முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்தொடர்புக்கு
+++
இலங்கைத் தமிழர் பிரச்சனைக்காக பதவியை துறக்க தயார் - மு கருணாநிதி அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 22
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
வெள்ளிக்கிழமை, 08 ஏப்ரல் 2011 10:45

 

நவம்பர் 14, 2008 அன்று, தமிழக சட்டப்பேரவையில், ஈழத்தமிழர்களின் இன்னலை துடைப்பதற்க பதவியை துறக்கவும் தயார் என்று கருணாநிதி பேசினார்.  அதற்குப் பிறகு என்ன நடந்தது, எத்தனை உயிர்கள் போயின என்பதை நாம் அறிவோம்.  இந்த தேர்தல் நேரத்தில், கருணாநிதியின் கபட நாடகத்தை நாம் நினைவு கூறுதல் அவசியம்.    இழந்தது ஒரு உயிர் இரண்டு உயிர்கள் அல்ல...  லட்சக்கணக்கான உயிர்கள்....  கருணாநிதிக்கு தனது மகன், மகள்களைப் எவ்வளவு முக்கியமோ அப்படித் தானே, ஈழத் தமிழருக்கும் அவர்களது மகன்களும் மகள்களும்.... ?  தறுதலைப் பிள்ளைகளுக்கே கருணாநிதி இப்படி உருகுகிறார் என்றால், போராளிகளைப் பெற்றவர்கள் ?

 

இலங்கைத் தமிழர் பிரச்சனைக்காக பதவியை துறக்க தயார் என்று முதலமைச்சர் மு கருணாநிதி, ஆவேசமாக நவ-14 அன்று தமிழகச் சட்டப்பேரவையில்  கூறியுள்ளார்.  இலங்கை அதிபர் ராஜபக்சேயின் கருத்தை ஏற்று இந்தியா ஏமாந்துவிடக் கூடாது என்றும் எச்சரித்தார்.

தமிழகச் சட்டப்பேரவையில் நவ-14 அன்று மீண்டும் இலங்கைத் தமிழர் பிரச்சனை தொடர்பாக விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்திற்கு பதிலளித்து முதல்வர் கருணாநிதி கூறியதாவது:

கடந்த 12ம் தேதி ஒருமனதாக தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி அனுப்பினோம். தீர்மானத்தை உளத் தூய்மையுடன் நிறைவேற்றி அனுப்பினோம்.

ஆனால், தமிழர்கள் எப்போதும் எப்படி இருப்பார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாக நாம் 12-ம் தேதி காட்டிய ஒற்றுமைக்கு மாறாக இன்று (நவ-14 அன்று) மாறுபட்டு செயல்படுகிறோம். அதற்காக நான் வேதனைப்படுகிறேன்.

இந்தியாவுக்கு இலங்கை அதிபர் ராஜபக்சே வந்து பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களை சந்தித்தப் பிறகு வெளியிட்ட கருத்துக்கள் குறித்து இங்கே எதிர்க்கட்சித் தரப்பில் பேசியிருக்கிறீர்கள். இதற்கு உன்னுடைய பதில் என்ன என்று என்னை கேட்டிருக்கிறீர்கள்.

எப்படியோ என்னை தில்லியில் உள்ள ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ளதாக பாவித்து, உன் பதில் என்ன என்று கேட்டதற்கு நன்றி.

என் உயரம் என்ன என்பதை அறிந்துள்ளதால் அதற்கு உட்பட்டே இங்கு பதில் சொல்ல விரும்புகிறேன்.

இலங்கை அதிபரின் கருத்துக்களை இந்தியா எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நாம் தொடர்ந்து வேண்டுகோள் விடுவது நமது கடமை.

அன்று (12ம் தேதி) வேகமாக பேசத் தவறிய ஓ.பன்னீர்செல்வம் இன்று வேகமாக பேசி, எப்போது ராஜினாமா? என்று கேட்டார். அந்த வேகத்தை பாராட்டுகிறேன்.

தமிழருக்கு தீங்கு ஏற்பட்டால் அதை சகித்துக் கொண்டு பதவியில் இருக்கக் கூடிய
அளவுக்கு எங்களுக்கு பதவி வெறி இல்லை.

அன்று நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்ட தீர்மானத்தின்படி நாங்களும், பாமகவும் மட்டுமே தயாராக இருந்தோம். மற்ற கட்சிகள் தங்கள் தலைமையை கலந்து பேசிதான் ராஜினாமா செய்ய முடியும் என்று கூறிவிட்டன. அதன்பிறகு இலங்கையில் பல்வேறு பிரச்சனைகள் நடைபெற்றுவிட்டன.

தற்போது இலங்கை  அதிபர் முடிந்த முடிவாக தீவிரவாதிகளான விடுதலைப் புலிகளை சரணடைய செய்வது அல்லது அடக்குவது ஒன்றுதான் முக்கிய நோக்கம்; குறிக்கோள் என்று அறிவித்துவிட்டார்.

 

27cm7

தமிழர்களை காக்கும் பொறுப்பை நான் தட்டிக் கழிக்கமாட்டேன் என்றும் ராஜபக்சே சுவைபட சொல்லியிருக்கிறார். தமிழர்களை ஏமாற்ற முடியும் என்ற கருத்தில்தான் அவர் அப்படி சொல்லியுள்ளார்.

மத்திய அரசு இதனை தெளிவாக புரிந்துக் கொள்ள வேண்டும். இலங்கைப் பிரச்சனையை ராஜபக்சே இரண்டாக பிரித்துப் பார்க்கிறார். தமிழர்கள் மீது எங்கள் படை செல்லாது, குண்டு வீசாது. ஆனால் விடுதலைப் புலிகளுக்கு நாங்கள் ஆதரவு தரமுடியாது என்று அவர்கள் நடத்துகிற யுத்தத்தையே இரண்டாக பிரித்து சொல்கிறார்.

இதனை மிக எச்சரிக்கையாக கையாள வேண்டும் என்று பிரதமரையும், சோனியா காந்தியையும் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

விடுதலைப் புலிகள் தீவிரவாதிகள் என்றால் எப்படி அதை அணுக வேண்டுமோ, அப்படி அவர்களை அணுக வேண்டும். முதலில் தமிழர்கள் மீது குண்டுமழை பொழிவதை நிறுத்த வேண்டும். தமிழர் பகுதிகளில் வீடுகள், ஆலயங்கள் எதுவுமே தாக்குதலுக்கு ஆளாகக் கூடாது. இதற்கு ராஜபக்சே உத்தரவாதம் தருவதற்கு தயாராக இல்லை.

dmk6

விடுதலைப் புலிகள் மீது குண்டு வீசினால் இலங்கைத் தமிழர்கள் மீதும், இவர்கள் மீது குண்டு வீசினால் விடுதலைப் புலிகள் மீதும் நிச்சயம் விழும். இரு பிரிவினரையும் ஒரு சேர அழிக்க ராஜபக்சே யுத்தம் புரிகிறார்.

அவர் கெடு கேட்டதன் நோக்கம் புரிகிறது. இதில் பிரதமர் ஏமாந்துவிடக் கூடாது. இந்தியா உட்பட எல்லா நாடுகளிலுமே தீவிரவாதிகள் இருக்கிறார்கள். அவர்களை அழிப்பதற்காக அந்த நாட்டு மக்களின் மீது குண்டு மழை பொழிகிறார்களா?

இதை பிரதமர் இந்தியாவின் சார்பாக, இங்கே வேதனைப்படும் தமிழர்களின் சார்பாக இலங்கைக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். அப்படி எடுத்துச் சொல்லியும் அவர்கள் கேட்காவிட்டால் பிறகு என்ன நடவடிக்கை என்பதை நாங்கள் யோசிப்போம் என்று பிரதமர் கூறவேண்டும். அதன் பிறகு நம்முடைய எண்ணங்கள் நிறைவேற நாம் என்ன செய்யலாம் என்று சிந்திப்போம்.

57e16f9d86170c6afa959ea946ef-grande

அறப்போர் மீது நமக்கு எப்போதுமே அக்கறை உள்ளது. காந்தி, பெரியார், அண்ணா காலம் முதல் அறப்போர் முறையை நாம் அறிந்துள்ளோம். அதில் வெற்றியும் பெற்றுள்ளோம். அந்த முறையில் தமிழர் நலன் காக்க பாடுபடுவோம். அந்த வழியில் ஓ.பன்னீர்செல்வம் கருத்துப்படி பதவியை துறக்க தயார் என்று  முதலமைச்சர் கருணாநிதி தெரிவித்தார்

 

கருணாநிதியின் இந்த வாதத்தை படித்து விட்டீர்களா ?      ஈழப் போரின் போது ஈழத்தில் நடந்த அழிவு தொடர்பான பிரத்யேகமான புகைப்படங்களை சவுக்கு வெளியிடுகிறது.    இந்தப் புகைப்படங்கள், ஈழப் போர் உச்சத்தில் இருந்த சமயத்தில் ஊடகவியலாளர் ஒருவரால் எடுக்கப் பட்டது.  இந்தப் புகைப்படத்தை எடுத்த அந்த ஊடகவியலாளர் குண்டு வீச்சில் இறந்து விட்டார். அவர் மனைவி, அவரின் கேமராவை பத்திரப் படுத்தி, இந்தப் புகைப்படங்களை பாதுகாத்துள்ளார்.  

 

11

 

12

 

14

 

15

 

16

 

17

 

16

 

19

 

20

 

21

 

22

 

23

 

24

 

25

 

29

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments  

 
0 #30 Kudimagan 2011-04-12 00:09
இந்த துரோகியை ஓட ஓட விரட்டுவோம்.....
சவுக்கு, இதை அச்சிட்டதர்க்கு நன்றி....I was actually trying to get such information and mail to friends...then came across this one....
லட்ச லட்சமாக தமிழர்களை கொலை செய்யப்படும்போத ு அதற்க்கு உதவிய மத்திய அரசை தடுக்காமால் பதவி சுகம் அனுபவித்தவர்களை அடித்து துரத்துவோம்....
Quote
 
 
0 #29 K Raman 2011-04-11 16:50
Dear Mr Savukku :

Please read this article in pathivu.com and publish it if you think it is relevant...

http://www.pathivu.com/news/15867/57//d,article_full.aspx
Quote
 
 
-4 #28 ராமசாமி 2011-04-09 14:33
சவுக்கு அவர்களே,

மஞ்சள் மகிமையினார் ஈழத்துக்கும் (கடந்த 50 ஆண்டுகளாக) துரோகம் இழைத்து வருவது உண்மைதான். அதற்காக அவர்களைச் சாடுவது சரியே!

ஆனால், கருணாநிதி கும்பல், பிஜி, தென்னாப்பிரிக்க ா, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் மற்றும் ஐரோப்பாவில் வாழும் தமிழர்களையாவது விட்டுவைத்திருப ்பதற்கு, திமுகவிற்கு நாம் நன்றியும் சொல்ல வேண்டுமன்றோ?

ராமசாமி
http://othisaivu.wordpress.com/
Quote
 
 
+3 #27 KK 2011-04-09 12:58
Vijaykant speaks in Rishivandhyam
"அப்போது அவர், ‘’காந்தி கண்ட கிராமம் காந்தி கண்ட கிராமம் என்கிறார்களே காங்கிரஸ்காரர்க ள். இதுதான் காந்தி கண்ட கிராமமா? காந்திகண்ட கிராமம் என்றால் என்னவென்று தெரியுமா காங்கிரஸ்காரர்க ளுக்கு.



தீயணைப்பு நிலையம் கிடையாது; ரிஜிஸ்தர் ஆபீஸ் கிடையாடு. சாலைகள் குண்டும்,குளியு மாக கிடக்கிறது. விவசாயப்பொருள் வேண்டும் என்றால் திருக்கோவிலூர் செல்லவேண்டும். மருத்துவமனை என்றால் விழுப்புரம்தான் செல்ல வேண்டும்.



இப்படி எந்த அடிப்படை வசதியுமே இல்லாம இருக்கிறது ரிஷிவந்தியம். இதனால்தான் நான் ரிஷிவந்தியத்தை தேர்ந்தெடுத்தேன ்.



பூனையை யானை ஆக்குவேன் என்று மற்றவர்கள் மாதிரி பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன். 3வருடத்தில் அடிப்படை வசதிகளை செய்துகொடுப்பேன ். இது என்னால் முடியும்"

Sure victory
Quote
 
 
+2 #26 sam 2011-04-09 12:49
ஒன்றும் சொல்வதற்கு இல்லை........ வடிவேலு சொல்வது போல் எல்லாம் விதி ....... இந்த கொடுமை (திமுக) ஏவளவு நாள் நீடிக்குமோ
Quote
 
 
-1 #25 ஜோதிடர் 2011-04-09 10:04
கடந்த டிசம்பர் முதல் ஜெயலலிதாதான் இந்த தேர்தலில் ஜெயிப்பார் என்று மைக் போட்டு சொல்லாத குறையாக கத்திக் கொண்டிருந்தேன். இப்பொழுது அதை மெய்ப்பிக்கும் வகையில் ஒரு அரசியல் வார இதழில் பிரபல ஜோதிடரின் படைப்பு வெளியாகி பத்திரிகை உலகில் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது . நீங்கள் படிக்கவில்லையா? படிக்காதவர்கள் இங்க http://www.saamiyaar.blogspot.com/ வாங்க. ப்ளீஸ் வாங்க. ரொம்ப நன்றி (படிக்க போவதற்கு)
Quote
 
 
-5 #24 VAIKOTO T 2011-04-09 09:35
I DECLARE MY VOTE TO DMK but not to CONGRESS. FINAL DECISION ...NO CHANGE in IT.
Quote
 
 
0 #23 aha 2011-04-09 00:00
porin pothu pothu makkal kollappattathu aniyaayamthaan.aanal itharku pulikalum oru vakaiyil kaaranam illaiyaa?avarkal ithe kaattu miraandi thaakkuthalkala i raajeev kolaiyil nadatha villaiyaa?manitha vedikundukalum ivvaruthaane uyir parithu irukkum.avarkal makkalai manitha kedayangalaaaka payanpaduththiy athu ean??
Quote
 
 
+13 #22 நீதிதேவன் 2011-04-08 21:59
இந்த கீழ்மையான மனிதரை பற்றி மீண்டும் மீண்டும் நீங்கள் எழுதுவது.... என்னளவில் மிகவும் சலிப்புட்டுகிறத ு. தமிழக மக்களின் வரலாறு கருணாநிதி என்ன மாதிரியான மதிப்பீட்டில் இவரை வைக்கப்போகிறது என்பதை நீங்களும் நானும் பார்க்கத்தான் போகிறோம். ஒற்றைவரி கூட இவரை பற்றி மட்டமாகத்தான் எழுதபடும். எதிரியை விட மோசமானவன் துரோகி என்பதை கருணாநிதி தொடர்ந்து நல்லவர் போல வேஷம் போட்டுக்கொண்டு ஊரை ஏமாற்றி வருகிறார். எம்.ஜி.ஆர் எனும் மலையாள பூர்வீகமாய் கொண்டவருக்கு இருந்த தமிழர் விசுவாசம் கூட கருணாநிதிக்கு ஒரு துளி கூட இல்லை.
Quote
 
 
+13 #21 செய்வினை பார்ட்டி 2011-04-08 21:39
புகைப்படங்களை பாக்க பாக்க கருணாநிதி குடும்பத்தோட நாசமா போகணும்னு உள்மனசு பயங்கர காட்டத்தோட ஏசுது. இந்த பேமானி இந்த தேர்தல்ல ஜெயிக்க மாட்டான்.
Quote
 
 
+5 #20 tamizselvan 2011-04-08 20:54
singala thevidiya pasagalaa....
aiyogya nayae karunanithi...
congress potaigalaa...
Quote
 
 
+1 #19 bss 2011-04-08 20:40
Nallavar innamum konja (sorry) nirraya naal vazhndu ulagaiyay keduththu vittu sella periyaray (vengaytam) veeandikk Kollvom
Quote
 
 
+1 #18 bss 2011-04-08 20:33
Karunavirkey(ni thikkay) vottu pottu avarey meendum mudalai amaichar Aaanaal ulagathil ulla ella uyirrkalayyum azhikka eathuvagairukku m.
Quote
 
 
+9 #17 K Raman 2011-04-08 19:33
இலங்கையில் தமிழன் அழிவதைக் கண்டு கவலைப்பட்ட உண்மைத் தமிழன் நான்: கருணாநிதி - This is the article that has appeared in todays Ananda Vikatan website about a speech of Karunanidhi that he delivered on April 7, 2011. Savukku can reproduce the speech if he thinks so...My blood boiled when I read it...I am speechless...This man is either a devil/vampire or he is plain senile and is mad...
Quote
 
 
+2 #16 rajamani 2011-04-08 18:57
nallavai tarum savukku vazhga
Quote
 
 
+7 #15 lakshmidharan 2011-04-08 18:30
திரு வைகோ அவர்களே ....... நீங்கள் உங்கள் கட்சி முடிவின்படி அதிமுக கூட்டணியில் இருந்து விலகி இருந்துகொண்டு இம்முறை தேர்தலை புறக்கணிப்போம் என கூறிவிட்டு இப்போது தேர்தலுக்கு இரு நாட்கள் முன்பு அறிக்கை விடப்போவதாகவும் அது தி மு க வேட்பாளர்களுக்க ு ஆதரவாக வோட்டு போடும்படி தொண்டர்களை கேட்டுகொள்ளப்போ வதகவும் செய்திகள் வருகின்றன. இதை நடுநிலையாளர்கள் நம்பவில்லைஎன்றா லும் ...... நம்பாமல் இருக்கமுடியவில் லை.

இதை சாதகமாகக்கொண்டு கருணாநிதி சில கணக்குகளை போட்டு ஆட்களை அனுப்பியும் , அறிக்கைகளை விட்டும் தன் பாணியில் அவருடைய திட்டத்தை நிறைவேற்ற முனைந்துவிட்டார ் .
அதன் வெளிப்பாடு தான் கிழ்கண்ட செய்தி .......
வைகோ வின் ஆட்கள் விலை போக ஆரம்பித்துவிட்ட ார்கள்....
பல லட்சங்கள் கை மாறி விட்டன ......
மதுரை நோன்ஜானன்ஜன் அழகிரி முன்னிலையில் பணப்பட்டுவாடா நடக்கிறது .....
விலைக்கு வாங்கப்படுகிறார ்கள்.....
கொள்கைகள் எங்கே போயிற்று ....
தொண்டை கிழிய கத்தினவை எங்கே போயிற்று
மதிமுக விலை போகிறதா ....
மௌனம் களையுங்கள் ......
தன்னலமில்லாத தலைவனே ......
உன் உள்மனது என்ன கூறுகிறதோ அதன்படி நிமிர்ந்து நில் ...
தைரியமாக வெளிப்படையாக கட்சியின் முடிவுப்படி நில் ...
எதற்கும் பயப்படாத தலைவனே .....
உடனே முடிவு எடுத்து உனது அறிக்கையை வெளியிடு .......
காலம் தாழ்த்தாதே
Quote
 
 
+9 #14 amoorthy 2011-04-08 18:07
கருணாநிதிக்கு மனச்சாட்சி இல்லை என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. எம்.ஜீ.ஆர். கொலை பற்றிய செய்திகள் சமீபத்தில் வெளியாகின. ஒரு மணி நேர உண்ணாவிரதமும், தேர்தலின் போது நடந்தது போல் பதவி துறப்பு நாடகமும்,மக்களை ஏமாற்றும் நயவஞ்சகமும் கருணாநிதிக்கு கை வந்த கலை. எல்லாமே சவுக்கில் வந்து விட்டன.சமீபத்தில் இலங்கை மன்னார் கிறிஸ்தவ பாதிரியார் வெளியிட்ட செய்தியில் ஒரு லட்சத்து நாற்பத்து ஆறாயிரம் தமிழர்கள் காணாமல் போய் விட்டனர். இந்த செய்தியை வெளியிட்ட அவரை ராணுவம் தற்போது துன்புறுத்தி வருகிறது.கருணாநிதி போல் ஒரு கேவலமான மிருகத்தை இது வரை எவரும் கண்டிருக்க முடியாது.இவ்வளவு கொடுமையான படங்களை கண்டும் கருணாநிதி போன்றோர் மக்களை இன்னமும் ஏமாற்றி வருவது வேதனைக்குரியது.
Quote
 
 
+3 #13 chefyogesh 2011-04-08 17:58
iyya....kalaigar avargaley.... untaragamandira m...intha naadum nattu makkalum nasamai poogattum....,un makkal...nalla iruntha seri....unnai thitta...tamil varthai i kooda payanpadutha...naan virmbavillai......tamil drokiyea......un....alivu...vegu thoorathil illai.....anaigindra...deepam sudarvidum... adu polathan... nee ipoluthu.....
Quote
 
 
+2 #12 palPalani 2011-04-08 17:43
http://www.youtube.com/watch?v=WoN0-0aXqyc


ஈழப் போரின் போது ஈழத்தில் நடந்த அழிவு தொடர்பான பிரத்யேகமான புகைப்படங்ள்.
Quote
 
 
+1 #11 Thileepan 2011-04-08 17:21
http://www.facebook.com/home.php#!/home.php?sk=group_190779680952794&ap=1

join the revolution like that of the middle east. it is our revolution. join and add your friends enough of this

jeyakumar please join and let everyone know we have the same goal as mr Anna Hazre
Quote
 
 
+8 #10 ஏழு.கலைக்கோவன் 2011-04-08 16:17
சென்ற தேர்தலில் காங்கிரசும் தி மு காவும் தேறுவதே கடினம் என்றிருந்தது. காங்கிரசை புல் பூண்டிலாமல் அழிப்போம் என்றவர்கள் எல்லாம் அவர்களுக்காக ஒட்டு சேகரிக்க சென்றார்கள். இது போன்ற இந்த சுய விளம்பர அரசியல் கட்சிகள் ஈழத்தை கையில் எடுக்காமல் இருந்தாலே பல உயிர்கள் படுகொலையில் இருந்து காப்பாற்றபட்டிர ுக்கும். ஈழத்தை வைத்து தங்களையும் தமது கட்சியைவும் விளம்பரபடுத்திக ொள்ளப்பட்டது. கொடுமை என்னவென்றால் மக்கள் புரட்சியை (ஆண்கள், பெண்கள், திருநங்கைகள்) (மாணவர்கள், ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள் என பலரும்) (மனித சங்கிலி, உண்ணாவிரதம், ஊர்வலம் என்றும்) (தன்னையே தீயில் தியாகம் செய்துகொண்டவர்க ளின் போரட்டத்தை நீத்து போக செய்தது. இன்றும் தமிழகத்தில் ஈழத்தை பற்றிய புரிதல் இல்லை.

உலகம் இதுவரை கண்டிராத கொடுமை-
- நிர்வாணப்படுத்த ுதல் (ஆண் பெண் என பேதமின்றி)
- தடை செய்யப்பட்ட குண்டுகளை பயன்படுத்தியது
- வல்லுறவு செய்து கொலை செய்தல்
-கருவில் இருக்கும் சிசுவையும் அழித்தல்
- வெள்ளை கொடி ஏந்தி அரசு அறிவித்த பாதுகப்பன இடத்தை நோக்கி வந்தவர்களை சுட்டுக்கொன்றது
- உயிருக்கு போரடிவர்களுக்கு மருத்துவம் செய்தவர்களுக்கு கொலை மிரட்டல்
-உறவினர்களை பிரித்து தனி தனி சிறையில் அடைப்பு. (தாயிடமிருந்து குழந்தயை, கணவனிடமிருந்து மனைவியை)
-மாவீரர் துயில் இடம் அழிப்பு
-தமிழர் இடங்களில் எல்லாம் சிங்களர் குடியிருப்பு - இவற்றிக்கு எல்லாம் இது வரை வாய் திறக்கவில்லை.

கொல்வனுக்கு செய்த உதவிகள் (சிங்களருக்கு)
நிதி உதவி - மருத்துவ உதவி - ஆயுதங்கள், தளபாடங்கள் - ராணுவ பயிற்சி

கொள்ளப்படுவர்கள ுக்கு (தமிழருக்கு)
- கடித போக்குவரத்து
-4 மணி நேர உண்ணாவிரத நாடகம் (உலகம் இதுவரை கண்டிராத)
-தமிழர்களின் உண்மை நிலை அறியும் குழு அனுப்புதல் (ஏற்கனவே தயாரித்த அறிக்கையை வெளியிடுதல்)
- மானாட மயிலாட
- இராஜ பட்சேவிடம் கைகுலுக்கல்
-மக்கள் புரட்சியை நீத்துபோக செய்தல்

ஏது எப்படியோ இந்த முறை கண்டிப்பாக தேர்தல் கமிசனுக்கு நன்றி செல்ல வேண்டியிருக்கும ் .
Quote
 
 
+13 #9 பச்சைமாலு. 2011-04-08 15:42
மோசமான உளவியல் நோயாளியான இந்த பிறப்பை இறந்தபின்னாவது மூளையை பகுப்பாய்வு செய்து ஆய்வுக்குட்படுத ்தினால், இந்தப்பயங்கரவாத ியின் வழித்தோன்றல் மரபுகளின் மூலம் இன்னும் சமூகத்துக்கு ஏற்படப்போகும் அபாயத்தை தடுக்க முடியும்.
ஏனென்றால் சாதாரணமாக மிருகங்களால்க்க ூட நினைத்துப்பார்க ்கமுடியாத அழுக்குப்படிந்த எண்ணங்கள் இந்த மனிதனிடம் தொடர்ந்து இருப்பதால் அடிப்படையில் உளவியல் ரீதியான மோசமானகுறைபாடாக வும் இருக்கக்கூடும் சைக்கோத்தனமான நோயின் பெரும் வெளிப்பாடுதான் இப்படியான செயலை ரசித்து செய்வதாக மேற்கு நாடுகளின் ஆய்வுகளில் தகவல்கள் இருக்கின்றன. தாமதமில்லாமல் (இது நிச்சியமாக மனித உடலில் வேறு ஏதோ ஒன்று) இந்த உருப்படியில் மூளையை பகுப்பாய்வுசெய் து ஆராய்ச்சிக்குட் படுத்துவது நன்று.
Quote
 
 
+8 #8 ஊர்க்குருவி. 2011-04-08 15:21
//என் உயரம் என்ன என்பதை அறிந்துள்ளதால் அதற்கு உட்பட்டே இங்கு பதில் சொல்ல விரும்புகிறேன்//

??

//தமிழருக்கு தீங்கு ஏற்பட்டால் அதை சகித்துக் கொண்டு பதவியில் இருக்கக் கூடிய
அளவுக்கு எங்களுக்கு பதவி வெறி இல்லை.//

இப்படி உலகத்தில் எங்காவது ஒரு மிருகமாவது இருக்கிறதா..?

சவுக்கு அவர்களே நீங்கள் இந்தச்செய்தியை போட்டு ராஜினமா நாடகத்தை ஞாபகப்படுத்தப்ப ோக தோல்வியை சரிக்கட்ட கிழட்டு முதலை இல்லாத பதவியை ராஜினாமா செய்கிறேன் என்று புதிதாக நாடகம் ஒன்றை தொடங்கினாலும் தொடங்கக்கூடும்.


ஈரெட்டு திசை யிருந்தும்
எறி குண்டு சீறி வீழ- இரு
பத்து நாடு சுற்றி
எரி கொள்ளி நீட்டி நிற்க.
வெறி கொண்ட காந்தி தேசம்
விண் முட்ட சூழ்ச்சி செய்ய.
பரகதி யாச்சே ஈழம்
பாவியாய் எரிந்தே மாண்டோம்,

வீடுகள் எரிந்து சாம்பல்
விடலைகள் குண்டாய் ஆனர்.
தாயவர் வழியில் மாண்டர்
தந்தையர் சித்தம் போனர்.
குழந்தைகள் சகதியாக- கோவிலாய்
படு மரத்தின் கீழே
கொலைக் களமாகி மாந்தர்
கும்பியாய் மாண்டார் காணீர்,

கோவிலாய் இருந்த தேசம்
கொலைக் காடாய் ஆகக் கண்டீர்
சோலையாய் இருந்த பூமி
சுடுகாடாய் ஆகக் காணீர்
நாயினும் கடையன் நஞ்சன்
"நாலைந்து தாரக்காரன்
பாவியாய் பிறந்தான்"(பக்க)மண்ணில்
படு துயர் நாங்கள் கொண்டோம்,
Quote
 
 
+3 #7 udayakumar 2011-04-08 14:10
Duroki karunanidhiyin achi mudivukku varum velai vanthuvittathu..
Quote
 
 
+24 #6 jaya 2011-04-08 13:15
இந்த படங்களை பார்த்தாலே நெஞ்சம் வெடித்துவிடும் போல இருக்கு. இந்த நயவஞ்சகன் கருணா கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல் போடோக்கு போஸே கொடுப்பதை பாருங்கள் தோழர்களே
Quote
 
 
+11 #5 SAVUKKU FRIEND 2011-04-08 12:46
மேலும் படங்களுக்கு இங்கே சென்று பார்க்கவும்


https://picasaweb.google.com/devendrakural/EELAM#

காங்கிரஸ் ஐ புதைப்போம் APRIL 13
Quote
 
 
+11 #4 Ganpat 2011-04-08 12:24
http://myneta.info/tamilnadu2011/

தமிழ் நாடு சட்ட மன்ற தேர்தலில் 234 தொகுதிகளில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்கள் பற்றிய விவரங்கள்(தொகுத ிவாரியாக) இந்த தளத்தில் சீரிய முறையில் கொடுக்கப்பட்டுள ்ளது.
இதை முடிந்த அளவு பிரபலப்படுத்தவு ம்
நன்றி
Quote
 
 
+14 #3 jeyakumar 2011-04-08 11:52
Dear Savukku,
There is revolution has been started by Mr Anna Hazare like middle east against corruption in india.There is a lots of support from other part of country except tamilnadu. I think our people doesnt aware of it. Please savukku write immediate article and project to people so that we can also join with this second independence against all these politician.
Quote
 
 
+14 #2 jaya 2011-04-08 11:33
நாடகம் ஆடுவதில் வல்லவரான கருணா ..........
நயவஞ்சகரான கருணா .............
உண்ணும் நோன்பில் வல்லவரான கருணா
கொள்ளை அடிப்பதில் விஞ்ஞானம் புகுத்தும் கருணா
மே மாதம் பதவியை இலக்கபோகும் கருணா
உன்னை இனிமேல் அந்த ஆண்டவனே நினைத்தாலும்
காப்பாற்ற முடியாதுகிலவா.
Quote
 
 
+31 #1 pandiyan 2011-04-08 11:06
போரில் ஈழத்தமிழர்கள் அழிக்கப்பட்டு விட்டார்கள், புலிகள் தோற்கடிக்கப்பட் டு விட்டார்கள் என்ற இறுமாப்பில்,பிர பாகரனைக் குற்றம் சாட்டி எழுதத் தொடங்கினார், முரசொலியிலே. ‘சகோதரர் களைக் கொன்றார் என்று குற்றம் சாட்டினார். உலகமே ஈழத்தமிழர் களுக்காகக் கண்ணீர் விட்டுக் கதறிக் கொண்டு இருந்தபோது, கோடானு கோடித் தமிழர்கள், பிரபாகரனை நெஞ்சில் வைத்துப் போற்றிக் கொண்டு இருந்தபோது, அவரைக் குற்றம் சாட்டி எழுதிய ஒரேயொரு நபர், கலைஞர் கருணாநிதி. சென்னை விமான நிலையத்தில் பார்வதி அம்மையாரைத் திருப்பி அனுப்பியது, விடிந்த பிறகுதான் தெரியும் என்று முதலில் சொன்ன கருணாநிதி உண்மையானவரா? அல்லது இரவு 12 மணிக்குத்தான் தெரியும் என்று சொன்னது வேறு கருணாநிதியா? உலகமெல்லாம் வாழும் தமிழர்கள் பிரபாகரன்‘ரைத் தமிழரினத் தலைவராக ஏற்றுக் கொண்டதைச் செரிக்க முடியாமல், முகம் செத்துப் போய்ப் புகழுக்காகப் பொறாமை கொண்டு ஈழத்தமிழர் விடுதலையை அழித்தொழிக்க என்னவெல்லாம் செய்ய முடியுமோ, அதையெல்லாம் செய்து முடித்த தமிழ்ப் பகைவன்தான் இந்தத் தெலுங்கர் மு.கருணாநிதி
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 43 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday1366
mod_vvisit_counterYesterday13577
mod_vvisit_counterThis week58943
mod_vvisit_counterLast week95167
mod_vvisit_counterThis month281203
mod_vvisit_counterLast month382199
mod_vvisit_counterAll days13197570