முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
இது என்ன நீதியோ…. ? அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 19
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
செவ்வாய்க்கிழமை, 03 மே 2011 13:11

சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தால் வழங்கப் பட்ட ஒரு ஜாமீன் இந்தக் கேள்வியை எழுப்புகிறது.

 

சவுக்கு இன்று உயிரோடு இருப்பதற்கு காரணம் : வழக்கறிஞர்கள். சவுக்கு ஜாபர் சேட் போன்ற உயர் அதிகாரிகளின் பல்வேறு சதிச்செயல்களை முறியடித்ததற்கு காரணம் : வழக்கறிஞர்கள். சவுக்கு பல்வேறு மனித உரிமை விஷயங்களை எடுத்து எழுதுவதும், வழக்காடுவதற்கும் காரணம் : வழக்கறிஞர்கள். அதனால் சவுக்கு வழக்கறிஞர்களுக்கு ரொம்பவே கடமைப் பட்டுள்ளது.

 

அதற்காக வழக்கறிஞர்கள் செய்யும் எல்லாமே சரியாகி விடுமா ? ஆகாது.   எல்லா சமூகத்திலும் இருக்கும் கருப்பு ஆடுகளைப் போலவே தான் வழக்கறிஞர் சமூகத்திலும், கருப்பு ஆடுகள் இருக்கின்றன.

 

விவாகரத்து வழக்குக்காக நீதிமன்றம் வரும் பெண்களை அடிப்பது, காவல் நிலையம் சென்று கட்டைப் பஞ்சாயத்து செய்வது, எழும்பூர் நீதிமன்றத்தில், வக்காலத்து தாக்கல் செய்து விட்டு, 2 லட்சம் கொடுத்தால் தான், வக்காலத்தை திரும்ப பெறுவேன் என்று, அராஜகம் செய்வது என்று, இந்தத் தொழிலிலும், அநியாயங்களில் ஈடுபடும் மனிதர்கள் இருக்கவே செய்கிறார்கள். அவர்களையெல்லாம் வழக்கறிஞர்களாகவே ஏற்றுக் கொள்வதற்கு இல்லை.

 Madras-High-Court

கடந்த வாரம் உச்ச நீதிமன்றம், சென்னை சட்டக் கல்லூரி மாணவர் மோதல் தொடர்பாக தாக்கல் செய்யப் பட்ட ஒரு பொது நல வழக்கில் ஒரு உத்தரவு போட்டது. இந்த வழக்கின் புலன் விசாரணை எப்படி நடக்கிறது என்று உச்ச நீதிமன்றம் கேட்டதற்கு, தமிழக அரசு சார்பில், வழக்கில் சம்பந்தப் பட்ட குற்றவாளிகள் தலைமறைவாக உள்ளனர் என்று பதில் மனு தாக்கல் செய்யப் பட்டது. அந்த வழக்கில் தலைமறைவாக உள்ள குற்றவாளிகள் என்று தமிழக அரசு சொன்ன ஒருவர் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங்.   இந்த ஆர்ம்ஸ்ட்ராங் சென்னை கொளத்தூரில் சமீபத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மு.க.ஸ்டாலினை எதிர்த்துப் போட்டியிட்டவர்.

 

இந்த விஷயத்தை, பொது நல வழக்கு தொடர்ந்தவர் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் சுட்டிக் காட்டியதும், கடும் கோபம் அடைந்த உச்சநீதிமன்றம், உடனடியாக சம்பந்தப் பட்டவர்களை கைது செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுக்க தமிழக டிஜிபிக்கு உத்தரவிட்டது.

 

அவ்வாறு உச்ச நீதிமன்றம் கைது செய்ய உத்தரவிட்டவர்களில் ஒருவர், வழக்கறிஞர் ரஜினிகாந்த்.   ரஜினிகாந்த், கடந்த சனிக்கிழமை, உயர்நீதிமன்ற நீதிபதி சுதந்திரம் அவர்களின் வீட்டில் ஜாமீன் கேட்டு மனுத் தாக்கல் செய்கிறார். அந்த மனுவை விசாரித்த, நீதிபதி சுதந்திரம், ரஜினிகாந்துக்கு, 10,000 ரூபாய் உறுதிப் பத்திரத்தோடு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.   சனிக்கிழமை முதல் சென்னை உயர்நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை தொடங்கி விட்டது என்பது குறிப்பிடத் தகுந்தது.

 sudhanthiram

நீதிபதி சுதந்திரம்


இந்த ஜாமீன் பல கேள்விகளை எழுப்புகிறது.

 

வழக்கறிஞர்கள் கைது செய்யப் படவே கூடாதா ?

 

மற்ற குடிமகன்களுக்கு இருக்கும் உரிமைகள் தானே அவர்களுக்கும் ?

 

வழக்கறிஞர்களுக்கு, நீதிபதிகள் ஜாமீன் வழங்குவது போல, தவறு செய்யும் காவல்துறையினரை, அவர்கள் கைது செய்யாமல் விடுவது நியாயம் தானே ?

 

இவ்வாறு வீட்டில் ஜாமீன் வழங்குவதென்றால், காவல்துறையினரால் கைது செய்யப் படும் மற்றவர்களுக்கும் வீட்டில் ஜாமீன் வழங்குவார்களா நீதிபதிகள் ?

 

வீட்டில் வழக்குகளை விசாரிப்பது என்றால், எதற்காக கோடை விடுமுறை ?

 

மற்ற எல்லா வழக்குகளிலும், அரசுத் தரப்பு நியாயத்தை கேட்ட பிறகு ஜாமீன் வழங்கும் நீதிபதி, இந்த வழக்கில் அரசு வழக்கறிஞர் இல்லாமலேயே ஜாமீன் வழங்கியது ஏன் ?

 

இது போல, வழக்கறிஞர்களுக்கு மட்டும், நீதிபதிகள் சாதகமாக நடந்து கொண்டால், பொது மக்களுக்கு நீதிமன்றங்களின் மேல் எப்படி நம்பிக்கை வரும் ?

 

இது போல நீதிபதிகள் ஜாமீன் வழங்குவார்கள் என்ற நம்பிக்கை வந்தால், வழக்கறிஞர்கள் என்ன தவறு வேண்டுமானாலும் செய்யத் துணிவார்களே ?

 

ரஜினிகாந்துக்கு வழங்கிய இந்த ஜாமீன் மட்டும் கிடையாது. இதே போல இரண்டு மாதத்துக்கு முன், இதை விட பெரிய அயோக்கியத்தனம் நடைபெற்றது.

 

டெல்லி சிபிஐ அதிகாரிகள், ஒரு தனியார் சட்டக் கல்லூரிக்கு அனுமதி வழங்குவதற்காக லஞ்சம் கேட்டதாக, தமிழ்நாடு பார் கவுன்சில் தலைவர் தனபால்ராஜ் என்பவர் மீது முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்தது. இவருக்கு இடைத் தரகராக செயல்பட்ட மனீஷ் தியாகி மற்றும், ராஜீந்தர் சிங் ரானா என்பவரையும் கைது செய்து, தனபால் ராஜ் வீட்டில் சோதனை நடத்தியது. இந்தச் சோதனையை ஒட்டி, தனபால் ராஜ், சென்னை உயர்நீதிமன்றத்தில் இடைக்கால ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்கிறார்.

 dhanapal_raj_2

தனபால் ராஜ்

எஃப்ஐஆர் டெல்லி நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் போது, சென்னை உயர்நீதிமன்றத்தில் எப்படி மனுத் தாக்கல் செய்ய முடியும் ?   ஆனால் தாக்கல் செய்தார்கள்.   இதையொட்டி, இந்த மனுவின் மீதான விசாரணை நடைபெற்ற போது, நூற்றுக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் அந்த நீதிமன்றத்துக்கு சென்று, ஜாமீன் கொடுத்தே ஆக வேண்டும் என்று, ஏறக்குறைய மிரட்டும் வகையில் நடந்து கொண்டார்கள்.

 

ஒரு உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக இருப்பவர், எத்தனை மிரட்டல்கள் வந்தாலும், அதையெல்லாம் சமாளித்து நீதியை நிலைநாட்ட வேண்டும். இதற்காகத்தான், உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு, இத்தனை அதிகாரங்களை அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கியுள்ளது. ஆனால், அந்த உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன், நான்கு வாரங்களுக்கு, தனபால் ராஜுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். நான்கு வாரங்கள் கழித்து, டெல்லி நீதிமன்றத்தை அணுகி, ஜாமீன் பெற்றுக் கொள்ளுமாறும் உத்தரவிட்டார்.

 
aruna_jagadeesan

நீதிபதி அருணா ஜெகதீசன்

தனபால் ராஜ் டெல்லி உயர்நீதிமன்றத்தை அணுகியதும், அவரின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப் பட்டதும், பிறகு அவரை சிபிஐ கைது செய்ய உத்தரவிட்டதும், குறிப்பிடத் தக்கது.

 

இந்த விவகாரம் இரண்டிலும், தவறு செய்தவர்கள் வழக்கறிஞர்கள் என்பதை விட, நீதிபதிகள் என்பதே சாலப் பொருத்தம்.   வழக்கறிஞர்கள் தங்கள் கட்சிக்காரர்களுக்காக ஆயிரம் பேசுவார்கள், கேட்பார்கள். ஒரு நீதிபதியாக இருப்பவர், எவ்வித மிரட்டலுக்கும் செவி சாய்க்காமல், சட்டத்தை அலசி ஆராய்ந்தல்லவா நீதிபரிபாலணம் செய்ய வேண்டும் ?

 

வழக்கறிஞர்களுக்கு மட்டும் தனியாகவா சட்டம் இயற்றப் பட்டுள்ளது ?

 

ஒளிவு மறைவின்றி, வழக்கறிஞர்களுக்கு அப்பட்டமாக சாதமாக நடந்து கொள்ளும், நீதிபதிகளை சவுக்கு வன்மையாக கண்டிக்கிறது.   இது போன்ற போக்குகள், பொது மக்கள் மத்தியில், நீதிமன்றத்தின் மீதான நம்பிக்கையை குலைக்கும் என்பதையும் சவுக்கு தெரிவித்துக் கொள்கிறது.   நீதியை நிலைநாட்டுங்கள் நீதிபதிகளே….   வழக்கறிஞர்கள் மட்டுமல்ல… நீதிபதிகளாகிய நீங்களும் இந்த சமூகத்தில் ஒரு அங்கம் தான் என்பதை மறந்து விடாதீர்கள்.

 

 

 


 

Comments  

 
0 #33 shree 2011-05-12 18:18
Savukku....

Recently I visited this page, but all the news are onsided.

Bring all the politicians, polices & other government employees to the limelight...
unless You will be treated as Anti -DMK website...
Quote
 
 
0 #32 sella 2011-05-09 21:21
பார்ப்பன வக்கீல் எதற்கு கருணாநிதி?
நீ செத்தும் இல்லாம இந்த கட்சிய அழித்து விட்டாயே. உன் குடும்ப வளச்சிக்காக ஊரையே நாறடித்து விட்டாயே. நீ இருந்து உன் பெண்டாண்டி பிள்ளைகள் சிறைக்கு செல்வதை பார்த்து சாக வேண்டும்
Quote
 
 
+1 #31 thinker 2011-05-07 13:53
Judiciary is the one who is actually doing kattapanchayat.. i will better rely on the local kattapanchayat leader rather than the court..
Quote
 
 
+1 #30 suvithageorge 2011-05-06 12:29
Quoting raju:
Quoting niraimozhi:
sirandha manidha urimai poaraali RAJINIKANTH i kevalappaduthth um muraiyil savukkin padhivu ulladhu ....


நிறைமொழி அவர்களே !!!
'மனித உரிமை' என்றால் என்ன அர்த்தம் என்று தெரியுமா உங்களுக்கு?
'மனித உரிமைப் போராளி' என்றால் யார் என்று தெரியுமா உங்களுக்கு?
'மனித உரிமைப் போராளி' என ரஜினிகாந்தை குறிப்பிட்டு இருப்பது உங்களின் அறியாமையை வெளிப்படுத்தியு ள்ளது!!!
2009, February 19- ஆம் தேதி, சென்னை உயர் நீதி மன்றத்தில், போலீசாரால் வழக்கறிஞர் சமுதாயமே தாக்கபட்டதற்கு முழு முதல் காரணமே இந்த ரஜினிகாந்த் தான் என்பது உங்களுக்கு தெரியுமா என்பது தெரியவில்லை...ஆனால் அன்று களத்தில் இருந்த அனைவருக்கும் அது தெரியும்..
(தன் தனிப்பட்ட விளம்பரத்திற்கா க) சுப்ரமனிசாமியை எதிர்க்கிறேன் என்ற பெயரில் பெரும் கலவரத்தை தூண்டி விட்டு, நீதி மன்ற வளாகத்தில் ஓடி ஒளிந்து, பின்னர் போலீஸ் கண்களில் படாமல் எஸ்கேப் ஆகி, உயர் நிதி மன்றத்தை ரத்த களரி ஆக்கி, பல வழக்கறிஞர்கள்(ந ீதிபதி உள்பட) மண்டை,கை,கால் உடைய காரண கர்த்தா ஆனவர் இந்த ரஜினி காந்த் என்பது மறைக்க முடியாத உண்மை ..
சட்ட கல்லுரி விவகாரத்தில், ஜாதி வெறியை தூண்டி, மாணவர்கள் மத்தியிலும் கலவரத்தை ஏற்படுத்தி, முதல் குற்றவாளியாகி உள்ளவர்,,,, மனித உரிமைப் போராளியா ????????
எங்கு எல்லாம் கூட்டம் கூடுகிறதோ, அங்கே நுழைந்து, தன் familiarity -காக சட்ட ஒழுங்கு பிரச்சனயை ஏற்படுத்தி
(தலித்) அரசியல் செய்பவர் மனித உரிமைப் போராளியா ????????
aathikka saathi veri piditha rajuve saathiya odukumurayai endraikavadhu nee anubavithathu unda valiyum vethanaiyum unakku theriyuma suyamariyathai sudaroli periyar unarnthar neengal unaravillai
Quote
 
 
+1 #29 saravanaa 2011-05-06 11:23
Quoting புதியவன்:
ரஜினிகாந்த் அவர்கள் 2008 இல் நடந்த சென்னை சட்டக்கல்லுரி சாதி பிரச்சனைக்கு மட்டும் காரணம் அல்ல ஒரு மாதத்திற்க்கு முன்னர் கோவை சட்டக்கல்லூரியி ல் ஒரு மாதம் நடந்த உள்ளிருப்பு போராட்டத்திற்கு முழு முதல் காரணமும் இந்த ரஜினிக்காந்த் தான், கோவை சட்டக்கல்லூரியி ல் உள்ள தலித் சகோதர்களை தூண்டிவிட்டு மிகப்பெரும் சாதி கலவரத்தை ஏற்படுத்த நினைத்தார். கோவை சட்டக்கல்லுரி என்றால் அது தலித் சகோதர்கள் கையில் தான் இருக்க வேண்டும் என்று தூண்டி விட்டு காலணாவுக்கு பிரயோஜனம் இல்லாத பிரச்சனையை பெரிதாக்கப் பார்த்தார். சிலபேர் தங்களை முன்னிறுத்தி காட்டுவதற்கு சாதியின் பெயரால் கலவரத்தை தூண்டிவிட்டு அதில் குளிர் காய்கிறார்கள், 2008 இல் நடந்த சண்டையில் தலித் மாணவர்கள் மீது தான் தவறு என்று கூறினால் அதற்க்கு சில நபர்கள் கூறும் விளக்கம் நாங்கள் (தலித்துகள்) ஒரு தடவை அடித்தால் தான் என்ன? என்று கூறி கொள்வது இணையத்தில் பார்க்க முடிகிறது. ரஜினிகாந்த் வரும் காலத்தில் ஒரு ராமதாசாகவோ, திருமாவளவனாகவோ வளர்ந்து வந்தாலும் ஆச்சர்யப்படுவதற ்கில்லை.






ethu bonnra naparkallai veedave koodathuu...
Quote
 
 
-1 #28 raju 2011-05-05 23:52
MR.SAVUKKU,, DO YOU KNOW!!!
TAMILNADU BAGUJAN SAMAJ PARTY PRESIDENT ARMSRTONG WAS ARRESTED AND REMANDED IN PUZHAL PRISON IN CONNECTION TO THE LAWCOLLEGE STUDENTS FIGHT,,
HE HAS BEEN ARRAYED AS ACCUSED NO-2 IN THAT CASE, WHEREIN RAJINIGANTH IS ACCUSED NO-1..
BEFORE HIS ARREST,ARMSTRON G ALSO FILED ANTICIPATORY BAIL PETITION BEFORE JUSTICE.SUDHANDIRAM,WHO DECLINED TO GRANT ANTICIPATORY BAIL FOR ARMSTRONG,CONSE QUENTLY HE WAS ARRESTED.
ON 04-05-2011, ON BEHALF OF ARMSTRONG, BAIL WAS MOVED BEFORE SESSIONS COURT,CHENNAI, WHICH WAS DISMISSED BY THE ADDITIONAL SESSIONS JUDGE.RAJAGOPAL.
ON THE SAME DAY, BAIL PETITION WAS FILED BEFORE HIGH COURT,CHENNAI.. JUSTICE KARNAN TAKEN THE MATTER IN SPECIAL LIST
ON THE SAME DAY-04-05-2011,WITHOUT EVEN NOTICE TO PUBLIC PRTOSECUTOR,BAI L WAS GRANTED AND ORDERED TO FURNISH SURETY BEFORE SUPRITENDENT,PU ZHAL PRISON,,
BUT IN GENERAL CASES, SURETIES WILL BE FURNISHED BEFORE CONCERNED MAGISTRATE..

SO HIGH COURT LA ORU SILLA JUDGES IPADIDHAN...
Quote
 
 
+1 #27 raju 2011-05-05 23:13
தூண்டிவிட்டவரை தானே சமாதானம் செய்ய அழைக்க முடியும் ..
அதை தான் சட்ட கல்லுரி முதல்வர் செய்திருக்கிறார ் ..
சரி ! தலித் மாணவர்கள் தரப்பில் ரஜினிகாந்த் அழைக்கப்பட்டார் எனில், மற்றொரு தரப்பில் யாரையும் அழைக்காதது ஏன் ??? ????திரு.M.ஜைனுல் ஆபிதீன்,வழக்கறி ஞர் அவர்களே.......
சட்ட கல்லூரி பிரச்சனை சம்பந்தமாக விளக்கம் அளித்த நீங்கள், உயர் நீதிமன்ற பிரச்சனை தொடர்பாக எதுமே கூறவில்லையே ????
Quote
 
 
+2 #26 BG 2011-05-05 17:42
Excellent , I really accept the facts & doubt that these Culprits really did Law?!!!!
Quote
 
 
0 #25 புதியவன் 2011-05-05 16:12
ரஜினிகாந்த் அவர்கள் 2008 இல் நடந்த சென்னை சட்டக்கல்லுரி சாதி பிரச்சனைக்கு மட்டும் காரணம் அல்ல ஒரு மாதத்திற்க்கு முன்னர் கோவை சட்டக்கல்லூரியி ல் ஒரு மாதம் நடந்த உள்ளிருப்பு போராட்டத்திற்கு முழு முதல் காரணமும் இந்த ரஜினிக்காந்த் தான், கோவை சட்டக்கல்லூரியி ல் உள்ள தலித் சகோதர்களை தூண்டிவிட்டு மிகப்பெரும் சாதி கலவரத்தை ஏற்படுத்த நினைத்தார். கோவை சட்டக்கல்லுரி என்றால் அது தலித் சகோதர்கள் கையில் தான் இருக்க வேண்டும் என்று தூண்டி விட்டு காலணாவுக்கு பிரயோஜனம் இல்லாத பிரச்சனையை பெரிதாக்கப் பார்த்தார். சிலபேர் தங்களை முன்னிறுத்தி காட்டுவதற்கு சாதியின் பெயரால் கலவரத்தை தூண்டிவிட்டு அதில் குளிர் காய்கிறார்கள், 2008 இல் நடந்த சண்டையில் தலித் மாணவர்கள் மீது தான் தவறு என்று கூறினால் அதற்க்கு சில நபர்கள் கூறும் விளக்கம் நாங்கள் (தலித்துகள்) ஒரு தடவை அடித்தால் தான் என்ன? என்று கூறி கொள்வது இணையத்தில் பார்க்க முடிகிறது. ரஜினிகாந்த் வரும் காலத்தில் ஒரு ராமதாசாகவோ, திருமாவளவனாகவோ வளர்ந்து வந்தாலும் ஆச்சர்யப்படுவதற ்கில்லை.
Quote
 
 
+5 #24 zainul advocate 2011-05-05 14:33
.ஈழ மக்களுக்கான உயர்நீதிமன்ற வழக்கறிஞர்களின் போராட்டமும் அதனால் கோபமடைந்த கருணாநிதி அரசின் காவல்துறை உயர் நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைந்து வழக்கறிஞர்களை கைது செய்ததுதனே பிரச்சனையின் மூல காரணம்.கலவரத்துக்கு ரஜினிதான் காரணம் என்றால் அப்போ கருணாநிதிக்கும் கமிசனர் ராதா கிருஷ்ணனுக்கும் எந்த தொடர்பும் இல்லையா...........ரஜினி என்ற தனி நபரால் கலவரம் ஏற்பட்டது என்பதை காவல் துறை கூட ஏற்று கொள்ளாது.
Quote
 
 
+1 #23 raju 2011-05-04 23:49
Quoting niraimozhi:
sirandha manidha urimai poaraali RAJINIKANTH i kevalappaduthth um muraiyil savukkin padhivu ulladhu ....


நிறைமொழி அவர்களே !!!
'மனித உரிமை' என்றால் என்ன அர்த்தம் என்று தெரியுமா உங்களுக்கு?
'மனித உரிமைப் போராளி' என்றால் யார் என்று தெரியுமா உங்களுக்கு?
'மனித உரிமைப் போராளி' என ரஜினிகாந்தை குறிப்பிட்டு இருப்பது உங்களின் அறியாமையை வெளிப்படுத்தியு ள்ளது!!!
2009, February 19- ஆம் தேதி, சென்னை உயர் நீதி மன்றத்தில், போலீசாரால் வழக்கறிஞர் சமுதாயமே தாக்கபட்டதற்கு முழு முதல் காரணமே இந்த ரஜினிகாந்த் தான் என்பது உங்களுக்கு தெரியுமா என்பது தெரியவில்லை...ஆனால் அன்று களத்தில் இருந்த அனைவருக்கும் அது தெரியும்..
(தன் தனிப்பட்ட விளம்பரத்திற்கா க) சுப்ரமனிசாமியை எதிர்க்கிறேன் என்ற பெயரில் பெரும் கலவரத்தை தூண்டி விட்டு, நீதி மன்ற வளாகத்தில் ஓடி ஒளிந்து, பின்னர் போலீஸ் கண்களில் படாமல் எஸ்கேப் ஆகி, உயர் நிதி மன்றத்தை ரத்த களரி ஆக்கி, பல வழக்கறிஞர்கள்(ந ீதிபதி உள்பட) மண்டை,கை,கால் உடைய காரண கர்த்தா ஆனவர் இந்த ரஜினி காந்த் என்பது மறைக்க முடியாத உண்மை ..
சட்ட கல்லுரி விவகாரத்தில், ஜாதி வெறியை தூண்டி, மாணவர்கள் மத்தியிலும் கலவரத்தை ஏற்படுத்தி, முதல் குற்றவாளியாகி உள்ளவர்,,,, மனித உரிமைப் போராளியா ????????
எங்கு எல்லாம் கூட்டம் கூடுகிறதோ, அங்கே நுழைந்து, தன் familiarity -காக சட்ட ஒழுங்கு பிரச்சனயை ஏற்படுத்தி
(தலித்) அரசியல் செய்பவர் மனித உரிமைப் போராளியா ????????
Quote
 
 
0 #22 Thilak 2011-05-04 21:04
thodarga ungalathu sevai valrga saukku......
Quote
 
 
0 #21 இராமசாமி சேகர் 2011-05-04 20:53
அருமையான ,ம்றுக்க முடியாத வாதங்கள்
Quote
 
 
+2 #20 duraiarunan 2011-05-04 19:30
paarpaniya indhu saathiya veri piditha onaaigal veri kondu aadumpodhu aanandugalamai adivaangi odiyavargal thiruppi adithaal ottumotha aadhika saathiya paarpaniya adivarudigaluku m kobam koppalikiradhu arasu valakaringar prasanna avar juniorudan vanthirunthaar pinayil vidakoodahu endrum vaathittar makkal valakaringar sankarasubbu avargalin nerthiyana vathathaal visaranai committee arikayin muganthiram rajanikanth kallori mudhalvathaan alaithu samathanam seyya sonnar endru neethibathiyin arikai solgiradhu
seithiyai thetta thelivaga veliyeduvathu thaan nalla seithiyalarukka na velai
Quote
 
 
-2 #19 p.kannan 2011-05-04 17:33
Intha Nattil eallum,judgess do like this,then how the rowdisom will control
Quote
 
 
+3 #18 zainul 2011-05-04 13:18
சட்டக்கல்லூரி வழக்கை பொறுத்த வரை ரஜினிகாந்த் தவறாக அந்த வழக்கில் சேர்கப்பட்டார் என்பதே உண்மை.மாணவர்களுக்கான பிரச்சனயை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்பதற்காகவும் தலித் தரப்பு மாணவர்களை சமாதான படுதவும்தன் ரஜினிகாந்த் கல்லூரி நிர்வாகத்தால் அழைக்கப்பட்டார் என்பதே உண்மை.உள் நோக்கத்தோடு காவல்துறை அவரையும் வழக்கில் சேர்த்துள்ளது.பொது நல அடிப்படையில் செயல்படும் ரஜினிகாந்த் போன்றோருக்கு நீதிமன்ற பாதுகாப்பு அவசியம்.சங்கராச்சரியருக ்காக விடுமுறை நாளில் விசாரித்த உயர்நீதிமன்றம் ரஜினிகாந்துக்கா க விசாரித்ததில் தவறில்லை
.M.ஜைனுல் ஆபிதீன்,வழக்கறி ஞர்.
Quote
 
 
-1 #17 niraimozhi 2011-05-04 11:58
sirandha manidha urimai poaraali RAJINIKANTH i kevalappaduthth um muraiyil savukkin padhivu ulladhu ....
Quote
 
 
-1 #16 ismail 2011-05-04 02:14
WE ARE EXPECTING MORETHEN LIKE THAT ISSUES FROM YOUR SIDE. ANYWAY ALL THE BEST
Quote
 
 
+8 #15 Thamizhachi 2011-05-04 01:23
நல்ல கட்டுரை. "சவுக்கு" பதிவுலகத்தில் பலராலும் படிக்கப்படும் பதிவாக இருப்பதில் மகிழ்ச்சி. எனவே பொறுப்புணர்ந்து நடுநிலைமையோடு இருக்க வேண்டுகிறேன்.
Quote
 
 
-2 #14 nellaiyan 2011-05-03 23:42
intha neethipathikalu m munnal vakkilkal athuthan ippadi nadakkuthu... :lol:
Quote
 
 
-4 #13 pakku mandaiyan 2011-05-03 22:30
Quoting Bmurali:
Athanaal thaan anaithu rowdy galum almost distance education muraiyil B.L degree karanataka ponra edangalil mudikinranar

i agree wit u murali....
Quote
 
 
+1 #12 Kanian 2011-05-03 22:14
01 May , 2011 , காலை சென்னை மரினா கடற்கரையில் ஊழலுக்கு எதிராக ஜன லோக் பால் சட்டம் கொண்டு வர அரசாங்கத்தை நிர்பந்திக்க மாபெரும் மனித சங்கலி போராட்டம் நடந்தது. 6000 க்கும் அதிகமான பொதுமக்கள் இதில் கலந்து கொண்டார்கள். படங்கள் இந்த link இல் உள்ளன.


Please find the May 1, 2011, Chennai Human chain event here.

http://www.facebook.com/media/set/fbx/?set=oa.158591844204882

http://www.flickr.com/photos/62358923@N07/show/

http://youtu.be/_k9kSVaH60Y

http://youtu.be/WOXiLm65PZU


Human Chain Event Photos chennai

http://www.facebook.com/media/set/fbx/?set=a.1951162134122.2112731.1094675502

http://www.facebook.com/media/set/fbx/?set=a.211512535540062.58063.100000439501776

http://www.facebook.com/media/set/fbx/?set=a.10150177409064704.318624.798129703

http://www.facebook.com/media/set/fbx/?set=a.207035869316546.51425.100000304036302

http://www.facebook.com/media/set/fbx/?set=a.10150171938902341.308123.658807340

http://www.facebook.com/media/set/fbx/?set=a.207035869316546.51425.100000304036302

http://www.facebook.com/media/set/fbx/?set=oa.158896450841088

http://www.facebook.com/media/set/fbx/?set=oa.158591844204882

http://www.facebook.com/media/set/fbx/?set=oa.158630537534346
Quote
 
 
+2 #11 பா 2011-05-03 20:04
தமிழகத்தில் திராவிட கட்சிகள் கால் ஊன்றிய பிறகு ஏற்பட்ட சீரழிவுகளில் ஒன்று தான் இது. இந்த வக்கீல்கள் பெரும்பாலும் 1969 -க்குப் பிறகு சட்டக் கல்லூரியில் படித்தவர்களாக இருப்பார்கள் என்று நினைக்கிறேன். சட்டக் கல்லூரி வளாகத்தில் அடிதடி அரசியல் நுழைந்த பின்னர், நியாயத்தையும், நேர்மையையும் எதிர்பார்ப்பது முட்டாள்தனம்.

சவுக்கு கூட ஒரு பதிவில் இலங்கை பிரச்சனையில் திமுக வன்முறையில் ஈடுபட்டால், அது சரியானது தான் என்று தோன்றும்படி எழுதியதாக நினைவு. கருத்து எழுதும் பலரும் நீதிமன்ற வன்முறையையும், சுப்பிரமணிய சாமி மீதான தாக்குதலையும் நியாயப்படுத்திய தை பார்த்திருக்கிற ேன். வன்முறை சரி என்றானால் நீதியும், நேர்மையும் இல்லாதது மட்டும் தவறாகிவிடுமா?
Quote
 
 
0 #10 Ada Narayana 2011-05-03 19:54
Super Savukku!!!
Quote
 
 
+1 #9 வெற்றி திருமகன். 2011-05-03 18:56
எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே! சொந்த நாட்டிலே!
அரசியல்வாதிகள், வழக்கறிஞர்கள், அதிகாரிகள் என்று நீதிபதிகள் வரை பாரபட்சமாக நடக்கின்றனர், நடத்துகின்றனர் என்று சவுக்கு மூலம் அறியும்போது, இயற்க்கை அன்னை ருத்ர தாண்டவம் ஆடினால் ஆடியவர், ஆடுபவர் அனைவரும் அடங்குவர்.

வெற்றி திருமகன்.
Quote
 
 
0 #8 anniyan 2011-05-03 18:52
very good article.. proves solid stance of savukku
Quote
 
 
0 #7 The Fuhrer 2011-05-03 17:30
All are equal before law...Courts are the last resort for the common public in this democratic country. If this kind of activites continues, commom man will lose his hope is our legal system.
Quote
 
 
0 #6 Nallavan 2011-05-03 15:04
Judge also belongs to our society. So they behave as any official in other departments. The problem is in the mindset of the people in our society. If we get a chance most of us will become corrupt. Everyone should think that the government machinery will change only if we change.
Quote
 
 
+1 #5 prem 2011-05-03 14:59
பலவருடம் பொய் சொல்வதையே தொழிலாக சசெய்து வரும் வக்கீல்களையே நீதிபதியாக பதவியில் அமர்த்தினால் இது தான் நடக்கும்
Quote
 
 
+2 #4 Abdul Rahman - Dubai 2011-05-03 14:53
மிக அருமையான பதிவு சவுக்கு!

எப்போது பார்த்தாலும் ஒரு குறிப்பிட்ட கட்சியை மட்டுமே குறைகூறி வரும் பதிவுகள் சில நேரங்களில் சலிப்படைய செய்கிறது.

தவறு செய்பவர்கள் யாராக இருப்பினும் பாரபட்சமின்றி சவுக்கு பல திசைகளிலும் (இப்போது போல) எப்போதும் சுழல வேண்டும் என்பதே எனது வேண்டுகோள்.

காக்கிச் சட்டைகளுக்குள்ள ும் - கருப்பு அங்கிகளுக்குள்ள ும் - கதர் வேட்டிகளுக்குள் ளும் எத்தனை ரௌடிகள் வலம் வருகிறார்களோ அத்தனை பேரையும் வெளிச்சம் போட்டு காட்ட வேண்டும்.

சவுக்குக்கு மீண்டும் பாராட்டுகள்!!
Quote
 
 
+2 #3 குமார.இரவிக்குமார் 2011-05-03 14:50
காவல் துறையின் கைது என்பதே மோசடியானது. அபத்தமானது. அதே போல நீதிமன்றக்காவல் என்பதும் ஏற்புடையது அல்ல. ஒரு புகார் அளிக்கப்பட்ட உடன் தங்கள் விருப்பம் போல வழக்குப் பதிவு செய்வது அல்லது வழக்கே பதியாமல் இழுத்து அடிப்பது அல்லது வழக்குப் பதிந்தவுடன் கைது செய்வது அல்லது கைது செய்யாமல் விட்டு விடுவது எனத் தாந்தோன்றித் தனமாகச் செயல்படுவது தான் காவல் துறையின் பழக்கம் மற்றும் வழக்கம் ஆகும். குற்றமே செய்யாத ஏராளமானோர் கைது செய்யப்பட்டு (சவுக்கு கைது செய்யப்பட்டது போல) சிறைத்தண்டனை அனுபவித்த பிறகு குற்றமற்றவர்கள் என விடுவிக்கப்பட்ட ுள்ளனர். இவ்வாறு குற்றமே செய்யாமல் சிறைத் தண்டனை அனுபவித்தர்களுக ்கு சட்டமும் நீதி(?)த் துறையும் அரசும் சொல்லும் பதில் என்ன ? சட்டம் தெரியாத அப்பாவிப் பொது மக்கள் இந்த அபத்தத்திற்கு பலியாகிறார்கள் என்பதற்காக வழக்குரைஞர்களும ் பலியாக வேண்டும் என சவுக்கு எப்படி எதிர்பார்க்கிறத ு ? வழக்கறிஞர்கள் என்ற போர்வையில் சில தவறான மனிதர்கள் செயல்படுவதை யாரும் மறுக்க முடியாது. அவர்களை களை எடுக்க வேண்டுமே தவிர சட்டத்தின் சரியான பலனை வழக்கறிஞர்கள் அனுபவிக்கக் கூடாது என்பது சரியான வாதம் அல்ல. காவல் துறைக்கு ஓரளவு கடிவாளம் போடுவது வழக்கறிஞர்கள் மட்டுமே. காவல்துறை நினைத்தவுடன் வழக்கறிஞர்களை கைது செய்து சிறையி அடைக்கலாம் என்ற நிலை வந்தால் அதன் பிறகு காவல் துறையின் காட்டாட்சி தான் நடைபெறும். சட்டத்தையும் பொதுமக்களையும் யாராலும் காப்பாற்ற முடியாது.
Quote
 
 
+19 #2 Bmurali 2011-05-03 13:54
Athanaal thaan anaithu rowdy galum almost distance education muraiyil B.L degree karanataka ponra edangalil mudikinranar
Quote
 
 
+23 #1 jaya 2011-05-03 13:52
NIYAMANA KATTURAI . SABASH SAVUKKU.
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 101 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday4039
mod_vvisit_counterYesterday12350
mod_vvisit_counterThis week73291
mod_vvisit_counterLast week80132
mod_vvisit_counterThis month276023
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12798142