முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
ஈழப் போரில் கருணா குடும்பத்தின் சாட்சியம் அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 1
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
செவ்வாய்க்கிழமை, 12 ஏப்ரல் 2011 10:03

வன்னிப் போரில் தமிழீழ தேசம் சந்தித்த பேரழிவுக்கும், பின்னடைவுக்குமான மூலகாரணங்களை கண்டறிவதற்கான தேடல் உலகத் தமிழர்களிடையே தொடரும் நிலையில், ‘முள்ளிவாய்க்காலில் கழுத்தறுத்த மர்ம நபர்’ என்ற தலைப்பில் கடந்த இரண்டு இதழல்களுக்கு முன்னர் கட்டுரையொன்றை வெளியிட்டிருந்தோம். இக்கட்டுரையின் தொடர்ச்சியாக ‘தந்திரிகளின் மறுமுகம்’ என்ற மகுடத்தின் கீழ் தொடர் கட்டுரைகளை வெளியிடுவதற்கு முடிவு செய்துள்ளோம்.

இறுதிப் போரில் மக்களைப் பாதுகாப்பதற்காக எத்தகையை அர்ப்பணிப்புக்களைப் புரிவதற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் தயாராக இருந்தார்கள் என்பதையும், போர்நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்கும், வன்னி மக்களைப் பாதுகாப்பதற்கும் நடவடிக்கை எடுப்பாகப் பொய்யுரைத்து சிங்கள-இந்திய அரசுகளின் கூட்டுச்சதிக்கு உறுதுணை புரிந்த அரசியல்வாதிகள், பரப்புரையாளர்கள், ஊடகவியலாளர்கள் போன்றோரின் மறுமுகத்தை வெளிக்கொணர்வதே இத்தொடர் கட்டுரைகளின் நோக்காகும். இதில் வெளிக்கொணரப்படும் உண்மைகளை நிரூபிக்கும் சில கடிதங்களையும் வெளியிடுவதற்கு நாம் முடிவு செய்துள்ளோம். இதுவரை காலமும் மிகவும் அந்தரங்கமான முறையில் பேணப்பட்டு வந்த இக்கடிதங்களை, காலத்தின் தேவை கருதி இப்பொழுது நாம் வெளிக்கொணர்கின்றோம்.

இந்த வகையில் இவ்வாரத்திற்கான கட்டுரையில், போர்நிறுத்தத்தை ஏற்படுத்தி மக்களின் துயர்துடைக்கும் நோக்கத்துடன் ஒரேயொரு நோக்கத்துடன், தமிழக முதலமைச்சர் கலைஞர் முத்துவேல் கருணாநிதியுடனும், அவரது புதல்வி கனிமொழியுடனும் தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்ட தொடர்பாடல்களைப் பதிவு செய்கின்றோம்.

.    .    .

2008ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம்: வன்னி மேற்கின் பெரும்பாலான பகுதிகளை ஆக்கிரமித்திருந்த சிங்களப் படைகள், கிளிநொச்சியை மையப்படுத்தித் தமது வலிந்த தாக்குதல்களை உக்கிரப்படுத்தியிருந்தன. யுத்த விமானங்கள், ஆட்லறி எறிகணைகள், பல்குழல் பீரங்கிக் கணைகள் சகிதம் கிளிநொச்சியையும், அதனை அண்டிய ஏனைய மக்கள் குடியிருப்புக்களையும் இலக்கு வைத்து சிங்களப் படைகள் நிகழ்த்தி வந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களில் நாள்தோறும் தமிழ் உயிர்கள் நரபலி வேட்டையாடப்பட்டு வந்தன.

மக்களின் இழப்புக்கள் தொடர்பாக ஊடகங்களில் வெளிவந்த செய்திகளும், போர்நிறுத்தத்தை வலியுறுத்தி தமிழ்த் தேசிய அமைப்புக்களால் முன்னெடுக்கப்பட்ட அறவழிக் கவனயீர்ப்பு நடவடிக்கைகளும், தமிழக மக்களிடையே கொந்தளிப்பான சூழலை தோற்றுவித்திருந்தது. இதற்கு ஏறத்தாள ஒரு மாதத்திற்கு முன்னர் 2008 செப்ரம்பர் மாதம் 9ஆம் நாளன்று வவுனியாவில் சிங்களப் படைகளின் கட்டளைப்பீடம் மீது கரும்புலிகளும், வான்புலிகளும் இணைந்து நிகழ்த்திய தாக்குதலில் இந்தியப் படை அதிகாரி ஒருவர் காயமடைந்தமை, தமிழின அழிப்பில் இந்தியா உடந்தையாக இருப்பதைப் பட்டவர்த்தனமாக்கியிருந்தது. இதன் எதிரொலியாக தமிழகத்தில் போர்நிறுத்தத்தை வலியுறுத்தும் மக்களின் தார்மீகக் குரல் ஓங்கியொலிக்கத் தொடங்கியிருந்தது.

ஏறத்தாள ஏழு மாதங்களில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவிருந்த நிலையில், காங்கிரஸ் அரசுக்கு எதிராகத் தமிழகத்தில் எழுந்த எதிர்ப்பலைகள் கலைஞர் கருணாநிதிக்கு பெரும் சங்கடத்தைத் தோற்றுவித்திருந்தன. காங்கிரஸ் கூட்டணியின் அச்சாணி என்று சோனியா காந்தியால் வர்ணிக்கப்பட்ட கருணாநிதியின் அரசியல் எதிர்காலம்கூட ஒருவகையில் தமிழகத்தில் எழுந்த எதிர்ப்பலைகளால் கேள்விக்குறியாகும் அபாயமும் மேலோங்கத் தொடங்கியிருந்தது. இந்நிலையிலேயே போர்நிறுத்தத்தை வலியுறுத்தும் நாடகம் ஒன்றை கருணாநிதி கனக்கச்சிதமாக அரங்கேற்றத் தொடங்கியிருந்தார்.

டில்லிக்கு தந்தி அனுப்புதல், ஆர்ப்பாட்டம் நிகழ்த்துதல், மனிதச் சங்கிலிப் பேரணிகளை முன்னெடுத்தல் என்று நீண்டு விரிந்து செல்லத் தொடங்கிய கருணாநிதியின் போர்நிறுத்த நாடகம், ஒக்ரோபர் மாதம் 14ஆம் நாளன்று இந்திய மத்திய அரசுக்கு காலக்கெடு விதிக்கும் காட்சியாகக் கட்டவிழத் தொடங்கியது. இதன்படி பதினான்கு நாட்களில் ஈழத்தில் போர்நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்கு இந்திய மத்திய அரசு நடவடிக்கை எடுக்கத் தவறும் பட்சத்தில், காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகிக்கும் தமிழகம்-புதுச்சேரி மாநிலங்களைச் சேர்ந்த நாற்பது நாடாளுமன்ற உறுப்பினர்களும் கூண்டோடு பதவி விலகுவார்கள் என்று கருணாநிதி அறிவித்திருந்தார்.

இதற்கு ஒரு வாரத்திற்கு முன்னர் தமிழீழ மக்களின் தன்னாட்சியுரிமையை அங்கீகரித்து முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஜெயராம் அவர்களும் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இந்த வகையில் கருணாநிதியின் கூண்டோடு பதவி விலகும் அறிவிப்பும், ஜெயலலிதாவின் தன்னாட்சியுரிமை அறிக்கையும் போர்நிறுத்தம் ஏற்படுவதற்கான ஏதுநிலைகள் தொடர்பான ஓரளவு நம்பிக்கையை வன்னி மக்களிடையே ஏற்படுத்தியிருந்தன. தமிழகத்தின் கட்சி அரசியலில் எந்தவொரு காலகட்டத்திலும் தமிழீழ விடுதலைப் புலிகள் தலையிடாத பொழுதும்கூட, ஈழத்தமிழர்களின் நலன்களில் ஒத்திசைவான சமிக்ஞைகளை ஏககாலத்தில் கருணாநிதியும், ஜெயலலிதாவும் வெளியிட்டமை, தமிழீழ விடுதலைப் புலிகளைப் பொறுத்த வரை ஒரு ஆரோக்கியமான விடயமாகவே பார்க்கப்பட்டது.

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் எவ்விதமான தொடர்புகளையும் தாம் பேணுவதில்லை என்ற தோற்றப்பாட்டை கருணாநிதியின் திராவிட முன்னேற்றக் கழகமும், ஜெயலலிதாவின் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் ஊடகங்களில் காண்பித்து வந்த பொழுதும், தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் காலம்காலமாக உறுதுணையாக நிற்கும் தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் ஊடாக, பின்கதவுத் தொடர்புகளை இவர்கள் பேணியே வந்திருந்தனர்.

இந்த வகையில் தமிழீழ விடுதலைப் புலிகளுடனான பின்கதவுத் தொடர்பாடல்களை 2006ஆம் ஆண்டிலிருந்து பேராசிரியர் சுப.வீரபாண்டியன் போன்ற தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் ஊடாகக் கருணாநிதி பேணி வந்திருந்தார். கருணாநிதியின் சந்தர்ப்பவாத அரசியல் தொடர்பாக ஏறத்தாள மூன்று தசாப்தகாலப் பட்டறிவைக் கொண்டவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள். 1980களில் எம்.ஜி.ஆர் அவர்களுடன் நெருங்கிய உறவைப் பேணிய ஒரேயொரு காரணத்திற்காக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு விரோதமான போக்கைக் கையாண்டவர் கருணாநிதி. எம்.ஜி.ஆர் அவர்களின் ஆட்சியில் தமிழகத்தில் கருணாநிதியுடனும் நல்லுறவைத் தமிழீழ விடுதலைப் புலிகள் பேணிய பொழுதும்கூட, விடுதலைப் புலிகளின் விடயத்தில் காழ்ப்புணர்ச்சியுடனேயே கருணாநிதி நடந்துகொண்டார். தனது புலிவிரோதப் போக்கின் உச்சகட்டமாக 1994ஆம் ஆண்டு மே மாதம் வைகோ அவர்களை திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து வெளியேற்றிய கருணாநிதி, வைகோவைப் பயன்படுத்தித் தன்னைப் படுகொலை செய்வதற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் முற்பட்டதாகவும் அப்பட்டமான பொய்யையும் அவிழ்த்து விட்டிருந்தார்.

இவ்வாறாக கருணாநிதியின் புலிவிரோதப் போக்கை தமிழீழ விடுதலைப் புலிகள் நன்கு அறிந்திருந்த பொழுதும்கூட, தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர் என்ற வகையில் அவருடன் நல்லுறவைப் பேணுவதற்கே தமிழீழ விடுதலைப் புலிகள் விரும்பியிருந்தார்கள். இந்த வகையில் போர்நிறுத்தத்தை வலியுறுத்தும் அறிக்கைகளை 2008ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் கருணாநிதி வெளியிடத் தொடங்கிய பொழுது, அவருக்கு தமது நேசக்கரத்தை நீட்டிய தமிழீழ விடுதலைப் புலிகள், ஈழத்தமிழர்களின் துயர்துடைப்பதில் அவரால் ஆற்றக்கூடிய பணிகளையிட்டு நம்பிக்கை வெளியிட்டிருந்தார்கள். இதன் ஓர் அங்கமாக ஒக்ரோபர் மாதம் 14ஆம் நாள் காலையில் கருணாநிதிக்கான அந்தரங்க மடல் ஒன்றை, நேரடியாக அவரது மின்னஞ்சல் முகவரிக்கும், சுப.வீரபாண்டியன் ஊடாகவும் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் அவர்கள் அனுப்பி வைத்திருந்தார். அந்த மின்மடல் பின்வருமாறு அமைந்திருந்தது:

“மாண்புமிகு டாக்டர் மு.கருணாநிதி
முதலமைச்சர்,
தமிழ்நாடு,
இந்தியா.

அன்புடன் அண்ணா,
ஈழத்தமிழ் மக்களின் இன்னல் கண்டு துயர் துடைக்க உங்களால் உங்கள் தலைமையில் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கும் அனைத்துக்கட்சி மாநாடு சிறப்புடன் நடைபெற என்வாழ்;த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கின்றேன். இம்மாநாடு தொடர் நடவடிக்கைகளின் ஊடாக ஈழத்தமிழ் மக்களின் சுபீட்சமான சுதந்திரமான வாழ்விற்கு வழிசமைக்கும் என எதிர்பார்க்கிறோம்.

நன்றி
புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்

பா. நடேசன்,
பொறுப்பாளர்,
அரசியற்துறை,
தமிழீழ விடுதலைப்புலிகள்,
தமிழீழம்.”

எனினும் இதற்கான பதில் எதனையும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு கருணாநிதி அனுப்பி வைக்கவில்லை. இருந்த பொழுதும், மறுநாள் 15ஆம் நாளன்று ஈழத்தமிழர்களுக்காக தனது நாடாளுமன்றப் பதவியைத் துறப்பதற்கு தயாராக இருப்பதாகக் கூறி தனது தந்தையிடம் கடிதம் ஒன்றை கனிமொழி கையளித்திருந்தார். இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் (ராஜ்ய சபா) உறுப்பினராக அங்கம் வகித்து வந்த கனிமொழியால் கையளிக்கப்பட்ட இந்தக் கடிதம் ஊடகங்களில் பரபரப்பாக வெளியிடப்பட்டதோடு, கனிமொழியின் தமிழினப் பற்றுத் தொடர்பாக ஈழத்தமிழர்களிடையே நம்பிக்கையையும் தோற்றுவித்திருந்தது.

ஒரு கவிஞராகவும், கருணாநிதியின் இலக்கிய வாரிசாகவும் ஈழத்தமிழர்களால் அறியப்பட்ட கனிமொழியின் பதவி விலகல் அறிவிப்பு கருணாநிதி மீதான ஈழத்தமிழர்களின் நம்பிக்கையை மேலும் அதிகரித்திருந்தது. இந்நிலையில் ஒக்ரோபர் மாதம் 16ஆம் நாளன்று, நேரடியாகவும், சுப.வீரபாண்டியன் ஊடாகவும் கனிமொழிக்கு தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளரால் அந்தரங்க வாழ்த்துச் செய்தி ஒன்று அனுப்பி வைக்கப்பட்டது. அந்தச் செய்தி பின்வருமாறு அமைந்திருந்தது:

“அன்பின் சகோதரி கனிமொழிக்கு,
ஈழத்தமிழ் மக்களின் இன்னல் கண்டு இந்த மக்களின் துயர் துடைக்கும் நோக்குடன் உங்கள் இராஐசபா அங்கத்தினர் பதவியைத்துறந்து முன்மாதிரியாக நடந்துகொண்டமை முழுத்தமிழ் மக்களையும் மகிழ்ச்சியிலும் உற்சாகத்திலும் ஆழ்த்தி உள்ளது. இதற்காக நான் எமது இயக்கத்தின் நன்றியினையும் மக்களின் நன்றியினையும் தங்களுக்குத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

நன்றி
புலிகளின் தாகம் தமிழீழத்தாயகம்

பா.நடேசன்,
பொறுப்பாளர்,
அரசியல்துறை,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.”

எனினும் இதற்குப் பின்னரான இரண்டு வார காலப்பகுதியில் கருணாநிதி பிரகடனம் செய்த கூண்டோடு பதவி விலகும் அறிவிப்பு செயல்வடிவம் பெறவேயில்லை. இதேபோன்று தனது தந்தையிடம் கையளித்த பதவி விலகல் கடிதத்தையும் கனிமொழி மீளப்பெற்று தனது ஆசனத்தைப் பாதுகாத்துக் கொண்டார். கருணாநிதியினதும், அவரது புதல்வி கனிமொழியினதும் ‘தமிழ்ப்பற்று’ மீது நம்பிக்கை வைத்திருந்த ஈழத்தமிழர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியிருந்தது. கருணாநிதியின் கூண்டோடு பதவி விலகும் அறிவிப்பு ஒரு நாடகம் என்பது வெட்டவெளிச்சமாகிப் போக, தமது பதவியைப் பாதுகாப்பதற்காக இந்திய மத்திய அரசின் கூட்டுச்சதிக்கு திரைமறைவில் கருணாநிதி உடந்தையாக நிற்பது பட்டவர்த்தனமாகத் தொடங்கியிருந்தது.

இருந்த பொழுதும் தமது நம்பிக்கையை ஈழத்தமிழினம் தளரவிடவில்லை. இதன் வெளிப்பாடாக போர்நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி, 31.10.2008 அன்று தமிழீழ தேசிய போரெழுச்சிக் குழுவின் செயலாளர் சே.முகுந்தன் அவர்களால் சுப.வீரபாண்டியன் ஊடாக கருணாநிதிக்கான மனு ஒன்று அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கு செவிசாய்த்து எவ்வித நடவடிக்கைகளையும் கருணாநிதி எடுக்காத நிலையில் 02.12.2008 அன்று கருணாநிதிக்கான மற்றுமொரு மனுவொன்று வன்னியிலிருந்து தமிழ் மாணவர் ஒன்றியத்தின் தலைவர் க.ஆதித்தன் அவர்களால் அனுப்பி வைக்கப்பட்டது. இதன் படியொன்று மீண்டும் 07.12.2008 அன்று தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் அவர்களால் கருணாநிதியின் நேரடி மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இருந்த பொழுதும் கருணாநிதியின் மனம் நெகிழவேயில்லை. 02.01.2009 அன்று கிளிநொச்சியை சிங்களப் படைகள் ஆக்கிரமித்த பொழுது தமிழகத்தில் நடைபெற்ற இலக்கிய விழா ஒன்றில் உரையாற்றிய கருணாநிதியின் புதல்வி கனிமொழி, “கிளிநொச்சி வீழ்ச்சியடைந்த செய்தி கிடைத்த பின்னர் இனியும் தமிழினம் பொறுமை காக்க முடியாது” என்ற தொனியில் உரையாற்றியிருந்தார். அவரது உரை இவ்வாறு அமைந்திருந்ததே தவிர அவரது செயல் சிங்கள-இந்திய கூட்டுச்சதியை ஆமோதிக்கும் வகையிலேயே அமைந்திருந்தது. எல்லாவற்றுக்கும் மேலாக புதுடில்லியில் காங்கிரஸ் ஆட்சிபீடத்தின் எண்ணத்தைப் பிரதிபலிக்கும் வகையிலேயே கருணாநிதியினதும், அவரது புதல்வி கனிமொழியினதும் செய்கைகள் அமைந்திருந்தன.

2009ஆம் ஆண்டு சனவரி மாதம் வீரத்தமிழ்மகன் முத்துக்குமாரின் தீக்குளிப்பை தொடர்ந்து தமிழகத்தில் ஏற்பட்ட எழுச்சியை நசுக்குவதிலேயே கருணாநிதி குறியாக இருந்தார்.

இதேநேரத்தில் கிளிநொச்சி வீழ்ச்சியடைந்ததை தொடர்ந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் படை வலிமை தொடர்பான ஐயம் வல்லாதிக்க சக்திகளிடையே வலுவடைந்திருந்தது. யுத்தத்தின் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகளை தோற்கடிக்க முடியாது என்று அதுவரை கருத்து வெளியிட்டு வந்த வல்லாதிக்க சக்திகள், தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதக் களைவையும், சரணாகதியையும் வலியுறுத்திப் பகிரங்கமாக அறிக்கை வெளியிடத் தொடங்கியிருந்தன.

கே.பி-உருத்திரகுமாரன் தரப்பினரின் ஆமோதிப்புடன் 2009 பெப்ரவரி மாதத்தின் முதல் நாட்களில் வல்லாதிக்க சக்திகளால் முன்மொழியப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதக் களைவு-சரணாகதி திட்டத்தை அதிகாரபூர்வமயப்படுத்தும் அறிக்கை ஒன்று 03.02.2009 அன்று இணைத்தலைமை நாடுகளால் வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து இதே நிலைப்பாட்டுடன் 05.02.2009 அன்று இந்திய உள்துறை அமைச்சர் பா.சிதம்பரம், வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முக்கர்ஜீ ஆகியோரால் ஊடக அறிவிப்புக்கள் வெளியிடப்பட்டன. தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதக் களைவையும், சரணாகதியையும் பா.சிதம்பரம் வலியுறுத்த, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தம் முடுக்கி விடப்படுவதை பிரணாப் முக்கர்ஜீ வலியுறுத்தியிருந்தார்.

இதற்கு எவ்விதமான ஆட்சேபனையையும் வெளியிடாது ஊடகங்களில் அமைதி காத்த கருணாநிதி, தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதக் களைவையும், சரணாகதியையும் வலியுறுத்தி தனது பின்கதவுத் தொடர்புகள் ஊடாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு செய்திகளை அனுப்பியிருந்தார். இம்முறை கருணாநிதியினதும், பா.சிதம்பரத்தினதும் பின்கதவுத் தொடர்பாளர் வகிபாகத்தை வெரித்தாஸ் வானொலியின் முன்னாள் பணிப்பாளர் ஜெகத் கஸ்பார் அடிகளார் வகித்திருந்தார். இது தொடர்பாக 12.02.2009 அன்று தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளருக்கான செய்தி ஒன்று ஜெகத் கஸ்பார் அடிகளாரால் அனுப்பி வைக்கப்பட்டது. இந்திய நேரம் 4:45 மணிக்கு அனுப்பி வைக்கப்பட்ட இந்திய அரசின் அதிகாரபூர்வ செய்தி கிடைக்கப் பெற்றதை உறுதிப்படுத்துமாறு கோரி அன்று மாலை பா.நடேசன் அவர்களுக்கு ஆங்கிலத்தில் ஜெகத் கஸ்பார் அனுப்பிய மின்மடல் பின்வருமாறு அமைந்திருந்தது:

“அன்புள்ள திரு.நடேசன்,
தொடர்பு விபரங்களை உள்ளடக்கிய மடல் எமது நேரம் பி.ப 4:45 இற்கு அவர்களால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தயவு செய்து உறுதிப்படுத்தவும்.

ஜெகத்”

எனினும் இதன் பின்னரான நாட்களில் இந்திய அரசின் ஆயுதக் களைவு-சரணடைவு திட்டத்திற்கான தமது ஆட்சேபனையை மிகவும் பண்பாகவும், இராஜதந்திரிமான முறையிலும் தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்திருந்தார்கள். அதேநேரத்தில் வன்னி கிழக்கில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளின் பரப்பளவு சுருங்கத் தொடங்க, சிங்களப் படைகளின் அரக்கத்தனமான தாக்குதல்களில் படுகொலை செய்யப்படும் மக்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கத் தொடங்கியிருந்தது.

இந்நிலையில் ஈழத்தமிழர்களுக்கு கௌரவமான போர்நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் முயற்சிகளை தமிழீழ விடுதலைப் புலிகள் கைவிடவில்லை. இதனைத் தொடர்ந்து தன்னுடன் நேரடித் தொடர்புகளை தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பேணுவதற்கு ஏதுவாக, 02.03.2009 அன்று மின்னஞ்சல் ஒன்றை கனிமொழி அனுப்பியிருந்தார். ஏக காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதக் களைவையும், சரணாகதியையும் வலியுறுத்தும் அழுத்தங்கள் தனது பின்கதவுத் தொடர்புகள் ஊடாக கருணாநிதியால் பிரயோகிக்கப்பட்டன.

இந்நிலையில் ஆனந்தபுரம் சமர் தொடங்குவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்னர் 29.03.2009 அன்று காலையும், மதியமும் கனிமொழிக்கும், கருணாநிதிக்கும் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளரால் அவசர செய்தி ஒன்று அனுப்பி வைக்கப்பட்டது. இதனை தம்மால் வாசிக்க முடியவில்லை என்று கனிமொழி பதிலளித்ததை அடுத்து மீண்டும் அதே செய்தியை மறுநாள் 30.03.2009 அன்று காலை கனிமொழிக்கு தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் அனுப்பி வைத்தார். அதில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டிருந்தது:

“அன்புடன் சகோதரி கனிமொழிக்கு,
தற்போது இங்கு தினமும் நூற்றுக்கணக்கானக்கான மக்கள் கொல்லப்பட்டும் காயமடைந்தும் கொண்டிருக்கின்றனர். நாம் நீண்டகாலமாகவே யுத்த நிறுத்தத்தை வலியுறுத்தி வருகின்றோம். எமது அவலங்களை போக்குவதற்காகவே நாம் இதனை தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றோம். ஆனால் சிங்கள அரசு யுத்தத்தை தொடர்ச்சியாக நடாத்திவருகின்றது. சிங்கள அரசின் அதிமுக்கிய மூத்த அமைச்சர்கள் இந்திய அரசின் உதவியினாலேயே தாம் இந்த யுத்தத்தை வென்றுகொண்டிருப்பதாக பகிரங்கமாக அறிவித்த வண்ணம் உள்ளனர். இது எமக்கு மிகுந்த வேதனையை தருகின்றது. இந்த நேரத்திலாவது நீங்களும் அப்பாவும் சேர்ந்து இந்திய அரசை வலியுறுத்தி யுத்த நிறுத்தத்தை கொண்டுவந்தால் எமது மக்களை காப்பாற்றலாம். நிபந்தனையற்ற யுத்தநிறுத்தமே எதிர்காலத்தில் அரசியல் பேச்சுவார்த்தைக்கும் நிரந்தர சமாதானத்திற்கும் வழிவகுக்கும். இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பணியை செய்வீர்கள் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கின்றேன்.

நன்றி,

என்றும் உங்கள் அன்பான,
சகோதரன் பா.நடேசன்”

மிகவும் நெருக்கடியான காலகட்டத்தில் பா.நடேசன் அவர்களால் அனுப்பி வைக்கப்பட்ட இந்த செய்திக்கு கருணாநிதியோ, அன்றி கனிமொழியோ உடனடியாக எந்தவொரு பதிலையும் அனுப்பவில்லை. ஆனந்தபுரம் முற்றுகையில் தமிழீழ தேசியத் தலைவர் சிக்கியிருப்பதாக இந்திய அரசுக்கு சிங்கள அரசு செய்தியொன்றை அனுப்பியிருந்த நிலையில், பா.நடேசனின் கடிதத்திற்கு பதிலளிக்காது கனிமொழியும், கருணாநிதியும் அமைதி காத்தனர்.

இந்நிலையில் வீரத்தளபதிகளான பிரிகேடியர் தீபன், பிரிகேடியர் மணிவண்ணன், பிரிகேடியர் விதுசா, பிரிகேடியர் துர்க்கா போன்றோரும், நூற்றுக்கணக்கான போராளிகளும் தமது உயிரை வேலியாக்கி நிகழ்த்திய எதிர்த்தாக்குதல்களில் சிங்களப் படைகளின் ஆனந்தபுரம் பெட்டி முற்றுகை உடைக்கப்பட்டு, பாதுகாப்பான இடத்திற்கு தமிழீழ தேசியத் தலைவர் நகர்த்தப்பட்டார். தமிழீழ தேசியத் தலைவரை உயிருடன் சிறைப்பிடிப்பதற்கு சிங்கள-இந்திய அரசுகள் எடுத்த முயற்சி மாவீரர்களின் வீரம்செறிந்த தாக்குதல்களாலும், தற்கொடையாலும் சிதறடிக்கப்பட்டது.

05.04.2009 அன்று ஆனந்தபுரம் பகுதியை சிங்களப் படைகள் ஆக்கிரமித்ததை தொடர்ந்து மறுநாள் 06.04.2009 நாளன்று புலம்பெயர் தேசங்கள் தோறும் கிளர்ந்தெழுந்த ஈழத்தமிழர்கள் போர்நிறுத்தத்தை வலியுறுத்தி வீதிகளில் இறங்கிப் போராடத் தொடங்கினார்கள். இந்நிலையில், சிங்கள-இந்திய அரசுகளின் கனவு பலிக்காத சூழலில், ஒரு வார இடைவெளிக்குப் பின்னர் 07.04.2009 அன்று முற்பகல் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளருக்கான பதிலை கருணாநிதியின் புதல்வி கனிமொழி அனுப்பியிருந்தார். ஆங்கிலத்தில் அனுப்பி வைக்கப்பட்ட அந்தக் கடிதத்தின் தமிழ்வடிவம் பின்வருமாறு அமைந்திருந்தது:

“நடேசன் அண்ணன்,
நிலைமை மிகவும் மோசமாக இருப்பதை நான் அறிவேன். நீங்கள் அனுப்பிய மடல் தொடர்பாக சம்பந்தப்பட்ட எல்லோருடனும் பேசிவிட்டேன். குடியரசுத் தலைவரின் உரையில் தெரிவிக்கப்பட்டமை போன்று ஆயுதங்களை கீழே போடுவதற்கான ஒப்புதலை நீங்கள் வெளியிட வேண்டும் என்று அரசாங்கம் எதிர்பார்க்கின்றது. தயவு செய்து அதைச் செய்யுங்கள். அவ்வாறு நீங்கள் செய்தால் உங்களுக்கு இந்திய அரசாங்கம் உதவு செய்யக்கூடும் போல் தோன்றுகின்றது. நான் சொல்வதை செய்ய முடியாதுவிட்டால் தயவு செய்து டில்லியுடனேயே கதையுங்கள். மக்களைப் பற்றி உள்துறை அமைச்சரும் கரிசனையாக உள்ளார். கிடைக்கும் செய்திகள் கவலையளிக்கும் வகையிலும், தீர்க்கமானவையாகவும் உள்ளன. தயவு செய்து அவர்களுடன் தொடர்பு கொள்ளுங்கள். தயவு செய்து தவறான வழிகாட்டல்களை பின்பற்றாதீர்கள்.

கனிமொழி.”

எனினும் கனிமொழியின் இந்த மடலுக்கான தமது ஆட்சேபனை கருணாநிதியின் பின்கதவுத் தொடர்புகள் ஊடாக தமிழீழ விடுதலைப் புலிகளால் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் அன்று பிற்பகல் மீண்டுமொரு தடவை தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதக் களைவை வலியுறுத்தி கனிமொழியால் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளருக்கு பிறிதொரு மடல் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டது. ஆங்கிலத்தில் எழுதப்பட்ட அந்த மடலின் தமிழ்வடிவம் பின்வருமாறு அமைந்திருந்தது.

“நடேசன் அண்ணன்,
அங்குள்ள நிலமைகள் தொடர்பாக நாங்கள் எல்லோரும் கவலையடைந்துள்ளோம். சிறீலங்கா அரசாங்கம் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்கு முன்வரும் பட்சத்தில் ஆயுதப் போராட்டத்தை கைவிடுவதற்கு தயாராக இருப்பதாக அறிவிப்பதைபற்றி சிந்தியுங்கள். உள்துறை அமைச்சரும், முதலமைச்சரும் அங்குள்ள மக்கள் தொடர்பாக மிகவும் அக்கறையாக உள்ளார்கள்.
நான் சொல்வதை செய்ய முடியாவிட்டால், தயவு செய்து டில்லியில் உள்ள ஆட்களுடன் கதைக்கவும்.

கனிமொழி.”

ஒருபுறம் ஆயுதப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருதில் கருணாநிதி குறியாக இருந்ததை அவரது புதல்வியின் மடல் வெளிப்படுத்தியதோடு, முத்தமிழ் அறிஞரின் வாரிசு என்று பெயர்போன அவர் ஆங்கிலத்தில் எழுதிய கடிதங்கள் இன்னொரு செய்தியையும் உணர்த்தியிருந்தது. அதாவது தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளருக்கு கனிமொழி அனுப்பிய இரண்டு கடிதங்களின் படிகள், இந்திய உள்துறை அமைச்சர் பா.சிதம்பரம், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டமையே அந்த செய்தியாகும்.

இவ்வாறாக வன்னிப் போரின் உச்சகட்டத்தில் கருணாநிதியின் மறுமுகம் தமிழீழ விடுதலைப் புலிகளிடையே எவ்விதமான ஐயம்திரிபு இன்றி பட்டவர்த்தனமாகியிருந்தது. தனது புலிவிரோதப் போக்கின் உச்சகட்டமாக தமிழீழ விடுதலைப் புலிகளை சரணடைய வைத்து அழிப்பதில் குறியாக இருந்த கருணாநிதி, அதற்காக ஒன்றரை இலட்சம் தமிழீழ மக்களின் உயிர்களை சிங்களம் காவுகொள்வதையிட்டு எவ்வித கவலையும் கொள்ளவில்லை.

26.04.2009 அன்று ஒருதலைப்பட்சமான முறையில் போர்நிறுத்தத்தை தமிழீழ விடுதலைப் புலிகள் பிரகடனம் செய்த பொழுதும்கூட, இதுவிடயத்தில் சிங்கள அரசைப் போர்நிறுத்தம் செய்யுமாறு நிர்ப்பந்திக்கும் நடவடிக்கைகள் எவற்றிலும் இந்திய அரசு ஈடுபடவேயில்லை. இதற்கான அழுத்தங்கள் எதனையும் கருணாநிதியும் பிரயோகிக்கவில்லை.

அதேநேரத்தில் இந்திய நாடாளுமன்றத் தேர்தலுக்கான நாள் நெருங்கத் தொடங்க, தமிழகத்தில் மீண்டும் தளிர்விட்ட மக்களின் கொந்தளிப்பை தணிக்கும் நோக்கத்துடன் மறுநாள் 27.04.2009 அன்று சென்னையில் கருணாநிதியால் உண்ணாநோன்பு நாடகம் அரங்கேற்றப்பட்டது. காலையில் உண்ணாநோன்பை தொடங்கிய கருணாநிதி, தனது முயற்சியால் உடனடியாக போர்நிறுத்தம் ஏற்பட்டிருப்பதாகக் கூறி அன்று மதியத்திற்குள் பழரசம் அருந்தித் தனது உண்ணாநோன்பை முடித்துக் கொண்டார். ஆனால் அதே நாளில் வன்னியில் நூற்றுக்கணக்கான தமிழ் உயிர்களை சிங்களம் நரபலி வேட்டையாடியது. கருணாநிதியை நம்பியிருந்த வன்னி மக்களுக்கு சாவையே பரிசாக கருணாநிதி வழங்கினார். கருணாநிதியின் கலைத்திறனை வெளிப்படுத்துவதற்கு ஈழத்தமிழினமே பலிக்கடா ஆக்கப்பட்டது.

இது பற்றி தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் அவர்களுக்கு எழுதப்பட்ட மின்மடலில் தமிழகத்தில் இருந்து வெளிவரும் தினமணி பத்திரிகையை சேர்ந்த வி.தேவதாசன் என்ற ஊடகவியலாளர் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்:

“தோழர் நடேசன் அவர்களுக்கு, வணக்கம்
சென்னையிலிருந்து தினமணி செய்தியாளர் தேவதாசன் எழுதுவது. போரை நிறுத்த இலங்கை அரசின் பாதுகாப்புக் கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கின்றது என கூறி, சென்னையில் தனது உண்ணாவிரதத்தை 6 மணி நேரத்திற்குள் முதலமைச்சர் கருணாநிதி முடித்துக் கொண்டுள்ளார். கருணாநிதி கூறுவது உண்மையா? தயவுசெய்து உண்மை நிலையை தமிழ்நாட்டு மக்களுக்கு தெரிவியுங்கள்.

அன்புடன்
வி.தேவதாசன்.”

தனது வாக்கு வங்கியைப் பாதுகாப்பதற்காக கருணாநிதி ஆடிய உண்ணாநோன்பு நாடகத்தின் உண்மைத்தன்மையை தமிழக மக்களில் ஒருதரப்பினர் நன்கு புரிந்து கொண்டிருந்ததையே தினமணி செய்தியாளரின் கடிதம் வெளிப்படுத்தியிருந்தது.

“தமிழினத்தின் காவலன், உலகத்தமிழர்களின் ஒப்பற்ற தலைவன், முத்தமிழ் வித்தகர்!” என்றெல்லாம் முகமகன் கூறப்படும் தந்திரி கருணாநிதியின் மறுமுகத்தை உலகத் தமிழனம் புரிந்து கொள்வதற்கு சிறிதளவாவது இக்கட்டுரை உதவிபுரிந்திருக்கும் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு.

கருணாநிதியைப் போன்று தமிழீழ தேசத்திற்கு துரோகமிழைத்த தந்திரிகளின் மறுமுகம் இனிவரும் தொடர் கட்டுரைகளில் அவர்கள் எழுதிய கடிதங்களுடன் ஆதாரபூர்வமாக வெளிக்கொணரப்படும்!

நன்றி: ஈழமுரசு (08.04.2011

நன்றி பதிவு இணைய தளம்.

 

Comments  

 
0 #23 s.kamatchi prabu 2011-07-26 10:57
ples dont scoled only to political members.. all political same ... so whos choose to government ?? public .. so public than main reason... suyanalavathika l... before 7 years(yarum thappa eduthu kolla vendam) kumbakonam school fire anathulay, children death anathilay evolo periya arppatam pannom, strike pannom...ana tamil elathi lay 10000 children kolranga.. ippa mattum yaravathu strike panigala?? yatho konjam payru vanthanga.. yen aaru kodi(6,00,00,00 0) payru irukkiromay ? atlast oru kodi payru stirk panna mudiyatha.. mudium namma ninaithal.. nammaku enga time irukuthu..(nam yallorum than, iniyavathu thirunthovom ples support to tamil ezlam) ok atleast student nenalavathu support pannunga(pala.nedumaran,vaiko ,seeman) intha thalaivarkal kootathukukavat hu vanga.. nenga katchi lay yallam sera vendam.. support pannunga.. anga ezlathilay namma anna, thambi, akka, thangachi yallorum kasta paduranga.. so inyathu matravarkalay kuray cholarha vititu, namma poradalam... puratchi yappothum vellum athu nalay malarum tamil ezlam cholum.... nandri....
Quote
 
 
0 #22 ஈரோட்டுப்பேராற்றல் 2011-04-19 22:02
திமுக மற்றும் காங்கிரசு தமிழ்நாட்டில் மே 13க்குப்பின் இருக்காது.....நம்பிக்கையில்லா தவர்கள் மே 13 வரை காத்திருக்கவும் ......அண்ணன் பெயர் சொல்லு அணிவகுத்து நில்லு.....
Quote
 
 
+3 #21 ponmurugan 2011-04-17 16:49
இந்த முதல்வர் தான் தமிழினத் தலைவர், முத்தமிழ் அறிஞர், தானைத் தலைவர், உலகத் தமிழர்களின் பாதுகாவலன் என்று தன்னைத் தானே தூற்றிக் கொள்ளும் இவர் தான் இத்தனை இலட்சம் உயிர்கள் போவதற்கு முழு முதற் காரணம் என்பதை மறுக்க முடியாது. கருணாநிதிக்கு ஒரு பட்டம் கொடுக்கலாம். தமிழினத்தை அழித்த தன்மானத் தலைவன். எப்படி இருக்கு இந்த பட்டம். கருணாநிதி வரலாற்றில் இது அழிக்க முடியாத கரும்புள்ளி.
Quote
 
 
+2 #20 top guy 2011-04-16 02:04
http://thamizhaathamizhaa.weebly.com/ -
இந்த பக்கத்தினை முழுவதுமாக பார்க்க நெஞ்சில் ஈரம் உள்ள யாராலும் முடியாது... இதை பார்த்தாலே மனது வேதனையில் துடிக்கிறதே அத்தனை லட்ச்ச கணக்கான நம் உறவுகள் எப்படி துடித்திருக்கும ்... சோனியா உண்மையிலேயே ஒரு கொடிய அரக்கி !! இத்தனை உயிர்களை கொன்ற பிறகும் அவருக்கு பைத்தியம் தெளியவில்லை போலும்!! நயவஞ்சகன் கொலைகார நாய் ராஜபக்சேவை ஐநா சபை ஆயிரம் முறை தூக்குதண்டனை விதித்து கொள்ள வேண்டும்!! அவனுடைய சகாக்களை நூறு முறை சுட்டுக்கொல்ல வேண்டும்
Quote
 
 
-3 #19 thinker 2011-04-14 22:20
Leave karunanidhi alone.. why did the commander karuna left from LTTE? This is the single most incident which weakened LTTE..

I was expect that tamils from east will some how come and rescue LTTE.. but none came till the end.. which means, the tamils in the east were disgusted with LTTE leadership.. Karuna joined Srilankan side..

Next, why did prabhakaran killed all other tamil organisations like TELO etc in the 80's? Arent they NOT tamils?
Quote
 
 
+4 #18 Jenifer 2011-04-14 16:01
இலங்கையில் நடந்த சோகங்களுக்கு முழு பொறுப்பும் தமிழக
மக்களே. இந்திய அமைதிபடையே அங்குள்ள தமிழர்களை சீர் குலைத்த போது
அதை அனுப்பிய ராஜீவ் காந்தியை பிரபாகரன் போட்டு தள்ளிய போது தமிழக
மக்கள் அதை ஆதரிக்க வில்லை. அப்போது கருணாநிதி பெரும் தோல்வி அடைந்து
ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தார்.
சமீபத்தில் போர் நடந்த போதும் மக்கள் சோனியாவை ஆதரித்து அவரயே வெற்றி
பெற செய்தார்கள்.
ஆகவே கருணாநிதியை குறை சொல்வதற்கு இங்கு ஒன்றும் இல்லை.
முழு பொறுப்பும் தமிழக மக்களே.
Quote
 
 
+1 #17 saithaan 2011-04-14 09:47
ok... karuna kuduppatha pathi ivalavu therinsalum.... tamilan ennavooo....unarchi yatra zadamathan ... irukkan... athu vari intha nayee kalukku yogam than????????
Quote
 
 
+3 #16 VIJAY_USA 2011-04-13 19:00
I stopped reading this! I no longer can digest this pain any more. Every time I read something like this I get teary eyes as I still hope that Captain Prabakaran will come back one day. Waiting for better days in our lives.....
Quote
 
 
-1 #15 top guy 2011-04-13 02:19
Our vote worth only 10 paise?? Read this: http://www.dinamalar.com/News_Detail.asp?Id=223698
Quote
 
 
-12 #14 chinnamalai 2011-04-12 22:05
Savukku.... iillai..... dubukku.....
Quote
 
 
+16 #13 குசும்பன். 2011-04-12 19:17
தேசியத்தலைவர் பிரபாகரன் எப்பொமுதும் யதார்த்தமான நடைமுறைச்சாத்தி யமான முயற்சிகளுக்கு முன்னுரிமை கொடுப்பவர். ஈகோ எனப்படும் தாழ்வு மனப்பாண்மைக்கு அவர் எப்பொழுதும் சிக்கியதாக தெரியவில்லலை. நடைமுறைக்கு முரணாக யதார்த்தத்தை தாண்டி எதையாவது யாரும் திணிக்க முயன்றால் ஏற்றுக்கொள்ளமாட ்டார் என்பது உண்மை. உ/ம் ரஷ்ய போராட்ட உத்தி, மற்றும் நெப்போலியனின் போர் தந்திரம் பற்றி பேசினால் மௌனாமாக கேட்டுக்கொண்டிர ுந்துவிட்டு அது அந்த நாடுகளின் பூகோள தற்ப வெப்ப சூழ்நிலைகளுடன் கூடிய சண்டை. எங்கட சண்டையின் வடிவம் அவையின் சண்டையை ஒத்து இருக்காது என்பார். அதிகமான சண்டைகளின் முடிவும் அவர் முன்பு எதிர்வு கூறியதும் சரியாக இருக்கும்.

தேசியத்தலைவர் தமிழ்நாட்டில் இருந்தபோது முதலமைச்சராக இருந்தவர் எம்ஜீஆர் அவர்கள். அப்போ பிரதமராக இருந்தவர் இந்திரா அம்மையார். இருவரிடமும் அப்போது நல்லுறவு இருந்தது.. இயல்பாக எம்ஜீஆர் அவர்கள் இரக்ககுணமுடையவர ் கொடைவள்ளல் என்று அறியப்பட்டதால் தலைவர் பிரபாகரன் அவர்கள் எம்ஜீஆர் அவர்களை அணுகி உதவி பெற்றது உண்மை . எம்ஜீஆர் அவர்களிடம் தேவைக்கு அதிகபணத்தை பெற்றுக்கொண்டு அதன் பின் கருணாநிதி அரசியல் நோக்கோடு தருவதாக கூறிய பணத்தை வாங்குவது எம்ஜீஆர் அவர்களை அவமதிப்பதாகவே இருக்கும் என்பதை உணர்ந்து நாசுக்காக விலகிக்கொண்டதுண ்டு , அதை இயல்பாக சுயநலவாதியான கருணா பெருத்த ஈகோவாக தூக்கிப்பிடித்த ு விடுதலைப்புலிகள ை பழிவாங்கி வருகிறார். காலமும் அவருக்கு நீண்ட ஆயுளை கொடுத்து வளர்த்து வருகிறது இயல்பாக சுயநலவாதியான கருணாநிதியின் வயதானகாலத்தில் சுயநலன் சைக்கோதனமான நோயாக மாறிவிட்டதாகத் தெரிகிறது. காலம் நிச்சியம் பதில் கூறும்,
Quote
 
 
+4 #12 pandiyan 2011-04-12 15:51
100% true. thats why these Non_tamil group always Says DHIRAVIDAN. though malayali, thelungu, kannada people are never ever say DHIRAVIDAN. Periyar, Annadhurai, Karuanidhi were from other states.

Quoting இனியவன்:
சாதிகள் இல்லையடி பாப்பா என்று புரட்சி கவிஞர் பாரதியார் பாடியதற்கும், சாதிகள் வேண்டாம் என்று """"""கன்னட நாயக்கப் பெரியார்""""" சொன்னதற்கும் நிறைய வேறு பாடு உண்டு. முன்னதில் உண்மையான விடுதலை உணர்வும், பின்னதில் """""கன்னட நாயக்கப் பெரியாரின் """""" தன்னைப் போன்ற வந்தேறிகளின் """"""சாதி உருமறைப்பும்""""" தெற்றெனத் தெளிவாக விளங்கும். இதற்குப் பின்னான தமிழக அரசியல் வரலாற்றில் இந்தப் பேருண்மை தெளிவாக இருக்கிறது.
இதை, தமிழ் நாட்டின் அரசியல் சூழ்நிலையை வந்தேறி வடுகத் திராவிட அரசியலைப் புரிந்து கொள்ளாமை தான் புலிகள் இவர்களை நம்பியதற்கு அடிப்படை. அதுவே அவர்களின் வீழ்ச்சியும் கூட. வேறு தமிழ்த் தலைமை ஒன்றைப் பற்றி தமிழக மக்களாகிய நாமே கவலைப் பட வில்லை. ஈழத்தில் என்ன புரிதல் இருக்கக் கூடும்???? நாம் என்று உணர்கிறோமோ, அன்று தான் நமக்கு/உலகத் தமிழர்களுக்கு விடுதலை.இனியவன்
Quote
 
 
+5 #11 இனியவன் 2011-04-12 15:41
சாதிகள் இல்லையடி பாப்பா என்று புரட்சி கவிஞர் பாரதியார் பாடியதற்கும், சாதிகள் வேண்டாம் என்று """"""கன்னட நாயக்கப் பெரியார்""""" சொன்னதற்கும் நிறைய வேறு பாடு உண்டு. முன்னதில் உண்மையான விடுதலை உணர்வும், பின்னதில் """""கன்னட நாயக்கப் பெரியாரின் """""" தன்னைப் போன்ற வந்தேறிகளின் """"""சாதி உருமறைப்பும்""""" தெற்றெனத் தெளிவாக விளங்கும். இதற்குப் பின்னான தமிழக அரசியல் வரலாற்றில் இந்தப் பேருண்மை தெளிவாக இருக்கிறது.
இதை, தமிழ் நாட்டின் அரசியல் சூழ்நிலையை வந்தேறி வடுகத் திராவிட அரசியலைப் புரிந்து கொள்ளாமை தான் புலிகள் இவர்களை நம்பியதற்கு அடிப்படை. அதுவே அவர்களின் வீழ்ச்சியும் கூட. வேறு தமிழ்த் தலைமை ஒன்றைப் பற்றி தமிழக மக்களாகிய நாமே கவலைப் பட வில்லை. ஈழத்தில் என்ன புரிதல் இருக்கக் கூடும்???? நாம் என்று உணர்கிறோமோ, அன்று தான் நமக்கு/உலகத் தமிழர்களுக்கு விடுதலை.இனியவன்
Quote
 
 
+9 #10 இனியவன் 2011-04-12 15:40
இத்தனையும் நடந்து கொண்டிருக்கும் போதே, தமிழுணர்வாளர்கள ் பலரும் பேசிக் கொண்டிருந்த ஒரு நிகழ்வு என்னவென்றால், """"""""தெலுங்கரான தக்ஷினாமூர்த்தி என்ற கருணாநிதி""""""""" எதற்காக ஈழத்தில் தமிழ் மக்கள் கொள்ளப் படுகிறார்கள் என்று கவலைப் படப் போகிறார் என்பதைப் பற்றித்தான். தமிழ் நாட்டில் இருந்த கோடிக் கணக்கான மக்களுக்கு அங்கே நடந்து கொண்டிருந்த போரின் முழு விவரங்களும் தெரிவதற்கான சூழ்நிலை இல்லாமல் இருந்தது. இப்படியே உணர்வாளர்கள் அத்தனை பேரும் சிந்தித்துக் கொண்டிருக்க ஒரு இளைஞன் மட்டும் அடுத்து தான்/தமிநாட்டில் தமிழர்கள் என்ன செய்ய வேண்டும், என்ன செய்தால் போர் நிறுத்தத்தைக் கொண்டு வர முடியும் என்று சிந்தித்து முடிவெடுத்து, செயல் பட்டான். அவன் தான் "தீரன், மாவீரன், தமிழினத் தளபதி, சிந்தனைச் சிற்பி, தமிழ்நாட்டின் மானம் காத்த பேராசான் நமது முத்துக்குமார்". தமிழினம் இறுதிக் கட்டப் போரில் பெருமளவில் மின்னஞ்சல் மூலமாகவும், களத்திலும், புலத்திலும், அகத்திலும், புறத்திலும் தமிழ் நாட்டில் செயல் பட வைத்ததன் அடிப்படை. அதைக் கண்டு பொங்கியவர்கள் ஏராளம். ஏராளம். முத்துக்குமாரின ் தீர்க்கமான அறிவையும், உள்ள உறுதியையும், மக்களின் பின் பற்றுதலையும் கண்டு தெலுங்குக் கருணாநிதி பயந்தார். முத்துக் குமாரின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட பொது மக்களை, தமிழினத்தின் அடுத்த சிந்தனைச் சிற்பிகளை, தலைமையே இல்லாத மக்கள் எழுச்சியை (முத்துக்குமாரி ் கனவும் அது தான். நமக்குள் இருந்து தான் இனி தலைமைகள் வர வேண்டும். இது வரை மனு மட்டுமே கொடுக்கச் சொல்லிக் கொண்டிருக்கும் தலைமைகளை அடித்து உதைக்கச் சொல்லியிருந்தான ் தன்னுடைய இறுதி மடலில்) நசுக்க அவருக்குப் பயன் பட்டது அது வரை தமிழ்த் தேசியம் பேசி ஏமாற்றிக் கொண்டிருந்த தெருமா. இவர் தமிழினத்தின் ஒரு நீங்காத கறை. எத்தனை குளித்தாலும் போகாத தீட்டு. இன்னும் நிறைய எழுதுங்கள். இது வரை தமிழினக் காவலன்/கோவலன்/மண்ணாங்கட்டி என்றெல்லாம் தன்னைத் தானே அழைத்துக் கொள்ளும் அல்லது அல்லக்கைகளால் அழைக்கப் பட விரும்பும் நபர்கள் பார்த்துத் தெரிந்து கொள்ளட்டும், மக்கள் ஏமாளிகள் அல்லர், கோமாளிகளும் அல்லர் என்று. எத்தனைக் காலம் தான் தமிழன் வந்தேறிகளால் இன்னும் ஏமாற்றப் பட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்று தெரிய வில்லை.
இனியவன்
Quote
 
 
+17 #9 பச்சைமாலு. 2011-04-12 15:26
ஈழத்து தமிழ் துரோகிகள்...
1, குருடன். முதலை. சைகோ, கருணாநிதி,,,,
2, தெருப்பொறுக்கி. அடிமை, தெருமா,,,
3, கனிமொழி,,,,
4, சூனியம். பிதலாட்டம், ஜெகத் கசுப்பு,,,
6, கூலிக்குகூவும் கொசு. சும்மா வீணாப்போன பண்டியன்,,,
7, புன்னகைமன்னன். பூச்சியம், தங்காப் பாலு,,,
8, பட்டிணி. பசி. பெட்டையன், சிதம்பரி,,,
>
ஈழத்துரோகிகள்....
1, விளக்குமாறு, சூனியா,,,
2, ஊமை. அடிமை, மண் மொக்குசிங்,,,
3, நரபலி, நாராயணன்,,,
4, விஷப்பாம்பு, சிவ்சங்கர் மோன்,,,
5, கொம்பேறி மூக்கன், பிரேதம் முகர்ஜி,,,
Quote
 
 
+6 #8 KK 2011-04-12 15:25
SHOCKING MURDER
IF ONLY KARUNA AND KANI had helped Natesan

கொழும்பு, ஏப்.12- விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் ப. நடேசன் மற்றும் சமாதான செயலகத்தின் பொறுப்பாளர் புலித்தேவன் ஆகியோர் இலங்கை ராணுவத்தினரால் கடுமையாக சித்ரவதை செய்யப்பட்ட பின்னரே கொல்லப்பட்டனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.


2009, மே மாதம் போரின் இறுதி நேரத்தில், புலிகளின் மூத்த தலைவர்கள் சரணடைய ஐநா அதிகாரி விஜய் நம்பியார் ஏற்பாடு செய்ததாக கூறப்படுகிறது. இதன் அடிப்படையில், ப. நடேசன், புலித்தேவன் உள்ளிட்டோர் இலங்கை ராணுவத்திடம் சரணடைந்தனர்.


ஆனால், அவர்களை இலங்கை ராணுவம் கடுமையாக சித்ரவதை செய்ததாக தற்போது புகைப்படங்களுடன ் தகவல் வெளியாகியுள்ளது . ப. நடேசன், புலித்தேவன் ஆகிய இருவரின் வயிற்றிலும் நெருப்பால் சுட்டதற்கான அடையாளங்கள் காணப்படுவதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது .


சித்ரவதைக்குப் பின்னர், அவர்கள் இருவரின் சடலங்களையும் புதைக்கும்போது, அங்கிருந்த ராணுவத்தினர் அச்சடலங்களை புகைப்படம் எடுத்ததாகவும் இணையதளத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


ப. நடேசன் கொல்லப்படும் முன்னரே, அவரது மனைவியை இலங்கை ராணுவத்தினர் சுட்டுக் கொன்றதாகவும் அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது .
http://www.dinamani.com/edition/story.aspx?Title=ப.+நடேசன்+சித்ரவதைக்குப்+பின்னரே+கொல்லப்பட்டுள்ளார்:+புகைப்பட+ஆதாரம்&artid=404274&SectionID=164&MainSectionID=164&SEO=&SectionName=Latest


MUST READ BEFORE YOU VOTE ON KARUNA DROHAM
Quote
 
 
0 #7 SARA 2011-04-12 15:00
EMATHARMAN KARUNAANITHI,, ORU SUYANALAVATHI MATTUMILLAI,PIN ANKALAI THINNUM MANITHA OTTUNNI,IVAN MAKAL ORU ARASIYAL VIPACHARI,IVARK AL SEITHA AYYOKIYATHANATH AI, TAMILARKALE THAYAVUSEITHU ATHIRVU IANAYATHALATHIL SENDRU IPPOTHU PAARUNGAL,NADES AN ANNAAVAI EPPADI KONDRULLAAN SINGALAN ENPATHAI WWW.ATHIRVU.COM SENDRU PAARUNGAL.
SAVUKKU AVARKALE NEENGALUM THAYAVU SEITHU ATHIRVU INAYATHAI PAARTHU NAMATHU SAVUKKILUM ATHAI MARUPATHIPPU SEIYUNGAL.
Quote
 
 
+12 #6 pandiyan 2011-04-12 14:13
ULOOR KOLAI. shocking news coming out.........
சாதிக் பாட்சா தூக்கு போட்ட அறையை உடைத்து திறந்ததாக அவரது மனைவி கூறி இருந்தார். ஆனால் உண்மையில் அந்த அறை கதவு உடைக்கப்படவில்ல ை என்பதை தடயவியல் நிபுணர்கள் கண்டுபிடித்துள் ளதாக தெரிகிறது. அது போல சாதிக்பாட்சா மரணம் அடைந்த தினத்துக்கு முன்தின நாள் இரவு ஒரு நபரிடம் 30 தடவைக்கும் மேல் பேசியுள்ளார். அவரிடமும் விசாரணை நடந்து வருகிறது.

சாதிக்பாட்சா தற்கொலை குறித்து அவரது மனைவி, உறவினர்கள், நண்பர்கள் பலர் வாக்குமூலம் கொடுத்துள்ளனர். அந்த வாக்குமூல தகவல்கள் உண்மை தானா என்று தடயவியல் நிபுணர்கள் உண்மை கண்டறியும் சோதனை மூலம் ஆய்வு செய்தனர். சாதிக்பாட்சா மரணம் தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் மத்திய தடயவியல் துறை மனநல நிபுணர்கள் முதல்தடவையாக அதிநவீன கருவிகளை பயன்படுத்தி விசாரணை நடத்தி இருப்பது குறிப்பிடத்தக்க து.
Quote
 
 
+19 #5 jagan 2011-04-12 13:17
அன்புள்ள சவுக்கு..
பல மாதங்களுக்கு முன்பே கருணாநிதியின் முடிவுகாலத்திற் கு நேரம் குறித்த - உங்கள் அசாத்தியமான தன்னம்பிக்கைக்க ும் தைரியத்துக்கும் தலைவணங்குகிறேன் . சொல்லப்போனால், கருணாவின் எதிர்கட்சிகளை விட உங்கள் பணி மகத்தானது.
நாளை தீர்ப்பு நாள். நாளை தமிழகத்திற்கு ஒரு விடிவு பிறககும். வேறு எதுவும் சொல்ல தோன்றவில்லை.
நல் வாழ்த்துக்க்கள் .
Quote
 
 
+10 #4 jagan 2011-04-12 13:04
இத்தகைய தகவல்களை சற்று முன்பே வெளியிட்டிருக்க லாம்.
இந்த இழிபிறவிகளின் செயலால், இவைகளை பார்க்கவே வெறுப்பாக இருக்கிறது.
Quote
 
 
+28 #3 jaya 2011-04-12 11:34
விடுதலி புலிகளின் சொந்த மண்ணுக்கான போராட்டத்தை நீர்த்து போகசெய்வதர்க்கா க கருணா கனி போலி பத்திரி திருமா போன்றோர் செய்த லீலைகளை தமிழ் மக்கள் சுலபத்தில் மறக்க இயலாது. தமது சொந்த குடும்பம் பணம் கொள்ளை அடிக்க இந்த தமிழ் இனத்தை அளிக்க கூட தயங்காதவர் இந்த கருணா. என்பது பழைய செய்தி. அடர்க்காக இப்போது தமிழக மக்கள் கொடுக்கபோகும் தண்டனை இப்போது தெரியும்.இனிமேல் திமுக இருக்காது.
Quote
 
 
+30 #2 vasu, 2011-04-12 11:16
கனிமொழி ஒரு தமிழ் இன பெண்ணே இல்லை,அதற்குரிய எந்த அடையாளமும் அண்மைகாலமாக அவளிடம் இல்லை,தமிழகத்தி ன் உயர்தர விபசாரி தேவடியாள்,பஸ் நிலையத்திலும் புகையிரநிளையத்த ிலும் நிக்கும் வயித்து பிழைப்புக்கு உஅடலை விற்பவள் அல்ல விபச்சாரி,இவளே அந்த சொல்லுக்குரிய தேவடியாள்,
Quote
 
 
+29 #1 pandiyan 2011-04-12 10:25
ELLA தமிழர் பிரச்னையில் கருணாநிதி துரோகம். not only srilanga. Kaveri, Mullai Periyaru, Paalaru. Indha THELUNGU Kootadhai SERUPPAL ADITHU viratovom...
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 107 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday8951
mod_vvisit_counterYesterday11112
mod_vvisit_counterThis week30150
mod_vvisit_counterLast week80132
mod_vvisit_counterThis month232882
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12755001