முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
மக்களை ஏமாற்றும் நயவஞ்சகத்தனத்தின் ஒரு பகுதியே கருத்துக் கணிப்புகள் - தங்கபாலு அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 0
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
புதன்கிழமை, 06 ஏப்ரல் 2011 07:14

தங்களுக்கு எதிரான நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானின் பிரசாரத்தால் கவலைப்படவில்லை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு தெரிவித்தார்.

சென்னையில் நிருபர்களிடம் தங்கபாலு பேசுகையில் , "ராகுல் காந்தி ஒவ்வொரு முறையும் தமிழகத்திற்கு வரும்போது முதல்வர் கருணாநிதியை சந்திக்கவில்லை என்று கூறுகிறீர்கள். அவர் சென்னையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பின்போது இதுபற்றி கூறியிருக்கிறார்.

 

தங்களுக்கு எதிரான நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானின் பிரசாரத்தால் கவலைப்படவில்லை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு தெரிவித்தார்.

சென்னையில் நிருபர்களிடம் தங்கபாலு பேசுகையில் , "ராகுல் காந்தி ஒவ்வொரு முறையும் தமிழகத்திற்கு வரும்போது முதல்வர் கருணாநிதியை சந்திக்கவில்லை என்று கூறுகிறீர்கள். அவர் சென்னையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பின்போது இதுபற்றி கூறியிருக்கிறார்.

முதல்வர் கருணாநிதி ஒரு மூத்த தலைவர். அவர் மீது தனக்கு மிகுந்த அன்பு இருப்பதாக அவரே தெரிவித்திருக்கிறார். மூத்த தலைவர்கள் மீது ராகுல் காந்திக்கு எப்போதும் மிகுந்த மரியாதையும், அன்பும் உள்ளது.

தமிழகத்தில் வெளியாகியுள்ள கருத்துக் கணிப்புகள் அனைத்தும் போலியானவை. மக்களை ஏமாற்றும் நயவஞ்சகத்தனத்தின் ஒரு பகுதியே அது. கடந்த 2009ம் ஆண்டு இதேபோல ஒரு கருத்துக்கணிப்பு வெளியிடப்பட்டது. ஆனால் எங்கள் கூட்டணிதான் அதிக இடங்களில் வெற்றி பெற்று அந்த கருத்துக்கணிப்பை பொய்யாக்கியது. அதேபோல இந்த முறையும் ஜனநாயக முற்போக்கு கூட்டணிதான் வெல்லும்.

மேலும், அந்தக் கருத்துக்கணிப்பில் அரசியல் சாதனைகளை கூறவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலின் மையக் கருத்தே மத்திய, மாநில அரசுகளே எண்ணற்ற சாதனைகள்தான். எனவே அந்த சாதனைகளை மக்கள் மறக்காமல் இந்த கூட்டணியை வெற்றி பெறச் செய்வார்கள்.

Thangabalu_2

மயிர்நீப்பின் உயிர்வாழா கவரிமான்..

சோனியா காந்தி அறிவித்த வேட்பாளர்களை எதிர்த்து யார் போட்டியிட்டாலும் அவர்கள் உண்மையான காங்கிரஸ்காரர்களாக இருக்க மாட்டார்கள். எனவேதான் அவர்கள் நீக்கப்பட்டுள்ளார்கள். அவர்களை நீக்க எனக்கு அதிகாரம் இல்லை என்று யாரும் சொல்ல முடியாது.

கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போதும் சீமான் எங்கள் கூட்டணியை எதிர்த்து பிரசாரம் மேற்கொண்டார். அதையும் மீறி நாங்கள் வெற்றிபெற்றோம். எங்களுக்கு கூட்டணி பலம் உள்ளது. எனவே இந்தப் பிரச்சாரத்தை பற்றி நாங்கள் கவலைப்படவில்லை.

தேர்தல் ஆணையம் நியாயமாகவும், பாரபட்சமின்றி நடந்து கொள்ளவேண்டும்.மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மீது வழக்குப் பதிவு செய்திருப்பதை கண்டிக்கிறேன்.

நடிகர் சிரஞ்சீவி காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்யவிருக்கிறார். அதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்," என்றார் தங்கபாலு.

 

Comments  

 
0 #11 top guy 2011-04-16 00:28
//"தங்களுக்கு எதிரான நாம் தமிழர் கட்சித் //தலைவர் சீமானின் பிரசாரத்தால் //கவலைப்படவில்லை என்று தமிழக காங்கிரஸ் //தலைவர் தங்கபாலு தெரிவித்தார்." =>

நீ எதுக்கு தல சீமானபத்தி கவலைப்படணும், அவரு பிரச்சாரம் பண்ணலன்னா மட்டும் உன்னோட கட்சி ஜெயிக்கபோவுதா என்ன!! அண்ணன் சீமான் பெயர சொல்லி உன் தோல்விக்கு ஒரு டீசென்டான காரணத்த சொல்லிக்கலாம் .... உங்களுக்குள்ளேய ே ஒற்றுமை இல்லாம கேவலப்பட்டு கிடக்குரப்ப எதுக்கு வெற்றி தோல்வி பற்றி எல்லாம் கவலைப்படணும் சொல்லுங்க... பொய் நல்லா பொங்கலும் வடகரியும் சாபுட்டுவிட்டு நல்லா அஞ்சு வருஷம் ரெஸ்ட் எடுங்க அடுத்த election வரும்போது மறுபடியும் வெட்டி வேலைகளை எல்லாம் தொடரலாம்
Quote
 
 
+1 #10 RAJARAM 2011-04-08 17:03
Seeman will take care all cong candidates. All cong men will defenitly loose deposit in TN elections
Quote
 
 
+3 #9 kvtd 2011-04-08 07:55
Dupakoor thangabalu!!!!! he knows (subconscious) well he is making trick to catch some important minister post in taminadu. I made discreet enquiries about him, I came to known that definitely he will loose his captain ship in congress (vanish or ran away) due to loss of deposite in this election!!!!!!! !!!!!!!!!!!!!!! !!!!!!!!!!!!!!! !!!!!!!!!
Quote
 
 
+5 #8 top guy 2011-04-08 02:00
Quoting kaali.krishna:
//// மயிர்நீப்பின் உயிர்வாழா கவரிமான்..////
நீக்குறதுக்குதா ன் அங்க மயிரே இல்லையே?..

சரியா சொன்னீங்க நண்பா!!
Quote
 
 
+2 #7 top guy 2011-04-08 01:44
SEEMAN SPEECH ABOUT 2G SPECTRUM SCAM AND KARUNANIDHI: http://www.youtube.com/watch?v=0gdPJ7eHmT4&NR=1
Quote
 
 
+3 #6 top guy 2011-04-08 01:18
உனக்கு மக்கள் அளிக்கபோவது துண்டு..
தொழில் போட்டுக்கொள்ள அல்ல உன் தலையில் போட்டுக்கொள்ள
Quote
 
 
+6 #5 Kumar.T 2011-04-07 22:46
///தேர்தலின் மையக் கருத்தே மத்திய, மாநில அரசுகளே எண்ணற்ற சாதனைகள்தான். எனவே அந்த சாதனைகளை மக்கள் மறக்காமல் இந்த கூட்டணியை வெற்றி பெறச் செய்வார்கள்.///

இல்லையா பின்ன.... கொஞ்சம் நஞ்சம் சாதனையா செஞ்சிருகிங்க... வரிசையா சொல்லிடே போகலாமே உங்க சாதனைகளை (!)
ஆதர்ஷ் அடுக்குமாடி குடியிருப்பு ஊழல், காமன் வெல்த் விளையாடு போட்டி ஊழல், 2G ஸ்பெக்ட்ரம் ஊழல், S - பேண்ட் ஒதிக்கீடு ஊழல் .....
இப்படி சொல்லிடே போகலாமே மிஸ்டர் தொங்கபாலு சார்.....
உங்களோட இந்த சாதனைகளை எல்லாம் மக்கள் மறக்காம தான் வோட்டு போடுவார்கள் ....
Quote
 
 
+4 #4 Tamil Priyan 2011-04-07 10:22
ivvan oru political comedy piece ayyettan.... after TR..
Quote
 
 
+6 #3 kaali.krishna 2011-04-07 01:16
//// மயிர்நீப்பின் உயிர்வாழா கவரிமான்..////
நீக்குறதுக்குதா ன் அங்க மயிரே இல்லையே?..
Quote
 
 
+6 #2 kaali.krishna 2011-04-07 01:13
Quoting Nanbanda:
Poda Sottai.....frist try to get your depost back at Mylapore.

Ha ha ha சூப்பர்...

//// சோனியா காந்தி அறிவித்த வேட்பாளர்களை எதிர்த்து யார் போட்டியிட்டாலும ் அவர்கள் உண்மையான காங்கிரஸ்காரர்க ளாக இருக்க மாட்டார்கள்./////

இவன் எல்லாம் போயி காங்கிரஸ் காரன் யாரு என்று வியாக்கியானம் கொடுக்கிறான் பாரு.எல்லாம் தமிழனோட தலை விதி.
Quote
 
 
+8 #1 Nanbanda 2011-04-06 14:41
Poda Sottai.....frist try to get your depost back at Mylapore.
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 93 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday2855
mod_vvisit_counterYesterday12350
mod_vvisit_counterThis week62020
mod_vvisit_counterLast week78861
mod_vvisit_counterThis month274839
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12796958