முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
நான் முதலமைச்சர் தானா ? கருணாநிதி புலம்பல். அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 2
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
ஞாயிற்றுக்கிழமை, 10 ஏப்ரல் 2011 07:53

 

தேர்தல் கமிஷனின் அதிகாரம் பற்றி மத்திய அரசு இனியாவது தீர்மானிக்க வேண்டும் என்று முதல் அமைச்சர் கருணாநிதி கூறினார்.

கடலூர் மாவட்டத்தில் ஜனநாயக முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நேற்று மாலை நடந்தது.

கூட்டத்தில் தமிழக முதல்&அமைச்சர் கருணாநிதி கலந்து கொண்டு வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து பேசியதாவது: 

எதற்கும் அளவு இருக்கிறது

ஒரு தேர்தலில் தவறுகள் நடக்க கூடாது. பணம் கொடுத்து வாக்குகளை பெறக்கூடாது. அதிக ரூபாயை செலவழித்து அட்டகாசங்கள் செய்யக் கூடாது. தவறான வழிகளை மேற்கொள்ளக் கூடாது. இது தேர்தல் கமிஷனுக்கு மட்டுமல்ல எல்லா பெரிய மனிதர்களுக்கும், மகான்களுக்கும் அவர்கள் வழங்க வேண்டிய அறிவுரைதான். அதை இன்றைக்கு இந்தியாவிலேயே தேர்தல் கமிஷன் வழங்குவது மாத்திரம் அல்ல, கடைபிடிக்கவும் செய்கிறது. அதற்கு அடங்கி நடக்க வேண்டியது அரசியல் கட்சிகளின் கடமை. அதை நான் மறுக்கவில்லை.

ஆனால் எதற்கும் ஓர் அளவு இருக்கிறது. அந்த அளவுகடக்கும் போது எல்லை கடக்கும்போது நான் மாத்திரம் அல்ல. இங்கே வீற்றிருக்கும் நம்முடைய கூட்டணி கட்சி தலைவர்கள் எல்லாம் ஒன்றுபட்டு ஒருமித்த கருத்துடையவர்கள்.

karunanidhi_20080805

நரிக்கு நாட்டாண்மை கிடைத்தால், கிடைக்கு 2 ஆடுகள் கேட்கும் என்பது ஒரு பழமொழி. அதேபோல தங்களுக்கு கிடைத்த அதிகாரத்தை நரிக்கு கிடைத்த நாட்டாண்மைபோல் கிடைக்கு 2 ஆடுகள் கிடைக்காதா என்று அந்த அதிகாரத்தை செலுத்திக்கொண்டிருப்பவர்களை, நான் உச்சத்தில் இருப்பவர்களை சொல்லவில்லை. உச்சத்தில் இருப்பவர்களுக்கு அடுத்து இருப்பவர்களை, அடுத்து இருப்பவர்களை சொல்கிறேன். இவர்கள் செய்கிற அதிகாரத்தை பார்க்கிற போது என்னால் சொல்லாமல் இருக்க முடியவில்லை.

தங்குவதற்கு அரசாங்க இடம் இல்லை

நான் உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு இன்னும் பதவியிலேயே இருக்கிற ஒரு முதல் அமைச்சர். 13 ந் தேதி போடப்படவுள்ள ஓட்டுகளை எல்லாம் எண்ணிப்பார்த்து நான் அதிக வாக்குகளை பெற்றுவிட்டால் மீண்டும் நான் முதல்அமைச்சர். பெறாவிட்டால் வீட்டுக்கு போகவேண்டியதுதான். ஆனால் அதுவரையில் நான் முதல்அமைச்சர் தான். அரசியல் சட்டப்படி, தேர்தல் ஆணையத்தின் பார்வையின்படி.

நான் நேற்று விழுப்புரத்தில் நடந்த கடல்போன்ற கூட்டத்தில் பேசிவிட்டு, இரவு தங்குவதற்கு எங்கே இடம் என்று கேட்டபோது, பொன்முடி சொன்னார், அரசாங்கத்தின் இடம் உங்களுக்கு தர முடியாது என்று தேர்தல் ஆணையம் சொல்கிறது. வி.ஐ.பி. ஹெஸ்ட் அவுஸ் எதுவும் உங்களுக்கு ஒதுக்கவில்லை. ஆனால் நம்முடைய கட்சி அலுவலகத்திலேயே நீங்கள் இரவு தங்கிக்கொள்ளலாம் என்றார். அதைவிட எனக்கு பூரிப்பான செய்தி எதுவும் கிடையாது. ஏனென்றால் நம்முடைய உழைப்பால், வியர்வையால், நம்முடைய முயற்சியால் கட்டப்பட்ட மாளிகையில் தங்கு என்றதும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். அங்கேயே தங்கினேன்.

பெருமைக்கு இழிவு

ஆனால் என்னுடைய நினைவு, நான் முதல்அமைச்சர் ஆயிற்றே! நமக்கு இந்த கடலூரில் ஒரு டிராவல்ஸ் பங்களா அல்லது அரசாங்கத்துக்கு தொடர்புடைய ஒரு விடுதி ஒதுக்கப்படாததற்கு என்ன காரணம். தேர்தல் கமிஷனுடைய கண்டிப்பு. நான் அதை பொருட்படுத்தவில்லை.

ஏனென்றால் இந்த இயக்கத்தை நடத்துவதற்கு ஊர் ஊராக சுற்றி, கிராமம் கிராமமாக சென்று, நகரங்களில் வலம் வந்து இரவு நேரம் தூங்குவதற்கு தரையில் துண்டை விரித்துக்கொண்டு தூங்கியவன்தான் இந்த கருணாநிதி. அதற்காக மெத்தை, படுக்கை தேவையில்லை என்று நான் சொல்லவில்லை.

இங்கே வருகிற வழியில், கையிலே கொண்டு வந்த மாலை நேரத்து சிற்றுண்டியை அருந்துவதற்கு கூட இங்கு இடம் இல்லை. வேனிலேயே அமர்ந்து யாரும் பார்க்காமல் இருக்க என்னுடன் வந்தவர்கள் ஒரு துண்டை விரித்துக்கொண்டு அங்கேயே சாப்பிட்டு விட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்தேன்.

இப்படியெல்லாம் இருக்கலாமா இது நம்முடைய பெருமைக்கு இழிவல்லவா என்று நினைப்பவன் அல்ல நான். என்னை விட கேவலமாக, இழிவாக நடத்தப்படுகின்ற கூட்டம் இந்த நாட்டில் இருப்பது எனக்கு தெரியும் அதையெல்லாம் நினைத்துக்கொண்டு வேனில் உட்கார்ந்து சாப்பிட்டுவிட்டு வந்தேன்.

கவலை இல்லை

ஒரு பொதுக்கூட்டத்தில் ஜெயலலிதா பேசி இருக்கிறார். ஒற்றர்கள் அதிகாரியாக பணியாற்றுகின்ற ஒருவர், அமைச்சர் ஒருவரின் உறவினர், அந்த உறவினரை தினமும் கருணாநிதி தன்னுடைய அந்தரங்க அதிகாரியாக வைத்துக்கொண்டு இருக்கிறார். உடனடியாக அவரை அந்த இடத்திலே இருந்து அகற்ற வேண்டும் என்று தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிடுகிறார். எனக்கு அந்தரங்க அதிகாரி, ஏற்கனவே இருந்த மூத்த அதிகாரி மாற்றப்பட்டு அவர் இந்தியாவில் எங்கேயே ஒரு மூலையில் தள்ளப்பட்டு இருக்கிறார். அதற்கு அடுத்து இன்னொரு அதிகாரி. அவர் மாற்று அதிகாரியாக வேலை பார்க்க வந்தவர், அவர் கருணாநிதியிடம் இருக்க கூடாது, அவரும், அவருக்கு தூது செல்வார், தேர்தல் யுக்திகளை சொல்லி கொடுப்பார், ஆகவே அந்த அதிகாரியையும் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்று அம்மையார் உத்தரவிட்டு இருக்கிறார்.

என்ன நடக்குமோ எனக்கு தெரியாது. ஒருவேளை அந்த அதிகாரியும் மாற்றப்படலாம். மாற்றப்பட்டால் அதற்காக கவலைப்படமாட்டேன். ஏனென்றால் எந்த அதிகாரியும் இல்லாமல் வாழ்க்கையை ஆரம்பித்தவன் நான்.

நான் சொல்லுகிறேன், ஆணையிடுகிறேன், நாளைக்கே அந்த அதிகாரி மாற்றப்பட வேண்டும் என்று அந்த அம்மையார் உத்தரவிடுகிறார் என்றால், எவ்வளவு தைரியம், எந்த அளவுக்கு அந்த அதிகாரிகளிடத்திலே இவருக்கு ஆதிக்கம் இருக்கிறது. நான் அதைப்பற்றி கவலைப்படவில்லை. ஆனால் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக இதைச் சொல்லுகிறேன். எதற்கெடுத்தாலும் தேர்தல் ஆணையம் சம்மதிக்க வேண்டுமே.

கிரிக்கெட் வீரர்களுக்கு பரிசு

உங்களுக்கு தெரியும் உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா மகத்தான வெற்றிபெற்றது. வெற்றியை பெற்றிருக்கிறது என்று சொல்கிறபோதே இந்த அளவுக்கு மகிழ்ச்சி அடைகிறீர்களே, நாள்தோறும் இந்திய கிரிக்கெட் வீரர்களின் சாதனைகளைப் பார்த்து பூரிப்படைகிறேன் நான். எந்த ராத்திரியிலும் டி.வி.யின் முன்னால் அமர்ந்து கிரிக்கெட்டை நான் பார்த்து மகிழ்வேன். இந்தியாவுக்கு மகத்தான வெற்றி. அதுவும் எப்படிபட்ட வெற்றி இலங்கையை முறியடித்து பெற்ற வெற்றி. அந்த வெற்றியை இந்திய அரசு கொண்டாடுகிறது. பரிசு கொடுக்கிறது. மாநில அரசுகள் பல அவர்களுக்கு பரிசு வழங்குகிறது.

இதையெல்லாம் பார்த்தபோது எனக்கு, இயல்பாகவே கிரிக்கெட் பிரியன் நான். அதிலே இந்தியா வெற்றிபெற்று இருக்கிறது என்று சொல்லும்போது நானும் அந்த கிரிக்கெட் அணிக்கு ரூ.3 கோடி ரூபாய், அதிலே ஆடி வெற்றிபெற்ற தமிழ்நாட்டை சேர்ந்த வீரர் அஸ்வினுக்கு ரூ.1 கோடி என மொத்தம் ரூ.4 கோடியை அரசின் சார்பில் தருகிறோம் என்ற செய்தியை பத்திரிகைகளுக்கு கொடுத்தேன்.

யார் முதல் அமைச்சர்?

இந்த 4 கோடி ரூபாயில் 3 கோடி ரூபாய் கிரிக்கெட் அணிக்கும், ஒரு கோடி ரூபாயை அஸ்வினுக்கும் தருகிற கோப்பை நான் தலைமை செயலாளருக்கு அனுப்பினேன். என்னுடைய கையெழுத்தை போட்டு, தலைமை செயலாளர் ஒப்புக்கொள்ள வேண்டும் என்று உத்தரவையும் போட்டேன்.

அவர்கள் தேர்தல் கமிஷனை கேட்டு இருக்கிறார்கள். அவர்கள் சொல்லி இருக்கிறார்கள், கொடுப்பது சரி, ஆனால் அந்த விளையாட்டு வீரர்களை, முதல் அமைச்சர் அழைத்து, அவர் அதை தன் கையால் கொடுக்கக்கூடாது, நான் கொடுத்தால், அது தேர்தல் பிரசாரம் ஆகி விடுமாம். அப்படியானால், உலகம் முழுவதும் இருக்கிற மக்கள் பார்த்ததை, கைகொட்டி, வாழ்த்தி, அவர்களை பாராட்டிய அந்த செய்தியை, நான் சொல்லக் கூடாதாம். அப்படி நான் கொடுத்தாலும் அதை யாரும் போட்டோ எடுக்கக் கூடாதாம். இப்படி ஒரு ஆணையம். இதுபோல தேர்தல் கமிஷன் உத்தரவிட்டு இருக்கிறது என்றால் எனக்கே சந்தேகம்? யார் முதல் அமைச்சர்?, நான் தானா? என்று எனக்கே ஒரு பிரச்சினை வந்து விட்டது.

டி.என்.சேஷனை அடித்தார்கள்

எனக்கு முன்பு தமிழக அரசை ஆண்டு கொண்டு இருந்த ஜெயலலிதா அம்மையார் ஆட்சியில் தேர்தல் கமிஷனை எப்படி மதித்தார்கள் என்பது தெரியும். தேர்தல் கமிஷனில் இருந்த அந்த பெரிய அதிகாரி, இவருக்கு கட்டுப்பட்டு நடக்கவில்லை என்பதற்காக விமான நிலையத்திலே அவர்களை அடித்து உதைத்தார்கள், யாரை, தேர்தல் கமிஷனரை, அந்த தேர்தல் கமிஷனர் யார்?, டி.என்.சேஷன், அவரை விமான நிலையத்தில் ஓடஓட விரட்டி அடித்தார்கள்.

அவர் பதுங்குவதற்கு இடம் இல்லாமல் ஒரு காருக்குள் ஓடி புகுந்து கொண்டு, அந்த காரில் சென்று ஒரு ஓட்டலில் இறங்கி, அந்த ஓட்டலில் ஒரு ரூமுக்குள் புகுந்த கொள்ள, அந்த ரூமுக்குள்ளேயும் போய் அடித்து உதைத்தார்கள், அந்த ஓட்டலையும் நொறுக்கினார்கள். இதெல்லாம் தேர்தல் கமிஷனருக்கு ஜெயலலிதா ஆட்சியில் நடைபெற்ற உபசாரங்கள், அவர் நடத்திய திருவிளையாடல், நாம் அப்படியெல்லாம் நடக்கவும் இல்லை, அதை ஏற்கவும் இல்லை, அதை ஆதரிக்கவும் இல்லை, அதை அப்போதே எதிர்த்து அறிக்கை விட்டோம். தேர்தல் கமிஷனரை அப்படி நடத்தி இருக்கக்கூடாது என்று அப்போதே சொல்லி இருக்கிறோம்.

மத்திய அரசுக்கு வேண்டுகோள்

ஆனால் இன்றைக்கு நாம் முறைப்படி தேர்தல் கமிஷனோடு சுமுகமாக போனாலும், ஒவ்வொன்றையும் அவர்களை வைத்து செய்ய வேண்டும், என்ற நிலைமையில் இருந்தாலும் கூட, வெளிப்படையாக, முதல் அமைச்சராக நாம் ஆகிவிடுவோமோ என்ற நம்பிக்கையில், மமதையில், அந்த தெம்பில், இப்போதே உத்தரவிடுகிறார். நல்லவேளை, உடனடியாக கருணாநிதியை முதல் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கி விடு என்று சொல்லவில்லை. அப்படிப்பட்ட ஒரு நிலைமை இன்றறைக்கு தேர்தல் கமிஷனால் ஏற்பட்டு இருக்கும் போது, தேர்தல் கமிஷன், இந்த குறைகளை திருத்திக்கொள்ள வேண்டும்.

நான் மத்திய சர்க்காருக்கு சொல்கிறேன். தேர்தல் கமிஷன் நினைத்தால் பிரதமரைக்கூட கண்டிக்கலாம். பிரதமர் கூட தேர்தல் கமிஷனுக்கு அடங்கி நடக்க வேண்டியது தான், அதன் விதிமுறை அது தான்.

ஆனால் அப்படிப்பட்ட விதிமுறைகளை அப்படிப்பட்ட அதிகாரங்களை அப்படிப்பட்ட கட்டுப்பாடுகளை பெற்று இருக்கிற ஒரு மகத்தான நிறுவனம், புனிதமான நிறுவனம், என்று சொல்லப்படுகின்ற, அந்த தேர்தல் கமிஷனை எப்படி அமைப்பது? யார்&யாரைக்கொண்டு அமைப்பது, எந்த வகையில் அமைப்பது, அதற்குரிய அதிகாரங்களை எப்படி அமல்படுத்துவது என்பதையெல்லாம் கொண்ட ஒரு நிலையை இனியாவது ஏற்படுத்த மத்திய அரசு முன்வர வேண்டும் என்று இந்த மாபெரும் கூட்டத்தின் சார்பாக நான் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு முதல் அமைச்சர் கருணாநிதி பேசினார்.

 

Comments  

 
+2 #21 நாய் சேகர் 2011-04-21 15:02
இவர யாரு இப்ப் முதல்வருன்னு சொன்னது? இவரு இப்ப டம்மி பீசு! அடுத்த முதல்வர் அறிவிக்கும்வரை ஒரு காபந்து முதல்வர். அதுல இவருக்கு நல்ல பேர் வேற இருக்குதாம்!! அந்த நல்ல பேர எடுத்து ஃபிரிட்ஜில வெய்யுங்க, கெட்டிட போவுது! இவரு இது வரைக்கும் ஒரு முறையாவது மீண்டும் மக்கள் தேர்ந்தெடுத்திர ுக்காங்களா? அய்யோ நல்லவரு வராரு, சொம்ப எடுத்து உள்ள வெய்யுஙகய்யா?
Quote
 
 
0 #20 pakoda 2011-04-15 22:34
ilangai amaithi padaiyai varaverka vakkillai kirikettu veeranukku sontha panam kotukka manam illai anaa india thiyagiku tukter pattam enna enna enna ha ha ha !
Quote
 
 
+2 #19 Shivaaa 2011-04-11 16:52
Dae puthiyavannu paer vachavanae.. oru sample solraen kaelu...

un thalaivan athaanda antha karuna avanukku irukara sothu unakkae theriyum. ennamaari aalunga oru veedu vaanganumna 10 varusam poraadavendi irukku.. athum Bank Loan thaan.. antha LOAN vaanga LO LO nu alaiyanum.. .aetho kastappattu oru velaya vaangi eppidiyaathu kudumbaththa munnetralaamnu paatha.. Vangara Sambalathula Kaalvaasi TAX nu pudungaraaanung a intha government. Sari makkalukkaaga atha kattalaamnu ninacha.. parathaesinga atha makkalukku selavu pannaama 2G, 3G pothaathunnu puthusu puthusaa kandupidichi kollai adikaraanunga naayinga... DAE PUTHIYANNU PAER VACHCHAVANAE... SATHTHIYAMA VAYIRU ERITHUDA......... ENGA VAYITHTHERICHCH AL UNGALA SUMMAAA VIDAAATHU....
Quote
 
 
+2 #18 Shivaaa 2011-04-11 16:46
adacha.. yaaruda intha puthiyavan RAJ,,,, saththiyama ivanamaari aal irukkavaraikkum tamilnaadum thirunthaathu.. ivanamaari aaalunga thirunthavum vidamaataanunga ... ellaaam namma thalai eluththu....
Quote
 
 
+1 #17 Shivaaa 2011-04-11 16:41
unmaiya sollanumna saththiyama intha karunaanithiya theruvula vittu ellaarum seruppaala adikkanum.... koodavae antha puthiyavannu sollittu innum palasayae ularaanae avanaiyum.. vegutholaivil illa
Quote
 
 
+5 #16 Bachan 2011-04-11 16:21
// இந்தியாவுக்கு மகத்தான வெற்றி. அதுவும் எப்படிபட்ட வெற்றி இலங்கையை முறியடித்து பெற்ற வெற்றி. //

ஜெயிக்க வேண்டியதில் தோற்க பட்டு வெறும் விளையாட்டில் வெற்றி பெற்றதை மேடையில் கூறும் முதல்வரை என்ன வென்று சொல்வது. இவ்வாறு அவர் கூறும்போது அருகில் இருந்த திருமா கை தட்டி உற்சாகம் அடைந்தது சுத்த அரை வேகாட்டுதனம்.
Quote
 
 
-5 #15 Puthiyavan Raj 2011-04-11 16:03
உங்களில் ஒருவன், என் கேள்விக்குபதில் சொல்லாமல் பிரசினையை திசை திருப்ப பார்க்கிறீர்கள் . சேஷனை மிரட்டிய, அவரை பழித்த ஜெ. பற்றி நீங்கள் எதுவும் கண்டிக்காதது உங்கள் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக ்குகிறது.
Quote
 
 
-5 #14 Puthiyavan Raj 2011-04-11 16:01
பாண்டியன், கண்ணியம் இல்லாமல் நாகரீகம் இல்லாமல் பேசும் உங்களுடன் உரையாடுவது வீண். உங்கள் இல்லத்தில் நள்ளிரவில் எந்த பிடி ஆணயும் நீதிமன்ற உத்தரவும் இல்லாமல் உங்கள் வீட்டில் உள்ள பெரியவரின் படுக்கை அறைக்குள் காட்டுமிராண்டித ்தனமாக் புகுந்து அவரை தூக்கி சென்றால் நீங்கள், ஐயோ கொல்றாங்களே என்று கத்துவீர்களா அல்லது ஆஹா கொஞ்சுராங்க என்று ஆனந்த கூத்தாடுவீர்களா ? ஐயோ கொல்றாங்களே என்று அலறியது கலைஞர் பின்னால் இருந்த ஒரு உடன் பிறப்பு அல்லது உறவினர். வீடியோவை நன்றாக பாருங்கள். வழக்கை விசாரித்த நீதியரசர் கூட, "உன் இதயத்தில் சதை இருக்கிறதா களிமண் இருக்கிறதா?" என்று கேட்டார். காட்டுமிராண்டித ்தனமான, சட்டவிரோத நள்ளிரவு கைதை சாடிஸ்ட் போல குரூர சந்தோசத்துடன் பேசுபவர் இதயத்தில் மட்டுமல்ல, தலையிலும் தான் களிமண் உள்ளது. உங்கள் பேச்சில் நீங்கள் ஏதோ அதி மேதாவி போல உங்களை நினைத்துக்கொள்வ து புரிகிறது. எனக்கு உத்தரவு போட நீங்கள் யார்?
Quote
 
 
0 #13 jaya 2011-04-11 15:17
Quoting ayya:
பெயர் : பாட்டாளி மக்கள் கட்சி
இயற்பெயர் : பாசக்கார மகன் கட்சி
தலைவர் : ராமதாஸ்
துணை தலைவர் : அன்பு மணி
மேலும் துணைத் தலைவர்கள் : கா.வெ.குரு, கோ.க. மணி
வயது : ஆட்சியைப் பிடிக்கும் வயதல்ல
தொழில் : முன்பு மரம் வெட்டுவது இப்போது பேரம் பேசுவது
பலம் : நெடுஞ்சாலைகள் கடக்கும் ஊர்களில் இருப்பது
பலவீனம் : கூட்டணி மாறுவது
நீண்ட கால சாதனைகள் : வன்னிய மக்களை ஒருங்கிணைத்தது
சமீபகாலச் சாதனைகள் : சரஸ்வதியம்மாள் பெயரில்
பல்கலைக்கழகம் கட்டுவது
நீண்டகால எரிச்சல் : ஏ.கே.நடராஜன், வாழப்பாடி ராமமூர்த்தி,
வன்னிய அடிகளார் போன்ற வன்னியர்கள்
சமீபத்திய எரிச்சல் : ஒத்தை ராஜ்யசபாவுக்கு என்னமா
அலைய வுடுறானுவோ!
மக்கள் : (சொல்பேச்சுக்கு தலையாட்டும்) வன்னியர்கள் மட்டும்
சொத்து மதிப்பு :ஓட்டை சைக்கிள்,ஒற்றை ரூம் க்ளினிக்கில் துவங்கி
இன்று தைலாபுரம் சாம்ராஜ்யம் வரை
நண்பர்கள் :"ஈழப்பிரச்சினையி ல் ஏன் ராஜினாமா செய்யவில்லை?"
என்று கேட்காதவர்கள்
எதிரிகள் : முன்பு ரஜினிகாந்த்,குஷ ்பூ, இன்று விஜயகாந்த்
ஆசை :மீண்டும் மத்தியமந்திரி
நிராசை : பாண்டிச்சேரி முதல்வர் பதவி
பாராட்டுக்குரிய து : மக்கள் தொலைக்காட்சி
பயம் : சாட்டையடி கதை, ஜெ.கூட கூட்டு வைக்கமாட்டேன் என்பதற்குச்
சொன்ன உதாரணம் இதையெல்லாம் மறக்காத மிகச்சிலர்
கோபம் :கேட்ட சீட்டு கிடைக்காதபோது மட்டும் வருவது
காணாமல் போனவை : ஈழ ஆதரவும், தமிழ் உணர்வும்
புதியவை : 30 +1
கருத்து : தேர்தலுக்குத் தேர்தல் மாறுவது
டிஸ்கி : பசுமைத்தாயகத்தை ஆட்டைய போட்டீங்களே, அந்த அமைப்பை
ஆரமிச்ச பசங்க இப்போ என்னங்கய்யா பண்றாங்க?

தேர்தலுக்கு பின்னர் காணமல் போவார் பட்டியளில் இவரும் ஒருவர். அனேகமாக இவர் தேர்தல் முடிந்த பின்னர் மறுபடி அம்மாவுடன் கூட்டு சேருவார். அதையும் இந்த மக்கள் சகிப்பர்கள். பார்ப்போம். கருணா விடமே இருக்கிறாரா இல்லை அம்மாவிடம் அன்பு சகோதரி என்று ஒட்டிக்கொளுகிரர ா?
Quote
 
 
+1 #12 Ezhai Thamizhan 2011-04-11 14:42
மிக அருமை..

Quoting உங்களில் ஒருவன்:
புதியவன் ராஜ், நீங்க பல தளத்துல பழைய கருத்துக்களையே கூறிகிட்டு வர்ரிங்க. உங்களுக்கும் எனக்கும் எந்த தனிப்பட்ட விருப்பு வெறுப்பும் இல்ல. உங்களைப்போல நான் ஒரு கட்சியை சேர்ந்தவன் இல்ல, சமூகத்தின் மீது அக்கறையும் குற்றங்களின் மீது கோபமும் கொள்பவன். தேர்தல் ஆணையத்தின் நேர்மையில் ஒரு சதவிகதம் கூட குற்றம் சொல்ல முடியாது. பொது மக்களிடம் கேட்டு பாருங்கள், அவர்களின் ஒட்டு மொத்த கருத்தும் இதுதான்.

தேர்தல் ஆணையம் இப்போதுதான் தனது அதிகாரத்தில் 75 % நேர்மையாக உண்மையாக நடந்துகொள்கிறது . பாதிக்கப்பட்டவர ்கள் யார் என பார்த்தால் 95 % அரசியல் கட்சியினர்(திமு க அதிமுக சேர்த்து, திமுககாரன்தான் அதிகம் மாட்டுகிறான், ஏனென்றால் அவன்தான் அதிகம் குற்றம் செய்கின்றான் இந்த தேர்தலில், அவனைவிட அதிமுககாரன் கொஞ்சம் கம்மியாக குற்றம் செய்கிறான், குற்றம் செய்வதனால் இருவருமே கமிஷனிடம் மாட்டுகின்றனர்) . மீதம் 4 .5 % கருப்பு பணம் வைத்து உள்ளவர்கள், மீதம் ௦.5 % பொதுமக்கள்.

இவ்வளவு கெடுபிடியாக இருந்துமே இரு கட்சியினரும் பணம் விநியோகம் செய்கின்றனர். உதாரணம், அரவக்குறிச்சி தொகுதியில் ஒரு ஓட்டுக்கு திமுக(கே.சி.பழனிசாமி) 1000 ரூபாய், அதிமுக 500 ருபாய் கொடுத்துள்ளனர். மதுரையிலும் நடந்துள்ளது, நேற்று ஸ்ரீரங்கத்தில் பணம் வழங்கிய திமுகவினரை, பணம் வாங்கிய 6 பொதுமக்களை சிறையில் அடைத்துள்ளனர். இப்படி செய்தால்தான் மக்கள் பணம் வாங்க பயப்படுவார்கள்.

கருணாநிதி முதல்வராக இருந்து இந்ததடவை தேர்தல் நடக்கும்போது மட்டும் ஏன் புலம்ப வேண்டும்? இதே விதிகள் அப்போதும் இருந்துள்ளன, ஆனால் செயல் படுத்த எவருக்கும் துணிவில்லை, இப்போது அவர்கள் உண்மையாக நடக்கும் போது குற்றம் செய்தவர்களுக்கு குறுகுறுக்கிறது .இதுதான் உண்மை, கண்மூடித்தனமாக எவரையும் ஆதரிக்காதீர்கள் , நாம் மாக்கள் அல்ல மக்கள், இருக்கும் 6 வது அறிவை பயன்படுத்துங்கள ், தவறு செய்பவர்களை தட்டி கேளுங்கள், முடியவில்லையா ஒதுங்கி போங்கள், அதை விட்டு வறட்டு கவுரவத்திற்காக நான் கட்சிக்காரன், என் கட்சி என்ன தப்பு பண்ணாலும் அததான் ஆதரிப்பேன்னு சொன்னிங்கன்னா, உங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்
Quote
 
 
+2 #11 குசும்பன் 2011-04-10 22:47
நக்கீரன் கேள்வி

கருணா பதில்

நக்: உங்களுக்கு தோல்வி நிச்சியம் என்று பத்திரிகைகள் கூறுகின்றன, அதை பொறுக்கமுடியாமல ் நீங்கள் புலம்புவதாக சொல்லுகிறார்கள் .

கரு: காசு வாங்கிக்கொண்டு பத்திரிகைகள் செய்யும் ஜனநாயகமற்ற செயல். ராமதஸும் திருமாவும் வலமிடமாகவும் குஞ்சாமணி மத்தியில் நின்றும் அறிக்கை விடுவதிலிருந்து புரிந்துகொள்ளலா ம்.

நக்: ஆரிய திராவிட யுத்தம் என்கிறீர்கள் சோனியாவை கண்டதும் குப்புற விழுந்து கும்புடுகிறீர்க ள்..

கரு: சோனியா இத்தாலியில் பிறந்தவர் என்பதால் அவர் ஆரியர் என்று சொல்லாவிட்டாலும ் கூட்டணித்தர்மத் தின் அடிப்படையில் சிலவிடையங்களை அனுசரித்து போகவேண்டிய தார்மீக கடமையிருக்கிறது நான் மட்டுமல்ல தங்கபாலுவும் சோனியை காலில் விழுந்து கோவில் என்று கும்பிடுகின்றார ்.

நக்: தேர்தல் கமிஷன் செயற்பாடுபற்றி:

கரு: ஜெயலலிதாவின் சதி இருப்பதாக சந்தேகப்படுகிறே ன். மற்றும்படி நான் தேர்தல் கமிஷனை குற்றம் சொல்ல நினைத்தாலும் அவர்கள் கடமையை செய்கின்றனர் என்று சொல்லமாட்டேன்,

நக்: ஈழத்தமிழர்கள் பற்றிய உங்கள் நிலைப்பாடு.

கரு: 1958ல் இருந்து இலங்கை தமிழருக்காக குரல் கொடுத்து வரும் ஒரே இயக்கம் கழகம்தான்.திருமாவுக்கும் இது நன்கு தெரியும். தேர்தல் முடிந்ததும், இலங்கை தமிழர் நலனுக்காக மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்துவோம் . பதவியை துறக்கவும் தயங்கமாட்டோம்,.

நக்: நேற்றும் கடலில் 4 மீனவர்கள் கொல்லப்பட்டதாக செய்தி வந்திருக்கிறது பற்றி,

கரு; தவறான தகவல் சோனியா நேற்று கூட்டத்தில் கடலில் இனி எவரும் கொல்லப்படமாட்டா ர்கள் என்று கூறியிருக்கிறார ். எதிர்க்கட்சியின ருக்கு சாதகமாக மக்களை திசை திருப்பும் தேர்தல் கமிஷனின் கபட நாடகம்.
Quote
 
 
+6 #10 aravindh 2011-04-10 21:56
SUPERRRRRRrrrrr rrrr
Quoting மந்திரவாதி:
கலைஞர் அவர்களே, சரியான நேரத்தில்தான் உங்களுக்கு சந்தேகம் வந்துள்ளது. ஏனெனில் உங்களுக்கு சாவு மணி அடித்தது உங்கள் காதில் இப்பவாவது கேட்டதே. கருணாநிதி அவர்களே, அடுத்து உங்களுக்கு வரவேண்டிய சந்தேகம் "நான் ஒருத்தனுக்குத்த ான் பொறந்தேனா". இந்த சந்தேகம் உங்களுக்கு வருவதற்கு ஜெயலலிதா அடுத்த மாதம் உதவுவார். வெயிட் அண்ட் ஸீ.
Quote
 
 
+8 #9 உங்களில் ஒருவன் 2011-04-10 14:16
புதியவன் ராஜ், நீங்க பல தளத்துல பழைய கருத்துக்களையே கூறிகிட்டு வர்ரிங்க. உங்களுக்கும் எனக்கும் எந்த தனிப்பட்ட விருப்பு வெறுப்பும் இல்ல. உங்களைப்போல நான் ஒரு கட்சியை சேர்ந்தவன் இல்ல, சமூகத்தின் மீது அக்கறையும் குற்றங்களின் மீது கோபமும் கொள்பவன். தேர்தல் ஆணையத்தின் நேர்மையில் ஒரு சதவிகதம் கூட குற்றம் சொல்ல முடியாது. பொது மக்களிடம் கேட்டு பாருங்கள், அவர்களின் ஒட்டு மொத்த கருத்தும் இதுதான்.

தேர்தல் ஆணையம் இப்போதுதான் தனது அதிகாரத்தில் 75 % நேர்மையாக உண்மையாக நடந்துகொள்கிறது . பாதிக்கப்பட்டவர ்கள் யார் என பார்த்தால் 95 % அரசியல் கட்சியினர்(திமு க அதிமுக சேர்த்து, திமுககாரன்தான் அதிகம் மாட்டுகிறான், ஏனென்றால் அவன்தான் அதிகம் குற்றம் செய்கின்றான் இந்த தேர்தலில், அவனைவிட அதிமுககாரன் கொஞ்சம் கம்மியாக குற்றம் செய்கிறான், குற்றம் செய்வதனால் இருவருமே கமிஷனிடம் மாட்டுகின்றனர்) . மீதம் 4 .5 % கருப்பு பணம் வைத்து உள்ளவர்கள், மீதம் ௦.5 % பொதுமக்கள்.

இவ்வளவு கெடுபிடியாக இருந்துமே இரு கட்சியினரும் பணம் விநியோகம் செய்கின்றனர். உதாரணம், அரவக்குறிச்சி தொகுதியில் ஒரு ஓட்டுக்கு திமுக(கே.சி.பழனிசாமி) 1000 ரூபாய், அதிமுக 500 ருபாய் கொடுத்துள்ளனர். மதுரையிலும் நடந்துள்ளது, நேற்று ஸ்ரீரங்கத்தில் பணம் வழங்கிய திமுகவினரை, பணம் வாங்கிய 6 பொதுமக்களை சிறையில் அடைத்துள்ளனர். இப்படி செய்தால்தான் மக்கள் பணம் வாங்க பயப்படுவார்கள்.

கருணாநிதி முதல்வராக இருந்து இந்ததடவை தேர்தல் நடக்கும்போது மட்டும் ஏன் புலம்ப வேண்டும்? இதே விதிகள் அப்போதும் இருந்துள்ளன, ஆனால் செயல் படுத்த எவருக்கும் துணிவில்லை, இப்போது அவர்கள் உண்மையாக நடக்கும் போது குற்றம் செய்தவர்களுக்கு குறுகுறுக்கிறது .இதுதான் உண்மை, கண்மூடித்தனமாக எவரையும் ஆதரிக்காதீர்கள் , நாம் மாக்கள் அல்ல மக்கள், இருக்கும் 6 வது அறிவை பயன்படுத்துங்கள ், தவறு செய்பவர்களை தட்டி கேளுங்கள், முடியவில்லையா ஒதுங்கி போங்கள், அதை விட்டு வறட்டு கவுரவத்திற்காக நான் கட்சிக்காரன், என் கட்சி என்ன தப்பு பண்ணாலும் அததான் ஆதரிப்பேன்னு சொன்னிங்கன்னா, உங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்
Quote
 
 
+9 #8 Kumar.T 2011-04-10 12:14
தேர்தல் ஆணையம் அதன் அதிகாரங்களை தானே செயல்படுத்துகிற து... அதில் இவருக்கு எங்கே வலிகிறது...? அவரே ஒத்து கொள்கிறார் பிரதமரே தேர்தல் ஆணையத்துக்கு கட்டுப்பட்டவர் என்று... அப்புறம் எதுக்கு ஊளை இடுகிறார் என்று தான் புரியவில்லை ....

இவரோட தில்லு முல்லுகளுக்கு தேர்தல் ஆணையம் ஒத்து ஊதி இருந்தால் இந்நேரம் அது சிறப்பாக செயல் படுகிறது என்று பாராட்டி இருப்பார் ...
சாக போகிற வயதிலும் இவ்வளவு நச்சு தன்மையுடன் பேசும் இவர் உண்மையில் MGR அவர்கள் சொன்னது போல ஒரு தீய சக்தி தான்....
Quote
 
 
+9 #7 ayya 2011-04-10 11:27
பெயர் : பாட்டாளி மக்கள் கட்சி
இயற்பெயர் : பாசக்கார மகன் கட்சி
தலைவர் : ராமதாஸ்
துணை தலைவர் : அன்பு மணி
மேலும் துணைத் தலைவர்கள் : கா.வெ.குரு, கோ.க. மணி
வயது : ஆட்சியைப் பிடிக்கும் வயதல்ல
தொழில் : முன்பு மரம் வெட்டுவது இப்போது பேரம் பேசுவது
பலம் : நெடுஞ்சாலைகள் கடக்கும் ஊர்களில் இருப்பது
பலவீனம் : கூட்டணி மாறுவது
நீண்ட கால சாதனைகள் : வன்னிய மக்களை ஒருங்கிணைத்தது
சமீபகாலச் சாதனைகள் : சரஸ்வதியம்மாள் பெயரில்
பல்கலைக்கழகம் கட்டுவது
நீண்டகால எரிச்சல் : ஏ.கே.நடராஜன், வாழப்பாடி ராமமூர்த்தி,
வன்னிய அடிகளார் போன்ற வன்னியர்கள்
சமீபத்திய எரிச்சல் : ஒத்தை ராஜ்யசபாவுக்கு என்னமா
அலைய வுடுறானுவோ!
மக்கள் : (சொல்பேச்சுக்கு தலையாட்டும்) வன்னியர்கள் மட்டும்
சொத்து மதிப்பு :ஓட்டை சைக்கிள்,ஒற்றை ரூம் க்ளினிக்கில் துவங்கி
இன்று தைலாபுரம் சாம்ராஜ்யம் வரை
நண்பர்கள் :"ஈழப்பிரச்சினையி ல் ஏன் ராஜினாமா செய்யவில்லை?"
என்று கேட்காதவர்கள்
எதிரிகள் : முன்பு ரஜினிகாந்த்,குஷ ்பூ, இன்று விஜயகாந்த்
ஆசை :மீண்டும் மத்தியமந்திரி
நிராசை : பாண்டிச்சேரி முதல்வர் பதவி
பாராட்டுக்குரிய து : மக்கள் தொலைக்காட்சி
பயம் : சாட்டையடி கதை, ஜெ.கூட கூட்டு வைக்கமாட்டேன் என்பதற்குச்
சொன்ன உதாரணம் இதையெல்லாம் மறக்காத மிகச்சிலர்
கோபம் :கேட்ட சீட்டு கிடைக்காதபோது மட்டும் வருவது
காணாமல் போனவை : ஈழ ஆதரவும், தமிழ் உணர்வும்
புதியவை : 30 +1
கருத்து : தேர்தலுக்குத் தேர்தல் மாறுவது
டிஸ்கி : பசுமைத்தாயகத்தை ஆட்டைய போட்டீங்களே, அந்த அமைப்பை
ஆரமிச்ச பசங்க இப்போ என்னங்கய்யா பண்றாங்க?
Quote
 
 
+4 #6 saravanaask 2011-04-10 10:48
These statements from Karunanidhi shows how deeply he is irritated for not able to distribute money and indulge in all election malpractices. What wrong will happen if he didn't distribute money (rewards) to team india immediately??? He can distribute it once the elections are over? Wont the team india accept rewards that were given one month delayed??? New election policy should come in such a way that once elections are announced, CM's of that particular state should resign along with whole cabinet and state should come under governor's rule with EC overseeing it. This way it will avoid all these un-necessary comments and prevent govt machinery being used for elections purpose by ruling party. All govt employees can work without any fear of people who are in power. Also these kind of statements are not new in TN, as EC always comes under direct fire of the ruling party when elections are announced in TN. Election commission wont get cowed down by these remark. Kudos to EC and good job done, keep up your good work.
Quote
 
 
+9 #5 பச்சைமாலு. 2011-04-10 10:28
தேர்தல் ஒன்று வந்து, தேர்தல் கமிஷன் என்னை பாடாய் படுத்துகிறது. ஜபார் சேட்டை என்னிடமிருந்து பிரித்தது. அஞ்சாநெஞ்சனின்

ஆதிக்கத்தை கட்டுப்படுத்தப் பார்க்கிறது. எனது விஞ்ஞானபூர்வமான தந்திரத்தை தடுத்து தடைபோடுகிறது, கிரிக்கட் வீரன் அஸ்வினுக்கு நான் என்ன

எனது பணத்தையா கொடுக்கப்போகிறே ன். ஊரார் பணத்தை மீடியா வெளிச்சத்தில் அஸ்வினுக்கு கொடுத்து என்னை நல்லவன் போல காட்டி

ஓட்டை பெற்றுவிடுவேன், திரும்பவும் முதல்வராகிவிடுவ ேன் என்று தமிழ்நாடு பயப்படுவது தெரிகிறது. நான் இப்படியெல்லாம் புலம்பாவிட்டால் ஆட்சி போய்விடும் ஸ்பெக்ரம் திருட்டிலிருந்த ு மீழ எனக்கு வேறென்ன வழியிருக்கிறது. கேடி பிரதர்ஸ் என்னையும் என் குடும்பத்தையும் முழுங்க காத்திருக்கின்ற னர்.நான் தேர்தல் கமிஷனை குறைகூறமாட்டேன் ஏனென்றால் எனது வயதுக்கு நான் செய்வது அனைத்தும் மட்டமான ரகம் என எவர் சொன்னாலும் எனக்கு கவலையில்லை ராசாவை தகத்காய சூரியன் என்று கூறி அவரை திஹாருக்கு அனுப்பியதில் குஞ்சாமணிக்கும் பங்கிருக்கிறது. எனது ஆட்சியை விமர்சித்த ராமதாஸ் தனது மகனுக்கு நியமன மந்திரிபதவி கிடைக்கும் என்றவுடன் என்காலடியில் கிடக்கிறார். இப்படி 5 வருடத்துக்கு ஒருமுறை தேர்தலை நடத்தி நாட்டு பணத்தை வீணடிப்பதை விடுத்து என்னை நிரந்தர முதல்வர் ஆக்குவதில் தேர்தல் ஆணையத்துக்கு எங்கே நோகிறது இத்தாலி சோனியா நாட்டை தன் கட்டுப்பாட்டுக் குள் வைத்திருப்பதைபோ ல் தமிழ் நாட்டை நானும் எனது மனைவிகளும் வைத்திருப்பது சரியென்று நீங்கள் நினைப்பது எனக்கு பூரிப்பாகவிருக் கிறது,(ஏதாவது புரிகிறதா?)
Quote
 
 
+11 #4 மந்திரவாதி 2011-04-10 10:06
கலைஞர் அவர்களே, சரியான நேரத்தில்தான் உங்களுக்கு சந்தேகம் வந்துள்ளது. ஏனெனில் உங்களுக்கு சாவு மணி அடித்தது உங்கள் காதில் இப்பவாவது கேட்டதே. கருணாநிதி அவர்களே, அடுத்து உங்களுக்கு வரவேண்டிய சந்தேகம் "நான் ஒருத்தனுக்குத்த ான் பொறந்தேனா". இந்த சந்தேகம் உங்களுக்கு வருவதற்கு ஜெயலலிதா அடுத்த மாதம் உதவுவார். வெயிட் அண்ட் ஸீ.
Quote
 
 
+4 #3 pandiyan 2011-04-10 09:38
read this article கருணாநிதியை விட பெரிய தீயசக்தி எது ? and my all comments. you THARKOORI dont spread false news.. PERIYAR SAID ONCE "I should need all THARKOORIGAL for my IYAKKAM". you are one most eligible for that till date.


Quoting புதியவன் ராஜ்:
"வசவாளர்கள் வாழ்க" என்று அண்ணா சொன்னார். அண்ணாவின் கொள்கையை கடைப்பிடிக்கும் கலைஞரும் தன்னை வசை பாடும் ஜெ. வாழ்க என்று சொல்லிவிட்டார். ஆனல் ஒரு விசயம் நெருடுகிறது. இந்த தேர்தல் ஆணயம் கண்டிப்புடன் நடக்கும் நிலையை ஆரம்பித்து வைத்த டி.என். சேஷன் ஜெ. காட்டாட்சியில் எப்படி எல்லாம் அவமானப்படுத்தப் பட்டார், உயிருக்கு பயந்து விமான நிலையத்தில் 6 மணி நேரம் காவலில் இருந்தார் (ஜெ. ஆட்சியில் அவர் சென்னை விமான நிலையத்திலிருந் து வெளியில் வந்தால் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்ற நிலை). பின் அவர் தங்கியிருந்த நட்சத்திர விடுதியும் அதிமுக குண்டர்களால் தாக்கப்பட்டது. 1996-ல் படு தோல்வி அடைந்த ஜெ. தனது தோல்விக்கு காரணம் தேர்தல் ஆணையர் சேஷன் தான் என்று வெளிப்ப்படையாக குற்றம் சாட்டினார். சேஷன் கூட அது பற்றி கேட்ட போது, "ஜெ. வை நினைத்தால் ஐயோ பாவம் என்று தோன்றுகிறது" என்றார். இந்த அராஜகத்தை யாரும் கண்டிக்கவில்லைய ே ஏன்? ஜெ. இமாலயத்தவறு செய்தாலும் மயிலறகால் அடிப்பது, கலைஞர் சிறு தவறு செய்தாலும் இரும்புத்தடியால ் அடிப்பது என்ற "கொள்கை" தான் காரணமா?
Quote
 
 
+4 #2 pandiyan 2011-04-10 09:34
அண்ணாவின் கொள்கையை கடைப்பிடிக்கும் கலைஞரும் .........what is அண்ணா கொள்கை? ayyoo kolrangala ayyo kolrangala ..edyum thangum idhyam illamal ayyo kolrangala?
Quote
 
 
-22 #1 புதியவன் ராஜ் 2011-04-10 09:00
"வசவாளர்கள் வாழ்க" என்று அண்ணா சொன்னார். அண்ணாவின் கொள்கையை கடைப்பிடிக்கும் கலைஞரும் தன்னை வசை பாடும் ஜெ. வாழ்க என்று சொல்லிவிட்டார். ஆனல் ஒரு விசயம் நெருடுகிறது. இந்த தேர்தல் ஆணயம் கண்டிப்புடன் நடக்கும் நிலையை ஆரம்பித்து வைத்த டி.என். சேஷன் ஜெ. காட்டாட்சியில் எப்படி எல்லாம் அவமானப்படுத்தப் பட்டார், உயிருக்கு பயந்து விமான நிலையத்தில் 6 மணி நேரம் காவலில் இருந்தார் (ஜெ. ஆட்சியில் அவர் சென்னை விமான நிலையத்திலிருந் து வெளியில் வந்தால் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்ற நிலை). பின் அவர் தங்கியிருந்த நட்சத்திர விடுதியும் அதிமுக குண்டர்களால் தாக்கப்பட்டது. 1996-ல் படு தோல்வி அடைந்த ஜெ. தனது தோல்விக்கு காரணம் தேர்தல் ஆணையர் சேஷன் தான் என்று வெளிப்ப்படையாக குற்றம் சாட்டினார். சேஷன் கூட அது பற்றி கேட்ட போது, "ஜெ. வை நினைத்தால் ஐயோ பாவம் என்று தோன்றுகிறது" என்றார். இந்த அராஜகத்தை யாரும் கண்டிக்கவில்லைய ே ஏன்? ஜெ. இமாலயத்தவறு செய்தாலும் மயிலறகால் அடிப்பது, கலைஞர் சிறு தவறு செய்தாலும் இரும்புத்தடியால ் அடிப்பது என்ற "கொள்கை" தான் காரணமா?
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 336 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday6477
mod_vvisit_counterYesterday11112
mod_vvisit_counterThis week27676
mod_vvisit_counterLast week80132
mod_vvisit_counterThis month230408
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12752527