|
தமிழகம் புதிய வரலாறு படைத்துள்ளது. 80 சதகிதம் வாக்குப் பதிவு செய்து புதிய வரலாற்றை படைத்துள்ளார்கள் தமிழக மக்கள்.
பல பூத்களில் காலை 8 மணிக்கு முன்பே வரிசையில் நிற்கத் தொடங்கினர் மக்கள். பொதுவாக வரிசையில் நின்று வாக்களிப்பதை ஒரு பெரிய வேலையாகக் கருதி, தேர்தல் நாளை விடுமுறை தினமாகக் கருதி, டிவி முன் பொழுதை கழிக்கும் நடுத்தர வர்க்கமும், ஊரில் எது நடந்தாலும் கவலையே படாத உயர் நடுத்தர வர்ககமும், வரிசையில், வெயிலில் நின்று ஆர்வத்தோடு வாக்களித்ததை காண மகிழ்ச்சியாக இருந்தது.

இத்தனை நாள் இல்லாத அளவுக்கு திடீரென்று என்ன அப்படி ஒரு ஆர்வம் ? அதிக எண்ணிக்கையிலான வாக்குப் பதிவுக்கு ஒரே ஒரு விளக்கம் தான் இருக்க முடியும். மாற்றம். அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கும் இந்த ஊழல், மக்களை அருவருப்படையச் செய்திருக்கிறது. நேற்று வாக்களிக்கச் சென்ற பல்வேறு தரப்பினரிடம் பேசிய போது, வாக்குகளுக்கு திமுகவினர் பணம் கொடுத்த விவகாரமே அவர்களிடம் கடும் கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது. நடுத்தர வர்க்கத்தினர் மத்தியில், நீங்கள் என்ன எங்களுக்கு பணம் தருவது, நான் உனக்கு பெரிய பரிசை தருகிறேன் பாருங்கள் என்று கோபத்தோடு வாக்களித்துள்ளனர். ஆனால், அரசு ஊழியர்கள் மத்தியில் மட்டும் ஜெயலலிதா எதிர்ப்பு மனப்பான்மை இன்னும் மறையவில்லை. ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால், தங்களின் உரிமைகள் பாதிக்கப் படும், பறிக்கப் படும் என்றே நம்புகிறார்கள்.
இந்த தேர்தல், வாக்குப் பதிவு சதவிகிதத்தை மட்டும் வைத்து, திருப்பு முனை தேர்தல் என்று சொல்ல முடியாது இது வரை தமிழகம் கண்டிராத அளவில், ஏன் இந்தியாவில் எங்குமே இல்லாத அளவில், தேர்தல் ஆணையம், தன் செயல்பாடுகளை தமிழகத்தில் தீவிரப்படுத்தியது.
தேர்தல் அறிவிப்பு வந்த உடனேயே, தேர்தல் ஆணைய அதிகாரிகள், இந்த முறை வாக்குகளுக்கு பணம் கொடுத்து, தேர்தலையே கேலிக்கூத்தாக்கும் திமுகவின் முயற்சியை முறியடிப்பது என்று முனைப்பு கொண்டார்கள். தலைமைத் தேர்தல் ஆணையர் குரேஷி, தேர்தல் நடைபெறும் நான்கு மாநிலங்களிலும், தமிழகத்தில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப் படுவது, மிகப் பெரிய பிரச்சினை என்று தெரிவித்தார். அந்தப் பெரிய பிரச்சினையை மிக மிக திறம்பட தேர்தல் ஆணையம் சமாளித்துள்ளதாகவே சவுக்கு பார்க்கிறது.

எந்தத் தேர்தலிலும் இல்லாத வகையில், தமிழகத்தில் சாலையெங்கும் எத்தனை சோதனைச் சாவடிகள் ? வாகன ரோந்தில் பறக்கும் படைகளை ஈடுபடுத்தி, பணத்தை கொடுத்து வாக்குகளை விலைக்கு வாங்கி எளிதாக வெற்றி பெறலாம் என்ற திமுக வின் திட்டத்தில் மண்ணை அள்ளிப் போட்டார்கள்.
இந்தத் தேர்தலில் தமிழக வாக்காளர்களுக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றியாக ஜாபர் சேட்டின் மாற்றத்தை சவுக்கு பார்க்கிறது. ஜாபர் சேட், உளவுத் துறை கூடுதல் டிஜிபியாக தொடர்ந்திருந்தால், தேர்தல் ஆணையத்தின் இந்த சிறப்பான நடவடிக்கைகளை எப்படியாவது தடுத்திருப்பார் என்றே சவுக்கு கருதுகிறது. லத்திக்கா சரண் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகளை தேர்தல் ஆணையம் மாற்ற உத்தரவிட்ட போது, அதை அவ்வளவாக கண்டு கொள்ளாத கருணாநிதி ஜாபர் சேட்டை மாற்றியதும், கடும் கோபம் கொண்டு தேர்தல் ஆணையத்தின் மீது தொடர் தாக்குதல்களை தொடங்கியதை நம் இந்த இடத்தில் நினைவு கூற வேண்டும். ஜாபர் சேட் இல்லாததால் பணப் பட்டுவாடா நிறுத்தப் பட்டது மட்டுமல்ல… எதிர்க்கட்சித் தலைவர்களின் தொலைபேசிகளை ஒட்டுக் கேட்டு, அவர்களின் பிரச்சார யுத்திகளையும் கருணாநிதியால் ஒட்டுக் கேட்க முடியாமல் போனதே இதற்குக் காரணம்.

ஜாபர் சேட்டின் மாற்றம் ஒரு துணிச்சலான அறிவு பூர்வமான நடவடிக்கை என்றால், மேலும் பல அதிகாரிகளை மாற்றி, நேர்மையாக செயல்படாமல், திமுகவுக்கு ஆதரவாக செயல்படும் அதிகாரிகள் கண்காணிக்கப் பட்டு, கடும் நடவடிக்கை எடுக்கப் படும் என்ற அறிவிப்பு பெருமளவில் பலன் அளித்தது.
இந்தத் தேர்தலில் நடந்த மற்றொரு சிறப்பான விஷயம் மதுரை கலெக்டராக நியமிக்கப் பட்டது. கடந்த ஐந்தாண்டுகளாக தமிழகம் இருக்கும் சூழலில், நேர்மையான அதிகாரிகளை ஒதுக்கி வைப்பது என்ற விவகாரத்தைத் தாண்டி, நேர்மையான அதிகாரிகளை ஒழித்துக் கட்டுவது என்ற நிலை உருவாகியுள்ளது. பெரும்பாலான நேர்மையான அதிகாரிகள், மத்திய அரசுப் பணிக்கு மாறுதலில் சென்றது இதற்கு ஒரு உதாரணம். அப்படியும் இருக்கும் மீதம் உள்ள ஒரு சில அதிகாரிகளும், திமுக வோடு மோதி வெல்ல முடியாது என்பதை புரிந்து கொண்டு, அமைதியாக ஒதுங்கிக் கொண்டார்கள். அப்படிப் பட்ட ஒரு நிலையில், சகாயம் எப்படிப் பட்ட அதிகாரி என்றால், ஒதுங்கிப் போகும் அதிகாரி அல்ல….. பாதகம் செய்பவரைக் கண்டு பயம் கொள்பவர் அல்ல…… சகாயத்தின் நியமனம், மதுரை நகருக்கு கிடைத்த மிகப் பெரிய வரப்பிரசாதம்.

சகாயம் மற்றும் மற்ற அதிகாரிகள் மதுரை நகரில் எப்படிப் பட்ட சூழலில் பணியாற்றினார்கள் தெரியுமா ? அவர்களைத் தவிர, அங்கே பணியாற்றும் அத்தனை பேரும், அழகிரியின் நபர்கள். குறிப்பாக மதுரை ஆட்சியர் அலுவலகத்தின் பிஆர்ஓ, அழகிரியின் தீவிர விசுவாசி என்று கூறுகிறார்கள். இந்த நபர், பறக்கும் படை, சோதனைக்கு கிளம்பிய உடன், தகவலை சம்பந்தப் பட்ட இடத்திலேயே சொல்லிக் கொண்டு இருக்கிறார். இதையடுத்து, சகாயம், தகவல் சென்று, அவர்கள் பணத்தை பத்திரப் படுத்தும் இடத்தை கண்டுபிடித்து, அந்த இடத்தில் சோதனை போட்டு, கடும் நெருக்கடி கொடுத்தார்.
40 காவல்துறை அதிகாரிகளை பாதுகாப்புக்காக வைத்திருந்த அழகிரியிடம் இருந்து, அளவுக்கு அதிகமாக இருக்கும் அதிகாரிகளை அப்புறப் படுத்தினார்கள். அஞ்சா நெஞ்சன் என்று தன்னை அழைத்துக் கொண்ட அழகிரி, அஞ்சி நடுங்கி, என் உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்று கதறினார். கருணாநிதி அவர் பங்குக்கு புலம்பினார். தேர்தல் ஆணையமோ, உனக்கு பாதுகாப்பு தானே வேண்டும். மத்திய போலீசை பாதுகாப்புக்கு அளிக்கிறோம் என்று கூறினார்கள். எதுவுமே செய்ய முடியாமல், அழகிரி திணறியது வெளிப்படையாகவே தெரிந்தது.
பணத்தை பட்டுவாடா செய்ய முடியாமல், திணறிய அழகிரி, சகாயம் மீது, அவதூறான குற்றச் சாட்டுகளை சுமத்தி, உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க ஏற்பாடு செய்தார். அதுவும் வெற்றி பெறாமல் போய், தன் விதியை நொந்து கொண்டு தன் தந்தையை திட்டித் தீர்த்தார்.

தினகரன் ஊழியர் எரிப்பு வழக்கை சற்றே நினைத்துப் பாருங்கள். பட்டப் பகலில், அழகிரியின் ஆட்கள், ஒரு பத்திரிக்கை அலுவலகத்தை அடித்து நொறுக்கி, மூன்று பேரை கொலை செய்து விட்டு, தப்பிக்கும் அளவுக்கு, அழகிரி மாநிலம் முழுக்க செல்வாக்கு படைத்தவர். அழகிரி இப்படி என்றால், அவரின் அல்லக்கையாக இருக்கும் பொட்டு சுரேஷின் செல்வாக்கு ஆறு மாதங்களுக்கு முன் நடந்த சம்பவத்தில் வாயிலாக தெரியும். ஜுனியர் விகடன் பத்திரிக்கையில், தன்னைப் பற்றி ஒரு செய்தி வந்து விட்டது என்பதற்காக, தினமலர் நாளிதழில், ஜுனியர் விகடன் அலுவலகத்தை அடித்து நொறுக்குவோம் என்று மிரட்டும் வகையில் முழு பக்க விளம்பரம் கொடுத்து, அவதூறு வழக்கு தொடுத்து, கடைசியில் விகடன் குழுமத்தையும் மண்டியிட வைத்தவர்.
அப்படிப்பட்ட அழகிரியையும், பொட்டு சுரேஷையும், அடக்கி ஒடுக்கிய பெருமை சகாயத்தையும், காவல்துறை அதிகாரிகளையுமே சேரும். தேர்தல் நாளன்று, மதியம் கட்சிக்காரர்களை சந்தித்த அழகிரி, திமுகவினர் ஒழுங்காக பணியாற்றவில்லை என்ற விபரத்தை கேள்விப் பட்டு, நேரடியாக பூத்துகளுக்கு சென்று சுற்றிப் பார்க்கலாம் என்று கிளம்பியிருக்கிறார். அழகிரி வாகனம் கிளம்பியதும், உடனடியாக தலையிட்ட காவல்துறையினர், நீங்கள் வேட்பாளர் அல்ல, வெளியில் செல்ல உங்களுக்கு அனுமதி கிடையாது, என்று அழகிரியை வீட்டை விட்டு வெளியேற விடாமல் தடுத்தனர் என்றால், இந்த அதிகாரிகளின் செயல்பாடுகளைப் பாருங்கள்.
இந்த அதிகாரிகளின் இந்த முயற்சியால், பெருமளவில் பணப்பட்டுவாடா தடுக்கப் பட்டது. கடந்த வாரம் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் குறிப்பிட்ட விஷயம் முக்கியமானது. ஆணையத்தின் நடவடிக்கைகளால், வெளிப்படையாக கொடுக்கப் பட்டு வந்த பணப்பட்டுவாடா, மறைமுகமாக செய்யப் படுகிறது என்பதே மிகப் பெரிய வெற்றி.
இந்த தேர்தல் ஆணையத்துக்குத் தான் எத்தனை நெருக்கடிகளை கொடுத்தார்கள் திமுகவினர் ? நீதிமன்றத்தில் ஒன்று மாற்றி ஒன்றாக எத்தனை வழக்குகள் ? சகாயத்தை மாற்றக் கோரி ஒரு வழக்கு என்றால், தேர்தல் ஆணையம் நடத்தும் சோதனைகளால் அடிப்படை உரிமைகள் பாதிக்கப் படுகிறது என்ற மற்றொரு வழக்கு. இது போல 15க்கும் மேற்பட்ட வழக்குகள் தாக்கல் செய்யப் பட்டன. தந்திரமாக, நீதிமன்றத்தின் மூலமாக சோதனைகளுக்கு தடையாணை பெறப்பட்டதோடு அல்லாமல், கருணாநிதியின் அறிக்கை அடிப்படையில் நீதிமன்றமே தானாக முன் வந்து ஒரு வழக்கை எடுத்து, தேர்தல் ஆணையத்துக்கு தன் பங்குக்கு நெருக்கடி கொடுத்தது.
இத்தனை நெருக்கடிகளையும் மீறித் தான் தேர்தல் ஆணையம் இந்தத் தேர்தலை வெற்றிகரமாக நடத்திக் காட்டியிருக்கிறது. மக்களும், தேர்தல் ஆணையத்துக்கு தங்கள் ஆதரவு முழுமையாக இருக்கிறது என்பதை, விரும்பி பெருமளவில் வாக்களித்ததன் மூலமாக வெளிப்படுத்தியுள்ளனர்.
இந்தத் தேர்தலின் நிஜ ஹீரோக்கள், தேர்தல் ஆணைய அதிகாரிகளும், மதுரை மாவட்ட ஆட்சியரான சகாயமும் தான்.



இந்த அதிகாரிகளுக்கு சவுக்கு வாசகர்கள் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்ளப் படுகிறது. உங்கள் பங்குக்கு நீங்களும் உங்கள் வாக்குகளை பதிவு செய்யுங்கள் உறவுகளே….!!!!!
|
Comments
என் நாடு நலமாக இருக்க, எமது மக்கள் நலமுடன் இருக்கட்டும் என நினைக்கும் எந்த ஜீவனும் - அந்த ஜீவனுக்கும் சொந்த பிரச்னை இருந்தாலும் - "இந்த பணிக்கு - இறைவன் நல்ல தீர்ப்பினை வழங்குவார்" என்ற பெரும் நம்பிக்கையுடன்.
உங்கள் அனைத்து பணிகளும் சிறக்க வாழ்த்துகள்.
Good people need tonics like this. We don't have the guts to question the Jalras of Alagiris. But we can appreciate good people for their good work. show your patritism.
S.J.Rajan, Madurai
தேர்தல் கமிஷனின் அதிரடி நடவடிக்கைகள் இல்லாமல் போயிருந்தால், ஆளும் கட்சி போட்டுவைத்திருந ்த திட்டங்கள் அனைத்தையும் ஆணையம் தவிடு போடி ஆக்காமல் இருந்திருந்தால் , கலைஞரும், சிதம்பரமுமே புலம்பும் அளவிற்கு அக்கிரமங்களை தடுக்காமல் இருந்திருந்தால் , இன்றைய தமிழகத்தின் முதுகெலும்பாக இல்லாமல் போய்விடினும், இன்றைய தமிழகத்தின் தண்டுவடமாக செயல் பட்டு வரும் இந்த ஒரு சாராருக்கு நிச்சயமாக ஜனநாயகத்தின் மீது புதிய நம்பிக்கை ஏற்ப்பட்டு இருக்காது ! ஜனநாயக நம்பிக்கை மீது தேர்தல் ஆணையம் புது ரத்தம் பாய்ச்சாமல் இருந்திருந்தால் இந்த ஒரு சாரார், " நாம என்ன வோட்டு போட்டு என்ன நடந்துட போகுது ? தேவையான கள்ள வோட்ட இவனுகளே போட்டுக்குவானுங ்க, என் வோட்டையே நான் போடறதுக்குள்ள இவனுகளே போட்டாலும் போட்டிருப்பனுங் க, அப்புடியே நான் போட்டாலும், ஏதாவது தில்லு-முள்ளு அடி-தடின்னு செஞ்சு நாட்டமை பண்ணி ஜெயிசுக்குவானுங ்க ..... இந்த பொழப்புக்கு நான் இந்த ஒரு நாள் லீவ் என் பொண்டாட்டி புள்ளயோட கொண்டாடிட்டு இருக்கேன் ", என்று இருந்திருப்பார் கள். இவர்கள் வராவிடில் எங்கிருந்து 78 % வரும் ?
தமிழர்கள் மட்டும் அல்லாமல் அணைத்து இந்தியர் மனதிலும் ஜனநாயக நம்பிக்கைக்கு புது ரத்தம் பாய்ச்சிய தேர்தல் ஆணையத்திற்கு ஒரு "ஓ" போடலாம் வாங்க !
I do hope Savukku to follow the same way in the next five years too bringing out the wrong doings of the next govt.
My next hope is to see Vaiko as CM in the near future
http://www.youtube.com/watch?v=OY-3CqQp4n4
Dear Savukuu, you would have also added Mrs.Sangeetha, RTO here for her courageous act..
R Prince JebakumarExpres s News ServiceFirst Published : 16 Apr 2011 02:32:24 AM MADURAI: As reports trickled in at the District Election Office in Madurai about the Assembly polls, officers were shocked to find that the entire Madurai West constituency was bribed by the ruling DMK.
According to sources, on the D-day a team which was formed to monitor violations of the Model Code Conduct, led by AJA Jeyasingh Gnanadurai, intercepted a car in Nehru Nagar, on suspicion. RS Ramalingam, a local DMK functionary, who was standing near the car said he was a 'papad trader' and was not attached to any party.
However, a search of the vehicle led to the recovery of a 40page account tallying the cash distributed to voters in exchange for their votes.
According to the document, Rs 81 lakh was received by Ramalingam, of which Rs 60 lakh was distributed to the voters in four corporation wards, which were part of the constituency.
According to the document, Rs 16,35,000 was earmarked for Corporation Ward 65, while Rs 18,96,200 was fixed for Corporation Ward 66.
Similarly, Rs 21,46,800 was allocated for Corporation Ward 67, while Corporation Ward 69 was allotted Rs 24,41,400. The entire figure for these four wards was Rs 81,19,400.
As per the document, the man, who was caught on the spot, had effectively distributed Rs 60 lakh.
He had also submitted accounts for the perusal of the party high command which had accepted his balance sheet.
The balance sheet also accounted for the money seized by the policemen in that constituency.
இதே சவுக்கின் சுழற்சி ADMK ஆட்சியுளும் தவறுகள் நடந்தால் சுலற்றபட்டால்
கோடானு கோடி என்னைப்போல் இளைஞர் கூட்டம் உன்னை பின் தொடரும் கண்டிப்பாக....
தலைவணங்குகிறேன் உன் எழுத்திற்கு!!!! !!!!!!!!!!!!!!! !!
சண்முகநாதன் V....
WE ARE THERE...
Its.. OK. if it is removed also no problem.. We SAVUKKU Fans are there..
i copied the content to my mail with Hyper link and sent mostly to all Tamil known persons. (In some offices, Internet will not work, only Mails. To help those friends only i copied the content)
Its a Mail Chain. by this time it would have reached Lakhs. All are educated, future of India..
[One of my friend, Today morning mailed to check this Article]
http://www.youtube.com/watch?v=OY-3CqQp4n4
Tamil Nadu from jokers from film industry
who do not have long term view of the nation or state.They can not look beyond
their short term personal gains.Kudos to all the IAS officers who had the guts to
stand firm against some ruthless politicians
இந்த தகவல் கலெக்டர் சகாயத்திற்கு தெரிவிக்கப்பட்ட து. கலெக்டர் உடனடியாக, "இப்படி புகார் கொடுத்த வாக்காளரிடம் நான் பேசவேண்டும்' என கேட்டுள்ளார். அங்கிருந்த அந்த நபரிடம் போன் மூலம் பேசிய கலெக்டர், அந்த வாக்காளரின் தேசப் பற்றையும், நேர்மையையும் பாராட்டினார். இதில் அந்த நபர் மகிழ்ந்து போனார். அவரிடம், "சாட்சிகள் இல்லாமல் இது தொடர்பாக யார் மீதும் வழக்கு பதிவு செய்ய முடியாது. ஆனாலும், சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்' என, அதிகாரிகள் உறுதிகூறினர்.
கலெக்டரிடம் சபாஷ் பெற்ற அந்த நபர், இந்த சம்பவத்தை அந்த பகுதியில் உள்ள மக்களிடம் தெரிவிக்க, நாமும் அப்படி செய்திருக்கலாமே என, பலர் ஆதங்கப்பட்ட சம்பவமும் நடந்தது.
அவர் யதார்த்தத்தைக் கூறினார். அவர் கண்ணால் பார்த்ததை , அவரின் "காங்கிரஸ் ஜெயித்துவிடுமோ" என்ற அச்சத்தைக் கூறுவது என்ன தவறு?
ஒரு தனி மனிதனுக்கு பயப்படக் கூட உரிமை இல்லையா ?
Quoting thamim ansari:
Quoting nritamil:
Quoting Yoga:
இந்த பக்கத்தினை முழுவதுமாக பார்க்க நெஞ்சில் ஈரம் உள்ள யாராலும் முடியாது... இதை பார்த்தாலே மனது வேதனையில் துடிக்கிறதே அத்தனை லட்ச்ச கணக்கான நம் உறவுகள் எப்படி துடித்திருக்கும ்... சோனியா உண்மையிலேயே ஒரு கொடிய அரக்கி !! இத்தனை உயிர்களை கொன்ற பிறகும் அவருக்கு பைத்தியம் தெளியவில்லை போலும்!! நயவஞ்சகன் கொலைகார நாய் ராஜபக்சேவை ஐநா சபை ஆயிரம் முறை தூக்குதண்டனை விதித்து கொள்ள வேண்டும்!! அவனுடைய சகாக்களை நூறு முறை சுட்டுக்கொல்ல வேண்டும்
கருணாநிதியின் இந்த மோசமான ஆட்சி முடிவுக்கு வரவேண்டும் என்று மனதார விரும்பிய எத்தனையோ தமிழ் நெஞ்சங்களில் நானும் ஒருவன். இந்த ஆட்சிக்கு எதிராக தாங்கள் தைரியமாக நடத்தி வரும் போராட்டங்களுக்க ு தமிழக மக்களின் சார்பாக மிக்க நன்றி மற்றும் பாராட்டுக்கள்.
தமிழகம் இதுவரை இல்லாத அளவுக்கு இந்த தேர்தலில் அதிக அளவில் வாக்களித்ததை பார்க்கும்போது, உங்களை போலவே எனக்கும், அது ஆளுங்கட்சி எதிர்ப்பு அலையாகவே படுகிறது.... எனினும் வாக்களிக்கும் இரண்டு நாட்களுக்கு முன்னர் ஆளுங்கட்சி தாங்கள் பின்தங்கியிருக் கும் 50 தொகுதிகளில் அதிக அளவில் பணத்தை வாரி இரைத்ததை ஒரு சில பத்திரிக்கைகள் சுட்டி காட்டின... இது பற்றி தங்களுக்கு தகவல் எதுவும் தெரியுமா? அந்த செய்தி உண்மையாய் இருக்கும் பட்சத்தில் அது தேர்தல் முடிவுகளில் மாற்றம் ஏற்ப்படுத்தும் வாய்ப்புகள் இருக்கிறதா?
தேர்தல் நாளன்று இது பற்றி உங்கள் கட்டுரை எதுவும் பிரசுரமாகும் என்று எதிர்ப்பார்த்தே ன்... வராததால் கேட்கிறேன்...
தமிழக சட்டசபை தேர்தலில் பணியாற்றிய அதிகாரிகளில், தற்போது, இவர் தான், "கதாநாயகி'யாக மாறியுள்ளார். கடந்த, 5ம் தேதி அமைச்சர் நேருவுக்கு நெருக்கமானவருக் கு சொந்தமான ஆம்னி பஸ்சில் பணம் இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின்படி, அந்த இடத்துக்கு டிரைவருடன் சென்று, பஸ்சில் பதுக்கி வைக்கப்பட்டிருந ்த, 5 கோடியே, 11 லட்சத்து, 27 ஆயிரம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தது தான் இதற்கு காரணம். நள்ளிரவில், பெண் அதிகாரி ஒருவர், இவ்வளவு பணத்தை பறிமுதல் செய்தது, தேர்தல் வரலாற்றிலேயே இதுதான் முதல் முறை. இவரது துணிச்சலான நடவடிக்கையைக் கண்டு, திருச்சி மக்கள், அவருக்கு, "தைரியலட்சுமி' என்று பட்டம் சூட்டியுள்ளனர்அ வர் அளித்த, "மினி' பேட்டி* முதல் முறையாக தேர்தல் பணியாற்றுகிறீர் கள்; எப்படி உளஎந்த வேலையையும் ஈடுபாட்டுடன் செய்வது என் வழக்கம். தேர்தல் பணியையும் அப்படித் தான் செய்கிறேன். முதல் முறை என்றாலும் கூட, எனக்கு எந்த, "டென்ஷனும்' இல்லை.
* நீங்கள் பறிமுதல் செய்த, 5.11 கோடிக்குப் பிறகு ஏதேனும் மிரட்டல் வந்ததா?
இதுவரை நேரடியாகவோ, மறைமுகமாகவோ, எந்த மிரட்டலும் வரவில்லை. ஏன்... ஒரு, போன் கால் கூட எனக்கு வரவில்லை; எந்த மிரட்டலுக்கும் அஞ்ச மாட்டேன்.
* உங்கள் குடும்பத்தினரின ் மனநிலை என்ன? கணவர் என்ன சொன்னார்?
என் பணியை இன்னும் சிறப்பாகச் செய்யும்படி கூறினர்; குடும்பத்தினர் யாரும் எனக்கு தடையாக இருக்க மாட்டார்கள்.
* உங்களது இந்த அதிரடி நடவடிக்கைகள் தொடருமா?
என் பணியைத் தான் நான் செய்கிறேன். இதில், அதிரடியெல்லாம் ஒன்றும் கிடையாது. தவறு எங்கே நடந்தாலும், அதை சட்டப்படி அணுகுவதற்கு பெயர், அதிரடி கிடையாது. எப்போதும் என் கடமையிலிருந்து தவற மாட்டேன். என் கடமையை செய்வதற்காக, எனக்கு எந்த புகழ்ச்சியும் வேண்டாம்
S.sivakumar
அவர் வேறு யாரும் அல்ல... நம்ம சவுக்கேதான் (நீங்க தான்). உங்களை வாழ்த்துவதற்கு சொற்கள் போதாது. உங்கள் உயர்ந்த பணிக்கும், விழிப்புணர்வு கட்டுரைகளுக்கும ், நாடு, நாட்டு மக்களின் மீது நீங்க கொண்ட அக்கரைக்கும் நன்றி.
வாசகர்கள் அனைவரும் நமது சவுக்கு சங்கர் அவர்களுக்கு வாழ்த்தும் நன்றியும் சொல்லுமாறு மிகத் தாழ்மையுடனும் பெருமையுடனும் கேட்டுக் கொள்கிறேன்.
யார் இந்த தேர்தலில் ஜெயிப்பார்கள் என்பது இரண்டாம் பட்சம், உங்களை போன்ற நல்ல அதிகார்களால்தான ் மக்கள் பெரும் நம்பக்கயுடன் வாக்களித்தார்கள ். எனவே முதல் வெற்றி உங்களுக்கும் நேர்மையாக உழைத்த அதிகாரிகளும் நன்றியுடன் கூடிய வாழ்த்துக்கள். உங்களை போல இன்னும் நிறைய நல்ல அதிகாரிகள் பலர் உள்ளனர், அவர்களை அடுத்த அரசு இனங்கண்டு பயன்படுத்தும் என்று நம்பிக்கையோடு தினமலருக்கு நன்றிகளோடு நல்ல மனிதர்களின் சார்பில் காத்திருக்கும் வாசகர்கள்.
எப்பொழுது பேப்பரை பார்த்தாலும், கொலை, கொள்ளை, கேடுகெட்ட அரசில்வாதி, அரை வேக்காட்டு நடிகர்கள், அரைகுறை நடிகைகள் பற்றியே செய்திகள். அது மக்களை திசை திருப்பிவிடுகிற து, அதற்க்கு பதிலாக இதுபோன்ற நல்லவர்கள் பற்றி சேதி தினந்தோறும் தினமலர் முதல் பக்கத்தில் வருமானால், நாளைய சமுதாயம் அதை பார்த்து, தானும் இப்படி ஆகவேண்டும் என்று ஒரு ஊக்கம் கிடைக்கும். மதிப்பிற்குரிய அப்துல் கலாம் அவர்கள், இஸ்ரேலில் இருந்தபோது, பெரும் நாசம் விளைந்தது அனால், அடுத்த நாள் பேப்பரில், அதைபற்றிய செய்தி இல்லாமல், ஒரு நல்ல செய்தியால ஆச்சரியப்பட்டார ். அதுபோல் நல்ல பத்திரிக்கைகள் செய்ய முன்வருமா?
என் கேள்விக்கும் மதிப்பளித்து விளக்கியதற்கு மிக்க நன்றி ..
anniyan
Quoting சவுக்கு:
Many had casted their votes as per their wish and appreciated the efforts and reforms made by the election commission.
1 தேர்தல் ஆணைய கமிஷனர்
2 தமிழ தேர்தல் ஆணைய கமிஷனர்
3 5.11 கோடியை அதிகாலை தனியார் வாகனத்திலிருந் து பறிமுதல் செய்த வருவாய் துறை பெண் ஊழியர்.
4 மதுரை கலெக்டர், மற்றும்
5 தேர்தல் கமிஷனின் நேர்மையான ஆணைகளை வரும் இடற் அறிந்தும் செயல் படுத்திய அத்துணை பேர்கள். மேலும்
6 வலை துவங்கியதிலிர ுந்து அதிகார வர்க்கத்தின் குடுமியை பிடித்து உலுக்கி,சுலபம ாய் வெளியில் கசியாத பல அந்தரங்க உண்மைகளை உதிர்த்த சவுக்கு ஆகியோர்.
77.5 சதவீதம் வாக்களித்து, இந்திய ஜனநாயக அமைப்பின் மேலிருந்த, உலக அரங்கின் கண்ணோட்டத்தைய ே மாற்றிய தமிழக மக்கள் அனைவருக்கும்.
Quoting C. kumaresan Pudukko:
who knows the voting machine is switched off or not?
moreover I have also the same suspicion???? The gap between april to My is killing the public.
I was shocked to hear (the money distribution has almost stopped) from u. As for I know(my village near Gudiyattam), almost 70% of voters received Rs.200 per vote either thro' SHG or in late night immediately after EC team completes the inspection. Only thing the restrictions achieved is Money distribution went underground.
முடிவு வரும் வரை காத்திருப்போம் ....
வெல்ல போவது "பணநாயகமா, இல்லை ஜனநாயகம் என்று...!"
RSS feed for comments to this post