முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
கேடி சகோதரர்களின் முடிவின் ஆரம்பம் ? அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 140
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
புதன்கிழமை, 25 மே 2011 00:42

 

கருணாநிதியை விட தீய சக்தி இந்த கேடி சகோதரர்கள் (கலாநிதி மற்றும் தயாநிதி) என்று சவுக்கு, “கருணாநிதியை விட பெரிய தீயசக்தி எது ?” என்று ஏப்ரல் 10ம் தேதி எழுதியிருந்தது.

அந்தக் கட்டுரையில் முக்கியமான சில விஷயங்கள் விட்டுப் போய் இருந்ததை பாண்டியன் என்ற ஒரு அன்பு வாசகர் சுட்டிக் காட்டியிருந்தார். அந்த விடுபட்டுப் போன விஷயங்களை இந்தக் கட்டுரையில் சேர்த்துப் படிப்பது பொருத்தமே.

 

பூமாலை இதழுக்கென்று புதிதாக யாரையும் வேலைக்கு அமர்த்தாமல் குங்குமம், முத்தாரம், வண்ணத்திரையில் பணியாற்றிய பத்திரிக்கையாளர்களையே சம்பளமில்லாத செய்தியாளர்களாக , பேட்டியாளர்களாக பயன்படுத்திக்கொண்டனர் மாறன் சகோதரர்கள்.

Dayanidhi_Kalanidhi_Maran_Loyola_Alumni_Association_2010_stills_05

 வீடியோ கடைகள் மற்றும் நூலகங்களின் வாயிலாக விற்பனைக்கு கொண்டு செல்லப்பட்ட இந்த வீடியோ இதழை விரும்பி பார்க்க ஆளில்லை. ஆனால் ஆட்சி அதிகாரம் தி.மு.க வசமிருந்த காரணத்தால் விற்க மறுத்த வீடியோ நூலகத்தினர், 'வில்லங்கத்தில் மாட்டநேரிடும், ரெய்டு நடத்தி ஆபாச கேசட்டுகள் இருந்ததாக வழக்குப்போட்டு லைசென்ஸ் ரத்தாகக் கூடும் ' என எச்சரிக்கப்பட்ட சம்பவங்களெல்லாம நடந்தேறியது.

 

அப்போது மாதமாதம் சேட்டிலைட் ஒளிப்பரப்பிற்காக செலுத்த வேண்டிய பணம் ஒரு பெரும் சுமையாக இருந்தது. எனவே மாறன் மாற்று வழிகளை ஆராய்ந்தார்.

 

'சன்' சேனலை நடத்த பெரும் பணம் தேவைப்பட்டநிலையில், அதற்காக இந்தியன் வங்கியை அணுகியபோது இணக்கமான பதில் கிடைக்கவில்லை இதனால் கட்சி சொத்தை -ஆயிரமாயிரம் உடன் பிறப்புகள் திரட்டி தந்த நிதியை- மந்தை வெளியிலுள்ள கும்பகோணம் சிட்டி யீனியன் வங்கியில் போட்டு, பெரியதொரு நிதி உதவி வங்கியிடமிருந்து வாங்கப்பட்டது .

 

1967 தொடங்கி தொடர்ந்து மாநிலங்களவை, மக்களவை உறுப்பினராகவும் , அடுத்து வி.பி.சிங் ஆட்சியில் நகர்புற மேம்பாட்டுத் துறை மந்திரியாகவுமிருந்த முரசொலிமாறன், தொழில் அதிபர்கள் பலருக்கு பற்பல காரியங்களை நிறைவேற்றித்தந்து நெருக்கமாக உறவுகொண்டிருந் தார். கோடம்பாக்கம் முரசொலி அலுவலக வளாகத்திலேயே சன்தொலைகாட்சி செயல்பட்டது. குங்குமம், வண்ணத்திரை, முத்தாரம் பத்திரிகையாளர்க ள் சிலரையே கூடுதலாக 500 ரூபாய் சம்பளம் தந்து சன் தொலைக்காட்சிக் கு பணிபுரியும் படி கட்டாயப்படுத்தி னர். பிரகாசிக்கமுடியாத 'சன்’ நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் சன் தொலைக்காட்சியை நிமிர்ந்தும் பார்க்காத- விளம்பரத்தாரர்கள் பொருட்ப்டுத்தாத அந்த நேரம் தூர்தர்ஷன் மட்டுமே தூள் கிளப்பிக் கொண்டிருந்தது. மாறன் சகோதர்களுக்கு படைப்பாற்றல் கிடையாது. நிர்வாகத் திறமையும் இல்லை. பார்வையாளர்களை கவரமுடியவில்லை எவ்வளவோ அனுகூலங்கள் அமைந்தும் முதலிரண்டு ஆண்டுகள் மூச்சுத் திணறி நஷ்டப்பட்டது சன் தொலைக்காட்சி.

 

*அதிகாரத்தால் அமைந்த வளர்ச்சி*

 Kalanidhi_Maran_Loyola_Alumni_Association_2010_stills_10

மீண்டும் 1996-ல் கருணாநிதி ஆட்சிக்குவந்தார். உதயசூரியனின் அதிகாரச் சுடர் சன் தொலைக்காட்சியின் சாம்ராஜ்ஜியத்திற்கு வழிகோலியது. அப்போதைய தூர்தர்ஷன் இயக்குநராயிருந்த நடராஜன் கருணாநிதிக்கு உதவியாக பல கைங்கரியங்களைச் செய்து அரசு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை அவலத்திற்கு ஆளாக்கினார். மத்திய அரசிடம் சம்பளம் பெற்றுக்கொண்டு மாறன் மகன்களுக்கு மதியூகியாகச் செயல்பட்டார்.

 

அதிகாரப் பலத்தால் மிகப்பெரிய தொழில் வர்த்தக நிறுவனங்களின் விளம்பரங்கள் சரசரவென வந்தது. சன் தொலைக்காட்சிக் கு! மளமளவென்று வெவ்வெறு மொழிகளில் சேனல்களைத் துவங்கினர். 2000ஆவது ஆண்டில் தி.மு,க ஆட்சியிலிருக்கும் போது, 'சுமங்கலி கேபிள் விஷன்' என்ற கேபிள் நெட்வொர்க் தொழிலை தயாநிதிமாறன் ஆரம்பித்தார். அது நாள் வரை சென்னையில் கேபிள் நெட்வொர்க்கின் 60 சதவிகித்தை 'ஹாத்வே' என்ற வட இந்திய நிறுவனம் தன்வசப்படுத்தியிருந்தது. 40 சதவிகிதம் ஆங்காங்கே சிறிய கேபிள் உரிமையாளர்கள் வசமிருந்தது. தயாநிதிமாறன் தடாலடியாக சென்னைகேபிள் ஆபரேட்டர்களை அழைத்து சொந்த முயற்சிகளை, ஒளிபரப்புகளை அப்படியே கைவிட்டு, சுமங்கலி கேபிள் விஷனின் கமிஷன் ஏஜென்டாகும் படி நிர்பந்தித்தார். மறுத்த கேபிள் ஆபரேட்ட்ர்கள் மிரட்டப்பட்டனர் . சென்னை மாநகராட்சி ஸ்டாலின் வசமிருந்த காரணத்தால் கேபிள் ஆபரேட்டர்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் தந்த தொல்லைகள் அவர்களை மண்டியிடச் செய்தன மாறன் சகோதரர்களிடம்!

 

'ஹாத்வே'யின் கேபிள் ஒயர்கள் ஆங்காங்கே அறுத்தெறியப் பட்டன. இந்நிறுவனம் பைபர் கேபிள் நெட்வொர்க் சிஸ்டத்திற்கு பலமான ஏற்பாடுகள் செய்துவிட்ட நிலையில் மாநகராட்சி அனுமதி மறுத்தது. மறுபுறம் தயாநிதி தந்த நெருக்கடிகளால் ஹாத்வேயின் கீழ் இருந்த கேபிள் ஆபரேட்டர்களில் 90சதவிகிதத்தினர் எஸ்.சி.வி வசம் மாறினர்.

 

இந்தியாவில் மும்பை, டெல்லி, ஹைதராபாத், கல்கத்தா உள்ளிட்ட எந்த நகரத்திலுமே இதுபோல் ஒட்டுமொத்த கேபிள் ஆபரேட்டர்களும் ஓரே குடையின் கீழ் சென்றதில்லை.

 ponnar-shankar-movie-premiere-show-stills_17_161545123

தொலைக்காட்சி, விண்தொலைக்காட்சி, தினத்தந்தியின் ஏ.எம்.என். நியூஸ் சேனல் உள்ளிட்ட தமிழ் சேனல்கள் தரக்குறைவான அலைவரிசைகளில் ஒளிப்பரப்பட்டு ஓரம் கட்டப்பட்டன. கேரளாவில் பிரபலமான 'ஏசியாநெட்' தொலைக்காட்சி தமிழில் 'பாரதி' தொலைக்காட்சியை த்தொடங்கி பற்பல தொல்லைக்களுக்காளாகி சன் குழுமத்தால் சவக்குழிக்குள் தள்ளப்பட்டது. இந்தியா டுடே குழுமத்திலிருந் து வெளிவரும் 'ஆஜ்தக்'சேனலை தமிழ்நாட்டிற்குள் ஒளிப்பரப்ப மறுத்துவந்தார் கலாநிதிமாறன். கருணாநிதி கைதான சம்பவத்தை மீண்டும் மீண்டும் வட இந்தியாவில் ஒளிப்பரப்பி மாறன் சகோதரர்களின் மனதில் இடம்பிடித்தது 'ஆஜ்தக்'. இதனால் உடனே 'ஆஜ்தக்' சேனல் தமிழ்நாட்டில் ஒளிப்பரப்ப ஒப்பந்தமானது.

 

இதற்கு பிரதியுபகாரமாக இந்திய முதலமைச்சர்களின் நிர்வாகத்திறமை வரிசையில் ஜெயலலிதா ஆகக்கடைசியில் இருப்பதாக ஒவ்வொரு ஆண்டும் கருத்துகணிப்பு வெளியிட்டது இந்தியாடுடே.

 

ஏ.என். கல்யாண சுந்தர ஐயரின் மகள் தான் முரசொலிமாறனின் மனைவி மல்லிகா மாறன். தயாநிதியின் மனைவி பிரியா, ஹிந்து ரமேஷ் ரங்கராஜனின் குடும்பத்திலிரு ந்து வந்தவர். ஆண்டாண்டு காலமாக கட்சிக்கு ஊனும், உயிரும் தந்து உழைத்த உடன் பிறப்புகள் ஆயிரமாயிரமாய் இருக்க, அவர்களிலும் அறிவிற்சிறந்த. அரசியல் அறிந்தவர்கள் பலர் இருக்க, H.F.O (Hell Freezes Over) எனப்படும் இரவு நேர விடுதி நடத்தி கேளிக்கைகளில் ஈடுபட்டிருந்த தயாநிதி மாறனை அவரது குடும்பத்தினர் அரசியலுக்கு ஆயத்தப்படுத்தினர்.

 

 அரசியலில் அடிஎடுத்து வைத்தவுடனேயே தயாநிதி மாறனுக்கு மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதி தாரை வார்க்கப்பட்டது. முதன்முதலாக பாராளுமன்றத்தில் கால் பதிக்கும் போதே 'காபினெட்' அந்தஸ்த்து அமைச்சரானார்.

 

ஜெமினி தொலைக்காட்சியில் ரவிபிரசாத், மனோகர்பிரசாத் என்ற சகோதரர்கள் பங்கு தாரர்கள். இவர்கள் இருவரும் இந்தியன் வங்கியில் ரூ700 கோடி கடன் பெற்று இன்று வரை வட்டி உட்பட கட்டவில்லை. இதை இந்தியன் வங்கி தமிழ் தினசரியில் விளம்பரமாகவே வெளியிட்டது. ஜெமினியில் கலாநிதி மாறனின் பங்கு

 

சதவிகிதமாகும். ஜெமினி நல்ல லாபகரமாகவே தொழில் செய்து பணம் ஈட்டுகிறது.இன்று வரை பிரசாத் சகோதரர்கள் இதன் இயக்குநர்களாகதா ன் இருக்கிறார்கள். மாறன் சகோதரர்களின் அதிகார செல்வாக்கின் முன்பு சட்டம் தன் கைகளை கட்டிக் கொண்டு விட்டது. பங்குசந்தையில் சன் குழுமத்தை முக்கியப்படுத்துவதற்காக, உண்மைக்கு மாறான தகவல்களையும், கணக்குகளையும் கலாநிதி காண்பித்துள்ளார். இதன் மூலம் மத்திய அரசின் SEBI அமைப்பையும், மக்களையும் முட்டாளாக்கி சன் குழுமத்தின் சந்தை மதிப்பை பிரம்மாண்டமாக உயர்த்திக்கொண் டார்.1993ல் தொடங்கிய சன் குழுமத்தை 1985லிருந்து செயல்படுவதுபோல் அவரால் எப்படிதான் கணக்கு காட்ட முடிந்ததோ..... தெரியவில்லை. சன் குழுமத்தின் கேபிள் ஆபரேஷன் கணக்குகளில் இது வரை பாதிக்கும் குறைவான வாடிக்கையாளர் கணக்கே வருமான வரித்துறைக்கு காட்டப்பட்டு வருகிறது. இதன் மூலம் பல கோடி வருமானவரி ஏய்ப்பு செய்து வருகின்றனர்.

 l2006121711649

புதிதாக வரும் திரைப்படங்கள் சன் தொலைக்காட்சிக்குத்தான் விற்க்கப்படவேண்டும் என நிர்பந்திக்கிறார்கள். இந்த நிர்பந்தங்களுக்கு உடன் படாத திரைப்படம் எவ்வளவு நன்றாக இருந்தாலும் சன் தொலைக்காட்சியின் 'டாப் 10 மூவிஸ்' திரை விமர்சனத்தில் கடைசி எண் தந்து கண்டபடி தாக்கி விடுகின்றனர்..! போதாகுறைக்கு தினகரன், குங்குமம் இதழ்களும் குதறி தீர்த்து விடுகின்றன சம்மந்தப்பட்ட திரைப்படத்தை ! இந்த ஊடகப் பலத்தை கண்டு மிரளும் தயாரிப்பாளர்கள் சன் குழுமத்திடம் சரணாகதியாகி விடுகின்றனர்

 

போட்கிளப்பில் 36 கிரவுண்ட் பரப்பளவில் கலாநிதி மாறனின் 25,000 சதுர அடியில் கட்டப்பட்ட பிரம்மாண்டமான பங்களா உள்ளது. ஐந்து நட்சத்திர ஹோட்டலைப் போல் அமெரிக்கா மற்றும் லண்டனிலிருந்து தருவிக்கப்பட்ட பைபர் மற்றும் விலை உயர்ந்த மரப்பொருட்களைக் கொண்டு அழகூட்டப்பட்டு சொர்க்கபுரியில் இருக்கும் சொகுசு மாளிகைப் போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. சென்னையே தண்ணீர் பஞ்சத்தில் வாடினாலும் இந்த பங்களாவில் உள்ள நீச்சல் குளத்தில் எப்போதும் நீர் நிறைந்திருக்கும். இந்த ஆடம்பர பங்களாவை விவரிக்க ஆரம்பிப்பது பக்கங்களை வீணாக்கிவிடும் என்பதால் இத்தோடு விட்டு விடுகிறேன். ஆனால் ஒரு காலத்தில் காமராஜர் வாழ்ந்த திருமலை பிள்ளை சாலை இல்லத்தை புகைப்படமெடுத்து, 'ஏழைபங்காளன் வாழும் பங்களா பார்த்தீர்களா....? என்று ஏளனம் செய்தவர்களின் நினைப்பு ஏனோ வந்து தொலைகிறது.

 

சுமார் 40,000 கோடிக்கு அதிபதியான கலாநிதி மாறன் தன் தந்தை முரசொலி மாறனின் மருத்துவ செலவுக்காக மத்திய அரசு செலவிட்ட ரூபாய் 40 கோடியை இன்று வரை திருப்பித் தர மனமில்லாதவராய் இருக்கிறார்

 

இதுதான் தோழர் பாண்டியன் தெரிவித்த விபரங்கள்.

 

நேற்று, விக்கிலீக்ஸ் கேபிளைப் பார்த்தவுடன், கருணாநிதியே இதை ஏற்றுக் கொள்வார். இப்போது என்ன, அவர் எப்போதோ ஏற்றுக் கொண்டு விட்டதனால் தான், அவர்களோடு சமரசமாகப் போய்க் கொண்டு இருக்கிறார்.

 

இந்த தேர்தல் முடிவுகள், திமுகவை சுனாமியில் சிக்கிய சுள்ளிக்காடாக மாற்றி அலங்கோலப்படுத்தியிருந்தாலும், இன்னும் இந்த சுனாமியில் தப்பித்து எதையாவது பிடித்து கரையேறத் துடிப்பவர்கள் கேடி சகோதரர்கள்.

 

ஏற்கனவே கேடி சகோதரர்கள், திமுக காங்கிரஸ் கட்சியுடனான உறவை முறித்துக் கொள்ளும் சூழலில், திமுக எம்பிக்களை கட்சித் தாவ வைத்து, காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளித்து, திமுகவை உடைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர் என்று தகவல்கள் கூறுகின்றன. இந்நிலையில், கேடி சகோதரர்களின் முடிவு தொடங்கியிருப்பதற்கான ஆரம்ப அறிகுறிகள் தெரிகின்றன. இது தமிழ் கூறும் நல்லுலகிற்கு மகிழ்ச்சியான செய்தியேயன்றி வேறில்லை.

 l200607159203

 

பணமா ?   எங்க... ?

2ஜி விவகாரத்தை உச்ச நீதிமன்றம் கையில் எடுத்தபிறகு சூடு பிடித்த விசாரணையை உச்ச நீதிமன்றம் வழிநடத்தியது. உச்ச நீதிமன்றம் 1999 முதல், 2008 வரை உள்ள காலத்தில் ஒதுக்கீடு செய்யப் பட்ட ஸ்பெக்ட்ரம் பற்றிய விவகாரங்களை விசாரிக்க வேண்டும் என்று சிபிஐக்கு உத்தரவிட்டது.

 

1999 முதல் 2008 வரை தொலைத் தொடர்புத் துறை அமைச்சர்களாக இருந்தவர்கள் 4 பேர். முதலாமவர் பிரமோத் மஹாஜன். அவர் இறந்து விட்டார். இரண்டாமவர் அருண் ஷோரி. அவரை சிபிஐ விசாரித்து விட்டது.   நான்காவது நபர், திஹாரில் இருக்கிறார். மூன்றாவது நபரான தயாநிதி மாறனை சிபிஐ இன்னும் விசாரிக்கவில்லையே என்ற ஐயம் இருக்கவே செய்தது. ஆனால் ஐயப்படத் தேவையில்லை. விசாரித்துக் கொண்டிருக்கிறோம் என்று, சிபிஐ வட்டாரங்கள் கூறுவதாக, நேற்று வெளியான எகனாமிக் டைம்ஸ் நாளேடு செய்தி வெளியிட்டிருக்கிறது.

 

தயாநிதி மாறனின் தில்லுமுல்லுகள் பற்றி விரிவாகப் பார்ப்போம்.   டிசம்பர் 2006ல் ஏர்செல் நிறுவனம் மற்றும் அதன் துணை நிறுவனம் டிஷ்நெட் வயர்லெஸ்ஸுக்கு தயாநிதி 14 புதிய லைசென்சுகளை ஒதுக்குகிறார். ஸ்பெக்ட்ரம் வேண்டிய ஏர்செல்லின் விண்ணப்பத்தை நெடுநாட்களுக்கு தயாநிதி மாறன் நிலுவையில் ஸ்பெக்ட்ரம் ஒதுக்காமல் வைத்திருந்தார். இந்த நேரத்தில் ஏர்செல் நிறுவனத்தின் சிவசங்கரனுக்கு, அவரது நிறுவனத்தை மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் கம்யூனிகேஷன்ஸுக்கு விற்க வேண்டுமென தயாநிதி கடும் நெருக்கடி கொடுத்ததாக தெரிகிறது. விற்காவிட்டால் தொழிலே நடத்த முடியாது என்ற நெருக்கடியில் சிவசங்கரனும் தனது நிறுவனத்தை விற்று விட்டார். இதற்குப் பிறகு, ஏர்செல் நிறுவனத்துக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப் படுகிறது. ஏர்செல்லுக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப் படுகையில், ஐடியா மற்றும் ஸ்பைஸ் நிறுவனங்களின் விண்ணப்பங்கள் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கப் படாமல் நிலுவையில் இருந்தன என்பது குறிப்பிடத்தகந்தது.

 

இதற்கு நான்கு மாதங்கள் கழித்து, மேக்சிஸ் நிறுவனம், மொரிஷியஸைச் சேர்ந்த தனது துணை நிறுவனம் ஆஸ்ட்ரோ ஆல் ஏஷியா நெட்வொர்க்ஸ் என்ற நிறுவனம் மூலமாக கேடி சகோதரர்களுக்குச் சொந்தமான சன் டைரெக்ட் நிறுவனத்தில் 830 கோடியை முதலீடு செய்கிறது.

 l2007032812742

சன் டைரெக்ட் நிறுவனத்தில் ஆஸ்ட்ரோ நிறுவனம் முதலீடு செய்யும் நேரத்தைப் பார்க்க வேண்டும்.   ஏப்ரல் 2007ல் 830 கோடியை முதலீடு செய்கையில் சன் டைரெக்ட் தனது பணிகளைத் துவக்கவேயில்லை.   மேலும், சன் டைரெக்ட் தொடங்கி முதல் 5 ஆண்டுகளுக்கு நஷ்டம் என்றும், 6வது ஆண்டு முதல் தான் லாபம் கிடைக்கும் என்றும், சன் குழுமத்தாலேயே தீர்மானிக்கப் பட்டிருந்தது. இந்த நிலையில் தான், ஆஸ்ட்ரோ நிறுவனம் 830 கோடியை முதலீடு செய்கிறது. சன் டைரெக்ட் நிறுவனத்தின் ஒரு பங்கை 70 ரூபாய் ப்ரீமியம் கொடுத்து வாங்குகிறது. இந்த 830 கோடி ரூபாய் வெறும் 20 சதவிகித பங்குகளுக்கானது என்பது குறிப்பிடத் தகுந்தது. மீதம் உள்ள 80 சதவிகிதத்தை கலாநிதி மற்றும் காவேரி கலாநிதி வைத்திருக்கின்றனர்.

 

வாங்குகையில் சன் டைரெக்ட் நிறுவனத்தின் மொத்த மதிப்பு என்று, 3320 கோடி தொகையை நிர்ணயம் செய்கிறது ஆஸ்ட்ரோ. இந்த டீல் முடிந்த மறு நாள், ஸீ குழுமத்தின் டிடிஎச் நிறுவனமான டிஷ் நெட்டின் ஒரு பங்கின் விலை மும்பை பங்குச் சந்தையில் 61.25.   டிஷ் நெட்டின் மொத்த மதிப்பு 2622 கோடி. இந்த மதிப்பு டிஷ் நெட் தனது சேவையை தொடங்கிய பிறகு நிர்ணயம் செய்யப் பட்டது என்பது குறிப்பிடத் தகுந்தது. இந்த நிலையில் எதற்காக ஆஸ்ட்ரோ நிறுவனம் இவ்வளவு அதிக தொகை கொடுத்து வாங்க வேண்டும் ? இது என்ன மாம்பலம் மார்க்கெட்டில் கத்திரிக்காய் வாங்குவதா ? இந்த மர்மத்தைத் தான் சிபிஐ விசாரித்து வருவதாகத் தெரிகிறது.

 

இது மட்டுமல்லாமல், ஆஸ்ட்ரோவின் ஆனந்த கிருஷ்ணன், கேடி சகோதரர்களுக்குச் சொந்தமான சவுத் ஏஷியா எஃப்எம் என்ற நிறுவனத்தில் ஆகஸ்ட் 2009ல் 20 சதவிகித பங்குகளுக்கு ஈடான தொகையாக 450 கோடியை முதலீடு செய்கிறார். இந்தியாவில் 45 நகரங்களில் எப்எம் சேவையை நடத்திக் கொண்டிருக்கும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் பிக் எப்எம் நிறுவனத்தின் மொத்த மதிப்பீடே 300 கோடி என்று இருக்கையில், 20 சதவிகித பங்குகளுக்கு எதற்காக 450 கோடி ரூபாயை ஆஸ்ட்ரோ நிறுவனம் கேடி சகோதரர்களுக்கு வழங்க வேண்டும் ?

 

இந்த விவகாரத்தில் சிக்கும் மற்றொரு பெருந்தலை அப்போலோ மருத்துவமனையின் பிரதாப் ரெட்டி. பிரதாப் ரெட்டியின் மருமகன் ஏர்செல் நிறுவனத்தில் 25 சதவிகித பங்குகளை வைத்திருக்கிறார். எகனாமிக் டைம்ஸ் நாளேடு, அப்போலோ மருத்துவமனையை தொடர்பு கொண்டு இது குறித்து கேட்ட போது, மறுத்திருக்கிறார்கள். இந்த பணக்காரர்களுக்கு எவ்வளவு பணம் வந்தாலும் பத்தாது போலிருக்கிறதே…..

 l200606289014

 

உங்க டாடா நிறுவனத்த நீங்க ஏன் சன் டிவிக்கு விக்கக் கூடாது ?

இந்த அத்தனை விவகாரங்களையும் சிபிஐ விசாரித்து வருகிறது. இது குறித்து முதல் தகவல் அறிக்கை ஜுலை முதல் வாரத்தில் தாக்கல் செய்யப் படும் என்று தகவல்கள் கூறுகின்றன. தாக்கல் செய்யப் பட்டால், திஹார் சிறையில் தள்ளப்படும் நான்காவது எம்.பியாக தயாநிதி மாறன் இருப்பார்.

 

கேடி சகோதரர்களுக்கு அடுத்த பெரிய அடியாக வந்தது விக்கிலீக்ஸ் கேபிள்கள்.   எல்லாவற்றிலும் ஆதாயம் பார்க்கும் மனிதர்கள் இருக்கத் தானே செய்வார்கள்.   இந்து ராம், இதிலும் ஆதாயம் பார்த்திருக்கிறார்.   விக்கி லீக்ஸ் கேபிள்கள், ராமிடத்தில் வந்து இரண்டு மாதங்கள் ஆனாலும், தேர்தல் முடிவுகளுக்காக காத்திருந்து, இப்போது அதை வெளியிட்டு, ஜெயலலிதாவிடம் நல்லபிள்ளை பெயர் வாங்கியிருக்கிறார்.  

 

May-24-e

 

கடந்த 5 ஆண்டுகளாக, ராம், கருணாநிதிக்கு அடித்த ஜால்ரா சத்தம் காதைக் கிழித்ததை ஜெயலலிதாவும் அறிவார். ஆனாலும், இந்து பத்திரிக்கையின் ஆசிரியராக நீடிக்க வேண்டும் என்ற வெறி, ராமை, சுயமரியாதையை கஸ்தூரி அன்ட் சன்ஸ் வாசலிலேயே கழற்றி வைத்து விட்டு, ஜெயலலிதாவை இன்று சந்திக்க வைத்துள்ளது. பணமும் அதிகார போதையும் மனிதர்களை எப்படியெல்லாம் மாற்றுகிறது பாருங்கள்.

 

இந்த விக்கிலீக்ஸ் கேபிளில், அமேரிக்க துணைத் தூதரக அதிகாரி, டேவிட் டி.ஹுப்பர் என்பவரிடம் உரையாடிய போது தயாநிதி மாறன் தெரிவித்ததாக சில கருத்துகளை அவர் அமேரிக்க அரசாங்கத்துக்கு உளவு அறிக்கையாக அனுப்பியுள்ளார். இந்த உரையாடல் நடைபெற்றது 23 பிப்ரவரி 2008ல்.

 l200608019362

 

எல்லா துட்டையும் நானே எடுத்துக்குவேன்

அந்த உரையாடலின் போது, தயாநிதி மாறன், “இப்போது உள்ள நிலை தொடர்ந்தால், திமுக இப்போது உள்ள எம்பிக்களில் பாதியை மீண்டும் பெறுவதே கடினம். அதிகாரம் கைக்கு வந்தவுடன், அரசியலில் பணம் பண்ணுவதே குறிக்கோள் என்று செயல்படுகிறார்கள். இலவசங்கள் கொடுப்பதால் எந்தப் பலனும் இல்லை. கொடுத்ததை வாங்கி, மறந்து விட்டு, தேர்தல் நேரத்தில் இப்போது என்ன தருவீர்கள் என்று கேட்பார்கள்.” என்று கூறியிருக்கிறார் மாறன்.   அந்த அமெரிக்க அதிகாரி, அந்த கேபிளிலேயே, மாறனின் பதவி பறிக்கப் பட்டதாலும், திமுக தலைவருடனான உறவு முறிந்து விட்டதாலும், “ச்சீ ச்சீ இந்தப் பழம் புளிக்கும்” என்ற அடிப்படையிலேயே மாறன் இந்தக் கருத்தை தெரிவித்ததாகவும், இதற்கு முன்பு மாறனும் இலவச டிவி விழாக்களில் பங்கெடுத்தவர் தான் என்றும் குறிப்பிடுகிறார்.

 23dayanidhi_2_63753_637539a

இதையடுத்து ராகுல் காந்தி ஒரு பிரபலமான தலைவர் என்றும், அவருக்கு பெரிய எதிர்காலம் உள்ளது என்றும் மாறன் கூறியதாக குறிப்பிடும், அமேரிக்க துணைத் தூதர், ராகுல் காந்தி வட இந்தியாவில் ஆனது போல, தானும் தென்னிந்தியாவில் ஆகலாம் என்ற அபிலாஷையின் அடிப்படையிலேயே தயாநிதி மாறன் இந்தக் கருத்தை தெரிவித்ததாகவும் கூறுகிறார்.

 

இதில் நாம் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால், முன்ன பின்ன தெரியாத வெள்ளைக்காரனிடம் உண்மைகளை பட்டவர்த்தனமாக பேசும் இந்த அயோக்கியர்கள், தங்களுக்கு வாக்களிக்கும் பாமர மக்களிடம் பொய்யைத் தவிர வேறு எதுவுமே பேசுவதில்லை என்பதுதான்.   இந்த அயோக்கியர்களுக்கு வாக்களித்து அதிகாரத்தை அளிக்கும் பாமர மக்களிடம் பொய்யையும் புனைசுருட்டையும், நேரிலும், தொலைக் காட்சி மூலம் அவிழ்த்து விடும் இவர்களைப் பற்றி அந்த அமேரிக்கர்கள் என்ன மதிப்பீடு வைத்திருக்கிறார்கள் என்பதை இப்போதாவது புரிந்து கொள்வார்களா ?

 

அடுத்த விவகாரம், மற்ற மாநிலங்களில் உள்ள தலைவர்களைப் பற்றி விக்கிலீக்ஸ் கேபிள்கள் வெளியான போது, மகிழ்ச்சியோடு அதை செய்தியாக வெளியிட்ட சன் டிவி, மாறனின் உண்மைகள் அம்பலமான போது அமைதி காத்தது குறிப்பிடத் தகுந்தது.

 

எக்கனாமிக் டைம்ஸுக்கும், விக்கிலீக்ஸ் கேபிளை வெளியிட்டதற்காக இந்து நாளேட்டுக்கும் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்கள் கேடி சகோதரர்கள். இந்த கேடி சகோதரர்கள் வக்கீல் நோட்டீஸ் அனுப்பி ஊடகங்களை மிரட்டுவதை ஒரு தொழிலாகவே வைத்திருக்கிறார்கள்.

 ET_NOTICE_1_Page_06

பெரும் பொருட்செலவில் எடுக்கப் பட்ட எந்திரன் படம் காலியாக ஓடுகிறது என்று டெக்கான் க்ரோனிக்கிள் நாளேடும், தினமணி நாளேடும் செய்தி வெளியிட்டன.   இதையடுத்து இந்த இரண்டு நாளேடுகளுக்கும் வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார்கள்.   தினமணி நாளேடு, இணைய தளத்தில் கிடைக்கும் எந்திரம் திரைப்படம் என்று பதிலுக்கு செய்தி வெளியிட்டதும் வாயை மூடிக் கொண்டு அமைதியானார்கள்.

 

ஊர் உலகத்தில் இவர்களுக்கு மட்டும் தான் வக்கீல்களைத் தெரியும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்களா ?   மற்றவர்கள் யாருக்கும் வக்கீலையே தெரியாதா ? இவ்வளவு பணம் வைத்திருந்தாலும் சரியான முட்டாள்களாக இருக்கிறார்களே.. ? எக்கனாமிக் டைம்ஸ் நாளேடு, இவர்களின் கருத்து என்ன என்பதை கேட்டறிய மின்னஞ்சல் மூலமாகவும், தொலைபேசி மூலமாகவும் தொடர்பு கொண்ட போது ஏன் பதில் கூறவில்லை ?   சரி, செய்தி வெளியிட்டதற்காக எக்கனாமிக் டைம்ஸ் நாளேட்டிற்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினீர்களே கேடி சகோதரர்களே….   உங்களைப் பற்றி விசாரிக்கிறார்கள் என்று, சிபிஐ ஐப் பற்றி ஒரு தகவல் வந்துள்ளதே… ஏன் சிபிஐக்கு நோட்டீஸ் அனுப்பவில்லை… ? டவுசரை கழற்றி விடுவார்கள் என்பதால் தானே… ? நீங்கள் நோட்டீஸ் அனுப்பினாலும் அனுப்பாவிட்டாலும் டவுசரை கழற்றத் தான் போகிறார்கள்.

 

அப்படி சிபிஐ தனது கடமையைச் செய்யத் தவறினாலும், கோடை விடுமுறைக்குப் பிறகு நீதிமன்றம் திறந்ததும், பிரசாந்த் பூஷண் உங்களுக்காக ஒரு சிறப்பு மனுவை தாக்கல் செய்வார். கவலைப் படாதீர்கள்.   உங்களின் முடிவு ஆரம்பமாகி விட்டது. உங்களின் ஆக்சிஜனாக இருக்கும் கேபிளை அறுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை ஜெயலலிதா எடுக்க இருக்கிறார்.   அப்போது ஜெயலலிதாவுக்கும் வக்கீல் நோட்டீஸ் அனுப்புகிறீர்களா… இல்லை காலில் விழுகிறீர்களா என்பதைப் பார்ப்போம்.

 

Comments  

 
0 #119 uzhaipali 2012-06-11 11:48
Sun TV is the Big support for maran brothers. but these idiots are not giving enough salary to their employees. Sun TV staffs will feel happy if CBI arrest the KD brothers. Thanks to Jayalalitha, Sun TV is not coming in many parts of Tamilnadu.
Quote
 
 
0 #118 uzhaipali 2012-06-11 11:46
Sun Tv Network is the big support for Maran Brothers. But these Idoits are not giving enough salary for their employees. Thanks to Jayalalitha, Sun Network Channels are not coming in many parts of tamilnadu. all the sun tv employees will feel happy if KD brothers are arrested.
Quote
 
 
+1 #117 m.selvaraju 2012-03-24 22:41
DMK MEANS CORREPTION & RAVIDIESAM
Quote
 
 
+2 #116 uma 2012-01-17 14:33
இன்றுவரை இவன் கைது செய்யப்படவில்லை .
Quote
 
 
-2 #115 அப்துல் 2011-09-25 18:11
சவுக்கு தேக்குனு எத்தன வந்தாலும் அவஙல ஒன்னும் செய்ய முடியாது...அவங பன முதலாலிகல்...
Quote
 
 
-1 #114 KO.ரஙகன் 2011-08-28 11:30
சவுக்கின் விமர்சனம் படு ஜோர். எனக்கு ஒரு சநதேகம். பதவிக்கு வந்தால் எல்லோரும் காசுப் பித்து பிடித்துதானே அலைகிறார்கள். இதில் கருணா குடும்பம் மட்டும் தானா உஙகள் பார்வையில் பட்டது.
Quote
 
 
-2 #113 tamilan-india 2011-08-18 14:49
This article clearly shows the vengence of Iyanagiram-videos run by Srilankan tamils. since maran brother were competative to them they have submitted all kind of absurd informations.
Quote
 
 
+1 #112 kkk 2011-08-18 14:46
ஹ்ஹ்ஹ்ஹ்
Quote
 
 
+1 #111 yuyuthsu 2011-08-13 14:22
If is there any belief in re-birth i curse on behalf of lankan tamils who have died, suffered for the cause of tamil ealam, that entire members of the karunanidhi family to take maru-janma in sri lanka, suffer unbearable miseries and perish under the similar rules that could be delivered like rajapakse.
Quote
 
 
0 #110 OhGosh 2011-07-29 03:55
Regarding the girls who married them: It could be for money on the part of the girls or it is possible that they got cornered (rape, threat, desire to help siblings, parents etc). In any case, is it not the responsibility of the rich guys from the so called backward classes to give opportunity for girls from such background and not run after the so called upper class (and in my opinion, you don't become an upper class or lower class by birth. It is based on your thinking, behavior and action) as if they are trophies to be achieved?
Quote
 
 
0 #109 KR 2011-07-23 16:11
I heard that One young Lady skin specialist practicing in Malar hospital and at Perungudi,is very close to these brothers and saxena...is it true?
Quote
 
 
+3 #108 kingfisher 2011-06-27 19:10
go to hell , KD brothers!
Quote
 
 
+3 #107 Ramesh babu 2011-06-17 23:01
vairu erethu iyya ethai padikayul
Quote
 
 
+1 #106 Panndyan Ramasamy 2011-06-13 22:15
Upputh thinndavan thanni kudippan.
Quote
 
 
0 #105 siddiq 2011-06-12 18:33
maran brothers..... enna vannuvaanga....oru govt la business panna vaaipu illatha pothu....... ,favour aana govt la aatam poda thhan sevaanga..... athu thappe kidaithu.............note..... intha ulagatha porutha varaikum..........en american countru ah paarunga....... avan seyyatha attuliyuma,naas ama,ethana pera konnutaan, evvalo sothe kolla adichitaan.....aanal innumum avan than world super...... avanuka puriyanum...... avanuku thappa theriyala..... athan pirachanai..... yen namma naatula intha rss um bjp bastards pannatha attuliyama..... aaga savukku verum oru information mattum thaan...... ethu savukku solli theriya vendiyathu illai..... savukkum onnum pudunga pova thillai..... ellam avan seyal.....
Quote
 
 
-11 #104 siddiq 2011-06-12 18:23
dei.....moodungada...... savuku oru bastard...... ulaguthala ennamo nadukuthu....... athuku ethu para va illai...... innaiku arasiyalla evan yokian....... avana thirinthina thhan undu....... mudalla sattathaiyam politicians yum matthunga....athuku munnadi...makkal mulikanum...... naama aalunga mgr ,jaya,nalai vijaykanth,apro m vijay nu thaan mudhalvar aakuvaanga... u see kerala....kerala people..... they r best example for us
Quote
 
 
0 #103 sivaraja 2011-06-05 21:12
thankstosavukku welikeit
Quote
 
 
0 #102 venkat iyer 2011-06-04 22:03
any how they reserved a seat at thigar jail, please just see their pathway, how they came? as per their family back up they are no millionaire. The government should recover their property.
Quote
 
 
+7 #101 கோபு 2011-06-02 18:09
கூடிய விரைவில் இவர்களும் உள்ளே செல்லும் நேரம் வெகு தொலைவில் இல்லை. இந்தியா சுதந்திரம் பெறுவதற்க்கு முன்னே இருந்த வெள்ளையனே பரவாயில்லை. பணம் பணம்ன்னு இப்படி அலையறாங்களே, சொந்தமா கஷ்டபட்டு சம்பாதிக்கறதுக் கு அலைஞ்சா பரவாயில்ல., அடுத்தவன மிரட்டி, தொழில கெடுத்து, அடிச்சி, கொலை செய்து அதன் மூலம் வரும் பணம் ரொம்ப நாள் நிக்காது... அவங்களோட அழிவ பாக்கறதுக்காகவே உயிரோட இருக்கனும்.........
Quote
 
 
0 #100 niraimozhi 2011-06-02 13:56
தமிழ் சமூகங்களின் கூட்டமைப்பு-போஸ்டர் பார்த்தென்
Quote
 
 
+6 #99 T G Ramamurthy 2011-06-02 12:58
இப்போதும் அவர்களின் ஆணவம்,அதிகாரம் அடங்கவில்லை.இப்படி ஆகிவிட்டதே என்ற குற்றஉணர்வு கூட அவர்களுக்கு இல்லை. அவர்கள் மாறுவார்களா? ஊரை அடித்து உலை யில் போட்டு நாம்மட்டும் நன்றாக இருக்க வேண்டும் என நினைக்கிறார்கள் .என்ன செய்வது?
Quote
 
 
+6 #98 Nai Sekar 2011-06-02 09:44
தினமணி:: நினைத்தாலே அதிர்ச்சிதரத்தக ்க துணிகரமான கொள்ளை! தமிழ்நாட்டைச் சேர்ந்த மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் தயாநிதி மாறன் 323 தொலைபேசிகளைத் தன்னுடைய வீட்டோடு இணைக்குமாறு பி.எஸ்.என்.எல்.லைப் பணிக்கிறார். இந்த 323 இணைப்புகளும் அமைச்சரின் பெயரில் அல்ல சென்னை பி.எஸ்.என்.எல். பொது மேலாளர் பெயரிலேயே இணைக்கப்படுகின் றன.

இவை வெறும் 323 தொலைபேசி இணைப்புகள் அல்ல - இவை ஒரு தொலைபேசி இணைப்பகமே; இந்த இணைப்பகம் அமைச்சர் குடும்பத்து வியாபார நலனுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட் டுள்ளது. இதற்காக 3.4 கிலோ மீட்டர் நீளத்துக்கு பொது வீதியில் "ரகசியமாக' கேபிள்கள் பதிக்கப்பட்டுள் ளது. வீட்டிலிருந்து குடும்பத்து வர்த்தக நிறுவனத்துக்கு இணைப்பு தரப்பட்டிருக்கி றது. இதனால் பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் இழப்பு.

அவருடைய இந்த இணைப்பக ஊழலை விசாரித்த மத்தியப் புலனாய்வுக் கழகம் (சி.பி.ஐ.) இந்த மோசடிக்காக தயாநிதி மாறன் மீது நடவடிக்கை எடுக்குமாறு மத்தியத் தகவல் தொடர்புத்துறை செயலருக்கு 10.9.2007-ல் கடிதம் எழுதியது. இந்தக் கடிதம் ஒரு பெட்டிச் செய்தியாகவும் சி.பி.ஐ. அறிக்கையின் சாரம் தனிச் செய்தியாகவும் தரப்பட்டுள்ளது. படியுங்கள், படியுங்கள் படித்துக்கொண்டே இருங்கள்.

323 தொலைபேசி இணைப்புகளை தயாநிதி மாறன் பொழுதுபோக்குக்க ாக வைத்துக் கொள்ளவில்லை. சென்னையில் தான் வசித்த போட்கிளப் சாலை வீட்டிலிருந்து அண்ணா சாலையில் அண்ணா அறிவாலயத்தில் உள்ள சன் டி.வி. அலுவலகம் வரையிலும் தன்னுடைய குடும்ப நிறுவனத்தின் பயன்பாட்டுக்காக த் தனிப்பட்ட முறையில் தொலைபேசி இணைப்புக் கேபிள்களைப் பதித்துக் கொண்டிருக்கிறார ். தன்னுடைய வீட்டுடனான 323 தொலைபேசி இணைப்புகளையும் மோசடியாக தன்னுடைய சகோதரர் கலாநிதி மாறனின் சன் டி.வி. குழுமத்தின் டி.வி. நிகழ்ச்சி ஒளிபரப்புகளுக்க ுப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார ். -தொடர்கிறது
Quote
 
 
+5 #97 Nai Sekar 2011-06-02 09:42
இந்த 323 இணைப்புகளில் முதல் 23 இணைப்புகள் 24372211 முதல் 24372301 வரையிலான எண்ணில் செயல்பட்டவை. அடுத்த 300 இணைப்புகள் 24371500 முதல் 24371799 வரையிலானவை. எல்லா தொலைபேசிகளும் 2437 என்ற எண்ணுடன் தொடங்கியதால் 323 இணைப்புகளும் ஒரே தொலைபேசி இணைப்பகத்தைச் சேர்ந்தவையாகச் செயல்பட்டன. 2007 ஜனவரி முதல் பல மாதங்களுக்கு இந்த இணைப்பகம் சன் குழுமத்துக்காகப ் பயன்படுத்தப்பட் டது.

இவை சாதாரண தொலைபேசி இணைப்புகள் அல்ல; விலைமதிப்புள்ள ஐ.எஸ்.டி.என். இணைப்புகளைக் கொண்டவை. செயற்கைக் கோள்களைவிட அதிக விரைவாக உலகின் எந்தப்பகுதியிலி ருந்தும் எந்தப் பகுதிக்கும் செய்திகளையும் படங்களையும் விடியோ காட்சிகளையும் நொடிக்கணக்கில் கொண்டுபோய்ச் சேர்க்கும் அதிநவீன தகவல் தொடர்பு இணைப்புகளாகும்.

டிஜிடல் வழியிலான தகவல்களைக் கொண்டுபோய்ச் சேர்க்கவும் விடியோ கான்ஃபரன்சிங் சேவை அளிக்கவும் ஆடியோ, விடியோ சேவைகளை அளிக்கவும் வல்லவை இந்த இணைப்புகள். சுருக்கமாகச் சொன்னால் சன் குழுமத் தொலைக்காட்சி நிறுவனங்கள் வெகு திறமையாகச் செயல்பட பெரும் பங்காற்றியவை.

இதை சன் குழுமம் தனிப்பட்ட முறையில் வாடகைக்கு அமர்த்தியிருந்த ால் கோடிக்கணக்கான ரூபாய்கள் இதற்காகச் செலவிட வேண்டியிருந்திர ுக்கும். ஆனால் அமைச்சரின் அபாரமான உத்தியால் இவை அனைத்தும் நயா பைசா செலவில்லாமல் முழுக்க முழுக்க இலவசமாகவே குடும்ப வியாபாரத்துக்கு ப் பயன்படுத்தப்பட் டன.

இது அமைச்சரின் சொந்த உபயோகத்துக்காக மட்டுமே ஏற்படுத்தப்பட்ட இணைப்பகம் என்று பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ஒரு சில ஊழியர்களைத் தவிர வேறு யாருக்கும் தெரியாதவண்ணம் மிகமிக ரகசியமாக இது வைக்கப்பட்டிருந ்தது என்று இந்த விவகாரத்தை விசாரித்த சி.பி.ஐ. தனது அறிக்கையில் தெரிவிக்கிறது.
-தினமணி
Quote
 
 
+5 #96 kanian 2011-06-01 23:01
hi

நமது கழகத்தின் முப்பெரும் விழாவினை இம்முறை புது டில்லியில் திகார் சிறையில் ஜூன் 3 அன்று நடத்தலாம் என்று நானும், பேராசிரியர் எனும் உதவி ஆசிரியரும் முடிவு செய்து உள்ளோம். அது என்ன முப்பெரும் விழா ?

ஒன்று - திகார் சிறையில் "தகத்தாய கதிரவனின்" 100 நாட்கள் நிறைவு விழா.

இரண்டு - கழகத்தின் குல விளக்கு ஒப்பில்லா "கவி" அவர்களின் திகார் சிறை நுழைவு விழா.

மூன்று - நமது கழகத்தின் டில்லி பிரதிநிதியாக அனுப்பப்பட்ட எனது "பேரன்" அவர்களின் திகார் சிறை வழியனுப்பு விழா .

ஆக கழகத்தின் உடன்பிறப்புகள் அனைவரும் விமானம் மற்றும் தொடர்வண்டிகளில் இன்றே முன்பதிவு செய்து புது டில்லி நோக்கி வரும்படி அக மகிழ்வுடன் அழைக்கின்றேன்.

அன்புடன்,
டுரியல்......
Quote
 
 
+1 #95 KK 2011-06-01 16:24
times now says "maran goes underground"

Is he escaping to other country?
Quote
 
 
+1 #94 KK 2011-06-01 16:24
times now says "maran goes underground"

Is he escaping to other country?
Quote
 
 
+1 #93 KK 2011-06-01 16:23
TIMES NOW SAYS MARAN GOES UNDERGROUND-IS HE ESCAPING TO ANOTHER COUNTRY?
Quote
 
 
+2 #92 KK 2011-06-01 16:22
BREAKING NEWS

PRASHANT BHUSHAN FILES AFFIDAVIT IN SUPREME COURT AGAINST MARAN ASKING TO ENQUIRE IN 2G SCAM AND AIRCEL AND MAXIS

Savukku appove sonnar
Adu unmai agi vittadu
அப்படி சிபிஐ தனது கடமையைச் செய்யத் தவறினாலும், கோடை விடுமுறைக்குப் பிறகு நீதிமன்றம் திறந்ததும், பிரசாந்த் பூஷண் உங்களுக்காக ஒரு சிறப்பு மனுவை தாக்கல் செய்வார். கவலைப் படாதீர்கள். உங்களின் முடிவு ஆரம்பமாகி விட்டது. உங்களின் ஆக்சிஜனாக இருக்கும் கேபிளை அறுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை ஜெயலலிதா எடுக்க இருக்கிறார். அப்போது ஜெயலலிதாவுக்கும ் வக்கீல் நோட்டீஸ் அனுப்புகிறீர்கள ா… இல்லை காலில் விழுகிறீர்களா என்பதைப் பார்ப்போம்"
"
Quote
 
 
+4 #91 mughil 2011-06-01 13:41
சவுக்கின் சாட்டையில் மாட்டியவர்கல் கன்டிப்பாக சட்டதின் பிடியில் மாட்டிகொல்வார்க ல்
Quote
 
 
+10 #90 kanian 2011-05-31 20:35
மக்களுக்கு ஏன் நிகழ்கால அரசியல், நிர்வாகம் மீது கோபம் வருகிறது ? காரணங்கள் இதோ ..

ஜனாதிபதி தகுதி :
முன்னாள் பாரத பிரதமருக்கு சமையல் வேலை செய்து பாத்திரம் கழுவியவர்.(true ??) குற்ற பின்னணி உடையவர்.

பிரதமர் :
முன்னாள் இந்திய மத்திய வங்கியின் பணியாளர். உலக வங்கி அனுபவம் உண்டு. தற்போது எதை கேட்டாலும் தெரியாது என்று சொல்பவர். இதோ சில தெரியதுகள் …

1) 2G ஊழலா .. தெரியாது

2) commonwealth games ஊழலா .. தெரியாது

3) adarsh ஊழலா .. தெரியாது

4 ) உணவு தானியங்கள் கோடி கணக்கான டன் கணக்கில் கெட்டு போகிறதா ? தெரியாது.

5) இலங்கையில் நம் மக்கள் கொல்லப்படுகிறார ்களா ? தெரியாது.

6 ) நமது மீனவர்கள் கொல்லப்படுகிறார ்களா ? தெரியாது.

தெரியாது என்று சொல்வதற்கு ஒரு பிரதமர்.

நிதி அமைச்சர்:

மேற்படி அண்ணன் எப்ப போவான் திண்ணை எப்போ காலியாகும் என்று காத்து இருப்பவர்.

உள்துறை அமைச்சர் :
வெற்றி பெற்றாரா என்ற சந்தேகம் உலகம் முழுதும் உண்டு. கருப்பு பணம் பட்டியலில் இவரது மகன் பெயர் முதலில் உள்ளதாக செய்தி. இவர் குடும்பம் பற்றி தனியாக எழுதலாம்.

முன்னாள் உள்துறை அமைச்சர் :
தனது உடை மற்றும் சிகை அலங்காரத்தில் அதிக அக்கறை உள்ளவர். டெல்லி மற்றும் மும்பையில் குண்டு வெடித்தால் கண்டு கொள்ளாதவர்.

தொலைதொடர்பு துறை :

முன்னாள் அமைச்சர் திகார் சிறையில்.
இந்நாள் அமைச்சர் மிக சிறந்த வக்கீல் (திருடர்களுக்கு ). 2G “ஜீரோ லாஸ்” என்ற தத்துவத்தை உதிர்த்தவர்.
Quote
 
 
+7 #89 kanian 2011-05-31 20:33
மத்திய வேளாண் அமைச்சர்:
இவர் எதற்கான அமைச்சர் என்பது உலகம் முழுவதும் தெரியும். கிரிக்கெட் அமைச்சர். திருடர்களின் (சாஹிட் பால்வா) கூட்டாளி. உணவு தானியங்கள் கிடங்குகளில் கெட்டு போகின்றன என்று உச்ச நீதி மன்றம் கடுமையான கண்டனம் தெரிவித்தும் அதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இவர்களின் தலைவர் :
என்ன படித்து இருக்கிறார் என்றே இந்த நாட்டுக்கு தெரியாது. தனது சொந்த நாட்டில் பிழ்ழ விற்றவர். 40 வயது மகனுக்கு இன்னும் அறிவு முதிர்ச்சி இல்லை.

முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை :
பல முறை கேடுகளுக்கு சொந்தம். இன்று சொத்து கணக்கை வெளியிட மாட்டேன் என்று சொல்லி விட்டார்.

முன்னாள் ஊழல் கண்காணிப்பு தலைவர் :
இவரைப்பற்றி நாடே அறியும். நான் என்ன சொல்ல வேண்டும்.

கருப்பு பணம் தலைவர் :
இவருக்கு இந்நாள் உள்துறை மனைவி வக்கீல். நல்ல குடும்பம்.

பாண்டிசேரி ஆளுனர் :
மேற்படி ஆளுக்கு பாஸ்போர்ட் வாங்கி கொடுத்தவர்.

தமிழ் நாட்டை பற்றி நான் ஒன்றும் சொல்லத் தேவை இல்லை.

எனவே இந்த ஊழல் எதிர்ப்பு போராட்டத்திற்கு யார் தலைவர் என்று மக்கள் பார்க்கவில்லை.

தாவூத் இப்ராஹீம் அல்லது நாதுராம் கோட்சே உயிருடன் எழுந்து வந்து போராடினாலும் மக்கள் ஏற்றுக்கொள்ளத் தயாராகி விட்டார்கள். மக்கள் பகத்சிங், சுபாஷ் அல்லது ஜெயப்ரகாஷ் நாராயணன் வரும் வரை பொருத்து கொள்ளத் தயாராக இல்லை.
Quote
 
 
+5 #88 க்ம்சுரேஷ் 2011-05-30 18:24
நன்பரே.. அவர்களுக்கு முடிவு காத்துக் கொண்டிருக்கிறது
Quote
 
 
+5 #87 ம.பொன்ராஜ் 2011-05-30 12:14
[ஃஉஒடெ நமெ="கலிரஜ்"]ஆனந்தவிகடன் பத்திரிக்கை செய்தியை படித்து காட்டாற்று வெள்ளமாய் எனக்கு கோபம் வருகிறது.....

ஒரு காலத்தில் பத்திரிக்கைகள் புரட்சிகளை ஏற்ப்படுத்தின...ஆனால் இன்று மிக அதிசய நிகழ்வான ஊழல் வழக்கில் அரசியல்வாதிகள் கைதையும் அவர்களின் சிறை வாழ்க்கையையும் மிக துக்ககரமாக வெளியிட்டு ...மக்களிடம் அனுதாபம் பெறமுயற்சிக்கிற ார்கள்...ஜாமின் எப்படியும் வாங்கிவிடலாம் ....ஆனால் மக்கள் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்க்காக இந்த கருணாநிதி கும்பல் பத்திரிக்கையை பயன்படுத்துகிறா ர்கள்....

( தலைப்பே சரியில்லை.... கருணாநிதி தழுதழுத்தார்...துடித்தார்...அம்மா -மகள் உருக்கமான சந்திப்பு உருகினார்....வேதனை...ஓலம்....கதறினார்.....கண்ணீர்விட்டார் .....பாசப்போராட்டம்... உணர்ச்சிப்பெருக ்கு.....தன் குழந்தையிடம் சாரி கேட்ட கனிமொழி...)

இந்தமாதிரி தலைப்பெல்லாம் உங்களுக்கு எம்மீனவர்கள் செத்தப்ப மறந்துபோச்சா....ஒரு இனத்தையே அழிச்சாங்களே அப்ப ஏன் இந்த மாதிரி தலைப்பெல்லம் போடவில்லை.....கருணாநிதிக்கு மட்டும்தன் கண்ணில் தண்ணீர் வருகிறதா?
பொதுஜனத்துக்கு வந்தால் தக்காளிச்சட்னி.....அதுவே கலைஞர் குடும்பத்துக்கு வந்தால் அது இரத்தம்......என்ன நியாயம் இது....

.[/ஃஉஒடெ]

நண்பா,
ஆனந்த விகடனுக்கும் சன் டி.விக்கும் இடையே இருப்பது பொருளாதார அடிப்படையில் அமைந்த புரிந்துணர்வு. நாளை மாறன் கைது செய்யப் பட்டாலும் 'தியாக திருவிளக்கு கைது 'என்று பாரதி தம்பியை வைத்து ஒரு கவர் ஸ்டோரி போடுவார்கள். இன்னும் புரியவில்லையா?
'விகடன் ஒளித்திரை'
'திருமதி.செல்வம்',
'தென்றல்'
'சிவா மனசுல சக்தி'....
இதாவது புரிகிறதா? :-* :-? சுருங்க சொன்னால் 'கூட்டு களவாணிகள்'....!!! ஆனந்த விகடனை படிப்பதை நிறுத்துங்கள்.
Quote
 
 
+2 #86 ம.பொன்ராஜ் 2011-05-30 12:07
[ஃஉஒடெ நமெ="ஆ நெல்ல்நிஷெர்"]இந்த செய்தியை படித்து பாருங்கள். சன் டிவி யை பற்றி விரிவான அலசல் கட்டுரை.. சவுக்கு எழுதுவதற்கு இன்னும் நிறைய சரக்கு இருக்கு.[/ஃஉஒடெ]
நண்பா,
நீங்கள் தகவலை விட்டுவிட்டீர்க ள் என்று நினைக்கிறேன். சரி பார்க்கவும்.
Quote
 
 
-1 #85 PARIJATHAM 2011-05-30 11:58
[ஃஉஒடெ நமெ="நெல்லை பாலாஜி"]பாஸ்....இத கொஞ்சம் பாருங்க
ஹ்ட்ட்ப்://ந்ந்ந்.வினவு.சொம்/2011/05/28/ரொந்ட்ய்-மரிஅம்-பிசை/[/ஃஉஒடெ]
--------------------------------
ம.க.இ.க. வினரது "புதிய கலாச்சாரம், புதிய ஜனநாயகம்" கமும்,மாதயையனும ்?(யு டூ புரூட்டஸ்),இலங் கைத் தமிழரது? பணத்திற்கு சோரம் போய் விட்டனர்.கனடாவிலிருந்து செயல்படும்,மே 18 இயக்கமும்,இலங்க ையில்-கனடாவில் செயல்படும் இடதுசாரி? "புதிய ஜனநாயக கட்சியும்" பயங்கரவாத தடுப்பு கண்காணிப்புக்கு உரியவை!.
Quote
 
 
+1 #84 நெல்லை பாலாஜி 2011-05-30 09:57
பாஸ்....இத கொஞ்சம் பாருங்க
http://www.vinavu.com/2011/05/28/rowdy-mariam-pichai/
Quote
 
 
0 #83 A wellwisher 2011-05-29 20:50
இந்த செய்தியை படித்து பாருங்கள். சன் டிவி யை பற்றி விரிவான அலசல் கட்டுரை.. சவுக்கு எழுதுவதற்கு இன்னும் நிறைய சரக்கு இருக்கு.
Quote
 
 
+1 #82 பரிமளம் 2011-05-29 11:04
தி.மு.க., ஆட்சி பறிபோன பரிதாபம் : தஞ்சை பெரிய கோவில் சென்டிமென்ட்: நிறைவு விழாவில், முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா பேசுகையில், "இந்த நாள் கணக்கு பார்க்கும் நாள்; கணக்கு தீர்க்கும் நாள். ராஜராஜன் காலத்தில் சதுர்வேதி மங்கலங்களை உருவாக்கினார். ஆனால், தி.மு.க., தலைவர் கருணாநிதி சமத்துவபுரத்தை உருவாக்கி, அவர் காலத்தைச் சேர்ந்த ஆதிக்க கணக்கை கருணாநிதி தீர்த்துள்ளார்'.சைவமும்,தமிழும் கலந்த பெரியார்கள் அன்று நந்தனை சிதம்பரம் கோயிலுக்குள் புகவைத்தனர்,இன் று இசை(யாழ்)சைவ தானைத் தலைவர் தொல்.திருமாவை சிதம்பரத்தின் அரசனாகவே ஆக்கி "புதிய(சைவ)கலாச் சாரத்தை" ஏற்ப்படுத்தி,அவ ர் காலத்தைச் சேர்ந்த ஆதிக்க கணக்கை கருணாநிதி தீர்த்துள்ளார்' என பேசி சென்றார்.
Quote
 
 
+1 #81 trsumathy 2011-05-28 18:43
Please do read this article in tehelka


http://www.tehelka.com/story_main49.asp?filename=Ne040611Coverstory.asp
Quote
 
 
+2 #80 K Raman 2011-05-28 16:15
Brilliant posting by Mr Writer...Congratulations !
Quote
 
 
0 #79 V.Mohan 2011-05-28 15:48
Please tell me, how two generations suffered / sacrificed for social justice? you may write in a blog.
with regards
Anniyan
------------------------------
yothee Thass or Pandit C. Ayodhya Dasa (May 20, 1845–1914) was a practitioner of Siddha medicine who is regarded as a pioneer of the Dravidian Movement.Iyothee Thass met Colonel H. S. Olcott with his followers and expressed a sincere desire to convert to Buddhism.The Bengal Renaissance refers to a social reform movement during the nineteenth and early twentieth centuries in the region of Bengal in Undivided India during the period of British rule.Subash chandrabose also a product of this Bengal renaissance.Theosophical society's Anie Besant supported Bengal Renaissance(Bra hmo Samaj)and Olcult supported Ayothy Dasar.But BRITISH COLONIAL establishment not supported "SOCIAL JUSTICE" of Bengal Hindu Revivalism in which many people sacrificed their lives like THE HINDU real founder Subrmanya Iyer who died out of Leprocy in British custody- but supported Dalith movements with the help of Christian missionaries(In dian contitution supported this-in the name of Secularism?).After indipendence(po st colony)Dravidia n movements supported British establishments for benifit of its employees in their administrations ,but C.N.Annadurai picked up pro indipendent ordinary people support(which of mixed eager for new egalitarian society(social justice).But slowly M.Karunanidhi spoilked by promoting "Caste politics" and trodden the core of the sacrifice of post colonial youths(without caste and creed)which challenged their leadership.I dont know which caste they belong during my college days-who visited my house and eat with me until they became Dalit leaders.After they joined MK's family they become more notorious and castists- insulting others with the wealth they got suddenly!.
Quote
 
 
-1 #78 K Raman 2011-05-28 14:18
மிக முக்கியமான செய்தி :

http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=India&artid=423779&SectionID=130&MainSectionID=130&SEO=&Title=
Quote
 
 
+3 #77 pandiyan 2011-05-28 13:06
Yes. too much. they are doing business with SUN NETWORK. do you think that they can run the magazine without be biased. only one option for us to avoid those magazines that we should do immly

[ஃஉஒடெ நமெ="கலிரஜ்"]ஆனந்தவிகடன் பத்திரிக்கை செய்தியை படித்து காட்டாற்று வெள்ளமாய் எனக்கு கோபம் வருகிறது.....
Quote
 
 
+4 #76 MEALMADI 2011-05-28 11:04
1930 களில் சென்னை கன்னிமாரா ஹோட்டலில் அமெரிக்க-இந்திய திரைப்பட இயக்குனர் எல்லீஸ் ஆர் டங்கனை கலைஞர் மு கருணாநிதி அடிக்கடி சந்தித்து பல காரியங்கள் சாதித்துள்ளார்-தற்போது உலகத்திற்கே பணம் வழங்கும் ஐ.எம்.எஃப். தலைவரையே ஆட்டிப் படைத்திருக்கும் (பிரான்ஸ்-நியூயார்க்)"ஜில்மா"(On Europe trip, Obama to argue against a vote for a Palestinian state) காரியங்கள் அது.இது கவிஞர் கண்ணதாசனுக்கும் ,அண்ணா காலத்து திரு.ராஜாராம் முக்கும் தெரியும்.தற்போது கலாநிதி மாறன் - டி.அனந்தகிருஷ்ணன் - தயாநிதி மாறன் போன்றோர்கள் அதை பெரிய அளவில் செய்கிறார்கள்.இதைதான் செய்யும் தொழிலே (குல)தெய்வம் என்பதா?.இவர்கள் வெற்றி பெற்றால்,நான் "காந்தா" என்று "எம்.ஆர்.ராதா" இந்த தொழிலின் மேன்மையை எண்ணி இரத்தக் கண்ணீர் வடிப்பேன்!.
Quote
 
 
+2 #75 chozhavandhan 2011-05-28 09:20
http://www.tehelka.com/story_main49.asp?filename=Ne040611Coverstory.asp

KD bros ku aapppu nichayam... but avanga panam baadhalam varaikkum pogumey... adhaan kavalaya iruku
Quote
 
 
+5 #74 pandiyan 2011-05-28 07:23
Dear Savukku Sir,
today dinamani has published a article about this "KEDI". he met sonia and dinamani suspect that this meeting may be with reg to 3rd chargesheet which is going to be submit by CBI soon. could you publish here .so that viewers can clearly understand how these KEDIs are playing too ugly in the political side.
Quote
 
 
+2 #73 anniyan 2011-05-28 05:12
I don't say "paraiyar" is insulting word, but by law it is restricted. We should obey the law unless extremely essential to disobey. I gave my opinions, so that everyone here will have healthy discussions.

Sri. Mohan,
welcome to savukku. Happy to have you among co-readers.

Let us understand each other on that case.

Please tell me, how two generations suffered / sacrificed for social justice? you may write in a blog.


with regards
Anniyan

Quoting V.MOHAN:
அந்பரே,
நான் சமூக நீதிக்காக இரன்டு தலைமுறையை இழந்த குடும்பத்திலிரு நது வந்தவன், "பறையர்" என்றால் கீழான சொல் என்று யார் சொன்னது?.மலையாளத்தில் "பறைதல்",பறையறைதல் போன்றவை செய்தி அறிவிப்பாளர்,ஊட கவியலாளர்."தலித்" என்பதே ஒதுக்கப்பட்டவர் கள் என்ற முத்திரை!-கிருஸ்தவ மிஷனரிகளின் சலுகைக்காக.இதை நிர்வாகத்திற்கு பயன்படுத்தியது காலனித்துவ சட்டங்கள்,அதன் பிரதிநிதிகளான இந்திய நிர்வாகத்திடம் இந்த டிரிக்ஸை கற்றுக் கொண்டவர் கலைஞர் மு.கருணாநிதி.
Quote
 
 
+2 #72 KALMADI 2011-05-28 01:41
Also both the ministers(KALAN IDHI MARAN and A.RAJA) kept the issue of spectrum pricing out of Cabinet and Group of Ministers’ purview. Shockingly, nobody in the government including the PMO raised a flag.-- THIS THE HEAVY PRICE(Indian people money) PAID BY MANMOHAN SINGH GOVERRNMENT TO BOTH "EXPATRIATE SRILANKAN TAMILS and M.KARUNANIDHI FAMILY to COLOBORATE" IN DESTROYING LTTE !.
Quote
 
 
+2 #71 KALMADI 2011-05-28 01:22
Quoting Ref:
Please read: http://www.tehelka.com/story_main49.asp?filename=Ne040611Coverstory.asp

The Malaysian Billionair(T.Anantha Krishnan) quoted in this link was expert in using "Dubakur" ministers in Government and also covering "White people weakness by gilma means"-which has been "halva" for Nidhi family.He started with using Indonesian ministers for his Gambling(Casino )and Lottery ticket business in Southeast Asia.Then made gilma to Burunei sultan entered crude oil business.He bought from British Telecom The Maxis,traded with British-Dutch Shell,where his relatives employed-He is cousin of Singapore billionair Ilayathambi-Rajrathnam institute and Australian Billionair.He arm twisted myny by using V,Prabakaran's network but atlast they hacked him to death after looting billions of $ of their expatriate accets with the help of Nidhi family-MK may not be a willing partner-Kani-raja may be scapegoats- the real culprits were "KD Brothers"!.
Quote
 
 
+11 #70 Kaliraj 2011-05-27 20:42
பத்திரிக்கைகள் நித்யானந்தா - ரஞ்சிதா விஷயத்தில் காட்டிய அக்கரையில் ஒரு சதவீதம் கூட ஊழலுக்கு எதிரான விஷயங்களில் தொடர்ச்சியான கட்டுரைகள் எழுதுவதில்லை.....

பத்திரிகைகளே, இப்பதான் ஏதோ கொஞ்சம் ஒழுங்கா நடக்குறமாதிரி இருக்கு...சுப்ரீம் கோர்ட் மேலே நம்பிக்கை வர்ற மாதிரி இருக்கு....அதையும் இப்படி ஜால்ரா அடிச்சு அனுதாஅபம் தேடி கெடுத்துவிட்டுற ாதீங்க ......இன்னும் நிறையபேர் திஹாரை சுத்திப்பார்க்க வேண்டியது இருக்கு...மதுரையில் ஒரு கூட்டமே இருக்கு... அதுக்கெல்லாம் தனி ரயிலே விடணும்.....

ஏற்க்கனவே, முன் அட்டை மட்டும் பிச்சுட்டா ஆனந்தவிகடனுக்கு ம், குமுதத்துக்கும் வித்தியாசம் கிடையாது என்றநிலைதான்...அந்த அளவுக்கு தரம் தாழ்ந்துவிட்டீர ்கள் ஆனந்தவிகடன்...தமிழக தினசரிகள், வார ஏடுகள் படித்தால் அறிவு வளர்ந்தது போய் , இருக்குறதும் அழிஞ்சுபோகத்தான ் செய்யுது.....இன்னும் சில எலும்புத்துண்டு களுக்காக ஆசைப்பட்டு இந்த கொள்ளைக்கூட்டதத ்திற்க்கு ஜால்ரா அடிக்காதீங்க...இதுதொடர்ந்தால் நீங்கள் மஞ்சள்துண்டை ஆதரிக்கும் மஞ்சள் பத்திரிக்கை என்றே அழைக்கப்படுவீர் கள்.....
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 149 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday3883
mod_vvisit_counterYesterday11260
mod_vvisit_counterThis week26255
mod_vvisit_counterLast week78861
mod_vvisit_counterThis month239074
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12761193