|
இதன் அடிப்படையில் தான், தயாநிதி வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியது, விமான நிலையத்தில் கூவியது எல்லாம். இன்று, தொலைத் தொடர்புத் துறை ஊழியர்கள் சங்கத்தின் சார்பாக, சென்னை அண்ணா சாலையில், ஆர்ப்பாட்டம் நடந்தது.

அந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமையேற்று நடத்தி விட்டு, பத்திரிக்கையாளர்களை சந்தித்த, தொலைத் தொடர்புத் துறை சங்கத்தின் துணைப் பொதுச் செயலாளர் மதிவாணன், இந்த கடிதம் தொடர்பான விபரங்களைக் கூறினார்.






2009 பாராளுமன்றத் தேர்தலின் போது, முதன் முறையாக 323 இணைப்புகள் குறித்த செய்தி வெளியானது. அதைத் தொடர்ந்து செல்வி.ஜெயலலிதா, இந்த விவகாரத்தை பொதுக் கூட்டத்தில் பேசினார். அது தேர்தல் நேரம் என்பதால், உடனடியாக இந்தச் செய்திக்கு மறுப்பு வெளியிட வேண்டிய கட்டாயம் திமுகவுக்கு ஏற்பட்டது. அப்போது, சென்னைத் தொலைபேசியின் தலைமைப் பொது மேலாளராக இருந்த, வேலுச்சாமி என்பவர் திமுகவுக்கும், குறிப்பாக தயாநிதி மாறனுக்கும் மிகுந்த நெருக்கமாக இருப்பார். தயாநிதி சென்னையில் இருந்தால், தினமும், அவர் இல்லத்திற்கு செல்லும் அளவுக்கு தயாநிதியின் தொண்டர் அடிப்பொடியாக இருந்தார். அவர், ஒரு கடிதத்தை தயார் செய்து, அந்தக் கடிதத்தில் அப்போதைய மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ராசா, இந்தக் கடிதத்தை உடனடியாக வெளியிட வேண்டும் என்று கூறியிருக்கிறார், அதனால் கையொப்பம் இடுங்கள் என்று, மிரட்டி மீனலோசனியிடம் கையொப்பம் பெற்றார் என்ற தகவலைக் கூறினார்.
அரசு ஊழியர்கள் பணியாற்றுகையில் நெருக்கடிகளும், மிரட்டல்களும் வருவது இயல்பே. அந்த மிரட்டல்களையெல்லாம் சமாளித்துதான் பணியாற்ற வேண்டும். எத்தனை மிரட்டல்கள் வந்தாலும், தவறுக்கு துணை போகக் கூடாது… தூக்கிலா போட்டு விடுவார்கள் ? அன்று மீனலோசனி கொடுத்த கடிதம் தான், இன்று வரை தயாநிதி மாறனை திமிரோடு இருக்கச் செய்திருக்கிறது. மேலும், மீனலோசனி, இரண்டு எண்கள் இயங்கிக் கொண்டிருக்கும் இடத்தில், ஒரே ஒரு எண்தான் இயங்கிக் கொண்டிருக்கிறது என்று, பொய்யான சான்றை அளித்துள்ளார். அதனால், மீனலோசனி மீது, துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கையை கட்டாயம் எடுக்க வேண்டும் என்றே சவுக்கு கருதுகிறது.

மேலும் தொடர்ந்த மதிவாணன், கேடி சகோதரர்கள் எவ்வளவு அற்பத்தனமாக நடந்து கொண்டார்கள் என்பதையும் தெரிவித்தார். அண்ணா அறிவாலயத்தில் சன் டிவி அலுவலகம் செயல்பட்டுக் கொண்டிருந்த போது, பிஎஸ்என்எல் இணைப்புகளைத் தான் பயன்படுத்தி வந்தார்கள். அந்த அலுவலகத்தை காலி செய்து விட்டு செல்கையில், பிஎஸ்என்எல்லுக்கு 10 லட்சம் ரூபாய் பாக்கி வைத்து விட்டு சென்றார்கள், அந்தத் தொகையை இன்று வரை கட்டவில்லை என்றும் தெரிவித்தார். அலுலவகம், அறிவாலயத்தை விட்டு, புதிய இடத்துக்குச் சென்றதும், இந்தப் பாக்கித் தொகையை கட்டுவதை தவிர்ப்பதற்காக, தனியார் நிறுவனத்திடம் இணைப்புகளைப் பெற்றார்கள் என்றும் கூறினார்.
மேலும், சில ஆண்டுகளுக்கு முன்பாக 10 ஆயிரம் கோடி லாபத்தில் இயங்கி வந்த பிஎஸ்என்எல், இன்று நஷ்டத்தில் இயங்குவதற்கு, இது போன்ற செயல்களே காரணம் என்றும் தெரிவித்தார்.
தயாநிதி மாறன், கேபினெட் அமைச்சராக இருக்கும் வரை, உருப்படியான விசாரணை எதுவுமே நடைபெற வாய்ப்பில்லை அதனால், தயாநிதி மாறன் ராஜினாமா செய்யும் வரை காத்திருக்காமல், உடனடியாக மன்மோகன் சிங் தயாநிதி மாறனை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்றும், தயாநிதி மாறனால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு 440 கோடி ரூபாயை உடனடியாக வசூல் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இந்த ஆர்ப்பாட்டம் இத்தோடு நிற்காது என்றும், அடுத்த கட்ட போராட்டங்கள் தொடரும் என்றும் கூறினார்.
நாங்கள் தொழிற்சங்க வாதிகள். எங்களுக்கு அரசியல் நோக்கம் கிடையாது. பிஎஸ்என்எல் என்ற பொதுத்துறை நிறுவனம் பாதுகாக்கப் பட வேண்டும் என்பதே எங்கள் நோக்கம் என்றும் கூறினார்.

போன வாரம் வரை இப்படி இருந்த இணைய பக்கம்.....

இன்னைக்கு இப்படி மாறிப்போச்சே எப்புடி... ?
தொழிற்சங்கங்கள் தான் இந்நாட்டின் பொதுத் துறை நிறுவனங்களை இது நாள் வரை காப்பாற்றி வைத்துள்ளன. தொழிற்சங்கங்கள் இந்தப் பிரச்சைனையை கையில் எடுத்திருப்பதை சவுக்கு உள்ளார்ந்த மகிழ்ச்சியோடு வரவேற்கிறது. இந்த தொழிற்சங்கங்கள் இந்தப் போராட்டத்தை இப்படியே நிறுத்தி விடாமல், தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் என்று சவுக்கு எதிர்ப்பார்க்கிறது. வாழ்த்துக்கள் தோழர்களே…. |
Comments
i know thirw myfriends
send me also
எனக்கு உங்களை போன்ற RSS காரருடன் விவாதம் செய்ய நேரமோ விருப்பமோ இல்லை. எனது கேள்வி சவுக்கிருக்கு மட்டுமே.
இஸ்லாம் ஏன் அடிமை தனத்தை ஆரம்பத்தில் எதிர்க்க வில்லை மற்றும் இந்த சசியா வரி போன்றவற்றிக்கான காரணங்களை மனித நேயம் எனும் RSS புத்தகத்தில் இல்லாத பக்கத்தில் தேடுங்கள். அல்லது பெரியாரின் புத்தகங்கள் அ மக்கள் கலை இலக்கிய புத்தகங்கள் அ புரட்சிகர மாணவர் இயக்கம் புத்தகங்களில் தேடுங்கள். மற்றநாட்டு மக்களை பிடித்தவுடன் கொன்றவன் எல்லாம் தியாகியாகவும் வள்ளலாகவும் தெரியும் உங்கள் கண்களுக்கு சசியா வரிக்கும் - மற்ற நாட்ட வரை மன்னிப்பதற்கும் உள்ள தொடர்பை பின்னூட்டத்தில் உணர்த்துவது என்பது முடியாத காரியம். அப்படியே உணர்தாலும் நீங்கள் ஒப்புகொள்ள மாட்டீர்கள்.
2) கனிமொழி
3) தயனிதி மரன்
4) கலனிதி மரன்
5) ஆழகிரி
6) ஸ்டலின்
7) ஊதயனிதி
9) றஜாதி
10) டயலு
11) கலைக்னர்
அருள்நிதி தமிழரசு பெயரை விட்டுடிங்க.. அவர் தி நகர் ல எதோ ஒரு பார்க்கு போய் அந்த பார்ல இருந்த எல்லாத்தையும் அடிச்சி அந்த பார் அ எழுதி வாங்கிட்டாராம் எது உண்மையா .... கொஞ்சம் விசாரிங்க சவுக்கு ..
Send all
K. Baskaran
இதை அப்படியே இப்ப நம்ம தயாநிதிக்கு பொருத்திப் பார்க்கலாம், அய்யா தயாநிதி, நீங்க இப்ப காட்டும் அக்கறை, பத்திரிகையாளார் சந்திப்பு, குற்றமற்றவர்போல முகத்தினை சிரிப்போடு வைத்துக்கொள்வது எல்லாம் எங்களுக்கு ஆச்சர்யத்தினைத் தரவில்லை, ஏனென்றால் உங்கள் கூடாரம் அப்படி, நீங்கள் வள்ர்ந்த இடம் அப்படி, நேற்று சொன்னதை இன்று அப்படி சொல்லவேயில்லையே என்று எல்லா ஆதாரங்களையும் தவிடுபொடியாக்கு ம் ஆசானின் பேரனல்லவா நீங்கள்..... தயாராவீர் காத்திருக்கிறது திஹார்....
இப்ப பிச்சை எடுக்கும் அளவுக்கு கொண்டு வந்தது
இந்த பச்சலை புடுங்கி தான் சவுக்கு
இவன் கடலூர்ல பத்தாயிரம் ஏக்கர்ல டையிங் கட்டி
திருப்பூரை அளிக்க பார்கிறான்
இதை பத்தி நல்லா விசாரிச்சு கண்டிப்பா எழுதுங்க சவுக்கு
உங்களுக்கு எதிராக இங்கு நான் எனது மிக கடுமையான எதிப்பை பதிவு செய்கிறேன். எப்படி நீங்கள் பாண்டியன் அவர்களின் பின்னூட்டத்தை அனுமதித்தீர்கள் . அவுரங்கசீப் பற்றி உங்களுக்கு தெரியாதா. மிக மிக நீர்மையாக அவன் அரசு ஆண்டதாகவும் அரசு காசை சிறிதும் எடுக்காதவன் என்றும் வரலாறு படித்ததில்லையா. பின்பு எதற்கு பின்னூட்டதிற்கு தணிக்கை ?
ஸங் பரிவர் உடைய கருத்துகளை நீங்கள் ஏற்றுகொண்டது போல் இருக்கிறது இத்தகைய பின்னூட்டங்கள். சில/ பல ஆயிரம் கோடி சொத்து ௦சேர்த்த துறவிகளை வைத்து ஊழலுக்கு எதிராக போராடும் கூடத்தில் சவுக்கிற்கு சேர விருப்பமா ? :சட்:[/ஃஉஒடெ]
வந்துட்டாங்க ஐயா - ஜாதி பற்றி பேச.. ஏன் பா ஒருத்தன் பணம் கொள்ளை அடிச்சத பற்றி உனக்கு கவலை இல்ல. யாரு என்ன ஜாதி என்பது தான் உன் கவலையா?
நீங்க எல்லாம் இப்படி இருப்பதால் தான் கலைஞர் இன்னமும் என் மகள் சிறையில் வாடி விடுவாள் நு பஞ்ச் டயலாக் பேசிட்டு இருக்காரு...
உன் பணமும் சேர்ந்து தான் கொள்ளை அடிச்சிருக்காங் க நண்பரே.. யோசித்து செயல் படு.
Phone No. Name Address
27444108 DAYANIDHI MARAN 18,SECOND STREET,
SOUTH GOPALAPURAM,CHE NNAI,600086
24371500
DAYANIDHI MARAN
3/1,BOAT CLUB 1ST AVENUE
RA PURAM,CHENNAI,6 00028
24371515
DAYANIDHI MARAN MP
3/1,BOAT CLUB 1ST AVENUE,
R A PURAM,RA PURAM,CHENNAI,6 00028
25361515
DAYANIDHIMARAN
70/1104,E.V.R.PERIYAR HIGH RD,PERIAMET,CHE NNAI,600003
இனி வரும் காலத்தில் தயாநிதி மாறனை சின்ன கருணாநிதி என்று சிறப்பு பட்டம் கொடுத்து தயவு செய்து அழையுங்கள். காரணம் கருணாநிதி போலவே எல்லாவற்றிலும் மாறன் அன் கோ கெட்டிக்காரர்கள ். சரி தானே.
இது கவனக் குறைவினாலும் ஏற்பட்டிருக்கலா ம். இப்போது பிரச்சினை 323 தொலைப்பேசி இணைப்புகள் என்பதா அல்லது 2 இணைப்புகள் உள்ள இடத்தில் 1 என்ற கடிதம் கொடுத்ததா. முதலில் இதைத் தெளிவு படுத்துங்கள்.
ஸ்கூல்ல நாங்க தப்பு பண்ணினா, ஒருத்தர் காதை ஒருத்தர் புடிச்சுட்டு இப்படி தோப்புக்கரணம் போடுவோம்,
".....உன்னால நான் கெட்டேன் ...
என்னால நீ கெட்ட...!
ஹிஹிஹிஹிஹ்ஹ்ஹிஹ ்ஹ்ஹ ஒரே சிப்பு சிப்பா வருது.. கேடி கோடுபோட்ட டவுசர் போட்டுகிட்டு தட்ட தூக்கிட்டு லைன்ல நின்னு சாப்பாடு வாங்குற காட்சி என் கண்ணுமுன்னால வர்றத நினச்சாலே சிரிப்ப அடக்க முடியல !
பாட்டனார் அக்பரின் நல்லிணக்கக் கோட்பாடுகளை அவுரங்கசீப் காற்றில் பறக்க விட்டதாகவே வரலாறு சொல்லுகிறது.
அவுரங்கசீப் பிற மதத்தை சேர்ந்தவர்களின் மீது ஜிசியா எனப் படும் தனி வரியை விதித்து இருக்கிறார். ஜிசியா எனப் படும் வரி இஸ்லாமிய மார்க்கத்தை சேராதவர்கள் மீது விதிக்கப் படும் வரி என்பதாக இருந்திருக்கிறத ு.
இஸ்லாத்தை சேராதவர்கள் “திம்மி” என்று சொல்லப் பட்டனர். ஒவ்வொரு ”திம்மி”யும் மாதா மாதம் ஜிசியா வரி கட்ட வேண்டும். இதிலே அதிகம் பாதிக்கப் பட்டது ஏழைகள்தான்.
ஒரு திம்மி இருநூறு ரூபாய் வரையிலான நிலத்தை வைத்து இருந்தால் அவன் மாதா மாதம் ஒரு ரூபாய் ஜிசியா வரி கட்டினால் போதுமாம். இருநூறு ரூபாய் மதிப்புள்ள நிலத்தை வைத்திருப்பவனுக ்கு மாத வருவாயாக ஐந்து ரூபாய்க்கு மேல் வருமானம் வர வாய்ப்பில்லை.
அந்தக் காலத்தில் பத்துப் பதினைந்து பிள்ளைகளைப் பெற்ற ஏழை திம்மி தனக்கு மாத வருமானமாக வரும் ஐந்து ரூபாயில் தன்னுடைய குடும்பத்தைக் கவனிப்பதே மிகவும் கஷ்டம்.
இந்தக் கஷ்டத்தில் அவன் மாதம் எப்படி ஒரு ரூபாயை வரியாக குடுக்க முடியும். அதெல்லாம் உன் பிரச்சினை , நீ திம்மியாக இருந்தால் வரி கட்ட வேண்டும் அப்படி வரி கட்டாமல் இருக்க வேண்டும் என்றால் திம்மியாக இருக்காதே, மாறி விடு என்பதுதான் கோட்பாடு.
ஒரு ஏழை திம்மியாக இருந்தால் அவன் கஞ்சி குடிக்க வைத்திருக்கும் காசும் சுரண்டப்படும். அதுவும் அந்த திம்மியின் குடும்பத்தில் வயதுக்கு வந்தவர்கள் இருந்தால் அவர்கள் ஒவ்வொருவருக்கும ் ஜிசியா வரி கட்ட வேண்டும். அதே ஏழை திம்மியாக இல்லாவிட்டால், மாறி விட்டால் அவன் வரி கட்ட வேண்டியதில்லை.
1) A.Raja Caught & Bowled - CBI -- 176,000 Crores
2) Kanimozhi Caught & Bowled - CBI -- 214 Crores
3) Dhayanidhi Maran Run Out (CBI/Media) 3rd Umpire Referral -- 440 Crores
4) Kalanidhi Maran (Batting)
5) Azhagiri
6) Stalin
7) Udhayanidhi
9) Rajaathi
10) Dayalu
11) Kalaignar
Innum Amma field set panni bowling eh start pannala,athukul laye ovvoru wicket'a poguthey!
thanks - vadai poche, facebook
சீக்கிரமா ஒரு கவுன்டர் போடு சவுக்கு அண்ணாத்த...
என்று விழிக்கும் இந்திய தேசம்? இன்றே விழிக்காவிடில் எதிர்கால சந்ததி நம்மை பழிக்கும்..
But they should continue this and make it an central issue
உங்களுக்கு எதிராக இங்கு நான் எனது மிக கடுமையான எதிப்பை பதிவு செய்கிறேன். எப்படி நீங்கள் பாண்டியன் அவர்களின் பின்னூட்டத்தை அனுமதித்தீர்கள் . அவுரங்கசீப் பற்றி உங்களுக்கு தெரியாதா. மிக மிக நீர்மையாக அவன் அரசு ஆண்டதாகவும் அரசு காசை சிறிதும் எடுக்காதவன் என்றும் வரலாறு படித்ததில்லையா. பின்பு எதற்கு பின்னூட்டதிற்கு தணிக்கை ?
ஸங் பரிவர் உடைய கருத்துகளை நீங்கள் ஏற்றுகொண்டது போல் இருக்கிறது இத்தகைய பின்னூட்டங்கள். சில/ பல ஆயிரம் கோடி சொத்து ௦சேர்த்த துறவிகளை வைத்து ஊழலுக்கு எதிராக போராடும் கூடத்தில் சவுக்கிற்கு சேர விருப்பமா ?
Seems like Dayanidhi maran had run an Apparel Export Company - "Day Mar Apparels Ltd". It filed a case against an agent. Here is the link for that:
http://www.indiankanoon.org/doc/93068/
இந்த தொழிற் சங்க வாதிகளை ஆதரிகாதீங்க. BSNL விரைவில் மூடுவிழா காணப்போவதற்கு அவங்க தான் காரணம். என் வீட்ல ரெண்டு மாசமா போன் வேலை செய்யலை. 8 கம்ப்ளைன்ட் கு அப்றம் ரெண்டு மாசம் கழிச்சி அட்டென்ட் பன்னவந்தவரை பிரைவேட் மாதிரி ஏன் உடனே அட்டென்ட் பண்ண மாட்டேன் என்கிறீகள் நு கேட்டேன். அப்போ நீ பிரைவேட் கே போ என்று சொல்லிடாரு அந்த கண்ணியவான். என் பெரு இது தான் என்ன வேன்னாலும் பண்ணிக்கோ நு சொல்லிட்டாருங்க .
மாறன் ஓட ஊழலை பத்தி பேச இவங்களுக்கு எந்த அருகதையும் இல்லை என்பது என் கருத்து. [உடனே நான் DMK வ ஆதரிக்கறேன் என்று கொஞ்சம் நண்பர்கள் திட்டுவாங்க பாருங்க]
Vincent ungaluku yaen ewlo karunai ullam eelam kondra paadhagargaluku arabian style punishment thaan sari
2020 ல் வல்லரசு என்று சொல்லிக்கொண்டிர ுக்கிறோம்,ஆனால் ஒரு நல்லரசை கூட பார்க்காமல் போய் விடுவோமோ என தோன்றுகிறது. பழம் கவிதை ஒன்று நியாபகத்திற்க ு வருகிறது...
ஒருவன் பட்டு வேட்டி
பற்றிய கனவில் இருந்தபோது
கட்டி இருந்த கோவணம்
களவாடப்பட்ட து....
இவர்களை எல்லாம் கல்லால் அல்ல செருப்பால் அடித்தே கொல்லவேண்டு
As per government rules the Kannimozhi MP also a government servant. As per the rule, if any one government servant will arrested and kept in judicial custody till 48 hours, automatically the head of the department will suspend the arrested government servant after getting the proper records. So far the CBI why not send the arrested details to the Speaker of Parliament and why she was not suspended in the MP post. Please convey this message to all daily news papers. You also back to MPs records how many MPs were suspected due to the arrest till 48 hours. Please it is correct, and explain to your weavers.
அப்படி மானம் மரியாதையை பார்ப்பவன், சிறிது அளவு கூட அறிவு முதிர்ச்சி இல்லாதவன், ஊரார் சொத்தை மிரட்டி கொள்ளை அடிப்பவன் எதற்கு அரசியலுக்கு வர வேண்டும்,. இன்று ஒரு உண்மை புலப்பட்டது, நான் ஒன்றும் சாமியார்களின் ஆதரவாளன் கிடையாது, ஆனால், பாபா ராம்தேவின் நியாமான உண்ணா விரத போராட்டத்தை அடித்து விரட்டி, போலீசால் பொது மக்களும், பெண்களும், தாக்க பட்டு இருகிறார்கள், இதற்க்கு SUPREME COURT கண்டனம் தெரிவித்து உள்ளது. ஒரு மாமனிதரான, அண்ணா ஹசாரே அவர்களை மத்திய அமைச்சர்கள் தரக்குறைவான வார்த்தையால் ஏசி இருக்கிறார்கள்.
இதன் நடுவில் தான் நமது பிரதமரின் பிரஸ் மீட். அதில் அவர் வெட்கமே இல்லாமல், மன்னிப்பு கேட்காமல், இது துரதிஷ்டவசமானது என்று மட்டும் கூறினார்.
பிறகு கேடி பயல்களின் 2G குற்றச்சாட்டை நேர்மையாக அரசு நடத்தும் என்றும் கூறுகிறார். இதனை நம்பவா முடிகிறது. அமைதியான உண்ணா விரதம் இருந்தவர்களையும ் ஒரு காந்திய வாதியையும் அடித்து அவமதித்த ஊழல் அரசு, கேடிகளின் வழக்கை எப்படி நேர்மையாக நடத்தும்?
திருக்குவளை தீயசக்தி கருணாநிதியின் ஆட்சிக் காலத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம், புதிய கட்டுமானங்கள் என்ற போர்வையில் தமிழகம் முழுவதும் நூற்றுக் கணக்கான இந்துக் கோயில்கள் இடித்துத் தரை மட்டமாக்கப்பட்ட வரலாறு பலருக்கும் தெரிந்ததே. இத்தகைய பாதகச் செயலைச் செய்ய, கருணாநிதியின் வஞ்சக மனம் விக்கிரக வெறுப்பாளர்களான தீவிர இஸ்லாமியர்களையு ம், புராடெஸ்டெண்ட் தீவிர கிறிஸ்தவர்களையு மே தேர்ந்தெடுத்ததி ல் ஆச்சரியம் இல்லை.
ஆக்கிரமிப்பாக இருந்தாலுமே, கோயில்களிலுள்ள விக்கிரகங்களைப் பாதுகாப்பான வேறு இடத்துக்கு மாற்றிய பின்னரே அக்கோயில்கள் அகற்றப்படலாம் என்ற உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலை ஆருர் ஔரங்கசீப் என்றுமே பின்பற்றியதில்ல ை.
இந்து வெறுப்பாளர் கருணாநிதியின் இத்தகைய கொடும் செயல்களை எதிர்த்துப் போராடியிருக்க வேண்டிய தமிழக இந்து அமைப்புகள், ஒரு சில இடங்களில் மட்டுமே பெயரளவில் சிறிய போராட்டங்களை நடத்தின. கருணாநிதியின் அடிப்பொடியான இல. கணேசன், கருணாநிதிக்கு எதிராக இந்து அமைப்புகள் எதையும் செய்து விடாமல் பார்த்துக் கொண்டார்.
ஆரூர் ஔரங்கசீப்பால் புதிய சட்டசபை வளாகம் என்ற பெயரில் ஓர் அரக்கு மாளிகை எழுப்பட்டபோது, அந்த இடத்தில் மக்கள் வழிபட்டுக் கொண்டிருந்த இயற்கை விநாயகர் கோயிலும், இஷ்ட லிங்கேஸ்வரர் கோயிலும் இடித்துத் தரை மட்டமாக்கப்பட்ட ன. அக்கோயில்களில் இருந்த விநாயகர் சிலையும், சிவலிங்கமும் என்ன செய்யப்பட்டன என்பது பற்றி எவரும் கேள்வி எழுப்பவும் இல்லை; கருணாநிதி பதில் சொல்லவும் இல்லை. கோபாலபுரத்திலும ், சி.ஐ.டி. காலனியிலும் அவை இன்னமும் படிக்கட்டுகளாகப ் பயன்படுத்தப்பட் டுக் கொண்டிருக்கலாம் .
புதிய வளாகத்திலுள்ள கட்டிடங்களைச் செம்மொழி நூலகமாகவோ அல்லது அரசினர் மருத்துவமனையாகவ ோ மாற்றும் திட்டம் ஆளும் அ.தி.மு.க.வுக்கு இருப்பதாகத் தெரிகிறது. அது எப்படி இருந்தாலும், ஆரூர் ஔரங்கசீப்பினால் இடித்துத் தரை மட்டமாக்கப்பட்ட இயற்கை விநாயகர் ஆலயமும், இஷ்ட லிங்கேஸ்வரர் கோயிலும் அதே வளாகத்தில் மீண்டும் கட்டப்பட்டு விக்கிரகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட வேண்டும்.
அவருக்கு 49" தொப்பை விழுந்தா கூட, ,யாரவது சொன்னாதான் அதுவே தெரியும் போல!
பேசாம நம்ம "என்னத்த கன்னையா"வ பிரதமரா ஆக்கிடுங்க!கவுந ்த கார்லேந்து வெளியே வந்து "தம்பி அந்த 2G,CAG,BSNL விவகாரமெல்லாம் முடிஞ்சுடிச்சா?நம்ம வேலைய தொடரலாமா?ன்னு செக்ரடரியிடம் கேட்டுக்கொண்டிர ுப்பார்!!
PL awake and dont rest
Maran's lie totally exposed
http://www.youtube.com/watch?v=jSCYZX_XQZI
சற்று முன் நான் http://210.212.240.244:8181/cipdq.aspx என்ற இனையத்தில் (search by Address)
Door Number = 3/1 , Street= Boat Club என்று தேடும்போது கீழ்காண்டவாறு வருகிரது
24371500 DAYANIDHI MARAN 3/1,BOAT CLUB 1ST AVENUE,RA PURAM,CHENNAI,6 00028
24371515 DAYANIDHI MARAN MP 3/1,BOAT CLUB 1ST AVENUE,R A PURAM,RA PURAM,CHENNAI,6 00028
இரண்டு எண்களுமே DAYANIDHI MARAN என்றுதான் இருக்கிறது, திரும்பவும் மாற்றி விட்டார்கள் போலும், screen short எடுத்துள்ளேன்
exchange in private premises, SRi mathivanan may quote the rules for the working and non working extensions. During the period of RASA, there was attempt for an initial public offering at RS.330/ per 10 rupee share when TCS was selling at Rs.1510/- The real estate and other properties of BSNL are million times more valued than that of TCS only with a single real estate with some computers. Sri Mathivanan will have to investigate whether this IPO proposal at such a low price was initiated during the period of Maran in the file notings. Can we expect more information on this
அட எப்டிஙக் ஒரே நாள்ல பேர மாத்துவாங்க, தொலைபேசி துரைல, எவனும் பாக்க மாட்டான், அப்டிங்க்ர ஆணவம், அது மட்டும் இல்ல பாத்தாலும் என்ன பண்ண முடியும் அப்டிங்குர அசட்டு நம்பிக்கை...
சவுக்கு தூல் கெளப்பிட்டிங்க... Can we not sue the responsible people/officer for document forgery?, put them behind bars?
2ஜீ அடுத்த குற்றப்பத்திரிக ையில் வரப் போகும் புதிய தலைகள்,கேடி மீதான ஊழல் புகார்கள்,காங்க ிரஸ் கூட்டிற்காக ஈழத்தமிழர்களை கை கழுவி விட்ட ஜெயலலிதா, ஜே யை வலையில் விழுத்த சிங்களம் போட்ட புதிய சதி.சிங்கள அமைச்சரின் ஜே உடனான இரகசிய சந்திப்பு,வைகோ வை தூக்கி எறிந்ததன் காரணம், காங்கிரசுக்கு எதிரான சீமானின் பிரச்சாரத்தால் சீமானுக்கு எதிரான விஜயலட்சுமுயின் புகார்,புதிதாக சிங்களத்தின் தூண்டுதலால் சீமானுக்கு எதிராக நடிகை பூஜா போடப் போகும் புதிய புகார்,காங்கிரச ுடன் கூட்டாக சிங்களம் அள்ளி வீசும் பணம். கூடவே ஊழலுக்கு எதிரான உண்ணாவிரததை கலைத்த மத்திய அரசு....
இப்படி பல அதிர்ச்சிகள் தமிழகத்தை தாக்க ஆரம்பித்துள்ளது .என்ன செய்யப் போகிறது தமிழகம்? சதிகாரர்களின் வலையில் சிக்கப் போகிறதா இல்லை முகமூடியை கிழித்து உண்மையை உணரப் போகிறதா?பதவி,பணம், அரசியல் சுயலாபத்திற்காக போடும் இந்த சதிவலைகளால் நிம்மதி இழந்து அலையப் போவது என்னமோ அப்பாவி மக்கள் தான்.
நுணிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின்
உயிர்க்கிறுதி ஆகி விடும்.
பி எஸ் என் எல் ஊழியர்கள் இங்கு மட்டும் செய்தால் போதாது. தில்லியிலும் செய்ய வேண்டும். இந்த மாதிரி விஷயங்களில் சாதாரண மக்களும் இவர்களுடன் சேர்ந்து போராட வேண்டும். பி எஸ் என் எல் ஊழியர்களில் பெரும்பாலானவர்க ள் திராவிட இயக்கத்தினரே. போட்டோவில் SC & ST போர்டு எதுவும் தெரியவில்லை. அவர்களும் சேர வேண்டும். இருப்பவர்கள் எண்ணிக்கையும் குறைவாகவே இருப்பது அதிமுக சார்புடைய சிலரே போராட்டம் செய்தவது போல் தெரிகிறது.
Please request the Chennai BSNL employees union to move Madras High Court for recovery of Rs 440 crores from Mr Maran.
Regards
RSS feed for comments to this post