முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
ஜனநாயகத்தைக் காக்க வாருங்கள் பதிவர்களே ! அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 228
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
வெள்ளிக்கிழமை, 10 செப்டம்பர் 2010 12:56

ஜனநாயகத்தைக் காப்பதற்கும் பதிவுலகத்துக்கும் என்ன சம்பந்தம் என்று நினைக்கிறீர்களா ? இருக்கிறது.



தமிழ்நாட்டில் இன்று நான்காவது தூண் என்று அழைக்கப் படும் பத்திரிக்கை உலகம் எந்த நிலையில் இருக்கிறது என்று தெரியுமா ?




சவுக்குக்கு கிடைத்துள்ள பிரத்யேக தகவல்கள் மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கின்றன. 2006ம் ஆண்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகுதான் தமிழக பத்திரிக்கை உலகில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.



பத்திரிக்கைகளின் கருத்துக்களை மிகுந்த கவனத்தோடு பரிசீலித்தும், தன்னையே ஒரு பத்திரிக்கையாளர் என்று அழைத்துக் கொள்ளும் கருணாநிதி, ஏறக்குறைய அனைத்து பத்திரிக்கைகளையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


தமிழ் நாட்டில் வெளிரும் ஆங்கில பத்திரிக்கைகள் நான்கு. தி ஹிந்து, டெக்கான் க்ரானிக்கிள், டைம்ஸ் ஆப் இந்தியா மற்றும் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்.


இந்த பத்திரிக்கைகளில் தி ஹிந்து, முரசொலியின் ஆங்கிலப் பதிப்பாக மாறி, பல ஆண்டுகள் ஆகின்றன.



இதற்கு குறிப்பான காரணம், 2003ம் ஆண்டில் ஹிந்து நாளிதழ் எழுதிய தலையங்கம், தமிழக சட்டசபையின் உரிமை மீறியதாக ஆணையிட்டு, அப்போதைய சபாநாயகர் காளிமுத்து, ஹிந்து நாளேட்டின் ஆசிரியர் மற்றும் உரிமையாளர் மற்றும், அந்த தலையங்கத்தை மொழி பெயர்த்து வெளியிட்ட முரசொலியின் நிர்வாகிகளையும் கைது செய்ய உத்தரவிட்டார்.


இதையொட்டி, அப்போது ஜெயலலிதாவுக்கு மிகுந்த விசுவாசமாக இருந்த காவல்துறை, உடனடியாக ராம், முரளி உள்ளிட்ட ஹிந்து நிர்வாகிகளை கைது செய்ய முனைந்தது. உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து, முன் பிணை பெற்றவுடன், அந்தப் பிரச்சினை முடிவுக்கு வந்தது. இந்த சம்பவத்தின் பின்னணியில், ஜெயலலிதா மீது கடும் கோபம் கொண்ட ஹிந்து குழுமம், அந்நாள் முதல், ஹிந்து பத்திரிக்கை, பத்திரிக்கை தர்மத்தை மறந்து, கருணாநிதியின் ஊதுகுழல்களில் ஒன்றாக ஆனது.

இந்நாளேடு, ஈழத் தமிழர் பிரச்சினை பற்றி எவ்வாறு செய்தி வெளியிட்டது என்பதும், இதற்காக, ஹிந்து ராமுக்கு இலங்கை அரசு லங்கா ரத்னா விருது வழங்கி கவுரவித்ததும் வரலாறு.



அடுத்து டெக்கான் க்ரானிக்கிள் நாளேடு. இந்நாளேடு, ஓரளவுக்கு நியாயமாக, பொதுமக்களின் பிரச்சினைகளையும், அரசின் தவறுகளையும் சுட்டிக்காட்டும் பத்திரிக்கையாகத்தான் இருந்து வந்தது. 2008 ஏப்ரல் 14 அன்று டைம்ஸ் ஆப் இந்தியா நாளேட்டின் சென்னை பதிப்பு வெளிவந்தது. இந்நாளில், டைம்ஸ் ஆப் இந்தியா நாளேட்டை விட வியாபார ரீதியில் பிரபலமாக வேண்டும் என்ற உந்துதலில், முன்னாள் தலைமைச் செயலாளர் எல்.கே.திரிபாதி,ஐஏஎஸ் மற்றும் முன்னாள் லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் எஸ்.கே.உபாத்யாய் ஆகிய இருவருக்கிடையே நடைபெற்ற உரையாடலை வெளியிட்டது.



இந்த உரையாடல் வெளியாகி, சட்டமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தப் பரபரப்பை ஒட்டி, டெக்கான் க்ரானிக்கிள் நாளேட்டின் சர்குலேஷன் பன்மடங்கு கூடியது. ஆனால், அந்த புகழுக்கு இந்த நாளேடு அளித்த விலை மிக அதிகம்.

முதலில், இந்நாளேட்டின் அலுவலகத்தை காவல்துறையை விட்டு சோதனை செய்து, எடிட்டரை கைது செய்யத் உத்தேசித்திருந்த கருணாநிதி, பத்திரிக்கைகளின் எதிர்ப்பை சம்பாதிக்க வேண்டியிருக்கும் என்று சமயோசிதமாக யோசித்து, டெக்கான் க்ரானிக்கிள் நாளிதழுக்கு அரசு விளம்பரங்களை நிறுத்தினார். அரசு விளம்பரத்தை நிறுத்தினால், ஒரு செய்தித் தாள், தள்ளாடி தடுமாறும் என்பதை அறிந்த கருணாநிதி இவ்வாறு செய்தார். அதைப் போலவே, அந்நாளேடு தள்ளாடத் தொடங்கியது. விளம்பரத்தை நிறுத்தினால், ஒரு நாளுக்கு ஒரு செய்தித் தாளுக்கு ஏற்படும் நஷ்டம் என்ன தெரியுமா ?

டெக்கான் க்ரானிக்கிள் நாளிதழின் விளம்பரப் பலகை



குறைந்தது ரூபாய் 2 லட்சம் முதல் 5 லட்சம் வரை. ஒரு நாளைக்கு 5 லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்படுவதை உலகத்தில் எந்த முதலாளி பொறுத்துக் கொள்வான் ? உலகில் உள்ள அத்தனை முதலாளிகளின் நோக்கமும் மூன்று விஷயங்கள் மட்டும் தான்.

1) லாபம்
2) லாபம்
3) லாபம்

இந்த லாபத்துக்காகத்தான் முதலாளிகள் தொழிலில் இறங்குகிறார்கள். அந்த லாபம் அடிபடத் தொடங்கினால் ? அரசின் காலில் முதலாளி மண்டியிடுவான். அதுதான் டெக்கான் க்ரானிக்கிள் நாளேட்டின் கதையிலும் நடந்தது. உபாத்யாய் திரிபாதி தொலைபேசி உரையாடலை வெளியிட்ட டெக்கான் க்ரானிக்கிள் நாளிதழின் மூத்த நிருபர் வி.பி.ரகு, அநேகமாக வேலையை விட்டு டிஸ்மிஸ் ஆகும் நிலைக்கு தள்ளப் பட்டார்.

டெக்கான் க்ரானிக்கிள் நாளிதழின் விளம்பரப் பலகை


பிறகு, அரசோடு சமாதானம் ஆனபின் அரசுக்கு எதிராக செய்திகள் வருவது, ஏறக்குறைய நிறுத்தப் படும் என்ற உடன்பாட்டுக்குப் பிறகு, டெக்கான் க்ரானிக்கிள் நாளிதழுக்கு மீண்டும் அரசு விளம்பரங்கள் வழங்கப் பட்டன.

உடன்பாட்டுக்கு ஏற்ப, டெக்கான் க்ரானிக்கிள் நாளிதழும், அரசை வெகுவாகச் சாடாமல் இப்படியும் இல்லாமல், அப்படியும் இல்லாமல் தனது லாபத்துக்கு குறைவு ஏற்படாமல் இன்று செயல்பட்டுக் கொண்டு வருகிறது.

அடுத்து டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ். இந்த நாளிதழ், எப்பொழுதுமே முதலாளிகள் மற்றும் முதலாளி வர்க்க சார்போடுதான் இருந்து வந்திருக்கிறது.



ஒரு பத்து பேர், உணவில்லாமல் பட்டினியால் சாக நேரிடும் ஒரு செய்தியையும், இந்திய அரசின் பொருளாதார கொள்கையால், பெரும் நிறுவனங்களுக்கு லாபத்தில் குறைவு ஏற்படும் ஒரு செய்தியையும் ஒப்பிட்டால், லாபத்தில் ஏற்படும், குறைபாட்டைத் தான் இந்நாளேடு பெரிதாக வெளியிடும்.

இது போல, தன்னுடைய முதலாளித்துவச் சார்பை சமன் செய்வதற்காக அவ்வப்பொழுது இங்கும் அங்கும் ஒரு ஏழையின் கஷ்டத்தை பற்றிச் செய்தி வெளியிட்டு நடுநிலையான நாளேடு போல காட்டிக் கொள்ளும். இந்நாளேட்டின் உரிமையாளர், இந்தியாவின் முதல் பத்து பணக்காரர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத் தக்கது.

இந்நிறுவனத்தின் இந்தியா டைம்ஸ் இணையத் தளம், டைம்ஸ் நவ் தொலைக்காட்சி அனைத்திலும், இந்த முதலாளித்துவச் சார்பை காணலாம். இந்தியா டைம்ஸ் இணைய தளத்தில் அதிகம் பேர் விரும்பிப் பார்க்கும், கவர்ச்சிப் படங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப் பட்டு வருவது குறிப்பிடத் தக்கது.

எஞ்சியுள்ளது, தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேடு மட்டுமே. இந்நாளேடாவது நடுநிலையாக இருக்குமென்றால் இல்லை.



எதிர்க்கட்சித் தலைவர் செல்வி ஜெயலலிதாவை விமர்சித்து வரும் செய்திகளை பூதக்கண்ணாடி வைத்தாலும் காண முடியாது. சரி, ஆளுங்கட்சியை எதிர்ப்பதுதான், உண்மையான பத்திரிக்கை தர்மம் என்று வைத்துக் கொண்டாலும் கூட, சமீப காலமாக, இப்பத்திரிக்கையில், அரசுக்கு எதிராக வரும் செய்திகள் குறைந்த வண்ணம் உள்ளன.

பத்திரிக்கை உலகில் விபரம் அறிந்தவர்கள், எக்ஸ்பிரஸ் குழுமத்தின் முதலாளி, கருணாநிதியை வெகு சமீபத்தில் சந்தித்ததாகவும், அச்சந்திப்பின் போது, இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டில் கருணாநிதி குடும்பத்தையும், கருணாநிதியையும், விமரிசித்து, தலையங்கப் பகுதிக்கு அருகில் வரும் கட்டுரைகள் மிகக் கடுமையாக இருப்பதாகவும், கருணாநிதி அங்கலாய்த்ததாக கூறப் படுகிறது.

இந்த அங்கலாய்ப்பின் விளைவாக இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டில் அரசுக்கு எதிரான செய்திகளை குறைத்துக் கொள்ள எக்ஸ்பிரஸ் குழுமம் முடிவெடுத்திருப்பதாகவும், தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாட்டில் உள்ள நான்கு ஆங்கிலப் பத்திரிக்கைகளும் கருணாநிதியின் பிடியில் வந்து விட்டதல்லவா ? அடுத்து தமிழ் தினசரிகளைப் பார்ப்போம்.



தினமணி நாளேட்டின் தலையங்கங்கள் கடுமையான விமர்சனத்தை தாங்கி வந்தன. கருணாநிதி அரசின் அயோக்கியத்தனங்களை தினமணி தொடர்ந்து சாடியே வந்துள்ளது.

இவ்வாறு கடும் விமர்சனங்களை அடக்கிய தலையங்கம் வந்தபோதெல்லாம் அந்நாளேட்டின் ஆசிரியரை, பார்ப்பனர் என்றும், காதில் கேட்கக் கூசும் வார்த்தைகளால், காலை 6 மணி முதல் 8 மணி வரை கருணாநிதி அர்ச்சனை செய்வதுண்டு என்று, இந்த அர்ச்சனைகளை காதில் கேட்டவர்கள் கூறுகிறார்கள்.

இப்படியெல்லாம் அர்ச்சனை செய்தாலும், கருணாநிதியை பாராட்டி வரும் செய்திகளை “தினமணி நாளேடே கூறியுள்ளது“ என்று அதை எடுத்து முரசொலியில் பெரிய செய்தியாக வெளியிட கருணாநிதி தயங்கும் அளவுக்கு அவருக்கு சுயமரியாதை இல்லை.



பச்சை நிறத்தில் இல்லையே ஒழிய, கருணாநிதிக்கு பச்சோந்திக்கு உண்டான அத்தனை குணநலன்களும் உண்டு. கடந்த ஆண்டு கருணாநிதி பிறந்தநாளின் போது அவரை வாழ்த்தி தினமணி எழுதிய தலையங்கத்தை, கருணாநிதி விழா மேடையில் ஒரு வரி விடாமல் படித்தது குறிப்பிடத் தகுந்தது.

தலையங்கங்களைத் தவிர, தினமணியில் மிக முக்கியமாக குறிப்பிட வேண்டிய விஷயம், நடுப்பக்கத்தில் வரும் கட்டுரைகள்.

பழ.கருப்பையா


கட்டுரையாசிரியர் பழ.கருப்பையாவைத் தவிர அக்கட்டுரைகளில் கருணாநிதியை கடுமையாக விமரிசனம் செய்வது அரிதிலும் அரிதான விஷயம். எக்ஸ்பிரஸ் குழுமத்திற்கும் அரசிற்கும் ஏற்பட்ட உடன் பாட்டின் விளைவுகள், அக்குழுமத்திலேயே இருக்கும் தினமணியை மட்டும் பாதிக்காதா என்ன ?

அதன் விளைவு, சமீப காலமாக பழ.கருப்பையா காணாமல் போய் விட்டார். நேற்று எழுதிய கட்டுரையில் கூட, ஏசு பிரானைப் பற்றித் தான் பழ.கருப்பையா எழுதியிருக்கிறார். தினமணியின் தலையங்கங்கள் கூட, தமிழக அரசை தொடாமல், இந்தியாவின் மற்ற மாநிலங்களைச் சுற்றி வருகின்றன.

கருணாநிதிக்கு பெரும் தலைவலியாக இருந்து வந்த தினமணியை ஒரு வழியாக சரிக்கட்டியாகி விட்டது.

அடுத்து கருணாநிதியை தொடர்ந்து விமர்சித்து, தொல்லை கொடுத்து வந்த ஒரு நாளிதழ் தினமலர்.

முதலில், தினமலர் குழுமத்தில் ஏற்பட்ட குடும்பச் சண்டையை தனது உளவுத் துறை மூலம் பெரிதாக்கி அந்நெருப்பில் குளிர் காய்ந்தார் கருணாநிதி.



அதற்குப் பிறகும் சென்னை தினமலரின் விமர்சனங்கள் குறையாததால், சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தார் பனங்காட்டு நரியான கருணாநிதி. அருமையான சந்தர்ப்பத்தை தினமலர் நாளேடே ஏற்படுத்திக் கொடுத்தது.

ஊரில் உள்ள அனைத்துப் பிரச்சினைகளையும் பற்றி எழுதிக் கிழித்து விட்டது போல, தமிழ் திரைப்படங்களின் முன்னாள் கதாநாயகிகள் பாலியல் தொழிலில் ஈடுபடுகிறார்கள் என்று, சில முன்னாள் முன்னணி நடிகைகளின் புகைப்படத்தோடு செய்தி வெளியிட்டது தினமலர்.

சர்ச்சைக்குரிய தினமலர் செய்தி


உண்மையிலேயே அந்நடிகைகள் பாலியல் தொழில் செய்தார்கள் என்று வைத்துக் கொண்டால் கூட, அதனால் யாருடைய சோற்றில் மண் விழுந்தது ? ஆனால், இதை ஒரு மிகப் பெரிய சமுதாய பிரச்சினையாக்கி பெரிய அளவில் செய்தி வெளியிட்டிருந்தது தினமலர்.

நடிகர் சங்கத்தின் போராட்ட அறிவிப்பு



“மயிர் நீக்கின் உயிர் வாழா கவரிமான்“ குடும்பத்தைச் சேர்ந்தவர்களான திரைத் துறையினர் மிகப்பெரிய கூத்தை போராட்டம் என்ற பெயரில் நடத்தினார்கள்.

அவ்வளவுதான் கருணாநிதிக்கு வந்ததே கோபம் !

தமிழகத்தின் அத்தனை பிரச்சினைகளும் தீர்ந்து விட்டது போலவும், இனி தீர்க்க வேறு பிரச்சினைகளே இல்லை என்பது போலவும், உடனடியாக “பெண்களுக்கெதிரான வன்கொடுமை சட்டத்தின்“ கீழ் காவல்துறையை நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

இங்கேதான் இருக்கிறது கருணாநிதியின் தந்திரம்.

சட்டத்தின் படி, அவதூறான செய்தி வெளியிடும் பத்திரிக்கையின் ஆசிரியரும், பதிப்பாளரும் (முதலாளி) தான் வழக்கமாக கைது செய்யப் படுவார்கள்.

ஆனால், தினமலர் முதலாளிகளோடு, ஒரு “கள்ள ஒப்பந்தத்தை“ கருணாநிதி செய்து கொண்டு அந்நாளேட்டின் செய்தி ஆசிரியர் லெனினை காவல்துறையை வைத்து கைது செய்தார் கருணாநிதி.

தினமலர் செய்தி ஆசிரியர் லெனின் கைது செய்யப் படுகையில்


தினமலர் நிர்வாகமும், சந்தோஷமாக லெனினை காவல்துறையோடு அனுப்பி வைத்தது.

பாம்புக்கு தலையையும், மீனுக்கு வாலையும் காட்டும் கைதேர்ந்த கபட வேடதாரி கருணாநிதி, லெனின் கைதால் பத்திரிக்கையாளர்கள் மத்தியில் ஏற்பட்ட எதிர்ப்பை சமாளிக்க, லெனின் பிணை மனுவுக்கு நீதிமன்றத்தில் அரசு சார்பில் எதிர்ப்பு தெரிவிக்காமல் இருக்க உத்தரவிட்டார்.

மறுநாளே லெனின் சிறையிலிருந்து வெளியே வந்தார். முதலாளியை கைது செய்யாமல் செய்தி ஆசிரியரை கைது செய்ததற்கு நன்றியாக தினமலர், இன்று தனது அரசு எதிர்ப்பு செய்திகளை ஒரு ஓரமாக ஒதுக்கி வைத்து விட்டு மற்ற செய்திகளுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது.

வழக்கமாக, காரசாரமாக, அரசியல் மற்றும் அதிகார வர்க்கத்தினரைப் பற்றிய செய்திகளை தாங்கி வரும் தினமலரின் “டீக்கடை பென்ச்“ பகுதி கூட, உப்புச் சப்பில்லாமல் வருகிறது.

தமிழகத்தின் மிகப் பெரிய நாளிதழான தினத்தந்தியைப் பற்றி சொல்லவே வேண்டியதில்லை.


20 பேர் இறந்த விபத்துச் செய்தியை சின்னதாக போட்டு விட்டு, நடிகையின் உள்பாவாடை காணாமல் போன செய்தியை தலைப்புச் செய்தியாக போடும் நாளிதழ்.

இதற்கு, மக்கள் நடிகையின் உள்பாவாடை பற்றித் தான் தெரிந்து கொள்ள மிகவும் ஆர்வமாக இருக்கிறார்கள் என்ற வியாக்கியானம் வேறு.

எப்போதும் தினத்தந்தி ஒரு கட்சி சார்பாகவே இருந்து வந்திருக்கிறது. அதிசயிக்காதீர்கள். அந்த ஒரு கட்சி வேறு எந்தக் கட்சியும் அல்ல. “ஆளும் கட்சி“தான் அது.

அடுத்து எஞ்சியிருப்பது, தினகரன் தான். குடும்பம் பிரிந்து சண்டையிட்டுக் கொண்டிருந்தபோது, தினகரன் நிருபர்கள் அரசுக்கு எதிரான செய்திகளுக்காக ஆலாய்ப் பறப்பார்கள்.



குடும்பம் ஒன்று சேர்ந்ததும், அரசுக்கெதிரான செய்திகள் அடியில் போடப்பட்டு, கருணாநிதியின் அறிக்கைகளும், பாராட்டுகளும் முதல் பக்கத்தில் வருகின்றன.

இதில் ஜெயலலிதாவின் அறிக்கைகளை சின்னதாக வெளியிட்டு நடுநிலையாக இருப்பதாக வேறு காட்டிக் கொள்கிறார்கள். குடும்பம் சண்டையில் இருந்த காலத்தில், தினகரன் நாளேடு, அரசு விளம்பரம் வருவதில்லை என்று, நீதிமன்றம் சென்றதை நினைவில் கொள்ள வேண்டும்.

எவ்வளவுதான் பணம் கொட்டிக் கிடந்தாலும், சன் டிவி குழுமத்தின் வருமானம் கூரையை பிய்த்துக் கொண்டு கொட்டினாலும், விளம்பர வருமானம் குறைந்தவுடன் நீதிமன்றம் செல்லும் பத்திரிக்கை முதலாளிகளின் கவலையை கவனத்தில் கொள்ள வேண்டும்.

பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வரும் தமிழ் ஓசை நாளேட்டை, டாக்டர் ராமதாஸ், ஜி.கே.மணி தவிர ஒருவரும் படிப்பதில்லை என்று தகவல்கள் கூறுகின்றன. அன்புமணி ராமதாஸ் கூட ஹிந்து தான் படிக்கிறாராம்.

இதைத் தவிர சொல்லிக் கொள்ளும் படி ஒரு நாளிதழும் இல்லை.

வாரம் இருமுறை இதழ்களை எடுத்துக் கொண்டால், நக்கீரனை குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.



ஜெயலலிதா அரசாங்கத்தில் கைது செய்யப் பட்டு சிறையில் அடைக்கப் பட்டதால், நக்கீரன் பத்திரிக்கையில் ஆசிரியர் நக்கீரன் கோபால் மற்றும் மூத்த பத்திரிக்கையாளர்களுக்கு ஜெயலலிதா மீது ஏற்பட்ட வெறுப்பு ஜெயலலிதாவை ஹிட்லர், முசோலினி போன்ற ஒரு கொடுங்கோலர் போலவும், கருணாநிதியை ஏசு பிரான் போலவும் எண்ண வைத்தது.

இதன் விளைவு, நக்கீரன் அறிவாலயத்தில் அச்சடிக்கப் படுவது போலவே செய்திகளைத் தாங்கி வருகிறது. மேலும், இப்பத்திரிக்கை, உளவுத் துறையின் ஒரு மூத்த அதிகாரியின் பிடியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும், இப்பத்திரிக்கையின் இணை ஆசிரியராக இருக்கும் காமராஜ், கருணாநிதிக்கு மிக மிக நெருக்கமாக உள்ளதால், கருணாநிதியின் எண்ணங்களே நக்கீரனில் செய்தியாக வருவதாக கூறப்படுகிறது.

ஈழப் போரின் போது ஈழச் செய்திகளை வெளியிட்டு கொள்ளை லாபம் பார்த்த நக்கீரன், தற்போழுது, ஈழப் போரை வழிநடத்தியவர் போலவும், பிரபாகரனுக்கே போர் முறைகளை கற்றுக் கொடுத்தவர் போலவும் பேசி வரும், போலிச் சாமியார் ஜெகத் கஸ்பர் எழுதும் தொடரை வெளியிட்டு வருகையிலேயே நக்கீரனின் அருமை புரியும்.

அடுத்து ஜுனியர் விகடன். மக்கள் மத்தியில் ஒரு நற்பெயரை பெற்றிருந்த இந்த இதழ், காவல்துறை அதிகாரிகளின் பிடியில் சிக்கி, நடுநிலையான பத்திரிக்கை என்ற பெயரை ஏறக்குறைய இழந்து நிற்கிறது.



குறிப்பாக, காவல்துறை அதிகாரிகளின் ஊழல்களை தைரியமாக அம்பலப்படுத்தி வந்த இந்த இதழ், தற்போது, காவல்துறை அதிகாரிகளின் புகழ் பாடும் பத்திரிக்கையாக உருமாற்றம் பெற்றுள்ளது.

மேலும், விகடன் குழுமம் திரைப்படத் தயாரிப்பில் இறங்கத் தொடங்கியதும், பத்திரிக்கையை விட, திரைப்படத்தில் இக்குழுமத்தின் முதலாளிகள் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சினிமா என்ற மாய உலகம் காட்டிய கவர்ச்சியில் இக்குழுமத்தின் மேல்மட்ட நிர்வாகிகள் மயங்கி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சில ஆண்டுகளாக செக்ஸ் கதைகளை வெளியிடாமல் இருந்த ஜுனியர் விகடன், சமீப காலமாக செக்ஸ் கதைகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகிறது. ஜுனியர் விகடன் புண்ணியத்தில், காஞ்சிபுரம் அர்ச்சகர் தேவநாதனின் நீலப்படம் இல்லாத செல்போனே தமிழ்நாட்டில் இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது.


இலங்கை சென்று, ராஜபக்ஷேவுடன் கைகுலுக்கி, சிரித்துப் பேசி, விருந்துண்டு, பரிசுகள் அளித்து, பெற்று, இந்தியா திரும்பியுள்ள திருமாவளவனை வைத்து “முள்வலி“ என்ற தலைப்பில் கம்பி வேலிக்குள் அடைபட்டுக் கிடக்கும் ஈழத் தமிழர்களை பற்றி எழுத வைத்து, ஈழத் தமிழருக்காக இன்னும் மிச்சம் உள்ள இரக்கத்தை வியாபாரம் செய்து லாபம் பார்த்து வருகிறது இந்த இதழ்.

கடந்த பாராளுமன்றத் தேர்தலின் போது “வேட்பாளர் தம்பட்டம்“ என்ற தலைப்பில் விளம்பரங்கள் வெளியிட்டு, ஜுனியர் விகடன் கொள்ளை லாபம் பார்த்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இரண்டு பக்க விளம்பரத்துக்காக, இரண்டு லட்சம் என்று விலை பேசி, மார்க்கெடிங் செய்ய அனைத்து அரசியல் கட்சிகளிடமும், வேட்பாளர்களிடமும், ஜுனியர் விகடன் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அடுத்த வாரம் இருமுறை இதழ், “குமுதம் ரிப்போர்ட்டர்“. இந்த பத்திரிக்கை அரசு, அரசியல் செய்திகள் என்றெல்லாம் ரொம்பவும் மெனக்கிடுவதில்லை.


எல்லா பத்திரிக்கைகளின் குறிக்கோளும் லாபம் என்றாலும், குமுதம் ரிப்போர்ட்டரின் குறிக்கோள், எப்படியாவது லாபம் என்பதுதான். இப்பத்திரிக்கை எப்போதும் கையாளும் ஒரு முக்கிய தந்திரம் “செக்ஸ்“.

செக்ஸ் தொடர்பாக எந்த செய்தி இருந்தாலும் அதை அட்டையில் போட்டு, அந்த இதழுக்கு கூடுதலாக 4 அல்லது 5 லட்ச ரூபாய் லாபம் பார்ப்பதுதான் இந்த இதழுக்கு வழக்கம்.

“பள்ளி மாணவிகளிடம் உலவும் செக்ஸ் வீடியோ“, “டேட்டிங் செய்யும் இளசுகள் – ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்“, “பெருகி வரும் கள்ள உறவுகள்“ “செக்ஸ் வீடியோவில் மாட்டிய எம்.எல்.ஏ“ செக்ஸ் படம் காட்டும் இணையத் தளங்கள்“ “மீண்டும் சரோஜாதேவி கதைகள் ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்” என்ற ரீதியில் தான் இந்த இதழின் தலைப்புச் செய்திகள் இருக்கும்.

ஒரு வாரத்துக்கு செக்ஸ் செய்தி கிடைக்க வில்லை என்றால் “நான் ஸ்டாலினுக்கு போட்டியா ? அழகிரி அதிர்ச்சிப் பேட்டி“ அல்லது “நான் யாருக்கும் இளைத்தவன் இல்லை – விஜயகாந்த் உற்சாகப் பேட்டி“ என்று இதழை ஓட்டி விடுவார்கள்.

இது தவிர, இந்நிறுவனத்தின் முதலாளியின் 1500 ஏக்கர் நிலம் சென்னையை அடுத்து இருப்பதாகவும், இந்நிலத்தை, காவல்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் மேற்பார்வை செய்து பிரச்சினைகள் ஏதும் வராமல் பார்த்துக் கொள்வதாகவும், இதனால், அந்த அதிகாரி மற்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் குறித்த செய்திகள் எதுவும் குமுதம் ரிப்போர்ட்டர் இதழில் வருவதில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தில் இருந்து வரும் வார இதழ் “தமிழன் எக்ஸ்பிரஸ்“. இந்த இதழை டீக்கடையில் போண்டா மடிப்பதற்குக் கூட பயன் படுத்துவதில்லை என்று கூறப் படுகிறது.



வருமான வரியில் நஷ்டம் காட்டுவதற்காகத்தான் இந்த இதழை எக்ஸ்பிரஸ் குழுமம் நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எஞ்சியுள்ளது, வெளிவந்து ஒரு வருடம் ஆன “தமிழக அரசியல்“ வார இதழ். அரசுக்கு எதிரான செய்திகள் ஓரளவுக்கு வந்தாலும் விருப்பு வெறுப்பின்றி நடுநிலையோடு இந்த இதழ் செயல்படுகிறதா என்பது சந்தேகமாகவே இருக்கிறது.



இந்த இதழில் வெளிவரும் செய்திகள் அரசின் மீது விமரிசனம் செய்யும் தொனியில் இருந்தாலும் துணை முதல்வருக்கு, ஏறக்குறைய சாமரம் வீசும் வகையில் தான் இருக்கிறது. சமீபத்தில் ஸ்டாலின் பற்றி வெளிவந்த ஒரு கட்டுரையில், ஸ்டாலினுக்கு பக்குவம் போதாது என்று குறிப்பிடப் பட்டிருந்தது.

எதற்காக என்றால், ஒரு அதிகாரி ஒரு குறிப்பிட்ட திட்டத்தில் ஊழல் இருந்தது என்று குறிப்பிட்டாராம். உடனடியாக ஸ்டாலின் விசாரணைக்கு உத்தரவிட்டாராம். உடனடியாக இன்னொரு அதிகாரி பதறிப்போய், இந்த விஷயத்துக்கு ஒப்புதல் கொடுத்தது முதல்வர் கருணாநிதிதான், விசாரணை நடந்தால் அது அரசின் மீதே திரும்பும் என்பதால் விசாரணை வேண்டாம் என்று கூறினாராம்.

இது போல, ஒரு ஊழல் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டதால் ஸ்டாலினுக்கு பக்குவம் இல்லை என்று குறிப்பிடப் பட்டிருந்தது. ஊழல்களை மூடி மறைக்க ஸ்டாலின் இன்னும் கற்றுக் கொள்ளவில்லை என்றுதானே பொருள் ? ஒரு வேளை எப்படியும் அடுத்த முதல்வர் ஸ்டாலின்தான்.

இப்போதே ஸ்டாலினுக்கு ஜால்ரா போட ஆரம்பித்து நாளை ஸ்டாலின் முதல்வரானால், நாங்கள்தான் உங்களை முதல்வர் ஆக்க உத்தரவிட்டோம், அதனால் வாரம் 20 பக்கத்துக்கு அரசு விளம்பரம் தாருங்கள் என்று கேட்கலாமென, தமிழக அரசியல் நிர்வாகம் திட்டமிட்டுருக்கிறதோ என்ற சந்தேகம் இருக்கிறது.

இது போகவும், தமிழக அரசியல் நிர்வாகமும், தமிழக அரசியல் தவிர, திரிசக்தி என்ற ஆன்மீக பத்திரிக்கை, திரைப்படத் தயாரிப்பு என்று பல தொழில்கள் செய்து வருவதால் தமிழக அரசியல் பத்திரிக்கையை சீரியசாக நடத்துவது போலத் தெரியவில்லை.

முக்கிய அரசியல் பத்திரிக்கைகள் அனைத்தையும் பார்த்தாயிற்று. மற்ற வார, மாத இதழ்களுக்கு, அரசியல் ஒரு சிறு பகுதிதான் என்பதால், கருணாநிதி இவைகளை கண்டு கொள்வதில்லை.

தொலைக்காட்சி ஊடகங்கள் என்ன நிலையில் இருக்கின்றன என்பதை விளக்கத் தேவையில்லை. தொலைக்காட்சியில் வரும் செய்திகளையும் மக்கள் அப்படியே உண்மை என்று நம்பும் காலம் மலையேறி விட்டது. பின்னே, விஜயின் வேட்டைக்காரன் படத்துக்கு மக்கள் கூட்டம் அலைமோதுகிறது என்று சன் நியூஸில் அரை மணிக்கொரு முறை சொன்னால், மக்கள் சிரிக்க மாட்டார்கள் ?

பெரும்பாலான தொலைக்காட்சிகள் அரசியல் கட்சிகளின் பின்னணியில் இயங்குவதால், அவற்றில் உண்மை செய்திகளை காண்பது கடினமாக இருக்கிறது.

இந்நிலையில், ஒரு ஜனநாயகத்துக்கு, சுதந்திரமான பத்திரிக்கைகள் எவ்வளவு முக்கியம் என்பதை அனைவரும் அறிவோம். சுதந்திரமான பத்திரிக்கைகள் இல்லையென்றால், ஹிட்லரின் தளபதி, கோயபல்ஸ் பத்து முறை ஒரு பொய்யைச் சொன்னால் அது உண்மையாகி விடும் என்று கூறியது, இப்பொழுது இருக்கும் பத்திரிக்கைளால் நடைமுறைக்கு வந்து விடும்.

சரி. ஆட்சி சிறப்பாக நடக்கிறது. விமர்சனங்களே அவசியம் இல்லை என்றால் அதையும் ஏற்றுக் கொள்ள முடியாது.

சிறப்பாக நடக்கும் ஆட்சி கூட, தவறுகள் இழைக்கக் கூடும். அந்தத் தவறுகளை சுட்டிக் காட்டி, அந்த ஆட்சியை மேலும் சிறப்பாக நடத்த பத்திரிக்கைகள் அவசியம்.

அப்படிப்பட்ட சுதந்திரமான பத்திரிக்கைகள் இல்லாது போனால் வல்லான் வகுத்ததே வாய்க்கால் என்ற நிலை உருவாகும். ஜனநாயகம் என்பது, தானாக வாடி, வதங்கி, உதிர்ந்து விடும்.

தமிழ்நாட்டில், பத்திரிக்கைகள் ஏற்படுத்தியுள்ள இந்த வெற்றிடத்தை இட்டு நிரப்பும் திறன், பதிவர்களுக்கு மட்டுமே உள்ளது. இந்த பதிவுலகம் யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லை. இங்கே எழுத்துச் சுதந்திரம் உண்டு.

நியாயமாக எழுதினால், நம்மை வேலையை விட்டு அனுப்பி விடும் முதலாளியும் இல்லை, அரசுக்கு எதிராக எழுதினால், விளம்பரம் வராதே என்று கவலைப்படும் வியாபார நெருக்கடியும் இல்லை.

நமது பதிவுலகத்தில் பெரும்பாலான பதிவுகள் செய்தித் தாள்களில் வருபவற்றை மறு பதிவு செய்பவையாகவும், சினிமா செய்திகளை பெரிது படுத்துவதாகவும் உள்ளன.

இப்பதிவுலகத்தை, இந்த அரசில் ஏற்பட்டு வரும் ஊழல்களை வெளிக் கொணர சுதந்திரமான ஒரு தளமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

அரசு இயந்திரத்தின் முக்கிய பகுதியாக இருக்கும் அரசு ஊழியர்களே !. அரசுத் துறைகளில் நடக்கும் ஊழலில், புறங்கையை நக்காமல், ஊழலை எதிர்க்க திராணியும் இல்லாமல் வெளியே சொல்ல இயலாமல் புழுங்கிக் கொண்டிருக்கும் போராளிகளே.

உங்களுக்குத் தெரிந்த ஊழல்களை, இந்த பதிவுலகத்தில் வெளியிடுங்கள்.
முக்கிய செய்திகளை ஆசிரியருக்கு அனுப்பி, அது பிரசுரமாகாததால் மனம் புழுங்கும் பத்திரிக்கையாளர்களே. பதிவுலகிற்கு வாருங்கள்.

பதிவர்களே சீரியசான பதிவுகளை எழுதுங்கள். மக்கள் பிரச்சினைகளை எழுதுங்கள். இந்தப் பத்திரிக்கைகள் செய்யத் தவறுவதை நாம் செய்வோம்.

இது அற்புதமான உலகம். நமது ஜனநாயகத்தை, நமது குழந்தைகளுக்கு பத்திரமாக விட்டுச் செல்லும் பொறுப்பு நமக்கு உண்டு. அந்தப் பொறுப்பை தவற விட்டால், நம் கண் முன்னே, இந்த ஜனநாயகம் செத்து மடிவதை காணும் கொடுமைக்கு ஆளாவோம்.

ஜனநாயகத்தை பதிவுலகத்தால் மட்டுமே காப்பாற்ற இயலும். வாருங்கள் தோழர்களே!
 

சவுக்கு
 

Comments  

 
+3 #154 saravanakumar.kc 2012-11-04 14:13
இன்றுதான் படித்தேன். பரமக்குடி நிகழ்வு குறித்து தொலைக்காட்சியில ோ, நாளிதழிலிலோ அல்லது பிற ஊடகங்களின் வாயிலாகவோ எந்தத் தகவலையும் தெரிந்து கொள்ளவில்லை. தஙகள் பதிவுதான் உண்மையை வெளிச்சம் போட்டுக் காட்டியது. இனி தினமும் சவுக்கினைப் படிப்பதே எனது முதல் வேலையாக இருக்கும்
Quote
 
 
0 #153 Saravanah 2012-11-01 02:07
miga pramaadam, jananayagathai kaappoam .
Quote
 
 
0 #152 Uma Kumar 2012-10-17 17:38
pazhaiya pathivu thaam... irandu aandugalukku melaana pothum, aatchi maariya pothum ondrum perithaai matramillai... sollapatta nilamai innum appadiye thaan irukkirathu....
maatram vendum.... maatruvom...Quoting sathya:
very nice . bold keep it up.
we expecting more from your side
Quote
 
 
-4 #151 பறை மன்னன் 2012-09-12 12:05
தினமலர் படிப்பவனுக்கு பெரிய அறிவு வேண்டும். ஏதோ எடுத்தோம் கவிழ்த்தோம் என்று படித்தால் ஒன்றுமே புரியாது. செய்தியின் சாரம் பற்றியெல்லாம் முழுவதுமாக விவரித்துவிட்டு , கட்டங்கடைசியாக ஆப்பு வைக்கும் தினமலர்.

பாப்பான் நடத்தினாலும் செயவை கிழியவைக்கும் ஒரே நாளிதல் அதுதான்.
Quote
 
 
+2 #150 K. Joseph Dizososa 2012-09-06 22:01
let us worry about srilankan tamils and tamil fishermen , forget about tmilnadu governmentஇலங்க ை கடற்படையால் தமிழக மீனவர்கள் மீண்டும் தாக்கப்பட்டுள்ள னர். இத்தாக்குதலில் 5 மீனவர்கள் படுகாயமடைந்துள் ளனர்.

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் ஆறுகாட்டுத்துறை யைச் சேர்ந்த மீனவர்கள் விசைப்படகுகளில் கோடியக்கரை கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருதனர்.

அப்போது அவர்களது படகுகளை வழிமறித்த இலங்கை கடற்படையினர் மீன்வர்களை தாக்கி விரட்டியடித்திர ுக்கின்றனர். இதையடுத்து தமிழக மீனவர்கள் உயிர்தப்பி கரைக்குத் திரும்பினர்.

கடந்த ஒரு வார காலத்தில் தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் நடத்துகிற 3-வது தாக்குதல் இது.
Quote
 
 
-9 #149 tnlove2005 2012-06-25 05:26
இந்த வரிசையில் தினமணி, தினமலரை பார்த்ததும் இந்த கட்டுரையின் நம்பகத்தன்மையை முற்றிலும் இழந்துவிட்டது. சவுக்கு அவர்களே தினமணி, தினமலரை நன்றாக படிக்கவும்.
Quote
 
 
-7 #148 K Kannan 2012-06-14 13:46
நீங்களும் இவ்ளோ நாளா இணய தளத்தில் எழுதி கொண்டு இருக்கிறீகள் - மக்களிடம் "ரீச்" முக்கியம் அல்லவா? குற்றம் சொல்லும் அதே வேளயில் நன்றாக நடக்கும் விஷயங்கலயும் எழுதுன்கல்.
Quote
 
 
+3 #147 agrandjovian 2012-06-13 15:33
nice one. what about puthiya thalaimurai
Quote
 
 
+2 #146 vijaykumar 2012-02-18 14:58
very nice
Quote
 
 
+1 #145 dnaguabi 2011-11-21 10:59
sir
please investicat arasu cable tv radhakrishnan yearn crores and corrption all local channals gives some money please wrote in savukku
thank you
Quote
 
 
+2 #144 Dakky 2011-11-18 16:33
I used to open savukku website when am lacking of confidence about my boldness when others are looting taxpayers money (from excheqer a/c)i try to caution the dept by several ways thus savukku is my energy drink always.
Thanks,
Sathyameva jaya the
Quote
 
 
+1 #143 jeypee 2011-11-06 12:04
திருநெல்வேலி மாவட்டம்
முக்கூடல் அதிமுக பிரமுகர் மீது நில மோசடி புகார்
முக்கூடல், நவ.6:
முக்கூடல் ஆதிமுலனார் தெருவில் வசித்து வருபவர் ஜெசிந்தா செல்வராஜ். இவருடைய கணவர் கட்டிட காண்ட்ராக்டரான செல்வராஜ் கடந்த 10வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். மரணமடைவதற்கு சில மாதங்களுக்கு முன்பு நெல்லை சார்பு நீதிமன்றத் தில் ஏலத்திற்கு விடப்பட்ட ஒரு சொத்தை ரொக்க கிரையத்திற்கு தனது மனைவி ஜெசிந்தா பெயரில் எடுத்து பதிவுசெய்து வைத்திருந்தார். இந்த சொத்தை முக்கூடல் முன்னாள் நகரசெயலாளரும் அதிமுக பிரமுகருமான உதயசூரியன் தனக்கு பாத்தியப்பட்டது என்று கூறி போலியான ஆவணங்கள் தயாரித்தும் நீதிமன்ற உத்தரவுகளை திருத்தியும் ஆக்கிரமித்து வருவதாக ஜெசிந்தா நெல்லை எஸ்பியிடம் புகார் செய்தார். எஸ்.பி உத்தரவின்பேரில் இது தொடர்பாக முக்கூடல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Quote
 
 
-1 #142 boopathi 2011-09-19 20:22
i accept this all ilegal activites
Quote
 
 
+9 #141 Napoleon 2011-09-16 16:53
அன்பு தோழர்(கள்?) சவுக்குக்கு,

சினிமா, கிசுகிசு என வெறும் சினிமா
சாக்கடைகளை கடை வைத்து, தற்கால
தலைமுறைகளை குறிவைக்கும் தமிழ் இணைய தளங்களில் இருந்து முற்றிலும்
விடுபட்டு, தமிழக நிகழ்வுகளை அப்பட்டமாக, வெளிச்சம் போட்டு காட்டும், உங்களின்
முயற்சி, மனதிற்கு மகிழ்ச்சியை தருகின்றது...அது போல கருணா (தமிழகத்தின்) வின் ஆட்சிக்கு "COUNT DOWN" போட்டதும்,ஜாபார ் சேட்டின் பல்லை அவர் அதிகாரத்தில் இருக்கும் போதே, சவால் விட்டு ஆட்டிய உங்கள் துணிச்சலுக்கு தலை வணங்கும் ஆயிரக்கணக்கான தமிழ் நெஞ்சகளின் சார்பாக தலை வணங்குகிறேன்,

--
போர்னியோ தீவுகளிலிருந்து ,
தமிழன்பன்,
இள நெப்போலியன்.

"எமது வாழ்வும், மங்காத செல்வமும் தமிழ் என சங்கே முழங்கு..."
Quote
 
 
+7 #140 seerasai sethubala 2011-09-13 16:18
சவுக்கு பற்றி கேள்விப்பட்டிரு க்கின்றேன். ஆனால், மீடியா நியூஸ் நிருபர் ஒருவரின் வற்புறுத்துதலால ் இன்றுதான் படித்தேன். பரமக்குடி நிகழ்வு குறித்து தொலைக்காட்சியில ோ, நாளிதழிலிலோ அல்லது பிற ஊடகங்களின் வாயிலாகவோ எந்தத் தகவலையும் தெரிந்து கொள்ளவில்லை. தஙகள் பதிவுதான் உண்மையை வெளிச்சம் போட்டுக் காட்டியது. இனி தினமும் சவுக்கினைப் படிப்பதே எனது முதல் வேலையாக இருக்கும்.
Quote
 
 
+6 #139 D.Mani 2011-08-16 14:15
Respected Sir,
Your SAVUKKU is a true democracy fourth filler
Your hard work enlighten in your blog.
Thank you.

PS.Please send me Thamizh font name and key board
model.
Quote
 
 
+1 #138 SARO 2011-08-15 23:17
please write about jayalalitha. she is not a pure one too
Quote
 
 
+1 #137 yuyuthsu 2011-08-13 21:33
why there is no mention about Thughlaq?
Quote
 
 
-14 #136 unmai tamilan 2011-08-03 16:20
இதுல விஜய் எதுக்கு இலுகர?
Quote
 
 
+3 #135 schprabhu 2011-07-30 15:28
அருமையான கட்டுரை பாராட்டுகைல்
Quote
 
 
+4 #134 kannand 2011-07-13 01:01
பத்திரிகை சொல்லாததை நீங்கள் சொல்லுங்கள் நன்றீ.
Quote
 
 
+2 #133 pernamallur sekaran 2011-07-11 16:11
every media has a class character.it oprtates the media. but everybody must analyse with human welfare.then only we can get exact result..
Quote
 
 
0 #132 iniyan 2011-07-08 11:53
:ஏக்: நாடு நாசம் அவதை தவிர வேறூ வழி இல்லை
Quote
 
 
0 #131 kingprabu 2011-07-07 15:09
ஹி
Quote
 
 
+1 #130 boopathi 2011-06-22 14:15
சவுக்குல் வரும் செய்தி அனைதும் மக்கலுகு விலிப்பினை ஏட்படுதும்
தமிழன் பூபதி
Quote
 
 
+6 #129 நடராசன் 2011-06-15 21:26
இது அற்புதமான உலகம். நமது ஜனநாயகத்தை, நமது குழந்தைகளுக்கு பத்திரமாக விட்டுச் செல்லும் பொறுப்பு நமக்கு உண்டு. அந்தப் பொறுப்பை தவற விட்டால், நம் கண் முன்னே, இந்த ஜனநாயகம் செத்து மடிவதை காணும் கொடுமைக்கு ஆளாவோம்.

....ஒரு சொல் நல்ல சொல்.
Quote
 
 
0 #128 krispaddy 2011-06-14 20:06
சவுக்கு செய்திகள் யாவும் விறுவிறுப்பாகவு ம் பயனுள்ளதாகவும் உள்ளது, அதிலும் குறிப்பாக முதல் அறிவிக்கையாக உள்ளது என்றே கூறவேண்டும்

ஐயா, கொள்ளை அடித்தவர்களிடம் , அவர்களின் ஒட்டு மொத்த சொத்துக்களையும் இந்திய அரசாங்கம் பறித்து அதனை அரசு உடமையாக்க வேண்டும். இதுதான் மிக மிக முக்கியம், சிறைச்சாலை தண்டனை மட்டும் போதாது, அங்கு அவர்கள் கொஞ்ச காலம் இருந்துவிட்டு பின்னர் மீண்டும் அநியாயங்கள் செய்ய தொடங்கி விடுகின்றனர், இதற்கு நமது அரசாங்கம் வழி செய்யுமா உடனடியாக?
Quote
 
 
-1 #127 vsankar 2011-06-11 13:34
committed judiciary,commi tted journalism-God alone can save democracy
Quote
 
 
-3 #126 Rajendra 2011-06-07 11:46
http://velichathil.wordpress.com/2011/06/06/காங்கிரஸ்ஸின்-ஜாலியன்-வா/

Why your not taking anything on this Corruption case? Why your only with Tamilnadu and Maran family... Come out from that Maran issue and focus on this one... Most of our tamil people need eye opening on this Baba Ramdave issue... common savukku u can do that..
Quote
 
 
+1 #125 karuppan 2011-06-06 14:31
துக்லக்கை தவிர்தது ஏன்?
Quote
 
 
+1 #124 vetrinilavan 2011-06-03 16:13
Hi Mr.Savukku,

Don't publish this message. I need Jayalalitha's contact number or her mail ID. You can see the way, How she is leading the government. My doubt is whether she is having any advisor or not?.. Why she is beahaving in an autocratic way.. She is cancelling all the schemes, which were strateted by karaunanidhi without any valid justification. Will it give good name for her & her government?.. Why is she not understanding this simple things?.. EGO will be there for each and everyone. But, it should have some limitation. Not to this extent. She has cancelled MRT system and she is telling that "MONORAIL" is better. My doubt is whether does she know what is monorail and what is MRT?.. Which can carry more people and which is needed for chennai now?.. The way she is telling shows that she doesn't know even this small things also.. LEt her go to singapore and Malaysia and see the MRT and MONORAIL..

I'm keep on sending many mails to her official mail ID ".in". But, I never get any reply..nothing.. If she is not ready to listen to anyone in his cabinet, party (ofcourse, nobody will open their motuh for anything, other than to praise her) and from the public and doesn't have any good advisors who can give constructive ideas (It looks like nobody can approach and give any infromation, then I don't think so she can ragain the power again in 2016.

Is this the fate/destiny of tamilnadu people?.. Looks like too shame to all of us..

I want to keep on insist by sending mail with constructive ideas in a decent and polite way.. It may spark a light in her mind to think in constructive way.. I have the hope in me...Let me try.. I don't expect anything from her.. I'm well settled with satisfaction..

If possible, please help me to get her geniune email ID and contact number.. Thanks a lot for your help..

Regards,
Vetrinilavan.M
Quote
 
 
+3 #123 Kalaiselvan 2011-06-01 20:43
ஜனநாயகத்தை காக்கவேண்டிய பத்திரிகைகள் வணிகமாகிவிட்டன . விளைவு தவறான அல்லது திரிக்கப்படும் செய்திகளே மக்களை போய் சேருகின்றன. ஈழத்தமிழர் பிரச்சனயில் தினமலர் இன்றுவரை உண்மையை மறைத்தே செய்திகளை வெளியிடுகிறது. என் எண்ணவோட்டங்களில ் இருந்ததை அப்படியே கட்டுரையில் படித்தேன். # இது அற்புதமான உலகம். நமது ஜனநாயகத்தை, நமது குழந்தைகளுக்கு பத்திரமாக விட்டுச் செல்லும் பொறுப்பு நமக்கு உண்டு.// பாராட்டப்பட வேண்டிய முயற்சி. வாழ்த்துக்கள்.
Quote
 
 
+1 #122 che 2011-06-01 18:31
சவுக்கு இத்தனை நாளாக படிப்பதற்க்கு மட்டுமே நல்லா இருந்தது இப்பொழுது தான் பார்க்கவும் நன்ட்ராக இருக்கிறது.வாசகர்களின் வென்டுகோலை ஏற்று பின்புலத்தை வெண்மையாக மாற்றியதற்கு மிக்க நன்றி!
Quote
 
 
0 #121 balamuralikrishna 2011-05-25 22:56
Dear muthuraj wording is 100% correct,
wat is the uses of independenance?,Still we are begging with other country becoz of sonia govt.
Quote
 
 
-2 #120 தோழன் மபா 2011-05-12 18:11
சற்று மேம்போக்கான பொத்தாம் பொதுவான கட்டுரை. // நான் ஸ்டாலினுக்கு போட்டியா ? அழகிரி அதிர்ச்சிப் பேட்டி“ அல்லது “பள்ளி மாணவிகளிடம் உலவும் செக்ஸ் வீடியோ“, “டேட்டிங் செய்யும் இளசுகள் – ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்“, “பெருகி வரும் கள்ள உறவுகள்““ // போன்ற லெவலில்தான் இந்த கட்டுரையும் இருக்கிறது.

எல்லா பத்திரிகையும் கருணாநிதிக்கு சாமரம் வீசுவதில்லை. எப்போதும் வீசிக் கொண்டும் இருக்க முடியாது. ஒரு பத்திரிகையாளன் என்ற முறையில் இதை தெரிவிக்க நான் கடமைபட்டுள்ளேன் .

ஏதோ... எல்லாவற்றிருக்க ும் கருணாநிதிதான் காரணம் என்பதுபோல் கட்டுரை சித்தரிக்கப்பட் டுள்ளது. ஒரு கட்டுரையை படிக்கும் போதே... நமக்கு கட்டுரையாளரின் மனநிலை புரிதுவிடும். விருப்பு வெறுப்பு இல்லாமல் யாரும் கட்டுரை எழுதுவதில்லை.

கருணாதியை தாக்கி எழுத வேண்டும் என்ற முகாந்திரம்தான் இந்த கட்டுரையில் அதிகம் காணப்படுகிறது.
-தோழன் மபா
தமிழன் வீதி
Quote
 
 
+1 #119 AYYANPUSHPARAJ 2011-05-07 19:48
VERY NICE AND INTRESTING
Quote
 
 
+2 #118 BS Manian 2011-04-28 20:14
:D VERY NICE TO READ
Quote
 
 
+4 #117 vivek 2011-04-24 18:02
nice :-)
Quote
 
 
-1 #116 SENTHAMIL 2011-04-22 17:19
All the Best......We Except more about Indian Politics......... This Article is Most Excellent......Keep Going..........We are always You........Truth Never Fail......
Quote
 
 
-1 #115 suriyaa 2011-04-16 16:15
நான் ஓரிரு மாதமாக சவுக்கு படித்து வருகிறேன் .ஜனநாயகத்தை காக்க வாருங்கள் கட்டுரையில் இந்துராமின் தி.மு .க.சார்பு நிலைக்கு இன்னொரு காரணம் தயாநிதி மாறனுக்கு தனது சகோதரி மகளை திருமணம் செய்து கொடுத்துள்ளார் .தினமலர் கருணாநிதிக்கு ஜால்ரா போட காரணம்.. மாறன் சகோதரர்களின் தனிநபர் விமர்சனத்தில் இருந்து தங்களை காத்து கொள்ளவே...இப்போது தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன் இலங்கை பிரச்சனையில் கருணாநிதியின் முகமுடியை அகற்றி செய்தி வெளி இட்டுள்ளதை குறிப்பிடலாம்.
சூர்யா
Quote
 
 
+2 #114 s.jayasankaran 2011-04-01 23:04
very good information from all the things
Quote
 
 
0 #113 Guruprasath 2011-03-29 17:04
Unmai Nilai...

Therinthu Kolla Vendiyathu Oovaruvarini Kadamai, Kattayam...

Thodarungal Payanam...

Naanum Varugirean...
Quote
 
 
+1 #112 Kovai - Muthukumar 2011-03-17 14:31
Savuku pathrikaiyin pani siraka valthukiren.
Quote
 
 
-4 #111 NADARAJAN 2011-03-13 18:51
savukku maddum nadunelai mattrathallam ondrum illai endru solgirai unnai bathaviyai barithu vittathal nee kalngarai mattam thattugirai illai endral neeium duthi baduvai barkalam admk aathci vanthal nee avarkalin thavarugalai suttikattugiray a endru appothu un nadu neelai thariyum
Quote
 
 
+5 #110 subaash 2011-03-10 13:36
சவுக்கு அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
வளர்க உங்கள் பணி..
மிகவும் சிறப்பான படைப்புகளில் இதுவும் ஒன்று.
சொடுக்குங்கள்..
Quote
 
 
-3 #109 kumuthiny 2011-03-04 13:27
Mele ulla paththirikaikal il ethaavathu onrai vaara adippadaiyil purakkaniyunkal . unkal panamum michchamaakum, ivarkalin koddamum adankum.
Quote
 
 
+1 #108 Thileeban Thambi Suresh 2011-03-04 02:06
we will stand with savukku..,go ahead.., yes.., onward upward..,
Quote
 
 
+8 #107 ramalingamn 2011-02-19 17:32
கருணாநிதியின் அடுத்த யோசனை எப்படி இணையத்தை தன் கைக்குள் கொண்டு வருவது என்பதாக்த்தான் இருக்கும்.
Quote
 
 
+1 #106 singaitamilan 2011-02-18 21:17
Dear All fellow readers, pls spend some time to go and see the Video clips. How Indian Politicians corrupt or nation so far. pls send this link to all of your friend and relatives.

http://www.truthaboutindiacorruption.org/
Quote
 
 
+1 #105 thanthonri 2011-02-16 21:03
very good service to younger generation they alone can save democracy in india iam the son of a freedom fighter
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 41 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday1610
mod_vvisit_counterYesterday10391
mod_vvisit_counterThis week1610
mod_vvisit_counterLast week80132
mod_vvisit_counterThis month204342
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12726461