|
இன்று சவுக்குக்கு ஆதரவாக, ஆயிரக்கணக்கான அன்பு உள்ளங்கள் இருக்கின்றன. நேரிலும் தொலைபேசியிலும், மின்னஞ்சல் மூலமாகவும் அன்பைப் பொழிபவர்கள் பலர். ஆனால், 2008 எப்படி இருந்தது என்பதை இப்போது திரும்பிப் பார்க்கையில் மலைப்பாகவே இருக்கிறது.

2008ல் தொலைபேசி ஒட்டுக் கேட்பு வழக்கு தொடர்பாக சண்முகம் தலைமையில் விசாரணை ஆணையம் ஏற்படுத்தப் பட்டு, விசாரணை தொடங்கி நடைபெற்று வருகிறது. அப்போது, சவுக்குக்கு ஆலோசனை சொன்னவர்கள், உன்னால் அரசாங்கத்தை எதிர்த்துச் சண்டையிட முடியாது. அதனால், பேசாமல், அவர்கள் சொல்கிறபடி கேட்டு நட என்றார்கள். அவர்கள் என்ன சொன்னார்கள் தெரியுமா ? இந்தக் குற்றத்தை நீ செய்தாலும் சரி, செய்யாவிட்டாலும் சரி, எப்படி இருந்தாலும் உன் தலையில்தான் கட்டப் போகிறார்கள், அதனால் பேசாமல், நான்தான் செய்தேன் என்று ஒப்புக் கொள் என்று ஆலோசனை கூறப்பட்டது. சரி பெரிய மனிதர்கள் சொல்கிறார்களே என்று, வழக்கறிஞரின் ஆலோசனையை கோரலாம் என்று, சவுக்கு முதலில் சந்தித்தது, வழக்கறிஞர் விஜயக்குமார். அவர் சவுக்கிடம் கேட்ட முதல் கேள்வி, நீ சிறை செல்லத் தயாரா என்பதுதான். தயார் என்று சொன்னதும், உன் வழக்கை நான் நடத்துகிறேன், செய்யாத குற்றத்தை ஒப்புக் கொள் என்று இப்படிப் பட்ட முட்டாள்த்தனமான யோசனையை உனக்குச் சொன்னது யாராக இருந்தாலும் சரி. அதை ஏற்காதே….. என்று ஆலோசனை சொன்னார்.
அதற்குப் பிறகு இன்று வரை தொடரக்கூடிய நீண்ட நெடிய போராட்டம். ஜுலை 17 2008 அன்று மாலை 4 மணிக்கு லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்தில் வைத்து கைது செய்யப் பட்ட கணத்திலிருந்து நரகம். சவுக்கு மீது காவல்துறை வசம் இருந்த முக்கிய ஆதாரம், தொலைபேசியில் பத்திரிக்கையாளர்களோடு பேசியது. கைது செய்யப் பட்ட போதும், சவுக்கிடம் இரண்டாவதாக ஒரு தொலைபேசி இருந்தது. அந்த தொலைபேசியை எப்படி மறைப்பது என்று யோசித்துக் கொண்டே, லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்திலிருந்து சிபி.சிஐடி அலுவலகம் உள்ள கிண்டி செல்வதற்குள், பாக்கெட்டில் இருந்த செல்போனில் இருந்து சிம் கார்டை நைசாக கழற்றியாகி விட்டது. சரி, இந்த சிம் கார்டை எப்படி அழிப்பது என்று யோசித்துக் கொண்டே, “சார் பாத்ரூம் போகனும்” என்று சொல்லி அங்கே சென்று பார்த்தால், சினிமா தியேட்டரில் இருப்பது போல இருந்தது. இன்ஸ்பெக்டர் சரவண குமார் சிறுநீர் கழிக்கும் போது கூட பின்னால் நின்று கொண்டிருந்தான். பிறகு, அந்த சிம்கார்டை பாக்கெட்டிலேயே வைத்து இரண்டாக உடைத்து, ஷூவை கழற்றுவது போல, அந்த சிம் கார்டை ஷூவுக்குள் போட்டாகி விட்டது. பாக்கெட்டுகள் சோதனை செய்யப் பட்டு, பர்சில் இருந்த 5000 ரூபாய் பணம் முதலியன பறிமுதல் செய்யப் பட்ட பிறகு, வீட்டை சோதனையிட வீட்டுக்கு அழைத்துச் சென்றார்கள். (அந்த 5000 ரூபாய் பணம், கடைசி வரை கணக்கில் காட்டப் படவில்லை) வீட்டுக்கு சோதனை என்ற பெயரில் அழைத்துச் சென்று, வீட்டை அலங்கோலமாக்கி, வீட்டிலேயே அடி தொடங்கியது. ஒரு இரண்டு மணி நேர அடிக்குப் பிறகு, மீண்டும் சிபி.சிஐடி அலுவலகம் அழைத்துச் சென்றார்கள். வீட்டிலேயே நிர்வாணப்படுத்தப் பட்டு, நிர்வாணமாகவே சாலை வரை அழைத்துச் செல்லப் போகிறார்கள் என்ற மிரட்டல். பிறகு மீண்டும் ஆடை கொடுத்து, கைது செய்யப் பட்டதற்கு அத்தாட்சியாக கையொப்பம் பெற்றுக் கொண்டு, நான்கு மூட்டைகளில் ஆவணங்களை (என்ன ஏது என்று தெரியாமலேயே) அள்ளிக் கொண்டு கிளம்பினார்கள்.
அப்போது சிம்கார்டோடு இருந்த ஷூவை அங்கேயே அவிழ்த்துப் போட்டு விட்டு, சிபி.சிஐடி போலீசாரோடு ஜீப்பில் ஏற்றினார்கள். வடபழனியில் சிக்னல் அருகே நிற்க வைத்து, உண்மையை சொல்லாவிட்டால், இப்படியே இறக்கி விட்டு விட்டு, தப்பி ஓடினாய், என்கவுண்டரில் சுட்டு விட்டோம் என்று கேசை மூடி விடுவோம் என்று மிரட்டல். அவர்களிடம் துப்பாக்கி இருக்க வாய்ப்பே இல்லை என்பது, 19 ஆண்டுகளாக, காவல்துறையோடு பணியாற்றியவனுக்குத் தெரியாதா என்பதைக் கூட அறிந்து வைக்காத அறிவிலிகள்.
மீண்டும் இரவு 10.30 மணிக்கு சிபி.சிஐடி லாக்கப். ஒருவர் மாற்றி ஒருவராக, டிஎஸ்பி பாலு, இன்ஸ்பெக்டர்கள் வேல்முருகன், சரவண குமார் ஆகியோர் காலை 4 மணி வரை பின்னு பின்னென்று பின்னினார்கள். அவர்களின் நோக்கம் ஐபிஎஸ் அதிகாரி ஏ.கே.விஸ்வநாதனை இந்த வழக்கோடு சம்பந்தப் படுத்தி வாக்குமூலம் பெற வேண்டும் என்பது என்ற விபரம், ரொம்ப நாட்களுக்குப் பிறகே, தெரிய வந்தது. ஏ.கே.விஸ்வநாதன் என்ற அதிகாரியை சவுக்கு இன்று வரை பார்த்தது கிடையாது. பேசியதும் கிடையாது. அப்படி இருக்கும் போது, அவரை சம்பந்தப் படுத்தி எப்படி வாக்குமூலம் கொடுக்க முடியும் ?
தன்னுடைய எதிரியாக ஏ.கே.விஸ்வநாதனைக் கருதிய ஜாபர் சேட், சவுக்கு மூலமாக விஸ்வநாதனுக்கு இந்த வழக்கில் தொடர்பு இருக்கிறது என்று பொய்யான வாக்குமூலத்தைப் பெற்று, அவர் வீட்டில் சோதனை என்ற பெயரில், பத்திரிக்கைகளில், செய்தியை வெளியிட்டு அவரை அவமானத்திற்குள்ளாக்க வேண்டும் என்பதே, சவுக்குக்கு விழுந்த அத்தனை அடிகளுக்கும் காரணம் என்பது பின்னாளில் தெரிந்தது. ஆனால் அவர்களின் நோக்கம் நிறைவேறாததால், கிறுக்குத் தனமாக ஒரு ஒப்புதல் வாக்குமூலத்தை அவர்களாகவே எழுதிக் கொண்டார்கள்.
புழல் சிறையில் அடைக்கப் பட்டபின், வழக்கறிஞர் புகழேந்தி வந்து பார்த்தார். சிறையில் பத்து ஆண்டுகளுக்கு மேலாக இருக்கும் இஸ்லாமிய சிறை வாசிகள் அத்தனை பேரும், புகழேந்தியின் கட்சிக் காரர்கள். அவர்களிடம் புகழேந்திக்கு நல்ல மதிப்பு உண்டு. புகழேந்தி அவர்களிடம், நான் சிறைக்கு வந்தால் என்னை எப்படி பார்த்துக் கொள்வீர்களோ, அது போல இவரைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறினார். இரண்டு மாத சிறை வாழ்க்கை, பல்வேறு அனுபவங்களைத் தந்தது. சிறையில் பல்வேறு மனிதர்களை சந்தித்து, அவர்களின் அனுபவங்களை கேட்டறிந்து, மனிதர்களை இன்னும் அதிகமாக நேசிக்க வேண்டும் என்ற நல்ல பண்பை சிறை தந்தது என்றே சொல்ல வேண்டும.
இரண்டு மாதங்களுக்குப் பிறகு, வெளியே வந்தால் என்ன செய்வது ? 19 ஆண்டுகளாக, அரக்க பரக்க வேலை செய்து கொண்டிருந்து விட்டு, திடீரென்று எந்த வேலையும் இல்லை என்றால் எப்படி இருக்கும்…. ?
அந்த நேரத்தில் தான், வழக்கறிஞர் புகழேந்தி, சிறைக் கைதிகளுக்காகவும், மனித உரிமை தளத்திலும் பல்வேறு வேலைகளைச் செய்து கொண்டிருந்த விபரம் தெரிய வந்தது. வேலை இல்லாத வெட்டி ஆபிசருக்கு இதை விட்டால் என்ன வேலை ? நண்பர் புகழேந்தியோடு சேர்ந்து, மனித உரிமை மீறல்களை எதிர்த்தும், ஊழலை வெளிக்கொணரவும் பல்வேறு வேலைகள் தொடர்ந்து செய்யப் பட்டன. மூத்த வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன், தமிழக மக்கள் உரிமைக் கழகத்துக்காக, பல்வேறு வழக்குகளில் இலவசமாகவே ஆஜரானது மிகப் பெரிய பலமாக அமைந்தது.
இதையொட்டி பல்வேறு பொது நல வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டன. இது தவிரவும், சவுக்கு மீதான வழக்கு, நீதிமன்றத்தில் தொடங்கியது.
லஞ்ச ஒழிப்புத் துறையின் சார்பில் அவர்கள் பங்குக்கு தொந்தரவு தர வேண்டாமா ? துறை நடவடிக்கை என்ற பெயரில், 6க்கும் மேற்பட்ட துறை நடவடிக்கைகள் எடுக்கப் பட்டன. அத்தனை துறை நடவடிக்கைகளையும் சமாளித்து, நீதிமன்றத்தில் பத்துக்கும் மேற்பட்ட ரிட் மனுக்களை தாக்கல் செய்து, இத்தனை ஆண்டு காலம், சமாளிக்க உதவி செய்தவர் மூத்த வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன். இது பத்தாதென்று லஞ்ச ஒழிப்புத் துறையில் மாதந்தோறும் வழங்க வேண்டிய அரை சம்பளத்தை, இதோ அதோவென்று, தராமல் இழுத்தடிக்க வேண்டியது, லஞ்ச ஒழிப்புத் துறையில் உள்ள அதிகாரிகளுக்கு மிகவும் பிடித்தமான பொழுதுபோக்கு.
இத்தனை நெருக்கடிகளுக்கு இடையே தான் சவுக்கு தொடங்கப் பட்டது. சவுக்கு தொடங்கப் படுவதற்கு முக்கிய காரணம், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வாங்கப் பட்ட பல்வேறு ஆவணங்களை பத்திரிக்கைகளில் வெளியிட எடுக்கப் பட்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்ததே. பத்திரிக்கை உலகின் மிகச் சிறந்த மனிதர்கள் சவுக்குக்கு நண்பர்களாக இருந்தாலும், அவர்கள் முதலாளிகள் இல்லையே …..
இந்த நெருக்கடிக்கிடையே தான் சவுக்கு தொடங்கப் பட்டது. மெள்ள மெள்ள சவுக்கு பிரபலமாகி வருகையில் தான் ஜாபர் சேட் வீட்டு வசதித் துறையில் செய்த முறைகேடுகள் ஆவணத்தோடு அம்பலப்படுத்தப் பட்டன. அதன் மறுநாளே, மதுரவாயல் சாலையில் செங்கலை எடுத்து ஒரு நபர் மீது அடித்ததாக பொய்ப் புகார் பதியப் பட்டு சவுக்கு 3 நாட்கள் சிறையில் இருந்தது சவுக்கு வாசகர்கள் அறிந்ததே…… இந்த ஜாபர் சேட், உண்மையிலேயே ஒரு முட்டாள் தான் நண்பர்களே…. முதல் முறை சிறைக்குச் செல்வபன், சிறையைக் கண்டு அஞ்சுவான்.. ஏற்கனவே இரண்டு மாதம் சிறையில் இருந்தவனுக்கு சிறை என்றால் என்ன பயமா ?
ஆனால் அந்த கைது சம்பவமே, சவுக்கை இன்னும் பல்வேறு தளங்களில் கொண்டு சேர்த்தது. ஓரளவுக்கு பரவலாக தெரியவைத்தது. அதற்குப் பின் முழு வீச்சோடு சவுக்கு வேலையில் இறங்கியது.
சவுக்கின் வாசகர்கள் தந்த அமோக ஆதரவு காரணமாக, சவுக்கு இன்று ஒரு இயக்கமாகவே வளர்ந்திருக்கிறது என்றால் அது மிகைச் சொல் இல்லை.
பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது
என்கிறார் அய்யன் வள்ளுவன்.
(என்ன பயன் கிடைக்கும் என்று எண்ணிப் பார்க்காமலே, அன்பின் காரணமாக ஒருவர் செய்த உதவியின் சிறப்பு கடலை விடப் பெரிது)
இத்தனை ஆண்டு காலம், அத்தனை பிரச்சினைகளையும் வெற்றிகரமாக சமாளித்து ஓட்டியதற்கு வழக்கறிஞர்கள் அல்லாமல், பத்திரிக்கையாளர்களின் உதவியும், ஒத்துழைப்பும் மறக்க முடியாதது. பத்திரிக்கையாளர்களின் மத்தியில் சில கறுப்பு ஆடுகள் இருந்தாலும், சவுக்கோடு பழகிய பத்திரிக்கையாளர்கள் மாணிக்கங்கள். சவுக்கைப் போலவே இந்த சமுதாயத்தை நேசிப்பவர்கள். சவுக்குக்கு முக்கிய தகவல்களை கொடுத்து உதவுவதிலிருந்து, அவசர தேவைக்கு பணம் கொடுத்து உதவுவது வரை அத்தனை உதவிகளையும் செய்து விட்டு, தங்கள் பெயர் கூட வெளியில் தெரிய வேண்டாம் என்று பிடிவாதம் பிடிப்பவர்கள்.
சவுக்கின் போன் என்றாலே அலறி தொலைபேசியை அணைத்து வைக்கும் அதிகாரிகளுக்கு மத்தியில், எப்போது போனாலும், சவுக்கை அன்போடு பார்த்துப் பேசும் அதிகாரிகளும் வெகு சில அதிகாரிகளும் இருக்கவே செய்கிறார்கள்.
சவுக்கு தொடங்கிய காலத்தில் சவுக்கை படித்து, உற்சாகப் படுத்தி வளர வைத்த வழக்கறிஞர் ராதாகிருஷ்ணனாக இருக்கட்டும், படித்து விட்டு பின்னாளில் வாழ்த்திய பல மூத்த பத்திரிக்கையாளர்களாக இருக்கட்டும், அவர்களின் அன்பு வாழ்த்துக்கள் இல்லாமல் சவுக்கு இந்த அளவுக்கு வளர்ந்திருக்க வாய்ப்பே இல்லை.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால், ஏப்ரல் 15 2011ல் கருணாநிதியின் ஆட்சி முடிகிறது என்று கவுண்ட்டவுன் போட்ட போது, சவுக்கை பார்த்து சிரிக்காதவர்கள் கிடையாது. சில நண்பர்கள், இது ரொம்ப ஓவர் என்றார்கள். ஆனால், சவுக்கு இரண்டாண்டுகளுக்கு முன்னால் சொன்னது இன்று நடந்திருக்கிறது. முடிந்தது கருணாநிதியின் ஆட்சி.
சரி. கருணாநிதியின் ஆட்சியை முடித்து வைப்பது மட்டும் தான் சவுக்கின் வேலையா ? சமூகத்தில் உள்ள அத்தனை பிரச்சினைகளும் ஓய்ந்து விட்டதா என்ன ?
ஒரு நாளைக்கு பல்லாயிரக்கணக்கான வாசகர்கள் சவுக்கைக் காண வருகிறார்கள். சவுக்கின் கருத்துக்களை தங்கள் பொன்னான நேரங்களை ஒதுக்கி படிக்கிறார்கள். நன்றாக இருந்தால் பாராட்டும் அதே வேளையில் தவறு செய்தால் கண்டிக்கவும் தயங்குவதில்லை. அவர்களை எப்படி ஏமாற்றுவது…. ? அதனால், சவுக்கை தொடர்ந்து எத்தனை சிரமங்கள் இருந்தாலும் நடத்துவது. சமூகத்தில் நடைபெறும் அநியாயங்களுக்கு எதிராக சவுக்கை சுழற்றுவது என்ற உறுதி ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து பணியாற்றுவோம் தோழர்களே……
பாதகம் செய்பவரைக் கண்டால்
பயங்கொள்ள ளாகாது பாப்பா…..
மோதி மிதித்து விடு பாப்பா
அவர் முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா என்ற பாரதியின் வரிகள், பாப்பாவுக்கு மட்டுமா ? |
Comments
Thanks
Selva
Bangalore -India
ஐநா அறிக்கையில் ராஜபக்சேவின் போர்க்குற்றங்கள ் பட்டியலிடப்பட்ட ிருந்த காரணத்தாலும், டைம்ஸ் பட்டியலில் இடம் பெறுவதற்காக ராஜபக்சே சார்பில் பெருமளவில் ஆன்லைனில் கள்ள ஓட்டுகள் குத்தப்பட்டதாலு ம் அவரை நீக்கியுள்ளது டைம்.
அந்த நாள் முதல் தவறாமல் உங்களது அனைத்து பதிவுகளையும் படித்து வருகிறேன்
உங்கள் நல்ல பணி தொடர வாழ்த்துகள்
ஏதேனும் உதவி தேவைபடின் தொடர்பு கொள்ளவும்
கண்ணன்
kannanp1000
பெங்களூர்
Great - I will start the work right now
காங்க்றேச்ஸ் நா என்னங்க? அது எங்கு இருக்கு தமிழ்நாட்டுல?
well said. I 100% agree with you.
விரக்தியில் இப்படி சொல்லுகிறார் போலும்... பாவம் . மன்னித்து விடுவோம்
ஆமா நீங்க எந்த நம்பிக்கையில் சொல்கிறீர்கள் ஆட்சி மாற்றம் அப்படின்னு? அது எப்படி சவுக்கு நம்ம ஊர் மக்கள் திடிர்ன்னு ஒரே அடியா மாறிட்டாங்க? எனக்குத் தெரிஞ்சு உலக வரலாற்றில் இதுதான் மிகப் பெரிய புரட்சியா இருக்கும்!!!
பாராளுமன்ற தேர்தல் சமயத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிர் பிச்சை வேண்டி நம்மகிட்ட நிக்கும் போது நூறு அல்லது இருநூறு மற்றும் பிரியாணிக்கு அவங்கள சாகடிச்ச பாவிகள் நம்ம ஊர் மக்கள். இந்த ஆட்டு மந்தைகள் போய் திருந்தி மவுனப்புரட்சி பண்ணிட்டாங்களாம ். பைத்தியக்காரத்த னமா தெரியல நமக்கு? நீங்களும் உங்க கவுண்ட் டவுனும். அத முதல்ல எடுங்க.
வடிவேலு மற்றும் விஜயகாந்துக்கு கூடிய கூட்டத்தை பார்த்த பிறகும் இது போல நம்பிக்கை இருப்பது எதை காட்டுகிறது அப்படின்னு யாருக்கும் சொல்லி தெரிய வேண்டியதில்லை. எவ்வளவு சாரலடிச்சாலும் எதுவுமே நடக்காதது போல நிக்கற எருமை கூட்டம் இந்த தமிழ்நாட்டு மக்கள். இவங்க போய் திருந்தி மவுனப்பராட்சி பண்ணிட்டாங்க மண்ணாங்கட்டிய உடைச்சிட்டாங்கன ்னு இனிமேலும் சொல்லாதிங்க சவுக்கு. அடிமையா வாழ்ந்து பழகிட்டோம். ஒரே நாள்ல மாற்ற முடியாது இந்த போலி ஜனநாயக நாட்டில்.
Your kind attention is required urgently. www.time.com is conducting a poll to find out the "most influential" person in the world. In this, war crime specialists Mahinda Rajapakse and Sonia are with 130281, 1166 votes respectively. Please publish the below two links in your blog so that all our viewers and their friends can click on that link and vote against sonia and rajapakse. This will stop the culprits to become more familiar in the global arena. I hope you will do this for our brothers and sisters died in Sri Lanka. Please publish this at the earliest as the poll results will be published on 21.04.2011.
http://www.time.com/time/specials/packages/article/0,28804,2058044_2060338_2060066,00.html
http://www.time.com/time/specials/packages/article/0,28804,2058044_2060338_2060246,00.html
I will not thank you for this as I feel it is your duty as a Tamilian.
NFC in-charge and BJP national secretary Muralidhar Rao told reporters here on Friday that opposition leader Sushma Swaraj, chief minister B S Yeddyurappa, fisheries department ministers of states in the western coast and experts will take part in the convention. Issues including environment pollution, reduction in the catch, social and economic problems of the fishermen will be discussed thoroughly in the convention to prepare a comprehensive report. The convention will also focus on chalking out plans to solve the problems of the fishermen, Rao added.
இலங்கை அரசை கண்டித்து சென்னையில் நாளை காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் நடத்துகிறது.
தமிழக மீனவர்கள் நான்கு பேர் உயிரிழந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் உள்ள இலங்கை தூதரகம் முன்பு நாளை காலை 10 மணிக்கு காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு அறிவித்துள்ளார் .
இனி சவுக்கு முழு வேகத்தில் இயங்க வேண்டிய தருணங்கள் வந்துவிட்டன.
உங்களுக்கு பல தகவல்களை கொடுத்த "தொடர்புகள்" அரசியல் காரணக்களுக்காக இனிமேல் தகவல்களை தர மறுக்கலாம். அல்லது பல கதவுகள் அடைக்கப்படலாம். இனியும் தொடர்ந்து உண்மையான, மிக முக்கியமான தகவல்களை தருவது மட்டுமே இந்த தளம் தொடர்ந்து இயங்க வழி செய்யும்.
இப்பொழுது அதிமுக்கியமான, அத்தியாவசியமான ஒரு செய்தி கூடங்குளம் அணு மின் உலையின் பாதுகாப்பற்ற நிலை மற்றும் இந்த உலையில் விளையாடும் சர்வதேச அரசியல். இந்த அணு உலையில், மிக முக்கியமான "இயந்திர விபத்து" சில மாதங்களுக்கு முன் நிகழ்ந்துள்ளது. அது மூடி மறைக்கப்பட்டுள் ளது.
முழுமையான இந்திய தொழில்நுட்பத்தி ன் மூலம் ஒரு மெகாவாட் மின்சக்தி தயாரிக்க செலவு 8 கோடி ரூபாய்கள் (இவற்றிற்கான எரிபொருட்கள் இந்தியாவிலேயே கிடக்கின்றன). ஆனால் காங்கிரஸ் அரசின் வெளிநாட்டுக்கொள ்கைகளினால் அந்நிய நாட்டு எரிபொருட்கள் மற்றும் தொழில்நுட்பம் மூலம் ஒரு மெகாவாட் மின்சக்தி தயாரிக்க செலவு 18 கோடி ரூபாய்கள். இந்திய தொழில்நுட்பத்தை பயன்படுத்தினால் இயந்திர கோளாறுகள் அல்லது இயற்கைப்பேரழிவு களின் போது, மீட்பு பணிகளை வெகு சீக்கிரத்தில் கையாள முடியும். அனால் இப்பொழுது உள்ள வெளிநாட்டு இயந்திரங்களில் பழுது ஏற்பட்டால் அதனை கையாள இந்திய வல்லுனர்களால் முடியாது என்பதே உண்மை.
இப்பொழுது உள்ள நிலைமையில் ஜப்பானைப்போல இல்லாமல் ஒரு சிறு சுனாமி வந்தால் கூட, (காரணம் கூடங்குளம் அணுமின் உலை கடல் எல்லையில் இருந்து வெறும் 500 மீட்டருக்குள் உள்ளது. இப்பொழுது விபத்து நடந்த ஜப்பான் அணு உலை கடல் எல்லையில் இருந்து 2500 மீட்டர்கள் தூரத்தில் உள்ளது. அதுக்கே அந்த கதின்னா, நமக்கு?) கூடங்குளம் அணுமின் உலையின் மூலம் மிகப்பெரிய ஆபத்து ஏற்படும். அதன்மூலம் சென்னை உட்பட குறைந்தது 100 கிமி சுற்றளவு பகுதிகள் கதிர்வீச்சினால் கடுமையாக பாதிக்கப்படும்.
இந்த செய்தியின் உண்மைகளை கண்டுபிடித்து வெளியிடுங்கள்.
PLEASE WRITE IN DETAIL ON CHARGES AGAINST SONIA
Dr.Subramanian Swamy, Janata Party President and former Union Cabinet Minister for Law &Justice, today submitted a Petition of 206 pages, seeking from the Prime Minister Dr.Manmohan Singh the required Sanction to prosecute Ms. Sonia Gandhi under Sections 11 & 13 of the Prevention of Corruption Act. Sanction is required under Section 19 of the Act because she is Chairperson of the National Advisory Council with Cabinet rank.
In his Petition to the PM, Dr.Swamy has made out a prima facie case on documentary circumstantial evidence that Ms.Gandhi abetted Italian businessman and close family friend Ottavio Quattrocchi to obtain an illegal commission in the Bofors Gun Purchase deal, and then influenced the government of Prime Minister Narasimha Rao to enable Mr. Quattrocchi to escape from the country in July 1993. Thereafter she directed the Union Law Minister in 2005 to enable Mr. Quattrocchi to get his London accounts de-frozen and decamp scot free with over $ 200 million [about Rs 1000 crores].
Dr.Swamy has also made out a prima facie case that Mr. Gandhi has illegally held in Swiss bank accounts illegal monies of about Rs. 10,000 crores received as a legatee in 1991 following Rajiv Gandhi’s assassination. He also produced an admission on record of the spokesperson of the Russian government that KGB had provided funds to Ms. Gandhi and her family, as also evidence that she had received commissions on Indo-Soviet trade, which were illegal under Indian law.
In his Petition, Dr.Swamy has also catalogued a list of offences prima facie committed by Ms.Sonia Gandhi since 1974 which shows that she is an habitual offender who deserves to be prosecuted and punished.
For Janata Party
(Pran Nath Mago)
PA to Dr.Swamy
15, April 2011
Read all charges
www.janataparty.org
தங்கள் பணி கட்டாயம் தொடரவேண்டும், ஊழல் செய்யும் அதிகாரிகளின் முகத்திரை கிழிக்கப்படவேண் டும், இது ஒரு மக்கள் இயக்கமாக வளரவேண்டும்.
மேலும் தங்களுக்கு ஒரு வேண்டுகோள், என் போன்ற வாசகர்களால் தங்களுக்கு நேரடியாக உதவமுடியாது அது தங்களும் அறிந்ததே, ஆனால் எங்களால் முடிந்த உதவி செய்ய நீங்கள் வழி செய்யவேண்டும், ஆகையால் தங்கள் வலை தலத்தில் "Donation" வசதி அமைத்து தருமாறு பணிவன்புடன் கேட்டுகொள்கிறோம ்.
இவன்,
இரா.அன்பழகன்
சவுக்கு இணைய இதழ் உண்மைகளை வெளிக்கொணர மட்டுமே நடத்தப்படுகின்ற து. சவுக்கின் சங்கர் அவர்களின் பணி ஈடு இணையில்லாத மதிப்பு வாய்ந்தது. ஆனால் அவருடைய எழுத்தின் நோக்கம் சவுக்கின் மூலம் பல பேரை விழிப்படைய செய்ய வேண்டுமென்பதே. அவரின் எழுத்தின் மூலம் அவர் வேண்டுவது போராளிகளை மட்டுமே. ஜே போடும் ரசிகக்கும்பலை அல்ல.
ஆகவே அவருக்கு "எங்களின் உயிரையும் கொடுப்போம்" என்பது போன்ற பின்னூட்டங்கள் சலிப்பை மட்டுமே கொடுக்கும். அதனை விட, ஆக்கப்பூர்வமான வகையில் அவரை ஊக்குவித்தலே நமக்கு மேலும் நேர்மையான செய்திகள் கிடைக்க வழிசெய்யும்.
நாங்கள் "பொருளுதவி செய்ய தயார்" என்பது போன்ற பின்னூட்டங்கள் பாராட்டப்பட வேண்டியவை. மனதுக்குள் போராளியாக இருந்துகொண்டு, களம் காண வழியில்லாமல், யார் போராட்டங்களை முன்னெடுத்து செல்லவேண்டுமோ அவர்கள் ரஜினிகளின் பின்னாலும் விஜய்களின் பின்னாலும் ஓடுவதைக்கண்டு மனம் வருந்தி இருப்பவர்களின், முடிந்த ஒரே செயல் சவுக்கைப்போன்ற செயல் வீரர்களுக்கு பொருளுதவி செய்வது மட்டுமே.
சவுக்குக்கு இப்போதைய நேரடியான முக்கியமான பங்களிப்பு இந்த சவுக்கு இணைய தளத்தை மேலும் மேலும் பல வாசகர்களுக்கு அறிமுகப்படுத்து வதே.
இது முழுமையாக என் சொந்த கருத்து. இதன்மூலம் யார்மனதையும் புண்படுத்தும் நோக்கமில்லை. ஒருவேளை யார்மனமாவது புண்பட்டிருந்தா ல் அதற்காக "மகிழ்வேன்".
சவுக்கு இணைய தளத்தை, ஒரு பத்திரிக்கையாக நடத்துவது எளிதல்ல.
ஏனெனில் இந்த தளத்தில் பதியப்படும் செய்திகள் பெரும்பாலும் தகவல் அறியும் சட்டத்தின் மூலம் பெறப்பட்டாலும், சில மிக முக்கியமான தகவல்கள் "நம்பத்தகுந்த தொடர்புகளின் மூலம்" பெறப்படுகின்றன. ஒரு வெகுஜன பத்திரிக்கையாக இந்த தளத்தை நடத்தும் பொழுது, எதிரிகளின் தொடர்ந்த, தேவையில்லாத வெற்று (வெத்து) சட்டபூர்வமான தாக்குதல்களை சமாளிக்க சவுக்குக்கென்று தனியான சட்ட நிபுணர்களின் பங்களிப்பு தேவை. திரு புகழேந்தி மற்றும் இராதாகிருட்டினன ் அவர்கள் முழு ஒத்துழைப்பு அளித்தாலும் அவர்களால் தனிப்பட்ட முறையில் சவுக்குக்கென்று முழு நேரமும் இயங்க இயலாது.
மேலும் சவுக்கு அச்சு பதிவுத்துறையில் இருக்கும்பொழுது , (செய்திகளின் வீரியமும் உண்மைத்தன்மையும ் அதிகமிருந்தாலும ்) இந்த செய்திகள் மட்டும் போதாது. தமிழக இளைஞர்களில் பெரும்பான்மையான வர்கள் இன்னும் இரசிக சிகாமணிகளாகத்தா ன் உள்ளனர். அவர்களுக்காக சினிமா செய்திகள் முதற்கொண்டு சில பல மொக்கை செய்திகளும் தேவைப்படும். ஏனெனில், அச்சு பதிவு இதழாக இருக்கும்பட்சத் தில் சவுக்கு இதழ்கள் குறிப்பிட்ட அளவு விற்றாக வேண்டிய கட்டாயம் ஏற்ப்படும். இதழை நடத்த விளம்பரங்கள் வேண்டும், காலப்போக்கில் சவுக்கும் கூட (அடித்து அடித்தோ, அடிபட்டு அடிபட்டோ) பிய்ந்து போக நேரிடும்.
இணைய இதழாக இருக்கும்பொழுது , சவுக்கை முழுமையாக தடை செய்ய முடியாது. காரணம் வெவ்வேறு தளங்களில் (சர்வர்கள்) இருந்து தொடர்ந்து இயங்க முடியும். மேலும் இணைய இதழாக இருக்கையில், சவுக்கு சட்டபூர்வமான நடவடிக்கைகளுக்க ாக தினமும் கோர்ட்டிலேயே குடும்பம் நடத்த வேண்டிய தேவை இருக்காது. அந்த பொன்னான நேரத்தில் இன்னும் சவுக்கை கொஞ்சம் வேகமாக சுழற்ற முடியும்.
ஆகவே சவுக்கு இணைய தளத்திலேயே முழுமையாக இயங்க முடியும். இணையத்தின் மூலம் சவுக்கு தமிழக விக்கிலீக்ஸ் ஆக இருக்க முடியும்.
to start a magazene we need permission from Govt. and more money also. interference will be too high .
good. well said. I tooo.
well said... I appreciate you.
savukku ushaar.... unnai arasiyalukku iluthuvittaal sikkal thaan.usupethi vidugirargal unnai.
If hegets job... savukku is not possible to publish. either job or savukku.
very good ... well said...
neenga iruppenga... ok. savukku irukkanumna varumanam venumilla? atharkku vali enna?
Nandraga sonneergal. varumanam illamal eppadi jeevippathu.
Kindly give me the you tube link so that all of us will be benefitted.
well said. I agree with you.
from 2011,your countdown starts from 14-5-2011
வாழ்த்துக்கள்..
THEN ONLY ALL BAD POLICE WOULD BE BROUGHT TO BOOK
NOT A BAD IDEA!!!
கடலில் மீன் பிடிக்கச் சென்று மாயமான ராமேஸ்வர மீனவர்கள் நால்வரில் மூவரின் உடல்கள் ஏற்கெனவே மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, நான்காவது மீனவரின் உடல் இன்று கண்டெடுக்கப்பட் டுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் கோடியக்கரை அருகே மாரிமுத்து எனும் அந்த மீனவரின் உடல் கண்டெடுக்கப்பட் டதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த ஏப்ரல் 2-ம் தேதி கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற ராமேஸ்வரத்தைச் சேர்ந்த விக்டஸ், ஆண்டனி, ஜான்பால், மாரிமுத்து ஆகியோர் கரை திரும்பவில்லை. இவர்களில் 3 மீனவர்களின் உடல் ஏற்கெனவே கண்டுபிடிக்கப்ப ட்டது.
இந்நிலையில், மாரிமுத்துவின் உடலும் இன்று கண்டெடுக்கப்பட் டுள்ளது. இந்த நான்கு மீனவர்களை இலங்கை கடற்படை சுட்டுக் கொன்றுள்ளதாக உள்ளூர் மீனவர்கள் குற்றம்சாட்டியு ள்ளனர்.
முன்னதாக, இலங்கை கடற்படையினரின் அட்டூழியம் தொடர்ந்தால் கடுமையான போராட்டம் மேற்கொள்வோம் என்று எச்சரித்த மதிமுக பொதுச்செயலர் வைகோ, உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியிடம் இலங்கை தோற்றுவிட்டதால் , அந்த ஆத்திரத்தில் அந்நாட்டு கடற்படையினர் தமிழக மீனவர்களை கொன்றுள்ளதாக குற்றம்சாட்டியி ருந்தார்.
இந்த நிலையில், தமிழக மீனவர்கள் நால்வர் கொல்லப்பட்டது தொடர்பாக, பெங்களூருவில் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவிடம், பிஜேபி மூத்த தலைவரும், மக்களவை எதிர்கட்சித் தலைவருமான சுஷ்மா ஸ்வராஜ் இன்று புகார் தெரிவித்துள்ளார ்.
அப்போது, இந்த நிகழ்வு தொடர்பாக உண்மைகள் கண்டறியப்படும் என தம்மிடம் எஸ்.எம்.கிருஷ்ணா உறுதியளித்ததாக சுஷ்மா ஸ்வராஜ் தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள ார்.
மேலும், ராமேஸ்வரத்துக்க ு உடனடியாக செல்லுமாறு தமிழக பிஜேபி தலைவர் பொன் ராதாகிருஷ்ணனை தாம் கேட்டுக்கொண்டதா கவும் அவர் குறிப்பிட்டுள்ள ார்.
Keep it up
I am impressed by your article and start recommending to my friends. Till now i am able to make 100 people to follow up your article. I may not be able to contribute with you directly. But i wish to introduce each and every corner of people to read your article. Basically i am in software service industry & we paid for the service. This is also the service but i am paid my mental peace which is giving more benefit then my corporate salary. It makes me to feel like i am doing something to my society directly or indirectly. Please continue your service & we are here as young generation to support you. I had one request till now there is no such article about Anna Hazre as he is the one who started like revolution in india. Please write some article & prise him
athu enna soji bajji will not good for health.have u done anything like this . dont get irritat.ion by seeing others growth try do something good
ராமேஸ்வரம் : ""மத்திய, மாநில அரசுகள் தகுந்த நடவடிக்கை எடுக்காததால், மீனவர்கள் பலியாகும் துயரச்சம்பவங்கள ் தொடர்வதாக,'' பா.ஜ., மாநில தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். .பலியான மீனவர்களின் குடும்பத்தினரை பா.ஜ.,மாநில தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் நேற்று மாலை சந்தித்து ஆறுதல் கூறி, தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கினார். .
பின்னர்,பொன். ராதாகிருஷ்ணன் கூறியதாவது: இந்திய, இலங்கை நாடுகளுக்கு இடையே நடந்த கிரிக்கெட், நான்கு மீனவர்களின் உயிரை பறித்துள்ளது. இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் துன்புறுத்தி, படுகொலை செய்து வருவதை தடுக்க வேண்டிய மத்திய, மாநில அரசுகள், தகுந்த நடவடிக்கை எடுக்காததால் இந்த துயரச்சம்பவங்கள ் தொடர்கிறது.
கடந்த ஜன.,12 மற்றும் 22 ல் மீனவர்கள் வீரபாண்டியன், ஜெயக்குமார் இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்டனர். இதன்பின், பல மீனவர்கள் சிறைபிடிக்கப்பட ்ட நிலையில், சுஷ்மா சுவராஜ் டில்லியில் போராட்டம் செய்ததை தொடர்ந்து, மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
இதன்பின், பிரச்னைகள் தொடரவில்லை. தற்போது இலங்கை கடற்படையினரால் நான்கு மீனவர்கள் கொலை செய்யப்பட்ட துயரச்சம்பவம், இந்திய அரசின் ஆளுமையை கேள்விக்குறியாக ்கி உள்ளது. மத்திய அரசு துரித நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், இலங்கை அரசு இது போன்ற தவறுகளை தொடர்ந்து செய்யும்.
பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்திற்கு அரசு நிவாரணம் வழங்குவதுடன், குடும்பத்தினருக ்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். இல்லாவிட்டால் இலங்கை அரசுடன் சேர்ந்து மத்திய அரசும் இச்செயலில் ஈடுபட்டுள்ளதாக சந்தேகம் மக்களுக்கு ஏற்படும். இந்நிலை தொடர்ந்தால், தமிழக மீனவர்களின் பாதுகாப்பை வலியுறுத்தி, தமிழக கடல் பகுதியில் கடல் மறியல் போராட்டம் நடத்தப்படும், என்றார்
RSS feed for comments to this post