|
1949ம் ஆண்டு, திராவிட முன்னேற்றக் கழகத்தை துவக்கி வைத்து, அண்ணா என்ன பேசினார் என்பது நினைவிருக்கிறதா கருணாநிதி அவர்களே… ? நீங்கள் மறந்திருப்பீர்கள்.
“திராவிட முன்னேற்றக் கழகம் தோன்றி விட்டது. திராவிடக் கழகத்திற்குப் போட்டியாக அல்ல. அதே கொள்கைப் பாதயில் தான், திராவிடர் கழகத்தின் அடிப்படைக் கொள்கைகளின் மீதேதான் திராவிட முன்றேற்றக் கழகம் அமைக்கப் பட்டுள்ளது. அடிப்படைக் கொள்கைகளில் கருத்துகளில் மாறுதல், மோதல் எதுவும் கிடையாது. சமுதாயத் துறையிலே சீர்திருத்தம், போருளாதாரத் துறையிலே சமதர்மக் குறிக்கோள், அரசியலில் வட நாட்டு ஏகாதிபத்தியத்தினின்று விடுதலை ஆகிய கொள்கைகள் தான் திமுகவின் கோட்பாடுகளாகும்.”
இந்தக் கொள்கைகளையெல்லாம் நீங்கள் என்றோ குழிதோண்டிப் புதைத்து விட்டீர்கள். அண்ணா மறைவுக்குப் பிறகு, தந்திரமாக, நெடுஞ்செழியனுக்கு போக வேண்டிய கட்சித் தலைவர் பதவியை எம்ஜிஆர் உதவியோடு, தட்டிப் பறித்து விட்டு, அதே எம்ஜிஆரை கட்சியை விட்டு நீங்கியவர் நீங்கள்.

திமுக என்பது எத்தனை தியாகங்களால் உருவானது ? அறிஞர் அண்ணா எழுதிய ஆரிய மாயை நூலுக்குத் தடை, திமுக கூட்டங்களுக்கு 144 தடை உத்தரவு, மீறி நடந்த குன்றத்தூர் கூட்டத்தில் துப்பாக்கிச் சூடு, என்று தொடங்கிய காலம் முதலாகவே எத்தனை தடைகள் ? அடக்குமுறைகள் ? ஆனால், இந்த அடக்குமுறைகள் அத்தனைனையும் மீறி, திமுக வளர்ந்ததற்காக காரணம், காலத்தின் தேவை. திராவிட முன்னேற்றக் கழகம் போன்ற ஒரு கட்சியின் அவசியத்தை அன்று மக்கள் உணர்ந்திருந்தார்கள். ஆனால், அதே திராவிட முன்னேற்றக் கழகம் இன்று, இன்றோ நாளையோ அவிழும் நெல்லிக்காய் மூட்டை போன்ற நிலைக்கு ஆளாக்கியது நீங்கள் தான்.
நீங்கள் கட்சியின் தலைவராக பொறுப்பேற்ற நாளிலிருந்தே, நீங்கள் சம்பந்தப் படாத அத்தனை விவகாரங்களையும் கல்லறைக்கு அனுப்பினீர்கள். அண்ணாவால் தொடங்கப் பட்ட திராவிட நாடு இதழ் எங்கே ? கழக செய்திகளைத் தாங்கி வந்த மாலை மணி இதழ் எங்கே ? அந்த இதழ்கள் அத்தனையையும் ஓரங்கட்டி விட்டு, நீங்கள் தொடங்கியது என்ற ஒரே காரணத்துக்காக முரசொலியை கட்சியின் அதிகார பூர்வ ஏடாக ஆக்கியது உங்கள் அகந்தையும் சுயநலமும் அல்லாமல் வேறு என்ன ?
அந்த முரசொலியை திமுகவுக்கு வழங்கியதற்காக நீங்கள் செய்த தந்திரம் என்ன ? போதுமான நிதி இல்லாததால் இனி முரசொலியை நடத்த முடியாது என்று அறிவிப்பு வெளியிட்டு, ஒரு வாரத்திற்கு அந்த ஏட்டை நிறுத்தி, கோடானு கோடி தொண்டர்கள் ‘தலைவா, இதழைத் தொடங்கு தலைவா’ என்று கடிதமும் தந்தியும் அனுப்பியதும், அவர்களிடமிருந்து நிதியைப் பெற்று, நீங்கள் தொடங்கிய இதழ் என்பதால், திமுகவுக்கு அந்த இதழை விற்க, 2 கோடியை திமுகவிடமிருந்தே பெற்ற அற்ப மனிதர் தானே நீங்கள் ?
இப்படி ஆரம்பம் முதலாகவே, சுயநலம், சுயநலம் என்று சுயநலத்தின் மொத்த உருவமாகத்தானே இருந்தீர்கள். ? இன்று இப்படி ஒரு மோசமான சூழலில் சிக்கி, அவமானப்பட நேர்ந்ததற்கு வேறு யாரும் காரணம் அல்ல கருணாநிதி அவர்களே.. நீங்களே தான்.

பதவியையும் அதிகாரத்தையும் உங்கள் மகனுக்காக கூட விட்டுத் தரத் தயாராக இல்லை நீங்கள். அந்த அகந்தையே உங்களை இந்த நிலைக்கு கொண்டு வந்து விட்டிருக்கிறது. எண்பத்து ஏழு வயது வரை ஓயாமல் உழைப்பதும், படிப்பதும், எழுதுவதும், நல்ல விஷயம் என்றாலும் கூட, உழைப்பதற்கு வேறு நபர்கள் இருக்கும் போது, அதுவும் உங்கள் சொந்த வாரிசாக இருக்கும் போது, அவருக்குக் கூட விட்டுத் தராமல், தொடர்ந்து தள்ளுவண்டியிலும் அதிகாரத்தை விடாமல் கெட்டியாக பிடித்துக் கொண்டிருப்பது உங்களின் பிடிவாதம் மற்றும் அதிகார வெறி காரணமாகவே… இது போல தள்ளுவண்டியில் அமர்ந்து கொண்டு, காங்கிரஸ் கட்சியோடு, பேச்சு வார்த்தை நடத்தினால் உங்களுக்கு என்ன மரியாதை கிடைக்கும் என்று நினைக்கிறீர்கள் ?
அரசியலில் இருந்து ஓய்வு பெற்று இலக்கியப் பணி ஆற்றப் போகிறேன் என்று எத்தனை கூட்டங்களில் பேசியிருக்கிறீர்கள் ? வசதியாக அதை மறந்து விட்டு, ஆறாவது முறையாக முதல்வராகப் போகிறேன் என்று கூசாமல் பேசினால், ஊர் சிரிக்காது ?
திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து வந்து அந்தக் கொள்கைகளின் அடிப்படையில் தொடங்கப் பட்ட திமுகவை, உங்களின் மூட நம்பிக்கைகளினாலும், திருட்டுத் தனத்தாலும், சாய்பாபா மறைவுக்கு இரங்கல் தீர்மானம் போடுவது வரை கேவலப்படுத்தி விட்டீர்கள். திமுக வரலாற்றில் என்றாவது ஒரு சாமியாருக்கு இரங்கல் தீர்மானம் போடப்பட்டது உண்டா ? வாயைத் திறந்தால், அறிஞர் அண்ணாவின் வழியில், பெரியாரின் நிழலில் என்று ஜிகர்தண்டா கதைகளாக விடுகிறீர்களே… அண்ணாவும் பெரியாரும், இப்படியா தீர்மானம் போட உங்களுக்கு சொல்லிக் கொடுத்தார்கள் ?
உங்கள் துறையைச் நேர்ந்த அமைச்சர் தீமிதித்தார் என்பதற்காக, தீமிதிப்பது காட்டுமிராண்டிச் செயல் என்று சொல்லி, அந்தியூர் செல்வராஜ் என்ற அமைச்சரை ஓரங்கட்டவில்லை ? உங்கள் மனைவி காற்றிலிருந்து மோதிரம் எடுக்கும் போலிச் சாமியார் சாய்பாபாவின் காலில் விழுந்த போதும், உங்கள் அருமைப் பிள்ளை சாய்பாபாவின் காலில் விழுந்த போதும், பிறந்த நாளுக்கு ஆசி வாங்க புட்டபர்த்தி சென்ற போதும் அது காட்டுமிராண்டித்தனமாக செயலாக உங்களுக்குப் படவில்லையா ?

ஊர் ஊராக நாத்திகம் பிரச்சாரம் செய்த, பெரியாரும், அண்ணாவும் உங்களுக்கு இதையா கற்றுக் கொடுத்தார்கள் ?
மிகப் பெரிய தானைத் தலைவராக, டெல்லியை அசைத்த உங்களை நம்பாமல், உங்கள் மகளே தனக்கும், ராசாவுக்கும் மந்திரிப் பதவி வேண்டும் என்று ஒரு தரகரோடு உரையாடிய விபரங்கள் வெளியாகி ஒரு வருடம் ஆகிறதே…. ?

ஒரு கைதேர்ந்த அரசியல்வாதியாக இருந்திருந்தால், அப்போதே அல்லவா கனிமொழியை கட்சியை விட்டு விலக்கி வைத்திருக்க வேண்டும் ? அப்போது விலக்கி வைத்திருந்தால், இன்று இத்தனை சிக்கல்கள் சமாளிக்க முடியாதது போல் உருவாகியிருக்காதே ? இரண்டு பெண்மணிகள் பேசுவதில் என்ன தவறு என்றல்லவா சப்பைக் கட்டு கட்டினீர்கள் ?

பேராசைக்கு ஓர் அளவில்லையா கருணாநிதி அவர்களே ? ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடங்குவதற்கு முன்பாக, உங்கள் குடும்பத்திடம் பணம் இல்லையா ? சொத்து இல்லையா ? என்று நீங்கள் பொதுப்பணித்துறை அமைச்சராக ஆனீர்களோ, அன்று முதல், நீங்கள் ஊழல் புரிந்து வந்துள்ளீர்கள் என்பதை நீதிபதி சர்க்கரியாவின் அறிக்கை தெளிவு படுத்துகிறது. பணம் பண்ணுவதையே முழு நேரத் தொழிலாகவும், ஆட்சி புரிவதையும் கட்சி நடத்துவதையும் அதற்காக வழியாகவும் கடைபிடித்தவர் நீங்கள். அத்தனை பணம் வைத்திருந்தும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் எதற்காக இத்தனை பேராசை கருணாநிதி ? எத்தனை ஆண்டுகள் அரசியலில் இருந்தவர் நீங்கள் ? எத்தனை விசாரணைகளை சந்தித்திருப்பீர்கள் ? ராசா தொலைத் தொடர்புத் துறை அமைச்சரான முதல் நாளே ஆயிரம் கோடியை உங்களிடம் வந்து கொடுத்த போது, நீங்கள் உஷாராயிருக்க வேண்டாமா ? இப்படி ஆயிரம் ஆயிரம் கோடிகளாக பணம் வந்து கொட்டினால், இதில் பின்னாளில் சிக்கல் வரும் என்பதை உணர்ந்திருக்க வேண்டாமா ? பேராசைப் பிடித்த உலகில், மிகப் பெரிய ஆதாயத்தை அடையாமல் ஆயிரக்கணக்கான கோடிகளை எவனும் தர மாட்டான் என்பது உங்களுக்கு புரிந்திருக்க வேண்டாமா ? மற்ற ஊழல்களைப் புரிந்து விட்டு, ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் மட்டும், ஊழல் செய்யாமல் இருந்திருந்தால் இன்று உங்களை யாருமே அசைத்திருக்க முடியாதே ?

தமிழ்நாட்டில் ஊழல் புரிந்திருந்தால், பதவி போகும் வரை உங்கள் ஆட்சி என்பதால், தடயத்தையாவது அழித்திருக்க முடியும். வட இந்தியாவில், டெல்லியில், உங்கள் கட்டுப்பாட்டில் இல்லாத ஒரு இடத்தில் இப்படி ஒரு இமாலய ஊழலைச் செய்து விட்டு தப்பித்துக் கொள்ளலாம் என்று எப்படி நம்பினீர்கள் ?
நீங்கள் வளர்த்து ஆளாக்கிய உங்கள் அருமைப் பேரப்பிள்ளைகள் உங்களுக்கு எதிராக திரும்பிய போது, அவசர அவசரமாக கலைஞர் டிவியை தொடங்க வேண்டும் என்று விரும்பினீர்கள். விருப்பம் சரி. அவ்வாறு தொடங்கப் பட்ட டிவிக்கு இயக்குநராக, கட்சியில் எந்த நாயையாவது போட்டிருக்கலாமே ? உங்களை மீறி யாராவது செயல்பட முடியுமா ? அதையும் மீறி செயல்பட்டால் விட்டு விடுவீர்களா ? அதிகபட்சம் அந்த நபர் 10 ரூபாயை கையாடுவான். அவ்வளவு தானே ? உலகத்தில் யாராவது பெண்டாட்டியையும், பெண்ணையும் இயக்குநராக போட்டு, லஞ்சப் பணத்தில் டிவியை தொடங்குவார்களா ?

உங்கள் கீழ் செயல்படும் துறையான லஞ்ச ஒழிப்புத் துறையில் போடப்படும் வழக்குகளில், மனைவி பெயரில் சொத்துக்கள் இருந்தால், குற்றவாளிக்கு உடந்தை என்ற, மனைவியையும் குற்றவாளியாக சேர்ப்பார்கள் என்பது கூடவா உங்களுக்கு மறந்து விட்டது ?
அப்படி இருக்கும் போது, யாராவது ஒரு குப்பனையோ, சுப்பனையோ, கலைஞர் டிவியில் இயக்குநராகப் போட்டிருக்கலாமே ? அதாவது பத்து பைசா கூட வேறு யாருக்கும் போகக் கூடாது. அந்த பத்து பைசாவையும் குடும்பம் தான் தின்ன வேண்டும். ஏன் கருணாநிதி உங்களுக்கு இப்படி ஒரு பேராசை ?
கடன் வாங்கினார்கள், திருப்பிக் கொடுத்து விட்டார்கள். இதில் என்ன தவறு இருக்கிறது என்று நாட்டு மக்களிடம் கேள்வி எழுப்பினீர்களே…. ராசா கைது செய்யப் பட்டதும் திருப்பிக் கொடுக்கப் பட்டால், இப்போது ஏன் திருப்பிக் கொடுத்தீர்கள் என்று சிபிஐ கேட்காது என்று எதை வைத்து முடிவு செய்தீர்கள் ? கலைஞர் டிவியின் நிகர லாபமே, 1.34 கோடியாக இருக்கும் போது, 200 கோடி ரூபாய் எங்கிருந்து வந்தது என்று சிபிஐ கேட்காதா ? சிபிஐ அதிகாரிகள் அவ்வளவு முட்டாள்களா ?
ராசா ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சிக்கியதும், இந்த இமாலய ஊழலை மறைக்க நீங்கள் எடுத்த முயற்சி மிக மிக கேவலமானது கருணாநிதி அவர்களே… ராசா தலித் என்பதால் வட இந்திய ஊடகங்களும், பார்ப்பன சக்திகளும் ராசாவை குற்றம் சொல்லுகின்றன என்பது எத்தனை அபத்தமான வாதம் ? அபத்தமானது மட்டுமல்ல, விஷமத்தனமானதும் கூட. இந்த ஊழலில் சாதி இல்லை என்பது உங்களுக்கு தெரியாதா ? தலித்தாகிய ராசா வாங்கித் தந்த பணத்தை, இசை வேளாளராகிய தயாளு அம்மாள், நாடார்களாகிய ராசாத்தி கனிமொழி, ரெட்டியாராகிய நக்கீரன் காமராஜ், இஸ்லாமியராகிய ஜாபர் சேட், தேவராகிய டி.ஆர்.பாலு, நாயுடுவாகிய ஆற்காடு வீராச்சாமி, கிறித்துவரான ஜெகத் கஸ்பர், என சாதி மதப்பாகுபாடு இல்லாமல் தானே அனைவரும் பங்கு போட்டுக் கொண்டீர்கள் ? இதில் சாதி எங்கிருந்து வந்தது ? மேலும், உங்களின் பசப்பு வார்த்தைகளை நம்புவதை மக்கள் எப்போதோ நிறுத்தி விட்டார்கள் என்பது உங்களுக்கு ஏன் புரியவில்லை ?

நீங்கள் கோலோச்சும் அறிவாலய வளாகத்தில் உள்ள கலைஞர் டிவி அலுவலகத்தில் சிபிஐ சோதனை நடத்திய போதே நீங்கள் பதவி விலகியிருக்க வேண்டும் கருணாநிதி. இதை விட உங்களுக்கு பெரிய அவமானம் என்ன வேண்டும் ? உங்கள் மகளையும், மனைவியையும், சிபிஐ உங்கள் மூக்குக்கு கீழே கேள்வி கேட்டுச் செல்கிறார்கள் இதற்குப் பிறகும் வெட்கமில்லாமல், கலைஞர் டிவியில் தவறே நடக்கவில்லை என்று சொல்லுவதன் மூலம், தப்பித்து விடலாம் என்று எப்படி தப்புக் கணக்கு போட்டீர்கள் ?

கனிமொழி பெயர் குற்றப் பத்திரிக்கையில் இடம் பெற்றதும், உடனடியாக திமுவின் உயர்நிலை செயல்திட்டக் குழுக் கூட்டத்தை கூட்டினீர்களே… கனிமொழி உங்கள் மகள் என்பதை விட, திமுகவில் அப்படி என்ன பெரிய அந்தஸ்து பெற்றிருக்கிறார் ? உங்கள் மகள் ஊரான் பணத்தை திருடினால், கேள்வி கேட்க மாட்டார்களா ? விசாரிக்க மாட்டார்களா ? உங்கள் மகளை குற்றம் சாட்டி விட்டார்கள் என்பதற்கும், திமுகவின் உயர்நிலை செயல்திட்டக் குழுவுக்கும் என்ன சம்பந்தம் ? உங்கள் பெண்டாட்டி, பிள்ளை, மகளுக்காகத் தான் திமுக இருக்கிறதா ? அந்தக் கூட்டத்தில் இயற்றிய தீர்மானத்திலும், ஏதாவது உப்பு சப்பு இருந்ததா ? யாரையாவது கண்டித்தீர்களா ? ‘சரத்குமார் மற்றும் கனிமொழியின் பெயர் குற்றப் பத்திரிக்கையில் இடம் பெற்றிருப்பது, ஆச்சயர்யத்தை அளிக்கிறது’ என்றால் என்ன ஆச்சர்யம் இதில் உங்களுக்கு ? காலில் விழுந்து கெஞ்சிக் கதறியும், மாட்டி விட்டு விட்டார்களே என்றா ? திமுகவின் தீர்மானங்கள் எப்படி இருக்கும் தெரியுமா ? மறந்திருப்பீர்கள். நினைவு படுத்துகிறேன்.
1957ம் ஆண்டு, நேருவுக்கு கருப்புக் கொடி காட்ட வேண்டும் என்று இயற்றப் பட்ட தீர்மானம்.
“பாராளும் பண்டிதரின் ஆணவம் - எதற்கும் எவரையும் நான்சென்ஸ் என்றும், அறிவும் அனுபவமும் மிக்க தலைவர்களைப் பித்தர்கள் என்றும், மூதறிஞர்களை ஆற்றல் மிக்கோரை முட்டாள்கள் என்றும், இன எழுச்சி ஊட்டுவோரை கட்டு மிராண்டிகள் என்றும், தென்னக மக்களுக்கு பெருந்தொண்டாற்றிடும் பெரியார் ஈவெராவை மூட்டை முடிச்சுடன் நாட்டை விட்டு ஓடச் சொல்லும்படியும் பேசும் பண்டித நேரு – பஞ்சம் பேக்கினாரா ? பட்டினி துடைத்தாரா ? விலை ஏற்றம் போக்கினாரா ? செல்வம் வளரச் செய்தாரா ? எதைச் சாதித்துத் தந்தார் இந்நாட்டு மக்களுக்கு ?
எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பேசி எல்லாத் தலைவர்களையும் ஏசித் தமிழரின் மனம் புண்படச் செய்யும் பண்டித நேரு பவனி வருகிறார்.
பம்பாய் போல் பயங்கரம் வேண்டாம். குஜராத் போல் கலகம் வேண்டாம். கண்ணியமான முறையில் கறுப்புக் கொடி காட்டி கண்டனம் தெரிவிக்க வேண்டாமா நாம் ? தமிழர்களே… ! உங்கள் நாடு சீரியது. உமது வரலாறு புகழ்மிக்கது. உமது தலைவர்கள் ஆற்றல் மிக்கோர். எனினும் ஏசுகிறார் நேறு !
ஆந்திரர் தமது உரிமையைப் பெற ரயிலை கவிழ்த்தனர். தபாலுக்குத் தீயிட்டனர்.
ஆமதாபாத்தில் கதர்சசட்டையை காந்தி குல்லாயைத் தீயிட்டனர். அந்த விதமான அநாகரிகம் வேண்டாம். அகில உலகில் அனுமதிக்கப் பட்டிருக்கும் நாகரிக முறையான கறுப்புக் கொடி காட்டுவது என்பதைச் செய்யவுமா வகையற்றுப் போனீர்கள் என்று இந்த வையகம் கேட்கும்.
தையலர் சிரிப்பர். பின் சந்ததியும் ஏசும். எனவே எல்லோரும் வாருங்கள். ஏசிப்பேசும் நேரு பண்டிதருக்கு காட்டுவோம் கருப்புக் கொடி.”
எப்படி இருக்கிறது தீர்மானம் ? அனல் பறக்கவில்லை ?
கனிமொழி குற்றப் பத்திரிக்கை நகலை வாங்க டெல்லி செல்கிறார் என்றதும், உங்கள் கட்சி எம்பிக்கள் அத்தனை பேரையும் டெல்லிக்கு அனுப்பினீர்கள். உங்கள் உள்துறைச் செயலாளரை அனுப்பினீர்கள். அனைவரையும், மகளோடு ஆதரவாக இருக்கச் செய்தீர்கள். உங்களால் தகத்தகாய கதிரவன் என்று அழைக்கப் பட்ட ராசாவை சிபிஐ விசாரணைக்கு அனுப்பிய போது, ஏன் உங்கள் கட்சி எம்பிக்களை அனுப்பவில்லை ? தலித் இனத்தின் தன்னிகரில்லாத தலைவனல்லவா ராசா ? பொட்டல் காட்டில் பூத்துக் குலுங்கிய பூச்செடி இல்லையா ராசா ?

இதையெல்லாம் விட நீங்கள் செய்த மிகப் பெரிய அயோக்கியத்தனம், உங்கள் மகளுக்காக ராம் ஜெத்மலானி செய்த வாதம். கைது செய்யப் பட்டதனாலேயே ஒருவர் குற்றம் நிரூபிக்கப் பட்டதாக ஆகாது என்று பேசி விட்டு, எந்த முகத்தை வைத்துக் கொண்டு ஜெத்மலானியை தவறு செய்தவர் ராசாதான், கனிமொழிக்கு பொறுப்பில்லை என்று பேச வைத்தீர்கள் ? இதை விட ஒரு மனிதனின் முதுகில் குத்த முடியுமா ? ராசா யாருக்காக கொள்ளையடித்தார் கருணாநிதி ? உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்காகவும் தானே ? ஆயிரக்கணக்கான கோடிகளை உங்களுக்காக ராசா கொள்ளையடித்துக் கொண்டு வந்து கொடுத்த போது ராசா இனித்தாரா ? ராசா அப்ரூவராக மாறினால், தள்ளு வண்டியோடு நீங்களும் திஹார் செல்ல வேண்டியிருக்கும் என்பது உங்களுக்கு ஏன் உறைக்கவில்லை ?

இனி உங்கள் வாயில் இருந்து வரும் ஒரு வார்தையைக் கூட யாரும் நம்பப் போவதில்லை கருணாநிதி. இனியாவது எழுதுவதையும் பேசுவதையும் நிறுத்துங்கள். உங்கள் பொய்யுரைகளும், புனை சுருட்டும் இனியும் நம்பப் படாது. உங்களுக்கு மான உணர்ச்சியெல்லாம் இல்லை என்பது நன்கு தெரியும். “மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு” என்றார் பெரியார். உங்களை நீங்கள் மனிதனாக கருதினால், உடனடியாக பதவி விலகுங்கள். உங்களுக்குப் பிறகு திமுகவில் தலைவர் பொறுப்புக்கு வருவதற்கு ஒருவருக்குக் கூட தகுதி இருப்பதாக சவுக்கு கருதவில்லை. தகுதி இல்லை என்று சொல்வது, திறமை இல்லை என்பதற்காக அல்ல ? நீங்கள் இழுத்த இழுப்புக்கெல்லாம் வளைந்து கொடுத்து, உங்கள் மகளுக்கு பாதுகாவலனாக டெல்லி சென்று காத்துக் கிடப்பவர்களை தலைவர்களாக ஏற்றுக் கொள்ள முடியாது. திறமையான திருச்சி சிவா உட்பட.
அதனால், உங்கள் குடும்பத்திலிருந்து ஒருவரை தேர்ந்தெடுக்கலாம். இப்போதைக்கு உங்கள் ஊழல் கறை படியாமல் இருப்பது, கனிமொழியின் மகன் ஆதித்யா தான். அதனால் ஆதித்யாவிடம் தலைமை பொறுப்பை ஒப்படைப்பதை பற்றி சிந்தியுங்கள்.

அய்யன் வள்ளுவர் என்ன சொல்லுகிறார் என்று நினைவிருக்கிறதா ?
நாணால் உயிரைத் துறப்பர் உயிர்ப்பொருட்டால்
நாண்துறவார் நாணாள் பவர்.
நாண உணர்வுடையவர்கள், மானத்தைக் காப்பாற்றிக் கொள்ள உயிரையும் விடுவார்கள். உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக மானத்தை விடமாட்டார்கள்.
நீங்கள் எப்போதா இறந்து விட்டீர்கள் கருணாநிதி. இனி இறப்பதற்கு வேலையில்லை. |
Comments
ஆனால் அவருக்கு வலிக்குமா????
சந்தேகமே !!!!
கனிமொழி கைதுக்கு திமுக பொதுக்குழு கஊட்டம்? தூ
#1. they thought these scams will not take a toll on the elections since the common man does not understand all this... this is from the many interviews they have given during campaigning... karunanithi avargal thamizhan ellorum muttalgal endru ninaitharku kidaithathu muthal savukkadi
#2. congress LTTEvai ethirpavargal.. avargaludan kootani vaithapothaey DMK thangalathu kolgaigalai kaatril parakka vittargal... ithu irandavathu savukku
#3. nakkal pechugal eppothumae nallathalla endru ippothavathu karunanithi purinthi kondirupaar endru ninaikiraen
Thedipar nam inam vazha aal kidappan.
oru Thirumavalavana ipol,seemanaipo l.tamil ina paathukarpikaga vavathu evrgalai pol ulla nam tamil inathavarai adaiyal kann. adutha muraiyavathu yoosithusei.
Tamil vazhga.
ARRAGANCY WILL PAY BACK.ALL THE VERY BEST.TRY TO RECOGNISE YOUTH FOR THE BETTERMENT YOU AND STATE.
முதல் , உங்கள் குடும்பத்தில் உள்ள யாரவது ஒருவரை பார்த்து.. நீங்கள் இறந்து விட்டீர்கள் என்று சொன்னால் இப்படி தான் தம்பட்டம் அடிப்பீர்களா????
இந்த வலை தளத்தில் பதிய பட்டதற்கு பதில்..
நெடுஞ்செழியனை ஏமாற்றி விட்டார்கள் என்று...
எப்படி என்றால் .. அந்த ஆள் மூத்தவர் ஆம்..
இங்கே சீனியாரிட்டி பார்த்து கொடுக்க இது என்ன சாமியார் மடமா?
அந்த ஆளுக்கு உண்மையிலே தகுதி திறமை இருந்து இருந்தால் தனியாக கட்சி ஆரம்பித்து எம்.ஜிஆர் போல, வர வேண்டியது தானே..
தலைவர் கலைஞர் க்கு இருந்த ஆளுமை, திறமையால் தான் இத்தனை ஆண்டுகள் கட்சி கட்டுக்கொப்போடு உள்ளது.. அவசர நிலை என்ற நெருப்பாறை கடந்து கம்பீரமாக உள்ளது .
இரண்டாவது இந்த கட்சி தலைமை என்பது உள்கட்சி சம்பந்த பட்ட விஷயம் , ஆடு நனைகிறதே என்று ஓநாய் நீங்கள் கவலை பட தேவை இல்லை..
வயதான காலத்தில் இன்னும் பதவியில் ஏன் இருக்கிறீர்கள் என்று ?
இதே அளவுகோலை பக்கத்தில் கேரளாவில் இருந்த, மேற்கு வங்கத்தில் உள்ள முதல்வர்களுக்கு செல்லுமா என்றால் செல்லாது ..
அது போக இன்றும் எங்கள் தலைவர் இருவது மணி நேரம் உழைக்கிறார் .. சில பேர் போல கொடநாட்டில் சென்று ஒய்வு என்று கூத்தடிப்பவர் இல்லை ..
சுயமாய் சிந்திக்கிறார் , தெளிவை பேசுகிறார், நிறைய எழுதுகிறார் ...
அலைவரிசை , இது இன்னும் நிரூபிக்க படாத குற்றச்சாட்டு .. அதற்கு என்னமோ உறுதி செய்ய பட்டது போல கூப்பாடு போடுகிறீர்கள் ... உங்கள் சி.பி.ஐ வண்டவாளம் என்ன தெரியுமா , இருவது வருஷமா இன்னும் போபர்ஸ் வழக்கு என்ன நிலைமை ..?
போபால் ஆயிர கணக்கானவர்கள் செத்தர்கலே அதற்க்கு என்ன தீர்ப்பு நு சொல்ல முடியுமா?
உயிரோடு உள்ள ஒரு நபரை இறந்து விடீர்கள் என்று சொல்வது வக்கிரம் , வக்கிரத்தின் உச்சகட்டம் ..
கேட்க ஆள் இல்லை என்றால் என்னே வேண்டும் என்றாலும் பேசலாம் என்று இல்லை ...
If DMK Wins, kanimozhi arrest will be postponed forever. Raja will be out of Jail. Entire congress will surrender back to DMK.
Basically, as few journals commented, Tamil Nadu would be divided or even might be renamed as Kalaignar Nadu...
We, the tamil people really deserve it....... coz as a whole we are electing him again as CM.
varalaru mannikadhu oru nalum......
.........marathamilan...
தொடர்ச்சி.....
தமிழகத்தின் எந்த மூலையிலும் தன் பெயரிலோ, குடும்பத்தார் பெயரிலோ வீடோ , நிலமோ இருந்தால் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் வீடுகள் வாங்க முடியாது என்பது அடிப்படை விதி, ஆனால் இவர்களுக்கு அந்த விதி கிடையாது. இதனால் அண்ணா நகரில் ஒரு வீடும், முகப்பேரில் மூன்று வீடும் வைத்திருக்கும் அதிகாரிகள் கூட, இந்த இரண்டரை கோடி ரூபாய் பெறுமான வீட்டிற்கு விண்ணப்பித்தனர் . சந்தன வீரப்பன் வேட்டையில் ஈடுபட்டதற்காக, விலை மதிக்கமுடியாத நிலத்தை இலவசமாக வாங்கியவர்கள் கூட, இதற்கு விண்ணப்பித்து இருந்தனர். ஒரே தகுதி, தமிழகத்தில், ஐ.ஏ.எஸ்., அல்லது ஐ.பி.எஸ்., ஆக இருக்க வேண்டும். "இரண்டரை கோடி ரூபாய் மதிப்புள்ள வீட்டை, 65 லட்சத்திற்கு வாங்குவது முறையாகத் தெரியவில்லையே' என்று, இவர்கள் யோசித்து, "வேண்டாம்' என்று சொல்லவில்லை. டில்லியில் சமூக நல அமைப்பு ஒன்று, ஒரு கோடி ரூபாயும், தாகூர் விருதும் வழங்க முன்வந்தபோது, "அதைப்பெறும் தகுதி எனக்கில்லை, இதற்காக பணம் பெறுவதும் முறையுமில்லை' என்று சொல்லி, ஒரு கோடியையும், விருதையும் வேண்டாம் என்ற அன்னா ஹசாரேவைப் போல எல்லாரும் இருக்கமுடியாதுத ானே!
நன்றி!
இப்படிக்கு, ஆனந்தி
பாவம், பாவம்...
தொடர்ச்சி.....
அரசிடம் நிதி கொட்டியா கிடக்கிறது, மாதா, மாதம் ஆயிரம் ரூபாய் தருவதற்கு என்று காட்டமாக எழுதிய கடிதத்தின் மை உலர்வதற்கு முன், யாரும் கேட்காமல், எவரும் வற்புறுத்தாமல், இந்திய கிரிக்கெட் அணிக்கு நான்கு கோடி ரூபாய் பரிசாக வழங்கப்பட்டுள்ள து. ஆயிரத்தை விட, கோடி சிறிதா அல்லது திருக்குறள் ஒப்புவித்த சிறுவர்களை விட, கிரிக்கெட் வீரர்கள் சிரமத்தில் இருக்கின்றனரா? தெரியவில்லை... அனேகமாக, கடிதம் கிடைக்கப்பெற்ற, அந்த அப்பாவி அப்பா, மகனிடம், "இனி, திருக்குறளை விழுந்து, விழுந்து படிப்பே...' என, கேட்டு புளிய விளாறால் விளாசி இருக்கலாம்.
இரண்டரை கோடி ரூபாய் மதிப்புள்ள வீட்டை, 65 லட்சத்திற்கு வாங்குவதற்கு காட்டிய அக்கறையை, ஏன் இதில் காட்டவில்லை என, சம்பந்தபட்ட அதிகாரிகளை, நீங்கள் ஒரு வார்த்தை கேட்கலாமே ஐயா! அதென்ன ஆட்சிப்பணியாளர் களுக்கு இரண்டரை கோடி ரூபாய் மதிப்புள்ள வீடு, 65 லட்சத்திற்கு கொடுக்கின்றனர் என்று கேட்பவர்களுக்கு ஒரு சின்ன விளக்கம்... "அப்பழுக்கற்ற சமூக சேவையாளர்கள்' என்ற அமைச்சர் சிபாரிசோடு, கடிதம் கொண்டுவரும் கரைவேட்டி கட்டியவர்களுக்க ும், குடும்பத்தார்கள ுக்கும், முன் தேதியிட்டு வீடுகளை ஒதுக்கிக்கொடுத் த ஆட்சிப்பணியாளர் களுக்கு நாமும், நமக்காக ஏதாவது செய்துகொள்ளவேண் டும் என்று யோசித்ததன் விளைவே இந்த வீடு கட்டும் திட்டம். எம்.எல்.ஏ.,க்கள் எல்லாம், "எங்களுக்கு சம்பளம் போதவில்லை' என்று தீர்மானம் நிறைவேற்றி, தங்களுக்கான சம்பளத்தையும் தாங்களே நிர்ணயம் செய்து, அதையும் முன்தேதியிட்டு பெற்றுக்கொண்டனர ோ, அதே போல வீடு வாங்குவது என்று முடிவானதும், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் வீடு வாங்குவற்கான விதிமுறைகளையும் , இவர்களுக்கு ஏற்ப இவர்களே, வளைத்துக்கொண்டன ர்.
தொடரும்...
10.05.2011 : ஐயா, வணக்கம்! ஆத்தூரை அடுத்துள்ள தலைவாசல் கூகையூர் கிராமத்தைச் சேர்ந்த, 104 வயதான உரைநூல் பேராசிரியர் அடிகளாசிரியருக் கு, மத்திய அரசு தொல்காப்பியர் விருதும், பணமுடிப்பும் அறிவித்து, அதன்படியே கொடுத்தும் விட்டது; சந்தோஷம்! இதுபற்றி தாங்கள் அடைந்த புளகாங்கிதத்தைய ும், பகிர்ந்து கொண்டீர்கள்; ரொம்ப சந்தோஷம்! ஆனால், 2000வது ஆண்டில், நீங்கள் அறிவித்த, திருவள்ளுவர் விருது, பணம், இன்னமும் பலருக்கு வரவில்லையே ஐயா! மிக நீண்ட இடைவெளி காரணமாக, இந்த விருது பற்றி கிடைத்தவர்கள் கூட மறந்து இருக்கலாம்; ஆகவே, ஞாபகப்படுத்துகி றேன். கன்னியாகுமரியில ், 2000வது புத்தாண்டு தொடக்கத்தில், 133 அடி உயர பிரமாண்ட திருவள்ளுவர் சிலையை, முதல்வராக இருந்து, திறந்து வைத்தீர்கள். அந்த விழாவில், பள்ளி சிறுவர், சிறுமியர் பலர் 1,330 திருக்குறளையும் ஒப்புவித்ததுடன் , குறளின் கடைசி வரியை சொல்லி, அக்குறளை சொல்லச் சொன்னால் கூட, முழுக் குறளையும் சொல்லி, பொருளும் கூறினர். 133 அதிகாரத்தில், எந்த இடத்தில், அந்த குறள் இடம் பெறுகிறது என்றும் சொல்லி வியக்க வைத்தனர். இப்படி குறளை கரைத்து குடித்த, அந்த சிறுவர், சிறுமியரால், சபை மட்டுமல்ல, நீங்களும் சந்தோஷமடைந்தீர் கள். இந்த குழந்தைகள் படித்து முடிக்கும் வரை, மாதம் ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகையாக வழங்கப்படும் என்று அறிவித்து, கைத்தட்டலையும் அள்ளினீர்கள். அந்த குழந்தைகளும், மாதம் ஆயிரம் ரூபாய் சன்மானம், இந்த மாதம் வரும், அடுத்த மாதம் வரும் என்று காத்திருந்து, காத்திருந்து கிட்டத்தட்ட, 12 வருடமாகிறது; இன்னும் தொகை வந்தபாடில்லை. குழந்தைகள் வளர்ந்தும் விட்டனர்; பலர், இதை மறந்தும் விட்டனர்! ஆனால், இன்னமும் மறக்காத, அப்பாவி அப்பா ஒருவர், இதை ஞாபகப்படுத்தி, இப்போது அரசுக்கு கடிதம் போட்டார். மாதா, மாதம் ஆயிரம் ரூபாய் தருமளவிற்கு அரசிடம் நிதி கொட்டியா கிடக்கிறது? மொத்தத்தில் தொகுப்பூதியமாக ஒரு தொகை, பத்தாயிரமோ அல்லது கொஞ்சம் கூடுதலாகவோ தருவதற்கு ஆலோசனை நடந்துகொண்டு இருக்கிறது. ஆலோசனை முடிந்ததும், சொல்லி அனுப்புகிறோம் என்ற ரீதியில் பதில் அனுப்பியுள்ளார் கள்.
தொடரும்...
S.Ramesh
Consultant Engineer
Kingdom of Saudi Arabia.
Pls be focus
Remove karuna's underware now. Be focus.
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல
http://www.telegraphindia.com/1110510/jsp/frontpage/story_13963080.jsp
Dayalu should be arrested
“I state that it (the bank account) stands in the name of Kalaignar TV and the signatures of Dayalu Ammal, Kanimozhi and Sharad Kumar are appearing on the said account opening form,” Rajendran said in his statement.
http://www.dailypioneer.com/337666/Karuna-kin-confirms-Kani%E2%80%99s-active-KTV-role.html
noe Dayalu should be arrested
Wow.. We are expecting that.. thanks a lot savukku. Send more more social articles.
RSS feed for comments to this post