முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்தொடர்புக்கு
+++
மனசாட்சி இல்லாத மாறன்கள். அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 61
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
செவ்வாய்க்கிழமை, 21 ஜூன் 2011 14:01

 

தயாநிதி மற்றும் கலாநிதி மாறனை இத்தனை நாளாக தழுவியிருந்த அதிர்ஷ்ட தேவதை சுத்தமாக கைகழுவி விட்டதாக தெரிகிறது.

 

2004 பாராளுமன்றத் தேர்தலின் போது, முரசொலி மாறனின் மறைவால், மத்திய சென்னை பாராளுமன்றத் தொகுதிக்கு, கருணை அடிப்படையில் நியமிக்கப் பட்டவர்தான் தயாநிதி மாறன். அந்தப் பதவியே கனிமொழி போட்ட பிச்சைதான்.   முதலில் அந்தத் தொகுதிக்கு கனிமொழியை வேட்பாளராக நியமிக்கலாம் என்று, கருணாநிதி எடுத்த முடிவு, கனிமொழி அரசியலில் இறங்க அப்போது மறுத்ததால் தயாநிதிக்கு அந்த யோகத்தை அளித்தது.

 mk_kanimozhi_20110509

அதற்குப் பிறகு, மாறன்களின் நடத்தையால் தான் அவர்கள் சிஐடி காலனியின் எதிர்ப்பை சம்பாதிக்க நேர்ந்ததாக தகவல்கள் கூறுகின்றன.   எம்.பி பதவியை பெறுவதற்கு முன்பாக, ராசாத்தி அம்மாளின் தயவு வேண்டி, அவர்கள் வீட்டிற்கு நடையாக நடந்தவர்கள், பதவி கிடைத்து மந்திரியானதும், சிஐடி காலனியை சுத்தமாக புறக்கணித்ததாக தெரிகிறது.   இந்தப் புறக்கணிப்பும் உதாசீனப்படுத்தலுமே, ராசாத்தி அம்மாளை கனிமொழிக்கும், அரசியல் அதிகாரம் இருந்தால் தான், குடும்பத்தில் கவுரவமான இடத்தை தக்கவைத்துக் கொள்ள முடியும், வெறுமனே கருணாநிதியின் பாசம் மட்டும் போதாது என்ற முடிவுக்கு வந்ததாகவும் தெரிகிறது.

 rajathi_ammal._3

2004ல் தேர்தல் முடிவுகள், திமுகவுக்கு, கணிசமான செல்வாக்கை பெற்றுத் தந்ததும், தொலைத் தொடர்புத் துறையை கேட்டுப் பெற்றால் தங்களின் தொழில்களுக்கு பெரும் அளவில் உதவியாக இருக்கும் என்று மாறன்கள் உணர்ந்தே, அந்தத் துறையை பெற வேண்டும் என்று கருணாநிதிக்கு நெருக்கடி கொடுத்ததாக தெரிகிறது.   மாறன் சகோதரர்களின் உள்நோக்கத்தை அறியாத கருணாநிதியும், அவர்கள் விருப்பத்தின் படியே, தொலைத் தொடர்புத் துறையை மத்திய அரசோடு மல்லுக் கட்டி பெற்றுத் தந்தார்.

 dayanidhi_maran2

தொலைத் தொடர்புத் துறை தங்களது கையில் வந்த நாள் முதலாகவே, மாறன்கள், அந்தத் துறையை தங்களின் தனிப்பட்ட தொழில் வளர்ச்சிக்காக பயன்படுத்தி வந்துள்ளார்கள்.   எப்.எம் லைசென்ஸ், நேரடியாக வீட்டுக்கு வரும் டிடிஎச் சேவை, ஆகியவற்றில் தயாநிதி மாறன் அதிகார துஷ்பிரயோகம் செய்து, பல கோடிகளை சம்பாதித்தது கருணாநிதிக்குத் தெரியும் என்றாலும், இப்போது வெளியில் வந்திருக்கும் அளவுக்கு சம்பாதித்திருப்பார் என்று அவரே நினைக்கவில்லை.

 

மத்திய அமைச்சராக தயாநிதி ஆன பிறகு, அவர்களின் சொத்து நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே வந்தது. மாறன்களின் வாழ்க்கை முறையும் மாறத் தொடங்கியது.   2006ல் அதிகாரத்துக்கு வந்த பின்னால், அழகிரி மற்றும் ஸ்டாலினிடம் ஏராளமான அதிகாரம் இருந்தாலும், மாறன்களின் லைப் ஸ்டைலைப் பார்த்து அவர்களுக்கு எரிச்சலே வந்தது. மிக மிக பகட்டான வாழ்க்கை முறை, ஏழு பென்ஸ் கார்கள் என்று ஆடம்பரமும், பகட்டும் நிறைந்த வாழ்க்கையை வாழத் தொடங்கினர்.

 

2006க்கு முன்பாக, கருணாநிதி குடும்பத்தினர் சன் டிவியில் வைத்திருந்த பங்குகளை திரும்பப் பெற்றுக் கொண்டு, ஒரு தொகையை அளித்தனர். அது வரை சன் டிவி பங்குச் சந்தையில் வெளியிடப்படவில்லை என்பதால், உத்தேசமாக ஒரு விலையை நிர்ணயித்து, தயாளுவுக்கும், கருணாநிதிக்கும் ஒரு பத்து கோடியை அளித்ததாக நினைவு.

 

ஆனால், பங்குச் சந்தையில் ஆகஸ்ட் 2006ல் மாறன் சகோதரர்கள் சன் டிவியின் பங்குகளை வெளியிடுகிறார்கள். வெறும் பத்து சதவிகித பங்குகளை வெளியிடுகிறார்கள்.   இந்த 10 சதவிகித பங்குகள் மொத்தம் 68 லட்சத்து 89 ஆயிரம் பங்குகள். இந்தப் பங்குக்கு மாறன் சகோதரர்கள் நிர்ணயித்த விலை 875 ரூபாய்.   இவ்வாறு சந்தைக்கு வந்த சன் டிவியின் பங்கு, சந்தையில் வெளியிடப் பட்ட அன்று, 1466 ரூபாய்க்கு முடிந்தது.

 suntv-logo

இவ்வாறு மாறன் சகோதரர்கள் இந்தப் பங்கு வெளியீட்டில் சம்பாதித்த பெரும் தொகை, கருணாநிதி குடும்பத்தினரை கடும் கோபம் கொள்ளச் செய்தது. அப்போது முதலே, மாறன்கள் மீதான கோபம் நீறு பூத்த நெருப்பாக இருந்தது.

 

நீறு பூத்த நெருப்பாக இருந்த கோபம், தினகரன் நாளேட்டில் சர்வே வெளியானதும் வெளிப்படையாக வெடித்தது.   அந்நாளேட்டில் பணியாற்றிய 3 ஊழியர்கள் எரித்துக் கொல்லப் பட்டாலும், அது, மாறன் சகோதரர்களின் கொட்டத்தை அடக்க ஒரு வாய்ப்பாக கருணாநிதி குடும்பத்தாரால் பார்க்கப் பட்டது.

 

அப்போது ஏற்பட்ட பிரிவால் உருவானதுதான், கலைஞர் டிவி உதயம். பிரிந்து போன மாறன் சகோதரர்கள், மீண்டும் கருணாநிதியோடு இணைவதற்கான முயற்சிகளை மேற்கொள்வதை விடுத்து, மோதிப் பார்த்து விடலாம் என்ற வழியையே தேர்ந்தெடுத்தனர்.   சன் டிவி மூலமாக தொடர்ந்து திமுக அரசுக்கு எதிரான செய்திகளை போட்டுத் தாக்கினர்.   ஸ்பெக்ட்ரம் விவகாரம் அரசல் புரசலாக கசியத் தொடங்கியதும், ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் கண்ணாடி போல தெளிவான முடிவுகள் எடுத்ததாகவும், தயாநிதி மாறனை தொலைத் தொடர்புத் துறையிலிருந்து நீக்கியதாலேயே ஊழல் நடைபெற்றது என்றும், தவறாக எடுக்கப் பட்ட அனைத்து முடிவுகளுக்கும் ராசாவே காரணம் என்றும் வளைத்து வளைத்து செய்தி போட்டனர்.

 

சன் டிவியின் வளர்ச்சி என்பது, திமுக தொண்டனின் ரத்தத்தில் கிடைத்தது. திமுக தொண்டனின் போராட்டத்தாலும் திமுக வின் ஆட்சி அதிகார பலத்தாலும், அந்தக் கட்சியின் சொத்தான அறிவாலயத்திலும் வளர்ந்தது. அப்படிப் பட்ட வளர்ச்சியை மொத்தமாக மறந்து விட்டு, ஜெயலலிதாவின் பிறந்த நாளுக்கு, சன் குழுமத்தின் தினகரன் நாளேட்டில் முழுப்பக்க விளம்பரம் வெளியிட்டார்கள் மாறன் சகோதரர்கள். இதுதான் இவர்களின் மனசாட்சி.

 

திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்டோர், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்தில் கிடைத்த அதிகாரத்தை கட்சியின் வளர்ச்சிக்கும், ஓரளவுக்கு தங்கள் சுயலாபத்திற்கும் பயன்படுத்தினார்கள் என்றால், மாறன் சகோதரர்கள் முழுக்க முழுக்க தங்களது, சுயலாபத்திற்காக மட்டுமே பயன்படுத்தினார்கள்.

 

பேரப்பிள்ளைகள் ஏதோ தொழில் செய்து பிழைக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்த கருணாநிதிக்கு, 2006ல் சன் டிவி பங்கு வெளியிட்ட போதுதான், நூற்றுக்கணக்கான தொழில்களை நடத்தி வந்திருப்பது தெரிய வந்தது.   இத்தனை தொழில்களை மாறன்கள் நடத்தி வருவது தெரிந்ததும் தான், தனது சொந்தப் பிள்ளைகளுக்கு எதுவுமே சேர்த்து வைக்கவில்லையே என்பதை கருணாநிதி உணர்ந்தார். இந்த விரக்தியின் வெளிப்பாடே, மகன்களையும், மகள்களையும் கண் மண் தெரியாமால் சம்பாதிக்க விட்டார் என்கிறார்கள் திமுக வட்டாரத்தில்.

 sunfinal_Page_115

sunfinal_Page_186

ஏற்கனவே, மாறன்கள் மீது பொறாமையில் இருந்த அழகிரி, தயாநிதி மற்றும், மந்திரியானதும் தங்களை கண்டுகொள்ளமால் ஒதுக்கி உதாசீனப்படுத்தினார்கள் என்று எரிச்சலில் இருந்த ராசாத்தி அம்மாள் மற்றும், கனிமொழி ஆகியோர், அவர்களுக்கு நிகராக சொத்து சேர்க்க வேண்டும் என்று கச்சை கட்டிக் கொண்டு இறங்குகிறார்கள். பல ஆயிரம் கோடிகளுக்கு அதிபர்களாக இருக்கும் மாறன்களுக்கு நிகராக சொத்து சேர்க்க வேண்டுமென்றால், உழைத்தா சம்பாதிக்க முடியும் ?

 

அப்போது கிடைத்த வரப்பிரசாதம் தான், தொலைத் தொடர்புத் துறை என்ற அட்சயப் பாத்திரம்.   இந்த அட்சயப் பாத்திரத்திலிருந்து ஆ.ராசா, தயாளு, அழகிரி, ஸ்டாலின், கனிமொழி, ராசாத்தி அம்மாள், துரைமுருகன், பொன்முடி, எ.வ.வேலு, ஜெகதரட்சகன், காமராஜ், ஜாபர்சேட், போலிப் பாதிரி என்று அள்ளித் தின்னாதவர்களே கிடையாது என்னும் அளவுக்கு, அந்த அட்சயப் பாத்திரம் அள்ளிக் கொடுத்தது.

 

மாறன்கள், தொடர்ந்து திமுகவுக்கு எதிராக செயல்படுவதை கவனமாக கூர்ந்து கவனித்துக் கொண்ட வந்தார் கருணாநிதி. ஆரம்பத்தில், ஏமாற்றி விட்டார்கள் என்று மாறன்கள் மேல் இருந்த கடும் கோபம், நாளுக்கு நாள், அவர்களின் பலத்தைப் பார்த்ததும் அச்சமாக மாறத் தொடங்கியது.   மற்றவர்களுக்கு ஸ்பெக்ட்ரத்தில் என்ன நடந்தது என்று அப்போது தெரியாமல் இருந்தாலும், கருணாநிதிக்கு தெரியுமல்லவா ?

 

இது தவிரவும், இரண்டு குடும்பங்களுக்கும் இடையே இணைப்புப் பாலமாக இருந்தவர் செல்வி.   இந்த செல்வி, தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் செல்வித் தொடரில் வருபவர்களை விட, அபாரமாக நடிக்கும் திறமை படைத்தவர். இரண்டு குடும்பங்களும் மோதலில் இருந்த காலத்தில், இரண்டு முறை தற்கொலைக்கு முயன்றது போல, நடித்தவர் இந்த செல்வி.  

selvie

சொந்த மகள் இறந்தாலும், தனது பிடிவாதத்தை விட்டுக் கொடுக்காதவர் தான் கருணாநிதி. ஆனாலும், இந்தப் பிரச்சினையை இத்தோடு விட்டால், கட்சிக்கு ஆபத்து, தனக்கும் ஆபத்த என்பதை உணர்ந்ததாலேயே, மாறனை மந்திரிப் பதவியை விட்டு நீக்க உயர்நிலை செயல்திட்டக் குழுக் கூட்டத்தை கூட்டியவர், இணைப்புக்கு கோபாலபுரம் குடும்பத்தோடே முடித்துக் கொண்டு, “இதயம் இனித்தது, கண்கள் பனித்தன” என்றார்.   ஸ்பெக்ட்ரம் விவகாரம் என்று நிருபர் கேட்ட கேள்விக்கு, “அது முடிந்து போன விவகாரம்” என்று பதிலளித்தார்.

 

அதற்குப் பிறகு, மாறன்களோடு இணைந்தது போல வெளிப்படையாக காட்டிக் கொண்டாலும், உடைந்த பானை ஒட்டாது என்பது போலவேதான், கட்டாயம் மற்றும் வசதியின் அடிப்படையிலான உறவாக (Relationship of convenience) அந்த உறவு தொடர்ந்தது.

 

ராசா மீது வட இந்திய ஊடகங்களில் குற்றச் சாட்டுகள் மெள்ள எழுந்த போதெல்லாம் கோபம் கொள்ளாத கருணாநிதி, மாறன்களுக்கு மிக மிக நெருக்கமான விகடன் குழுமமே, ராசாவைப் பற்றியும், தன்னைப் பற்றியும் கடுமையாக எழுதியதிலும், மாறன்களைப் பற்றி அமைதி காத்ததிலும் கடும் கோபம் அடைந்தார்.   இதன் பின்னணியில் இருப்பது மாறன்களே என்று கருணாநிதி சமீப காலத்தில் நன்கு உணர்ந்துள்ளதாக தெரிகிறது.

 

திமுக மிக மிக பலவீனமாக இருக்கும் இந்தச் சூழலில், மாறன்களை கட்சியை விட்டு நீக்குவது என்ற கடினமான முடிவு, கட்சியை மேலும் பலவீனப்படுத்தும் என்று கருணாநிதி உணர்ந்தாலும், மந்திரி பதவியை ராஜினாமா செய்யச் சொல்லலாமா என்று ஆலோசித்துள்ளார். ஆனால், திடீர் திருப்பமாக, அழகிரி, மாறன்களுக்கு ஆதரவாக, ஆதரவை வாபஸ் வாங்கக் கூடாது என்று கூறியிருக்கிறார். தேர்தல் தோல்விக்குப் பிறகு, ஏற்பட்டுள்ள நெருக்கடியால் எந்நேரம் வேண்டுமானாலும் சிறை செல்லலாம் என்ற அச்சத்தில், மந்திரி பதவியும் இல்லாவிட்டால், குறைந்த பட்ச பாதுகாப்பு கூட இல்லாமல் போய் விடும் என்று அழகிரி நினைப்பதாக தகவல்கள் கூறுகின்றன. இந்தக் காரணத்தாலேயே அழகிரி, இப்போதைக்கு ஆதரவு வாபஸ் வேண்டாம் என்ற முடிவெடுத்திருக்கிறார் என்று தெரிகிறது.

 DSC_9069

ஒரு சர்வே வெளியிட்டதால், மாறன் சகோதரர்கள் மேல் கடும் கோபம் கொண்டு, மூன்று பேரை எரித்துக் கொன்று, அந்தக் கோபத்தை தணித்துக் கொண்ட அழகிரியும், மாறன்களும், இன்று ஒரே அணியில் இருப்பது காலத்தின் கோலமே…

 

ஆனால் இது போல எந்த நெருக்கடிகளும் இல்லாத ஸ்டாலின் மாறன்கள் மீது கடும் கோபத்தில் இருப்பதாகவும், கடந்த வாரம் வீட்டுக்கு வந்த தயாநிதி மாறனிடம், தேவையின்றி வீட்டுக்கு வர வேண்டாம் என கடுமையாக சொல்லியிருப்பதாகவும் சொல்லப் படுகிறது.   கருணாநிதியை தயாநிதி சந்தித்த போது கூட, “தாத்தா என்னை திஹாருக்கு அனுப்ப நிறைய பேர் வேலை செய்யிறாங்க தாத்தா” என்று சொன்னதற்கு “போயிட்டு வாப்பா” என்று சொன்னதோடு கருணாநிதி நிறுத்திக் கொண்டார் என்றும் கூறுகிறார்கள்.

 

மற்ற ஊடகங்கள் நெருக்கடி கொடுத்ததையெல்லாம் தங்கள் பண பலத்தால் சமாளித்த மாறன்கள், திமுக தலைவர் கருணாநிதியும் அவர் குடும்பத்தின் ஆதரவும் விட்டுப் போனதில், மிகுந்த மன உளைச்சலில் இருப்பதாக தெரிகிறது.

 

இந்நிலையில், பிரதமர் சிபிஐக்கு தயாநிதி மாறனை விசாரிப்பதற்கான அனுமதி கொடுத்து உள்ளதை அடுத்து, எந்நேரமும் தயாநிதி பதவி விலக வேண்டும் என்றும் தெரிவிக்கிறது.

ஈழப் போரின் போது, கருணாநிதி கூட ஒரு சமயத்தில் ஏன் ஆதரவை வாபஸ் வாங்கக் கூடாது என்று யோசித்த போது கூட, மாறன்களே கருணாநிதியை அம்முடிவிலிருந்து தடுத்ததாகவும், இதற்கு அவர்களின் வணிக நோக்கங்களே காரணமாக இருந்துள்ளன என்றும் திமுக வில் உள்ள சில மூத்த தலைவர்கள் கூறுகிறார்கள்.

 karuna_fish_tank

மனசாட்சி என்பது துளி கூட இல்லாத இந்த மாறன்களின் சாம்ராஜ்யம் சரியத் தொடங்கியிருக்கிறது.   விரைவில் தயாநிதி மாறன் திஹார் சிறையில் அடைக்கப் படும் போது, நமக்கு அல்ல… கருணாநிதிக்கு “இதயம் இனிக்கும். கண்கள் பனிக்கும்”

 

Comments  

 
0 #60 vairam 2011-12-15 09:27
THE WHOLE AMILI ISSUE OF dR kARANANIDHI FAMILY IS QUITE CONFUXIOUS,YET WHATEVERVER MONEY LOOTED,FROM WHERE IT HAS COME AND WHERE IT IS NOW IS BIG QUESTION? YET THE CONGRESS GOVT AND OTHER LEADING POLITICIANS KNOWS WELL.
Quote
 
 
0 #59 vairam 2011-12-15 09:26
பாடிக்க படிக்க அரசியல் குழுப்ப்ம் மெலும் குலோடிகிட்ட பொவுது தலியெய் சுதுத்டு
கடிசியில் யெப்படியொ கனிமொழி வெலியில் வாந்தாஷி அடித்க பனம் யெஙய்? இது சொங்ரெச்சிக்கு நன்ராக தெரியும் அம்ம சொனிஅ கம்முன்னு இர்ருகாகக யென்ன செய்ய ?
Quote
 
 
+1 #58 Maanudan 2011-07-10 09:02
Mr. Amanulla used SAVUKKU's contents and pasted in DINAMALAR. Please scroll down and see. Here is the link ...--

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=272250
Quote
 
 
+4 #57 ஏன்டாம்பி 2011-06-28 16:10
அப்படிலாம் சொல்லாதிங்கோ! அவ்வாலாம் நம்பர் 1 IT அமைசாரெச்செ!
Quote
 
 
+2 #56 kingfisher 2011-06-27 19:05
dhayanithi/kalanithi = KD & co
Quote
 
 
+3 #55 REBEL 2011-06-27 05:03
குல விளக்கான கனிமொழியை குத்து விளக்கு ஆக்கிட்டாங்களே.
Quote
 
 
0 #54 su raghuraman 2011-06-25 13:51
திரு நீதி தேவன் அவர்களே, சோ அவர்கள் ஈழத்தில் கொல்லப்பட்ட அனைவரையும் பயங்கரவாதிகள் என்று சொல்லவில்லை. சக போராளிகளை சுட்டு கொன்று, அரசியல் தீர்வு காண முயற்சித்த மிதவாதிகளை கூண்டோடு ஒழித்துகட்டி, கடைசியில் சொந்த மக்களை கேடயமாக பயன் படுத்தியவர்களை பயங்கரவாதிகள் என்று சொல்வதில் என்ன தவறு ? மலையாள பிராமணர்கள் அதிகாரிகளே தவிர அரசியல்வாதிகள் அல்ல. அவர்கள் அரசியல் அதிகாரத்தில் உள்ளவர்கள் சொல்வதை செய்யும் பணியாளர்கள். சொல்லும் கருத்து நியாமாக
இருக்கவேண்டுமே தவிர உங்கள் சொந்த காழ்புர்ணர்வை காட்ட வேண்டாம். CAN YOU SHOW ME A TAMIL OR MALAYALA BRAHMIN MINISTER IN TAMIL NADU OR IN CENTRAL GOVERNMENT ?
Quote
 
 
+6 #53 கோபு 2011-06-24 21:48
தயாநிதியை நெருங்குகிறது சி.பி.ஐ..........

எப்படி தப்பிப்பது என்று ஆராய்கிரார்... அதாங்க அலையறார்......

தயாநிதி - கலைஞர்:-

"என்ன திகார்ல சிக்க வைக்க பாக்கராங்க தாத்தா", கலைஞர் "போப்பா போய் சுத்திபாத்துட்ட ு தான் வா".

தயாநிதி - ராஜாத்திஅம்மாள் :-

"என்ன திகார்ல சிக்க வைக்க பாக்கராங்க காப்பாத்துங்க", ராஜாத்திஅம்மாள் -"போடா காரியவாதி நானே என் பொண்ண காப்பாத்த முடியல...ஓடிடு".

தயாநிதி - ராகுல்:-

"ராகுல் ஜி மே திகார் ஜாத்தா ஹூம்", ராகுல்-“ஜல்தி ஜாவோ ச்பீ தேக்தா ஹை..ஜாவோ பையா”.
தயாநிதி - மன்மோஹன்:-
“ஆப் திகார் சன்செல் கரோ சிங்”, “அரே மே ச்பீ கா போன் கர்தாஹும்(என் வேலைக்கே உலை வெச்சுரான் போலிருக்கு, நானே தலப்பாவ ஆட்ட முடியாம ஆட்டிடு இருக்கேன் இவன் வேர”.
தயாநிதி –“எவனும் மசிய மாட்டிங்கரானே…”

தயாநிதி - கலாநிதி:- “ அண்ணே என்ன எப்படியாவது காப்பாத்து…”, கலாநிதி,”கவலயே படாத சிவசங்கரன் மாதிரி சிங்குசங்கரன்ன் னு ஒருத்தன் மாட்டிருக்கான், பேரம் போயிட்டு இருக்கு, திகார் சீக்கிரம் நம்ம கைக்கு வந்திடும்,முக்க ா பங்கு வாங்கிட்டோம்ல…அ டுத்தது திகார்ல்ல போயி 300௪00 போன் கனெக்சன் வாங்கி போட்டுரனும்.........”தயாநிதி,”அட காசு பேய் புடிச்சவனே….உன்ன கேட்டன் பாரு.. அதுக்கு தாத்தாவே பரவாயில்ல…”
Quote
 
 
-1 #52 நீதிதேவன்` 2011-06-24 20:06
திரு அன்னியன் ....அந்த அப்பிராணிகளை இழுக்குறீர்கள்?.... யாரைச்சொல்கிறீர ்கள் அப்பிராணிகள் என்று ஈழத்தில் கொல்லப்பட்ட மக்கள் அனைவரும் பயங்கரவாதிகள் என்று பதில் சொன்ன சோ வையா.... மத்திய அரசில் மலையாள பிராமணர்கள் தமிழர்களுக்கு எதிராக செய்யும் அயோக்கியத்தனத்த ையா.. தயை கூர்ந்து சொல்லுங்கள் யார் அந்த அப்பிராணிகள் என்று ?
Quote
 
 
+1 #51 K.THANGAVEL 2011-06-24 19:55
மிகவும் சரியான நேரத்தில்
மிகவும் சரியான கருத்து.......
Quote
 
 
0 #50 Rajk 2011-06-24 18:32
[ஃஉஒடெ நமெ="அன்னியன்"]நீதித் தேவன் அவர்களே,
பிராமணர்களின் முதுகை சொரியாவிட்டால் உ ங்களுக்கு தூக்கம் வராதோ? ஏன் சம்பந்தமில்லாமல ் அந்த அப்பிராணிகளை இழுக்குறீர்கள்?

-- கார்கில் வீரன்[/ஃஉஒடெ]

ஆமாம். எதர்க்காக ஜாதியை எஇழுக்க வேன்டும் .
Quote
 
 
-1 #49 su raghuraman 2011-06-24 17:58
நீதி தேவன் அவர்களே !! மாறன் செய்த களவாணிதனத்திற்க ும் பார்ப்பனீயம் தான் காரணம் என்று கண்டுபிடித்த நீங்கள் எல்லா விஷயத்திலும் செய்த அயோக்யதனத்தை பற்றி கருத்து சொல்லாமல் செய்தவனின் குலத்தை பற்றி வமர்சிப்பதால் உங்கள் பெயரை 'நீதி தேவன்" என்பதற்கு பதில் "சாதி தேவன்" என்று மாற்றி கொள்ளுங்களேன்.
Quote
 
 
+1 #48 aswar 2011-06-24 16:17
மண்வெட்டி கையில் எடுப்பார்
சிலபேர் மற்றவர்க்குக் குழி பறிப்பார்
அது தன்பக்கம் பார்த்திருக்கும ்
என்பதைத் தானறிய மறந்திருப்பார்
Quote
 
 
+1 #47 aswar 2011-06-24 16:16
தி.மு.க நல்ல கட்சி, கருணாநிதி மற்றும் அவரது குடும்பம் கட்சிக்குள் வராத வரை .
Quote
 
 
0 #46 anniyan 2011-06-24 10:58
நீதித் தேவன் அவர்களே,
பிராமணர்களின் முதுகை சொரியாவிட்டால் உ ங்களுக்கு தூக்கம் வராதோ? ஏன் சம்பந்தமில்லாமல ் அந்த அப்பிராணிகளை இழுக்குறீர்கள்?

-- கார்கில் வீரன்
Quote
 
 
+2 #45 C.Rams 2011-06-22 14:48
மனசாட்சி இல்லாத மாரன்கலுக்கு சாட்சி சொலலி திஹார் சிரைக்கு அனுப்ப வேன்டும்..
Quote
 
 
+1 #44 suryaaa 2011-06-22 14:44
மனசாட்சி இல்லாத மாரன்கலுக்கு சாட்சி சொன்ன சவுக்கு க்கு நன்ரி
Quote
 
 
0 #43 ARUN1 2011-06-22 12:59
ஹி...
Quote
 
 
+2 #42 aswin 2011-06-22 11:41
[ஃஉஒடெ நமெ="றவி"]மாறனைப் போன்று கைக்கு அடக்கமாக தன் மகன் ஸ்டாலினுக்கும் இருப்பானென்று கருணாநிதி ஏற்பாடு செய்த இந்த மாறன் சகோதர்ர்கள் இன்று அந்த கருணாநிதியையே ஆட்டம் காண வைத்தது "தன் வினை தன்னைச் சுடும்" என்பதையே காட்டுகிறது. இதைத்தான் சொந்த காசில் சூன்யம் வைச்சுகிறதுன்னு ம் சொல்வாங்க..[/ஃஉஒடெ]
சொந்த காசில இல்ல பா ஊரார் காசுல.......
Quote
 
 
+2 #41 SUNDAR 2011-06-22 11:11
GOOD NEWS
Quote
 
 
+5 #40 SMani 2011-06-22 09:49
http://www.ndtv.com/article/india/in-jail-karunanidhi-gives-kanimozhi-namkeen-113846

During the reunion MK has given "Seedai & Murukku" to Kani. Kani enna pullai thachiya?
Quote
 
 
+1 #39 ranramani 2011-06-22 04:14
Good information collected by you, the entire family looted the country to the core,
Quote
 
 
+1 #38 ganesh srinivasan 2011-06-22 03:38
good job
thanks u
Quote
 
 
+8 #37 Kothandapani 2011-06-22 03:09
கனியை வெளியெ கொன்டு வர ராம் ஜெத்மலானி எல்லாம் வேண்டாம் கருணாவை
கேடி பிரதர்சை திஹாரில் போட சொலுஙக...
அவனுஙக ஒரே வாரத்தில் டகாச்சி வேலை
பண்ணி கனியையும் கூட்டிகொன்டு வெலீயெ
வந்துடுவான்கள்.
Quote
 
 
+2 #36 narikutty 2011-06-22 01:43
இந்த கேடி பிரதர்ஸ் திஹார் ஜெயிலுக்கு விலை பேசி வாஙிட்டாங்களாம் .
Quote
 
 
+3 #35 RabaSha 2011-06-22 00:33
இந்த கே.டி. பிரதர்ஸ்-ல 'டி' மட்டும் தான் உள்ளே செல்ல வாய்ப்பு - 'கே'-வும் உள்ளே செல்கிற நாள் வரும்போது இன்னும் நன்றாயிருக்கும் .

ராஜதத்ந்திரி மூ.க.விற்கே ஆப்பா?

போங்க... போயி திஹார்ல குடும்பத்தோட கும்மாளமடிங்க!
Quote
 
 
+2 #34 RabaSha 2011-06-22 00:33
இந்த கே.டி. பிரதர்ஸ்-ல 'டி' மட்டும் தான் உள்ளே செல்ல வாய்ப்பு - 'கே'-வும் உள்ளே செல்கிற நாள் வரும்போது இன்னும் நன்றாயிருக்கும் .

ராஜதத்ந்திரி மூ.க.விற்கே ஆப்பா?

போங்க... போயி திஹார்ல குடும்பத்தோட கும்மாளமடிங்க!
Quote
 
 
-19 #33 savukkuku seruppu 2011-06-22 00:15
சவுக்கு, இதுக்கும் பாப்பான் தான் காரணம் அப்படீன்னு எழுதுவேன்னு நெனச்சேன், சொதப்பிட்டியே அப்பு...தயா பாப்பான், காவேரி பாப்பாத்தி இப்படி எதாவது எழுது...சவுக்கா சும்மாவா....
Quote
 
 
+7 #32 நீதிதேவன்` 2011-06-21 23:03
என்னால் பலவிதங்களில் எழுத்தால் நிருபிக்க முடியும் திமுக மற்றும் கருணாநிதியின் இந்த நிர்கதியான முடிவுக்கு காரணம் கேடி சகோதரர்களே...முதல் காரணம் சன் டிவி, இரண்டாம் காரணம் மாறன் சகோதரர்களின் பிரமாண களவாணித்தனம். முன்று எந்த சிறு உழைப்பும் இல்லாமல் மத்தியமைச்சர் பதவியை அனுபவித்த மாறன்கள். நான்கு உண்மையில் இந்த மாறன்கள் ஒரு காலமும் திமுகவின் இரண்டாம் தலைவர்களை மதிப்பதும் இல்லை. அதற்கான செய்திகளும் சன்டிவியில் சொன்னதில்லை. எனக்கு தெரிந்து ஆற்காடு வீராசாமி தனது செய்தியை காட்டினீர்களா என்று சன்நியூஸ் எடிட்டர்களிடம் கெஞ்சி கொண்டிருப்பார். இத்தனைக்கும் முன்பு திமுகவில் இருந்தபொழுது அவர் மிசாவில் கைதாகி அடிவாஙகியவர். இப்படியாக இன்னும் நூறு காரணங்கள் சொல்லமுடியும்......
Quote
 
 
+5 #31 Edaiyan 2011-06-21 22:56
உபபை தின்ன்வன் த்ண்ணீர் குடிக்க வேண்டும்
Quote
 
 
+11 #30 Trinity 2011-06-21 22:45
இதை படித்தவுடன் ஒரு கதைதான் நினைவுக்கு வருகிறது. அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையில் வேலி அமைப்பதற்கான டெண்டர் கோரப்பட்டது. ஒரு பங்களாதேஷி, ஒரு இந்தியன் மற்றும் சீனாவிலிருந்து ஒருவரும் இதற்காக தேர்ந்ததெடுக்கப பட்டர்கள். முதலில் பங்களாதேஷி வேலியின் நீளத்தை கணக்கிட்டார். $900 என்று எழுதி $400 மரம் வாங்குவதற்கும் $400 வேலையாட்களுக்கு ம் மற்றும் $100 தன்னுடைய லாபமென்றும் குறிப்பிட்டு டெண்டரை சமர்ப்பித்தார். அடுத்து வந்த சீனாக்காரர் இதே வகையில் $300, $300 & $100 என்ற விகிதத்தில் $700 க்கு டெண்டரை சமர்ப்பித்தார். அடுத்த வந்த இந்தியரோ அளவெடுக்காமலே $2700 க்கு டெண்டரை அளித்தார். ஆச்சரியப்பட்ட அமெரிக்க அதிகாரிகள் இந்தியரிடம் எப்படி அளவெடுக்காமலே இவ்வளவு பெரிய தொகைக்கு டெண்டர் அளித்தீர்கள் எண்டு விசாரித்தனர். இந்தியர் பதட்டப்படாமல் அவர்கள் அருகில் உங்களுக்கு $1000, எனக்கு $1000 மற்றும் இந்த சீனக்காரருக்கு வேலி அமைக்க $700 என்ன சம்மதமா என்று சொன்னார். ஒப்பந்தம் அவருக்கே கிடைத்தது என்பதை சொல்லவும் வேண்டுமோ?
Quote
 
 
0 #29 gokul 2011-06-21 22:18
மாறாக KARUNANITHIYIN ITHAYAM MANAKKUM KANNGAL INIKKUM ...WHEN MARAN GOES TO THIGHAR INN ..........THATS THE LATEST HOLIDAY INN for those DMK asholes ....ANAALUM DAYA ,KARUNANITHIYAI VAITHU GAME AADINAALUM....,,,,DAYANITHIYA I VAITHU GAME ADIYA KALANITHI THAAN WORLD CLASS THIRUDAN...POMBALAINGALAI DANCE AAADAVITTU ARUNA INN IL SAMBARITHA VANUKKU INDIA VIN HIGHEST POST KIDAITHAAL YENNAVAGUM ???? ITHUTHAAN AAGUM...
:-x
Quote
 
 
+2 #28 Cyril Thomas 2011-06-21 22:13
நீல சாயம் வெளுத்து போச்சு டும் டும் டும்
ராசா வேசம் இல்ல இல்ல
மாறன்(கள்) பத்தி தெரிஞ்சு போச்சு டும் டும் டும்..
பாஸ் வழக்கமா ஒரு சிரிப்பு சிரிச்சு போஸ் குடுப்பிங்க பாரு அத பண்ணுங்க பாப்போம்
Quote
 
 
+9 #27 நடராஜன் 2011-06-21 21:43
வழிமொழிகிறேன்!
உங்க குடும்ப சண்டக்கி ஒரு எனத்தையே தாலியறுத்திட்டீ ங்களேடா .....மவனுங்களா. நீங்க நீண்ட நாளைக்கி உடல் ஆரோக்கியமா இருந்து மனசுல புழுங்கி புழுத்து சாவுங்கடா
Quote
 
 
+11 #26 Arun B 2011-06-21 21:31
//இரண்டு குடும்பங்களுக்க ும் இடையே இணைப்புப் பாலமாக இருந்தவர் செல்வி. இந்த செல்வி, தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் செல்வித் தொடரில் வருபவர்களை விட, அபாரமாக நடிக்கும் திறமை படைத்தவர்.//

Savukku, the naughty fellow:P
Quote
 
 
+15 #25 நல்லது 2011-06-21 20:30
சவுக்கு, உங்களுக்கு மட்டும் எப்படி அதிரடியான படங்கள் கிடைக்கின்றன. செய்திக்கு ஏற்ற படங்கள். நன்றி. மக்கள் பணத்தை கொள்ளையடித்தால் நிம்மதியாக வாழ முடியாது, நம்மாலும் அனுதாப பட முடியாது.
Quote
 
 
+14 #24 anaaiyna 2011-06-21 20:07
எப்போ உள்ளே போடு வாங்க இவனுகளை ?
காசு கீசு கொடுத்து தப்பிச்சிட போராங்க.
கடவுள் இருக்கார், உடமாட்டார் இவ்ங்களை..
Quote
 
 
+23 #23 Ravi 2011-06-21 19:47
மாறனைப் போன்று கைக்கு அடக்கமாக தன் மகன் ஸ்டாலினுக்கும் இருப்பானென்று கருணாநிதி ஏற்பாடு செய்த இந்த மாறன் சகோதர்ர்கள் இன்று அந்த கருணாநிதியையே ஆட்டம் காண வைத்தது "தன் வினை தன்னைச் சுடும்" என்பதையே காட்டுகிறது. இதைத்தான் சொந்த காசில் சூன்யம் வைச்சுகிறதுன்னு ம் சொல்வாங்க..
Quote
 
 
+11 #22 Rajeev 2011-06-21 19:38
இத எல்லாம் படிக்கும் போது என்ன ஒரு வில்லத்தனம்'னு நினைக்கத் தோனுது.
Quote
 
 
+13 #21 seduraman 2011-06-21 19:38
கலக்கல் மேட்டர்,
விடாது சவுக்கு,
Quote
 
 
+9 #20 gloxi 2011-06-21 19:31
ஊர் பணம் தின்றவன் உருப்பட மாட்டான் என்பதற்கு இவர்களே சாட்சி.
Quote
 
 
+6 #19 rayar 2011-06-21 19:23
:eek: :eek: :eek: :-? :o :cry: :sad: :oops: :-| 8) ;-) :-) :lol: :lol: :D :D :D :D :D :D :D :lol: :lol: :lol: :roll:
Quote
 
 
+10 #18 vaji 2011-06-21 19:06
பணம் பத்தும் செய்யும்.
பணம் பாதளம் வரை பாயும்.
பணம் என்றால் பிணமும் வாயை பிளக்கும்.

சும்மாவா சொன்னார்கள் இந்த பழமொழிகளை!
Quote
 
 
+15 #17 Suresh Raja 2011-06-21 18:34
தாத்தா என்னை திஹாருக்கு அனுப்ப நிறைய பேர் வேலை செய்யிறாங்க தாத்தா” என்று சொன்னதற்கு "போப்பா... வராத" அப்படின்னு சொல்லிருந்தா பொருத்தமா இருந்திருக்கும் . :o :o (என்னமா யோசிக்கிறாங்க!! !!!)
Quote
 
 
+10 #16 VEN 2011-06-21 18:23
மிகவும் நல்ல பதிவு.தி மு க வின் இவ்வளவு மோசமான தோல்விக்கும் இந்த கே.டி.சகோதரர்கள் தான் காரணம்.
Quote
 
 
+37 #15 அம்பு, திருச்சி 2011-06-21 18:06
ஒங்க குடும்ப சண்டக்கி ஒரு எனத்தையே தாலியறுத்திட்டீ ங்களேடா .....மவனுங்களா. நீங்க நீண்ட நாளைக்கி உடல் ஆரோக்கியமா இருந்து மனசுல புழுங்கி புழுத்து சாவுங்கடா
Quote
 
 
+3 #14 Rangaraj Rajendran 2011-06-21 17:52
When the family became very large,Kalaignar compromised all his policies,suppor t on eelam issue,Tamil conscience for the sake of his blood relations.So a Leader should not have family like Kamarajar and MGR or very strong personality Like Ghandhiji.
Quote
 
 
+7 #13 Rajasekhar 2011-06-21 17:41
கருணாநிதியைப் பற்றி உங்கள் கணிப்பு சரி!(நெஞ்சுக்கு நீதி- வழிகாட்டியல்ல விதிவிலக்கு)./ராசாத்தி அம்மாள் மற்றும், கனிமொழி ஆகியோர், அவர்களுக்கு நிகராக சொத்து சேர்க்க வேண்டும் என்று கச்சை கட்டிக் கொண்டு இறங்குகிறார்கள் ./-- இதுதான் பிரச்சனையே."செல்வி" சிதம்பரம் "சிவகாமி" போன்று நடிக்கத்தக்கவள் .பாவாடை தாவணியுடன் பட்டாம்பூச்சியா க நடித்த காலம் தொட்டு தெரியும்.இந்த பில்லியன் "டாலர் பணம்"!.இலங்கைப் பிரச்சனையைப் பாருங்கள்,இலங்க ைத் தமிழர்களான,"அமெரிக்க ராஜ் ராஜரத்தினம்","இந்தோனேஷிய விஜய ஈஸ்வரன்","மலேஷிய டி.அனந்த கிருஷ்ணன்".இந்தியா- சீனா(இந்தோ சீனா)பொருளாதாரத ்தில் ஆவ்,ஆவ் என்று முன்னேறுகிறது என்று பொறாமையில் மேற்குலம் ஆர்ப்பரிக்கிறது .ஆனால் இந்த முன்னேற்றத்திற் கு யதார்த்தத்தில் "ஜெர்மனியின் மார்ஷல் பிளான் போல்" அமெரிக்கவின் திருவிளையாடல்தா ன் காரணம்.இலங்கைத்தமிழரிட ம்,பல பில்லியன் டாலர்கள் இவர்களால் "ஃபம்ப்" செய்யப்பட்டது.வட்டியும் முதலுமாக,ஆயுதவி ற்பனை,மருந்து,அ கதி விமான போக்குவரத்து,சீ ப் லேபர் அகதி ஆகியவற்றின் மூலம் திரும்ப எடுத்து "சக்கையை" முள்ளியவாய்க்கா லுக்கு அனுப்பினார்கள்! .இப்படிப் பட்ட ரீதியில்தான் "மாறன் சகோதர்ர்களுக்கு ம்" பல பில்லியன் டாலர்கள் "ஃபம்ப்" செய்யப்பட்டுள்ள து!.
Quote
 
 
+7 #12 pappi 2011-06-21 17:15
al the best savuku
Quote
 
 
+16 #11 keerikutti 2011-06-21 16:46
தினகரன் சர்வே: திமுக கனிமொழியால் உடையுமா? இல்லை தயாநிதியால் உடையுமா?

இன்றே வாங்குங்கல். விலை ரு. 2 மட்டும்
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 40 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday1802
mod_vvisit_counterYesterday13577
mod_vvisit_counterThis week59379
mod_vvisit_counterLast week95167
mod_vvisit_counterThis month281639
mod_vvisit_counterLast month382199
mod_vvisit_counterAll days13198006