|
அண்ணா பல்கலைகழகமும், ஆளுனர் மாளிகையும்.
இரண்டுக்கும் என்ன சம்பந்தம் ? இரண்டும் எதிர் எதிரே அமைந்துள்ளன. அதுவா ? இல்லை.
ஆட்டுக்கு தாடியும், ஆளுனர் பதவியும் தேவையற்றவை என்பதே திமுகவின் கொள்கை. அப்படிப்பட்ட கொள்கையை உடைய திமுக, தற்போதைய கவர்னர் பர்னாலாவை ‘தாடி வைத்த தங்கம்’ என்று புகழ்கிறது. திமுகவினர், ஒருவரை புகழ்ந்தாலும், உள்நோக்கம் இருக்கும், இகழ்ந்தாலும் உள்நோக்கம் இருக்கும். இதற்குள் செல்லும் முன், அண்ணா பல்கலைகழகத்தைப் பற்றி ஒரு ஃப்ளாஸ் பேக்.

2007ம் ஆண்டு. சவுக்கு லஞ்ச ஒழிப்புத் துறையில் பணியாற்றிக் கொண்டிருந்த போது, அப்போது அங்கே ஐஜியாக இருந்த கே.ராதாகிருஷ்ணன் மற்றும் நரேந்திர பால் சிங் ஆகிய இருவரும், உரிய மதிப்பெண் பெறாத தங்கள் பிள்ளைகளுக்கு முதலமைச்சர் ஜெயலலிதாவிடமிருந்து சிறப்பு கோட்டாவில் சீட் வாங்கியிருக்கிறார்கள் என்று தகவல் வந்தது. இவ்வாறு இந்த இரண்டு அதிகாரிகளும் வாங்கியது தவறு. ஏனென்றால், ராதாகிருஷ்ணன் ஜெயலலிதா மீதான வழக்கை முடித்தார். நரேந்திர பால் சிங், செங்கோட்டையன் மற்றும் வளர்மதி மீதான வழக்குகளை முடித்தார். இவ்வாறு இந்த இரண்டு அதிகாரிகளும் சீட் வாங்கியது, கலைஞர் டிவிக்கு 200 கோடி கொடுத்தது போலவே லஞ்சம் என்றே சட்டம் சொல்கிறது. சரி, இதைப் பற்றி லஞ்ச ஒழிப்புத் துறையில் எல்லோரும் பேசுகிறார்கள் ஆனால், யாரும் எதுவும் செய்ய முன்வரவில்லை.

தகவல் அறியும் உரிமைச் சட்டம் அப்போதுதான் அமலுக்கு வந்தது. இதைப் பயன்படுத்தி தவலைப் பெறலாம் என்று முயற்சி எடுத்தால், சவுக்கு அரசு ஊழியராக இருப்பதால், நேரடியாக தகவலை பெற முடியாது. மாதவரத்தில் இருந்த சவுக்கின் நண்பரை அவர் பெயரில் தகவல் பெற்றுத் தருமாறு கேட்ட போது, அவர் சம்மதித்தார். சரி தகவல் கேட்கலாம் என்றால், இவர்களின் பிள்ளைகள் பெயர் வேண்டுமே ? ராதாகிருஷ்ணன் மகன் பெயர் சந்தீப் என்று தெரிந்து விட்டது. நரேந்திர பால் சிங் மகள் பெயர் தெரியவில்லை. அவர் வீட்டில் வேலை செய்யும் கான்ஸ்டபிளிடமும், டிரைவரிடமும் கேட்டால், அவர்கள் அந்தப் பெண்ணை ‘பிங்கி’ என்று அழைப்பார்கள் என்று சொன்னார்கள். என்னடா இது நாய்குட்டி பெயர் போல இருக்கிறதே என்று யோசித்துக் கொண்டு இருக்கும் போது, சவுக்குக்கு அலுவலகத்தில் பயன்படுத்த கம்ப்யூட்டர் ஒன்று கொடுத்தார்கள். அந்தக் கம்ப்யூட்டர் அதற்கு முன்பு நரேந்தர் பால் சிங் பயன்படுத்தியது. அந்தக் கம்ப்யூட்டர் உள்ளே என்ன இருக்கிறது என்று ஆராய்ந்தால், Respected Madam என்று தொடங்கி, அண்ணா பல்கலைகழகத்தில் சீட் கேட்டு, நரேந்திர பால் சிங் ஜெயலலிதாவுக்கு எழுதிய கடிதம் கிடைத்தது. பழம் நழுவி நேரடியாக வாயிலேயே விழுந்தது போலிருந்தது. அவர் மகள் பெயர் குர்பானி சிங்.
நண்பர் சவுக்கு சொன்னபடி அண்ணா பல்கலைகழகத்தில் தகவல் கேட்டு அனுப்பி இரண்டாவது நாளிலிருந்து அவருக்கு மிரட்டல் தொடங்கியது. இரண்டாவது நாள் ஒருவர், தான் அண்ணா பல்கலைகழகத்தில் பணி புரிவதாக அறிமுகப்படுத்திக் கொண்டு, ‘சார் உங்களுக்கு எந்த ப்ராச்சில சீட் வேணும்னு சொல்லுங்க.’ கேள்வியெல்லாம் கேட்காதீங்க என்று சொன்னார். அடுத்தடுத்த நாள்களில் வீட்டுக்கு தினமும் ஒரு போலீஸ்காரர் வந்து, மிரட்டுவார். நண்பர் பயந்ததும், டெக்கான் க்ரானிக்கிள் நாளிதழில் தகவல் கேட்பவருக்கு மிரட்டல் என்று பெரிய செய்தி வந்தது.

ஆனால் இந்தச் செய்திக்கெல்லாம் ராதாகிருஷ்ணன் பயந்தவரா என்ன ? நண்பருக்கு மிரட்டல் தொடர்ந்தது. அதற்குப் பிறகு, இணையத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்துக்காகவே Hum Jhanenge என்ற போரம் உள்ளது. அந்த போரத்தில், இந்தத் தகவலை பதிவு செய்த போது, ஆதரவு வெள்ளமெனக் குவிந்தது. இந்தியா முழுவதும் இருந்து ராதாகிருஷ்ணன் மற்றும் நரேந்திர பால் சிங் பிள்ளைகளைப் பற்றிய தகவலை கேட்டு 300க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் குவிந்தன. அதற்குப் பிறகு மிரட்டல் நின்றது. பிறகு தகவல் ஆணையத்தில் விசாரணை நடந்து, தகவல் பெற்று, சிபிஐ விசாரணை வேண்டி புகார் கொடுத்து, உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்ததெல்லாம் தனிக் கதை.

இப்போது ஆளுனர் மாளிகை விஷயத்துக்கு வருவோம். ஆளுனர் பர்னாலா, வரலாறு படைத்துள்ளார். என்ன வரலாறு ? இதுவரை வரலாற்றில் இல்லாத வகையில், பதவிக்காலம் முடியாத ஒரு துணை
வேந்தருக்கு பதவி நீட்டிப்பு வழங்கியுள்ளார். அந்தத் துணை வேந்தர் வேறு யாருமல்ல. அண்ணா பல்கலைகழகத்தின் துணை வேந்தர் ஜவஹர் தான் அது.


வேந்தர் பர்னலா, 01.03.2011 அன்று மன்னர் ஜவஹருக்கு எழுதிய கடிதத்தில் பல்கலைக்கழக சட்டம் 11(3)ன்படி, உங்களுடை பதவிக்காலம் 27.06.2011க்கு பிறகு ஓராண்டு நீட்டிக்கப்படுகிறது என்று கூறியுள்ளார்.
பல்கலைக்கழகம் சட்டத்தின் விதி 11(3) என்பது, துணை வேந்தரின் பதவிக்காலம் முடிந்த பிறகுதான் ஓராண்டு நீட்டிக்கலாம் என்று கூறுகிறது, அதாவது மன்னர் ஜவஹர் பதவிக்காலம் 26.06.2011 அன்று மாலை 5.45க்கு முடிவடைகிறது, அன்று மாலை 5.46க்கு ஒராண்டுக்கு பதவி நீட்டிப்பு வழங்கி உத்தரவிடலாம்.

சரி எதற்காக இப்படிப் பட்ட ஒரு அப்பட்டமான விதி மீறலை செய்திருக்கிறார் பர்னாலா ?
அண்ணா பல்கலைகழகத்தில் கவர்மென்ட் கோட்டா என்று ஒரு கோட்டா வைத்திருக்கிறார்கள். இந்தக் கோட்டா 1999ம் ஆண்டு, அண்ணா பல்கலைகழகத்தின் சின்டிகேட் தீர்மானத்தின் படி மொத்த சீட்டுகளில் 2 சதவிகிதத்தை கவர்மென்ட் கோட்டாவுக்கு ஒதுக்கலாம் முடிவெடுத்தனர். இதன் படி அண்ணா பல்கலைகழகத்தில் ஒரு பிரிவில் உள்ள மொத்த இடத்தில் 2 சதவிகிதத்தை ஒதுக்கலாம். உதாரணத்துக்கு மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் 100 சீட் இருக்கிறதென்றால் 2 சீட்டுகளை கவர்மென்ட் கோட்டாவுக்கு ஒதுக்கலாம். 20 சீட்டுகள் ஒதுக்கினால் ? அதுதான் அண்ணா பல்கலைகழகத்தில் நடைபெற்று வருகிறது.

உலகின் தலைச்சிறந்த கல்வி நிறுவனமாக கருதப்படும் அண்ணா பல்கலைகழக கல்லூரிகளான காலேஜ் ஆப் இன்ஜினியரிங், கிண்டி, மெட்ராஸ் இன்ஸ்ட்டிட்யூட் ஆப் டெக்னாலஜி மற்றும், அழகப்பா காலேஜ் ஆப் டெக்னாலஜி ஆகிய மூன்றிலும், இந்த அயோக்கியத்தனங்கள் அரங்கேறி வருகின்றன.

அண்ணா பல்கலைகழக கல்லூரிகளில் ஒரு இடம் அதிகரிக்கப் பட வேண்டும் என்றால் கூட, ஏஐசிடிஇ என்று அழைக்கப் படும், பொறியியல் கல்லூரிகளுக்கான அகில இந்திய அமைப்பு தான் அனுமதி கொடுக்க வேண்டும். ஆனால், எந்தவிதமான அனுமதியும் இல்லாமல், சகட்டு மேனிக்கு அட்மிஷன்கள் போடப்பட்டுள்ளன. கடைசியாக 2001ம் ஆண்டில் சீட்டுகள் எண்ணிக்கையை ஏஐசிடிஇ அதிகரித்துள்ளது. அதற்குப் பிறகு அதிகரிக்கவே இல்லை.
எலெக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூக்கேஷன்ஸ் பிரிவை உதாரணத்துக்கு எடுத்துக் கொள்வோம். இந்தப் பிரிவில் 2010ம் ஆண்டில் மொத்த இடங்கள் 180. ஆனால் படிப்பது 296. கூடுதல் 116. இவற்றில் 22 பேர் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள். 7 இன்டஸ்ட்ரியல் கோட்டா. மீதம் உள்ள 87 இடங்கள் ஒரு இடம் சராசரியாக 20 லட்சத்துக்கு விற்கப்பட்டுள்ளது. இது எலேக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிக்கேஷன்ஸ் பிரிவில் 2010 ஆண்டுக்கு மட்டும். இதே பிரிவில் கூடுதலாக படிப்பவர்களின் எண்ணிக்கை 2009ல் 156, 2008ல் 156 மற்றும் 2007ல் 40. 2010ம் அனைத்துப் பிரிவுகளையும் சேர்த்து, ஆண்டில் மொத்தம் 258 மாணவர்கள் அனுமதிக்கப் பட்ட தொகையை விட, கூடுதலாக படிக்கின்றனர். 258 X 20,00,000 = 51 கோடி. 2007 முதல் 2010 வரை 600 பேர் கூடுதலாக சேர்க்கப் பட்டுள்ளனர். நீங்களே கணக்குப் போட்டுக் கொள்ளுங்கள்.

ஒரு ரயில் கம்பார்ட்மென்ட்டில் 70 பெர்த்துகள் தான் உள்ளன. 120 டிக்கட்டுகள் வழங்கினால் ? அதுதான் அண்ணா பல்கலைகழகத்தில் நடைபெற்று வருகிறது. மெக்கானிக்கல் என்ஜினியரிங், கம்ப்யூட்டர் சைன்ஸ், என்று அத்தனை பிரிவுகளிலும் இந்த ஊழல் நடைபெற்றுள்ளது.
கவர்னர் மகனையும், அவர் நண்பரையும், வசூல் செய்ய அனுமதி தந்ததற்கான கைமாறு தான், மன்னர் ஜவஹருக்கு பணி நீட்டிப்பு.
ஒரு சீட் 25 லட்சத்துக்கு விற்கப் பட்டு அது, கவர்னர் பர்னாலாவின் மகன், அவரது பிசினஸ் பார்ட்னர் நஜிம்முதின், உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, மற்றும் அண்ணா பல்கலைகழக துணை வேந்தர் மன்னர் ஜவஹர் ஆகியோரோடு பங்கு போட்டுக் கொள்ளப் படுகிறது.
இந்த கவர்மென்ட் கோட்டாவில் சீட் பெறுபவர்கள் ஏழைப் பாழைகளோ இல்லாதவர்களோ அல்ல. உயர் உயர் அதிகாரிகளின் பிள்ளைகளும், கொழுத்த முதலாளிகளும் தான்.
இந்த ஊழல் இந்த ஆண்டும் தொடராமல் நிற்க வேண்டும் என்பதே சவுக்கின் விருப்பம். அது நிற்கும் வரை சவுக்கு ஓயாது. தேவைப்பட்டால் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்படும். |
Comments
அன்ட் அ ச்டேப் ஃபல்ல் இன் 2006௧1[/ஃஉஒடெ]
You are a senior professor. Definitely your writeup will through light on this sinking ship. Please do it.
and a steep fall in 2006-11
எல்லாம் அணி திரள வேண்டும். தமிழகத்தில் RTI club ஒன்றை உருவாக்கி நடக்கும் ளுக்கு கேள்வி கேட்க வேண்டும். கொள்ளை போன பணம், மற்றும் சொத்துகளை மீட்க வேண்டும். கொள்ளையர்களை குறைந்தது 5 ஆண்டுகள் சிறையில் போடவேண்டும்.
நடுத்தர மக்கள் கேள்வி கேட்கமாட்டார்கள ், முதுகு எலும்பு இல்லாத கோழைகள் என்று
நினைக்கும் ஆட்சி, அதிகார வர்க்கத்தினரை பயம் கொள்ள செய்ய வேண்டும். முன்னாள்
கொள்ளையர்களையும ், அவர்களுக்கு துணை போன அதிகாரிகளையும் தண்டிக்க வேண்டும்.
தமிழர்களே 'நாம் ' ஒன்றிணைந்து செயல்படுவோமா ? வீரம், மற்றும் விவேகத்துடன் செயல்படுவோமா ? ஒருவர் மட்டும் RTI வழியாக கேள்வி கேட்டால் அடிக்க வருவார்கள்.
ஆனால் 'நாம்' ஆயிரம் வேறாக சேர்ந்து கேட்போம். ஆயிரம், லட்சங்களாக மாறும்.
தயவு செய்து ஒன்று சேருங்கள். தமிழ்நாடு ஊழல் எதிர்ப்பு இயக்கம் -
ஊழலற்ற தமிழகம் அமைய தொடர்பு கொள்ளுங்கள்.
chennai.iac
http://iacchennai.org
சென்னை வடக்கு :9841429930, 9444020744, 9444321222
சென்னை தெற்கு :9940066327 , 9176657632 , 9843677487, 790909123
9710201043
சென்னை மேற்கு : 9884269094 , 9941292846, 9444961168
சென்னை கிழக்கு : 9382193943, 9840852132, 9600041079
பகத்சிங்
Authorities should take immediate steps to ban these immoral activities and punish severely all the people engaged in this..
Dont sell education..
Note to all people involved in this activity ~ People are no more dumb/deaf/blind as you think
மேலும் கடந்த ஆசிரியர் தேர்வு முழுக்க முழுக்க பணத்தின் அடிப்படையில் நடந்தது. இதில் பல கோடிகள் கை மாறியது. பணம் கொடுத்தவர்களுக் கு எழுத்து தேர்வு கேள்விதாள் துணை வேந்தரே பட்டுவாடா செய்தார். TIMES OF INDIA NEW PAPER ல் செய்தியும் வந்தது. இவர்கள் எல்லாம் கல்வியை தவிர மாமா வேலை செய்வதற்கும் மேலும் மற்ற ஆசிரியர் செய்ய கூடாத வேலை செய்வதற்கும் தேர்வு செய்யப்பட்டவர்க ளாக உள்ளனர். இவர்களின் எண்ணிக்கை 20 % தை தொட்டுவிட்டது. இனி இந்த பல்கலைகழகம் உருப்பட்டமாதிரி த்தான். இவர்களெல்லாம் பாடம் நடத்துவது கிடையாது. இவர்களே கேள்விதாள் எடுத்து மதிப்பெண் போட்டு ரிசல்ட் போடுவதால் எங்களுக்கெல்லாம ் S மற்றும் A GRADE தான்.
இந்தமுறை +2 வில் நல்ல மார்க் எடுத்து அண்ணா பல்கலைகழகத்தில் சேரவேண்டும் என்று கனவு இருந்தால் என்னை மாதிரி சேர்ந்து ஏமாறவேண்டாம்.
Are you an insider. if so you wont say like this
துணைவேந்தர் மன்னர் ஜவஹரிடம் பேசியபோது, ''அந்தக் கல்லூரி மாணவியிடம் இருந்து எனக்கு ஒரு புகார் வந்தது. அது சம்பந்தமாக விசாரணை கமிஷன் அமைத்து இருக்கிறேன். இரண்டு கட்ட விசாரணை முடிந்துவிட்டது . விசாரணை முழுமையாக முடிவடைந்ததும், தக்க நடவடிக்கை எடுக்கப்படும்!'' என்று சொன்னார்.
கம்பன் கல்லூரி நிர்வாகத்திடம் இது குறித்துப் பேச முயன்றபோது, கல்லூரி சார்பில் பேச யாருமே முன்வரவில்லை. அமைச்சர் வேலுவிடம் கேட்க முயன்றபோதும், அவரது உதவியாளர் செல்வராஜ்தான் போனை எடுத்து, ''அமைச்சர் மீட்டிங்கில் இருக்கிறார். சந்திக்க முடியாது...'' என்று தட்டிக் கழித்தார்.
இதைத்தான் 'வெரி பேட்’னு சொல்றான் வெள்ளைக்காரன்!
திருவண்ணாமலையில ் உள்ள கம்பன் பொறியியல் கல்லூரி, உணவு அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமானது. இங்கே, 'பி.இ. கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்ட் இன்ஜினீயரிங் பிரிவில் படிக்கும் ஒரு மாணவர், வகுப்புக்கு வராமலும் தேர்வு எழுதாமலும் அதிக மதிப்பெண் பெற்றுள்ளார்!’ என்று ஒரு மாணவி, அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் மன்னர் ஜவஹருக்கு புகார் அனுப்பிவைக்க... பிரச்னை விஸ்வரூபம் எடுக்கிறது! குற்றச்சாட்டுக் கு ஆளான மாணவர் பெயர் அருண்குமார் ரெட்டி. அவர் பாலிடெக்னிக் படித்துவிட்டு, பி.இ. 2-வது ஆண்டில் சேர்ந்து இருப்பதும், வகுப்புக்கு வராமலே மற்ற மாணவர்களைவிட அதிக மார்க் எடுத்துள்ளதும் தெரியவந்துள்ளது . அவரது விடைத்தாளை சோதனையிட்டபோத ு, ஒவ்வொரு விடைத்தாளிலும் ஒவ்வொரு மாதிரி கையெழுத்துகள். அவருக்குப் பதில் யாரோ தேர்வு எழுதி இருப்பதைக் கண்டுபிடித்து இருக்கிறார்கள்.
இது குறித்துக் கல்லூரி மாணவ-மாணவியர்களிடம் கேட்டபோது, ''சார், எங்க போட்டோ, பெயர் வேண்டாம்! இந்தக் குற்றச்சாட்டில் சம்பந்தப்பட்ட அந்த அருண்குமார் ரெட்டியை நாங்கள் யாருமே வகுப்பறையில் பார்த்தது கிடையாது. அவர், கல்லூரிக்கோ, தேர்வுக்கோ, வரவே இல்லை. ஆனால், அவர்தான் அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளதாக எப்போதும் அறிவிப்பார்கள். இந்த அருண்குமார் ரெட்டி, எங்கள் கல்லூரி வைஸ் சேர்மன் குமரனுக்கு உறவினராம்.
Nalla Post with lots of truthful infos... Aana i dont understand one thing... How come NRIs and Foreign country falls under your excess quota? By government rules, NRI students are selected solely based on their merit (because we never had to write TNPCEE...) and I studied ECE in Anna ONLY because my cut off was 194.5/200... I know that a total of 10% seats are allocated for NRIs and we DO NOT pay ANY capitation fee like you have suggested... We instead have to pay the college in dollars....which is legitimate money and is used for the college's development... This HAS to be the only the college gets funding considering that the IPS's and minister's children pay black money which goes to the VC's pocket... Please check your fact on NRIs before u post something like that... We had to suffer through the whole admission process, paid more and still had to put up with influential kids who PAID their way out of college... In my batch, there were kids with around 16 arrears in 8th semester, but cleared ALL with A's or B's... The amount ranged from 10k-20k plus a new model cell phone...
nan university la padichapo computer science dept oru staff internal mark venum na adjustment panni than poganum solli konjam appadi ippadi nu iruntharu(pulli raja mathiri) ....
periya problem aagi avara MIT ku transfer pannunathoda sari ... avlothan ithnakum avar romba strict ...internal mark venum na avara poi room la thaniya pakkanum
அடுத்து நாம் அனைவரும் எதிர் பார்கலாம்
அண்ணா பல்கலை கழகம் விற்பனைக்கு. முதலில் வருபவருக்கு முன் உரிமை….விண்ணப்பங்கள் வரவேற்க படுகின்றன….இது தான் அடுத்து நடக்க போகிறது.
Refer article: http://articles.timesofindia.indiatimes.com/2011-05-11/internet/29532100_1_intermediaries-guidelines-cyber-cafes-cyber-law
Could you please clarify on this. I think in 2007 it was DMK who ruled TN. Then how come Radhakrishnan and NarendraBal singh
approached JJ to get a seat for their heirs.
Is it a printing mistake...
Regards,
New Reader..
உங்கள் பதிவுகளை வழக்கமாக வாசித்து வருபவர்களில் நானும் ஒருவன். இதுவரை நான் எந்த ஒரு பதிவிற்கும் பின்னூட்டம் வழங்கியதில்லை. கல்வித்துறையில் நிகழும் ஊழல்களை வெளிகொனரவேண்டும ் என்ற என்னுடைய நீண்ட நாள் தவிப்பினை நீங்கள் இந்த பதிவின் மூலம் வெளிப்படுத்தி உள்ளீர்கள். இதோடு நின்று விடாமல் அணைத்து அரசு பல்கலை கழகம் மற்றும் அரசு பள்ளிகூடங்களில் நிகழும் ஊழல்ககளை வெளிப்படுத்த வேண்டும் என்று வேண்டுகிறேன் .
நன்றி
http://www.iacchennai.org
INDIA AGAINST CORRUPTION, CHENNAI
you have beaten wikileaks...
Please go through the website URL below and also download of the pdf.
Any further information on this case of cheating in Sivaganga Lok sabha poll
http://pragoti.org/node/4395
எந்த தி மு க ஆட்சியில் தான் கல்வி நிலை மோசம் ஆகயுள்ளது. தமிழ் நாட்டில் அரசு பல்கலை கழகங்கள் மொத்தம் 24 . ஒவ்வொரு துணை வேந்தருக்கும் மூன்று கோடி ருபாய் பணம் வாங்கிகொண்டு நியமிக்கிறார்கள ். அந்த துணை வேந்தர் எவ்வாறு ஒழுங்காக தன் பணியை செய்வான். போட்ட பணத்தை எடுபதற்காக எல்லா மட்டதில்லும் காசு வாங்குவன். காசு கொடுக்கறவங்க எல்லாரும் அதையே திருப்பி செய்வாங்க. ஆகா மொத்தம் கல்வி துறையை குட்டி சுவராக்கிய பெருமை கருணாநிதிக்கும் பொன்முடிக்கும் உண்டு.
//
எந்தக் காலத்துல இருக்கீங்க. இப்பல்லாம் துணைவேந்தர் பதவிக்கு 12 கோடி. இந்த மன்னர் ஜவகருக்கு முன்னாடி இருந்த துணைவேந்தர் தன் பதவிக்காலத்தை நீட்டிக்கச் சொல்லி 12 கோடி குடுக்கத் தயாரா இருந்தாராம். அவரு பொன்முடியோட ஆளு. இதுக்கு நடுவுல பேராசிரியர் வேற இன்னொரு ஆளை சிபாரிசு பண்ணாராம். இந்த ஜவகர் நடுவுல புகுந்து ராசாத்தியம்மாளோ ட சீட்டு டீல் போட்டு காசே குடுக்காம துணைவேந்தராயிட் டாராம். இதைப் பத்தியும் கொஞ்சம் எடுத்துப் போடுங்க.
Kindly Go-ahead....
We would like to request you to reveal still more hidden matters[corrupt ion] of various government sectors & their voilences[corru ption].
அனாதி
http://velichathil.wordpress.com
Is it possible to translate this to english and post it in Hum Jhanenge forum.
RSS feed for comments to this post