முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
துவைக்காத சாக்ஸும், கருணாநிதியும். அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 286
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
திங்கட்கிழமை, 06 செப்டம்பர் 2010 05:30

இந்தத் தலைப்பு, பரபரப்புக்காகவோ, ஆர்வத்தை தூண்டுவதற்காகவோ வைக்கப் பட்டது அல்ல. துவைக்காத சாக்ஸ் எடுக்கும் நாற்றத்தை விட, மோசமான துர்நாற்றத்தை உருவாக்கக் கூடிய ஒரு சாக்ஸை கருணாநிதி விரும்பி அருகில் வைத்துக் கொண்டிருப்பது எப்படி என்பது குறித்துதான் இந்தப் பதிவு.

அந்த துவைக்காத சாக்ஸ் வேறு யாருமல்ல. சாக்ஸ் என்று அன்போடு அனைவராலும் அழைக்கப் படும், ஹன்ஸ்ராஜ் சக்சேனா தான் அந்த துவைக்காத சாக்ஸ்.




கடந்த வாரம், பரபரப்பாக வெளியான தாக்குதல் செய்திகளைப் பற்றி ஊடகங்களில் கண்டிருப்பீர்கள். இதன் பின்னணியும், இதற்குப் பிறகு நடந்த சம்பவங்களும், மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கக் கூடியதாக உள்ளன.




சன் டிவி. ஆக்டோபஸ் போல வளர்ந்து இன்று ஊடகத்துறையையே விழுங்க அலைந்து கொண்டிருக்கும் இந்த ஆக்டோபஸின் மிக முக்கியப் புள்ளி தான் இந்த ஹன்ஸ்ராஜ் சக்சேனா.

பூமாலை வீடியோ கேசட்டாக இருந்து சன் டிவியாக மாற்றம் பெரும் போது கேடி பிரதர்ஸ் சார்பில் போடப் பட்ட முதலீடு வெறும் இருபது லட்சம். ஆனால், அன்று தனது நண்பர்களுக்காக முதலீடு போட்டு, இந்த ஆக்டோபஸ் உருவாகக் காரணமாக இருந்த நபர் சரத் ரெட்டி. கேடி சகோதரர்களின் வகுப்புத் தோழர். சரத் ரெட்டி செய்த முதலீடு 80 லட்சம். 



இன்று தமிழ்நாட்டில் கருணாநிதியை விட மிகப் பெரிய தீய சக்தி யாரென்று பார்த்தீர்களென்றால், அது இந்த கேடி சகோதரர்கள் தான். இந்த கேடி சகோதரர்கள், அணு குண்டு வெடித்தால் ஏற்படும் கதிரியக்கத்தை விட மோசமானவர்கள். அணுக்கதிர் வீச்சு, எப்படி பரவிய இடத்திலேல்லாம் சர்வ நாசத்தை ஏற்படுத்துமோ, பல ஆண்டுகளுக்கு புல் பூண்டு முளைக்காமல் செய்யுமோ, அதைப் போல மிக மோசமான விளைவை ஏற்படுத்துபவர்கள் தான் இந்த கேடி சகோதரர்கள்.



கருணாநிதியே இந்த கேடி சகோதரர்களின் வலிமையைப் பார்த்துதான், அழகிரியின் அதிருப்தியையும் மீறி கண்கள் பனிக்கச் செய்தார். திராவிட முன்னேற்றக் கழகத்தால் வளர்ந்து, அந்த அரசியல் அதிகாரம் தந்த பலன்களையெல்லாம் அனுபவித்து, அதன் மூலம் அசுர வளர்ச்சி கண்டு முன்னேறிய பின்னர், குடும்பத்தில் பிணக்கு என்றதும் அதிமுக பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதாவின் பிறந்த நாளுக்கு, சலுகை விலையில் தினகரனில் விளம்பரம் போட்டவர்கள் இந்த கேடி சகோதரர்கள் தான். இதைக் கண்டுதான் கருணாநிதி பயந்தார். தன்னுடைய மகன்கள், இந்த அசுரர்களிடம் அரசியல் செய்ய முடியாது என்பதை உணர்ந்தும், தயாநிதி மாறன் பேரவை என்று துவக்கி, கட்சியை கபளீகரம் செய்ய இவர்கள் செய்த முயற்சியையும் அறிந்தே கருணாநிதி இவர்களோடு சமாதானமாக போனார்.

தனது மகன்களுக்கு ஆத்திரம் இருக்கும் அளவுக்கு அறிவில்லை என்பதை கருணாநிதி நன்கு உணர்ந்திருக்கிறார். இந்த கேடி சகோதரர்களின் ஆணவத்திற்கு ஒரு சம்பவத்தை பத்திரிக்கையாளர்கள் உதாரணமாக சொல்கிறார்கள்.

மதுரை தினகரன் அலுவலகத்தில் தாக்குதல் நடந்து கொண்டிருக்கும் போது, தயாநிதி மாறனுக்கு இந்தக் தகவல் போகிறது. அப்போது அவர் மத்திய அமைச்சர். தயாநிதி மாறன் உடனடியாக உள்துறைச் செயலாளர் மாலதியை தொடர்பு கொண்டு, என்ன நடக்கிறது மதுரையில், உடனடியாக நடவடிக்கை எடுக்கிறீர்களா, ஆட்சியை டிஸ்மிஸ் செய்ய வேண்டுமா என்று கேட்டுள்ளார். மாலதி, இதை அப்படியே டேப் செய்து, கருணாநிதியிடம் போட்டுக் காட்டியுள்ளார். இதன் பிறகே கருணாநிதி வெகுண்டெழுந்து, மாறன் சகோதரர்களுடனான உறவை முறித்துக் கொண்டார் என்று தகவல்கள் கூறுகின்றன. இப்படி ஒரு நம்பிக்கைக்கு பாத்திரமானவர் என்பதால் தான் மாலதி பலரை முந்திக் கொண்டு இன்று தலைமைச் செயலாளராக உட்கார்ந்திருக்கிறார்.

கலாநிதி மாறன் மற்றும் அவரது மனைவிக்கு ஆண்டுதோறும், சன் டிவி நிறுவனத்திலிருந்து வழங்கப் படும் ஊதியம் எவ்வளவு தெரியுமா ? தலா 100 கோடி ரூபாய். இந்த 100 கோடி ரூபாயும் வெள்ளைக் கணக்கில். கருப்புக் கணக்கில் எவ்வளவு இருக்கும் என்று நீங்களே கணக்குப் போட்டுக் கொள்ளுங்கள்.

இந்த கேடி சகோதரர்களை எதிர்க்க வலுவான நபர், அழகிரி என்றாலும் அழகிரிக்கு இந்த சகோதரர்களின் சாதுர்யம் இல்லாததால், இவர்களை எளிதாக வெற்றி கொள்ள முடியவில்லை.

80 லட்ச ரூபாய் முதலீடு செய்து, சன் ஆக்டோபஸின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த சரத் ரெட்டி, கேடி சகோதரர்களால் விரட்டியடிக்கப் படுகிறார். விரட்டியடிக்கப் பட்ட அவர், ஆந்திரா சென்று வேறு தொழிலில் ஈடுபட்டு வருகிறார். அந்தச் சூழலில் குடும்பம் பிரிந்து கலைஞர் டிவி என்ற ஒன்றைத் தொடங்க வேண்டும் என்று முடிவெடுக்கப் படுகிறது. முடிவெடுத்தவுடன், ஆற்காடு வீராச்சாமி ஆந்திரா சென்று, சரத் ரெட்டியைச் சந்தித்து, உடனடியாக கலைஞர் டிவிக்கு தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறார். அதன் படி சரத் ரெட்டி கலைஞர் டிவியின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொள்கிறார்.

சரத்ரெட்டி எதிரி முகாமுக்கு தலைமை ஏற்கிறார் என்றதும், கேடி சகோதரர்கள் மீண்டும் சரத் ரெட்டியை அணுகி சன் டிவிக்கு வேலைக்கு வருமாறு வெட்கமில்லாமல் கேட்கின்றனர். ஆனால் சரத் ரெட்டி மறுத்து விடுகிறார்.

டிசம்பர் 2008ல் பிரிந்த குடும்பம் மீண்டும் இணைகிறது. கருணாநிதி “இதயம் இனித்தது. கண்கள் பனித்தது“ என்கிறார். இது நடந்த மறு நாளே கேடி சகோதரர்கள், சரத் ரெட்டியின் நுங்கம்பாக்கம் வீட்டிற்கு செல்கின்றனர். குடி போதையில் எங்களையாடா எதிர்க்கிறாய் என்று சரத் ரெட்டியை பின்னி எடுக்கிறார்கள். சரத் ரெட்டியின் காலில் எலும்பு முறிவு ஏற்படுகிறது. கலாநிதி மாறன் ஒரு பக்கமும், காவேரி கலாநிதி மறு பக்கமும், சரத் ரெட்டியை கைத் தாங்கலாக அழைத்துச் சென்று, மருத்துவமனையில் சேர்க்கின்றனர்.

அன்று அந்த சம்பவம் ஊடகங்களில் வெளி வரவே செய்தன. எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதாவும் இது குறித்து அறிக்கை வெளியிட்டார். ஆனால், கருணாநிதி மவுனச் சாமியார் போல உட்கார்ந்திருந்தார். எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அன்று கருணாநிதி தனது பேரன்கள் என்று பார்க்காமல், நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருப்பாரே யானால், இன்று தனது பேரன்களின் அல்லக்கையான துவைக்காத சாக்ஸ் இப்படி ஒரு ஆட்டத்தை ஆடியிருக்குமா ?



அந்த ஞாயிறு அன்று இரவு என்ன நடந்தது. நீலாங்கரையில் ஒரு பண்ணை வீட்டில் கலாநிதி மாறன் ஒரு ரேவ் பார்ட்டி நடத்துகிறார். அந்த ரேவ் பார்ட்டியில், சன் டிவியின் சிஇஓ துவைக்காத சாக்ஸும், சன் நியூஸ் எடிட்டர் ஆர்எம்ஆரும் கலந்து கொள்கிறார்கள். பார்ட்டி முடிந்து வெளியே வரும் போது கார் மற்றொரு கார் மீது மோதி ஒரு சிறு விபத்து ஏற்படுகிறது. துவைக்காத சாக்ஸும், ஆர்எம் ரமேஷூம் “நிதானத்தில்“ இருந்ததால் அந்த மோதிய கார் உரிமையாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். 



அந்த வாக்குவாதம் கை கலப்பில் முடிகிறது. அந்தப் பெண்ணின் தம்பி சித்தார்த்தையும், அந்தப் பெண்ணையும் தாக்க முயல்கிறார்கள். இருவரும் தப்பி தங்கள் வீட்டுக்கு ஓடுகிறார்கள். அங்கே இருந்த அவர்கள் காரை அடித்து சேதப் படுத்தியதோடு அவர்கள் வீட்டுக்குச் சென்று காரையும் வீட்டையும் அடித்து சேதப் படுத்தி அந்தப் பெண்ணையும் தாக்குகிறார்கள். அவரின் தம்பி சித்தார்த் தலைமறைவாகிறார்.

இந்தத் தாக்குதலில் துவைக்காத சாக்ஸின் ஆத்திரம் அடங்காததால் அந்த சித்தார்த்தின் நண்பரும், ரோகிணி தியேட்டர் உரிமையாளரின் மகன் வினோஜ் செல்வம் நடத்தும் செக்கர்ஸ் ஓட்டலுக்கு ஏராளமான அடியாட்களை அழைத்துச் சென்று ஒரு பெரும் தாக்குதலை துவைக்காத சாக்ஸ் நடத்துகிறார்.



இந்தத் தகவல், இரவு ட்யூட்டியில் இருந்த மீடியா நிறுவனங்களுக்குத் தெரிந்து, அனைவரும் தாக்குதலை படம் பிடிக்கின்றனர். இது தவிரவும், அந்த ஓட்டலில் இருந்த சிசிடிவியில் இந்தத் தாக்குதல் முழுமையாக பதிவாகிறது. 

மறு நாள் ஜெயா டிவியில் இந்தச் செய்தி ஒளிபரப்பாகிறது. ஏறக்குறைய அனைத்து ஊடகங்களும் பெரியதாக செய்தி வெளியிடுகின்றன. 



இந்தச் செய்திகளை பார்த்ததும் வேறு வழியின்றி, கண்ணாயிரம் எஃப்ஐஆர் பதியச் சொல்லி உத்தரவிடுகிறார்.



துவைக்காத சாக்ஸ் முதல் எதிரியாக குறிப்பிடப் படுகிறார். இரண்டு வழக்குகள் பதியப் படுகின்றன.

ஆனால் வழக்கு பதியப் பட்டதும், துவைக்காத சாக்ஸ் எங்கிருக்கிறார் என்பது நன்றாகத் தெரிந்தும், கண்ணாயிரம் அவரைக் கைது செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்காமல், ஒரு சில ஆட்டோ டிரைவர்களை கைது செய்யச் சொல்லுகிறார். அதன் படி ஒரு பத்து ஆட்டோ டிரைவர்கள் கைது செய்யப் படுகிறார்கள்.

ஆனால் இதற்குப் பிறகு, இந்த துவைக்காத சாக்ஸ் ஜெயா டிவிக்கும் மற்ற ஊடகங்களையும் தொடர்பு கொண்டு, தன்னைப் பற்றிய செய்திகளை போட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறார். ஜெயா டிவி தரப்பிலும், நம் தினமதி தரப்பிலும், இது மறுக்கப் படுகிறது. 

தமிழ் மக்களின் நாடித் துடிப்பு என்று சொல்லிக் கொள்ளும் வாரமிருமுறை இதழ், துவைக்காத சாக்ஸ் விஷயத்தில் தனது துடிப்பை நிறுத்திக் கொள்கிறது. மீறி துடித்தால், விகடன் டாக்கீஸின் தொலைக்காட்சித் தொடர்களுக்கும், அந்நிறுவனம் தயாரிக்கும் திரைப்படங்களுக்கும் ஆபத்து என்பதால் அதைப் பற்றி மூச்ச விடவில்லை.



துவைக்காத சாக்ஸ் இந்தியாவில் இருந்தால் ஒரு வேளை கைது செய்யப் படுவோமோ என்று அஞ்சி, வெளி நாட்டுக்கு கிளம்புகிறார். இவர் கிளம்புவது பத்திரிக்கையாளர்கள் அனைவருக்கும் தெரியும் போது கண்ணாயிரத்திற்கு தெரியாதா ? ஆனால் கண்ணாயிரம் நிம்மதியாக கண்ணயர்ந்திருக்கிறார்.




துவைக்காத சாக்ஸ் வெளி நாட்டிற்கு கிளம்பிச் சென்று விட்டது. ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தும்மியதற்குக் கூட வளைத்து வளைத்து கைது செய்த கருணாநிதியின் காவல்துறை, செம்மொழி மாநாட்டுக்கு எதிராக சுவரொட்டி ஒட்டியதற்காக பலரை தேசத் துரோக வழக்கில் கைது செய்த காவல்துறை, கருப்புக் கொடி காட்டியதற்காக கடுமையாக தாக்கிய காவல்துறை, ஒரு ஓட்டலை அடித்து நொறுக்கி, ஒரு பெண்ணை மானபங்கப் படுத்திய ஒருவர், வெளிநாட்டிற்கு தப்பிச் செல்வதை வேடிக்கை பார்த்தபடி அமைதியாக இருக்கிறது.

அன்று கேடி சகோதரர்கள் சரத் ரெட்டியை அடித்து காலை முறித்த போது அவர்கள் மீது நடவடிக்கை எடுத்திருந்தால் இன்று கேடி சகோதரர்களின் அல்லக் கைக்கு இந்தத் தைரியம் வந்திருக்குமா ?



கேடி சகோதரர்களின் அல்லக்கை மீதே நடவடிக்கை எடுக்க கருணாநிதிக்கு துணிவில்லை என்றால், கேடி சகோதரர்கள் செய்யும் அத்தனை காரியங்களையும் வேடிக்கை பார்த்துக் கொண்டுதானே இருப்பார் ?

இந்த துவைக்காத சாக்ஸ் எழுப்பும் துர்நாற்றத்தை கருணாநிதி சகித்துக் கொண்டு அதற்கு ஆதரவு கொடுத்துக் கொண்டு இருக்கிறார் என்றால், இந்த துர்நாற்றத்தில் கருணாநிதிக்கு மிகுந்த உடன்பாடு என்று தானே பொருள் கொள்ள முடியும் ?


ஒரு நபர் ரவுடிகளை கூட்டிச் சென்று ஒரு நட்சத்திர விடுதியை அடித்து நொறுக்கி விட்டு, பத்திரமாக அவர் பெயரில் எஃஐஆர் நிலுவையில் இருக்கும் போது வெளி நாட்டுக்கு தப்பிச் செல்ல முடிகிறதென்றால், கருணாநிதி ஆட்சியில் உங்களுக்கும் எனக்கும் என்ன பாதுகாப்பு என்ற யோசித்துப் பாருங்கள்.

கருணாநிதிக்கு இதையெல்லாம் விட, குஷ்பூவின் புருஷன் எப்போது திமுகவில் சேர்ந்து திராவிட இயக்கத்தை வளர்ப்பார் என்று ஆர்வமும் கவனமும் இருக்கும் போது, இதைப் பற்றியெல்லாம் சிந்திக்க அவருக்கு நேரம் இருக்கிறதா என்ன ?

 

Comments  

 
0 #93 Maddy 2013-04-26 13:17
இந்த நசமபொனவங சூடு தல்லனும் ட்ம்க் புரகனிபொம் டமில் நாடை விட்டு விரடுவொம் ம்ம்ம்ம்ம்ம்ம்ம ்ம்ம்ம்ம்
Quote
 
 
0 #92 vsankar 2012-12-16 11:21
sambavaami yuge yuge,one still believes this.May be in the form of neel,sunami etc.
Quote
 
 
0 #91 RAJESHRAMU 2012-10-03 16:12
முற்பகல் செயின் பிற்பகல் விளையும் என்பது போல் ஆடிய ஆட்டத்துக்கெல்ல ாம் சேர்த்து வைத்து வாங்கு வாங்கு என்று வாங்கி விட்டார்களே ,நீதிமன்றத்தில் இவரும்,ஐயப்பனும ் சேர்ந்து எங்களை காவல்துறை அடிகிறார்கள் என்று வேட்டியை அவுத்து காட்டியவர்கள் தான் இவர்கள் ,இருந்தும் இப்பொழுது இவர்கள் இருவரும் ஜெயா தொலைக்காட்சி நிர்வாகியுடன் நெருக்கமாக இருபதாக தகவல் வெளியாகி உள்ளது
Quote
 
 
0 #90 thanga durai 2012-09-05 11:59
மிக மொசமான செயல் இது! ஜீரனிக்கமுடியவி ல்லை... இந்த மாதிரி மாபாவீஙகல செருப்பால அடிச்சி சுட்டு தல்லனும்... நல்ல வெலை ஆட்சி மாரினது ரொம்ப நல்லதா பொச்சு... ஜெ. தயவு செய்து இவனுங்கல சும்மா விடதீங்க![/ஃஉஒடெ]
:ஏக்: me too......
Quote
 
 
-1 #89 veeramuthu 2012-05-22 18:49
இவர்கள் அனைவருமே கூட்டுக் களவானிகள் தானே.
Quote
 
 
-3 #88 mahendaran 2012-02-20 21:30
நல்ல கட்டுரை நம் பனி என்ன என்ட்ரு நாம் முடிவு செஇயவென்டும்
8)
Quote
 
 
0 #87 Nellai Lawyer 2012-02-01 15:48
There is some relationship between J and KD. Thats why she has spared them .hell with tamil politics.....
Quote
 
 
+6 #86 Kannan.R 2011-11-15 08:09
எல்லா ஆட்சியிலும்தான் இதுபோல் ரவுடித்தனம் நடக்குது. கார்டனில் ஆடிட்டர் எப்படி வாங்கினார். அப்போ என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன?- மத்திய தேர்தலாணையம் போன்றவகையில் காவல்துறை தன்னாட்சி அமைப்பாக மாற, தகுந்த சட்ட வரையரைகள் உருவாக்கப்படவேண ்டும். அத்தகைய சூழலே நம் நாட்டுக்கு நல்லது. உரியவர்கள் செய்வார்களா?
Quote
 
 
0 #85 Savukkuku savukku 2011-11-02 13:44
இந்த கட்டுரை பார்ப்பதர்க்கு அ தி மு க சாயல் தெரிகிரது.
Quote
 
 
+16 #84 இராப்பிச்சை ராமதாசு 2011-09-19 17:11
இத்துப்போன சாக்ஸும் அல்லக்கை அய்யப்பனும் அடிவாங்கி அழுதுகொண்டு நடக்கமுடியாமல் நீதிமன்றத்திற்க ு வந்தபோது இந்த கட்டுரைதான் கண்முன்னே வந்தது. ஆடிய ஆட்டமென்ன, அடிபட்டபின் அழுது புழம்பும் அழகென்ன சாக்ஸு சாக்ஸ்தான். இதுக்குத்தான் ஓடமும் ஒரு நாள் வண்டியில் ஏறும் வண்டியும் ஒரு நாள் ஓடத்தில் ஏறுமுன்னு பெரியவங்க சொன்னாங்களோ? மஞ்சதுண்டுக்கிட ்ட பப்பு வேகும், ஆனால் பச்ச்யம்மாவிடம் பாச்சா பலிக்காது!
Quote
 
 
+6 #83 muthukumaran p 2011-09-06 18:11
please save me from octopus family
Quote
 
 
+3 #82 Sathiyaseelan 2011-08-18 15:32
junior vigadan sariyana selfish pasanga
Quote
 
 
+17 #81 diva 2011-07-27 10:08
எல்லாவிதமான குற்றங்களையும் செய்யதுவிட்டது தி,மு,க இனி செய்வதற்கு மீதம் ஒன்றுமில்லை!நாம ் செய்வதற்க்கு நிறைய இருக்கிறது,அதில ் முக்கியதொன்று தி.மு.கவை ஒழிப்பது.
Quote
 
 
+6 #80 vino 2011-07-25 23:24
[ஃஉஒடெ நமெ="ஸ்நெத"]மிக மொசமான செயல் இது! ஜீரனிக்கமுடியவி ல்லை... இந்த மாதிரி மாபாவீஙகல செருப்பால அடிச்சி சுட்டு தல்லனும்... நல்ல வெலை ஆட்சி மாரினது ரொம்ப நல்லதா பொச்சு... ஜெ. தயவு செய்து இவனுங்கல சும்மா விடதீங்க![/ஃஉஒடெ]
:ஏக்: me too......
Quote
 
 
+18 #79 Swetha 2011-07-23 11:26
மிக மொசமான செயல் இது! ஜீரனிக்கமுடியவி ல்லை... இந்த மாதிரி மாபாவீஙகல செருப்பால அடிச்சி சுட்டு தல்லனும்... நல்ல வெலை ஆட்சி மாரினது ரொம்ப நல்லதா பொச்சு... ஜெ. தயவு செய்து இவனுங்கல சும்மா விடதீங்க!
Quote
 
 
+4 #78 ANNACHI PILLAI 2011-07-17 23:43
THI MU KA YENTRAKATCHI TAMILNATILERUNT HU A
AGATRAPATAVENDU M
Quote
 
 
+7 #77 SenthilKumar_Chennai 2011-07-13 15:31
அயோக்கியர்கள் ஒழிய வேண்டும்... அவ்ர்களின் மொத்த சொத்துக்களும் பறிமுதல் செய்ய வேண்டும்...
Quote
 
 
+11 #76 jayaramc 2011-07-07 11:52
ஜுனிய்ர் விகடன் , ரொம்ப மொசம்

இனிமெல் பெசரெஃபுல இருன்க....
Quote
 
 
+10 #75 geon 2011-07-04 13:30
சரியான சவுக்கடி. முக, மற்றும் தயாநிதி மாறனின் அதிகார போதையால் சன் குழுமம் ஆடிய ஆட்டத்தை ஆட்டம் காண வைக்க இது போன்ற ஆப்புகளை வரவேற்கிறோம்.
Quote
 
 
+11 #74 BabuVinoth 2011-07-03 20:08
மாட்டிகிட்டார் மன்னாரு
Quote
 
 
+1 #73 sundar 2011-06-28 20:50
JUVI IS NOT A RELIABLE MAGAZINE AND WHICH SHOULD BE REJECTED BY EVERYBODY
Quote
 
 
+6 #72 sundar 2011-06-28 20:12
நம்பிக்கை துரோகி ஜுவிய புரக்கனிக்கலாம்
Quote
 
 
+7 #71 RajaMurugan. K 2011-06-28 13:04
This is only the tip of the iceberg. This Sax fellow has committed more serious crimes in and around the city. He is famous for doing "Katta Panchayattu" and making money. Also he is front for the KD brothers. He is their ":adiyaal" and controls many rowdies in the city for all the KD brothers' rowdyisms. He and many Sun TV employees has also managed to become member in many big social clubs in Chennai. He and his friends later occupy important posts in these clubs by cheating in club elections with the help of rowdies. He misuses and swindles money from all the clubs. He even manged to become directorr of Tirupati TTD board and misused his power there also.













for rowdyis
Quote
 
 
0 #70 nallavan 2011-06-24 10:16
Good work editor... nothing can be done mr.editor.... we all love tamil... but no one is ready to fight for it... a revolution should happen... this politics should be replaced with something else.
Quote
 
 
+2 #69 EZHUMALAI 2011-06-15 09:59
க்லைக்னர் கருனானிதி கூடா நட்ட்பு கெடாயி முடியும் என்ட்ரு சொன்னது தனது மகல் கனிமொழி ஆ ராசா வுடன் கொகன்ட நட்பை
தான் அப்ப்டி கூரிக்யிருக்கிர ார் என்ட்ரு நான்நநினாஇக்கிர ென்.
எழுமலை
அம்பாசமுதிரம்
Quote
 
 
+9 #68 Eniyaval 2011-06-09 12:40
மக்களாக விழித்துக்கொண்ட ால் மட்டுமே நம் நாட்டை காப்பாற்ற முடியும்...
Quote
 
 
+3 #67 Eniyaval 2011-06-09 12:35
காலம் மாறும் கூடவே காட்சியும் மாறும்...
Quote
 
 
+1 #66 Farid 2011-06-08 16:23
thamilagathaiyo or kalaingarai patriyo pesa srilankanukku arukathai kidaiyathu. because neengal pilaika vanthavarkal. ok
dont talk anybody to india or tamilnadu.
Quote
 
 
+8 #65 desian 2011-06-02 15:32
வாழ தகுதி இல்லாதவர் தகுதி இல்லாமல் வாழ்ந்தவர்
Quote
 
 
+1 #64 Thushtan 2011-05-28 18:53
Quoting SATHYA:
I was expecting this news in the Junior vikadan for the past 2 issues, because i beleived their NADUNILAMAI. I never expected JOOVEE will behave and cheat their readers like this. I never missed to buy abr read this JOOVEE from 1st issue till today. this is the biggest NAMVIKKAI THUROGAM.

ஜூவி ஒன்னாம் நம்பர் அயோக்கியனுங்க. எவ்வளவு காசை கேடி கிட்ட வாங்கியிருந்தா, சும்மா இருப்பானுங்க. தே.பை.யனுங்க.
Quote
 
 
-16 #63 Thushtan 2011-05-28 18:51
[ஃஉஒடெ நமெ="தினகரன்"]அய்ய சவுக்கு எடிடொர் அவர்கலெ நேஙல் அம்மவிடம் வாஙிய காசுக்கு மெல் கோவுகிரேர்கல் ..மக்கல் ஒன்னும் முட்டல்கல் அல்ல நேஙல் சொல்லும் அனைதும் நம்புவத்ர்க்கு..
ஒரு கன்னடகாரிக்கு ஜால்ர பொட உஙலுக்கு வெட்கம இல்லைய .......ட்ம்க் இச் 100% பெட்டெர் தென் அட்ம்க் .
சரி ஒரு பெசுக்கு சொல்ல்ரென் இதெ ஜெய ஆட்சிய்ல இருந்து நேங அம்மவ பாதி இதுபொல நெந்ச் பொட்டுரிந்த இன்னெரம் அட்ம்க் குன்டர்கல் உன்கல வேடு புகுந்து கொலுதி இருப்பங ஆன கலைனர் அமிதியக இருக்கிரர், "பொருதார் போமி ஆல்நார் பொஙினர் கொடனடு ஆல்நார்"
ஒரெ வரியில் சொல்ல வென்டும் என்ட்ரல் "கலைனர் கொடி மக்கலை வாழவைக்க 100 பெரை ஆலிப்பர், ஆனல் அம்ம 100 பெர சொகுசக வாழ கொடி மக்கலை அலிப்பர்.
இது சடியம்[/ஃஉஒடெ]
டேய் டுபுக்கு....
தினகரன், சன் டீவி போன்ற நீங்க எல்லாம் கடைஞ்சி எடுத்த அயோக்கியனுங்கடா . எப்படி எல்லாம் மக்கள முட்டாளாக்கலாம் னு ரூம் போட்டு யோசிக்கிரவனுங்க டா. உனக்கு கருணாநிதி வேனா இளிச்சவாயனா தெரியலாம். எல்லாரும் இல்லடா. கருணாநிதியின் காலை சுற்றிய பாம்புடா நீ. எட்டப்பன்டா நீ. நீ(கேடி) அவரை கடிக்காம விட மாட்ட.
Quote
 
 
-9 #62 Thushtan 2011-05-28 18:46
[ஃஉஒடெ நமெ="பச்சை ரவுடி"]திச் சிடெ இச் ருன் ப்ய் டெவர் சச்டெ பெஒப்லெ. நெ அல்ல் க்னொந் தட் தெய் அரெ க்னொந்ன் ஃபொர் ரொந்ட்யிச்ம்.

ஸவுக்கு நே கெடு கெட்ட டுபுக்கு.[/ஃஉஒடெ]
எந்த ஜாதியாக இருந்தால் என்ன. சன் குரூப் அநியாய தப்பு பன்றாங்க. அதை தட்டி கேட்டா உங்களுக்கு என்ன?
Quote
 
 
-4 #61 Thushtan 2011-05-28 18:43
கரெக்டாக் சொன்னீங்க. நீங்க சொல்வது அனைத்தும் உண்மை.

இந்த கேடிக்களிடம் இருந்து எப்படி கருணாநிதி தப்புவது? அறிவுரை தேவை.
Quote
 
 
+11 #60 ஊமை 2011-05-24 22:52
செருப்படி அடித்தாய் சவுக்கு. ஆனால் அவர்கள் தான் மானம்கெட்டவர்கள ் ஆயிற்றே.!!
Quote
 
 
0 #59 rajani 2011-05-21 21:16
all are based on assumption or real
why these things are not reach the people.
Quote
 
 
+1 #58 BG 2011-05-20 22:34
Is there Any Possibility to Completely destroy this ely KD group,do they have any part or role played in Scams, Savukku can dig it!!
Quote
 
 
0 #57 Madhavan 2011-05-20 13:33
ALL CABLE TV MUST BE FULLY TAKE CARE IS GOVERNMENT. NO MORE PRIVATE (LIKE DASMARK) AMMA NO NEED WAIT SHOULD BE TAKEN NECESSARY ACTION. BECAUSE KARUNANITHI IS A FAMILY POLITICAL MAN HE IS NOT CABABILITY DO THIS - HE ALWAYS THINK HOWMUCH MONEY PACKUP HIS FAMILY. BUT ALSO PEOPLE JUDGEMENT IS GOOD.
Quote
 
 
+1 #56 sailu 2011-05-17 10:50
this is 100% true allathe best
Quote
 
 
+1 #55 gvass 2011-05-10 06:24
thangal pani nandru. karunanidhi kudumbam kedu ketta kudumbam. tamilnattai adimayakka thudikkum ivargalukku indha savukkadi thodarnthu makkal vilippadaya enathu adaravum valthum samarpikkiren.
Quote
 
 
0 #54 Ramesh-A 2011-05-05 06:18
You are doing GOOD JOB..... Continue... We always behind of you.
Quote
 
 
+2 #53 yeman 2011-04-12 18:36
ORU NALL ULAGAM VALVU PERUM?
Quote
 
 
+1 #52 premarajaram 2011-04-04 19:14
our support is hallways for you you are doing good job try to publish in Tamil news paper also.... WISH YOU ALL THE BEST !
Quote
 
 
+1 #51 Ram1 2011-03-06 23:03
Well done.

KD & MK family need to pay to People of Tamilnadu.. Its coming and help is on the way...

Ram
Quote
 
 
+3 #50 ajibo 2011-02-23 19:31
i really appreciate savukku and hats of it.thank u...pls continue ur work
Quote
 
 
+1 #49 Prem Kumar 2011-02-11 18:21
Thamzhi enru naditthu oorai yematruvathai vittu vittu manithanaaga mara muyarchipannugg al
Quote
 
 
+2 #48 naina adirai 2011-01-31 14:17
Sir,This is atrocious and very thank you....
Quote
 
 
+3 #47 vignesh 2011-01-26 12:08
intha nai ka intha muraium kasu koduthu vote vankirunvanukal e, intha pichakkara pasanga kalum kasa vankittu votu poturuvanuga ......
Quote
 
 
+3 #46 sundaram 2011-01-25 21:29
our people are educated fools. they are fit for watching TV that too some cine related shows only. they can't think. they will vote for the corrupt and suffer all the five years. let them suffer still. even god can't save tamil nadu because it is full of fools.
Quote
 
 
+2 #45 suji 2011-01-18 16:09
Fine Article
Quote
 
 
+4 #44 ABDUL NAZIR 2011-01-06 18:45
Very good we have to eliminate DMK from Tamilnadu
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 30 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday1262
mod_vvisit_counterYesterday11260
mod_vvisit_counterThis week33721
mod_vvisit_counterLast week80132
mod_vvisit_counterThis month236453
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12758572