயணீ அம்மாவை சந்தித்தபோதும், குருகுல வாசம் மறந்துபோனதா?

ஐந்து முறை முதல் அமைச்சராக இருந்த கருணாநிதி, ஆறாவது முறையும் அந்தப் பதவியை அடைவதற்காகச் சொல்லும் காரணம், திராவிடக் கொள்கைகளை அமல்படுத்துவதற்காகவாம். ''இந்த கருணாநிதி வந்தால், திராவிடக் கொள்கைகளையே நிறைவேற்றுவான். அதை எப்படியாவது தடுத்தாக வேண்டும்!'' என்று அதற்கு விளக்கமும் சொல்கிறார். இந்த ஐந்து முறையும் திராவிட இயக்கத்தின் அடிப்படை லட்சியங்களுக்காக அவர் செய்தது என்ன என்பதுதான் இன்றைய கேள்வி!

 p24

'கோயிலில் சாதி நீக்கம் வேண்டும்’ என்பதே தந்தை பெரியார் வலியுறுத்திய முழு முதல் கொள்கை. 'அனைத்​துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்’ என்ற சட்டத்தை முதல் தடவை முதலமைச்சராக இருந்தபோது கருணாநிதி கொண்டுவந்தார். அதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. அதன் பிறகுதான், பெரியார் மறைவு சம்பவம் நடந்தது. ''அய்யாவின் நெஞ்சில் முள்ளாக இருந்த இந்தக் கொள்கையை நிறைவேற்ற முடியவில்லை. முள்ளோடு புதைக்கிறோம்!'' என்று கருணாநிதி சொன்னார். 37 ஆண்டுகளாக அந்த முள், பெரும் முள் புதராக மாறிப்போனதுதான் மிச்சம். இந்தத் தடவையும் அதே சட்டத்தைக் கொண்டுவந்து... உச்ச நீதிமன்றத்தில் தடை விதிக்கப்பட்டது. அந்தத் தடையை உடைக்க தி.மு.க. அரசு செய்த முயற்சிகள் என்ன? அந்தக் கொள்கையை நிறைவேற்ற செய்த பிரசாரம் என்ன? கணக்குக் காட்ட ஒரு சட்டத்தை நிறைவேற்றுவதும், தடை விதிக்கப்பட்டால், அதைக் கண்டுகொள்ளாமல் விடப்பட்டதும்தானே நடக்கிறது. அர்ச்சகர் ஆகும் ஆர்வத்தில் படித்த மாணவர்கள் 200 பேர் இன்று தெருவில் திரிகிறார்கள். ஆனால், அதற்கான பாராட்டு விழாக்களும், வீரமணி வைத்த கல்வெட்டும் மினுமினுக்கிறது. இதற்குத்தான் உச்ச நீதிமன்றம் அனுமதி வேண்டும். ஆனால், 'திருவண்ணாமலை திருக்கோயிலில் 10 வகையான பணிகளைச் செய்வதற்கும், குறிப்பிட்ட சாதியினர்தான் இடம்பெற வேண்டும்’ என்று உத்தரவு போட்டதும் தி.மு.க. அரசுதான். இதற்கு யார் உச்ச நீதிமன்றம் போனார்கள்? முள்ளை எடுக்க யார் தடுத்தார்கள்?

கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில்  வாய்ப்புகளைப் பெறுவதன் மூலமாக தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களை உயர்த்திவிட முடியும் என்ற நோக்கத்துக்காகவே இட ஒதுக்கீட்டுக் கொள்கையை திராவிட இயக்கமும், அதற்கு முந்தைய தென்னிந்திய நல உரிமைச் சங்கமும் முன்மொழிந்தது. இந்தச் சலுகையைப் பெறுவதற்காக மட்டுமே, சாதி ஓர் அளவுகோலாக அமையலாமே தவிர, சாதிப் பெருமைகள் பேசுதல் கூடாது என்பதற்காகவே சாதிப் பட்டங்களை நீக்க பெரியார் உத்தரவிட்டார். ஆனால், செங்கல்பட்டு சுய மரியாதை இயக்க மாநாட்டின் 80-வது ஆண்டு நினைவு தினத்தில் கருணாநிதி தனது சாதியைச் சொல்லிக்கொள்வதும், அவரது கலை மற்றும் எழுத்துலக வாரிசான அவர் மகள் சுய சாதி மாநாட்டில் கலந்துகொள்வதும், மற்ற மந்திரிகளும் இதற்கு விதிவிலக்கு இல்லை என்று சொல்லப்படுவது திராவிட இயக்கத்துக்கு அழகா?

ஐந்து முறை முதல்வராக இருந்தபோதும், இதே தமிழகத்தின் கோயில்களில், தெருக்களில், தேநீர் விடுதிகளில், சுடுகாடுகளில் தீண்டாமைக் கொடுமைகள் தொடர்கின்றன. ஓடிக்கொண்ட தேரின் வடத்தை பக்தி மிகுதியால் தலித் பெண் ஒருவர் தொட்டார் என்பதற்காகக் கொல்லப்பட்ட சம்பவம் இன்றைய ஆட்சியாளர்களுக்குத் தெரியாதா?

p24a

40 ஆயிரம் கிராமங்களில், 90 சதவிகிதக் கிராமங்களில் நாளுக்கு நாள் சாதிய வன்மமும், சாதித் தீண்டாமையும் அதிகமாகிக்கொண்டே இருக்கின்றன. ஆண்டுக்கு ஒரு முறை தலித் ஒருவரை வலது பக்கமும், வன்னியர் ஒருவரை இடது பக்கமும் நிற்கவைத்து போலீஸ்காரர் ஒருவர் டீ குடித்து புகைப்படம் எடுத்துக்கொண்டால் தீண்டாமை மறைந்துவிடுமா?

வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை எப்படி அமல்படுத்துகிறீர்கள், அதனால், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு கிடைத்து வருகிறதா என்பதைக் கண்காணிக்க, 'முதலமைச்சர் தலைமையில் அமைக்கப்​பட்ட கண்காணிப்புக் குழு, ஆறு மாதங்களுக்கு ஒரு முறை கூடி ஆலோசனை நடத்த வேண்டும்’ என்று சட்டத்தில் இருக்கிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒரே ஒரு தடவை, அதுவும் மூன்று மாதங்களுக்கு முன் கூடியது. ''பள்ளர் பட்டம் போகாமல் சூத்திரர் பட்டம் போகாது!'' என்றார் பெரியார். திராவிடர் யுத்தத்துக்குத் தலைமை தாங்கக்கூடிய கருணாநிதி இதை நீக்க ஐந்து ஆண்டுகள் என்ன செய்தார்?

இட ஒதுக்கீடு என்பதில் அமெரிக்கா போன்ற நாடுகள் அடுத்த கட்டத்தைத் தாண்டிவிட்டன. கல்வி, வேலைவாய்ப்பு என்பதில் இருந்து அதிகாரம் மற்றும் வளத்தில் இட ஒதுக்கீடு என்று வந்துவிட்டன. கறுப்பின மக்கள், பழங்குடியினருக்கு பல்வேறு உரிமைகள் தரப்படுகின்றன. கல்வியில், வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு தருவதை ஓர் அரசாங்கம் சலுகையாகச் சொல்ல முடியாது. கல்வியை வழங்குவது அரசாங்கத்தின் கடமை. வேலைவாய்ப்பைத் தருவது என்றால், ஒருவனிடம் வேலை வாங்கிவிட்டுக் கூலி தருவது என்றுதான் பொருள். ஆனால், அந்த இட ஒதுக்கீட்டைக்கூட முழுமையாகத் தராமல், தனியார் துறைகளில் அந்தச் சலுகைகளை வழங்கும் முயற்சிகளையும் எடுக்காமல், அடுத்த கட்டத்துக்கு அதைக் கொண்டுசெல்லும் அக்கறையும் இல்லாமல் இருப்பதுதான் திராவிட இயக்க ஆட்சிக்கு அழகா?

'நீராருங் கடலுடுத்த நிலமடந்தை...’ என்ற மனோன்​மணீயம் சுந்தரம் பிள்ளையின் பாடலைத் தமிழ்த் தாய் வாழ்த்தாகத் தேர்ந்தெடுத்தார் கருணாநிதி. 'ஆரியம் போல் உலக வழக்கு அழிந்து ஒழிந்து சிதையா உன் சீரிளமைத் திறன் வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே’ என்ற சுந்தரம் பிள்ளையின் வார்த்தையை சூத்திர ஆட்சி ஏன் நீக்க வேண்டும்? அண்ணா முதலமைச்சராக இருந்தபோது, இரண்டாவது உலகத் தமிழ் மாநாடு கொண்டாடப்பட்டது. இதைப் பார்த்ததும் பெரியார் ஓர் அறிக்கையை வெளியிட்டார். ''தமிழுக்கு ஒரு மாநாடாம்! வெங்காய மாநாடு! கும்பகோணத்தில் மகாமகம் நடத்துவதைப்போல இந்த மாதிரி தமிழ் மாநாடு நடத்துவதால் என்ன பிரயோஜனம்?'' என்று கேட்டவர் பெரியார். ராஜராஜ சோழனின் 1000-ஆவது ஆண்டு விழாவை பட்டுச் சட்டை, பட்டு வேட்டி, பட்டுத் துண்டு அணிந்து கொண்டாடினார் கருணாநிதி. ''இந்த சேரன், சோழன், பாண்டியன் எல்லோருமே தாங்கள் மன்னராக இருக்க, ஆரியரின் அடி வருடித் தங்கள் பதவியைக் காப்பாற்றிக்கொண்டவர்கள்!'' என்று கிண்டல் அடித்தவர் பெரியார். ஆனால், தன்னுடைய ஆட்சியின் சாதனையாக, கோவை செம்மொழி மாநாட்டையும், தஞ்சை விழாவையும் கருணாநிதி காட்டி வருகிறார். கோவை மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் வீரமணி கலந்துகொண்டதையும் 'இரண்டாவது ராஜராஜ சோழன்’ என்று கருணாநிதியை அவரே பாராட்டியதையும் கொள்கைச் சான்றாக எடுத்துக்கொள்ள முடியாது. இதை ஏற்றுக்கொண்டால், 'சமூக நீதி காத்த வீராங்கனை’ என்று ஜெயலலிதாவைப் பாராட்டியதையும், 'திராவிட இயக்கத்தின் பரிணாம வளர்ச்சி’யாகக் கண்டுபிடித்துச் சொன்னதையும் ஏற்றுக்கொண்டாக வேண்டும்!

 

பெரியாருக்கு சாதி ஒழிப்பு எப்படி அடிப்படைக் கொள்கையாக அமைந்து இருந்ததோ, அதேபோல அண்ணா தனது மரண சாசனமாகச் சொன்னது மாநில சுயாட்சியை!

புற்றுநோய் தன்னைக் கொன்று வந்த நிலையிலும், 'மாநில சுயாட்சியை முறைப்படி வழங்காவிட்டால், இந்திய இறையாண்மையை அதிகாரக் குவிப்பு கேன்சராகக் கொன்றுவிடும்’ என்று சொன்னார். அண்ணா கடற்கரையில் காற்று வாங்கப் போய் அரை நூற்றாண்டு நெருங்கிக்கொண்டு இருக்கும்போதும், மாநில சுயாட்சியை அடைய வேண்டிய லட்சியமாகத்தான் கருணாநிதி சொல்லி வருகிறார். 96-ம் ஆண்டில் இருந்து (இடையில் 18 மாதங்கள் தவிர!) மத்திய அரசின் அமைச்சரவையில் அங்கம் வகித்தது தி.மு.க. மாநில சுயாட்சிக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து மற்ற மாநிலக் கட்சிகளையும் ஒன்றிணைத்து அதை நிறைவேற்றவில்லை.

p24b

ஆனால் சோனியா சிரிக்கவில்லை, மன்மோகன்சிங் சந்திக்கவில்லை என்றால் மட்டும், மறுநாள் காலையில் 'மாநில சுயாட்சியை அடைந்தே தீருவோம்’ என்று குரல் கொடுப்பது கருணாநிதியின் வாடிக்கை ஆகிவிட்டது. அதாவது, தன்னுடைய சுயதேவைகளுக்கு மத்திய அரசாங்கம் தடை விதிக்குமானால், பூச்சாண்டி காட்டுவதற்கு அறிவாலயத்தில் அலமாரியில் இருந்த அண்ணாவின் சுலோகம் தூசி தட்டி எடுக்கப்படும்.

''இலங்கைத் தமிழர் பிரச்னையில் மத்திய அரசாங்கத்தின் கொள்கைதான் என்னுடைய கொள்கை!'' என்று அறிவித்ததை அண்ணாவின் தத்துவத்துக்கு எழுதப்பட்ட மரண சாசனமாகச் சொல்லலாமா? '63 இடங்களை எப்படித் தர முடியும்?’ என்று கேள்விகள் கேட்பதும், அந்தக் கோபம் சி.பி.ஐ-யை நினைத்து மூன்று நாட்களுக்குள் அடங்கிவிடுவதும் 63 இடங்களை தூக்கிக் கொடுத்துவிட்டு, 'சுமுக உடன்பாடு ஏற்பட்டது’ என்று ஆர்ப்பரிப்பதும் கருணாநிதியின் திராவிடத் தைரியத்துக்கு சமீபத்திய சான்று என்றும் சொல்லலாமா?

p24b

''பார்ப்பானும் இல்லை, பறையனும் இல்லை என்ற நிலையை உண்டாக்கக்கூடிய வசதியும், வாய்ப்பும் கிடைக்கக்கூடிய தறுவாயில்தான் நாம் பதவி குறித்துக் கவலைப்படுவோம். அதுவரை பதவிகளைத் திரும்பிக்கூடப் பார்க்க மாட்டோம். அவை எல்லாம் நாம் துப்பிய தாம்பூலங்கள்தாம்...'' என்றார் பெரியார். அவரது பெயரை கருணாநிதி பேசுதல் பாவம் அல்லவா!

 

நன்றி ஜுனியர் விகடன்

 

Comments  

 
0 #27 Italian@sonia 2011-04-12 07:14
Quoting Sivakumar.S:
பார்பனர்கள் நீதியும் நேர்மையும் மிக்கவர்கள். பாவ புண்ணியத்திற்கு பயந்தவர்கள். அவர்கள் எந்த ஜாதி மக்களுடனும் நெருங்கி பழகுகின்றனர். பார்பனர் அல்லாத பிற ஜாதியினர் தான் ஜாதி வெறியுடன் இருக்கின்றனர். கருணாநிதியை ராஜராஜ சோழன் என்று புகழ்ந்த வீரமணிக்கு ராஜராஜ சோழன் மராட்டியத்தை சேர்ந்த ஆரியன் என்று தெரியுமா?

ராஜராஜசோழன் ஆரியன் இல்லை...உன்னக்கு வரலாறு தெரிய வில்லை; இன்றைய லேட்டஸ்ட் மரபணு சோதனைகள் கூட தமிழகம் முதல் காஷ்மீர் வரை உள்ள மக்களின்
மரபணுகளில் அதிகமான மாற்றங்கள் இல்லை என்றே தெரிவிக்கின்றன; இது ஆரிய வருகையை மிக பெரிய ஊடுருவல் என்பதில் இருந்து சிறிய ஆடு மேய்த்து புலால் உண்டு கள் குடித்து திரிந்த முட்டாள் கூட்டம் என்ற மறை மலை அடிகள் அவர்களின் முடிவை நிலை நாட்டுகிறது .
நீ உளறதே...

சேர சோழ பாண்டியர்கள் தமிழர்கள் என்ற ஆயிரமாயிரம் அறிஞர்களின் முடிவை உன்னால் மாற்ற முடியாது....
நீ பார்ப்பான்...
நாய் புத்திக்கு மட்ட வச்சு கட்ட முடியாது...
Quote
 
 
+1 #26 Sivakumar.S 2011-04-10 07:42
பார்பனர்கள் நீதியும் நேர்மையும் மிக்கவர்கள். பாவ புண்ணியத்திற்கு பயந்தவர்கள். அவர்கள் எந்த ஜாதி மக்களுடனும் நெருங்கி பழகுகின்றனர். பார்பனர் அல்லாத பிற ஜாதியினர் தான் ஜாதி வெறியுடன் இருக்கின்றனர். கருணாநிதியை ராஜராஜ சோழன் என்று புகழ்ந்த வீரமணிக்கு ராஜராஜ சோழன் மராட்டியத்தை சேர்ந்த ஆரியன் என்று தெரியுமா?
Quote
 
 
0 #25 Force 2011-04-09 17:09
மதுரை க‌லெக்ட‌ரின் ஓட்டுந‌ர் உட‌ல் க‌ருகி, கொலையா, த‌ற்கொலையா எந்த் தெரியா நிலையில் இருக்கிறாதாம். ஆனா‌ல் அவ‌ர்து ச‌ட்டைப் பையில் இருந்த‌ க‌டித‌ம் தெளிவாய் இருக்கிற‌தாம்.ஹும்...
Quote
 
 
+5 #24 நீதிதேவன் 2011-04-07 01:06
இந்த கருணாநிதிய ஒழிக்க நம்ம ஊருல யாரும் அண்ணா ஹசாரே .... இருக்காங்களா...? இவங்கிட்டையும் இந்த அம்மாகிட்டயும் சிக்கி சின்னபின்னமா ஆகுதே தமிழ்நாடு.... தமிழக மக்களே நம்ம ஊரு அண்ணா ஹசாரே..தமிழருவி மணியனை அழைத்து போராடச்சொல்லுங் கள்... வேறு வழியே இல்லை இந்த இரு கொள்ளைக்கார குடும்ப ஆட்சிகளில் இருந்து நாம் தப்பிக்க...
Quote
 
 
+8 #23 anniyan 2011-04-07 00:05
Very good comments.

Quoting ம.பொன்ராஜ்:
Quoting Kumar.T:
எல்லாத்துக்கும் காரணமே சென்ட்ரல் கவர்மென்ட் தான்... அவங்க மட்டும் 60 வருசத்துக்கு முன்னாடி திருவாரூர் ரயில்வே ஸ்டேசன்ல ஒரு டிக்கெட் செக்கர போட்டு டிக்கெட் இல்லாம திருட்டு ரயில் ஏறுகிறவர்களை விரட்டி விட்டுருந்தால் இப்படி ஒரு நிலைமை வந்திருக்குமா...?
:-)


குமார் அண்ணே... இதையும் சேர்த்துகோங்க...
ஆஷ் துறையை சுட்டுக்கொன்ற பிறகு தானும் கண்டிப்பாக செத்துவிடுவோம் என்று தெரிந்தும் அந்த ரயிலில் பயணம் செய்ய பயணச் சீட்டு எடுத்திருந்தான் 'வாஞ்சி நாதன்'. ஆனால் திருக்குவளை வள்ளலோ 'பயணச் சீட்டு' எடுக்காமலே வந்து இன்று பலரையும் சாகடித்துக் கொண்டு இருக்கிறது.
Quote
 
 
0 #22 nrk theesan 2011-04-06 22:16
sarkariya commission arikkai pdf publish seiyngal
Quote
 
 
0 #21 குசும்பன். 2011-04-06 22:03
பாழாப்போன ஒரு பகுத்தறிவு உவமை.

சரியாச்சொல்லப்ப ோனால்

பகுத்தறிவு அமாவாசை.

மெற்றாஸ் பாஷையில் வேணும்னா இன்ண்டில்ச்ஜின் நைட்ன்னு சொல்லுவியா!
Quote
 
 
+1 #20 sagamanithan 2011-04-06 21:38
அட ... யாருக்கு வேணும் இந்த பகுத்தறிவு?? அவனவனுக்கு அன்றாடம னேர்மையாக உழைத்து வாழ வழி ஏற்படுத்தாத எந்த அரசையும் மக்கள் விரும்புவார்களா என்ன? பகுத்தறிவு ஒரு டீ வாஙக உதவுமா? பொய்யின் உச்ச கட்டத்தில் ஒரு தலைவர் எதற்கு? எம் ஜீ ஆர் , ஜெ., மற்ற மானிலத்தில் தலைவர்கள் எல்லாம் பகிரங்கமாகத் தான் கோவிலுக்குப் போகிறார்கள்- என்ன கெட்டுப் போச்சு? கோவிலுக்குப் போனால் ஆரியன் , மசூதி சர்ச்சுக்குப் போனால் திராவிடன் என்பதெல்லாம் இந்த தத்தகாய கதிரவன்(என்று சொல்லிக்கொள்ளூம ்) மு க வின் புதிய சம்பிரதாயம்- அவ்வளவே!! இங்க கொஞ்சம் வாங்க!!
sagamanithan.blogspot.com
Quote
 
 
+1 #19 jaya 2011-04-06 21:28
சஹாயத்தை மிரட்டத்தான் இந்த முருகேசன் கொலையென்று சந்தேகம் எழுவது இயற்க்கை. சஹாயம் மதுரைக்கு மட்ட்ரப்படதன் நோக்கமே மிகவும் நேர்மையாளர் என்பதால் தான். அவருக்கு மன உளைச்சல் தான் கொடுக்க முடியுமே தவிர வேறு ஒன்றும் புடுங்க முடியாது. அவர் மனஉறுதி உள்ளவர். இருப்பினும் தேர்தலை நேர்மைய நடத்தும் ஒரு அதிகாரிக்கு இந்த அரசு பாதுகாப்பு கொடுக்காவிட்டால ் அதுவே எதிர்மரயகி இந்த ஆட்சி மண்ணை கவ்வுவது நிச்சயம்.
Quote
 
 
+1 #18 திடுக் த‌க‌வ‌ல்5 2011-04-06 18:00
தின‌ம‌ணி செய்தி....

தாசில்தார் மிரட்டப்பட்டாரா ? இதுகுறித்து வருவாய்த் துறையைச் சேர்ந்த சிலர் கூறியது : அமைச்சர் மீது புகார் அளிக்கப்பட்டிரு ந்த நிலையில் வட்டாட்சியர் காளிமுத்துவை நாங்கள் கடந்த 2 தினங்களாக சந்திக்க முடியவில்லை. அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந ்தது. இந்நிலையில், ஆட்சியர் மீது புகார் தெரிவிப்பதுபோல தேர்தல் ஆணையத்துக்கு வட்டாட்சியர் அனுப்பியுள்ள புகார் மனுவால் வருவாய்த் துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். வட்டாட்சியரை யாரோ கடுமையாக மிரட்டியுள்ளனர் . இதனால்தான் அவர் இந்த முடிவுக்கு வந்துள்ளார். அவருக்காக வருவாய்த் துறையினர் சங்கம் பல்வேறு போராட்டங்களை மாநிலம் முழுவதும் மேற்கொண்டு வரும் நிலையில் அவரது இந்த முடிவு அதிர்ச்சியளிப்ப தாக உள்ளது, என்று தின‌ம‌ணி செய்தி வெளியிட்டிருந்த ‌து குறிப்பிட‌த்த‌க ்க‌து.

மாறன் குடும்பத்தினர் தனது உறவினர் என்ற போதும் அவர்கள் நடத்திய‌ தினகரன் பத்திரிக்கை அலுவலகத்தையே மூன்று பேர்க‌ள் க‌த‌ற‌க் க‌த‌ற‌க் கொளுத்திப் போட்ட‌வ‌ர்களைத் த‌ண்டிக்க‌த் த‌வ‌றிய‌ பூமியில் எதுவும் ந‌ட‌க்க‌லாம் என்ற‌ அச்ச‌த்தை ஏற்ப‌டுத்தும் வித‌மாக‌ டிரைவ‌ர் முருகேச‌ன் உயிரிழ‌ப்பை இப்போது ஏற்ப‌டுத்தியுள் ள‌ன‌ர். நேற்று சாதிக்பாட்சா! இன்று முருகேச‌ன்! நாளை................... என்று ப‌ட்டிய‌ல் தொட‌ர‌ப் போகிற‌தா? இதில் நீதிம‌ன்ற‌ம் நேர‌டியாக‌ த‌லையிட்டு இத‌ன் பின்ன‌ணியை ஆராய‌ உத்திர‌விட‌வேண் டிய‌து கால‌த்தின் க‌ட்டாயம். பொறுத்திருந்து பார்ப்போம்.


- நமது சிறப்பு நிருபர்

நன்றி அதிகாலை
Quote
 
 
+1 #17 திடுக் த‌க‌வ‌ல் 3 2011-04-06 18:00
எல்லாவற்றையும் விட ஆட்சியர் சகாயம் அவர்களுக்கும் அவரது குடும்பத்துக்கு ம் உடனடியாக மத்திய காவற்படைப் பாதுகாப்பு/அல்லது இராணுவப் படைப்பிரிவு பாதுகாப்பு வழங்க தேர்தல் ஆணையம் உடனடியாக‌ நடவடிக்கை எடுக்கவேண்டியது அவசியம்.

காவற் துறை கண்காணிப்பாளர் அஸ்ரக் கார்க், சகாயம் போன்ற நேர்மையும் துணிச்சலும் உள்ளவர் என்றாலும் மாங்குளம் காவல் துறையினர் முதல்வரின் மகனுக்கு விசுவாசமாக இருப்பதால் எதுவும் நடக்கலாம். ஏனென்றால் கோட்டாட்சியர் சுகுமாறனை ஆட்சியர் சகாயத்திற்கெதிர ாக புகார்செய்ய வைத்தனர். அடுத்து மேலூர் தாசில்தார் காளிமுத்து, அழகிரியும் அவரது ஆதரவாளர்களால் தாக்கப்பட்டதை அவரே புகார் செய்து அவருக்காக வருவாய்துறை அலுவலர்கள் போராட்டத்தையே தமிழகமெங்கும் நடத்தப்போவதாக அறிவித்து ஆங்காங்கே நடத்தினர். தாசில்தார் தற்போது பல்டி அடித்து புகாரில் கூறியதுபோல் எனக்கும், அமைச்சர் அழகிரி மற்றும் புகாரில் குறிப்பிட்டுள்ள நபர்களுக்கும் எவ்வித மோதலும், பிரச்னையும் நடைபெறவில்லை என்று வட்டாட்சியர் காளிமுத்து தெரிவித்துள்ளார ்.
Quote
 
 
+1 #16 திடுக் த‌க‌வ‌ல் 2011-04-06 17:59
டிரைவர் முருகேசன் கடிதம்

காவற் துறையின் கையில் ஒரு கடிதம் கிடைத்ததாகவும் அந்தக் கடிதத்தில் சில பெயர்களைக் குறிப்பிட்டு "இவர்கள் என்னை வாழவிடமாட்டார்க ள்" என்று மாவட்ட ஆட்சியரின் ஓட்டுனர் கைப்பட எழுதிய கடிதம் கிடைத்திருப்பதா கச் செய்திகள் நமக்கு கசிகிறது. இது அவர் எழுதிய‌ எழுடிய கடிதம்தானா? என்று கையொப்பம் சரிபார்ப்பு போன்றவற்றின் மூலம் கடிதம் எழுதியது டிரைவர் முருகேசன்தான் என்பது காவற் துறையினர் ஊர்ஜிதம் செய்துள்ளதாகவும ் தெரிகிறது. எல்லாவற்றையும் விட அதிர்ச்சியான தகவல் என்னவென்றால், ஓட்டுனர் முருகேசன் முக்கியமாகக் குறிப்பிட்டிருப ்பது அமைச்சர் அழகிரியும் அவரது பி.ஏ., உட்பட பலபெயர்கள் அந்த‌க் க‌டித‌த்தில் காணப்படுகிறது என்பதுதான். இந்தக் கடிதம் வெளிவராமலிருக்க பெரும் முயற்சிகளை அழகிரி கோஷ்டி ஈடுபட்டுள்ளதாகவ ும் தெரிகிறது. உடனடியாக‌ மத்தியப் புலனாய்வுப் பிரிவு இந்த வழக்கை எடுத்தாலொழிய உண்மைகள் ஆழக் குழிதோண்டிப் புதைக்கப்படக்கூ டிய அபாயம் உள்ளது.

மர்ம முடிச்சுகள்

காவற்துறையினர் ஏன் இதுவரை இந்தக் கடிதத்தை வெளியிடாமல் மூடி மறைக்க வேண்டிய நிர்ப்பந்தம் என்ன?

அழகிரிக்கு நெருக்கமானவர்க‌ ள் டிரைவ‌ர் முருகேச‌னை என்ன சொல்லி மிரட்டினர்?
நேர்மையின் சிகரமாகத் திகழும் ஆட்சியர் சகாயத்தைக் காப்பதற்காக டிரைவர் தன் இன்னுயிரையே மாய்த்துக்கொண்ட ாரா?

இது குறித்து டிரைவர் முருகேசன் குடும்பத்தாரிடம ் அவரது மனைவியிடம் என்ன சொன்னார் என்று விசாரிக்கப்பட்ட ாரா?

இப்படி விடை தெரியாத வினாக்கள் வெடித்துக் கிளம்புகிறது.
Quote
 
 
+1 #15 திடுக் த‌க‌வ‌ல்க‌ள் 2011-04-06 17:58
மதுரை ஆட்சியர் சகாயத்தை தீர்த்துக்கட்ட மறுத்ததால் டிரைவர் முருகேசன் கொல்லப்பட்டாரா? : திடுக்கிடும் த‌க‌வ‌ல்க‌ள்

சகாயத்தை தீர்த்துக்கட்ட மறுத்ததால் டிரைவர் முருகேசன் கொல்லப்பட்டாரா?

சகாயத்தை தீர்த்துக்கட்ட மறுத்ததால் டிரைவர் முருகேசன் கொல்லப்பட்டாரா? மதுரை ஆட்சியர் சகாயத்தை தீர்த்துக்கட்ட மறுத்ததால் டிரைவர் முருகேசன் கொல்லப்பட்டாரா? : திடுக்கிடும் த‌க‌வ‌ல்க‌ள்

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக டிரைவர் முருகேசன் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார ். மதுரை மாங்குளம் பகுதியில் அவரது சடலம் இன்று காலை தீயில் கருகிய நிலையில் கண்டெடுக்கப்பட் டுள்ளது. இது குறித்து காவற்துறையின‌ர் விசாரணை மேற்கொண்டுள்ளனர ். மாவட்ட ஆட்சியருக்கு ஒரு எச்சரிக்கையை மிரட்டலை ஏற்படுத்தவே இந்த உயிரிழப்புச் சம்பவம் நடைபெற்றுள்ளதாக த் தெரிகிறது. மதுரை ஆட்சியர் சகாயத்தை தீர்த்துக்கட்ட தன்னைப் பலிகடாவாக்குவதை விரும்பாத‌ டிரைவர் முருகேசன் தானே தற்கொலை செய்துகொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் உருவான‌தா என்ற‌ கேள்வி எழுந்துள்ள‌து.

மர்ம முடிச்சுகள்

காவற்துறையினர் ஏன் இதுவரை இந்தக் கடிதத்தை வெளியிடாமல் மூடி மறைக்க வேண்டிய நிர்ப்பந்தம் என்ன?

அழகிரிக்கு நெருக்கமானவர்க‌ ள் டிரைவ‌ர் முருகேச‌னை என்ன சொல்லி மிரட்டினர்?
நேர்மையின் சிகரமாகத் திகழும் ஆட்சியர் சகாயத்தைக் காப்பதற்காக டிரைவர் தன் இன்னுயிரையே மாய்த்துக்கொண்ட ாரா?

இது குறித்து டிரைவர் முருகேசன் குடும்பத்தாரிடம ் அவரது மனைவியிடம் என்ன சொன்னார் என்று விசாரிக்கப்பட்ட ாரா?

இப்படி விடை தெரியாத வினாக்கள் வெடித்துக் கிளம்புகிறது.
Quote
 
 
+1 #14 சவுக்கு 2011-04-06 07:05
அன்பார்ந்த ஊர்க்குருவி, newsavukku@gmai l.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
Quote
 
 
+8 #13 ம.பொன்ராஜ் 2011-04-06 00:31
Quoting Kumar.T:
எல்லாத்துக்கும் காரணமே சென்ட்ரல் கவர்மென்ட் தான்... அவங்க மட்டும் 60 வருசத்துக்கு முன்னாடி திருவாரூர் ரயில்வே ஸ்டேசன்ல ஒரு டிக்கெட் செக்கர போட்டு டிக்கெட் இல்லாம திருட்டு ரயில் ஏறுகிறவர்களை விரட்டி விட்டுருந்தால் இப்படி ஒரு நிலைமை வந்திருக்குமா...?
:-)


குமார் அண்ணே... இதையும் சேர்த்துகோங்க...
ஆஷ் துறையை சுட்டுக்கொன்ற பிறகு தானும் கண்டிப்பாக செத்துவிடுவோம் என்று தெரிந்தும் அந்த ரயிலில் பயணம் செய்ய பயணச் சீட்டு எடுத்திருந்தான் 'வாஞ்சி நாதன்'. ஆனால் திருக்குவளை வள்ளலோ 'பயணச் சீட்டு' எடுக்காமலே வந்து இன்று பலரையும் சாகடித்துக் கொண்டு இருக்கிறது.
Quote
 
 
+29 #12 Kumar.T 2011-04-05 22:30
எல்லாத்துக்கும் காரணமே சென்ட்ரல் கவர்மென்ட் தான்... அவங்க மட்டும் 60 வருசத்துக்கு முன்னாடி திருவாரூர் ரயில்வே ஸ்டேசன்ல ஒரு டிக்கெட் செக்கர போட்டு டிக்கெட் இல்லாம திருட்டு ரயில் ஏறுகிறவர்களை விரட்டி விட்டுருந்தால் இப்படி ஒரு நிலைமை வந்திருக்குமா...?
:-)
Quote
 
 
+9 #11 ஹிட்லர் 2011-04-05 22:12
அன்புள்ள சவுக்கு தோழர்களுக்கு, அரசியல் குறித்த ஆழ்ந்த அறிவு எனக்கு இல்லை, இருப்பினும் கடந்த வருடங்களில் தமிழகத்தில் நடைபெறும் சில சம்பவங்கள் எண்ணுள் தீ போல் நுழைந்து தீர வடுவினை கொடுத்தது.... இந்த நிமிடமும் அதே ஏக்கத்துடன்........... முதல் ஏக்கம், இயற்கை தான் நம் உயிர் வாழ்வதன் அர்த்தம், இந்த ஆட்சியில் பல கோடி டன் வெளி மாநிலத்திற்கும் , வெளி நாட்டிற்கும் தமிழகத்தில் இருந்து தி.மு.க கூட்டம் மூலம் கடத்த படுகிறது... பிற மாநிலங்களில் மணல் அல்ல தடை, இங்கோ பணம் வாங்கி கொண்டு, மக்களின் வாழ்வாதாரத்தை அழிகிறார்கள்...... தமிழ் நாட்டிலும் தமிழன் அழிந்து போகட்டும் என இருக்கும் அரசை வெளியே தள்ள இணைவோம்..... மின்னஞ்சல், குருந்தகுடு என எல்லா தகவல் பரிமாற்ற முறை மூலமும் இதை பற்றிய
விழிப்புணர்வு ஊட்ட வேண்டும்..... ஒவ்வொரு இளைஞனும் தன மூலம் பாத்து குடும்பங்களுக்க ு அநியாயங்களை எடுத்து செல்ல வேண்டும் .....
மணல் கொள்ளை என்பது சாதாரண பிரச்சனை அல்ல ...... இதன் வெளிபாடு விரைவில் அறிவோம்....... இன்னும் ஏழு நாட்களே தமிழகத்தை காப்போம்....
பின்குறிப்பு : சத்தியமாய் கூறுகிறேன், நான் அ.தி.மு.க அல்ல...... மனிதன் என்ற முறையில் என் ஆதங்கம் .....
Quote
 
 
+10 #10 ஊர்க்குருவி. 2011-04-05 21:55
முறுக்குநூல் (கரை) வேட்டி
முழி மறைக்க கண்ணாடி
குரு பார்வை தனை ஈர்க்க
கொண்ட மஞ்சள் துவாய்த்துண்டு
செருக்காக கையில் (சிகப்புக்கல்)
செப்பனிட்ட கணையாழி
இவையனைத்தும் போக
இட வலமாய் துணைப்பேடு.

எதுகை மோனையுடன்
ஈரெட்டு கருத்தாக்கி
கரகரத்த குரலோடு
உருவெடுது பெரு மரமாய்
நூற்றாண்டை நோக்கி,,,
நீங்கா வியாதியென.

நிமிருவது தமிழரல்ல
நிச்சியமாய் தமிழுமல்ல
கழகத்தின் காவல் நான்
காத்திடுவேன் தமிழ் என்பார்.
கனிமொழிக்கு மாநாடு
கருத்துச்சொல்ல வடிவேலு
திறமையுடன் குஷ்பு
திணறடிக்கும் தலைமயுரை.

கரடி பிறை கண்டதென்று
கதை எடுத்து கொடுப்பதற்கு
துரைமுருகன் திருவளவன்
திரைப்பாட்டு வைரமுத்தர்
பருதி இளம்வழுக்கி
பாலைவனத் தாறுமுகம்
அண்ணன் ஆற்காட்டார்
ஆமை வேகத் தன்பழகன்
மெத்தபடித்து வந்து
ராமதாசு மாமாவும்
நித்தம் இடம்மாறி
பித்தம் தெளியாத
குஞ்சாமணி இசைப்பாட்டு.

எங்கே போகிறது
இழவு கொண்டு தமிழ்நாடு.
இன்றே விழித்திடுவீர்
இலை மறைவு கனி பறிக்க,
Quote
 
 
+4 #9 xxx 2011-04-05 21:01
அருமையான கட்டூரை வாழ்த்துக்கள் கருணாநிதியின் உண்மையான கேவளமான முகத்திரையை டார் டாராக கிழிந்துவிட்டது .
Quote
 
 
+3 #8 Kanian 2011-04-05 20:50
Pls contact this number 93804 34921 - Thangavelu.

Pls get the numbers for

Anna Nagar
T Nagar
Kolathur
T V K Nagar
Mylapore

I want to work with this people. We will join this week-end atleaset (8,9,10). Friday, Saturday, Sunday.

Pls help.
Quote
 
 
+8 #7 பச்சைமாலு. 2011-04-05 20:44
கருணாநிதியிடம் பெரியார் அவர்கள்போல அண்ணா அவர்கள்போல சமூகம் நோக்கிய அசாத்தியமான திறமகள் இயல்பாக இல்லயென்றாலும் அந்த இருவரின் பெயரை வைத்து இன்றுவரை வியாபாரம் செய்யும் அபூர்வமான திறமை நிறையவே இருக்கிறது, கருணாநிதியை விட திறமையுள்ள வேறு ஒருவர் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்திருந்தால் கருணாநிதி காணாமல்ப்போயிரு ப்பார். ஆனால் கருணாநிதி


தன்னை மிஞ்சி வளர எவரையும் விட்டு வைத்ததில்லை சுற்றி வளைத்து ஏதாவது வகையில் அந்நபரை குற்றவாளியாக்கி தன்னை பாதுகாத்து கொள்ளும் தந்திரத்தை ஏவி நல்லவன்போல் நடித்துக்கொண்டி ருக்கிறார். இப்படிகுற்றச்சா ட்டுடன் வீசப்பட்ட ஒருவர்தான் வைகோ. கருணாநிதி என்ற வைரசுக்கு எதிரான ஒரேயொரு மாமருந்தாக எம்ஜீஆர் அவர்கள் இருந்தார்கள். கருணாவின் அதிர்ஸ்டம் புரட்சித்தலைவரை காலன் நீண்டநாட்கள் வைத்திருக்கவில் லை. சட்டசபையில் ராசாத்தி யார் என்ற கேள்விக்கு எனது மகள் கனிமொழியின் தாய் என்று பதிலளிக்கக்கூடி ய ஒரு அயோக்கியனை ஆறாவது முறை தெரிவு செய்யப்போகிறோமா .
Quote
 
 
+2 #6 aha 2011-04-05 20:14
periyaaraam.thiraavidamaam.unmaiyai sollungal.nooru varudangalil ethanai thevarkal seiyum saathik kodumaiyai ethirthu ulleerkal.ethanai naadarkal,vanni yarkal,settiyaa rkal,naidukal ,kavundarkal seitha jaathi kodumaikalai ethiruthu ullerkal.Periaaram,alima kanaar endru alaikkavum.
Quote
 
 
+2 #5 aha 2011-04-05 20:09
sankarachaariya arai kaithu seithathu,avar penpithar pol thiruttu vcd veliyittathu,ar upathonpathu vilukkaadu kondu vanthu munneriyathaaka sollappadum vakuppinarin vayitril adithathu ivaiyellam throki jeyavin velaikal enbathu eno junior vikdan muttaalukku theriyavillai.indhukkalai poruthavaraiyil karuna oru virothi,jeya oru throki.
Quote
 
 
+6 #4 நல்லது 2011-04-05 19:39
அட..டா....!!!. ஸ்பெக்ட்ரம் ஊழல் பணத்தை பதுக்கி வைத்த கஜானா சாவியை மாதா அமிர்தானந்தாமயி ஆசிர்வதித்த காட்சி என்ன அருமை!!! :D :D :D

அந்த சாவியைத்தான் ஊர் அறிய கருணாநிதி தன் விட்டில் மாட்டி இருக்கும் காட்சி என்ன பகத்தறிவு!!! தெய்வ ஆசி இருப்பதனால்தான் என்ன கூவினாலூம் ஊழல் விஷயத்தில் கருணாநிதியின் குடும்ப கொள்ளைக்கூட்டம் அசராமல் இருக்கிறதோ!?? :lol: :lol: :lol:

தன் குடும்பம் வாழ பணம், அதிகாரம் போதாது என்று ஆன்மிகமும் வேண்டும் என்று நினைத்திருப்பார ் போலும்!!!! :lol: :lol: :lol:
Quote
 
 
+8 #3 தமிழ் மகன் 2011-04-05 19:29
அழுவதற்கு ஆளில்லாமல் அழுகிச்சாவான்
Quote
 
 
+4 #2 kmsamy 2011-04-05 18:13
It is very simple. showing as Nathigan, & criticizing hindu belief & Hindu gods frequently are for fishing the minority religion votes
Quote
 
 
+23 #1 pandiyan 2011-04-05 17:48
1968 ஆம் ஆண்டு திசம்பர் 25 இல் வந்தேறி வடுகன் கோபாலகிருட்டிண நாயுடு என்ற தெலுங்கனால் 18 மள்ளர்கள், 26 பறையர்கள் என 44 தமிழர்கள் குடிசைக்குள் வைத்து எரித்துக் கொல்லப்பட்டார்க ள். இது நடந்தது அண்ணாத்துரை தலைமையிலான தி.மு.க. ஆட்சியில், 44 தமிழர்களை எரித்துக் கொன்ற ஆந்திர அகதி, தெலுங்கன் கோபாலகிருட்டிண நாயுடு உள்ளிட்ட 23 கொலைகாரர்களையும ், தான் ஆட்சிக்கு வந்தவுடன் தெலுங்கர் மு.கருணாநிதி திட்டமிட்டு விடுதலை செய்தார்.தமிழீழ விடுதலையைச் சிதைத்துத் தமிழீழ விடுதலைப்புலிகள ைத் தலைமறைவு வாழ்க்கைக்கு ஆட்படுத்தியதில் தெலுங்கர் மு.கருணாநிதியின் பங்களிப்பு அளப்பரியதாகும். தெலுங்கரான தன்னை உலகத் தமிழர்களின் ஒப்பற்ற தலைவராகக் காட்டிக் கொண்டிருக்கும் கருணாநிதிக்கு, இன்று உலகமெல்லாம் வாழும் தமிழர்கள் மேதகு பிரபாகரன்‘ரைத் தமிழரினத் தலைவராக ஏற்றுக் கொண்டதைச் செரிக்க முடியாமல், முகம் செத்துப் போய்ப் புகழுக்காகப் பொறாமை கொண்டு ஈழத்தமிழர் விடுதலையை அழித்தொழிக்க என்னவெல்லாம் செய்ய முடியுமோ, அதையெல்லாம் செய்து முடித்த தமிழ்ப் பகைவன்தான் இந்தத் தெலுங்கர் மு.கருணாநிதி. தமிழர் தேசிய விடுதலைப் போராட்டத்தையும் , தேசியத் தலைவரையும் கொச்சைப்படுத்தி யதோடு மட்டுமல்லாமல் தமிழக மீனவச் சொந்தங்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சுட்டுக் கொல்லப் பட்டதற்குத் துணையாக இருந்தவர்தான் இந்தத் தெலுங்கர் மு.கருணாநிதி. உயிரைப் பணயம் வைத்து அன்றாட வாழ்விற்காகப் போராடும் மீனவ உறவுகளைப் ‘பேராசைக்காரர்க ள்’ என இழிவுபடுத்தியவர
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 236 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday10802
mod_vvisit_counterYesterday10087
mod_vvisit_counterThis week20889
mod_vvisit_counterLast week80132
mod_vvisit_counterThis month223621
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12745740