|
குறைந்தது 100 நாட்களுக்காவது, விமர்சனம் செய்ய வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தாது ஜெயலலிதா அரசு என்றுதான் சவுக்கு நம்பியது. ஆனால், இன்று வெளியிட்டுள்ள அமைச்சரவையின் முடிவு, சவுக்கின் முடிவை மாற்றியுள்ளது. சமச்சீர் கல்வியை கைவிட்டு, இது தொடர்பாக வல்லுனர் குழு அமைப்பது என்பதே அது. சமச்சீர் கல்வி என்பது என்ன ?

தமிழகத்தில் ஸ்டேட் போர்டு, ஓரியன்டல் ஸ்கூல் ஆப் எஜுகேஷன், ஆங்கிலோ இந்திய முறை, மெட்ரிகுலேஷன், சிபிஎஸ்ஈ என்று ஐந்து வகையான பாடத்திட்டங்கள் உள்ளன. இந்த பாடத்திட்டங்களால், பல ஆண்டுகளாக ஏகப்பட்ட குழப்பங்கள் நீடித்து வந்தன. மேலும், சமுதாயத்தில், மாணவர்கள் மத்தியில் பெரும் ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தி வந்தது. தனியார் கல்வி நிறுவனங்களின் கட்டணக் கொள்ளையை இந்த கல்வி முறைகள் ஊக்கப் படுத்தியும் வந்தன.

அரசியல் அமைப்புச் சட்டத்தின் 14ம் பிரிவு அனைவரும் சமம் என்று கூறினாலும், சாதி, சமயம், பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் காரணமாக, பணம் படைத்தவர்களின் பிள்ளைகள் தரமான கல்வியையும், பணமில்லாத ஒடுக்கப் பட்ட மக்களின் பிள்ளைகள், தரங்குறைந்த கல்வியையும் பெறும் சூழல் நிலவி வந்தது.
இந்தியா போன்ற ஏற்றத் தாழ்வு உள்ள நாட்டில் சமச்சீர் கல்வி என்பது அவசியத் தேவையாகும்.
கருணாநிதி அரசு செய்த ஒரு சில நல்ல திட்டங்களில் ஒன்று இந்த சமச்சீர் கல்வி முறை. செப்டம்பர் 2006ல் பாரதிதாசன் பல்கலைகழகத்தின் முன்னாள் துணை வேந்தர் முத்துக் குமரன் தலைமையில் ஒன்பது உறுப்பினர் கொண்ட ஒரு குழுவை அமைத்து, இக்கல்வி முறையில் உள்ள குறைகளை ஆராய்ந்து பரிந்துரை அளிக்குமாறு அரசு கேட்டுக் கொண்டது. அதன் அடிப்படையில், முத்துக்குமரன் கமிட்டி, தனது அறிக்கையை ஜுலை 2007ல் அளித்தது. ஒரே விதமான பாடத்திட்டம், ஒரே அளவு கோல்கொண்ட மதிப்பெண்கள், ஒரே விதமானப் பொதுத்தேர்வு என்பதுதான் முத்துக்குமரன் குழு அறிக்கை பரிந்துரைத்த சமச்சீர் கல்வியின் அடிப்படை அம்சமாகும்.
சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், மாதம் 10 ஆயிரம் கட்டணம் வாங்கும் பணக்கார பள்ளியில் படிக்கும் மாணவனும், சைதாப்பேட்டை அரசுப் பள்ளியில் படிக்கும் ரிக்ஷா இழுப்பவரின் மகனும் ஒரே பாடத்தைப் படிப்பார்கள். இந்த சமச்சீர் கல்வி முறை ஏற்றத் தாழ்வுகளை முற்றிலும் ஒழிக்காவிட்டாலும், ஓரளவுக்கு சமன் செய்யும் என்பதில் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது.
அந்தக் கமிட்டியும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று அறிக்கையை அளிக்கவில்லை. ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி விஜயகுமார் உள்பட கல்வியாளர்கள், சிந்தனையாளர்கள் உள்ளிட்டோர் அடங்கிய குழு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து ஆய்வு நடத்தியது. மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்ளிட்டோர்களிடம் கருத்துக்களை கேட்டபிறகுதான் சமச்சீர் கல்வியை கொண்டு வருவதற்கு முடிவு செய்யப்பட்டது. இந்த புதிய திட்டம் குறித்து இணையதளத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

4 பாடத்திட்டங்களால் மாணவர்களிடையே ஏற்றத்தாழ்வு ஏற்பட்டுள்ளது. இந்த ஏற்றத்தாழ்வுகளை போக்கும் தரமான கல்வியை அளிப்பதற்கும் சமச்சீர் கல்வி முறை கொண்டுவரப்படுவது அவசியம் என்பதை அந்தக் குழு வலியுறுத்தியது. வெவ்வேறு பாடத்திட்டத்தில் கல்வி பயிலும் மாணவர்கள் உயர்கல்விக்கு செல்லும்போது பிரச்சினை உருவாகிறது. உயர்கல்வியை சிலர் பின்பற்ற முடியாத சூழ்நிலை உள்ளது.
எனவேதான், எல்லோருக்கும் ஒரே பாடத்திட்டத்தை கொண்டு வந்தால் அதன்மூலம் மாணவர்களிடையே உள்ள வேறுபாட்டை தவிர்க்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது. மேலும், ஒவ்வொரு கல்வி திட்டத்திலும் உள்ள உயர்ந்த கல்வி முறையை சமச்சீர் கல்வியில் அரசு சேர்த்துள்ளது. அதுமட்டுமல்ல மத்திய கல்வி திட்டம், என்.சி.இ.ஆர்.டி. கல்வி திட்டம் போன்றவற்றிலும் இருந்து பாடத்திட்டம் எடுக்கப்பட்டுள்ளது. சமச்சீர் கல்வி முறையால் மாணவர்களிடையே வேற்றுமை விலகி சமூகநீதி ஏற்படும். புத்தக சுமை பெருமளவில் குறையும்.

இந்த அறிக்கையை செயல்படுத்த, கருணாநிதி அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து, இதற்கான பாடப்புத்தகங்களை உருவாக்க மேலும் ஒரு குழுவை அமைத்து, அந்தக் குழுவின் பரிந்துரைகளின் படி, 9 கோடி புத்தகங்கள் தயாரிக்கப் பட்டு, தமிழகம் முழுக்க விநியோகிக்கப் பட்டு விட்டன. இந்தப் பாடப்புத்தகங்களில் ஒரு குறை காண வேண்டும் என்றால், கருணாநிதியைப் பற்றி பாடம் உள்ளது. அந்தப் பாடத்தை மட்டும் நீக்கினால் போதாதா ? மேலும் நீக்குவது ஒரு பெரிய சிரமமா என்ன ? அத்தனை பாடப் புத்தகங்களும் விநியோகம் செய்து முடிக்கப் படுவதற்கு முன்பே, இப்பாடப் புத்தகங்கள் இணைய தளத்தில் இலவசமாக தரவிறக்கம் செய்ய அனுமதிக்கப் பட்டது.
இந்தப் பாடப்புத்தகங்களை இணைய தளத்தில் தரவிறக்கம் செய்த 10ம் வகுப்பு மாணவர்கள், கடந்த ஒரு மாதமாக கோடை விடுமுறையில் இந்தப் பாடங்களை படிக்கத் தொடங்கி விட்டார்கள். பல பள்ளிகளில், கோடை விடுமுறையில் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
இந்தப் பாடத்திட்டத்தை பின்பற்றி, தனியார் பதிப்பகத்தினர், கைடுகள் என்று அழைக்கப் படும், நூல்களை லட்சக் கணக்கில் அச்சடித்து விற்பனை செய்யத் தொடங்கி விட்டனர்.
இந்த சமச்சீர் பாடங்களை மாணவர்களுக்கு பயிற்றுவிக்க, ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்புகளும் தொடங்கப் பட உள்ளன.
இத்தனை ஏற்பாடுகளும் செய்து முடிக்கப் பட்ட நிலையில் ஜெயலலிதா இன்று சமச்சீர் கல்வி இல்லை என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து சவுக்கிடம் பேசிய கல்வியாளரும், கல்வி சீரமைப்புக்காக தொடர்ந்து போராடி வருபவரும், இது தொடர்பாக பல்வேறு வழக்குகளை உயர்நீதிமன்றத்தில் தொடுத்திருப்பவருமான ப்ரின்ஸ் கஜேந்திர பாபு பேசினார்.

ப்ரின்ஸ் கஜேந்திர பாபு
“அமைச்சரவையின் முடிவு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. மிகவும் துரதிர்ஷ்டவசமான முடிவு இது. கல்வியாளர் அடங்கிய வல்லுனர் குழு ஆராய்ந்து அளித்த அறிக்கையை, அரசு குப்பையில் போட்டுள்ளது வேதனையானது. இப்போது உள்ள பாடத் திட்டத்தில் தவறுகள் இருக்கலாம். அந்தக் தவறுகளுக்கு திருத்தத்தை அச்சடித்து அனுப்புவதில் சிரமமே இருக்காது. மேலும் சீர் செய்ய வேண்டும் என்று அரசு கருதினால், அடுத்த ஆண்டு பாடப் புத்தகங்களை தாராளமாக மாற்றலாமே.. இந்த சமச்சீர் கல்வியை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை சென்ற, மெட்ரிகுலேஷன் லாபியினர் மகிழும் வகையில் இந்த உத்தரவு அமைந்துள்ளது. இது வெறும் பண நட்டம், பொருளாதாரம் மட்டும் சம்பந்தப்பட்ட முடிவு அல்ல. மாணவர்களின் உளவியல் சம்பந்தப் பட்டது. இரண்டு மாதகாலமாக 10ம் வகுப்பு பாடத்தை படித்து வரும் மாணவனுக்கு, புதிய பாடம் என்றால் எப்படி இருக்கும் ? இது மாணவர்களுக்கு கடும் மன உளைச்சலை தரும். ஜெயலலிதா அரசு, பெருந்தன்மையோடு, இந்த முடிவை மாற்றும் என்று நம்புகிறேன்” என்று கூறினார்.
குறிப்பிட்ட தேதியில் கட்டாய ஹெல்மெட் என்று உத்தரவு வந்த போது, உண்மையோ இல்லையோ, கருணாநிதி அரசு ஹெல்மெட் தயாரிப்பாளர்களிடமிருந்து லஞ்சம் பெற்று விட்ட என்று அப்போது பேச்சு எழுந்தது.
இப்போதும், கோடிக்கணக்கில் கொள்ளையடிக்கும் மெட்ரிகுலேஷன் லாபியிடமிருந்து லஞ்சம் பெற்றுத் தான் இந்த முடிவு எடுக்கப் பட்டுள்ளது என்ற குற்றச் சாட்டு எழுவதற்கான முகாந்திரத்தை ஜெயலலிதாவின் இந்த முடிவு ஏற்படுத்தியுள்ளது. அந்தக் குற்றச்சாட்டில் உண்மை இல்லாமலேயே இருந்தாலும், அது எழுவதை தவிர்க்க முடியாது.
இன்று சவுக்கிடம் பேசிய நண்பர், “தலைமைச் செயலகம் புதிய கட்டிடத்தில் இருந்தாலும், பழைய கட்டிடத்தில் இருந்தாலும் என்னை பாதிக்கப் போவதில்லை. ஆனால் எனது இரண்டு மகள்களுக்கும் 750 ரூபாயில் புத்தகம் வாங்கி முடித்திருப்பேன். இப்போது, என் மகள்கள் படிக்கும் கொள்ளைக்காரப் பள்ளியில் புத்தக விலையாக 3000 ரூபாய் என்று சொன்னால், என்னால் என்ன செய்ய முடியும் ?” என்று கேட்டார்.
இதுதான் இன்றைய அத்தனை பெற்றோரின் நிலையும். மிக மிக தவறான முடிவை எடுத்திருக்கிறார் செல்வி ஜெயலலிதா.

கருணாநிதி அரசு எடுத்த எல்லா முடிவுகளுமே தவறு என்று அதை மாற்ற ஜெயலலிதா முயல்வார் என்றால், மக்களின் கடும் அதிருப்தியை சந்திக்க நேரிடும். எடுத்தேன் கவிழ்த்தேன் என்று அலசி ஆராயாமல் எடுக்கப் படும் முடிவுகள் ஜெயலலிதாவுக்கு மிகுந்த கெட்ட பெயரை ஏற்படுத்தித் தரும்.

கருணாநிதி போல, செய்யும் தவறுகளுக்கு மேற்குவங்கத்தை பாருங்கள், பீஹாரைப் பாருங்கள், ஆந்திராவைப் பாருங்கள் என்று சப்பைக் கட்டு கட்டாமல், தவறை உணர்ந்து திருத்தி இந்த முடிவை மாற்றுங்கள். இதனால், உங்கள் புகழுக்கு எந்த பங்கமும் வந்து விடாது. முதல் கோணல் முற்றும் கோணலோ என்று எங்களை அஞ்ச வைத்து விடாதீர்கள். |
Comments
SO UR VALUABLE THOUGHTS HELPED ME TO CORE.......... thank you friends........
Indha maadiri panathimir pudicha unudaya magan enga padithaalum eduka povadhu pitchayae...
Allow people to have choices before them to decide which one is suitable for their children. The present Chief Minister has not resorted to abolishing the SAMACHEER KALVI. Instead she has said that this system will be studied prperly before implementation.
While there cannot be a second opinion in the intake of really talented students in colleges, I strongly point out that the abolished entrance exam system was not the way to achieve it. Do you mean to say that by attending special coaching classes the IQ and/or EQ of the students will improve?. Definitely not. The students who attended coaching classes where given tips/shortcuts to face the entrance exams which helped them in securing comparatively more marks in the entrance exams. More importantly this objective evaluation of students is not at all good, some kind of subjectivity should be there in the evaluation. Please note that if the students with higher marks are more talented they why there should be interviews for recruitments.
The real solution lies in the improvement of the education and examination systems. I feel the recently abandoned or deferred syllabus (Samacheer Kalvi) is one of the ways in achieving the same.
This syllabus aims to prepare the students for higher education in a better way by, not restricting them within the text book and give them scope to search for additional references to do their class activities (including writing own essays, group discussions, limited research exposure etc). Many of extra curricular activities are now a part of curriculum itself.
Please note that the social, cultural, academic differences between the students from rural and urban background gets reduced with time (Gap in their final year are found to be very low compared to their first year), because of the same level of exposure.
ஓர் வேண்டுகோள் ,விக்கி லீக்ஸ் தோலுரிக்கும் பல அப்பட்டமான உண்மைகள் பலருக்கும் போய் சேருவதில்லை என்பது
என்னை போன்ற ஆர்வகொலாருகளின் ஆதங்கம்...........நீங்கள் மனது வைத்தல்,சவுக்கி ன் ஓர் மூலாயில் இடம் ஒதுக்கினால்
எங்கள் மூளாயில் நாங்கள் அதை பதிவு செய்து புலம்புவோம் ......
எனவே சகா "சிந்தனை செய் மனமே"
Also not only because Kalaignar's song there.
Its because mainly the books are of sub-standard nature, and in this competitive world the future generations need to suffer a lot.
For instance, a student in first standard only learns the numerals till 100, and spelling till twenty. These would have been done in Kinder Garden(K.G) itself. Even the students ask their staffs why they are repeating the same which they knew already.
So Ms.Jaya being a former students of a Convent- Matriculation School, she knows the standards to be kept for Schools for this generation.........
Moreover apart from political ideas, i would like to say that Kalaignar in his previous reign has ruined even the education field in total...!!!!
Thank u
அவரின் சுய ரூபம் சட்டமன்றம், சமச்சீரிலே தெரிகிறது.
இன்னும் தெரியும்
அவரை திருத்த கடவுளாளும் முடியாது.....
இத் திட்டம் நம் நாட்டில் உள்ள படித்த அறிஞ்சர்களை வைத்து செயல் பட்ட குழுவின் முடிவே ஆகும்,வெறும் கருணாநிதியின் அசை அல்ல.
மக்களே சமசீர் கல்வி அவசியம் அது எப்பொழுதும் நம் மாணவர்களின் வளர்ச்சிக்கு தடை கிடையாது ,புரிந்து அறிந்து கொள்ளுங்கள்
உங்கள் ஆதரவை சமசீர் கல்வி திட்டத்துக்கு தாருங்கள்
http://www.edupub.gov.lk/Mathemetics%20Gr%208(T).html
http://www.textbooksonline.tn.nic.in/Books/08/Std08-Maths-TM.pdf
While i agree with your point of bringing equality among childer, please do not forget that our studnets are currently ill equiiped to deal with comeptitve exams, and the pass percentage in prestigous instituation in IIT and IITms are very minimal from Tamil Nadu.
This Samacheer kalvi instead of raising the standards, is all set to bring down the existing standards in Matriculation and Anglo schools by the name of eqauality. The end reult if implemented would bring in eqaulity in out state, as well as bring about the down fall of entire student fraternity.
Please let me know if you guys have other thoughts...
இன்டர்நேஷனல் பாட திட்டத்தில் படிப்பவர்கள் ஒன்பதாம் வகுப்பிலேயே இளங்கலை பட்ட பாட திட்டத்தை முடித்து விடுகிறார்கள் . சமசீர் கல்வி தொடர்ந்தால் பத்தாவது படிப்பவன் ஆறாம் வகுப்பு அறிவோடு மட்டுமே இருக்கமுடியும்.
[/ஃஉஒடெ]
இது முற்றிலும் தவறான கருத்து. உண்மையில் இந்திய மாணவர்கள் தான் அதிக பாடங்களைப் படிக்கிறார்கள். வெளிநாட்டினர் சற்று அதிகமாக சிந்திக்க கற்றுக்கொடுக்கி றார்கள்.
--
தன்மானத் தமிழன்.
1. In private schools there will be better infrastructure (class room, toilet, water, library and computer facilities). On the otherhand in Goverment schools, more competent teachers are there (please keep in mind that those who couldn't compete and win the teacher recruitment exams are generally working in private schools). Also, for information, many of the high class private schools are mainly dependant on the proficient, retired Goverment School teachers.
2. In private schools, the admission is based on meritt they will chuck off a non-performing students (according to the standards of the respective school) eventhough their parent are ready to pay the stipulated fees. Whereas, in goverment schools, they admitt everybody (i repeat everybody). For the information of the users in this forum, many students are coming to Government schools mainly to get SSLC certificate (inorder to facilitate obtaining passport, driving license etc,). If these Goverment Schools also start to take bright students only then where will the dull students go? Can we drop them and make them as third degree (hardship) labours?
3. Inspite of the intake of dull students, the Goverment Schools are able to produce good results (even in class XII exams where the syllabus is common).
-contd in next comment-
4. There are some comments that the Government school teachers are not accountable. My dear friends, those days were gone long back unless the teacher give good results they are being punished.
Thus (I hope), every body would accept that, while the scope of the private schools is to make money the scope of the Goverment schools is to give education to all. Considering the difference in scope of these two different entities one cannot compare them on same scale.
I sincerely request comments on my opinion please.
--
Thanmaanath thamizhan
1. In private schools there will be better infrastructure (class room, toilet, water, library and computer facilities). On the otherhand in Goverment schools, more competent teachers are there (please keep in mind that those who couldn't compete and win the teacher recruitment exams are generally working in private schools). Also, for information, many of the high class private schools are mainly dependant on the proficient, retired Goverment School teachers.
2. In private schools, the admission is based on meritt they will chuck off a non-performing students (according to the standards of the respective school) eventhough their parent are ready to pay the stipulated fees. Whereas, in goverment schools, they admitt everybody (i repeat everybody). For the information of the users in this forum, many students are coming to Government schools mainly to get SSLC certificate (inorder to facilitate obtaining passport, driving license etc,). If these Goverment Schools also start to take bright students only then where will the dull students go? Can we drop them and make them as third degree (hardship) labours?
3. Inspite of the intake of dull students, the Goverment Schools are able to produce good results (even in class XII exams where the syllabus is common).
--contd--
valga jaya.
அரசுப் பள்ளிகளின் தரம் உயர ஒரு யோசனை...
அணைத்து அரசு ஊழியர்கள், அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளி ஆசிரியர்கள், அரசு மருத்துவர்கள், மருத்துவமனை ஊழியர்கள் இவர்களின் பிள்ளைகள் அடுத்த கல்வி ஆண்டு முதல், அரசுப் பள்ளிகளில்தான் படிக்க வேண்டும் என்ற ஒரு உத்தரவு போதும்.
அப்போது தான் அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளின் தரம் உயரும். சம்பந்தப்பட்ட கல்வித்துறை அதிகாரிகள் ஒழுங்காக கடமையை செய்வார்கள். தனியார் பள்ளிகளின் கல்வி கட்டண கொள்ளையும் தடுக்க முடியும்.
புதிய அரசு இதை செயல்படுத்துமா?
நன்றியுடன்,
சரவணன்
-----
இது விஷமத்தனமான யோசனை. மற்றவர்கள் தங்கள் குழந்தைகளை விரும்பிய பள்ளியில் படிக்கவைக்க சுதந்திரம் உள்ளது போல் அரசு ஊழியர்களுக்கும் உரிமை உள்ளது.
இப்படி யோசனை வழங்கும் நீங்கள் அரசுப் பணியில் இருந்திருந்து உங்கள் குழந்தைகளை கட்டயப்படுத்தி சேர்ப்பதை அனுமதிப்பீர்களா .
--
தன்மானத் தமிழன்.
In Spectrum issue, Rasa followed the previous govt. policy then why all the dramma. If the govt do the wrong thing everyone has rights to question. If savukku opposes DMK, you are satisfied. But the same Savukku opposes ADMK you are saying these type of commnet. Very Well done keep it up
முழுவதும் உண்மை.சமசீர் கல்வி நோக்கத்தை விட்டு பாடத்திட்டத்தில ் கோட்டை விட்டு விட்டது. இன்று மத்திய செகோண்டரி CBSE பாடத்திட்டதிற்க ு அமோக வரவேற்ப்பு ஏற்படும் ஏனெனில் கல்வியின் தரம். சம சீர் கல்வியில் பன்னிரண்டாம் வகுப்பும் ச்ப்செ ஏழாம் வகுப்பும் சமமே.[/ஃஉஒடெ]
// சமச்சீர் கல்வி திட்டம் பத்தாம் வகுப்பு வரைதான். பன்னிரெண்டாம் வகுப்பு பாடம் ஏழாம் வகுப்பிற்கு சமமாக உள்ளது என்பது அதீத கற்பனை. மேலும் ஒரு விஷயம் பன்னிரெண்டாம் வகுப்பு பாட திட்டம் எந்த வித விவாதமும் இல்லாமல் அவசர அவசரமாக 2005 ல் இன்றைய முதல்வரின் ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்டது. அதன் பிறகு மூன்று வருடங்கள் வரை அதில் மாற்றங்கள் செய்யப்பட்டது.
நீங்கள் நடுநிலை வஹிப்பவர் என்று எல்லோரும் உணர வேண்டும் என்று எண்ணி இந்த கட்டுரை எழுதிநிர்கள்
சமசீர் கல்வி விஷயம் அடித்தேன் கவுத்தேன் என்று செய்ய வேண்டிய விஷயமல்ல
Standard of implemnetation is இம்போர்டன்ட். Please give some time to Jaya If we want to raise standard of education we need decisive plan and not quick fix solutions. // சமச்சீர் கல்வி திட்டம் என்பது அடித்தேன் கவிழ்த்தேன் என்று செய்தது அல்ல, ஒன்பது பேர் கொண்ட ஒரு குழு கிட்டதட்ட ஒரு வருடங்களுக்கு மேல் தமிழகம் முழுதும் பயணம் செய்து நிறைய தரப்பினரிடம் கருத்து கேட்டு அதற்கு பிறகு பாடத்திட்டம் வகுக்கப்பட்டு பிறகு அதன் மீது விவாதங்கள் நடத்தப் பெற்று பாடபுத்தகங்கள் தயாரிக்கப்பட்டு ள்ளுன. இதை தரமில்லை என்று காரணம் கூறி கைவிட்டிருப்பது மிக மோசமான அரசியல் விளையாட்டு.
// புத்தகத்தை படித்து விட்டு கருத்து பதிவு செய்ய வேண்டும். படிக்காமல் கருத்து சொல்வது சரியாக இருக்காது.
மேற்படிப்புகளுக ்கு மிகவும் உதவியாக இருக்கும். இப்போது நடைமுறையில் உள்ள பாடத்திட்டங்களா ன,சிபிஎஸ்.மெட்ரிகுலெசன்,ஆ ங்கிலோ இந்தியன்,ஸ்டேட் போர்ட் ஆகிய ஏதாவது ஒன்றை,ஒரு மாணவன் தனது திற்மைக்கேற்ப,வ சதிக்கேற்ப தேர்ந்தெடுத்து படிக்கும் உரிமையை தடுக்கும அரசின் செயல் கண்டிக்கத்தக்கத ு.சமச்சீர் கல்வி என்பது தமிழக மக்களுக்கு செய்யப்படும் துரோகச்செயல்.சமச்சீர் கல்வியை அனைத்து வகுப்புகளுக்கும ் உடனடியாக நீக்க வேன்டும்.
ஏற்கனவே இந்தி மொழி படிப்பதை தடுத்ததால் தமிழ் நாட்டினர் தேசிய நீரோட்டத்திலிரு ந்து நாம் ஒதுக்கப்பட்டுள் ளோம் என்பதை அன்வரும் கவணத்தில் கொள்ளவேண்டும்.
[ஃஉஒடெ நமெ="ஸ்ண்றஜ"]அம்மா செய்தது சரியே!
ஏன் !
RSS feed for comments to this post