முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
காலில் விழுந்த கலாநிதி…. கனிய மறுத்த சிவசங்கரன். அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 77
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
ஞாயிற்றுக்கிழமை, 12 ஜூன் 2011 23:55

 

கடந்த வாரம், கலாநிதி மாறனும், காவேரி கலாநிதியும், திடீர் பயணமாக சிங்கப்பூர் சென்றார்கள்.   இந்தச் செய்தி வெளியில் கசியக் கூடாது என்று அவர்கள் நினைத்தாலும், செய்தி பரவவும், உடல்நலக் குறைவுக்காக சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று வரும் ரஜினிகாந்தை சந்திக்கவே சிங்கப்பூர் செல்வதாக, மாறன்கள் தரப்பிலிருந்து தகவல் பரப்பப் பட்டது.

 

ஆனால், சவுக்கு எதிர்ப்பார்த்தது போலவே, அவர்கள் ரஜினியைப் பார்க்க சிங்கப்பூர் செல்லவில்லை. சிங்கப்பூர் சென்று, கலாநிதியும், காவேரி கலாநிதியும், தம்பதி சகிதமாக, சிவசங்கரனுக்கு நெருக்கமான உறவினர்களின் காலில் விழுந்திருக்கிறார்கள். சிவசங்கரனிடம் எப்படியாவது எடுத்துச் சொல்லி, புகாரை வாபஸ் பெற வேண்டும் என்று கேட்டிருக்கிறார்கள்.

 Mr_Kalanithi_Maran

ஆனால், மாறன் குடும்பத்தினரால் பல்வேறு துன்பங்களுக்கு ஆட்பட்ட, சிவசங்கரன் குடும்பத்தினர் இவர்கள் கோரிக்கைக்கு செவிசாய்க்கவில்லை என்று தெரிகிறது. மேலும், நக்கல் செய்யும் விதமாக, எது வேண்டுமானாலும் செய்வேன் என்றால், சன் டிவியையும், ஸ்பைஸ் ஜெட் விமான சேவையையும் விற்க தயாரா என்று கேட்டதும், கலாநிதி அதிர்ந்து போயிருக்கிறார்.

 

பிறகு, சிவசங்கரன் தரப்பில், சிபிஐயிடம் புகாரும், வாக்குமூலமும் கொடுத்த பிறகு, அதை வாபஸ் வாங்கினால், இந்தியாவில் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள சிவசங்கரனுக்கு கடும் நெருக்கடிகள் ஏற்படும் என்பது எடுத்துச் சொல்லப் பட்டிருக்கிறது. ஆனாலும், சளைக்காத கலாநிதி மாறன், 2000 கோடி ரூபாய் வரை, லஞ்சமாக கொடுக்க முனைந்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

 

ஆனால், சிவசங்கரனுக்கு இவர்கள் மீதான கோபம் தணியவில்லை என்று கூறப்படுகிறது.   அனந்தகிருஷ்ணனின் மேக்சிஸ் நிறுவனத்துக்கு, ஏர் செல் நிறுவனத்தை விற்க வேண்டும் என்று மாறன்கள் நெருக்கடி கொடுத்ததும் விற்க முடிவு செய்த, சிவசங்கரனுக்கு அனந்தகிருஷ்ணன் 500 கோடி ரூபாய் கொடுக்காமல் பாக்கி வைத்திருந்ததாகவும், அந்தத் தொகையை கொடுத்த பிறகே, பங்கு விற்பனை தொடர்பான ஒப்பந்தத்தை இறுதி செய்ய முடியும் என்று தெரிவித்திருக்கிறார்.

 siva

ஆனால், உடனடியாக பங்கு விற்பனையை முடித்து, ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் வழங்க வேண்டும் என்ற அவசரத்தில் இருந்த மாறன்கள், இதற்காக சென்னை காவல்துறையை பயன்படுத்தி, சிவசங்கரன் மீது நில மோசடி வழக்கு பதிவு செய்து, சிவசங்கரனையும், அவரது பெற்றோர்களையும், விரட்டியடித்து, மிரட்டியிருக்கிறார்கள். இதன் பின்புதான், சிவசங்கரன் மொத்த ஒப்பந்தத்திலும் கையொப்பமிட்டார் என்று தகவல்கள் கூறுகின்றன.

 

மாறன்கள் எவ்வளவு கெஞ்சிக் கேட்டாலும், சிவசங்கரனால் புகாரை வாபஸ் வாங்க முடியாத என்பதற்கு, இது மட்டும் காரணமல்ல.   சிவசங்கரன் புகாரை வாபஸ் வாங்கினால், சிவசங்கரன் மீது, சிபிஐ குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்வதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருப்பதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

சிவசங்கரனுக்குச் சொந்தமான ஹைடெக் ஹவுசிங் என்ற நிறுவனம், கலைஞர் டிவிக்கு 50 கோடி ரூபாய் வழங்கியிருப்பதும் சிபிஐ விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. சிவசங்கரன் இந்தத் தொகையை நேரடியாக வழங்காமல், சகாரா குழும நிறுவனங்கள் என்ற நிறுவனம் மூலமாகவும், மொரீஷியசைச் சேர்ந்த டெலிகாம் இன்வெஸ்ட்மென்ட்ஸ் என்ற இரண்டு நிறுவனங்கள் மூலமாக முதலில் பணத்தை அனுப்பி, அதன் பிறகு, சென்னையைச் சேர்ந்த, வீட்டா டெவலப்பர்ஸ் அன்ட் பில்டர்ஸ் மற்றும், ஸ்கை சிட்டி பவுண்டேஷன் ஆகிய இரண்டு நிறுவனங்கள் மூலமாக கலைஞர் டிவிக்கு இரண்டு தவணைகளில் 50 கோடியை வழங்கியிருப்பது தெரிய வந்திருக்கிறது.

 

சிவசங்கரன் சிபிஐக்கு ஒத்துழைப்பு கொடுக்க மறுக்கும் பட்சத்தில், சிபிஐ, கலைஞர் டிவிக்கு 200 கோடி ரூபாய் கொடுத்தாக தாக்கல் செய்துள்ள இரண்டாவது குற்றப் பத்திரிக்கை போலவே, மற்றொரு குற்றப் பத்திரிக்கையை தாக்கல் செய்து, சிவசங்கரனையும் சிறைக்கு அனுப்ப தயங்காது என்று கூறப்படுகிறது.

 

எஸ்டெல் என்ற நிறுவனம், முதலில் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பெறுவதற்கு, சிவசங்கரன் மறைமுகமாக, சென்னையைச் சேர்ந்த வீட்டா டெவலப்பர்ஸ் அன்ட் பில்டர்ஸ் மற்றும், ஸ்கை சிட்டி பவுண்டேஷன் ஆகிய இரண்டு நிறுவனங்கள் மூலமாக எஸ்டெல் நிறுவனம் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பெறுவதற்கு, உதவி செய்து விட்டு, ஒதுக்கீடு முடிந்ததும், சிவா குழுமம் என்ற சிவசங்கரனின் நிறுவனம் மூலமாக எஸ்டெல் நிறுவனத்தை விலைக்கு வாங்கியதும் சிபிஐ கவனத்துக்கு வந்திருக்கிறது.

 

எஸ்டெல் நிறுவனத்துக்கும், குறைந்த விலையில் லைசென்ஸ் ஒதுக்கப் பட்டு இருப்பதாக சிஏஜி அறிக்கையிலேயே சுட்டிக் காட்டப் பட்டிருந்தது குறிப்பிடித் தக்கது.

 stel-3G-launch-price-tariff-coverage_1

இந்த சூழலில், எஸ்டெல் நிறுவனத்தை சிவசங்கரன் வளைத்ததும், அவர் நிறுவனங்கள் கலைஞர் டிவிக்கு 50 கோடி ரூபாய் கொடுத்ததையும் வைத்து, எளிதாக ஒரு குற்றப் பத்திரிக்கையை தாக்கல் செய்ய முடியும்.

 

ஆனால், பெரிய முதலைகளான மாறன் சகோதரர்களைப் பிடிப்பதற்காக, சிவசங்கரன் மீது, இப்போதைக்கு நடவடிக்கை இருக்காது என்றே சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

சிவசங்கரனிடம் நடத்திய பேச்சுவார்த்தை, எதிர்ப்பார்த்த வெற்றியை தராத காரணத்தால், மாறன்கள் மிகுந்த கலக்கத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.   அனைத்து பத்திரிக்கைகளுக்கும் நோட்டீஸ் அனுப்பும் வழக்கத்தை கொண்டிருந்த மாறன்கள், இப்பொதெல்லாம் நோட்டீஸ் அனுப்பும் பழக்கத்தையும் கைவிட்டு விட்டார்கள் என்று தகவல்கள் கூறுகின்றன.

 

மாறன்களின் இந்த நிலைக்கு காரணமாக, அவர்கள் தொழில் நடத்துகையில் துளி கூட நியாயம் பார்க்காமல் நடந்து கொண்டதே காரணம் என்று கூறப்படுகிறது. சிவசங்கரனோடு மோதல் ஏற்பட்டவுடன், அவரது ஸ்டெர்லிங் நிறுவனம் தொடர்பாக எந்தச் செய்தி வந்தாலும், அதை தவறாக சித்தரிக்குமாறு, பல முறை உத்தரவிடப் பட்டிருப்பதாக, சன் டிவி ஊழியர்களே குறிப்பிடுகிறார்கள்.

 Dayanidhi_Kalanidhi_Maran_Loyola_Alumni_Association_2010_stills_03

மாறன்கள் ஈடுபட்ட எந்தத் தொழிலிலும், அவர்கள் நேர்மையாக நடந்து கொண்டதே இல்லை என்று தொழில் வட்டாரங்களில் கூறப்படுகிறது. இவர்களின் இந்த நாணயமற்ற போக்கு எரிச்சலை ஊட்டினாலும், அவர்களின் அரசாங்க செல்வாக்கு காரணமாக, எந்த தொழில் அதிபரும் அவர்கள் மீது புகார் கொடுக்க முன்வரவில்லை என்றும், ரத்தன் டாடாவே உரிய நேரம் வரும் வரை அமைதியாக இருந்ததையும் சுட்டிக் காட்டுகிறார்கள்.

 

வழக்கமாக, நன்றாக லாபத்தில் நடந்து கொண்டிருக்கும் ஒரு தொழிலில் ஈடுபட வேண்டும் என்றால், அந்தத் தொழில் அதிபரை அணுகி, தொழிலை தங்களுக்கு விற்று விடுமாறு கேட்பார்களாம். அவ்வாறு விற்கப்படவில்லை என்றால், சன் டிவியில் அந்த நிறுவனம் தொடர்பாக மோசமாக சித்தரித்து செய்தி வெளியிடுவது இவர்களுக்கு கைவந்த கலை என்றும், சுட்டிக் காட்டப் படுகிறது.

 

இப்படி அநியாயத் திமிரில் அலைந்து கொண்டிருந்த மாறன் சகோதரர்களுக்கு, தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியில் இருந்து இவர்கள் மீளுவது மிக மிக கடினம் என்று விபரமறிந்தவர்கள் கூறுகிறார்கள்.

 

Comments  

 
0 #67 Karamanai 2011-06-25 11:39
Saravana Bhavan is starting a branch inside Tihar premises to cater inmates and visitors. Wheel Chair facility will be available .
Quote
 
 
+2 #66 Karamanai 2011-06-25 11:37
There are hundreds of families who have been crushed and cheated by this family. I am only surprised how still 25-30 % of Tamilians go after this cheats and vote for them. Myself and my family alone should earn, buy properties and enjoy.But surprisingly they are not aware that one person from above is watching and will not leave them unpunished.
Quote
 
 
+1 #65 suresh velu 2011-06-20 19:38
தெருவில் இட்லி கடை வைத்துள்ள பெண்மணிக்கு உள்ள நியாய உணர்வும், நேர்மையும், இந்த சனியங்களுக்கு ஏன் வரமாட்டேங்குது.
Quote
 
 
+1 #64 shivatamil 2011-06-15 23:59
என்னதான் ஊர ஏமாத்தி சம்பாதிச்சாலும் கடைசியில் ஒரு கைப்பிடி சாம்பல் தான்.. பிரபல கேடிகள் கைது எப்போது?
Quote
 
 
-1 #63 Nagarajan 2011-06-15 19:40
வழக்கமாக, நன்றாக லாபத்தில் நடந்து கொண்டிருக்கும் ஒரு தொழிலில் ஈடுபட வேண்டும் என்றால், அந்தத் தொழில் அதிபரை அணுகி, தொழிலை தங்களுக்கு விற்று விடுமாறு கேட்பார்களாம். அவ்வாறு விற்கப்படவில்லை என்றால், சன் டிவியில் அந்த நிறுவனம் தொடர்பாக மோசமாக சித்தரித்து செய்தி வெளியிடுவது இவர்களுக்கு கைவந்த கலை என்றும், சுட்டிக் காட்டப் படுகிறது" - இப்பொழுதாவது பரமஹம்ச நித்யானந்தர் நல்லவர் என்று நம்புவீர்களா?"
Quote
 
 
+3 #62 narikutty 2011-06-15 01:51
இந்த கேடி சகொதரர்கள் ஜெயிலுக்கு போவது உருதி ஆஹி விட்டது. ஆனா இவனுக அனியாயாமா சம்பாதிஷது என்ன பந்நுவது. இவனுக கிட்ட இருக்க 4 லட்ஷம் கோடிய அரசாஙமே எடுதுகனும். அப்புரம் இந்தியாவே முன்னெரிடும்.
Quote
 
 
+7 #61 Anony 2011-06-14 22:17
Yesterday's news: Tihar jail authorities decided to serve idly and dosa. It seems they are expecting more crowd from TN! :lol:
Quote
 
 
+5 #60 கோபு 2011-06-14 17:39
எங்களுக்கு 2012 படம் பாக்கர மாதிரி இருக்கு "நிதி"ங்க மண்டய பிச்சிக்கிறத பாக்க. என் நண்பர்கள் 15 பேர்களுக்காவது இந்த தளத்தை பரிந்துரை செய்திருக்கிறேன ் என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். மென்மேலும் சவுக்கின் துணிச்சல் பதிவு தொடரட்டும். அதற்கு மக்களாகிய நாங்கள் இருக்கிறோம், உங்களுக்கா..... சவுக்குக்கு வாழ்த்துக்கள்...
Quote
 
 
-2 #59 nadaraj 2011-06-14 17:34
enakku thereium nee ean karuthukalai veledamattai endru savukku is waist fraud
Quote
 
 
-1 #58 nadaraj 2011-06-14 17:20
dmk vai patrei ealuthum savukku samacher kalvil arasu nadakkum vetham sary endru solgirtha ean athai battrei ealutha villai nadu nilai endru sollikondu kalainger kudumbathai mattum ean savukku eathiraga karuthu sonnal athaiyum thalathil veliyuduvathu illai jaya vai pattrei ealthi nee tamil nadil irukkiraya endru sattamantrathai mattreyathai nee athaarekiraya ean athai battrei ondrum ealutha villai ealuthinal tamilnadil irukka mudiyathu endra payama irukkira makkalai muddal aakkatha manavargilin kalvil veelayaduvathai nee aatharegiraya ethai ellam veelakke viddu savukkai nadu neelayaga news vailedavum tharpothu nadakkum aathchi tavarukalai suttikattavendu m athuthan nadu neelai ellai thavra nadakkavillai engiraya varungal nan kattugiran munbu 4 unit manal 8000 rs now 2 unit manal 8000 rs ethai ellam ean neengal ealuthuvathu ellai ean meethu thavaru irunthal mannikkavum nan bala kalamaga savukku thalam padippavan endra murayil solgirain ungalidam nadu neelai ellai unmaien urikkal endru sollikondu oru thalaibatchamag a oru paper ullathu athu neengalum ahaga kudathu thanks
Quote
 
 
0 #57 நல்லவன் 2011-06-14 17:02
எல்லாம் நல்லபடியா நடக்கட்டும்... சந்தோஷம்....
Quote
 
 
0 #56 ம.பொன்ராஜ் 2011-06-14 16:24
[ஃஉஒடெ நமெ="ஸ்.பிரசன்னா"]உங்க தெருவில் இட்லி கடை வைத்துள்ள பெண்மணியிடம், நீங்க சாப்பிட்டதை விட அதிக பணம் கொடுத்து விட்டு, மறந்தார் போல் வெளியே வந்து பாருங்கள். அந்த அம்மா உங்களை கூப்பிட்டு மீதி சில்லறையை கொடுப்பார்.

தெருவில் இட்லி கடை வைத்துள்ள பெண்மணிக்கு உள்ள நியாய உணர்வும், நேர்மையும், இந்த சனியங்களுக்கு ஏன் வரமாட்டேங்குது.[/ஃஉஒடெ]

WELCOME TO THE CORPORATE WORLD WHERE YOU CAN FIND NO MERCY...!!!
Quote
 
 
+3 #55 pugazh 2011-06-14 13:40
please start countdown for the arrest of MARAN brothers....
Quote
 
 
+4 #54 RAGAVAN 2011-06-14 12:43
THESE KD BROTHERS MAYCOME OUT FROM DMK AND TRY TO JOIN WITH ADMK OR CONGRESSTO SAFE GUARD THEIR BUSINESS. BOTH CONG & ADMK SHALL BE VERY CAREFUL IN NOT ALLOWING THEM TO JOIN WITH THEM. KD'S DESTINATION ......AT CBI'S HANDS
Quote
 
 
+2 #53 Devi 2011-06-14 12:38
ஆண்டவன் இருக்கான்!இவனுங ்க எல்லாம் மாட்டுறத பாக்கும் போது தோனுது..சவுக்கு, உங்கள் மீது அன்பும் மரியாதையும் வைத்து இருக்கும் வாசகர்களுக்காக உங்கள் பணியை தொடர வேண்டும், கட்டாயமாக!
Quote
 
 
+3 #52 ENGLISH KAARI 2011-06-14 11:37
கருணாநிதி குடும்பம்! கவுருவ பிச்சையின் சுருக்கெலுத்து . டேய்! கலாநிதி பேசாம மீசய எடுத்துட்டு கன்டாங்கி சேல வாங்கி கட்டிக்க , சிவசங்கரன் உனக்கு பிடித்த கலர்ல வாங்கி வச்சிருக்கார்! வர்டா தம்பி!
Quote
 
 
+25 #51 Senthilkumar S 2011-06-14 08:05
சார்... அப்படியே தினகரனில் பழைய ஊழியர்கள் (கேபிகே குமரனிடம் வேலைபார்த்தவர்க ள்) 300க்கும் அதிகமானோருக்கு இன்னமும் சம்பள உயர்வு வழங்காமல் பழிவாங்கிக் கொண்டிருக்கிறா ர்கள். நாற்பது ஐம்பது வயதை கடந்த பலர்... இந்த வயசுக்கு மேல வேறு எங்கே போய் வேலைதேடி பெர்பார்மன்ஸ் காட்டுவது, மகன் - மகள் திருமண வயது நெருங்குகிறதே... என்ற குழப்பத்தில் குறைந் சம்பளத்தில் அதாவது 4000 முதல் 7000 வரயிலான சம்பளத்தில் மன வேதனையோடு, பக்கத்து சீட்டில் உட்கார்ந்திருக் கிற... புதிய ஊழியருக்கு 20 ஆயீரம் வரை சம்பளம் வழங்குவதை பார்த்து நெந்துபோய் இருக்கிறாங்க. வேலையை விட்டு போனாலும் செட்டில்மென்ட் கிடைக்காது. நல்லா வேலை செய்ய தெரிஞ்ச அவங்களோட வயித்தெரிச்சல் கண்டிப்பா கேடி சகோதரர்களை நிச்சயம் அழிக்கும். சன்டிவியின் அழிவு நெருங்கும் நாள் நெருங்க நெருங்க... என்னைப்போன்ற பாதிக்கப்பட்டவர ்கள் சந்தோசப்படுவார் கள். அழிய வேண்டும் இந்த கேடிகளின் ராஜ்ஜியம்.

- தினகரன் முன்னாள் நிருபர்
Quote
 
 
+18 #50 S. Ezhil Duwaraka 2011-06-13 23:31
பொறுக்கி பய எல்லாம் எதுக்கு பூமிக்கு பாரமா? போட்டு தள்ளு...போட்டு தள்ளு!!!
Quote
 
 
+4 #49 M RAMASWAMY 2011-06-13 22:23
WHERE IS OUR KUNJAMANI.
WHEN IS HE GOING TO FALL IN THE FEET JAYA.
Quote
 
 
+5 #48 Panndyan Ramasamy 2011-06-13 21:54
உப்புத்தின்ன்டவ ன் தண்ணீ குடிக்கிறான்.அவ்வளவுதான்.
Quote
 
 
+41 #47 S.பிரசன்னா 2011-06-13 21:54
உங்க தெருவில் இட்லி கடை வைத்துள்ள பெண்மணியிடம், நீங்க சாப்பிட்டதை விட அதிக பணம் கொடுத்து விட்டு, மறந்தார் போல் வெளியே வந்து பாருங்கள். அந்த அம்மா உங்களை கூப்பிட்டு மீதி சில்லறையை கொடுப்பார்.

தெருவில் இட்லி கடை வைத்துள்ள பெண்மணிக்கு உள்ள நியாய உணர்வும், நேர்மையும், இந்த சனியங்களுக்கு ஏன் வரமாட்டேங்குது.
Quote
 
 
0 #46 jp 2011-06-13 18:52
BAD BROTHERS
Quote
 
 
0 #45 T G Ramamurthy 2011-06-13 18:28
நித்தம் நித்தம் மாறுகின்ற்தெத்த ்னையொ
நெஞ்சில்நினைததி ல்நடந்தது தான் எட்தனையொ
வினை விதைத்தவன் வினை அறுப்பான்
திணை விதைத்தவன் திணை அறுப்பான்
அநியாயமக மற்றவர்க்கு ட்தொன்டிய குழியில் அவனெய் விழுவான்
Quote
 
 
0 #44 Entoor Dilip 2011-06-13 17:28
:P
Good news coming up. Happy New year 2011 to all..
We wish more happenings likewise.
Quote
 
 
+13 #43 Choco 2011-06-13 16:53
பார்த்தாலே பத்திக்கிட்டு வருது.. எந்த தொழிலிலும் அப்படி என்ன ஏகபோகம் வேண்டிக் கிடக்கு? தான் மட்டுமே.. தனது நிறுவனம் மட்டுமே என எத்தனை சுயநலப் போக்கு? மாறன்களா உங்க ஆட்டம் க்ளோஸ்! வருந்தி பிரயோஜனம் இல்லை.. திருந்தப் பாருங்கள்! - சாட்டையடி சாக்கோ
Quote
 
 
+4 #42 Vaedhampudhidhu 2011-06-13 16:33
Quoting Basha Bhai:
Pl find out full assets of Marans.If you give proof of IT cheating by Marans - 10% will come to Savukku which will be helpful


Basha bhai, Idea nalla iruku sonia auntyku maaran a romba pudikum. Rahul ku advisor a ellam potaanga adhanala edhukum konjam gavanama seiyanum edha..

Sari andha vetti paya p.chidambaram ena seiraan? avanapathi yaen savukkula onumae varadhillai. Andha payaloda magan sariyana pombala porukinu kelvipataen
Quote
 
 
0 #41 balasubramani 2011-06-13 16:31
ha ha ha :D :D :D
Quote
 
 
0 #40 aha 2011-06-13 16:30
Ur focus shud not be only on dmk it shud be on others also.in this case,on sivasankaran too.from CBI mnay big corporate goons are getting slipped.
Quote
 
 
+9 #39 aha 2011-06-13 16:27
Y captain is batting at last?He is a master blaster na.Y this partiality?Because he doesnt wear thread?


Quoting mahesh12:
Till now bowlers were only from Congress. Wait and watch when bowlers from ADMK and BJP comes..................Quoting Regular Reader:
D.M.K. Cricket Team [Score Board]
1.) A.Raja - Caught & Bowled (1760000...)
2.) Kani Mozhi - Caught & Bowled (214)
3.) Dayanathi Maran - Run Out (cbi/media) 3rd umpire result awaiting
4.) Kalanathi Maran - Batting
5.) Azhagiri
6.) Stalin
7.) Udayanithi Stalin
8.) Dayanathi Azhagiri
9.) Raajathi
10.) Dayaalu
11.) Karunanithi

Innum Amma fielding-ae set pannala ... Innum bowling-um start agala, athukkula wicket poguthae ...
Quote
 
 
0 #38 Vaedhampudhidhu 2011-06-13 16:27
Ovoru tamil varusha pirapirkum, silent add varumae suntv adieduthu vaikiradhunu adhu epdi thaana, indha varusham siva sankaran sondhakaaran kaalil vila adi eduthu vaithirukiradhu adhu thavariyadhaal mannai kavinadhu koduka sollunga supera irukum
Quote
 
 
+26 #37 தஞ்சை குணா 2011-06-13 14:57
சிவசங்கரன் சார் KD சகோதரர்கள் உங்கள் காலிலும் விழுவார்கள் காலை அமுக்கியும் விடுவார்கள்.இப்போதைய சூழ்நிலையை சமாளிக்க எதனையும் செய்வார்கள். நாளை பலம் அடையும் போது காலை வாரி விடுவார்கள் ஏறி மிதிப்பார்கள்.ஆனால் முன்பு போல் அவர்களால் பலமடைய முடியாது.

Kd சகோதரர்கள் மீது நமக்கு தனிப்பட்ட வெறுப்பு கிடையாது. ஆனால் அவர்கள் மிகவும் மோசமான வியாபார உத்திகளை கையாண்டிருக்கிற ார்கள். இப்படிப்பட்டவர் கள் தண்டிக்கப்பட வேண்டும். அப்போதுதான் மற்றவர்களுக்கு அது பாடமாக அமையும். மைக்ரோசாப்ட் நிறுவனம் கூட தவறான வியாபார உத்தியை கடைபிடித்ததர்க் காக தண்டிக்கப்பட்டத ே. இவர்கள் அவர்களைவிட பலமடங்கு மோசமான வியாபார உத்திகளை கையாண்டிருக்கிற ார்கள்.
யாரும் இவர்களுக்காக பரிந்து பேசாதீர்கள்.
Quote
 
 
+3 #36 paandiyan 2011-06-13 14:17
actually it was vice versa. if you read my response to the comment he is saying why still targeting karuna. my view is nakeeran, vikatan never raise voice in pervious goernment not like savukku. may be my view point is not reaches properly here..
Quoting சோழன்:
இங்கு பாண்டியன் என்ற ஒரு நண்பரின் கருத்துக்கு என்ன அர்த்தம் என்று புரியவில்லை! ஆட்சி மாறியதும் ஜெயலலிதாவை பற்றி மட்டுமே குறைகளை எழுத வேண்டும், திமுகவினரின் அயோக்கியத்தனங்க ள் ஆட்சி மாறி விட்டதால் கண்டுகொள்ளப்படக ்கூடது என்பதா? நடந்த, நடக்கிற அயோக்கியத்தனங்க ள் இங்கு எழுதப்படுகிறது, சில குறைகள் இருந்தாலும்! அவசரப்பட்டு ஜெயாவின் மேல் அதிக குற்றச்சாட்டுகள ை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டு இருக்குறீர் போலும்! பொறுமை காக்கவும்! ஒரு மாதம் தானே ஆகிறது, அதற்குள் ஜெயாவப்ப்றி பக்கம் பக்கமாக குறைக்களை படிக்க ஆசைப்பட்டால் எப்படி?
Quote
 
 
+23 #35 Abdul Rahman - Dubai 2011-06-13 13:39
அன்புள்ள சவுக்கு :

எப்போதும் எந்த சூழ்நிலையிலும் நிதானமாகவும், தைரியமாகவும் இருக்கும் நீ, உன்னைப் பற்றி சில வாசகர்கள் ஏதோ கூறிய கருத்தினால், நேற்று மிகவும் மன வேதனைப்பட்டு, சவுக்கை நிறுத்தலாமா? என்ற எண்ணத்தின் உச்சிக்கே சென்று விட்டாய்.

நேற்றைய உனது பதிவைப் பார்த்து, (குறிப்பு: பதிவு செய்த சில மணி நேரங்களிலேயே, அதுவும் விடுமுறை நாளான ஞாயிறு அன்று) எத்தனை நூற்றுக் கணக்கான வாசகர்கள் உனக்காக ஓடோடி வந்தார்கள் என்று கவனித்தாயா? (அவற்றில் ஒரு சிலர் உன்னை திட்டியும்தான் - அது வேறு விஷயம்).

காரணம், விடுமுறையைக்கூட பெரிது படுத்தாமல், பல ஆயிரம் பேர் உன்னை தினமும் (ஒவ்வொரு நிமிடமும் - ஒவ்வொரு நொடியும்) கவனித்துக் கொண்டு இருக்கிறார்கள் என்று உனக்கு புரிகிறதா??

நூறு சதவீதம் நல்ல பெயர் யாராலுமே எடுக்க முடியாது. நடிகர் சிவாஜி கணேசனை "நடிகர் திலகம்" என்று பலரும் பாராட்டுகிறோம். அவரையே "ஓவர் ஆக்டிங் பேர்வழி" என்று நகைப்பு செய்வோரும் இருக்கத்தானே செய்கிறார்கள்?

"படையப்பா" படத்தில் வரும் பாடலில் ஓர் அருமையான வரி: "வாழ்க்கையில் ஆயிரம் தடைக் கல்லப்பா.... தடைக் கல்லும் உனக்கொரு படிக்கட்டப்பா..." என்று உன் பணியை தொடரு.
Quote
 
 
+1 #34 v.chandran 2011-06-13 13:33
engal thangam thiraipda vetri villavil pesiya MURASOLI MAARAN kadanil moolhi irundha engalin MEKALA PICTURES niruvam, makkal thilagam M.G.R ,panam vaangamal intha padathai nadithuk koduthadhan moolam ,kadanilirundhu vidupattu, ilabathai eatti ullthu. etharkaha 'engal kudumbame vaal naal muludhum M.G. r avahalukku kamaip pattulloam. endr pesinar. andha maaranin kudumbam indru ulaga koodeesvararkal pattiyalil idam pidithathu eppadi?
Quote
 
 
+14 #33 S. பிரசன்னா 2011-06-13 13:27
எளியாரை வலியார் வாட்டினால், வலியாரை தெய்வம் வாட்டும்.

இது இவர்களின் ஒட்டு மொத்த குடும்பத்திற்கு ம் பொருந்தும்.
Quote
 
 
-35 #32 syibu 2011-06-13 13:16
உஙகளூக்கு நடு நிலமையை விட மு.க குடும்பதினர் மேல் உள்ள் வெறுப்பு தான் அதிகமதிகம் உள்ளது.

நீங்கள் எப்போது மாறுவீர்கள் என்று பார்போம்!

இப்படியே நீங்கள் தொடர்ந்தால் பல நடுநிலையாளர்களை இழக்க நேரிடும்
Quote
 
 
+1 #31 karthi 2011-06-13 13:13
சி,பி,ஐ தன்டிக்கவேன்டும
Quote
 
 
+2 #30 karthi 2011-06-13 13:11
சி.பி.ஐ தன் கடமையை செய்ய வேன்டும்
Quote
 
 
+7 #29 சோழன் 2011-06-13 12:28
இங்கு பாண்டியன் என்ற ஒரு நண்பரின் கருத்துக்கு என்ன அர்த்தம் என்று புரியவில்லை! ஆட்சி மாறியதும் ஜெயலலிதாவை பற்றி மட்டுமே குறைகளை எழுத வேண்டும், திமுகவினரின் அயோக்கியத்தனங்க ள் ஆட்சி மாறி விட்டதால் கண்டுகொள்ளப்படக ்கூடது என்பதா? நடந்த, நடக்கிற அயோக்கியத்தனங்க ள் இங்கு எழுதப்படுகிறது, சில குறைகள் இருந்தாலும்! அவசரப்பட்டு ஜெயாவின் மேல் அதிக குற்றச்சாட்டுகள ை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டு இருக்குறீர் போலும்! பொறுமை காக்கவும்! ஒரு மாதம் தானே ஆகிறது, அதற்குள் ஜெயாவப்ப்றி பக்கம் பக்கமாக குறைக்களை படிக்க ஆசைப்பட்டால் எப்படி?
Quote
 
 
+19 #28 mani123 2011-06-13 11:42
எங்க ஊர்க்காரர் ஒருவர் சென்னையில் உள்ள உதயம் தியேட்டரை வாங்கி ஷாப்பிங் மால் கட்ட வந்தார். அவரிடம் 60% கேட்டதில் தெரித்து ஒடி விட்டாராம் ஊருக்கே...அவ்வளவு நல்லவர்களாம் கேடி பிரதர்ஸ்.
Quote
 
 
+6 #27 paandiyan 2011-06-13 11:28
what a fantastic comment.. so as per your view then what about Nakkeeran?? what about vikatan?? what about Kumudam?? did you read all those magazines in last 5 years? making comment in one blog is very easy. take some quote from famous people (Bharati is helping us till date) and add some JUNK text and go on portal by portal.. many people time pass is like this.......

Quoting Pandiak:
புனிதர்கள் பதிக்கும் ஒவ்வொரு சுவடும் அவர்கள் அடுத்த காலடியை எடுத்து வைக்கும் முன்னே நிறம் மாறிவிடுகின்றன - மானுஷ்ய புத்திரன்.

உடனே என்னை மானுஷ்ய புத்திரனின் விசுவாசி என்று நினைத்து விடாதீர்கள். அந்த வரி பிடித்ததாலும் உங்களுடைய போக்கு மாறிக்கொண்டிருப ்பதாலும் இதைவிட அதைச் சுட்டிக்காட்டுவ தற்கு வேறு அழகான வாக்கியம் எனக்குத் தெரியாததாலும் பதிவு செய்தேன்.

உங்களுடைய துணிவும், உழைப்பும் வீணாகிறது அல்லது தவறாகப் பயன்படுகிறது என்றே உங்களின் சமீபத்திய போக்குகள் காட்டுகின்றன.

"
மாறன்கள் ஈடுபட்ட எந்தத் தொழிலிலும், அவர்கள் நேர்மையாக நடந்து கொண்டதே இல்லை என்று தொழில் வட்டாரங்களில் கூறப்படுகிறது. இவர்களின் இந்த நாணயமற்ற போக்கு எரிச்சலை ஊட்டினாலும், அவர்களின் அரசாங்க செல்வாக்கு காரணமாக, எந்த தொழில் அதிபரும் அவர்கள் மீது புகார் கொடுக்க முன்வரவில்லை என்றும், ரத்தன் டாடாவே உரிய நேரம் வரும் வரை அமைதியாக இருந்ததையும் சுட்டிக் காட்டுகிறார்கள் ."

யார்தான் நேர்மையாக தொழில் செய்கிறார்கள்? குறிப்பாக கார்ப்பரேட் கம்பெனிகள். டாடாவே என்கிற பொழுது உங்கள் உள்ளே இருக்கிற பூணைக் குட்டி வெளியே வருகிறது. இல்லை நான் சிவசங்கரனின் தகிடுதங்களையும் எழுதி உள்ளேன் என்று வாதாடுவீர்கள். நான் நடு நிலையானவன் என்று காட்டிக்கொள்ள திணிக்கப்பட்ட பகுதி அவை என்று வாசகர்களுக்கு எளிதில் விளங்கும். சமீப காலமாக உங்கள் நடுநிலையை நிறுபிக்க நிறைய முயற்சி செய்கிறீர்கள்.

தனி மனிதர்களை எதிர்த்து நீண்ட நாள் அரசியல் செய்து கொண்டிருக்க முடியாது. நாம் எதிர்க்க வேண்டியது அதற்கு பின்புலமான கட்டமைப்புகளை. கருணாநிதி தோற்கடிக்கப்பட் ட உடனேயே உங்களது போக்கு மாறி இருக்க வேண்டும். ஆனால் தொடர் கட்டுரைகள் சலிப்பையும் சந்தேகத்தையுமே ஏற்படுத்துகின்ற ன.
Quote
 
 
+20 #26 friend 2011-06-13 11:16
kalaignar tv, ss music, raj tv டி வி சேனல்களால் எப்படிஎல்லாம் மக்கள் ஏமாற்றப்படுகிறா ர்கள். இன்று மாலை ராஜ் டி வி யில் யார் இந்த பிரபலங்கள் என்ற நிகழ்ச்சி நடந்தது. அதில் இரண்டு திரைப்பட நடிகர், நடிகைகளின் பாதி முகம் ஒரே படமாக இணைத்து ஒரு போட்டி நடத்தப்படுகிறது . போட்டி என்னவோ ரொம்ப ஈசிதாங்க. அந்த [படத்தில் உள்ள நடிகர், நடிகைகள் யார என போன் செய்து சொல்ல வேண்டும். சரியான பதில் சொல்பவர்களுக்கு ருபாய் முப்பதாயிரம் பரிசாக தரப்படும் என அறிவிப்பு செய்கிறார்கள். மொபைல் போனிலிருந்து மட்டுமே கால் செய்ய வேண்டுமாம்.
ஒருவர் போன் செய்து மீரா ஜாஸ்மின் மற்றும் ஸ்ரீகாந்த் என்று சொல்கிறார். இன்னொருவர் சினேகா மற்றும் லாரன்ஸ் என்கிறார். இப்படியே மாறி மாறி ஒவ்வொருவரும் ஒவ்வொரு பெயர்கள் சொல்கிறார்கள். போட்டியை நடத்துபவர் தவறான பதில் என்கிறார். நேயர்களை மீண்டும் மீண்டும் போன் செய்யுமாறு தூண்டுகிறார். ஆனால் போன் செய்பவர்கள் தவறான பெயர்களையே சொல்கிறார்கள். விக்ரம், விக்ராந்த், பரத், ஷ்ரேயா, என தவறாகவே சொல்கிறார்கள். நிகழ்ச்சி முடிய கொஞ்சம் நேரம் இருக்கையில் ஒருவர் ஜோதிகா என சொல்கிறார், நிகழ்ச்சியை நடத்துபவர் சரியான விடை என்கிறார். ஆனால் அவருக்கு நடிகர் யாரென்று தெரியவில்லை என்கிறார். இப்படியே ஒரு அரை மணிநேரம் மக்களை ஏமாற்றுகிறார்கள ்.
என்ன ஏமாற்றுகிறார்கள ் என கேட்கிறீர்களா? நம் பணம் தான் அவர்களுக்கு தேவை. போன் கால் ஒரு நிமிடத்துக்கு ரூபாய் பத்துக்கும் குறையாமல் வசூல் செய்கிறார்கள். அதிலும் நாம் போன் செய்த உடனே லைன் கிடைக்காது. வெய்ட்டிங் இருங்கள் என சொல்வார்கள். அப்போதிருந்தே நம் பணம் அவர்களால் பிடுங்கப்பட ஆரம்பிக்கும். நாமும் பொறுத்திருந்து பார்ப்போம். நமக்கு லைன் கிடைக்கவே கிடைக்காது. ஆமாங்க, நிகழ்ச்சி தயாரிப்பவர்கள் அவர்களாகவே போன் செய்த மாதிரி தவறான விடையை சொல்வார்கள். இதனால் மக்கள் போன் செய்யும் போது வெய்ட்டிங் கால் ஆகும். ஆனால் நம்முடைய கால்கள் நிகழ்ச்சி முடியும் வரை வெய்ட்டிங்லேயே இருக்கும். அதற்குள் நாம் பல நூறுகளை இழந்திருப்போம். இது போல ஏமாற்றுபவர்கள் இருந்து கொண்டே தான் இருப்பார்கள். நாம் கவனமாக இருக்க வேண்டும்.
வீடியோ பாருங்கள் உங்களுக்கே புரியும்.

மேற்கண்ட பிரபலங்கள் யாரென்று நீங்களே சொல்லுங்கள
Quote
 
 
+20 #25 ஒரு தமிழன் 2011-06-13 10:41
ஆரம்ப காலத்தில் சன் டீ.வி.யில் ஜோடிப் பொருத்தம் என ஒரு நிகழ்ச்சி நடத்துவார்கள். நாலு ஜோடிகள் அதில் பங்கேற்கும், முதல், 2ம், மற்று ம் ஆறுதல் பரிசுகள் என வெவ்வேறு வண்ண கிஃப்ட் பேப்பரில் சுற்றிய ஃப்ளாஸ்க்கை பரிசு கொடுத்து பங்கேற்பாளர்களு க்கும், நிகழ்ச்சி பார்க்கிற நேயர்களுக்கும் காதுல பூ சுத்துவார்கள். இது அவர்களுடைய ஆரம்பக் காலக் கேடித்தனம்!
Quote
 
 
+5 #24 jaya 2011-06-13 10:30
[ஃஉஒடெ நமெ="லூசு தமிழன்"]இதயம் இனிக்கிறது , கண்கள் பனிக்கின்றன, காதில் தேன் பாய்கிறது[/ஃஉ
kathil then paynthaal ee moikkum
Quote
 
 
+30 #23 keeri 2011-06-13 10:21
உலக தொலைகாட்சிகளில் முதன் முறையாக மாறன் சகொதரர்கள் கைது.... சன் டிவி ஒழீந்தது...
Quote
 
 
+25 #22 mahesh12 2011-06-13 10:16
Till now bowlers were only from Congress. Wait and watch when bowlers from ADMK and BJP comes..................Quoting Regular Reader:
D.M.K. Cricket Team [Score Board]
1.) A.Raja - Caught & Bowled (1760000...)
2.) Kani Mozhi - Caught & Bowled (214)
3.) Dayanathi Maran - Run Out (cbi/media) 3rd umpire result awaiting
4.) Kalanathi Maran - Batting
5.) Azhagiri
6.) Stalin
7.) Udayanithi Stalin
8.) Dayanathi Azhagiri
9.) Raajathi
10.) Dayaalu
11.) Karunanithi

Innum Amma fielding-ae set pannala ... Innum bowling-um start agala, athukkula wicket poguthae ...
Quote
 
 
-29 #21 Pandiak 2011-06-13 10:10
புனிதர்கள் பதிக்கும் ஒவ்வொரு சுவடும் அவர்கள் அடுத்த காலடியை எடுத்து வைக்கும் முன்னே நிறம் மாறிவிடுகின்றன - மானுஷ்ய புத்திரன்.

உடனே என்னை மானுஷ்ய புத்திரனின் விசுவாசி என்று நினைத்து விடாதீர்கள். அந்த வரி பிடித்ததாலும் உங்களுடைய போக்கு மாறிக்கொண்டிருப ்பதாலும் இதைவிட அதைச் சுட்டிக்காட்டுவ தற்கு வேறு அழகான வாக்கியம் எனக்குத் தெரியாததாலும் பதிவு செய்தேன்.

உங்களுடைய துணிவும், உழைப்பும் வீணாகிறது அல்லது தவறாகப் பயன்படுகிறது என்றே உங்களின் சமீபத்திய போக்குகள் காட்டுகின்றன.

"
மாறன்கள் ஈடுபட்ட எந்தத் தொழிலிலும், அவர்கள் நேர்மையாக நடந்து கொண்டதே இல்லை என்று தொழில் வட்டாரங்களில் கூறப்படுகிறது. இவர்களின் இந்த நாணயமற்ற போக்கு எரிச்சலை ஊட்டினாலும், அவர்களின் அரசாங்க செல்வாக்கு காரணமாக, எந்த தொழில் அதிபரும் அவர்கள் மீது புகார் கொடுக்க முன்வரவில்லை என்றும், ரத்தன் டாடாவே உரிய நேரம் வரும் வரை அமைதியாக இருந்ததையும் சுட்டிக் காட்டுகிறார்கள் ."

யார்தான் நேர்மையாக தொழில் செய்கிறார்கள்? குறிப்பாக கார்ப்பரேட் கம்பெனிகள். டாடாவே என்கிற பொழுது உங்கள் உள்ளே இருக்கிற பூணைக் குட்டி வெளியே வருகிறது. இல்லை நான் சிவசங்கரனின் தகிடுதங்களையும் எழுதி உள்ளேன் என்று வாதாடுவீர்கள். நான் நடு நிலையானவன் என்று காட்டிக்கொள்ள திணிக்கப்பட்ட பகுதி அவை என்று வாசகர்களுக்கு எளிதில் விளங்கும். சமீப காலமாக உங்கள் நடுநிலையை நிறுபிக்க நிறைய முயற்சி செய்கிறீர்கள்.

தனி மனிதர்களை எதிர்த்து நீண்ட நாள் அரசியல் செய்து கொண்டிருக்க முடியாது. நாம் எதிர்க்க வேண்டியது அதற்கு பின்புலமான கட்டமைப்புகளை. கருணாநிதி தோற்கடிக்கப்பட் ட உடனேயே உங்களது போக்கு மாறி இருக்க வேண்டும். ஆனால் தொடர் கட்டுரைகள் சலிப்பையும் சந்தேகத்தையுமே ஏற்படுத்துகின்ற ன.
Quote
 
 
+23 #20 ஊர்க்குருவி. 2011-06-13 09:13
மாறா!
கலாநிதி மாறா!
தயாநிதி மாறா!

உலகம் உங்கள் மீது கொண்டுள்ள
வெறுப்பு இனி மாறா!

நீங்கள் தாத்தனைப்போல்
தப்பிப்பத்தற்கு போடும் தாளம் மாறா!

சிபிஐ
உங்கள்மீது சிலப்பதிகாரம்
வாசிக்கப்போவது போவது மாறா!

தாத்தாவுக்கே தண்ணிகாட்டிய
மூக்குப்பேணிகள்
ஆணி அடிக்கப்பட்ட அந்தப் பெயர் மாறா!

சுருங்க சொல்லின் மாறாஸ்
நீங்கள்
மக்கள் மனதிலிருந்து
விரட்டப்பட்டு நீண்ட நேரமாகிவிட்டது மாறா!

ஆனாலும்
ஆண்டவன் கட்டளைப்படி
தண்டனைக்காக
சிக்கிவிட்டீர்க ள் அதுவும் மாறா!

அஸ்தமனம் வரும் வரை
உங்கள் பெயர் ஓடிக்கொண்டிருப் பதும் மாறா!
Quote
 
 
+16 #19 chozhavanthan 2011-06-13 08:50
சத்தியமா நெர்மையா ஒழைச்சா கூட மாசத்துல 1 லட்சத்துக்கு மேல சம்பாதிக்க முடியல இவனுஙக எப்புடி கோடி கோடியா சம்பாதிக்குரஙகன ு இப்போ தான் புரியுது
Quote
 
 
+8 #18 RayJaguar 2011-06-13 07:52
paapampattiyin adutha batsman ippo kalam iranguvaar :D :lol:
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 107 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday2818
mod_vvisit_counterYesterday12350
mod_vvisit_counterThis week61983
mod_vvisit_counterLast week78861
mod_vvisit_counterThis month274802
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12796921