முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்தொடர்புக்கு
+++
கச்சத் தீவு ... மூழ்காத உண்மைகள்! அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 17
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
புதன்கிழமை, 22 ஜூன் 2011 13:12

 

 

 

நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் பங்கேற்ற இளைய தலைமுறையினரும் இனி வரப்போகின்ற தலைமுறைகளும் போற்றி பாராட்டும் வகையில், என்றும் நினைவு கூறும் விதமாக... முதல்வர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் வரலாற்று சிறப்பு மிக்க, வரலாற்றுத் தேவை மிக்க ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கிறார்.

 

“கச்சத் தீவை இலங்கைக்கு தாரை வார்த்த இந்தியாவின் ஒப்பந்தத்தை ரத்து செய்யவேண்டும். கச்சத் தீவு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் ஜெயலலிதா தொடர்ந்த வழக்கில், தமிழக வருவாய் துறையையும் செர்த்துக் கொள்ளவேண்டும்” என்று தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்.

 

தீவு என்றாலே நீரில் மூழ்கியும் மூழ்காமலும் இருக்கும் நிலப்பகுதிதான். கச்சத் தீவு பற்றிய பல உண்மைகளையும் மூழ்கடித்து வந்தன. இந்நிலையில் கச்சத் தீவு பற்றிய வரலாற்று நிகழ்வுகளை அலசுவதற்கும் ஆராய்வதற்கும் ஜெயலலிதா சட்டமன்றத்தில் கொண்டுவந்த தீர்மானம் ஒரு வாசலாக இருக்கிறது.

 

கச்சத் தீவு பற்றி இந்தத் தலைமுறைக்கே தெரியாத உண்மைகள் இதோ...

 

தாரை ஒப்பந்தம்

 

28.06.1974-ல் கச்சத் தீவை இந்தியா இலங்கைக்கு தாரை வார்த்து, அந்த ஒப்பந்தத்தில் இந்தியா மற்றும் இலங்கை பிரதமர்கள் கையெழுத்திட்டனர். ஆனாலும், ‘தமிழக மீனவர்கள் கச்சத் தீவை ஒட்டி மீன் பிடித்துக் கொள்ளலாம். மீன் பிடிக்கும் வலைகளை கச்சத் தீவில் உலர வைக்கலாம், ஒய்வு எடுத்துக்கொள்ளலாம். இது தவிர, கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலய ஆண்டு திருவிழாவில் கலந்து கொள்ளலாம் எனும் உரிமை தமிழகத்திற்கு உள்ளது’ என்றெல்லாம் விளக்கமளித்து, அப்போது தமிழக மக்களை சமாதானப்படுத்தியது அப்போதைய மத்திய காங்கிரஸ் அரசு. அந்த சமயத்தில் தமிழகத்தில் கருணாநிதி தலைமையிலான அரசு அமைந்திருந்தது.

 

இது தொடர்பான விவாதம் 23.07.1974 அன்று நாடாளுமன்றத்தில் நடந்தபோது அதில் பேசிய அப்போதைய வெளியுறவுத் துறை அமைச்சா; ஸ்வரன்சிங், “ 1921-ல் பிரிட்டிஷ் ஆட்சியில் மீன்பிடி எல்லை (FISHERY LINE) வகுக்கப்பட்டு கச்சத் தீவின் மேற்குப் பகுதியில் இந்திய மீனவா;களும், கிழக்குப் பகுதியில் இலங்கை மீனவர்களும் மீன் பிடித்து வந்துள்ளனர். இலங்கைக்கு அருகே உள்ளது கச்சத் தீவு. இலங்கைக்கும் கச்சத் தீவுக்கும் இடையே உள்ள தூரத்தை விட இந்தியாவுக்கும் கச்சத் தீவுக்கும் இடையே உள்ள தூரம் அதிகம்” என்று பல்வேறு விளக்கங்களைக் கொடுத்து, கச்சத் தீவு தாரை வார்க்கப்பட்டதற்கு சப்பைக் கட்டு கட்டினார்.

 

ஆனால் கச்சத் தீவு எவ்வாறெல்லாம் இந்தியாவோடு இணைந்த பகுதி என்பதற்கான வரலாற்று ஆதாரங்களை அவர் மறைத்துவிட்டார்.

 

கச்சத் தீவின் வரலாறு...

 

கச்சத் தீவின் பரப்பளவு 285 ஏக்கர்கள் 20 சென்ட் ஆகும். கச்சத் தீவு தமிழகத்தின் ராமேஸ்வரத்திலிருந்து 17 கி.மீ. தூரத்தில் உள்ளது. அதாவது, சென்னை சென்ட்ரலுக்கும், தாம்பரத்துக்கும் உள்ள தூரத்தை விட குறைவானது. கடலோர எல்லை, நாட்டிக்கல் மைல் (NAUTICAL MILES) அளவு கொண்டு சர்வதேச அரங்கில் கணக்கிடப்படுகிறது. அதன்படி கச்சத் தீவு ராமேஸ்வரத்திலிருந்து 12 நாட்டிக்கல் மைல் அளவுக்கும் குறைவான தூரத்தில் அமைந்துள்ளது. முந்தைய காலத்தில் ராமநாதபுரம் அரசின் கட்டுப்பாட்டில் இருந்த 8 தீவுகளில் கச்சத் தீவும் ஒன்றாகும். ராமநாதபுரம் மன்னா; சேதுபதி அவா;களிடம் 1882-ம் ஆண்டு கிழக்கிந்திய கம்பெனி (THE EAST INDIA COMPANY) லீஸ் ஒப்பந்தத்தில் கச்சத் தீவை எடுத்துள்ளது. அதன் பின்னர் கீழக்கரையைச் சேர்ந்த அப்துல் காதர் என்பவர், மணலி தீவு, குத்துக்கல் தீவு மற்றும் கச்சத் தீவு மூன்றினையும் அப்போதைய, மெட்ராஸ் பிரசிடென்ஸி (MADRAS PRESIDENCY OF INDIA) யின் ராமநாதபுரம் கலக்டரிடம் லீஸ் ஒப்பந்தம் மூலம் பெற்றுள்ளாh;.

 

1913-ல், மீண்டும் ஒரு லீஸ் ஒப்பந்தத்தை மெட்ராஸ் பிரசிடென்ஸி ஏற்படுத்தியது. அதன்படி, மெட்ராஸ் பிரசிடென்ஸியின் மீனவர்களுக்கு மீன் பிடிக்கும் உரிமை கச்சத் தீவின் மீது கொடுக்கப்பட்டுள்ளது. 1939-ல்; புனித அந்தோணியாh; ஆலயம் கச்சத் தீவில் கட்டப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, முகம்மது என்பவர் 1947-ல் கச்சத் தீவை ஒரு லீஸ் ஒப்பந்தம் மூலம் எடுத்துள்ளார். அந்த ஆவணம் எண் 278/1948 ஆக இராமேஸ்வரம் பதிவாளார் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ராமநாதபுரம் தாலுகாவில்... ஆங்கிலேய ஆட்சியிலிருந்து இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு,       “கச்சத்தீவு இராமேஸ்வரத்தின் எல்லைக்குட்பட்ட வருவாய் கிராமம், கச்சத்தீவின் சர்வே எண் 1250” என ஒரு அரசாணை G.O. No. 2009: 11.08.1949-ல் வெளியிடப்பட்டுள்ளது.

 

இது எல்லாவற்றிற்கும் மேலாக 1531-ம் ஆண்டு எழுதப்பட்ட ஒரு செப்பு பட்டயத்தில், ‘கச்சத் தீவு சேதுபதி மன்னர்களின் ராஜ்ஜியத்துக்கு உட்பட்ட பகுதி” என குறிப்பிடப்பட்டுள்ளது. இது இந்திய தொல்பொருள் துறையின் அகழ்வாராய்ச்சியில் கிடைத்துள்ளது. சேதுபதி மன்னர் நினைவாகத்தான், பல நூறு ஆண்டுகளாக இன்று வரை அந்தக் கடல் பகுதியை அனைவரும் ‘சேது சமுத்திரம்’ என்று உலகளவில் அழைக்கின்றனா;. அதனால்தான் இந்திய அரசே ‘சேது சமுத்திர திட்டம்’ என பெயரிடப்பட்டு ஒரு திட்டத்தை தொடங்கியது. 

 

வாலி தீவு

 

கோடிக்கணக்கான இந்து மதத்தினர் நம்பும் ராமாயண இதிகாசத்தில் ஸ்ரீராமரும், வாலியும் போரிட்ட தீவுதான் கச்சத் தீவு என்ற நம்பிக்கையும் நிலவுகிறது. 23.07.1974-ல் நடைபெற்ற நாடாளுமன்ற விவாதத்தில், அப்போதைய குவாலியரின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த பிற்கால பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் கச்சத் தீவை, ‘வாலி தீவு’ என கூறியுள்ளார். எவ்வளவு பெரிய இந்து மத நம்பிக்கையை நாம் இழந்துள்ளோம்!

 

காரணங்கள்...

 

இவ்வளவு வரலாற்று உண்மைகள் மற்றும் நம்பிக்கைகளை மறைத்தும் மறுத்தும் கச்சத் தீவு ஏன் இலங்கையிடம் தாரை வார்க்கப்பட்டது? முதன்மையானது 1974-ல் இலங்கை இந்தியாவிற்கு செய்த உதவிக்கான பிரதி உபகாரம். அந்தக் கால கட்டத்தில் இந்தியா அணுகுண்டு வெடித்து சோதனை நடத்தி, உலக நாடுகளின் கண்டனக் கணைகளை எதிர் கொண்டது. ஜ.நா. சபையில் பாகிஸ்தான், மேற்படி இந்தியாவின் அணு சோதனைக்குக் கண்டனத் தீர்மானம் கொண்டு வர முயன்றது.

 

இலங்கை அப்போது இந்தியாவுக்கு அளித்த ஆதரவால், பாகிஸ்தானின் அந்த முயற்சி தோல்வி அடைந்தது. இலங்கையின் பண்டார நாயகா பதவிக்கு வரும் வரையில் கச்சத் தீவு தொட்ர்பாக எந்த உரிமையையும் இலங்கை கோரவில்லை. ஆனால், பண்டார நாயகா பதவிக்கு வந்த பிறகே கச்சத் தீவின் மீது இலங்கை பல உரிமைகள் கோரியது. கோரிக்கைகளை சாக்காக வைத்து 1974-ல் இலங்கை இந்தியாவிடமிருந்து கச்சத்தீவை கேட்டு பெற்றது. 23.03.1976-ல் இந்தியாவின் வெளியுறவு செயலர் கிளிவல். சின்சிலும் இலங்கையின் வெளியுறவு மற்றும் ராணுவ செயலர் ஜெயசிங்கேயும் ஒரு சீராய்வு ஒப்பந்தத்தை இரு நாடுகள் சார்பாக ஏற்படுத்தினர். அதன்படி கச்சத்தீவின் அருகில் மீன்பிடிக்கும் உரிமை இந்தியாவிற்கு இல்லை என அறுதியிடப்பட்டுள்ளது. 

கருணாநிதி செய்தது என்ன?

 

அப்போது தமிழ்நாட்டில் எமர்ஜென்ஸி அமலாக்கப்பட்டிருந்ததால், எங்களுக்கு இது பற்றி தெரிந்திருக்கவில்லை. கச்சத் தீவு மீட்கப் பட வேண்டும்’ என இன்று கூறுகிறாh; கருணாநிதி. ‘பல முறை சொன்னால் பொய்யும் உண்மையாகும்’ என்பதை மனதில் கொண்டுதான்   அவா; இதை தொடர்ந்து சொல்கிறார். 1969 - லிருந்து 1971 வரை என்ற முதல் ஆட்சிக்காலத்தில் ஆரம்பித்து... 2006 முதல் 2011 வரையிலான ஐந்தாவது ஆட்சிக் காலம் வரை மேற்படி காலகட்டத்தில் கச்சத்தீவு விவகாரத்தில் உருப்படியாக ஒன்றுமே அவா; செய்யவில்லை.

 

‘தமிழர்களே, தமிழர்களே, என்னை கடலில் தூக்கிப் போட்டாலும், நான் கட்டுமரமாகத் தான் மிதப்பேன். என் மீது ஏறி பயணம் செய்யலாம்’ என்றெல்லாம் வாய் ஜாலம் காட்டுவதில் வல்லவர் கருணாநிதி. அதற்கு ஒரு உதாரணம் 09.12.2009 அன்று ‘கச்சத் தீவை மீட்கும் தீர்மானத்தை சட்டமன்றத்தில் கொண்டு வரத் தயார்’ என அறிவித்தார் கருணாநிதி. அதன் பிறகு, 09.12.2009 முதல் 28.02.2011 வரை கச்சத் தீவு பற்றி மூச்சு கூட விடவில்லை அவர். ஆனால், ‘கச்சத் தீவை மீட்போம்’ என 2011 தேர்தலிலும் வாக்குறுதி அளித்தார். இதுவும் வெறும் காகிதம் தான் என்று மக்கள் புரிந்துவைத்திருந்ததை தேர்தல் முடிவுகள் காட்டியிருக்கின்றன.

 

ஜெயலலிதா செய்தது என்ன?

 

நடந்து முடிந்த சட்டமன்றக் கூட்டத்தில் மட்டுமல்ல... 1991-ல் முதல் முறையாக தமிழக முதல்வராக பதவியேற்று ஆட்சி செய்தபோது, 1994-ல் கச்சத் தீவை நீண்ட கால லீஸ் மூலம் திரும்ப பெறவேண்டும் என மத்திய அரசை நிர்ப்பந்தம் செய்தார். பிறகு 2001-ல் மீண்டும் ஆட்சிக்கு வந்த போதும் கச்சத் தீவு தொடர்பாக உரிமை மீட்டெடுக்கப்பட வேண்டும் என்று 2004-ல் இந்திய பிரதமருக்கு கடிதம் எழுதினார். 

பிறகு ஜெயலலிதா எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது கூட, ஆகஸ்ட் 2008-ல் இந்திய உச்ச நீதீமன்றத்தில் ஒரு பொது நல வழக்கைத் தொடர்ந்தார். அந்த வழக்கில், ‘கச்சத் தீவு தொடா;பாக 1974 மற்றும் 1976-ல் ஏற்படுத்தப்பட்ட இரு ஒப்பந்தங்கள் ரத்து செய்து உத்தரவிடப்பட வேண்டும். கச்சத்தீவு மீண்டும் இந்தியாவின் அங்கமாக்கப்பட வேண்டும். ஏனெனில், மேற்படி கச்சத் தீவு தாரை வார்ப்புக்கு இந்திய நாடாளுமன்றத்தில் இரு அவைகளைக் கூட்டி ஒப்புதல் பெறப்படவில்லை’ என்று வழக்கு தொடுத்தார். இதில் 1960-ல் மேற்கு வங்காளத்தின் ஒரு பகுதியை பாகிஸ்தானுக்கு மத்திய அரசு கொடுக்க முயன்றபோது அதைத் தடுத்து உத்தரவிட்ட உச்ச நீதீமன்றத் தீர்ப்பை மேற்கோளும் காட்டியுள்ளார் ஜெயலலிதா. மேலும் CONVENTION OF LAW OF THE SEA ன் படி ஐ.நா. சபையின் முடிவுகளை தனது வழக்கில் சாதகமாக எடுத்து வைத்துள்ளாh;.

ஏன் மீட்கவேண்டும் கச்சத் தீவை?

 

13.08.1983-ல் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையின் முதல் தாக்குதல் நடைபெற்றது. 10.12.1984-ல் ராமேஸ்வரம் மீனவர் முனியசாமி எனும் அப்பாவி, இலங்கை கடற்படை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இறந்து, முதல் கணக்கை ஆரம்பித்தார். கடந்த 27 ஆண்டுகளுக்கு மேலாக சுமார் 3000-த்திற்கும் மேலான இலங்கை கடற்படையினரின் தாக்குதல்களை தமிழக மீனவர்கள் சந்தித்துள்ளனர். தமிழக அரசின் அறிக்கைப்படி சுமார் 400 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கொல்லப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கை கணக்கு கூடுதலாகத்தான் இருக்க முடியும். மூவாயிரத்துக்கும் மேலான தமிழக மீனவர்களின் படகுகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கு எல்லாம் ஒரே தீர்வு, கச்சத்தீவை இந்திய அரசு திரும்பப் பெற துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் 

போருக்கு வித்திடும் கச்சத் தீவு

 

கச்சத்தீவு விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் 1974 மற்றும் 1976 ஒப்பந்தங்களை ரத்து செய்யும் பட்சத்தில், ஜக்கிய நாடுகளின் சபையில் இந்தியா சரியாக முயற்சிக்கும் சூழலில், கச்சத் தீவு எப்போதும் இந்தியாவின் அங்கம் எனும் பொதுமக்களின் கனவு நனவாகும். இல்லையென்றால், 1974-ல் ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் பார்வார்டு பிளாக் கட்சியைச் சேர்ந்த P.K.M. தேவர் நாடாளுமன்றத்தில் பேசியது நடந்து விடும்.

 

“இலங்கை தனது ராணுவத்தை கச்சத் தீவிற்கு திருப்பியுள்ளது. ஆயிரக்கணக்கான இந்திய மீனவா;களின் மோட்டார் படகுகள் கச்சத் தீவுக்கு முன்பாகவே நிறுத்தப்பட்டு விட்டன. தமிழக மீனவர்களின் உயிருக்கு ஆபத்து. தமிழக மீனவர்களைப் பற்றி கவலைப்பட ஆளிள்லை. கச்சத் தீவு விவகாரம் எதிர்காலப் போருக்கு அடித்தளமாக இருக்கப் போகிறது. நமது நாட்டின் உயிர் பிரச்சினைக்குச் சவாலாக இருக்க போகும் ஒரு விஷயத்திற்கு இது அடித்தளமாக இருக்கப் போகிறது. இந்தியாவின் பிரிவினைக்கு மகாத்மா காந்தியை பலி கொடுத்துள்ளோம். கச்சத்தீவை தமிழகத்தின் அங்கமாக பார்க்காதீர்கள். புனித இந்தியாவின் அங்கமாக கருதுங்கள். கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுங்கள்” என்று நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் பேசினார் தேவர்.

 

இன்றும் அந்த நிலைமை தமிழனுக்கு நீடிக்கிறது. சீன ராணுவம் கச்சத் தீவை தனது தளமாக பயன்படுத்த இலங்கை அனுமதித்துள்ளது என செய்திகள் வருகின்றன. அதன்படி பார்த்தால் கச்சத் தீவை நாம் மீட்காவிட்டால் எதிர்காலத்தில் இந்தியாவிற்கு - குறிப்பாக தமிழகத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக கச்சத்தீவு இருக்கப் போகிறது!

 

Rajasenthur_Pandian

ந.இராஜா செந்தூர் பாண்டியன்

வழக்கறிஞர்.

 

 

நன்றி

தமிழக அரசியல் 

 

Comments  

 
0 #27 nivetharosey 2012-09-27 09:25
it is very valuable information to who really fond to our people
Quote
 
 
-1 #26 anniyan 2011-06-28 13:00
[ஃஉஒடெ நமெ="ஜ் ம் ஹலெத்"]இலங்கை அரசைக் கண்டித்து துணைத் தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம் 500க்கும் மேற்பட்டோர் கைது. மனிதநேய மக்கள் கட்சி.[/ஃஉஒடெ]

ஆக வேலை வெட்டி இலலாத ஒரு 500 பேர் மொத்தமா வச்சி ஒரே இடத்தில் கூட கும்மி அடிச்சிருக்காங் கன்னு சொல்லுங்க.

--கார்கில் வீரன்
Quote
 
 
-3 #25 anniyan 2011-06-28 12:58
[ஃஉஒடெ நமெ="ற்.றஒ"]அதுமட்டுமல்ல, கச்சத்தீவில் உள்ள அந்தோனியார் கோயிலுக்குச் சென்று வருவதும், இந்திய மீனவர்கள் தங்கள் மீன்பிடி வலைகளை உலர்த்துவதும் எப்போதும்போல, இலங்கை அரசின் அனுமதியோ, விசாவோ இல்லாமல் நடைபெறலாம் என்று அன்றைய அந்த ஒப்பந்தத்தில் சொல்லப்பட்டிருந ்தாலும், இது வெறும் எழுத்தில் இருக்கிறதே தவிர, நடைமுறையில் இல்லை.[/ஃஉஒடெ]


முதலில் பேராசை பிடித்த தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி சென்று மீன்பிடிப்பதை நிறுத்த வேண்டும். அப்புறம் பிரச்சனை தானாக தீரும். இல்லை என்றால் சிங்கள இராணுவ வீரன் சுடத் தான் செய்வான்.

--கார்கில் வீரன்
Quote
 
 
-3 #24 anniyan 2011-06-28 12:57
[ஃஉஒடெ நமெ="வ்.க்.ஆஈய்யாற்"]இலங்கை-கச்சத் தீவு-இந்திய மீனவர்கள்-இலங்கைத்தமிழர்க ள்- தமிழகமீனவர்கள்-அந்தோனியார் கோயில்-இப்படி உரிமைக்குரல்--இப்படி வாய்ச்சொல்,வீரவ சனம் எல்லாம் போலிகள் . இதற்கு எல்லாம் ஒரே தீர்வு வீட்டுக்கு ஒருவர் இலங்கைக்கு எதிராக ஆயுதம் ஏந்தி போரிட தயாரானாலே அடுத்த நிமிடம் .........தீர்வு[/ஃஉஒடெ]


"கூரை ஏறி கோழிபிடிக்க தெரியாதவன் வானம் ஏறி வைகுந்தம் போகப் போறானாம்." முதலில் உங்கள் தெருவில் இருக்கும் கொசுப் பிரச்சனையை தீர்க்க முடியுமா உங்களால்? கொசுப் பிரச்சனையை கூட தீர்க்க முடியாத நீங்கள் கச்சத் தீவு பற்றி பேசுவது செம காமெடி.

--கார்கில் வீரன்
Quote
 
 
+1 #23 Devi 2011-06-28 11:40
ennavo oru resolution Jaya pass panniyavudan indha kudhi kudhikireerhal. ennavo udaneye ella problems includin srilankan Tamilians problem ellame mudinthu vittadhu pol pesuiherrerhal. idhu ellam verum kan thudaippu. Samacheer kalvi kondu varuvadhil Jaya mudiyathu enbathil theermanamaha iruppathil irundhe ellam idu ellam kan thudiappu enbathu puriyavillaya? Karunanidhi kondu vandha nadaimuraihal ellavattrayum illamal seiyvatharkahat han Jaya ippodhu aatchikku vandhulladhe thavira veru edharkahavum illai. mudhalil nam nattil manavarhal santhithu kondu irukkum prachanaihalukk u ungal kuralai uyarthungal. pinnar veru prachanaihalai parkkalam. Jaya evvalavo thavaruhalai indha kurihiya kalathil seidhum adhai pattri ezhutha ungal mana satchi idam kodukkavillai enbathe unmai.
Quote
 
 
0 #22 nagamoney 2011-06-27 06:50
IF India is fearing china, as it tells to all why it is back tracking on katcha theevu, then let it dismantle all its defence and go slave to china
Quote
 
 
-1 #21 KK 2011-06-26 14:06
Google translate -excuse the errors.
After Jayalalitha comes Indian Navy chases Srilanka Navy and fisherman able to fish without hindrance. This is the change which Karuna refused to even try!!
ஒரு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இந்திய கடற்படை கப்பல் அவர்கள் கூறப்படும் அருகில் சர்வதேச கடல் எல்லை கோடு (IMBL) இலங்கை Navalmen விலக்கி துரத்தப்பட்டாலு ம் போது இங்கிருந்து மீனவர்கள் ஒரு பெரிய குழுவின் காப்பாளராக மாறியது, மீன்பிடி அதிகாரிகள் இன்று சொன்னது.

மீனவர்கள் ஜூன் 20 அன்று இலங்கை கடற்படை அதிகாரிகள் 23 சக மீனவர்கள் தடுப்பு எதிர்ப்பு அவர்களின் மூன்று நாள் பழைய வேலை நிறுத்தத்தை அழைப்பு பிறகு நேற்று 600 க்கும் அதிகமான படகுகளில் கடலுக்கு வெளியே வைத்தேன்.

அவர்கள் நெருங்கிய IMBL பகுதியை அடைந்த போது, அவர்கள் தங்கள் ரோந்து படகுகளில் வந்த இலங்கை கடற்படை ஆண்கள் விட்டு விரட்டி இருந்தது, அதிகாரிகள் இன்று இன்று அதிகாலை கடற்கரைகளில் திரும்பி வந்த மீனவர்கள் விலைப்புள்ளி தர சொன்னது.

எனினும், இலங்கை கடற்படை ஆண்கள் இந்திய கடற்படை கப்பல் பார்த்து பின்வாங்கி, அவர்கள் மீனவர்கள் மேலும் அவர்கள் அதன் பின்னர் எந்த பிரச்சனையும் இல்லாமல் மீன் முடிந்தது இன்னும் கூறினார் சேர்த்து தெரிவித்தனர்.

"நாங்கள் மத்தியில் இரவு வரை எந்த பிரச்சனையும் இல்லாமல் மீன் மற்றும் கரைக்கு திரும்ப முடியவில்லை," மீனவர்கள் ஒரு அதிகாரிகள் தெரிவித்தது.

அவர்கள் நான்கு நாட்களுக்கு ஒரு இடைவெளிக்கு பிறகு கடலில் வைத்து மீனவர்கள் ஒரு நல்ல பிடித்து கொண்டு, அதிகாரிகள் சொன்னது.

கடற்படை மற்றும் கடலோர பாதுகாப்பு படை அதிகாரிகள் இலங்கை கடற்படை 23 மீனவர்கள் கைது அடுத்து உள்ள பகுதியில் ரோந்து தீவிரப்படுத்திய து என்று சொன்னது.

தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா பிரதம மந்திரி மீனவர்கள் கைது பிரச்சினையை எடுத்து இலங்கை மீனவர்கள் விரைவில் வெளியிடப்படும் என்று உறுதியளித்தார் அவரது தலையீடு பின்வரும் பதிவாகியிருந்தன .
http://www.thehindu.com/news/states/tamil-nadu/article2136645.ece
Quote
 
 
0 #20 kk 2011-06-25 22:24
Google translate- Pardon for errors.
Sushma meets Jaya.To raise issue on Kachativu.

கருணாநிதி தலைமையின் கீழ் முந்தைய திமுக அரசு அல்லது இலங்கை தமிழர்கள் அல்லது இந்திய மீனவர்கள் காப்பாற்ற காங்கிரஸ் கட்சி செல்வாக்கு பெற முடியவில்லை. காரணமாக இந்த தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கூட்டணி 2011 ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தோல்வி மற்றும் ஒரு அமைதியான ஜனநாயக புரட்சியின் அதிமுக தலைவர் ஜெ ஜெயலலிதா மீனவர்கள் சமூகத்தின் பெரும் ஆதரவுடன் மாநில அதிகாரத்தை கைப்பற்றி இருந்தது.

உடனடியாக சக்தி அனுமானித்து பிறகு முதல்வர் ஜெ ஜெயலலிதா தீவின் தேசிய மற்றும் 1974 இல் இலங்கை உடன்படிக்கையை கட்சதிவு மீளப்பெறுதலை மீது பொருளாதார தடைகளை சுமத்துவதற்கு மாநில சட்டமன்றத்தில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்ட து.

தமிழக முதல்வர் ஜெ ஜெயலலிதா, மக்களவை சுஷ்மா சுவராஜ் எதிர் கட்சி தலைவர் சந்தித்து போது இந்த வரலாற்று தீர்மானத்தை ஒரு நகல் கேட்டு கொண்டுள்ளது. தில்லி திரும்ப அன்று, சுஷ்மா ஸ்வராஜ் பாராளுமன்றத்தில ் இந்த பிரச்சினை எழுப்பும்.

இந்த இரண்டு கணக்குகளை மிகவும் குறிப்பிடத்தக்க கருதப்படுகிறது. முதலில், இந்த கட்டத்தில் கட்சதேவு மீட்டெடுக்க இந்திய பாராளுமன்றத்தில ் எந்த விவாதமும் இந்த பகுதியில் இலங்கை கடற்படை ஒரு சோதனை வைக்க முடியாது. இந்த முக்கியமான கூட்டத்தில் வெளியே இரண்டாம் அரசியல் வீழ்ச்சி. இது பா.ஜ. அதிமுக ஒரு கூட்டு தொடக்கமாக இருக்க கூடும். பிஜேபி இலங்கை ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ நெருக்கமான நட்பு இது காங்கிரஸ் கட்சி அகற்ற அடுத்த பாராளுமன்ற தேர்தலில் ஆட்சிக்கு வந்தால், கட்சதேவு மீளப்பெறுதலை சாத்தியம் இருக்கும். இலங்கை நோக்கி மேலும் தவறாக கருதப்படுகிறது வெளிநாட்டு கொள்கை
http://truthdive.com/2011/06/25/sushma-and-jayalalithaa-forge-alliance-to-retrieve-katchatheevu.html?utm_source=twitterfeed&utm_medium=twitter
Quote
 
 
-6 #19 கும்புடுரேன் சாமி 2011-06-25 21:09
யாருப்பா இந்த ஆள்? ஜூனியர் விகடனில் பார்த்த ஆள் மாதிரி இருக்கிறாரே அதே ராஜா சாரா? ஈழத்தை பத்தியோ கச்சத்தீவை பத்தியோ பேசி இனி என்னாகப் போவுது. படத்தை போட்டும் பக்கம் பக்கமா எழுதியும் தீர்த்துக்க வேண்டியது தான்..
கும்புடுரேன் சாமி
Quote
 
 
-2 #18 arunkalai 2011-06-25 19:01
8) :-*
Quote
 
 
-4 #17 padma naban tamilan 2011-06-25 13:58
katchatheevu mattumalla. thevikulam,beer medu,kolaru,thi rupathy, ellathaium meetkaveandum.
Quote
 
 
+4 #16 ம.பொன்ராஜ் 2011-06-25 13:31
'PRO' opposite 'CON'
'PROgress' oppoiste 'CONgress' :lol:
Quote
 
 
+5 #15 V.K.AIYYAR 2011-06-25 13:08
இலங்கை-கச்சத் தீவு-இந்திய மீனவர்கள்-இலங்கைத்தமிழர்க ள்- தமிழகமீனவர்கள்-அந்தோனியார் கோயில்-இப்படி உரிமைக்குரல்--இப்படி வாய்ச்சொல்,வீரவ சனம் எல்லாம் போலிகள் . இதற்கு எல்லாம் ஒரே தீர்வு வீட்டுக்கு ஒருவர் இலங்கைக்கு எதிராக ஆயுதம் ஏந்தி போரிட தயாரானாலே அடுத்த நிமிடம் .........தீர்வு
Quote
 
 
-2 #14 MADHAVAN 2011-06-25 11:38
தெற்காசியாவின் "சி.ஐ.ஏ. கொள்கை" என்பது இலங்கையில் முள்ளியவாய்காலை ஏற்படுத்துவது மட்டும் கிடையாது,"தமிழ்நாட்டை" இந்தியாவிலிருந் து தனிமைப்ப்டுத்து வதும் ஆகும்- இது ரொனால்ட் ரீகன் காலத்திலேயே முயற்சிக்கப்பட் டது ஆனால்,தற்போதே சந்தர்ப்பம் வாய்த்துள்ளது- "இலங்கைத்தமிழரது பேராசையும்,அவர் கள் கையிலுள்ள இரத்தக்கறை படிந்த பல பில்லியன் டாலர்கள்" மூலமாக(ஐ.நா. நிபுர்ணர் குழு அறிக்கை- பக்கம் 114, பிரிவுகள் 417 - 420).
Quote
 
 
-2 #13 MADHAVAN 2011-06-25 11:18
சுஷ்மா ஷிவ்ராஜின் இலங்கைப் பயணத்துடன் இதை ஒத்துப் பார்க்க வேண்டும்.தமிழ்,தெலுங்கு திரைப்பட உலகில் "சுனாமி,முல்லியவ ாய்க்காலில்" அடித்த பல பில்லியன் டாலர் பணம் புரளுகிறது.இது அண்ணா திமுகாவை "தமிழ் தேசியத்திற்குள் (இரண்டாம் முள்ளிய வாய்க்கால்)" இழுக்க முயலுகிறது.அதை ஜெயலலிதா தவிர்க்க விரும்பும் "கேப்பில்" "சி.ஐ.ஏ. வின் தெற்காசிய கொள்கைக்கு" இணைவாக "பி.ஜே.பி" குறுக்குசால் ஓட்ட நினைக்கிறது.
Quote
 
 
-1 #12 j m haleth 2011-06-24 23:11
இலங்கை அரசைக் கண்டித்து துணைத் தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம் 500க்கும் மேற்பட்டோர் கைது. மனிதநேய மக்கள் கட்சி.
Quote
 
 
-1 #11 j m haleth 2011-06-24 23:08
today manitha neaya makkal katchi supported tamil elam
Quote
 
 
-1 #10 Rajasekhar 2011-06-24 17:26
[quote name="Rajasekhar"]:lol: Here is one "THENNALI" comment:
Arul says:
June 21, 2011 at 11:14 am
Bapu,

-------------------------------
THIS COMMENT CAME IN : http://dbsjeyaraj.com/dbsj/archives/2345
Quote
 
 
+1 #9 Anto 2011-06-24 17:06
யாரு எப்படி போன நமக்கு என்ன? இது தான் இன்னைக்கு நம்ம சிந்தனை. அது தான் ஒரு சிலர் (மு க ) சுரன்டி இப்பொ திருஒடு மட்டும் தான் மிச்ஷம் . தம்ழின் செதது பொயி ரொம்ப வருசம் ஆஹி பொனது. காமராஜன் மட்டும் தான் உன்மை தமழன்
Quote
 
 
0 #8 Rajasekhar 2011-06-24 16:49
... இதில் "கச்சத்தீவு மீட்சி" என்பது,"காலனித்துவ தொடர்ச்சிக்கு எதிரான விஷயம்" அதாவது இந்திய "காலனித்துவ தொடர்ச்சி நிர்வாகத்தின் மமதை" என்பதால்,"வேலைவாய்ப்பு ஆசாமிகள்" இடைசெருகல் நடைபெருகிறது.ஈழப்போராட்டத்தி ல் "ஒரு கை,ஒருகாலுடன்" மிஞ்சியிருப்பவர ்கள்,பொருளாதார ரீதியில் பிந்தங்கிய,வெளி நாடு செல்ல இயலாத வெள்ளாலரல்லாதவர ்கள்.இவர்கள் தங்கள் பிடியை இலங்கையில் வைத்துக்கொள்ள இந்த "தலித்துக்களுடன் ?" ஒரு தொடர்பாடல் தேவைப்படுகிறது.இதன் மூலம் உருவான எண்ணக் கருவே,"சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குள் தலித் நந்தனை நுழைய உதவிய சைவ வேளாலர்" என்பதாகும்!.இதை தன்னுடைய நிரந்தர குடும்ப அரசுரிமைக்கு "டெக்னிக்கலாக" பயன்படுத்திய கலைஞர் கருணாநிதி குடும்ப திருவிளையாடல்கள ்(தலித்த்தியம்- பெண்ணியம்)இன்னொ ரு முழுமையான கட்டுரை வரும்!.இவர்கள் இந்தியாவிலுள்ள மற்ற மாநில தலித்துக்களுடன் சேர மாட்டார்கள்.இவர்களின் பலிக்கடா "தமிழ் தேசிய தலித்துக்களும்" அவர்களின் அண்ணா தி.மு.க. வுடனான முரண்பாடுகளும், மற்றும் இவர்களின் போக்குக்கு தி.மு.க. வின் வளைந்துக் கொடுப்புகளுமேயா கும்!.கத்தோலிக்க அமைப்புகளை இவர்கள் பயன் படுத்துவது இன்னொரு கட்டுரை வரும்.... :eek: :zzz
Quote
 
 
0 #7 Rajasekhar 2011-06-24 16:35
என்னுடைய பின்னூட்டம் ஒன்று தவறாக,முழுமையான ஒரு கட்டுரையின் சிறு பகுதியை,அதுவும் ,தவறான ஒழுங்கில் ஏற்றப்பட்டுவிட் டது!- வருந்துகிறேன்!.
இந்திய சுதந்திரத்திற்க ு பலர் ஆயுதம் தரித்து போராடினார்கள்,உ தா:திப்பு சுல்தான்.அவர்களில் பலர் அந்த மானிலும்,சென்னை க்கருகிலுள்ள "வேலூரிலும்",அந்தமானிலும் சிறையில் அடைக்கப்பட்டனர் .இலங்கையின் "பண்டாரவன்னியன்( வேலூர்)",வீர சவார்க்கார்(அந் தமான்) போன்றோர் இதில் அடங்குவர்!.இந்தியா முழுவதும இப்படிப்பட்டவர் "குற்றப் பரம்பரையினராக" அறிவிக்கப்பட்டு வேலைவாய்ப்புகள் மறுக்கப்பட்டு பழிவாங்கப்பட்டன ர்.சென்னையில் இவர்களின் அந்தமான் செட்டில்மெண்டுக ளும் உண்டு.அதனால் 1940 களில் சென்னை வந்த இவர்கள் வேலைவாய்ப்புக்க ாக தங்களை "முதலியார் அல்லது வெள்ளாலர்" என்று கூறிக்கொண்டனர்.இதே போல்தான்,இலங்கை யில் "சமீபத்தில்" "புல(ன்)ம் பெயர்ந்த இலங்கைத்தமிழர்க ள் வேலைவாய்ப்புக்க ாக(மேற்கத்திய காலனித்துவ நிர்வாகங்கள் தங்களுக்கு ஒத்துவருபவர்களை தான் முன்னேற அனுமதிப்பார்கள் )தங்களை,"வெள்ளாலர்கள்"என்று கூறியதன் விளைவாக "இந்த ஜாதியே" பெரும்பான்மையாக உள்ளது.இந்தியாவில் ஜாதிகளின் "படிமான வளர்ச்சி" வேறு போக்கில் உள்ளது.இலங்கையில் "புத்தமத தேசியத்தின் கீழ்" ஜாதிப்பிரிவுகள் வேறு போக்கில் படிமான வளர்ச்சி பெற்றுள்ளன.இவைகளிலிருந்து முழுமையாக வேறுபட்டு,தனிமை ப்பட்டுள்ளனர்,ப ுல(ன்)ம் பெயர்ந்த இலங்கைத்தமிழர்க ள்- இவர்கள் தங்கள் "அடையாளங்களை" தக்கவைத்துக் கொள்ள,"பழைய மாணவர் சங்கங்கள்,சைவக் கோயில்கள்" என்று ஜாதிய அடையாளங்களில் மேலும் இறுகியுள்ளனர்.இதில் "கச்சதீவு" என்பது..
Quote
 
 
0 #6 Rajasekhar 2011-06-24 16:08
:lol: Here is one "THENNALI" comment:
Arul says:
June 21, 2011 at 11:14 am
Bapu,

I am a Sri-Lankan Tamil and not clear on the Davidian Fanatic Antics in TN.

We have brahmins in our island and call them as “Iyers” and their profession is mainly priests and enjoy tremendous, I repeat, tremendous respect from us. This is the norm in the Tamil diaspora as well, since our hindu culture is inter twined with Iyers.

If you google the “Jaffna Kingdom” the other language beside the usage of Tamil was Sanskrit.

What it’s like to be a Brahmin in TN? is the hatred (not sure the right word) due to the brahmmin community’s success in TN?

The Brahmins contribution to the Tamil culture, literature and religion are immense and indisputable.

If you could elaborate please. much appreciated.
Quote
 
 
-2 #5 MADHIVATHANI 2011-06-24 14:35
srilanka vidam irundu karunanithi kudumbam katcha theevaiyum vilaiku vangitanga poala...? 8) athaan atha pathi pesave illa... ;-)
Quote
 
 
+8 #4 kaasinaath 2011-06-24 14:14
[ஃஉஒடெ நமெ="அன்னியன்"]கச்சத் தீவு என்பது முடிந்துபோன விஷயம். இதைப் பற்றி பேசுவது கூட இந்திய பாதுகாப்புக்கு நல்லது அல்ல.

-- கார்கில் வீரன்[/ஃஉஒடெ]
அங்கே இலங்கை துணையுடன் சீனா கடர்படை தளம் அமைக்கும் அப்போதும் நீர் இதையே தான் சொல்லுவீரோ. (கடந்த முறை அந்தோனியார் கோயில் சென்றவர்கள் சீன கூடாரங்களை பார்த்ததாக செய்திகள் உள்ளன.)
Quote
 
 
-12 #3 anniyan 2011-06-24 11:00
கச்சத் தீவு என்பது முடிந்துபோன விஷயம். இதைப் பற்றி பேசுவது கூட இந்திய பாதுகாப்புக்கு நல்லது அல்ல.

-- கார்கில் வீரன்
Quote
 
 
+24 #2 Arunkumar 2011-06-22 13:53
இந்தியாவின் துயரம் காங்கிரஸ்.....
தமிழ் நாட்டின் துயரம் கருணாநிதி...

தமிழரையோ தமிழ் இனத்தாரின் பாரம்பரியத்தயோ இந்திய அரசு சட்டை செய்தது இல்லை.

நமக்கு
இந்தியா வேண்டாம்....
தமிழ் நாடு போதும்.....
Quote
 
 
+14 #1 R.Rao 2011-06-22 13:43
அதுமட்டுமல்ல, கச்சத்தீவில் உள்ள அந்தோனியார் கோயிலுக்குச் சென்று வருவதும், இந்திய மீனவர்கள் தங்கள் மீன்பிடி வலைகளை உலர்த்துவதும் எப்போதும்போல, இலங்கை அரசின் அனுமதியோ, விசாவோ இல்லாமல் நடைபெறலாம் என்று அன்றைய அந்த ஒப்பந்தத்தில் சொல்லப்பட்டிருந ்தாலும், இது வெறும் எழுத்தில் இருக்கிறதே தவிர, நடைமுறையில் இல்லை.
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 40 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday1745
mod_vvisit_counterYesterday13577
mod_vvisit_counterThis week59322
mod_vvisit_counterLast week95167
mod_vvisit_counterThis month281582
mod_vvisit_counterLast month382199
mod_vvisit_counterAll days13197949