முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
சிறை எப்படி இருக்கும் ? அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 33
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
ஞாயிற்றுக்கிழமை, 22 மே 2011 13:39

 

கருணாநிதி அரசு சிறைக் கைதிகளுக்கு ஞாயிறு தோறும் கோழிக்கறி உணவு என்ற அறிவிப்பை வெளியிட்ட போது, பல்வேறு ஊடகங்களிலும், படித்த நடுத்தர வர்க்கம் மத்தியிலும், ‘சிறைக்கைதிகளுக்கு இப்படி சிக்கனெல்லாம் போட்டா அவன் எப்படி திருந்துவான்’ என்ற பேச்சு எழுந்தது. ‘சிறையில ஃபேனெல்லாம் கொடுத்துட்டாங்களாமே…. இப்படி வசதியா ஜெயில்ல இருந்தா எவன் தப்பு செய்ய பயப்படுவான்’ என்றும் பேச்சு எழுந்தது.  விலங்குகளுக்கெல்லாம் நேயம் காட்டும் நாம், கைதிகளையும் மனிதர்களாக பார்க்க வேண்டும்.

tihar-jail

சவுக்கின் சிறை அனுபவங்களிலில் இருந்தே தொடங்கலாம்.   18 ஜுலை 2008, சவுக்கு சிறையில் அடைக்கப் பட்ட நாள்.   நீதிமன்ற நடுவர், சவுக்கை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டவுடன் புழல் சிறைக்கு சவுக்கு அழைத்துச் செல்லப் பட்டது.

 

சிறை என்பது ஒரு தனி உலகம். அந்த உலகத்தில் கைதிகள் தான் ராஜாக்கள்.   அங்கே ஆண்டிமுத்து ராஜாவாக இருந்தாலும், மற்ற கைதிகளை அட்ஜஸ்ட் செய்து தான் வாழ வேண்டும். அட்ஜஸ்ட் செய்து கொள்ளாத கைதிகளின் வாழ்வை நரகமாக்கி விடுவார்கள்.

 

நீங்கள் ஒரு தீவில் தனியாக விடப்படுகிறீர்கள்.   அங்கே வெளியுலகத் தொடர்பே கிடையாது.   அந்தத் தீவில், உங்களுக்குப் அறவே பிடிக்காத, பக்கத்து வீட்டுக்காரரைப் பார்க்கிறீர்கள்.   ஒரு மாதத்துக்கு மேல் அந்தத் தீவில் இருக்க வேண்டிய கட்டாயம் இருந்தால், அந்தப் பிடிக்காத பக்கத்து வீட்டுக்காரரோடு பேசிப் பழகுவீர்களா இல்லையா ? அது போலத் தான் சிறையும். வெளியில் நாம் தினத்தந்தியில் படிக்கும், கோரமான ஆயுதங்களுடன் கைது செய்யப் படும் கொலைகாரர்களும் மனிதர்களே. ஒவ்வொருவருக்கும் கொலை செய்ய வெவ்வேறு சூழ்நிலைகள். ஆனால் அடிப்படையில் அத்தனை பேரும் மனிதர்கள் என்ற பார்வையோடு அவர்களை அணுக வேண்டும். அவ்வளவே.

 

சவுக்கு சிறை சென்றது, முதல் முறை என்பதால், புதிய இடமும், சவுக்கோடு வரிசையில் இருந்த கைதிகளையும் பார்த்ததும் பதட்டமும், அச்சமும் ஏற்பட்டது. ஒவ்வொருவரும், ஒவ்வொரு மாதிரி இருந்தார்கள். அனைவர் கையிலும், ப்ரெட் பாக்கெட், பேஸ்ட், ப்ரஷ் ஆகியவை தவறாமல் இருந்தன. முதல் நாள் சிறைக்கு வருபவர்களுக்கு, மாலை 4 மணி அளவில் உள்ளபடி, உணவு தயார் செய்யப் பட்டு விடும் என்பதால், அன்றைக்கு புதிய கைதிகளுக்கு உணவு இருக்காது.

 

முதலில் ஒவ்வொரு கைதிக்கும் தொகுதி ஒதுக்கப் படாது. அனைத்துக் கைதிகளும் பிணை நீக்கும் பிரிவு என்று அழைக்கப் படும் ஒரு பிரிவில் அடைக்கப் படுவார்கள்.   அந்தப் பிணி நீக்கும் பிரிவில் இருந்து, மறு நாள் மாலை கைதிகளின் குற்றத்திற்கேற்ப மாற்றப் படுவார்கள். உயிருக்கு ஆபத்து உள்ள கைதிகளை, உயர் பாதுகாப்புப் பிரிவில் அடைப்பார்கள்.

 

சவுக்கையும் அப்படித்தான் உயர்பாதுகாப்புப் பிரிவில் அடைத்தார்கள். மாலை 6 மணிக்கு கதவை அடைத்தால், மறு நாள் காலை 6 மணிக்குத் தான் திறப்பு. மாலை உணவை 6 மணிக்கு முன்பாகவே வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

 

அந்தப் பிணி நீக்கும் பிரிவில், பல்வேறு தரப்பான கைதிகளைப் பார்க்கலாம். முதல் முறை சிறைக்கு வந்தவர்கள் பலரைப் பார்க்கலாம்.   அடிதடி வழக்கு, திருட்டு, கூலிக்கு கொலை செய்வது போன்ற வழக்கில் உள்ளே வந்தவர்களுக்கு, சிறை ஒரு பிரச்சினையே இல்லை. அவர்கள் தங்களின் வாழ்வில் பெரும்பாலான நாட்களை சிறையில் தான் கழிக்கிறார்கள் என்பதால், கவலையே பட மாட்டார்கள். ஆனால், வரதட்சிணைக் கொடுமை, ஈவ் டீசிங், போன்ற வழக்குகளில் உள்ளே வருபவர்கள், முதல் நாள் தொடங்கி மூன்று நாட்களுக்கு அழுத படி இருப்பார்கள்.

prison-art

சிறை என்பதை உணர வைப்பதே உணவு தான். உணவைப் பார்த்தவுடன், மீண்டும் அழுகை வரும்.   கேரளாவில் பயன்படுத்துவது போன்ற குண்டு அரிசி. அதுவும் நன்கு குழைத்து வடிக்கப் பட்டிருக்கும்.   குழைந்த சாதத்தை டிபன் பாக்சில் போட்டு, கவிழ்த்து பெரிய ட்ரேக்களில் வைத்து ஒவ்வொரு ப்ளாக்காக தள்ளிக் கொண்டு வருவார்கள்.   வரிசையில் நின்று வாங்க வேண்டும்.   குழம்பு என்ற பெயரில் ஒரு திரவத்தை கொடுப்பார்கள். சாதாரணமாக நமது வீட்டில் சாம்பார் வைக்க 3 டம்ளர் தண்ணீர் ஊற்றுவோம். 3 க்கு பதிலாக 10 டம்ளர் ஊற்றினால் சாம்பார் எப்படி இருக்கும்… அதுதான் சிறை சாம்பார். பருப்பு மிக மிக மட்ட ரகமான பருப்பாக இருக்கும்.   அதனால் சாம்பார் கருப்பு நிறத்தில் இருக்கும். உணவை சிறை பாஷையில் ‘படி’ என்று சொல்லுவார்கள். தினப்படி என்ற பொருள் போன்று.

 

சிறையில் பீடிதான் கரன்சி.     பீடி இருப்பவர்கள் சிறையையே வாங்கலாம் என்று சொல்லுவார்கள். பீடிக்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்.   பீடி இல்லையென்றால் சிறையை நடத்த முடியாது. ஒரு முறை திடீரென்று சிறை நிர்வாகம் பயங்கர கெடுபிடியாக இருந்த போது, பீடி வரத்து குறைந்தது.   அப்போது சிறைக்குள் ஒரு கட்டு பீடி 200 ரூபாய் என்றால் நம்புவீர்களா ?   பீடி இல்லை என்றால் தட்டைக் கவிழ்த்து விடுவார்கள். ‘தட்டைக் கவிழ்ப்பது’ என்றால், சிறை வழக்கு மொழியில் உண்ணாவிரதம் என்று அர்த்தம்.   உண்ணாவிரதம் என்பது சிறையைப் பொறுத்தவரை மிக மிக தீவிரமான போராட்டம்.   உண்ணாவிரதம் என்றால், சிறை நிர்வாகம் நடுங்கும்.

pr1608081a

16.08.2008 அன்று சிறைத் துறை தலைவராக இருந்த நட்ராஜிடம்,  சிறைக் கைதிகளுக்கான இசிஜி கருவியை வழங்கும் கனிமொழி...

என்னே காலத்தின் கொடுமை ?

 

வெளி உலகைப் போலவே சிறைக் கைதிகள் மத்தியிலும் அரசியல், வதந்தி, கிசு கிசு, எல்லாம் உண்டு.   புதிதாக ஒரு கைதி சிறைக்கு வந்ததும் கேட்கும் முதல் கேள்வி “என்னா கேசு” என்பதுதான்.   ஒவ்வொருவருக்கும் பதில் சொல்ல வேண்டும். சவுக்கு உள்ளே சென்ற போது என்ன கேசு என்று கேட்டதற்கு, “தொலைபேசி ஒட்டுக் கேட்பு” என்று சொன்னதற்கு, “பாத்தா பட்ச்சவன் மாதிரி இருக்க ? நீ ஏன் சார் அட்த்தவன் போன ஒட்டுக் கேக்குற ?” என்று கேட்டார்கள் (ஜாபர் சேட் கவனிக்க) அவர்களிடம் என்னவென்று விளக்கிச் சொல்வது ?

இரண்டாம் நாள் சவுக்கை முக்கிய கைதிகளை வைக்கும் உயர் பாதுகாப்புப் பிரிவில் உள்ள ஒரு அறையில் அடைத்தார்கள். அந்த செல் உள்ளே சவுக்கு சென்ற போது, பயம் ஏற்படுத்தும் தோற்றம் கொண்ட இருவர் உள்ளே இருந்தார்கள். சவுக்குக்கும் உள்ளுர நடுக்கம் தான்.   முதல் நாள் அல்லவா ?   முதலில் பயம் வந்தாலும், பிறகு, பாத்துக்கலாம், என்ன செய்து விடுவார்கள் என்ற துணிச்சலோடு அமர்ந்ததும், ‘என்னா சார் கேசு….’ என்று முடி நீளமாக வைத்திருந்தவர் கேட்டார்.   “தொலைபேசி ஒட்டுக் கேட்பு” என்றதும், ”அதுக்குல்லாமா அரெஸ்ட் பண்ணுவாங்க ?” என்று தனது வியப்பைத் தெரிவித்தார். பிறகு மற்ற விபரங்களை கேட்டறிந்தவர், ”இன்னா சார், இவ்ளா பெரிய போஸ்ட்ல இருந்துட்டு, இப்டி மாட்டிக்கிட்டீங்களே சார்” என்றார். ”நீங்கள் என்ன கேஸ்” என்று கேட்டதும், ”நான் கருப்புக் குல்லா சார் (அடிக்கடி சிறைக்கு வருபவர்) ரெண்டு மாசம் வெளில இருப்பேன், அப்பொறம் புட்ச்சு உள்ள போட்ருவாங்க… நான் வூடு பூந்து திருடுவேன் சார்” என்றார் சாதாரணமாக. ”ஏன் இப்படி செய்கிறீர்கள்” என்று கேட்டதற்கு ”நம்ப லைப் இப்டி ஆய்டுச்சு சார். இன்னா பண்றது” மற்றவரைப் பற்றிக் கேட்டதும், அவரும் கருப்பு குல்லா என்றார். நீங்கள் என்ன செய்வீர்கள் என்றதற்கு, தனியாக வருபவர்களிடம் கத்தியைக் காட்டி பணம் பறிப்பது, செயின் அறுப்பது போன்ற அனைத்தும் செய்வேன் என்றார். அவன் அம்பத்தூர் பகுதியில் இருந்த ஐஸ் என்ற பெயருடைய ரவுடி. அவன் தாய் அரசுப் பள்ளியில் ஆசிரியை, தந்தை பஞ்சாயத்து அலுவலகத்தில் கிளர்க். அவர்கள் அதற்குப் பிறகு, 3 நாட்கள் சவுக்கோடு இருந்தார்கள். அந்த 3 நாட்களில் ஒரு முறை கூட, அந்த அறையை பெருக்க அனுமதிக்க வில்லை. பரவாயில்லை நான் பெருக்குகிறேன் என்றால், ”நீ கம்னு குந்து சார். பட்ச்சவன், ஏதோ கெட்ட நேரம்.   வந்துட்ட.. இத்தையெல்லாம் நாங்க பண்ணிக்குறோம் சார்” என்று ஒரு வேலையும் செய்ய விட வில்லை.   அவர்களின் பாசம், மிகுந்த ஆச்சர்யத்தை அளித்தது. இவர்களை எப்படி தவறாக நினைத்து விட்டோமே என்ற குற்ற உணர்வு ஏற்பட்டது.

womens-prison

அதற்குப் பிறகு சவுக்கு இருந்த அறைக்கு பல்வேறு நபர்கள் வந்து போனார்கள். கிண்டி ரயில் நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாக எஸ்எம்எஸ் அனுப்பிய ஒருவர், நுங்கம்பாக்கம் மகளிர் கிறித்துவக் கல்லூரி பெண்கள் ஹாஸ்டல் பாத்ரூமில் எட்டிப் பார்த்த போலீஸ் காரர், கஞ்சா கடத்திய போலீஸ் இன்ஸ்பெக்டர், மோசடியில் ஈடுபட்ட இன்ஸ்பெக்டர் என்று வந்து சென்றவர்கள் பலர்.

 

பெரிய ரவுடிகள் என்று ஊரே அஞ்சும் ரவுடிகள், பழகுவதற்கு எவ்வளவு இனிமையாக இருக்கிறார்கள் தெரியுமா ?   அவர்கள் இன்றும் சவுக்கோடு தொடர்பில் இருக்கிறார்கள்.   அதில் ஒரு பெரிய ரவுடி சிறையில் இருக்கும் போது, ”சார் என்னை என்கவுண்டர் செய்வார்கள். என்கவுண்டரிலிருந்து காப்பாற்றுங்கள்” என்று சொன்னார்.   உங்கள் உயிருக்கு நான் உத்தரவாதம்.   வெளியே வந்ததும் என்னைச் சந்தியுங்கள் என்று சொன்ன படி, 6 மாதங்கள் கழித்து, காவல்துறையினர், அவரை என்கவுண்டர் செய்யத் திட்டமிட்ட போது, அவரை நீதிமன்றத்தில் சரணடையச் சொல்லி, பத்திரிக்கைகளில் செய்தி வெளிவரச் செய்து, அவரின் உயிரைக் காப்பாற்றியதை சவுக்கு பெருமையோடு நினைவு கூர்கிறது. அவர் இன்று திருந்தி, எவ்வித சட்ட விரோத செயல்களிலும் ஈடுபடாமல், திருமணம் செய்து கொண்டு குழந்தையோடு வாழ்ந்து வருகிறார்.

 

இரண்டு மாதம் கழித்து சவுக்குக்கு ஜாமீன் கிடைத்த போது, உயர் பாதுகாப்புப் பிரிவில் அப்போது இருந்த 65 கைதிகளும் திரண்டு வந்து வழியனுப்பியதை சவுக்கு இந்நேரத்தில் நினைவு கூர்கிறது. அப்போது சிறை வார்டர்களும், கைதிகளும், திரும்பி வராதீர்கள் என்று சொன்ன போது, சவுக்கு, ஊழலை வெளிக் கொணர்வதற்காக மீண்டும் சிறைக்கு வருவதற்கு என்றுமே தயங்க மாட்டேன் என்றுதான் சொன்னது. அதைப் போலவே, மீண்டும் ஜாபர் சேட் சிறைக்கு அனுப்பத்தானே செய்தார் ?

kanimozhi_dmk_20090516

சிறையில், உணவு, மின் விசிறி, நல்ல காற்றோட்டம் என அனைத்தும் இருந்தாலும், சிறை சிறைதான்.

 

சென்னை புதுப்பேட்டையில் உள்ள குடிசையில் வாழும் ஒரு நபர், இரவு 12 மணிக்கு போர் அடிக்கிறது, ஒரு பீடி அடிக்கலாம் என்று காலாற நடந்து சென்று பீடி அடிக்க முடியும். ஆனால் சிறையில் முடியுமா ? மாலை 6 மணிக்கு கதவடைத்தால், மறுநாள் காலை 6 மணி வரை பூட்டிய அறையில் தான் இருக்க வேண்டும்.   எங்கே போகலாம், எங்கே போகக் கூடாது என்பதை சிறை அதிகாரிகள் தான் தீர்மானிப்பார்கள். எந்த நேரம் வேண்டுமானாலும் அறைக்குள் வந்து சோதனையிடுவார்கள். உங்கள் ஆடைகளை களையச் சொல்லி சோதனை செய்யப் படுவீர்கள்.   பஞ்சு மெத்தை கொடுத்தாலும், சிறை சிறைதான்.

 

ஈழத் தமிழினம் சோறில்லாமல், கையிழந்து, காலிழந்து, உயிருக்கு அஞ்சி ஓடிக் கொண்டிருந்த போது, ஏசி காரில் பவனி வந்து, ஏசி அறையில் அமர்ந்துகொண்டு, போலிப் பாதிரியோடும், நக்கீரன் காமராஜோடும் முந்திரி பக்கோடாவைச் சாப்பிட்டுக் கொண்டு அதைப் பற்றி விவாதம் நடத்தினார் கனிமொழி. பதுங்கு குழிக்குள் மக்கள் கிடந்த போது, சென்னை சங்கமம் நடத்தி பவனி வந்தார் கனிமாழி.

DSC_0021

இன்று திஹாரில் இருக்கிறார். முதல் நாள் இரவு அவருக்கு வெப்பத்தாலும், கொசுக்கடியாலும் தூங்க முடியவில்லையாம்.   கழிப்பறைக்கு மறைப்பு இல்லாததால் கஷ்டப் பட்டாராம். விடியற்காலை 2.30 மணிக்குத் தான் உறங்கச் சென்றாராம். காலை 5.30 மணிக்கு சிறை அதிகாரிகள் எழுப்பியதும், இன்னும் கொஞ்ச நேரம் தூங்குகிறேன் என்று கேட்டாராம். ஆனால், அதற்கு அனுமதி மறுக்கப் பட்டதாம்.

 

கனிமொழி அவர்களே…. அய்யன் வள்ளுவர் என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா ?

 

தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை

வீயாது அஇஉறைந் தற்று.

 

இதற்கு உங்க டாடி என்ன உரை எழுதியிருக்கிறார் தெரியுமா ?

 

ஒருவருடைய நிழல் அவருடனேயே ஒன்றியிருப்பதைப்போல், தீய செயல்களில் ஈடுபடுகிறவர்களை விட்டுத் தீமையும் விலகாமல், தொடர்ந்து ஒட்டிக் கொண்டிருக்கும்.

 

Comments  

 
+1 #57 Nats 2011-05-31 17:44
Good Kanimozhi should be punished.karunanithi should be punished.
Quote
 
 
0 #56 Nats 2011-05-31 17:39
கனிமொழி கொடுதத பொருல வைத்தே அவருக்கு செக் செய்ய வேண்டிய காலம் வரும். பக்கதிலே தான் இருக்கு.வந்தால் தான் நல்லது.
Quote
 
 
0 #55 சென்னை பதிவு 2011-05-30 11:28
Bihar: inmates of Gopalganj jail kill doctor

http://ibnlive.in.com/news/bihar-inmates-of-gopalganj-jail-kill-doctor/155273-3.html
Quote
 
 
0 #54 Kumaar 2011-05-29 20:44
இங்கே இருக்கும் திமுக காரர்கள் கொஞ்சமும் வருந்த வேண்டாம். உங்கள் தலைவர் தனது கடின ‘உழைப்பால்’ தனது அனைத்து பொண்டாட்டிகளையு ம் அவர்களது அனைத்து பிள்ளைகளையும் உடன் பிறந்தவர்களின் பிள்ளைகளையும் இன்று மிக நல்ல நிலைக்கு கொண்டு வந்து விட்டார். அவர்களில் ஒருவர் இன்று உலக பெரும் பணக்காரர்களில் ஒருவர். நாளையே உங்கள் தலைவருக்கு ஏதேனும் ஒன்று ஆனால் கூட யாருக்கும் சொத்து இல்லை என்ற நிலை இல்லை. ஒரு மனிதனுக்கு இதை விட வாழ்க்கையில் வேறு என்ன வேண்டும். கடந்த 15 வருடங்களாக மத்திய அரசில் இருக்கிறார்கள். இன்கம்டாக்ஸ் ரைடு ஏதும் 15 வருடங்களாக நெருங்க முடியவில்லை. இதன் மூலம் சன் டிவி தனது கருப்பு பணத்தை எல்லாம் இன்று வெள்ளையாக மாற்றி விட்டது. கலைஞர் டிவியும் அது போலவே தப்பித்து விடலாம் என்று இருந்த போது விதி விளையாடி விட்டது. திமுக காரர்கள் ஐந்து வருடம் சம்பாதித்து விட்டார்கள். அதிமுக காரர்கள் ஐந்து வருடம் சம்பாதிக்கட்டும ே. என்ன இருந்தாலும் திமுக மாதிரி சம்பாதிக்க முடியாது. திமுகவுக்கு ஸ்பெக்ட்ரம் என்ற தங்க சுரங்கம் கிடைத்தது. ற்ச்.100க்கும் ற்ச்.200க்கும் சுண்டல் மாதிரி குடுத்து விட்டு வாங்க வேண்டியதை வாங்கிக்கொண்டார ்கள். திமுகவுக்கு கிடைத்தை போல் அதிமுகவுக்கு சேது சமுத்திரம் திட்டம் கிடைக்குமா? தங்க நாற்கர சாலை திட்டம் கிடைக்குமா?. கனிமொழியும் ஒன்றிரண்டு மாதங்களில் வெளியே வந்து விடுவார். பின்பு வழக்கு 10 முதல் 15 வருடம் நடக்கும். கடைசியில் மிஞ்சிப்போனால் முன்னாள் தொலைத் தொடர்பு துறை மந்திரி சுக்ராமுக்கு கிடைத்ததை போல் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும்! ஆனால் கப்பல் கம்பனியும் நீலகிரி விண்ட்சர் எஸ்டேட்களும் பல இடங்களில் வாங்கியிருக்கும ் வீடுகளும் கட்டிடங்களும் கனிமொழியிடமும் அவரின் வாரிசு ஆதியிடமும் நிச்சயம் மிஞ்சி இருக்கும். எப்படியும் மீண்டும் ஐந்து ஆண்டுகள் கழித்து தமிழக மக்கள் அதிமுகவை வீட்டிற்கு அனுப்பி விடுவார்கள் என்று பேசிக்கொள்கிறார ்கள். யார் கண்டது 4க், 5க் என்று நிச்சயம் இந்த உலகில் வரும் அப்பொழுது திமுகவும் மீண்டும் ஒரு வாய்ப்பைப் பெறும்!!
Quote
 
 
+1 #53 திவ்யன் 2011-05-28 21:14
நா ஜெயிலுக்கு போறேன்!!!

நா ஜெயிலுக்கு போறேன் !!!

நா ஜெயிலுக்கு போறேன் !!!

நானும் தியாகி.....

நானும் தியாகி ....
.
நானும் தியாகி ......
Quote
 
 
0 #52 rama.pillappan 2011-05-27 19:04
ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்!
Quote
 
 
0 #51 தமிழன் சுரேந்திரன் 2011-05-26 23:07
நன்பா நீ பாவம்....
மக்கள் இன்னும் ஆறியாமையில் தான் இருகிறாரகள்.......... :சட்:
Quote
 
 
+1 #50 இளம்புலி 2011-05-24 16:32
அருமை அண்ணா...... உண்மையின் தரிசனம் !! ' சிறை '
Quote
 
 
0 #49 Venky 2011-05-24 14:38
கனிமொழியின் எளிமையின் இலக்கணம் இப்பொதுதான் எல்லொருக்கும் தெரிய வருகிறது...இது சவுக்கின் சவுக்கடி....
Quote
 
 
+1 #48 Dinakar 2011-05-24 13:36
அருமையன கவிதை.
Quote
 
 
+4 #47 புலிப்பாணி சித்தர் 2011-05-23 23:13
இ-தினமலரில் ஒரு அன்பர் எழுதிய கருத்துரை பின்வருமாறு

இது 1970 களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்..இன்றைய தலைமுறையினருக்க ு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.அதிகாரம் அத்தனையையும் மூடி மறைத்து விட்டது.அப்போது முதன் முறையாக முதல்வர் பதவியில் அமர்ந்திருந்தார ் கருணாநிதி. தலைமுறைக்கும் தான் தான் முதல்வராக இருக்க வேண்டும் என அடித்தளம் அமைத்துக்கொண்டி ருந்த நேரம். அதே காலகட்டத்தில் ‘ஜவகரிஸ்ட்’என்ற பத்திரிக்கையும் வெளிவந்து கொண்டிருந்தது!அ தன் ஆசிரியர் ஒன்றும் அறியப்படாதவர் அல்ல.ஒரு காலத்தில் கலைஞர் கருணாநிதி மேடையேறி பேச உழைத்துக்கொண்டி ருந்த என்.கே.டி.சுபிரமணியம்! அவர் நடத்திய ஜவகரிஸ்ட் பத்திரிக்கையில் ,இந்த தேதியில் சென்னையில் உள்ள இந்த மருத்துவமனையில் ,இந்த நேரத்திற்கு ராசாத்தி என்கிற தர்மாம்பாளுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. மருத்துவமனையின் பதிவேட்டில் அந்த பெண் குழந்தைக்கு தகப்பனார் மு.கருணாநிதி என்று குறிப்பிடப்பட்ட ிருக்கிறது.யார் அந்த கருணாநிதி..?என்ற ஒரு பெட்டி செய்தியை வெளியிட்டிருந்த ார். அந்த செய்தி முதல்வராக இருந்த கருணாநிதியை கோபப்பட வைத்து விட்டது.
Quote
 
 
+6 #46 புலிப்பாணி சித்தர் 2011-05-23 23:11
முதல்வர் பதவிக்கு களங்கம் ஏற்படுத்தியதாக பொங்கி எழ வைத்தது.அரசியலில் நேர்மை,தூய்மை,அ ப்பழுக்கில்லாத ஒழுக்கத்தை எல்லாம் அண்ணாவிடமிருந்த ு அப்படியே எடுத்துக்கொண்டவ ரல்லவா..? ‘’ராசாத்தி..தர்மாம்பாள் யார் என்றே எனக்கு தெரியாது.எனக்கு அப்படி எந்த பெண் குழந்தையும் இல்லை’’என்று கூறி பரபரக்க வைத்தார். இது ஒழுக்கத்திற்கே சவால் விடும் செய்தியல்லவா..?விட்டுவிடக்கூடா து...என்று நீதிமன்றத்துக்க ும் போனார்...பெண் குழந்தை ..மகள் என்று யாருமே தெரியாது என்றார்.. பிறகு நடந்தது என்ன என்பது இன்றைய மூத்த தி.மு.கவினருக்கே வெளிச்சம்.செய்தியை வெளியிட்ட பத்திரிக்கை ஆசிரியரை நீதிமன்றம் வரை இழுத்தடிக்க,அந் த காலகட்டத்தில் அவரால் எந்த ஆதாரத்தையும் நிரூபிக்க முடியாமல் போக தண்டனைக்கு உள்ளானதாகவும் நடந்தேறியது..என்ற பழைய வரலாற்றை ஒரு நேர்காணலில் போட்டுடைத்தவர் காங்கிரஸ்காரரான திருச்சி வேலுசாமி. சரி.41 ஆண்டுகள் உருண்டோடி விட்டது.இன்று ஏன் இது சந்திக்கு வருகிறதென்றால்.....எந்த பெண் குழந்தையை தன் மகளே இல்லை என மறுத்தாரோ...எந்த பெண் குழந்தையை வெளியில் சொன்னால்கூட தன் பெயருக்கு இழுக்கு என மூடி மறைத்தாரோ...,அந்த மகள் கனிமொழிக்காகத்த ான் இன்று த்னது தன்மானத்தோடும் மணிமுடியையும் இழந்திருக்கிறார ் கருணாநிதி. நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு மூடி மறைத்த,மறுத்த மகள் கனிமொழிக்காக இன்று தன் எல்லா அதிகாரத்தையும் பயன்படுத்திவிட் டார்..ஊர் அறிய உலகறிய! நன்றி;சூரியக்கத ிர்
Quote
 
 
+3 #45 ARUTPERUNCHITHAN 2011-05-23 21:15
அரசியலில் மக்கள் பணத்தை கொள்ளை அடித்த அத்தனை பேர்களும் மெத்தப்படித்த மேதாவிகள் தான்.அரசு பதவியில் நம் பணத்தில் சம்பளம் வாங்கிகொண்டு தன் கடமையை செய்ய லஞ்சம் கேட்கும் நாதாரியும் படித்தவன் தான். ஆனால் சிறையில் படித்தவர் என்று மரியாதை கொடுக்கும் சிறைவாசியே என் ஆழ்ந்த அனுதாபங்கள்.
Quote
 
 
+1 #44 பாண்டி 2011-05-23 20:30
Quoting அனானி:
சவுக்கு தளத்தை நடத்துவது இன்னார் என்று வெளியுலகிற்கு தெரியாமல் நடத்துகிறீர்கள் என நினைக்கிறேன்.

இந்தக் கட்டுரை மூலம் உங்கள் எதிரிகள், அல்லது பழி வாங்கத்துடிப்பவ ர்கள் உங்களை எளிதில் இனம் காண முடியுமே..

இது சரிதானா? பரவாயில்லையா?


மூஞ்சா முக்கியம். மேட்டருதேன் முக்கியம். சவுக்கிற்கு எங்களோட மானசீகமான பிரார்த்தனைகள் எப்பொழுதும் உண்டு.
Quote
 
 
+3 #43 498ஏ அப்பாவி 2011-05-23 20:17
//ஆனால், வரதட்சிணைக் கொடுமை, ஈவ் டீசிங், போன்ற வழக்குகளில் உள்ளே வருபவர்கள், முதல் நாள் தொடங்கி மூன்று நாட்களுக்கு அழுத படி இருப்பார்கள்//

ஆம் உண்​மைதான் சவுக்கு அண்ணா!

எனது தம்பியும் என்னு​டைய ம​னைவி என்ற ​பெயரில் உள்ள ​தே------டியாளின் ​பொய் வரதட்ச​ணை வழக்கில் ​கைது ​செய்யப்பட்டு புழல் சி​றையில் அ​டைக்கப்பட்டான ், அப்​பொழுது அங்குஉள்ள சி​றைவாசிகள் எனது தம்பி​யை தனது ​சொந்த ச​கோதரன் ​போல் ​பார்த்துக்​கொ ண்டார்கள்...

நல்​​லோருக்கு எங்கிருந்தாலும் ஆதரவுண்டு என்ப​தை உணர்த்தும் இது​போல் தருணங்கள்

அன்புடன்,

498ஏ அப்பாவி

http://ipc498a-victim.blogspot.com
Quote
 
 
0 #42 SASI KUMAR 2011-05-23 19:08
அருமை சவுக்கு அவர்களே
Quote
 
 
+2 #41 ஆஹா 2011-05-23 18:44
ஏம்பா சவுக்கு சங்கர்.ரூமுக்குள்ள அடைஞ்சு கிடைக்கறதே கஷ்டம்னா வெட்டுப் பட்டு சாவறது சொகுசா?அடுத்தவன வெற்றது,குத்தறத ு,கேடுக்கறவன் இவனுங்களெல்லாம் நிக்க வச்சு சுடனும்.அப்பத்தான் மச்சவன் பண்ண மாட்டான்.அய்யன் வள்ளுவர் அதுக்கும் பாட்டு எழுதி இருக்கிறார் தானே?
Quote
 
 
0 #40 The Fuhrer 2011-05-23 18:30
சவுக்கு திருக்குறள் பிரமாதாம்.......
Quote
 
 
0 #39 சுரேஷ் 2011-05-23 17:57
Your identity likely to be known to your oppositions.. expecting you to continue your criticism with your name to show your courage....shankar..
Quote
 
 
+2 #38 RayJaguar 2011-05-23 16:30
சூப்பர்
Quote
 
 
+2 #37 unknown 2011-05-23 14:54
nice
Quote
 
 
+2 #36 Anto 2011-05-23 14:42
13:53 PM Nobody receives Karuna at Delhi airport:

R Rajagopalan tweets: No senior TNCC leader went to airport to receive Karunanidhi. Tit for tat as DMK not attended PM Dinner

Karunanidhi is staying at Taj Mansingh Hotel in Delhi. At 430 pm he and his family members including Alagiri's wife, will meet Kani in Tihar Jail.
Quote
 
 
0 #35 வெங்கட் 2011-05-23 13:53
சட்டம் கடமை செஎட்டும்
Quote
 
 
+5 #34 Robert 2011-05-23 12:43
ப்ளீஸ் கேடி ப்ரோதேர்ஸ்/ ஏற்செல் / மாக்சிஸ் / அப்பல்லோ தொடர்பை பத்தி உங்கள் கட்டுரை வேண்டும்
Quote
 
 
+1 #33 Shankara Shankara 2011-05-23 11:32
Quoting gurunathan:
Who is the founder of Savukku?? I want to know him. I appreciate your boldness. A great salute to you. I also want to join with you. pls contact me at 8056349379


Shankara, shankara...... idhellam kelvinu ketkuraangale.......
Quote
 
 
+9 #32 தமிழ்வேல் 2011-05-23 10:15
நெஞ்சு பொருக்குதில்லைய ே!! இந்த நிலை கேட்ட மாந்தரை நினைத்துவிட்டால ்!!
Quote
 
 
+8 #31 kalaignar 2011-05-23 06:07
அழக்கொண்ட தெல்லாம் அழப்போம் இழப்பினும்
இழப்பினும் பிர்ப்பயக்கும் நற்பாலவை

எல்லாரையும் அழவைத்து பெற்ற பொருட்கள் எவ்வளு இன்பத்தை கொடுத்ததாலும் அவை விட்டு செல்லுமுன் அதே அளவு துன்பத்தை கொடுக்கும்.

இலக்கியம் படித்த கனி & கருணா இப்போது இதை உணர்வார்களா ?
Quote
 
 
+9 #30 குமார.இரவிக்குமார் 2011-05-23 00:29
தோழரே, கைதி என்ற சொல்லை தவிர்த்து சிறைவாசி என்ற சொல்லை பயன்படுத்தி இருக்கலாம். இரவு நேரத்தில் அறையில் காற்றே இல்லாதது போலவும் மூச்சுத்தினறல் ஏற்பட்டு மூச்சு முட்டுவது போல ஒரு உணர்வு ஏற்படுமே அதையும் நமது அன்பிற்குரிய குடும்பத்தினரை பார்க்காமல் ஒரு வெறுமையான உணர்வு ஏற்படுமே அதையும் சேர்த்து எழுதி இருக்கலாம்.
Quote
 
 
+6 #29 naan kadavul 2011-05-22 23:11
ஆமா அக்கா நல்லா போட்டோவிற்கு போஸ் கொடுக்கிறாரே,அங ்கே யார் போட்டோ எடுப்பார்கள்.சிறைக் காவலர்களா இல்லை ராசாவா.
Quote
 
 
+56 #28 விகடகவி 2011-05-22 21:59
"பாளையங்கோட்டை சிறையினிலே
பாம்புகள் பல்லிகள் நடுவினிலே
அஞ்சாமல் இருந்தது யாரு?
அந்த கலைஞரின் புகழினை பாடு"

- சும்மா காமெடிக்கு தான் எழுதினேன், உடனே கோபப்பட்டு சிவப்பு பொத்தானை அமுக்கிடாதீங்க. :lol:
Quote
 
 
+37 #27 விகடகவி 2011-05-22 21:56
நம் நாட்டில் மாதிரி படித்தவர்களுக்க ு எங்கும் இவ்வளவு மரியாதை கிடைக்காது. படிப்பின் அருமை படித்தவர்களை விட படிக்காதவர்களுக ்கே நன்றாக தெரிகிறது.
Quote
 
 
+4 #26 brother 2011-05-22 21:34
brother, eppadi irukka. nalla irukkiya. un pani thodarattum. Engo oru moolaiyil irundhu kondu unakkaga naan pray pannuven. keep it up. nee nalla irukkanum.
Quote
 
 
+17 #25 ARUTPERUNCHITHAN 2011-05-22 21:32
உங்கள் தாயார் இப்போது எப்படி உள்ளார் சவுக்கு?youtube இல் பினாயக் சென் கைதுக்கு கண்டனம் தெரிவிக்கும் உங்கள் பேச்சை கேட்டேன்.உங்களை பெற்ற தாயை மானசீகமாக வணங்குகிறேன்.............வாசகர்கள் கவனத்திற்கு http://www.youtube.com/watch?v=OY-3CqQp4n4 இல் சவுக்கை காணலாம்.
Quote
 
 
+4 #24 rayar 2011-05-22 21:32
அருமையான கட்டுரை... சிறையை நேரில் கண்டுவந்ததை போல இருந்தது. நல்ல வேலை அதன் மிக கடுமையான கருத பக்கங்களை பற்றி நீங்கள் எழுதவில்லை. படங்களில் காட்டபடுவதை விட மிக கடுமையாக இருக்கும் என கேள்விபட்டிருக் கிறோம்..
Quote
 
 
+1 #23 Suresh Ramasamy 2011-05-22 20:22
கடசி திருகுறள் நச்!!!
Quote
 
 
+38 #22 anniyan 2011-05-22 19:56
கொசுக்கள் கடித்தது தெரிந்ததே - எம்மின குழந்தைகளின் மேல்
கொத்துவெடி வெடித்தது தெரிந்ததா?

கழிவறைக்கு கதவில்லை என்றீரே - எம்மினத்துக்கு ஈழத்தில்
கதவில்லை வீடுமில்லை - உணர்ந்தீரா?

தூக்கம் இன்று குறைவென்று சொன்னீரே - எம்மக்கள்
துக்கம் இன்றும் குறையவில்லை - நினைத்தீரா?

ஏப்பம் வெளிப்ப உண்டீரே - எம் பிள்ளைகள்
ஏக்கம் தணிக்கவழி கண்டீரா?

உதவி செய்வதாய் நடித்தீரே - படுகொலையை
பதவி இருந்தும் தடுத்தீரா?

பணம் பணமென அலைந்தீரே - எம் தமிழ் மக்காள்
பிணம் தினமென அழுதோமே - படித்தீரா?

தமிழுக்கு மையம் வைத்தீரே - நீரும்
தமிழராயென ஐயம் கொண்டோமே - உரைத்ததா?

சதியின் நிழலோ இனி உம்மை பின்தொடரும்
விதியின் கையோ எழுதி எழுதி முற்செல்லும்

இரைப்பையின் வசதிக்கேற்ப வாழ்ந்தீரே - இனி
இயற்கையின் நியதி சுடும் - உணருங்கள்.

--கார்கில் வீரன்
Quote
 
 
+13 #21 Kumar.T 2011-05-22 19:36
அனானி..நீங்கள் சவுக்கு தளத்துக்கு புதுசா ??? ஜாபர் சேட் பீக்ல இருந்தப்பவே பிரிச்சி மேஞ்சது சவுக்கு.. இப்ப என்ன வந்தது.. பழைய பதிவுகள படியுங்கள்..

Quoting அனானி:
சவுக்கு தளத்தை நடத்துவது இன்னார் என்று வெளியுலகிற்கு தெரியாமல் நடத்துகிறீர்கள் என நினைக்கிறேன்.

இந்தக் கட்டுரை மூலம் உங்கள் எதிரிகள், அல்லது பழி வாங்கத்துடிப்பவ ர்கள் உங்களை எளிதில் இனம் காண முடியுமே..

இது சரிதானா? பரவாயில்லையா?
Quote
 
 
+3 #20 அனானி 2011-05-22 19:18
சவுக்கு தளத்தை நடத்துவது இன்னார் என்று வெளியுலகிற்கு தெரியாமல் நடத்துகிறீர்கள் என நினைக்கிறேன்.

இந்தக் கட்டுரை மூலம் உங்கள் எதிரிகள், அல்லது பழி வாங்கத்துடிப்பவ ர்கள் உங்களை எளிதில் இனம் காண முடியுமே..

இது சரிதானா? பரவாயில்லையா?
Quote
 
 
+4 #19 Desigan 2011-05-22 19:05
The guy with you in the cell changed himself ( to correct path) by seeing you..The world's top ranked criminals (Kanimozhi,Kalm adi,Raja,Etc..) are in Thihar jail. I am really scared about the other in mates in Thihar jail, coz they may change still more violent or corrupt by being with these guys.
Quote
 
 
+2 #18 M.G.SEKHAR 2011-05-22 18:47
savukku, really your comment is wonderful, i am reading your blog i think last 4 months but really super. I feel you are the one of the reason for change of govt in tamilnadu. once again appreciate your fearless statements.
Quote
 
 
0 #17 கூத்தாடி. 2011-05-22 18:11
எப்படி இருந்த நான் இப்படியா ஆகிப்போச்சே! http://koothadiveddai.blogspot.com/
Quote
 
 
+12 #16 தஞ்சை குணா 2011-05-22 17:50
சவுக்கு அவர்களுக்கு நன்றி. சிறை எப்படி இருக்கும் என்று கற்பனை செய்துகொண்டிருப ்பவர்களுக்கு இப்படித்தான் இருக்கும் என்று அழைத்துச்சென்று காட்டியதைப்போன் று சுவாரஸ்யமாக எழுதி இருக்கின்றீர்கள ்.

சிறையில் இருந்தபோதுகூட நல்லகாரியங்கள் சில செய்திருக்கிறீர ்கள் என்று அறியும்போது ரொம்ப மகிழ்ச்சி.
Quote
 
 
+3 #15 Srinivasan2774 2011-05-22 17:22
Sirai chaalai oru thani olagam enapathi angu sentravarkalukk u thaan theriyum.
Quote
 
 
+24 #14 Anto 2011-05-22 17:14
"என் மீதும், என் குடும்பத்தினர் மீதும் வஞ்சம் தீர்த்துக் கொள்ளும் படலத்தை வஞ்சனையாளர்கள் சிலர் கூடி வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர், ' என தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

சவுக்கு, உன்னைத்தான் வஞ்சமாக சொல்லி இருக்கார் :D :D :D :D
Quote
 
 
+1 #13 Devendrar 2011-05-22 16:50
Srilanka vil makkal irukka idam illamal, unna unavu illamal kai, kaal ilanthu kasta padukirargal.. intha kaliyuga kannagikku kosu kadithathaam, thoonga mudiyavillayam...
un appanaiyum aatha rajathiyaiyum jail ku vanthu visiri vida solla vendiyathu thana..
Quote
 
 
-17 #12 Kannapan 2011-05-22 16:48
saukku doesnot have any use ful job rather being sadiest.....
Quote
 
 
+26 #11 சின்னக்குண்டூசி 2011-05-22 16:40
இந்த கோடையில் டெல்லி வெயிலின் கொடுமை எப்படி இருக்கும் என்று அனுபவித்தவர்களு க்கு நன்கு தெரிந்திருக்கும ்...நிச்சயம் கோடிகளில் புழங்கி படு ஆடம்பரமாக வாழ்க்கை நடத்திய கனிமொழி போன்றவர்களுக்கு நரகம் என்றால் என்ன என்பதை திஹார் காட்டிவிடும்...ஒரு சின்ன ஆசை...யார் மூலமாவது சிறையில் வாடும் அந்த கவிகுயிலுக்கு இப்போதாவது இது ஈழத் தமிழர்களின் கதறல் சாபத்தின் விளைவு என்று கூறச்சொல்லி, முடிந்தால் ஈழ போரின் கோர புகைப்படங்கள் அடங்கிய "என்ன செய்ய போகிறோம் இதற்காக?" என்ற புத்தகத்தையும் கொடுத்து.....அதை பார்த்து ஈர மனம் என்று ஒன்று இருந்து வருந்தினால்....அடுத்த ஜென்மத்திலாவது விமோசனம் கிடைக்கலாம்..!
Quote
 
 
+35 #10 pandiyan 2011-05-22 16:23
இப்படியும் ஒரு முதலமைச்சர் ...
காமராஜர் 9 ஆண்டுகளை சிறையில் கழித்தார் ..தன் ஒரே மகன், அரசியலில் தீவிரமாக ஈடுபடுவது சிவகாமி அம்மாளுக்கு கவலை அளித்தது.திருமணம் செய்து வைத்தால் குடும்பப் பொறுப்பு ஏற்படும் என்று தாயாரும், தாய் மாமன் கருப்பையா நாடாரும் நினைத்தார்கள். பெண்ணும் பார்த்து, திருமணத்தேதியும ் நிச்சயிக்கப்படு ம் அளவுக்கு ஏற்பாடுகள் நடந்தபோது, காமராஜருக்கு விஷயம் தெரிந்தது. தாயாரிடம் மிகுந்த மரியாதை கொண்டிருந்த காமராஜருக்கு, இந்தத் திருமண ஏற்பாடு கடும் சினத்தை ஏற்படுத்தியது. "நாட்டுக்காக உழைப்பதே என் லட்சியம். கல்யாணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தினால் , என்னை மறந்து விட வேண்டியதுதான்" என்று உறுதியாகவும், கண்டிப்பாகவும் கூறினார்.
அது முதல், கடைசி வரை திருமணப் பேச்சையே சிவகாமி அம்மாள் எடுக்கவில்லை. 1930_ம் ஆண்டு உப்பு சத்தியாக்கிரகப் போராட்டத்தில் காமராஜர் கலந்து கொண்டார். அதில் 2 ஆண்டு ஜெயில் தண்டனை அடைந்தார். காமராஜரின் முதல் சிறைவாசம் இது தான்.
அதன் பிறகு, காங்கிரஸ் நடத்திய பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டு சிறை சென்றார். மொத்தம் 9 ஆண்டு காலத்தைச் சிறையில் கழித்திருக்கிறா ர்.
APPROAM -- வெள்ளையனே வெளியேறு இயக்கம் 1942ஆகஸ்ட்8 அன்று துவங்கியது. கக்கன் கைது செய்யப்பட்டு தஞ்சை சிறையில் அடைக்கப்பட்டார் . சிறைக்குள் கக்கன் கடுமையாக தாக்கப்பட்டார்.அப்போது ஏற்பட்ட காயம் இறுதிவரை தழும்பாக அவரது உடலில் பதிந்து விட்டது. ஒன்றரை வருட காலம் சிறைத் தண்டனை அனுபவித்தார் .மூன்றே முக்கால் நாள் ஒரு பதவி கிடைத்தாலே வாரிச் சுருட்டுகிற உலகில், கறைபடாத கரங்களுக்குச் சொந்தக்காரராகவே இருந்தார். சொத்து சேர்க்கவில்லை. தலைக்கனம் பிடிக்கவில்லை. எளிமையும் நேர்மையும் அவரது மறுபெயராயின. 1975-ல் காமராஜர் மறைவுக்கு பின்னர் தீவிர அரசிலை விட்டு ஒதுங்கிவிட்டார் . Approam , அது சரி யாரு இந்த கனிமொழி . எந்த உரிமைக்கு அல்லது இனம் போரடதிருக்கு இவர் சிறை என்று உள்ளார் . எதற்கு இந்த அளவு முக்கியதுவம். ???
Quote
 
 
+8 #9 pandiyan 2011-05-22 16:07
idhu ellam oru kalauthula enga madurai kusumbu ;
சவுக்கு உள்ளே சென்ற போது என்ன கேசு என்று கேட்டதற்கு, “தொலைபேசி ஒட்டுக் கேட்பு” என்று சொன்னதற்கு, “பாத்தா பட்ச்சவன் மாதிரி இருக்க ? நீ ஏன் சார் அட்த்தவன் போன ஒட்டுக் கேக்குற ?”
Quote
 
 
+33 #8 ARUTPERUNCHITHAN 2011-05-22 16:00
சவுக்கை ஆரம்பத்தில் ஒரு வெறுப்போடு தான் படித்து வந்தேன். ஆனால் உன் தாய் எதிரே உன்னை அடித்தது மற்றும் உனக்கு சிறையில் நேர்ந்தது பற்றி தெரியவரும் போதுதான் நீ சொன்னது எல்லாமே அருள் வாக்கை போல் ஏன் பலித்தது என்று புரிகிறது.நினைவு தெரிந்த நாளில் இருந்து நேர்மையாய் இருப்பவன் நீ என்பது மட்டும் புரிகிறது.
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 96 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday349
mod_vvisit_counterYesterday10087
mod_vvisit_counterThis week10436
mod_vvisit_counterLast week80132
mod_vvisit_counterThis month213168
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12735287