முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
முறைகேடுகள் நடந்தால் தேர்தல் ரத்து: பிரவீண் குமார் எச்சரிக்கை அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 0
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
செவ்வாய்க்கிழமை, 12 ஏப்ரல் 2011 06:50

 சட்டப் பேரவைத் தேர்தலில் முறைகேடுகள் நடந்தால் வாக்குப் பதிவை ரத்து செய்யவும், மறு தேர்தல் நடத்தவும் தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் உள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் எச்சரித்துள்ளார்.

 

வாக்காளர்களுக்கு அதிகளவில் பணம், பரிசுப் பொருட்கள் அளிக்கப்பட்ட தொகுதிகளின் நிலவரங்களை கையில் வைத்துக் கொண்டே ஆணையம் இவ்வாறு கூறியுள்ளதாகக் கருத்து நிலவுகிறது.

 

யார் தகவல்கள் அளிப்பார்கள்? ஒவ்வொரு தொகுதியிலும் வேட்பாளர்களின் செலவுக் கணக்குகளைக் கண்காணிக்க பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், பொதுப் பார்வையாளர்கள், போலீஸ் பார்வையாளர்கள் என தனித்தனியே அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தேர்தல் ஆணையத்துக்கு தகவல்களை அளித்து வருகின்றனர்.

 

அவர்கள் தரும் புள்ளி விவரங்களை அடிப்படையாக வைத்தும், பொதுவாக வரும் புகார்களின் தன்மையைக் கொண்டும் முறைகேடுகளின் அளவு நிர்ணயிக்கப்படும் என தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

 

புனித ஜார்ஜ் கோட்டையில் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை பேசிய தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் கூறியது:

 

சட்டப் பேரவைத் தொகுதிகளில் முறைகேடுகள் நடந்ததாகக் கருதினால், அந்தத் தொகுதியில் தேர்தலை நிறுத்த ஆணையத்துக்கு அதிகாரம் உள்ளது. வாக்குப் பதிவு நடைபெற்று முடிந்த பிறகும்கூட அதை ரத்து செய்து விட்டு புதிதாக தேர்தலை அறிவிக்க முடியும்.

 

தேர்தல் பிரசாரம் முடிவுற்ற நிலையில், வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் வழங்கப்படுகிறதா என்பது உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது.

 

பணம், பரிசுப் பொருட்கள் அளிக்கப்பட்டதாக புகார்கள் வந்துள்ள தொகுதிகளின் விவரங்கள் ஏதும் கணக்கெடுக்கப்படவில்லை. பணப்பட்டுவாடா குறித்து சில தொகுதிகளில் அதிகளவு புகார்கள் வருகின்றன என்றார் பிரவீண் குமார்.

 

எவ்வளவு பணம் பறிமுதல்? தமிழகத்தில் வாகன சோதனைகள் மூலம் இதுவரை ரூ.33.11 கோடி ரொக்கமாகவும், ரூ.12.58 கோடி மதிப்புள்ள பரிசுப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. உரிய ஆவணங்களைக் காட்டியதைத் தொடர்ந்து, ரூ.5.18 கோடி பணம் உரியவர்களிடம் திருப்பி அளிக்கப்பட்டுள்ளது.

 

தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக, 61 ஆயிரத்து 20 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. அதில், அனுமதியின்றி சுவர் விளம்பரம் செய்தது உள்ளிட்ட புகார்கள் 55 ஆயிரத்து 254. உரிய அனுமதியில்லாமல் வாகனங்களை இயக்கியதாக 2 ஆயிரத்து 850 புகார்கள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.

 

பணம், பரிசுப் பொருட்கள் அளித்ததாக 975 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு அந்த வழக்குகளின் எண்ணிக்கை 641 ஆக இருந்தது என்றார் பிரவீண் குமார்.

 

வாக்களிப்பதற்காக பணம், பரிசுப் பொருட்களைப் பெற்றால் கொடுத்தவருக்கும், வாங்கியவருக்கும் ஓராண்டு சிறைத் தண்டனை கிடைக்கும் என தேர்தல் ஆணையம் ஏற்கெனவே எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Comments  

 
0 #5 k rat nasa mi 2011-04-12 19:42
DMK converted our people as Beggars ,Officials too begging with people regularly. But Politicians turned into great Robbers.!
Quote
 
 
+5 #4 நாய் சேகர் 2011-04-12 12:55
அன்ன ஹசாரே 72 வயதில் நமக்காக போராடும்போது, நாம் வாக்குரிமயை விற்பது, தவிர்ப்பதும் கேவலமான் செயல் அல்லவா?

ஒரு பெண் தாசில்தாரர் தன் உயிரை பணயம் வைத்து 5.12 கோடி ஓட்டுக்காக வைத்திருந்ததை நள்ளிரவில் கைப்பற்றினார், நாம் வாக்குரிமயை விற்பது, தவிர்ப்பதும் கேவலமான் செயல் அல்லவா?

கலெக்டர் சகாயம், பிரவீண் குமார் போன்ற நேர்மயான அதிகாரிகள் தன் உயிரை பணயம் வைத்து நம் உரிமைக்காக உழைக்கும்போது, நாம் வாக்குரிமயை விற்பது, தவிர்ப்பதும் கேவலமான் செயல் அல்லவா?


இன்று ஓட்டுபோட வரிசையில் நிற்க சோம்பேறிதனப்பட் டால், பிச்சைக்காரர்கள ்போல் எதெற்கெடுத்தாலு ம் வரிசையில் நிற்கவேண்டிவரும ்.

30 வயதுக்கு குறைவான் வயதுடையவர்க்ளே வாக்களிக்காதவர் களில் பெரும்பாலானோர்.

ஏப்ரல் 1 தேதி ஏமாந்தால் ஒரு நாள்தான் முட்டாள்ல், ஏப்ரல் 13 தேதி ஏமாந்தால் 5 வருடம் முட்டாள்.

சிந்தியுங்கள், வாக்களியுங்கள்.
Quote
 
 
+2 #3 சைதை அஜீஸ் 2011-04-12 10:09
ஆளும் கட்சி முதல் எதிர் கட்சி வரை அனைத்து வேட்பாளர் கண்ணிலும் விரலை விட்டு ஆட்டும் தேர்த்தல் ஆணையத்துக்கு பல கோடான கோடி(கோடிகளை மறக்காதவன்) நன்றி. அதேபோல இந்த ஓட்டளிக்காத வாக்காளர்களுக்க ும் உங்கள் சட்டத்தில் ஏதாவது வழி இருந்தால் ஒரு பிடி பிடியுங்களேன்.
Quote
 
 
+2 #2 ராமசாமி 2011-04-12 09:48
தேர்தல் கமிஷன் நடவடிக்கைகள் இதுவரை நேர்மையாகவே இருக்கின்றன. பிரவீன் குமார் போன்றவர்கள் இருப்பது, நரேஷ் குப்தா போன்றவர்கள் இருந்தது போன்ற நிகழ்வுகளுக்கு தமிழர்கள் சந்தோஷப்பட வேண்டும். இருப்பினும் சென்ற லோக்சபா தேர்தல்களில் (ப சிதம்பரத்துக்கு ஆதரவாக) நடந்தவை போன்ற தகிடுதத்தங்கள் நிகழாமல் இருக்க வேண்டும்.

ஆகட்டும் பார்க்கலாம், ஆட்டத்தின் முடிவிலே...

சில பதிவுகள்:

* ஏன் நாம் திமுக-வுக்கு ‘வேட்டு’ போடவேண்டும்! (http://othisaivu.wordpress.com/2011/04/12/post-18/)
* உதிரிகளின் தொடர்கதை: மாறன்கள், மாற மாட்டான்கள்… (http://othisaivu.wordpress.com/2011/04/11/post-17/)

நன்றி!
Quote
 
 
+5 #1 kvtd 2011-04-12 07:43
He is an IRON MAN. People appreciated the Election Commissioner. Well done announcement. However the DMK never care it.
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 65 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday1995
mod_vvisit_counterYesterday12350
mod_vvisit_counterThis week61160
mod_vvisit_counterLast week78861
mod_vvisit_counterThis month273979
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12796098