முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்தொடர்புக்கு
+++
மௌனமே பார்வையால்…… அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 42
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
சனிக்கிழமை, 04 ஜூன் 2011 11:05

 

ஆனால், ஒரு பத்திரிக்கை, அதுவும், லட்சக்கணக்கான வாசகர்களால் நம்பப்படக் கூடிய ஒரு பத்திரிக்கை, ஒரு இமாலய ஊழலைப் பற்றி மௌனமாக இருப்பது ரசிக்கத் தக்கதல்ல…. அதுவும், அந்த ஊழலை நியாயப் படுத்தி எழுதினால் அது அயோக்கியத்தனம். கண்டிக்கத் தக்க ஒரு செயல்.

 

இப்படிப் பட்ட கண்டிக்கத் தக்க செயலைச் செய்தது யார் ? ஜுனியர் விகடன் தான். இரண்டு லட்சத்துக்கும் அதிகமான வாசகர்ளைக் கொண்டிருக்கும் ஒரு பத்திரிக்கை ஜுனியர் விகடன். ஏற்கனவே, காஞ்சிபுரம் தேவநாதன் பற்றிய செய்திகளை அட்டைப் படச் செய்தியாக வெளியிட்ட போதே, ஜுனியர் விகடனை சவுக்கு கண்டித்திருக்கிறது.   அதற்குப் பிறகு பல நாட்கள், ஜுனியர் விகடன், செக்ஸை வைத்து வியாபாரம் செய்வதை தவிர்த்திருக்கிறது.   இது மிக மிக வரவேற்கத் தகுந்தது.     ஜுனியர் விகடன் இதழுக்கு, ஆ.ராசா, நோட்டீஸ் அனுப்பி, தன்னைப் பற்றியும், தனது குடும்பத்தினரைப் பற்றியும் எந்தச் செய்தியும் வெளியிடக் கூடாது என்று, சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள, திமுக நீதித்துறையைச் சேர்ந்த நீதிபதிகளின் உதவியோடு தடையுத்தரவு பெற்றார்.

 IMG_0001343

அதன் பிறகு, ராசாவுக்கு எதிரான செய்திகளை நாடே பேசத் தொடங்கியதும், ஜுனியர் விகடன் களத்தில் இறங்கி, ராசாவை உரி உரி என உரித்தது. ராசாவின் ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து வெளிவந்த கட்டுரைகளை தொகுத்து, தனிப் புத்தகமாகவே வெளிக் கொண்டுவந்தார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

 

அப்போதே ஊடகத் துறையில் எழுந்த ஒரு பேச்சு, ராசாவைப் பற்றி ஜுனியர் விகடன் இப்படி வரிந்து கட்டிக் கொண்டு எழுதுவதற்கு பின்னணியில் கேடி சகோதரர்கள் இருக்கிறார்கள் என்பது. ஆனால், அந்தச் செய்திகளுக்கு எவ்வித ஆதாரமும் இல்லையென்பதால், அரசல் புரசலாக அந்தச் செய்தி பேசப்பட்டு வந்தது.

 raja_287301a

எல்லா தொழிலிலும், லாபம் மட்டுமே நோக்கம் என்றாலும், விகடன் போன்ற குழுமத்தில் லாபத்தை மட்டும் பார்க்காமல், ஒரு சமுதாய நோக்கோடுதான் இதை நடத்தி வந்தார் விகடன் குழுமத்தின் சேர்மேனாக இருந்த பாலசுப்ரமணியம்.   அட்டைப்படத்தில் ஒரு படத் துணுக்கு வெளியிட்டதற்காக, சட்டசபையில் அவர் மீது உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வந்து, அவர் சிறை சென்றதும், பின்னாளில், நீதிமன்றம் அந்த வழக்கை ரத்து செய்து, பாலசுப்ரமணியம் அவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கியதும் வரலாறு.

 

 

அவருக்குப் பிறகு, அவர் மகன் திரு.சீனிவாசன் அவர்கள் வசம், நிர்வாகம் வந்த பிறகு சமுதாய நோக்கு என்பது, குறைந்து, அருகி, அற்றுப் போய், வெறும் லாபம் மட்டுமே முன்னுக்கு நிற்கிறது. எல்லா தொழில் அதிபர்களும், தொழிலை விரிவுபடுத்த முனைவது போல, திரு.சீனிவாசன் அவர்களும், பத்திரிக்கை தொழிலையும் தாண்டி, திரைப்படத் தயாரிப்பு, தொலைக்காட்சித் தொடர் தயாரிப்பு என்று இறங்கினார்.   விகடன் ஒளித்திரை என்ற நிறுவனம் மூலமாக எடுக்கப் பட்ட பல்வேறு தொலைக்காட்சித் தொடர்கள், சன் டிவியில் ப்ரைம் ஸ்லாட்டில் ஒளிபரப்பப் பட்டு பெரும் வெற்றியை பெற்றன.

 

இந்த அடிப்படையிலேயே கேடி சகோதரர்களோடு, விகடன் குழுமத்திற்கு உறவு ஏற்படுகிறது. சன் குழுமமும், விகடன் குழுமமும், தொழில் பங்குதாரர்களாக ஆகின்றன. இந்த உறவு நெருக்கமாக வளர்ந்தது தவறான காரியம் ஒன்றும் இல்லை. ஆனால், இந்த நெருக்கமான உறவால் இதழியல் நெறிகளை மீறுவதென்பது நியாயமற்ற ஒரு செயல். அப்படி இதழியல் நெறிகளை ஜுனியர் விகடன் என்ன மீறி விட்டது என்பதைப் பார்ப்போம்.

 

கடந்த ஒரு வாரமாக, கேடி சகோதரர்களை, தமிழக ஊடகங்களும், தேசிய ஊடகங்களும், பிரித்து மேய்ந்து கொண்டிருக்கின்றன.   அரசல் புரசலான குற்றச் சாட்டுகளாக இல்லாமல், ஆதாரங்களோடு பல்வேறு குற்றச் சாட்டுகள் வெளியாகி, தயாநிதி மாறன் பதவி விலகியே ஆக வேண்டும் என்ற சூழல் உருவாகி இருக்கிறது.   தேசிய ஊடகங்களில் ப்ரைம் டைமில் இந்த விவகாரம் விவாதிக்கப் பட்டு வரும் அதே நேரத்தில், தமிழிலும், பெரும்பாலான ஊடகங்கள் தயாநிதி மாறன் மற்றும் சன் டிவி குழுமத்தின் ஊழல்கள் குறித்து, செய்திகள் வெளியிட்டு வருகின்றன, நக்கீரன் உட்பட.

 

இந்த நேரத்தில், இன்று வெளியாகியுள்ள ஜுனியர் விகடனின் கவர் ஸ்டோரி என்ன தெரியுமா ? “வில்லனா சீமான்.   வீறிடும் விஜயலட்சுமி”   சீமான் ஒரு தலைவராக வளர்ந்து வருகிறார். அவரின் நடத்தைகளும், செய்கைகளும், விவாதப் பொருளா என்றால் விவாதப் பொருள் தான்.   ஆனால், சீமான் ஒரு பெண்ணை ஏமாற்றியதும், தேசத்தின் சொத்தைக் கொள்ளையடித்து, 1200 கோடி ரூபாயை ஒரு ஊடகம் நடத்தும் ஊழல் கும்பல் கொள்ளையடித்ததும் ஒன்றா என்றால் இல்லை.

 

இவை இரண்டில் எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதை சவுக்கு வாசகர்களுக்கு சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

 

மத்திய மந்திரியாக இருக்கும் ஒரு நபர், பல கோடி ரூபாய் ஊழலைச் செய்து விட்டு, அது பற்றி செய்தி வெளியிடும் ஊடகங்களுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி மிரட்டுகிறார் (தினமணி தலையங்கம் பார்க்க) அந்த ஊழல் நடைபெறவேயில்லை என்று சாதிக்கிறார்.   பதவியை ராஜினாமா செய்ய மறுக்கிறார்.   இவரைப் பற்றிய செய்தியை கவர் ஸ்டோரியாக வெளியிட வேண்டுமா இல்லையா ? அதுதானே ஊடக தர்மம்.

 l2007032812742

இந்த இதழின் உள்ளேயே, தயாநிதி மாறனைப் பற்றிய செய்தியை ஜுனியர் விகடன் வெளியிட்டிருக்கிறது. அந்தச் செய்தியின் தலைப்பு “2G லேட்டஸ்ட் புயல்.   தயாநிதி மாறனுக்கு எதிராக அரசியல் சதி ?” இந்தத் தலைப்பே தயாநிதி மாறன் கொடுத்தது.   தயாநிதி மாறன் பத்திரிக்கையாளர்களை சென்னை விமான நிலையத்தில் சந்தித்த போது கூறிய வார்த்தைகள் இவை.

 

அந்தக் கட்டுரை பின் வருமாறு:

டந்த சில நாட்களாக, மத்திய ஜவுளித் துறை அமைச்சர் தயாநிதி மாறனின் பெயர் தலைப்புச் செய்திகளில்! டெல்லி எதிர்க்கட்சிகள் வட்டாரத்திலும் சூடாக உச்சரிக்கப்படுகிறது அவர் பெயர்!

2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் 2008 - 09 காலகட்டத்தில் நடந்த ஊழல்கள் குறித்து சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்து டெல்லி பாட்டியாலா தனி நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வரும் நிலையில், தயாநிதி மாறனை குறி வைத்து காய் நகர்த்தப்படுவதை அர்த்தத்தோடு கவனிக்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக நாடாளுமன்றத்தில் புயல் கிளப்பிய கட்சிகளில் முக்கியமானது பி.ஜே.பி. இதனால் எரிச்சல் அடைந்த காங்கிரஸ் கட்சி, ''வேண்டுமானால், பி.ஜே.பி. ஆட்சியில் இருந்த காலம் தொட்டே தொலைத் தொடர்புத் துறையின் விவகாரங்களை விசாரிக்கலாம்!'' என்றது. சட்டரீதியாக 2ஜி விவகாரம் கிடுகிடுக்க ஆரம்பித்தபோது உச்சநீதிமன்றமும் இதே கருத்தைக் கூறியது.

இது தொடர்பாக மத்திய அரசு அமைத்த நீதிபதி சிவராஜ் பாட்டீல் தலைமையிலான ஒருநபர் விசாரணை கமிஷனும் இதே கருத்தை வலியுறுத்தியது. பி.ஜே.பி. ஆட்சியில் தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்த அருண்ஷோரி, ''2004-ம் ஆண்டு தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்த தயாநிதி மாறன்தான் பல்வேறு விதிமுறைகளை மாற்றினார். அதற்கு முன்னால் இருந்த அமைச்சர்கள் முறையாகத்தான் நடந்து கொண்டார்கள்!'' என்று நடுவில் ஒரு குற்றச்சாட்டை வைத்தார். ஆனாலும் சி.பி.ஐ. விசாரிக்கும் எல்லைக்கு அப்பால் இருந்த விஷயம் என்பதால் அப்போது அது அமைதி ஆனது!

இப்போதோ, ஆ.ராசா மீது பல்வேறு சந்தேகங்களைக் கிளப்பி பொதுநல வழக்கைத் தாக்கல் செய்த பிரசாந்த் பூஷண், தயாநிதி விஷயத்தையும் கையில் எடுக்க... மீடியாக்களில் விறுவிறுவென அடிபடுகிறது விவகாரம்.

''தயாநிதி மாறன் மத்தியத் தொலைத் தொடர்பு அமைச்சராக இருந்த காலத்தில் மலேசியாவைச் சேர்ந்த 'மேக்சிஸ்' நிறுவனத்துக்குச் சாதகமாக நடந்துள்ளார். இதற்கான ஆதாரங்கள் நிறைய உள்ளன!'' என்று தொடங்கும் பிரசாந்த் பூஷணின் மனுவில்...

''சென்னையைச் சேர்ந்த தொழில் அதிபர் சிவசங்கரன் நடத்தி வந்த ஏர்செல் நிறுவனம் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு கேட்டு விண்ணப்பம் செய்தது. ஆனால், அதை வழங்குவதில் சுணக்கம் காட்டினார் தயாநிதி மாறன். அனுமதி வழங்காமல் காலதாமதம் செய்யப்பட்டது. சிவசங்கரன் தாக்கல் செய்த அத்தனை மனுக்களும் நிலுவையில் இருந்தன. இந்த நிலையில் ஏர்செல் நிறுவனத்தின் 74 சதவிகிதப் பங்குகளை மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனம் வாங்கியது. இதன் பிறகு தொலைத் தொடர்புத் துறை ஸ்பெக்ட்ரம் உரிமங்களை வழங்க முன்வந்தது. முதலில் தேவையற்ற காலதாமதம் செய்ததும்... அதன்பிறகு அதை வழங்கியதும் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில்  உள்ளது!'' என்று சொல்லியிருக்கும் பிரசாந்த் பூஷண்,

''இந்த விஷயங்கள் நடந்தேறிய பிறகு மேக்சிஸ் நிறுவனம் தனது துணை நிறுவனமான ஆஸ்ட்ரோ நிறுவனத்தின் மூலமாக சில முதலீடுகளைச் செய்துள்ளது. சன் டைரக்ட்​டுக்கு  599 கோடியும், இதே குழுமத்தின் தெற்காசிய எஃப்.எம். லிமிடெட் நிறுவனத்துக்கு  111 கோடியும் முதலீடாக தரப்பட்டுள்ளது. இது குறித்து வழக்குப் பதிவு செய்து சி.பி.ஐ. விசாரணை நடத்த உத்தரவு இடவேண்டும்!'' என்று கூறி இருக்கிறார்.

பி.ஜே.பி-யின் செய்தித் தொடர்​பாளர் ரவிசங்கர் பிரசாத் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில், தயாநிதி​மாறனை நோக்கி சில கேள்விகளை வைத்திருக்கிறார். அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயப்பிரகாஷ் நந்தா, சி.பி.ஐ-யின் இயக்குநர் ஏ.பி.சிங்​குக்கு ஒரு கடிதம்  அனுப்பி உள்ளார்.

''ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்​பாக ரவிசங்கர் பிரசாத் எழுப்பிய கேள்வி​களுக்கு உரிய விளக்கமோ, பதிலோ வரவில்லை. பிரதமர் மன்மோகன் சிங்கும் சோனியாவும் மௌனமாக உள்ளனர். காங்கிரஸ் அரசாங்கத்தின் ஊழல் ஒவ்வொன்றாக வெளியில் வந்து கொண்டு இருக்கிறது. எனவே, எங்கள் கேள்விகளுக்கு சி.பி.ஐ. இயக்குநர் பதில் சொல்ல வேண்டும். மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனமானது 74 சதவிகிதப் பங்குகளை ஏர்செல் நிறுவனத்திடம் வாங்கிய பிறகுதான் அந்த நிறுவனத்துக்கு அதிகமான ஏரியாக்களுக்கு லைசென்ஸ் வழங்கப்பட்டதா?

இந்தக் கேள்வி மக்கள் மனங்களில் நிழல் ஆடுகின்றன. இது தொடர்பாக சி.பி.ஐ. இயக்குநர் பதில் அளிப்பதுடன் இது தொடர்பான விசாரணையையும் துரிதப்படுத்த வேண்டும். இந்த ஊழல் குற்றச்சாட்டு மீது இடையூறு அற்ற விசாரணை நடத்த வசதியாக தயாநிதி மாறன் பதவி விலக வேண்டும். அல்லது பிரதமர் அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்!'' என்று அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

எதிர்பார்த்த மாதிரியே 'தயாநிதி மாறன் பதவி விலக வேண்டும்' என்று தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் கூறியிருக்கிறார். ''தயாநிதி மாறன் விவகாரத்தில் என்ன செய்ய வேண்டும் என்பது பிரதமருக்குத் தெரியும். தயாநிதி மாறன் அமைச்சர் பதவியில் இருந்து விலகவேண்டும். அல்லது அவரை பிரதமர் ராஜினாமா செய்யச் சொல்ல வேண்டும். சட்டரீதியான நடவடிக்கையை தயாநிதி மாறன் எதிர் கொள்ள வேண்டும்!'' என்று சொல்லியிருக்கிறார் ஜெயலலிதா.

கடந்த 26-ம் தேதி சோனியாவைச் சந்தித்த தயாநிதி சில விளக்கங்கள் அளித்துள்ளார். அடுத்து, கடந்த திங்கள் கிழமை அன்று அரசியல் பிரச்னைகள் தொடர்பான கேபினெட் கூட்டம் பிரதமர் தலைமையில் டெல்லியில் நடந்தது. அதன் உறுப்பினர்களில் ஒருவர் என்ற முறையில் தயாநிதி மாறனும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டார். கூட்டம் முடிந்தபின் தயாநிதியை அழைத்து பிரதமர் பேசியுள்ளார். அதைத் தொடர்ந்து, கடந்த புதன்கிழமை மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் கபில்சிபலை சந்தித்து, சில விளக்கங்களை தயாநிதி முன்வைத்ததாகக் கூறப்படுகிறது.

தனக்கு எதிராகக் கிளம்பும் இந்த குற்றச்சாட்டு தொடர்பாக தயாநிதிமாறன் மீடியாக்கள் வாயிலாக விளக்கம் வெளியிட்டு உள்ளார். ''2004-07 ஆண்டுகளில் நான் தொலைத் தொடர்பு அமைச்சராக இருந்தேன். அப்போது மற்ற நிறுவனங்களைப் புறக்கணித்துவிட்டு எந்த ஒரு குறிப்பிட்ட நிறுவனத்துக்கும் நான் சலுகை காட்டியது இல்லை. உரிமம் தரும் விஷயத்தில் அரசுக்கு என்னால் ஒரு பைசா கூட இழப்பு ஏற்பட்டதும் இல்லை. துறை விதித்திருந்த நிபந்தனைகளை பூர்த்தி செய்கிற அளவுக்கு தகுதி வாய்ந்த நிறுவனங்களுக்கு மட்டுமே உரிய காலத்தில் முறைப்படி உரிமம் வழங்கப்பட்டது!'' என்று கூறியுள்ள தயாநிதி,

''ஏர்செல் நிறுவனத்துக்கு உரிமம் வழங்கிய விவகாரத் தைப் பொறுத்தவரை 2004-ம் ஆண்டு மே 27-ம் தேதி நான் அமைச்சராக பதவி ஏற்பதற்கு முன்பு இருந்தே அந்த நிறுவனத்தின் விண்ணப்பம் அரசின் பரிசீலனையில் இருந்து வந்தது. அந்த நிறுவனத்திடம் போதுமான நிதி ஆதாரம் இருக்கிறதா என்பதைப் பற்றியும் நிறுவனத்தின் நிகர மதிப்பு பற்றியும் கடன் - ஈவு விகிதம் பற்றியும் தொலைத் தொடர்புத் துறை அதற்கு முன்பே பல கேள்விகளை எழுப்பி இருந்தது.

அந்த நிறுவனத்தைப் பற்றிய எல்லா விவரங்களையும் தொலைத் தொடர்புத்துறை முழுமையாக ஆராய்ந்து, உரிமம் பெறுவதற்கான எல்லாத் தகுதிகளையும் அந்த நிறுவனம் பெற்ற பிறகே அவர்களுக்கு ஒப்புதல் அளிக்கப் பட்டது.

நான் தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சராக இருந்த காலத்தில் எந்த ஒரு தொலைத் தொடர்பு நிறுவனமும் நேரடியாகவோ மறைமுகமாகவோ எனது சகோதரரின் எந்த ஒரு நிறுவனத்திலும் எந்தவித முதலீடும் செய்ததில்லை. சன் டைரக்ட் நிறுவனத்தில் ஆஸ்ட்ரோ நிறுவனம் முதலீடு செய்தபோது நான் அமைச்சர் பதவியில் இல்லை. மேலும் இந்த நிறுவனங்கள் எதிலும் எனக்கு பங்குகளும் எந்தவித பொறுப்புகளும் இல்லை!'' என்று கூறியுள்ளார் அவர்.

''ஆஸ்ட்ரோ நிறுவனத்துக்கும் சன் குழுமத்துக்கும் உள்ள தொடர்பு எந்த அரசியல் நிர்பந்தங்களாலும் உண்டானது அல்ல. 1998-ம் ஆண்டில் இருந்தே தொடர்பு கள் இருக்கிறது. எனவே 2007-ம் ஆண்டு லைசென்ஸ் கொடுக்கப்பட்டதற்கு பிரதி பலனாகத்தான் அவர்கள் சன் குழும நிறுவனங்களில் முதலீடு செய்தார்கள் என்று சொல்வது தவறு. ஆஸ்ட்ரோ நிறுவனம் சன் குழுமத்தில் 2007-ம் ஆண்டு டிசம்பரில்தான் பணம் முதலீடு செய்துள்ளது. ஆனால் அதற்கு பல மாதங்களுக்கு முன்பே தயாநிதிமாறன் அமைச்சர் பதவியில் இருந்து விலகிவிட்டார். அந்த காலகட்டத்தில் அவர் ஆக்டிவ்வான அரசியலிலேயே இல்லை. மத்திய அரசாங்கத்தில் அதிகாரம் செலுத்தும் மனிதராகவும் இல்லை. மீடியாத் துறையில் படிப்படியாக வளர்ந்து புகழுடன் இருக்கும் இரண்டு பெரிய நிறுவனங்களுக்குள் நடக்கும் இயல்பான வர்த்தக பரிவர்த்தனைகளுக்குக் கூட இப்படி அரசியல் சாயம் பூசுகிறார்களே..!'' என்று தயாநிதிமாறன் ஆதரவாளர்கள் வருத்தத்துடன் சொல் கிறார்கள்.

இதற்கிடையே தொலைபேசி இணைப்புகளை வரம்புமீறி பயன்படுத்தியதாகச் சொல்லப்பட்ட புகார் குறித்தும் மீடியாக்களிடம் விளக்கம் அளித்தார் தயாநிதி மாறன். ''என் மீது அவதூறு ஏற்படுத்தும் நோக்கத்தில் இப்படி குற்றச்சாட்டுப் பரப்புகிறார்கள். எனக்கு எதிராக சிலர் செய்யும் அரசியல் சதிதான் இது. என் மீதான அத்தனைக் குற்றச்சாட்டுகளும் பொய் என்பதை நிரூபித்துக் காட்டுவேன். நான் குற்றமற்றவன் என நிரூபிக்க வாய்ப்பு கொடுங்கள். தவறு செய்திருந்தால் எத்தகையத் தண்டனையையும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறேன். 2009-ம் ஆண்டு வெளியிட்ட அதே செய்தியைத்தான் இப்போதும் வெளியிட்டு இருக்கிறார்கள். புகார் கூறப்பட்ட காலத்தில் நான் பரபரப்பு அரசியலில் இல்லை. கட்சி மற்றும் குடும்ப நேர்மையை சந்தேகிக்கும் விதமாக இப்படி குற்றச்சாட்டு பரப்புகிறார்கள். என் வீட்டில் ஒரே ஒரு பி.எஸ்.என்.எல். இணைப்பு மட்டுமே உள்ளது!'' எனச் சொல்லி அதற்கு ஆதாரமாக பி.எஸ்.என்.எல். பொது மேலாளர் கொடுத்த கடிதத்தையும் பத்திரிகையாளர்களிடம் காட்டினார் தயாநிதி மாறன்.

உச்சநீதிமன்றத்தில் பிரசாந்த் பூஷணும்... சி.பி.ஐ-யை நோக்கி பி.ஜே-பி-யும் நகர்த்தும் இந்த காய்கள் எந்த கோணத்தில் நகரும் என்பது போகப் போகவே தெரியும். ஜூலை மாதம் நாடாளுமன்றம் கூடுகிறது. இந்த முக்கோணச் சிக்கலில் இருந்து விடுபட தயாநிதி மாறன் எடுக்கப் போகும் நடவடிக்கைகள், தமிழகத்திலும் டெல்லியிலும் அடுத்தகட்ட அரசியல் காட்சிகளை நிர்ணயிக்கும்!”

பிஜேபி ரவிசங்கர் பிரசாத் சிபிஐ இயக்குநருக்கு எழுதிய கடிதத்தில் உள்ள விபரமும், தயாநிதி வெளியிட்ட மறுப்பின் முழு விபரங்களையும் தவிர வேறு ஒன்றுமே இல்லை.   தயாநிதியின் மறுப்பின் முழு விபரங்களையும் வெளியிட்டதன் மூலம், சன் டிவியின் அச்சு வடிவமாக காட்சியளிக்கிறது ஜுனியர் விகடன்.

ஜுனியர் விகடன் இதழின் இந்த செயல் தங்களை நம்பி இதழை தாங்கள் உழைத்த பணத்தைக் கொண்டு வாங்கும், பாமர மக்களை ஏமாற்றும் ஒரு செயலாகவே சவுக்கு பார்க்கிறது.   இந்தச் செயல், பாமர மக்களை ஏமாற்றி வாக்கு கேட்கும், அரசியல் வாதியின் செயலுக்கு, துளியும் குறைந்தது இல்லை. சொல்லப் போனால், பத்திரிக்கைகள் ஒன்றுதான் சமுதாயத்தின் விடிவெள்ளி என்று கருதிக் கொண்டிருக்கும், மக்களை ஏமாற்றுவது, அரசியல்வாதியின் தவறை விட, மோசமானது.

 

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ஊழலே நடைபெறவில்லை என்று சாதித்த, நக்கீரன் இதழின் செயலுக்கும், தயாநிதி மாறனுக்கு வாக்காலத்து வாங்கும், ஜுனியர் விகடனின் செயலுக்கும், பெரிய வேறுபாடு இல்லை.

 

மந்தையிலிருந்து வழி தவறும் ஆடுகளை ஏசுநாதர் வழி நடத்துவார். ஆனால் நேர்மையிலிருந்து விலகும் ஊடகங்களை மக்கள் புறக்கணிப்பார்கள் என்பதை ஜுனியர் விகடனுக்கு சவுக்கு சொல்லிக் கொள்ள விரும்புகிறது.

 

நேற்றுதான் முத்தமிழ் அறிஞர் கருணாநிதி சொன்னார். “கூடா நட்பு கேட்டைத் தரும்” என்று. இதை விகடன் குழுமத்தார் சிந்தித்துப் பார்க்குமாறு கேட்டுக் கொள்வதோடு, அய்யன் வள்ளுவர் சொன்னதையும் யோசியுங்கள்.

 

இடுக்கண் படினும் இளிவந்த செய்யார்

நடுக்கற்ற காட்சி யவர்.

 

தெளிவான அறிவும் உறுதியும் கொண்டவர்கள் துன்பத்திலிருந்து விடுபடுவதற்காகக்கூட இழிவான செயலில் ஈடுபட மாட்டார்கள்.

 

Comments  

 
0 #111 Eniyaval 2011-06-09 14:22
நம்பினோர் கெடுவதில்லை
Quote
 
 
0 #110 Eniyaval 2011-06-09 14:19
வாட்ட பிட்டி வாட்ட பிட்டி...
Quote
 
 
0 #109 tamilandreams 2011-06-08 12:27
சிவ சன்கரன் வாகுமுலம் பட்ரி இந்த வாரமும் ஜுவி எந்த சேஇதியும் வரவில்லை. விலை பொஇ விட்டர்கல்
Quote
 
 
0 #108 Tamil Asiriyan 2011-06-08 07:37
[ஃஉஒடெ நமெ="செ"]தேவநாதன் பிரச்சணை வெறும் செக்ஸ் பிரச்சணை அல்ல சவுக்கு. அனைத்து சாதியினரும் அர்ச்சகர் பிரச்சனையில் முற்பொக்கு இயக்கங்கலால் இன்று பரப்புரைக்கு பெரிதும் பயன்படுகிறது. பார்பான் சுத்தமானவன் ஆதலால் அவன் தான் பூஜை செய்ய வேண்டும் என்னும் சாதிய கருத்தை தவறு என வெளிப்படையாக உரித்து காட்டியது.[/ஃஉஒடெ]டேய் நாயே தேவனாதன் பிரச்சனைகும் இதுக்கும் என்ன சம்பந்தம்?
Quote
 
 
0 #107 Tamil Asiriyan 2011-06-08 07:36
டேய் நாயே தேவனாதனுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?
Quote
 
 
0 #106 pandiyan 2011-06-07 18:39
magazine should highlight whether PAID NEWS or their news. see Hindu, raja interview after that they got advt from telecom and their group itself saying this is paid interveiw. with reg to vikatan whatever news for MARAN groups thats paid news . viewers should keep it in mind always..

Quoting shivanantham:
ஜூ.வி யை குறை சொன்னாலும் இதுதான் யதார்த்தம். நான் எனது இன்றைய பதிவில் (இந்தியாவில் ஊழலை குறைக்க ஒரு வழி.) இதை பற்றித்தான் குறிப்பிட்டிருக ்கிறேன். தேர்தல் நிதிக்காக பணக்காரர்களிடம் அரசியல்வாதிகள் கையேந்துவதால், அவர்களுடைய சுதந்திரம் பறி போவது மட்டுமின்றி பல விஷயங்களில் அனுசரித்தும் போகவேண்டி இருக்கிறது. எனவே இந்த கூடா நட்பை ஒழிக்க தேர்தல் செலவுக்கு அரசே நிதி ஒதுக்க வேண்டும் என்று கூறியிருந்தேன்.

இதோ அடுத்த தலைவலி. பத்திரிக்கையாளர ்கள் -தொழில் அதிபர்கள் தொடர்பால் இவர்களும் அனுசரித்து போக வேண்டி இருக்கிறது. இதுவும் ஆபத்தானதுதான். இதற்கும் ஒரு வழி கண்டுபிடித்து முறிக்க வேண்டும்.
Quote
 
 
-1 #105 che 2011-06-07 17:41
தேவநாதன் பிரச்சணை வெறும் செக்ஸ் பிரச்சணை அல்ல சவுக்கு. அனைத்து சாதியினரும் அர்ச்சகர் பிரச்சனையில் முற்பொக்கு இயக்கங்கலால் இன்று பரப்புரைக்கு பெரிதும் பயன்படுகிறது. பார்பான் சுத்தமானவன் ஆதலால் அவன் தான் பூஜை செய்ய வேண்டும் என்னும் சாதிய கருத்தை தவறு என வெளிப்படையாக உரித்து காட்டியது.
Quote
 
 
0 #104 Vidya 2011-06-07 16:51
60% பங்கு வைத்து இருக்கும் மாறன் & கோ
வுக்கு ஆதரவா இருக்காங்க.
ஏனோ "ர.சு. நல்லபெருமாள் அவர்களின் "போராட்டங்கள் கதையும் , அதில் வரும் பாரதமணி பத்திரிக்கையும் மனதில் வருகின்றது..
பத்திரிக்கை தர்மம் சொரம் போகலாமா?
Quote
 
 
0 #103 ravikumarrr 2011-06-07 15:37
சீமான் பற்றி எழுதுபவர்கள் பா.ஸ்ரீனிவாசன் நடிகைகளிடம் தொடர்பு வைத்திருப்பது பற்றி யார் எழுதப் போகிறார்கள்..?
Quote
 
 
0 #102 sharan 2011-06-07 06:13
[ஃஉஒடெ நமெ="அம்ம"]உண்மையான காரணம் ஜுனியர் விகடன் இதழின் 60% பங்கு கேடி சகோதரர்கள் வைத்துள்ளனர்.[/ஃஉஒடெ]ப்
பாசு.. நான் ஜுவிய வாங்ரத நிபாடி ஒரு வாரம் ஆச்சி. அப்ப நீஙக?
Quote
 
 
+1 #101 Kani 2011-06-06 20:27
[ஃஉஒடெ நமெ="அன்பே சிவம்"]முன்பு.. வைகோ கூட கேடி சகோதரர்களிடம் ஜூவி விலைபோனதாக சொன்ன நினைவு?!![/ஃஉஒடெ]

Vaiko said in the 2006 MLA election campaign at Pulla Reddy Avenue. I was there in the meeting.
Quote
 
 
+1 #100 Ravi 2011-06-06 20:22
திரு.சீனிவாசன் பொறுப்பேற்ற பிறகு விகடனின் நம்பகத்தன்மை பெரும் கேள்விக்குறிதான ். மேலும் காசுக்காக கடந்த ஆட்சியில் முதல் 4 வருடங்கள் தொடர்ந்து ஜால்ரா அடித்துவிட்டு பிறகு தேர்தலுக்கு 6 மாதம் முன்பு நல்ல பிள்ளை போல் நடுநிலையாக எழுத தொடங்கியது. 2006 முதல் 2010 வரை இவர்கள் ஒன்று ரஜினி பற்றி எழுதுவார்கள் அல்லது ஸ்டாலினின்/அழகிரி புகழ் பாடுவார்கள். நான் விகடனின் வலைத்தளத்தை அது தொடங்கியது முதல் சந்தா கட்டி படித்து வந்தவன். ஆனால் சமிபகாலங்களில் இவரகளின் கேவலமான ஒருதலைப்பட்சமான கட்டுரைகளை கண்டு வெறுப்புற்று இந்த வருடம் முதல் சந்தாவை புதுப்பிக்க மறுத்துவிட்டேன் . இது போல் பலர் செய்திருப்பதாக அறிகிறேன். ரவி
Quote
 
 
0 #99 shivanantham 2011-06-06 19:07
ஜூ.வி யை குறை சொன்னாலும் இதுதான் யதார்த்தம். நான் எனது இன்றைய பதிவில் (இந்தியாவில் ஊழலை குறைக்க ஒரு வழி.) இதை பற்றித்தான் குறிப்பிட்டிருக ்கிறேன். தேர்தல் நிதிக்காக பணக்காரர்களிடம் அரசியல்வாதிகள் கையேந்துவதால், அவர்களுடைய சுதந்திரம் பறி போவது மட்டுமின்றி பல விஷயங்களில் அனுசரித்தும் போகவேண்டி இருக்கிறது. எனவே இந்த கூடா நட்பை ஒழிக்க தேர்தல் செலவுக்கு அரசே நிதி ஒதுக்க வேண்டும் என்று கூறியிருந்தேன்.

இதோ அடுத்த தலைவலி. பத்திரிக்கையாளர ்கள் -தொழில் அதிபர்கள் தொடர்பால் இவர்களும் அனுசரித்து போக வேண்டி இருக்கிறது. இதுவும் ஆபத்தானதுதான். இதற்கும் ஒரு வழி கண்டுபிடித்து முறிக்க வேண்டும்.
Quote
 
 
0 #98 prabhakar 2011-06-06 18:23
சமீப காலமாக ஜூனியர் விகடன் படிப்பது உயிர்மை, காலச்சுவடு படிப்பதைப் போல பழைய செய்திகளின் கட்டுரைத் தொகுப்பாகவே உள்ளது. ஒரு புலனாய்வு பத்திரிகை என்ற விதத்தில் எந்த அப்டேட்டும் இல்லை.(ஒரு வாரத்துக்கு முன்னாலேயே ரெடி பண்ணிருவாய்ங்கள ோ என்னவோ..) அதுகூட பரவாயில்லை..
தயாநிதி மாறனுக்கு எதிராக அரசியல் சதி என்கிற கவர் ஸ்டோரிதான் மிகப்பெரிய அதிர்ச்சியை தந்திருக்கிறது. இது பத்திரிகை தர்மத்தை பலி கொடுத்திருக்கும ் மகாபாதகச் செயல். இத்தனை வருடங்களாக ஒரு மோசடி பத்திரிகையைப் படித்து வந்திருக்கிறோம் என்பதை நினைக்கும் போது வெட்கமாய் இருக்கிறது!
Quote
 
 
+3 #97 naan manithan 2011-06-06 17:19
இன்று மட்டும் இல்லை. அன்றே செக்கர் இன் ஹோட்டல் தாக்கப்பட்டபோது ம் செய்தி இல்லை.
Quote
 
 
+1 #96 chozhaveeran 2011-06-06 17:19
Tamil Nadu media is still controlled by DMK.The problem is people still believe whatever is written in the magazines. At some point Savukku should also become a magazine to counter the DMK controlled media.
Quote
 
 
+1 #95 Chidambaram 2011-06-06 16:16
I fully agree with your comments. I was a regular reader of JV.But on reading the above article defending Dayanidhi i did send comments to JV regarding Vikatans Vellithirai link with Sun Tv which was not published.I have since cancelled my subscription to Vikatan. This is very typical of Vikatan nowadays.
Quote
 
 
+1 #94 sudhakar 2011-06-06 16:10
சவுக்கு வார பத்திரிக்கை Must come
Quote
 
 
-1 #93 JayarajSelvam 2011-06-06 16:10
மரியதைகுரிய சவுக்கு அவர்கலுக்கு....

சீமான்
உன்மை நிலவரம்?
Quote
 
 
+1 #92 juvi edhiri 2011-06-06 15:47
இந்த ஜு வி பதிரிக்கை ஒரு பொய் என்பது எனக்கு 20 வருடம் முன்பே தெரியும். இவர்களை வாலாஜா ரொட் ரயில் நிலயத்தை சென்னை ரயில் நிலயதொடு இனைக்க ஒரு கட்டுரை எழுதி தந்தொம். இதனை பதிப்பு செயாமல் ஏமாட்ரிய மொள்ள மாறி கும்பல் இது. அன்ட்று முதல் இன்ட்ரு வரை ஜுவி வாஙுவதொ படிப்பதொ கிட்யாது.
Quote
 
 
-1 #91 naga rathinavel 2011-06-06 15:42
ஃப்ஹ்
Quote
 
 
0 #90 sharan 2011-06-06 15:08
I'm one among of thousands of regular juve reader. Yeah felt the same Mr.savukku I had never seen about KD brother's news in the resent past. Now am planning to stop buying juve.

Thanks,
sharan
Quote
 
 
+1 #89 Arunkumar 2011-06-06 14:35
ஒரு நேர்மையான நடு நிலை பத்திரிக்கை என்று அறியப்பட்ட விகடன் குழுமம் மாறன் சகோதரர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டில் நிற்பது பத்திரிக்கை தர்மத்திற்கு எதிரானது தான். வெளிப்படையான ஆதரவு இல்லை என்றாலும் உண்மைக்குப் புறம்பாக திரித்துப் பேசுதலும் உண்மையை மறைப்பதும் பொது மக்களுக்கு செய்யும் துரோகம் தான். நானும் என் நண்பர்களும் பொது விஷயங்களை அலசுதலில் விகடன் கை பிடித்து நடந்தவர்கள்தாம் . இவர்கள் கலைஞர் குடும்பத்துடன் பல மாதங்களாகவே நெருக்கம் காட்டியதையும் அவர் பற்றிய செய்திகளை பரப்பியதையும்கூ ட நாங்கள் தேர்தல் முடியும்வரை என்றுதான் எண்ணினோம். ஆனால் விகடன் விலை போகும் என்று நாங்கள் எண்ணவில்ல. விகடன் குழுமம் மாறன் சகோதரர்களிடம் காசு வாங்கிக்கொண்டு செயல்படும் என்று எண்ணியிருந்தால் நாங்கள் காசு கொடுத்து வாங்கிப் படித்திருக்க மாட்டோம்.
Quote
 
 
0 #88 N.Rajan 2011-06-06 12:59
sila neram savukku junior vikadanai paratugirirgal sila neram thittukerrgal enn endru puriyavillai
Quote
 
 
0 #87 gopan 2011-06-06 12:04
Ananda vikatan can not thrive without publishing Vulgar pictures of woman. They depend only on third rate articles nowadays. Junior Vikatan has become yellow magazine long back.What they practise is journalistic prostitution.
Quote
 
 
0 #86 பாபு 2011-06-06 11:51
I Agree with you mr Pandiyan. [ஃஉஒடெ நமெ="பன்டியன்"]ந்ஹட் யொஉ மெஅன்ட் டொ சய் இச் ணக்கெர்ரன் இச் பெஹின்ட் றாஜாட்ஹீ க்ரொஉப் அன்ட் விகடன் இச் பெஹின்ட் மரன் க்ரொஉப். யெச். மய் பெ சொர்ரெச்ட் புட் இ நொஉல்ட் சய் டொ பெஒப்லெ தட் டொன்ட் ச்பென்ட் டோ முச் மொனெய் டொ ரெஅட் திச் மகழினெச். அவொஇட் சுப்ச்ரிப்டிஒன் அன்ட் இஃப் யொஉ கெட் ஃப்ரே சொப்ய் ஜுச்ட் ரெஅட் இட் ஒர் லிப்ரரய் ஹச் திச் போக்ச் ஜுச்ட் ரெஅட் இட் அன்ட் எஞொய். தெய் அரெ ருன்னிங் தெ மகழினெ ஃபொர் பூஸீணேஸ்ஸ் அன்ட் நெ ஷொஉல்ட் நொட் ஃபோல் ஒஉர்செல்ஃப்ச்.

[ஃஉஒடெ நமெ="பாபு"]மிகச் சரியான பதிவு. ஆனந்த விகடன் குழுமத்தின் சந்தர்ப்பவாதம் முதன் முதலில் சந்தி சிரித்தது ஜெயேந்திரன் விவகாரத்தில்தான ். இதரபத்திரிகைகள் எல்லாம் காஞ்சி மட விவகாரத்தை தினந்தோறும் விதம் விதமாகப் போட்டுக் கிழித்துக்கொண்ட ிருக்க (உண்மைச் செய்திகள்தான்)
ஜெயேந்திரன் கைது ஆகும் தருணம் வரைக்கும் அது பற்றி ஒரு பிட் நியூஸ் கூட வராமல் மௌனம் காத்தது ஜூனியர் விகடன். கைதுக்குப் பிறகுதான் இனியும் மௌனம் சாதித்தால் வாசகர்கள் டவுசரைக் கழற்றிவிடுவார்க ள் என்பதை உணர்ந்து ‘நானும் ரவுடிதான்’ என்னும் விதமாக காஞ்சிமடக் கதைகளை அவிழ்த்துவிடத் தொடங்கியது. ஆனால் தயாநிதி மாறன் விவகாரத்தில் இதுவும் நடக்காது. நீங்கள் வேண்டுமானால் பாருங்கள்- தயாநிதி கைது செய்யப்பட்டபிறக ும் கூட- ஏதோ காதில் விழுந்த செய்தி போலத்தான் ஜூனியர் விகடன் செய்திகளை வெளியிடும். காரணம்- பா.ஸ்ரீனிவாசனுக்கு இருக்கும் ’சன் பக்தி’ அப்படிப்பட்டது. ராசாவுக்கு காமராஜ் போல கேடி பிரதர்ஸுக்கு விகடன் ஸ்ரீனிவாசன். இப்போது பாருங்கள்- காமராஜ் தயாநிதியை துவைத்துத் தொங்கவிட்டுக் கொண்டிருப்பதை! ஆகவே கொஞ்ச நாட்களுக்கு தயாநிதிபற்றிய தகவல்களுக்கு நாம் நக்கீரனை நம்புவதில் தவறில்லை. (இவங்க எப்பவுமே இப்படித்தான் பாஸ்…)[/ஃஉஒடெ][/ஃஉஒடெ]
Quote
 
 
0 #85 Sandiar 2011-06-06 11:41
கேடி சகோதரர்கல் மீடியா சர்வாதிகாரம் மூலம் எதையும் சாதிக்கலாம் என்ரு நினைக்கிரார்கல் . அது நடக்காது. திகார் ஜயில் கதவுகல் வரவேர்கிரது.
Quote
 
 
0 #84 பாலா 1981 2011-06-06 11:32
Mr. Shankar,

I am eagerly waiting for your article on the recent book release function. It was a nice function. All the speakers have participated in the function very sincerely. They came out with serious comments which was defended very well by the original author and the translator. It was a bolt out of blue when you thanked the spies from 'q-divi.' /'crime branch'. Such a seriousness is shown by the state agencies towards the proceedings of the function, is showing the pace at which the 'Savukku' is growing. I personally congratulate you for the first book publication and the effort put in organizing its release (except the PA system).

--
Balasubramanian
Quote
 
 
0 #83 Padman 2011-06-06 09:21
Siva appears before cbi today.
Quote
 
 
+5 #82 pugazh 2011-06-05 22:51
சவுக்கு, இன்னைக்கி எக்மோர் பக்கம் போறப்பதான் அந்த குழந்தைகள் நல மருத்துவமனையை பார்த்தன். ஐயோ! அந்த கொடுமையை சொல்ல முடியல. இந்த கலைஞர் காப்பீட்டு திட்டம், அரசு ஊழியர்களுக்கு இன்சூரன்ஸ்ன்னு டெபாசிட் பண்ணி பணத்த கொள்ள அடிச்சத நெனச்சா வயிறே எரியுது. இத பத்தின தெளிவான ஒரு கட்டுரையை நம்ம சவுக்கு வாசகர்களுக்காக போடுங்களேன்.
Quote
 
 
+5 #81 pandiyan 2011-06-05 21:22
what you meant to say is Nakkerran is Behind RAJATHI group and vikatan is behind Maran group. yes. may be correct but i would say to people that dont spend too much money to read this magazines. avoid subcription and if you get free copy just read it or libraray has this books just read it and enjoy. they are running the magazine for BUSINESS and we should not fool ourselfs.

Quoting பாபு:
மிகச் சரியான பதிவு. ஆனந்த விகடன் குழுமத்தின் சந்தர்ப்பவாதம் முதன் முதலில் சந்தி சிரித்தது ஜெயேந்திரன் விவகாரத்தில்தான ். இதரபத்திரிகைகள் எல்லாம் காஞ்சி மட விவகாரத்தை தினந்தோறும் விதம் விதமாகப் போட்டுக் கிழித்துக்கொண்ட ிருக்க (உண்மைச் செய்திகள்தான்)
ஜெயேந்திரன் கைது ஆகும் தருணம் வரைக்கும் அது பற்றி ஒரு பிட் நியூஸ் கூட வராமல் மௌனம் காத்தது ஜூனியர் விகடன். கைதுக்குப் பிறகுதான் இனியும் மௌனம் சாதித்தால் வாசகர்கள் டவுசரைக் கழற்றிவிடுவார்க ள் என்பதை உணர்ந்து ‘நானும் ரவுடிதான்’ என்னும் விதமாக காஞ்சிமடக் கதைகளை அவிழ்த்துவிடத் தொடங்கியது. ஆனால் தயாநிதி மாறன் விவகாரத்தில் இதுவும் நடக்காது. நீங்கள் வேண்டுமானால் பாருங்கள்- தயாநிதி கைது செய்யப்பட்டபிறக ும் கூட- ஏதோ காதில் விழுந்த செய்தி போலத்தான் ஜூனியர் விகடன் செய்திகளை வெளியிடும். காரணம்- பா.ஸ்ரீனிவாசனுக்கு இருக்கும் ’சன் பக்தி’ அப்படிப்பட்டது. ராசாவுக்கு காமராஜ் போல கேடி பிரதர்ஸுக்கு விகடன் ஸ்ரீனிவாசன். இப்போது பாருங்கள்- காமராஜ் தயாநிதியை துவைத்துத் தொங்கவிட்டுக் கொண்டிருப்பதை! ஆகவே கொஞ்ச நாட்களுக்கு தயாநிதிபற்றிய தகவல்களுக்கு நாம் நக்கீரனை நம்புவதில் தவறில்லை. (இவங்க எப்பவுமே இப்படித்தான் பாஸ்…)
Quote
 
 
+1 #80 Vijay US 2011-06-05 19:41
நன்றீ சவுக்கு.
Quote
 
 
+10 #79 பாபு 2011-06-05 16:58
மிகச் சரியான பதிவு. ஆனந்த விகடன் குழுமத்தின் சந்தர்ப்பவாதம் முதன் முதலில் சந்தி சிரித்தது ஜெயேந்திரன் விவகாரத்தில்தான ். இதரபத்திரிகைகள் எல்லாம் காஞ்சி மட விவகாரத்தை தினந்தோறும் விதம் விதமாகப் போட்டுக் கிழித்துக்கொண்ட ிருக்க (உண்மைச் செய்திகள்தான்)
ஜெயேந்திரன் கைது ஆகும் தருணம் வரைக்கும் அது பற்றி ஒரு பிட் நியூஸ் கூட வராமல் மௌனம் காத்தது ஜூனியர் விகடன். கைதுக்குப் பிறகுதான் இனியும் மௌனம் சாதித்தால் வாசகர்கள் டவுசரைக் கழற்றிவிடுவார்க ள் என்பதை உணர்ந்து ‘நானும் ரவுடிதான்’ என்னும் விதமாக காஞ்சிமடக் கதைகளை அவிழ்த்துவிடத் தொடங்கியது. ஆனால் தயாநிதி மாறன் விவகாரத்தில் இதுவும் நடக்காது. நீங்கள் வேண்டுமானால் பாருங்கள்- தயாநிதி கைது செய்யப்பட்டபிறக ும் கூட- ஏதோ காதில் விழுந்த செய்தி போலத்தான் ஜூனியர் விகடன் செய்திகளை வெளியிடும். காரணம்- பா.ஸ்ரீனிவாசனுக்கு இருக்கும் ’சன் பக்தி’ அப்படிப்பட்டது. ராசாவுக்கு காமராஜ் போல கேடி பிரதர்ஸுக்கு விகடன் ஸ்ரீனிவாசன். இப்போது பாருங்கள்- காமராஜ் தயாநிதியை துவைத்துத் தொங்கவிட்டுக் கொண்டிருப்பதை! ஆகவே கொஞ்ச நாட்களுக்கு தயாநிதிபற்றிய தகவல்களுக்கு நாம் நக்கீரனை நம்புவதில் தவறில்லை. (இவங்க எப்பவுமே இப்படித்தான் பாஸ்…)
Quote
 
 
+5 #78 Mamallan 2011-06-05 15:58
விகடன் குழுமத்துக்கு நம்ம கேடி சகோதரர்கள் செமத்தியா ஆப்பு வைக்கப் போறாங்க... அப்ப தான் தெரியும் அவனுஙலுக்கு... ஒன்பது ரூவா குடுத்து படிக்கிறவன் கேனையங்கலளா? தப்பு பண்ணிட்டு மத்திய மந்திரியே உள்ளே இருக்குறத பார்த்துட்டும் இவனுக அந்த திருட்டு ***** பசங்கலுக்கு சப்போர்ட்டு பன்றாங்கன்னா, இவனுகள நினைச்சு வருத்தப் படுறத தவிற வேர வழி இல்ல...
Quote
 
 
+3 #77 தஞ்சை குணா 2011-06-05 14:48
ஜனநாயகத்திற்கு 4 தூண்கள் என்கிறார்கள். சவுக்குதான் 5 வது தூண். 3 தூண்களின் போலிகளை அடையாளம் காட்டுகின்ற 5 வது தூண்.

சீமானை பயன்படுத்திக் கொண்டவர்களும், பாதிக்கப்பட்டவர ்களும் ஒன்றிணைந்து அவரை ஒழித்துக்கட்ட சதி செய்கிறார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.சவுக்கு இதனை ஆராய்ந்து எங்களுக்கு உண்மையைக் காட்ட வேண்டுகிறேன்.
Quote
 
 
+3 #76 priyan 2011-06-05 11:33
"ஜுனியர் விகடன் இதழின் இந்த செயல் தங்களை நம்பி இதழை தாங்கள் உழைத்த பணத்தைக் கொண்டு வாங்கும், பாமர மக்களை ஏமாற்றும் ஒரு செயலாகவே சவுக்கு பார்க்கிறது. இந்தச் செயல், பாமர மக்களை ஏமாற்றி வாக்கு கேட்கும், அரசியல் வாதியின் செயலுக்கு, துளியும் குறைந்தது இல்லை. சொல்லப் போனால், பத்திரிக்கைகள் ஒன்றுதான் சமுதாயத்தின் விடிவெள்ளி என்று கருதிக் கொண்டிருக்கும், மக்களை ஏமாற்றுவது, அரசியல்வாதியின் தவறை விட, மோசமானது."

Ju.Vi.... "Indha polappukku polakkarudhukku nee kootikududaa naaye".....You blood pimp fellows. I was a regular reader of JV and AV, but stopped it long ago when they stopped publishing Gnani's articles....
Quote
 
 
+5 #75 santhosh thala fan 2011-06-05 11:16
சீமான் பத்தி ஒரு கட்டுரை ( நடந்தது என்ன ) போடா முடிமா சவுக்கால .......?? :P

சங்கர் அண்ணா இதுக்கு ஒரு சரியானா செருப்படி கொடுங்க 8)
Quote
 
 
-4 #74 Sandiar 2011-06-05 10:58
சிஉ ம்ப்ஜ்;ஜ் சியப்ய்; ண்க்ஹ்ள்க்; ண்ஃப்ப் ர்ண்ஃப்ஹுஹ்;ஃப் ச்; க்ட்;த்; ஃப்];க் ட்ப்ட்ஃப்ஹுஜ்;இ ஜ் எப்க்ப்ல்ஜ்;ஜ்ஃ ப்;ஃப் எப்க்ப்ல்க்; ௯ச்ப்குக்;க்ப் ரெ;ண்ஜ்ஹ்ர்க்;க ்ல்;ல்ஹ்ஹ்;ஃப்ச ்;. 2006ய்; இட்ண்ஃப்ஹ்ட்க்; > ருஜ்;ஃப்க்ஹூக்; ஜ்ப்க்ஃப் இட் ட்ப்ல்;ள் ட்ப்ய்ஃப்பண்க்ஹ ்ஜ் ஜ்ணுஹ்ஃப்க்; வ்ட்;ந் எப்க்ப்ல்ஜ்;ஜ்ப ்ந்;ஃப் எப்க்ப்ல்க்; ௯ய்க்ப்ல்;ல்ஹ்ஹ ்;ஃப்ச ்;. ம்த்ய்; ,த்;ஃபிச்க்; க்ந்;ந்ப் க்ல்;ள்க்; அஹூக்; ந்ர்ஹ்ய்;ய்ஃப்; $ல்ஹ்ஜ்> வோஜ்ஃப்; $ல்ஹ்ஜ். வ்ட்;ட்ல்ஹ் எஹக்; ,ஜ்.
Quote
 
 
+1 #73 baba 2011-06-05 10:55
எத்தனை ஊழல்கள்,ரவுடித் தனம்,அராஜகம் எல்லாவற்றையும் விட்டு விட்டு சீமானை பற்றி எழுதியதில் இருந்து,சீமானை பழிவாங்கவே இவை எல்லாம் என்று தெரிகிறது. இன்று நம் தமிழகத்தில் 90 வீதமானவர்கள் ஒருவரை காதலித்து இன்னொருவரை திருமணம் செய்தே வாழ்கிறார்கள்.ஒரு சின்னத்திரை நடிகை சொன்னவுடன் ஆராயாது எழுதுவதும்,பேசு வதும் முறையற்றது ஆகும்.இந்த நடிகையின் மறுபக்கம் மிகக் கேவலமானது என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
Quote
 
 
+6 #72 Thangavel 2011-06-05 09:20
தயாநிதி மாறனின் பழைய கதைகளை சவுக்கு அனைவருக்கும் இன்னொரு ப்ளாக் முலம் எழுத வேண்டும். சுமங்கலி கேபிள் தமிழ் நாட்டில் முன்னேற சகோதரர்கள் செய்த கொலை, கொலை மிரட்டல்கள் அனைவர்க்கும் தெரிய வரவேண்டும்
Quote
 
 
+9 #71 பொது ஜனம் 2011-06-05 09:00
Quoting ஆனந்த்:
இந்த செய்திதான் எல்லா இதழ்களிலும் வந்து விட்டது என்று தாங்களே சொல்லி விட்டீர்கள். இனி இதைப் பற்றி வெளியிட புதிதாக ஒன்றும் இல்லை. அப்படி வெளியிட்டாலும் மற்ற பத்திரிகைகளின் கார்பன் காப்பியாகத்தான் இருக்க முடியும். அதனால் புதிய விஷயமாக சீமான் அவர்களைப் பற்றி எழுதியிருக்கிறா ர்கள். இதற்கு போய் சவுக்கு எதற்காக அதிகம் அலட்டிக் கொள்கிறாரோ. சவுக்கில் இந்த விஷயம்தான் வெளியாக வேண்டும் என்று ஜூ வி பொறுப்பாளர்கள் எதிர் பார்ப்பதில்லை. அதனால் ஜு வியில் இந்த விஷயம்தான் வெளியாக வேண்டும் என்று சவுக்கு எதிர் பார்ப்பது தவறு.


டாய் நீ என்ன பைத்தியக் காரனா? எல்லா இதழ்களிலும் ஒரே மாதிரி வந்தால் தான் மக்களுக்கு ஒரு நம்பிக்கை இருக்கும் என்பது உனக்குத் தெரியாதா? அப்படியே ஒரே மாதிரி வரக் கூடாது என்றாலும் கேடி சகோ வை பாரட்டி எழுதுவது எந்த விதத்தில் நியாயம்...

உம்மை என்ன சொல்லி திட்டுவது என்றே தெரியவில்லை...
Quote
 
 
+2 #70 puutan 2011-06-05 08:12
Savukku,

sun group has bought the junior vikatan for 100 crores?

is it true?
since many people writing comments on JUVI pages and I hope Juvi will not make them as fooliosh.
Quote
 
 
+2 #69 Nalam Virumbi 2011-06-05 04:59
சவுக்கு, ஜூனியர் விகடனின் கட்டுரை என்கே ஆரம்பித்து எங்கே முடிகிரது, சவுக்கு கட்டுரை மீன்டும் எங்கே தொடங்குகிரது என தெளிவாகப்புரியவ ில்லை. ஜூவி கட்டுரையை வேறு தனி கலரில் தாருங்கள்![ஃஉஒட ெ நமெ="டமில்123"]சவுக்கு, ஜூனியர் விகடனின் கட்டுரை என்கே ஆரம்பித்து எங்கே முடிகிரது, சவுக்கு கட்டுரை மீன்டும் எங்கே தொடங்குகிரது என தெளிவாகப்புரியவ ில்லை. ஜூவி கட்டுரையை வேறு தனி கலரில் தாருங்கள்![/ஃஉஒடெ]
I eQuoting tamil123:
சவுக்கு, ஜூனியர் விகடனின் கட்டுரை என்கே ஆரம்பித்து எங்கே முடிகிரது, சவுக்கு கட்டுரை மீன்டும் எங்கே தொடங்குகிரது என தெளிவாகப்புரியவ ில்லை. ஜூவி கட்டுரையை வேறு தனி கலரில் தாருங்கள்!

I endorse this comment.
Quote
 
 
+2 #68 amoorthy 2011-06-05 02:34
எத்தனை ஊழல்கள்,ரவுடித் தனம்,அராஜகம் எல்லாவற்றையும் விட்டு விட்டு சீமானை பற்றி எழுதியதில் இருந்து,சீமானை பழிவாங்கவே இவை எல்லாம் என்று தெரிகிறது. இன்று நம் தமிழகத்தில் 90 வீதமானவர்கள் ஒருவரை காதலித்து இன்னொருவரை திருமணம் செய்தே வாழ்கிறார்கள்.ஒரு சின்னத்திரை நடிகை சொன்னவுடன் ஆராயாது எழுதுவதும்,பேசு வதும் முறையற்றது ஆகும்.இந்த நடிகையின் மறுபக்கம் மிகக் கேவலமானது என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
Quote
 
 
+13 #67 anniyan 2011-06-05 02:09
நல்லாச் சொன்னீங்க அப்துல்... உங்கள் வரவு நல்வரவாகுக

Quoting abdoul paris:
ஜூ வி காலையில் பார்த்த உடன் தயாநிதி மேட்டர் தேடினால் ஒரு சின்ன பக்கத்தில் அது கூட அவர் செய்த ஊழல்ல பற்றி எழுதாமல் வேற விசயம் எழுதிய விதத்தை பார்த்து கருத்து பகுதியில் நீங்கள் கேட்ட கேள்விய போட்டுட்டு பின்னர் சவுக்கு வந்து பார்த்தால் தயா மேட்டர் பற்றி நீங்கள் கிழி கிழி என்று கிழித்தீர்கள், உண்மையில் மக்களுக்கு மனதில் தோன்றுவதை எழுதும் தளம் சவுக்கு சவுக்கு சவுக்கு மட்டுமே, இன்று நான் அனுபவித்து எழுதுகிறேன், நன்றி உங்கள் எழுத்து வேள்வி
Quote
 
 
+1 #66 anniyan 2011-06-05 02:06
[ஃஉஒடெ நமெ="ஆனந்த்"] ஊடகம் நடத்தும் ஊழல் கும்பல் கொள்ளையடித்ததும ் ஒன்றா என்றால் இல்லை.//

இந்த செய்திதான் எல்லா இதழ்களிலும் வந்து விட்டது என்று தாங்களே சொல்லி விட்டீர்கள். இனி இதைப் பற்றி வெளியிட புதிதாக ஒன்றும் இல்லை. அப்படி வெளியிட்டாலும் மற்ற பத்திரிகைகளின் கார்பன் காப்பியாகத்தான் இருக்க முடியும். அதனால் புதிய விஷயமாக சீமான் அவர்களைப் பற்றி எழுதியிருக்கிறா ர்கள். இதற்கு போய் சவுக்கு எதற்காக அதிகம் அலட்டிக் கொள்கிறாரோ. சவுக்கில் இந்த விஷயம்தான் வெளியாக வேண்டும் என்று ஜூ வி பொறுப்பாளர்கள் எதிர் பார்ப்பதில்லை. அதனால் ஜு வியில் இந்த விஷயம்தான் வெளியாக வேண்டும் என்று சவுக்கு எதிர் பார்ப்பது தவறு.[/ஃஉஒடெ]
விடிய விடிய ராமாயணம் கேட்டு சீதைக்கு ராமன் சித்தப்பான்னனாம ்... ஒரே கம்மேன்ட்ல சவுக்கை டயர்டாக்கிடுவீங ்க போலிருக்கே...

சவுக்கு: ஞானப்பால்
ஆனந்த் : ஆனைப்பால்
சவுக்கு : ஆனைப்பால் இல்லை.. ஞானப்பால்
ஆனந்த் : ஆனைப்பால்
சவுக்கு: ஆனையில்லை .. ஞா..ஞானம் + பால் = ஞானப்பால்
ஆனந்த் : ஆனை + பால் = ஆனைப்பால்
சவுக்கு : முடியல..
Quote
 
 
+6 #65 Savukku fan 2011-06-05 01:12
I was thinking the same, why this vikatan has put seeman as cover page story and said nothing about KD brothers. Now it is very clear....

I was believing on Vikatan, Dinamani and Savukku. Here after Vikatan is rejected from that list and i will mark them on par with Nakheeran, Dinkaran etc., which are 3rd rated media.
Quote
 
 
+11 #64 பட்டிக்காட்டான் 2011-06-05 00:23
"சீமான் ஒரு பெண்ணை ஏமாற்றியதும் " என்று குறிப்பிட்டிருப ்பது சரியான சொல்லாடல் அல்ல. "சீமான் ஒரு பெண்ணை ஏமாற்றியதாக குற்றம் சாட்டபட்டிருப்ப தும்" என்றுதான் எழுதியிருக்க வேண்டும். நான் சீமானைப் பல வருடங்களாக கவனித்து வருவதால் சீமானைப் பற்றியும் தெரியும். குற்றம் சாட்டியிருக்கும ் பெண்ணின் பின்னணி பற்றியும் எல்லோருக்கும் நன்கு தெரியும். இப்படி ஒரு குற்ற சாட்டுக்கான முகாந்திரம் இருப்பதும் தெரியும். சவுக்கின் எழுத்துகளை ஓன்று விடாமல் தொடர்ந்து படிப்பதால் சவுக்கின்மீது எவ்வளவு ஆழமான நம்பிக்கை ஏற்பட்டுள்ளதோ அதே ஆழமான நம்பிக்கை சீமான் மீதும் உள்ளது. செய்தி என்று ஓன்று வந்து விட்டாலே அதை நம்பி விடுவது முட்டாள்தனம். நமது சுய சிந்தனையையும் கொஞ்சம் செலவிட்டு , ஆய்ந்தே ஒரு முடிவுக்கு வர வேண்டியுள்ளது. நாம் எல்லாவற்றையும் நம்ப ஆரம்பித்தால் அது கேடி சகோதரர்களின் சன் ஊடகம் போன்ற ஊடங்களின் வெற்றியாகவே அமைந்து விடும். சவுக்கு உதித்ததே ஊடங்களின் ஊழல் பொறுக்க முடியாமல் தானே. எனவே உண்மைக்காக காத்திருப்போம். சவுக்கு எழுதும் போக்கில் அவ்வாறு சொற்கள் வந்து விழுந்திருக்க வேண்டும் என்றே நினைக்கிறேன். என்ன சரியா சவுக்கு அண்ணா?
Quote
 
 
+3 #63 ashba 2011-06-04 23:55
Even I was totally shocked to see today's JV. After I lost the trust in Nakkeeran (not now, but when they published their election result prediction), I was trusting JV for sometime. But when I saw JV today, I was shocked, even Nakkeeran was having cover story on Dayanidhi Maran. But JV was just having a naam-ke-vaasthu write up. Savukku you have done a great job so far, and I salute you!!!

Babu
Quote
 
 
+2 #62 aam adhmi 2011-06-04 23:38
நான் சுமார் 8 வருடமாக விகடன் வாசகன். இப்பொது வெட்கமா இருக்கு. இது நக்கீரனை விட மொசமா ஜால்ரா அடிகுது. hats off to you savukku......
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 185 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday9110
mod_vvisit_counterYesterday18770
mod_vvisit_counterThis week53110
mod_vvisit_counterLast week95167
mod_vvisit_counterThis month275370
mod_vvisit_counterLast month382199
mod_vvisit_counterAll days13191737