முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
கேள்விகளும், விளக்கங்களும். அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 46
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
வியாழக்கிழமை, 02 ஜூன் 2011 12:13

 

பிரகாஷ் அவர்கள், சவுக்கிடம், அவதூறாகப் பேசியதைத் தொடர்ந்து, பிரகாஷ் அவர்களை கடிந்து கொண்டது போலவே, சவுக்கைப் பற்றியும் பல்வேறு சந்தேகங்களை வாசகர்கள் எழுப்பியிருக்கிறார்கள்.   அந்த சந்தேகங்களுக்கு விளக்கம் அளிப்பது சவுக்கின் கடமை. சவுக்குக்கு அதன் வாசகர்களின் நம்பிக்கையைத் தவிர முக்கிய விஷயம் வேறு எதுவுமே இல்லை.   சவுக்கு அதன் வாசகர்களின் நம்பிக்கையை என்று இழக்கிறதோ, அன்று சவுக்கை நிறுத்தி விடலாம். சவுக்கு நடத்துவதால், பத்து பைசா வருமானம் கிடையாது என்பது உங்களுக்கு நன்கு தெரியும்.   மாறாக, ஆண்டுதோறும், சர்வர் மற்றும், மாதந்தோறும், இணைய இணைப்புக்கான செலவு தான் உள்ளது. ஆனால், நன்கொடை கூட வாங்காமல், தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என்பதே சவுக்கின் விருப்பம்.   விளம்பரங்களுக்கான முயற்சிகள் நடந்து கொண்டிருக்கிறது.

 

வாசகர்களின் பல்வேறு சந்தேகங்களைப் பற்றி விளக்கம் அளிப்பதற்கு, நண்பர் பத்மன் அவர்கள் பின்னூட்டமாக வெளியிட்டிருந்த கேள்விகளின் அடிப்படையில் தொடங்கலாம்.

 

 

 

1 - இந்த உரையாடல் இருவரிடையே நடந்த உரையாடல். பட்டி மன்ற பேச்சில்லை. உரையாடலின் அறிமுக பதிவு ஏன் இடம்பெறவில்லை?

 

முதலில் காலை 10 மணிக்கு, பிரகாஷ் அவர்கள் அழைத்ததும், வணக்கம் என்று பதில் அளிக்கப் பட்டது.   எடுத்த எடுப்பில் இந்த உரையாடலில் உள்ளது போலவே பேசினார்.   காலையில், நீதிமன்றப் பணிகளுக்காக கிளம்பிக் கொண்டிருந்த போது, இந்த உரையாடலை தொடர விரும்பவில்லை. அதனால், உடனடியாக இணைப்பு துண்டிக்கப் பட்டது. அதன் பின் தொடர்ச்சியாக பிரகாஷ் அழைத்த வண்ணம் இருந்தார். பிறகு தான், இந்த உரையாடலை பதிவு செய்யலாம் என்று உத்தேசித்து, அந்த அழைப்பு ஏற்கப் பட்டது. அதன் பதிவே இது.

 

2. சவுக்கின் நண்பர்கள் அன்பு மற்றும் பிறரைப்பற்றி எதற்கு சவுக்கிடமே குறை கூற வேண்டும்? இது தனிப்பட்ட உரையாடல். பொது விவாதமில்லை.

 

சவுக்குக்கு தகவல் தருபவர்கள் என்று, குறிப்பாக நக்கீரன் அலுவலகத்தில் நடைபெறும் விஷயங்களை சவுக்கிடம் சொல்வபர்கள் என்று, பிரகாஷ் அவர்களும், காமராஜ் அவர்களும், இந்தப் பத்திரிக்கையாளர்களை சந்தேகிப்பதாலேயே, அவர்களைப் பற்றி சவுக்கிடம் குறை கூறுகிறார்கள் என்று தோன்றுகிறது. குறிப்பாக, சவுக்கு அவர்களிடம் பணம் பெற்றிருக்கிறார் என்று கூறுவதிலிருந்து இந்தக் கருத்து உறுதி செய்யப் படுகிறது.   மேலும், ஊடகத் துறையில் ஒரு அயோக்கியத்தனமான நியதி கடைபிடிக்கப் பட்டு வருகிறது. அது என்னவென்றால், ஊரில் எவன் தப்பு செய்தாலும் எழுதுவார்கள். ஆனால், ஊடகத்துறையைச் சேர்ந்த எவனும் தவறு செய்தால் எழுத மாட்டார்கள். இந்த மரபை மீறி, நக்கீரனைப் பற்றி சவுக்கு தொடர்ந்து எழுதி வருவதால், நக்கீரன் குழுவைச் சேர்ந்த அனைவரும், சவுக்கின் மீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள் என்று அறிகிறோம். மேலும், காமராஜ் அவர்களை திருப்திப் படுத்துவதற்காக, காமராஜ் முன்னிலையில், ஸ்பீக்கர் போன் போட்டு, பிரகாஷ் பேசியதாகவும் அறிகிறோம்.

 

 

 

3 - அம்சா பத்திரிக்கையாளர்களுக்கு பணம் கொடுத்து இனப்படு கொலைகளை மறைத்தது உண்மை. பணம் பெற்றவர்கள் யார் யார்? சவுக்கின் நண்பர்கள் அம்சாவிடம் எதையும் பெறவில்லையென எப்படி அறுதியிட்டு கூறுகிறீர்கள்? அதுவும் ஒரு வரியில்? அப்படியெனில் தனிப்பட்ட உரையாடலில் எதற்கு அவர்களைப்பற்றி இது போன்ற குற்றச்சாட்டு? இவர்கள் பெறவில்லை என்றால் பிறகு வேறு யார்?. உண்மையிலேயே உங்களுக்குத் யார் எனத் தெரியாதா ?

 

திரு.விகேஷ் அவர்களோடு, சவுக்குக்கு ஏற்பட்ட தொடர்பு, 2007ம் ஆண்டு ஏற்பட்டது. அப்போது விகேஷ் ஜுனியர் விகடனில் இணை ஆசிரியராக இருந்தார்.   அப்போதெல்லாம் சவுக்கு அரசு ஊழியராக இருந்ததால், வெளிப்படையாக பத்திரிக்கையாளர்களோடு உரையாட இயலாது. பொதுத் தொலைபேசியில் இருந்து புனைப் பெயரோடு தான் உரையாட முடியும். அப்படி முன்னே பின்னே தெரியாத ஒரு நபராக, புனைப் பெயரில், விகேஷ் அவர்களை சவுக்கு தொடர்பு கொண்டு, அண்ணா பல்கலை கழகத்தில் நடைபெற்ற ஊழல் குறித்து, செய்தி வெளியிட வேண்டும் என்று வேண்டியது. இது தொடர்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்த உள்ளோம் என்றும் தகவல் கூறப்பட்டது. அந்த தொலைபேசி உரையாடல் நடந்த இடம் கூட இன்னும் பசுமையாக நினைவிருக்கிறது.   தீவுத்திடல் அருகே உள்ள ராணுவ வளாக, பீரங்கியின் அருகே நடந்தது. அதற்கு அவர், “உங்கள மாதிரி ஆளுங்களோட இதான் சார் பிரச்சினை.   தகவல் சொல்ல மாட்டீங்க.. அப்புறம், பத்திரிக்கை காரங்க நியூஸ் போட மாட்றாங்கன்னு எங்கள குறை சொல்வீங்க” என்று கடிந்து கொண்டார். அதன் பிறகு, ஜுனியர் விகடனில், ராதாகிருஷ்ணன் மற்றும், நரேந்திர பால் சிங் என்ற காவல்துறை அதிகாரிகளைப் பற்றி வந்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

அப்படித்தான் விகேஷ் அவர்களோடு பழக்கம்.   இதற்குப் பிறகு, தொலைபேசி ஒட்டுக் கேட்பு தொடர்பாக சண்முகம் கமிஷன் முன்பு ஆஜராக வேண்டும் என்று, விகேஷ் அவர்களுக்கும், சவுக்குக்கும் சம்மன் வந்தது. அந்த கமிஷனில் தான் விகேஷ் அவர்களை சவுக்கு முதன் முதலாகப் பார்த்தது.   “என்ன சார்… பெரிய ஆளா இருப்பீங்கன்னு பாத்தேன்… சின்னப் பையனா இருக்கீங்க.. சரி.. உங்களுக்கு நான் என்ன உதவி செய்ய முடியும் ? சொல்லுங்க.. உங்கள மாதிரி ஆளெல்லாம் சமுதாயத்துக்கு தேவை சார். நல்லது பண்ணிருக்கீங்க…. என்ன உதவி வேணும் சொல்லுங்க” என்றார்.   இதன் பிறகு, விகேஷ் அவர்களின் மீதான மதிப்பு மேலும் பன்மடங்கு உயர்ந்தது.

 

இதன் பிறகு, சவுக்கு அவரை சந்தித்தது செப்டம்பர் 2009 இறுதியில். சிறையில் இருந்து வெளி வந்ததும் முதலில் சந்தித்த நபர் விகேஷ். எந்தப் பத்திரிக்கையிலும், ‘டெட் லைன்’ நேரத்தில், சிறுநீர் கழிக்கக் கூட நேரம் இருக்காது. அப்படிப் பட்ட ஒரு நேரத்தில், சவுக்கு விகேஷ் அலுவலகம் சென்று, சந்தித்த போது, அலுவலகத்தில் இருந்து வெளியில் வந்து, தேநீர் வாங்கிக் கொடுத்து, கவலைப் படாதீர்கள். நல்லதே நடக்கும் என்று சொன்னார்.

 

இதற்குப் பிறகு, விகேஷ் சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் பொறுப்பில் இருந்ததால், அது தொடர்பான அரசியல் காரணமாக, போட்டி சங்கத்தினர், இவரைப் பற்றி, துண்டறிக்கைகள் வெளியிடுவதும், அவதூறு பேசுவதுமாக இருந்தனர். சவுக்குக்கு விகேஷோடு இருந்த பழக்கத்தின் அடிப்படையில், இதையெல்லாம் பொருட்படுத்தவில்லை.

 

இதன் பிறகு ஒரு நாள் ஒரு பத்திரிக்கையாளர் சவுக்கை தொடர்பு கொண்டு, “என்ன சார்.. விகேஷ் அப்பிடி இப்பிடின்னு சொல்றீங்க… இன்னைக்கு இலங்கை துணைத் தூதரகம் போயிருந்தேன்.   அங்க கெஸ்ட் லிஸ்ட்ல விகேஷ் பேரு இருக்கே..” என்று சொன்னதும் அதிர்ச்சியாகத் தான் இருந்தது.   உடனடியாக விகேஷைத் தொடர்பு கொண்டு, “சார்… நீங்க அங்க போனீங்களா” என்று கேட்டதற்கு, இயல்பாக, “ஆமாம் சார்.. நேத்து கூப்புட்டு இருந்தாங்க.. மறந்துட்டேன்” என்று கூறியவரிடம், நீங்கள் அங்கே போவது தவறில்லையா என்று கேட்டதற்கு, “நான் பத்திரிகைக் காரன்… இரண்டு தரப்பையும் கேட்டு எழுதுவது எனது கடமை.   அம்சாவை பார்க்கக் கூடாது என்று நீங்கள் சொல்ல உரிமை இல்லை.   அம்சாவிடம் நான் அன்பளிப்பு பெற்றால், கேள்வி கேளுங்கள்.   அவரைப் பார்க்கவே கூடாது என்று சொல்வது, ஊடக தர்மத்தை மீறிய செயல்” என்று கூறினார்.   இது நியாயம் தானே ?

 

இதன் பிறகு, ஆகஸ்ட் 2009 22ம் தேதி அன்று, காலை 5.30 மணிக்கு ஒரு போன். “ஒழிந்தான் விகேஷ்….   பத்திரிக்கைத் துறையைப் பிடித்த பீடை ஒழிந்தது” என்று மகிழ்ச்சியோடு, சொன்னார். அதாவது, விகேஷ் வேலையை விட்டு நீக்கப் பட்டு விட்டாராம்.

 

விகேஷின் தொலைபேசியை தொடர்பு கொண்ட போது, Number not in use என்று வந்தது.

 

அன்று காலை 7 மணிக்கு சவுக்கு விகேஷ் வீட்டில் இருந்தது.   விகேஷ் கண்ணில் கண்ணீர்.   ஒரு நிறுவனத்தில் இருந்து ஒருவரை வேலையை விட்டு எடுப்பது சகஜம். ஆனால் எப்படி நீக்கம் செய்கிறார்கள் என்று ஒரு முறை இருக்கிறது. 20 அன்று இரவு வரை விகேஷ் விகடன் அலுவலகத்தில் பணியில் இருக்கிறார். 21 அன்று அலுவலகம் சென்றவுடன், அலுவலகத்தின் செக்யூரிட்டி, விகேஷிடம், “சார் உங்களை உள்ளே விடக் கூடாது என்று சொல்லியிருக்கிறார்கள்” என்று கூறுகிறார். விகேஷ் தனது தொலைபேசியை எடுத்து எடிட்டரிடம் பேசிக் கொண்டிருக்கும் போதே, நம்பர் deactivate செய்யப் படுகிறது.   விகடன் மேலாண்மை இயக்குநரிடம் சவுக்கு கேட்க விரும்புவது, இன்று விகடன் குழுமத்தில் பணியாற்றும் அத்தனை பேரும் உத்தமர்களா ?   விருப்பு வெறுப்பில்லாமல் செய்தி வெளியிடுபவர்களா ?   இன்று ஒடுங்கிப் போய் கிடக்கும் பொட்டு சுரேஷிடிம் நீங்கள் மண்டியிடவில்லை ?   நேற்று வரை ஜாபர் சேட்டுக்கு துதி பாடி, அவரிடம் பணம் வாங்கிய, இரா.சரவணனை விட, விகேஷ் மோசமானவரா ?   அப்படியே இருந்தாலும், 19 ஆண்டுகாலம், விகடன் நிறுவனத்துக்காக ஓடாக உழைத்த ஒரு மனிதரை இப்படியா வெளியேற்றுவது ? விகடன் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர், இப்படி வெளியேற்றியதற்காக விகேஷிடம் மன்னிப்பு கேட்க கடமைப் பட்டுள்ளார். உங்கள் தந்தை நிர்வாகப் பொறுப்பில் இருந்தால் இப்படிச் செய்திருப்பாரா என்பதை யோசித்துப் பாருங்கள்.

 

இதற்குப் பிறகு, விகேஷ் தொலைபேசி ஒட்டுக் கேட்பு பற்றி செய்தி வெளியிட்டதால் கடும் பாதிப்படைந்த ஜாபர் சேட், விகேஷைப் பற்றி, கடும் அவதூறுகளைப் பரப்பினார்.     அவர் அம்சாவிடம் பெரும் தொகையைப் பெற்றுள்ளதாகவும், பல வீடுகள் வைத்திருப்பதாகவும், பல கோடிகளுக்கு அதிபதி என்றும் பத்திரிக்கையாளர்கள் மத்தியில் செய்தி கொடிகட்டிப் பறந்தது.   பல கோடிக்கு அதிபதியாக இருப்பவர், விகடனை விட்டு நீக்கப் பட்ட சில நாட்களில், பெட்ரோல் போட பணமில்லாமல் இருந்தார் என்பது, இப்படிப் பேசியவர்களுக்கு தெரியாது.

 

விகேஷைப் பற்றி, வினவு தோழர்கள் ஆதாரமில்லாமல் குற்றச் சாட்டுகளை சுமத்தியிருந்தார்கள்.   இன்று வரை, வினவு தோழர்கள் அந்தக் குற்றச் சாட்டுகளுக்கு ஆதாரம் எதையும் சமர்ப்பிக்கவில்லை.   விகேஷ் அம்சாவிடம் அல்ல, வேறு யாரிடமாவது, லஞ்சம் வாங்கினார் என்று ஆதாரத்தை கொடுத்தால், விகேஷுடனான நட்பை முறித்துக் கொள்ள சவுக்கு தயங்காது.

 

 

அன்பு.

 

அன்பு என்று அழைக்கப் படும் அன்பழகன்.   நக்கீரன் இதழின் தலைமை நிருபராக இருந்தார். 1993ம் ஆண்டு முதல் நக்கீரனில் பணியாற்றி வந்தார்.  நக்கீரன் இதழில் பல முக்கிய செய்திகளை வெளியிட்டதில் இவருக்கு பங்கு உண்டு.

 

2006ம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்ததும், கோபால், மற்றும் நக்கீரன் பத்திரிக்கையாளர்கள் மீதான வழக்குகறை வாபஸ் பெற வைக்க காமராஜ், அப்போதைய முதல்வர் கருணாநிதியை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தி வந்தார்.

 

2007ம் ஆண்டு, இப்போது மின் வாரிய சேர்மேனாக அதிமுக அரசால் நியமிக்கப் பட்டிருக்கும், ஹன்ஸ் ராஜ் வர்மா என்ற ஐஏஎஸ் அதிகாரியும், அப்போதைய தலைமைச் செயலாளர் திரிபாதி, அவரது மகன், கருணாநிதியின் செயலாளர் ராஜமாணிக்கம் ஆகியோர் சேர்ந்து நிலக்கரி இறக்குமதியில் பெரும் ஊழல் புரிந்துள்ளதாக நக்கீரனி செய்தி வெளி வந்தது. இந்தச் செய்தியை எழுதியவர் அன்பு.

 

இதையடுத்து, அன்பை அழைத்த காமராஜ், திரிபாதி தலைமைச் செயலாளர் உங்கள் மீது கோபமாக இருக்கிறார். அதனால் தலைமைச் செயலகம் போகாதீர்கள் என்று கூறுகிறார்.   ஆனால், அன்பு வழக்கம் போல தலைமைச் செயலகம் சென்ற வண்ணம் இருக்கிறார். அங்கீகரிக்கப் பட்ட பத்திரிக்கையாளர் அடையாள அட்டையை புதுப்பிக்கும் போது, அன்புவுக்கு பதிலாக, நக்கீரன் இதழில் இருந்த இளையசெல்வனின் பெயரை பரிந்துரைக்கிறார் காமராஜ்.

 

இதன் பிறகு நடந்த அரசுச் செயலாளர்களுடனான ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில், அரசை தர்மசங்கடப்படுத்தும் வகையில் பல்வேறு கேள்விகளை அன்பு கேட்கிறார்.   இது திரிபாதியை மேலும் ஆத்திரப்படுத்துகிறது. இதன் பிறகு நக்கீரன் மீதான வழக்குகளை வாபஸ் பெறுவது தொடர்பாக உள்துறை செயலர் மாலதி, திரிபாதி, சட்டத் துறை செயலர், தீனதயாளன், காமராஜ், வழக்கறிஞர்கள் பெருமாள் மற்றும் விடுதலை ஆகியோரோடு நடந்த கூட்டத்தில், திரிபாதி, நாங்கள் உங்களுக்காக உதவுகிறோம், ஆனால் அன்பு இப்படிக் கேள்வி கேட்கிறாரே என்று தன் கோபத்தை வெளிப்படுத்துகிறார்.

 

அன்பு பணியில் தொடர்ந்தால், வழக்குகளை வாபஸ் பெறுவதில் சிக்கல் வரும் என்ற ஒரே காரணத்துக்காகவே, அன்பு நெருக்கடி கொடுக்கப் பட்டு நக்கீரனில் இருந்து வெளியேற்றப் படுகிறார்.

 

அசதுல்லா.

 

இவர் தற்போது, சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தின் நிர்வாகியாக இருக்கிறார்.   பல ஆண்டுகளுக்கு முன், போலீஸ் செய்தி என்ற பத்திரிக்கையை நடத்தி பல காவல்துறை அதிகாரிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவர். அதனால் காவல்துறையால் பல நெருக்கடிகளுக்கு ஆளானவர். இவர் தந்தை ஒரு ராணுவ அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர்.   இவர் யாரையும் மிரட்டி பணம் பெற்றதாக சவுக்குக்கு இது வரை தகவல்கள் கிடையாது. வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று யாரைப் பற்றி வேண்டுமானாலும் பேசலாம் தானே….

 

சவுக்குக்கு இவர்களைப் பற்றி இவ்வளவுதான் தெரியும். அதற்காக இவர்கள் மூவரும் எந்தத் தவறையும் செய்யாதவர்கள், இவர்களைப் பற்றி சவுக்குக்கு தெரியாத விஷயங்களே கிடையாது என்றெல்லாம் சொல்ல இயலாது.   அப்படி யாருக்குமே சான்றளிக்க முடியாது என்பது உங்களுக்கும் தெரியும்.

 

4 - தினமலர் பற்றி ஏன் எதுவும் சொல்ல தயங்குகிறீர்கள்?

 

தினமலர் பற்றி சொல்ல என்ன இருக்கிறது.   அது ஒரு தமிழின விரோத நாளேடு. ஆனால் தவிர்க்க முடியாத சக்தி.   மற்றொரு ஊடக நிறுவனத்தை அடித்து நொறுக்குவோம் என்று ஒரு ரவுடி வெளியிட்ட விளம்பரத்தை முழுப் பக்கத்தில் வெளியிடும் அளவுக்கு ஒரு நேர்மையான நாளேடு.

 

5 - சவுக்கு தன்னை விடுதலைப்புலிகளுக்கு ஆதரவானவன் என கூறும்போது ஏன் விநாயக மூர்த்தி கருணாவின் பேட்டியை பக்கம் பக்கமாக வெளியிட்ட தினமலர் நாளிதழ் பற்றியோ, சோ மற்றும் சுப்பிரமணிய சாமி பற்றியோ எதையும் சொல்லவில்லை ?

 

தமிழின துரோகியாக இருந்தாலும் அவரின் பேட்டியை வெளியிடுவது தவறு என்று எப்படி சொல்ல முடியும் ? சோ மற்றும் சுப்ரமணிய சுவாமி ஆகியோர், தமிழின எதிர்ப்பாளர்கள், பார்ப்பன சனாதன தர்மத்தை தூக்கிப் பிடிப்பவர்கள் என்பதில் என்ன மாற்றுக் கருத்து இருக்க முடியும் ? ஒரு ஜனநாயக நாட்டில் அவர்களுக்கு அந்தக் கருத்து வைத்துக் கொள்ள உரிமை இல்லையா என்ன ?

 

6 - சுப்பிரமணிய சாமியோடு சவுக்குக்கு எந்த தொடர்பும் கிடையாதா? சில குறிப்புகளை சு.சாமியிடம் நீங்களே பகிர்ந்து கொண்டதாக சொல்லியிருக்கிறீர்களே?.

 

ஊழலை வெளிக் கொணர்வதற்காக, சுப்ரமணிய சுவாமியோடு மட்டுமல்ல…. யாரைத் தொடர்பு கொள்ளவும் சவுக்கு தயங்காது.

 

7 - இலங்கை அரசுக்கு எதிராக பலமாக குரல் கொடுத்த வார இதழ் நக்கீரன். அதற்காக இலங்கை அரசாங்கத்தின் எதிர்ப்பை சந்தித்திருக்கிறது. பிரபாகரன் பற்றி அவர்கள் வெளியிட்ட செய்திகளில் எழுப்பபட்ட கேள்விகள் நியாயமானதே என்பதை சவுக்கு மறுக்கிறதா? நக்கீரன் திமுக அதரவு அதனால் அவர்கள் பெற்ற சலுகைகள் தவிர்த்து அவர்களின் இன உணர்ச்சியை சந்தேகிக்கிறதா? ஆம் என்றால் எதற்கு இலங்கை அரசு இவர்களை கடுமையாக எதிர்க்கிறது? எதற்கு இவர்களைப் பற்றி சவுக்கு கடுமையாக எழுதுகிறது?

 

இலங்கை அரசுக்கு எதிராக பலமாக குரல் கொடுத்தவர்கள் தான், கேணல் ராமின் பேட்டி என்று ஒன்றை போட்டார்களா ?   பிரபாகரனைப் பற்றி செய்தி போட்டால் பத்திரிக்கை விற்கும் என்ற வியாபார நோக்கத்தைத் தவிர, வேறு எந்த நோக்கமும் நக்கீரனுக்கு கிடையாது.   மற்ற பத்திரிக்கைகளை சவுக்கு விமர்சிப்பதேயில்லை, நக்கீரனை மட்டுமே விமர்சிக்கிறது என்பது நியாயமற்ற குற்றச் சாட்டு.

 

 

8 - சில சமையங்களில் சவுக்கு செய்திகள் போடும்போது வழுக்கியிருக்கிறது. அதுபோலதான் இதுவுமா?

 

எந்த சமயங்களின் வழுக்கியிருக்கிறது என்பதை தெளிவுபடுத்தவும்.

 

9 - சவுக்கின் பிற பணிகள் என்ன? தமிழ் லீடர் மற்றும் சவுக்கு பதிப்பின் எதிர்கால நோக்க மென்ன? சவுக்குக்கு எதிர்காலத்தில் வார இதழ்கள் தொடங்கும் நோக்கமிருக்கிறதா? தராசு போல நக்கீரனை ஒழித்துவிட்டால் ஏற்படும் வெற்றிடத்தை நிரப்ப முடியும் என்கிற திட்டமா?

 

வார இதழ் தொடங்கும் நோக்கம் சவுக்குக்கு இல்லை.   சவுக்கின் பிற பணிகள் என்ன, தமிழ் லீடரின் நோக்கம் என்ன என்பதையெல்லாம் பொது மேடையில் கூற இயலாது.

 

 

10 - சவுக்கு சந்தித்த இடர்களுக்கு எதிராகத்தான் இந்த பத்திரிகை துறையா? தனிப்பட்ட விமர்சனங்கள் தவிர்த்து வேறு என்ன நோக்கம் உங்களுக்கு ?

 

ஊடகங்கள் தங்கள் பணியை செய்யத் தவறியதால் தான் சவுக்கு உருவானது.     பொது வாழ்வில் உள்ளவர்கள் தவறு செய்தால், அது தனிப்பட்ட விமர்சனங்களாக இருந்தாலும், தவிர்க்க இயலாது.

 

 

11 - வைகோ பற்றி எழுதப்போகிறேன் என சொல்லி விட்டு எதையும் எழுதவில்லை. ஏன்? யாரிடம் பயம்? அவரைப் பற்றி நீங்கள் கண்டிப்பாக எதிராகத்தான் எழுதியிருப்பீர் என்கிற சந்தேகம் உண்மையா?

 

வைகோவைப் பற்றி தமிழ் லீடர் தளத்தில் விரிவான கட்டுரை வந்திருக்கிறது.   அதற்குப் பிறகு, மீண்டும் எதற்காக என்ற காரணத்தாலேயே எழுதவில்லை.

 

12 - பகையாளியை உறவாடி கெடுத்தல் போல விடுதலைப்புலிகள் ஆதரவாளர் என சொல்லிக்கொண்டு விடுதலைப்புலிகளின் எதிர்ப்பாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்கிறீர்களா ?

 

இதற்கு, சவுக்கு வாசகர்கள் பதில் சொல்வார்கள். செங்கல்பட்டு, மற்றும் பூந்தமல்லி முகாமில் உள்ள அகதிகளைக் கேட்டுப் பாருங்கள்.   சவுக்கும், வழக்கறிஞர் புகழேந்தியும் யார் என்று சொல்வார்கள்.  நீங்கள் பின்னூட்டம் இட்டு, தெரிவிக்கும் புலி ஆதரவு, ஈழ ஆதரவை விட, பல மடங்கு உருப்படியான காரியங்களை செய்தே வருகிறோம்.

 

 

13 - கடைசியாக நீங்கள் யார் ? எதற்கு முகமூடி ?

 

முகமூடி எதுவும் அணியவில்லை.   வரும் சனிக்கிழமை அன்று நடைபெறும் புத்தக வெளியீட்டு விழாவுக்கு வந்தால் சந்திக்கலாமே…

 

அன்பு வாசகர்களே…. போதுமான விளக்கம் அளித்தாகி விட்டது என்றே தோன்றுகிறது.   இந்த பிரச்சினையை இதோடு விட்டு விட்டு, அடுத்த விவகாரத்துக்கு போகலாம் என்று தோன்றுகிறது. நீங்களும் ஆமோதிப்பீர்கள் என்று நம்புகிறோம்.

 

Comments  

 
0 #92 ArunRaj 2011-06-07 20:53
this is really good. But i feel you are 100% supporter of AIADMK. Bcoz you don't post any thing related to Secretariat and Samacheer Kalvi.
Quote
 
 
+5 #91 pirabukannan 2011-06-07 12:39
//விகேஷ் மீதும் எங்களுக்கு சந்தேகமில்லை. காரணம், உங்கள் இருவரையுமே நான் அறிவேன்//

உங்கள் நம்பிக்கையோ , சவுக்கின் நம்பிக்கையோ ஒருவரின் நம்பகத் தன்மையை தீர்மானிக்காது. விகேஷ் இலங்கை தூதரகத்திற்கு சென்றது தவறு. குறிப்பாக அந்த நேரத்தில் இலங்கை தூதரகம் எப்படி ஊடகங்களை வாங்கியது என்பது தெரிந்த பின்பும் போனது மிகப் பெரிய தவறு. வன்னியில் இருந்து தப்பி வந்த பல்லாயிரக்கணக்க ான மக்களில் ஒருவரை இந்த விகேஷ் தனியாக சென்று பேட்டி எடுத்து வெளியிட்டு இருந்தால் நான் பாராட்டி இருப்பேன். அவர் உண்மையிலேயே நல்ல நிருபராக இருக்கலாம். ஆனால் அவர் செய்தது தவறு.
Quote
 
 
+1 #90 கனிகா சம்பத் 2011-06-06 18:19
அன்புள்ள சவுக்கு, உங்கள் நேர்மை மீது எங்களுக்கு சந்தேகமில்லை. அதே போல, விகேஷ் மீதும் எங்களுக்கு சந்தேகமில்லை. காரணம், உங்கள் இருவரையுமே நான் அறிவேன். கண்ட தெருநாய்களுடைய செல்போன் அழைப்புகளுக்கெல ்லாம் நீங்களோ, விகேஷோ காது கொடுக்கத் தேவையில்லை. இன்றைக்கு நாங்களெல்லாம் பிரமிப்போடு பார்த்துக் கொண்டிருக்கும் பத்திரிகையாளர்க ளின் விகேஷ் முக்கியமானவர். அவருடைய ஒழுக்கம், நேர்மைக்கு முன்னால் இந்த பிரகாஷ் என்ன அவர் யாரையெல்லாம் கடவுளாக வணங்குகிறாரோ அவர்களில் யாருக்கும் துளி தகுதியும் கிடையாது. பிரகாஷ் வேலைபார்க்கும் கேடுகெட்ட நிறுவனத்தில் நானும் கொஞ்ச நாட்கள் வேலையில் இருந்ததால் கோபால் முதல் கொண்டு காமராஜ் அயோக்கியன் வரையில் எல்லோருடைய முகங்களையும் அறிந்தவள் என்கிற வகையில் உங்களூக்கு இதையெல்லாம் சொல்ல கடமைபட்டிருக்கி றேன். அதேபோல ஆனந்த விகடன் அலுவலகத்திலும் பீடைகள் நிறைய இருக்கிறது. காமக் கொடூரன் கண்ணன், வேலை கேட்டுப் போன என்னை எஸ்.எம்.எஸ். மூலம் என்னை விடாது துரத்தி படுக்கக் கூப்பிட்டவன். அவனையெல்லாம் விசாரித்து உரிங்க சார். என்னைப் போல பல பெண்களின் கண்ணீருக்கெல்லா ம் இந்த கேடுகெட்ட பத்திரிகையாளர்க ள் பதில் சொல்லித்தான் ஆக வேண்டும் சார். ஆனந்தவிகடன் நிறுவன மேலாண்மை இயக்குநராக இருக்கும் சீனிவாசன் பத்தி நான் இங்கே விருகம்பாக்கம் சினிமா வட்டாரத்தில் கேள்வி படுகிறேன். ...த்தூ... இவனெல்லாம் ஏன் யோக்கியன் போல வேஷம்போடுகிறான் என்றே தெரியவில்லை.
Quote
 
 
+1 #89 கோவாலு மீசை 2011-06-06 18:10
பிரகாஷ் என்கிற பொம்பளைப் பொறுக்கியைப் பற்றி தாம்பரம் அ.தி.மு.க. வட்டாரத்தில் கேட்டுப் பாருங்கள். அங்கே, ஒருமுறை அ.தி.மு.க. மகளிர் அணி பெண்களிடம் பேட்டி எடுக்கச் செல்வதாகச் சென்று, அவர்களிடம் பணம் வாங்கிக் கொண்டதோடு மட்டுமல்லாமல், அவர்களை படுக்க அழைக்க அவர்களெல்லாம் இவனை சிறுநீரால் அடித்து நொறுக்கியது மட்டுமல்ல... இவனைத் தூக்கி உள்ளே வைத்த கதையெல்லாம் யாருக்கும் தெரியாது என்று நினைத்துக் கொண்டு சவுக்கிடம் வம்புக்கு வருகிறான். இவனைப் பற்றிய கேவலமான கதைகள் ஏராளமாக இருக்கிறது. அதையெல்லாம் விவரிக்க நமக்கெல்லாம் நா கூசும். அந்த அளவுக்கு கேவலமான நடத்தைகளுக்குச் சொந்தக்காரந்தான ், கம்யூனிஸ்ட்டாக தன்னை வர்ணித்துக் கொள்கிறான். கேவலப்படுத்துகி றான் கம்யூனிஸ்ட்களை. தைரியம் இருந்தால், சவுக்கிடம் ஒண்டிக்கு ஒண்டி வாடா.
Quote
 
 
+1 #88 ராமச்சந்திரன் 2011-06-06 18:04
உங்க எல்லாரையும்விட விகேஷ் பற்றி எனக்குத் தெரியும். செய்தி என்றால் எப்படி எழுத வேண்டும் என்று அவரிடம் கற்றுக் கொண்டவர்கள் ஏராளம் பேர். அவருக்கு தொழில் முறை எதிரிகள் அதிகம் பேர். அவருடைய நேர்மையான செயல்பாடுகளும் அதனால் விளைந்த செறுக்கினாலும் அவர் மீது எரிச்சல் அடைந்தவர்கள் பலர்தான், அவாவரை வீழ்த்த நேரம் பார்த்து காத்திருந்து வீழ்த்தினார்களே தவிர, அவர் மீது யாரும் பல் போட்டு பேசி விட முடியாது. அந்த அளவுக்கு அவரைவிட நேர்மையாக இருப்பவர்களை நான் பார்த்ததில்லை. எத்தனையோ செய்திகளை நான் அவருக்கு உங்களைப் போலவே கொடுத்திருக்கிற ேன். ஒரு செய்தியிலும் பலன்களாக தனக்கு என்ன கிடைக்கும் என்று எதிர்பார்க்க மாட்டார். செய்தியில் தவறு இருந்தால், கிராஸ் செக் செய்து கண்டு பிடித்து விடுவார். அதையும் கூட முகத்துக்கு எதிராகவே, ‘பாஸ் கோவிச்சுக்காதீங ்க... செய்தியில் தவறு இருக்கிறது” என்று வெளிப்படையாகவே சொல்ல்விடுவார். நான் பார்த்தவரையில், யாருக்கும் எதற்கும் அஞ்சாத நிருபர் அவர். நீங்கள் சொல்வது போல, அவர் தவறானவர் என்று யாராவது ஆதாரங்களோடு நிரூபித்தால், அவரோடு இருக்கும் உறவை நானும் துண்டித்துக் கொள்ள தயாராக இருக்கிறேன். மூணு பெண்டாட்டிக்கார ன், ஐந்து பெண்டாட்டிக் காரன், அடுத்தவன் பணத்தை களவாடித் தீர்த்தவனெல்லாம ் வாய்புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று வாய்க்கு வந்ததை சொல்வதை ஒருகாலும் அனுமதிக்க முடியாது.
Quote
 
 
+1 #87 m.vasu 2011-06-06 16:16
puligalukkuappa l putthacam tamilinathurogi galal uruvakkapattadu ithanai savukkueppati velietalam
Quote
 
 
0 #86 m.vasu 2011-06-06 16:13
puligalukkuappa l puttthagam t
tamilinavirothi galal veliitappatulat hu itarkkusavukku eppati sammathitthadu
Quote
 
 
-2 #85 ஆனந்த் 2011-06-06 13:49
[ஃஉஒடெ நமெ="சவுக்கு ரசிகன்"]அண்ணா தயவு செய்து வைகோ பற்றி பேசாதீர்கள் ... இதயம் வலிக்கிறது.. ஈழத்தமிழருக்காக குரல் கொடுக்கும் ஒரே தலைவர்... நேற்று கூட பெல்ஜியம் சென்றுள்ளார்...அரசியல் வாழ்க்கையே இழந்துள்ளார் அண்ணா ..[/ஃஉஒடெ]

தூரத்தி்லிருந்த ு பார்க்கும் உங்களுக்கு வைகோ நல்லவராக தெரியலாம். பேசி பேசி எத்தனை பேர் வாழ்க்கையை அழித்திருக்கிறா ர் தெரியுமா? தயவு செய்து வைகோவை நம்பாதீர்கள். தேர்தலில் போட்டியிடாமலிரு க்க சன் டி.வி.யிடம் நூறு கோடி ரூபாய் பணம் வாங்கியவர். ஆறு மாதங்களுக்கு முன்பே கலிங்கப்பட்டி் வீட்டிலலிருந்த ஜெயலலிதா படத்தை கழற்றியவர். தேர்தல் பிரச்சாரத்துக்க ான வாகனத்தை கடைசி வரையில் தயார் செய்யாதவர். அவரின் பசப்பு வார்த்தைகளை நம்பாதீர்கள். ஏமாந்து போகாதீர்கள்.
Quote
 
 
+3 #84 so.ra.ilaiyavam 2011-06-05 17:54
தி .மு.க
இயக்கமே ஒரு குடும்பமாய் வளர்ந்தது -
இன்று ஒரு குடும்ப்பத்தால் அழிந்தது...
Quote
 
 
+4 #83 SURIYAA 2011-06-04 22:31
சவுக்கு ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம். மற்றவர்களின் சந்தேகங்களுக்கு மதிப்பளித்து பதில் சொல்லியமைக்கு நன்றி. ஆனால் எனக்கு ஒரு சந்தேகம்...தமிழ் லீடர் இணைய இதழ் உங்களுடையதா?வைகோ பேட்டியை தேர்தலுக்கு முன் தமிழ் லீடரில் நான் படித்தேன். பிறகுதான் சமீபமாக அதன் விளம்பரம் சவுக்கில் வருகிறது. நீங்களும் வைகோ பற்றி தமிழ் லீடர் எழுதி விட்டதால் தான் எழுதவில்லை என்று விளக்கம் அளித்துள்ளீர்கள ்...ஏன் ஒரு இதழ் எழுதியதை இன்னொரு இதழ் எழுதக்கூடாது..... சவுக்கு/தமிழ் லீடர் இரண்டுக்கும் எழுத்து நடை வேறுபடுகிறதே....நீங்க சாட்டையை கையில் வைத்து கொண்டு சுளீர் சுளீர் என அடிகிறிங்க...ஆனா தமிழ் அப்படி இல்லையே....
Quote
 
 
0 #82 mariyam 2011-06-04 12:10
சரி புத்தக வெளியீட்டு விழாவிற்கு வருகிறோம்.....டீ, காபி எதாவது உண்டா?
Quote
 
 
+2 #81 pirabukannan 2011-06-04 02:52
//உலகம் எங்கும் தமிழர்கள் வாழ்கிறார்கள் தேசியத்தலைவர் பிரபாகரனை அவன் என்று கூறியவன் நீ ஒருவன் தான்//

எனக்கு புரியவில்லை. தலைவரை அவன் என்று எங்கு சொல்லி இருக்கிறார்?. "பிரபாகரனை" என்ற சொல்லை நீங்கள் சொல்லுவதாக இருந்தால் அதில் எனக்கு தவறு இருப்பதாக தெரியவில்லை. ஈழ மக்கள் தலைவரை மரியாதையாக தலைவர் என சொல்லுகிறார்கள் . அவர்கள் பிரபாகரன் என்ற வார்த்தையை பெரும்பாலும் பயன்படுத்துவது இல்லை. தமிழக மக்கள் "பிரபாகரன்" என சொந்த அண்ணனை கூப்பிடுவது போல சொல்வது வழக்கம். அதற்காக தமிழக மக்களுக்கு தலைவரிடம் மரியாதை ஈழ மக்களுக்கு எந்த விதத்திலும் குறைந்தது இல்லை.
Quote
 
 
-2 #80 தலைவன் இருக்கிறான் 2011-06-04 00:07
முதலில் சங்கரோட தொலைநோக்கு சிந்தனைக்கு வாழ்த்துக்கள் ! வைகோவை பற்றிய உங்களின் கட்டுரையை, கருத்தை வரவேற்கிறேன்.
"ஏட்டுசுரைக்காய் கறிக்கு உதவாது" வைகோ அவர்களுக்கு சரியாய் பொருந்தும்.
பேசிவிட்டால் போதுமா ? உங்களுக்கு காவடி தூக்கும் இளைஞர்களுக்கு தலைவனாய் ஏமாற்றம் ஒன்றை மட்டுமே பரிசாக தருவிர்கள் கடந்த சட்டமன்ற தேர்தலில் கொடுத்தை போல.
சவுக்கு சங்கரின் வைகோ மீதான கருத்து ரொம்ப ரொம்ப சரி தான்.
//அரசியலில் எப்போதுமே, தவறான முடிவு எடுப்பவர் வைகோ. நல்ல பேச்சாளர்...நல்ல பண்பாளர்...நல்ல மனிதர்..
ஆனால், நாட்டில் நல்ல தலைவராக அவரால் வரமுடியவில்லையே ! //

மாற்றுகருத்தை விவாதிக்காமல், நேரடியாக சங்கரை ஜெயாவின் ஜால்ரா என்பவர்களும், கருணாநிதியை கண்மூடித்தனமா ஆதரிப்பவர்களும் ஒரே குட்டை தான்.
Quote
 
 
+1 #79 வருந்துகிறோம் 2011-06-03 22:27
உலகம் எங்கும் தமிழர்கள் வாழ்கிறார்கள் தேசியத்தலைவர் பிரபாகரனை அவன் என்று கூறியவன் நீ ஒருவன் தான்.சிங்கள தூதரகத்தில் பணம் வாங்கி தமிழினத்தை காட்டிகொடுத்த விகேஷ் தான் உனக்கு குரு என்று நன்றாக தெரிகிறது.தயவு செய்து தலைவர் படத்தை எடுத்து விடு.
Quote
 
 
-2 #78 jaya 2011-06-03 21:31
.. நீங்கள் கொஞ்சம் யோசித்து வெடியதில்லைளியி டவேண்டும் என்பதே என் போன்றோர் கூறுவது. உரையாடல் என்பது விவாத பொருள் இல்லை அதை இப்போது வெளிசவுக்கு மிகுந்த ஆர்வகொலரில் உரையாடலை வெளியிட்டுவிட்ட ு இப்போது அதற்கு நீண்ட விளக்கமும் அளித்து இருக்கா வேண்யிட்டு இருக்கவேண்டியது ம் இல்லை. அதனால் கொஞ்சம் நன்றாக யோசித்து முடுவு எடுக்கவும். எதை வெளியிடலாம் வெளியிடக்கூடாது என்பதை.
Quote
 
 
+13 #77 pirabukannan 2011-06-03 19:22
நீங்கள் பின்னூட்டம் இட்டு, தெரிவிக்கும் புலி ஆதரவு, ஈழ ஆதரவை விட, பல மடங்கு உருப்படியான காரியங்களை செய்தே வருகிறோம்.
// உங்களின் இந்தப் பதிலில் நீங்கள் என்ன கேள்வி கேட்பது என்ற தொனி இருக்கிறது. உங்களிடம் நாங்கள் கேள்வி கேட்பது நீங்கள் செய்யும் நல்ல காரியங்களை அறிந்து உரிமையுடன் கேட்பது. அது இது போன்ற கடுமையான கேள்வியாக இருந்தாலும் நீங்கள் பொறுமையாக பதில் சொல்லுதல் நல்லது. இந்தத் தொனியை தவிர்க்கலாம். அதை சொல்ல என்னை விட நீ என்ன செய்து விட்டாய் என நீங்கள் கேட்கலாம். நான் ஒன்றும் செய்யவில்லை. ஆனால் அது நல்ல பதிலாக இருக்காது.
Quote
 
 
+10 #76 pirabukannan 2011-06-03 19:17
/, “ஆமாம் சார்.. நேத்து கூப்புட்டு இருந்தாங்க.. மறந்துட்டேன்” என்று கூறியவரிடம், நீங்கள் அங்கே போவது தவறில்லையா என்று கேட்டதற்கு, “நான் பத்திரிகைக் காரன்… இரண்டு தரப்பையும் கேட்டு எழுதுவது எனது கடமை. அம்சாவை பார்க்கக் கூடாது என்று நீங்கள் சொல்ல உரிமை இல்லை. // பொதுவாக ஒரு தூதர் பத்திரிக்கயாளரை சந்திக்க வேண்டுமானால் அதற்கு ஒரு பத்திரிக்கையாளர ் சந்திப்பை ஏற்பாடு செய்வார்கள். அதுவும் போர் நடந்த சூழலில் அம்சாவின் கருத்தை கேட்க அங்கு தனியாக சென்றது சரியான செயல் அல்ல. அதற்காக அவரை தமிழின விரோதி என முடிவு கட்டவில்லை. ஆனால் அவர் தூதரை சந்திக்க தனியாக சென்றது மிகப் பெரிய தவறு. வன்னியில் இருந்து எவ்வாறு ஊடகங்கள் வெளியேற்றப்பட்ட னர் என நியாபகம் வையுங்கள். இவர் அம்சாவின் கருத்தை கேட்க அவ்வளவு மெனக்கெட்டு இருக்க வேண்டாம்.
Quote
 
 
0 #75 வசந்த் 2011-06-03 18:59
[ஃஉஒடெ நமெ="டமிலின் அன்பன்"]சவுக்கு அண்ணா தயவு செய்து உங்கள் பொன்னான நேரத்தில் கொஞ்சம் ஒதுக்கி இதில் உள்ள மர்மத்தை வெளியிடவும்,[/ஃஉஒடெ]

மிக மிக முக்கியம் சவுக்கு அண்ணாச்சி, விரைவில் இதைபற்றி ஒரு வரைவு எதிர்பார்க்கிறோ ம் ...
Quote
 
 
0 #74 singam 2011-06-03 17:28
why didnt you publish anything against Jayalalitha ?? Has she not done anything wrong? Where did she get money for starting Jaya tv ?
as soon as she took the power, she started spoiling people's money again. What is the need to start Mono Rail when Metro rail is fully in progress of implementation. HOw many crores of rupees the country is going to lose because of this.. why dont you publish that. Not using new secretary made 1200 crore loss to TN, now cancelling samacheer kalvi.. and cancelling Kalaignar kaappeettu thittam.. Just like last time she cancelled uzhavar sandhai, periyar samathuvapuram, etc.. If DMK starts some good policies, Jayalalithat just cancels and it make BIG loss to the country. Wondering why she didnt tell like gajaana gaali.. if DMK spoiled all the government money, how can she get money for giving away free rice, and making all her new policies.. why dont you write anything about this savukku ??
Quote
 
 
+2 #73 tamilin anban 2011-06-03 16:49
சவுக்கு அண்ணா சீமான் பற்றி தவறான செய்தி வருகிறது, இதை சன் டிவியில் மட்டும் அடிக்கடி சொல்கிறார்கள், காங்கிரெஸ் ஐ குளிர்விக்க மாறன் சகோதரர்களின் சதி என்றே தோன்றுகிறது, கடந்த மூன்று வருடம் ஜாபர் சேட்டின் பார்வையில் இருப்பவர் சீமான், அதோடு அவரை சுற்றி என்றும் தோழர்கள் இருப்பார்கள், ஈழ தமிழர் பிரச்சினைக்காக ஊர் ஊராக கூட்டங்கள் போட்டு கொண்டு எந்நேரமும் ஊடகங்களின் பார்வையிலும் உளவுத்துறையின் கண்காணிப்பிலும் இருக்கும் ஒருவர் ரகசியமாக காதலிக்க சந்தர்ப்பம் கிடைக்குமா? மூன்று வருடங்களில் ஒருமுறையேனும் ஒரு கிசுகிசு கூட வந்ததில்லையே? ஈழ தமிழர் பிரச்சினையை முன்னிறுத்தி சீமான் செய்த பிரச்சாரம் காங்கிரெஸ் ஐ தோற்கடிக்க முக்கிய காரணியாக இருந்தது. புலம் பெயர் தமிழரிடமும் தமிழ்நாட்டிலும் சீமான் பிரபலமாவது காங்கிரஸின் வீழ்ச்சிக்கு காரணமாகிறது. தயாநிதி மாறன் தன்னை சிபிஐ விசாரணைகளில் இருந்து காப்பாற்றி கொள்ள மதிய அரசை குளிர்விக்க செய்த சதி என்றே தோன்றுகிறது, சீமான் மீது புகாரளித்த பெண் சன் டிவியின் தொடர்களில் நடித்தவர், ஏற்கனவே சில வருடங்களுக்கு முன் இதே போல் ஒரு பொய் புகார் கொடுத்தவர், மற்ற தொலைகாட்சிகளில் இந்த செய்தியை நடுநிலையோடு சொன்னார்கள், ஆனால் சன் செய்தியில் இதை முக்கிய செய்தியாக சொல்வது சந்தேகத்தை உறுதிபடுத்துகிற து. ஏற்கனவே சீமானை கொலை செய்ய சிங்கள கூலிப்படைகள் திட்டமிட்டதாக செய்திகள் வந்தது, இன்று அவரது நற்பெயரை கொலை செய்ய முயற்சி நடக்கிறது. இதில் மாறன்களின் பங்கும் இருப்பது போல் தெரிவதால் சவுக்கு தயவு செய்து இதில் உள்ள உணமைதன்மையை கண்டறிந்து வெளியிட வேண்டும். தயவு செய்து உங்கள் பொன்னான நேரத்தில் கொஞ்சம் ஒதுக்கி இதில் உள்ள மர்மத்தை வெளியிடவும்,
Quote
 
 
-2 #72 tamilin anban 2011-06-03 16:18
[ஃஉஒடெ நமெ="குமரெசன் குமர்"]செலவு ஒன்றும் அதிகம் ஆகாது நண்பரே, இன்றைய நிலவரத்தில் செலவு சொற்பம் தான், அனால் தில் இருக்கணும், சவுக்கு போல செய்திகளை வெளியஈடவும் அதிகார வர்க்கங்களின் முகத்திரையை கிழிக்கவும், சிறைக்கு செல்லவும், மிரட்டலுக்கு அஞ்சாமல் தொடர்ந்து செயல் பாடவும் தில் இருக்கணும். நீங்கள் கால்பந்து பற்றி இணையதளம் நடத்தி எதை சாதித்தீர்கள்? ஊழல் அரசியல்வாதிகளை எதிர்த்தீர்களா? தவறான காவல் துறை உயர் அதிகாரிகளை எதிர்த்தீர்களா? அனால் அதையெல்லாம் சவுக்கு செய்கிறது! அது சுலபமான காரியமா? உங்களால் முடியுமா? சவுக்கு ஆரம்பிக்கப்பட்ட ு இரண்டு வருடங்கள் ஆக போகிறது. ஆனால் இன்று வரை லாப நோக்கத்தோடு செயல்படவில்லை, உண்மைகளை உரக்க கூறும் தைரியம் சவுக்குக்கு இருக்கிறது. உங்களுக்கு இருக்கிறதா? கருணாநிதியை பற்றி, ஜாபர் சேட் பற்றி, உங்களால் உங்கள் வலைதளத்தில் விமர்சிக்க முடியுமா? எதாவது சிக்கல் எழுமோ என்று அஞ்சுவீர்கள். பணத்தை மட்டும் மனதில் வைத்து இழப்புகளை எடை போடாதீர்கள்,
நீங்கள் வேண்டுமானால் முயற்சி செய்து பாருங்கள், சென்னையிலேயே செய்தி சேகரித்து உண்மை செய்திகளை
அய்யோ சவுக்கை நான் விமர்சிக்கவில்ல ை.இணையதளம் நடத்த நீங்கள் என்ன அம்பானியா? என்று ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தா ர்.அதற்கான பதில் அவ்வளவே.தவறாக புரிந்து கொண்டீர்கள்.[/ஃஉஒடெ]
மன்னிக்கவும் நண்பரே நான் தவறாக சொல்லவில்லை, சவுக்கின் சிரமங்களை சொன்னேன். தைரியத்தில் சவுக்கு அம்பானிகளை விட பணக்காரர். அம்பானிகள் கூட மோத தயங்குபவர்களிடம ் மோதும் தைரியம் சவுக்குக்கு இருக்கிறது, அதன் பின்னால் அவருக்கு பல இழப்புகளும் இருக்கிறது. நான் இதைத்தான் குறிப்பிட விரும்பினேன் நண்பரே, உங்கள் மனதை என் சொற்கள் காயப்படுத்தி இருந்தால் மன்னிக்கவும் நண்பரே..
Quote
 
 
+5 #71 vigginesh 2011-06-03 13:40
திரு வைகோ அவர்கள் ஈழ தமிழர்களுக்காக ஐரோப்பா நாடாளு மன்றத்தில் பேசியது மிகப்பெரிய விசயம் அதை விடுத்து, தனி மனிதன் சவுக்கு சங்கரை பற்றி நக்கீரன் இதழ் நிருபர் பிரகாஷ் திட்டியதாக பெரிதாக விளம்பர படுத்து கிறாய்...அதை பற்றி பெரிதாக எழுதும் சங்கர் ஏன் பெல்கியத்தில் வைகோ உரையாற்றிய தை ஏன் போடவில்லை .....தமிழ் இனத்தலைவர் வைகோவை பற்றி ஏன் இப்படி தவறாக எழுதினாய் ....இதில் இருந்து தெரிகிறது ....நீ ஜெயாவின் ஜால்ரா என்று .......
Quote
 
 
+4 #70 kesavan 2011-06-03 13:28
சவுக்கு சங்கருக்கு எனது கடும் கண்டனங்களை தெரிவிக்கிறேன் .வைகோ வை பற்றி எழுத உனக்கு என்ன அருகதை இருக்கிறது ... வைகோ அவர்கள் உலக தமிழர்கலுக்குகா கவும் .ஈழத் தமிழர்களுக்காகவ ும் ஐரோப்பா நாடாளுமன்றத்தில ் சுமார் 18 நிமிடங்கள் உரையாற்றி ஐ நா சபையை தமழர்கள் பால் திரும்பி பார்க்க வைத்திருக்கிறார ் இப்படி பட்ட ஒருவரை பற்றி தவறான கருத்துக்களை உதிப்பதற்கு உனக்கு எப்படி மனம் வந்தது ...உண்மையில் நீ தமிழனா...அல்லது நீ ஜெயாவின் விசுவாசியா என்று எனக்கு ஐயப்பட வைக்கிறது ...
Quote
 
 
+11 #69 Sivan 2011-06-03 12:31
எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு

வளர்க உங்கள் பணி.

திரு. வை.கோ அவர்களின் கட்டுரையை மறு ப்ரிசீலனை செய்ய வெண்டுகிறேன்.
Quote
 
 
+6 #68 karthi 2011-06-03 12:08
வைகோ வை பற்றிய கருத்துக்கு கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்ய விரும்புகிறேன்
Quote
 
 
+1 #67 jagan 2011-06-03 11:28
பெரும்பான்மையான சவுக்கு வாசகர்களுக்கு இந்த விளக்கம் தேவை இல்லை என்றபோதும், தெளிவுபடுத்தியத ற்கு நன்றி.
இன்னும் ஜாக்கிரதையாக இருக்கவும்.
Quote
 
 
+4 #66 தமிழ்நெஞ்சன் 2011-06-03 10:28
சவுக்கு சுழலட்டும் எம் தமிழ் இன மக்கள் நியாயம் பெறட்டும் . ஈழம் பெறவும் தமிழ் மக்கள் நலம் பெறவும் , சுழடுங்கள் உங்கள் சவுக்கை.
Quote
 
 
+3 #65 kumaresan kumar 2011-06-03 09:52
செலவு ஒன்றும் அதிகம் ஆகாது நண்பரே, இன்றைய நிலவரத்தில் செலவு சொற்பம் தான், அனால் தில் இருக்கணும், சவுக்கு போல செய்திகளை வெளியஈடவும் அதிகார வர்க்கங்களின் முகத்திரையை கிழிக்கவும், சிறைக்கு செல்லவும், மிரட்டலுக்கு அஞ்சாமல் தொடர்ந்து செயல் பாடவும் தில் இருக்கணும். நீங்கள் கால்பந்து பற்றி இணையதளம் நடத்தி எதை சாதித்தீர்கள்? ஊழல் அரசியல்வாதிகளை எதிர்த்தீர்களா? தவறான காவல் துறை உயர் அதிகாரிகளை எதிர்த்தீர்களா? அனால் அதையெல்லாம் சவுக்கு செய்கிறது! அது சுலபமான காரியமா? உங்களால் முடியுமா? சவுக்கு ஆரம்பிக்கப்பட்ட ு இரண்டு வருடங்கள் ஆக போகிறது. ஆனால் இன்று வரை லாப நோக்கத்தோடு செயல்படவில்லை, உண்மைகளை உரக்க கூறும் தைரியம் சவுக்குக்கு இருக்கிறது. உங்களுக்கு இருக்கிறதா? கருணாநிதியை பற்றி, ஜாபர் சேட் பற்றி, உங்களால் உங்கள் வலைதளத்தில் விமர்சிக்க முடியுமா? எதாவது சிக்கல் எழுமோ என்று அஞ்சுவீர்கள். பணத்தை மட்டும் மனதில் வைத்து இழப்புகளை எடை போடாதீர்கள்,
நீங்கள் வேண்டுமானால் முயற்சி செய்து பாருங்கள், சென்னையிலேயே செய்தி சேகரித்து உண்மை செய்திகளை
அய்யோ சவுக்கை நான் விமர்சிக்கவில்ல ை.இணையதளம் நடத்த நீங்கள் என்ன அம்பானியா? என்று ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தா ர்.அதற்கான பதில் அவ்வளவே.தவறாக புரிந்து கொண்டீர்கள்.
Quote
 
 
+1 #64 பாண்டி 2011-06-03 07:24
தேனா மணா! நீ வாங்குற பத்து அஞ்சி பிச்சைக்கு ஒனக்கு இது தேவையா. கோவாலுக்காண்டி நீ நாசமா போயிராதே. ஒன்னோட குடும்பத்த நடுத்தெருவுல உட்டுட்டு அம்போன்னு அனாதப் பொணமா ஆகணும்னு நெனைக்கிறியா. எதுனாலும் கூச்சப்படாம சொல்லு பிரகாஸ். நல்லது பன்றவனத்தான் யாருக்கும் புடிக்காதே. என்னோட கொணம் தெரியாம சவுக்குட்ட வெளாடாதே. மவனே, பெறவு சீரழிஞ்சிதான் போவ. சரி என்னோட கோவத்த கெளப்புனதுக்காக இந்த மாசத்துல செவ்வாக்கெழம அன்னிக்கி ஒனக்கு கைலையோ அல்லது கால்லையோ ரத்தக்காயம் உண்டாகும். லேசாதான் இருக்கும்.
Quote
 
 
-15 #63 J 2011-06-03 06:47
தூற்றுவார் தூற்றட்டும், போற்றுவார் போற்றட்டும், நீ எப்போதும் போல சுழற்று உன் சவுக்கை...

உமது விடுதலைப்புலி ஆதரவில் மட்டும் எனக்கு உடன்பாடில்லை... தமிழனின் நிலைக்கு முழு முதல் காரனம் இவர்கல்தான்...
Quote
 
 
+12 #62 KurangupPalaniSamy 2011-06-03 03:41
Yours comments about Thiru Vaiko is false and it shows your maturity level. Vaiko is one of the honest Positions.
Quote
 
 
0 #61 chenthil K 2011-06-03 02:55
Its good to have some people like you. My only concern is you should not sell yourself in the longer run... Many person start initially with will power.. but later they get sold... Many politicians .. MLA,MP all are well educated.. came for one cause and doing different now, so continue your duties... we are always there to support for good cause... Nation should become like what Gandhi wished ..
Quote
 
 
+12 #60 பாரதி பட்டுக்கோட்டை 2011-06-03 00:36
[ஃஉஒடெ நமெ="றவி.ஸ்"]வை கோ பற்றிய உங்கள் பார்வை மன வேதனை தருகிறது.[/ஃஉஒடெ]

இன்று கூட அவர் ஐரோப்பிய யூனியனில் ஆற்றிய உரை நெஞ்சை நெகிழ வைக்கும்படி இருந்தது. ஈழப் பிரச்சினையை பதினெட்டு நிமிடத்தில் தெளிவாக விளக்கயுள்ளார். புலிகளுக்கு இந்த காலகட்டத்தில் என்ன பெரிய ஆதாயம் இருந்துவிடபோகிற து அவருக்கு? வைகோ உரை பற்றிய மேலும் விபரங்களுக்கு தட்ஸ்தமிழ் தளத்தை பார்க்கவும்.
Quote
 
 
-8 #59 jerry 2011-06-03 00:32
சவுக்கை பற்றி குறை கூற எதுவும் இல்லை..
10 ஆண்டுகளுக்கு முன்பு வேண்டுமானால் இணையதளம் சிரமமான ஒன்றாக இருக்கலாம்.
இன்று இந்தியாவில் பிழைக்க துப்பில்லாமல் வெளி நாட்டில் பிழைப்பவன் எல்லாம் இதைப்பற்றி பேச தேவையில்லை...
Quote
 
 
0 #58 rasu 2011-06-02 23:30
Awaiting for saturday to see savukku's face, please do publish function potos
Quote
 
 
+4 #57 anniyan 2011-06-02 23:22
Quoting Abdul Rahman - Dubai:
அன்புள்ள சவுக்கு !

மெரீனா பீச்சில் சுண்டல் விற்கும் ஒரு பையனுக்குகூட, தனக்கென்று ஒரு லட்சியம் / இலக்கு இருக்கும்.

பத்து பைசா வருமானம் இல்லாமல், இலவசமாக இணைய பத்திரிக்கை நடத்தும் ஒரு மகாதர்ம பிரபு(!!), யோக்கியன்(!!), கேனையன்(!!) இந்த திருட்டு உலகில் உண்மையிலேயே இன்னும் இருக்கிறானா?

எல்லாவற்றிற்கும ் "டப்பு" வேணுமே பாஸு...??

நிச்சயமாக அரசியல் (வருமான) பின்னணி இல்லாமல் உங்களால் (இந்த உன்னதமான பணியை) இலவசமாக செய்ய முடியாது.

அல்லது, நீங்கள் அம்பானியின் தம்பியாக இருக்க வேண்டும் - அப்புடியா பாஸு...??

நன்றியும் வாழ்துக்களுடனும ்,

அப்துல் ரஹ்மான் - துபாய்


"நல்லது செய்தல் ஆற்றீர்.. ஆயினும் அல்லது செய்தல் ஓம்புமின்"

இந்த ஆயிரம் வருட பழமொழியைப் படித்ததால் சில விஷயங்கள் தெரியவரும் :

௧) அப்போவே நல்லதை நல்லதுக்காக மற்றும் செய்பவர்கள் இருந்திருக்கிறா ர்கள்.
௨) அப்போவே நல்லதை செய்யலைன்னாலும் பரவால்ல.. கெட்டது செய்யாதீங்கன்னு சொல்ற அளவுக்கு கெட்டதை இருந்திருக்காங் க..

கௌதமர் பட்டத்து இளவரசர்.. அவரை புத்து (budhoo )(முட்டாள்) என்று எல்லாரும் கிண்டல் செய்யும் வகையில் "உலகத்துக்கு உண்மை சொல்வேன்" என்று அலைந்தார். ஆதி சங்கரர் எல்லாரும், எல்லாமும் பரம்பொருளே என்று சொல்லி இந்தியா முழுக்க எழு முறை வெறும் காலிலேயே நடந்தார்.. பாரதியாருக்கு பைசா லாபம் இல்லாம மாகாணம், மாகாணமா அலைஞ்சாரு.. இவங்க மூணு பெரும் சரியா சாப்பிடாம, ஓய்வெடுக்காமதான ் இளவயசிலேயே செத்தாங்க.. இவங்களுக்க் அளவு கடந்த ஞானம் மட்டுமில்லாம உள்ள ஒரு நெருப்பு எரிஞ்சது. அதையும் இவங்கள்ல ஒருத்தர் சொல்லி இருக்கார்:

நரை கூடிக் கிழப்பருவம் எய்தி
கொடும் கூற்றுக்கிரையாக ி மாயும்
சில வேடிக்கை மனிதரைப் போலவே
நானும் வீழ்வேனென்று நினைத்தாயோ?

எல்லாரையும் நம்மள மாதிரியே நினைக்கக் கூடாது.. நம்மை விட நல்லவர்களும், நம்மை விட கேட்டவர்களும் இருக்கிறார்கள், பணத்துக்கு அலைபவர்களும் இருக்காங்க...
Quote
 
 
+9 #56 savukku rasigan 2011-06-02 23:19
அண்ணா தயவு செய்து வைகோ பற்றி பேசாதீர்கள் ... இதயம் வலிக்கிறது.. ஈழத்தமிழருக்காக குரல் கொடுக்கும் ஒரே தலைவர்... நேற்று கூட பெல்ஜியம் சென்றுள்ளார்...அரசியல் வாழ்க்கையே இழந்துள்ளார் அண்ணா ..
Quote
 
 
0 #55 reader 2011-06-02 23:08
மாறன் சகோதரர்களில் ஒருவர் U-TURN?

http://viruvirupu.com/2011/05/31/2995/

இது பற்றி ஏதாவது தெரியுமா?
Quote
 
 
+11 #54 deepak 2011-06-02 22:33
சவுக்கு வைகோ வை பற்றி நீங்கள் எழுதும் முன் தமிழ் உணர்வாளர்களிடம் ஆலோசித்து விட்டு எழுதுங்கள் .உமக்கு என்னயா தெரியும் வைகோ வை பற்றி ?வைகோ தமிழகத்திற்கும் ஈழத்திற்கும் செய்த உதவிகள் பல.இதை எழுதுவதால் நான் ம தி மு க காரன் இல்லை . எனக்கு தெரிந்தது கூட உமக்கு தெரியவில்லை யா ?நரகலை விட மிக கேவலமான செய்தி யை தமிழ் லீடர் இணையத்தில் நீங்கள் வைகோ வை பற்றி எழுதி இருக்கீர்கள் . உங்களுக்காக வழக்குகளில் போராடும் அண்ணன் புகழேந்தி இடம் கேட்டு பாருங்கள் ,அய்யா நெடுமாறனிடம் கேட்டு பாருங்கள் . உங்கள் புத்தக வெளியீட்டு விழாவிற்கு என் நண்பர்களுடன் வரலாம் என்று இருந்தேன் .ஆனால் உங்கள் நேர்மை மீது எனக்கு இப்பொது சந்தேகம் எழுகிறது .அது என்ன பின்னுட்டம் இடுகிறவர்கள் ஈழத்துக்கும் சமூகத்துக்கும் எந்த வேலையும் செய்ய மாட்டார்கள் என்று யார் உமக்கு சொனது ?எங்களுக்கும் ஈழம் மற்றும் தமிழ் சமுதாயத்தின் மேல் அக்கறை உள்ளது சவுக்கு அவர்களே . என்னை பொறுத்த வரை அய்யா நெடுமாறனும் வைகோ வும் முதலில் இருந்து ஈழத்தை ஆதரித்து வருகிறார்கள் .எனது கண்டனங்களை தெரிவிக்கிறேன் வைகோ வை பற்றி தவறாக எழுதியதற்கு .
Quote
 
 
+7 #53 குசும்பன். 2011-06-02 22:32
சவுக்கிடம் ஒரு தாழ்மையான வேண்டுகோள் தமிழ் லீடர் தளத்தில் வைகோ அவர்களின் கட்டுரையை படிக்க கிடைத்தது. அங்கு தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்கள் பற்றிய ஒரு சொல்லாடலில் பிரபாகரன் அவர்களை ஒருமையில் விளித்திருக்கக் கண்டு மிகவும் மனம் வேதனைப்பட்டுவிட ்டேன் முடிந்தால் தயவுசெய்து திருத்திக்கொள்ள ுவீர்கள் என நம்புகிறேன்.
நன்றி.
Quote
 
 
0 #52 anniyan 2011-06-02 22:27
இவ்வளவு நீளமான, தெளிவான பதிலை ஒரே நாளில் எழுதுவது என்பது சாதாரண விஷயம் அல்ல. surprising ability to write.. வாசகர்கள் சவுக்கிடம் விளக்கம் கேட்கும்போது கொஞ்சம் அவகாசம் கொடுத்து நிதானமாகக் கேட்கலாம். அவகாசம் இருந்தால் இதைவிட நன்றாகவும், மேலும் கோர்வையாகவும் பதில் சொல்வார் இல்லையா?

அவருக்கும் நீதி மன்ற வேலை ( அல்பம் தாசில்தார் ஆபீச்லையே அஞ்சு மணி நேரம் நிக்க வைப்பாங்க நீதிமன்றத்துல அஞ்சு நாள் கூட நிக்க வைப்பாங்க),தாயா ரை கவனிக்க வேண்டியது, சொந்த வேலை, உடல் நல சங்கடங்கள் இருக்கலாம்..

அவரை நிர்ப்பந்தப் படுத்தும் வகையில் 'விளக்கமளிக்கவேண ்டும்' என்று கோருதல் சரியல்ல.. வாசகர்கள் கொஞ்சம் அனுசரித்து நடந்துகொள்ளவும் .

'வினவு'ம் ஒரு மட்டமான பத்திரிக்கை.

வினவு பத்திரிகைக்கும் சவுக்குக்கும் ஒரு மிகப்பெரிய வேறுபாடு உள்ளது.

சவுக்கின் அணி இது: இந்தியா மோசமான நிலையில் மோசமானர்வர்களால ் ஆட்சி செய்யப்படுகிறது . விட மாட்டேன் இந்த கேடுகெட்ட *பாவிகளை* ஒழிப்போம்.. அழிப்போம்..


வினவின் அணி இது: இந்தியா மோசமான நிலையில் மோசமானர்வர்களால ் ஆட்சி செய்யப்படுகிறது .விட மாட்டேன்.. இந்த கேடுகெட்ட *இந்தியாவை* ஒழிப்போம்.. அழிப்போம்..
Quote
 
 
+16 #51 Ravi.S 2011-06-02 22:22
வை கோ பற்றிய உங்கள் பார்வை மன வேதனை தருகிறது.
Quote
 
 
0 #50 kali.krishna 2011-06-02 21:52
சவுக்கை தொடர்ந்து ஒரு வருசமாக வாசித்து வருகின்றேன். பழைய பதிவுகளையும் தேடி முழுமையாக படித்திருக்கின் றேன்.

சவுக்கின் பதிவுகளிருந்து நான் கண்ட ஒரே விடயம் ""அநியாயத்துக்கும ், அயோக்கியத்தனத்த ுக்கும் எதிர்ப்பு"". இதில் சாதி , கட்சி, மத, கொள்கை வேறுபாடெல்லாம் சவுக்கு பார்க்கவில்லை. தகவல்களில் தவறிருந்தாலும், அதை திருத்திக்கொள்ள வும் சவுக்கு தயங்கியதில்லை.

இலங்கை இராணுவத்தையும், அவர்களுக்கு உதவும் துரோகிகளையும் எனக்கு பிடிக்காது. அதைவிட புலிகளை எனக்கு சுத்தமாக பிடிக்காது. அதற்கு எனக்கு நியாயமான காரணங்கள் உண்டு. ஆனாலும் சவுக்கு அவர்களே, உங்களுக்கு எனது ஆதரவு 100 % உண்டு. எனது மின்னஞ்சல் உங்களிடம் இருக்கும் என்று நினைக்கின்றேன். தேவை ஏதும் வேண்டின் கண்டிப்பாக தொடர்பு கொள்ளவும்.

காளி.கிருஷ்ணா - லண்டன்.
Quote
 
 
-1 #49 M RAMASWAMY 2011-06-02 21:44
Your answers will clear most of the doubts other have.

nice. When you ready face the challenges, you become a complete man
Quote
 
 
+2 #48 ம.பொன்ராஜ் 2011-06-02 21:43
//இதன் பிறகு நடந்த அரசுச் செயலாளர்களுடனான ஒரு பத்திரிக்கையாளர ் சந்திப்பில், அரசை தர்மசங்கடப்படுத ்தும் வகையில் பல்வேறு கேள்விகளை அன்பு கேட்கிறார்.// அவை என்ன என்று நினைவிருந்தால் பகிர்ந்துகொள்ளல ாமெ...!!!
Quote
 
 
+5 #47 ம.பொன்ராஜ் 2011-06-02 21:39
// விகேஷுடனான நட்பை முறித்துக் கொள்ள சவுக்கு தயங்காது.// இந்த மாதிரி பதிலை தன சவுக்கிடம் இருந்து எதிர்பார்த்தேன் . வெளிப்படையான துணிச்சலான பதில். சவுக்கு தங்கம் தான்.
Quote
 
 
+6 #46 tamilin anban 2011-06-02 21:33
Quoting kumaresan kumar:
இணையதளம் நடத்த ஒன்றும் லட்சக்கணக்கில் பணம் தேவை இல்லை. ஒரு முறை இணைதளத்தை உருவாக்கி விட்டால் போதும். மற்றபடி செய்தி சேகரிப்பதற்கு ஆகும் செலவுதான். சவுக்கு ஒன்றும் லண்டன், துபாய் சென்று செய்தி சேகரிக்கவில்லை.சென்னையில்தானே இருக்கிறார் செய்தி சேகரிக்கிறார்.இது போன்ற இணையதளத்தை உருவாக்க ரூ.12 ஆயிரம் போதும். மற்றபடி மாதம் மாதம் இன்டர்நெட் செலவு ரூ. 500 முதல் 800 வரை.ஆண்டுக்கு கூகுளுக்கு ரூ.2500 அவ்வளவுதான் போதுமா? நானும் ஒரு தமிழ்ஸ்போர்ட்ஸ் நியூஸ்.காம் என்ற பெயரில் கால்பந்து செய்தி தளம் நடத்தி வருகிறேன். எந்த வருமானமும் கிடையாது. தேவை ஆர்வம் மட்டுமே. இணையதளததை நடத்த அம்பானியும் கும்பானியும் தேவை இல்லை.சென்னையில் உள்ள ஒரு பத்திரிகையாளர் ஒரு நாளைக்கு தண்ணியடிக்க ஆகும் செலவு ரூ.200 என்று போட்டால் மாதம் ரூ.6 ஆயிரம் ஆகிறது.ஆனால் இணையதளம் நடத்த இன்டர்நெட் இணைப்பு இருந்தால் போதும்.

செலவு ஒன்றும் அதிகம் ஆகாது நண்பரே, இன்றைய நிலவரத்தில் செலவு சொற்பம் தான், அனால் தில் இருக்கணும், சவுக்கு போல செய்திகளை வெளியஈடவும் அதிகார வர்க்கங்களின் முகத்திரையை கிழிக்கவும், சிறைக்கு செல்லவும், மிரட்டலுக்கு அஞ்சாமல் தொடர்ந்து செயல் பாடவும் தில் இருக்கணும். நீங்கள் கால்பந்து பற்றி இணையதளம் நடத்தி எதை சாதித்தீர்கள்? ஊழல் அரசியல்வாதிகளை எதிர்த்தீர்களா? தவறான காவல் துறை உயர் அதிகாரிகளை எதிர்த்தீர்களா? அனால் அதையெல்லாம் சவுக்கு செய்கிறது! அது சுலபமான காரியமா? உங்களால் முடியுமா? சவுக்கு ஆரம்பிக்கப்பட்ட ு இரண்டு வருடங்கள் ஆக போகிறது. ஆனால் இன்று வரை லாப நோக்கத்தோடு செயல்படவில்லை, உண்மைகளை உரக்க கூறும் தைரியம் சவுக்குக்கு இருக்கிறது. உங்களுக்கு இருக்கிறதா? கருணாநிதியை பற்றி, ஜாபர் சேட் பற்றி, உங்களால் உங்கள் வலைதளத்தில் விமர்சிக்க முடியுமா? எதாவது சிக்கல் எழுமோ என்று அஞ்சுவீர்கள். பணத்தை மட்டும் மனதில் வைத்து இழப்புகளை எடை போடாதீர்கள்,
நீங்கள் வேண்டுமானால் முயற்சி செய்து பாருங்கள், சென்னையிலேயே செய்தி சேகரித்து உண்மை செய்திகளை வெளியிடுங்கள், மிரட்டலுக்கு அஞ்சாமல் காவல்துறையில் நடக்கும் தவறுகளை பற்றி செய்தி வெளியிடுங்கள். அதன் பிறகு வந்து சவுக்கை விமர்சியுங்கள்.
Quote
 
 
+8 #45 Padman 2011-06-02 21:21
நான் ஒரு சின்னப்பையன், நான் கேட்டதற்கு பதில் எழுதியமைக்கு நன்றி சவுக்கு.

நம் தமிழ்ச்சாதிக்கு கோடி போட துணையிருந்த இந்த ஐ.நா மன்றத்தில் முன்பு தமிழீழ கொடி எப்பொழுது பறக்கும் என அந்த மன்றத்தின் முன்பு நின்று வெறித்து பார்த்தவன் நான். எம் மக்களை காப்பாற்றுங்கள் என கூட்டம் கூட்டமா வெள்ளை மாளிகை முன்பும் அமெரிக்க காங்கிரஸ் சபை முன்பு கதறிய நம் தமிழ் மக்களை எதோ பிச்சை கேட்பவர்கள் என நினைத்து விட்டது இந்த அமெரிக்க அரசு. போரை நிறுத்து என கடுமையாக ஒரு வார்த்தை சொன்னால் போதுமே... மிச்சமிருப்பவர் களை காப்பாற்றிவிடலா மே என ஏங்கிய போதும் ஒருத்தனும் நம்மை திரும்பி பார்க்கவில்லை. சரி மக்களுக்குத்தான ் மரியாதை இல்லை. தனிப்பட்ட மனிதர்கள் யாரவது சொல்வார்களா என பார்த்தால் அதுவும் நடக்கவில்லை. வெள்ளை மாளிகையில் இசை நிகழ்ச்சி நடத்தினார் நம்ம ஊர் ஏ ஆர் ரகுமான். அய்யா நீங்களாவது ஒரு வார்த்தை சொல்லுங்கள் என கெஞ்சியது நம் சொந்தங்கள். என்ன செய்தார் என்பது அவருக்கே வெளிச்சம். எமைஏ எதோ ஒப்ராவிடம் வேண்டுகோள் வைத்தாக படித்தேன். சரி இது முதலாளித்துவ நாடு... சிவசங்கரன் ஒரு தமிழர்... டாடா விடம் மிகுந்த செல்வாக்கு கொண்டவர். டாடா உலக அளவில் செல்வாக்குடையவர ். ... இவர் மூலமாக டாடா ஏதாவது செய்யலாமே என அவருக்கும் வேண்டுகோள். ஒருத்தனும் திரும்பி பார்க்கவில்லை. தப்பா எடுத்துக்காதிங் க. நம்ம ஊர் அரசியல்வாதிகளின ் எஜமானர்கள்தான் இந்த தொழிலதிபர்கள் அதனால்தான். சிகாகோ கிருட்டிணமூர்த் தி ஒபாமாவுக்கு, வைகோவிற்கும் மிகவும் வேண்டப்பட்டவர். யாருமே எதுவும் செய்யலையே அப்படின்னு தோணுது.

----தொடர்ச்சி அடுத்த பின்னூட்டத்தில் -----
Quote
 
 
+9 #44 Padman 2011-06-02 21:21
------ முந்தைய கருத்தின் தொடர்ச்சி-------

எஹிப்தில் ஒரு உயிர் போனால் கெய்ரோ-விலிருந்து லைவ் டெலிகாஸ்ட் செய்து ஆட்சியையே மாற்றுகிறீர்களே ... மதிக்கவில்லை என்பதால் கடாபியை கொல்ல துடிக்கிறீர்களே ... அங்கு இலட்சம் உயிர் போய்விட்டது... ஏதாவது ஒரு செய்தி போட்டீர்களா... என சிஎனென் தொலைக்காட்சிக்க ு எவ்ளோ வேண்டுகோள் வைத்தது நம் தமிழ்சாதி. ஆண்டர்சன் கூப்பருக்கு தனி பிளாக் போட்டு ஆதரவு திரட்டியும் ஒரு பயனுமில்லை. இதுபோன்று உலகம் முழுக்க கதறி அழுது நிக்கும் போதுதான் என்னென்ன கூத்துக்கள் நம் தமிழகத்தில்? மனிதமே இல்லாத மனித சங்கிலி, புதுவகையான உண்ணாவிரதம்... இதுக்கு மத்தியில் சிங்கள கைக்கூலியாக நம் தமிழ் பத்திரிகைகள். நான் தினமணி தவிர்த்து எந்த பத்திரிக்கையும் படிக்கிறது கிடையாது. உங்களைப் போன்ற இணையம்தான் கொஞ்சம் ஆறுதல்.

நான் உங்களை தவறான கண்ணோட்டத்தில் புண்படுத்தும் நோக்கில் கேள்வி கேட்கவில்லை. திரும்பிய பக்கமெல்லாம் துரோகிகளாக தெரிகிறது. யாரையும் நம்ப மனம் வரவில்லை. இருக்கும் கொஞ்சநெஞ்ச ஆதரவையும் இழக்க மனமில்லை. அதனால்தான் தெளிவுபெற விரும்பினேன்.

என்னைப் போன்ற பலருக்கு புத்தக வெளியீட்டுக்கு வெளிநாடுகளிலிரு ந்து உடனடியாக வர இயலாது. பதிவு செய்து யொஉடுபெ தளத்தில் போடா முடியுமா?

நம்பிக்கையோடு,

வே. பத்மநாபன்.
Quote
 
 
+3 #43 santhosh thala fan 2011-06-02 20:50
சவுக்கு அண்ணா,
எனக்கு உங்களது பெயர் தெறியாது, உங்கள் மிகுந்த மரியாதை வைத்து உள்ளேன் உங்களுக்கு ஒரே ஒரு அறிவுரை தயவு செய்து பாதுகாப்பாக இருக்கவும்

pls take care of yourself anna, i am wishing u all the best for your future na and one more request na if u can pls publish ur photo na, if it is problem for u no need na, bye take care
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 31 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday3094
mod_vvisit_counterYesterday11112
mod_vvisit_counterThis week24293
mod_vvisit_counterLast week80132
mod_vvisit_counterThis month227025
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12749144