முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
தஞ்சையில் உருவாகும் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்! கவிஞர் காசி ஆனந்தன் வேண்டுகோள்! அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 15
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
வெள்ளிக்கிழமை, 03 ஜூன் 2011 09:14

இராசராசசோழன் தஞ்சையில் மாபெரும் கற்கோயிலை எழுப்பினான். ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும் அது கம்பீரமாகக் காட்சி தருகிறது. தமிழர்களின் சிற்பத் திறனுக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது. அதே தஞ்சையில் முள்ளிவாய்க்காலில் பதைக்கப் பதைக்கப் படுகொலை செய்யப்பட்ட தமிழர்களின் நினைவாக மற்றொரு கற்கோயில் எழுப்பப்பட்டு வருகிறது 

ஈழத் தமிழர்களுக்காகத் தீக்குளித்துத் தியாகம் செய்த முத்துக்குமார் உட்பட 19 ஈகிகளின் நினைவாகவும் சிற்ப நுணுக்கம் மிகுந்த நினைவுச் சின்னம் எழுப்பப்பட்டு வருகிறது.

இராசராசன் எழுப்பிய தஞ்சைக் கற்கோயிலுக்குப் பயன்படுத்திய அதே ரக கற்கள் கண்டறியப்பட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பெரும் பொருட் செலவில் தஞ்சைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன.

50 தொன்னிற்கு மேலான எடையும் 40 அடி நீளமும் 10 அடி உயரமும் 3 அடி கனமும் கொண்ட பெரும் கற்களில் நூற்றுக்கு மேற்பட்ட சிற்பிகள் இரவு பகலாக அற்புதமான சிற்பங்களைச் செதுக்கி வருகிறார்கள்.

முள்ளிவாய்க்காலில் படுகொலையாகி வீழ்ந்து கிடக்கும் மக்களின் அவலக் காட்சியும், முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்டுப் புலம்பும் மக்களின் துயரக் காட்சியும், முத்துக்குமார் உட்பட தமிழ்நாட்டிலும் உலக நாடுகளிலும் உயிர்த் தியாகம் செய்த ஈகிகளின் சிலைகளும் செதுக்கப்பட்டு வருகின்றன.

ஓவிய மண்டபம் ஒன்றும் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முக்கிய நிகழ்ச்சிகள் ஓவியங்களாக வரையப்பட்டு இங்கு வைக்கப்படும்.

தமிழகத்தில் இதுவரை இத்தகைய சிற்ப நினைவகம் அமைக்கப்பட்டதில்லை என்று சொல்லுமளவிற்கு இது உருவாக்கப்பட்டு வருகிறது. அழியாமல் நின்று ஆயிரமாயிரம் மக்களின் துயரத்தைத் தமிழர்களுக்குத் தலைமுறை தலைமுறையாக நினைவூட்டும் வகையில் எழுப்பப்பட்டு வருகிறது.

இந்த மாபெரும் பணியில் உலகத் தமிழர்கள் ஒவ்வொருவரின் பங்கும் இருக்க வேண்டும் என உலகத் தமிழர் பேரமைப்பு விரும்புகிறது. வேண்டுகிறது.

கவிஞர் காசி ஆனந்தன் வேண்டுகோள்

இனிய உலகத் தமிழ் நெஞ்சங்களே!

2009 மே 17-18 ல் நிகழ்ந்த முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவாக தமிழ்நாட்டில் - தஞ்சையில் - கருங்கல் சிற்பங்களால் அமைந்த மிகப்பெரிய நினைவுச் சின்னம் ஒன்றினை உருவாக்கும் பணியில் உலகத் தமிழர் பேரமைப்பு ஈடுபட்டுள்ளது. இதற்கான சிற்ப வேலைகளில் நூற்றுக்கும் அதிகமான தமிழகச் சிற்பக் கலைஞர்கள் உழைத்து வருகிறார்கள்.

நினைவுக் கூடம் ஒன்றை உள்ளடக்கியதாய் அமையும் இந்த 'முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில்' - முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்த சிங்கள இனவெறிக் கொடுமைகள் - கொன்று குவிக்கப்பட்ட தமிழர் துயரங்களோடு - தமிழ்நாட்டில் முள்ளிவாய்க்கால் போரின் கொடுமைகளுக்கு எதிராகத் தீக்குளித்து மடிந்த மாவீரர்களுக்கும் சிலைகள் நிறுவப்படுகின்றன.

தமிழீழத்தையும் - தமிழ் நாட்டையும் என்றென்றும் இணைக்கும் உறவுப் பாலமாக தஞ்சையில் தலை நிமிரும் முள்ளிவாய்க்கால் நினைவகம் திகழும்.

தமிழீழத்தில் நமது மாவீரர்களின் கல்லறைகள் - சிலைகள் - நினைவுச் சின்னங்கள் அனைத்தும் தகர்த்து அழிக்கப்பட்டன. தமிழ் நாட்டில் அமையும் 'முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்' உலகத் தமிழர் அனைவரையும் தட்டி எழுப்பும் வரலாற்றுத் தீப்பொறியாய் நின்று - சிங்கள இனவெறியர் சூழ்ச்சிகளைத் தகர்த்து அழிக்கும்.

இனிய உலகத் தமிழ் நெஞ்சங்களே!

தஞ்சையில் உலகத் தமிழர் பேரமைப்பு நிறுவும் - முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்துக்கு - உங்களால் இயன்ற நிதி உதவி தந்து துணை நில்லுங்கள்.

இதையும் நமது தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஒரு சிறு தொடர் நிகழ்வாய்க் கருதி இன்றே தோள் கொடுப்போம்

உங்கள் நிதி - தமிழீழ விடுதலைக் களத்தில் உயிர் சிந்திய போராளிகள் - பொதுமக்கள் - தமிழ்நாட்டில் அவர்களுக்காய் உயிர் கொடுத்த நெருப்பு மேனிகள் - மீண்டும் உயிர்ச் சிலைகளாய் நிமிர உதவும்.

நன்றி!

காசி ஆனந்தன் 
தமிழீழம்

நிதி அனுப்ப வேண்டிய முகவர்

பழ. நெடுமாறன்
தலைவர், உலகத் தமிழர் பேரமைப்பு
58, மூன்றாவது முதன்மைச் சாலை,
ஆழ்வார் திருநகர் விரிவாக்கம், 
சென்னை-600 087.
தொலைபேசி : 23775536, தொலைநகல் : 23775537,
மின்னஞ்சல் : thamiz@thenseide.com

வங்கிக் கணக்கு விவரம்:

உலகத் தமிழர் பேரமைப்பு (World Tamil Confederation)
கணக்கு எண் : 457022479
இந்தியன் வங்கி, மயிலாப்பூர் கிளை. 
சென்னை - 600 004.

 

Comments  

 
0 #12 anto thomson 2011-06-08 20:31
அந்த காலத்தில் ஜாதி இன சன்டை
இந்த காலத்தில் மொழி இன சன்டை

எல்லோரும் மனிதர்கள் என்கிற உணர்வு தோன்றினால் மட்டுமே இந்த மொழி இன சன்டை ஒரு முடிவுக்கு வரும்.
Quote
 
 
0 #11 ramaswamykannan 2011-06-07 01:14
OM KALEE manam ullavarkal erukathan seikirarkal TAMILANA THALAI NIMIRNDHU NILLANEA eniyavadhu porupudan nam ENATHAI [TAMILANAI] KAKKA sapatham arpom apoludhuthan avarhaladhu atma santhy adayum.;antrea ayya sonnarkal ''vuir tamiluku vudal mannuku''ennaiky na soluthaan ''VUIR TAMILANUKEAA VUDAL TAMIL MANNAI KAPATHUVADHARKE AA . .
Quote
 
 
0 #10 sakthy 2011-06-05 12:50
ராஜராஜ சோழன் ராஜேந்திரன் ஈழத் தமிழர் துயர் கண்டு இளங்கோவேள் படை நடத்த வைத்து தமிழர் துயர் துடைத்து,கொடுங் கோலர்களை கைதிகளாக்கி இழுத்து வந்து கல்லணை கட்டுவித்தான். அந்த நிலத்தில் வாழ்ந்தவனோ ஈழத்தமிழர் இனப்படுகொலைக்கு துணை போனான். அந்த மாசை துடைக்க எழும் நினைவுச் சின்னம் வரலாற்றில் நிமிர்ந்து நின்று இனப்படுகொலையை நினைவு படுத்தட்டும்.அனைவரும் உறுதியுடன் துணை புரிவோம்.
Quote
 
 
0 #9 mailthogai 2011-06-04 22:34
அந்த காலத்தில் ஜாதி இன சன்டை
இந்த காலத்தில் மொழி இன சன்டை

எல்லோரும் மனிதர்கள் என்கிற உணர்வு தோன்றினால் மட்டுமே இந்த மொழி இன சன்டை ஒரு முடிவுக்கு வரும்
Quote
 
 
+4 #8 mughil 2011-06-03 19:04
[ஃஉஒடெ நமெ="சோழன்"]இந்த நினைவு முற்றம் இன்றைக்கு உங்கள் பார்வைக்கு தவறாக தெறியலாம், அது முற்றிலும் தவறான கருத்து... ஒரு 100 அல்லது 200 ஆண்டுகளுக்கு பிறகு நம் சந்ததியினருக்கு , நம் இனம் இப்படி ஒரு கொடூரத்தை சந்தித்தது என்பதை நினைவூட்ட தேவைப்ப்டும்,.....

இந்த நினைவு முற்றம் என் எதற்காக என்பதை புரிந்து கொள்ளாமல் சவுக்குல படிச்சுட்ட்டு வாய்க்கு வந்தபடி பேசாதிங்க...

ஐயா பழ. நெடுமாறன் தமிழினத்திற்கு தமிழீழத்திற்கு என்ன பனி ஆற்றினார் என்பது தெறியாமலே அவறை பிச்சை எடுக்குர கும்பல்னு சொல்ல உங்களுக்கு வாய் கூசல...[/ஃஉஒடெ]
(அகிலன்)தோழர் சோழன் அவர்கள் சரியாக சொன்னிர்கள் அய்யா பழ. நெடுமாறன் தமிழினத்திற்கும ் தமிழீழத்திற்கு என்ன பனி ஆற்றினார் என்பது ஒரு சில அல்ல கைகலுக்கு தெரியது தயவுசெய்து ஒரு தூய்மையான அப்பழுக்கற்றமனி தரை எதுவும் தெரியாமல் குரைகூராதிர்கல்
Quote
 
 
+6 #7 tamilin anban 2011-06-03 16:46
சவுக்கு அண்ணா சீமான் பற்றி தவறான செய்தி வருகிறது, இதை சன் டிவியில் மட்டும் அடிக்கடி சொல்கிறார்கள், காங்கிரெஸ் ஐ குளிர்விக்க மாறன் சகோதரர்களின் சதி என்றே தோன்றுகிறது, கடந்த மூன்று வருடம் ஜாபர் சேட்டின் பார்வையில் இருப்பவர் சீமான், அதோடு அவரை சுற்றி என்றும் தோழர்கள் இருப்பார்கள், ஈழ தமிழர் பிரச்சினைக்காக ஊர் ஊராக கூட்டங்கள் போட்டு கொண்டு எந்நேரமும் ஊடகங்களின் பார்வையிலும் உளவுத்துறையின் கண்காணிப்பிலும் இருக்கும் ஒருவர் ரகசியமாக காதலிக்க சந்தர்ப்பம் கிடைக்குமா? மூன்று வருடங்களில் ஒருமுறையேனும் ஒரு கிசுகிசு கூட வந்ததில்லையே? ஈழ தமிழர் பிரச்சினையை முன்னிறுத்தி சீமான் செய்த பிரச்சாரம் காங்கிரெஸ் ஐ தோற்கடிக்க முக்கிய காரணியாக இருந்தது. புலம் பெயர் தமிழரிடமும் தமிழ்நாட்டிலும் சீமான் பிரபலமாவது காங்கிரஸின் வீழ்ச்சிக்கு காரணமாகிறது. தயாநிதி மாறன் தன்னை சிபிஐ விசாரணைகளில் இருந்து காப்பாற்றி கொள்ள மதிய அரசை குளிர்விக்க செய்த சதி என்றே தோன்றுகிறது, சீமான் மீது புகாரளித்த பெண் சன் டிவியின் தொடர்களில் நடித்தவர், ஏற்கனவே சில வருடங்களுக்கு முன் இதே போல் ஒரு பொய் புகார் கொடுத்தவர், மற்ற தொலைகாட்சிகளில் இந்த செய்தியை நடுநிலையோடு சொன்னார்கள், ஆனால் சன் செய்தியில் இதை முக்கிய செய்தியாக சொல்வது சந்தேகத்தை உறுதிபடுத்துகிற து. ஏற்கனவே சீமானை கொலை செய்ய சிங்கள கூலிப்படைகள் திட்டமிட்டதாக செய்திகள் வந்தது, இன்று அவரது நற்பெயரை கொலை செய்ய முயற்சி நடக்கிறது. இதில் மாறன்களின் பங்கும் இருப்பது போல் தெரிவதால் சவுக்கு தயவு செய்து இதில் உள்ள உணமைதன்மையை கண்டறிந்து வெளியிட வேண்டும். தயவு செய்து உங்கள் பொன்னான நேரத்தில் கொஞ்சம் ஒதுக்கி இதில் உள்ள மர்மத்தை வெளியிடவும்,
Quote
 
 
+3 #6 mughil 2011-06-03 13:44
(அகிலன்)தமிழ்னா ட்டில் போகிர போக்கில் நம்முடைய பாராம்பரிய சின்னங்கள் அழிந்து கொண்டிருக்கிரது கண்டிப்பாக நமது புதிய தலைமுரைக்கு இந்த நினைவு முற்றம் அவசியம் மற்றும் ஈழத் தமிழர்களுக்காகத ் தீக்குளித்துத் தியாகம் செய்த முத்துக்குமார் உட்பட 19 ஈகிகளின் நினைவாக இந்த நினைவு முற்றம் வரலாற்றில் இது மிகவும் தேவை அவசியம் அதனால் உலகத் தமிழர் பேரமைப்புக்கு கண்டிப்பாக என்னுடைய ஆதரவும் வாழ்த்துக்கலும் நான் என்னால் ஆன உதவிகலை செய்வேன் அய்யா பழ. நெடுமாறன் அவர்கல் இந்த பனியை சீரும் சிரப்பும்மாக செய்வார்கள்
Quote
 
 
+9 #5 Arunkumar 2011-06-03 13:26
நாம் நமது வெற்றியைக் கொண்டாட கற்கோவிலும் மண்டபமும் எழுப்பி நமது வரலாற்றை கல்வெட்டுகளாகவு ம் பட்டயங்களாகவும் பதிந்த காலம் போய் நமது வலியை நாம் பெற்ற வேதனயை நாம் அனுபவித்த துன்பங்களை நினைவுச் சின்னம் எழுப்பி வரலற்றிலே நினைவு கூற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக் கிறோமா? அவ்வாறு எழுப்பப்படுமாயி னும் பின்னொரு நாளில் ஈழம் முழுதும் வென்று பகைவர்களின் துரோகிகளின் செங்குருதியைக்க ொண்டு அபிஷேகம் செய்து தனது அவமானத்தை துடைத்தெறிந்தான ் தமிழன் என்று நாளை அந்த கல்வெட்டு நெஞ்சு நிமிர்த்தி பகர வேண்டும்.
Quote
 
 
+6 #4 சோழன் 2011-06-03 13:09
இந்த நினைவு முற்றம் இன்றைக்கு உங்கள் பார்வைக்கு தவறாக தெறியலாம், அது முற்றிலும் தவறான கருத்து... ஒரு 100 அல்லது 200 ஆண்டுகளுக்கு பிறகு நம் சந்ததியினருக்கு , நம் இனம் இப்படி ஒரு கொடூரத்தை சந்தித்தது என்பதை நினைவூட்ட தேவைப்ப்டும்,.....

இந்த நினைவு முற்றம் என் எதற்காக என்பதை புரிந்து கொள்ளாமல் சவுக்குல படிச்சுட்ட்டு வாய்க்கு வந்தபடி பேசாதிங்க...

ஐயா பழ. நெடுமாறன் தமிழினத்திற்கு தமிழீழத்திற்கு என்ன பனி ஆற்றினார் என்பது தெறியாமலே அவறை பிச்சை எடுக்குர கும்பல்னு சொல்ல உங்களுக்கு வாய் கூசல...
Quote
 
 
+2 #3 senthil subramanian 2011-06-03 12:18
Dear friends, dont criticize the expenses. our generation only witnessed those srilankan tamil massacre. once we are gone how future tamils will know those massacres. who knows there is a chance of rise of a brave tamil leader in future and when he learns the srilankan massacre he may start eelam war V.
Quote
 
 
-17 #2 dubukku 2011-06-03 11:28
இந்த நினைவு முற்றம் கட்டுற தாள என்ன பயன் இறந்து போன நம் தமிழ் மக்கள் உயிர் தெழுந்து வரபோரங்கள உங்களோட அரசியல் நோக்கதுக்காகவும ் பணம் பறிக்கவும் போடுற வேசமடா போங்கடா கப்பி பசங்கள பொய் புள்ளங்கள படிக்கச் வைங்கட ....... இந்த பிச்ச எடுக்கற கும்பலுக்கு சவுக்கு வேற விளம்பரம் கால கொடுமட இதெலாம் .
Quote
 
 
+1 #1 RAGAV 2011-06-03 10:50
தமிழர்களின் வீரம், விவேகம், புகழ் போன்
றவற்றிர்காக இத்தகைய நினைவுச் சின்னம் அல்லது மண்டபம் பெரும் பொருட்செலவில் கட்டலாம்.ஆனால் பகைவ்ர்களின் வெற்றி மற்றும் வெறியாட்டத்தின் விளைவுகளை விளக்க இவ்வளவு பொருட்செலவில் கட்டமைப்பு தேவையா? இந்தப்பணத்தை குற்றுயிரும் குலையுயிருமாக மீதமிருக்கும் இலங்கைத் தமிழர்களின் நலவாழ்விற்கு செவழிக்கலாமே?
நடந்தவை அனைத்தும் தமிழகத் தமிழர்களுக்குத் தெரியும். அவர்களும் உதவி செய்யத் தயாராகவே இருப்பார்கள்.
இந்த மண்டபத்தால் மேலும் குற்ற உணர்வைத் தூண்டலாம். வேறு என்ன பலன் இருக்கப் போகிறது?
ரவி - சென்ன
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 107 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday4213
mod_vvisit_counterYesterday11260
mod_vvisit_counterThis week26585
mod_vvisit_counterLast week78861
mod_vvisit_counterThis month239404
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12761523