|
எல்லார் மனதிலும் உள்ள கேள்வி இது. வாசகர்களில் பலர், இந்தக் கட்டிடம் மக்கள் வரிப்பணத்தில் கட்டப் பட்டதால், ஈகோ பார்க்காமல், புதிய கட்டிடத்தில் ஜெயலலிதா பணியாற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். ஒரு வாசகர் இன்னும் ஒரு படி மேலே போய், சிறந்த நகைச்சுவை உணர்வோடு, இந்தக் கட்டிடத்தை கருணாநிதி குடும்பத்திடம் ஒப்படைத்து விட்டு, 1000 கோடி ரூபாயை திரும்ப வாங்கிக் கொள்ளலாம் என்று கூறியிருந்தார். இந்தக் கட்டிடம் அல்ல, புனித ஜார்ஜ் கோட்டைக்கு ஒரு விலை சொன்னீர்கள் என்றால் கூட, அதையும் வாங்கிக் கொள்ளும் அளவுக்கு கருணாநிதி குடும்பத்தினரிடம் பணம் இருக்கிறது என்பதே உண்மை. நினைத்த நாளில் குழந்தை ஆசைப்படுவது போல புதிய கட்டிடத்தை திறக்க வேண்டும் என்று, 2 கோடி ரூபாய்க்கு தோட்டா தரணியை வைத்து செட் போட்டு, திறப்பு விழா நடத்தினாரே கருணாநிதி….. மன்னிக்கவே முடியாது.

இந்த புதிய தலைமைச் செயலக கட்டிடம், கருணாநிதியின் திட்டம் மட்டும் அன்று. 2001 ஆட்சிக் காலத்தில், ஜெயலலிதா, புதிய தலைமைச் செயலகம் கட்ட வேண்டும் என்று, ராணி மேரிக் கல்லூரியை இடித்து விட்டு, அங்கே கட்ட முயன்றதும், சுற்றுச் சூழல் அமைச்சராக மத்தியில் இருந்த திமுக அமைச்சர் டி.ஆர்.பாலு, அதற்கு தடையில்லா சான்று வழங்காததாலும், கல்லூரி மாணவிகள் பெருமளவில் திரண்டு போராட்டம் நடத்தியதாலும், அந்தத் திட்டம் நிறைவேறாமல் போனது. ராணுவத்திற்கு சொந்தமான தற்போதைய தலைமைச் செயலக கட்டிடத்தை ராணுவம் திருப்பிக் கேட்டதால், அப்போது புதிய தலைமைச் செயலக கட்டிடம் கட்டுவதற்கான தேவை ஏற்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.
அதற்குப் பிறகு, அந்த இடத்தை ராணுவம் கேட்டது போலத் தெரியவில்லை. அதனால்தானே செம்மொழி ஆய்வு நிறுவனத்துக்கு அந்தக் கட்டிடத்தை கருணாநிதி வழங்கினார் ?
சரி. 1000 கோடி ரூபாய் மக்கள் பணத்தை செலவழித்தாகி விட்டது. சட்டசபையையும், தலைமைச் செயலகத்தையும், புதிய கட்டிடத்திற்கு மாற்றலாமா வேண்டாமா ?
ஏற்கனவே செயல்பட்டு வந்த புனித ஜார்ஜ் கோட்டையானது, பழம் பெருமை வாய்ந்தது. 17ம் நூற்றாண்டுக் கட்டிடம் அது. சென்னை நகரின் பாரம்பரியத்தையும் பெருமையையும் உணர்த்துவது. மற்ற மாநிலங்களில் புதிய கட்டிடத்தில் சட்ட சபையும், தலைமைச் செயலகமும் செயல்படுவதற்கான காரணம், இது போன்றதொரு அழகான கட்டிடம் இல்லாததுதானே ? அப்படிப் பட்ட சிறப்பான கட்டிடம் இருக்கும் போது புதிய கட்டிடம் எதற்கு ? கனியிருப்பக் காய் கவரலாமா ?

சரி புதிய தலைமைச் செயலக கட்டிடத்தை என்ன செய்யலாம் ? சென்னை நகரிலும், புறநகரிலும், நூற்றுக் கணக்கான அரசு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. அவற்றுள் பல வாடகை கட்டடிங்களில் இயங்கி வருகின்றன. உதாரணத்திற்கு, நீதிபதிகளுக்காக கட்டப் பட்ட குடியிருப்பில் தான், லஞ்ச ஒழிப்புத் துறை இயங்கி வருகிறது. இது போல, பல்வேறு இடங்களில் செயல்பட்டு வரும் துறைத் தலைமை அலுவலகங்களை ஒருங்கிணைத்து, துறைத் தலைமை அலுவலகங்களுக்கான கட்டிடமாக புதிய தலைமைச் செயலக கட்டிடத்தை மாற்றலாம். தற்போது அரசு கட்டிடங்களில் செயல்பட்டு வரும் துறைத் தலைமை அலுவலகங்களால் காலியாகும் இடங்களில், கீழ் நிலை அரசு அலுவலகங்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.
பொதுவாக ஒரு அரசு அலுவலகத்திலிருந்து மற்றொரு அரசு அலுவலகத்துக்கு ஒரு விபரம் வேண்டி கடிதம் எழுதினால், ஒரு வருடத்திற்கு, I invite your kind attention to the reference cited என்று மாவரைத்துக் கொண்டிருப்பார்கள். துறைத் தலைமை அலுவலகங்கள் ஒரே வளாகத்தில் இருந்தால், சம்பந்தப் பட்ட துறையின் அலுவலகர்கள், நேராக அந்த அலுவலகத்துக்கே சென்று, விளக்கங்கள் பெற்று, தேவையின்றி ஏற்படும் கால விரயத்தை தவிர்க்கலாம். மேலும், இது போன்ற ஒருங்கிணைந்த அரசு அலுவலகங்கள் இருப்பதால், ஒரு வகையான வெளிப்படைத் தன்மை ஏற்படும்.

ரகசியமாக அலுவலகத்தில் சந்தித்து, ‘டீல்’ பேசுவது போன்ற காரியங்களை தவிர்க்கலாம்.
இதையெல்லாம் விட, பல்வேறு காரணங்களுக்காக அரசு அலுவலகங்களை அணுகும் பொது மக்கள் இங்கும் அங்கும் அலையாமல், ஒரே இடத்தில் அனைத்து அலுவலகங்களில் உள்ள வேலையையும் முடிக்கும் வாய்ப்பு இருக்கிறது.
ஆலோசனை நன்றாக இருக்கிறதா அன்பு வாசகர்களே ? |
Comments
ivallu nalla DMK support pannala lanka tamilsku.ok ippa amma pathiviku vanthutanga illa ithuku apparum kural kodupangala ella oru kuttyala oorya mattainga
inna 5 varuzham avanga kolla adichanga ippa ivanga
sari ethu eppadiyo namakum oru mattram thevaithana
ippa srilanka tamills namm tamil meeenavarukkum ethavathu nallathu sencha sari than
புதிய தலைமை செயலகத்தை அவசர அவசரமாக கட்டிய போதே ஜெயலலிதா எதிர்ப்பு தெரிவித்தார். எந்த பாரம்பரிய அடையாளமும் இல்லாமல், கலைநயமும் இல்லாமல் சர்க்கஸ் கூடாரம் போல் இருப்பதாக குறை கூறினார். புதிய சட்டசபையில் பட்ஜெட் கூட்டம் நடந்த போது அந்த கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தார்.
புதிய தலைமை செயலகத்தை தற்போது பயன்படுத்தாததற் கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. புதிய தலைமை செயலகம் எதிரில் மிக அருகிலேயே கடற்கரை-வேளச்சேரி பறக்கும் ரெயில் பாதை செல்கிறது. அந்த மேம்பாலத்தில் இருந்து எளிதில் சட்டமன்றத்தை தாக்க முடியும். எனவே, இது பாதுகாப்புக்கும ் அச்சுறுத்தலாக அமைந்து இருப்பதாக கூறப்படுகிறது.
ரூ.425 கோடிக்கு திட்டமிட்டு இதுவரை ரூ.1200 கோடி செலவிடப்பட்டு உள்ளது. அவசரமாக கட்டியதால் கட்டிடத்தின் பல பகுதிகளில் தண்ணீர் கசிவு இருப்பதாகவும் கூறப்படுகிறது. பல்வேறு முறைகேடுகள் காரணமாகவே செலவு பல மடங்காக உயர்ந்து இருக்கிறது என்று புகார்கள் வந்துள்ளன. வேலையும் இன்னும் முடியவில்லை. அதுபற்றி விசாரிக்க அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. அதுவரை புதிய தலைமை செயலகத்தை எந்த அலுவலுக்கும் பயன்படுத்த அரசு விரும்பவில்லை என்று கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
புதிய கட்டிடம் கட்டப்பட்டதால் திருவல்லிக்கேணி , வாலாஜா சாலை, அண்ணா சாலை பகுதியில் மேலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். பொதுமக்கள் மிகவும் சிரமப்படுவார்கள ். இதை தவிர்க்க அரசு விரும்புகிறது. புதிய சட்டசபை கட்டிடத்தை பயன்படுத்துவது குறித்து அமைச்சரவையை கூட்டி முடிவு செய்யப்படும் என்று ஜெயலலிதா கூறி உள்ளார். எனவே வருங்காலத்தில் சென்னை மாநகராட்சி மற்றும் வாடகை கட்டிடங்களில் இயங்கும் அரசு அலுவலகங்கள் இங்கு மாற்றப்படலாம் என்று கூறப்படுகிறது
உங்களுக்கு எதுக்கு இந்த சொம்பு தூக்கும் வேலை.
சவுக்கு வாசகர்கள் பலர் தலைமைசெயலகம் இடமாற்றம் செய்வது பிடிக்கவில்லை என நினைக்கிறன் அதனால் சவுக்கு தளத்தில் ஒரு வாக்குபதிவு நடத்தி சவுக்கு வாசகர்களுக்கு இடமாற்றம் பிடிக்கவில்லை எனில் தமிழக அரசு மீது வழக்கு தொடுக்க தயாரா என்பதை சவுக்கு வாசகர்கள் சார்பில் அறிய விரும்புகிறேன் ................
Also spending a few crores to reburfish a heritage monumnent is not a waste.
Assembly would be held only for 100 days and there would be no return to the Govt on the 1000 crores expenditure but there would be huge expenditure in electicity etc.
It is understood that the Govt may look at leasing the building and also use the assembly hall for state of the art international seminars,which are currently invariably held in Delhi.The new building would bring revenue to Governement and also take care to some extent the colossal corruption money which has been laundered.
intha amma puthu seyalagathi payan padutha vendum. illaiyendral athu makkalai mathillatha aanavam.
ithai neeyum aatharithal nee verum vethu vettaga karutha paduvaai!
Dont lose your creditibality or else you too became like nakkeran,dinama lar,sun tv.
I think this great man savukku will get his government post in the place of his liking sooner than later. The irony of that is how long we were misguided and believed by this man in this website. Todays article by him is real character of this man savukku. See this man will start to support each and every policies of Jaya. Please change the website name as Jalra instead of Savukku.
I swear that if you continue like this you can also start count down for your closure of this site. Meanwhile you need not do that as the moment you get revoking of suspension order you will disappear into thin air.
I pity about the visitors of this website.
By
an ardent supporter of Jalra(old Savukku)
செயலகமும் இயங்கிட புதிய அரசு முடிவு எடுக்குமானால், முந்தைய அரசால் கட்டப்பட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகங்கள், மேம்பாலங்கள், நீதிமன்றக் கட்டடங்கள் இவற்றையெல்லாம், புதிய அரசு பயன்படுத்தாது விட்டுவிடுமா? என்ற கேள்வி எழுகிறது.
எனவே, சட்டமன்றத்தை மாற்றுவது ஏற்பு உடையது அல்ல; மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்ட புதிய கட்டடத்திலேயே சட்டமன்றம் தொடர்ந்து இயங்க வேண்டும்
சிற்பகக் கலைக்கும் / கோபுரங்களுக்குப ் பெயர் போன தமிழ் நாட்டில், தாம் தமிழர்களின் அடையாளம் என்று சொல்லிக் கொள்ளும் ஒருவரால் கட்டிமுடிக்கப்ப ட்ட தலைமைச் செயலகம். பாதி வரை ஈயம் பூசப்பட்ட கவிழ்த்து வைத்த கரிபிடித்த அண்டாவைப் போலவே இருக்கிறது என்று காணும் போதெல்லாம் வருத்தம் கொள்கிறேன்.
http://govikannan.blogspot.com/2010/12/blog-post_29.html
Super Shot
JJ will be despotic and hysterical and she will be hijacked by her cronies. MK will be corrupt under his family mafia!
God Save Tamil Nadu!
அன்புள்ள சவுக்கு நாளுக்கு நாள் இந்த குஞ்சாமணியின் அறிக்கை தொல்லை தாங்க முடிய வில்லை தயவு செய்து பெரியாரின் அறக்கட்டளை சொத்துக்களை அரசுடமையாக்குவத ற்கான நடவடிக்கையை மேற்கொள்ள புதிய அரசிடம் மனுதறவும்.
Absolutely Correct. Service of Persons like Saidai Duraisamy is to be needed for the People of Tamilnadu.
உங்களின் இந்தப்பதிவு அம்மாவின் அகங்காரத்திற்கு ஆமாம் போடுவது போல் இருக்கிறது....
கண்டனங்கள்
இனியாவது பக்கச்சார்பில்ல ாமல் எழுதுங்கள்...இல்லையேல் எம் போன்ற வாசகர்களை இழப்பீர்கள்
இதுவரை உங்கள் தளத்திற்கு வந்து கருணாநிதியை வார்த்தைகளால் உரித்தெடுத்த வாசகர்களில் பலர் ஜெயாவிற்கு சப்போர்ட் அல்ல! அவர்கள் கருணாநிதியை ஒழிக்க விரும்பினார்களே ஒழிய, ஜெயாவை ஆதரிக்கவில்லை. இப்போது ஜெயாவின் கூத்துக்களையும் தட்டிக்கேட்க வேண்டிய பொறுப்பு நமக்கிருக்கிறது . ஜிங்க்சாக் தட்டவேண்டிய கடமையல்ல!!!
Dear Friends, India Against corruption (IAC), chennai chapter cordially invites you for the prestigious one day bike ride "Ride for India" from Gandhi Statue, Marina beach to Mahabalipuram via ECR and return via OMR. Plan: One day mega bike ride (Goal 100 bikers + 100 pillons, First come first serve basis) from Gandhi statue to Mahabalipuram (160 km To and Fro), to spread awareness about Jan Lokpal Bill and setting up Lokayukta state wise to combat corruption. We are also going to conduct Street plays, Skits, enjoying the company of fellow bikers and of course cherish the moments doing our duty to our motherland by spreading awareness for this good cause. IAC T-shirt and CAP will be provided for all participants. Girls are also most welcome Saturday: May 21st Morning 6 am Venue: Gandhi statue, Marina Beach Must Carry - 1) Valid Driving License and Insurance (bikers) 2) Registered Bike with adequate documents (bikers) 3) Helmets - for the rider (must) 4) 2 ltrs water bottle 5) Food and Fuel on their own Contact details: Jothimanikandan V 09176657632 jothibusiness@g mail.com Chandru 09600041079 maverickcrew@gm ail.com Sureshkumar M 09843677487 thirusureshkuma r
Savukku sir, what is your view on the new Information Technology Act, 2000' brought in by the central Govt. Please refer the editorial in 'The Hindu' here... http://www.hindu.com/2011/05/17/stories/2011051756370800.htm
It is a complete violation of freedom for expression/speech and all netizens should come together and fight against this. Hope you start a awareness campaign on this piece...
Thanks - RabaSha
சவுக்குக்கு இன்னொரு ரிக்கொவெஸ்ட்....
நமது அன்பிற்குரிய சைதை துரைசாமி அவர்கள் கொளத்தூரில் தோற்றதற்காக கவலைபடவேண்டாம்.
அவரின் தோல்விக்கு பின்னே இதைவிட செய்யவேண்டிய மிகபெரிய பணி காத்திருப்பதாக கருத வேண்டும்.
என்னுடைய வேண்டுகோள்....
அவர் சென்னை மாநகருக்கு மேயராக, மரியாதைக்குரிய மேயராக...
சவுக்குவால் முன்மொழியபடவேண் டும் என்பதே...! அதற்கு முழு தகுதி உடையவர் அவர் என்பது எனது கருத்து.
Quoting khasn:
Quoting ANWAR:
மூன்றாம் வகை மக்களின் பின்னூட்டதை நீங்கள் கவனிக்க வேன்டும். இவர்கள் அ.தி.மு.க ஆட்சியிலும் தவறு நடக்கும் போது சுட்டி காட்டி அவர்கள் நல்லாட்சி வழங்க உதவ உங்கள் உதவியை நாடுபவர்கள். அவர்கள் உங்கள் நடு நிலமையை கண்டிப்பாக சந்தேகிக்கவில்ல ை என்றே எனக்கு தோன்றுகிறது. ஆக அத்தகைய பின்னூட்டங்களை நீங்கள் 'Positive' ஆக எடுத்துக்கொண்டு உங்கள் சவுக்கை தொடந்து சுழட்ட வேண்டுகிறோம்.
My take on this issue: Though I feel that a state's secretriate/assembly should be majestic (like Karnataka's Vishan Soudha) and should showcase the state's history and architecture... still when so much tax money has already been spent on this building... neglecting it altogether is criminal waste of money. Hope Jaya atleast makes effective use of these buildings instead of ignoring it altogether. Hope some common sense prevails in her in such matters.
Optimistically,
RabaSha
This new building is Eco-friendly and has been built solely for the purpose of secretariat. Fort can be used as museum or several other purpose. Just because this building was built in Karunanidhi period, Jayalalitha doesnt want to use it and its her EGO only.. you know it very well. why do you waste your time in writing up such article in support of "Thalaikanam piditha Jayalalitha " ?
இந்த அருங்காட்சியகம் - நம்முடைய வருடாந்திர தீவுத் திடல் சமாச்சாரமான 'சுற்றுலா வர்த்தகப் பொருட்காட்சி' போல செயல்படலாம்.
அதற்குப் பெயர் - "சுருட்டுலா வர்த்தகப் பொறுக்கியாட்சி" என்று கூட வைக்கலாம்தானே!
என்ன சொல்கிறீர்கள், சவுக்கு?
சர்க்காரியா கமிஷன் பின்புலம்
http://othisaivu.wordpress.com/2011/05/16/post-33/
கலைஞர் ஆட்சிக்குவந்தால ் அண்ணாசாலை புதிய தலைமை செயலகம் என மாறி மாறி செய்யும் கேவலம் எந்த மாநிலத்திலேயும் இல்லை ,
உருப்படியான திட்டங்கள் மக்களின் நலனைசார்ந்து வழங்கினால் போதும் ,
பதினெட்டு வயதை கடந்து முதன்முதலில் விரலில் மை பெற்று ,பெற்டவர்களின் வறுமையிலும் ,
சொந்த கட்சிக்காரன் collage யில் கூட கட்டணத்தை சிரமமாக கட்டிய கொடுமையை தனது ஓட்டில்
வைத்தான் ஆப்பு தி மு க உக்கு .( உறுப்பினர் கார்டு காட்டும் உறுப்பினர்களுக் கு எந்தசளுகைகளும் தராத எல்லா குருநிலமன்னர்கள ுக்கும் சங்கு )
கொள்கையுடன் வளர்த்தவர் கொள்ளைக்கு துணைபோன தால்தான் இந்தபுரட்சி.
ஜெயா பழயபடி இல்லாமல் சூழ்நிலையை புரிந்து நடந்துகொண்டால் மக்கள்சக்தி மறக்காது .
புதிய மாற்றம் விரும்பும் தமிழக மக்கள் சார்பாக வாழ்த்துக்கள் புதியரசுக்கு .
____ மெய்தேடி ....
RSS feed for comments to this post