முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்தொடர்புக்கு
+++
நீதிமன்றத்தில் கனிமொழியுடன் தாயார் ராஜாத்தி கருத்து வேறுபாடு அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 17
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சனிக்கிழமை, 11 ஜூன் 2011 15:02

புது தில்லி, ஜூன் 10: தில்லி சிறப்பு நீதிமன்றத்துக்கு வெள்ளிக்கிழமை வந்த திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழியின் தாயார் ராஜாத்தி மதிய உணவைப் புறக்கணித்தார்.

 

நீதிமன்றத்தில் மகளுடன் சிறிது நேரம் பேசியபோது அவர்களுக்கு இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகத் தெரிகிறது. அதன் பின்னர் மதிய உணவு இடைவேளையின்போது, எல்லோரும் அழைத்தபோதும் ராஜாத்தி உணவு உண்ண மறுத்து விட்டார்.

 

2ஜி அலைக்கற்றை விவகாரத்தில் திமுக தலைவர் கருணாநிதியின் மகளும், மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழி, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா, கலைஞர் டிவி நிர்வாக இயக்குநர் சரத்குமார் ஆகியோர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

 

நீதிமன்ற உத்தரவின்படி, அவர்கள் அனைவரும் பாட்டியாலா நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் தினமும் ஆஜராகி வருகின்றனர். அதன்படி கனிமொழி உள்ளிட்டோர் வெள்ளிக்கிழமை காலையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

 

கனிமொழி ஆஜர் ஆவதற்கு முன்பாகவே, அவரது தாயார் ராஜாத்தி, திமுக எம்.பி. ஹெலன் டேவிட்சனுடன் 10 மணிக்கு நீதிமன்றத்துக்கு வந்தார். ஆனால், கனிமொழி 11 மணிக்குத்தான் அழைத்து வரப்பட்டார். அப்போது ராஜாத்தியும், கனிமொழியும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தனர்.

 

கனிமொழியின் கணவர் அரவிந்தன், மகன் ஆதித்யா, அரவிந்தனின் தாயார், திமுக எம்.பி.க்கள் டி.ஆர். பாலு, ஏ.கே.எஸ். விஜயன், தமிழக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்டோரும், ஆ. ராசாவைக் காண அவரது மனைவி பரமேஸ்வரி, உறவினர்களும் சரத்குமாரைக் காண அவரது உறவினர்களும் வந்திருந்தனர். அனைவரிடமும் பேசிய கனிமொழி, தாயார் ராஜாத்தியுடன் தனியாகப் பேசிக் கொண்டிருந்தார். அப்போது இருவருக்கும் இடையில் ஏதோ முரண்பாடு ஏற்பட்டதாகத் தெரிகிறது.

 

இதன் பின்னர், உணவு இடைவேளைக்காக நீதிமன்ற நடவடிக்கைகள் ஒத்தி வைக்கப்பட்டன. அப்போது, கனிமொழி, ராசா, சரத்குமார் ஆகியோர் அழைத்துச் செல்லப்பட்டனர்.

 

மதிய உணவுக்காக ராஜாத்தியை அங்கிருந்தவர்கள் அழைத்தபோது அவர் செல்ல மறுத்துவிட்டார். ஹெலன் டேவிட்சன், முன்னாள் அமைச்சர் சற்குண பாண்டியன், கட்சி மகளிர் அணியைச் சேர்ந்த நூர்ஜஹான் பேகம், கனிமொழியின் கணவர் அரவிந்தன் ஆகியோர் அழைத்தபோதும் மதிய உணவை ராஜாத்தி புறக்கணித்தார்.

 

பிறகு, மாலை 5.30 மணிக்கு நீதிமன்ற நடவடிக்கைகள் நிறைவடைந்ததை அடுத்து நீதிமன்ற நடவடிக்கைகளை நீதிபதி ஓ.பி. சைனி ஜூலை 4 வரை ஒத்தி வைத்தார். சிறப்பு நீதிமன்றத்துக்கு சனிக்கிழமை (ஜூன் 11 ) முதல், ஜூலை 4 வரை கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டிருப்பது நினைவுகூரத்தக்கது.

 

Comments  

 
0 #14 saro 2011-07-08 17:14
யெல்லாம் நாடகம்..............
Quote
 
 
0 #13 sk.manikandan 2011-06-26 13:24
சாகட்டும் விடுஙக .....அந்த நாய்கள்..... நாட்டுக்காக வா ஜெய்லுக்கு போனஙகா... திருடி தானெ போனார்கள்
Quote
 
 
0 #12 boopathi 2011-06-25 12:58
sapitathu allam oru news nu sollaranga paru, romba ethu mukkiyam paru
Quote
 
 
0 #11 boopathi 2011-06-25 12:55
விட்டுல கறி சாபிடலனு வேன்டனு சொல்லிருபங்க...........
Quote
 
 
0 #10 appu 2011-06-15 22:00
சாவட்டம்
Quote
 
 
0 #9 murugu 2011-06-14 18:46
thanks for the news which is been published very informative
Quote
 
 
0 #8 sr ravi 2011-06-14 15:37
பெதமனம் பித்து பிள்ளை மணம் கல்லு
Quote
 
 
0 #7 senkkanal 2011-06-13 22:01
Sir, it is surprising, Definitely, you may be an interesting detective person. Wish u all
Quote
 
 
+11 #6 ம.பொன்ராஜ் 2011-06-13 11:06
உண்ணாவிரதம் என்கிற பெயரில் புருஷனும் சரி... மனகசப்பு என்கிற பெயரில் பொண்டாட்டியும் சரி... ஒரு வேளை சோறு திங்கவில்லை என்றால் உடனே அது பரபரப்பான செய்தியாகி விடுகிறது.
Quote
 
 
0 #5 paandiyan 2011-06-12 12:29
Nanri "Dinamani" tag is missing here. its a small mistake but once realized savukku should change it accordingly. some other portal in the name of .....tamil.com and their full time job is copy/paste news from other portal and lot of people moved out from that portal is due to this reason..
Quote
 
 
-1 #4 ancy 2011-06-12 00:09
People from kanyakumari elected helan Davidson as M.P to serve them,but see whats happening,she is accompanying rajathi,to protect a Criminal named in C.B.Is chargesheet.This is the way Karunanidhi sets an example i.e service to my family is serving the country...
Quote
 
 
+7 #3 கபாலி கோவாலு காமரசு 2011-06-11 17:45
ஏம்பா ஷவுக்கு ராஜாத்தி சாப்புடல்ல தன்னி குடிக்கில்ல ங்கிறத படு ஜோரா புட்டுகினு வெக்கிரியே நான் மட்டுமீல்ல இம்மாம் பெர்ய கூட்டம். நீ எயுதி பொலம்பின,
புலிகள் மீது சேறும், இராஜீவ் காந்திக்கு சல்யூட்டும் அடிக்கும் சவுக்கு புத்தகம்.
பத்தி பதிலே கானலியே. கண்ணு வீங்க நாங்க காத்திக்கெட்க்க ிறது உனக்கு குஷாலாயிருக்கா
சொல்லிவியா பதில.
Quote
 
 
+8 #2 Suresh Raja 2011-06-11 17:14
ஆமா, இந்தம்மா ஒரு நேரம் சாப்டாததெல்லாம் ஒரு செய்தியா? இப்படி சாப்டாட்டி என்ன ஆகிடும்? அதிகபட்சம் கால் கிலோ கறி கொரஞ்சுடுமா? நல்லது தான்.
ஒரு வேலை இப்பிடி இருக்குமோ? மஞ்ச துண்டு இலங்கை விவகரத்துல உண்ணாவிரதம் இருந்த ஸ்டைல்ல இந்தம்மாவும் இருக்க முயற்சி பண்ணிருக்குமோ... :cry:
இல்லாட்டி ராம்தேவ், ஹசாரே மாதிரி ஊழலை ஒழிக்க உண்ணாநோன்பு இருந்திருப்பாங் கலோ... :o :o :o :o :o
இவுங்க டிராகுலா மாதிரி இருந்துக்கிட்டு எத்தனை மக்களோட ரத்தத்தை குடிச்சிருப்பாங ்க... சாகும் வரை சாப்டாம இருந்தாலும் யாரும் சீண்ட கூடாது... அத ஒரு செய்தியா கூட போட கூடாது அப்டிங்கறது தான் என்னோட ஆசை.
Quote
 
 
+17 #1 mani123 2011-06-11 15:33
தாயும் மகளும் ணாலும் வாயும் வயிறும் வேர தான.....பங்கு பிரிக்குர சண்டையா இருக்கும்..!
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 192 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday6513
mod_vvisit_counterYesterday18770
mod_vvisit_counterThis week50513
mod_vvisit_counterLast week95167
mod_vvisit_counterThis month272773
mod_vvisit_counterLast month382199
mod_vvisit_counterAll days13189140