முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
ஜாபர் சேட் மீண்டும் உளவுத்துறை கூடுதல் டிஜிபியானார். அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 20
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
வியாழக்கிழமை, 09 ஜூன் 2011 11:50


 என்ன வாசகர்களே…. அதிர்ச்சியாக இருக்கிறதா ?   ஜாபர் சேட், மீண்டும் உளவுத்துறை கூடுதல் டிஜிபியாக இருந்தார். தற்போது, உளவுத்துறையின் டிஜிபியாக இருக்கும், ராமானுஜம், காத்திருப்போர் பட்டியலில் வைக்கப் பட்டுள்ளார். உளவுத்துறையின் கூடுதல் டிஜிபியாக இருக்கும், கண்ணாயிரம், சென்னை மாநகர காவல்துறை ஆணையாளராக நியமிக்கப் பட்டுள்ளார்.

RMK_1691_copy

இப்படிப் பட்ட செய்திகளை செய்தித் தாளில் பார்த்தால் அதிர்ச்சியடையாதீர்கள்.   இதெல்லாம் இந்த அரசாங்கத்தில் நடந்தால் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றுமே இல்லை.

 

அப்படித்தான் இந்த அரசாங்கம் நடந்து கொண்டிருக்கிறது. திமுக ஆட்சியை வீழ்த்த வேண்டும் என்பதற்காக, சவுக்கு உட்பட, பல்வேறு பத்திரிக்கையாளர்கள், நாடு நன்றாக இருக்க வேண்டும் என்று விரும்புவோர் என ஆயிரக்கணக்கானோர் உழைத்தனர். இவ்வாறு உழைத்தவர்களுக்கு, சென்னை மாநகர மேயராக வேண்டும் என்பதோ, விருப்புரிமை ஒதுக்கீட்டில் வீட்டு மனை பெற வேண்டும் என்பதோ விருப்பம் கிடையாது.   அவர்கள் அனைவருக்கும், நாடு நன்றாக இருக்க வேண்டும், தீமை ஒழிக்கப் பட வேண்டும், மக்களுக்கு நன்மை கிடைக்க வேண்டும், தவறு செய்தவர்கள் தண்டிக்கப் பட வேண்டும் என்பது மட்டுமே விருப்பம். வேறு ஒன்றுமே கிடையாது.

 

ஆனால், இந்த ஆட்சியில் பெரும்பாலான விஷயங்கள் இது வரை நன்றாக நடந்தாலும், குடத்துப் பாலில் துளி விஷம் போல சில விஷயங்கள் அரங்கேறிக்கொண்டு தான் இருக்கின்றன.

 

முதல் விஷயமாக, சவுக்கு பார்த்தது உளவுத்துறை கூடுதல் டிஜிபியாக கண்ணாயிரத்தை நியமித்தது. இது தொடர்பாக, கண்ணாயிரம், யார், அவரை நியமித்ததில் என்ன தவறு என்று சவுக்கு காதாயிரம் ஆன கண்ணாயிரம் என்ற கட்டுரையில் விரிவாகவே விளக்கியிருக்கிறது.

 

RAJENDRAN

ஆட்சி மாறிவிட்டது என்பதற்காக, இந்த அதிகாரிகளைத் தான் நியமிக்க வேண்டும் என்று ஒன்றும் கட்டாயம் இல்லைதான்.   அது அரசின் உரிமை. ஆனால், கடந்த ஆட்சியில், செல்வாக்கோடு இருந்த அதிகாரிகளுக்கு நல்ல பதவி கொடுக்கக் கூடாது என்று சொல்லவில்லை. கடந்த ஆட்சியில் சட்டவிரோத செயல்களுக்கு துணை போன அதிகாரிகளுக்கு நல்ல பதவி கொடுப்பது எப்படி சரியாக இருக்கும் என்பதே நமது கேள்வி….

 

கூடுதல் டிஜிபி ராதாகிருஷ்ணன் பற்றி எழுதுகையில், அவர் பெயரோடு நாயுடு என்பதை சேர்த்து எழுதியதற்கு, சவுக்கின் வாசகர்கள் பலர் அன்போடு கடிந்து கொண்டிருந்தார்கள்.   வாசகர்கள் ஒரு விஷயத்தை நன்றாக கவனத்தில் கொள்ள வேண்டும். நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும், இந்த சமூகத்தில் சாதி என்பது தவிர்க்க முடியாத ஒரு அம்சமாக இருக்கிறது. அதுவும், காவல்துறையில் நடக்கும் அரசியலில், இந்த சாதி ஒரு முக்கிய அம்சம்.   பல காவல்துறை அதிகாரிகளைப் பற்றி சவுக்கு எழுதினாலும், ஒரு சில குறிப்பிட்ட அதிகாரிகளைப் பற்றி எழுதுகையில் மட்டும் தான் சாதியை குறிப்பிடுகிறது என்பதை கவனித்துப் பார்க்க வேண்டும்.   சரி, சாதியைப் பற்றி எழுதக் கூடாது என்றால், கண்ணாயிரத்துக்கு இந்தப் பதவியை பெற்றுத் தந்தது எது என்பதை யோசித்துப் பாருங்கள்.     ராதாகிருஷ்ணன் என்பவர், நாயுடு லாபியை பலமாக பயன்படுத்துபவர். இந்த லாபியை பயன்படுத்தி, தொழில் அதிபர்கள், ஐஏஎஸ் அதிகாரிகள், என்று ஒரு பெரிய நெட்வொர்க்கையே வைத்திருக்கிறார் தெரியுமா ? அதனால் தான் அவர் பெயரோடு சாதிப் பெயர் சேர்க்கப் படுகிறது.

 radhakrishnan

இந்த ராதாகிருஷ்ணன், சென்னை உயர்நீதிமன்ற டிவிஷன் பென்ச்சால், நீதிமன்ற அவமதிப்பு குற்றத்தை புரிந்துள்ளார் என்று கண்டறியப்பட்டு, அந்த விசாரணையை சந்திக்க வேண்டியவர். உச்சநீதிமன்ற தடை உத்தரவால், இந்த வழக்கில் மேற்கொண்டு, முன்னேற்றம் இல்லாமல் இருக்கிறது.

 

இது தவிரவும், கடந்த ஆட்சியின் ஆட்சியாளர்கள் சொன்னவற்றுக்கொல்லாம் தலையாட்டி, தேவையான காரியங்களை செய்து கொடுத்தவர்.   இந்த ஆட்சி வந்ததும், இவர், மின் வாரிய விஜிலென்ஸ் அதிகாரியாக நியமிக்கப் பட்டார். அப்போது உண்மையில் சவுக்கு மகிழ்ந்தது. ஏனென்றால், ராதாகிருஷ்ணனின் நடவடிக்கைகள் சவுக்குக்கு நன்கு தெரியும்.   அதிகாரமும், ஏவலாட்களும் இல்லாவிட்டால், ராதாகிருஷ்ணன் செத்து விடுவார். அதிகாரமும், வெட்டி பந்தாவும் தான் ராதாகிருஷ்ணனின் மூச்சு.

 

ஆனால் மின் வாரியத்தில் நியிமிக்கப் பட்ட ஒரே வாரத்திற்குள் ராதாகிருஷ்ணனை உணவுக் கடத்தல் தடுப்புப் பிரிவு கூடுதல் டிஜிபியாக நியமித்திருக்கிறது இந்த அரசு. இது மிக மிக வேதனையான ஒரு விஷயம்.

 

இதே போல மற்றொரு நியமனம், ஸ்நேக் பாபு என்று அழைக்கப் படும், சைலேந்திரபாபுவுக்கானது.   செம்மொழி மாநாடு நடந்த சமயத்தில், கோவை மாநகர ஆணையாளராக இருந்த ஸ்நேக் பாபு, ஏறக்குறைய செம்மொழி சொம்பாகவே மாறிப் போனார்.

 Sylendra-Babu-Handling-Python-5

இந்த ஆட்சியில், வடக்கு மண்டல ஐஜி என்ற அதிகாரமிக்க பதவி அவருக்கு பரிசாக வழங்கப் பட்டிருக்கிறது.

இந்த நேரத்தில், கடந்த ஆட்சியால் பழிவாங்கப் பட்ட எஸ்.கே.உபாத்யாய் என்பவரை நினைத்துப் பார்க்க வேண்டியிருக்கிறது. உபாத்யாய் தொலைபேசி ஒட்டுக் கேட்பு வழக்கில் சிக்கியவர். அவர் மீதான குற்றச் சாட்டு, தனக்கு வந்த தொலைபேசி உரையாடல்களை பதிவு செய்து வைத்தார் என்பது. எந்த உரையாடலை அவர் பதிவு செய்து வைத்தார் ?

 

முன்னாள் தலைமைச் செயலாளர் திரிபாதி என்பவர், இப்போது முதலமைச்சராக உள்ள செல்வி.ஜெயலலிதா மீது, கொடநாடு எஸ்டேட் வாங்கியது தொடர்பாக ஒரு புதிய ஊழல் வழக்கை பதியச் சொல்கிறார். உபாத்யாய், சார், அதற்கு ஆதாரங்கள் இல்லை என்று குறிப்பிடுகிறார். ஆனால், திரிபாதி, இல்லை, இல்லை, நீங்கள் நான் சொன்னது போல் செய்தீர்கள் என்றால் ஆதாரங்கள் கிடைக்கும். அதனால் அது போலச் செய்து வழக்கு பதிவு செய்யுங்கள் என்று கூறுகிறார்.

 

உபாத்யாய் என்பவரை சவுக்குக்கு 1991 முதல் தெரியும்.   அவர் எஸ்.பியாக இருந்த போது, அவர் கையால் தான் சவுக்கு வேலை நியமன ஆணையை பெற்றது.   அப்போது உபாத்யாய், சவுக்கை அழைத்துச் சென்ற கண்காணிப்பாளரிடம் கேட்ட கேள்வி, “இந்த இளைஞனின் வாழ்வை ஒரு குமாஸ்தாவாக வீணடிக்கலாமா ?” என்று கேட்டார். அந்த கண்காணிப்பாளர், சார், இங்கிருந்து கொண்டே, தபால் மூலம் படிக்க இவருக்கு வாய்ப்பு இருக்கிறது, படித்து விட்டு, வேறு வேலைக்குச் செல்லலாம், ஆனால், இப்போது இவரது குடும்பம் இவர் வேலையை நம்பித்தான் இருக்கிறது என்று கூறினார்.   ஒரு 16 வயது இளைஞன், குமாஸ்தாவாக தனது வாழ்வை வீணடித்து விடக்கூடாது என்று அக்கறை கொண்டவர். உபாத்யாய் மிக மிக எளிமையான மனிதர்.   அரசின் ரகசிய நிதியிலிருந்து 10 ரூபாயை எடுக்க மாட்டார். 1991ல், அவர் எஸ்பியாக இருந்த போது, மதிய உணவாக, அண்ணா சாலையில் உள்ள மெக்ரென்னெட் பேக்கரியில் ஒரு சால்ட் ப்ரேட் வாங்கி வரச் சொல்வார். அந்த பத்து ரூபாயை தனது பாக்கெட்டிலிருந்து தான் எடுத்துக் கொடுப்பார். அவர் மட்டும் ரகசிய நிதியை தொடாமல் இருந்தது இல்லை. அவர் இருக்கும் வரை, மற்றவர்களையும், வீண் செலவு செய்யாமல் பார்த்துக் கொள்வார்.

 UPADHYAY

லஞ்ச ஒழிப்புத் துறையில் ஒரு வழக்கம் உண்டு.   நிதி ஆண்டு இறுதியில், மீதம் உள்ள ரகசிய நிதியை, மொத்தமாக எடுத்து, அனைவரும் பங்கு போட்டுக் கொள்வார்கள், அல்லது, அனைவருக்கும் பிரியாணி விருந்து கொடுப்பார்கள். ஆனால் 2007ல் உபாத்யாய் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு இயக்குநராக வந்ததும், அந்த பிரியாணி விருந்து கொடுப்பதை ஒழித்தார். ஆண்டு இறுதியில் மீதமாகும் ரகசிய நிதியை, அரசிடம் ஒப்பளிப்புச் செய்வார்.

 

உபாத்யாயைப் பற்றி, ஒரு டிஎஸ்பி சொன்ன தகவல், உபாத்யாய் மீதான மரியாதையை பல மடங்கு உயர்த்தியது.   உபாத்யாய் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு வருவதற்கு முன்பு, மதுவிலக்குத் துறையின் கூடுதல் டிஜிபியாக இருந்தார். அப்போது இவருக்கு உடல் நிலை சரியில்லாததால், சென்னை அரசு மருத்துவமனையில், ஜெனரல் வார்டில் அட்மிட் ஆகி படுத்திருந்திருக்கிறார். வேறு ஒரு விசாரணைக்காக அங்கே சென்ற ஒரு டிஎஸ்பி, இவரை ஜெனரல் வார்டில் பார்த்து அதிர்ந்து போய், “சார் என்ன சார் இது ? உடனே அப்போல்லோவுக்கு போகலாம், ஆம்புலன்சை வரச் சொல்கிறேன்“ என்று கூறியிருக்கிறார். உபாத்யாய் அதற்கு மறுத்ததும், பிறகு, அந்த மருத்துவமனையின் டீனிடம் சொல்லி, அரசுப் பொது மருத்துவமனையிலேயே, விஐபி வார்டில் உபாத்யாயை அனுமதித்திருக்கிறார்கள்.

 

1991 முதல், 2008 வரை உபாத்யாய் துளி கூட நேர்மை தவறாமல், அப்படியே இருந்ததைப் பார்த்து சவுக்குக்கு வியப்பான வியப்பு.

RMK_1687_copy

அந்த அதிகாரியை கருணாநிதி அரசு, தொலைபேசி உரையாடலை பதிவு செய்து வைத்திருந்தார் என்ற குற்றத்தை சுமத்தி சஸ்பென்ட் செய்தது. பிறகு சில காலம் கழித்து போக்குவரத்துக் கழக விஜிலேன்ஸ் அதிகாரி என்ற உப்பு சப்பில்லாத பதவிக்கு நியமித்தது.   இவர் மீது துறை நடவடிக்கை எடுக்கப் பட்டது.   இவருக்கு டிஜிபி பதவி உயர்வு மறுக்கப் பட்டது. இவர் லத்திக்கா சரணை விட பணியில் மூத்தவர் என்பது குறிப்பிடத் தகுந்தது. இவர் மீதான துறை நடவடிக்கை நடத்திய விசாரணை அதிகாரி, உபாத்யாய் மீதான குற்றச் சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்று அறிக்கை அளித்தார். ஆனால் அப்போது உள்துறைச் செயலாளரகவும், தலைமைச் செயலாளராகவும் இருந்த மாலதி, இறுதி வரை உபாத்யாய்க்கு டிஜிபி பதவி உயர்வு வழங்கவில்லை.

 

கடந்த ஆட்சியில் தான் இப்படி என்றால், இந்த ஆட்சியிலும் உபாத்யாய் அவர்களுக்கு ஒரு மாதம் ஆகியும் பதவி உயர்வும் வழங்கவில்லை, வேறு நல்ல பதவிகளும் வழங்கப் படவில்லை.

 

திமுக அரசால், ராதாகிருஷ்ண நாயுடு மற்றும் மாலதியின் சதியால் பழிவாங்கப் பட்ட மற்றொரு அதிகாரி ஏ.கே.விஸ்வநாதன்.   இவருக்கு சிக்கல் உருவாகியதே, ராதாகிருஷ்ணனைப் பற்றிய உண்மைகளை எடுத்துக் கூறியதால் தான்.   உயர்நீதிமற் வழக்கறிஞர் காவல்துறையினர் மோதல் விவகாரத்தில் அப்போது கூடுதல் ஆணையராக இருந்த விஸ்வநாதன், வேண்டாம் என்று தடுத்தும், ஆணையர் ராதாகிருஷ்ணன் தடியடி நடத்த உத்தரவிட்டார் என்று உயர்நீதிமன்றத்தில் அபிடவிட் தாக்கல் செய்த காரணத்தாலேயே அவர் பழிவாங்கப் பட்டார்.

 a_k_viswanathan

அவர் கடந்த ஆட்சி காலத்தில் தமிழ்நாடு நியூஸ் பிரின்ட் நிறுவனத்தின் விஜிலென்ஸ் அதிகாரியாக நியமிக்கப் பட்டார். இவருக்கும் இன்று வரை நல்ல பதவி வழங்கப் படவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

 

கண்ணாயிரம் போன்ற அதிகாரிகள் நல்ல பதவிக்கு வருவதன் ஆபத்து என்ன தெரியுமா ? கடந்த வாரம், பழைய டிஜிபி லத்திக்கா சரணிடம் தொலைபேசியில் பேசிய கண்ணாயிரம், மே 13 அன்று விடுப்பு முடித்து வந்து பணியில் சேருங்கள். உங்களுக்கு நல்ல பதவி வாங்கித் தருவது எனது பொறுப்பு என்று கூறியிருக்கிறார்.

 DN_07-10-09_E1_09_03_CNI_thumb1

இது மட்டும் அல்ல…. மகள் திருமணத்திற்காக, சிபிஐயின் குற்றவாளியிடமிருந்து சலுகை பெற்றார் என்று சவுக்கில் படித்தீர்கள் நினைவிருக்கிறதா ? டிஜிபி போலாநாத். அவரை தீயணைப்புத் துறையின் இயக்குநராக நியமித்தது அதிமுக அரசு.   போலாநாத்துக்கு, அந்தப் பதவியில் உட்கார பிடிக்கவில்லையாம்.   அதை மிக கேவலமான பதவி என்று கருதுகிறாராம்.   அதனால், ஜெயலலிதா யார் சொன்னால் கேட்பார் என்று, ஜெயலலிதா கேட்கும் ஒரு நபரை பிடித்திருக்கிறார். இதையடுத்து, அடுத்த வாரம், போலாநாத் வேறு பதவிக்கு நியமிக்கப் படுவதற்கான சாத்தியங்கள் அதிகப் பட்டிருக்கின்றன.

 

கண்ணாயிரத்துக்கு நல்ல பதவி கிடைத்து விட்டது. நாயுடுவுக்கும் நல்ல பதவி கிடைத்து விட்டது. அடுத்து யார் ? ஜாபர் சேட் தானே… அவர் மட்டும் பாவம் ஏன் ராமநாதபுரத்தில் வாட வேண்டும். அவரையும் சென்னைக்கு கொண்டு வந்து உளவுத்துறையிலேயே, உளவுத்துறை ஏடிஜிபி 2 என்று போட்டு விடுங்கள்.   ஆனால், ராமானுஜம் இவர்கள் இருவருக்கும் இடைஞ்சலாக இருப்பார். உண்மையை பேசுவார். அதனால் அவரை மாற்றி விடுங்கள்.

 

மீண்டும் கருணாநிதி ஆட்சி வந்த ஒரு உணர்வு ஏற்படட்டும்.


 

Comments  

 
0 #53 Madan 2011-06-13 18:00
It is the fate of Tamils to be ruled by shadow chief ministers. If it was Rajathi Amma and other family members during MK's regime, now it's Sasi Amma and her mafia in JJ's regime.

Tamilannukku Vidivu Kalamey Illai! Ayyavin Kudumbamum, Ammavin mafia kumbalum aalum varai, Tamilagam Irunda Tamilagamagave irrukkum!
Quote
 
 
+2 #52 RGK 2011-06-11 23:54
பொறுத்திருந்து பார்போம்.
Quote
 
 
0 #51 KD 2011-06-11 19:10
savukku sir, police constable is better than the senior police officers. I found a statue inside DGP office campus opposite to Gandhi statue, a computer police officers are standing in various angle in ugly type. This was exposes the senior police officer (i.e., your five men army (Raj, Jaf, Radh, Sunil, Lathika). This statue is honored during commemoration parade day only after that nobody will care.
Quote
 
 
0 #50 ragulvel 2011-06-11 18:37
வனக்கம்
sir
ex governemnt police department caste problem naicker community police, Inspector, Assistant Commissioner ,SP Naicker community wise Sangam Trichy City Really your complient original Thanks for Savukku

Next Really Super ADGP Vigilence Honest person , All Police Department Police Jay Government Very good work quickly
Quote
 
 
+1 #49 T G Ramamurthy 2011-06-11 13:14
யாரை எங்கே வைப்பது் என்று யாருக்கு்ம் தெரியல்லே
அட அண்டங்காக்கைக்க ு்ம் குயில்களுக்கு்் ம் பேதம் தெரியல்லே
பெய்ரெடுத்து உண்மை யை சொல்லி பிழைக்கமுடியல்ல
இப்பொ பேடிககளுக்கும் ஊதுபட்திக்கும் பேதம் தெரியல்லே
Quote
 
 
0 #48 ksvenggadaraman 2011-06-11 11:14
true&guilty officers
Quote
 
 
+1 #47 INNOCENT 2011-06-10 21:54
HEARTY SALUTE TO MR.UPDHAYAY SIR. POLICE DEPARTMENT MISS YOU. WISH YOU ALL THE BEST FOR YOUR FUTURE AND VERY VERY SORRY FOR YOUR PAST. EVERY MAN HAS BAD TIME. BUT WE PARY FOR YOU SIR. EXPECTING YOUR COME BACK. WE LOVE YOU SIR
Quote
 
 
0 #46 mandapam viswanathan 2011-06-10 21:29
வணக்கம்.விலுப்புரம் மாவட்டட்தில்
Quote
 
 
0 #45 Covai Murugan 2011-06-10 18:08
சங்கர் சார்! கவலை பட வேண்டாம் ! சவுக்கின் பிடியாக நாங்கள் இருக்கிறோம் ...உங்களை இதற்கு முன் நான் பார்த்தது கூட கிடையாது ..ஆனால் என் தந்தையின் மீதுள்ள மதிப்பை நான் உங்களிடம் வைத்துள்ளேன் ..எதற்கும் அஞ்சாமல் சவுக்கை சுழட்டுங்கள்...உங்களின் அரணாக நாங்கள் இருப்போம் :roll:
Quote
 
 
+2 #44 sgthiyagu 2011-06-10 17:56
ஒரு பானை சோற்றில் ஒருரிரு கல்லை பார்த்து விட்டு அய்யோ குய்யோ என சவுக்கு கத்துவது... சிரிப்பை வரவழைக்கிறது. ஒரு பானை முழுதும் கல்லை வைத்த கருனாநிதி உங்களுக்கு இன்னும் ரிறிது நாட்களிலேயே நல்லவர் ஆகி விடுவார்.... சவுக்கு உங்களுக்கு அதுக்குள்ளையே மாற்றம் வந்து விட்டதே...
Quote
 
 
+6 #43 jagan 2011-06-10 11:38
நம்பிகைஉடன் இருப்போம் தோழரே. கவலை வேண்டாம். அப்படி நடந்தால் மீண்டும் உங்கள் சவுக்கு சுழலட்டும் - இன்னும் தீவிரமாக, எங்கள் துணையுடன்.
Quote
 
 
+1 #42 Vijay US 2011-06-10 05:03
திரு. சங்கர் அவர்களே,

இந்த மாதிரி முக்கியமான கட்டுரைகளை முதல்வர் படித்தால் நன்றாக இருக்கும்....எப்படி இந்த விஷயங்களை அவரிடம் எடுத்து செல்வது...
சிலர் கூறலாம்...முதல்வருக்கு எல்லாம் தெரியுமென....ஆனால் நாம் நல்லதையே நினைப்போம்...
Quote
 
 
-1 #41 புலிப்பாணி சித்தர் 2011-06-10 00:21
தன்னந்தனியே பிறந்தவன் நெஞ்சில் சஞ்சலம் இல்லையடா
இன்னொரு உயிரை தன்னுடன் சேர்த்தால் என்றும் தொல்லையடா
இத்தனை சிறிய மனிதனின் தலையில் எத்தனை சுமைகளடா
இருபதில் தொடங்கி எழுபது வரைக்கும் என்றும் மயக்கமடா

படைத்தானே படைத்தானே மனிதனை ஆண்டவன் படைத்தானே
Quote
 
 
0 #40 visuvasi 2011-06-10 00:10
எந்த முதலாலியும் விசுவாசமான நாய் வேன்டும் என்ருதான் எதிர் பார்பார்கல் நம் புதிய முதல்வர் எதிர் பார்பில் தப்பு ஒன்ட்ரும் இல்லை
Quote
 
 
+1 #39 Kumar123 2011-06-09 23:26
http://www.kumudam.com/magazine/Kumudam/2011-06-15/pg37.php

அதுசரி பத்திரிகை, போலீஸ் நியமனங்களில் சில முணுமுணுப்புகள் கேட்கிறதே...’’ என்றார் சாமி.

“அது சல்லி வேர்களின் சலசலப்பு. ஆணிவேரைக் கண்டுபிடிக்கச் சொல்லி அம்மா ஆணையிட்டிருக்கி றாராம். எல்லாம் விரைவில் சரியாகிவிடும்’’ என்ற பத்திரிகை, “மொழி’யின் இடத்தை இட்டு நிரப்பும் பணியில் இப்போது ‘விழி’ ஈடுபட்டிருக்கிற ாராம். யோசித்தால் புரியும்! அப்படியும் புரியாவிட்டால் அடுத்த சந்திப்பில் சொல்கிறேன்!’’ என்று கிளம்பினார்..
--பெட்டிசாமி
Quote
 
 
+1 #38 Jeyaraj 2011-06-09 23:06
சவுக்கு இக்கட்டுரையை நான் கன்டிக்கிரேன். சைலென்ட்ர பாபு அவர்கல் கட்சி சாரா நல்ல அதிகாரி.
Quote
 
 
+17 #37 tamilindian 2011-06-09 22:50
சவுக்கிடம் உரிமையுடன் ஒரு கேள்வி.. தமிழின துரோகி கருணாநிதி மற்றும் அவர் குடும்பத்தின் ஊழலை எதிர்த்தும் எழுதியும் வந்தீர்கள் வருகிறீர்கள் அதற்க்கு எனது நெஞ்சார்ந்த nandrigalayum வாழ்த்துக்களையு ம் பதிவு செய்து கொள்கிறேன். உம்மை போல் சிறு சிறு வைர உளிகள் ஒருசேர்ந்து கருணாநிதியின் ஆட்சியை அப்புற படுத்த முக்கிய காரணமாக இருந்தீர்கள் என்பது மகிழ்ச்சியான விடயம்.. அனால் காங்கிரஸ் தமிழினத்தின் நிரந்தர எதிரி அல்லவா? கருணாநிதியை சாய்த்த பிறகு கூட ஏன் காங்கிரஸ் பற்றி எந்த எதிர்ப்பையும் பதிவு செய்ய மறுக்கிறீர்கள்? நாம் இரு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு அமைப்புள்ள நாட்டில் இருக்கிறோம். தமிழினத்திற்கு துரோகம் இழைத்த கருணாநிதி ஆட்சியை அப்புறபடுத்தி விட்டோம் மகிழ்ச்சி, அனால் தமிழினத்தின் எதிரி இன்னும் மத்தியில் ஆட்சியில் அல்லவா இருக்கிறது? அந்த எதிரியை பற்றி எந்த கருத்தையும் எங்கள் சவுக்கு பதிவு செய்யாதது கவலை அளிக்கிறது. தமிழர் விடயத்தில் காங்கிரஸின் உண்மை முகம் அறிந்த தமிழனுக்கு காங்கிரஸ் ஆட்சி சத்தியமாக பிடிக்காது.
Quote
 
 
+6 #36 Ravi 2011-06-09 22:16
நாயுடு சமுகத்தின் நெந்ட்வொர்க்கை நான் நன்கு அறிவேன். இவர்களின் நெட்வொர்க் கட்சி வித்தியாசம் இன்றி படர்ந்து இருக்கிறது. எந்த ஆட்சி வந்தாலும் இந்த ஜாதிய ரீதியிலான நெட்வொர்க்கில் நாயுடுகாருககள் நெம்பர் ஒன் பெறுவார்கள். அது சரி. இந்த விஸ்வநாதன் மற்றும் உபாத்யாய போன்றவர்களைப் பற்றி ஜெயிடம் யாராவது சொல்லக் கூடாதா? நல்லவர்கள் மதிக்கப்படாவிட் டால் நாடு எப்படி உருப்படும்.
Quote
 
 
+1 #35 savukku rasigan 2011-06-09 21:15
சவுக்கு என்ன இது? யாரை தான் நம்புவதோ பேதை நெஞ்சம்?
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=5036:2010-03-31-10-42-43&catid=901:2009-08-16-09-44-24&Itemid=139
Quote
 
 
+5 #34 நாய் சேகர் 2011-06-09 20:56
போற போக்க பாத்தா "கருணாநிதி மீண்டும் முதல்வர் ஆனார்" என்று செய்தி வந்தால் கூட ஆச்சர்யம் இல்லை போல இருக்கு....அரசியலே ஒரு வீச்சமெடுத்த சாக்கடை..அதில் இருப்பது எல்லாம் புழுக்கள்...யப்பா கப்பு தாங்க முடியலடா சாமி...என்ன சென்ட்ரல் கவர்மெண்ட்..என்ன ஸ்டேட் கவர்மெண்ட்..?? ஐ ஹேட்..!
Quote
 
 
+10 #33 கருத்து கந்தசாமி 2011-06-09 20:45
ஒரு நல்ல பத்திரிக்கையாளன ுக்கு எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் எதிர்கட்சிதான்...இதை மனதில் கொண்டு உங்கள் பணியை எப்போதும் சிறப்பாக செய்யுங்கள்...நல்ல மாற்றம் ஒரு நாள் வந்தே தீரும்
Quote
 
 
0 #32 Kanian 2011-06-09 20:05
please read
http://www.siragu.com
Quote
 
 
+1 #31 Vanakkam 2011-06-09 19:52
அனைவருக்கும் என் இனிய மாலை வனக்கம்.
சவுக்கு நீங்கள் நினைப்பதைவிட முதல்வர் ஜெயலலிதா மிக சிறந்த நிர்வாக திறமை கொன்டவர்.. ஆதலால் உங்கள் கனிப்பு பொய்யாக வாய்ப்புள்ளது.. கடந்த ஆட்சியில் இருந்த அதிகாரிகளின் போக்கு, இந்த ஆட்சியில் நிச்சயம் பிரதிபலிக்காது.. (மேலும் திருந்துவதற்க்க ு இது ஒரு வாய்ப்பாக அமையலாம் பொருத்திருந்து பார்ப்போம்..)

ஆட்சியாளர்கள் சரியாக இருந்தால் அதிகாரிகள் சரியாகத்தான் இருக்கமுடியும் இதர்க்கு உதாரனம்....கடந்த மர்ற்றும் இந்த ஆட்சி...
Quote
 
 
+3 #30 nallavan 2011-06-09 19:47
AMMA PLEASE CONSIDER SAVUKKU'S POINTS. WE KNOW THAT HOW YOU HANDLE THIS? I AM CONFIDENT THAT THIS ISSUE WILL BE BROUGHT TO YOUR KNOWLEDGE. AMMA PLEASE PLEASE KEEP POLICE DEPARTMENT CLEAN (YOU CAN ONLY DO IT). EXPECTING GOOD RESPONSE. AMMA PLEASE CHECK IF SAVUKKU'S IS WRONG THEN YOU CAN CARRY ON YOUR ADMINISTRATION. PLEASE DONT MISTAKE US THAT WE ARE INTERFERING IN YOUR ADMINISTRATION. PLEASE PLEASE PLEASE PLEASE PLEASE PLEASE PLEASE CONSIDER SAVUKKU'S POINT. PLEASEEEEEEEEEE EEEEEEEEEEEEEEE EEEEEEEEEEEEEEE EEEEEEEEEEEEEEE EEEEEEEEEEEEEEE EEEEEEEEEE
Quote
 
 
0 #29 Suresh Raja 2011-06-09 19:14
யோவ் சவுக்கு, இப்படியா தலைப்ப போடுறது? முழுசா படிச்சு முடிக்க முந்தி ரொம்ப கஷ்டமா இருந்தது.... நல்ல மூட்ல பாட்டு படிச்சுகிட்டே சவுக்க ஓபன் பண்ணேன்.... இப்படியா ஷாக் குடுக்குறது.... நல்லா இருக்கய்யா உம் டீடெயில்....
கூத்தர் டவுசர் கழண்டது கழண்டது தான்... அது கருவாட்ட தூக்கிக்கிட்டு திரும்ப வந்தா மறுபடியும் ஆட்சி மாறும் அப்டிங்குரதுல எந்த சந்தேகமும் இல்ல... ஆனா ஆட்சி மாற்றத்துல திமுக மட்டும் வரவே வராது.. இந்தம்மா உள்ளதும் போச்சுடா நொள்ள கண்ணானு உக்கார வேண்டியது தான். அதுனால நம்பிக்கை வைப்போம்.. நல்லது நடக்கும்.
Quote
 
 
+4 #28 ஆனந்த் 2011-06-09 19:13
என்ன ஐயா செய்வது. உபாத்யாய் போன்ற நேர்மையான அதிகாரிகளுக்கு கூழை கும்பிடு போட்டோ அல்லது வேறு தகிடு தத்தங்கள் செய்தோ பதவி உயர்வு பெற தெரியாது. அதை விரும்பவும் மாட்டார்கள். நல்லதுக்கு காலமில்லை என்று சொல்வார்களே, அதை நல்லவர்களுக்கும ் என்று சேர்த்துக் கொள்ளலாம். ஆமாம் அதிருக்கட்டும். தங்களுடைய சஸ்பென்ஸன் என்ன ஆனது. அது கிணற்றில் போட்ட கல் மாதிரிதானா. இதில் ஒரு நன்மை. இந்த சவுக்கு தளம் தோன்றுவதற்கு காரணமானதுதான். சில சமயங்களில் நான் ஏடாகூடமாக கருத்திடுவது உண்டு. சும்மா தங்களை வம்பிழுத்துப் பார்க்க வேண்டும் என்ற ஆசை.
Quote
 
 
0 #27 jaya 2011-06-09 18:52
tHIS TIME COUNT DOWN WILL NOT BE SUCESSFUL i THINK.
Quote
 
 
0 #26 Iridiumcobra 2011-06-09 18:20
தொடர்..........அதனையே ஒரு 100 பேர் அனுப்பினால் அவ்வளவுதான். இது போல ஒவ்வொரு நபரும் அரசில் உள்ள துறைகளில் வேலையில் உள்ளவர்களின் செயல்பாடுகளை பற்றி கேள்வி கேட்டால், அரசு அலுவலர்களுக்கு வரும் நடுக்கத்தை வார்த்ததகளால் சொல்ல முடியாது. அண்ணா ஹசாரே அவர்கள், இந்திய இறையாண்மையின் படி மக்களே எஜமானர்கள், அதிகாரிகள் & ஆட்சியுள்ளவர்கள ் வெறும் சேவகர்கள் எஜமனர்கலாகிய பொது மக்கள் கேள்வி கேட்க மறந்து தூங்கிக்கொண்டு இருப்பதால், அனைத்து சேவகர்களும் எஜமானர்கள் போல நடந்து நாட்டின், மக்களின் சொத்தை கொள்ளை அடிக்கிராகள் எனக்கூறி உள்ளார். நாங்கள் நடத்தும் ஒரு அமைப்பின் மூலம் ஒரு சாதாரண விசயத்தை பற்றி கேள்வி எழுப்பி, தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தகவல் கொடுக்க கேட்டபோது, அந்த துறையின் மேலதிகாரிகள் பட்ட பாட்டை பார்க்க வேண்டும். இப்போது எங்களிடம் உள்ள தகவல்களில் வைத்து உயர் நீதி மன்றத்தில் ரிட் மனு போட்டால் அந்த துறையில் பெரும் மாற்றத்தை கொண்டு வர முடியும். எனவே நம்மால் என்ன முடியும் என்பதை விட்டு, உரிமையுடன் அரசை கேள்வி கேட்க வேண்டும். அரசாங்கம் சாதாரண குடிமகனின் கேள்விகளுக்கு பவ்யமாக நின்று பதில் சொல்லும் நிலையில்தான் இருக்கிறது.
Quote
 
 
+1 #25 Iridiumcobra 2011-06-09 18:19
[ஃஉஒடெ நமெ="ரம.பில்லப்பன்"]கருணானிதியைப் பிடிக்காமல் அ.தி.மு.க. கூட்டணிக்கு ஒட்டுப்போட்டவர் களில் நானும் ஒருவன்.சவுக்கு கூறுவதைப்படிக்க வருத்தமாக இருக்கிறது.வருத்தப்படத்தான ் முடியும்.வேறு என்ன செய்ய?என்னிடம் இருப்பது ஒரு ஓட்டுத் தானே![/ஃஉஒடெ]

நெறிமுறை கெட்ட அதிகாரிகள் ஊழல் ஆட்சியாளர்களுக் கு சொம்படுத்து, அடிவருடிகளாக செயல்பட்டு, வேண்டப்பட்ட பதவிகளை பெற்று, ஊழலில் ஊறி, மக்கள் பணத்தை கொள்ளை அடிப்பது உடன், நம்பிக்கையுடன் ஆட்சியாளர்களை தேர்ந்து எடுத்த மக்களுக்கு, ஆட்சியாளர்களின் துணையுடனே துரோகம் செய்யும் பொது மக்கள் வெறும் மாக்களாக இருந்து வேடிக்கை பார்த்து, வயிறு எரிவதை விட வேறு ஒன்றும் செய்ய முடியாது என்ற நிலைமையை மாற்ற முயல வேண்டும.அதை போன்ற ஒரு முயற்சியில் ஈடுபட்டு முடிந்தவரை அரசியல்வாதிகள் & அதிகாரிகளின் தவறான நடவடிக்கையை சுட்டி காட்டி தட்டி கேட்கும் செயலில் சவுக்கு ஈடுபட்டு வருகிறார். இந்த தளத்தில் சவுக்கின் பதிவுகளை படித்து வரும் நண்பர்கள் நாட்டின் மீதும், மக்களின் மீதும் உண்மையான அக்கறையுடன், சவுக்கின் செயல்களை ஆதரிப்பது நல்ல விஷயம். இதையே நாட்டின் மீது பற்று கொண்ட நபர்கள் அனைவரும் சேர்ந்து செய்யும் பொது, அந்த முயற்சியை ஒடுக்கும், தடுக்கும் தைரியம் எந்த ஊழல் நாய்க்கும் வராது. ஊழலை எதிர்த்து போராடி வரும் அன்ன ஹசாரே அவர்களின் எண்ணத்தில் நம்பிக்கை கொண்டு அவரை ஆதரிப்பவர்கள் செய்யும் செயலைக்கண்டு மத்திய அரசு நடுங்கி கொண்டு இருக்கிறது என்பதை நண்பர்கள் அறிவார்கள். தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் ஒவ்வொரு ஊழல் அதிகாரிகளையும் உண்டு இல்லை என ஆக்கி விட முடியும். உதாரணமாக தமிழகம் முழுவதும் கிராம நிர்வாக அலுவலரின் செயல்களை மட்டும் வெளிக்கொண்டு வரும் வகையில் கேள்விகளை கேட்டு ஒரு நபர் வெறும் 25௦ ருபாய் மட்டும் செலவு செய்து, வருவாய் துறை செயலாளரிடம் அனுப்பினால், பதில் தருவதற்குள் செத்து சுண்ணாம்பு ஆகி விடுவார்கள்.
Quote
 
 
+1 #24 Balu Mahendran 2011-06-09 18:15
ஆட்சியில் இருப்பவர்களை வாக்காளர்கள் நினைத்தால் தூக்கி எரிந்து விடலாம், ஆனால் ஆட்சியாளர்களுக் கு சொம்பு தூக்குபவர்களை?!?!

ஜாபர் சேட் சஸ்பென்ட் செய்யப் பட இன்னும் நான்கு நாட்களே உள்ளன என்ற உங்கள் விட்ஜெட் பாவம்.
Quote
 
 
-1 #23 J 2011-06-09 18:11
நான் இரண்டு நாட்கலுக்கு முன்னால் சொன்னதை திருப்பி சொல்கிரேன்...

"பேசாம ஸ்டாலினை துணை முதல்வர் ஆக்கிரலாம்"...

மாட்ரம் வரும்னு ஒட்டு போட்டா... நல்ல மாற்றம்...
Quote
 
 
0 #22 senthil_tcs 2011-06-09 17:49
இந்த முறை அம்மா சவுக்கை வாசிக்கிறாங்க.இதயத்தில் இருந்து கட்டளை பிறப்பிக்கிறாங் க.எல்லாம் மாறுமா?
Quote
 
 
0 #21 அம்பு, திருச்சி 2011-06-09 17:36
ஆட்சி மாற்றத்தால் மகிழ ஒன்றும் இல்லை. ஜெயலலிதா பொம்பள கருணானிதி. அதே போல் கருணானிதி ஆம்பள ஜெயலலிதா என்று நான் ஏற்கனவே ஒரு முறை பதிவு செய்துள்ளேன்
Quote
 
 
0 #20 aravindhari 2011-06-09 17:10
please give more information about india's corruption
Quote
 
 
+3 #19 வேல்மாறன் 2011-06-09 17:09
உபாத்யாய் - நேர்மைக்கு வணக்கம்.நல்ல மனிதன்,வாழ்த்து கள்.
Quote
 
 
0 #18 கபாலி கோவாலு காமரசு 2011-06-09 16:50
போற போக்கை பாத்தா அம்மா, கருணாநிதி தாத்தாவுக்கு துணை மொதல்வர் பதவிய குடுத்தாலும் குடுத்திடுவாங்க போலிருக்குங்க, நா சொல்ல்றத சொல்லிட்டன் இனி அவுங்க ஆச்சு. ஆமா
Quote
 
 
0 #17 Ganesh11 2011-06-09 16:44
Savukku,

Please mention the name of the person in ch photos in each article.
Quote
 
 
+1 #16 Gajendra Pandian 2011-06-09 16:35
என்ன சவுக்கு இதுக்கு போய் மனம் தளரலாமா பொருத்திருந்து பார்ப்போம்....
Quote
 
 
0 #15 Sivan 2011-06-09 16:23
நீங்கள் சேகரித்த ஆதாரங்களை அரசுக்கு தெரியப்படுத்தின ீர்களா?
Quote
 
 
0 #14 சாட்டைக் குச்சி 2011-06-09 14:32
According to I Exp Dayanidhi Maran's assets do not include Sun TV & Spice Jet but have a bunch of Anil Ambani group shares! :-)?? :oops: :sad: :oops:
Quote
 
 
+1 #13 Ramasamy Ilangovan 2011-06-09 14:30
We dont require new legislations nor extraordinary funds to convert Tamilnadu into an ideal state. It is enough if the rulers just pay heed to the views of patriots like SAVUKKU and sincerely endeavour to implement them. Best wishes and hearty thanks, dear Mr.Savukku. ( p.s. this is an observation of an elderly man past 70)
Quote
 
 
+6 #12 Arunkumar 2011-06-09 14:21
ஜெயலலிதா ஒரு சேலை கட்டிய கருணாநிதி என்பதை புரிந்து கொள்ளும். திமுக ஆட்சியில் ஆளும் கட்சிக்கு ஆதரவாக இவர்கள் செயல்பட்ட திறமையை கண்டு வியந்து தமக்கு ஆதரவாக வளைக்கத்தான் இந்த நடவடிக்கைகள் எல்லாம். மற்றபடி இவர்கள் மேல் ஜெயலலிதாவுக்கு எந்த வித கோபமோ பழி வாங்கும் உணர்ச்சியோ கிடயாது. ஆட்சியாளர்களுக் குத் தேவை திருட்டுத்தனம் செய்யத் தெரிந்த ஜால்ரா அடிக்கும் அதிகாரிகள் மட்டுமே.
Quote
 
 
+12 #11 ரமீஜா 2011-06-09 13:37
படிக்க சுவராசியமாக இருக்கு நம்ம காவல்துறையில் பணியாற்றும் அதிகாரிகளின் பதவிகள் பற்றிய செய்தி
Quote
 
 
+7 #10 rachinn 2011-06-09 13:28
என்னத்தை சொல்ல.என்னத்தை செய்ய...
Quote
 
 
+7 #9 சாட்டைக் குச்சி 2011-06-09 13:27
சவுக்கு, உங்கள் பெரியார்திடல் புத்தக வெளியீட்டு படங்களைப் பார்த்தேன். சவுக்கு,ஒரு அட்வைஸ்,விடுதலை ராஜேந்திரன் அவர் மனைவி சரஸ்வதி மேடம் ஆகியோருக்கு வே.பிரபாகரனை தெரிந்த அளவுக்கு உங்களுக்கு தெரியாது.இலங்கைத் தமிழர் விஷயத்தில் காலை விடும் முன் அவர்களிடம் சம்மதம் பெறவும்.கலைஞரின் உறவினர் பழைய தமிழக தலைமைச் செயலர் நாகராஜனே இவ்விஷயத்தில் விஷயம் தெரியாமல் காணாமல் போனார்.நீங்கள் உள்வீட்டு விஷயம் தெரிந்ததால் "அதிகாரிகள் நியமன விஷயங்களில்" அதிகமாக "கலாய்த்து" வம்புகளில் மாட்ட வேண்டாம்.கலைஞரின் நிழலாக இருந்தவன் "அவர் சோனியாவின் பாவாடைக்குள் புகுந்துக் கொண்டு குடும்பத்தோடு செட்டிலாகி விடலாம்" என்பது அவர் கூட இருந்து குழிப்பறித்த அட்வைஸ்.மற்றபடி "ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்" கலைஞர் மாட்டிவிடப்பட்ட ார் மாட்டிவிட்டவர்க ள்தான் "கூத்தாடிகள்"(இலங்கைத்தமிழரு ம் அடங்கும்)- கலாநிதி- அனந்தா- அதிகாரிகள் நியமனத்தில் தூய்மைவாதியாக செயல்பட்டால், நடைமுறை உள் முரண்பாடுகளை சமாளிக்க முடியாது- கூத்தாடிகளின் எண்ணங்கள் மிகச்சுலபமாக நிறைவேறிவிடும்! ..
Quote
 
 
0 #8 Kalkiyin Nandhaki 2011-06-09 13:04
pity.
Quote
 
 
+19 #7 ம.பொன்ராஜ் 2011-06-09 12:58
பாதி செத்து போன கருணாநிதி, சிறையில் இருக்கும் கனிமொழியோட போனில் பேசும்போது, சம்பந்தமே இல்லாமல் நடுவில் ஒரு இருமல் சத்தம் கேட்கும். அப்போது கருணாநிதி மீதி செத்துவிடுவார். வளர்த்த கடா மாரில் பாயப் போகிறது...!!!
Quote
 
 
+8 #6 jeeva1 2011-06-09 12:39
மாறன் சகோதரர்கள் கொலை மிரட்டல்: சிவசங்கரன் புகார்
Quote
 
 
+4 #5 jaya 2011-06-09 12:30
நல்ல கொடுமை. இப்படிதான் இருக்கவென்டும். உஙல் கனிப்பு மெத சரி. மேன்டும் திமுக ஆட்ஷி மலர்தது பொல நாம் எல்லொரும் உனர்வொம். இன்னும் அம்மா நடரஜன் பிடியில் தான் இருக்கிரர் என்பது நிருபனம் அகிரது.
Quote
 
 
+26 #4 rama.pillappan 2011-06-09 12:30
கருணானிதியைப் பிடிக்காமல் அ.தி.மு.க. கூட்டணிக்கு ஒட்டுப்போட்டவர் களில் நானும் ஒருவன்.சவுக்கு கூறுவதைப்படிக்க வருத்தமாக இருக்கிறது.வருத்தப்படத்தான ் முடியும்.வேறு என்ன செய்ய?என்னிடம் இருப்பது ஒரு ஓட்டுத் தானே!
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 105 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday4355
mod_vvisit_counterYesterday10391
mod_vvisit_counterThis week73129
mod_vvisit_counterLast week80887
mod_vvisit_counterThis month207087
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12729206