முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
கருணை இல்லாத கருணாநிதியே…. அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 25
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
வெள்ளிக்கிழமை, 22 ஏப்ரல் 2011 21:20
Photo00083

நீயும் உன் குடும்பமும், ஸ்பெக்ட்ரம் பணத்தை எண்ணிக் கொண்டிருந்த போது, நாங்கள் எங்கள் இனத்தின் விடுதலைக்காக போராடிக் கொண்டிருந்தோம்.   அடிமைப் பட்டுக் கிடந்த எம் தமிழினத்தை விடுவிக்கப் போராடிய ஒரே குற்றத்திற்காக, எம்மையும், எம் குழந்தைகளையும், ராஜபக்ஷே கொத்துக் குண்டுகள் போட்டு அழித்தான் என்றால், நீ எங்களை முதுகில் குத்தி அழித்தாய்.

 

தாய்த் தமிழகத்துக்கு வந்தால், எங்கள் உறவுகள் எங்களை ஏந்திக் கொள்வார்கள் என்ற ஒரே நம்பிக்கையில் தமிழகம் வந்த எங்களை சிறையில் அடைத்து சித்திரவதை செய்து வருவது உனது காவல்துறை.

 

நாங்கள் செய்தது மூன்று குற்றங்கள். முதல் குற்றம், தமிழனாய் பிறந்தது. இரண்டாவது குற்றம், இலங்கையில் பிறந்தது. மூன்றாவது குற்றம், தமிழர்கள் வாழும் தமிழ்நாட்டில் எங்களுக்கு,

 

பல முறை நீதிமன்றம் மூலமாகவும், பல்வேறு போராட்டங்கள் மூலமாகவும், மற்ற முகாம்களில் உள்ள எங்கள் குடும்பத்தினரோடு எங்களை சேர்ந்து வாழ விடு என்று தானே உன்னிடம் கேட்டோம் ? வேறு என்ன கேட்டோம் ?

 

இந்த ஒரே காரணத்திற்காக செங்கல்பட்டில், ஸ்பெக்ட்ரம் ஊழலில், ராசாவிடமும், சாதிக் பாட்சாவிடமும், எச்சில் இலை பொறுக்கிய ப்ரேம் ஆனந்த் சின்ஹாவும், சேவியர் தனராஜ் என்ற உதவிக் கண்காணிப்பாளரும், தடியடி நடத்தி, எங்கள் கை கால்களை உடைத்தார்கள். இது எங்கள் தாய் வீட்டிலா இது நடக்கிறது என்று எங்களை மலைக்க வைத்து, எங்கள் இதயத்தை துடிதுடிக்க வைத்தது நீதான்.

 

உனது நாட்கள் எண்ணப் பட்டுக் கொண்டிருக்கின்றன என்பதை நீயும் அறிவாய். நாங்களும் அறிவோம்.   இப்போது பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு, மீண்டும் பட்டினிப் போராட்டத்தை தொடங்கியிருக்கிறோம்.

 

நாங்கள் எங்களை விடுவித்து கட்டுப்பாடுகள் இல்லாமல், விடக் கோரவில்லை. ஏற்கனவே பல்வேறு கட்டுப் பாடுகள் இருக்கும், மற்ற அகதி முகாம்களில் இருக்கும் எங்கள் உறவுகளோடு எங்களை சேர்த்து வாழ விடு என்றுதான் கேட்கிறோம்.

 

எங்களுக்கு வாக்குரிமை இல்லை என்பதால், எங்களை வெளியில் விடுவதற்கு, நீ தேர்தல் ஆணையத்தின் அனுமதியைக் கூட கேட்க வேண்டியதில்லை.

 

இப்போதாவது, எங்களுக்கு விடிவு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன்

 

உன் மீது துளியும் அன்பில்லாத

 

ஈழத்தில் பிறந்த பாவப்பட்ட தமிழன்.

 

Comments  

 
0 #42 paaku mandaiyan 2011-04-26 20:52
Quoting ம.பொன்ராஜ்:
Priabaharan is not respect to Karunanidhi (see this week KALUGAL QA) hence he has given heavy price. i support who ever against brahimins in tamilnadu but not aginst veeramani or kalaingar..

why should prabakaran give respect to karunanaidhi.there is no need.just read this book rajeev gandhi kollai vazhaku kizhaku pathipagam then you may get something clear......before writing about social leader you must have clear knowledge of his/him......
Quote
 
 
0 #41 anniyan 2011-04-25 18:58
Quoting ம.பொன்ராஜ்:
Priabaharan is not respect to Karunanidhi (see this week KALUGAL QA) hence he has given heavy price. i support who ever against brahimins in tamilnadu but not aginst veeramani or kalaingar..

ஒரு பதிவில் பிராமணர்களிடம் 'நன்கொடை' என்று சொல்லி ஆயிரம், இரண்டாயிரம் என்று பணம் வாங்குவீர்கள் என்று சொன்னீர்கள்.. நேர்மை, நாணயம், நன்றி உணர்ச்சிதான் இல்லை.. இவ்வளவு ஓபனா "பிராமணர் பணத்த வாங்கிட்டு பிராமணர் எதிராவே பண்ணுவேன்னு" எழுதறீங்களே சுயமரியாதை, வெட்கம், மானம் கூடவா இல்லை ?
Quote
 
 
-4 #40 nerupu 2011-04-25 15:56
ஆட்சி மாறுவதற்குள் என்னை பழிவாங்கத் துடிக்கிறார்கள் !'' என்று சங்கர் தரப்பு சொல்ல ஆரம்பித்து இருக்கிறது. Mr savkku ungaloda aim unga veelaiya vanganum athukuthane ivlo nadipum . unmaileye natuku nalathu pananumnu nenacha ung old GOVT job thooki pootutu oru unmaiyana journalist ah irunthu kata mudiumaaaaaa.... ... if u can??????? otherwise dont act like thissssssss okkkkkkkkkkk
Quote
 
 
-6 #39 ம.பொன்ராஜ் 2011-04-24 23:02
Priabaharan is not respect to Karunanidhi (see this week KALUGAL QA) hence he has given heavy price. i support who ever against brahimins in tamilnadu but not aginst veeramani or kalaingar..
Quote
 
 
0 #38 KK 2011-04-24 22:20
WAR CRIME REPORT AGAINST TAMILS
http://www.sundaytimes.lk/110424/Timestwo/t2_09.html

War crimes

247. The Panel believes that the credible allegations and violations point to the commission of the following war crimes by persons acting on behalf of the Government of Sri Lanka.

(a) Serious violations of Common Article 3, including violence to life and person, in particular murder of all kinds, mutilation, cruel treatment and torture, including rape; outrages upon personal dignity, in particular humiliating and degrading treatment and failure to collect and care for the wounded and sick;
(b) International attacks on civilians.
(c) Indiscriminate or disproportionat e attacks on civilians;
(d) Attacks on medical and humanitarian objects, including humanitarian convoys and Red Cross - designated facilities.
(e) Starvation of the population and denial of humanitarian relief; and
(f) Enforced disappearances.

248. The Panel believes that the credible allegations and violations point to the commission of the following war crimes by persons on behalf of the LTTE:

(a) Serious violations of Common Article 3, including violence to life and person, in particular murder of all kinds, mutilation, cruel treatment (including forced labour) and torture; and taking of hostages; and
(b) Forcible recruitment of children.
Quote
 
 
+2 #37 கூத்தாடி. 2011-04-24 19:37
Quoting srilankan tamil:
தனி ஈழம் அமையாதது நன்றா தீதா என எனக்குத் தெரியவில்லை, ???


நண்பர் நீங்கள் srilankan tamil என்றும் தமிழ்நாட்டவர் என்றும் தெரிவித்திருக்க ிறீர்கள். முள்ளிவாய்க்கால ் முற்றுகைக்கு சாதியும் மதிலும் காரணமில்லை, காரணம் கருணாநிதியும் சோனியாவும் என்பதை மாற்றி கருணாநிதியை பிணையெடுக்கிறீர ்களா?
நான் கிளிநொச்சியை பிறப்பிடமாகக்கொ ண்டவன். நீங்கள் குறிப்பிட்ட காலமான 47, 62, 71. இந்தக்காலங்களில ் இலங்கையில் வெகுசனப்போராட்ட மெல்லாம் கிடையாது. அந்தளவு அரசியல் அறிவும் மக்களிடமில்லை, கலவரங்கள் ஏற்பட்டபோது அரசியல்க்கட்சிக ள் தமது நலன் சார்ந்து போராட்டங்களை நடத்தியிருக்கலா ம், தமிழர் தரப்பு அரசியல் கட்சிகளாக தமிழரசுக்கட்சிய ிம் தமிழ்க்காங்கிரஸ ் கட்சியும் மட்டும் அரசியல் வேலைகளில் ஈடுபட்டிருந்தன, சிங்களக்கட்சிகள ாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி யும் ஐக்கியதேசியக்கட ்சியும் இருந்தன ,, மலையக மக்களுக்கான அரசியல்க்கட்சிய ாக தொண்டைமான் தலைமையிலான தொழிலாளர் காங்கிரஸ் கட்சியும் அரசியல் செய்தன 1975 களுக்குப்பிறகுத ான் தமிழ் அரசியல்க்கட்சிக ளின் செயற்பாடு சரிப்பட்டுவராது என்ற முடிவு இளைஞர்களால் எடுக்கப்பட்டது. அந்தக்காலகட்டங் களுக்குபின் மலையகத்திலிருந் து விரட்டப்பட்ட மக்கள் பல இலட்சம்குடும்பங ்கள், கிளிநொச்சி, மற்றும் முல்லைத்தீவு, வவுனியா,
Quote
 
 
+2 #36 கூத்தாடி. 2011-04-24 19:34
Quoting srilankan tamil:
தனி ஈழம் அமையாதது நன்றா தீதா என எனக்குத் தெரியவில்லை, ???
பகுதிகளில் குடியேறி இன்றுவரை வாழ்ந்து வருகின்றனர். எனது தகப்பனார் யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகக்கொ ண்டவர். எனது தாய் தென்மராட்சி சாவகச்சேரியை பிறப்பிடமாக கொண்டவர். நான் வன்னி கிலிநொச்சியில் பிறந்து வளர்ந்தவன். வன்னி நிலப்பரப்புப்போ ல யாழ் மாவட்டத்தில் வெற்று நிலப்பரப்போ காடுகளோ கிடையாது, அதனால் அங்கு மலையகமக்கள் செல்லவில்லை; எல்லா நாடுகளிலும் உள்ளதுபோல மேல்த்தட்டு கீழ்த்தட்டு வர்க்கம் அந்தக்காலத்தில் இலங்கையிலும் இருந்திருக்க வாய்ப்புண்டு. ஜெர்மனியில்க்கூ ட போலந்து, இத்தாலி, நாடுகளிலிருந்து வந்து வேலை செய்பவர்களை ஒருவிதமாக நடத்துவதை நானும் பார்த்திருக்கிற ேன்.எனது காலத்தில் நீங்கள் குறிப்பிடுவதுபோ ன்ற சம்பவங்களை ஈழத்தில் நான் அறியவில்லை, இன்றும் எனது மற்றும் எனது உடன் பிறந்தாரின் நிலங்கள் 200 ஏக்கருக்குமேல் கிளிநொச்சி மாவட்டத்தில் பல துண்டுகளாக இருக்கின்றன. 10க்கு மேற்பட்ட வீடுகள் உடைந்து போனவை தவிர 4 வீடுகள் உருப்படியாக இருக்கின்றன அவற்றில் அனேக காணிகளில் மலையக மக்கள் குடியிருப்பதாக அறிகிறேன். இன்றய கணக்கின்படி ஈழத்தமிழன் என்று சொல்லும் வண்ணம் கிளிநொச்சியில் குடியிருப்பவர்க ள்70 % மலையகத்திலிருந் து 1970 களுக்குப்பின் குடிபெயர்ந்தவர் களே தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்களின் காலத்துக்கு முன் நீங்கள் குறிப்பிட்டவை நடந்திருக்கலாம் , அதற்கு முன் நிகழ்ந்தவைகள் ஈழமக்களால் புறக்கணிக்கப்பட ்ட நிகழ்வுகள். எனவே தேவையில்லாமல் வெளியில் வாழும் தமிழர்களிடத்தில ் சந்தேகத்தை ஏற்படுத்தவேண்டா மென நம்புகிறேன்
நன்றி.
Quote
 
 
+1 #35 KK 2011-04-24 19:33
VIJAYKANT BLASTS KARUNANIDHI
துணையோடு இலங்கை அரசு இறுதிக் கட்டத்தில் தமிழினப் படுகொலை நடத்தியது. பல்லாயிரம் தமிழர்கள் ஒரே நாளில் இலங்கை அரசின் முப்படைகளும் வீசிய கொத்து குண்டுகளுக்கு இரையாயினர்.



தமிழக முதல்வர் கருணாநிதி இந்தப் படுகொலையை தடுத்து நிறுத்துவார் என்று உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள் எதிர்பார்த்தனர் .

. போரும் ஓயவில்லை, இனப் படுகொலையும் தவிர்க்கப்படவில ்லைஅப்பாவித் தமிழ்ப் பெண்களை கற்பழித்தது, எவ்வித ஆதாரமும் இல்லாமல் தமிழ் இளைஞர்களை படுகொலை செய்தது, தமிழ் மக்களை கடத்திக் கொன்று காணாமல் செய்தது, ஆயுதம் இல்லாத அப்பாவித் தமிழர்கள் மீது குண்டுமாரி பொழிந்தது, உணவு வழங்காமல் தமிழர்களை பட்டினி போட்டு சாகடித்தது, மருந்துகளும்,
இந்தப் படுகொலையை தவிர்க்கக் கூடிய வாய்ப்பு கருணாநிதிக்கு மட்டுமே இருந்தது. எனினும் கருணாநிதி, ஆனால் முதல்வர் கருணாநிதியோ தனது அணியில் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை இலங்கைக்கு அனுப்பி ராஜபட்சவுடன் கை குலுக்க வைக்கிறார்.


ராமேஸ்வரம் மீனவர்கள் உயிர் வாழ கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றால் உயிரோடு திரும்ப முடிவதில்லை. இந்த சோகக் கதை தொடர்ந்த வண்ணம் உள்ளது.

இடைவேளை உண்ணாவிரதம் போல இதுவும் ஒரு கபட நாடகம் அல்லவா? இன்றும் மீன்பிடிக்கச் சென்ற நான்கு மீனவர்களின் அழுகிய பிணங்கள் கடற்கரையில் ஒதுங்குகின்ற நெஞ்சை நெகிழ வைக்கும் காட்சிதான் கருணாநிதி ஆட்சியிலதேடப்பட ும் கொலைக் குற்றவாளியான டக்ளஸ் தேவானந்தாவுக்கு இந்திய அரசு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கிறது. கருணாநிதி அவர் மூலம்தான் இலங்கையில் நாடாளுமன்ற குழுவின் சுற்றுப்பயணத்தி ற்கு ஏற்பாடு செய்கிறார்.


அவர்கள் இன்று வெறுப்பது இலங்கை அரசுக்கு துணை போன இந்திய அரசை மட்டுமல்ல, கருணாநிதியையும் தான். பிறர் மீது பழி சுமத்தி தப்பித்துக் கொள்ளும் தந்திரம் இனி எடுபடாது. தமிழ் இன வரலாற்றில் துடைத்தெறிய முடியாத தமிழினப் படுகொலை என்ற களங்கத்திற்கு கருணாநிதி முழு முதற்காரணம் என்பதை வரலாறு தூற்றும், வருங்கால தமிழினம் தூற்றும்’’ என்று தெரிவித்துள்ளார ்.
Quote
 
 
+2 #34 பரங்கியன் 2011-04-24 17:47
ஏம்ப்பா சங்கரு உன்னைய பத்தி ஜூ.வில கழுகார் என்னவோ சொல்லி இருக்காரே
Quote
 
 
+2 #33 குழலி 2011-04-24 16:54
இன்று விகடன் கழுகார் பகுதியில் வந்த செய்தி

பழிவாங்கப்படுகி றாரா சங்கர்?

முன்னாள் தலைமைச் செயலாளர் திரிபாதிக்கும், லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் உபாத்யாயாவுக்கு ம் இடையே நடந்த உரையாடல் டேப் வெளியாகி, 2008-ம் ஆண்டு தமிழக அரசியலில் பரபரப்பைக் கிளப்பியது. இந்த விவகாரத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையில் சிறப்பு உதவியாளராகப் பணியாற்றிய சங்கர் கைதானார். இவர் மீது வழக்கு நடைபெற்று வருகிறது. அதற்கு முன்பே இவரை எப்படியும் டிஸ்மிஸ் செய்ய வேண்டும் எனச்சிலர் மறைமுக சதியில் இறங்கி இருக்கிறார்கள்.

''லஞ்ச ஒழிப்புத் துறையின் இயக்குநரான துக்கை​யாண்டி, உளவுத் துறை அதிகாரி ஜாஃபர் சேட் பேச்சைக் கேட்டுத்தான் என் மீது பழிவாங்கும் நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். உயர் நீதிமன்றத்தின் தடை உத்தரவையும் மீறி என்னை டிஸ்மிஸ் செய்ய, துக்கையாண்டி இப்போது துடிக்கிறார். ஆட்சி மாறுவதற்குள் என்னை பழிவாங்கத் துடிக்கிறார்கள் !'' என்று சங்கர் தரப்பு சொல்ல ஆரம்பித்து இருக்கிறது.
Quote
 
 
+3 #32 jothibasu 2011-04-24 12:35
அன்புள்ள இலங்கை தமிழர்களே , உங்கள் நிலை கண்டு வருந்துகிறேன் , உங்களின் இந்த நிலைக்கு அணைத்து தமிழக அரசியல்வாதிகளும ் காரணம் . அதை விட முக்கிய காரணம் உங்கள் விடுதலை போராடகுழுக்களின ் தலைவர்களுக்குள் நடந்த போட்டி , சகோதர கொலைகள் , கருணா போல் காட்டிகொடுத்த போராளி எட்டப்பன்கள் . கருணாநிதி அதை வேடிக்கை பார்த்தார் என்று சொல்லுங்கள் , ஆனால் உங்களுக்காக பேசிய வைகோ , நெடுமாறன் போன்றவர்களை போடவில் போட்டவர் ஜெயலலிதா . நான் கருணாநிதி உங்களுக்கு செய்த துரோகம் , கொடுமை எல்லாவற்றையும் ஒப்புகொள்கிறேன் . இங்கு இதை எழுதிய நண்பர் சவுக்கு மற்றும் பின்னுட்டம் போடும் அணைத்து நண்பர்களின் ஆதரவுடன் ஆட்சியில் அமர போகும் ஜெயலலிதாவிடம் சொல்லி , அல்லது போராடி , உங்கள் அனைவரின் கோரிக்கையையும் குறைந்தபட்சம் ஒரு வருடதிற்குள்ளவத ு செய்து கான்பிபார்களா இந்த தமிழ் இன ஆர்வலர்கள் , போராளிகள் , திருடன் கருணாநிதி எதிர்பாளர்கள் , ஜெயலலிதா நல்ல ஆட்சி தருவார் , இலங்கை தமிழர் வாழ்வு மலர ஜெயலலிதா போராடுவார் , ஜெயலலிதா உங்கள் அனைவரையும் விடுதலை செய்வார் என பின்னுட்டம் இடும் நண்பர்கள் உறுதி மொழி தருவார்களா. ஆகவே இலங்கை தமிழர்களே உங்களைவைத்து வாழ்கை நடத்தும் எங்கள் அணைத்து அரசியல்வாதிகள் , பதிவு எழுதுபவர்கள் , பின்னுட்டம் போடுபவர்கள் , யாரையும் நம்பாமல் , நீங்களே ஒற்றுமையாய் பாடுபடுங்கள் , கடவுள் துணை புரிவார் , காலம் ஒரு நாள் மாறும் , உங்கள் கவலைகள் தீரும்
Quote
 
 
-2 #31 mannan 2011-04-24 09:12
Savukku is against Brahimins and he has publish one ugly article against brahmins but only one Brahmins newspaper is highlighted what is going on with case agaisnt him. its here...
பழிவாங்கப்படுகி றாரா சங்கர்?

முன்னாள் தலைமைச் செயலாளர் திரிபாதிக்கும், லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் உபாத்யாயாவுக்கு ம் இடையே நடந்த உரையாடல் டேப் வெளியாகி, 2008-ம் ஆண்டு தமிழக அரசியலில் பரபரப்பைக் கிளப்பியது. இந்த விவகாரத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையில் சிறப்பு உதவியாளராகப் பணியாற்றிய சங்கர் கைதானார். இவர் மீது வழக்கு நடைபெற்று வருகிறது. அதற்கு முன்பே இவரை எப்படியும் டிஸ்மிஸ் செய்ய வேண்டும் எனச்சிலர் மறைமுக சதியில் இறங்கி இருக்கிறார்கள்.

''லஞ்ச ஒழிப்புத் துறையின் இயக்குநரான துக்கை​யாண்டி, உளவுத் துறை அதிகாரி ஜாஃபர் சேட் பேச்சைக் கேட்டுத்தான் என் மீது பழிவாங்கும் நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். உயர் நீதிமன்றத்தின் தடை உத்தரவையும் மீறி என்னை டிஸ்மிஸ் செய்ய, துக்கையாண்டி இப்போது துடிக்கிறார். ஆட்சி மாறுவதற்குள் என்னை பழிவாங்கத் துடிக்கிறார்கள் !'' என்று சங்கர் தரப்பு சொல்ல ஆரம்பித்து இருக்கிறது.

Why dont THALITH or MUDALIAR or KONAR or NADARs newspapers supported sankar???? Sankar -- please remove those lines in the previous article and say sorry to the viewers. if you are not doing then you dont have any differences between Karunanidhi & Co..
Quote
 
 
0 #30 jayachandran 2011-04-24 08:38
no bourder for east-bengalies and tibetians,but tamiliens?!!!!!!!!!!!!!we want only humanity not agro-land like the tibetians(india n govt.gave them 100 aceres of land on the bank of the rivar kaveri)
Quote
 
 
+4 #29 ஈசன் 2011-04-23 23:47
இவர்களுக்கு இந்திய குடியுரிமை தரவேண்டும்.
Quote
 
 
+5 #28 நீதிதேவன் 2011-04-23 22:24
இவ்வார ஆனந்தவிகடனில் வந்துள்ள அ.முத்துலிங்கத்தி ன் சிறுகதையை படித்தேன்.. நான் தமிழ்நாட்டில் ஆணாக வாழ்வதை விட.. ஈழத்தில் பெண்ணாக பிறந்து, புலியாக மாறி என் உயிரை அர்த்தபடுத்தியி ருக்கலாம்.
Quote
 
 
0 #27 Sri 2011-04-23 21:43
everything will be alright if tamilan have humanity
Quote
 
 
+2 #26 பாரதிக்குஞ்சு.. 2011-04-23 18:36
கருணாநிதி தமிழரல்ல என்பது வெளிப்படை, ஆனால் அவர் ஒரு மனிதனாகக்கூட இன்றுவரை தன் குடும்பத்தை தவிர்த்து மற்றவர்களிடத்தி ல் நடந்துகொள்ளவில் லை. அதனால் கருணாநிதி மக்கள் மத்தியில் வெறுப்புக்கும் விமர்சனங்களுக்க ுள்ளாகிறார். அவர் ஓரளவாவது மனிதனாக நடந்திருந்தால் எந்த விமர்சனம் வந்திருக்க வாய்ப்பில்லை. கருணாநிதி ஈழத்தமிழர் விடயத்தில் நடந்துகொண்ட விதம் அரக்கத்தனமானதும ், மிருகத்தை ஒத்ததுமாகும், நேற்று ஒரு செய்தியில் கருணாநிதி, தனது 1/2 நாள் உண்ணாவிரத நாடகத்தை ஜெயலலிதா அவர்கள் விமர்சிப்பதா? என்று குற்றம் சுமத்தியிருந்தா ர். திமுக விலுள்ளவர்கள் அனேகமானவர்கள் கூட கருணாநிதிமீது ஈழ விடயத்தில் அதிருப்தியில்த் தான் இருக்கின்றனர் என்பது கருணாநிதி அறியாததற்கு வருந்துவது தவிர வேறு என்ன செய்யமுடியும். உலகத்திலுள்ள எந்தத்தமிழனும் கருணாநிதியின் கபட நாடகங்கள் அறியாததல்ல. பதவியில் இருப்பதால் பலர் மௌவுனம் காக்கின்றனர் வயசாகிவிட்ட கறுணாநிதி தன்னை பிழையாக மதிப்பிட்டு பெரிதாக நினைத்துக்கொண்ட ிருக்கிறார். இன்னும் நீண்டகாலம் கருணா வாழப்போவதுமில்ல ை.. செத்தபின் தன்னை எவரும் மதிக்கப்போவதில் லை என்பதும் கருணாநிதியும் இப்போ நன்கு தாமதமாக புரிந்துகொண்டதா ல் ஜெயலலிதாபோன்றவர ்களின் விமர்சனங்களை தாங்க முடியாமல் திரும்பவும் நல்லவன் போல நடிக்க முயலுகிறார். ஆனால் அதிர்ஷ்டவசமாக கருணாநிதி அரசன் போல வாழ்ந்து முடித்திருந்தால ும் இறந்த பிறகு கொடு நரகம் தவிர்க்க முடியாமல் போகும்.
Quote
 
 
+1 #25 vivek 2011-04-23 18:00
manasu valikkuthu :cry:
Quote
 
 
+3 #24 sam 2011-04-23 17:33
பழிவாங்கப்படுகி றாரா சங்கர்?

முன்னாள் தலைமைச் செயலாளர் திரிபாதிக்கும், லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் உபாத்யாயாவுக்கு ம் இடையே நடந்த உரையாடல் டேப் வெளியாகி, 2008-ம் ஆண்டு தமிழக அரசியலில் பரபரப்பைக் கிளப்பியது. இந்த விவகாரத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையில் சிறப்பு உதவியாளராகப் பணியாற்றிய சங்கர் கைதானார். இவர் மீது வழக்கு நடைபெற்று வருகிறது. அதற்கு முன்பே இவரை எப்படியும் டிஸ்மிஸ் செய்ய வேண்டும் எனச்சிலர் மறைமுக சதியில் இறங்கி இருக்கிறார்கள்.

''லஞ்ச ஒழிப்புத் துறையின் இயக்குநரான துக்கை​யாண்டி, உளவுத் துறை அதிகாரி ஜாஃபர் சேட் பேச்சைக் கேட்டுத்தான் என் மீது பழிவாங்கும் நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். உயர் நீதிமன்றத்தின் தடை உத்தரவையும் மீறி என்னை டிஸ்மிஸ் செய்ய, துக்கையாண்டி இப்போது துடிக்கிறார். ஆட்சி மாறுவதற்குள் என்னை பழிவாங்கத் துடிக்கிறார்கள் !'' என்று சங்கர் தரப்பு சொல்ல ஆரம்பித்து இருக்கிறது.
Quote
 
 
0 #23 kkkk 2011-04-23 17:22
very sad
Quote
 
 
0 #22 su raghuraman 2011-04-23 14:37
In UK and other European countries, refugees are given proper care and concerned government agencies and other NGOs help them re-unit with their relatives, wherever they are in the world. All these Tamil Refugees want to unite with their own people, that too within our State. Their only sin is that they born as Tamilan and who does't care for them is called as "Thamilina Thalaivar". Nattukittu Saganum Pola irrukku.
Quote
 
 
+2 #21 amoorthy 2011-04-23 13:02
ஐ.நா. அறிக்கையை தொடர்ந்து ராஜபக்சே பெயர் The Times 2011 Poll லில் இருந்து நீக்கப்பட்டது போல், ஏழைகளின்,அப்பாவ ிகளின் கண்ணீரும்,கருணா நிதி குடும்பத்தின் அராஜகமும் அவர் பெயரை தமிழர் வரலாற்றில் இருந்து அழித்து விடும்.சவுக்கு தெரிவித்தது போல் கொலையினால் பெற்ற பட்டத்தை வைத்து நாடு முழுவதும் வைக்கப்பட பெயர்ப் பலகைகள் கூட தூக்கி வீசப்படும். கலைஞர் பெயரில் உள்ள திட்டங்களெல்லாம ் பாடு தோல்வி ஆனதை,ஊழலை,லஞ்சத ்தை,அராஜகத்தை காட்டும் இந்தப் பெயர் முற்றாக நீக்கப்படும். பொறுத்திருப்போம ்.
Quote
 
 
+1 #20 srilankan tamil 2011-04-23 13:01
மேற் கூறப்பட்டுள்ள என் மனக் கருத்துக்களோடும ், வினாக்களோடும் இந்த விவாத மேடை உங்களுக்காய் விரிகிறது.
இப் பதிவு தொடர்பான உங்களது கருத்துக்களை, விவாதங்களை, எதிர்க் கருத்துக்களை ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்.

டிஸ்கி: ஒரே நாட்டினுள் பல் வேறு பிரிவுகளாகப் பிரிந்து, வேற்றுமைகளோடு வாழும் எங்களுக்கு கிடைத்த மிகப் பெரிய நல்ல செயல் என்ன தெரியுமா? தமிழனுக்கு என்று ஒரு தனி நாடு கிடைக்கவில்லை. அப்படிக் கிடைத்திருந்தால ் அந்தத் தனி நாட்டிலிருந்தே பல சிறிய நாடுகள் வேற்றுமையின் காரணமாக சுதந்திரம் வேண்டிப் போராடத் தொடங்கியிருக்கு ம். பின்னர் குட்டிக் குட்டித் தமிழ்த் தேசங்கள் தோன்றியிருக்கும ். யாருடைய நல்ல செயலோ தெரியவில்லை இப்படியான ஒரு நிலமை தோன்றவில்லை.

‘’தமிழன் என்றோர் இனமுண்டு, தனியே அதற்கோர் குணமுண்டு’’ எனச் சொல்லியவர் இந் நேரம் இருந்திருந்தால் .............???
(மிகுதியை நீங்கள் விரும்பியபடி முடித்துக் கொள்ளுங்கள்)

http://tamilnattu.blogspot.com/2011/04/blog-post_1619.html
Quote
 
 
-2 #19 srilankan tamil 2011-04-23 12:59
அந்தக் காலம் முதல் இந்திய அரசிடம் பகிரங்கமாக அன்ரன் பாலசிங்கம் அவர்கள் மன்னிப்புக் கோரும் வரை(2002ம் ஆண்டு வரை) ‘இந்தியாவின் துணையின்றி தனித்தே வெல்லுவோம்’ எனப் பல்லவி பாடிய நாங்கள் வன்னிப் பகுதி மீதான இராணுவ நடவடிக்கை தொடங்கப்பட்ட பின்னர் இந்தியா இன்றி ஈழத்தில் ஒரு துரும்பினையும் அசைக்க முடியாது எனக் கூறி கெஞ்சி, மன்றாடியது எவ் வகையில் நியாயமாகும்?

கலைஞர் தங்களைக் காப்பாற்றவில்லை யே, கருணாநிதி தமிழர்களுக்குத் துரோகம் செய்து விட்டார் எனக் கூறும் நாமெல்லோரும்; இருபத்திரண்டு தமிழ் மந்திரிகளைப் பாராளுமன்றம் அனுப்பியவர்கள் தானே?
அந்த இருபத்திரண்டு பேரில் யாராவது ஒருவராவது மலையகத் தமிழர்களுக்காக மனம் திறது சுய நலமற்றுப் பேசினார்கள் என்று நிரூபிக்க முடியுமா? ஆனால் ஈழத் தமிழர்களுக்காக இன்று வரை தன்னால் இயன்ற வரை குரல் கொடுக்கும் மனோ கணேசனை யாவரும் அறிந்திருப்பீர் கள் என நினைக்கிறேன்.

ஈழ யுத்தம் தொடங்க முன்பதாக மலையக மக்களின் சம்பள உயர்வு கோரிய போராட்டங்கள், தொழிற்சங்கப் போராட்டங்கள், 1977ம் ஆண்டு போராட்டம் முதலிய பல சம்பவங்கள் இடம் பெறுகையில் ஒரே நாட்டினுள் இருந்தும் கை கட்டி வாய் பொத்தி நின்று வேடிக்கை பார்த்து விட்டு,
வன்னியில் எங்கள் தலைக்கு மேல் அவலம் வந்த வேளையில் மட்டும் எந்த முகத்தைக் கொண்டு ‘கலைஞர் ஐயா காப்பாற்றுங்கோ’ எனக் கேட்க மனம் வந்தது?

சமாதான காலத்தில் ஈழத்திற்கு தமிழகத்திலிருந் து வியாபார நோக்கோடு வந்திருந்த (2002ம் ஆண்டின் பின்னர்) ஈரோடு, காஞ்சிபுரம், மதுரை முதலிய பல தமிழக ஊர்களைச் சேர்ந்த புடவை வியாபாரிகளை ‘இவர்கள் இந்திய உளவுத் துறையான ‘ராவின்(Raw) உளவாளிகள்’ எனக் கூறி பட்டப் பகலில் வீதியில் வைத்து அடித்து விரட்டிய நாங்கள் எந்த முகத்தினை வைத்துக் கொண்டு ‘தமிழகமே எங்களை மன்னித்து, மோட்சம் அளி’ எனக் கதற முடியும்?
மேற் கூறப்பட்டுள்ள என் மனக் கருத்துக்களோடும ், வினாக்களோடும் இந்த விவாத மேடை உங்களுக்காய் விரிகிறது.
இப் பதிவு தொடர்பான உங்களது கருத்துக்களை, விவாதங்களை, எதிர்க் கருத்துக்களை ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்.

to be continued

http://tamilnattu.blogspot.com/2011/04/blog-post_1619.html
Quote
 
 
-2 #18 srilankan tamil 2011-04-23 12:57
இவ் இடத்தில் ஒரு கணம் நிற்க. இதே இந்தியாவிலிருந் து கையில் அகப்பட்ட பொருள்களோடு வியாபார நோக்கத்திற்காகத ் தானே ஈழத்திற்கு எங்கள் மூதாதையர்கள் வந்து குடியேறி, இலங்கைத் தமிழர் எனும் அடையாளத்தை எம்மிடத்தே தந்து விட்டுச் சென்றார்கள். ஓ, நாமெல்லோரும் வரலாறுகளை மறந்து எமக்குப் பின்னே வந்த மலையக உறவுகளை எள்ளி நகை செய்கிறோம், கிண்டலடிக்கிறோம ். ஏன் எங்கள் ஊர்களுக்கு அவர்கள் வந்தால் சரி நிகர் சமனாக உரையாட மறுக்கிறோம், எங்கள் ஊர்களிற்கு வரும் மலைய சகோதர்களில் ஒரு சிலரை குறத்தி, குறவன் எனப் பேசிக் கலைக்கிறோம். இது எங்களின் ஆதிக்க வாதமா? இல்லை ஏனையவரை அடிமை செய்யும் குணத்தின் அடையாளங்களா?

*இந்திய மத்திய அரசு தமிழர்கள் விடயத்தில் ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பத்தியேழுகளி ல் தவறிழைத்தது என்பது நிஜம். அது உண்மை, ஆனால் இந்தியா இதற்காக மன்னிப்புக் கேட்க வேண்டும் எனக் கூறும் நாங்கள்
காலாதி காலமாக சொல்லும் பழமொழி என்ன தெரியுமா?
‘’வாடைக் காற்றினை நம்பினாலும் வடக்கத்தையானை நம்பக் கூடாது’
(இலங்கைக்கு வட திசையில் எந்த நாட்டவர் இருக்கிறார் என்பதன் அடிப்படையில் இதனைப் பார்த்தால் நிறையப் பொருள் விளங்கும்)
இந்தப் மொழிக் கிண்டலோடு தானே எம்மூர்களிற்கு வரும் சகோதர்களோடு, எங்களின் சுயத்தை மறந்தவர்களாகப் பழகியிருக்கிறோம ்.

எம் வம்சத்தினை, எங்களின் வேர்க் கொடிகளை, தொப்புள் கொடியினரை இழிழு படுத்தும் நாங்கள் எப்படி தமிழகமே எங்களைக் காப்பாற்று எனக் கூக்குரலிட முடியும்?

ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பத்தியேழாம் ஆண்டினைத் தொடர்ந்து எமக்கிருந்த இந்திய ஆதரவு சந்தர்ப்ப சூழ் நிலைகளால், அதுவும், இந்திய இராணுவம் இலங்கையில் செய்த சதி, இந்திய மத்திய அரசினது நடவடிக்கைகள், இலங்கை ஜனாதிபதி பிரேமதாசா முதலியோரது நடவடிக்கைகளால் சீர் குலைந்தது என்பதை இவ் இடத்தில் நிலை நிறுத்தி ஒரு வினாவினை முன் வைக்கிறேன்.
to be continued
http://tamilnattu.blogspot.com/2011/04/blog-post_1619.html
Quote
 
 
-1 #17 srilankan tamil 2011-04-23 12:56
இன்று கருணாநிதி எங்களைக் காப்பாற்றத் தவறி விட்டார், சோனிய எங்களுக்கு சொர்க்கத்தை திறந்து விட மறுத்து விட்டார் என சோகராகம் பாடும் நாங்கள் கடந்த காலங்களில் தமிழக உறவுகள் மீதான எங்களின் பார்வைகளினை மறத்தல் அல்லது மறந்து வாழ்தல் எவ் வகையில் நியாயமாகும்?

ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எண்பத்தியேழுகளை த்(1987) தொடர்ந்து தான் இலங்கையின் விடயத்தில் இந்தியா துரோகம் இழைக்கத் தொடங்கியது, இந்தியா எங்களைக் காப்பாற்றவில்லை யே, மத்திய அரசு எங்களை மதி கெட்டவர்களாக்கி விட்டது என்று பல்லவி பாடும் நாங்கள் இந்தக் காலங்களிற்கு முன்பதாக இழைத்த குற்றங்களைக் கொஞ்சம் திரும்பிப் பார்க்க வேண்டும்,

*ஆயிரத்து எண்ணூறுகளின் பின்னர்; இந்தியாவிலிருந் து இலங்கையின் மலை நாட்டிற்கு தேயிலைப் பயிர் செய்கைக்காக கொண்டு வரப்பட்ட மக்களை எவ்வாறு எங்களது ஆதிக்கவாதம் செருக்கு குணம் கொண்ட தமிழர்கள் இன்று வரை அழைக்கிறார்கள் தெரியுமா?

‘தோட்டக்காட்டார ் அல்லது தோட்டக்காட்டான் .
to be continued
http://tamilnattu.blogspot.com/2011/04/blog-post_1619.html
Quote
 
 
-1 #16 srilankan tamil 2011-04-23 12:55
ஈழத் தமிழர்கள் எனும் இனம் புவியியலாளர்களி ன் கூற்றுப் படி, பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் குமரிக் கண்டத்தில் ஏற்பட்ட பாரிய சுனாமித் தாக்கத்தின் காரணமாக இலங்கையில் குடியேறியவர்கள் அல்லது இலங்கைக்கு இடம் பெயர்ந்தவர்கள் என்பதனை யாரும் மறுத்துரைக்கவோ இல்லை மறக்கவோ முடியாது. எங்களின் எச்சங்கள், எங்களின் மரபணுக்கள் யாவும் தென் இந்தியாவிலிருந் தே தோற்றம் பெற்றிருந்தன.(இதனை விளக்கமாக ஈழத்தில் சாதியம்- பிடிக்காதவர்கள் தயவு செய்து படிக்க வேண்டாம் எனும் பதிவில் கூறியிருக்கிறேன ்)

இலங்கையில் வாழுகின்ற தமிழர் எனும் இனத்தினுள்

*ஈழத்தில் ஆரம்ப காலம் தொட்டு பூர்வீகமாக வாழும் தமிழர்கள்- இந்தியாவிலிருந் து முதன் முதலாக குடியேறியவர்கள் (தற்போது இலங்கையில் வாழும் தமிழர்கள்- வட கிழக்கு பூர்வீகத் தமிழர்கள்)

*மலையகத் தமிழர்கள்: ஆயிரத்து எண்ணூறுகளின் பிற் பகுதியில் இந்தியாவிலிருந் து ஆங்கிலேயர்களால் அழைத்து வரப் பட்டவர்களை மலையக மக்கள் என்று கூறுவார்கள். இவர்களே கொழும்புத் தமிழர் எனவும் அழைக்கப்படுகின் றார்கள்.

*தமிழைத் தாய் மொழியாகப் பேசுகின்ற இஸ்லாமியர்களும் உள்ளடங்குவார்கள ்.

எங்களின் கடந்த காலங்களை, எங்களுக்கே உரிய தனித்துவமான எச்சங்களை, வேர்களினை, மூதாதையர்களை(மு ன்னோர்களை) மறந்து விட்டு, இலங்கைத் தமிழர்களில் பெரும் பாலானவர்கள் தாம் ஏதோ வேற்றுக் கிரகத்திலிருந்த ு வந்தவர்கள் போலப் பாசாங்கு செய்வது வருந்தத்தக்க விடயமே. ’’தமிழக உறவுகளே, உங்களோடு சொந்தம் கொண்டாடும் போதும், பழகும் போதும், இந்த விடயங்களை மறைத்துப் பழக என் மனது இடம் கொடுக்க மறுக்கிறது.

to be continued
http://tamilnattu.blogspot.com/2011/04/blog-post_1619.html
Quote
 
 
-2 #15 srilankan tamil 2011-04-23 12:52
தமிழ் நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டிய ஈழத் தமிழர்கள்!
முன் அறிவிப்பு: இப் பதிவு பிடிக்காதவர்கள் தயவு செய்து இதனைப் படிக்க வேண்டாம். ஒரு ஈழத் தமிழனாக இருந்து, மனம் விட்டு மன்னிப்புக் கேட்டாலும் இந்தச் செயல்களை ஆற்றுப்படுத்த முடியாது என்ற காரணத்தினால் நான் எங்கள் இழி நிலைகளைப் பதிவாக்க முனைகின்றேன். ஈழத் தமிழன் எனும் அடையாளத்துடன் இப் பதிவினை எழுதுவதால், தமிழக உள்ளங்களிடமிருந ்து எதிர்ப்பலைகள் கிளம்பலாம், ஆனாலும் பதிவில் நான் என் கருத்துக்கள் எதனையும் முன் வைக்காது, எங்கள் மக்களின் அனுபவ ரீதியான கருத்துக்களை மட்டுமே முன் வைக்கவுள்ளேன்!

உறவுகளே, இப் பதிவில் வரும் விடயங்கள் உங்களைக் காயப்படுத்தலாம் , இவை தமிழக உறவுகள் மத்தியில் பல முரண்பாடுகளை உருவாக்கலாம். ஆனாலும் இப் பதிவில் வரும் விடயங்கள் உங்கள் மன எண்ணங்களைச் சிதைப்பதற்கானவை அல்ல. உங்களுடன் எங்களின் இழிவான குணங்களைப் பகிர்ந்து கொள்வதற்காக மட்டுமே! ஈழத் தமிழர்களுக்கு இப்படியும் ஒரு குணம் இருக்கிறது என்பதனை அல்லது ஈழத் தமிழர்களின் மறுபக்கத்தைத் தெரிந்து கொள்வதற்காகவே இப் பதிவு.
to be continued

http://tamilnattu.blogspot.com/2011/04/blog-post_1619.html
Quote
 
 
0 #14 srilankan tamil 2011-04-23 12:41
தனி ஈழம் அமையாதது நன்றா தீதா என எனக்குத் தெரியவில்லை, ஆனால் இலங்கையில் வாழும் தமிழர்கள் அதாவது ஈழத்தமிழர்கள் எனப்படும் இனத்தின் ஒற்றுமையின்மையே முள்ளிவாய்க்கால ுக்கான காரணம் எனத் தமிழ்நாட்டில் பலர் அறிந்து இருக்க மாட்டார்கள். இதற்கான அடி ஆணிவேர் அனைத்தும் சாதி என்னும் புற்றுநோயால் பீடிக்கப்பட்டவை . முதலில் யாழ்ப்பாணத்தமிழ ர்கள் எனப்படும் கூட்டம் ஈழத்தமிழர்களின் கிழக்கு மாநிலத் தமிழர்களையும், நீர்கொழும்புத் தமிழர்களையும், மன்னார்த் தமிழர்களையும் கூட தம்மோடு அரவணைத்துக் கொள்வதில்லை. மற்றொன்று ஈழத்தமிழர்கள் ஒரு போதும் மலையகத் தமிழர்களை அரவணைத்துக் கொள்வதில்லை.

நான் எப்போதும் அவர்களிடம் எழுப்பும் ஒரே கேள்வி --- 1947, 1962, 1971 களில் மில்லியன் கணக்கான மலையகத் தமிழர்களை சிங்கள அரசு வெளியேற்றப் படும் போது ஈழத்தமிழ் மக்கள் ஒரு போராட்டத்தையும் நடத்தவில்லை. ஆனால் ஈழத்தமிழர்களுக் காக தமிழ்நாட்டிலும் , மலையகத்திலும் எத்தனைப் போராட்டங்கள் நடந்துள்ளன ....... இந்நன்றியை மறந்தவராய் ஒரு யாழ்ப்பாணத்தவர் இங்கு தமிழ்நாட்டைப் பற்றி இழிவாகவே என்னிடம் பேசினார். நான் ஆங்கிலத்தில் பேசியதால் அவர் என்னை குஜராத்தி என்று நினைத்தார் போலும், பின்னர் நானும் தமிழ்நாட்டவன் என்று தெரிந்ததும் அந்த இடத்தை விட்டு அகன்றார்.

நான் யாழ்ப்பாணத்தவரி டம் கேட்பது எல்லாம் யாழ்ப்பாணத் தமிழர்களை விடவும் தமிழகத் தமிழர்களும், மலையகத் தமிழர்களும் எவ்வகையில் குறைந்தவர்கள் ???
Quote
 
 
0 #13 nesam 2011-04-23 12:28
When we are not able to give a decent living to the refugees who have been living here for more than 20 years, there is no point in blaming Sri Lanka and Rajapakshe.

Why not the Government give them land, clothing and education, so that these generation of people can come up? why not tamilians residing in Tamilnadu give up their quota rights (and enjoying it for 20 years) for these lankan refugees to get education? Our kunjamani junior (athanga savukku sir) and his brahmin haters team will they come up with such a suggestion to the future governments?

This would do great justice to the refugees and they would be thankful to the fellow tamilians for years .
Quote
 
 
0 #12 dhass 2011-04-23 12:25
விரைவில் கனிமொழியும் இது போன்ற ஒரு முகாமில் அடைக்கபடுவார். என்ன அதை மற்றவர்கள் திகார் என்று சொல்லுவார்கள் அப்ப தெரியும் கருணாநிதிக்கு எங்களின் வலி .அப்ப கடிதம் எதுவும் எழுது வாரோ?இல்ல தந்தி அடிப்பாரா?
Quote
 
 
+1 #11 pskumar 2011-04-23 12:05
This news regarding you right?

பழிவாங்கப்படுகி றாரா சங்கர்?

முன்னாள் தலைமைச் செயலாளர் திரிபாதிக்கும், லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் உபாத்யாயாவுக்கு ம் இடையே நடந்த உரையாடல் டேப் வெளியாகி, 2008-ம் ஆண்டு தமிழக அரசியலில் பரபரப்பைக் கிளப்பியது. இந்த விவகாரத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையில் சிறப்பு உதவியாளராகப் பணியாற்றிய சங்கர் கைதானார். இவர் மீது வழக்கு நடைபெற்று வருகிறது. அதற்கு முன்பே இவரை எப்படியும் டிஸ்மிஸ் செய்ய வேண்டும் எனச்சிலர் மறைமுக சதியில் இறங்கி இருக்கிறார்கள்.

''லஞ்ச ஒழிப்புத் துறையின் இயக்குநரான துக்கை​யாண்டி, உளவுத் துறை அதிகாரி ஜாஃபர் சேட் பேச்சைக் கேட்டுத்தான் என் மீது பழிவாங்கும் நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். உயர் நீதிமன்றத்தின் தடை உத்தரவையும் மீறி என்னை டிஸ்மிஸ் செய்ய, துக்கையாண்டி இப்போது துடிக்கிறார். ஆட்சி மாறுவதற்குள் என்னை பழிவாங்கத் துடிக்கிறார்கள் !'' என்று சங்கர் தரப்பு சொல்ல ஆரம்பித்து இருக்கிறது.
Quote
 
 
0 #10 ARIF 2011-04-23 11:47
Pl go through the link.Pl ease visit web sites given in the article.Most urgent
-----------------------------
http://expressbuzz.com/opinion/columnists/what-will-be-sonia%E2%80%99s-response-now/267730.html
Quote
 
 
+4 #9 ஊர்க்குருவி.. 2011-04-23 10:41
பேயானாய் பிசாசானாய்
பதவிக்காக.
பொய் சொன்னாய் சதி செய்தாய்
பணத்துக்காக.
கண்முன்னே கரியான முத்துகுமாரை
காதலிலே தொல்விகண்ட
கபோதியென்றாய்.

கோவையிலே கோடி கொட்டி
கூட்டம் போட்டாய்
கொள்கையது தமிழ் வளர்ப்பேன்
குறியேயென்றாய்
நாலுதினம் ஆடிய ஆட்டமெல்லாம்-உன்
நான்கு தார கூட்டத்தின்
கூத்தா யாச்சே.

ஈழத்து விடுதலையின் சூத்திரத்தை
எத்தனையோ வருடத்தின்
தியாகதீயை
வஞ்சகியாம் சோனியாவை
துணையாய்க்கொண்ட
வக்கிரமாய் எரித்தழித்தாய்-உன்
வசதிக்காக.

தின்பதெல்லாம் நீ என்றும் சோறுதானோ
சேர்ந்த உந்தன் கருமூலம் மிருகமாமோ
சுந்தரமாய் நீ வாழ சூதுகொண்டு
சூழ்ந்தாயே தமிழகத்தில்
இருளாய் இன்று.

நெஞ்சினிலே உன்னிடத்தில்
இல்லை நீதி
நித்தம் நித்தம் உன் குடும்ப
எண்ணம் மேவி
எண்பதொடு தொண்ணூறு வயதுமாகி
இன்றுவரை வாழ்கின்றாய்
இயமனாக.

போகாயோ தொலையாயோ
புவியை விட்டு
புதுக்காலம் பிறக்காதோ என்றே நாங்கள்
ஏமாந்தோம் உருக்குலைந்தோம்
ஈழ மண்ணில்
எப்போ நீ விடை பெறுவாய்
ஐயா சொல்லு.
Quote
 
 
0 #8 Bharath Arunachalam 2011-04-23 10:07
It looks like DMK has lost for sure.

http://www.frontlineonnet.com/stories/20110506280902900.htm
Quote
 
 
0 #7 ksn.balaji 2011-04-23 09:14
Tamil nadu govt must want to take atleast miniumum life solution for them immediately
Quote
 
 
+2 #6 சோசியக்காரன் 2011-04-23 08:40
இந்த பாவ மூட்டைகள கரைக்குரதுக்குத ்தேன் அடுத்த மாச்த்தைலருந்து கலிஞறு லீவு போட்டு வரப்போறாரே. அதுக்குள்ள என்ன அவசரம்? செயலலிதா தாயீ புண்ணியத்துல கலிஞறு பாவமூட்டைகள இந்த சென்மத்துக்குள் ள முடிஞ்ச அளவு கரைச்சிட்டு மேல போயிருவாரு. எதுனாச்சி பேலன்ஸ் இருந்தா ஸ்டாலின் தம்பி வந்து கரச்சிரும். செல நேரம் ஸ்டாலின் தம்பி மூட்டைய கரைக்க பயந்துக்கினு கலிஞறு என்னோட அப்பனே கெடயாதுன்னு சொன்னாலும் ஆச்சர்யபடுரதுக் கிள்ளே. எல்லாம் கெரகம் பண்ற வேலதேன். நம்ம கைல ஒண்ணுமில்ல சாமி.
Quote
 
 
+3 #5 Manniyan 2011-04-23 08:21
Aamaanda..Sadiq Basha kuda Brahminthan. Ethukku Iyer mela pazhi podarudhunu illai ?? Namba Savukku sonnare , kakkuz varalaina kuda paavan parpaandhan mattinana ??!!
Quote
 
 
-3 #4 cm 2011-04-23 00:31
solvatharkku inimel enna irukiradhu. Onrum illai!
Quote
 
 
-21 #3 anniyan 2011-04-23 00:12
ப்ரேம் ஆனந்த் சின்ஹா, சேவியர் தனராஜ் both are brahmins... they only beat Srilankan tamilians
Quote
 
 
+16 #2 Eswaran 2011-04-22 23:46
You will definitely get a chance to living with your families.
Quote
 
 
+22 #1 jaya 2011-04-22 21:55
இந்த பாவத்தை எதனை ஜென்மம் எடுத்தாலும் இந்த கருணா துடைத்தெரிய முடியாது. ஆறாத வடுவாய் மாறிவிட்டது இந்த துரோகங்கள்.
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 94 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday3880
mod_vvisit_counterYesterday10391
mod_vvisit_counterThis week72654
mod_vvisit_counterLast week80887
mod_vvisit_counterThis month206612
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12728731