|
மதுரையில் செய்தியாளர்களுக்கு வியாழக்கிழமை அவர் அளித்த பேட்டி
தேர்தல் ஆணையம் பாரபட்சமாக செயல்படுவதாக நான் சொல்லவில்லை. தேர்தல் விதிமீறல்கள் தொடர்பான புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கும்போது பாரபட்சமில்லாமல், நீதிமன்றம்போல் நடுநிலையுடன் செயல்பட வேண்டும். நீதிமன்றங்களேகூட சில சமயங்களில் தடுமாறும் நிலையில், தேர்தல் கமிஷன் தன் மீது எந்தவிதமான விமர்சனமும் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
மதுரையில் செய்தியாளர்களுக்கு வியாழக்கிழமை அவர் அளித்த பேட்டி
தேர்தல் ஆணையம் பாரபட்சமாக செயல்படுவதாக நான் சொல்லவில்லை. தேர்தல் விதிமீறல்கள் தொடர்பான புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கும்போது பாரபட்சமில்லாமல், நீதிமன்றம்போல் நடுநிலையுடன் செயல்பட வேண்டும். நீதிமன்றங்களேகூட சில சமயங்களில் தடுமாறும் நிலையில், தேர்தல் கமிஷன் தன் மீது எந்தவிதமான விமர்சனமும் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

இந்தத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு அமோக வெற்றி வாய்ப்பு உள்ளது. திமுக ஆட்சியின் சாதனைகளை மக்கள் அறிந்து கொண்டுள்ளனர். உதாரணமாக கலைஞர் வீடு வழங்கும் திட்டம் மூலம் இதுவரை 1.10 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் மீதமுள்ள வீடுகளைக் கட்டித் தருவார்கள் என்ற நம்பிக்கை மக்களிடம் உள்ளது. திமுக கூட்டணி 200 இடங்களில் வெற்றி பெறும் என்று மத்திய அமைச்சர் மு.க.அழகிரி கூறியுள்ளதை இங்கு சுட்டிக்காட்டியுள்ளீர்கள். அவருக்கு கிடைத்த தகவல்படி அவர் அதைச் சொல்லியிருக்கலாம். அது துல்லியமாகவும் இருக்கலாம்.
மதிமுகவில் உள்ள இரண்டாம் நிலைத் தலைவர்கள் திமுகவுக்கு ஆதரவாகப் பேசி வருகிறார்களே என்று கேட்கிறீர்கள். இந்தத் தேர்தலில் பல இடங்களில் மதிமுக தொண்டர்கள் நேரடியாகவும், மானசீகமாகவும் திமுகவுக்கு ஆதரவு தருகின்றனர். திராவிட இயக்கங்கள் ஒன்றுபடுகின்ற சூழல் விரைவில் வரும் என்பதற்கான அடையாளம்தான் இது.
தமிழகத்தில் மின் பற்றாக்குறை நிலவுவது பற்றி எதிர்க்கட்சிகள் குறைகூறி விமர்சித்து வருகின்றன. மின்பற்றாக்குறை என்பது ஒரு தொடர் நிகழ்வு. வீடுகள், தொழிற்சாலைகளுக்கான தேவை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. தேவையைவிட உற்பத்தி குறைவாக இருப்பதால் பற்றாக்குறை ஏற்படுகிறது. கடந்த அதிமுக ஆட்சியில் மின்னுற்பத்தியை அதிகரிக்க ஆக்கப்பூர்வமாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அவர்கள் செய்த தவறு எங்கள் தலையில் விழுந்திருக்கிறது.
மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் மின்திட்டங்கள் வரிசையாக நிறைவேற்றப்பட்டு மின்பற்றாக்குறை அகற்றப்படும்.
தமிழகத்தை மீட்டெடுக்கப் போவதாக ஜெயலலிதா பிரசாரம் செய்து வருகிறார். முதலில் அவர் பெங்களூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கிலிருந்து தன்னுடைய நகைகளை மீட்கட்டும்.
மதுரையில் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி செல்வாக்கு மிகுந்தவராக இருக்கிறார். மதுரை மக்களுக்குத் தேவையான நன்மைகளை அவர் செய்து வருகிறார். இதைக் கண்டு பொறுக்காமல் ஜெயலலிதாவும் அவரது அணியினரும் அவர் மீது தேவையில்லாமல் புகார்களைக் கூறிவருகின்றனர்.
தேர்தல் ஆணையத்தில் ஏற்கெனவே அதிகாரியாக பணி செய்து ஓய்வு பெற்றுள்ள சிலரின் உதவியைக் கொண்டு தேர்தல் ஆணையம் இப்போது செயல்பட்டு வருவதாக பேச்சு அடிபடுகிறது. அது உண்மையாக இருக்கக் கூடாது.
அரசு அதிகாரிகள் சிலர் அதிமுகவுக்கு ஆதரவு தருவதாக சொல்லப்படுகிறதே என்று கேட்கிறீர்கள். அரசியலில் மட்டுமல்ல; அதிகாரிகள் மத்தியிலும் எட்டப்பர்கள் உண்டு.
கோவையில் அதிமுக கூட்டணித் தலைவர்கள் பங்கேற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும், ஆந்திர மாநில முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு, திமுக குடும்பக் கட்சி என்று பேசியிருக்கிறார். குடும்பக் கட்சியாக இருக்கலாம். ஆனால், சந்திரபாபு நாயுடு போல குடும்பத்தை குலைத்த கட்சி திமுக அல்ல.
இந்தக் கூட்டத்தில் ஜெயலலிதா முதல்வராகவும், விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருப்பார் என்று பண்ருட்டி ராமச்சந்திரன் பேசியுள்ளார். பண்ருட்டி ராமச்சந்திரன் பெயரை குறிப்பிடும்போது மறைந்த அமைச்சர் ஏ.கோவிந்தசாமியின் ஞாபகம்தான் எனக்கு வருகிறது. அவர் மறையும்போது என்னை அழைத்து, எனக்குப் பதிலாக எங்கள் சமூகத்திலிருந்து ஓர் அமைச்சரை நியமிக்க வேண்டுமென்றால் பண்ருட்டி ராமச்சந்திரனைப் போன்ற துரோகிகளை போட்டு விடாதீர். எனக்கு விரோதியாக இருந்தாலும் கடலூர் இளம்வழுதி போன்றவர்களை நியமியுங்கள் என்று சொன்னார். நான் அவருடைய பேச்சைக் கேட்காததால் அனுபவிக்கிறேன்.
தமிழகத் தேர்தல் முடிவுகள் மத்தியில் எதிரொலிக்குமா? எப்போது என்று கேட்கிறீர்கள். நிச்சயம் எதிரொலிக்கும். எப்போது எனில் எதிரொலிக்கும்போது தெரியும் என்றார். |
Comments
If viduthalaichrut hai/ pmk - both are dummy parties,
For him only option is AIADMK/MDMK,
There at the time of ellection due to STERLITE COMPANY was shifted to the other owner and That owners presure only all of this problems to VAIKO.
Bcas all neutral peoples always support to Mr.Vaiko...
""ம.தி.மு.க., கொ.ப.செ., நாஞ்சில் சம்பத், திடீர்னு, ஆளுங்கட்சிக்கு ஆதரவா பேசிட்டு வர்றாருங்க... பட்டுக்கோட்டையி ல பேசினப்ப, அங்க இருந்த தி.மு.க.,வினர் கைகொடுத்து பாராட்டிருக்காங ்க... இதெல்லாம், ம.தி.மு.க.,வினரை கோபப்படுத்தியிர ுக்கு...
""தி.மு.க.,வுக்கு ஆதரவு தெரிவிக்கும்படி வைகோ வாய் திறந்து சொல்லலை... இந்த நிலையில, தி.மு.க.,வுக்கு ஜால்ரா போட்டு பேசும் நாஞ்சில் சம்பத் மேல நடவடிக்கை எடுக்கணும்ன்னு, புகார்கள் பறந்திருக்குங்க ... அதுக்கப்பறம் தான், "தேர்தல்ல, கட்சியின் நிலைப்பாட்டை பத்தி பேசாதீங்க'ன்னு, வைகோ அறிக்கை கொடுத்தாருங்க...'
Quoting anniyan:
திரு. பாண்டியன்,
நீங்கள் எழுதும் கருத்துக்கள் பெரும்பாலும் நன்றாகவே இருக்கும்.. என் இப்படி எழுதினீர்கள் என்று தெரியவில்லை.. வைகோ பிரபாகரனை சந்தித்து பேசி திரும்பி வந்தார்.. அப்போது கருணாநிதிக்கு ஒரு எண்ணம் தோன்றியது. வைகோ வளர்ந்தால் நாம் தாழ்வோம்..நம் குடும்பம் அரியணையை சிலவருடம் இழக்கும் என்பதுதான் அது.. உடனே ஒரு பழி சுமத்தினார் : 'தான் முதல்வராவதர்காக வைகோ, விடுதலைப் புலிகளை வைத்து என்னைக் கொல்லப்பார்கிறா ர்' என்பதுதான் அது..
இதை எழுதியவர் வாசந்தி. குமுதம் தீராநதி 2006
வைகோ அவ்வாறு திமுகவிடம் சேர்ந்தால், அது அவரின் தவறு அல்ல.. சொரணையில்லாத, நேர்மையில்லாத, எளியாரை இழிவுபடுத்தினால ் போதும், வக்கிரமாக சிரித்து விட்டு வோட்டுப் போடும் மக்கள் இருக்கும்போது, தமிழ் மக்களுக்குக் கருணாநிதியும், வைகோவுக்கு ஜெயலலிதாவும் துரோகம் செய்யும்போது அவர் தான் என்ன செய்வார் ?
என் மகன் அழகிரின்னு சொல்லாம 'மத்திய மந்திரி அழகிரி , மத்திய மந்திரி அழகிரி ' அப்டிங்குதே கிழம், கிழத்துக்கு நினைவு தப்பிடுச்சா?
// எனக்குப் பதிலாக எங்கள் சமூகத்திலிருந்த ு ஓர் அமைச்சரை நியமிக்க வேண்டுமென்றால் //
சீ .. என்னா மனுஷன் இவன்? எப்பவுமே ஜாதி, சமூகம், இனம் இதப்பத்தின பேச்சுத்தானா?
இதை சாதகமாகக்கொண்டு கருணாநிதி சில கணக்குகளை போட்டு ஆட்களை அனுப்பியும் , அறிக்கைகளை விட்டும் தன் பாணியில் அவருடைய திட்டத்தை நிறைவேற்ற முனைந்துவிட்டார ் .
அதன் வெளிப்பாடு தான் கிழ்கண்ட செய்தி .......
வைகோ வின் ஆட்கள் விலை போக ஆரம்பித்துவிட்ட ார்கள்....
பல லட்சங்கள் கை மாறி விட்டன ......
மதுரை நோன்ஜானன்ஜன் அழகிரி முன்னிலையில் பணப்பட்டுவாடா நடக்கிறது .....
விலைக்கு வாங்கப்படுகிறார ்கள்.....
கொள்கைகள் எங்கே போயிற்று ....
தொண்டை கிழிய கத்தினவை எங்கே போயிற்று
மதிமுக விலை போகிறதா ....
மௌனம் களையுங்கள் ......
தன்னலமில்லாத தலைவனே ......
உன் உள்மனது என்ன கூறுகிறதோ அதன்படி நிமிர்ந்து நில் ...
தைரியமாக வெளிப்படையாக கட்சியின் முடிவுப்படி நில் ...
எதற்கும் பயப்படாத தலைவனே .....
உடனே முடிவு எடுத்து உனது அறிக்கையை வெளியிடு .......
காலம் தாழ்த்தாதே
2011-04-08
வை கோபாலசாமி என்ற வைகோ மீது கொலை பழியை சுமத்தி உங்கள் மகன் ஸ்டாலினுக்கு இடைஞ்சலாய் இருக்க கூடாது என்பதற்காக பல ஆண்டுகளாக திமுகவுக்கு உழைத்த அவரை அங்கிருந்து வெளிஎற்றிநீர்கள ்..தொடர்ந்து அவர் தன் தமிழினத்துக்காக எத்தனை மேடைகளில் கத்தியிருப்பார் .. ஆனாலும் அவரிடம் அதிகாரம் இல்லை..அதனால் இரு வருடங்களுக்கு முன்பு நடந்த துயரங்களுக்கு அவரால் அணை போட
முடியவில்லை..ஆனால் அதிகாரம் உங்களுடம் இருந்தது.. மூன்று தொகுதி பிரச்சினைக்காக ஆதரவை வாபஸ் பெற போகிறேன் என இன்று சொலும் நீங்கள் முப்பதாயிரம் உயிர்களுக்காக அன்று சொல்வதற்கு பதிலாக செய்திருக்கலாம் ..ஆனால் அப்போதும் குடும்ப நலனுக்காக உதறி தள்ளினீர்கள்..மாறாக பொது மக்களிடமும் நல்ல பேரை வாங்க வேண்டும் என்று வைகோ நெடுமாறன் போன்றோரால் உருவாக்க பெற்ற இலங்கை
தமிழர் பாதுகாப்பு இயக்கத்திற்கு எதிராக நாங்களும் கண்ணீர் வடிக்கிறோம் என்று ஒரு இயக்கத்தை ஆரம்பித்தீர்கள் .. அதுவும் யார் தலைமையில் .. உங்கள் குடும்ப தியாகிகள் தலைமையில்.மாணவர் போராட்டத்தையும் ஒடுக்குநீர்கள்.. இப்போது என்ன ஒரு தைரியத்தில் அவரை ஆதரவு வழங்க அழைகிறீர்கள்..நீங்கள் கூறும் அகநானூறு புறநானூறு அல்லது திருக்குறள் போன்ற ஏதேனும் ஒன்றில் இப்படி
கேவலமான ஒரு பகுதி வருகிறதா .. தயவு செய்து சுட்டி காட்டுங்கள்.. எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்று அண்ணா சொன்னார்.. இதையும் தாங்கும் இதயமும் வேண்டுமோ.. மதிமுக தொண்டன் மானம் உள்ளவன். சாகும் வரை உங்களோடு சேர மாட்டான். நீங்கள் வேண்டாம் என்று தானே தனியாக வந்தோம். திமுகவும அதிமுகவும் நம்பவைத்து கழுத்தை அறுத்தவர்கள். உங்களுக்கு ஆதரவு கொடுத்தால் இலங்கை தமிழன்
ஆன்மா எங்களை மன்னிக்காது. இந்நேரத்துக்குள ் பணத்திற்கு அலையும் சில பேரை விலைக்கு வாங்கி இருப்பீர்கள்..உனக்கு மறுப்பு தெரிவித்து தலைவர் அறிக்கை விட்டால் அடுத்த கணமே மதிமுக பிளவு ... அனைத்து முக்கிய தலைவர்களும் உங்களுக்கு ஆதரவு என்று உங்கள் வசம் இருக்கும் மீடியாக்களை வைத்து பிரச்சாரம் செய்வீர்கள்.. இந்த பொழப்புக்கு... எங்கள் தலைவரின் மன நிலையை தொண்டர்களாகிய
நாங்கள் அறிவோம்..
dinamalar.com 8/9/11
சொல்வாங்க
Quoting lakshmanan:
ஜெயலலிதா தெரிந்த எதிரி ஆனால் கருணாநிதி நம்பவைத்து கழுத்தை அறுத்த ஒரு துரோகி ..எதிரியை என்று வேண்டுமானாலும் அழிக்கலாம்..ஆனால் துரோகியை காங்கிரஸ் கை பாவை கருணாநிதியை உடனே அழிக்க வேண்டும் என்பதே இன்றைய தேவை ...அதை விடுத்தது இவர் திமுகவுக்கு அதரவாக செய்யல்பட்டால்...இவர் விளைவுகளை சந்திக்க தயார் ஆகவேண்டியது தான்
1949 ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தோற்றுவித்த பேரறிஞர் அண்ணா அவர்கள், தோழர்கள் அனைவரையும் ‘தம்பி’ என்று பாசத்துடன் அழைத்து, அன்புகாட்டி அரவணைத்து, உலகில் வேறு எந்த அரசியல் இயக்கத்திலும் காணமுடியாத குடும்பப் பாச உணர்வுடன், கட்சியைக் கட்டி வளர்த்தார். 18 ஆண்டுகள் அயராத உழைப்பில், காங்கிரசை வீழ்த்தி, 1967 ஆம் ஆண்டு கழகத்தை ஆட்சி பீடத்தில் அமர்த்தினார். இந்த மண்ணுக்குத் ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்டினார். ஆனால், புற்றுநோய்த் தாக்குதலால் உடல்நலம் குன்றி, இரண்டு ஆண்டுகளுக்கு உள்ளாக, 1969 பிப்ரவரி 3 ஆம் நாள், இயற்கை எய்தினார்.
அவருக்குப் பின்னர், சூழ்ச்சியாலும், வஞ்சகத்தாலும் ஆட்சியையும், கட்சித் தலைமையையும் கைப்பற்றிக்கொண் ட கருணாநிதி, கழகத்தில் தமக்குப் பிடிக்காதவர்களை ஓரங்கட்டி ஒழிக்கத் தொடங்கினார். மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கு இயக்கத்திலும், மக்களிடமும் செல்வாக்குப் பெருகியதைக் கண்டு பொறுக்காமல், வீண்பழிகளைச் சுமத்தி, அவரை இயக்கத்தை விட்டே வெளியேற்றினார். அண்ணா காலத்தில் தி.மு.கழகத்தின் முன்னணித் தலைவர்களாகத் திகழ்ந்தவர்கள் அனைவரையும் அவமதித்து, படிப்படியாக வெளியேற்றினார்; அரசியலை விட்டே விலகச்செய்தார்.
கட்சியையும், ஆட்சியையும் பயன்படுத்தி, தமது குடும்பத்துக்கா கச் சொத்துகளைக் குவிக்கத் தொடங்கினார்.
ஆட்சி பறிபோனதால், கொஞ்சம்கொஞ்சமாக , தி.மு.கழகத்தைத் தனது குடும்பச் சொத்தாக ஆக்கினார் கருணாநிதி. தமது மகனைக் கட்சியில் வாரிசாக முன்னிறுத்தினார ். அப்போது, தி.மு.கழகத்தின் மாநிலங்களவை உறுப்பினராக இருந்த வைகோ, தனித்து நின்று, தமிழகத்தின் உரிமைக்குரலை ஓங்கி ஒலித்ததால், இயல்பாகவே தி.மு.கழகத் தொண்டர்கள் அவரிடம் பாசம் காட்டினார்கள். வைகோவுக்கு, கட்சியில் எழுந்த ஆதரவைக் கண்டு திடுக்கிட்ட கருணாநிதி, அவரை எவ்விதத்திலேனும ் கட்சியில் இருந்து விரட்டத் திட்டமிட்டார்.
1991 நவம்பர் 26 ஆம் தேதி கட்சியின் செயற்குழுவை கூட்டி வைகோவை கட்சியில் இருந்து நீக்க கருணாநிதி முடிவு செய்தார் அச்செயற்குழுவில ் வைகோ மீது அபாண்டமான பழிகளைச் சுமத்தி கருணாநிதி உரையாற்றினார்
THIS JOKE IS HERE:
http://mdmk.org.in/ta/party-history
RSS feed for comments to this post