முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
புதிய தலைமைச் செயலக கட்டிடமும், டாஸ்மாக் பாரும் அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 16
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
திங்கட்கிழமை, 18 ஏப்ரல் 2011 20:16


இந்தக் கட்டுரை, 30 மே 2010 அன்று எழுதப் பட்டது. அந்தக் கட்டுரை இப்போது மறு பதிப்பு செய்வது பொருத்தமாகவே இருக்கிறது.   அப்போது, கருணாநிதி, புதிய தலைமைச் செயலக கட்டிடம் கட்டினாலே ஆயிற்று, என்று பிடிவாதம் பிடித்து, முழு முனைப்போடு வேலை செய்து கொண்டிருந்தார்.   அப்போது, ஜெயலலிதா,  புதிய தலைமைச் செயலக கட்டிடம் பார்த்தாலே அருவருப்பாக இருக்கிறது என்றும், 2011ல் அதிமுக ஆட்சி அமைத்ததும், பழைய புனித ஜார்ஜ் கோட்டையில் தான் ஆட்சி அமைப்பேன் என்றும், புதிய கட்டிடத்தை பயன் படுத்தப் போவதில்லை என்றும் அறிவித்துள்ளார்.

ஒரு வேளை, 2011ல் அதிமுக ஆட்சி அமைக்கும் பட்சத்தில், இந்தப் புதிய தலைமைச் செயலக கட்டிடத்தை என்ன செய்வது என்ற கேள்வி எழுகிறது. இது தொடர்பாக சவுக்கு ஆராய்ச்சியில் இறங்கிய போது, கிடைத்த ஆலோசனைகள் இதோ.. … …. 

தமிழகம் முழுக்க, அரசு டாஸ்மாக் கடைகளை திறந்து வைத்திருந்தாலும், ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் இருப்பது போல சிறந்த பார்கள் எங்குமே இல்லை. புதிய தலைமைச் செயலக கட்டிடத்தில் உள்ள சட்டசபை வளாகம், குளிர் சாதன வசதியோடு, ஸ்பான்ஞ் வைத்த இருக்கைகளோடு, மேசைகளோடு இருப்பதால், இந்தப் புதிய தலைமைச் செயலக கட்டிடத்தை டாஸ்மாக் பார் என்று அறிவிக்கலாம். 




இப்போது சட்டசபை நடக்கும் நாட்களில் உறுப்பினர்கள் எப்படி உளறுகிறார்களோ, அதே போல “குடி“ மக்கள் அனைவரும் உளறுவது பொருத்தமாக இருக்கும். ஆனால் சட்டசபை போல அல்லாமல் ஆண்டில் சில நாட்கள் மட்டும் நடக்காமல், வருடம் முழுவதும், ஜே ஜே என்று கூட்டம் இருக்கும். காந்தி ஜெயந்தி, மகாவீர் ஜெயந்தி போன்ற நாட்களில் மட்டும் விடுமுறை விடலாம். 


ஓவராக குடித்து விட்டு, சளம்பும் குடிமக்களை, இப்போது உள்ள அவைக் காவலர்களை வைத்தே, தூக்கி வெளியே போடலாம். இப்போது நடுநாயகமாக சபாநாயகர் உட்கார்ந்திக்கும் இடத்தையே கிச்சனாக்கி, அங்கே சைடிஷ் ஐட்டங்களை சமைக்கலாம், இவ்வாறு சமைப்பதால், பார் முழுக்க, உணவுப் பொருட்களின் வாசனை பரவி சேல்ஸ் அதிகரிக்கும்.


இந்த பார் திறக்கப் பட்டால், உலகத்திலேயே பெரிய பார் என்று, பாரெல்லாம் புகழும் அளவுக்கு, தமிழகத்துக்கு பெருமை வந்து சேரும். இக்கட்டிடத்தை திறக்கும் முன்பு செட் போட்ட, தோட்டா தரணியையே வைத்து, உள் அலங்காரம் செய்யலாம். 


ஓவராக குடித்து விட்டு “மட்டை“ ஆகும், குடிமக்களை, புதிதாக கட்டப் பட்டுள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதியிலேயே குறைந்த கட்டணத்தில் தங்க வைக்கலாம். இப்போது சட்டமன்ற உறுப்பினர்களை ஏற்றிச் செல்வதற்காக, மாநகர போக்குவரத்து கழகம் இயக்கும் பேருந்தினை பெரும்பாலான உறுப்பினர்கள் பயன்படுத்துவதில்லை என்பதால், கோயம்பேடு முதல், சென்னை நகரின் பல்வேறு இடங்களிலும் இருந்து, இந்த பாருக்கு, பேருந்துகள் ஏற்பாடு செய்யலாம்.


பத்திரிக்கையாளர்கள் பல பேர், சென்னை நகரின் மோசமான டாஸ்மாக் பார்களிலும், ப்ரஸ் கிளப் அருகிலும், தண்ணியடித்து மிகுந்த கஷ்டத்துக்கு உள்ளாவதால், தற்போது உள்ள பத்திரிக்கையாளர் மாடத்தை, பத்திரிக்கையாளர்கள் தண்ணியடிப்பதற்கு மட்டும் என்று அறிவித்து விட்டால், பத்திரிக்கையாளர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைவது மட்டுமல்லாமல், தமிழ்நாட்டில் பத்திரிக்கை சுதந்திரம் காக்கப் பட்டு விட்டது என்று சந்தோஷப் படுவார்கள்.

இந்தப் பகுதிக்கு “தண்ணீர் தேசம்“ என்று பெயர் வைக்கலாம்.


தற்போது, உயிரியல் பூங்கா, சென்னையை அடுத்த வண்டலூரில் அமைந்திருப்பதால், பொது மக்கள் அவ்வளவு தூரம் சென்று விலங்குகளை பார்க்க சிரமப் படுகிறார்கள். 




அதனால், புதிய தலைமைச் செயலக வளாகத்தை உயிரியல் சரணாலயமாக மாற்றி அறிவிக்கலாம். சபாநாயகர் அமரும் இருக்கையில், சிங்கத்தின் கூண்டை அமைப்பது மிகப் பொறுத்தமாக இருக்கும்.


திடீரென்று விலங்குகளுக்குள் சண்டை ஏற்பட்டு ஒன்றை ஒன்று அடித்துக் கொண்டால், சட்டசபை நடப்பது போன்ற உணர்வையே ஏற்படுத்தும். மேலும், விலங்குகள், தங்கள் பாஷையில், குய்யோ முறையோ என்று கத்துவது, சூடான விவாதம் நடப்பது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்தும்.


பழக்கப் படுத்தப்பட்ட, சொன்னால் டைவ் அடிக்கும், குரங்கு, சைக்கிள் ஓட்டும் யானை, வளையத்தை தாண்டும் நாய் போன்ற விலங்குகளை, தற்போது, அரசுக்கு, ஜால்ரா அடிக்கும் விடுதலை சிறுத்தைகள் உறுப்பினர்கள், மற்றும், காங்கிரஸ் உறுப்பினர்கள் அமர்ந்திருக்கும் இடங்களில் வைக்கலாம்.




உலகிலேயே முழுக்க முழுக்க குளிர்சாதன வசதி செய்யப் பட்ட விலங்குகள் சரணாலயம் தமிழகத்தில்தான் உள்ளது என்ற பெருமை நம்மை வந்து சேரும். 


தற்போது சட்டசபை காட்சிகளை தொகுத்து இரவு தொலைக்காட்சிகளில் காட்டுவது போல, டிஸ்கவரி சேனல், அனிமல் ப்ளானெட் போன்ற தொலைக்காட்சி நிறுவனங்களோடு, லைவ் டெலிகாஸ்ட் செய்ய ஒப்பந்தம் போடலாம். இந்நிறுவனங்கள், இந்த விலங்குகளை படம் பிடிப்பதை விட, தற்போது நடக்கும் சட்டசபையை படம் பிடிப்பதில் ஆர்வம் காட்டக் கூடும். ஆனால், விலங்குகளின் நலன் மிக முக்கியம் என்பதால் விலங்குகள் பற்றிய ஒளிபரப்புக்கே அனுமதி அளிக்க வேண்டும்.


புலி, சிங்கம் போன்ற அரிய வகை விலங்குகள், அழிந்து வருவது குறித்து, பல்வேறு திட்டங்களை மத்திய அரசு இயற்றி வரும் சூழலில், இது போன்ற அரிய வகை விலங்குகளை, இந்த சட்டசபை வளாகத்துக்குள் பராமரித்தால், ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை, இந்த விலங்குகள், பல்கிப் பெருகி, பெரிய அளவு வளர்ச்சி அடைந்திருப்பதை காண முடியும். இந்த இடத்தை இது போல பயன் படுத்தவதன் மூலம், மிக மிக அரிதான அத்தனை உயிரினங்களையும் ஐந்து ஆண்டுகளுக்குள் ஏராளமாய் பெருக்கி விடலாம். 
 
பத்திரிக்கையாளர் மாடத்தில், விலங்கியல் ஆராய்ச்சியில் ஈடுபடும் விஞ்ஞானிகளுக்கு ஒதுக்கி விடலாம்.

இந்த இடத்துக்கு “மாக்கள் மன்றம்“ என்று பெயரிட்டு அழைத்தால் மிகச் சிறப்பாக இருக்கும்
 

Comments  

 
0 #38 arokiaraj 2011-09-05 10:29
try to find out the money scandals of 800 Cores,dont write like this please?????????????????
Quote
 
 
0 #37 karthi 2011-05-18 19:01
very good idea ...............
Quote
 
 
0 #36 raji 2011-04-23 14:42
Quoting jaya:
Quoting rasu:
Subbu,

you are right... village la per head to Rs. 500 - 2000 varai poi irruku... City vasigal than pavam, oru paisa kedaikala...

EXACTLY. i BELONG TO CHENNAI. i DID NOT GET EVEN A SINGLE PIE FROM THESE CULPRITS.YOU ARE RIGHT.


mylaporela thanga balu ottuku 1000 rubai kodutharu, dmk karanga attaiya pottutu konja perukku 80 ruba koduthuttanga
Quote
 
 
0 #35 raji 2011-04-23 14:39
Quoting lakshmidharan:
எனது பேரன் அமெரிக்காவிலுரு ந்து வந்தபோது சென்னை இன்டர்நேஷனல் விமானநிலையம்
தான் இறங்கிய இடம். பீச் , அண்ணா சமாதி, எம்ஜிஆர் சமாதி , லைட் ஹவுஸ் என இடங்களை காண்பித்துக்கொண ்டு வந்தோம். அப்போது மெட்ரோ ரயிலில் செல்லும்போது அவன் சென்ட்ரல் ரயில் நிலையம் , பொது மருத்துவ மனை என பார்த்துவரும்போ து , திடீரென
" இது என்னதாத்தா பெரிய வாட்டர் டாங்க்" " இதுலதான் ஜெயலலிதா அம்மா வோட நியூ வீராணம் தண்ணி வந்து ரொம்பதா ..." என்றானே பாக்கணும் ... ரயிலில் இருந்த அத்துணை பேரும் "கொல்" என சிரித்துவிட்டனர ் .


adhu water tank alla, azhukku oil tank
Quote
 
 
+2 #34 விவசாயி 2011-04-23 11:22
முட்டாள்தனமான தலைப்பு! ஒருவேளை எழுதியவன் முட்டாளோ!! மக்கள் வரிபணத்தில் கட்டப்பட்ட ஒரு கட்டடத்தை உங்கள் இஷ்டம்போல் பார், ஜூ ஆக்குவது என்பீர்களா? தலைமை செயலகம் கட்டப்பட்ட விதத்தில் ஊழல் எனில் அதை வெளிச்சம் போடுங்கள் அதை விடுத்து பார், ஜூ ஆக்குங்கள் என்பதா? கத்திபாரா, ஜெமினி மேம்பாலங்கள் வடிவம் பிடிக்கவில்லை வேண்டுமானால் மாற்றிவிடுவோமா? அல்லது கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட் அழகு இல்லை என இடித்துவிடுவோமா ? எனது கடும் கண்டனத்தை சவுக்குவிற்கு தெரிவித்து கொள்கிறேன் இனிமேல் இதுபோல லாயக்குஅற்ற தலைப்புகளில் கட்டுரைகளை பிரசுரிக்க வேண்டாம், இது போன்ற கட்டுரைகள் வாசகர்கள் இந்த தளத்தினை பயன்படுத்துவதை குறைக்க கூடும். நன்றி
Quote
 
 
+2 #33 lakshmidharan 2011-04-21 18:33
எனது பேரன் அமெரிக்காவிலுரு ந்து வந்தபோது சென்னை இன்டர்நேஷனல் விமானநிலையம்
தான் இறங்கிய இடம். பீச் , அண்ணா சமாதி, எம்ஜிஆர் சமாதி , லைட் ஹவுஸ் என இடங்களை காண்பித்துக்கொண ்டு வந்தோம். அப்போது மெட்ரோ ரயிலில் செல்லும்போது அவன் சென்ட்ரல் ரயில் நிலையம் , பொது மருத்துவ மனை என பார்த்துவரும்போ து , திடீரென
" இது என்னதாத்தா பெரிய வாட்டர் டாங்க்" " இதுலதான் ஜெயலலிதா அம்மா வோட நியூ வீராணம் தண்ணி வந்து ரொம்பதா ..." என்றானே பாக்கணும் ... ரயிலில் இருந்த அத்துணை பேரும் "கொல்" என சிரித்துவிட்டனர ் .
Quote
 
 
-1 #32 jaya 2011-04-19 20:53
SAVUKKU. AVASARPADVENDAA M. MAY 13 VARAI PORUTHU IRUKKAVUM.
Quote
 
 
+1 #31 jaya 2011-04-19 20:52
Quoting விகடகவி:
கடந்த இடை தேர்தல்களில் போல் இந்த முறை பணம் கொடுத்தாக தெரியவில்லை. தேர்தல் ஆணையத்தின் கெடுபிடி அப்படி இருந்தது. ஏதோ சில இடங்களில் மட்டும் கொடுத்துள்ளார்க ள். திமுக மீது மக்கள் பயங்கர கோபத்தில் உள்ளனர். குறிப்பாக மின்சார வெட்டும் டாஸ்மாக்கும் பெண்களிடம் வெறுப்பை சம்பாதித்துள்ளத ு. சென்னையில் மட்டும் எப்படியோ தடையில்லாமல் மின்சாரம் சப்ளை செய்தார்கள். ஆனால் ஒட்டு மொத்த தமிழ்நாடும் கடுமையாக மின்வெட்டால் பாதிப்படைந்தது. எந்த ஒரு ஆட்சியிம் பெண் ஓட்டாளர்களை வெறுப்பேற்றினால ் மறுபடியும் ஆட்சியை பிடிப்பது கஷ்டமே.

தவிர ஒட்டு மொத்த கருணாநிதி சந்ததிகள் போட்ட ஆட்டம் அனைத்து மக்களையும் கடுப்பாக்கியுள் ளது. 2 லட்சம் கோடி ஊழலின் எதிரொலியைப் பற்றி சொல்லவே வேண்டாம்.

திமுக 50 மேலே இடங்களை கைபற்றலாம். ஆனால் ஆட்சிக்கு வருவது கஷ்டமே. அதிமுக திமுகவைவிட கொஞ்சம் அதிகம் பெற்று பிற கட்சிகளுடன் சேர்ந்து ஆட்சி அமைக்கும். அதிமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் சரியாகவே தேர்தல் பிரச்சாரம் செய்யவில்லை. சொல்லப்போனாலும் எந்தக் கட்சியுமே சரியான முறையில் பிரச்சாரம் செய்யவில்லை. இந்தத் தேர்தலில் ஹைலைட்டான பிரச்சாரம் திமுக ஒழிப்பு பிரச்சாரம் தான். தம்பி விஜயகாந்த் தேர்தலுக்கு முந்தி ஆவேசமாக பேசுனாரு, ஆனால் தேர்தல் பிரச்சாரத்தில் அடக்கி வாசித்தாரு.

எது எப்படியோ 77.4% ஓட்டு போட்டு திமுகாவிற்கு கிலி ஏற்படுத்தியிருக ்கும் மக்களும், கடுமையான கெடுபிடி போட்டு அழகிரிக்கே இனிமா கொடுத்த தேர்தல் ஆணையமும் தான் இந்தத் தேர்தலின் கிளைமாக்ஸ்.

PRACHARTHIRKKUT HAN EC TIME KODUKKAVILLAYE.
Quote
 
 
+1 #30 shanks 2011-04-19 20:37
Sell it and use the money for Coouvam cleaning
Quote
 
 
+4 #29 manamulla tamilan 2011-04-19 19:18
ஐடியா 1. இந்த கிணற்றில் (சட்டசபை) சரக்கை நிரப்பி ஊற்றி தமிழ்நாட்டின் எல்லா ஊர்களுக்கும் பைப் வழியாகவே சப்ளை செய்யலாம்.கூடவே சிறிய சிறிய குழாய்களை இணைத்து ஓவர் குடிமகன்களில் வீடுகளுக்கு நேரடியாகவே சப்ளை செய்து மீட்டர் பொருத்தி அதற்கேற்றபடி வசூலித்துக் கொள்ளலாம்.
2. சென்னைவாசிகள் வெயிலை தாங்க முடியாமல் சிரமப்படுவதால், இந்த கிணற்றில் தண்ணீரை நிரப்பி வைத்து சென்னை மக்கள் அனைவரையும் நீச்சலடிக்க வைக்கலாம்.
3.ஆற்காடு வீரச்சாமியை மட்டும் இந்த கிணற்றுக்குள் தூக்கி போட்டு வெளிச்சம் வரும் அத்தனை இடங்களையும் மூடிவிட்டு இருட்டு என்றால் எப்படி இருக்கும் என்று தெளிய வைக்கலாம்.
4.ஒரு பக்கம் பார்த்தால் இருவர் படத்தில் வரும் அந்தமான் ஜெயிலை போல் இருப்பதால் வருங்காலத்தில் இங்கு வந்து சேரும் (இன்னும் 24 நாளில்) அரசியல் வியாதிகளுக்கு இதை சிறையாக பயன்படுத்தலாம்
Quote
 
 
+1 #28 jaya 2011-04-19 17:51
iNDIAN OIL BULIDING IL OIL KOTTIVAIKKUM CONTAINER POLA IRUKKU. INTHA BUILDING. ITHUKKU JALRA VERA.
Quote
 
 
0 #27 jaya 2011-04-19 17:49
Quoting rasu:
Subbu,

you are right... village la per head to Rs. 500 - 2000 varai poi irruku... City vasigal than pavam, oru paisa kedaikala...

EXACTLY. i BELONG TO CHENNAI. i DID NOT GET EVEN A SINGLE PIE FROM THESE CULPRITS.YOU ARE RIGHT.
Quote
 
 
+1 #26 Suresh Raja 2011-04-19 17:05
சவுக்கு,
அதிமுக வந்தால், இந்த கட்டிடத்தை டாஸ்மாக் இல்லாட்டி விலங்குகள் சரணாலயம் ஆக மாற்றலாம் அப்டின்னு சொல்றிங்க... அது ஏற்கனவே ரெண்டும் கலந்து தானே இருக்கு. அத எதுக்கு பிரிக்கணும்? அது சரி, சபாநாயகர் இருக்கைய சிங்க கூண்டுன்னு சொல்லுறீங்களே இது உங்களுக்கே ஓவரா தெரியல? இத சிங்கத்துகிட்ட போய் சொல்லிராதிங்க... இருக்குற கொஞ்ச நஞ்ச சிங்கங்களும் தற்கொலை பண்ணிக்கும். இப்பெல்லாம் சபாநாயகர் ஆளுங்கட்சிக்கு சாதகமா இல்லாட்டி என்ன நடக்கும்னு எல்லாருக்குமே தெரியும். இந்தம்மா இப்பவே கொடநாடு போயாச்சு.. ஆட்சிக்கு வந்தா, தலைமை செயலகத்தை கொடநாடுக்கு மாத்தாம இருந்தா சரி....
Quote
 
 
0 #25 ANBU 2011-04-19 16:38
THANKS SAVUKKU
Quote
 
 
0 #24 anbu 2011-04-19 16:36
unmai aiadmk and dmdk than aatchi amaikka poguthu savukku solvthu unami oru bridge katta 6 year anal oru satta mandram katta 6 month ennaya achi dmk education loan tharapanam illai semmozi maanadu amaikka 450crore nichiyam savukku solvathu anaithum unmai reach to savukku all pamara makkal BY ANBU TAMILAN
Quote
 
 
+5 #23 Ganpat 2011-04-19 15:39
இவ்வளவு கோடி செலவில்,இந்த அளவு ஒரு அவலட்சணமான கட்டிடம் யாரும் கட்டியதில்லை.உலகிலேயே அழகான கட்டிடம் (தாஜ்மஹால்) மற்றும் உலகிலேயே அவலட்சணமான கட்டிடம் (தமிழ் நாடு தலைமைச் செயலகம்) இரண்டும் உள்ள நாடு என்ற பெருமை இந்தியாவிற்கே உண்டு
Quote
 
 
-5 #22 manidhan 2011-04-19 15:21
savukku editor.. admk sombu thookaradha konjam niruthu...
Quote
 
 
0 #21 MDMK 2011-04-19 15:16
என் இனிய தமிழ் நண்பர்களுக்கு,
வணக்கம்!!!

ஒவ்வொரு வருடமும் பிரபல ஆங்கில இதழான டைம் இதழின் 2011 ஆம் ஆண்டின் சிறந்த 100 மனிதர்கள் பட்டியல்ல ஒரு ஆளா வந்து “நான் ரொம்ப நல்லவன்”னு பேர் எடுக்க கிளம்பிட்டாப்ல ராஜபக்ஷே.உலக அளவுல நான் ரொம்ப நல்லவன்னு அங்கீகாரம் வாங்க துடிக்கிற அவனுக்கு தமிழர்களாகிய நாம எல்லாரும் எதிரா ஓட்டு போட்டு அவனோட முகத்துல கரிய பூசணும்.

அதுக்கு நீங்க பண்ண வேண்டியது இதுதான்.

கீழே இருக்குற “லிங்கை” கிளிக் பண்ணி No Influential தேர்வு பண்ணி வாக்களிச்சா போதும். இதுவும் அவனுக்கு ஒரு பாடமா இருக்கணும்.அதனால தயவு பண்ணி இந்த மெய்லை நண்பர்கள் அனைவருக்கும் மறு அஞ்சல் செய்யவும் .


http://www.time.com/time/specials/packages/article/0,28804,2058044_2060338_2060246,00.html?xid=fb-time100


Regards,

MDMK
Quote
 
 
0 #20 sasti 2011-04-19 15:13
it looks like water tank, so better make it as an water tank
Quote
 
 
0 #19 thangathaaragai 2011-04-19 14:44
ஹலோ கண்டிப்பா எங்க அம்மா புனித ஜார்ஜ் கோட்டையில்தான் கண்டிப்பாக ஆட்சி அமைக்கும். அதில் எந்த மாற்றமும் இல்லை.
Quote
 
 
0 #18 srini.vas 2011-04-19 14:00
சவுக்கு சார்,
கருணாநிதியும் அவர் குடும்பமும் ஊழல் பேர்வழிகள் ...துரத்தப்பட வேண்டியவர்கள் என்பதையும் அதற்கான உங்கள் உழைப்பையும் வரவேற்கிறேன் ...ஆனால் அதற்காக ஜெயா வரவேண்டும் என்ற முனைப்பில் நீங்கள் பேசுவது...சாரி...உங்கள் நேர்மை பல் இளிக்கிறது....கருணா கும்பல் ஆட்சியில் திருட்டுடன் வளர்ச்சி பணிகளும் உண்டு என்பது யாரும் மறுக்க முடியாது...ஆனால் ஜெயா கும்பல் திருட மட்டுமே தெரிந்த வேறு ஒரு இழவும் தெரியாத திறமையற்ற கும்பல்..ஜெயா ஆட்சியில் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வந்து அப்பாயின்மெண்டி ட்காக மாதகணக்கில் காத்திருந்து வெறுத்துப்போய் ஆந்திராவுக்கு ஓடிப்போனோர் பலர்...

ஊழல் பேர்வழிகள் பற்றியும் சீர்கேடுகள் பற்றியும் நரம்பு புடைக்க பேசும்போது நாம் பேசும் எல்லாமே நேர்மையாக இருக்க வேண்டியது அவசியம்..
Quote
 
 
0 #17 மணி 2011-04-19 13:16
இந்தக் கட்டிடத்தை ஏலத்தில் விற்பனை செய்து, அந்தப் பணத்தை சூரிய சக்தி போன்ற மின் உற்பத்திச் செலவுகளுக்கு உபயோகப்படுத்தலா ம். மின் உற்பத்திக்கு போர்க்கால நடவடிக்கையாக முக்கியத்துவம் கொடுத்து செயல்பட வேண்டும்.
ஊழல்வாதிகளது சொத்துக்களை அரசாங்கம் கைப்பற்றி, நேரடியாக மக்கள் பயன் படுத்தும் விதத்திலும், அவ்வாறு இல்லாத சொத்துக்களை விற்று அந்தப் பணத்தில் மின் உற்பத்திக்கும், பிற நலத் திட்டங்களுக்கும ் பயன்படுத்த வேண்டும். பீஹாரில் இவ்வாறு செயல்படுத்தப்பட ்டு வருகிறது.
Quote
 
 
0 #16 su raghuraman 2011-04-19 12:44
Yes I agree with the Subbhu. This building may be turned as Jail for Karunanidhi and his family. Let him happily spend his remaining years in this building.
Quote
 
 
0 #15 DUBBUKU 2011-04-19 11:39
என்னமோ அதிமுகவுக்கு மெஜாரிட்டி கிடைத்து ஆட்சி அமைத்து விட்ட மாதிரி. இப்பவே சவுக்கு சப்பை கட்டுது. . HE S NOT A JOURNALIST ADMK AATCHIKU VANDAL THAN DISSMISS ANA GOVT JOB CASE WITHDRAWAL KAGA ALLURA ORU SUYANALA VIYADI. SO ALL PLEASE DON'T APPRECIATE SAVVUKU . WATCH HIS 3RD RATED (JALLDRA ) ARTICLES AFTER THE ELECTION.
Quote
 
 
+2 #14 பால்ராஜ் 2011-04-19 11:34
அன்பான சவுக்கு,

உங்களுடைய பதிவுகளை கூடுமானவரை தொடர்ந்து படித்து வருபவன் நான். திமுக அரசின் செயல்பாடுகளை விமர்சிப்பதையும ், ஊழல்களை வெளிக்கொண்டு வருவதிலும் சவுக்கு காட்டிய முனைப்பு நிச்சயம் பாராட்டுக்குரிய து. தற்போது நிலவும் மோசமான பத்திரிக்கை தர்மங்களுக்கு மத்தியில் தங்களின் நியாயமான, தைரியமான எழுத்துக்கள்தான ் ஏராளமான (என்னைப்போன்ற) வாசகர்களை உங்கள் தளத்துக்கு அழைத்து வந்ததுமட்டுமல்ல ாமல், ஆதரவாளர்களாகவும ் மாற்றியது. ஆனால் கடந்த சில பதிவுகள், சவுக்கின் மேல் கூறப்படும் பெரும்பான்மையான குற்றச்சாட்டான "அதிமுக ஜால்ரா" என்பதை நிரூபிப்பதைப்போ ல் இருக்கிறது. உண்மையான பத்திரிக்கை தர்மம் என்பது, தவறு எங்கு நடந்தாலும் அதை வெளிக்கொண்டு வருவதும் சுட்டிக்காட்டுவ தும் தான் என்பது தாங்கள் அறியாதது அல்ல. அதிமுக ஆட்சி வருகிறதோ இல்லையோ...மே13 வரை பொறுத்திருப்போம ். உங்களுடைய சமீப பதிவுகள், அதிமுக ஆட்சியில் நடக்கும் தவறுகளை சுட்டிக்காட்டுவ தில் "தீவிரம்" "தீரம்" இருக்குமா என்பதை சந்தேகத்துக்குள ்ளாக்குகிறது. ஜெயலலிதா ஒன்றும் பெருந்தலைவர் காமராஜர் அல்ல. அவல ஆட்சியை கொடுப்பதில் கருணாவுக்கு கொஞ்சமும் சளைத்தவர் அல்ல இந்த அம்மையார். மக்களின் வாழ்வாதரத்தை கேள்விக்குள்ளாக ்கும் ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி அளித்தது அம்மையார் ஆட்சியில்தான். அனுமதி அளிக்க அம்மையார் எடுத்துக்கொண்ட நேரத்தைப்போல பல ஆயிரம் மடங்கு நேரமும் பணமும், அந்த அனுமதியை நீக்க செலவிடப்பட்டுக் கொண்டிருக்கிறது . தேர்தலுக்கு முன்வரை ஆட்சி மாற்றத்திற்காக தாங்கள் எடுத்த முன்னெடுப்புகளு க்கு நன்றி. ஆனால் மே13 வரை எந்த கட்சி சார்பு நிலையையும் நீங்கள் எடுக்காமல் இருக்கவேண்டுமென ்பதுதான் என்னைப்போன்ற வாசகர்களின் ஆதரவாளரிகளின் எதிர்பார்ப்பு.
Quote
 
 
+1 #13 sakthivel 2011-04-19 10:48
yow savukku dubukku apdeye ADMK vandhaalum un polappu naara polappu dhan yarai thiiti ne eludha mudiumm MAY13 may be last date for u also....bye bye
Quote
 
 
0 #12 dhass 2011-04-19 09:49
"புதிய தலைமைச் செயலகத்துல, இன்னும் முழுசா கட்டட வேலை முடியல... ஒவ்வொரு துறைக்கான அலுவலகம் தயாரானதும், பழைய தலைமைச் செயலகத்துல இருந்து, அதை, இங்க மாத்திட்டு இருக்காங்க... ஏற்கனவே, சட்டசபை செயலகம், பொதுத் துறை, ஊரக வளர்ச்சித் துறை போன்ற துறை அலுவலகங்களை இங்க மாத்திட்டாங்க...

""மாறிய துறைகளோட ஊழியர்களே, புது இடத்துல சிரமப்பட்டுட்டு இருக்காங்க... பக்கத்துலேயே கட்டட வேலைகள் நடந்திட்டு இருக்கறதால, ஒரே தூசியா இருக்கு... அலுவலகத்துக்கான கோப்புகளையும், பொருட்களையும் கொண்டு வந்து வைக்கறதால, தூசி சேருதுங்க... ஊழியர்கள் தூசிக்கு நடுவிலே வேலை பார்க்க வேண்டியிருக்கறத ா புலம்பறாங்க...''
(19 . 4 . 11 ) டி கடை பெஞ்ச் பகுதி நன்றி தினமலர்
8)
Quote
 
 
+1 #11 விகடகவி 2011-04-19 09:26
கடந்த இடை தேர்தல்களில் போல் இந்த முறை பணம் கொடுத்தாக தெரியவில்லை. தேர்தல் ஆணையத்தின் கெடுபிடி அப்படி இருந்தது. ஏதோ சில இடங்களில் மட்டும் கொடுத்துள்ளார்க ள். திமுக மீது மக்கள் பயங்கர கோபத்தில் உள்ளனர். குறிப்பாக மின்சார வெட்டும் டாஸ்மாக்கும் பெண்களிடம் வெறுப்பை சம்பாதித்துள்ளத ு. சென்னையில் மட்டும் எப்படியோ தடையில்லாமல் மின்சாரம் சப்ளை செய்தார்கள். ஆனால் ஒட்டு மொத்த தமிழ்நாடும் கடுமையாக மின்வெட்டால் பாதிப்படைந்தது. எந்த ஒரு ஆட்சியிம் பெண் ஓட்டாளர்களை வெறுப்பேற்றினால ் மறுபடியும் ஆட்சியை பிடிப்பது கஷ்டமே.

தவிர ஒட்டு மொத்த கருணாநிதி சந்ததிகள் போட்ட ஆட்டம் அனைத்து மக்களையும் கடுப்பாக்கியுள் ளது. 2 லட்சம் கோடி ஊழலின் எதிரொலியைப் பற்றி சொல்லவே வேண்டாம்.

திமுக 50 மேலே இடங்களை கைபற்றலாம். ஆனால் ஆட்சிக்கு வருவது கஷ்டமே. அதிமுக திமுகவைவிட கொஞ்சம் அதிகம் பெற்று பிற கட்சிகளுடன் சேர்ந்து ஆட்சி அமைக்கும். அதிமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் சரியாகவே தேர்தல் பிரச்சாரம் செய்யவில்லை. சொல்லப்போனாலும் எந்தக் கட்சியுமே சரியான முறையில் பிரச்சாரம் செய்யவில்லை. இந்தத் தேர்தலில் ஹைலைட்டான பிரச்சாரம் திமுக ஒழிப்பு பிரச்சாரம் தான். தம்பி விஜயகாந்த் தேர்தலுக்கு முந்தி ஆவேசமாக பேசுனாரு, ஆனால் தேர்தல் பிரச்சாரத்தில் அடக்கி வாசித்தாரு.

எது எப்படியோ 77.4% ஓட்டு போட்டு திமுகாவிற்கு கிலி ஏற்படுத்தியிருக ்கும் மக்களும், கடுமையான கெடுபிடி போட்டு அழகிரிக்கே இனிமா கொடுத்த தேர்தல் ஆணையமும் தான் இந்தத் தேர்தலின் கிளைமாக்ஸ்.
Quote
 
 
0 #10 karthi 2011-04-19 08:31
savukkin pokku kavalai alikkirathu...nadu nilai thavaruvathaga therigirathu..antha aal tharperumaikaga paniya thavarukkaga namathu vari panathil kattiya kattidam paazh aga viduvathu azhagalla jayalalithavukk u..itharku sappai kattu kattum savukkin pokku sarialla..ippadiye ponal savukku yarum padikka mattargal..gavanam thevai Shankar..
Quote
 
 
0 #9 Pandiyan 2011-04-19 07:05
This should be Donate to TAMIL MAIYAM NGO. or to NAKKEERAN KAMARAJ.
Quote
 
 
0 #8 Unmainaa! 2011-04-19 07:02
Paint the whole structure with green. Amma would start loving it and use it.
Quote
 
 
0 #7 KK 2011-04-19 06:55
சென்னை, ஏப்.18: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கொடநாடு எஸ்டேட்டுக்கு செவ்வாய்க்கிழமை செல்கிறார். சென்னையிலிருந்த ு விமானம் மூலம் கோவை செல்லும் அவர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கொடநாடு செல்வார் என்று அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன.

வாக்கு எண்ணிக்கைகுக்கு சில நாள்களுக்கு முன்பாக அவர் சென்னை திரும்புவார் என்று தெரிகிறது. கொடநாட்டில் இருந்தபடி கட்சிப் பணிகளைக் கவனிப்பார் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

வாக்கு எண்ணிக்கைக்குப் பின்னர் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் தேர்தலில் வெற்றி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பின் அடிப்படையில் புதிய அமைச்சரவை குறித்தும் அவர் கொடநாட்டில் தங்கியிருக்கும் போது ஆலோசிப்பார் என்று கூறப்படுகிறது
Quote
 
 
+15 #6 savukkunetatgmail 2011-04-19 05:29
கை அடித்து.......அப்பிடின்னா? எனக்கு இந்த சப்ஜக்ட் கொஞ்சம் தெரியாது.....DMK ல எல்ல மினிஸ்டரும் இப்படி தான?

Quoting subbu:
என்னமோ அதிமுகவுக்கு மெஜாரிட்டி கிடைத்து ஆட்சி அமைத்து விட்ட மாதிரி. இப்பவே சவுக்கு சப்பை கட்டுது. மே 13 பொருத்து இருந்து பாருங்கள் தெரியும். கருணாநிதியை குறைத்து மதிபிடவேண்டம். எல்ல தொகுதிகளிலும் தண்ணீராக காசை கொட்டி பொது மக்களிடம் கை அடித்து சத்தியம் வாங்கி இருக்கிறார்கள். அதனால் தான் திமுகவினர் தெம்பாக இருக்கிறார்கள். இதை மே 13 அன்று தெரிந்து கொள்வீர்கள்.
Quote
 
 
+16 #5 salem ganesh 2011-04-19 00:17
தீ விபத்துக்கு உள்ளான எரிந்து போன கட்டடத்தை பார்ப்பது போன்ற ஒரு உணர்வு தான் வருகிறது,சட்டசப ை வளாகத்தை பார்க்கும் போது.என்ன ரசனையோ கண்றாவி.
Quote
 
 
-20 #4 jaya 2011-04-19 00:02
Quoting subbu:
என்னமோ அதிமுகவுக்கு மெஜாரிட்டி கிடைத்து ஆட்சி அமைத்து விட்ட மாதிரி. இப்பவே சவுக்கு சப்பை கட்டுது. மே 13 பொருத்து இருந்து பாருங்கள் தெரியும். கருணாநிதியை குறைத்து மதிபிடவேண்டம். எல்ல தொகுதிகளிலும் தண்ணீராக காசை கொட்டி பொது மக்களிடம் கை அடித்து சத்தியம் வாங்கி இருக்கிறார்கள். அதனால் தான் திமுகவினர் தெம்பாக இருக்கிறார்கள். இதை மே 13 அன்று தெரிந்து கொள்வீர்கள்.

I AGREE WITH SUBBU. PLEASE WAIT. BUT I DONT AGREE THAT DMK HAS SPENT MONEY.
Quote
 
 
+3 #3 rasu 2011-04-18 23:53
Subbu,

you are right... village la per head to Rs. 500 - 2000 varai poi irruku... City vasigal than pavam, oru paisa kedaikala...
Quote
 
 
-12 #2 subbu 2011-04-18 23:16
என்னமோ அதிமுகவுக்கு மெஜாரிட்டி கிடைத்து ஆட்சி அமைத்து விட்ட மாதிரி. இப்பவே சவுக்கு சப்பை கட்டுது. மே 13 பொருத்து இருந்து பாருங்கள் தெரியும். கருணாநிதியை குறைத்து மதிபிடவேண்டம். எல்ல தொகுதிகளிலும் தண்ணீராக காசை கொட்டி பொது மக்களிடம் கை அடித்து சத்தியம் வாங்கி இருக்கிறார்கள். அதனால் தான் திமுகவினர் தெம்பாக இருக்கிறார்கள். இதை மே 13 அன்று தெரிந்து கொள்வீர்கள்.
Quote
 
 
+3 #1 V.Jai 2011-04-18 22:44
Sabhas....
Open zoology park with fully airconditioned facility.
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 144 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday6941
mod_vvisit_counterYesterday11112
mod_vvisit_counterThis week28140
mod_vvisit_counterLast week80132
mod_vvisit_counterThis month230872
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12752991