|
அன்பார்ந்த கலைஞர் அவர்களுக்கு சவுக்கின் அன்பான வணக்கம். இது வரை உங்களை சவுக்கு கலைஞர் என்று அழைத்ததில்லை. ஆனால், கலைஞர் என்று அழைப்பதுதான் பிடிக்கும் என்பதால், இப்போது சவுக்கு உங்களை கலைஞர் என்றே அழைக்கிறது. ஏனெனில், பலமான எதிரியுடம் மோதுவது தான் சவுக்குக்குப் பிடிக்கும். இப்போது பலமனைத்தும் இழந்து, பலவீனமான நிலையில் உள்ள நபர் நீங்கள்.
டாக்டர் கலைஞர் என்று உங்களை அழைக்கவியலாது. ஏனெனில், உதயக்குமாரின் பிணத்தின் மீது பெற்ற பட்டம் அது.
நான் முதல்வரா இல்லையா என்பதே தெரியவில்லை என்று எப்போது புலம்பத் தொடங்கினீர்களோ, அப்போதே உங்களின் ஒட்டு மொத்த அதிகாரமும் காற்றில் கரைந்து விட்டது. திமுக வெற்றி பெறப்போகிறது, மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கொடுத்த பணம், திமுகவை வெற்றி வாகை சூட வைக்கப் கோகிறது என்று, ஊருக்கும், உலகத்துக்கும், நீங்கள் சொல்லும் அம்புலிமாமா கதையை நீங்களே நம்ப மாட்டீர்கள் என்பது சவுக்குக்கு நன்கு தெரியும்.

கலைஞர் அவர்களே, உங்களோடு சவுக்குக்கு பரிச்சயம் எப்போது தெரியுமா ? 1984ம் ஆண்டு என்று நினைவு. சென்னை ஆதம்பாக்கம். அப்போது சவுக்குக்கு 9 வயது. அப்போது தேர்தல் என்று ஞாபகம். இப்போது போல, அப்போதெல்லாம், கேபிள் டிவி கிடையாது. பக்கத்து வீட்டில், ஈசி டிவி என்ற கருப்பு வெள்ளை டெலிவிஷனில் தான் உங்களை முதன் முதலாக சவுக்கு பார்த்தது. அப்போது, சவுக்கின் தந்தையும், பக்கத்து வீட்டுக் காரரும், உங்களின் தமிழறிவைப் பற்றி சிலாகித்துப் பேசிக் கொண்டிருப்பார்கள். அதை வைத்து, அப்போது தொலைக் காட்சியில் தேர்தல் பிரச்சாரத்திற்காக, தூர்தர்ஷனில் ஒதுக்கும் நேரத்தின் போது, திமுகவுக்கு ஒதுக்கப் படும் நேரத்திற்காக ஆவலோடு காத்திருந்தது சவுக்கு. ஆனால், சவுக்குக்கு மிகுந்த வருத்தம். நீங்கள் ஆங்கிலத்தில் பேசினீர்கள்.
அதன் பிறகு, சவுக்கின் தந்தைக்கு மாதவரம் பால் பண்ணைக்கு மாறுதல் அங்கே சென்ற பிறகுதான் எம்ஜிஆர் இறந்தார். எம்ஜிஆரைப் பற்றி அவ்வளவாக தெரியா விட்டாலும், உங்களை ஆட்சிக்கு வர விடாமல் தடுத்தார் என்ற அளவில் சவுக்குக்கு எம்ஜிஆர் மீது கோபம்.
அதன் பிறகு, 1989 தேர்தல். அப்போது, உங்கள் மீது இருக்கும் தீராத பற்றுதல் காரணமாக, சவுக்கு, ஒரு அட்டைப் பெட்டியை எடுத்து, அதில் உதயசூரியன் போல, அதை கட் செய்து, அதன் மீது கலர் பேப்பர் ஒட்டி, அதன் உள்ளே ஒரு பல்பை போட்டு, வாசலில் தொங்க விட்டது சவுக்கு. சவுக்கின் தந்தை அதைப் பார்த்து விட்டு, “எடுடா… நான் கவர்ன்மென்ட் செர்வன்ட். இப்படியெல்லாம் வாசல்ல வைக்கக் கூடாது“ என்றார். ஆனால் சொல்ற பேச்சைக் கேக்குற பழக்கம் தான் சவுக்குக்கு இல்லையே…. அப்படியே வைத்திருந்ததும், இரண்டு நாட்கள் கழித்து விட்டார் ஒரு அறை. அந்த அறையை வாங்கிக் கொண்டும் சவுக்கு அடங்கவில்லை. தந்தை அலுவலகம் முடித்து வரும் வரைக்கும், அதை மாட்டி விட்டு, வரும் நேரத்தில், கழற்றி வைத்து விடும். 1983ம் ஆண்டு, பால்வளத்துறையில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த 1300 தொழிலாளர்களை எம்ஜிஆர் அரசு, வேலை நீக்கம் செய்தது. 1989 வரை அவர்களுக்கு வேலை கிடைக்கவில்லை.

திமுக 1989ம் ஆண்டு பதவி ஏற்றதும் உடனடியாக அவர்களுக்கு வேலை வழங்கியதும், உங்கள் மீது இருந்த மதிப்பு பல மடங்கு உயர்ந்தது.
அப்போது சவுக்கின் தந்தை, இந்தி படி என்று வீட்டருகில் இருந்த இந்தி வகுப்பில் சேர்த்து விட்டார். கலைஞர் அபிமானி, இந்தி படிப்பதா ? தமிழுக்கு இழுக்கில்லையா ? திமுகவின் வெற்று கோஷங்களை நம்பி ஏமாந்த லட்சக்கணக்கானோர் போலவே, சவுக்கும் இந்தி படிக்க மறுப்பு தெரிவித்தது. சின்னப் பையன் இல்லையா ? அப்பா சம்பாத்தியத்தில் சோறு தின்று கொண்டு, இப்படி கொள்கை பேசினால் ? நாலு அப்பு அப்பினார். நாலு அப்பு வாங்கியதும், சவுக்கின் தமிழார்வம், டவுசருக்குள் ஒளிந்து கொண்டு, ஒழுங்கு மரியாதையாக இந்தி வகுப்புக்கு சென்றது. அப்போது கற்றுக் கொண்ட இந்தி, இத்தனை ஆண்டுகளாக எப்படிக் கை கொடுத்திருக்கிறது தெரியுமா கலைஞர் அவர்களே… ? சரி அதை விடுங்கள். நாம் கதைக்கு வருவோம்.
1990ல் உங்கள் ஆட்சி சந்திரசேகர் அரசால் கலைக்கப் பட்டதும் சவுக்குக்கு ஒரே அழுகாச்சி. என்னடா இது தலைவர் ஆட்சியை இப்படி கலைத்து விட்டார்களே என்று.
அப்போது வளரும் பருவமா. கவிதை எழுதும் ஆர்வமெல்லாம் வேறு இருந்தது. இதனால் தமிழார்வம் மேலும், மேலும் கூடியது. பள்ளியில், கவிதை என்ற பெயரில் சவுக்கு எழுதியதற்கு, இரண்டாம் பரிசு வேறு கொடுத்தார்களா… ? கேட்கவே வேண்டாம்.

1991ல் நடக்கும் தேர்தலில் நீங்கள் மீண்டும் முதல்வராவீர்கள் என்று சவுக்கு நம்பிக்கையோடு காத்திருந்த போது மே மாதம் ராஜீவ் காந்தி இறந்து போனார். அப்போது நடந்த கலவரத்தில், மவுண்ட் ரோடு புகாரி ஓட்டல் எதிரில் இருந்த உங்கள் சிலையை ஒருவர் கடப்பாறையால் குத்தி உடைத்தார். அந்தப் படம், தினத்தந்தியில் வெளியான போது, நீங்கள், அந்தத் தம்பி, என்னை முதுகில் குத்தாமல், நெஞ்சில் குத்தினான் என்பதற்காக மகிழ்கிறேன் என்று போட்டீர்களே ஒரு போடு. இப்போது அதைக் கேட்டிருந்தால் சவுக்கு, ஓவரா நெஞ்ச நக்காத பாஸூ என்று சொல்லியிருக்கும். அப்போதுதான் உங்கள் அபிமானியாயிற்றே…
தலைவர் என்னாமா ரியாக்ட் பண்றாரு… தலைவர்னா தலைவர்தான் என்று சவுக்குக்கு ஒரே புளகாங்கிதம்.
அதன் பிறகு 15.06.1991 தேர்தல் அன்று சவுக்கின் தந்தை இறந்து போனதால், அந்தத் தேர்தலையும் அதன் முடிவுகளையும் சரிவர கவனிக்க முடியவில்லை. லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்தில், ப்ளஸ் ஒன் சேர வேண்டாம், வேலை கிடைத்து விடும் என்று கூறியதால், பள்ளியிலும் சேரவில்லை.
அதன் பிறகு, அக்டோபர் 1991 முதல் அரசு அலுவலகத்தில் வேலை. 16 வயதில் 40 வயதுக்காரர்களோடு நட்பு. அவர்கள் அரசியல் பேசும் போது அரசியல் ஓரளவுக்கு தெரிய வந்தாலும், அரசு ஊழியர் சங்கத்தில் சேர்ந்ததும், பார்வை தெளிவாகியது. அப்போதைய ஜெயலலிதா அரசாங்கத்தில் நடைபெற்ற ஊழல்களைப் பற்றி பத்திரிக்கைகளில் நாள்தோறும் வரும் செய்திகளைப் பார்க்கப் பார்க்க, கடும் கோபம் வந்தது. சந்திரலேகா மீது ஆசிட் வீசப் பட்ட போது, சந்திரலேகாவைக் காப்பாற்றி, அப்போல்லோ மருத்துவமனையில் சேர்த்தவர், லஞ்ச ஒழிப்புத் துறையில் பணியாற்றிய காவலர். அவர் சந்திரலேகா பட்ட அவஸ்தையை சொல்லிய போது, அந்தக் கோபம் பன்மடங்காகியது.
அதன் பிறகு, ஜெயலலிதா அரசாங்கத்தில், செய்திகளுக்குப் பஞ்சமா என்ன ? எஸ்டி.சோமசுந்தரம், வேனில் தொங்கிக் கொண்டு போனதிலிருந்து, டி.என்.சேஷனை, விமான நிலையத்திலிருந்து துரத்தி, தாஜ் ஓட்டலில் தாக்கிதிலிருந்து, வழக்கறிஞர்கள், விஜயன், சண்முகசுந்தரம் போன்றோர் வெட்டப் பட்டதிலிருந்து, கொடைக் கானல் ஓட்டலுக்க சட்ட விரோதமாக அனுமதி அளித்ததிலிருந்து, செய்திகளை கேட்கக் கேட்க, கோபம் பெருகிக் கொண்டே வந்தது.
1996ல் மீண்டும் உங்கள் ஆட்சி வந்ததும், சந்தோஷம் என்றால் சந்தோஷம் அப்படி ஒரு சந்தோஷம். அப்போது சவுக்கு லஞ்ச ஒழிப்புத் துறையின் புலனாய்வுப் பிரிவில் பணியாற்றியதால், விசாரணைகளை நேரில் காணும் வாய்ப்பு.

இன்று உங்களின் அன்பு உடன்பிறப்பாக இருக்கிறாரே…. டிஎம்.செல்வகணபதி…. அவர்தான் முதன் முதலாக 1996ல் லஞ்ச ஒழிப்புத் துறையால் கைது செய்யப் பட்டவர். செல்வகணபதியை கைது செய்யும் போது, அவர் சேலத்திலிருந்து திரும்பி வந்து கொண்டிருந்தார். காலை 5.30 மணிக்கு, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வைத்து கைது என்று முடிவானதும், சவுக்கு அன்று இரவு அலுவலகத்திலேயே தங்கி, ரயில் நிலையம் சென்றது. கைது என்று தெரிந்ததும், செல்வகணபதி முகத்தைப் பார்க்க வேண்டுமே… உஷாராக கையில் இருந்த ஒரு சூட்கேஸை உதவியாளரிடம் நைசாக கொடுத்தனுப்பினார். அப்போது லஞ்ச ஒழிப்புத் துறையில் இருந்த மேத்யூஸ் என்ற டிஎஸ்பி, அந்த உதவியாளரை பின் தொடர்ந்து சென்று, அந்த சூட்கேஸை கைப்பற்றினால், அதன் உள்ளே ஒரு லட்ச ரூபாய் பணம் இருந்தது. அதுவும் கைப்பற்றப் பட்டது.
அதன் பிறகு, சவுக்குக்கு வேலை ஒரு நாளைக்கு 15 மணி நேரம். இரவு பகல் பாராமல், வேலை. அந்த வேலையைச் செய்வதில், சவுக்குக்கு ஒரு அலாதி பிரியம். ஊழல் ஒழிப்பு வேலையில் ஈடுபடுகிறோம் என்று அப்படி ஒரு சந்தோஷம்.

சவுக்கு வாசகர்களில் பல பேர், சவுக்குக்கு திமுக அரசால், இத்தனை தொந்தரவுகள் வந்ததால், திமுக எதிர்ப்பாளர் ஆனது என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் கலைஞர் அவர்களே…. சவுக்கு திமுக எதிர்ப்பாளராக ஆனது, 1998ல்.
அத்தனை தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த வழக்கு விசாரணைகள், உங்கள் ஆட்சியில் இருந்த பார்ப்பன அதிகாரிகளின் செல்வாக்கால், பாரபட்சமாக நடக்கத் தொடங்கின.
உங்களின் செல்லப் பிள்ளையாக அப்போது இருந்த உமாசங்கரை, நீங்கள் ஊழல் வழக்குகளை விசாரிப்பதற்காக, விழிப்புப் பணி ஆணையத்தில் இணை ஆணையராகப் போட்டீர்கள். அந்த துடிப்பான அதிகாரி, பாரபட்சம் பார்க்காமல், ஊழல் புரிந்தவர்கள் அத்தனை பேர் மீதும், வழக்கு பதிவு செய்யச் சொல்லி பரிந்துரை செய்தார். ஆனால், பார்ப்பன ஐஏஎஸ் அதிகாரிகள் சிக்கும் ஊழல் வழக்குகளை மட்டும், விசாரிக்காமல் விடும்படி அவருக்கு, மறைமுகமாகவும் நேரடியாகவும் நெருக்கடி கொடுக்கப் பட்டது. இந்த அதிகாரிகள் கொடுக்கும் நெருக்கடியைத் தாங்க முடியாமல், உமாசங்கர், விழிப்புப் பணி ஆணைய பணியை விட்டு, மாறுதலில் சென்றார்.
அப்போது இது போல பல ஊழல் வழக்குகளில் சிக்கிய பல்வேறு அதிகாரிகள் அவர்கள் பார்ப்பனர்கள் என்ற காரணத்தாலேயே லஞ்ச ஒழிப்புத் துறையில் அவர்கள் மீதான வழக்கு மூடப்பட்டது.

உங்களின் பல்வேறு பேச்சுக்களைக் கேட்டும், குஞ்சாமணியின் கூட்டங்களுக்கும் போனதால், சவுக்குக்கு பார்ப்பன எதிர்ப்பு உணர்வு அப்போது இருந்தது. குஞ்சாமணி கூட்டங்களுக்கு தொடர்ந்து செல்பவர்கள், யாருக்காவது, காலையில் சரியாக கக்கூஸ் வரவில்லை என்றால் கூட, அதற்குக் காரணம், பார்ப்பனர்களும், பார்ப்பனீயமுமே என்று நம்பி விடுவார்கள். அப்படி ஒரு உடான்ஸ் விடுவார் குஞ்சாமணி.
திமுகவின் அடி நாதமே பார்ப்பன எதிர்ப்பு என்று நம்பிக் கொண்டிருந்த சவுக்குக்கு, முதல் அடி, கலைஞரின் ஆட்சியில், பார்ப்பனர்களுக்கு இத்தனை செல்வாக்கா என்பது மட்டுமல்ல. அந்தச் செல்வாக்கைப் பயன்படுத்தி, அவர்கள் ஊழல் வழக்குகளிலிருந்து தப்பித்தது, கடும் கோபத்தை ஏற்படுத்தியது. இதற்காகவா 15 மணி நேரம் வேலை செய்தோம்…. ? இதற்காகவா, நள்ளிரவு 12 மணிக்கு இரவு உணவு உண்டு, வேலை பார்த்தோம் என்ற அதிர்ச்சி நீங்க பல நாட்கள் ஆகின கலைஞர் அவர்களே….
அப்போதுதான் உங்கள் மீது முதன் முதலாக சந்தேகம் ஏற்பட்டது. அப்போது சந்தேகம் ஏற்பட்டாலும், ஊழலை ஒழித்தவராயிற்றே என்பதால், உங்கள் மீது, பாசம் இருக்கத் தான் செய்தது. அப்போது, சென்னை நகரில் பல்வேறு பாலங்கள் கட்டப் பட்டன. கட்சிக் காரர்கள் கூட, பெரிய அளவில் சம்பாதிக்க வில்லை. ஓரளவுக்கு நல்லாட்சியாகவே அந்த ஆட்சி அமைந்தது. குறிப்பாக உழவர் சந்தை போன்ற திட்டங்கள், மிகச் சிறப்பான திட்டங்களாக இருந்தது.
2001 தேர்தல் வந்ததும், அப்போது ஆதரவு அலையும் இல்லை, எதிர்ப்பு அலையும் இல்லை. மம்மி ரிட்டர்ன்ஸ் என்று ஜெயலலிதா, முழுப் பெரும்பான்மையோடு, ஆட்சியைப் பிடித்தார். 2001 முதல் 2006 வரை ஜெயலலிதாவின் ஆட்சி எப்படி இருந்தது என்பது வரலாறு. ஊழல் குற்றச் சாட்டுகள் ஒரு புறம் இருந்தாலும், அடக்கு முறைகள் தாங்கிக் கொள்ள முடியாத வகையில் இருந்தன.

2006ல், மைனாரிட்டி அரசை நீங்கள் அமைத்த போது, சவுக்குக்கு பெரிய அளவில் ஆர்வமும் இல்லை, வருத்தமும் இல்லை. அக்டோபர் 2006ல் ஒரு உயர் அதிகாரியை சந்தித்த போது அவர் சொன்னத் தகவல் மிகுந்த அதிர்ச்சியை அளித்தது. அந்த அதிகாரி, தமிழ்நாட்டின் வரலாறு காணாத அளவுக்கு இந்த ஆட்சியில் ஊழல் நடைபெற்று வருகிறது என்று சொன்ன போது, சவுக்கால் அதிர்ச்சியை தாங்க முடியவில்லை. அந்த அதிகாரி அளந்து பேசுபவர். விபரம் தெரியாமல், பேச மாட்டார். அவர் சொன்னதும், ஏற்பட்ட அதிர்ச்சி நாளுக்கு நாள், கூடிக் கொண்டே போனது. எங்கு தொட்டாலும் ஊழல், எதிலும் ஊழல் என்று உங்கள் ஆட்சியின் மீதும், உங்கள் மீதும், 1991ல் ஜெயலலிதா அரசு மீது ஏற்பட்டது போன்றே இப்போதும் ஏற்பட்டது.
2006 தொடங்கியதிலிருந்தே, உங்களின் குடும்பத்தின் ஆதிக்கம் தமிழகம் முழுக்க வெளிப்படையாக தெரிய ஆரம்பித்த போது, உங்கள் மீது இருந்த கொஞ்ச நஞ்ச பாசமும், பட்டுப் போனது. தமிழில் பெயர் வைத்தால் முழுமையான வரி விலக்கு என்று நீங்கள் அறிவித்த போது பட்டுப் போன பாசம் உங்கள் மீது அருவெருப்பாக மாறியது. அதற்குப் பிறகு, உங்கள் ஆட்சியில் நடந்த பல்வேறு விவகாரங்களைப் பற்றி சவுக்கில் விரிவாகவே பதியப் பட்டுள்ளது.

கலைஞர் அவர்களே… நீங்கள் மிகச் சிறந்த நிர்வாகி என்று பெயரெடுத்தவர்.
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்
என்ற குறளுக்கு ஏற்றார் போன்ற நிர்வாகத் திறன் படைத்தவர் நீங்கள். நல்ல அதிகாரிகளை அடையாளம் கண்டு, அவர்களை அந்தந்தப் பதவிகளில் நியமிக்கக் கூடிய வல்லமை பெற்ற நீங்கள் சறுக்கியது ஜாபர் சேட் விவகாரத்தில் தான்.
ஜாபர் சேட்டை உளவுத் துறைத் தலைவராக 2007ம் ஆண்டு நியமித்தது முதற்கொண்டே, உங்களின் அழிவு காலம் தொடங்கியது. ஒட்டுக் கேட்பது என்பது, அனைத்து அரசியல் கட்சிகளும் செய்யும் வேலைதான் என்றாலும், சகட்டு மேனிக்கு பெரும்பாலான பத்திரிக்கையாளர்களின் தொலைபேசிகளை ஜாபர் சேட் ஒட்டுக் கேட்ட போது, அது உங்களுக்குத் தெரியாமல் இருந்திருக்கலாம். ஆனால் D3D டெக்னாலஜிஸ் என்ற தனியார் நிறுவனத்தைப் பயன்படுத்தி, சகட்டு மேனிக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், பத்திரிக்கையாளர்கள், தொழில் அதிபர்கள், வழக்கறிஞர்கள், நீதிபதிகள், என்று அத்தனை பேரின் தொலைபேசிகளும் ஒட்டுக் கேட்கப் பட்ட போது நீங்கள் கவனமடைந்திருக்க வேண்டும்.
பல்வேறு அதிகாரிகள் மீது உங்கள் அரசில் ஊழல் புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. அந்த அதிகாரிகளில் ஓரிருவர் மீதாவது நீங்கள் நடவடிக்கை எடுத்திருக்கலாம். ஆனால், ஒருவர் மீது கூட நீங்கள் நடவடிக்கை எடுக்காததற்கு காரணம் ஜாபர் சேட்தான் என்பதை நீங்கள் மறுக்க மாட்டீர்கள். ஒன்று இரண்டு என்று தொடங்கி, உங்கள் ஆட்சியில் நல்ல பதவியில் இருந்த அத்தனை அதிகாரிகளும் ஊழல் மன்னர்களாகி, மக்களை சுரண்டிக் கொள்ளையடித்ததன் பலனை அவர்கள் யாரும் அனுபவிக்கவில்லை கலைஞர் அவர்களே… நீங்கள் தான் அனுபவிக்கப் போகிறீர்கள். அவர்கள் அதிகாரிகள். அவர்களுக்கு எந்த அரசு வந்தாலும், சம்பளமும், வேளையாளும், ஏவலாட்களும் இருப்பார்கள். ஆனால், ஆட்சி போனால், நீங்கள் சிறையிலிருப்பீர்கள் என்பதை மறந்து போய் விட்டீர்கள் கலைஞர் அவர்களே….

ஜாபர் சேட், இது போன்ற விவகாரங்களை உங்கள் கண்களுக்கு வராமல் மறைத்து விடுவார் என்பதால் தானே, பல்வேறு ஊடகங்கள் சூசகமாக, உங்கள் ஆட்சியில் நடக்கும் ஊழல்களைப் பற்றி கோடிட்டுக் காட்டின ? ஆனால், உங்கள் தவறுகளை திருத்திக் கொள்ளாமல், அந்தப் பத்திரிக்கைகளை முடக்க நீங்கள் எடுத்த முயற்சியை ஒரு நல்ல உளவுத் துறையின் தலைவராக இருப்பவர் தடுத்திருக்க வேண்டாமா ? “அய்யா இது தவறு, இந்தப் பத்திரிக்கைகள் எப்போது வேண்டுமானாலும், நம்மை திருப்பித் தாக்கும்” என்று சொல்லியிருக்க வேண்டாமா ?
ஒட்டு மொத்தமாக ஒரு மாநிலத்தில் இருக்கும் அத்தனைப் பத்திரிக்கைகளும், உங்களுக்கு எதிராக திரும்பும் வரை உங்களை கொண்டு விட்டது ஜாபர் சேட் என்பதை நீங்கள் ஏன் புரிந்து கொள்ள மறுத்தீர்கள் ?
உளவு என்ற விவகாரத்திற்கு எந்த அளவுக்கு நீங்கள் முக்கியத்துவம் கொடுப்பீர்கள் என்பதை ராசாத்தி அம்மாளின் தொலைபேசியை ஒட்டுக் கேட்க உத்தரவிட்டதிலிருந்தே தெரிந்து கொள்ள முடியும். அப்படி இருக்கையில், முக்கிய விவகாரங்களை உங்கள் பார்வையிலிருந்து மறைத்து, அவருக்கு தேவையான விஷயங்களை மட்டும் உங்கள் காதுக்கு கொண்டு வந்த போதே நீங்கள் கவனமடைந்திருக்க வேண்டாமா ?

ஓய்வெடுங்கள் என்று பத்திரிக்கையாளர் ஞானி உங்களுக்கு கடிதம் எழுதிய போது, அந்த ஞானியை பார்ப்பனர் என்று உங்கஙள கட்சிக் காரர்களையும், ஜால்ராக்களையும் வைத்து விட்ட விட்டீர்களே ஞாபகம் இருக்கிறதா ? அப்போது நீங்கள் ஓய்வெடுத்திருந்தீர்கள் என்றால், இப்போது இப்படி புலம்ப நேர்ந்திருக்குமா கலைஞர் அவர்களே… ?
ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக ராசா பணம் கொண்டு வந்து கொடுத்த போதே, அவரைத் தடுத்திருக்க வேண்டாமா ? உங்களிடம் இல்லாத பணமா ? ஸ்பெக்ட்ரம் பணம் இல்லாமல் இருந்தால் நீங்கள் என்ன வறுமையிலா வாடியிருப்பீர்கள் ? ஒரு நல்ல உளவுத் துறைத் தலைவர், இந்த ஊழலைப் பற்றி உடனே அல்லவா உங்களிடம் சொல்லியிருக்க வேண்டும் ? அப்படிச் சொல்லியிருந்தால், உங்கள் மகள் நாளை சிறை செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்குமா ?
ஸ்பெக்ட்ரம் விவகாரத்தைப் பற்றி உங்களை அலர்ட் செய்திருக்க வேண்டிய அதிகாரி, அந்த ஊழலில் பங்கு வாங்கிக் கொண்டிருந்த போது, அதை கண்டறியாமல், நீங்கள் பாராட்டு விழாவில் திளைத்துக் கொண்டிருந்த காரணத்தாலேயே நீங்கள் இன்று இந்த நிலையில் இருக்கிறீர்கள் கலைஞர் அவர்களே……

அப்போது உங்கள் கூட்டணியில் இருந்த பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமதாஸ் ஜாபர் சேட்டை மாற்ற வேண்டும் என்று வெளிப்படையாக அறிக்கை வெளியிட்ட போதாவது, நீங்கள் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டாமா ? லட்சக்கணக்கான வோட்டுக்களைப் பெற்றுத் தரும் அரசியல் கட்சித் தலைவரை விட, ஒரு ஐபிஎஸ் அதிகாரியா முக்கியம் ? எலும்புத் துண்டுக்கு அலையும் நாயைப் போல உங்கள் கோபாலபுரம் வீட்டில் பல ஐபிஎஸ் அதிகாரிகள் காத்துக் கிடந்தார்களே…. அவர்களை விட ஜாபர் சேட் என்ன அப்படி முக்கியம் ?
ஒரு ஜாபர்சேட்டுக்காக, ஒரு அரசியல் கட்சியின் கூட்டணியை இழக்கும் அளவுக்கு உங்கள் அறிவை மழுங்கடித்து, மூளைச் சலவை செய்து வைத்திருந்தார் ஜாபர் சேட்.
ஒரு கைதேர்ந்த அரசியல்வாதியாகிய நீங்கள், ஈழம் விவகாரம் போன்றதொரு விவகாரத்தை கை நழுவ விட்டிருக்கலாமா ? ஈழம் விவகாரம் பெரிதாகிய ஜனவரி 2009லேயே, நீங்கள், ஆட்சி தேவையில்லை என்று தூக்கி எறிந்து, காங்கிரஸுக்கு எதிராக போர்ப்பரணி பாடியிருந்து தேர்தலைச் சந்தித்து இருந்தால், இன்று இந்த ஸ்பெக்ட்ரம் விவகாரம் வெளி வந்திருந்தாலும் கூட உங்களை அசைத்திருக்க முடியுமா ? அன்று ஈழத் தமிழர்களை காப்பாற்றுவதற்காக பதவியைத் துறந்து தேர்தலைச் சந்தித்திருந்தால், ஜெயலலிதாவைத் தவிர, அத்தனைக் கட்சிகளும் உங்கள் பின்னால் அல்லவா அணிவகுத்திருக்கும் ?
அத்தனை கட்சிகளின் துணையோடு நீங்கள் தேர்தலைச் சந்தித்திருந்தால், யாராவது உங்களை அசைத்திருக்க முடியுமா ?

இப்படிப் பட்ட ஒரு வாய்ப்பை கோட்டை விடுவதற்கு ஜாபர் சேட்டைத் தவிர வேறு யார் காரணமாக இருக்க முடியும் ?
முக்கிய பிரமுகர்களின் அந்தரங்கமான உரையாடல்களை பதிவு செய்து, உங்களுக்கு போட்டுக் காட்டியதைத் தவிர, உளவுத் துறை அதிகாரியாக வேறு என்ன செய்து விட்டார் உங்களுக்கு ஜாபர் சேட் ? நீங்கள் ஈடுபடாத சரச சல்லாபங்களிலா அந்த முக்கியப் பிரமுகர்கள் ஈடுபட்டு விட்டார்கள் ? அப்படியே ஈடுபட்டாலும், அது ஆட்சி நிர்வாகத்திற்கு அவ்வளவு முக்கியமா என்ன ?
இது போல எத்தனையோ விவகாரங்களை உங்களுக்குச் சுட்டிக் காட்ட முடியும் கலைஞர் அவர்களே…..
இன்று வெளி வந்திருக்கும் குமுதம் ரிப்போர்ட்டர் இதழைப் பாருங்கள் கலைஞர் அவர்களே. ஜாபர் சேட், அதிமுகவின் முக்கியப் பிரமுகரைச் சந்தித்து, “உங்களுக்குத் தேவையான இரண்டு முக்கியக் கோப்புகளைக் கொடுத்து விடுகிறேன். அதிமுக ஆட்சி வந்ததும் என்னை அவமானப் படுத்தாதீர்கள். ஒரு வருடத்துக்கு நல்ல பதவி வேண்டாம். ஒரு வருடத்துக்குப் பிறகு நல்ல பதவி கொடுங்கள் “ என்று பேசியிருக்கிறார் என்பதை படித்துப் பாருங்கள் கலைஞர் அவர்களே…
இப்போதாவது பாம்புக்கு பால் வார்த்திருக்கிறோம் என்பதை புரிந்து கொள்கிறீர்களா ? ஆனால், நீங்கள் இதைப் புரிந்து கொள்ளும் நேரத்தில் எல்லாமே முடிந்து விட்டது கலைஞர் அவர்களே. காலம் கடந்து விட்டது. உங்கள் கண் முன்னால் திமுக உடையப் போகிறது. உங்கள் மனைவி மக்கள் சிறை செல்லப் போகிறார்கள்.
இத்தனை விவகாரமும், உங்களின் மோசமான அனுமானத்தால் (Poor judgment) வந்தது கலைஞர் அவர்களே….
133 அடியில் சிலை வைத்தீர்களே…. அந்த அய்யன் சொல்லும் குறளை படிக்க வேண்டாம் ?
தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும்

அந்தத் தீரா இடும்புதான் உங்களை வாட்டப் போகிறது.
|
Comments
பாவம் தீர்க்க பணத்தை இறைப்பவன் பச்சை மடையனடா
நெஞ்சுக்கு நீதியை ஒளித்தே வாழ்பவன் நிச்சயம் மிருகமடா
கல்லுக்கு நீதி சொல்ல முடியாது
வெங்கானலில் மீன் பிடிக்க முடியாது
பாறையில்நெல் விதைக்க முடியாது
உன் பாவத்தில் வந்த இன்பம் நிலைக்காது
உன் வாழ்வெல்லாம் வாழவல்ல
--கண்ணதாசன்
Quoting Buddha Smiling:
====================
You have to first come out of your self-clad veil as to whether you support for the eelam cause or not. No right-minded person will ever think of either supporting LTTE as it spelt disaster to their own breathren or the ideologies of few self-proclaimed learned elites likes of Cho/Ram/Narains for the simple reason that these extreme idelogies derived from the pretext of dictactorism(LT TE) and regional hegmoney(Elites ). What we need is a just solution for our own breathren there for more autonomy and self-respect. But your so called sacred threads would never allow such things to happen just for the simple reason that such an arrangement across the sea will create the aspirations for more autonomy in the motherland also, which would definitely shatter the founding idelogies of this nation which is beatifully centred around modernized varnashramas and vedas.
Meanwhile regarding your invoking of kashmiri and east pakistan problems with this, you can find answer to this yourself as to how this would further the caues of what I cited before.
Dear Ponraj Sir,
Have a broad mind to accept the good ones done by anybody irrespective of the caste. I did not expect you will also be like kunjamani. May be you should also be called KUNJAMANI JUNIOR II as Junior 1 is taken by savukku sir.
Yes, Rajapakshe did his duty till he defeated LTTE. I am not supporting killings of innocent Tamil civilians.
Also please understand that LTTE were a terrorist organization and they had also killed a lot innocent people.
Late Prabhakaran should have stopped his terrorist approach at some point of time and should have carried diplomatic negotiations.
( அதாவது தமிழர்களை கொன்று போட்டது) Paarpaanum idhil adanguvaan.
(இதனை வருட களம் ராமன் , கிருஷ்ணன் என கதைகட்டி அனைவரையும் எமற்றிநீர்களே அப்போ எங்களுக்கு எவ்ளோ கோபம் வரணும்) Ramaayanam ezhudhiyadhu vaalmiki, avar oru dalit.
Raamar oru Kshatriyar. Indha kaalaththula most backward community
Krishnar oru yaadhavar. Indha kaalaththula irundhirundhaa backward communitila vandhiruppaar
Murugar oru paarpaan. Avar thunaivi
So paarpaans were telling stories and worshipping BC,MBC and ST gods
If Indian Govt. is not caring about this atrocities only because people dying are Dravidians, why Indian Govt did not care when Kashmiri brahmins were killed in thousands? Are Kashmiri brahmins Dravidians? Why Indian govt. helped Muslims to create East Pakistan?
Quoting Buddha smiling:
Sri. Ponraj knows well that the land is not taken away by brahmins. Suppose it was taken by say Brahmin's association or Kanchi mutt, then this Kuruma Valavan, Ponraj and everyone will do Dharna , Bandh and beat brahmins.
Sri. Ponraj is not able to provide any evidence for his claim "50% of IAS seats were filled by Brahmins". So he is creating another scene to escape.
Quoting unmaivirumbi:
You invent a reason for killing: The victims are Dravidian and hence Aryans did not care, so we killed. What is wrong.
Beautiful mind.
Cho, Swami, Jeya are not against Tamils, but LTTE. They are against LTTE because 'authentic' magazines publish news as if LTTE are evil demons. If the papers give good news about LTTE, no north Indian will hate them.
Quoting Buddha smiling:
பி.கு: மேலே இருந்து நாலாவது படம் செம்ம காமெடி. அதுல தாத்தாவ மட்டும் தனியா எடுத்து எங்க வீட்டு முன்னாடி மாட்டலாம்னு இருக்கேன். வர்றவன் போறவன் எல்லாம் சிரிச்சிக்கட்டு ம்...
I always appreciate your boldness in facing suppression and uprightness in narrating things. But in this, viewers column is stinking with too much of caste/religious sentiments. My humble and earnest request to all viewers of this site and the editor suvukku himself to avoid caste/religion aspirations in this site. By any measure, this site fills a vaccum created by our media(leaning on one or other party) and i wish that this to continue its journey as bi-partisan biasedless opinion maker to the Tamil society.
----------------------------
You have cited the buddhist followers in SL caused all geonocide there against lankans. I will take your argument in two aspects. First of all will you accept people killed there are Hindus. If so, why would a Hindu rastra India had not even have a thoughts of supporting the cause of fellow hindus. It is because Eelam predominantly a Dravidan descent. My dear friend the other aspect is so called supporters of anti eelam are nothing but well known sacred (i never believe sacredness in it) threads. Cho/Hindu Ram/Narayans among others. If anyone still believes that few most previleged people of this country are hapless and lacks in muscle power I can only tell you are in a state of trance nothing else. This country is for them, any concession this 4 pillars of this democracy grants only to get votes or to deviate you from becoming aggressive. So my dear anniyan sir, as most of other viewers of this site opined we are not the people of previlege but your idelogies which most strongly instilled in our society that color of skin is more important than content of character.
Again buddha never teaches himsa for your information. If you have still doubts look at the far east in particular Japanese who follow the disciplene to the core irrespective of their crisis and hardship.
Buddha Smiling (still on you)
[quote name="ம.பொன்ராஜ்"]அந்நியன் அண்ணே...
நான் சொன்ன மாதிரியே நீங்க குய்யோ முறையோன்னு கத்துறீங்க பாத்தீங்களா... இது ஒன்னும் போதும்ணே.... நீங்க நிதானம் இல்லாமல் எழுதறீங்க என்பதற்கு...!!! சக நண்பனின் வாழ்வில் நடந்ததற்கு ஆதாரம் கேட்கிறீர்கள். அதன் மூலம் தாங்கள் நிறுவ வருவது 'நான் சொல்வதெல்லாம் பொய்'... எனக்கு வேலை வெட்டி இல்லை பாருங்க... சும்மா கற்பனையா நாலு விஷயத்தை யோசித்து எழுதுறதுக்கு.... நல்ல கூத்து தான் போங்கள்.... மேலும் 50 சதவீத இட ஒதுக்கீடு பற்றி ஆதாரம் கேட்கிறீர்கள்.... ஆக நான் பதிந்த லிங்கை நீங்கள் படிக்கவே இல்லை என்று நினைக்கிறேன். இருந்தாலும் உங்களுக்காக (dharumi.blogspot.com/2010/05/blog-post.html ).
உங்கள் பதில் விளக்கத்துக்கு நன்றி. கேள்வி கேட்டவர் 'பதில் சொல்லுங்கள் பார்ப்போம்' என்று எழுதி முடித்தார்.. அவர் கேட்டதுக்குத்தா னே நீங்கள் எழுதினீர்கள்.. .. ஆனால் அவருக்கு நீங்கள் எழுதிய பதிலுக்கு மரியாதை அளித்து கருத்து எழுதக் கூட நாகரீகமில்லை.. நான் உயர்திரு. உமாசங்கரைப் பற்றி எழுதியது, மேதகு. வெங்கடராமன் பற்றி எழுதியதேர்கெல்ல ாம் கருத்து தெரிவிக்காமல் வேறு ஒரு குற்றச்சாட்டு வைக்கிறார் பாருங்கள்..
அது திராவிட இயக்கங்களின் நேர்மை.. பொய் சொல்வார்கள்.. இல்லை என்று விளக்க அடுத்தவர் எடுத்துக்கொள்ளு ம் நேரத்துக்குள் அடுத்த ஒரு பொய்யைச் சொல்லி அதற்குள் யார் புடவையை அவிழ்க்கலாம் என்று பார்ப்பார்கள் இவர்கள்..கொள்ளைஅடித்து ஏமாற்றுவார்கள்.. அரியலூர் ரயில்விபத்தை பயன்படுத்தி இப்படித்தான் பொய் சொல்லி இந்த திராவிட இயக்கங்கள் ஆட்சியைப் பிடித்தன.. 'ஒருத்தியுடன் வாழ்வதுவே தமிழ் மரபு' என்று சொல்லிக்கொண்டே பெரியாரும் கலைஞரும் தமிழ்ப் பெண்கள் பலரை உறவுக்குப் பயன் படுத்திக்கொண்டு இருந்தனர்.. பெரியாரின் கடைசி மனைவியை திரு. வீரமணி வைத்துக்கொண்டார ்.. ஆனால் இவர்களைப் பற்றிய உண்மை எழுதிய வாசந்தியை பார்ப்பன விலை மாது என்றது இந்த திராவிடம்.. இவர்கள் மேலுள்ள தப்பை மறைக்க பொய் சொல்லி தூற்றுவார்கள்..
Quoting vilakkam:
If you are running the case, let the court decide. Before that you have no locus standi to comment on the brahmin in a public forum. Even a dalit (A.Raja and his aides) have acquired land in perambulur district (as per Savukku's reports earlier). As agreed at the end by you, there are a few people in every caste and community who have done something or other like this. Hence in future please do not refer any one individual to his caste (irrespective of dalit or muslim etc...)
As regards, your comment on separate Tamil land, the stand in general by any law abiding citizen, the same should be acheived with in the constitutional frame work and through talks and not by violence.
உங்களைப் போன்றே ஒரு இன வெறியர் எழுதிய நம்பத்தகாத ப்ளாக் தவிர உங்களிடம் வேறு ஆதாரமே இல்லையா?
பொய் சுடும்..
தன்னெஞ்சறிவது பொய்யற்க.. பொய்த்தபின்
தன்நெஞ்சே தன்னைச் சுடும்
உங்கள மதிச்சுதானே பக்கம் பக்கமா பதில் சொன்னேன் சார்.. எதுவுமேவா உங்களுக்கு திருப்தி தரல? அது எல்லாத்தையும் படிச்சும் கண்டுக்காம விட்டுட்டு, உங்களுக்கு எது மறுபடியும் சாதகமோ அத மட்டும் எடுத்து எழுதறீங்க.. காரணம் என்ன சார்? பகுத்தறிவா? உங்க கண்ணை எதுசார் மறைக்குது? நான் உங்கள் கருத்துக்கள் எதுக்குமே நெகடிவ் மதிப்புக் குடுக்கலன்னா நம்ப மாட்டீங்க இல்ல? பொய் சொல்லியே வளந்துடீங்க போல இருக்கு சார்.. அதான் உண்மை சொன்னாலும் உங்களால நம்ப முடியல.. அட்மினிஸ்ட்ரெட் டரைக் கேளுங்க சார்.. ஏதோ நெகடிவ் மார்க் போட்டாலே புலம்பரீங்களே (அது படிப்பவர்களின் ஓட்டுரிமை).. திட்டீனாக் கூட புலம்பக் கூடாதுன்னு எப்படி சார் சொல்றீங்க?
நான் எழுதின பதில்ல எதுவுமேவா உங்களுக்கு திருப்தி தரல? உமாசங்கர் ஐ.ஏ.எஸ். பத்தி எழுதினதும் பிடிக்கலையா? குற்ற உணர்ச்சி வர்ற அளவுக்கு பார்பனர்களைத் திட்டாதீங்கன்னு தானே சார் சொன்னேன்? புலம்பல்னு சொல்றீங்க.. புலம்பலுக்கு ஆதாரம் கேக்கறீங்க? ஐ.ஏ.எஸ். சில் 50 % பிராமணர் என்றால் அது குற்றச்சாட்டு. நீங்க வைச்ச குற்றச்சாட்டுக் கு ஆதாரம் தேவை இல்லையா? நான் எழுதினது உமாசங்கர் பத்தி , மோப்ளா கலவரம் பத்தி, நாமக்கல்ல நடந்த எரிப்பு சம்பம் எதப் பத்தி வேணும்னா கேளுங்க சார்.. செய்தியோட ஆதாரம் தரேன்.. ஆனா உங்களைப்போல 'ஆதாரத்துடன் எழுதியவற்றை' ன்னு சொல்லிட்டு அப்பறம் சப்பக்கட்டு கட்டல சார் நான்.. அப்படியே '"கயவர்கள் எல்லா இனத்திலும், ஜாதியிலும் உண்டு" ன்னு சொல்லி அப்படியே நழுவறீங்க..உங்களுக்கு கலைஞருக்கும் என்னா சார் வித்தியாசம்?
இத்தன நாளா ஒண்ணாத்தானே சார் இருந்தோம்.. ? அழகிரி மூளைதான் எல்லா கசாப்பு கடைலையும் விக்கராங்கன்னு நான் எழுதினதுக்கு நீங்க சிரிக்கல? இப்ப மாறிட்டீங்களே சார்.. உங்க ஜாதி வெறி அப்படியே எல்லாரையும் பிரிச்சிடுச்சே சார்.. போறும் சார்.. விடுங்க.. ஊழல் ஆட்சிக்கு எதிரா போராடின நீங்க நல்லா இருப்பீங்க சார்..நல்லா இருப்பீங்க
Quoting Unmainaa!:
உங்களை நல்லவர்னு நினைச்சு பேசிட்டு இருந்தேன் சார்.. ஆனா பொய்யைக் கூட பெருமையோட சொல்றீங்களே சார்... i did not read your link.. a personal blog is not authentic or reliable resource like magazine or government document.
நீங்க கேட்ட அஞ்சு கேள்விக்கும் பதில் சொல்லிட்டேனே சார்.. ஆனா நான் கேட்ட ஆக உங்களால எதுக்குமே ஆதாரம் கொடுக்க முடியாது.. ஆனால் கொஞ்சமும் கூச்சம் இல்லாமல் 'நான் ஆதாரத்தோடு எழுதியதை' ன்னு போடுவீங்க.. ஏன் சார், நாங்க உண்மைய புலம்பக்கூட கூடாது.. ஆனா நீங்க பொய்ய சொல்றதுல கொக்கரிக்கலாம்.. எகத்தாளம் பண்ணாலம்.. அடுத்த ஜாதிய திட்டலாம்.. ஆனா அவங்க எங்களைத் திட்டாதீங்கன்னு சொல்லக் கூடாது.. நீங்க மத்த ஜாதிய திட்டனும்.. என்னா ஜாதி வெறி சார் உங்களுக்கு..
கூசாம ஐ.ஏ.எஸ் ல 50% பிராமணர் னு சொல்றீங்களே சார்.. நாகூசல? சீ..
கேவலமா இருக்கு சார்.. தயவு செஞ்சு உங்க ஜாதிய போட்டுடாதீங்க.. எல்லாரும் அந்த ஜாதிக்காரன் போய் சொல்லுவான்.. உதவி பண்ண நண்பர்களையே மட்டம் பண்ணுவான்.. நன்றி கேட்டவன்.. அப்படின்னு திட்டபோறாங்க சார்..
Quoting ம.பொன்ராஜ்:
நான் சொன்ன மாதிரியே நீங்க குய்யோ முறையோன்னு கத்துறீங்க பாத்தீங்களா... இது ஒன்னும் போதும்ணே.... நீங்க நிதானம் இல்லாமல் எழுதறீங்க என்பதற்கு...!!! சக நண்பனின் வாழ்வில் நடந்ததற்கு ஆதாரம் கேட்கிறீர்கள். அதன் மூலம் தாங்கள் நிறுவ வருவது 'நான் சொல்வதெல்லாம் பொய்'... எனக்கு வேலை வெட்டி இல்லை பாருங்க... சும்மா கற்பனையா நாலு விஷயத்தை யோசித்து எழுதுறதுக்கு.... நல்ல கூத்து தான் போங்கள்.... மேலும் 50 சதவீத இட ஒதுக்கீடு பற்றி ஆதாரம் கேட்கிறீர்கள்.... ஆக நான் பதிந்த லிங்கை நீங்கள் படிக்கவே இல்லை என்று நினைக்கிறேன். இருந்தாலும் உங்களுக்காக (dharumi.blogspot.com/2010/05/blog-post.html ).உங்க நெஞ்சை தொட்டு சொல்லுங்க... 'சுப்ரமணிய சாமி, இந்து ராம், சந்திரா சாமி, சோ ராமசாமி, ஜெயலலிதா' இது போன்ற ஒரு கூட்டம் தமிழனுக்கு என்று ஒரு நாடு இருக்க கூடாதுன்னு வேலை செவது எந்த அடிப்படையில் என்று உங்களுக்கு உண்மையிலேயே தெரியாதா.? கிட்டத் தட்ட 4 கோடி மதிப்புள்ள தலித் மக்களுக்கு சொந்தமான நிலத்தை திருட்டு தனமாக அபகரித்து இன்றும் திருப்பி தராமல் அந்த மக்களுக்கு அந்த நிலத்தினால் நியாயமாக கிடைக்க வேண்டிய பல கல்விசார் பணிகளை முடக்கி வைத்திருப்பது ஒரு பார்ப்பன் தான். இதுவும் பொய் என்று சொல்லாதீர்கள். ஏனென்றால் அவருக்கு எதிரான வழக்கை நடத்துவதே நான் தான். நிற்க. நீங்கள் உங்கள் இன பெண்களுக்கு நடந்த அசவுகரியங்களுக் கு எந்த ஆதாரமும் கொடுக்கவில்லையே என்று நான் உங்களிடம் கேட்கப் போவது இல்லை. நான் மீண்டும் மீண்டும் சொல்ல வருவது இது தான். "கயவர்கள் எல்லா இனத்திலும், ஜாதியிலும் உண்டு"...அட... எனக்கும் பிராமண நண்பர்கள் உண்டு அண்ணே... ஒரு மாணவனுக்கு ஸ்கூல் பீஸ் கட்டணும்னு நிதி உதவி கேட்டா ஆயிரம் இரண்டாயிரம்னு எடுத்து உடனே நீட்டுவாங்க...!!! எல்லாரும் இவங்க மாதிரி இருந்திட்டா பிரச்சனையே இல்லண்ணே... எல்லா பார்பனர்களும் அயோக்கியர்கள் என்று சொன்னால் என் நாக்கு அழுகிடும்... (இதற்கும் போதுமான உதாரங்கன்ல் ஏற்க்கனவே கொடுத்துள்ளேன்) .
Quoting Buddha smiling:
Quoting சாதாரண பெண்:
தயவு செய்து தமிழர்களைத் திட்டாதீர்கள். சொந்த இனம் என்று ஒன்று இல்லை, மொத்தமே இதுதான் : பார்ப்பனன், பார்ப்பனன் அல்லாதவன் என்று தமிழர்களை ஈவேரா பிளவு செய்துவிட்டுப் போய் இருக்கிறார். தமிழர்களின் மன நிலை உண்மையில் நோய்க்கூறு அல்லது சாடிஸ்ட் மன நிலைதான்.. அவர்களை எவ்வளவு துன்புறுத்தினால ும் சொரணை இல்லாமல் இருப்பார்கள்.. ஏனென்றால் அவர்களுக்கு தேவையான மன நிம்மதி பிராமணர்களைக் கிண்டல் செய்வதிலிருந்தே கிடைத்துவிடுகிற து. மற்றவர் துன்பத்தில் ஒருவருக்கு நிம்மதி கிடைக்கிறது என்றால் அது சாடிஸ்ட் தானே ?
Quoting vennai:
நீங்கள் சொன்ன தாத்தாச்சாரியார ் பார்வை இழந்து, செவிடாகி ஐந்து வருடம் ஆகிய பின்னும் அவர் சொன்னதாக ஆனந்த விகடனிலும், நக்கீரனிலும் நம் தர்மத்தை இழிவுசெய்து கட்டுரைகளும், வேதங்களைத் திரித்து ஆபாசமாகவும் எழுதி வந்தனர். தத்தாச்சரியாரின ் மகன் முதியவர் (இவருக்கே வயது எழுபது) "சார் என்னா மன்னிக்கணும்.. நாங்க இதெல்லாம் தட்டிக்கேட்க முடியாத நிலை" என்றார்.
புலையன் என்று தலித்களைச் சொல்லும் சொல் தொல்காப்பியத்தி ல் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இருந்து வந்தது.. பிறப்பை வைத்து ஜாதி பிரிப்பது தமிழில் வழக்கமே.. நீங்கள் 'ஜாதியைப் புகுத்தியது பார்ப்பான்' என்று சொன்னதும் தவறே..
ஹிந்து தர்மம் மதம் அல்ல.. எல்லாமும் ஏற்றுக் கொள்ளப் பட்டது.. அதனால்தான் சமணர்களையும், பௌத்தர்களையும் வாதம் மட்டும் புரிந்து வென்றனர் ஹிந்துக்கள்.. மதமாக இருந்தால் பௌத்தர்க தமிழர்களைக் கொன்றது போல கொன்றிருப்பார்க ள். sorry .. all wrong..
Quoting ம.பொன்ராஜ்:
Hence forth savukku should be called as "Kunjamani Junior"
Hence forth savukku should be called as "Kunjamani Junior"
ராஜபக்சே மற்றும் அவருடைய சகாக்களின் போர்க் குற்றங்களை விசாரிக்கும் வகையில், அவர்களை சர்வ தேச நீதிமன்றத்தின் முன் நிறுத்த உடனடி நடவடிக்கைகளை தனது பங்கிற்கு இந்திய அரசு எடுக்க வேண்டும். இல்லையெனில், அண்மையில் தமிழக வாக்காளர்கள் முன்பு இலங்12கை குறித்து சோனியாகாந்தி தெரிவித்த கருத்துக்கள் வாய்மையற்றவை என்றாகி விடும்.
இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்கு எதிரான படுகொலையை நடத்தியது இந்திய அரசு தான் என்று அடிக்கடி கூறப்பட்டு வந்த குற்றச்சாட்டு உண்மை என்று நம்புவதாக வழி வகுக்கும். இவ்வாறு அறிக்கையில் ஜெயலலிதா கூறி உள்ளார்
ஆனால், இந்திய அரசோ, தமிழக அரசோ இது குறித்து எதிர்ப்பையோ அல்லது வருத்தத்தையோ கூட தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்க து. மாறாக, இலங்கை அதிபருடன் விருந்துண்டு மகிழ்வதற்காக, 2009ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், கனிமொழி உள்பட தி.மு.க., காங்கிரஸ் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை இலங்கைக்கு அனுப்பி வைத்தார் கருணாநிதி.
பரிசுப் பொருட்களுடன் திரும்பிய நாடாளுமன்றக் குழுவினர் இலங்கையில் எல்லாமே நன்றாக இருக்கிறது என்றும், அங்குள்ள தமிழர்கள் குறைபட்டுக் கொள்ளும் அளவுக்கு புகார் ஒன்றுமில்லை என்றும் தெரிவித்தனர். என்னதான் நற்சான்றிதழ் கொடுத்தாலும், அங்குள்ள தமிழர்களின் நெஞ்சை உருக்கும் நிலையைக் கண்டு மனித உரிமை ஆர்வலர்கள், முற்போக்கு நாடுகளைச் சேர்ந்த அரசுகள், ஐக்கிய நாடுகள் சபை ஆகியவை பொங்கி எழுந்தன.
தற்போது, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் பான் கீ மூன் அனுப்பிய குழுவின் அறிக்கை பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள து. அந்த அறிக்கையில் இருந்து ஒரு சில பகுதிகளை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
ஐ.நா. குழுவால் கண்டுபிடிக்கப்ப ட்டுள்ள நம்பத் தகுந்த குற்றச்சாட்டுகள ் நிரூபிக்கப்படின ், சர்வ தேச மனிதாபிமானச் சட்டம் மற்றும் சர்வதேச மனித உரிமைச் சட்டம் ஆகியவற்றிற்கு எதிரான ஆபத்து விளைவிக்கக் கூடிய அத்து மீறல்களை இலங்கை அரசாங்கம் நிகழ்த்தியுள்ளத ு வெட்ட வெளிச்சமாகும் என சுட்டிக்காட்டப் பட்டுள்ளது.
இதில் சில குற்றங்கள் போர்க் குற்றங்கள் மற்றும் மனிதாபிமானத்திற ்கு எதிரான குற்றங்கள் ஆகும். 2008ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்கும், 2009ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் தேதிக்கும் இடையே, வன்னி பகுதிக்கு முன்னேறிய இலங்கை ராணுவம், மிகப் பெரிய அளவில் பரவலாக குண்டு மழை பொழிந்து அப்பாவி தமிழர்கள் மாண்டு போவதற்கு காரணமாக இருந்தது.
ராஜபக்சேவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஜெயலலிதா
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவத ு:
இலங்கையில் எந்த மாறுதலும் ஏற்படவில்லை என்பதைத் தான் அண்மையில் நான்கு இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்ட கோரச் சம்பவம் நினைவூட்டுகிறது . இன்னும் சொல்லப் போனால், இந்தியர்கள், குறிப்பாக தமிழர்களுக்கு எதிரான இலங்கை அரசின் கொடூர மனப்பான்மைக்கு உண்மையிலேயே ஆதாரம் தேவை என்றால், இலங்கை அதிகாரிகளின் சித்ரவதையால் அழுகிய நிலையில் சிதைந்து கிடந்த மீனவர்களின் சடலங்களே சாட்சி.
இந்தியாவைச் சேர்ந்த தமிழர்கள் மீதே இதுபோன்ற கொடூரத் தாக்குதலை இலங்கை அரசு நடத்தியிருக்கும ் நிலையில், யாருமே நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு அனைத்து விதமான மனித உரிமை மீறல் குற்றங்களுக்கும ் ஆளாகி, இலங்கை அரசின் அடக்குமுறைக்கு அடிபணிந்து இலங்கைத் தீவில் வாழ்ந்து கொண்டிருக்கும் அப்பாவி தமிழர்களின் நிலைமை என்ன என்பதை கற்பனை செய்து பார்க்கவே அச்சமாக இருக்கிறது.
ஓர் தமிழ் இளைஞரை துப்பாக்கியால் சுடுவதற்கு முன்பு, அவரை நிர்வாணமாக்கி, கண்களை மூடி, கை, கால்களைக் கட்டி, காலால் எட்டி உதைத்து இலங்கை ராணுவத்தினர் பேரானந்தம் அடைந்த காட்சியை 25.8.2009 அன்று 40 வினாடிகளுக்கு பிரிட்டிஷ் டி.வி. ஒளிபரப்பி உலகத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
இந்த இளைஞரின் பிணம், இதேபோன்று ஒன்பது சடலங்கள் இருந்த இடத்திற்கு உருட்டி விடப்பட்டது. இந்த கொடுஞ்செயலுக்கு எதிராக சர்வதேச அளவில் கூக்குரல் எழுப்பப்பட்டதோட ு மட்டுமல்லாமல், இலங்கை அதிபர் மஹிந்தா ராஜபக்சே சர்வதேச நீதி மன்றம் முன்பு ஆஜர்படுத்தப்பட் டு, போர்க் குற்றத்திற்காக விசாரிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட் டது
பெரிதும் எதிர்பார்க்கப்ப ட்ட 'டைம்' வார இதழின் உலகில் மிக அதிகாரம் வாய்ந்த தலைவர்களின் பட்டியலில் இருந்து, இலங்கை அதிபர் ராஜபக்சே நீக்கப்பட்டுள்ள ார்.
முதல் நூறு பேர்களின் பட்டியில் நான்காம் இடத்தில் இருந்த இலங்கை அதிபர் ராஜபக்சே, 'டைம்' வார இதழின் ஆசிரியர் குழவால் நீக்கப்பட்டுள்ள தாக செய்திகள் வெளியாகி உள்ளன.
வாக்கெடுப்பின் அடிப்படையில் அவர் நான்காம் இடத்தில் இருந்தார். எனினும் இந்த வாக்களிப்புகளில ் பெரிய மோசடிகள் இடம்பெற்றதாகவும ், இதற்காக ராஜபக்சேவின் ஊடக செயலகத்தில் தனி குழு ஒன்று அமைக்கப்பட்டு, மோசடி வாக்குகள் பிரயோகிக்கப்பட் டதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன.
இந்த நிலையில் 'டைம்' வார இதழின் ஆசிரியர் குழவால் அவரது பெயர் திடீரென நீக்கப்பட்டுள்ள து.
Quoting ம.பொன்ராஜ்:
reply continues
4) If with in the constitutional rights of a country, there is an established system of providing a separate state, then you have all the right to claim
5) This point if it is right to what you have said, then the blame is on the official rather than the caste. There are also other officers in the department, from whom you can get the information.
While I have tried to explain the large facts, the blame on poor Brahmins for everything is something which the society has to understand, for which I have tried.
I also suggest, people to understand what brahminism means and read various magazines and books before just commenting.
Remember that Lord Rama and Krishna whom most of us pray are not Brahmins and they belong to other varnas. In the present day life, everything is attributed to Brahmins,
Most of the Brahmins are peace loving, care for the society and law abiding citizens and they live a very simple life . They also have the contended mind and life and they focus more on a clean life
I wish and hope, better sense prevails.
I read your comments on the brahminism in response to "anniyan" .
1) The priest at Madurai would be following his own set of customs that he will not even touch a brahmin or any other community person , as he follows certain customs (achara anushtanangal), which you can study yourself before commenting. The priest is a servant to God , so he follows the set of rules followed by the temple. . If you had observed in other temples, many priests even paste vibhudi on the bhakta's head even on dalit. So this goes by individual practice and cannot be generalised. Individual freedom , desires , practices should be respected
2) Same as above. There are temples which do not allow (even Indira Gandhi was not allowed in Guruvayur ) and another politician was not allowed in Golden Temple Amritsar. Can you go to a dharga with out a cap??
3) There is no reservation in any part of the country for brahmins, They compete in the open quota and after scoring good marks, if they get a seat out of the 50% balance, why blame them.On the other hand, how many of you are willing to give up your quota rights, for a poor dalit, or a carpenter, servant, dhobiwalla’s son to get him a seat. Most portion of the quota is taken away by the rich category of the backward classes (an MP/ MLA / Judge/ IAS officer / Government servant…etc.. ‘s son is a backward – Why???). Why are you all opposing economic criteria in quota? If you are seriously interested in bringing up the dalits and poor people, give them free education and leave your rights on the quota. Are you ready for this?
@Malarmannan
Dont talk foolish, the priests in Tiruppathi were merely doing their duty.
-------
ஒரு கொலைகாரனுக்கு சாமரம் வீசும் வேலையே பண்ணுவன் மனிதனே இல்லை. இது போன்ற காட்சிகள் தான் பிராமணர்களுக்கு எதிராக திரும்பும் என்பதை நினைவில் வையுங்கள். இரண்டு லட்சம் மக்களை கொன்றவனுக்கு சாமி தரிசனத்துக்கு ஏற்பாடு செய்பவன் எப்படி ஒரு நல்ல மனிதனாக இருக்க முடியும்?. அதே சமயம் தமிழ்நாட்டில் இருக்கும் இன்னொரு பிராமணனை இதைக் காரணமாக வைத்து வெறுப்பது தவறு.
hey anyan what ur talking with. u under mine ambedkar he is great leader
I am pity about you first of all. Everyone in this state knows that MKs days are being counted inspite of your great effor whatsoever it may be. But in one statement of this article you have told that had MK shed the power for the cause of Tamils in SL, he would enjoy the support of all and even the big scandal likes of 2G would have caused much. This is the true side of this crusader my dear savukk supporter plese wary of this fellow. This state has been spoiled like a spoiled child for the past 5 years in terms of education, finance and disciplene. But this fellow, in his article pointing his finger on an unknown face jaffer sait. My dear frind savukku, pl get rid of this self centredness, come out of our own problem. These supporters you have prestigiosly counted in this page have not come to see you crying for your problems talk social type. Make attempt to legitimise the website as a whistleblower for protecting our people from corruption. Again correct your myopic view on some unknown not-so important officials for us the mass.
நீங்கள் தர்காவில் கற்பூரம் ஏற்றி வழிபட முடியாது. ஆலயத்தில் காலனி அணிந்து உள்ளே போகலாம், அது போல அந்த கோவிலுக்கும் உள்ள சில விதிகளை கடைபிடிப்போம். வேற்று மதத்தினர் உள்ளே வரகூடாது என்பதை நானும் எதிர்கிறேன். ஆனால் குருக்களை யார் தொட்டாலும் அவருக்கு தீட்டு தான். அது பார்பனாக இருந்தாலும் செரி. தயவு செய்து நமக்குள் இருக்கும் வேற்றுமையை களைந்து முன்நேருவோம்
உங்கள் கருத்துக்களுக்க ு நான் -1 மதிப்புக் கொடுத்துவிட்டு ஓடவில்லை. நான் உங்களின் எந்த பதிவுக்கு -1 குறை மதிப்புக் கொடுக்கவில்லை என்பது சவுக்கு அட்மினிஸ்ட்ரேட் டருக்கு தெரியும். அவரைக் கேளுங்க.
3 . பார்பனர்தான் 50 % ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் என்பது நிச்சயம் ஆரிய சதிதான். ஏற்கக் கூடியது அல்ல. எதற்கும் பார்பனர்தான் 50 % ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் என்றதற்கு நீங்கள் ஆதாரம் தரவும். சவுக்கு அவர்கள் இந்த 50 % கணக்கு உண்மைதான் என்றால் சொல்லவும்.
4 . நீங்களும் சற்று புலம்புவதை நிறுத்துங்கள். தமிழருக்கு தனிநாடு தேவை எனபதை நான் எதிர்க்கவில்லை. பார்ப்பனர் எதிர்ப்பதாக புலம்புவதை நிறுத்துங்கள். தனி நாடு கிடைக்காததற்கு பார்பனர்தான் காரணம் என்பதற்கு நீங்கள் ஆதாரம் தரவும்.
5 . உங்கள் நண்பரை 'ரிசர்வஷன் நாய்களே' என்று சொன்னது தவறு. அதை சொன்னவர் பார்ப்பனர் என்பதற்கு ஏதேனும் ஆதாரம் இருந்தால் சொல்லவும். புலம்புவதை நிறுத்தி அவர் மேல் கேஸ் போடுங்கள். பார்பனர் என்பது உங்ககுக்கு எப்படி தெரியும்? போனிலோ அல்லது இண்டர்நேட்டிலோ பூணூல் தெரிந்ததா?
கேள்வி 1 , 2 க்கு நான் ஏற்கெனவே பதில் சொல்லிவிட்டேன்.
Quoting ம.பொன்ராஜ்:
பொன்ராஜ் சார்,
உங்கள் தற்பெருமை தேவையற்றது. நீங்க எந்த ஆதாரத்தையும் வைக்கவில்லை. என் நண்பனுக்கு கோவில்ல இப்படி ஆச்சு.. இன்னொரு நண்பனுக்கு இண்டர்வியூல இப்படி ஆச்சுங்கரதெல்லா ம் ஆதாரமா? திராவிடத் தலைவர்கள் ராஜபக்சேவுடன் குலவிச் சிரித்ததுபோல் எக்களித்துச் சிரிக்காதீர்கள் .. மற்றவர்கள் துன்பத்தில் சிரிக்கும் அளவுக்கு நீங்கள் மோசமா என்ன?
சவுக்கை குறைகூற நிச்சயமாக எனக்கு அருகதை இல்லை என்பதை ஒப்புக் கொள்கிறேன். அவரை, நாட்டுக்காக உழைத்த ஒரு ஜாதியைக் குறை சொல்லாதீர்கள், தவறு செய்த அந்த ஜாதி அதிகாரிகளைப் போட்டு விளாசுங்கள் என்றுதான் சொன்னேன்.
Quoting ம.பொன்ராஜ்:
ஜாதிகள், தீண்டாமை எல்லாம் தமிழரிடம் பிராமணர் என்ற பிரிவுக்கு முன்னாடியே தமிழரில் இருந்திருக்கு.. மத்த ஜாதியினர் பண்ணின தப்பவிட அதிகமா பார்ப்பன் பண்ணிடல.. யார இருந்தாலும் அதிக அளவு பூஜை, சைவ உணவு, அதிக சுத்தம்னா கொஞ்சம் ஒதுங்கிதான் இருப்பாங்க..
சார், பாப்பான் தப்பே பண்ணல்லைன்னு நான் சொன்னதா பொய் சொல்லாதீங்க.. எல்லாப் பழியும் பாப்பானுங்க மேலே போடாதீங்கன்னு தான் சொல்றேன் சார்.. பார்பனர் வெங்கட்ராமன் ஜனாதிபதியா இருந்தார்.. அவர் பார்பனர்களுக்கு எந்த நல்லதும் பண்ணல.. ஆனா தொழில் துறை மந்திரியா காங்கிரஸ் ஆட்சில திருப்பூர், கோவை, அம்பத்தூர் னு பல இடங்கள்ள அவர் தொழிற்கூடம் கட்டி முப்பது லட்சம் தமிழர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுத்தார். அவரைததான் தமிழனத்த வாழ விடமாட்டனுங்கன் னு சொல்றீங்க.. வேற எந்த மொழிக்கோ இனத்துக்கோ பண்ணல அவர். தமிழருக்குத்தான ் பண்ணினார்.
எனக்கு ஜாதி வெறிங்கறீங்க.. நான் உங்கள் ஜாதியை குறை சொல்லி திட்டலை.. ஆனா உங்களுக்கு கோவம் வருது.. நீங்க என் ஜாதியப் பத்தி ஒரு லிஸ்ட் போட்டு குறை சொல்லி திட்றீங்க.. நான் பொறுமையா பதில் சொல்றேன்..
உங்களைத் திட்டல; எங்களைத் திட்டாதீங்கன்னு மட்டும்தான் சொல்றேன் நம்ம ரெண்டு பேர்ல யாருக்கு சார் ஜாதி வெறி?
Quoting ம.பொன்ராஜ்:
Quoting malarmannan:
நீங்கள் உங்களுக்கு நடந்ததாக "**எனக்கு** நடந்த பல அவமானங்களில் சில மட்டும்" எனச் சொல்லிவிட்டு, "ஒரு நண்பன் சொன்னான்", "இன்னொரு நண்பன் சொன்னான்" என எழுதுவதைப் பார்த்தால் பொய் சொல்கிறீர்களோ என்று தோன்றுகிறது. எதற்கும் உங்களிடம் ஆதாரம் இல்லைதானே?
உங்கள் நண்பர் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறார ்.. கோவிலில் இருக்கும் குருக்கள் சாபிடுவதையோ, தண்ணீர் குடிப்பதையோ பார்த்திருக்கிற ீர்களா? பெரும்பாலும் தவிர்ப்பார்கள்..ஏன் தெரியுமா? ஆகம விதிப்படி, அவர்கள் 'பின்பக்கம்' போய்வந்தால் குளித்துவிட்டுத ்தான் கர்ப்பக் கிரகத்துக்குள் போகவேண்டும். இல்லையென்றால் பாவம் என்று நம்புகிறார்கள். நான் தினமும் கடைக்கு சென்று கோவில் கணக்கில் வாழைப்பழம் வாங்கி குருக்களிடம் கொடுப்பேன்.. நான் பார்ப்பன நாய் என்றாலும் என்னைத் தொடாமல்தான் வாங்கிக் கொள்வார். அது அவர்கள் பின்பற்ற வேண்டிய விதி.
வேளாங்கண்ணி கோவிலில் நான் குடுத்த மெழுகை தனியாக வைத்தார்கள்.. காரணம் நான் கிறிஸ்தவன் இல்லையாம்.. சி.எஸ். ஐ சர்ச் முழுதும் நாடார்களே. தலித் வந்தால் முகம் சுளிப்பார்கள். பாண்டிச்சேரியில ் சர்ச் மூணு துண்டாகப் பிரிக்கப்பட்டு சாதிவாரியாக் இருக்க வேண்டும் என்று ஒரு வெள்ளைக்கார ஜட்ஜ் தீர்ப்பு சொன்னார்.. காரணம் அடிக்கடி தலித் கிறிஸ்தவர்களை மற்ற சாதி கிறிஸ்தவர்கள் அடித்தது உள்ளே வரக்கூடாது என்றதுதான்.
ஏன் ஹிந்துமதத்தில் இல்லாதவர்கள் கோவிலுக்கு வரவேண்டும்? சொல்லுங்களேன்? ஒரு ஐயப்பன் பக்தி பாடலைப் பாடினார் என்பதற்காக பாடகர் ஜேசுதாசுக்கு இந்தியாவில் உள்ள லட்சம் சர்ச்களிலும் அனுமதிஇல்லை. பல சர்ச்களில் அவமானப் படுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டார் .
இஸ்லாமியர் துபாய்க்கு வேலைக்கு சென்றால், அங்குள்ள துருக்கிய முஸ்லீம்கள், 'ஹிந்து பெண்ணுக்கு பிறந்த முஸ்லிம்' 'லெப்பை', 'திருட்டு முஸ்லிம்', காப்ப்ரிக்கு பிறந்தவன் என்று சொன்னதே இல்லையா? அவர்கள் ஜாதி பார்ப்பதில்லையா ? அப்துல் கலாம் போல உன்னதமானவர்கள் உள்ள இஸ்லாமியர் சமூகத்தை 'தீவிரவாதி' என்று பொதுவாகச் சொல்வது தவறில்லையா?
அதே போல்தானே நாங்களும்.
நீங்கள் இவ்வாறு எழுதியது, நீங்கள், நான் பதில் சொல்லத்தகுதியுள ்ளவர் இல்லை என்றே காண்பிக்கிறது.
அந்தக்காலத்தில் தலித் தொட்டால் பிராமணன் போய் குளிப்பான்; அவ்வளவுதான். பெரியாரின் நாயக்கர்கள் வெட்டியே போட்டுவிடுவார்க ள். வெள்ளைக்காரன் சுட்டுவிடுவான். போன மாதம் கூட ஒரு இஸ்லாமியர் நாமக்கல்லில் ஒரு தலித்தை உயிரோடு கொளுத்திக் கொன்றார். காரணம் அந்த தலித்தின் மகன் இந்த இஸ்லாமியப் பெண்ணோடு ஓடிப்போனதுதான்(http://articles.timesofindia.indiatimes.com/2011-02-23/india/28626551_1_muslim-girl-dalit-man-son-elopes). பிராமணப் பெண்ணை இழுத்துக் கொண்டு ஓடுங்கள். ஒன்றுமே நடக்காது. பாப்பானுங்க எல்லாரும் ஜாதி வெறி இல்லாத பொட்டை நாய்ங்க சார்..
வெள்ளைக்காரர்கள ின் ஆட்சியை பெரியார் விரும்பினார் என்பதும், பல ஜமீன்தாரர்கள் விரும்பினர் என்பதும் , பெரியாரின் நீதிக்கட்சி தலைவர்கள் அனைவருமே ஜமீன்தாரர்கள் , பெரும் பணக்காரர்கள், பல தலித் மக்களை அடிமைகளாக வைத்திருந்தனர் என்பதுவும் உண்மை. வெள்ளையரின் ஆட்ச்சிக்கலத்தி ல் அவர்கள் பிராமணர்களை விரும்பினர். பிராமணர்கள் வெள்ளையரின் ஆட்சிக்காலத்தில ் நன்றாகவே முன்னேறினர். வெள்ளையன் இருந்தால் பார்ப்பானுக்கு நன்மைதான்.. மூணு சதவீதம் ஏன் தெரியுமா கூவியது? வெள்ளையர்களுக்க ாக இந்த ஜமீன்தாரர்கள் வரி கட்டும்போது இன்னும் அதிகமாக தலித்களை அடித்து, ரத்தத்தை உறிஞ்சி, சக்கையாக பிழிந்து வேலை வாங்கினர். அதைத் தட்டி கேட்டு உதை வாங்கிய தேச பக்தர் பலருள் சனாதன தர்மம் பின்பற்றிய பிராமணர் பலர்.
சனாதன தர்மப்படி ஒரு வாணியன் வேலைக்காரனை அடிமையாக வைத்துக்கொள்ளலா காது. அதில் தலையிட பிராமணனுக்கு உரிமை உண்டு. இந்த பிராமணர்களுக்கு இடம் கொடுக்கும் சனாதன தர்மத்தை எதிர்த்தே உருவாயின சமண மதம், புத்த மதம் . இந்த சமண மதத்தைப் பின்பற்றும் ஜெயின்கள் இப்படி வேலைக்காரர்களை அடிமையாக்கி வேலை வாங்குவார்கள் தெரியுமா? ராஜஸ்தானில் இன்று கூட, வேலையாட்களை சங்கிலியில் கட்டி மார்பிள் உடைக்கும் சமணர்கள் உண்டு. சனாதனம் இல்லை; புத்த மதம்தான் இன்று தமிழர்களை இலங்கையில் கொன்றது.
எவ்வளவு முட்டாளாக இருக்கிறீர்கள்! ! ஏன் ஈவேரா எனக்கு முட்டாள்கள்தான் கட்சியில் தேவை என்றார் என்று தெரிகிறது..
ராஜபக்சே பாதி கிறிஸ்தவர் பாதி புத்த மதம் சார்ந்தவர். கருமம் எப்படியோ இருக்கட்டும்.. அவர் பார்ப்பனர் அல்ல.. திருப்பதி கோவில் கிறிஸ்தவ ஆந்திர அரசின் நேர் ஆட்சியில் உள்ளது... கிறிஸ்தவர் ஆனாலும் நாங்க ரெட்டி தான் என சொல்லும் காங்கிரஸ் குடும்பம்..
அவனை இவன் கூட்டி வந்தா இதுல அர்ச்சகன் என்ன பண்ணுவான் ?
ஆமாம், உங்க திராவிடர்கள் என்னங்க பண்ணினாங்க? இப்ப திருப்பதி பாப்பானை சொல்றீங்களே, இங்க பாருங்க : http://www.youtube.com/watch?v=zxa2d2QqDus அப்பவே அங்க போய் நக்கிட்டு வந்தாச்சு.. அப்பறம் நானும் பாத்தேன், பாத்தேன் யாராவது வாஞ்சிநாதன் ஆஷ் துரைய சுட்ட மாதிரி, ஒரு தமிழனுக்காவது வீரம் வந்து ராஜபக்சேவ சுட்டுதள்ளுவாங் கன்னு.. என்னா வீரம்.. எருமை மாடுமேல மழை பெஞ்ச மாதிரி இல்ல எல்லாரும் கிரிக்கெட் பாக்கறான்.. சரி நீங்க என்னா பண்ணீங்க? கிரிகெட் தானே பாத்தீங்க... ஒருவேளை ராஜபக்சே பார்ப்பனன் இல்லை .. நம்ம ஆளுன்னு விட்டுடீங்களோ?
கோவில்ல விடலைன்னா பிராமணன் உள்ள விடலை .. கோவில்ல வுட்டன்னா பிராமணன் விட்டுட்டன்..
Quoting malarmannan:
இந்தியத்தாயை வணங்கி ஏற்ற்றுக் கொண்டு தேசிய நீரோட்டத்தில் கலக்க வாருங்கள்..
Quoting இஸ்லாமியன்:
I am old.. I can no longer rape any woman..so I want to rape entire India
என்று முடிவோடு இருப்பவர்தான் முதியவரா?
Jayalaitha was calling him respectfully, but she started telling his name only after he called her 'ammini, nadigai etc'
Quoting ஆனந்த்:
RSS feed for comments to this post