முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
நான் உங்கிட்ட என்ன கேட்டேன்……. அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 123
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
வெள்ளிக்கிழமை, 03 ஜூன் 2011 15:24
 

 

இந்த மாறன் சகோதரர்களுக்கு, தங்கள் மனதில் பெரிய ***** என்று நினைப்பு.   யாராக இருந்தாலும், தங்களுடைய பண பலத்தால் விலைக்கு வாங்கி விடலாம் அல்லது, மிரட்டி விடலாம் என்ற இறுமாப்பு. அந்த இறுமாப்பால் தான் அழியப் போகிறார்கள்.

 

ஒரே ஒரு உதாரணத்தைச் சொல்ல வேண்டும் என்றால், சிவசங்கரன் விவகாரத்தையே எடுத்துக் கொள்ளலாம்.     ஏர்செல் நிறுவனத்தின் சிவசங்கரன், கேடி சகோதரர்களின் தந்தை முரசொலி மாறனுக்கு நண்பர். அவரோடு உறவாடி, அவரின் சொத்துக்களையெல்லாம் அனுபவித்தவர்கள் தான் இந்த மாறன்கள். அவரின் கார், பங்களா, வெளிநாடுகளில் உள்ள வீடு ஆகிய அனைத்தையும் அனுபவித்தவர்கள் இந்த மாறன்கள். இப்படி அனுபவித்து விட்டு, ஏர் செல் நிறுவனத்தை மலேசியாவின் அனந்தகிருஷ்ணனுக்கு விற்க வேண்டும் என்று நெருக்கடி கொடுக்கிறார்கள். இதில் ஏற்பட்ட கொடுக்கல் வாங்கலில் மனஸ்தாபம் ஏற்படுகிறது. இதை காரணமாக வைத்து, சிவசங்கரனின் மீது, 20 கோடி ரூபாய் நில மோசடி என்று பொய்யான ஒரு புகாரை கொடுக்க வைத்தார்கள்.   கடந்த திமுக ஆட்சியில் தான் காவல்துறை அதிகாரிகள், கருணாநிதி வீட்டு நாய்களாக இருந்தார்களே….. இந்தப் புகாரின் அடிப்படையில் சிவசங்கரனை கைது செய்ய முனைப்பு காட்டுகையில், அவர் தப்பி சிங்கப்பூர் செல்கிறார். அதற்கு பதிலாக அவரின் பெற்றோர்களையா கைது செய்வது ?   அவர்கள் பெற்றோர்களை கைது செய்ய சென்னை மாநகர காவல்துறையினர் துரத்து துரத்து என்று துரத்துகிறார்கள். அவர்கள் தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடி, திருச்சி சென்று, அங்கிருந்து கொழும்பு சென்று தப்பித்தார்கள்.

 new-daya

 

இந்த கேடி சகோதரர்கள் இப்போதுதான் பணக்காரர்கள். ஆனால், இந்த சிவசங்கரன் தொண்ணூறுகளிலேயே பணக்காரர். அவரையும், அவர் பெற்றோரையும் இப்படி விரட்டிய மாறன் சகோதரர்களை சிவசங்கரன் சும்மா விடுவாரா ?   மே 15 அன்று சிபிஐ முன்பு ஆஜராகி, அத்தனை விபரங்களையும் புட்டு புட்டு வைத்திருக்கிறார் சிவசங்கரன்.

 

இது தெரியாமல், இந்த பச்சிலை புடுங்கிகள், 21.05.2011 அன்று எகனாமிக் டைம்ஸ் நாளேட்டுக்கு அளித்த, வக்கீல் நோட்டீசில், சிவசங்கரனிடமிருந்து புகார் ஏதும் இல்லாமலேயே செய்தி வெளியடப்பட்டுள்ளதாக அங்லாய்த்துள்ளனர்.

 ET_NOTICE_1_Page_04

இவ்வாறு வக்கீல் நோட்டீஸ் அனுப்புவதன் மூலமாக, ஊடகங்களை மிரட்டி, தப்பித்து விடலாம் என்று மனப்பால் குடிக்கிறார்கள் கேடி சகோதரர்கள்.

 

கனிமொழி இன்று கைதாகி திஹார் சிறையில் இருப்பதற்கு காரணமான விவகாரம் என்ன ? லைசென்ஸ் கொடுத்ததற்கு கைமாறாக 200 கோடியை கனிமொழி பெற்றுள்ளார் என்பதுதானே… ? ராசா தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்து லைசென்ஸ் கொடுத்தாலும், கலைஞர் டிவி ராசாவுடையது அல்ல.   ஆனால் லைசென்சை இரண்டரை ஆண்டுகள் தாமதமாக வழங்கி, அதன் மூலம் அந்த நிறுவனத்தை விற்க வைத்த தயாநிதி மாறனுக்கே சன் டிடிஎச் நிறுவனத்தில் பங்கு இருக்கிறதா இல்லையா ? 200 கோடிக்கே திஹார் என்றால் 700 கோடிக்கு ?

 

மார்ச் 2004ல் தயாநிதி மாறன் தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக பொறுப்பேற்றதில் இருந்து இரண்டு ஆண்டுகளாக லைசென்ஸ் வழங்காமல் நிறுத்தி வைத்திருக்கிறார் தயாநிதி.   மலேசிய வாழ் இலங்கைத் தமிழரான அனந்தகிருஷ்ணனுக்கு ஏர்செல் நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குகளை விற்க வேண்டும் என்று நெருக்கடி கொடுக்கிறார் தயாநிதி. இந்த நெருக்கடியின் விளைவாக மார்ச் 2006ல் அனந்த கிருஷ்ணனுக்கு 74 சதவிகித பங்குகளை விற்கிறார் சிவசங்கரன்.   பங்குகளை விற்ற ஆறு மாதங்களுக்குப் பிறகு ஏர்செல்லுக்கு 14 வட்டங்களுக்கான லைசென்சை வழங்குகிறார் மாறன்.

 

லைசென்ஸ் வழங்கப் பட்ட 4 மாதங்கள் கழித்து, அனந்தகிருஷ்ணனுக்கு சொந்த மான ஏஷியா என்டெர்டைன்மென்ட் ஹோல்டிங் என்ற கம்பெனி 600 கோடி ரூபாய் கொடுத்து சன் டிடிஎச் ன் 20 சதவிகித பங்குகளை வாங்குகிறது. சன் டிடிஎச்ன் உரிமையாளர்கள் கலாநிதி மாறன் மற்றும் அவரது மனைவி காவேரி கலாநிதி.   80 சதவிகிதத்தை வைத்திருந்தவர்கள் பங்குகளை விற்றால் குறையும் அல்லவா ? அதற்குப் பதிலாக அவர்கள் இருவருக்கும் 12.6 கோடி ஷேர்கள் ஒதுக்கப் படுகின்றன. என்ன விலையில் தெரியுமா ? 10 ரூபாய்க்கு.   அனந்தகிருண்ஷனனின் நிறுவனத்துக்கு ஒதுக்கப் பட்ட விலை என்ன தெரியுமா ? 80 ரூபாய்.   இன்னும் செயல்பாடுகளைத் துவக்காத, நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு நிறுவனத்துக்கு எதற்காக 80 ரூபாய்க்கு பங்குகளை வாங்க வேண்டும் ?

 l2006121511592

இதில் எப்படிப் பார்த்தாலும், மாறன் குடும்பத்தினருக்கே லாபம். சன் டிடிஎஸ் பங்குகள் கூடுதலாக விலை கொடுக்கப் பட்டு வாங்கப் பட்டிருந்தாலும் அவர்களுக்குத் தான் லாபம். 12.6 கோடி ஷேர்கள் குறைந்த விலைக்கு (10 ரூபாய்) கொடுக்கப் பட்டிருந்தாலும் மாறன் சகோதரர்களுக்குத் தான் லாபம். 2007-2008ம் ஆண்டுக்கான சன் டிடிஎச்சின் ஆண்டறிக்கையில் மொத்த நஷ்டம் 73.27 கோடி என்று குறிப்பிடப் பட்டுள்ளது.

 

அருண் ஷோரி தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்த போது, எட்டு சர்கிள்களுக்கு சிவசங்கரனின் நிறுவனம் ஸ்பெக்ட்ரம் வேண்டி விண்ணப்பிக்கிறது. உடனடியாக அனுமதி கடிதம் (Letter of intent) வழங்கப் படுகிறது. இது நிலுவையில் இருந்த போது, மாறன் தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக பொறுப்பேற்கிறார். 24 ஆகஸ்ட் 2004 அன்று, மாறனின் செயலர் ஒரு சந்தேகத்தை கிளப்புகிறார். சிவசங்கரனின் டிஷ்நெட் நிறுவனத்துக்கு யார் முதலீடு செய்வது, யார் பணம் கொடுப்பது… என்று கேள்விகளை எழுப்பி டிஷ்நெட் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்புகிறார்கள்.

 

டிஷ்நெட் நிறுவனம் விரிவாக பதில் அளிக்கிறது. இந்த பதில்களையெல்லாம், ஊறப்போடுகிறார் மாறன். சட்ட ஆலோசகருக்கு அந்தக் கோப்பை அனுப்புகிறார். பிறகு அவரே திருப்பி வாங்கிக் கொள்கிறார்.   இதற்குள் டிஷ்நெட் நிறுவனம் மேலும் 4 சர்கிள்களுக்கு ஸ்பெக்ட்ரம் கேட்டு விண்ணப்பிக்கிறது.

 

மேலும் பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறார் மாறன்.   30 டிசம்பர் 2005 அன்று, மாறனின் திரை மறைவு மிரட்டல்களைத் தொடர்ந்து சிவசங்கரன் மலோசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் கம்யூனிக்கேஷன்ஸ் நிறுவனத்துக்கு 74 சதவிகித பங்குகளை விற்கிறார்.   இதன் பிறகு காரியங்கள் விறுவிறுப்பாக அரங்கேறுகின்றன.

 

வேக வேகமாக லைசென்சுகள் வழங்கப் பட்டு, 2006ல் 14 சர்க்கிள்களுக்கு ஏர்செல் நிறுவனத்துக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப் படுகிறது.   1400 கோடிக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கப் பட்டது. சிஏஜி அறிக்கையின் படி, இந்த ஸ்பெக்ட்ரத்தின் அசல் மதிப்பு 22 ஆயிரம் கோடி.

 

நேற்று விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பச்சிலை புடுங்கி தயாநிதி தான் அமைச்சராக இருந்த போது, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ஊழல் நடைபெறவில்லை. நடைபெற்றிருந்தால், சிஏஜி அறிக்கையில் சுட்டிக் காட்டப் பட்டிருக்குமே என்று கூறினார்.   அடேய் பச்சிலை புடுங்கி… இதே சிஏஜி அறிக்கையை நாடே விவாதித்துக் கொண்டிருந்த போது, உங்கள் கட்சி தானேடா, சிஏஜி அறிக்கை பார்ப்பனர்களின் சதி என்றது… ? உங்கள் கட்சி தானேடா, ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி ரூபாயை எப்படி ஒருவர் ஊழல் செய்ய முடியும் என்று கேட்டது ?   உங்கள் வசதிக்குத் தகுந்தபடி பேசுவீர்களோ ?

 

சிஏஜி அறிக்கை சொல்லவில்லை. இது தொடர்பாக விசாரணை நடத்திய நீதிபதி சிவராஜ் பாட்டீல் கமிட்டியின் அறிக்கை பச்சிலை புடுங்கி தொடர்பாக என்ன சொல்கிறது என்று பார்ப்போமா ?

 

“மாறன் டிஷ்நெட் நிறுவனத்திடம் எழுப்பிய சந்தேகங்கள், மேம்போக்காக இருப்பதோடு மட்டுமல்லாமல், லைசென்ஸ் கொடுப்பதற்கு எவ்வித சம்பந்தமும் இல்லாமல் இருக்கின்றன.   பல்வேறு சமயங்களில் மாறன், விதிகளை மீறி தேவையற்ற முறையில் சந்தேகங்களை எழுப்பியுள்ளார்.”

 

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், மலேசிய மேக்சிஸ் நிறுவனத்துக்கு சிவசங்கரன் 74 சதவிகித பங்குகளை விற்கும் சமயத்தில் ஏர்செல் நிறுவனத்துக்கு சென்னை, தமிழ்நாடு ஆகிய இரு வட்டங்களுக்கு மட்டுமே ஸ்பெக்ட்ரம் ஒதுக்கப் பட்டு இருந்தது.   14 வட்டங்களுக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப் பட்ட பிறகு இதே 74 சதவிகித பங்குகளை விற்றிருந்தால், எவ்வளவு கூடுதல் தொகை கிடைத்திருக்கும். இதில்தான் பச்சிலை புடுங்கியின் தந்திரம் இருக்கிறது.

 l2007012412146

நேரடியாக மாறனைக் குறிப்பிடாமல், தொலைத் தொடர்புத் துறை அமைச்சகத்தில் எங்கள் நிறுவனத்துக்கு எதிராக சதி நடக்கிறது என்று சிவசங்கரன் மாறனுக்கு பல முறை கடிதம் எழுதியும், ஒரு கடிதத்துக்கு கூட பதில் அனுப்பவில்லை, இன்று பத்திரிக்கையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பும் இந்த பச்சிலை புடுங்கி.

 

தொலைத் தொடர்புத் துறையில் நேரடி அந்நிய முதலீடு 74 சதவிகிதத்தை தாண்டக் கூடாது என்பது அப்போது இருந்த விதி. ஆனால் இந்த விதிகளையெல்லாம் வளைத்து ஏர் செல் நிறுவனத்தில் மீதம் இருந்த 26 சதவிகித பங்குகளையும் அனந்த கிருஷ்ணனின் மேக்சிஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் வளைத்திருக்கிறது என்பது அடுத்த குற்றச் சாட்டு.

 

டெக்கான் டிஜிட்டல், அப்போல்லோ ஹாஸ்பிட்டல், சிந்தியா செக்யூரிட்டீஸ் போன்ற பல்வேறு நிறுவனங்கள் மூலமாக 99 சதவிகித பங்குகளையும் மேக்சிஸ் நிறுவனம் வளைத்திருப்பதும் தெரிய வந்திருக்கிறது.   மார்ச் 2006ல் மலேசிய பங்குச் சந்தையில் தாக்கல் செய்த ஆவணத்தில், மேக்சிஸ் நிறுவனம், ஏர்செல் நிறுவனத்தில் தங்களுக்கு 99.3 சதவிகித பங்குகள் இருப்பதாக தெரிவித்துள்ளது, குறிப்பிடத் தகுந்தது.

 

இது மட்டும் அல்ல. 23 பிப்ரவரி 2006 அன்று, மன்மோகன் ஒரு அமைச்சரவை குழுவை அமைக்கிறார்.   பாதுகாப்புத் துறை அமைச்சர், உள்துறை அமைச்சர், நிதி அமைச்சர், பாராளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் மற்றும் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆகியோரைக் கொண்ட குழு, ஸ்பெக்ட்ரம் என்ன விலைக்கு கொடுக்கப் பட வேண்டும் என்பதை நிர்ணயிப்பதற்காக அமைக்கப் பட்டது.   ஒரே வாரத்திற்குள் 28ம் தேதி, மன்மோகனுக்கு பச்சிலை புடுங்கி ஒரு கடிதம் எழுதுகிறார். அந்தக் கடிதத்தில், என்னுடைய அதிகாரத்தை குறைக்கும் வகையில் அமைச்சரவைக் குழு அமைக்கப் பட்டுள்ளது. விலையை நான்தான் நிர்ணயிப்பேன் என்று கூறுகிறார். மங்குணி மன்மோகனும், சரி என்கிறார். (இந்த ஆளைத் தான் முதல் அக்யூஸ்டா சேக்கனும்).


dec07a

இப்போது சிபிஐ, பச்சிலை புடுங்கியை அழைத்து, “டேய் பச்சிலை புடுங்கி… அமைச்சரவை குழு விலையை நிர்ணயம் பண்ணா உனக்கு என்னடா ?   ஏண்டா வேணான்னு சொன்ன ? “ என்று கேட்க வேண்டும். கேட்பார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இது தொடர்பான மேக்சிஸ் மற்றும் சன் டிடிஎச் இடையே பங்குப் பரிவர்த்தனை நடந்த போது நான் அமைச்சராகவே இல்லை என்று மாறன் சொல்வதையும் ஏற்றுக் கொள்ள முடியாது. பிப்ரவரி 2007ல் இரண்டு நிறுவனங்களுக்கு இடையே தொடங்கிய பேச்சுவார்த்தை, முடிவு பெற்று, அந்நிய முதலீட்டுக்கான அனுமதி அளிக்கும் மத்திய அரசு நிறுவனம், இந்த முதலீட்டுக்கு அனுமதி வழங்கியது 19 மார்ச் 2007ல். மாறன் 13 மே 2007ல் தானே பதவி விலகுகிறார் ?

 இவ்வளவு ஊழலைச் செய்து விட்டு, என்ன திமிராகப் பேசுகிறார் பார்த்தீர்களா பச்சிலை புடுங்கி ?

 

அடுத்த விவகாரம், பிஎஸ்என்எல்லின் 323 தொலைபேசி இணைப்புகளை அரசாங்கச் செலவில் பயன்படுத்தியதாக தினமணியில் வந்த செய்தி. தினமணி மற்றும், இந்தியன் எக்ஸ்பிரசில் வந்த செய்தி, சிபிஐ அறிக்கையின் அடிப்படையில் வந்த செய்தி என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.   பச்சிலை புடுங்கி உண்மையில், சிபிஐக்குத் தான் நோட்டீஷ் அனுப்பியிருக்க வேண்டும்.   அதை விடுத்து விட்டு, எதற்கு பத்திரிக்கைகளுக்கு அனுப்பினார் என்பது தெரியவில்லை.

 

தயாநிதியின் கூற்றுப் படி பார்த்தால், 2009லேயே இது தொடர்பாக பத்திரிக்கையில் வெளி வந்த செய்திக்காக நோட்டீஸ் அனுப்பி விட்டாராம். அந்தப் பத்திரிக்கைகள் தான் மன்னிப்பு கேட்கவில்லையே ? ஏன் வழக்கு போடவில்லை ?

 

என்னிடம் ஒரே ஒரு தொலைபேசி தான் இருந்தது என்று கூறும் மாறன், 24371515 என்ற எண்ணைப் பற்றி பேசவேயில்லையே ஏன் ? இருந்தது என்று சொல்லும் 24371500 என்ற எண், சீப் ஜெனரல் மேனேஜர் பெயரிலும், இல்லை என்று சொல்லும் எண் மாறன் பெயரிலும் இருக்கும் மர்மம் என்ன ?

 24371500

போட் கிளப் இல்லத்தில் ஒரே ஒரு தொலைபேசி எண்தான் இருந்தது என்று சொல்லுவது பச்சைப் பொய்தானே ?

 

தினமணி மற்றும் எக்ஸ்பிரஸ் நாளேடுகள் சொன்ன 320 லைன்களும், மாறனின் கோபாலபுரம் இல்லத்தில் இருந்தன. மேலும், மதுரை தினகரன் அலுவலகத்துக்கும் இதே போன்ற ஒரு உயர் அழுத்த இணைப்பு வழங்கப் பட்டிருந்தது.

 2959140

 

2373493

தொலைபேசி இணைப்புளைப் பற்றிய ஆவணங்களை எடுத்து பரிசீலனை செய்தால், உண்மைகள் வெளிப்பட்டுப் போகும் என்ற விபரம் தெரிந்தும், இன்று வரை ஆணவத்தோடு பேசிவருகிறார் பச்சிலை புடுங்கி.

விரைவில் உங்களை சிபிஐ அழைக்க இருக்கிறது பிரதர். அவர்களிடம் சொல்லுங்கள் இந்த அம்புலிமாமா கதையையெல்லாம்.

 

Comments  

 
0 #117 arokiaraj 2011-08-01 10:32
all are scandling but this much money scandlings are shame, so billgates watns to hand over his trust to karunanidi
Quote
 
 
0 #116 D 2011-06-08 12:38
எவனெல்லம் நல்லவனு நம்பி MP ஆக்கிய நம்ம மக்கலுக்கு கிடைட்த சவுக்கடி....
Quote
 
 
0 #115 samali 2011-06-07 19:08
இது ரொம்ப ஒவெரா இருக்கு.
Quote
 
 
0 #114 Rajesh Santha 2011-06-07 09:42
We Citizens of India are fools, We have tolerance, But upto this level is like slave to our politicians. By this election we showed our strength. We need to prove our Powers by eliminating all Evil powers in our Society.
Jai Hind
Quote
 
 
0 #113 sekaran 2011-06-06 15:49
i appreciateyour couragious activity regarding to show the corruption and involved politician with evidence. welcom and best wishes.
Quote
 
 
+2 #112 தந்திரி 2011-06-06 14:49
தமிழ்நாட்டுல தி.மு.க தோத்து போனாலும், திகார் தொகுதில வெற்றி கொடிதான்.....எல்லோரும் அங்கே தான் உக்காருவானுகளோ???
Quote
 
 
0 #111 Aslam 2011-06-06 13:39
http://www.moneycontrol.com/news/business/maran-forced-me-to-sell-my-stake-former-aircel-owner-_554938.html

Maran forced me to sell my stake: former Aircel owner
Some more skeletons are falling out of the closet now in the 2G case, one of the biggest scandal that has rocked the country and has carried politics and corporates in its tide. In a statement to the Central Bureau of Investigation (CBI) Aircel's former owner S Sivasankaran had said that Textile Minister Dayanidhi Maran had forced him to sell his stake, reports CNBC-TV18 quoting sources.

Maran from DMK, is facing allegations of bending rules for granting 14 licences to Dishnet Wireless (now Aircel) during his tenure as telecom minister between 2004 and 2007.

As reported earlier, Telecom Ministry said that report of the one man committee Shivraj Patil, which also went into the procedures followed by the DoT from 2001 onwards in grant of licence and spectrum allocation, was handed over to the CBI in February.

Aircel applied for licences before the UPA 1 came to power and DoT officials had raised some objections against the application. Patil report, on the other hand, had pointed out unnecessary delay in grant of licences to Aircel.

According to allegations, Maran family-owned Sun TV Network was a beneficiary of pay-offs by an overseas telecom firm and the CBI has started a "preliminary investigation" against Maran.

As per the lawsuit, after Aircel was taken over Maxis, Sun TV received substantial investment from Maxis Group, which took 20 per cent equity in Sun Direct.
Quote
 
 
0 #110 சென்னை பதிவு 2011-06-06 12:51
CBI questions former Aircel owner
http://www.ndtv.com/article/india/cbi-questions-former-aircel-owner-110443 :-* :-* :-*
Quote
 
 
+4 #109 PrabaDaasan 2011-06-06 09:46
நீங்கள் ஒரு தீர்க்கதரிசி என்றே கூறுவேன். இதற்கு முன் யாரைபற்றிஎல்லாம ் எழுதினீர்களோ அவர்கள் எல்லாம் ஆடிய ஆட்டம், போட்ட வேஷம், செய்த ஊழல், அடித்த கொள்ளை, அனைத்தும் இப்போது வெளிச்சத்துக்கு வருகிறது. என் இதயத்தில் இருந்து வரும் வார்த்தைகள் என்னவெனில், சவுக்கு ஒரு டிரன்ட் செட்டர், பத்திரிகை செய்திகளை ஒரு புதிய பரிணாமத்திற்கு எடுத்து சென்று, முற்றிலும் மாறுபட்ட ஒரு கோணத்தில் செய்திகளை தருகுறீர்கள், வாழ்த்துக்கள், இந்த நற்பணி தொடரட்டும்.
Quote
 
 
+3 #108 D.prabakaran 2011-06-05 20:51
Please note this.....
Sun direct DTH uses MEASAT3 satellite, which is partly owned by maxis anandakrishnan (36% stake)
http://en.wikipedia.org/wiki/MEASAT_Satellite_Systems
Quote
 
 
-14 #107 கும்பிடறேன் சாமி 2011-06-05 18:19
யப்பா அந்நியா... நிறுத்து உன் சுயபுராணத்தை... காதுல ரத்தம் வழியுது... இங்க அவனவன் 'சவுக்குக்கு' தான் கருத்து எழுத வர்றான்... ஆனா நீ எக்ஸாம் பேப்பர் திருத்துற மாதிரி அது நொல்லை, இது நொட்டைன்னு சொல்லிக்கிட்டு இருக்க... நீ என்ன யோக்கியமா? ஒரு உதாரணத்துக்கு "சோனியாவை சந்தித்து மாறன் அப்படி என்ன குசுகுசு என்று பேசினார்னு" யாராவது கமெண்ட்டு போட்டா, உனக்கு வேண்டியபடி அந்த கருத்தை எடிட் செய்து "சோனியாவை சந்தித்து மாறன் குசு" என்று மட்டும் பதில் கருத்து எழுதி 'எவ்வளவு மோசமா எழுதுறாரு பாருங்க' என்று கெக்கே, பிக்கேன்னு சிரிக்கிற...!!! எவனாவது இங்க 'என் கருத்துக்கு மார்க் போட்டு கொடுன்னு' உன்ன கேட்டானா? இல்ல 'உன்னை கேட்டுத் தான் அல்லது உனக்கு புடிச்ச மாதிரி தான் கமெண்ட்டு போடணுமா?'... லூசா நீ?
Quote
 
 
+4 #106 selvam siddhar 2011-06-05 18:19
இது யார் சார், தவளை மாதிரி !!
Quote
 
 
+4 #105 Mamallan 2011-06-05 16:13
இவனுகளே இப்படி இருக்காங்க்ளே இவனுகள பெத்தவன் எவ்வலவு பெரிய தில்லாலஙடியா இருப்பான்..
Quote
 
 
+4 #104 nandhu 2011-06-05 15:34
Times Of India பத்திரிகையில் நேற்று வந்த செய்தி, அதாவது MAX - AIRCEL ஊழலில் தயாநிதியை கைது செய்யும் அளவிற்கு அவர்களுக்கு ஆதாரம் சிக்க வில்லையாம். அனால் நம்மாளு AIRCEL நிறுவனத்திற்கு 13 LICENCE களை 2001 ரேட்டிற்கு விற்று சுமார் 20000 கோடி அடித்து நஷ்டம் ஏற்படுத்தி உள்ளார். இதனை காங்கிரஸ் வெளியிடுவார்களா அல்லது மேலும் கெட்ட பெயர் வரும் என்று மூடி மறைப்பார்களா என்பதை பொருத்துஇருந்து தான் பார்க்க வேண்டும்.

உண்மை என்ன வென்றால் ராஜா போன்றவர்கள், திமுக வில் சேர்ந்ததுனால் தான் திருடர்களா மாறினார்கள் ஆனால் கேடி சகோதரர்களோ பிறவி திருடர்கள் ஆரம்பம் முதலே அவர்களின் புத்தி, அது கருணாநிதி மாறன் மரபணுவின் மூலம் அவர்களின் ரத்தத்தில் ஊறி உள்ளது. முதலிலே அவர்களின் தொழில் MONEY LAUNDERING செய்து பிழைப்பது தான். ஒரு நாளின் அவர்கள் உறங்கும் நேரம் தவிர்த்து அவர்களுக்கு சிந்தனை இதை பற்றி தான் இருக்கும். இந்த மனிதர்களின் தீய சிந்தனைகள் எப்பொழுதோ எல்லை கடந்து விட்டது, அந்த மொத்த சாக்கடையை அலசி ஆராய்வது சிபிஐ யால் ஓர் இரண்டு மாதத்தில் முடியாது ஒன்று.
Quote
 
 
+4 #103 தமிழநம்பி 2011-06-05 13:23
தமிழின் பெயரால் இயக்கம் நடத்தி ஆட்சி ஏறி எப்படியெப்படி எல்லாம் கொள்ளை அடிக்க முடியுமோ அப்படியப்படி எல்லாம் கொள்ளை அடித்திருக்கிறா ர்கள். இவர்கள், தமிழரின் பெயரைக் கெடுக்கும் இன இரண்டகர்கள் - துரோகிகள்! மக்கள் பகைவர்கள்! கடைந்தெடுத்த சுரண்டல் முதலாளிகள்! இவர்களுக்குத் தண்டனை கிடைக்குமா? இவர்களைப் போன்றவர்களெல்லா ம் இவ்வேதுங் கெட்ட இந்தியாவில் எந்தத் தண்டனையும் பெறுவதில்லை என்று கூறப்படுவது உண்மையா?
Quote
 
 
+3 #102 Gongura 2011-06-05 12:00
கேடி சகோதரர்கள் இண்டியாவின் "செகண்ட் ஜெனரேசன்" பிராடுகள்...இன்னும் இடுபோல பலர் கிளம்பியுள்ளனர் ...
Quote
 
 
+1 #101 Pearl 2011-06-05 07:59
Savukkalaaaa adichitingaaa poongaaa
Excellent
Quote
 
 
+1 #100 Devil 2011-06-05 02:39
Namellam Sonia maadiriyae CBI yae nambina epudi?
konjam technicala yosichu paarunga tax yaen katureenga...
andha panathai ellarum orphanage ku kodutha indha govt a oru aatam kaanum apo puriyum public power apuram thannala ellam maaridum...
Quote
 
 
+1 #99 Devil 2011-06-05 02:37
Sabaash sariyaana pooti.
Maaran+maaran: 440 kodi
Kani+Rasa: 240 kodi.
Karnai+sonia: 1.76k kodi

Munetram kaatuvaanganu ootu kuthina, enama nama vari panathayum vilaivaasiyalum kuthuraanga...

Mannumohan oru vethu payal.
Inneram thalaivar irundhiruntha rahula vaichu oru nalla game vilayandu indha kootaniku dousaroda onnuka parisa kooduthirupaar.

Mudhugula kuthuradhu sonia ku valakamachey..
Aiyya savuku Sonia unmayalumae rajivuku thaan pethaala ila vera something something..?
Quote
 
 
+1 #98 anniyan 2011-06-05 02:24
Quoting Kothandapaniman i:
கலைஞர் TV
கலைஞர் பிறந்தநாள் சிறப்பு பட்டி மன்றம்
தலைமை கவிபேரரசு வைரமுத்து

2G ஊழலில் அதிகம் கொள்ளை அடித்தது



வைகை வடிவேலு கொள்கைகுன்று குஷ்பு


//கொள்கைகுன்று குஷ்பு //

நீங்க ரெண்டாவது எழுத்துல ஸ்பெல்லிங் மிஸ்டேக் எதுவும் பண்ணிடலையே?
Quote
 
 
+1 #97 கும்பிடறேன் சாமி 2011-06-04 22:44
Quoting Padman:
குடும்பத்தில் உள்ள அனைவரும் திஹார் போயிட்டா...? அப்போ கட்சி?

இந்த கருநாகம் குடும்பத்திற்கா கத்தான் திமுக - வை நாசம் செய்து வைத்திருக்கிறது ... ஆனால் இவன் குடும்பமே இப்போ இப்படி சந்தி சிரிக்குதே!!!

சவுக்குக்கு ஒரு கேள்வி - சட்டம் தெரியாததால் கேட்கிறேன்...

இந்த ஸ்பெக்ட்ரம் வழக்கு முடிவதற்கு முன்பாகவே லோக்பால் புதிய சட்டம் நடைமுறைக்கு வந்தா இப்பொழுது இருக்கிற சட்டப்படி தண்டனையா? இல்லை லோக்பால் சட்டப்படி தண்டனையா?

புகழேந்தி வழக்கறிஞர்தானே?... கேட்டு எழுத முடியுமா?

இப்படிக்கு,

பத்மநாபன்.

Law cannot have retrospective effect.
Quote
 
 
-2 #96 கும்பிடறேன் சாமி 2011-06-04 22:39
இதை தான் சிம்பிள் ஆ மூடுடா!!! ந்னு சொல்லுவாங்க. தினமணியும் நியூ இன்ட்ப்ரெச்ச் ம் சொல்லிருக்கு.
Quote
 
 
+3 #95 மீடியா கிங் 2011-06-04 22:11
24371500 DAYANIDHI MARAN 3/1,BOAT CLUB 1ST AVENUE,RA PURAM,CHENNAI,6 00028

சூப்பர், உடனே, தொலைதொடர்பு நிறுவனம், தயாநிதி மாறன் பெயரை 24371500 எண்ணுக்கு மாற்றிவிட்டது. உண்மையிலேயே இவர்கள் ‘கேடி’ சகோதரர்கள் தான் என்பதினை மீண்டும் நிரூபித்துவிட்ட ார்கள்,
Quote
 
 
-16 #94 TMS 2011-06-04 19:23
என்டா உங்களூக்கு இந்த பொறாமை, அடுத்தவன் நல்லா இருந்தால் உங்களுக்கு பிடிக்காதெ
Quote
 
 
+3 #93 krishnan.selvaraj 2011-06-04 19:01
சவுக்கு ,please place Facebook Like button , Twitter share option in each article. This would be easy for us to take the news to the crowd.
Quote
 
 
+4 #92 takiduthatham 2011-06-04 18:38
இவர்களை ஜெயிலில் அடைத்தால் மட்டும் போதாது. சொத்துக்களையும் பிடுங்க வேண்டும்.
இதை பத்தி நல்லா விசாரிச்சு கண்டிப்பா எழுதுங்க சவுக்கு
Quote
 
 
+1 #91 dhasu 2011-06-04 18:03
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்
மீண்டும் தர்மம் வெல்லும்
Quote
 
 
+4 #90 Lakshmanan 2011-06-04 17:06
1957-ல் நான் 9 - ஆவது (அப்போது அது 4-ஆவது ஃபாரம்) வகுப்பில் படித்துக் கொண்டு இருந்தேன். நானும் என்னைவிட 6 வயது குறைவான என் இனிய நண்பனும் திருச்செங்கோடு 40 – கால் மண்டபத்திற்கு முன் நடந்த - கருணாநிதி கலந்து கொண்ட கூட்ட்த்திற்கு சென்றிருந்தோம். அப்பொதே அவர் வானளாவப் புளுகு மூட்டையை அவிழ்த்து விட்டுக்கொண்டிர ுந்தார். ”மேடையில் நான் இருப்பதால் நான் ”தலைவனும்” அல்ல! – கிழே இருந்து கொண்டு நீங்கள் கேட்டுக் கொண்டிருப்பதால் நீங்கள் வெறும் தொண்டன் மட்டும் என்பதும் அல்ல! அல்ல! அல்ல! ”நான் தொண்டனுக்குத் தொண்டன் – மாபெரும் தொண்டனே! உங்களுக்கு செய்வதற்காகவே நான் இங்கு அமர்ந் திருக்கிறேன்!” என நீட்டி முழங்கினார். அந்த வயதிலேயே எங்களுக்கு அதன் “ நகை முரண்” மிகவும் தெளிவாக விளங்கியது.

70-களில் துக்ளக் இதழில் வெளிவந்த கருத்தான ”திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழ் நாட்டையே கூறு போட்டு விற்று விடுவார்கள் என்பது தான் பிழையாகப் போய்விட்ட்து. தமிழ் நாட்டைக் கூறு போட்டு விற்காமல் அதையே கூறு போட்டு ஒரு காசு செலவில்லாமல் வாங்கி விட்டனர்.

இவ்விதமான நாட்டின் இழி நிலையைக் கண்டு மனம் கோணி, வெதும்பி, என் சொந்த வாழ்வில் நடைபெற்ற மனச்சங்கடங்களுக ்கும், பண இழப்புக் களுக்கும் பல அவஸ்தைகளுக்கும் இவர்களே காரணம் என்ற ஓர் அவல நிலையையும் அடைந்தேன். மிகச் சுலபமாக அவற்றின் சமக்கூறுகளை (EQUATIONS) நான் அடையாளம் காண முடிந்த்து.

இத்தகைய தோல்விகளை எதிர் பார்த்திருந்தேன ். இதனால் வெற்றிக் களிப்பு ஏற்படவில்லை. சஞசலங்கள் ஒரு மாதிரியாக அமைதி பெற்றது என்று தான் கூற வேண்டும்.
Quote
 
 
+2 #89 tsraja 2011-06-04 16:27
THANKS SAVUKKU. This is great service to the people of Tamil Nadu and India. Please continue your good efforts. D Maran has to be punished. If CBI does not act, SAVUKKU should file a PIL in Supreme court, i hope all Online will donate and support you. I am ready for it.
Quote
 
 
+10 #88 GOBU 2011-06-04 15:59
DMK headquarters will be Shifted from "Anna Arivaalayam to Tihar Siraiyaalayam" soon...
Quote
 
 
+8 #87 NOTe 2011-06-04 15:45
கேடி சகோதரர்களின் வீழ்ச்சி தமிழ் மக்கள் இவர்களுக்கு கொடுக்கும் தண்டனை.
கருணாநிதி குடும்பத்தின் சொர்கம் இனி திஹார்
ஜெயில் தான்.
Quote
 
 
+2 #86 Yavarum Nalam 2011-06-04 15:36
Also there maybe some connection bet'n Maxis company in Malaysia for the Audio release of the Movie "Enthiran" ". It was held in Malaysia. I think the Kedi brothers must have got the benefits thro this function. When the company Sun Pics in the loss, how could they make it in Malaysia. It was a very very expensive function with so many actors from Tamil industry. We should break the rule by punishing these people to show others that the punishments will be given immdly.
Quote
 
 
+1 #85 newton paul singh 2011-06-04 13:59
hai savukku I'm the regular reader of your website please exhibit all the corrupted people in the lime light irrespective of cast religion political parties etc then only you will be accepted as as a genuine and neutral reporter i appreciate your courage
Quote
 
 
+1 #84 jothi basu 2011-06-04 13:13
போஙகடா போக்கத்த பெயலுகலா
Quote
 
 
+3 #83 M.S.Chagla 2011-06-04 11:47
ஆமாம். இந்த பிடுகிகலை ஜைலில் அட்மிட் பன்ன வேன்டும். சாகா அடிக்கனும்.
Quote
 
 
0 #82 Jegan Nathan 2011-06-04 11:34
Quoting Balaji - Brandon FL:
This Small step by savukku will be a good initiation to clean the country.
After independence the country is growing backwards.
There are lots of young talents in the country is ignored and humiliated.
Let us march forward to make india better place to live than any other country in the world.

Hi Balaji, Iam very glad to see some one from brandan reading this savukku. I used to live at MLK and Falkanburg and worked there in tampa. now moved back to india for good. good luck
Quote
 
 
+24 #81 mks 2011-06-04 11:24
வந்தாரை வாழ வைக்கும் திருப்பூரை டையிங் பிரச்னைல மாட்டி விட்டு
இப்ப பிச்சை எடுக்கும் அளவுக்கு கொண்டு வந்தது
இந்த பச்சலை புடுங்கி தான் சவுக்கு

இவன் கடலூர்ல பத்தாயிரம் ஏக்கர்ல டையிங் கட்டி
திருப்பூரை அளிக்க பார்கிறான்

இதை பத்தி நல்லா விசாரிச்சு கண்டிப்பா எழுதுங்க சவுக்கு
Quote
 
 
+4 #80 unmaieh 2011-06-04 11:16
I could not type in tamil. So I am commenting this english.

It seems Raja only ordered CBI to probe into 323 telephone line case and he got the report and did not approve the same to take action. Why? He and MK is trying use the report to black mail Dayanidhi. This shows how criminal the whole DMK is.
Quote
 
 
+29 #79 Thennadan 2011-06-04 10:49
சன் குழுமத்தின் சட்ட விரோத செயல்களை பத்திரிகையாளர் திரு.சாவித்திரி கண்ணன் சில ஆண்டுகளுக்கு முன்பே வெளிக் கொணர்ந்துள்ளது டன் அதனை நூலாகவும் வெளியிட்டுள்ளார ். அப்பா முரசொலி மாறனின் தந்திரம், தாத்தா கருணாநிதியின் குள்ளநரித்தனம் ஆகிய அனைத்தையும் பெற்று குறுகிய காலத்தில் தங்களின் அதிகார சாம்ராஜ்யத்தை நிறுவியவர்கள் இந்த கேடி சகோதரர்கள்.

தங்களை நிலைநிறுத்திக் கொள்வதற்காக எப்படிப்பட்ட முயற்சிகளையும் மேற்கொள்ளக் கூடியவர்கள். உண்மையில் சொல்லப்போனால் , இந்த மண்ணின் நாசகார சக்தி இவர்கள்.

இவர்களை ஒழிப்பதுதான் தமிழகத்தின் வளர்ச்சிக்கு முதல்படியாக அமையும்.

அதற்கு சில முக்கியமான நடவடிக்கைகளை தமிழர்களாகிய நாம் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும்.

1. கம்பி வட சேவையை அரசுடையாக்கும் தமிழக அரசின் முயற்சிகளுக்கு பெரும் ஆதரவை அனைவரும் நல்குதல்

2. சன் குழுமத்தின் அனைத்துத் தொலைக்காட்சி மற்றும் வானொலிகளை ஒட்டு மொத்தமாகப் புறக்கணித்தல் (கலைஞர் குழும தொலைக்காட்சிகள ையும் சேர்த்து)

3. சன் மற்றும் கருணாநிதி குடும்ப நிறுவனங்கள் தயாரிக்கும் திரைப்படங்களை திரையரங்கிற்குச ் சென்று பார்ப்பதைத் தவிர்த்தல்

4. இத்தொலைக்காட்ச ிகள ின் நேர்காணலுக்கோ, செய்தி நிகழ்வுகளிலோ பங்கேற்பதை முற்றிலுமாகத் தவிர்த்தல். இதற்கான பரப்புரையை ஆங்காங்கே நிகழ்த்துதல் ஆகியவற்றை தொடர்ந்து மேற்கொண்டு வரும் பட்சத்தில் இவர்களைப் பழைய 'பூமாலை' நிலைக்கே தள்ளிவிட முடியும்.
Quote
 
 
+3 #78 thamizhan 2011-06-04 10:48
Correct, Savukku is a respected investigative Journal Media and should be broadcasting quality messages. We are all 100 % with you and educated, literate, qualified, disciplined, people are very much in the overall circle and that also from overseas. It is only a request that Savukku focus is good and your target, approach and line of sequence is absolutely professional, Keep the good work going, we are all with you.

Thanks
Quote
 
 
+10 #77 பொன்சந்தர் 2011-06-04 10:10
அதனாலதான் எந்திரன் பாடல் வெளியீட்டு விழாவை மலேசியாவில் வைத்தாரோ.... அனந்தகிருஷ்ணன் செலவுல
Quote
 
 
+1 #76 pandiyan 2011-06-04 09:49
SAVUMANI FOR KEDI.. now dinamani raised BIG Voice. they should hang on public place after read today headlines;
http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Editorial&artid=426948&SectionID=132&MainSectionID=132&SEO=&Title=
Quote
 
 
+2 #75 pandiyan 2011-06-04 09:43
Now the game is over for him. DINAMANI PUBLISHED the truth. savukku readers must say thanks to Ungalil Oruvan. dinamani has explained much about Ungalil Oruvan image contents. also dinamani challenged to KEDI. see this;
இனி, தயாநிதி மாறன் தாராளமாக "தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' குழுமத்தின் மீது வழக்குப் பதிவு செய்யலாம். ஆனால் அது அவரது பதவிக்கு சரியான படிப்பினையை அளிக்கும். உண்மையை மறைக்க முற்படாமல் மெளனமாக இருப்பதுதான் அவருக்கு நல்லது.
Quote
 
 
+1 #74 COOL 2011-06-04 08:04
Revealing the iron curtains 8) Good Report. Thank you very much. May your service continue in neutral
Quote
 
 
+11 #73 Kannan TPJ 2011-06-04 07:15
இவனுக்கு திகர்ல யப்படி நிலமை கொடுக்கனும் -------- துனியே இல்ல்லம அம்மனமா வுடனும் --------- அப்ப தான் உன்ன்மை என்னா அப்படீன்னு இந்த நயிக்கு புரியும். :cry: :P :roll: :-* :-x :lol: :roll: :roll: :roll: :roll: :roll: :lol: :lol: :lol: :lol:
Quote
 
 
+3 #72 gopri 2011-06-04 06:56
Can u please put a box in your top page;
COUNT STARTS - Dayanidhi maran last days to resign??

we are all eager to know when is his last day to be in Tihar jail!!
Quote
 
 
+3 #71 Yemaali 2011-06-04 06:15
ஊழல்வாதிகள் தண்டிக்கப் பட்டதாக எந்த ஒரு தீர்ப்பும் இல்லை!, யார் கண்டார்! நாளையே இவர்கள் தனிக்கட்சி ஆரம்பித்து கூட்டணி வைக்கலாம்! அப்போது எல்லாம் புஸ்வானமாகிவிடு ம், மக்கள் தான் ஏமாளி!
Quote
 
 
+15 #70 Kolar 2011-06-04 05:47
சிவசங்கரன் கிட்ட மட்டுமா புடுங்கி திண்ணானுங்க? தமிழ் நாடு மட்டுமல்லாமல் உலகத்துல எவன் கிடைச்சாலும் அவிங்க சொத்தை புடுங்கி திங்கிரவன வேற எப்படி கூப்பிடுறது? இவன் ஒரு புடுங்கி, இவனோட அண்ண ஒரு புடுங்கி, இவனோட அப்பா ஒரு புடுங்கி, இவனோட தாத்தா ஒரு புடுங்கி, இவனோட குடும்பமே ஒரு புடுங்கி குடும்பம்.
Quote
 
 
+2 #69 Kolar 2011-06-04 05:30
இன்னிக்கு தாய்யா நம்ம ஊர்காரன் மாதிரி புட்டு வெச்சிருக்கே! உமது பணி வாழ்க! வளர்க!

பத்திரிக்கை துறையிலை தேவை உமது பணி!

'புடுங்கி' போட்டதுக்கு எதிர்ப்பு தெரிவிச்ச வசகர்களே, அந்த வார்த்தைக்கு உன்மையான அர்த்தம் என்னான்னு தெரியுமா? உங்களால் தான் தமிழ் 'டமில்' ஆயிட்டிருக்கு!
Quote
 
 
0 #68 Karthik K 2011-06-04 02:53
Quoting Balaji Venkatesan:
While we respect the courage and the effort in exposing and standing tall in these key issues. There can be no doubt about the atrocity of the Maran brothers. Totally understand your anger.

It is not the question of weather Maran's deserve such language. But such use of language over time will create doubts on your ability to view things in a balanced manner and without emotion. We want you to be a news source we can trust - not an emotional activist who after a while be consumed by the issues.

Hope you are able to appreciate the point of view.

தெ பொஇன்ட் ஒஃப் விஎந்.[/ஃஉஒடெ]

totally agree with Balaji's comments. While Maran brothers deserve worse language than this, Savukku should be careful to watch his words so it does not get too emotional and personal.. we want Savukku for a loong time.
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 80 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday4215
mod_vvisit_counterYesterday10391
mod_vvisit_counterThis week72989
mod_vvisit_counterLast week80887
mod_vvisit_counterThis month206947
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12729066