முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
வாய்ப்பை நழுவவிடலாகாது! தினமணி தலையங்கம். அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 23
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
வெள்ளிக்கிழமை, 17 ஜூன் 2011 06:39

நீதிபதி ரவிராஜபாண்டியன் தலைமையிலான "தனியார் பள்ளிகள் கல்விக் கட்டண நிர்ணயக் குழு' அறிவித்துள்ள புதிய கட்டணங்கள் பெரும்பாலான பெற்றோருக்கு ஏற்புடையதாக அமைந்திருக்கவில்லை என்பது கடந்த இரு நாள்களாக அனைத்துத் தரப்பிலும் எழுப்பப்படும் கண்டனங்களிலிருந்தும் குமுறலில் இருந்தும் தெரியவருகிறது.

 

சென்னையில் உள்ள சில குறிப்பிட்ட பெரிய பள்ளிகளில் இப்போது அறிவிக்கப்பட்டுள்ள கட்டணம், ஏற்கெனவே நீதிபதி கோவிந்தராஜன் தலைமையிலான குழு அறிவித்த கட்டணத்தைக் காட்டிலும் ரூ.7,000 அதிகமாக இருப்பதாகச் செய்திகள் வெளியாகின்றன. எஸ்பிஒஏ மெட்ரிக் பள்ளியில் பிளஸ் 1 வகுப்புக்கு கோவிந்தராஜன் கமிட்டியால் பரிந்துரைக்கப்பட்ட ரூ.11,000, இப்போது ரூ.25,000-மாக அறிவிக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.

 

பொதுவாகப் பார்க்கும்போது இந்தக் கட்டணங்கள், தனியார் பள்ளிகளைத் திருப்தி செய்யும் விதத்தில் சராசரியாக 40 விழுக்காடு வரை உயர்த்தப்பட்டிருக்கிறது என்பது மிகவும் வெளிப்படையாகத் தெரிகிறது. அதிலும் குறிப்பாக, நகர்ப்புறத்தில் உள்ள பெரிய பள்ளிகள், சிறுபான்மையினர் பள்ளிகளின் நலனைக் காக்க வேண்டும் என்ற முடிவோடு கட்டணங்கள் தீர்மானிக்கப்பட்டிருப்பது போலவும் தோற்றம் அளிக்கிறது.

 

சில பள்ளிகள் மிகக் கூடுதலாகவே கட்டணம் பெற்றுள்ளன என்பதோடு, மிகச் சில பள்ளிகளுக்கு மட்டுமே கோவிந்தராஜன் கமிட்டி நிர்ணயித்த கட்டணத்தைக் காட்டிலும் மிகக் குறைவான தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. மிகச் சில பள்ளிகளுக்கு முன்பைக் காட்டிலும் சில நூறு ரூபாய் மட்டுமே குறைக்கப்பட்டிருப்பதும்கூட நடைபெற்றுள்ளது. மொத்தத்தில் பார்த்தால் கோவிந்தராஜன் கமிட்டி நிர்ணயித்த கட்டணங்களை உயர்த்துவதற்காகவே இந்தக் கமிட்டி நியமிக்கப்பட்டதோ என்றுகூடப் பெற்றோர்கள் அங்கலாய்க்கும் விதத்தில்தான் ரவிராஜபாண்டியன் கமிட்டியின் பள்ளிக் கட்டண நிர்ணயம் இருப்பதாகத் தெரிகிறது.

 

டிசம்பர் 2009-ல் நீதிபதி கோவிந்தராஜன் தலைமையில் நியமிக்கப்பட்ட கமிட்டி, மிகக் குறுகிய காலத்தில் 10,500 பள்ளிகளையும் ஆய்வு செய்து, கட்டணத்தைத் தீர்மானித்திருப்பது இயலாத காரியம் என்று தனியார் பள்ளிகள் சார்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. நீதிபதி ரவிராஜபாண்டியன் இக்குழுவின் தலைவராக நவம்பர் 2010-ல் நியமிக்கப்பட்டார். இவர் பொறுப்பேற்ற பின்னர் நவம்பர் 15-ம் தேதி முதல் மே 4-ம் தேதி வரை 6 மாதங்களில் இந்த 6,400 பள்ளிகளில் எப்படி ஆய்வு நடத்தியிருக்க முடியும்? ஒவ்வொரு பள்ளியாகத் தரத்தையும், கட்டமைப்பு வசதிகளையும் ஆராய்ந்து இந்தக் கமிட்டி கட்டணம் நிர்ணயித்தது என்பது மட்டும் நம்பக்கூடியதாகவா இருக்கிறது?

 

கட்டணங்கள் தங்களுக்குச் சாதகமாக இல்லாமல் இருந்திருந்தால், இத்தகைய கேள்வியைத் தனியார் பள்ளிகள் கிளப்பியிருக்கும். ஆனால், தாங்கள் எதிர்பார்த்தபடியே இக்கட்டணங்கள் அறிவிக்கப்பட்டதால், இதை எதிர்த்து நீதிமன்றம் செல்ல அவர்கள் என்ன அத்தனை அப்பாவிகளா?

 

மாவட்டங்களில் முதன்மைக் கல்வி அலுவலரால் இந்தக் கட்டண விவரக் கடிதம் அளிக்கப்பட்டபோது அதைப் பார்த்த ஒரு தனியார் பள்ளித் தாளாளர், ""அட ஐநூறு ரூபாய் குறைஞ்சா என்னப்பா, புத்தகம் சீருடைக் கட்டணங்களை விருப்பம்போல வசூலிக்கலாம் என்று சொல்லிவிட்டார்களே, இதுபோதும்'' என்று மகிழ்ச்சிப் பெருக்குடன் சத்தமாகவே சொல்ல, அனைவரும் புன்முறுவல் செய்தனர் என்று கேள்விப்படும்போது, நீதிபதி ரவிராஜபாண்டியன் குழுவின் முடிவில் குறை இருப்பதைக் காணமுடிகிறது.

 

திமுக ஆட்சியால் இக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டவர் நீதிபதி ரவிராஜ்பாண்டியன். அதிமுக ஆட்சிக்கு அவப்பெயர் வந்தால் வந்துவிட்டுப்போகட்டுமே என்ற எண்ணத்தில், இத்தகைய பாரபட்சமான ஒரு கட்டணத்தை அறிவித்துவிட்டு, பதவி விலகிச் சென்றுவிட்டாரோ நீதிபதி ரவிராஜ்பாண்டியன் என்றுகூட சந்தேகிக்க இடமிருக்கிறது.

 

எதற்காகப் புத்தகம், நோட்டுப் புத்தகம், சீருடை ஆகியவற்றைப் பள்ளிகளிலேயே வாங்க வேண்டும்? ஷு, கேன்வாஸ் ஷு ஆகியவற்றுக்கும்கூட இவர்கள் கடைவிரித்து கமிஷன் பார்க்கிறார்கள் என்று பெற்றோர் புலம்பியழும் நிலையில், இதனை அவர்கள் விருப்பம்போல வசூலித்துக் கொள்ளலாம் என்று தீர்மானிப்பது எந்த வகையில் நியாயமாகும்?

 

தமிழ்நாட்டில் உள்ள தனியார் பள்ளிகள் அனைத்தும் அதன் வசதிகள், தேர்ச்சி விகிதம், ஆசிரியர் எண்ணிக்கை, இடவசதி, கல்வித் தளவாடங்கள் அனைத்தின் அடிப்படையிலும் ஏ, பி, சி, டி என தரம் பிரிக்கப்பட வேண்டும். அந்தத் தரத்துக்குள் வரும் பள்ளிகள் வசூலிக்க வேண்டிய கட்டணத்தையும் இதேபோன்று நான்கு விதமாகப் பட்டியலிட்டாலே போதுமானது. நகரங்களில், பெருநகரங்களில் அமையும் பள்ளிகள் தங்கள் கட்டணத்தில் எத்தனை விழுக்காடு அதிகரித்துக்கொள்ளலாம் என்று அனுமதி தந்தாலும் போதும்.

 

ஓர் அரசு ஊழியரின் அடிப்படைச் சம்பளம், வாடகைப் படி ஆகியன அவரது பதவி, அவர் பணியாற்றும் இடத்தைப் பொறுத்து ஒரே சீராக நிர்ணயிக்கப்படும்போது, பள்ளிகளையும் ஏ, பி, சி, டி என தரம் பிரிக்கவும், நகர்ப்புறத்துக்கு ஏற்பக் கட்டணத்தை உயர்த்தும் அளவையும் அரசு தீர்மானிப்பதில் என்ன சிக்கல்?

 

தனியார் பள்ளி ஆசிரியர்களின் தரம், சம்பளம் என்றெல்லாம் பேசுகிறார்களே, அப்படியானால் எல்லா தனியார் பள்ளிகளும் அரசுப் பள்ளிகளின் ஆசிரியர்கள் பெறும் ஊதியத்தைத் தங்களது பள்ளி ஆசிரியர்களுக்கும் வழங்க முன்வருவார்களா?

 

கல்வியறிவிலும் தொழில்வளர்ச்சியிலும் தமிழகத்திலேயே கடைநிலையில் உள்ள தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு சாதாரணப் பள்ளிக்கூடத்தில் எல்கேஜி படிப்புக்கு நீதிபதி கோவிந்தராஜன் கமிட்டி நிர்ணயித்த ரூ.4,000-த்தையே அதிகம் என்று கூறிய நிலையில், அந்தப் பள்ளிக்கு ரூ.6,400 (அவர்கள் ஏற்கெனவே வசூலித்ததைக் காட்டிலும் ரூ.300 குறைவு) வசூலிக்க நீதிபதி ரவிராஜபாண்டியன் குழு அனுமதித்துள்ளது என்றால், மாவட்டத்தில் சாதாரண நடுத்தரவர்க்கப் பெற்றோர் தங்கள் குழந்தைகளை எப்படித் தனியார் பள்ளிகளில் கல்வி பயில அனுப்ப முடியும்?

 

பள்ளிகளை நான்குவிதமாகத் தரம் பிரித்து, தமிழ்நாடு முழுவதும் நான்குவிதமான கட்டணங்கள் மட்டுமே இருக்க வகைசெய்தால் அனைத்துப் பெற்றோருக்கும் நன்மை தரும். மேலும், இப்போதைய கட்டணத்தைப் பள்ளியில் ஓட்ட வேண்டும் என்ற விதிமுறையைக்கூட அலட்சியப்படுத்தும் இந்தப் பள்ளிகளைத் தரவரிசைப்படுத்தினாலாவது, இதன் கட்டணம் இதுதான் என்பதை அரசு அறிவிப்பதிலும் சிக்கல் இருக்காது.

 

அரசு நிர்ணயிக்கும் கட்டணத்துக்கும் மேலாக வசூலிக்கும் பள்ளிகளின் உரிமத்தை ரத்து செய்வது அல்லது அரசுடைமையாக்குவது என்பதை ஓரிரு பள்ளிகளில் செய்தாலும்கூட போதும், தமிழ்நாட்டின் தனியார் பள்ளிகள் அனைத்தும் சட்டத்தின் ஆட்சிக்குள் வந்துவிடுவார்கள்.

 

இதற்கு அதிகாரிகளுக்கும் மனதில்லை. அரசியல்வாதிகளும் தயாரில்லை. ஆட்சியாளர்களுக்கும் துணிவில்லை. முந்தைய அரசின் நிலை இதுவாகத்தான் இருந்தது. இன்றைய ஜெயலலிதா அரசு பள்ளிக் கட்டணத்தை முறைப்படுத்துவதன் மூலம், தன்னை ஒரு மக்களின் அரசாக நிலைநிறுத்த முடியும். இந்த வாய்ப்பை முதல்வர் நழுவவிடலாகாது!

 

K Raviraja Pandian

K Raviraja Pandian
Retired Justice, Madras High Court

PLOT NO: B2/5, THIRUVANMIYUR EXTENSION
DATE: 11 NOVEMBER 2009
SIZE: 3,117 SQ FT
PRICE: Rs. 68.54 LAKH 
CURRENT MARKET PRICE: Rs. 3.2 CRORE

VIOLATIONS 
Close relative of DMK supremo Karunanidhi and the Chairman of the School Fee Determination Committee. Little wonder then he was also the recipient of special favours while he was still a serving judge. At the time of the allotment, the judge owned a 50 percent share in an ancestral house at Thiruveezhimizhalai village. The judge had also sold a property he owned at Pazhavatthankattali village near Kumbakonam. The land was purchased in 1991, a house was constructed on it in 1992 and sold in 2009. He had also sold the landed property of his wife in 2009.

 

நன்றி தினமணி மற்றும் டெஹல்கா

 

Comments  

 
0 #34 Ravishankar 2011-06-22 15:56
நீதிபதி என்ன கடவுளா? :lol:
Quote
 
 
+1 #33 Rangaraj Rajendran 2011-06-19 13:02
The Govt Schools should be upgraded with the aims to improve the Knowledge,Self confidence,Lang uage Skills.So that People will come forward to join their children in the Govt Schools.The Erode collector has lead a path to all parents.

As for as Dinamani daily concerned some feedbacks made comment on Dinamani.I was a reader of Dinamani for its valuable articles and Editorials.But I too have no belief on their democracy.
On death of Sri Saibaba,they wrote in their Editorial,prais ed Saibaba and worstly criticized the Rationals,unbel ievers of God.
I want to make my feedback on critize the Editorial.But It was totally rejected.Somebody may say that it is technical mistake.Believe me I have tried many times to register my feedback.But it was purposely denied.What is the reason.Dinamani also biased and have some vested interests.Thank you for Savukku if this is publised.
Quote
 
 
0 #32 தண்டபாணி 2011-06-18 17:53
எல்லோருக்கும் அரசு பள்ளின்னு ஒன்னு இருக்கே அது தெரியமே என்னெனவோ சொல்லிட்டு ஈரோடு கலெக்டர் பண்ணியது தெரியாத
Quote
 
 
+5 #31 C.B.Senthilkumar 2011-06-18 08:01
இந்த லூசு பதவியில் இருந்த பொழுதும் மென்டல்தான்.....
Quote
 
 
+5 #30 shri 2011-06-18 03:13
///தமிழ்நாட்டில் உள்ள தனியார் பள்ளிகள் அனைத்தும் அதன் வசதிகள், தேர்ச்சி விகிதம், ஆசிரியர் எண்ணிக்கை, இடவசதி, கல்வித் தளவாடங்கள் அனைத்தின் அடிப்படையிலும் ஏ, பி, சி, டி என தரம் பிரிக்கப்பட வேண்டும். அந்தத் தரத்துக்குள் வரும் பள்ளிகள் வசூலிக்க வேண்டிய கட்டணத்தையும் இதேபோன்று நான்கு விதமாகப் பட்டியலிட்டாலே போதுமானது. நகரங்களில், பெருநகரங்களில் அமையும் பள்ளிகள் தங்கள் கட்டணத்தில் எத்தனை விழுக்காடு அதிகரித்துக்கொள ்ளலாம் என்று அனுமதி தந்தாலும் போதும்///
///பள்ளிகளை நான்குவிதமாகத் தரம் பிரித்து, தமிழ்நாடு முழுவதும் நான்குவிதமான கட்டணங்கள் மட்டுமே இருக்க வகைசெய்தால் அனைத்துப் பெற்றோருக்கும் நன்மை தரும்.///

தினமணி வெளிப்படையாகவே தனியார் பள்ளி முதலாளிகளுக்கு ஆதரவு/idea தான் தருகிறது... நடுத்தர வர்க்கத்தின் தேவைக்கு / பணபலத்துக்கு ஏற்ற (B or D)தனியார்ப் பள்ளியில் படித்தாலும், அதிலும் ஏற்றத் தாழ்வு தானே? A பள்ளியில் படித்தவன், D பள்ளியில் படித்தவன் என்று பாகுபாடு மேலும் வளரும் தானே? the discrimination will be there till the college admission(esp. prof college).

B,C,D தனியார் பள்ளி முதலாளிகளும் தரத்தை எத்தி கட்டணத்தை உயர்த்த தான் (எல்லா தனியார் பள்ளி முதலாளிகளும் சம்பாதிக்க தானே இந்த ஆலோசனை?)
அப்புறம் சமச்சீர் கல்வி என்பதற்கு அர்த்தமே இல்லையே...

தனியார் பள்ளியில் ஏ.சி.யில் படித்தாலும், அரசுப் பள்ளியில் கட்டாந்தரையில் படித்தாலும் ஒரே கல்வியை கொடுங்கள்.. அதுதான் முக்கியம்...
அப்புறம் மக்கள் ஏன் தனியார் பள்ளி நோக்கி செல்ல வேண்டும்?
மக்களை வாழ விட்டாலே போதும்...
Quote
 
 
0 #29 unmaieh 2011-06-17 22:13
http://www.timesnow.tv/BJP-CPM-attack-govt-on-CAG-findings-on-KG-Basin-contracts/articleshow/4376249.cms
Quote
 
 
+6 #28 RAJ KUMAR 2011-06-17 21:23
Mental Judge (Retd)
Quote
 
 
+4 #27 RAJ KUMAR 2011-06-17 21:21
Worst Judge,He May Commit Suicide For His Recommandation
Quote
 
 
+1 #26 RAJ KUMAR j 2011-06-17 21:18
worst judge,he may commit suicide
Quote
 
 
0 #25 bad boy 2011-06-17 20:10
From the date of appointment i exposed corrupt practise of RaviRajan pandian. How can we except just and reasonable justices verdict from him. he refused to disclose the copy of Income tax returns and balance sheet of his and his wife through IT dept under RTI.
v.gopalakrishn
Quote
 
 
+3 #24 J 2011-06-17 19:30
என்ன கொடுமை... எல்லோரும் திருடர்கள்தானா?..

-உன்னைப் போன்ற ஏமாளிகலில் ஒருவன்
Quote
 
 
0 #23 UR FAN 2011-06-17 15:04
Cha ......... He too Culprit ! Jaya have to tighten the hand in the neck of private schools, how much thy cheating ..... its enough, last 5 years thy have earned much na, its enough, lets relieve Raviraja Pandian and appoint a new guy and people supported guy to review and to order... again private will shout for the price, then Jaya have to say "Shut or Get Out"
Quote
 
 
+7 #22 keerikutti 2011-06-17 14:59
சவுக்கு ஒரு வென்டுகோள்.. இதை அப்படியே ஜெவுக்கு அனுப்ப வேன்டுகிரேடன். மிகவும் பாதிக்கபட்டவன் என்ற முரையில் சொல்கிறேன்
Quote
 
 
+4 #21 கருத்து 2011-06-17 14:39
குழைந்தைகளுக்கு பீஸ் கட்டும் நிலையில் ரவிராஜாபாண்டியன ் இருந்திருந்தால் சரியாக கட்டணம் நிர்ணயித்திருப் பார்.

அரசு சம்பளம் வாங்கிக்கொண்டு அமைதியாக ஓய்வெடுக்கும் வயது முதிர்ந்த அவருக்கு தி.மு.க.வை போலவே மக்கள் நலனில் அக்கறை காட்டாமல் விட்டுவிட்டார்.
Quote
 
 
+4 #20 Mani123 2011-06-17 14:21
திருடன்கிட்ட சாவிய குடுத்த கதை அயிடுச்சோ........
Quote
 
 
+1 #19 காரியான் 2011-06-17 14:18
அரசு பள்ளிகள் எதற்காக,தயவுசெய ்து் அரசுப்ள்ளிகளின் தரத்தை உயர்த்த போராடுங்கள்,குழ ந்தை்களிடமே சமத்துவத்தை பரப்பாமல் அவர்கள் வளர்ந்தபிறகு் எதிர்பார்ப்பது் கடினம்,கல்வி என்பது சேவை தொழிலல்ல
Quote
 
 
+4 #18 ஊமை 2011-06-17 14:10
டேய் பிச்சக்கார நாயே. நீயெல்லாம் ஒரு ஜட்ஜ்? து.
Quote
 
 
+8 #17 தமிழரசன் 2011-06-17 13:57
சவுக்கு, எனக்கு புரியாத ஒன்று என்னவென்றால், தனியார் கல்வி என்பதும் கட்டண வரைமுறைக்குள் தான் இருக்க வேண்டும் அதில் மாற்று கருத்து இல்லை, ஆனால் இந்த கல்வி கட்டண பிரச்சினைகளுக்க ு காரணம் நம் மக்களின் அரசு பள்ளிகளின் மீது குறையும் நம்பிக்கை தானே? அதன் தரத்தை ஏன் மேபடுத்துவதில் நாம் முனைப்பு காட்டக்கூடாது? அரசு பள்ளியில் படித்த நான் இங்கு லண்டனில் வேலை செய்யும் போது (அதுவும் 20 ஆண்டுகளுக்கு முந்தைய அரசு பள்ளி கல்வி, இப்பொழுது இன்னும் மேம்பட்ட தரமுடையதாகவே இருக்கிறது என்பது என் கருத்து) நான் கண்ட ஒரே குறை எனது ஆங்கில அறிவு (எழுதுதல், பேசுதல், மற்றும் படித்தல் போன்றவை), அரசு பள்ளிகளில் இந்த குறையை போக்கின் நமது கல்விக்கு இணை இல்லை என்பது என் கருத்து!! ஒரு வாதத்திற்காக ஆங்கில தனியார் கல்வி நிலையங்களில் தமிழில் தான் பாடம் நடத்தப்படும் என்று அறிவிப்பின் இவை அனைத்தும் தலை கீழ் மாறிவிடும் என்பது என் கருத்து (இதற்க்கு காரணமாக நான் கருதுவது ஆங்கில கல்வியின் மோகமும், குழந்தைகளின் வாழ்க்கை பற்றிய பயமும் ஆகும், என்னால் என் குழைந்தைகளுக்கு தரமான ஆங்கில கல்வியை குடுக்க முடியாது என்ற (ஆங்கில அறிவு குறைவான (இது ஒரு குறையே அல்ல என்பதும் என் கருத்துக்களில் :) ஒன்று) பெற்றோர்களின் பயமும் ஒரு காரணம்) உயர்தர ஆங்கில கல்வியை அரசு பள்ளிகளில் கிடைக்கும் வண்ணம் தமிழக அரசு செயல்படுத்தின் இந்த தனியார் பள்ளி மாயையை எளிதாக உடைக்கமுடியும் என்பது என் மிக தாழ்மையான கருத்து?

இரண்டு நாட்களுக்கு முன், என் தாயிடம் என் அண்ணன் குழைந்தையை அரசு பள்ளியில் சேர்க்க சொன்னேன் (மேலும் தனியார் ஆங்கில சிறப்பு வகுப்பில் சேர்க்கலாம் என்றேன்) அதற்க்கான பதில், உன் அண்ணி என்னை திட்டி தீர்த்துவிடுவாள ் நான் கூறினால் என் பிள்ளையின் எதிர்காலத்தை நாசமாக்க பார்க்கிறார்கள் என்று, அனைவரின் குழந்தைகளும் கான்வென்ட் போகும்போது ஏன் என் குழந்தை மட்டும் அரசு பள்ளிக்கு போக வேண்டும் என்று கேட்பாள் என்று?!! (ல்க்க் க்கு 10000 ரூபாய், எனது இஞினியரிங் காலேஜ் கட்டணமே 9000 ௦ரூபாய்) குடும்பத்துல ஏன் குழப்பத்த உண்டு பண்ணனும்னு :) நான் அமைதியாகிவிட்டே ன்? அவர்களும் குழந்தையை தனியார் பள்ளியில் சேர்த்து விட்டார்கள் (தனது குழந்தையை அரசு பள்ளியில் சேர்த்த ஈரோடு நகர் கலெக்டர் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள், இது ஒரு சிறந்த முன்னுதாரணம்)
Quote
 
 
0 #16 gsathyendrabalaji 2011-06-17 13:35
v.good
Quote
 
 
0 #15 PrakashSA 2011-06-17 13:11
இதெல்லாம் உஙகல மாதிரி பத்திரிக்கை மக்கள்தான் கேக்கனும்.
Quote
 
 
0 #14 ganesram 2011-06-17 12:54
எத்ர்க்கு என்னத்தான் வலி :sigh:
Quote
 
 
0 #13 thothadri 2011-06-17 12:38
even the judges are not delivering peoper justice and why should we call them as Lord. Lord is impartial to all.
But the judges are not.
Quote
 
 
+4 #12 Pandiak 2011-06-17 12:00
இக்கட்டுரையைப் படிக்கும் பொழுது தலையில் அடித்துக்கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறது. ஏன் இந்த உணர்வு என்றால், கட்டுரையை எழுதியவர் சூழல்களைப் புரிந்துகொள்ளாத பெரிய முட்டாளாக இருக்க வேண்டும் அல்லது ஜெயலலிதா தாசராக இருக்க வேண்டும் அல்லது உண்மைக்கு புறம்பாக மக்களைத் திசை திருப்புபவராக இருக்க வேண்டும் என்று தோன்றுவதால்.

கல்வி வியாபாரமாய் போய்விட்டது. மாணியங்களுக்கான செலவுகளை குறைக்கின்ற அரசுகள் தொடர்ந்து கல்வி, மருத்துவம் போன்ற அத்தியாவசியமான துறைகளிலும் தங்கள் செலவைக் குறைப்பதற்காக கல்வியை தனியார்களிடம் கொடுக்கின்றன. கல்வி வியாபாரத்தில் ஈடுபடுவோருக்கு எவ்வளவு லாபம் என்பதே குறிக்கோளாக இருக்க முடியும். வியாபாரம் சிறப்பாக நடக்க ஏதோ சில வசதிகளைக் காட்டி தனது வாடிக்கையாளர்கள ை இழுக்கிறார்கள். அதிக கட்டணங்களை வசூலிக்கிறார்கள ்.

தினமணி பத்திரிக்கை ஒரு ரூபாய்க்குத்தான ் விற்க வேண்டும் என்று அரசு சொன்னால் இவர்கள் விற்பார்களா? தினமணி தனது தரத்தில் வேண்டுமானால் ஊடக தர்மத்துடன் நடந்து கொள்ளலாம் ஆனால் வியாபர நோக்கில் வரும்பொழுது தனது லாபத்தை விட்டுக்கொடுப்ப ார்களா? அப்புறம்...ஊடக தர்மத்துடன் நடந்துகொள்கிறார ்களா என்பதே விவாதத்திற்குரி ய ஒன்று!!

அதுபோல வியாபாரத்தையும் அனுமதித்து விட்டு விலையிலும் கை வைத்தால் எப்படி தொழில் செய்ய முடியும.?

கல்விக் கட்டணங்கள் மக்களின் கழுத்தை நெறிக்கின்றன. இதை தடுப்பதற்கு என்ன வழி? கல்வியில் வியாபாரத்தை தடை செய்வதுதான். கல்வியில் தனியார்களின் பங்கீட்டைக் குறைப்பதுதான். அரசே கல்வி கூடங்களை நடத்துவதுதான். தாய் மொழி வழிக் கல்வி அல்லாமல் அந்நிய மொழி பயிற்று மொழியாக இருக்கும் பொழுது கல்விக்கான செலவும் கூடுகிறது. கல்வியின் தரமும் பாதிக்கப்படுகின ்றது. தாய் மொழி வழிக் கல்வியை அரசே கொடுப்பதுதான் தீர்வை நோக்கிச் செல்வதற்கான சரியான பாதையாக இருக்கும்.

அதற்கு குரல் கொடுப்பதன்றி கருணாநிதி ஜெயலலிதா என்று உண்மைக்கு புறம்பாக பேசுவது மக்களைத் திசை திருப்பும் செயல். இது மறைவில் தனியார் மயமாக்கலுக்கு ஆதரவாக மக்களின் கோபத்தை திசை திருப்பும் செயல். அதனால்தான் தினமணி என்கிற வியாபார நிறுவனம் ஊடக தர்மத்திலாவது ஒழுங்காக நடந்துகொள்கிறதா என்பது ஆராயப்பட வேண்டிய ஒன்று.
Quote
 
 
+2 #11 நல்லது 2011-06-17 11:37
பசு மாடு இருந்தும் பயன் தரும், இறந்தும் பயன் தரும் என்பார்கள்.
ஆனால் இந்த கோவிந்தராஜனோ நீதிபதியாக இருந்தும் பயன் தரவிலலை, நீதிபதியாக ஓய்வுப்பெற்றும் (இறந்தும்) பயன் தரவில்லை.
மாறன் குடும்பத்துக்கு உறவினர் என்ற ஒரே காரணத்திற்காக நீதிபதியாகி, ”அநீதி” வழங்கி வந்தார்.
இப்பொழுது வயதான காலத்தில் பள்ளி கட்டணம் விஷயத்தில் “settings and cuttings" பார்த்து வளமாக்கிகொண்டார ்.
Quote
 
 
+1 #10 கொக்கரக்கோ 2011-06-17 10:59
முதலில் பெற்றோர்கள் பள்ளி அனைத்து கட்டணத்தையும் செக் மூலம் செலுத்த அனுமதிக்கவேண்டு ம். இல்லாவிடில் என்னதான் கட்டணம் நிர்னயித்தாலும் அதை நடைமுறைபடுத்துவ து இயலாது. பெரும்பான்மையான பள்ளிகளில் கட்டணம் பணமாகவே செலுத்தவேண்டும் என்று சொல்வதால் அவை கணக்கில் கொண்டுவருவதில்ல ை. இத்தனை கட்டணம் வாங்கினாலும், ஆசிரியர்களுக்கு சொற்ப சம்பள்மே கொடுக்கிறார்கள் . பகல்கொள்ளை....
Quote
 
 
+2 #9 Trinity 2011-06-17 10:33
நகரத்து பள்ளிகளை மையமாக வைத்து மட்டும் இந்த விவாதங்கள் செய்யப்படுகின்ற ன. பஞ்சாயத்து மற்றும் நகர பஞ்சாயத்து அளவில் பள்ளிகளை நடத்தவது பற்றி யாருக்கும் புரிவதில்லை. பெரு நகரத்தில் இடமே இல்லாமல் பள்ளி நடத்த அனுமதிக்கும் அரசு கிராமத்தில் நடத்தும் பள்ளிக்கு இரண்டு ஏக்கர் நிலத்தை கட்டயமாக்கியுள் ளது. பெரு நகரத்தில் திறமையான ஆசிரியர்கள் கிடைப்பார்கள். ஆனால் கிராமத்து தனியார் பள்ளிகள் பேருந்து கட்டணம் அளித்து பக்கத்துக்கு நகரத்தில் இருந்து ஆசிரியர்களை நியமிக்கிறார்கள ். பள்ளி பராமரிப்பு செலவுகள் பெரு நகரங்களை ஒப்பிடும் பொது நகர பஞ்சாயத்து பள்ளிகளுக்கு அதே அளவுதான் செலவாகிறது. பற்றாக்குறைக்கு சுகாதாரம் மற்றும் தீயணைப்பு துறை வசூலிக்கும் கட்டணமும் ஒன்றுதான். ஆனால் பெரு நகர பள்ளிகள் இந்த கிராம பள்ளிகளைவிட நான்கு மடங்கு வசூலிக்கின்றன. இதுவே பெரிய முரண்பாடுகளையும ் விவாதங்களையும் தூண்டி விடுகின்றது.
Quote
 
 
-1 #8 srinivasan rajagopal 2011-06-17 10:27
100 % correct of editorial page of raviraj committee
Quote
 
 
+1 #7 M RAMASWAMY 2011-06-17 09:46
Good and timely article. Hope the best. It will be done soon. The Govt should soon release the text books which were printed already. The pages which is not required should either be blocked out or deleted. A circular for this may be sent to the schools. The decision regarding "SAMACHIR KALVI" (to continue or not) may be taken up next year.
Quote
 
 
-2 #6 raju 2011-06-17 09:33
உலக வீடியோ வரலாற்ற்றில் முதல் முறையாக ...... ................உலக தமிழ் மக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் அறிய சந்தர்ப்பத்தின் ...............வீடியோ தொகுப்பு ...........google search இல் karunanithi karunanidhi என டைப் செய்து கண்டு களியுங்கள் ............. 3 வீடியோகளின் தொகுப்பு
Quote
 
 
+1 #5 கபாலி கோவாலு காமரசு 2011-06-17 08:50
நைனா ஷவுக்கு நீயு இம்மாம் பெர்ய புரியாத மேட்டர எயுதிக்கினு இருப்பியா நானு கமண்டு குடுக்கிற மாதிரி மேட்டரா டெய்லி ஒன்னு போடமாட்டியா. சரி அத்த வுடு .சம்மந்தம் இல்லாங்காட்டியு ம் நான் கேக்கிறத்துக்கு நீ ன்னா பதில் வச்சிருக்க. மேட்டரு ன்னான்னா சோமாரி தயாநிதியயும் கலாநிதியயும் சிபிஐ கீசி ஜெய்ல்ல போட்டான்னு வையி அப்பொறமா சன் ரிவிய யார் நடத்துவா.அண்டஸ்ராண்ட் பண்ணிட்டியா. கண்டுக்காம வுடாம பதில் சொல்லு ஷவுக்கு.
Quote
 
 
+1 #4 Arunaaaaaaaaa 2011-06-17 08:47
பள்ளிகள் மீது நடவடிக்கையா? கல்வி தந்தைகளிடம் இருந்த பள்ளிகள் இப்போது அரசியல் தந்தைகளிடம் இருக்கிறது. பள்ளி. அதிலும் குறிப்பான விசயம்.. போன ஆட்சியில் இருந்த மந்திரிகளிடம் தான் இந்த பள்ளி, கல்லூரிகள் எல்லாம் ஆரம்பித்தார்கள் என்று நினைத்தேன். ஆனால் என்னுடைய நண்பர் சொன்னார்…. திமுகவை விட அதிமுக கட்சிகாரனுக்கு தான் அதிகம் பள்ளிகள் இருக்குதாம்… எவனுக்கு எவனும் சளைத்தவன் இல்லை… அதே போல எங்களை போல மக்களும் ஏமாறுவதற்கு சளைக்காமல் ஏமாந்து கொண்டே இருப்போம்… நீங்களும் இந்த ஏதாவது அறிவுரை சொல்லிக்கொண்டே இருங்கள்… நாங்களும் இவர்கள் சொல்லியாவது நம்ப முதல்வர் நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்பிகொண்டே இருக்கிறோம்.
Quote
 
 
+1 #3 R.Rao 2011-06-17 08:40
நீயும் நிதிபதிதானா?
நிதியின் சம்பந்தி நிதிபதிதானே?
Quote
 
 
+2 #2 anandth 2011-06-17 08:31
ஈரோடு: தனது மகளை அரசுப் பள்ளிக்கூடத்திற ்குத் தானே அழைத்துப் போய் அங்கு 2வது வகுப்பில் சேர்த்து, சத்துணவும் சாப்பிட வேண்டும் என அறிவுறுத்தி விட்டு வந்துள்ளார் ஒரு கலெக்டர். தமிழக அரசு ஊழியர்கள் வரலாற்றில் இது மிகப் பெரிய விஷயமாக பார்க்கப்படுகிற து.
http://thatstamil.oneindia.in/news/2011/06/16/erode-collector-admits-his-daughter-in-govt-school-aid0091.html
Quote
 
 
+4 #1 shiva 661 2011-06-17 08:00
தனியார் பள்ளிகளின் கட்டணம் வரையறுக்கப்பட வேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை .அதற்க்கு பதிலாக எரிவதை பிடுங்கினால் கொதிப்பது அடங்கும் என்பதற்கு இணங்க அரசு பள்ளிகளை தரம் உயர்த்துவது உலக தரம் வாழ்ந்த கல்வியை அரசு பள்ளிகளில் வழங்குவது என்ற
செயல் திட்டத்தை ஒழுங்காக செயல்படுத்தினலே போதும் வறுமை மற்றும் நடுத்தர வர்க்க மக்களின் சிறந்த கல்வி தேவை பூர்த்தியாகிவிட ும் .
தனியார் கல்வி நிறுவனங்களின் பாடத்திட்டத்தை சரி செய்கிறோம் ,கட்டணம் வரையறுக்கிறோம் என்று அந்த குழு இந்த குழு என்று வெட்டி செலவு
செய்யும் பணத்தில் அரசு பள்ளிகளை தரம் உயர்த்த செய்யலாம் .
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 93 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday4313
mod_vvisit_counterYesterday9391
mod_vvisit_counterThis week72869
mod_vvisit_counterLast week78861
mod_vvisit_counterThis month285688
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12807807