முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
பதவி படுத்தும் பாடு… …. …. அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 119
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
திங்கட்கிழமை, 13 செப்டம்பர் 2010 21:39

தமிழக காவல்துறையில் பதவி படுத்தும் பாடு இருக்கிறதே … அப்பப்பா. சொல்லி மாளாது.

ஐபிஎஸ் அதிகாரிகள் என்றால் குறைந்த பட்சமாக சில விஷயங்கள் தவறாமல் கிடைக்கும். அவை ஒரு அலுவலகம். ஓட்டுனரோடு கூடிய வாகனம்.   குடியிருப்பு.   சில நேர்வுகளில் பெர்சனல் பி.ஏ.   இது போன்ற வசதிகள், தமிழகத்தில் எந்த இடத்தில் நீங்கள் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்தாலும் உண்டு.   அது மாநகர காவல் ஆணையாளர் பதவியாக இருந்தாலும் சரி.   ஊர்க்காவல் படையாக இருந்தாலும் சரி. மனித உரிமை ஆணையப் பணியிடமாக இருந்தாலும் சரி.

  எனக்குத் தான் குறைந்த பட்ச தேவைகள் பூர்த்தியாகி விட்டனவே. வாங்கும் சம்பளத்திற்கு வேலையைச் செய்கிறேன் ஐபிஎஸ் அதிகாரிகள் முடிவெடுத்து விட்டால், அரசியல் வாதிகள் வாலைச் சுருட்டிக் கொண்டு அடங்கி இருப்பார்கள்.

 உதாரணத்திற்கு ஒரு சூழலை எடுத்துக் கொள்வோம்.   திமுக ஆட்சி நடக்கிறது. தமிழ்நாட்டில் 80 சதவிகித ஐபிஎஸ் அதிகாரிகள், மாறுதலைப் பற்றி கவலைப் படாதவர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள்.   ஆட்சியாளர்கள், ஒரு சிலர் மீது பொய் வழக்கு போடு என்பார்கள். சிலர் மீது போடாதே என்பார்கள். இது போன்ற சட்ட விரோத உத்தரவுகளை பெரும்பாலான அதிகாரிகள் கேட்க மறுக்கின்றனர் என்று வைத்துக் கொள்ளுங்கள்.   எத்தனை ஐபிஎஸ் அதிகாரிகளை மாற்றுவார் கருணாநிதி ?   மாறுதலுக்கு எங்களுக்கு பயம் இல்லை என்று ஐபிஎஸ் அதிகாரிகள் முடிவெடுத்து விட்டனரோயானால், ஒரு சட்ட விரோத உத்தரவைக் கூட, கருணாநிதி மட்டுமல்ல, எந்த ஒரு அரசியல்வாதியும் பிறப்பிக்க முடியாது.

 ஆனால், உதாரணத்துக்காகச் சொன்ன இது போன்ற நிகழ்வு கனவு தான்.   2006 தேர்தல் நடந்து முடிந்த மறுநாள், தேர்தல் முடிவுகள் வெளிவரும் முன்பாகவே சத்தம் போடாமல் கருணாநிதியையும், ஸ்டாலினையும் சந்தித்த பல அதிகாரிகளை சவுக்குக்கு தெரியும். பத்திரிக்கையாளர்கள் கண்ணில் படாமல் கருணாநிதி காலில் விழுந்தவர்கள் சில பேர். ஊர் பார்க்க காலில் விழுந்தவர்கள் சில பேர்.

 யூனிபார்மோடு கருணாநிதி காலில் விழுந்ததற்கான பலனாக கடந்த நாலரை ஆண்டுகளாக மாறுதல் எதுவும் இல்லாமல், அதிகாரம் வாய்ந்த ஒரே பதவியில் இருந்து வருகிறார் ஒரு அதிகாரி. ஜாபர் சேட் முயற்சி செய்து கூட அவரை தூக்க முடியவில்லை.

 ஒரு நேர்மையான அதிகாரி, சவுக்கிடம் இந்த ஐபிஎஸ் அதிகாரிகளைப் பற்றி பேசும் போது, நல்ல பதவி வேண்டும் என்பதற்காக கொலை கூட செய்வார்கள் இந்த அதிகாரிகள் என்று சொன்னது மிகையான வார்த்தை அல்ல என்பதை சவுக்கு தனது அனுபவத்தில் கண்டிருக்கிறது.

 லஞ்ச ஒழிப்புத் துறையில் தற்போது திமுக அமைச்சரவையில் மந்திரியாக இருக்கும் சாத்தூர் ராமச்சந்திரன் மீது அவர் எம்எல்ஏவாக இருந்த காலத்ற்கு உண்டான ஒரு சொத்துக் குவிப்பு வழக்கு இருந்தது.   இந்த வழக்கில் 1988ல் வந்த லஞ்ச ஒழிப்புச் சட்டம் பொருந்துமா பொருந்தாதா என்று ஒரு விவாதம் வந்து, ஒரு அதிகாரி 1947ம் ஆண்டு லஞ்ச ஒழிப்புச் சட்டத்தின் படியும், இது குற்றம் தான் என்று அந்த வழக்கு கோப்பில் ஒரு குறிப்பு எழுதினார்.

 2006 வந்தது.   ராதாகிருஷ்ணன் லஞ்ச ஒழிப்புத் துறையிலிருந்து மாற்றம் வரப்போவது உறுதி என்பது தெரிந்தும் அடுத்து நல்ல பதவியை எப்படிப் பிடிப்பது, யார் காலில் விழுவது என்று யோசித்துக் கொண்டிருக்கிறார்.

 அந்த நேரத்தில் சாத்தூர் ராமச்சந்திரன் மீதான வழக்கில் அந்த அதிகாரி எழுதிய குறிப்பை நகல் எடுத்து, ராதாகிருஷ்ணனின் தங்கக் கம்பிகள் இருவர் இருக்கிறார்கள் அல்லவா ? அவர்களிடம் கொடுத்தனுப்பி, அந்த அதிகாரி இது போல உங்களைப் பற்றி எழுதியிருக்கிறார். நம்ப அண்ணன் தான் உங்க மேல நடவடிக்கை இல்லாம பாத்துக்கிட்டார். அதனால் அண்ணனுக்கு நல்ல போஸ்டிங் போடச் சொல்லி தலைவர் கிட்ட சொல்லுங்க என்று சாத்தூர் ராமச்சந்திரனிடம் ஆட்சி மாறிய முதல் வாரத்திலேயே லாபி செய்தவர்தான் இந்த ராதாகிருஷ்ணன்.

 இப்படிப் பட்ட பதவிப் போட்டியைப் பற்றியதுதான் இந்தப் பதிவு. ஒவ்வொரு ஐபிஎஸ் அதிகாரியின் கனவு என்ன தெரியுமா ? சென்னை மாநகரின் கமிஷனராக ஆக வேண்டும் என்பதுதான்.   சென்னை மாநகர கமிஷனர் பதவி அப்படி என்ன கவுரவமான பதவியா ?   மற்ற பதவிகள் எல்லாம் இந்தப் பதவியை விட கீழானதா என்றால் ஆம். கீழானதுதான். அதற்கான காரணங்கள் என்ன என்பதைப் பார்ப்போம்.

 சென்னை மாநகரம் மும்பை, கொல்கத்தா போன்ற மெட்ரோ நகரம். இங்கே கோடிக்கணக்கில் பணம் எப்படிப் புழங்குகிறதோ, அதே போல பணம் தொடர்பான சிக்கல்களும் அதிகம்.

 இந்தச் சிக்கல்களில் சம்பந்தப் பட்டிருப்பவர்கள் எல்லாம், கருப்புப் பணத்தை மூட்டையில் கட்டி வைக்கும் அளவுக்கு பணக்காரர்கள். இது போன்ற நபர்களின் நெருக்கம், கமிஷனராக இருக்கும் அதிகாரிக்கும் சாதகம். அந்த நபர்களுக்கும் சாதகம். கமிஷனருக்கு, அவர்கள் கொடுக்கும் விலை உயர்ந்த அன்பளிப்புகள் சாதகம் என்றால், அந்த நபர்களுக்கு கமிஷனரை எனக்குத் தெரியும் என்று கூறிக் கொள்வதே சாதகம்.

 அடுத்த விஷயம். டாஸ்மாக் கடைகள் இரவு பத்து மணியோடு பூட்டப்பட்ட பிறகு சரக்கு கிடைக்காது என்பது பரவலாக தெரியும். அதையும் மீறி கிடைக்கிறது என்றால், கூடுதல் விலை கொடுத்து வாங்க வேண்டும்.

 ஆனால் சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல்களில் விடியற் காலை 5 மணி வரை சரக்கு கிடைக்கும் தெரியுமா ?   புதிதாக யாராவது நட்சத்திர ஹோட்டல் பாருக்குள் நுழைந்தால் அனுமதிக்க மாட்டார்கள். ஆனால் அங்கே தங்கியிருக்கும் விருந்தினர்களுக்கும், கொழுத்த பணக்காரர்களுக்கும் காலை 5 மணி வரை சரக்கு தாராளமாக வழங்கப் படும்.   11 மணிக்கு பாரை மூட வேண்டும் என்ற விதி நட்சத்திர ஓட்டல்களுக்கும் தானே பொருந்தும் ? எப்போதாவது, ஏதாவது நட்சத்திர விடுதிகளில் உள்ள பார்களில் காவல்துறை ரெய்டு என்ற செய்தியை படித்திருக்கிறீர்களா ? இருக்காது. ஏனென்றால் என்றுமே ரெய்டு நடக்காது.

 ரெய்டு நடக்காமல் இருப்பதற்கு அந்த நட்சத்திர விடுதிகள் ஏதாவது செலவு செய்ய வேண்டுமல்லவா ?   அது தான் சென்னை மாநகர கமிஷனரை கவனிப்பது.   ஒரு ஓட்டலுக்கு தலா 5 லட்சம் முதல் 7 லட்சம் வரை கமிஷனருக்கு மாதந்தோறும் மாமூல் வழங்கப் படும். இது, லத்திக்கா சரண் உள்ளிட்ட அனைத்து கமிஷனர்களுக்கும் பொருந்தும்.   அந்த நட்சத்திர ஓட்டல்களுக்கு இந்தத் தொகை ஒரு பெரிய செலவே அல்ல. ஏனென்றால், ஒரு லார்ஜ் 500 முதல் 700 வரை சார்ஜ் செய்யும் ஓட்டல்களுக்க மாதந்தோறும் 7 லட்சம் என்பது ஒரு பெரிய செலவு அல்ல.

 அடுத்து, டிஸ்கோத்தே என்று அழைக்கப் படும் இரவு மற்றும் பகல் நேர நடனங்கள் பற்றி கேள்விப் பட்டிருப்பீர்கள்.   இந்த டிஸ்கோத்தேக்கள் தங்கு தடையின்றி நடப்பதற்கும், அந்த டிஸ்கோத்தேக்களில் ஏற்படும் கைகலப்புகள், மற்றும் பிரச்சினைகளைப் பற்றி செய்தி வெளியே கசியாமல் இருப்பதற்கும், 2 முதல் 4 லட்சம் வரை ஓட்டலுக்கேற்றார் போல தொகை நிர்ணயிக்கப் படும்.

 அடுத்ததாக, முக்கியப் புள்ளிகள், திரைப்பட நட்சத்திரங்கள் மற்றும் பிரபலமானவர்களோடு, நட்சத்திர விடுதிகளில் தங்குவதை கேள்விப் பட்டிருப்பீர்கள்.   வளசரவாக்கத்தில் ஒரு வீட்டில் விபச்சாரம் நடந்ததை கேள்விப் பட்டு அங்கு சென்ற விபச்சாரத் தடுப்பு போலீசார், நான்கு அழகிகளையும், ஒரு ப்ரோக்கரையும் கைது செய்தனர் என்று தினத்தந்தியில் செய்தி வெளியிடுகிறார்களே, சென்னை மாநகர போலீசார்…. ? என்றாவது நட்சத்திர ஓட்டலில் சென்னை மாநகர காவல்துறை ரெய்டு நடத்தி அழகிகளை கைது செய்தார்கள் என்று தகவல் வந்திருக்கிறதா ?

 அந்த நட்சத்திர ஓட்டல்களிலும் இது போன்ற தவறுகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது.   மும்பை, பெங்களுரு, ஆந்திரா மற்றும் வெளிநாடுகளில் இருந்து பெண்கள் இந்த நட்சத்திர ஹோட்டல்களுக்கு வரவழைக்கப் பட்டுக் கொண்டுதான் இருக்கின்றனர்.

 ஆனால் ஐந்து நட்சத்திர விடுதியில் காவல்துறை அதிரடி சோதனை என்று செய்தி படித்திருக்கிறீர்களா ? இருக்காது. ஏனென்றால் இந்தச் சோதனைகள் ஐந்து நட்சத்திர விடுதிகளில் எப்பொழுதுமே நடை பெறாது. நடைபெறாமல் இருப்பதற்கு ஒரு பெரும் தொகை மாநகர கமிஷனருக்கு வழங்கப் படும்.

 இது போல அனாமத்தாக சென்னை மாநகர கமிஷனருக்கு வழங்கப் படும் தொகை மட்டும் மாதம் ஒரு கோடியைத் தொடும்.   இது தவிர, மத்தியக் குற்றப் பிரிவில் நடைபெறும் கட்டப் பஞ்சாயத்துகளின் மதிப்பை பொறுத்து தொகை மாறுபடும். இதற்காகத் தான் கமிஷனர் போஸ்டுக்கு இத்தனை அடிதடி.

 கமிஷனர் பதவிக்கு அடுத்தபடியாக அதிக அடிதடி இருப்பது காவல்துறை தலைமை இயக்குநர் பதவிக்குத் தான்.   கமிஷனர் போஸ்டில் இருப்பது போல பல்வேறு வசதி வாய்ப்புகள் இதில் இல்லையென்றாலும் கூட, மாநில காவல்துறையின் உயர்ந்த அதிகாரி என்ற வகையில் இந்தப் பதவிக்கு கூடுதல் மரியாதை உண்டு.

 தமிழகத்தைப் பொறுத்த வரை கருணாநிதி ஆட்சியில், தமிழகத்தில் உள்ள ஐபிஎஸ் அதிகாரிகளிலேயே மிக மூத்தவரை டிஜிபியாக நியமிப்பது வழக்கமாகவே இருந்து வந்தது.   ஆனால் 2006 முதல் இந்தப் போக்கு மாறியது. இதற்கு பெரும் காரணம் கருணாநிதி நிதானம் இழந்ததும், ஜாபர் சேட் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியதும் என்று சொல்லுகிறார்கள்.

 1971ம் பேட்சைச் சேர்ந்த கே.பி.ஜெயின் தான் லத்திக்கா சரணுக்கு முன்பாக டிஜிபியாக இருந்தார். டிஜிபி ஆக வேண்டும் என்று, அவரை விட இளையவரான கே.நடராஜன், ஆற்காடு வீராச்சாமி மூலமாக

 IN21_DGP_8951f

எடுத்த முயற்சிகள் வெற்றி பெறவில்லை.   அப்போது, கருணாநிதி பணியில் அனைவரையும் விட மூத்தவரான கே.பி.ஜெயினை தேர்ந்தெடுத்ததாக கூறுகிறார்கள்.

 

கே.பி.ஜெயினின் பதவிக் காலம் ஏப்ரல் 2010 வரை இருந்தாலும் ஜனவரி மாதத்திலேயே அவர் விடுப்பில் செல்லும் படி கட்டாயப் படுத்தப் பட்டார். அவர் விடுப்பில் சென்றதற்கான காரணம் என்னவென்று விசாரித்த போது, ஜாபர் சேட்டை மதிக்காமல் அவர் இரண்டு முறை கருணாநிதியை நேரடியாக சந்தித்ததாக தகவல்கள் கூறுகின்றன.

 

டெல்லியிலிருந்து வந்த ஒரு முக்கிய தகவலை கருணாநிதியிடம் கூற வேண்டும் என்று, கே.பி.ஜெயின் கருணாநிதியை சந்திக்கச் சென்ற போது அங்கிருந்த தள்ளுவண்டி பாண்டியன், ஜாபர் சேட்டுக்கு உடனடியாக போன் போட்டு சொல்லி விட்டார். பாண்டியனிடம் என்ன பேசினார்கள் என்று விசாரித்த போது பாண்டியனுக்கு விபரம் தெரியவில்லை. பிறகு கருணாநிதி, ஜாபர் சேட்டிடம் “என்னய்யா… ஜெயின் இப்படிச் சொல்றாரு ? “ என்று கருணாநிதியே கேட்கவும், ஜாபர் சேட்டுக்கு, இந்தத் தகவலை ஜெயின் தன்னிடம் சொல்லித் தானே கருணாநிதியிடம் சொல்லியிருக்க வேண்டும், நேரடியாக சொல்ல என்ன துணிச்சல் என்று கருவியிருக்கிறார். இதற்குப் பிறகு மற்றொரு சந்தர்ப்பத்திலும் ஜெயின் நேரடியாக கருணாநிதியை சந்தித்தது ஜாபர் சேட்டுக்கு பிடிக்கவில்லை.

Jaffar_Sait_2

 இதனால் உடனடியாக கே.பி.ஜெயின் தொலைபேசியை ஒட்டுக் கேட்பு வளையத்தில் கொண்டு வருகிறார் ஜாபர் சேட். இந்த சமயம் பார்த்து ஆழ்வார்க்குறிச்சியில் உதவி ஆய்வாளர் ஒருவர் ரவுடிகளால் வெட்டப் பட்டு அமைச்சர்கள் கண் முன்னிலையிலேயே துடிதுடிக்க இறக்கிறார்.   திமுக ஆட்சியில் காவல்துறையினரின் உயிர் இவ்வளவு துச்சமாகப் போய் விட்டதே என்று கே.பி.ஜெயின் ஒரு சக அதிகாரியிடம் போனில் புலம்புகிறார்.   இதை ஒட்டுக் கேட்ட ஜாபர் சேட், கருணாநிதியிடம் போட்டுக் காட்டவும், கருணாநிதி கடும் கோபம் அடைகிறார்.   நான் போட்ட பிச்சையில் பதவியை அனுபவிக்கும் அதிகாரிக்கு என் ஆட்சியைப் பற்றிக் குறை சொல்ல என்ன துணிச்சல் என்று உடனடியாக ஜெயினை விடுப்பில் செல்லச் சொல்கிறார்.

 லத்திக்கா சரண் அடுத்த டிஜிபி ஆகிறார். கே.பி.ஜெயின் 1971 பேட்சை சேர்ந்தவர் என்றால், லத்திக்கா சரண் 1976ம் பேட்சை சேர்ந்தவர். லத்திக்கா சரண் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தை சொந்த ஊராக கொண்டவர்.

 லத்திக்கா சரணை விட பணியில் மூத்தவர்கள் என்.பாலச்சந்திரன், விருமாண்டி என்று அழைக்கப் படும் ஆர்.நட்ராஜ், கே.விஜயக்குமார், எஸ்.கே.உபாத்யாய் மற்றும் வி.பாலச்சந்திரன். லத்திக்கா சரண் பேட்சை சேர்ந்த அவரை விட இளையவர்கள் போலாநாத் மற்றும் திலகவதி.

 ஏப்ரலில் ஜெயின் ஓய்வு பெற்றதும் மற்ற சீனியர்களை முந்தி தான் டிஜிபி ஆக வேண்டும் என்று திட்டமிட்டு காய் நகர்த்துகிறார் லத்திக்கா சரண்.

 2008ல் லத்திக்கா சரண் நிர்வாக கூடுதல் டிஜிபியாக இருக்கிறார்.   நவம்பர் 2008ல் சிபிஐ அலுவலகத்திலிருந்து வி.பாலச்சந்திரன் மற்றும் டி.ராதாகிருஷ்ணன் ஆகிய இருவர் மீதும் காவலர் தேர்வில் விடைத் தாள் வெளியான விவகாரத்தில் பெரிய அளவில் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடிதம் வருகிறது. இந்தக் கடிதத்தில் கே.பி.ஜெயின் Initiate the process and complete within 4 weeks என்று குறிப்பு எழுதுகிறார்.

_25MPDGP_LATIKA_SARA_27234f  

நிர்வாகப் பிரிவு கூடுதல் டிஜிபியாக இருக்கும் லத்திக்கா சரணிடம் இந்தக் கோப்பு வருகிறது.   துறை நடவடிக்கை தொடங்கப் பட்டால் விரைவாக முடிந்து வி.பாலச்சந்திரனின் பெயர் க்ளியராகி, அவரும் டிஜிபி பதவிக்கு தகுதியானவராகி விடுவார் என்று, அந்தக் கோப்பை ஒரு வருடத்திற்கு மேல் கட்டி வைக்கிறார் லத்திக்கா. அதாவது ஒழுங்கு நடவடிக்கை நிலுவையில் இருப்பதால் அவர் அந்தப் பதவிக்கு தகுதியில்லாதவராம்.

 என்.பாலச்சந்திரனை கருணாநிதிக்கு பிடிக்காது. ஆகையால் அவருக்கு வாய்ப்பில்லை. அடுத்ததாக உள்ள விருமாண்டியும், கே.விஜயகுமாரும், அதிமுகவுக்கு நெருக்கமான அதிகாரிகள் என்று அறியப் படுபவர்கள். ஆகையால் வி.பாலச்சந்திரன் வந்து விடக் கூடாது என்று லத்திக்கா சரண் திட்டமிட்டு காய் நகர்த்துகிறார். 

 

2006042108430101 

மு.க.ஸ்டாலினுடன் நெருக்கமாக இருக்கும் திலகவதி, பதவி உயர்வு பெற்று தனக்கு போட்டியாக வந்து விடப் போகிறார் என்று, அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் கோப்பையும் நிலுவையில் வைக்கிறார் லத்திக்கா.

உபாத்யாய் தொலைபேசி ஒட்டுக் கேட்பு வழக்கில் சிக்கி பதவி உயர்வு இல்லாமல் இருப்பதால் அவர் பற்றிய பிரச்சினையே இல்லை.

எவ்வித புகாருக்கும் ஆளாகாத போலாநாத் வந்து விடப் போகிறார் என்று ஜாபர் சேட்டிடம் சென்று Jaffer, Bhola Nath is not flexible. He may not toe the government line. He is also a bit cranky என்று கூறி, தன்னை டிஜிபியாக ஆக்க வேண்டும் என்று கோருகிறார்.  

DN_07-10-09_E1_09_03_CNI_thumb1

இந்தத் தகவல் ஒரு டிஜிபி தன்னிடம் வந்து இப்படி பேசுகிறார் என்று ஜாபரே பெருமையடித்துக் கொண்ட விஷயம். 

ஜெயின் விடுப்பில் சென்றதும் இப்படித் தான் டிஜிபியாக ஆகிறார் லத்திக்கா.   அதற்கு விசுவாசமாக தன்னை பெயருக்கு டிஜிபியாக வைத்திருங்கள் எனக்கு அதிகாரம் வேண்டாம் என்று ஓரமாக உட்கார்ந்திருக்கிறார். இன்று உண்மையில் அதிகாரம் செலுத்துவது ஜாபர் சேட்டும், கூடுதல் டிஜிபி ராதாகிருஷ்ணனும் தான்.

 

radhakrishna1n 

விருமாண்டி, மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தில் லத்திக்கா டிஜிபி ஆனதை எதிர்த்து வழக்கு தொடர்கிறார். வழக்கமாக எதிர் மனுதாரர்களை பதில் அளிக்கச் சொன்ன பிறகு வழக்கை முடிவு செய்யும் தீர்ப்பாயம். இந்த வழக்கில் யாருக்கும் நோட்டீஸ் அனுப்பாமலேயே அட்மிஷன் ஸ்டேஜிலேயே தள்ளுபடி செய்கிறது. இந்த வழக்கை தள்ளுபடி செய்த தீர்ப்பாயத்தின் உறுப்பினர்களுள் ஒருவர் சதபதி. இவர் தமிழ்நாட்டில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி.   இவர் விளையாட்டு ஆணையராக இருந்த போது, கோயம்பேடு அருகில் உள்ள SAF Games Village கட்டுமானப் பணிகளில் ஊழல் புரிந்ததாக லஞ்ச ஒழிப்புத் துறையில் 1996ல் வழக்கு இருந்தது. அப்போது லத்திக்கா சரண் லஞ்ச ஒழிப்புத் துறையில் டிஐஜியாக இருந்ததையும் வழக்கு தள்ளுபடி செய்யப் பட்டதையும் முடிச்சு போடக் கூடாது. 

இந்த சதபதி பற்றிய ஒரு கூடுதல் தகவல்.  ஐஏஎஸ் அதிகாரியாக இருந்து ஓய்வு பெறும் முன்னரே, தகவல் ஆணையராக வேண்டும் என்று அரசுக்கு விண்ணப்பித்து, அந்த நோக்கம் நிறைவேறாமல் மண்ணைக் கவ்வியதால்,  நிர்வாகத் தீர்ப்பாயத்தில் உறுப்பினராக பதவியேற்றார் என்பது ஒரு கூடுதல் தகவல்.

page_1

 

இப்படி டிஜிபி பதவியை பெற்று விட்டு பொம்மை போல ராதாகிருஷ்ணனையும், ஜாபர் சேட்டையும் அதிகாரம் செலுத்த விட்டு விட்டு லத்திக்கா சரண் என்ன செய்து கொண்டிருக்கிறார். மாதந்தோறும் ரகசிய நிதியிலிருந்து லத்திக்காவுக்கு ஒரு லட்சம் எடுத்துக் கொள்ள eligibility உண்டு என்றாலும் ஒரு பைசா கூட எடுப்பதில்லை என்று கூறுகிறார்கள். அவ்வளவு நேர்மையானவரா என்று அவசரப் பட்டு முடிவுக்கு வந்து விடாதீர்கள்.   ஒரு பைசா கூட எடுக்காமல் தன்னை நேர்மையானவராக காட்டிக் கொண்டு, பொம்மை போல உட்கார்ந்திருப்பதற்கு பிரதி பலனாக ராதாகிருஷ்ணனிடம் ஒரு லட்சமும், ஜாபர் சேட்டிடம் ஒரு லட்சமும் மாதந்தோறும் பெற்றுக் கொள்வதாக தகவல்கள் கூறுகின்றன.

photos_N2009090262

 மாலை ஏழு மணிக்கு மேல் கேம்ப் கிளர்க் கூட உள்ளே செல்லக் கூடாது என்று உத்தரவாம்.   இரவு ஒன்பது மணிக்கத் தான் வெளியே வருகிறாராம்.   ஏழு மணிக்கு மேல் வறுத்த முந்திரியும், சிக்கன் 65ம் லத்திக்கா சரணின் டிஜிபி அலுலவக அறைக்குள் செல்கிறது என்று தகவல்கள் கூறுகின்றன.   இந்த ஐட்டங்களைப் பார்த்தால் சைட் டிஷ் போல இருக்கிறதே, அப்போ மெயின் டிஷ் என்ன என்றெல்லாம் சவுக்கு மாதிரி அதிகப் பிரசங்கித் தனமா கேள்வி கேட்கக் கூடாது. (லத்திக்கா மேடம், அந்த முந்திரியிலே கொஞ்சம் கேம்ப் கிளர்க்குக்கு குடுத்தாத் தான் என்ன ? ரகசிய நிதியிலேர்ந்து தானே வாங்கறீங்க ?) 

இப்போது புரிகிறதா, பதவி படுத்தும் பாடு ?

 

Comments  

 
0 #51 kumaran sir 2012-01-07 17:52
அருமையான பதிவு தலவரெ
Quote
 
 
+1 #50 perupal 2011-12-17 10:59
எங்கே போய்க்கொண்டிருக ்கிறோம்?? நேர்மை என்பது இனி கனவுதானா?? எந்த ஆட்சி வந்தால் அதிகாரிகளை சுதந்திரமாக (லஞ்ச லாவண்யத்தில் அல்ல!!) நடக்க விடுகிறதோ அதுதான் நம் நாட்டினை ஒரு வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச்செல்ல வழி வகுக்கும்..இப்போது அலுவலகங்கள் எல்லாம் கட்சி ஆபீஸ் போல அல்லவா செயல்படுகின்றன! !
ஃஉஒடெ
Quote
 
 
+3 #49 vinayaga 2011-12-17 10:58
சவுக்கு அண்ணே இப்படி உயிரை பணயம் வைத்து யாருக்காக உழைக்கிறிர்கள் இவர்களும் திருந்தவும் மாட்டார்கள்.. அவர்களை திருந்தவும் விட மாட்டார்கள்!!! இருந்தாலும் உங்கள் முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள்....

தைரியம் இருக்கவேண்டும். நீங்கள் எங்கள் உதாரண புருஷன். நீங்கள் இன்னும் பலகாலம் வாழவேண்டும். அதற்கு உங்களுக்கு தகுந்த பாதுகாப்புத் தேவை.

உங்களுக்கென ஒரு அமைப்பு அரசியலையோ , அச்சு ஊடக பத்திரிக்கையொன் றின் மூலமோ பாதுகாப்புத் தேடிக்கொள்ளுங்க ள். எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக.
Quote
 
 
+1 #48 K G Ramachandran 2011-11-20 22:31
The POSTS are created and determined by human beings so called Politicians. How about the people in Big temples doing all sort of atrocities? What the Gods ore doing for them. we can say தெய்வம் நின்று கொல்லும். என்பதெல்லாம் வெறும் பழமொழி, கொல்லுவதில்லை, only his own conscience kills him because of his age or one who is at his frag end of his life. So திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால ் வேறு மார்கமில்லை. This is the Truth and Science, in other words confidence (நம்பிக்கை). Hats of to Savukku!!!
Quote
 
 
0 #47 Spymaster 2011-10-08 22:46
This government is taking action against Mr. K.N Nehru and his family members. At the same time, no action against the officers in Trichy District who helped KNN to commit such crime. For example, then district collector, also called as DMK District secretary, was keeping mum and collided with MD( Ramajeyam) to loot everything possible. He tipped all the media and and ensured that his photo was published in all leading newspapers. Now, he is MD of TASMAC now.. Politicians can be thrown out in every five years, What about corrupt people like this gentleman.
Quote
 
 
+3 #46 jinnah 2011-07-29 20:21
தங்களீன் கருத்துக்களூம் என்னங்களூம் தி.மு.க.வையும்.கருனானிதி.குடும்பத்தையுமே .சுற்றீயே.இறூக்கிறதை.கானமுடிகிறது உதாரனம் சொல்வதுகூட.கருனானிதியாகதான ் இறுக்கிறது
Quote
 
 
0 #45 velavan 2011-07-27 11:51
இப்போ நாமக்கல் மாவட்டத்தில் ப்லடினும் கிடச்சிருக்கு. இத நேர்மையா எடுத்தா நாடு பனக்கார நாடா மாறிடும். எப்படியும் அதிகாரிகளும்,அர சியல்வாதிகளும் பங்கு போட்டு கொல்வார்கள். இது ஜகஜமப்பா
Quote
 
 
+3 #44 tha. naa.mathivaanan 2011-06-25 16:39
பதவிக்காக பல்லிளித்துக்கொ ண்டு பாத பூஜை செய்து பதவி சுகம் அனுபவித்துவரும் இது போன்ற அதிகாரிகள் முதுகில் சவுக்கடி தர வேண்டும்.
காக்கிச்சட்டை ஒரு புனிதமிக்க ஆடை.அதற்குள் ஒரு கண்ணியம், கடமை அடங்கியுள்ளது.
ஆனால், கயமை..தான் என்பதறிந்து வேதனை தான் மிச்சம்.
இவர்களின் படிப்பு எதற்கு? இவர்களும் லஞச அரசியலில் ஈடுபட்டு கொள்ளை அடித்துக்கொள்ள வேணடியதுதானே...
பாவம் மக்கள்.... இவ்ர்களையும் மதிக்க வேண்டியுள்ளது....

த. நா.மதிவாணன்.
Quote
 
 
0 #43 SURESHR 2011-06-02 21:27
very true news from ur side... keep going on..

let me know any Corruption in SI(Sub-Inspector) selection 2010 (1095 vacancy) and any upcoming SI selection this year... ???
Quote
 
 
+3 #42 ginndha 2011-04-12 11:49
என்னங்க சவுக்கு எங்கிருந்து உங்களுக்கு இந்த விஷயம் கிடைக்கிறது ...உங்கள் சமுதாயப்பணி சிறக்க வாழ்த்துக்கள் .....
Quote
 
 
+2 #41 Manithan 2011-03-06 17:23
this mutta paya Jaffer Seit IPS is always think that he passed IPS exam by his brilliance but that is not true when he passed the exam around 2000 vacancies were there intha NAATHAARIPPAYA 700 or 800th rank yedutthu IPS aagittaan.now this fellow is thinking too much and not respecting any officer of fellow IPS and Group 1 officers. inthe Chandrasekar IPS (SP SBCID) is the husband of thamizhachi thangappandian who is a sister of Thangam Tennarasu, Ravi IPS is a brother in law of thangam tennarasu because of this kollai koottani the talented Tamil Nadu police is in this shape. because of these bastards a honest and straight forward officer (Group -I) had quit the job and now he is working as an IAS officer in West Bengal. AMMAATHAAAN INTHA NAAIGALAI KALAIYEDUKKANUM
Quote
 
 
+4 #40 rf 2011-01-25 07:16
வறுத்த முந்திரியும், சிக்கன் 65ம் லத்திக்கா akka slimma erukkaakaa?
Quote
 
 
+4 #39 paulraj 2011-01-12 03:30
You are the future. Keep it up for your evangelization of truth.
Quote
 
 
0 #38 Ravikanth 2011-01-10 14:21
All learnt from their senior officers Like ADGP K.V.S. Moorthi IPS (Criminaly currupt Joint Commisioner of Chennai)

R. Rajagopalan IPS Former commisioner of Chennai who needed a movie actress evry night.

Even clean handed Walter was week with women.

Late Durai IPS (commisioner and later DGP) who killed himself due to Karunanithi.
Quote
 
 
+5 #37 Eezhath Thamizhan 2010-10-22 15:07
Dear savukku i cant belive my self how the hell you writing like this :cry: :eek: ???? carefull,B'cos indian gov'nt dont like like you people ( SORRY SRILANKAN GOV'T AS WELL).good luck and god bless you all.
Quote
 
 
+1 #36 MOORTHY 2010-10-09 11:11
SAJJER SAT HAS MORE POWER IN KARURNANITI GOVERNMENT
Quote
 
 
+7 #35 Ducks 2010-09-20 08:57
உங்கள் சைட் தமிழ்நாட்டு மீடியா ஒன்றும் வெளியிடாத தகவல்களை துணிச்சலுடன் வெளிடுவதற்கு வாழ்த்துக்கள் . இந்த தகவல்கள் தமிழ்நாட்டு மக்கள் ஒவொருவருக்கும் தெரிந்தால் மட்டுமே இன்னும் 207 நட்ட்களில் மாற்றம் வரும். தொடரட்டும் உங்கள் நற்பணி
Quote
 
 
+6 #34 Lakshmidharan 2010-09-19 09:37
kani mozhi - raaja i.t.minister patri makkalidam edho... edho... vadhandhi paraviullathey adhai patri yarukkavadhu therindhal savukku ell padhiyalamey.. kuzhandhaigal text book aga pannalam
Quote
 
 
+5 #33 அன்புடன் சிவா... 2010-09-18 09:42
தமிழக சட்டம்-ஒழுங்கு போலீஸ் டி.ஜி.பி. லத்திகாசரண் கார் விபத்தில் சிக்கி லேசான காயத்துடன் தப்பினார்.
Quote
 
 
+1 #32 Anbuchezhiyan 2010-09-16 16:48
Revoulution starts.... Dirty people will die... these kind of bad viruses will be eradicated by you ... & Me....
Quote
 
 
+11 #31 Akm, Vetriyur 2010-09-16 11:07
சவுக்கு அண்ணே இப்படி உயிரை பணயம் வைத்து யாருக்காக உழைக்கிறிர்கள் இவர்களும் திருந்தவும் மாட்டார்கள்.. அவர்களை திருந்தவும் விட மாட்டார்கள்!!! இருந்தாலும் உங்கள் முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள்....

தைரியம் இருக்கவேண்டும். நீங்கள் எங்கள் உதாரண புருஷன். நீங்கள் இன்னும் பலகாலம் வாழவேண்டும். அதற்கு உங்களுக்கு தகுந்த பாதுகாப்புத் தேவை.

உங்களுக்கென ஒரு அமைப்பு அரசியலையோ , அச்சு ஊடக பத்திரிக்கையொன் றின் மூலமோ பாதுகாப்புத் தேடிக்கொள்ளுங்க ள். எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக.

Vaazhthukkaluda n ur Brtr...
Quote
 
 
+2 #30 s.chandrakumar 2010-09-15 17:02
That Satapathy of the last para! Too corrupt to be a memebr of the CAT.I am one of those who was affected by his order.No justice can be expected from him.
Quote
 
 
+3 #29 yemanthavan 2010-09-15 14:27
hmmmmmmm. engathan poi vaazhrathu inime. :eek:
Quote
 
 
+6 #28 காலவன் 2010-09-15 13:06
உங்களுக்கென ஒரு அமைப்பு அரசியலையோ , அச்சு ஊடக பத்திரிக்கையொன் றின் மூலமோ பாதுகாப்புத் தேடிக்கொள்ளுங்க ள். எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக. இதை நான் வழிமொழிகிறேன்... முற்றிலும் உண்மை.
Quote
 
 
+4 #27 mercury pookal 2010-09-15 13:05
ஒ.. இதுக்காகத்தான் பிள்ளைங்க நான் ஐ.எ.எஸ். ஆகனும்...ஐ.பி.எஸ..ஆகனும்னு.. துடிக்கிறாங்களா ....படித்தவன் சூதும் வாதும் செய்தால்.. போவான் ...போவான்.. அய்யோ.. என்று..போவான் .. என்று சொன்ன பாரதி.. அப்படி போனது நீ.தான்.. இந்த பாடுபாவிகள் முந்திரியும் சிக்கனும் தின்று.. மக்களின் வரிப்பணத்தில் சொகுசாகத்தான் வலையவருகிறார்கள ்...
Quote
 
 
+14 #26 அன்புச்செல்வன் 2010-09-15 11:59
நெறைய யோசித்து இதை எழுதலாம் என பலமுறை நினைத்து இப்போது எழுதுகிறேன்.

நீங்கள் நினைக்கும் அளவிற்கு அதிகார வர்க்கமும் , அரசியல் வர்க்கமும் லேசுப்பட்டதில்ல ை. கடவுளின் கருவரைக்குள்ளும ் செல்லுபடியாகும் . அதனால் .உங்களின் பாதுக்காப்பிற்க ு சட்டரீதியான , தார்மீக ரீதியான சுவரொன்றை எழுப்பிக்கொள்ளு ங்கள். இங்கே பின்னூட்டங்களில ் நாங்க உங்க பின்னாடி நிப்போம் பாஸ் என்று சொல்பவர்களையெல் லாம் நமபாதீர்கள். அவர்கள் உங்களை பின்னூட்டத்தில் மட்டுமே ஆதரிப்பார்கள் ( நான் உட்பட).. தைரியம் இருக்கவேண்டும். நீங்கள் எங்கள் உதாரண புருஷன். நீங்கள் இன்னும் பலகாலம் வாழவேண்டும். அதற்கு உங்களுக்கு தகுந்த பாதுகாப்புத் தேவை. லட்சக்கணக்கான இளைஞரக்ள் பின்னால் நிற்கும் போதே சீமானைத் தூக்கி தேசியபாதுகாப்பு ச் சட்டத்தில் போட்ட இந்த 'தேவடியா' பசங்கள் , உங்களை எது செய்யவும் தயங்க மாட்டார்கள்.

உங்களுக்கென ஒரு அமைப்பு அரசியலையோ , அச்சு ஊடக பத்திரிக்கையொன் றின் மூலமோ பாதுகாப்புத் தேடிக்கொள்ளுங்க ள். எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக.
Quote
 
 
-1 #25 Lakshmidharan 2010-09-15 09:59
Savukku sar, endha central government kku soranaiye kidaiyadha. edhayumey perisa valarththuvittu than pinnar pidikkuma aatkalaium, thappu pannugiravarkal aiyum. avangalukku vadakkuley erukkira thollaiyey podhum, podhum pola erukku. law and order mosam, corruption ellam erukkira podhey dismiss pannina nallaerukkum . Makkal adhaithan edhirparkirarga l.
Quote
 
 
+2 #24 அன்புடன் சிவா... 2010-09-14 23:40
லத்திகா சரனுமா ... சுத்தம்...வாழ தமிழ்...வளர்க காவல் துறை
Quote
 
 
+5 #23 Premkumar SJ 2010-09-14 23:31
>> +2 #14 Nellai Balaji 2010-09-14 14:57
>> சவுக்கு பாஸ் ,
>> கொஞ்சம் நல்ல ஆபீசர்ஸ் பத்தியும்
>> எழுதுங்களேன்.. ரொம்ப நாறுது..

Yup i too second this
Quote
 
 
+3 #22 Netrikkan 2010-09-14 21:36
Dear Mr.Savukku

Vanakkam

Nice article , at the right time there is an important event going to happen in Chennai City police , a new commissioner is on the way ( Illegally ). For more details contact Netrikkan Mani , Pls don publish this article, its for your Information
Quote
 
 
+2 #21 murugaraja 2010-09-14 20:36
Dear savukku annan,
vazhthukal, todaratum ungam panni
Quote
 
 
+5 #20 Pradeep_P 2010-09-14 18:52
மப்பு எப்ப தெளிஞ்சு ........ :sigh: இருந்தாலும் குறைவா லஞ்சம் வாங்குறதுக்கு பாராட்டுகள் லத்திக்கா மேடம்
Quote
 
 
+6 #19 அ.சந்தர் சிங். 2010-09-14 17:28
இவர்களை எல்லாம் நம் வீட்டு வாட்ச்மன் வேலைக்கு கூட

வைக்க கூடாது.வேலியே பயிரை மேய்கிறது.

எல்லாம் கலிகாலம்.""நெஞ்சு பொறுக்குதில்லைய

இந்த நிலை கேட்ட மாந்தரை நினைத்து விட்டால்""

மக்கள் ஆகிய நாமெல்லாம் சவுக்கு எடுக்கும் காலம் வந்து

கொண்டே இருக்கிறது.
Quote
 
 
+2 #18 Jeeva 2010-09-14 16:09
தல சுத்துது ........
Quote
 
 
+8 #17 dhatchi 2010-09-14 15:46
""படித்தவன் சூது பண்ணினால் ஐயோ என்று போவான்"" பாரதி சொன்னது தவறு போலும் ஆகா ஓகோ என்றல்லவா இருகிறார்கள். நம் கல்வி கற்ப்பிக்கும் முறையே தவறாக உள்ளது, படிப்பது என்பது வெறும் பணம் சம்பாதிக்க மட்டும் தான் என்ற தவறான கொள்கைகள் வளர்த்தெடுக்கப் படுகின்றன, படிப்பது என்பது நம் சிந்தனை வளர்க்கவும், நமது அறிவை மேம்படுத்தவும் , பண்பாடு உள்ளவனாக உருவாக்கவும் உதுவுவதே ஒரு சிறந்த கல்வியாக இருக்க முடியும், இப்போது எல்லாம் மெத்த படித்தவனே கொஞ்சமும் பிசிறாமல் அல்லவா தவறு செய்கின்றான். ஆக படிப்பதே தவறு செய்ய தானா??? நல்ல படித்த அரசு அதிகாரி ஒரு தினக்கூலியிடம் லஞ்சம் கேட்பது எவ்வளவு கேவலமாக இருக்கிறது இதற்க்கு தான் இவர் படித்தாரா??? இப்போதெல்லாம் லஞ்சம் வாங்குவதை குற்றம் இல்லை என்று அறிவித்து ஒவ்வொருவருடைய பதவிக்கு ஏற்ப எவ்வளவு பெற்றுக்கொள்ளலா ம் என்றும் மக்கள் தன் வசதிக்கேற்ப எவ்வளவு கொடுக்க வேண்டும் என்பதையும் அரசே நிர்ணயித்து ஒரு சட்டம் கொண்டு வர சொல்லலாம் ஏனென்றால் கொடுக்கிறது என்று ஆன பிறகு அவரவர் சக்திக்கு கொடுக்கலாமே.""அதிகாரிகளே ஒரு முக்கிய செய்தி சூதாட்டத்தை அரசே ஏற்று நடத்த போகிறதாம்.""
Quote
 
 
+2 #16 PANEERSELVAM/ABUDABI 2010-09-14 15:17
DEAR SAVUKKU,OUR WORLD GREAT CORRUPPTED CHIEF MINISTER KARUNA WAS SPOILED 95% OF IPS,IAS,GOVERNM ENT OFFICIALS,MINIS TER,MLA'S&MP'S SINCE HE WAS STARTED AS CHIEF MINISTER AFTER DEAH OF ANNADURAI(1969),IS IT POSSIBLE TO CHANGE THEM?NOT AT ALL POSSIBLE.NOW KARUNANIDHI FAMILY WILL CONTINUE HIS JOB AND TAMIL PEOPLE WILL DIGEST AND GOING TO ACCEPT THERE LOOTING IN TAMILNADU.THEY KNOWS TAMIL PEOPLES ARE AFRAID TO COME OUT FOR REVAUTION IN THE STREET,SO KARUNANIDHI,FAM ILY AND HIS PARTY PEOPLE ARE LOOTING TAMIL NADU LIKE MARGOS(PHILIPIN E PRESIDENT).HOW MUCH MONEY HE WILL LOOT AND WHERE HE WILL TAKE? AFTER DEATH,WHAT HE WILL DO? MAY HE WILL TAKE TO HELL TO CORRUPT THEIR ALSO,BECAUSE HE IS FATHER OF CORRUPTION
Quote
 
 
+3 #15 Karthik 2010-09-14 15:13
Dear Savukku,

Lets slowly and steadily build this website in to a movement. Heartened to see someone stand up against these crooks headed by thirukuvalai theeyasakthi

Karthik
Quote
 
 
+5 #14 Nellai Balaji 2010-09-14 14:57
சவுக்கு பாஸ் ,
கொஞ்சம் நல்ல ஆபீசர்ஸ் பத்தியும் எழுதுங்களேன்.. ரொம்ப நாறுது..
நாங்களும் கொஞ்சம் நல்ல விசங்களை தெரிஞ்சிகொள்வோம ்.
நாட்ல எவனையும்/ எவளையும் நம்ப கூடாது.
பசிக்கு உடம்பை விற்கும் அபலை பெண் நல்லவள்தான், இதெல்லாம் பார்க்கும் போது
Quote
 
 
+3 #13 durai 2010-09-14 14:32
சிறப்பாண பதிவுகள் மிக்க நன்றி சவுக்கு அவர்களே....
Quote
 
 
+2 #12 raja 2010-09-14 12:13
nandru
Quote
 
 
+3 #11 THAMEEN C 2010-09-14 11:58
Dear Savukku sir,
Read an article about u!!!!If u continued to work in that dept, u wont be able to bring these culprits to public.... My hearty wishes for u!!!
Quote
 
 
+3 #10 SENTHIL 2010-09-14 11:50
NALLA POLIKIRANGAPPA,
INTHA POLAPPU POLAIKIRATHUKKU VERA ETHAVATHU THOZHIL SEIYALLAM.
Quote
 
 
+8 #9 அப்பாவி 2010-09-14 11:22
சவுக்கு அண்ணே இப்படி உயிரை பணயம் வைத்து யாருக்காக உழைக்கிறிர்கள் இவர்களும் திருந்தவும் மாட்டார்கள்.. அவர்களை திருந்தவும் விட மாட்டார்கள்!!! இருந்தாலும் உங்கள் முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள்....
Quote
 
 
+3 #8 Anonymous 2010-09-14 10:58
நல்ல பதிவு
Quote
 
 
+1 #7 Somu 2010-09-14 09:40
Ok but you also identify the sincere officers and encourage him.
Quote
 
 
+6 #6 ரோமிங் ராமன் 2010-09-14 07:39
எங்கே போய்க்கொண்டிருக ்கிறோம்?? நேர்மை என்பது இனி கனவுதானா?? எந்த ஆட்சி வந்தால் அதிகாரிகளை சுதந்திரமாக (லஞ்ச லாவண்யத்தில் அல்ல!!) நடக்க விடுகிறதோ அதுதான் நம் நாட்டினை ஒரு வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச்செல்ல வழி வகுக்கும்..இப்போது அலுவலகங்கள் எல்லாம் கட்சி ஆபீஸ் போல அல்லவா செயல்படுகின்றன! !
Quote
 
 
+3 #5 Julie 2010-09-14 04:55
நீங்களுமா லத்திகா ?????
Quote
 
 
+3 #4 Eswaran 2010-09-13 23:31
You too Brutus(lathika) .........
Quote
 
 
+3 #3 Eswaran 2010-09-13 23:30
ou too Brutus(lathika) .........
Quote
 
 
+5 #2 rukku 2010-09-13 22:58
சவுக்கு ஆதாரமில்லாமல் இந்தத்தகவல்களை வெளியிடமுடியாது ,காக்கிக்குள்ளி ருக்கும் கறுப்பு ஆடுகள்தன் சவுக்குக்கு ஒற்றராக செயல்ப்படுவதாக சந்தேகிக்க வேண்டியுள்ளதாக நியாயம் இருக்கிறது,, ஆட்சி மாற்றம் வந்ததும் நிறையச்சங்குகள் ஒரே நேரத்தில் ஒலிக்கும் என்பதில் ஐயமில்லை,
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 205 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday4840
mod_vvisit_counterYesterday10268
mod_vvisit_counterThis week37480
mod_vvisit_counterLast week78861
mod_vvisit_counterThis month250299
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12772418