முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள் ராதாகிருஷ்ணன். அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 22
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
புதன்கிழமை, 27 ஏப்ரல் 2011 07:59

 

யார் இந்த ராதாகிருஷ்ணன் ? சர்வபள்ளி ராதாகிருஷ்ணனா ? இல்லை. இல்லை.   சட்டம் ஒழுங்கை காக்க வேண்டிய பொறுப்பில் இருந்து கொண்டு துளியும் ஒழுங்கில்லாத கே.ராதாகிருஷ்ணன் நாயுடுதான் இது.

 

அப்படி என்ன செய்து விட்டார் ராதாகிருஷ்ணன் ?   தேர்தல் முடிந்ததும், எலெக்ட்ரானிக் வாக்கு இயந்திரங்கள் வைக்கப் பட்டிருக்கும், அனைத்து இடங்களிலும், போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும், திமுகவினர் முறைகேடுகளில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் உள்ளது என்று, ஜெயலலிதா அறிக்கை வெளியிட்ட உடனேயே, களத்தில் இறங்கினார் ராதாகிருஷ்ணன்.   வாக்கு இயந்திரங்கள் வைத்திருக்கும் அனைத்து இடங்களையும், தமிழகம் முழுக்க நேரில் சென்று ஆய்வு செய்து, பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்பார்வை செய்தார்.

 rad

இதில் என்ன தவறு இருக்கிறது ?   சட்டம் ஒழுங்கை மேற்பார்வை செய்யும் ஒரு கூடுதல் டிஜிபி இப்படி ஆய்வு செய்யக் கூடாதா ?   செய்யலாம் தான் தவறில்லை.

 

ஆனால், மேற்கு மண்டலத்தை ஆய்வு செய்யச் செல்கையில் மட்டும், ராதாகிருஷ்ணன், தன் மனைவியையும் உடன் அழைத்துச் சென்றார்.   கோவையில் உள்ள வாக்கு இயந்திரங்களை பார்வையிடச் சென்ற அவர், அங்கிருந்து மசணக்குடிக்கு சென்றார். இதுவும் கூட தவறு கிடையாது. சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதையே தனது ஒரே குறிக்கோளாகக் கொண்டு, பம்பரமாகச் சுற்றிப் பணியாற்றும் ஒரு அதிகாரி, தனது மனைவியை அழைத்துக் கொண்டு, அலுவல் ரீதியான சுற்றுப் பயணத்தில் ஈடுபடுவது கூட தவறு கிடையாது.

 

பிறகு என்னதான் தவறு ? ராதாகிருஷ்ணன், கொடநாட்டில் உள்ள ஜெயலலிதாவைச் சந்தித்து, தனது மனைவியோடு, காலில் விழுந்து சரணாகதி அடைய முயற்சி செய்தார் என்ற தகவல் தான் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

தமிழக காவல்துறையில் பெரும்பாலான சில அதிகாரிகள், இரண்டு திராவிடக் கட்சிகளில் தங்களுக்கு பிடித்தமானது எது என்பதை தேர்ந்தெடுத்து, அதில் ஒரு கட்சியோடு நெருக்கம் பாராட்டுவார்கள்.   மற்ற சில அதிகாரிகள், எந்தக் கட்சி வந்தாலும், சூடு சொரணை ஏதும் இல்லாமல் வெட்கமே இல்லாமல், அப்போது ஆட்சிக்கு வரும் கட்சியின் முக்கியப் பிரமுகர்கள் காலையோ கையையோ பிடித்து, ஏதாவது ஒரு நல்ல பதவிக்கு வருவது வழக்கம். ஜாபர் சேட், சாரங்கன், சைலேந்திரபாபு, போன்றவர்கள் இந்த வகை.

 radha_2

 

 

இந்த இரண்டாவது வகையில் தான், ராதாகிருஷ்ணனும் வருவார். 2001ல் அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன், ராதாகிருஷ்ணன், அமோகமாக இருந்தார். பலகோடி ரூபாய் ஊழலான சென்னை மாநகராட்சி பாலம் கட்டும் ஊழலில் தொடங்கி, தற்போதயை தலைமைச் செயலாளர் மாலதி மீது எப்ஐஆர் தாக்கல் செய்ய வேண்டும் என்று அரசுக்கு அறிக்கை வழங்கியது வரை, கொடி கட்டிப் பறந்தார். அவரது செயல்பாடுகளைப் பாராட்டி, (????) சராசரிக்கும் குறைவான மதிப்பெண்களைப் பெற்றிருந்த அவரது மகன் சந்தீப்புக்கு, அரசு கோட்டாவின் கீழ், அண்ணா பல்கலைகழகத்தில் எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிக்கேஷன் பிரிவில் இடம் ஒதுக்கப் பட்டது.

 

திமுக 2006ல் ஆட்சிக்கு வந்ததும், அந்தர் பல்டி அடித்தார் ராதாகிருஷ்ணன்.   ஆற்காடு வீராச்சாமிக்கு எதிராக சொத்துக் குவிப்பு வழக்கை விசாரித்துக் கொண்டிருந்தார் பி.வி.தாமஸ் என்ற அதிகாரி.   அவர், ஆற்காடு மீது குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்ய போதுமான ஆதாரங்கள் இல்லை என்று சொன்ன கருத்தை ஏற்காமல், ராதாகிருஷ்ணனும், அப்போதைய இயக்குநர் நாஞ்சில் குமரனும், பி.வி.தாமஸை மிரட்டு மிரட்டு என்று மிரட்டி, நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய வகை செய்ய ஏதுவாக இறுதி அறிக்கை கொடுக்க வைத்தார்கள்.

 

இந்த அறிக்கை திமுக ஆட்சிக்கு வருவதற்கு 20 நாட்களுக்கு முன்பு தலைமைச் செயலகத்துக்கு அனுப்பப் பட்டது. திமுக பதவியேற்ற மறுநாள், தலைமைச் செயலகம் அனுப்பப் பட்ட அந்த அறிக்கையை அகற்றி, அது போல அறிக்கையே அனுப்பாதது போல கோப்புகளை திருத்தினார் ராதாகிருஷ்ணன். வீராச்சாமியை சந்தித்து, சாதி ரீதியாக உறவாடி, எப்படியாவது காப்பாற்றுமாறு கெஞ்சினார். தண்ணீரை விட ரத்தம் அடர்த்தியானது அல்லவா ? ஆற்காடு வீராச்சாமியும், ‘சரி ஆயிரம் தான் இருந்தாலும், நம்ம சாதிக்கார அதிகாரி’ என்று, ராதாகிருஷ்ணனுக்காக நல்ல பதவி கேட்டு, கருணாநிதியிடம் பரிந்துரை செய்தார்.

 RADHAKRISHNAN_IPS_3

அதற்குப் பிறகு, ராதாகிருஷ்ணனுக்கு சுக்கிர திசைதான்.   சென்னை மாநகர ஆணையாளர் பதவி, சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி பதவி என்று திமுக ஆட்சியிலும், கொடி கட்டிப் பறந்தார்.

 

கருணாநிதியின் கடைக்கண் பார்வை கிடைத்து விட்டது என்று, ராதாகிருஷ்ணன் ஆடிய ஆட்டத்துக்கு அளவே இல்லை. இந்த அடிப்படையிலேயே, உயர்நீதிமன்றத்தில் புகுந்து, வழக்கறிஞர்கள் மீது, கடும் தாக்குதலை நடத்த உத்தரவிட்டார். அந்தத் தாக்குதல் சிக்கலை ஏற்படுத்தியதும், அப்போது விசாரணைக்காக நியமிக்கப் பட்ட, நீதிபதி கிருஷ்ணாவையே கரெக்டிங் செய்து, தனக்கு ஆதரவாக அறிக்கை அளிக்க ஏற்பாடு செய்தார்.

 

இப்படிப் பட்ட ராதாகிருஷ்ணன், மனைவியோடு கோவை சென்றது, கொடநாட்டில் உள்ள ஜெயலலிதாவை சந்தித்து சரணாகதி அடைவதற்காக என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.   இந்தத் தகவலை சவுக்கிடம் சொன்னது, ராதாகிருஷ்ணனை விட, பணியில் மூத்த அதிகாரிகள் என்பதால், இந்தத் தகவலை புறந்தள்ளுவதற்கு இல்லை.

 

கடந்த வாரம் ஞாயிறன்று மதியம், இந்தத் தகவல் கிடைத்ததும், இதைச் சரிபார்ப்பதற்காக, கோவையில் உள்ள தொடர்புகளை தொடர்பு கொண்டு, விசாரிக்கப் பட்டு இருந்தது.  அதற்குள் சவுக்கிடம் இத்தகவலைச் சொன்ன அதிகாரிகளும், இது தொடர்பான விசாரணையில் இறங்கியிருந்தார்கள்.

 radhakrishnan

இந்தத் தகவல் ராதாகிருஷ்ணனை அடைந்ததும், ஞாயிறன்று இரவே அவசர அவசரமாக, கிளம்பி சென்னை திரும்பினார்.   வாக்கு எந்திரங்களை பார்வையிடுவது மட்டுமே இவரது வேலையாக இருந்திருந்தால், பார்வையிடல் முடிந்ததுமே, கோவையிலிருந்து கிளம்பியிருக்க வேண்டும்.   இன்பச் சுற்றுலா செல்வது நோக்கமாக இருந்திருந்தால், மசனக்குடியில் ஞாயிறு இரவு மட்டுமாவது தங்கியிருக்க வேண்டும்.   இப்படியும் இல்லாமல் அப்படியும் இல்லாமல், இரவு 9.30 மணி விமானத்திற்கு இரவு 9.15க்கு கோவை விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார் ராதாகிருஷ்ணன். அப்படி எதற்கு அவசர அவசரமாக கிளம்பி சென்னை வர வேண்டும் ?

 

ராதாகிருஷ்ணனின் இந்த மர்மமான நடத்தை, அவர் கொடநாட்டில் சென்று ஜெயலலிதாவின் காலில் விழுவதற்காகவே சென்றிருப்பாரோ என்ற சந்தேகத்தை வலுப்படுத்துகிறது.

 

ராதாகிருஷ்ணன் அவர்களே…. உங்களுக்கு மன்னிப்பு வேண்டுமென்றால், உயர்நீதிமன்றத்தில் உங்கள் காவல்துறையை விட்டு தாக்கினீர்களே…. அந்த வழக்கறிஞர்களின் காலில் விழுங்கள்.   சவுக்கு அடுத்த ஆட்சியில் நீங்கள் சஸ்பெண்ட் செய்யப் படாமலாவது பார்த்துக் கொள்ளும். அதை விடுத்து, நீங்கள் ஜெயலலிதாவின் காலில் விழுந்து நல்ல பதவியை வாங்கலாம் என்று முயற்சி செய்தீர்களே ஆனால், உங்களின் அந்த முயற்சியை சவுக்கு நிச்சயம் முறியடிக்கும் என்பதையும் உணர்ந்து கொள்ளுங்கள்.

 

என்னவோ போங்கள்.

 

Comments  

 
0 #26 Puthiyavan Raj 2011-05-01 00:40
கலைஞர் வீட்டில் இருந்து இன்று எனக்கு வரவேண்டிய பேட்டா ரூபாய் 176000 பைசாக்கள் (அதாவது 1760 ரூ) வந்துவிட்டது. இதை சொல்வதற்காக நான் கலைஞரின் ஜால்ரா என்று தவறாக நினைக்க வேண்டாம்.
Quote
 
 
+1 #25 anniyan 2011-05-01 00:35
ராதாகிரிஷ்ணனை நாயுடு என்று ஜாதி சொல்லிகுறிப்பிட ்டதர்க்கு சவுக்கை நான் வன்மையாக கண்டிக்கிறேன். பெயரில் ஜாதி இருக்க கூடாது என்று சொன்ன பெரியாரையே எங்கள் ஆட்கள் 'நாயக்கர்' என்று தான் அழைத்தோம். இனியும் அப்படி தான் அழைப்போம். வேறு எவராவது எங்களை பின்பற்றி (சவுக்கு உட்பட) அதேபோல செயல்பட்டால் அவர்களை நாங்கள் 'ஜாதி வெறியன்' என்று முத்திரை குத்துவோம். காரணம் "ஜாதி சொல்லி அழைப்பதை" நாங்களே மொத்த குத்தகைக்கு எடுத்துள்ளோம்.
Quote
 
 
0 #24 aha 2011-04-29 16:43
adutha aatchi dmk thaannu headlines la podaraanunga.savukku sankarukku sukra thasaithaan athu unmaiyaa irunthaa
Quote
 
 
+1 #23 Puthiyavan Raj 2011-04-29 15:42
Quote:
Appo Ltte nu iniku srilankha la namma aalungula suttu pombalaingala ammana ooda vidumbodhey sotta summa....vakkalathu vaangum, apuram puriyum unaku..


வேதம் புதிது என்ற பெயரில் எழுதி இருப்பவருக்கு : உங்களுக்கு பிடிக்காத கருத்தை சொன்னால் இப்படி தான் அநாகரீகமாக பேசுவீர்களா? தன்னுடைய நிர்வாக திறமையை, நேர்மையை குறைத்து சொன்னதற்காக ஒரு நீதிபதி மருமகன் மீதே கஞ்சா வழக்கு போட்டவரை மீண்டும் முதல்வராக்க துடிக்கும் உங்களைப்போன்றவர ் கருத்து சுதந்திரத்தை மதிப்பீர்கள் என எதிர்பார்ப்பது தவறு தான்.
Quote
 
 
0 #22 Vaedhampudhidhu 2011-04-28 12:52
Quoting latha:
Savukku nee amma atchi varum enru kanavil mithakirai enru ninaikiren.Varuvathu DMK atchi Thaan.Four exit polls given this.Only vikatan,ndtv,di namani,dinamalr and savukku predicting Amma victory as usual (avaal pasam).DMK atchi vanthavudan unakku aappu sure.


Appo Ltte nu iniku srilankha la namma aalungula suttu pombalaingala ammana ooda vidumbodhey sotta summa irukaan, poo poo nalaiku avan pasanga kanula nee patta tamil naatila adhey gadhi thaan unakum, adhayum paitiyam pidithu pen nadu roadil thuniyai kilithu ootam, stalin kaapatri caaril eetrikondaar nu kalaingnar tv la news poduvaanga, apo kooda savukku unakaga vakkalathu vaangum, apuram puriyum unaku..
Quote
 
 
+2 #21 jaya 2011-04-28 12:31
Quoting கும்பிடறேன் சாமி.:
உயர் நீதி மன்ற வக்கீல்களுக்கு இவ்வளவு வக்காலத்து வாங்கும் சவுக்கே, உனக்கு தெரியுமா எத்தனை சாதாரண ஜனங்கள் அன்று மனதுக்குள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர் என்று. வக்கீல்களுக்கு பிரச்சினையை தருவித்துக்கொள் வது மிகுந்த மகிழ்ச்சியை தரும் ஒரு விழயம். அடாவடிகளுக்கு அச்சாரம் போடுவதில் காவல் துறையை சமுகத்தின் கண்களில் செல்லா காசாக்கி காட்டுவதில் எழுந்த அந்த உற்சாகம் கண்ணை மறைத்து பொது ஜனங்கள், மருத்துவ மனை ஊழியர்கள் மருத்துவர்கள் என்று பல தரப்பினரிடமும் வெட்டி வீரத்தை காட்டினார்கள். எனக்கும் நேரடி அனுபவம் உண்டு. இரவு 11 மணிக்கு விருகம்பாக்கத்த ில் குறுகலான திருப்பத்தில் அதிக வேகத்தில் காரில் வந்து விட்டு மோதல் நிகழாமல் தவிர்த்த பிறக்கு காரில் இருந்து இறங்கி ஒலிப்பான் ஒலித்தர்க்கு போதையின் உச்சத்தில் சாட்சி காட்டு என்று ரகளை செய்தவரின் கார் மிகவும் விலை உயார்ந்த கார் மற்றும் அதில் வக்கீல்களின் சின்னம் ஒட்டபட்டிருந்தத ு. இந்த விழயதிற்கு உன்னை கொலை செய்தால் கூட காவல் துறை என்னை ஒன்றும் செய்ய மாட்டார்கள் தெரியுமா என்று மிரட்டல் வேறு!!! உங்களின் தனிப்பட்ட வாழ்வில் திரு. புகழேந்தி மற்றும் திரு.ராதாகிருஷ்ணன் ஆகிய நல்லவர்கள் வழி காட்டி கரை ஏற்றி விட்டதாலேயே வக்கீல்கள் அனைவரும் நல்லவர்கள் என்று முடிவை மற்றவர்களிடம் திணிக்க வேண்டாம். இந்த கருத்தின் மூலம் அனைத்து வக்கீல்களும் கேட்டவர்கள் என்றும் கூறவில்லை. அன்று அந்தந்த நிகழ்வுகள் அந்த நிகழ்வுகளின் பின்னணியில் விசாரித்து முடிவு காண்பதே நீதி.

sari than kumbitren sami. ithu correct thaan. en personal valkaiyilum oru vakkilai naan parthu irukken. avar en ethiriyidam kaasu vankkiondu ennai kattikoduthaar. vakkilgalil throgigal ullanar. anaal ellorum appadi illai.
Quote
 
 
0 #20 Kalyan 2011-04-28 10:49
ஆட்சிக்கு ஒரு போலீஸ் ஆபீசரா ? இத்தனை நாள் ஜாபர் இப்போ ராதா. சபாஷ். பலே பலே
Quote
 
 
-6 #19 latha 2011-04-28 06:24
Savukku nee amma atchi varum enru kanavil mithakirai enru ninaikiren.Varuvathu DMK atchi Thaan.Four exit polls given this.Only vikatan,ndtv,di namani,dinamalr and savukku predicting Amma victory as usual (avaal pasam).DMK atchi vanthavudan unakku aappu sure.
Quote
 
 
0 #18 thiruna 2011-04-27 23:08
hi ramsakar ,u r always wrong from ur teen ages. i know u thoroughly.
Quote
 
 
+4 #17 chinna 2011-04-27 13:31
Quoting கும்பிடறேன் சாமி.:
...."சவுக்கு அடுத்த ஆட்சியில் நீங்கள் சஸ்பெண்ட் செய்யப் படாமலாவது பார்த்துக் கொள்ளும்."
ஆட்சி மாற்றம் வரும் என்ற கருத்துக் கணிப்பிலேயே சவுக்குகு தனி தலை முளைத்து விட்டது போல் உள்ளது.

அட முட்டாளே........கருத்து கணிப்ப்ய்க்கு முன்னாடி அதாவது ரெண்டு வருஷத்திற்கு முன்னாடிய சவுக்கு தான் ஆட்சி மாற்றம் கண்டிப்பாக வரும் என்று கூரியது...... வரலாறு தெறியாமே பேச கூடாது...போய் வீட்டுல பெரியவங்க இருந்த வர சொல்லு.....
Quote
 
 
+3 #16 chinna 2011-04-27 13:30
Quoting கும்பிடறேன் சாமி.:
...."சவுக்கு அடுத்த ஆட்சியில் நீங்கள் சஸ்பெண்ட் செய்யப் படாமலாவது பார்த்துக் கொள்ளும்."
ஆட்சி மாற்றம் வரும் என்ற கருத்துக் கணிப்பிலேயே சவுக்குகு தனி தலை முளைத்து விட்டது போல் உள்ளது.

அட முட்டாளே........கருத்து கணிப்ப்ய்க்கு முன்னாடி அதாவது ரெண்டு வருஷத்திற்கு முன்னாடிய சவுக்கு தான் ஆட்சி கண்டிப்பாக வரும் என்று கூரியது...... வரலாறு தெறியாமே பேச கூடாது...போய் வீட்டுல பெரியவங்க இருந்த வர சொல்லு.....
Quote
 
 
+4 #15 jaya 2011-04-27 13:01
Quoting கும்பிடறேன் சாமி.:
...."சவுக்கு அடுத்த ஆட்சியில் நீங்கள் சஸ்பெண்ட் செய்யப் படாமலாவது பார்த்துக் கொள்ளும்."
ஆட்சி மாற்றம் வரும் என்ற கருத்துக் கணிப்பிலேயே சவுக்குகு தனி தலை முளைத்து விட்டது போல் உள்ளது. இந்த வாக்கியத்தின் பொருள், நான் உனக்கு முன்பே காலில் விழுந்து விட்டேன்; எனது வாயிற்காப்போனை அவ்விடம் நிறுத்தி வைத்து உள்ளேன். காவல் துறை அதிகாரிகள் யாரும் என்னிடம் அனுமதி இன்றி மேதகு அம்மாவை தரிசித்தால் அவர்களை பற்றி அசிங்கமாக எழுதி தாக்குவேன் என்பதல்லாமல் வேறு என்ன? சவுக்கு இது அசிங்கமான வாசகம். மனசாட்சி இருந்தால் நான் ஒரு பார்வையாளனாக மட்டுமே இருந்து கருத்து யுத்தம் நடுத்துவேன் என்று கூறி இருக்க வேண்டும்.


தரிசனம் செய்வதற்கு அம்மா என்ன பெண் தெய்வமா?
Quote
 
 
+3 #14 jaya 2011-04-27 12:59
Quoting கும்பிடறேன் சாமி.:
...."சவுக்கு அடுத்த ஆட்சியில் நீங்கள் சஸ்பெண்ட் செய்யப் படாமலாவது பார்த்துக் கொள்ளும்."
ஆட்சி மாற்றம் வரும் என்ற கருத்துக் கணிப்பிலேயே சவுக்குகு தனி தலை முளைத்து விட்டது போல் உள்ளது. இந்த வாக்கியத்தின் பொருள், நான் உனக்கு முன்பே காலில் விழுந்து விட்டேன்; எனது வாயிற்காப்போனை அவ்விடம் நிறுத்தி வைத்து உள்ளேன். காவல் துறை அதிகாரிகள் யாரும் என்னிடம் அனுமதி இன்றி மேதகு அம்மாவை தரிசித்தால் அவர்களை பற்றி அசிங்கமாக எழுதி தாக்குவேன் என்பதல்லாமல் வேறு என்ன? சவுக்கு இது அசிங்கமான வாசகம். மனசாட்சி இருந்தால் நான் ஒரு பார்வையாளனாக மட்டுமே இருந்து கருத்து யுத்தம் நடுத்துவேன் என்று கூறி இருக்க வேண்டும்.


யோவ் சாமி நீ கும்பிட்டுகிட்ட ே இருக்கவேண்டியது தான்............... சவுக்குக்கு என்று சொந்த கருத்து இருக்ககூடாதா? அதை சொல்லுவது கூட குற்றமா? அம்மா தான் ஆட்சி அமைக்கபோகிரர்கள ். இதில் என்ன மாற்றம்
Quote
 
 
0 #13 test 2011-04-27 12:47
:-|
Quote
 
 
-7 #12 jaya 2011-04-27 12:27
Quoting சிந்தியுங்கள்:
இராதா கிருஷ்ணன் போன்ற பொருக்கி தின்னும் போலிஸ்காரர்களுக ்கு நல்ல சவுக்கடி..


ராதா கிருஷ்ணன் பொருக்கி தின்னி என்பதை நீ பார்த்தியா?
Quote
 
 
+5 #11 Abdul Rahman - Dubai 2011-04-27 12:16
நண்பரே! இவ்வுலகில் நாடு - இனம் - மதம் - மொழி - கட்சி இவை எல்லாவற்றிற்கும ் அப்பாற்பட்டு அனைவரும் ஒன்று இணைந்து ஐ.நா. சபையின் அறிக்கையை வரவேற்கிறார்கள் ; இரண்டே இரண்டு பேரை தவிர: ஒருவர் ராஜபக்சே (மற்றும் அவரது அல்லக்கைகள்), மற்றொருவர் சோனியா (மற்றும் அவரது அல்லக்கைகள்).

உலகறிந்த இந்த உண்மையை சவுக்கும் ஒரு தனி பதிவு போட்டு சொன்னால்தான், சவுக்கும் ஓர் ஈழ உணர்வு உள்ளவர் என்று அர்த்தமில்லை. சவுக்கின் முகப்பில் இருக்கும் படத்தை நீங்கள் பார்க்கவில்லையா ?

மேலும், இன்றைய தினமும் (திமுக குடுமிபிடி சண்டை தினம்) - இக்கால சமயமும் (தேர்தல் முடிவுகள்) சவுக்க்கிற்கு முக்கியமாக இருப்பதால், சவுக்கு இயல்பாகவே பணிச்சுமையுடன் (BUSY-யாக) இருப்பதை நாம்தான் புரிந்து கொள்ள வேண்டும்.

உங்கள் விணாக்களுக்கு என்னால் நீண்ட பதில் தர முடியும். மன்னிக்கவும், அதற்கு இப்போது எனக்கும் நேரமில்லை.

ஒன்றை மட்டும் நினைவு கூறுங்கள்: இவ்வுலகில் தனக்கு யாருமே உதவி செய்யாவிட்டாலும ் பரவாயில்லை, மாறாக, தனக்கு எல்லோருமே எதிரிகளாக மாறிவிட்ட சமயத்தில், மேலும், உச்சக்கட்ட உக்கிரமான போரின்போது ஒரு போராளியின் மனநிலை எப்படி இருக்கும்? என்று உங்கள் சிந்தனைக்கே விட்டு விடுகிறேன்.

Quoting RamShankar:
Is Savukku a honest Blog? I raise this bcoz i have not seen any article commenting on The Srilanka War Crime Report Released. Is savukku ignoring the UN Report bcoz in the report LTTE is also accused along with Srilankan Army? and we are sure Savukku favours LTTE. There was an article "Neengalae Jaichukkanga Bossu" ..... >>> ..... >>> ..... >>> If Savukku is honest and shows Integrity then it will survive or else it will become like the RajaPakse who seemed very powerful just 6 months back and now all his deeds are coming to haunt him back he is losing all the powers now.

Nadunilamai yodu savukku paniyatra vazhthukkal...
Quote
 
 
+1 #10 Shanthamoorthi 2011-04-27 12:08
//ராதாகிருஷ்ணன் அவர்களே…. உங்களுக்கு மன்னிப்பு வேண்டுமென்றால், உயர்நீதிமன்றத்த ில் உங்கள் காவல்துறையை விட்டு தாக்கினீர்களே…. அந்த வழக்கறிஞர்களின் காலில் விழுங்கள். சவுக்கு அடுத்த ஆட்சியில் நீங்கள் சஸ்பெண்ட் செய்யப் படாமலாவது பார்த்துக் கொள்ளும். அதை விடுத்து, நீங்கள் ஜெயலலிதாவின் காலில் விழுந்து நல்ல பதவியை வாங்கலாம் என்று முயற்சி செய்தீர்களே ஆனால், உங்களின் அந்த முயற்சியை சவுக்கு நிச்சயம் முறியடிக்கும் என்பதையும் உணர்ந்து கொள்ளுங்கள்.
//

this is too much.
Quote
 
 
+1 #9 Abdul Rahman - Dubai 2011-04-27 11:48
\\சவுக்கு அடுத்த ஆட்சியில் நீங்கள் சஸ்பெண்ட் செய்யப் படாமலாவது பார்த்துக் கொள்ளும்.\\(!!??)

தேர்தல் முடிவு இன்னும் அறிவிக்கப்படவே இல்லை. அதற்குள் ஜெயலலிதா வெற்றி பெற்று தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு விட்டதைப் போல சவுக்கு அதீத நம்பிக்கையில் எழுதுவது, சவுக்கின் சிறந்த அறிவுக்கு சற்றும் பொருத்தமாக எனக்கு தெரியவில்லை.

சவுக்கைப் போன்ற நல்ல அறிவாளி ஒருவர் போடும் ஒரு ஓட்டும் எண்ணிக்கையில் ஒன்றுதான்!! குவாட்டருக்கும் கோழி பிரியாணிக்கும் ஆசைப்பட்டு ஒரு பொரம்போக்கு போடும் ஒரு ஓட்டும் எண்ணிக்கையில் ஒன்றுதான்!! ஒரு ஊரில் மொத்தம் மூன்று பேர் மட்டுமே ஓட்டு போடுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அதில், ஒருவர் 'A' கட்சிக்கும், இரண்டு பேர் 'B' கட்சிக்கும் ஓட்டு போடுகிறார்கள் என்றும் வைத்துக் கொள்வோம். இதில் நம் நாட்டின் தலை எழுத்து என்ன?? இரண்டு வாக்குகள் மட்டுமே பெற்ற 'B' கட்சிதான் "மாபெரும் வெற்றி" பெற்றதாக அறிவிக்கப்படும் .

சரி. விசயத்திற்கு வருவோம். சவுக்கைப் போல மற்றும் நியாயமான நேர்மையான சிந்தனை உடைய சவுக்கின் வாசகர்களைப் போல (படித்த அறிவாளிகள் - இணையத்தில் உறவாடி - தனது ஆற்றாமையை - வயிற்றெரிச்சலை கொட்டித் தீர்க்கும்) நபர்கள் நம் நாட்டில் அதிகமா?? அல்லது, குவாட்டருக்கும் கோழி பிரியாணிக்கும் ஓட்டுப் போடும் (அல்லது நூறு ரூபாய்க்கும் பிரியாணி பொட்டளத்திற்கும ்) லாரியில் ஏறி ஊர் ஊராக சென்று எந்தக் கட்சியாக இருந்தாலும் அந்தக் கட்சி வாழ்க என்று ஓலமிடும் கூட்டம் அதிகமா?

ஈழத்தில் போர் உச்சத்தில் இருந்தபோது நம்மைப் போன்ற (இணைத்தில் மட்டும் அழுது வடிக்கிற கூட்டம்) எல்லோரும் "நிச்சயம் மாற்றம் வரும்" என்று "அதீத நம்பிக்கையில்" இருந்தோம். ஆனால், என்னவாயிற்று? வைகோ இன்று இருக்கிறாரா? இல்லையா?? என்றுகூட நமக்கு தெரியவில்லை.

இதுதான் தமிழக அரசியல் சகோதரர் சவுக்கு அவர்களே!! சற்றே நிதானமாக இருங்கள்.
Quote
 
 
+6 #8 கும்பிடறேன் சாமி. 2011-04-27 11:38
உயர் நீதி மன்ற வக்கீல்களுக்கு இவ்வளவு வக்காலத்து வாங்கும் சவுக்கே, உனக்கு தெரியுமா எத்தனை சாதாரண ஜனங்கள் அன்று மனதுக்குள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர் என்று. வக்கீல்களுக்கு பிரச்சினையை தருவித்துக்கொள் வது மிகுந்த மகிழ்ச்சியை தரும் ஒரு விழயம். அடாவடிகளுக்கு அச்சாரம் போடுவதில் காவல் துறையை சமுகத்தின் கண்களில் செல்லா காசாக்கி காட்டுவதில் எழுந்த அந்த உற்சாகம் கண்ணை மறைத்து பொது ஜனங்கள், மருத்துவ மனை ஊழியர்கள் மருத்துவர்கள் என்று பல தரப்பினரிடமும் வெட்டி வீரத்தை காட்டினார்கள். எனக்கும் நேரடி அனுபவம் உண்டு. இரவு 11 மணிக்கு விருகம்பாக்கத்த ில் குறுகலான திருப்பத்தில் அதிக வேகத்தில் காரில் வந்து விட்டு மோதல் நிகழாமல் தவிர்த்த பிறக்கு காரில் இருந்து இறங்கி ஒலிப்பான் ஒலித்தர்க்கு போதையின் உச்சத்தில் சாட்சி காட்டு என்று ரகளை செய்தவரின் கார் மிகவும் விலை உயார்ந்த கார் மற்றும் அதில் வக்கீல்களின் சின்னம் ஒட்டபட்டிருந்தத ு. இந்த விழயதிற்கு உன்னை கொலை செய்தால் கூட காவல் துறை என்னை ஒன்றும் செய்ய மாட்டார்கள் தெரியுமா என்று மிரட்டல் வேறு!!! உங்களின் தனிப்பட்ட வாழ்வில் திரு. புகழேந்தி மற்றும் திரு.ராதாகிருஷ்ணன் ஆகிய நல்லவர்கள் வழி காட்டி கரை ஏற்றி விட்டதாலேயே வக்கீல்கள் அனைவரும் நல்லவர்கள் என்று முடிவை மற்றவர்களிடம் திணிக்க வேண்டாம். இந்த கருத்தின் மூலம் அனைத்து வக்கீல்களும் கேட்டவர்கள் என்றும் கூறவில்லை. அன்று அந்தந்த நிகழ்வுகள் அந்த நிகழ்வுகளின் பின்னணியில் விசாரித்து முடிவு காண்பதே நீதி.
Quote
 
 
+3 #7 prabhakar 2011-04-27 11:07
sabhaash savukku...
Quote
 
 
+5 #6 சிந்தியுங்கள் 2011-04-27 11:00
இராதா கிருஷ்ணன் போன்ற பொருக்கி தின்னும் போலிஸ்காரர்களுக ்கு நல்ல சவுக்கடி..
Quote
 
 
+8 #5 RamShankar 2011-04-27 10:28
Is Savukku a honest Blog? I raise this bcoz i have not seen any article commenting on The Srilanka War Crime Report Released. Is savukku ignoring the UN Report bcoz in the report LTTE is also accused along with Srilankan Army? and we are sure Savukku favours LTTE. There was an article "Neengalae Jaichukkanga Bossu" http://savukku.net/home/737-2011-04-25-08-36-46.html that KD Brothers are spreading false news. LTTE Killed the Tamil Sisters and Brothers for whom they said they are fighting for. We can understand the motive and the hatred of Srilankan Army for killing our Tamil Sisters and Brothers. They want to annihilate the entire Tamil race. But why is LTTE doing that? probably Ltte wanted them not to be killed at the hands of Srilankan Army so did that themselves. I remember the saying power corrupts and absolute power corrupts absolutely. The LTTE history proves that. They just wanted to save their Leaders by sacrificing little kids of our Tamil brothers.

If Savukku is honest and shows Integrity then it will survive or else it will become like the RajaPakse who seemed very powerful just 6 months back and now all his deeds are coming to haunt him back he is losing all the powers now.

Nadunilamai yodu savukku paniyatra vazhthukkal...
Quote
 
 
+2 #4 jaya 2011-04-27 10:21
கடைசிவரி "என்னோவோ போங்கள்" என்ற வரி இந்த கட்டுரயின் நோக்கத்தையே சிதைப்பதாக உள்ளது. அதை எடுத்துவிடுங்கள ் சவுக்கு. தாங்கள் மிகுந்த விரக்தியில் இதை எழுதிவிட்டேர்கள ் என்றே நினைக்கிறேன். எந்த பிரச்சினைக்கும் அதன் பரிமானம் என்னோவோ அதற்க்கு தகுந்த மாதிரி தீர்வு உண்டு என்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு. அனால் அவரவர் முயற்சிக்கு தகுந்த மாதிரி காலநேரம் கூடலாம் குறையலாம். உங்கள் பிரச்சினை என்னவென்றால் திரும்ப வேலை கிடைப்பது. லட்சக்கணக்கான வாசகர்கள் இப்போது உங்களுக்கு இருக்கிறார்கள். விருப்ப ஓய்வில் வந்துவிட்டு சவுக்கை தொடரவும். (வழக்கு முடிந்தபின்னர்த ான்.) இந்த அதிகாரிகள் எல்லாம் இப்படிசெய்வது சர்வ சகஜம் என்று எல்லோர்க்கும் தெரியும். இதற்காக நீங்கள் அல்லட்டிகொள்ள வேண்டாம்.
Quote
 
 
0 #3 கல்கியின் நந்தகி 2011-04-27 09:52
he seems to be a scum bag packed with rotten stuff
Quote
 
 
-8 #2 கும்பிடறேன் சாமி. 2011-04-27 09:44
...."சவுக்கு அடுத்த ஆட்சியில் நீங்கள் சஸ்பெண்ட் செய்யப் படாமலாவது பார்த்துக் கொள்ளும்."
ஆட்சி மாற்றம் வரும் என்ற கருத்துக் கணிப்பிலேயே சவுக்குகு தனி தலை முளைத்து விட்டது போல் உள்ளது. இந்த வாக்கியத்தின் பொருள், நான் உனக்கு முன்பே காலில் விழுந்து விட்டேன்; எனது வாயிற்காப்போனை அவ்விடம் நிறுத்தி வைத்து உள்ளேன். காவல் துறை அதிகாரிகள் யாரும் என்னிடம் அனுமதி இன்றி மேதகு அம்மாவை தரிசித்தால் அவர்களை பற்றி அசிங்கமாக எழுதி தாக்குவேன் என்பதல்லாமல் வேறு என்ன? சவுக்கு இது அசிங்கமான வாசகம். மனசாட்சி இருந்தால் நான் ஒரு பார்வையாளனாக மட்டுமே இருந்து கருத்து யுத்தம் நடுத்துவேன் என்று கூறி இருக்க வேண்டும்.
Quote
 
 
+9 #1 RabaSha 2011-04-27 08:27
Savukku sir, oru adhikaariya kooda vida maatteenga pola irukku. Appreciate your work. As long as you are behind all corrupt officials and politicians you can depend on our support. Cheers and keep up the good work.
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 45 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday2963
mod_vvisit_counterYesterday9391
mod_vvisit_counterThis week71519
mod_vvisit_counterLast week78861
mod_vvisit_counterThis month284338
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12806457