|
சென்னை நகரில் போட் கிளப் ரோட் என்பது, பெரும் செல்வந்தர்கள் மட்டுமே வசிக்கும் ஒரு குடியிருப்புப் பகுதி..
இந்த போட் கிளப் ரோட்டில் ஒரு கிரவுண்ட் (2400 சதுர அடி) விலை 9 கோடி ரூபாய். பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும், பரம்பரை பணக்காரர்கள் மட்டுமே, இந்த இடங்களை வாங்க இயலும். சென்னை நகரத்தில் போக்குவரத்து காரணமாக சுற்றுச் சூழல் மாசு அவ்வளவாக இல்லாத ஒரு இடம் தான் போட் கிளப் சாலை. சொல்லப் போனால், போட்கிளப் சாலையில் இடம் வைத்திருப்பது என்பது ஒரு கவுரவம்.
தமிழகமெங்கும், இடங்களை வளைத்துப் போட்டது போலவே போட் கிளப் சாலையிலும், இஷ்டத்துக்கு வாங்கித் தள்ளியிருக்கிறார்கள், இந்தியாவின் பெரும் செல்வந்தர்கள்.
சாம்பிளுக்கு, இந்தச் செல்வந்தர்கள் கடந்த ஐந்தாண்டுகளில் போட் கிளப் சாலையில் வாங்கிய சொத்துக்களை மட்டும் பார்ப்போம்.
3.86 கிரவுண்ட் நிலம், வாங்கியவர் கல் பப்ளிகேஷன்ஸ், (கேடி சகோதரர்கள்) எண் 229, கச்சேரி ரோடு, மைலாப்பூர், (ஆவண எண், 1259/2007) ஆவண மதிப்பு, 2.58 கோடி. அசல் மதிப்பு, 32 கோடி.
2.6 கிரவுண்ட் நிலம். வாங்கியவர் கயல்விழி வெங்கடேஷ், (அழகிரியின் மகள்) எண்.24, பத்மம், கலாஷேத்ரா அவென்யூ 1வது தெரு, திருவான்மியூர், சென்னை (ஆவண எண் 993/2008) ஆவண மதிப்பு 2.20 கோடி. அசல் மதிப்பு 25 கோடி.
1800 சதுர அடி நிலம். வாங்கியவர் கயல்விழி வெங்கடேஷ், (அழகிரியின் மகள்) எண்.24, பத்மம், கலாஷேத்ரா அவென்யூ 1வது தெரு, திருவான்மியூர், சென்னை (ஆவண எண் 996/2008) ஆவண மதிப்பு 1.08 கோடி. அசல் மதிப்பு 7 கோடி.
3 கிரவுண்டு நிலம். வாங்கியவர் ஹன்ஸ்ராஜ் சக்சேனா (சன் பிக்சர்ஸ் தலைமை அதிகாரி) ப.எண் 142/A புதிய எண் 60, ஹபிபுல்லா ரோடு, தி.நகர், சென்னை. (ஆவண எண். 979/2009) ஆவண மதிப்பு 1.29 கோடி. அசல் மதிப்பு 27 கோடி.
1 கிரவுண்ட் மற்றும் 1400 சதுர அடி. வாங்கியவர் மகேஷ்பாலா ஹன்ஸ்ராஜ் (சக்சேனா மனைவி) ப.எண் 142/A புதிய எண் 60, ஹபிபுல்லா ரோடு, தி.நகர், சென்னை. (ஆவண எண். 2024/2010) ஆவண மதிப்பு 2.40 கோடி. அசல் மதிப்பு 14 கோடி.
லாஸ்ட் பட் நாட் த லீஸ்ட்……..
2.217 கிரவுண்ட் அல்லது, 5321 சதுர அடி…. வாங்கியவர் டேனியல் சாமுவேல் (ராசாத்தி அம்மாள் வீட்டில் பணியாற்றுபவர்) எண்.1, குறுக்குத் தெரு, ஸ்ரீநகர் காலனி, சைதாப்பேட்டை, சென்னை. (ஆவண எண் 961/2010) ஆவண மதிப்பு, 3.33 கோடி. அசல் மதிப்பு 25 கோடி.
கடைசியாக உள்ள இந்தச் சொத்து, 2ஜி விவகாரத்தில் தொடர்புடைய சொத்தாக இருக்கலாம். சிபிஐ அதிகாரிகள் இதை கவனத்தில் எடுத்து, இதையும் அட்டாச் செய்வதற்கான நடவடிக்கைகளை எடுப்பார்கள் என்று நம்புவோம்.
இந்த செல்வந்தர்களின் சொத்துக்களை பார்த்து விட்டோம் அல்லவா ? கடந்த இதழ் டெஹல்காவில் மீனாட்சி என்ற ஒரு முதியவரைப் பற்றி ஒரு செய்தி வந்திருக்கிறது.

இந்த மீனாட்சிக்கு 5 மகள்கள். இவர் மீனாட்சியம்மன் கோயில் வாசலில் பூ விற்றுக் கொண்டிருக்கிறார். இவர் கணவர் உடல் நிலை சரியில்லாமல் படுத்த படுக்கையாக இருக்கிறார். மொத்தம் ஐந்து மகள்கள். இதில் ஒரு மகள் விவாகரத்து செய்து, மூன்று குழந்தைகளோடு, மீனாட்சியோடு வசித்து வருகிறார். காலை 10 மணி முதல் மல்லிகை மற்றும் கனகாம்பரம் வியாபாரம் செய்தால் ஒரு நாளைக்கு 50 முதல் 100 வரை லாபம் கிடைக்குமாம். சில நாட்களில் வியாபாரம் சரியாக ஆகா விட்டால் வெறும் 20 ரூபாயோடு, வீட்டுக்கு செல்லுவார். வியாபாரம் ஆகாத பூக்களை மீனாட்சியம்மனுக்கு படைத்து விட்டுச் செல்வாராம்.
|
Comments
என்ன குற்றம் செய்தார் மேயர் ? தேன்மொழி மேயராக பொறுப்பேற்றதும் கட்சியின் தி.மு.க.,வின் இலக்கிய அணி செயலர் சுந்தரராஜன் என்பவர் மதிச்சயம் வடக்கு தெருவில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமித்து வீடு கட்டியுள்ளார். இது தொடர்பாக கிரையம் பெற்றதாக ஆவணங்களும் தயாரிக்கப்பட்டு ள்ளது. இது குறித்து மேயர் மற்றும் கமிஷனருக்கும் புகார் தெரிவிக்கப்பட்ட ன. ஆனால் எவ்வித நடவடிக்கையும் இல்லை. மேயர், கமிஷனர் சிக்னல் காரணமாக சர்வேயர் குருசாமியிடம் லஞ்சம் வழங்கப்பட்டுள்ள து. இது தான் வழக்கின் சாராம்சம்.
இது தொடர்பாக லஞ்ச போலீசார் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என வக்கீல் ஜெயராம் என்பவர் மதுரை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் ஜோசப்டேவிட் கடந்த 14 ம் தேதி உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவில், மனுதாரர் புகாரில் முகாந்திரம் இருப்பதாக இது குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி.,க்கு உத்தரவிட்டார்.
இந்த உத்தரவின் படி லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள், இன்று மேயர் தேன்மொழி, கமிஷனர் செபாஸ்டின், நகரமைப்பு அலுவலர் முருகேசன் ஆகியோர் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். லஞ்சம் வாங்குதல், கூட்டுச்சதி, லஞ்ச ஒழிப்பு நடவடிக்கையின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளத ு. வழக்கின் போக்கிற்கு ஏற்ப கைது நடவடிக்கையும் இருக்கும். முதலில் சிக்கினார் மதுரை தி.மு.க., மேயர்.,
"சொந்த வீட்டுக்கே வாட்சிமேனா"ங்கர மாதிரி அவங்க கட்டின கட்டடத்திலேயா சூப்பர்ங்க சார்
இந்த பகுதியில் இந்து ராம்,சோ,சுப்பிர மணியாசாமி,தினமல ர் தமிழின எதிர்ப்பு பார்பன கும்பல் யாருமே இல்லையா சவுக்கு.
டெல்லி: 2 ஜி வழக்கில் கைதாகி திகார் சிறையில் உள்ள ராசா, கனிமொழி உள்ளிட்டோர் விரும்பிக் கேட்டதால் தற்போது திஹார் சிறையில் தமிழக உணவு வகைகளான இட்லி, வடை, சாம்பார் போன்றவையும் கைதிகளுக்காக வழங்கப்படுகிறது .
திஹார் சிறையில் தற்போது மிக முக்கியமான கைதியாக கனிமொழி அடைக்கப்பட்டிரு க்கிறார். இந்தியாவின் முதுபெரும் அரசியல் தலைவரான கருணாநிதியின் மகள் சிறையில் அடைக்கப்பட்டிரு க்கிறார் என்பது திஹார் சிறையில் உள்ள அத்தனை கைதிகளுக்கும் ஆச்சரியமான விஷயமாக இன்றளவும் விளங்குகிறது.
கனிமொழி தவிர முன்னாள் அமைச்சர் ராசாவும் திஹார் சிறையில் அடைக்கப்பட்டிரு க்கிறார். இவர்களது வரவால் திஹார் சிறையின் நடைமுறைகளில் சில மாற்றங்கள் தென்படுகின்றன. அது உணவு.
இந்த சிறையில் வழக்கமாக வட இந்திய உணவு வகை தான் வழங்கப்பட்டு வந்தது. சப்பாத்தி, சப்ஜி என்று கொடுப்பார்கள். ஆனால் தெற்கத்திக்காரர ்களான கனிமொழி, ராசா, சரத்குமார் ரெட்டி ஆகியோர் தங்களுக்கு இட்லி, சாம்பார், வடை வேண்டும் என்று சிறை நிர்வாகத்திற்கு க் கோரிக்கை வைத்தனர்.
நம் ஊரில் இட்லி, தோசை, சாம்பார், சாதம் என்று சாப்பிட்ட அவர்கள் திஹார் சிறையில் வழங்கப்படும் சப்பாத்தி, சப்ஜி, பூரியை சாப்பிட்டு நாக்கு மரத்துப் போய் விட்டனர். சப்பாத்தி சாப்பிட்டு கஷ்டப்பட்ட அவர்களுக்காக தற்போது சிறை மெனுவில் இட்லி, தோசை, ஊத்தாப்பம், தேங்காய் சட்னி ஆகியவற்றைச் சேர்த்துள்ளனர்.
ஆனால் இந்த புதிய மெனு சிறை 1, 4 மற்றும் 6ல் மட்டும் தான் கொடு்க்கப்படுகி றது. அது என்ன இங்கு மட்டும் என்று நினைக்கலாம். ஏனென்றால் சிறை 1-ல் ஆ. ராசா, 6-ல் கனிமொழி, 4-ல் சரத் குமார் அடைக்கப்பட்டுள் ளனர். அவர்கள் ருசியாக உணவு உண்ணத் தான் இந்த புதிய ஏற்பாடு.
திஹார் சிறையில் தினமும் மூன்று வேளை சப்பாத்தி, சாதம், பருப்பு மற்றும் ஒரு காய்கறி கூட்டு கொடுக்கப்படுகிற து. முன்பெல்லாம் கைதிகளுக்கு சோலே பட்டூரா, பூரி சப்ஜி, சமோசா, சான்ட்விச் மற்றும் டீ கொடுக்கப்பட்டது .
திகார் சிறை சமையல்காரர்களுக ்கு தமிழக சிறப்பு காவல்படையைச் சேர்ந்த சமையல்காரர் ஒருவர் தென்னிந்திய உணவு வகைகளை சமைக்க பயிற்சியளித்துள ்ளார். தற்போதுள்ள புதிய மெனுவால் மற்ற கைதிகளும் குஷியாகியுள்ளனர ்.
கருப்பு பணம் தொடர்பாக பொதுமக்களாகிய நமது கருத்துக்களை தெரிவிக்கும் வகையில்
மத்திய அரசு ஒரு ஈமெயில் ஈட் உருவாக்கியுள்ளத ு. நமது கருத்துக்களை அதில் தெரிவிக்கலாம்.
இந்த வாய்ப்பை நாம் அனைவரும் பயன்படுத்தி நமது கருத்துக்கள், உத்திகள் ஆகியவற்றை
தெரிவிப்போம்.
ஈமெயில் - blackmoney
செய்தி - http://economictimes.indiatimes.com/personal-finance/tax-savers/govt-to-seek-views-online-on-tough-law-against-tax-evasion/articleshow/8859271.cms
நன்றி,
உங்களில் ஒருவன்
நான் டெஹெல்க இணையதளத்தில் தேடினேன் கிடைக்க வில்லை,
நன்றி.[/ஃஉஒடெ]
ஒவ்வொரு ஊரிலும் நிறைய மீனாட்சிகள் இருக்கிறார்கள். நீங்கள் உதவ நினைத்தால் அவர்களுக்கு கூட உதவலாமே.
நான் Tehelka இணையதளத்தில் தேடினேன் கிடைக்க வில்லை,
நன்றி.
அவர்கள் வாங்கிய சொத்துகள் எல்லாம், அரசுக்கு செலுத்த வேண்டிய முத்திரை தாள் பணத்தை கொள்ளையடிக்க (சொத்து வாங்குவதே கொள்ளையடித்த பணத்தில் தாண்!!! கொள்ளையில் கொள்ளை), சந்தை மதிப்பை விடவும், அவர்கள் வாங்கும்போது உண்மையாக குடுத்த பணத்தை விட குறைந்த விலையைத் தான் பத்திரத்தில் காண்பித்துள்ளார ்கள்.
அதனால் தமிழக அரசு, சென்னையில் வாழும் சேரி மற்றும் அடித்தட்டு மக்கள் குடியிருப்பு வசதி செய்யும் பொருட்டு, மேற்ச்சொன்ன கொள்ளை கும்பல் வாங்கிய போட் கிளப் சொத்துகளை சொத்து கையகப்படுத்தும் சட்டத்தின் முலம் குறைந்த விலையில் கையகப்படுத்தி, தாதா குடும்பத்திற்கு ஆப்பு வைக்கலாம்.
Savukkuu stalin son in law V Sabarisan was involved in spurious drugs manufacturing and distribution business countless number of poor people have died, got kidney failures, liver problems, heart problems and life time alleries because of that even without them knowing, if this happened in the US people would have got huge compensation and the guy would have got 100+ years prison but in India no one cares about that. Savukku please write about that and bring the truth out. Unnakuu punniyamaa povum saamii ezaingaa eemanthu saavamaa irukkaa oru vazhi seiyuuvaa saaami.
நீங்க இப்ப அந்த நிலத்தை வாங்கினா, அந்த பத்திரத்துல "போட் கிளப்பில் வசிக்கும் அஜீஸ்" என்று பதிவு செய்ய முடியாது. "சைதாப்பேட்டை, சிவன் கோவில் தெரு, இலக்கம் 5 /16 ல் வசிக்கும் இன்னார் மகனான அஜீஸ்" என்றுதான் பதிவு செய்ய முடியும். பொதுவா ரேஷன் கார்டு இல்ல தேர்தல் அடையாள அட்டைல இருக்கற விலாசத்தைப் பதிவு பண்ணுவாங்க.
Quoting சைதை அஜீஸ்:
எதுவோ இந்தியாவிற்கு நல்லது நடந்தால் போதும்
நன்றி.
Thanks Thinker, good thinking bro!!!
and Bravo Savukku...
Quoting Thinker:
'The CBI has so far not seized the alleged bribe money but now has started the process and will write to the Enforcement Directorate (ED) soon to attach the property or equity worth around Rs.200 crore,' said a CBI official.
The CBI had alleged that DMK MP Kanimozhi - daughter of party chief M. Karunanidhi - and Kalaignar TV chief Sharad Kumar were part of a criminal conspiracy that led DB Realty to pay Rs.200 crore to Kalaignar TV, controlled by members of Karunanidhi's family.
The CBI in its supplementary charge-sheet had alleged that Swan Telecom's Shahid Balwa had allegedly routed the Rs.200 crore bribe through Kusegaon Realty and Cineyug to Kalaignar TV. The CBI also said that Kalaignar TV had returned the money to Cineyug.
The CBI has also said that they have also frozen all the personal accounts of the 14 accused, including former communications minister A. Raja, involved in the case but not the private limited companies' accounts.
Quoting குவாட்டர் கொமாரு:
ஆனால் சவுக்கு அந்த மீனாக்ஷி அம்மாவ இதுக்கு மேல நீங்க கேவலப் படுத்த முடியாது..
இவ்வளவு ஆதாரத்துடன் நீங்களே இதை அறியும் போது,இந்த மாநில முதலமைச்சருக்கு இது தெரியாதா என்ன?
"ஒன்ன நான் கண்டுக்க மாட்டேன்,அதே போல என்ன நீ கண்டுக்காதே!" ங்கிற ஒப்பந்தமோ?
1990 இலிருந்து இதுதானே நடக்கிறது!
தற்பொழுது தரிசாக கிடக்கும் "Safire" theatre மனை யாருக்கு சொந்தம்(யார் பெயரில் உள்ளது) என கூற இயலுமா?
நன்றி.
சவுக்கிடம் உண்மையையே எதிர்பார்க்கும்
உங்களின் கேள்விக்கு பாராட்டுக்கள்.
சவுக்கின் உடனடி பதிலுக்கும் பாராட்டுக்கள்.
உங்களின் கேள்வி பதில் மூலம் வாசகர்களுக்கு உண்மையை உணர்த்தியுள்ளீர ்கள்.
What happened to Channel 4 video????
பொறுமை அவசியம் தம்பி.
Now having seen the wealth of these rich family,let us go thro' a write up about an old woman by name Meenaakshi which appeared in the last issue of the magazine Tehalka..
This lady has five daughters and is making a living by selling flowers near the Meenakshi Temple Madurai.Her husband is sick and bedridden.Of the five daughters,one is a divorcee and is living with her three children with this old lady.She sells from 10am and may get Rs 50 to 100 nett at the end of the day.Somedays it may be as low as Rs 20 only.At the end of the day,she offers all the unsold stock to the Goddess Meenakshi (presiding Deity of the temple)
Boat club road in Chennai is a very posh residential locality
here a plot measuring 2400sqft (also called a ground)costs Rs 9 crores.
Only corporate houses and wealthy families for many generations only can buy land here.
also this locality is free from traffic and thereby air pollution.In a nut shell,to own a plot here is a status sign
The MK.family have bought heavily in this locality as they have done all over the state..
As examples,let us see the details of the properties bought by them in Boat club road in the last five years
3.86 ground bought by KAL publications (owned by Maran Bros) (Regn doc #1259/2007) for a value of Rs 2.58cr whereas the mkt value is Rs 32 cr.
2.6 ground bought by Kayalvizhi Venkatesh(daugh ter of Alagiri) (Regn doc #993/2008) for a value of Rs 2.2cr whereas the mkt value is Rs 25 cr.
0.75 ground bought by Kayalvizhi Venkatesh(daugh ter of Alagiri) (Regn doc #996/2008) for a value of Rs 1.08cr whereas the mkt value is Rs 7 cr.
3.00 ground bought by Hansraj Saxena(CEO SUN TV) (Regn doc #979/2009) for a value of Rs 1.29cr whereas the mkt value is Rs 27cr.
1.58 ground bought by Mrs Hansraj Saxena(CEO SUN TV) (Regn doc #2024/2010) for a value of Rs 2.4cr whereas the mkt value is Rs 14cr.
Last but not the least...
2.217 ground bought by Daniel Samuel (servant in Mrs Rajaththi Karunanithi) (Regn doc #961/2010) for a value of Rs 3.33cr whereas the mkt value is Rs 25cr.(This may form a part of 2G related property.Hope the CBI would take this in to consideration and initiate actions to attach this property)
RSS feed for comments to this post