முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
பெருமையாக இருக்கிறது….. அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 76
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
வெள்ளிக்கிழமை, 10 ஜூன் 2011 10:32

எதை நினைத்து…. ?   தமிழகத்தின் முதல்வர் செல்வி.ஜெயலலிதாவை நினைத்து. தமிழ்ச் சமூகம் ஜெயலலிதாவிடத்தில், ஈழத் தமிழரின் நலனுக்காக எதையுமே எதிர்ப்பார்த்ததில்லை.   ஏனென்றால், கடந்த காலங்களின் அவரது நிலைபாடு அப்படி.   புலிகளுக்கு நேரெதிரான நிலைபாடு எடுத்ததோடு, ஈழத் தமிழர் விவகாரத்திலும், தெளிவான நிலைபாடு எதையும் எடுத்ததில்லை.

 2881301161_b3ab45afdd_b

ஈழத்தில் போர் உச்சக் கட்டத்தில் இருந்த போது, தமிழகத்தில் போர் நிறுத்தத்திற்கான போராட்டங்கள் பேஷனாகிப் போன சூழலில் ஜெயலலிதா நடத்திய உண்ணாவிரதம் கூட, அவநம்பிக்கையோடுதான் பார்க்கப் பட்டது.   2009 பாராளுமன்றத் தேர்தலில், 40 தொகுதிகளைக் கொடுங்கள், இந்திய ராணுவத்தை ஈழத்துக்கு அனுப்பி, தனி ஈழம் அமைத்துத் தருகிறேன் என்று ஜெயலலிதா தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய போது கூட, ஈழ ஆதரவாளர்கள் நம்பவில்லை.   தமிழினத் தலைவர் என்று நம்பியவருக்கு வாக்களித்தார்கள்.   அந்தத் தமிழினத் தலைவர், இனத்தைக் கொன்று அழித்தவனோடு, தமிழக எம்பிக்களை விருந்துண்ண அனுப்பினார்.   முள் வேலி முகாம்களுக்குள் மக்கள் அடைபட்டுக் கிடக்கையிலும், கடிதம் எழுதிக் கொண்டிருந்தார்.

 

தமிழக மீனவன், மாதந்தோறும் சிங்களக் காடையனால் சுட்டுக் கொல்லப் பட்டு, ஓட ஓட விரட்டப் பட்ட போதும், மக்களின் வரிப்பணத்தில் நஷ்ட ஈடு வழங்கி விட்டு, கலைஞர் டிவி நிகழ்ச்சிகளில் ஆழ்ந்து விட்டார்.

 

ஆனால், சட்டமன்றத் தேர்தலில் வென்று ஆட்சி அமைத்த முதல் கூட்டத் தொடரிலேயே, அதிமுக ஆட்சி நிறைவேற்றிய தீர்மானமானது வரலாற்றுச் சிறப்பு மிக்கது.

 

“தமிழனின் பண்பு யாருக்கும் தாழ்ந்தவனாக இருப்பதல்ல.  யாரையும் தாழ்த்துவதல்ல” என்றார் பேரறிஞர் அண்ணா.  இப்படிப்பட்ட உயரிய எண்ணத்தைக் கொண்ட தமிழர்கள் உலகெங்கும் பரவி இருக்கிறார்கள். மொழி மற்றும் கலாச்சார பாரம்பரியத்தில் ஒற்றுமையுடன் திகழும் இலங்கைத் தமிழர்களுக்கும், தமிழ்நாட்டில் வாழும் தமிழர்களுக்கும் இடையே உள்ள தொப்புள்கொடி உறவு அனைவரும் அறிந்த ஒன்றாகும்.

 

இலங்கைக்கு விடுதலை கிடைத்து விட்டாலும் அங்கு வாழும் தமிழர்கள் அவர்கள் நாட்டிலேயே இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்படுவதை எதிர்த்து இலங்கைத் தமிழர்கள் பல்லாண்டு காலமாக போராடி வந்தனர்.  இவர்களின் கோரிக்கைகளில் உள்ள நியாயத்தை உணர்ந்து, தேவையான அரசமைப்புச் சட்டத் திருத்தங்களை கொண்டு வந்து, தமிழர்கள் கவுரவத்துடனும், சம உரிமையுடனும், சுயமரியாதையுடனும் வாழ்வதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்காமல் அவர்களை முற்றிலும் ஒழித்துக்கட்ட இலங்கை அரசு நடவடிக்கை எடுத்தது.

 

1. பரவலாக குண்டுமழை பொழிந்து அப்பாவி மக்களை கொன்று குவித்தது; 
2. மனிதர்கள் வாழும் இடங்களின் மீதும், மருத்துவமனைகள் மீதும் குண்டுகளை வீசியது;
3. மனிதாபிமான முறையில் செய்ய வேண்டிய உதவிகளை செய்ய மறுத்தது;
4. உள்நாட்டில் இடம் பெயர்ந்தவர்கள் மற்றும் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று சந்தேகப்படக் கூடியவர்கள் உட்பட இந்தச் சண்டையில் பலியானவர்கள் மற்றும் எஞ்சியுள்ளவர்கள் மீது  மனித உரிமை மீறல்களை நிகழ்த்தியது;


5. இலங்கை அரசை விமர்சிப்பவர்கள் மற்றும் ஊடகங்கள் உட்பட போர்ப் பகுதிக்கு வெளியே இருப்பவர்கள் மீது மனித உரிமை மீறல்களை நிகழ்த்தியது,

 

போன்ற கடுமையான, நம்பத்தகுந்த குற்றசாட்டுக்களை உள்நாட்டுப் போரின் போது இலங்கை அரசு நிகழ்த்தியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரால் நியமனம் செய்யப்பட்ட குழு கண்டறிந்து இருக்கிறது.

எனவே, இத்தகைய போர்க் குற்றங்களை நிகழ்த்தியவர்களை போர்க் குற்றவாளிகள் என்று பிரகடனப்படுத்த ஐக்கிய நாடுகள் சபையை இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் எனவும்; தற்போது இலங்கை முகாம்களில் உள்ள தமிழர்கள் அனைவரும், தங்களது சொந்த இடங்களுக்கு திரும்பி சிங்களர்களுக்கு இணையாக கண்ணியமாக வாழ வகை செய்யும் வரையில்; அனைத்து குடியுரிமைகளையும் தமிழர்கள் பெறும் வரையில்; மற்ற நாடுகளுடன் இணைந்து இலங்கை அரசின் மீது பொருளாதாரத் தடையை விதிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை, இந்திய அரசை கேட்டுக் கொள்கிறது.”

 

இந்தத் தீர்மானத்தை ஒட்டி, ஜெயலலிதா சட்டப் பேரவையில் பேசியதும் முக்கியத்துவம் பெருகிறது.

 

இலங்கை நாட்டிற்கு பிரிட்டிஷ் அரசாங்கத்திடமிருந்து விடுதலை கிடைத்துவிட்டாலும் அங்கு வாழும் தமிழர்கள், தங்கள் சொந்த நாட்டிலேயே இரண்டாம் தர குடிமக்களாக கருதப்பட்டனர். இதனையடுத்து, தமிழர்களுக்கு எதிரான இலங்கை அரசின் அடக்குமுறைகளை எதிர்த்தும் “சுயாட்சி அந்தஸ்து”,  “தனி ஈழம்” உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு உட்பட பல்வேறு தமிழ் அமைப்புகள் 1980-களில் இருந்து தொடர்ந்து குரல் எழுப்பி போராடியதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உட்பட தமிழ்நாட்டில் உள்ள அத்தனை அரசியல் கட்சிகளும், தமிழக மக்களும், இலங்கைத் தமிழர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதிலும், அவர்களுக்கு சம உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்பதிலும் மிகுந்த விருப்பம் கொண்டிருந்தார்கள். இது மட்டுமல்லாமல், அவர்களுக்கு தங்களுடைய தார்மீக ஆதரவினையும் அளித்தனர்.

இந்தச் சூழ்நிலையில், தமிழீழம் என்ற போர்வையில் தீவிரவாதம் தலைதூக்க ஆரம்பித்து இதன் காரணமாக தமிழ்ச் சகோதரர்களே படுகொலை செய்யப்பட்ட சம்பவங்கள் எல்லாம், நடந்தேறின.  இதன் உச்சகட்டமாக இந்திய நாட்டின் பாதுகாப்பிற்கும், இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டிற்கும் ஊறு விளைவிக்கும் வகையில், முன்னாள் பாரதப் பிரதமர் திரு. ராஜீவ் காந்தி அவர்கள், விடுதலைப் புலிகள் அமைப்பினரால் 1991 ஆம் ஆண்டு தமிழ் மண்ணில் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார். இதனையடுத்து, விடுதலைப் புலிகள் அமைப்பின் மீது இருந்த அனுதாபம் கடுமையான எதிர்ப்பாக மாறிவிட்டது.

1992-ஆம் ஆண்டு நான் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த போது என்னுடைய வற்புறுத்தலின் பேரில் விடுதலைப் புலிகள் இயக்கத்தை 1967 ஆம் ஆண்டு சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் மத்திய அரசு தடை செய்து, அந்தத் தடை உத்தரவு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நீட்டிக்கப்பட்டு வருகிறது.  இது மட்டுமல்லாமல், முன்னாள் பாரதப் பிரதமர் திரு. ராஜீவ் காந்தி கொலையில் முதல் குற்றவாளி பிரபாகரனை உடனடியாக இலங்கை அரசு கைது செய்து இந்திய அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், தடை செய்யப்பட்ட இயக்கத்தைச் சார்ந்த எவரையும் இந்தியாவிற்குள் நுழைய அனுமதிக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மத்திய அரசை வலியுறுத்தி 2002-ஆம் ஆண்டு இந்தச் சட்டமன்றப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

2005-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இலங்கை அரசின் அதிபராக திரு. மஹிந்தா ராஜபக்ஷே பொறுப்பேற்றுக் கொண்டார். 2006-ஆம் ஆண்டு மே மாதத்தில் தமிழகத்திலும் துரதிர்ஷ்டவசமாக ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. மைனாரிட்டி தி.மு.க. அரசிற்கு திரு. மு. கருணாநிதி தலைமை வகித்தார்.  மத்தியிலும் தி.மு.க. அங்கம் வகிக்கும் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி 2004-முதல் நடைபெற்று வருகிறது. இந்தச் சூழ்நிலையில், இலங்கையில் அமைதியை ஏற்படுத்தும் போர்வையில் தமிழர்கள் மீதான அடக்குமுறைகளை இலங்கை அரசு கட்டவிழ்த்துவிட ஆரம்பித்தது.

2008-ஆம் ஆண்டு துவக்கத்தில் இலங்கை ராணுவத்தினர் 100 பேருக்கு அரியானா மாநிலத்தில் இந்திய ராணுவம் ரகசியமான முறையில் போர் பயிற்சி அளித்ததாகவும்; இலங்கை ராணுவத்தினருக்கு அதிநவீன ரேடார் கருவிகள் உட்பட பல்வேறு வகையான ஆயுதங்களை இந்திய அரசு வழங்கியதாகவும்; இந்திய ராணுவத்தின் மூத்த அதிகாரிகள் சிலர் இலங்கை சென்று வந்ததாகவும் அப்போது ஊடகங்களில் செய்திகள் வந்தன. அப்போது முதலமைச்சராக இருந்த திரு. கருணாநிதிக்கு இவை அனைத்தும் நன்கு தெரிந்திருக்கும். 
இந்தியாவிடமிருந்து தனக்குத் தேவையான ராணுவ உதவிகளைப் பெற்றுக் கொண்ட இலங்கை ராணுவம் 2008-ஆம் ஆண்டு இறுதியிலும், 2009-ஆம் ஆண்டு துவக்கத்திலும், இலங்கைத் தமிழர்களை கடுமையாக தாக்க ஆரம்பித்தது.   இலங்கையில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்த இலங்கை அரசை  மத்திய அரசு நிர்ப்பந்திக்க வேண்டும் என மத்திய அரசில் அங்கம் வகிக்கும் தி.மு.க. வலியுறுத்த வேண்டும் என்றும்; இதற்கு காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு செவி சாய்க்கவில்லையெனில் மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவினை தி.மு.க. விலக்கிக் கொள்ள வேண்டும் என்றும் நான் பல முறை வற்புறுத்தினேன்.  ஆனால், அப்போது மைனாரிட்டி தி.மு.க. அரசின் முதலமைச்சராக இருந்த கருணாநிதியோ, அதைச் செய்யவில்லை. மாறாக, “அனைத்துக் கட்சிக் கூட்டம்”, “சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் கூட்டம்”; “தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தீர்மானம்”, “மனிதச் சங்கிலி போராட்டம்” “பிரதமருக்கு தந்தி”; “நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா என்ற அறிவிப்பு”; “ராஜினாமா கடிதங்களை தானே பெற்றுக் கொண்டது”; “இறுதி எச்சரிக்கை என்ற அறிவிப்பு” என பல்வேறு வகையான நாடகங்கள் தான் முன்னாள் முதலமைச்சர் திரு. கருணாநிதியால் நடத்தப்பட்டன.

இவற்றின் உச்சகட்டமாக, காலை சிற்றுண்டியை வீட்டில் முடித்துவிட்டு தலைமைச் செயலகம் செல்லும் வழியில் திடீரென்று “போர் நிறுத்தம் ஏற்படும்  வரை உண்ணாவிரதம்” என்று அறிவித்து கடற்கரையில் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொள்ள ஆரம்பித்தார் முன்னாள் முதலமைச்சர் திரு. கருணாநிதி.  மதிய உணவு வேளை வந்தவுடன் நண்பகல் 12 மணி அளவில் “விடுதலைப் புலிகளுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையை இலங்கை அரசு முடித்துக் கொண்டுவிட்டது” என்ற செய்தியை ஊடகங்களுக்கு அறிவித்துவிட்டு தன்னுடைய உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டு விட்டார். இதன் மூலம் “உண்ணாவிரதம்” என்னும் அறப் போராட்டத்தை கேலிக் கூத்தாக்கிவிட்டார் முன்னாள் முதலமைச்சர். 
“போர் நிறுத்தம் ஏற்பட்டு விட்டது” என்ற முன்னாள் முதலமைச்சர் திரு. கருணாநிதியின் பேச்சைக் கேட்டு பாதுகாப்பாக பதுங்குக் குழிகளில் பதுங்கியிருந்த லட்சக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் வெளி வந்தனர்.  இவ்வாறு வெளிவந்த அப்பாவி இலங்கைத் தமிழர்கள் மீது இலங்கை ராணுவத்தினர் கொத்து கொத்தாக இடைவிடாது குண்டுகளை வீசி அவர்களை ஈவு இரக்கமின்றி படுகொலை செய்தனர். இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழர்கள் இலங்கை ராணுவ முகாம்களில் கம்பிகளால் ஆன வேலிகளுக்கு பின்னால் அடைத்து வைக்கப்பட்டதாகவும்; முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழ்ப் பெண்கள்  இலங்கை ராணுவப் படையினரின் கண் முன்னேயே பொது இடங்களில் இயற்கை உபாதைகளை கழிக்கக் கூடிய நிலைமைக்கும், குளிக்கக் கூடிய நிலைமைக்கும் ஆளாக்கப்பட்டதாகவும்; தமிழர்கள் குடியிருந்த பகுதிகளில் எல்லாம் சிங்களர்கள் குடியேறி இருப்பதாகவும் செய்திகள் வந்தன.  ஆனால், கனிமொழி உட்பட ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் இலங்கை சென்று இலங்கை அதிபர் ராஜபக்ஷேவுடன் சிரித்துப் பேசி; விருந்துண்டு; பரிசுப் பொருட்களை பெற்று சென்னை திரும்பிய நாடாளுமன்றக் குழுவோ, “இலங்கைத் தமிழர்கள் எல்லோரும் நலமாக இருக்கிறார்கள்” என்று ஒரு உண்மைக்கு மாறான தகவலை வெளியிட்டது.  உண்மை நிலை என்னவென்றால், போரினால் இடம் பெயர்ந்த தமிழர்கள் மறுவாழ்வு பெறாமல் இன்னமும் அவதிப்பட்டுக் கொண்டு தான் இருக்கிறார்கள்.

 

“போர் நிறுத்தம் ஏற்பட்டு விட்டது” என்ற உண்மைக்கு மாறான தகவலைக் கூறி இலங்கைத் தமிழர்களை இலங்கை ராணுவத்திடம் காட்டிக் கொடுத்துவிட்டார் முன்னாள் முதலமைச்சர் திரு. கருணாநிதி.  "தமிழினப் பாதுகாவலர்" என்று தன்னைத் தானே சொல்லிக் கொண்டு “தமிழினப் படுகொலை”-க்கு துணை போயிருப்பதை பார்க்கும் போது “உறவு போல் இருந்து குளவி போல் கொட்டுவது” என்னும் பழமொழி தான் நினைவிற்கு வருகிறது.

 

இவற்றை எல்லாம் நான் இங்கே சுட்டிக் காட்டுவதற்குக் காரணம் முன்னாள் முதலமைச்சரை குற்றம் சாட்ட வேண்டும்; முந்தைய மைனாரிட்டி தி.மு.க. அரசை குறை சொல்ல வேண்டும் என்பதற்காக அல்ல.  அப்பாவி இலங்கைத் தமிழர்கள் உயிர் இழப்பதற்கு முந்தைய அரசு காரணமாக அமைந்துவிட்டதே என்ற ஆற்றாமையால் தான் இவற்றை நான் இங்கே குறிப்பிடுகிறேன்.

முந்தைய மைனாரிட்டி தி.மு.க. அரசின் சுயநலப் போக்கு மற்றும் கையாலாகாத்தனம் காரணமாக பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் இலங்கை ராணுவத்தின் குண்டு மழைக்கு பலியாகி இருக்கிறார்கள்; குண்டு மழைக்கு விலக்களிக்கப்பட்ட பகுதி மற்றும் மருத்துவமனைகள் மீதெல்லாம் இலங்கை ராணுவம் குண்டுமழை பொழிந்து இருக்கிறது; மனிதாபிமான அடிப்படையில் நிவாரணப் பொருட்கள் மக்களை சென்றடைவதை இலங்கை அரசு தடுத்து நிறுத்தி இருக்கிறது; உணவு மற்றும் குடிநீர் பற்றாக்குறை காரணமாக ஏராளமான தமிழர்கள் மரணமடைந்துள்ளனர்;  மனித உரிமை மீறல்கள் நிகழ்ந்துள்ளன.


இந்தக் காரணங்களுக்காகத்தான் இந்தத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.  இங்கே பேசிய மாண்புமிகு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் திரு. சௌந்தரராஜன் அவர்கள், பொருளாதாரத் தடையைக் கொண்டு வர வேண்டுமென்ற வரிகளை விலக்கிக் கொண்டால் என்ன என்ற ஒரு கருத்தை இங்கே தெரிவித்தார்.

 

இதனால் அப்பாவித் தமிழ் மக்களும் பாதிக்கப்படுவார்களே என்ற ஒரு கருத்தைச் சொன்னார்.  இப்போதே இலங்கை அரசு யாருக்கும் பணியவில்லை.  அங்கே வாழ்கின்ற இலங்கைத் தமிழர்களுக்கு சிங்களர்களோடு அனைத்து உரிமைகளையும், குடியுரிமைகளையும் வழங்க வேண்டுமென்று இந்தியா சொன்னாலும், யார் சொன்னாலும், அவர்கள் அதை மதிக்கவில்லை.  அதனால், அவர்களை எப்படி வழிக்குக் கொண்டு வருவது, அவர்களை வழிக்குக் கொண்டு வருவதற்கு ஒரே வழி பொருளாதாரத் தடைகள்தான்.  இதுவொரு தற்காலிகமான ஒரு முறைதான்.  இந்திய அரசும், இன்னும் சில நாடுகளும் இணைந்து, இலங்கை அரசின்மீது ஒரு பொருளாதாரத் தடையைக் கொண்டு வந்தால், குறுகிய காலத்திற்குள்ளேயே நாம் சொல்வதை இலங்கை அரசு கேட்டுத்தான் ஆக வேண்டுமென்ற நிர்ப்பந்தம் ஏற்படும்.  வேறு வழியில்லை என்பதற்காகத்தான் இதைச் சேர்த்திருக்கிறோம்.

 

இந்தத் தீர்மானத்தின்மீது இங்கே கருத்துத் தெரிவித்து பேசிய இன்னும் சில மாண்புமிகு உறுப்பினர்கள் பேசுகின்றபோது, ஐ.நா. சபை ராஜபக்ஷேவை போர்க் குற்றவாளி என்று அறிவித்து விட்டதாக இங்கே தெரிவித்தார்கள்.  அப்படியில்லை.  ஐ.நா. சபையின் பொதுச் செயலாளர் திரு. பான் கீ மூன் அவர்கள் ஒரு குழுவை அமைத்து, அவர்கள் அங்கே நிகழ்த்தப்பட்ட போர்க் குற்றங்களைப் பற்றி ஒரு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுமென்று தெரிவித்தார்.  அந்தக் குழு சமர்ப்பித்த அறிக்கையில், இப்படிப்பட்ட போர்க் குற்றங்களெல்லாம் நிகழ்த்தப்பட்டதாகக் கூறப்படுகிறது; அங்கே வாழ்கின்ற தமிழ் மக்கள் மீது இத்தகைய குற்றங்களெல்லாம், கொடுமைகளெல்லாம் நிகழ்த்தப்பட்டன என்பதையெல்லாம் தெரிவித்துவிட்டு, இதனை இலங்கை அரசே விசாரிக்க வேண்டும் என்றுதான் சொல்லியிருக்கிறார்களே தவிர, இதை உறுதியும் செய்யவில்லை – ராஜபக்ஷேவோ, மற்றவர்களோ போர்க் குற்றவாளிகள் என்று ஐ.நா. சபை அறிவிக்கவும் இல்லை.  அதனால்தான் இந்தத் தீர்மானத்தில் இந்திய அரசு போர்க் குற்றம் புரிந்தவர்களை, போர்க் குற்றவாளிகள் என்று பிரகடனப்படுத்த வேண்டும், இதற்கு ஐ.நா. சபையை வலியுறுத்த வேண்டும் என்று தீர்மானம் கொண்டு வந்திருக்கிறோம்.

 

எனவே, மனிதாபிமானமற்ற முறையில் ஈவு இரக்கமின்றி பல்லாயிரக்கணக்கான இலங்கைத் தமிழர்கள் சுட்டுக் கொல்லப்படுவதற்குக் காரணமானவர்களை போர்க் குற்றவாளிகள் என்று பிரகடனப்படுத்த ஐக்கிய நாடுகள் சபையை இந்திய அரசு வற்புறுத்த வேண்டும் என்றும்; இலங்கையில் உள்ள அகதிகள் முகாம்களில்  தங்க வைக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு முழு மறுவாழ்வு அளித்து, அவர்கள் வசித்த இடங்களிலேயே அவர்களை மீண்டும் குடியமர்த்தி; சிங்களர்களுக்கு உரிய அனைத்து குடியுரிமைகளையும் தமிழர்களுக்கு இலங்கை அரசு வழங்கும் வரையில் மற்ற நாடுகளுடன் இணைந்து இலங்கை அரசு மீது பொருளாதாரத் தடையை விதிக்க வேண்டும் என்றும் மத்திய அரசை வலியுறுத்தி, அரசு சார்பில், என்னால் முன்மொழியப்பட்ட தீர்மானத்தினை இந்த மாமன்றம் ஒரு மனதாக நிறைவேற்றித் தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.”

 

ஈழத் தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாட்டையே எப்போதும் எடுத்து வரும், பாலஸ்தீன விடுதலைக்கு ஆதரவு கொடுத்து விட்டு, ஈழ விடுதலையை எதிர்க்கும் இரட்டை வேடமிடும் கட்சியான சிபிஎம் மட்டும் தான் இந்தப் பொருளாதார தடை விதிக்கும் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பொருளாதாரத் தடை என்ற வார்த்தையை மட்டும் விலக்கிக் கொள்ள வேண்டுமாம்.   அதற்கு உரிய முறையில் பதிலளித்துள்ளார் ஜெயலலிதா.   பொருளாதாரத் தடை என்றால் அப்பாவி மக்கள் பாதிக்கப் படுவார்களே என்று நீலிக் கண்ணீர் வடிக்கும் மார்க்சிஸ்ட் கட்சி, இரண்டாண்டுகளாக முள்வேலி முகாமுக்குள் இருக்கும் தமிழர்களின் நலனுக்காக ஒரு துரும்பையாவது கிள்ளிப் போட்டிருக்கிறதா ?

 

அடுத்தது, கச்சத்தீவு குறித்த தீர்மானம்.  

Resolution_on_Kachatheevu_-_Approved_by_HCM_-_8.6.2011_-_Press_Copy_Page_1

Resolution_on_Kachatheevu_-_Approved_by_HCM_-_8.6.2011_-_Press_Copy_Page_2

Resolution_on_Kachatheevu_-_Approved_by_HCM_-_8.6.2011_-_Press_Copy_Page_3

 

Resolution_on_Kachatheevu_-_Approved_by_HCM_-_8.6.2011_-_Press_Copy_Page_4

Resolution_on_Kachatheevu_-_Approved_by_HCM_-_8.6.2011_-_Press_Copy_Page_5

Resolution_on_Kachatheevu_-_Approved_by_HCM_-_8.6.2011_-_Press_Copy_Page_6

 

இந்த கச்சத் தீவை தாரை வார்க்கும் போது, பதவியில் இருந்த கருணாநிதி, இது தொடர்பாக எந்த ஒரு எதிர்ப்பையும் காட்டாமல், வாய் மூடி மவுனியாக இருந்தார். கச்சத்தீவு தொடர்பாக விவாதம் எழுந்த போதெல்லாம், ராஜபக்ஷேவின் குரலில், கச்சத்தீவில், தமிழர்களுக்கு மீன் பிடிக்க உரிமை இருக்கிறது, வலைகளை உலர்த்த உரிமை இருக்கிறது என்று வெட்டி வாதம் பேசி வந்தார். ஆனால், கச்சத்தீவு அருகில் சென்றாலே, சிங்களக் காடையனும், சீனச் செறுக்கனும் மீனவர்களை அடித்து விரட்டுகிறார்கள் என்பதுதானே உண்மை ?

 

சட்டப் பேரவையில் நிறைவேற்றப் பட்ட இந்த இரண்டாவது தீர்மானமும் மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கிறது.

 

இதையெல்லாம் விட, நேற்று, தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர மேனன் ஜெயலலிதாவைச் சந்தித்தார்.

 

Jun_09_b

அப்போது மேனனிடம் ஜெயலலிதா, ‘கடந்த ஆட்சியில் நீங்கள் எப்படி நடந்து கொண்டீர்கள் என்பத எங்களுக்குத் தெரியும்.   எனது ஆட்சியில், ஒரே ஒரு தமிழக மீனவன் சிங்களக் கடற்படையினரால் தாக்கப் பட்டால் கூட, தமிழகம் சும்மா இருக்காது.   இலங்கையோடு வர்த்தக உறவுகள் பாதிக்கப் படும் வகையில், தமிழக அரசின் அதிகாரத்திற்குட்பட்ட அனைத்து நடவடிக்கைகளையும் அதிமுக அரசு எடுக்கும்.   சிங்கள மீனவர்கள் இந்தியக் கடல் எல்லைக்குள் வந்தால், அவர்கள் கைது செய்யப் பட்டு சிறையில் அடைக்கப் படுவார்கள்.   கடந்த ஆட்சிக் காலத்தில் தமிழகத்தின் பொதுத் துறைச் செயலர் கருத்தையா பாண்டியன், வெளியுறவுத் துறைச் செயலரோடு, இலங்கை சென்ற போது, அவரை சந்திக்கக் கூட ராஜபக்ஷே மறுத்திருக்கிறார் என்றால், ஒரு அரசின் பிரதிநிதிக்கு இலங்கை அளிக்கும் மரியாதை இதுதானா ? இப்படிப் பட்ட ஒரு அரசுக்கு ரத்தினக் கம்பளம் கொடுத்து வரவேற்றிருக்கிறீர்களே ?   முள்ளிவாய்க்கால் படுகொலையிலும், ஈழப் போரிலும், இந்திய அரசின் பங்கு என்ன என்பதை தமிழக மக்கள் நன்றாகவே அறிவார்கள். ஆகையால், புதிய அரசு வந்துள்ளது, இந்த அரசின் நிலைபாடு என்ன என்பதை நினைவில் வைத்து செயல்படுங்கள்’ என்று கூறியுள்ளார்.

 

இதற்கு முன்பெல்லாம், தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் தமிழக முதல்வரை சந்திக்க வந்தால், அது எம்.கே.நாராயணனாக இருக்கட்டும், சிவசங்கர மேனனாக இருக்கட்டும்…. கருணாநிதியை என்னமோ அவர்களின் அந்தரங்கக் காரியதரிசி போலத் தான் நடத்துவார்கள். கருணாநிதியும், அவர்கள் சோனியாவின் பிரதிநிதி என்பதை மனதில் வைத்து பயபக்தியோடு நடந்து கொள்வார். ஆனால், ஜெயலலிதா, ஒரு சிறந்த நிர்வாகி எப்படி இருக்க வேண்டுமோ அப்படி நடந்து கொண்டுள்ளார்.

 

ஜெயலலிதா போட்ட போட்டில், ஆடிப் போன சிவசங்கர மேனன், பத்திரிக்கையாளர்களிடம் ஒரு வார்த்தைக் கூட பேசாமல், அவசர அவசரமாக டெல்லி போனார்.

 

ஜெயலலிதா போட்ட அதிரடியின் விளைவு என்ன என்பது இன்று தெரிந்தது.   இன்று காலை 10.30 மணி விமானத்தில், வெளியுறவுத் துறைச் செயலாளர் நிருபமா ராவ், பாதுகாப்புத் துறை செயலாளர் ப்ரவின் குமார் மற்றும் சிவசங்கர மேனன் ஆகியோர், கொழும்பு செல்கின்றனர்.

 

இதை கருணாநிதி அல்லவா செய்திருக்க வேண்டும் ?   ஆகையால் தான் இந்த வேலைகளை ஜெயலலிதா செய்யும் போது பெருமையாக இருக்கிறது. எமது மீனவன், அச்சமின்றி, சிங்களக் காடையன் குறித்த பயமின்றி, சீனச் செறுக்கன் குறித்த வேதனையின்றி நிம்மதியாக கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்வதை விட, எமக்கு வேறு என்ன ஆனந்தம் இருக்க முடியும் ? இதோடு மட்டுமல்லாமல், ஜெயலலிதாவின் தொடர்ந்த முயற்சிகளால், இலங்கை அரசு மீது பொருளாதாரத் தடை விதிக்கப் படுமேயானால், இதை விட மகிழ்ச்சியான தருணம் தமிழனுக்கு வரப்போவதில்லை.

 

Comments  

 
0 #117 Badri 2011-07-29 18:04
JJ is always correct,she neednt be selfish like MK who has became bootlicker for Sonia.Yes,i am Brahmin,Tamilia n and Indian in equal rights and feel proud of another brahmin who people people always think ditchers.I can challenge anyone it would never be Brahmins in any major issues because we live for pride.I always trusted JJ and def believed she is the only person who can do something(Immed iate reaction happened from US) unlike MK who is ditcher.But for the first time in my life i hated JJ for one reason egoism in "Samacheer Kalvi",yes its a crap but as Vijayakanth said use a donkey till horse is ready she must leave her ego because its already 2 months children are not taught anything.But as others said Mrs YGP is not at all involved in this because in her schools they teach only CBSE syllabus so she neednt worry about her.Yes,her schools are meant for upper middle class people but there is no caste preference there because ppl from all caste join there eventhough i was brahmin i didnt get seat because i cudnt pay donation but i didnt feel for that and i am no way less now.Y u ppl dont put the same yardstick to so called Kalvi Thandhais JPR,SRM and others even there they dont give caste preference only money speaks.Ur articles are very gud but brahmin bashings are there,y what wrong we did?...Did i loot ur money and loot money allocated for poor people and give color TV's i pay my taxes correctly eventhough i didnt get any privileage from Central/State Govt's.I never got free Tv,free rice and any other freebies and will never get any freebies because i am a person with more self pride and i know i can earn more and give better life for my children without any freebies.So,plzz say me in what way i deserve bashings from you.I never will get money from Missonaries for getting converted unlike others,so my self pride is much more.My Grand Father was poor struggled lot for my father and uncles education,but we are in diff category becoz of hardwork alone.
Quote
 
 
0 #116 VISHNUSURESH 2011-06-13 18:02
ஜெயலலிதாவின் தனி மனித துணிவு மட்டும் கோடி தமிழர்களை எளிதில் கரைசேர்க்கும்.
Quote
 
 
0 #115 anbu 2011-06-13 16:39
நேங பாம்ம்புக்கு பால் வாக்குரேஙக ஜெயலலிதா ஒரு காலதிலும் திருந்த மாட்டார் புலி கலின் அட்டகாசம் ஒலிந்து விட்தது நன்ட்ரி ராஜபக்ஷெ
Quote
 
 
-5 #114 சூர்யகதிர் 2011-06-13 16:23
என்னை போன்றவர்களுக்கு ஒரு சந்தேகம். நீர் கருணாநிதிக்கு சவுக்காகவும் ஜெயலலிதாவுக்கு சாமரமாகவும் இருகபோகின்றீர் என்று.

ஜெயலலிதாவின் சட்டமன்ற தீர்மானங்களை கண்டபடி புளுகி எழுதி இருந்தீர். இருந்து பாரும் ஜெயலலிதாவின் தீர்மானங்களுக்க ும் கருணாநிதியின் தந்திகளுகும் எந்த வித வித்தியாசமும் இருக்கபோவதில்ல !!!

ஜெயலலிதா, சீமான், வைகோ, நெடுமாறன், மற்றும் தற்பொழுது சவுக்கு என்ன தான் தலை கீழாக நின்றாலும் இலங்கை தமிழர்களுக்கு ஒன்றும் செய்ய முயாது. அதை நாங்கள் நன்றாக புரிந்துள்ளோம். இந்திய அரசு தன்நலம் கருதி ஏதாவது செய்தால் தான் உண்டு. அது இப்போது நடந்தும் வருகிறது. இலங்கை அரசாங்கத்தை சற்று தட்டி வைக்க ஆரம்பிதுள்ளர்கள ்.

நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் தமிழ்நாட்டில் அகதி முகாமில் வசிக்கும் இலங்கை தமிழ் அகதிகளுக்கு ஒரு குறைந்த படியிலான வாழ்வாதாரத்தை பெற்று தருவதும் ( கல்வி உட்பட), எந்த ஒரு தப்புமே செய்யாது இலங்கை தமிழனுக்கு நட்பு ரீதியாக தங்க இடமளித்த ஒரே காரணத்துக்காக230 ஆண்டுகளாக சிறையில் வாடும் நளினி மற்றும் பிற தமிழர்களை விடுதலை செய்தாலே பெரிய விஷயம். அதற்காக போராடுங்கள் அதை விட்டு ஈழம் பெறுகிறோம் என்று சொல்லி நேரத்தை வீணாக்காதீர்.

தமிழ் நாட்டில் ஒரு முடியை கூட புடுங்க முடியாத சீமான், வைகோ போன்றவர்கள் இலங்கையில் ஈழம் அமைப்போம் என்று கூறுகிறார்கள் பாருங்கள், இது தான் இலங்கை தமிழனின் சோகமான கால கட்டம்.

இலங்கையில் வாழும் தமிழர்கள் தமிழ்நாட்டால் எங்களுக்கு எதுவுமே செய்ய முடியாது என்பதை IPKF வந்து எங்களை கொன்றொழித்த போதே புரிந்து கொண்டோம்.

வாய் சொல்லில் வீரரடி !!!!
Quote
 
 
0 #113 thondan 2011-06-13 11:31
GREAT CM. THANKS DISCUSS WITH CENTARL I=HIGH OFFICER WITH CHIEF SECRATATY GREAT.
Quote
 
 
0 #112 elanthalir 2011-06-12 18:58
உலகத்தமில்ழ்ன் உயரும் காலம் அம்மா ஆட்ஷிகாலம் அம்மா பாதம் பனிகிரென்
Quote
 
 
+5 #111 S. Ezhil Duwaraka 2011-06-12 17:44
முதல்வர் முன்னாடி அந்த டீக்கடை சேட்டன் எப்படி பவ்யமா உக்காந்துருக்கா ன் பாருங்க மக்களே.....ம்ம்ம்ம்...அந்த பயம் இருக்கட்டும்..!!!!!
Quote
 
 
-7 #110 பரங்கியன் 2011-06-12 11:45
//மாறாக, “அனைத்துக் கட்சிக் கூட்டம்”, “சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் கூட்டம்”; “தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தீர்மானம்”, “மனிதச் சங்கிலி போராட்டம்” “பிரதமருக்கு தந்தி”; “நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா என்ற அறிவிப்பு”; “ராஜினாமா கடிதங்களை தானே பெற்றுக் கொண்டது”; “இறுதி எச்சரிக்கை என்ற அறிவிப்பு” என பல்வேறு வகையான நாடகங்கள் தான் முன்னாள் முதலமைச்சர் திரு. கருணாநிதியால் நடத்தப்பட்டன.//

அன்று கருணாநிதி செய்ததை பட்டியலிட்டு இருக்கிறார் அன்றைக்கு கருணாநிதி செய்ததை போன்று (''தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தீர்மானம்”) தானே இன்று ஜெயலலிதா செய்திருக்கிறார ்...இதில் பெருமைபட என்ன இருக்கிறது சவுக்கு
Quote
 
 
0 #109 1234567VIKPM80 2011-06-12 00:28
:roll: அம்மாவை வாழ்தத வயதில்லை, வணங்குகிறேன்.
Quote
 
 
0 #108 JP 2011-06-11 21:35
அம்மாவுக்கு ஜே!!!!!!!!!!!!! !!!!!
Quote
 
 
+5 #107 123 2011-06-11 19:47
கருணாநிதி காலத்தில் டில்லியிலிருந்த ு வருவோருடன் ரகசிய சந்திப்புகளே நிகழும். தற்போது முதல்வர் தலைமைச் செயலாளரை வைத்துக்கொண்டே சந்தித்துள்ளார் . இதுவே இவரது உண்மைத் தன்மைக்குச் சான்றாகும்.
Quote
 
 
-6 #106 naan kadavul 2011-06-11 19:30
சவுக்கை சந்தேகிக்க தொன்றுகிறது. நடுநிலை என்ற பெயரில் தவறான புத்தகத்தை முதல் வெளியீடாக வெளியிட்டது வருத்தத்தை தருகிறது. ஊருக்கு தான் உபதேசம் எனக்கில்லை என்ற கருத்து சவுக்கிடம் இருப்பதாக எண்ணத் தோன்றுகிறது. சவுக்கின் மேல் இருந்த நம்பிக்கை தளருகிறது. தப்பை திருத்திக் கொள்வதில் எந்த வெட்கமோ கிடையாது. பதில் தர வேண்டும். நம்பிக்கை வைத்த பல வாசகர்களின் இழப்பை ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது. சவுக்கு வெளியிட்ட புத்தகத்தை படித்த போது அதில் அனேகமாக முழுவதும் விடுதலைப் புலிகளுக்கு எதிராகவும் காங்கிரசுக்கு ஆதரவாகவும்,காங் கிரஸ் கட்சியில் இருப்பவர் எழுதியது போல் இருக்கிறது. ஒரு சமயம் சிங்களத்தின் சார்பானவர் போலவும் தெரிகிறது. ஒரு விடுதலை இயக்கத்தை கொச்சைப் படுத்துவது நியாயம் அல்ல. பல செய்திகள் உண்மைக்கு மாறாகவும் தெரிகிறது. கடைசியில் எல்லோருமே பணத்திற்கும்,பத விக்கும் ஆடும் கூட்டமா என்ற சந்தேகமே நிற்கிறது.
Quote
 
 
+4 #105 vsankar 2011-06-11 13:39
hipocracy-thy name is mk
Quote
 
 
+10 #104 T G Ramamurthy 2011-06-11 12:46
நல்ல்து எஙுகு நடந்தாலும் பராட்டுவோம். யார் செய்தாலும் வரவேற்போம்.
Quote
 
 
+1 #103 Anto 2011-06-11 12:00
விQuoting விஜய்:
Savukku, Pls check the below link and need your proper reply

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=15061:2011-06-09-08-03-47&catid=4:reviews&Itemid=267

how come 2 stands???


the website you read is belongs to Islamic supportive, Islams in lanka = Mr.M.K .... read many articles, they would say Bin Laden is a saint!!

read Tamilwin dot com news for real info.

"Em Thaagam Tamil Eelaa Thayagam"
Quote
 
 
+2 #102 Vaaimai 2011-06-11 11:43
Hello all, read this article from vinavu.com

http://www.vinavu.com/2011/06/10/eezhathai/

It will help ruthirakumaaran to garner support for Eelam in Western countries on the basis that a democratic government of 7 crore people in India declared rajapakse as war criminal.
Quote
 
 
+7 #101 Nai Sekar 2011-06-11 11:28
கருணாநிதிக்கு கூலுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை. மத்திய அரசின் பதவியிற்காக காங்கிரஸுக்கும் ஜால்ரா போடவேண்டும், தமிழீழம் என்ற போர்வையில் ஓட்டுக்களும் வேண்டும். இதுபோன்ற பல விஷ்யயங்களில் கருணாநிதியால் ஒரு சரியான முடிவை அவரால் எடுக்கவில்லை. இன்றும் தன் கட்சி தோற்றதிற்கு பல காரணங்களை தேடுகிறாராரோ தவிர தன் குடும்பத்தினரின ் பேராசை, ஊழல், தன் கட்சியினரின் ரெளடித்தனம், கட்டபஞ்சாயாத்து , செத்துவிட்ட நிர்வாகம், போன்ற பல உண்மையான் காரணங்களை அவர் மனம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. இதை எடுத்துசெல்லும் கட்சித்தலைவர்கள ் அவரின் நெருங்கிய வட்டத்தில் இல்லை. அப்படியிருந்தவர ்கள் ஜால்ராபோடும் கூட்டத்தினரிடயே காணாமற் போய்விட்டார்கள் அல்லது வைகோ போன்றோர் துரத்தப்பட்டனர் . மீதியிருந்தவர்க ள் ஜால்ராபோடும் கூட்டம் மட்டுமே. ஒருபக்கம் ஜால்ராபோடுவதும் மறுபக்கம் அளவில்லாமல் சம்பாதிப்பதுமாக காரியம் சாதித்துக்கொண்ட ்டார்கள். கண்மூடித்தனமாக திமுகவை ஆதரித்த கட்சிதொண்டர்கள் பலர், கட்சிக்காக தன் சொந்த பணத்தை செலவு செய்தவர்களெல்லா ம் காரியம் சாதிதுக்கொள்ளும ் கும்பலால் அனாதைகளாக்கபட்ட னர். ஆனால், ஜெயலலிதாவோ எடுத்தமுடிவில் உறுதியாக இருந்தார். சிலமுடிவுகள் தவறாக இருப்பினும் அவருக்கு தடுமாற்றம் இல்லை. என்வே அவரால் உறுதியான முடிவுகளை எடுக்க முடிகிறது. இவரும் புகழுக்கு மயங்ககூடியவரே, ஆனால் அளவுக்கு அதிகாமான் ஜாக்கிரதை அவரை கருணாநிதிபோல் மதிமயங்க செய்வதில்லை. ஆனால் இன்னும் ஜெயலலிதா எல்லாவிதமான கருத்துக்களையும ் செவிமடுக்கவேண்ட ும். தான்மட்டுமே அரசு அல்ல, அது ஒரு பெரிய அணி, அனைவரின் ஒற்றுமையும், மனப்பூர்வமான அதரவும் தேவையென்பதை உண்ரவேண்டும். அதை செய்வதிற்குண்டா ன மாற்ங்கள் தென்படுகிறது. இதை செய்தால் ஒரு நல்ல அரசை நாம் எதிர்பார்க்கலாம ். இலங்கை தமிழர் விஷயத்திலும் இதைசெய்வார் என்று நம்புவோம்.
Quote
 
 
0 #100 thothadri 2011-06-11 11:09
Very Good Keep it up
Quote
 
 
-2 #99 kaasinaath 2011-06-11 11:07
[ஃஉஒடெ நமெ="விஜய்"]அப்படியே சவுக்கு இதற்கும் பதில் சொல்லவேண்டும்.

ஹ்ட்ட்ப்://ந்ந்ந்.கேட்ரு.சொம்/இன்டெ௯.ப்ஹ்ப்?ஒப்டிஒன்=சொம்_சொன்டென்ட் &விஎந்=அர்டிச்லெ&இட்=15061:201106090803௪7&சடிட்=4:ரெவிஎந்ச்&ஈடெமிட்=267[/ஃஉஒடெ]

விஜய் அவர்களின் காமென்ட்சில் உள்ள லிங்கை போய் பார்த்த பின்பு பலவாறு சிந்திக்க தோண்றுகிறது. சவுக்கு ஜுவி யை விமர்சனம் செய்ததர்க்கு ஜுவி செய்த தயாநிதி இருட்டடிப்பு கூட பெரிதாக தெரியவில்லை.
Quote
 
 
+1 #98 விஜய் 2011-06-11 10:20
Savukku, Pls check the below link and need your proper reply

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=15061:2011-06-09-08-03-47&catid=4:reviews&Itemid=267

how come 2 stands???
Quote
 
 
+2 #97 விஜய் 2011-06-11 10:19
அப்படியே சவுக்கு இதற்கும் பதில் சொல்லவேண்டும்.

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=15061:2011-06-09-08-03-47&catid=4:reviews&Itemid=267
Quote
 
 
0 #96 ancy 2011-06-11 10:02
AMMMA the great, karuunanidhi the waste
Quote
 
 
+12 #95 உண்மை விளம்பி 2011-06-11 02:51
அம்மா முன்னாடி அந்த டீக்கடை சேட்டன் எப்படி பவ்யமா உக்காந்துருக்கா ன் பாருங்க மக்களே...விட்டா ஓ.பி.எஸ்ஸ மிஞ்சிருவான் போல இருக்கு,..ம்ம்ம்ம்...அந்த பயம் இருக்கட்டும்..!
Quote
 
 
+2 #94 Saravana 2011-06-11 02:16
Its good to see JJ's move towards TN fishermen issue. I believe Jayalalitha can become lifetime CM like MGR if she takes care of following things - being bold & reasonable, stay away from congress party, do not get influenced by Mannaargudi family...Let JJ rock...
Quote
 
 
+5 #93 Sakthivel_tup 2011-06-11 02:15
ஜெயலலிதா இனி திமுக எழ முடியாது என்று நம்புகின்றார். அதற்கு காரணம் கருனாகநிதியின் முதுமை (அவரின் தற்போதைய மனக்கவலைகள் அவர் உடல்நிலையை மேலும் பாதிக்கும் என்று நம்புகிறார்), அவரின் புதல்வர்களுக்கு ள் பனிப்போரான கொலை வெறி பகை, 2ஜி ஊழல் மற்றும் பல. ஆக, திமுக சிதற போவதினால் ஜெ-வின் முழு முதல் எதிரி ஒழிந்தான். தேமுதிக இப்போதைக்கு ஒத்தூதும் கட்சி, மேலும் அவர்கள் எதிர்த்து நின்றாலும் ஆட்சிக்கு கவலை இல்லை. திருமா, டாக்டர் அய்யா, காங்கிரசு போன்றவர்களும் முன்னேறி அடுத்த தேர்தலில் ஆட்சியைப்பிடிக் கும் அளவுக்கு வளரப்போவதில்லை. அதிகபட்சம் பெரிய எழும்புத்துண்டு கேட்பார்கள் அவ்வளவுதான். மிச்சம் இருப்பது, எல்லா வாய்ப்புகளையும் கோட்டைவிட்டுவிட ்டு இப்பொழுது வீராவேசம் பேசும் வைகோ தான். அவரிடம் இருக்கும் ஒரே பெரிய ஆயுதம் ஈழம் (சில சிறிய ஆயுதங்கள் முல்லை பெரியார், காவிரி தண்ணீர் போன்றவை). ஐ.நா சபையின் கடுப்புக்கும், கண்டனத்திற்கும் ஆளான இலங்கையும் ராஜபக்ஷேவும் வெகு சீக்கிரத்தில் செத்த பாம்புகளாகப்போக ின்றனர். அதனால் இராஜபக்ஷேவை அழிக்கவேண்டும் என்று கூக்குரலிடுவதில ் ஒன்றும் சிரமம் இல்லை.

ஆக, வைகோ இந்த ஈழ ஆயுதத்தை வைத்துக்கொண்டு கட்சி சார்பில்லாமல் இருக்கும் பெரும்பான்மை தமிழர்களை ஒன்றிணைக்க பகீர்பிரயத்தனம் செய்து வரும் வேளையில், அந்த ஆயுதத்தை நாமே எடுத்துக்கொண்டு ஈழ ஆதரவாளர்களை அதிமுகவுக்கு கொண்டுவந்தால், நமக்கு எந்த எதிரியும் இல்லாமல் நிரந்தர முதல்வராகிவிடலா ம் என்பதே ஜெ-வின் ஈழ ஆதரவு நிலை.

எப்படியிருந்தால ும், தமிழீழம் அமைய வேண்டும்., இந்த இந்திய குடியுரிமையை குப்பையில் வீசிவிட்டு பெருமை பொங்க ஈழக்குடியுரிமை வேண்டிப்பெற்று அங்கு வாழ வேண்டும் என்பதே என் ஆவல்.

அதற்கு - யார் வேண்டுமானாலும் தமிழக முதலமைச்சர் ஆகிக்குங்க, மொத்ததுல எங்க தமிழீழத்தேவையை சீக்கிரம் முடித்துக்கொடுங ்க.
Quote
 
 
+3 #92 seththa thamizhan 2011-06-11 00:59
JJ has to be careful about the cunning Menon and co. They are playing the China card. Will India give up one of her states for Sri Lanka if SriLanka demands using the China card? Is Tamil Nadu safe? What a shame for the diplomats to say these words loudly. I hope JJ knows the foxes and she will handle them correct.
Way to go JJ. By the way, you are still very beautiful.
Quote
 
 
+10 #91 வள்ளுவன் 2011-06-11 00:23
தைரியசாலியான ஜெயலலிதாவுக்கு வாழ்த்துகள். மேன்ன் ஒரு குழந்தைத் தனமான கருத்தை முன்வைத்ததாக Deccan Chronicle இல் ஒரு செய்தி வந்திருக்கிறது.
// ...... hoping to convince her to fall in line with Delhi’s Lankan policy — which is not to push President Rajapaksa too hard lest he becomes a vassal of China. //

இது போன்ற குழந்தைத் தனமான ஏமாற்றுத் தந்திரங்கலை ஜெயலலிதா அடையாலம் கண்டு கொள்வார் என்று நம்புவோமாக.
சீனாவின் பக்கம் சாயாதிருப்பதற்க ாக இந்தியாவின் ஒரு மாநிலத்தை கொடு என்று கேட்டாலும் கொடுத்து விடுவார்களா?
Quote
 
 
-25 #90 singam 2011-06-10 23:56
மக்கள பாத்து பயந்து போயி விட்ட அரிக்கை தான் இது... ஜெயலலிதா ஒன்னும் திருந்தலை.. தி.மு.க தோல்வி அடைந்த்ததற்கு இலங்கை பிரச்சனை ஒரு முக்கிய பங்கு வகித்தது... அதனால் மக்கள் தி.மு.க விர்கு எதிராக வாக்கு அளித்தனர்... இப்போ ஜெயலலிதா இலஙகை பிரச்சனை பத்திப் பேசலைனா அவங்கலுக்கு செல்வாக்கு குரைந்துவிடும்.. அதனால தான் இந்த தீர்மானம் நிரைவேத்துறது எல்லாம்.. வெரும் நாடகம் தான்.... ஜெயலலிதா என்ன பன்னாலும் அதுக்கு ஜால்ரா அடிச்சு ப்லாக் எலுதுரிங்க சவுக்கு... இவ ஆட்சினால தமிழ் நாடுக்கு முதல் மாதத்திலேயே பல ஆயிரம் கோடி நஷ்டம்... இது எல்லாம் யாரு அப்பன் வீட்டு காசு ??
Quote
 
 
+5 #89 VJYNWA 2011-06-10 23:54
தவறுகளை சுட்டி காட்டுவதற்காக நன்றி.....

ஆனால் மு.க. குடும்பம், சில காவலர்களை பற்றி மட்டுமே அதிகம் எழுதுவதுதான் ஒரு குறை....

திமுக - ஆட்ச்சியை அகற்ற போரடியதாய் மார் தட்டுகிறீர்.. அவர்கள் அகற்றப்பட வேண்டியவர்கள் தானே...?

தவறுகளை சுட்டி காட்டுவதில் சந்தோசமே.

சவுக்கு ஜெ-வின் துதி பாடாமல் செய்வார் என நம்புகிறேன்...
Quote
 
 
+4 #88 VJYNWA 2011-06-10 23:33
நல்ல விசயம் தான், ஆதரவாக சில விடயங்கள் செய்யப்பட்டிருப ்பது......மக்களின் உரிமைக்காக குரல் கொடுப்பது. இது தமிழர்களை பாதுகாக்க செய்யப்பட்டால் சரிதான்(ஒட்டுக் காக அல்லாமல்)


முதலில் சிங்களர்களிடம் இருந்து காக்கப்பட வேண்டியது தமிழ்க மீனவர்கள்....


சவுக்கு-க்கு ஒரு கேள்வி -- தென் மாவட்டங்காளான நெல்லை,குமரி,தூ த்துக்குடி மாவட்டங்களில் 100% இலங்கை தமிழர் பிரச்சனைக்கு ஆதரவு இருப்பதாக நினைக்கிறீர்களா .....?
Quote
 
 
+4 #87 Kasinaath 2011-06-10 23:26
இந்த தீர்மானத்தின் மீது ஜெ அவர்கள் ஆற்றிய உரையில் கருணாநிதியை ஒரு பிடி பிடித்ததர்க்கு குஞ்ஞாமணி ஒரு அறிக்கை விட்டு சப்பை கட்டு கட்டினாரே கவனித்தீர்க்ளா?
Quote
 
 
+1 #86 INNOCENT 2011-06-10 22:32
UNGAL PADHANGALIL ENGALIN ANADHA KANNEERAI SAMARPIKKIROM.... YEN SAGODHARAN INI MADIYA MAATTAN, YEN SAGODHARI INI KANNEER SINDHA MAATTAL... NANDRI AMMA.
Quote
 
 
+1 #85 kuberan 2011-06-10 22:28
respected amma good ,good approach we also ready to serve u r policy.
Quote
 
 
+1 #84 Muthuraja 2011-06-10 22:07
அம்மாவுக்கு மிகவும் நன்டறீ
Quote
 
 
0 #83 aha 2011-06-10 21:35
If you condemn the atrocities of SL forces you cannot take it as a support for LTTE.Even LTTE did so many human rights crimes.Dont forget it.
Quote
 
 
+9 #82 Ravi 2011-06-10 21:34
ஜெயாவின் இந்த நிலைப்பாடு தொடர வேண்டும். மேலும் இப்போதுதான் நாம் நம் மூளையை உபயோகித்து சாதுரியமாக நடக்க வேண்டும். காரணம் இந்த கயவாளி காங்கிரஸ் மற்றும் சோனியா கும்பல் ஜெயாவின் இந்த நிலைப்பாட்டை தொடர்ந்து நம் மாநிலத்திற்கு வரவேண்டிய பல உரிமைகளை அல்லது நிதிகளை நிறுத்தி அல்லது தாமதப்படுத்தி மக்களின் பார்வையில் ஜெயாவை வீழ்த்த முயற்ச்சிப்பார் கள். இது நிச்சயம். ஆனால் நாம் பயங்கொள்ளாமல் காங்கிரஸை தொடர்ந்து ஓட ஓட விரட்டவேண்டும். ரவி/இங்கிலாந்து.
Quote
 
 
-4 #81 Kumaran Seenivasan 2011-06-10 21:07
It seems SAVUKKU comes to conclusions rather very fast. The same Jayalalitha has said not long before that people would die if there is a war and there is nothing unusual about it. Also please remember, enacting laws in favour of Tamils in Sri Lanka that too in a state assembly is not going to make any impact on Sri Lankan Government. It only favours AIADMK by bringing good name to the party and Jayalalitha is cashing in on that. The funny part is, coming up with "THEERMAANAM" in a state assembly that too when a party is in majority in Indian conditions is too easy and it does not carry any value at all and for AIADMK headed by Jaya, it is a piece of cake as most of the MLA's just say YES to whatever she says. I don't know why people are giving so much importance to these type of eye washes. If an armed struggle by one of the great warriors of our time could not solve the issue, do you think EYE WASH "THEERMAANAM" by Jaya is going to help Lankan Tamils? The other funny thing I noted is, SAVUKKU stands by our Leader Prabakaran and his website home page carries the picture of Prabakaran. But Jayalalitha says LTTE is a terrorist organization even in the recent speech. Does that mean SAVUKKU supports terrorism? or Does that mean SAVUKKU supports Jaya on issue basis? Why Savukku did not condemn Jayalalitha for saying LTTE as a terrorist organisation even for once? Does that mean SAVUKKU also brands LTTE as a terrorist organisation? To me, Jaya has announced few good things, but overall she has not changed even a bit and she is the same arrogant lady. Scrapping all the previous government projects and coming up with other useless alternatives is not the hallmark of a good leader. This is just a waste of public money. Hallmark of a good leader is to decide everything based on impact to the public and public money and not deciding what she likes or dislikes. Savukku is doing a good job but needs to be more rational and without any prejudice.

-Kumaran.
Quote
 
 
+4 #80 Gowri Shankar 2011-06-10 20:25
எம் உள உவகயை சொல்ல தமிழில் வார்த்தைக்கு பஞ்சம் - அதுவும் சவுக்கு சொல்வது போல் அம்மா - அந்த மலையாளியை மிரட்டி இருந்தால் - அம்மாவை பாராட்ட வார்த்தைகள் இல்லை -
Quote
 
 
+1 #79 sss 2011-06-10 20:20
[ஃஉஒடெ நமெ="ணை ஸெகர்"]நல்ல விஷயமே! ஒரு சாரார் விடுதலைபுலிகளை மட்டுமே தமிழ் காவலைர்களாக பார்க்கிறார்கள் . எங்களை போன்ற பலபேர் தனி நாடு என்ற கோரிகையை ஏற்க இயலவில்லை. காஷ்மீரை தனி நாடாக நாம் எப்படி ஏற்றுக்கொள்ள மறுக்கிறோமோ அதுபோல்தான் தமிழீழமும்.தமிழர்களுக்கு சம உரிமைகள் வேண்டும். விடுதலைபுலிகளின ் தவறான போகினால் இது கை நழுவிவிட்டது. அதை பயன்படுத்தி இலங்கை அரசு தமிழர்களை கைகழுவபார்க்கிற து. ஒரு நல்ல தமிழ் அரசு மட்டுமே ஒரு நல்ல தீர்வுக்கு வழிகோலும். செய்வார் என்று நம்புவோம். இதை முந்தய அரசு செய்திருந்தால் லட்சகனக்கான் அப்பாவி உயிர்களை இழந்திருக்கவேண் டியதில்லை. கனிமொழிக்காகவிட ்ட பலசொட்டு கண்ணீரில் ஒரு சொட்டு இலங்கை தமிழர்களுக்காக விட்டிருந்தால் அப்பாவி தமிழர்களை கருணாநிதி காப்பாறியிருக்க லாம்.[/ஃஉஒடெ]


Then how come we support talai lama in splitting china
Quote
 
 
+3 #78 sathiyan 2011-06-10 20:16
தமிழன்,தமிழச்சி என்று தமிழ் வியாபாரிகளின் முகத்திரையினை இப்படி கிழித்து வீறு கொண்ட சிங்கம் புறப்பட்டுள்ளது .கனவிலும் யாருமே எதிர்பாராதது. "அம்மா" என்று மனங்குளிர்ந்து தமிழன் அழைத்தானே அதற்கு ஒரு உண்மையான அர்த்தத்தினை உணர்த்திவிட்டார ்! மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள்!
Quote
 
 
+11 #77 anniyan 2011-06-10 19:56
உண்மையில் பாகிஸ்தானுக்கும ், இலங்கைக்கும் ஆப்பு வைக்க வேண்டும் என்றால், அதற்கு இரண்டு பேர்தான் மிகத்தகுதியானவர ்கள்.
1. ஜெயலலிதா
2. நரேந்திர மோடி
இரண்டுபேருமே தன் இனத்துக்கு ஒரு கேடு என்றால் பார்த்துக்கொண்ட ு இருக்கமாட்டார்க ள். தங்கள் மேல் தீராப்பழி ஏற்பட்டாலும் பரவாயில்லை, ஆபத்துக்குப் பாவமில்லை என்று இறங்கக் கூடியவர்கள். வயது மூத்த பிரதம மந்திரியை இதுவரை இந்தியர் யாரும் பெயர் சொல்லி அழைத்ததில்லை. ஆனால் காவிரி பங்கீடுப் பிரச்சனையில் முதல்வர்கள், பிரதமர் நேரடி முறையீட்டில் பலமுறை முறையிட்டு வாதாடியும் உதாசீனமாக இருந்த அந்நாள் பிரதமரை, "Mr. Vajpaayee, are you listening to me?" என்று ஒரு கத்து கத்தி அதிர வைத்தவர் ஜெயலலிதா. அவரால் நிச்சயம் முடியும்.

அதிகார பூர்வமாக தீர்மானமே போட்ட செய்திதானே.. இதென்ன கேள்வி "கூட இருந்து பாத்தியா?"ன்னு . பேப்பர் படிக்கறதே இல்லையா? எப்பவும் நக்கீரனும், ஜூவியுமே கதின்னு இருந்த இப்படித்தான் ஆகும்.

[Quoting kalappiran2:
ஒரு தமிழக மீனவன் சிங்களக் கடற்படையினரால் தாக்கப் பட்டால் கூட, தமிழகம் சும்மா இருக்காது. இலங்கையோடு வர்த்தக உறவுகள் பாதிக்கப் படும் வகையில், தமிழக அரசின் அதிகாரத்திற்குட ்பட்ட அனைத்து நடவடிக்கைகளையும ் அதிமுக அரசு எடுக்கும்........எண்டா இதையெல்லாம் நீ பக்கத்துல உட்கார்ந்து கேட்டியா?இல்ல இங்க வர்றவன் எல்லாம் அவ்வளவு லூசா?வேணாம்ப்பா தமிழர் பிரச்னை நீயெல்லாம் விளையாடுவதற்கான இடம் இல்லை.
Quote
 
 
+2 #76 கோபி 2011-06-10 19:46
மார்க்ஸிஸ்ட்டுக ளுக்குச் சீனாவில் இருந்து பணம் வருகிறதா ?
அம்மா வாழ்க !! நன்றி அம்மா !!
Quote
 
 
+4 #75 anniyan 2011-06-10 19:36
What sudden change?
JJ is against LTTE but supports Remaining Tamils for decades.

Quoting gopalan:
Please wait and see the follow up by Jaya.She is not helping Tamils but want a score above MK.what was her comment on the killing of Tamils / LTTE members? what brought this sudden change in her? she enacts drama to fool the people which will unfold her true nature soon.
Quote
 
 
+6 #74 ஆனந்த் 2011-06-10 19:09
//அந்தத் தமிழினத் தலைவர், இனத்தைக் கொன்று அழித்தவனோடு, தமிழக எம்பிக்களை விருந்துண்ண அனுப்பினார். முள் வேலி முகாம்களுக்குள் மக்கள் அடைபட்டுக் கிடக்கையிலும், கடிதம் எழுதிக் கொண்டிருந்தார்.//

தள்ளாத வயது. ஏதோ அவரால் முடிந்தது கடிதம் எழுதுவது மட்டும்தான். இதை எப்படி குறை சொல்ல முடியும். ஒரு வேளை தன் எழுத்தாற்றலை வெளிபடுத்த வேண்டும் என்றும் நினைத்திருக்கலா ம்.
Quote
 
 
+2 #73 Padman 2011-06-10 18:50
இந்திய அரசு பாதுகாப்பு ஆலோசகராக இருந்த நாராயணன் மற்றும் வெளியுறவுக் கொள்கை செயலர்கள் செய்த தவறுகளையும் இங்கிருந்து கூட்டு சதி செய்தவர்களையும் இந்த தீர்மானத்தில் கண்டித்திருக்க வேண்டும்.

நீங்களும் உங்கள் பதிவில் தெரிவிக்க மறந்து விட்டீர்கள் சவுக்கு.
Quote
 
 
-2 #72 Tamil Iniyan 2011-06-10 18:42
This is the same woman who, in alignment with the italian and christian led congress at the centre arrested the Kanchi Acharyas 'without a shred of evidence' (as the Supreme Court observed) in the sankararaman murder case. She will do anything to preserve herself. Her instincts are all self-preservation instincts. I know Savukku and other 'dravida' idiots in this forum supported the arrest of the Acharyas only because of their brahmin hatred - where did their 'tamil' patru do when fellow tamilians are discriminated in the brahmin community? All their so called 'objectivity' vanishes when it comes to this issue!!!! You will be disappointed. This is just another corrupt demon ruling the state!!!!
Quote
 
 
0 #71 J.Gopi krishnan 2011-06-10 18:37
வாழ்க ஜயலலிதா, வாழ்த்துக்கல். தொடருட்டும், கான்கிரசிர்க்கு அடிபனிய கூடாது.
Quote
 
 
+7 #70 தஞ்சை குணா 2011-06-10 18:26
அள்ளிக் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்ப ட்டவரால் கில்லிக்கொடுக்க கூட மனம் வரவில்லை. கிள்ளியாவது கொடுக்கமாட்டாரா என்று எதிர்பார்க்கப்ப ட்டவர் அள்ளிக் கொடுத்திருக்கிற ார். எதிர்காலத்தை நினைத்து அவநம்பிக்கையோடு இருந்த ஈழ தமிழர்களிடம் நம்பிக்கையை உருவாக்கி இருக்கின்றார். ஒவ்வொரு ஈழத் தமிழர் நெஞ்சிலும் நீங்கா இடம் பிடித்துவிட்டார ்.
Quote
 
 
+2 #69 madhu 2011-06-10 18:11
கனவா? நிஜமா?
Quote
 
 
+2 #68 நீதிதேவன்` 2011-06-10 17:55
தமிழக முதல்வர் சட்டமன்றத்தில் ஈழபிரச்சினையில் கொண்டுவந்த இரு தீர்மானங்களுக்க ும் எனது மனப்பூர்வமான நன்றிகள். இந்த தீர்மானங்கள் வெறும் தீர்மானமாக இல்லாமல் ஈழமக்களுக்கு அனைத்து அதிகாரங்களையும் பெற்றுத்தரக்கூட ிய அளவுக்கு செயல்வடிவமாக மாறவேண்டும். அது தனி ஈழமாக இருப்பின் அம்மையார் வீட்டு நாயாக கூட நான் இருக்க தயார். ஏனெனில் இனி ஒரு சிறிய கீறல் கூட ஈழ வாழ் தமிழ் மக்கள் மீது விழக்கூடாது. அதற்கு குடும்ப உறுப்பினர்கள் பலவீனம் இல்லாத.. சொத்து சேர்த்து பேரன்களை வாழவைக்கவேண்டும ் என்று கட்டாயமில்லாத இருக்கும் நம் முதல்வர் ஒரு நல்ல முடிவை எடுத்தால் அதில் வழவழ கொழ கொழ என்று பேசாமல் உறுதியாய் இருக்கும் ஜெ.ஜெயலலிதாவால் மிக உறுதியா செயலாற்றமுடியும ். (உ.ம். ஜெயந்திரன் கைது) எனவே அம்மையார் அவர்களே தயை கூர்ந்து தனி ஈழம் வலியுறுத்தியும் தீர்மானம் நிறைவேற்றுங்கள் . என்று உங்கள் பொற்பாதங்களை வேண்டி கேட்டுக்கொள்கிற ேன்.
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 38 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday1911
mod_vvisit_counterYesterday11260
mod_vvisit_counterThis week24283
mod_vvisit_counterLast week78861
mod_vvisit_counterThis month237102
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12759221