|
2010 விடுதலைச் சிறுத்தைகள் ஆண்டு என்று 2008ம் ஆண்டு தொடங்கி, தமிழகமெங்கும் விடுதலைச் சிறுத்தைகள் பிரச்சாரம் செய்து வந்தனர். இந்தத் தேர்தலில் படு தோல்வி அடைந்த பிறகு வீழ்ந்த சிறுத்தைகள் என்று பெயர் மாற்றிக்கொள்வார்களா என்று தெரியவில்லை.

ஒவ்வொரு தோல்வியிலிருந்தும் பாடத்தைக் கற்றுக் கொண்டு முன்னேறுபவன் நல்ல அரசியல்வாதியாக மட்டுமல்லாமல், நல்ல மனிதனாகவும் உருவாகும் வாய்ப்பு உண்டு. இந்த இதழ், குமுதம் ரிப்போர்ட்டர் இதழுக்கு தொல்.திருமாவளவன் அளித்த பேட்டியை பாருங்கள்.
தமிழ்த்தேசியம், தலித் விடுதலை, ஈழ விடுதலை என எல்லாத் தளங்களிலும் வேலை செய்பவர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன்.சட்டமன்றத் தேர்தல் தோல்வியை உதறிவிட்டு தொடர்ந்து தொண்டர்களைச் சந்தித்து வருகிறார் திருமாவளவன். அவருடன் பேசியதிலிருந்து.... தேர்தலில் போட்டியிட்ட இடங்களில் எல்லாம் உங்கள் கட்சி தோற்றுப் போயிருக்கிறது. இதற்கு என்ன காரணம் என நினைக்கிறீர்கள்? ‘‘கூட்டணி மீது மக்கள் நம்பிக்கை கொள்ளவில்லை என்பதும், கூட்டணிக்கான ஆதரவு குறைந்ததும் முக்கியக் காரணம். இந்தத் தேர்தல் தோல்வியில் சினிமா நடிகர்களின் பங்கு குறிப்பிடத்தகுந்தது. எம்.ஜி.ஆர்., விஜயகாந்த், சரத்குமார் ரசிகர்கள், வெளியில் இருந்து ஆதரவளித்த விஜய், அஜீத், ரஜினிகாந்த் ரசிகர்கள் என அவர்கள் கண்மூடித்தனமாக அ.தி.மு.க. கூட்டணியை ஆதரித்தார்கள்.’’ தி.மு.க.வின் தோல்விக்கு அவர்களது குடும்ப அரசியலும், வாரிசுகளின் ஆதிக்கமும் முக்கிய காரணம் என்று நினைக்கிறீர்களா? ‘‘தி.மு.க.வில் குடும்ப அரசியல் நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. ஸ்டாலின், அழகிரி, கனிமொழி எல்லோரும் எப்போதோ அரசியலுக்கு வந்து விட்டார்கள். ஆனாலும், இந்தத் தேர்தல் தோல்விக்கு குடும்ப ஆதிக்கமும் ஒரு காரணம் என்பதை மறுக்க முடியாது. அதைவிட முக்கியமான காரணம் ஊடகங்கள்தான். 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கிற்கு முன்னதாகவே தி.மு.க.விற்கு எதிரான பிரசாரங்கள் தொடங்கிவிட்டன. ஒரே நேரத்தில் ஐந்து மாநிலங்களில் தேர்தல் நடந்தது. ஆனால், தேர்தல் அதிகாரிகள் தமிழகத்தில் மட்டும்தான் கடுமை காட்டினார்கள். வரலாற்றில் எந்த மாநிலத்திலும், எந்தத் தேர்தலிலும் தேர்தல் ஆணையம் இப்படி நடந்து கொண்டதில்லை.’’
ஓட்டுக்குப் பணம் கொடுப்பது தமிழகத்தில்தான் அதிகம் இருப்பதாக தேர்தல் ஆணையம் அதற்கு காரணம் சொல்லியதே ?
‘‘புதுச்சேரியில் காலங்காலமாக எல்லாத் தேர்தல்களிலும், எல்லா வேட்பாளர்களும் ஓட்டுக்குப் பணம், மது கொடுப்பது வெளிப்படையாக நடக்கிறது. அங்கே இந்தக் கெடுபிடிகள் நடைபெறவில்லை. இந்தத் தேர்தலிலும் விளம்பரம் எழுதுவதிலோ, பிரசாரம் செய்வதிலோ அங்கே எந்தக் கடுமையும் காட்டப்படவில்லை.’’ தமிழகத்தில் மட்டும் இந்தக் கெடுபிடிகளுக்கு என்ன காரணம்? ‘‘தமிழகத்தில் தி.மு.க.தான் இடஒதுக்கீட்டை ஆதரிக்கிற, பெரியாரிஸம் பேசுகிற, கொள்கை ரீதியாக ஈழத்தை ஆதரிக்கிற கட்சி. இந்தியாவிலேயே மாநில உரிமைகளைப் பேசுகிற, மாநில சுயாட்சி பற்றிப் பேசுகிற ஒரே கட்சி தி.மு.க.தான்.
இதெல்லாம் பிடிக்காதவர்கள் தி.மு.க.ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என்று நீண்ட காலமாகவே ஊடகத் தாக்குதலை ஆரம்பித்துவிட்டார்கள். ஊடகங்கள் மூலமாக, தி.மு.க.வை மக்கள் விரோதக் கட்சி, ஊழல் கட்சி என அம்பலப்படுத்தினார்கள். தி.மு.க.வினர் ஊழலே செய்யாதவர்கள் என நான் சொல்லவில்லை. ஆனால், நாட்டில் இதற்கு முன்னரும் எத்தனையோ பெரிய ஊழல்கள் நடந்திருக்கின்றன. ஆனால், தி.மு.க.வை மட்டும் எதிர்ப்பதற்கு பெரிய தத்துவார்த்தப் பின்னணி இருக்கிறது. இதையெல்லாம் மீறி இரண்டு லட்சம் வாக்காளர்கள் உள்ள ஒரு தொகுதியில் 25 ஆயிரம் வாக்குகள் முதல் 30 ஆயிரம் வாக்குகள் ரசிகர்களின் வாக்குகள்தான். தி.மு.க. கூட்டணி தோற்றுப் போனதற்கு ரஜினிகாந்தும் ஒரு காரணம். ரஜினிகாந்த் அ.தி.மு.க.விற்கு வாக்களித்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியானதும், அ.தி.மு.க. ஆதரவு வாக்குகள் அதிகரித்துவிட்டது.’’ உங்கள் கூட்டணியும் பிரசாரத்தில் வடிவேலுவையும், குஷ்புவையும்தானே நம்பியிருந்தது? சினிமா நடிகர்களை நம்பி தேர்தல் முடிவு இருப்பது ஆபத்தான போக்குதான் இல்லையா? ‘‘எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, விஜயகாந்த் என சினிமா நடிகர்கள்தானே இங்கே வெற்றி பெறுகிறார்கள். இங்கே உழைப்புக்கோ, திறமைக்கோ, தியாகத்துக்கோ, அறிவுக்கோ, ஆற்றலுக்கோ மரியாதை இல்லை. ஒரு சினிமாக்காரன் கட்சியை ஆரம்பித்து ஆட்சியைப் பிடிக்க முடியும் என்கிற நிலைமை இந்தியாவில் தமிழ்நாட்டில் மட்டும்தான் இருக்கிறது.’’
தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகி இருந்தால் வெற்றி பெற்றிருக்க முடியும் என நினைக்கிறீர்களா?
 ‘‘2006 தேர்தலில் நாங்கள் அ.தி.மு.க.வுடன்தான் கூட்டணி வைத்தோம். அந்தத் தேர்தலில் எங்களை ஓரங்கட்டுவதற்கான அத்தனை வேலைகளையும் அ.தி.மு.க. செய்தது. அதிலிருந்து வெளியேறி நாங்கள் தி.மு.க. கூட்டணியில் சேர்ந்தோம். இடையில் நாடாளுமன்றத் தேர்தல் வந்தது. ஈழப்பிரச்னை உச்சத்தில் இருந்த நேரம் அது. அப்போது ஒரு பத்திரிகையில், ‘விடுதலைச் சிறுத்தைகளை உங்கள் கூட்டணியில் சேர்த்துக் கொள்வீர்களா?’ என கேள்வி கேட்கிறார்கள். அதற்கு செல்வி. ஜெயலலிதா, ‘சேர்த்துக்கொள்ள வாய்ப்பே இல்லை’ என்று சொன்னார். எந்த அணியில் இருக்கிறோம் என்பதை நாங்கள் தீர்மானிப்பதை விட பெரிய கட்சிகள்தான் அதைத் தீர்மானிக்கின்றன. 2006 தேர்தலில் நாங்கள் தி.மு.க.வில் சேர நினைத்தபோது ‘விடுதலைச் சிறுத்தைகளுக்குக் கூட்டணியில் இடமில்லை’ என கலைஞர் சொன்னார். 2009-ல் நாங்கள் பா.ம.க., ம.தி.மு.க., தமிழ்த்தேசிய அமைப்புகளோடு தனி அணி அமைக்க முயற்சி செய்தோம். யாரும் ஒத்துழைக்காததால், தி.மு.க.வில் நாங்கள் தொடர வேண்டியதாயிற்று. மறுபடியும் இந்தத் தேர்தலில் அ.தி.மு.க.விற்குப் போக வேண்டும் என்கிற எண்ணம் எங்களுக்கு எழவில்லை. அதிகாரபூர்வமான அழைப்பும் அ.தி.மு.க.விடமிருந்து வரவில்லை. கிடைத்துள்ள தோல்வியை மனமுவந்து ஏற்றுக்கொண்டுள்ளோம்.’’ பா.ம.க., சிறுத்தைகள் கூட்டணி மூலம் வடமாவட்டங்களில் பெரிய வெற்றி கிடைக்கும் என சொல்லி வந்தீர்கள். ஆனால் முடிவு எதிர்மறையாக இருந்ததே ?
 ‘‘தேர்தல் முடிவுக்குப் பிறகு பா.ம.க. நிறுவனரோடு அமர்ந்து வாக்குச்சாவடி வாரியாக ஆய்வு செய்தோம். விடுதலைச் சிறுத்தைகளுக்கு ஓட்டு விழாத இடங்களில் நூற்றுக்கணக்கிலும், தலித் வாக்குச் சாவடிகளில் பா.ம.க.விற்கு அதிக அளவிலும் வாக்குகள் கிடைத்திருக்கிறது. இரு சமூகத்தையும் சாராதவர்கள் இதைத் தவறாகப் பார்த்திருக்கலாம். ஆனால், எங்களுக்கு இரு தரப்பு மக்களிடமும் நல்லிணக்கம் தெரிந்தது. இரு கொடிகளும் சேர்ந்து இருந்ததே ஒரு பெரிய மாற்றம்.’’ ஈழத்தையும் ஆதரித்துவிட்டு, காங்கிரஸோடு கூட்டணி என்பது உங்களுக்கே முரண்பாடாக இல்லையா?

ஈழ விஷயத்தில் காங்கிரஸுக்கு என்ன கொள்கையோ அதே கொள்கைதான் பி.ஜே.பி.க்கும், அ.தி.மு.க.விற்கும். நாங்கள் தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணியில் இருந்தாலும், காங்கிரஸை எந்த இடங்களில் எல்லாம் விமர்சிக்க வேண்டுமோ, அங்கெல்லாம் விமர்சித்திருக்கிறோம்.’’
தேர்தல் தோல்வி, கனிமொழி கைது விவகாரங்களுக்குப் பிறகு தி.மு.க.வோடு காங்கிரஸுக்கு நல்லுறவு இல்லை. டெல்லி செல்லும் கருணாநிதியை காங்கிரஸ் தலைவர்கள் சந்திப்பது கூட இல்லை. ஆனாலும் கூட்டணி தொடர்வதாக கருணாநிதி அறிவிக்கிறார். இது முரண்பாடாக இல்லையா?
‘‘நாங்கள் தனிப்பட்ட முறையில், காங்கிரஸ் அணியில் இருந்து தி.மு.க. வெளியேற வேண்டும் என்று தொடக்கத்தில் இருந்தே கலைஞரிடம் சொல்லி வருகிறோம். ஆனால், தி.மு.க. ஒரு சூழ்நிலைக் கைதி போல் இருக்கிறது.’’
தேசியக் கட்சிகள் மாநிலங்களில் செல்வாக்கை இழந்துவிட்ட நிலையில், அந்தக் கட்சிகளை மாநிலக் கட்சிகள் தூக்கிச் சுமக்க வேண்டிய அவசியம் என்ன ?
‘‘மத்தியில் கூட்டணியில் இருந்தால்தான் மாநிலத்தின் நலன்களைப் பாதுகாக்க முடியும் என்கிற நோக்கில் அந்தக் கட்சிகளோடு கூட்டணி வைக்க வேண்டியது அவசியமாகிறது. மற்றபடி மாநிலங்களில் தேசியக் கட்சிகள் பெரும் தேய்வைத்தான் சந்தித்து வருகிறது. அதனால் அவர்கள் அதிகாரம் செலுத்துவார்கள் என பயப்படத் தேவையில்லை.’’
சட்டமன்றத்தில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது? இதனால் இலங்கைத் தமிழ் மக்களுக்கு என்ன பயன் இருக்கும் என நினைக்கிறீர்கள்?
‘‘இலங்கை அரசுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியிருப்பதே ஒரு பெரிய மாறுதல்தான். ஆனால், இதைப்போல் பல தீர்மானங்கள் ஏற்கெனவே நிறைவேற்றப்பட்டு அது அவைக் குறிப்பில்தான் இடம் பெற்றுள்ளது. இந்திய அரசு அந்தத் தீர்மானங்கள் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுத்ததில்லை.’’
முதல்வர் ஜெயலலிதாவின் நடவடிக்கைகள் எப்படி இருக்கிறது?
‘புதிய தலைமைச் செயலகத்தைப் புறக்கணித்தது, செம்மொழிப் புத்தகங்களைத் தூக்கிப் போட்டது போன்றவை தி.மு.க.மீதான வெறுப்பை வெளிப்படுத்துவது போல்தான் செயல்பட்டு வருகிறார். சமச்சீர் கல்வி என்கிற சமூக மாற்றத்துக்கான அருமையான திட்டத்தை பெருந்தன்மையோடு நடைமுறைப் படுத்தாமல் முடக்குவது பெருந்தவறு.’’
தலைமைச் செயலகம் பற்றி பேசுவதால் இந்தக் கேள்வி. தலைமைச் செயலகம் கட்டுவதற்கு மத்திய அரசின் தாழ்த்தப்பட்டோர் நிதி பயன்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதை நீங்கள்தானே கேள்வி கேட்டிருக்க வேண்டும்?
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள், தலைமைச் செயலகம் கட்டியது, தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்கியது எல்லாவற்றிற்கும் தாழ்த்தப்பட்டோர் நிதி செலவிடப்பட்டதாக செய்திகள் வருகின்றன. இவை எதற்கும் இதுவரை ஆதாரங்கள் இல்லை. எந்த ஆட்சியிலும் இல்லாத அளவிற்கு தாழ்த்தப்பட்டோர் து ணைத் திட்டத்தின் கீழ் 2800 கோடி ரூபாயை தாழ்த்தப்பட்டோர் நலனுக்காக பட்ஜெட்டில் வெளிப்படையாக ஒதுக்கியது தி.மு.க. தான். மேம்போக்கான குற்றச்சாட்டுகளை கேள்வி கேட்க முடியாது’’ நிதானமாக முடிக்கிறார் திருமா.
இதுதான் திருமாவளவனின் பேட்டி….
விஜய், அஜீத், ரஜினி, சரத்குமார் ரசிகர்களின் ஆதரவால் அதிமுக ஜெயித்தது, தேர்தல் அதிகாரிகள் தமிழகத்தில் மட்டும்தான் கடுமை காட்டினார்கள், புதுச்சேரியில் காலங்காலமாக வாக்குக்கு பணம் மற்றும் மது கொடுத்து வருகிறார்கள், இது புதிதல்ல, என்பது ஒரு பகுதி.
விஜய், அஜீத், ரஜினி போன்றோர், திமுக அரசுக்கு எதிராக திரும்பியதற்கான காரணம் என்ன என்பதை திருமா ஏன் வசதியாக மறந்து விட்டார் ? ஷுட்டிங்குக்கு போவதை விட்டு விட்டு, கருணாநிதிக்கு ஜால்ரா போடும் விழாவுக்கு கட்டாயப் படுத்தி வரவழைத்தால், வந்து கை தட்டுவதற்கு அவர்கள் என்ன திருமாவளவனா ? புதுச்சேரியில் காலங்காலமாக வாக்குக்கு பணமும் மதுவும் கொடுத்து வருகிறார்கள், தமிழகத்தில்தான் இப்படி தேர்தல் ஆணையம் கடும் அடக்குமுறை நடந்து வருகிறது என்கிறாரே திருமா ?
காலங்காலமாக தலித்துகளை ஆலயத்துக்குள் நுழைய விடாமல், செருப்பு போட்டு நடக்கவிடாமல், சாணிப்பால் ஊற்றி கொடுமைப் படுத்திக் கொண்டுதான் இருந்தார்கள்…. இப்போதும் அது தொடர திருமா சம்மதிப்பாரா ? காலங்காலமாக நடந்து வந்தது என்பதற்காக ஒரு தவறை தொடர அனுமதிக்க முடியுமா ?
அடுத்து ஒரு கேள்விக்கு திருமா “தமிழகத்தில் தி.மு.க.தான் இடஒதுக்கீட்டை ஆதரிக்கிற, பெரியாரிஸம் பேசுகிற, கொள்கை ரீதியாக ஈழத்தை ஆதரிக்கிற கட்சி. இந்தியாவிலேயே மாநில உரிமைகளைப் பேசுகிற, மாநில சுயாட்சி பற்றிப் பேசுகிற ஒரே கட்சி தி.மு.க.தான்.” என்று பதிலளிக்கிறார்.

திருட்டுச் சாமியார் புட்டபர்த்தி சாய்பாபா மரணத்துக்கு இரங்கல் தெரிவித்து உயர்நிலைக் குழுவில் தீர்மானம் இயற்றுவதுதான் பெரியாரிசமா ? இலங்கையின் ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் வராமல், சிங்களர்களின் மனம் புண்படாமல், ஒரு தீர்வை எட்ட வேண்டும் என்று கருணாநிதி சொன்னவரில்லையா ? சிங்களரின் மனம் புண்படாத தீர்வு என்றால், சிங்களனின் வீட்டு கக்கூசில் கூட இடம் கொடுக்க மாட்டான். அதுதான் கருணாநிதி சொன்ன தீர்வா ? மாநில உரிமைகளைப் பேசுகிற மாநில சுயாட்சியைப் பேசுகிற ஒரே கட்சி திமுகவாம் !!!!! முல்லைப் பெரியாறையும், திருப்பதியையும், கிருஷ்ணாவையும், காவிரியையும், கச்சத்தீவையும், விட்டுக் கொடுத்து விட்டு பேடித்தனமாக கடிதம் எழுதுவதுதான் மாநில சுயாட்சியா திருமா ? உங்களுக்கு நா கூசவேயில்லையா ?
நாட்டில் எத்தனையோ ஊழல்கள் நடந்திருந்தாலும், ஊடகங்கள் அதைப் பெரிது படுத்தகின்றன என்கிறார் திருமா… எத்தனையோ ஊழல்களும், ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி ரூபாய் ஊழலும் ஒன்றா திருமா ?
அடுத்து திருமா “ஈழ விஷயத்தில் காங்கிரஸுக்கு என்ன கொள்கையோ அதே கொள்கைதான் பி.ஜே.பி.க்கும், அ.தி.மு.க.விற்கும். நாங்கள் தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணியில் இருந்தாலும், காங்கிரஸை எந்த இடங்களில் எல்லாம் விமர்சிக்க வேண்டுமோ, அங்கெல்லாம் விமர்சித்திருக்கிறோம்’’ என்கிறார்.


ஈழ விஷயத்தில் உங்களுக்கு என்ன கொள்கை இருந்தது திருமா ? தமிழர்களைக் கொன்ற ராஜபக்ஷேவின் எச்சில் விருந்தை உண்டு வந்ததா ? அவன் அளித்த உணவை உண்டு விட்டு, சென்னை வந்ததும் அவனை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் நடத்த உங்களுக்க வெட்கமாகவேயில்லையா ? இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப் பட்ட டக்ளஸ் தேவானந்தாவோடு தோள் மேல் கைபோட்டு உறவாடும் கலையறிந்த உங்களுக்கு என்ன கொள்கை இருந்தது, இருக்கிறது.
இறுதியாக திருமா தலைமைச் செயலகம் கட்டுவதற்கு தலித்துகளுக்கான நிதி செலவிடப் பட்டதாக வந்த செய்தி என்ற கேள்விக்கு, “காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள், தலைமைச் செயலகம் கட்டியது, தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்கியது எல்லாவற்றிற்கும் தாழ்த்தப்பட்டோர் நிதி செலவிடப்பட்டதாக செய்திகள் வருகின்றன. இவை எதற்கும் இதுவரை ஆதாரங்கள் இல்லை. எந்த ஆட்சியிலும் இல்லாத அளவிற்கு தாழ்த்தப்பட்டோர் து ணைத் திட்டத்தின் கீழ் 2800 கோடி ரூபாயை தாழ்த்தப்பட்டோர் நலனுக்காக பட்ஜெட்டில் வெளிப்படையாக ஒதுக்கியது தி.மு.க. தான். மேம்போக்கான குற்றச்சாட்டுகளை கேள்வி கேட்க முடியாது”
இந்தாருங்கள் திருமா… நீங்கள் கேட்ட ஆதாரம்…


11ம் ஐந்தாண்டுத் திட்டத்தின் கீழ், ஆதி திராவிடர்களுக்கான சிறப்புக் கூறுகள் திட்டத்தில் இருந்து 74 கோடி ரூபாயை கருணாநிதி கருணையோடு, கலர் டிவி வாங்க செலவிட்டுள்ளார் என்பதற்கான ஆதாரம். இப்போது என்ன சொல்கிறீர்கள்… ? உடனடியாக திமுக கூட்டணியிலிருந்து வெளியேறப் போகிறீர்களா என்ன ? நீங்கள் வெளியேற மாட்டீர்கள் திருமா.
நீங்களும், உங்கள் இயக்கமும் வரலாற்றுத் தேவைகள். காலம் காலமாக ஒடுக்கப் பட்டுக் கிடந்த அடிமைச் சமுதயாயத்துக்கு விடிவெள்ளியாக உங்களைப் பார்த்தார்கள் தலித் மக்கள். சுதந்திர இந்தியாவில், தமிழகத்தில் தோன்றிய தலித் அமைப்புகள் அத்தனையும், தலித்துகளின் நலனை விட, தலைவர்களின் நலனை கருத்தில் கொண்டு செயல்பட்டு, தலித் மக்களை பெரிய கட்சிகளிடம் வாக்குகளாக அடகு வைத்து, அவர்களால் சுயலாபம் பெற்றதை மட்டுமே தமிழகம் கண்டிருக்கிறது.
ஆனால் முதன் முறையாக தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்ற முழக்கத்தோடு இந்த அமைப்பைத் தொடங்கி முன்னெடுத்த உங்களை தலித் சமூகம் பெரும் நம்பிக்கையோடு பார்த்தது. தேர்தலில் போட்டியிடுவது என்று முடிவெடுத்த பிறகு, ஜி.கே.மூப்பனாரிடம் எப்போது நீங்கள் தேர்தல் செலவுக்காக பணம் வாங்கினீர்களோ, அப்போதே நீங்கள் சறுக்கி விட்டீர்கள் திருமா. அதற்குப் பிறகு ஒவ்வொரு தேர்தலிலும், பாட்டாளி மக்கள் கட்சி போல நீங்கள் அணி மாறியது உங்கள் ஆளுமையை வீழ்த்தவே செய்தது. ஆனால் அணி மாற வேண்டிய நேரத்தில் அணி மாறாமல் இருந்தது உங்கள் ஆளுமையை மேலும் அதல பாதாளத்திற்கு தள்ளியது மட்டுமல்ல, நன்றாக வளர்ந்து வந்த ஒரு இயக்கத்தை மிகப் பெரிய பின்னடைவுக்கு தள்ளி விட்டீர்கள்.

நீங்கள் பேட்டியில் கூறியது போல, உங்களுக்கு அதிமுகவிடமிருந்து அதிகார பூர்வமாக அழைப்பு வரவில்லையா என்ன ? மனசாட்சியோடு பேசுங்கள் திருமா…. எத்தனை சக்திகள் உங்களை அதிமுக அணிக்கு அழைத்து வர உழைத்தார்கள் என்பது உங்களுக்கு தெரியாததா என்ன ? பல்வேறு நபர்களும், அமைப்புகளும், காவல்துறை அதிகாரிகளும், உங்களை அதிமுக அணிக்கு அழைத்து வருவதற்காக உழைத்தது சவுக்குக்கே தெரியுமா.... உங்கள் கட்சியில் உள்ள நிர்வாகிகளையே கேட்டுப் பாருங்கள். அதிமுகவிலிருந்து உங்களுக்கு எத்தனை முறை தூது வந்தது என்பதை மறைக்காமல் கூறுங்கள்.
உங்கள் வீழ்ச்சிக்கான காரணம் எது என்பதை நன்றாக ஆராய்ந்து பாருங்கள். உங்கள் கட்சி எம்.எல்.ஏ ரவிக்குமார், தனது சுயலாபத்திற்காகவும், கருணாநிதி மீது அவருக்கு இருந்த அபிமானத்திற்காகவும் உங்களை எப்படி வசியப்படுத்தி, உங்கள் சிந்தனையை முடக்கி வைத்திருந்தார் என்பதை சற்றே சிந்தித்து பாருங்கள் திருமா…. அவர், கடந்த ஆட்சிக் காலத்தில் நெடுஞ்சாலைத் துறை மற்றும், மருத்துவத் துறையில் எத்தனை ட்ரான்ஸ்பர் ஆர்டர்கள் பெற்றார் என்பதை விசாரித்துப் பாருங்கள். கனிமொழியோடு சேர்ந்து எத்தனை ஊழல்களில் ஈடுபட்டார் என்பதை விசாரித்துப் பாருங்கள். எப்படிக் குறைந்து மதிப்பிட்டாலும், இவருக்கு 50 கோடி சொத்துக்கள் இருக்கும் என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள். ரவிக்குமாருக்கு உங்கள் கட்சிக்குள்ளாகவே எத்தனை எதிர்ப்பு இருக்கிறது என்பதை சற்றே விசாரித்துப் பாருங்கள். இது போல ஒரு சிலர் சம்பாதிப்பதற்காக, லட்சக்கணக்கான தொண்டர்களின் அபிலாஷைகளை அழித்து விட்டீர்களே திருமா ?

ஒரே ஒரு விஷயத்தை மட்டும் நினைவில் வையுங்கள் திருமா….. தலித் சமூகத்தை இந்த சமுதாயம் என்றுமே ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. அது திமுகவாக இருந்தாலும் சரி, அதிமுகவாக இருந்தாலும் சரி. தலித் என்பவன் தலித் தான். மேடையில் அமர்ந்து உங்களோடு அளவளாவுவார்கள். கை பிடித்து போட்டோவுக்கு போஸ் கொடுப்பார்கள். ஆனாலும், மனதில் வன்மத்தை வைத்திருப்பார்கள். உங்கள் வாக்குகளை பெற்றுக் கொண்டு, உங்களுக்கு அதிகாரம் ஒரு நாளும் வந்து விடாதபடி பார்த்துக் கொள்வார்கள்.
இதை எதிர்த்துப் போராடுவது உங்கள் கையில்தான் இருக்கிறது திருமா… உங்கள் கட்சியில் உள்ள புல்லுருவிகளையும், கட்டப்பஞ்சாயத்து செய்யும் நபர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுங்கள். கட்சியை அடி மட்டத்திலிருந்து வளர்த்து எடுப்பதற்கான அனைத்து வேலைகளையும் செய்யுங்கள். அசைக்க முடியாத சக்தியாக வளருங்கள். அதிகாரம் உங்கள் காலடியில் வரும்.
உங்கள் மீது சவுக்குக்கு கடும் கோபம் உண்டு திருமா….. ஈழத் தமிழருக்கு ஆதரவு கொடுத்துக் கொண்டு ஈழத் தமிழரை அழித்த காங்கிரசோடு கூட்டணி சேர்ந்ததை ஒரு நாளும் மன்னிக்க முடியாது.
ஆனாலும், ஒடுக்கப் பட்ட மக்களுக்கு இன்று வேறு நல்ல தலைவர்கள் இல்லை திருமா. ஒடுக்கப் பட்ட மக்களுக்கு அதிகாரம் வேண்டும். அவர்கள் கைதூக்கி விடப் பட வேண்டும். இன்றும், சாவுக்கு மேளம் அடித்துக் கொண்டும், கிராமத்தில் மாட்டுத் தோலை சேகரித்துக் கொண்டும் இருக்கும் அந்த தலித் மக்களை பார்க்கையில் இவர்களுக்கு என்று விடிவு என்று ஏக்கமாக இருக்கிறது…. இவர்களை கைதூக்கி விடும் கடமை உங்களுக்கு இருக்கிறது திருமா….. அவர்களுக்குத் தான் நீங்கள் தலைவர். கட்டப்பஞ்சாயத்து செய்து சம்பாதிக்கும் வன்னி அரசுக்கும், கருணாநிதிக்கு ஜால்ரா போடும் ரவிக்குமாருக்கும் அல்ல….
இந்த தேர்தல் தோல்வியை ஒரு நல்ல திருப்பமாக எடுத்துக் கொள்ளுங்கள் திருமா…. இப்போதாவது திருந்துங்கள்.
|
Comments
இதுதான் இவன் தாரக மந்திரம். திருட்டு முட்டப்பு++
தெரியவில்லை? எப்ப்டி கூறலாம்? அரசாங்க ரகசியங்களை வெளியிட்டவன் யார்? நல்ல
பல செய்தவர் அவர்.பலரின் அன்புக்கு உடையவர்.ஆகவே எழுத்தில் கவனம் தேவை.
IILATHUKAGA NEENGA IRUNTHA UNNA VIRATHAM ENNA AACHU? UNGALAL VILAKKAM KODUKKA MUDIYUMA. KALAINGAR SONNAR MUDITHU KONDEERKAL, KALAINGAR THAMILANIN NAMBIKAI THUROKI 1.5 LAKSH MAKKALAI ALITHU KATTI VARALARIL IDAM PIDITHA BASTERED RAJA PAKCHA VIN CHALTRA, AVAR ORU ALAGANA TAMIL INA THUROGI
AVARITAM IRUNDHAL UNGALAIYUM, UNGAL INNATHAIYUM ALLITHUDUVAN.
POOVUDAN SERNTHA NAARUM MANAKKUM, NEENGAL SAKKADAIYUDAN SERNTHUVITEER, NEER MATTUM MANNAKKAVA MUDIYUM.
UNNA VIRATHAM ENDRAL ENNA THERIUMA THIRUMA, FREEDOM FIGHTER BHAGATH SINGH VARALARAI PURATTI PARUNGAL, NEEGALUM KALAIGARUM UNNA VIRATHAM IRUNDHU MAKKALAI YEMATRINIRKAL ADHARKUTHAN INDHA THERTHAL MUDIVU THIRUMA.
NEENGALUM THIRUNTHA MATTIRGAL, UNGAL ABIMANA THALAIVAN KALAINGARUM THIRUNTHA MATTIRGAL.
MAKKALAI MUTTAL YENDRU YEMATRINAL, NEENGALUM THUKKI VEESA PADUVEER UNGAL IYAKKA MAKKALAL
UNGAL THALIVARAL ENGAL ILLA MAKKAL THIRUPPI THARA MUDIYUMA.
M.G.R PATRI PESA UNGALAUKKU URIMAI ILLAI, AVAR THALAIVAR PRABAKARAN KU SEITHATHAI NADE ARIUM THIRUMA.
VIJAYAKANTH PATRI PESA UNGALUKKU NATHI ILLAI. INDRU VARAI CINEMA VUKAGA KUDA AVAR SINGALAM MANN THOTTATHUKUDA ILLAI, UNGAL MARI VIRUNTHUM SAPTATHILLAI.
NAAN KANNER MALGA SOLKIREN ILA MAKKALUKU THROKAM ILAITHAVAN SAAVU MIKAVUM KADUMAIYAGA IRUKKUM
IPPADIKU
ORU UNMAI THAMILAN (THAMILAN ENDRU SOLLA NAA KUSUKIRATHU NEENGALUM THAMILAN ENDRU SOLVATHAN)
பொத்தாம் பொதுவாக தலித்களைப் பற்றி நான் தவறாகப் பேசியதே இல்லை. நான் திட்டியது வி.சி கட்சியின் ரவுடித்தனத்தை. தலித்கள் திருமாவளவன் கட்சியில் சேரவேண்டும் என நீங்க ஆசைபடுவது தெரிகிறது. அவர்களுக்கு நல்லது செய்ய நினைத்தால், அவர்கள் முன்னாள் ஜனாதிபதி நாராயணன் மாதிரி, IAS அதிகாரி உமாசங்கர் மாதிரி வாழ்க்கையில் முன்னேறி வரவேண்டும் என்று சொல்லுங்கள் . தமிழன துரோகி திருமாவளவன் மாதிரி அல்ல.
நான் பாதிக்கப்பட்டவன ாக இல்லாத பொழுது, உங்கள் மேல் கேஸ் போட முடியாது. சட்டத்தில அடிப்படை அறிவே கிடையாதா உங்களுக்கு? வேணுமென்றால் தலித்களை உங்கள் மேல் கேஸ் போட சொல்லி நீங்களே சொல்லுங்கள். கோர்ட்டுக்கு சாட்சியாக வருகிறேன்.
இதுமாதிரி ஜாதிக் கலவரத்தை தூண்டரதுக்கு பதிலா நீங்க ஏதாவது தலித்களுக்கு நல்லது பண்ணலாமே?
Quoting வால்டர் வணங்காமுடி:
I regularly read your blogs.Good one.My suggestion to you.why cannot open web site call "bribe".
Any one gave bribe to any one let them register the name. No need of invetigation or autheticity.Just people free to record the voice.
சவுக்கு பாணியில் சொல்லட்டுமா? எதோ நோக்கு தான் வக்கீல் எல்லாரையும் தெரியும், சட்டம் தெரியும் என்று பிணாத்தாதேள். உஙகளிடம் நான் சவாலாகவே கேட்கிறேன். நீங்கள் தயவுசெய்து கேஸ் போடுங்கள். அப்போ தெரியும். "பொத்தாம் பொதுவாக ஒரு குறிப்பிட்ட சாதி சார்ந்த கட்சி ஆட்கள் முழுவதும் ரவுடிகள்" என்ற உங்கள் வாதம் செல்லுமா அல்லது "அனைத்து கட்சியிலும் இதுபோன்ற ஆட்கள் இருக்கும்போது ஒரு குறிப்பிட்ட சாதி சேர்ந்த கட்சியில் உள்ள அனைவரையும் ரவுடிகளாக சித்தரிப்பது கடுமையான ஆட்சேபனைக்குரிய து" என்ற என்வாதம் செல்லுமா என்று பார்ப்போம்? என்ன தயாரா? தீர்ப்பு என்ன என்பதை உத்தேசமாக ஊகிக்க முடியும். "இந்த சாதி வெறியனான அன்னியனை அரஸ்ட் பண்ணி உள்ளே தள்ளு" என்பார் ஜட்ஜ்
--குருஷேத்திர டுபுக்கு
நீ சொல்லி இருக்கற பதிவுல (எண் #86 ) நான் தலிதுன்கர வார்த்தையே உபயோகம் பண்ணலையேடா. நீ எழுதுனத படிச்சுட்டு எல்லாரும் பிராமணர்கள் மேல வெறி ஆகிடணும்னு எழுதறியா? நீ எழுதினத படிக்கற மத்த ஜாதிக்காரங்க எல்லாரும் பைத்தியகாரங்க, ஈசியா ஏமாத்திடலாம்னு நினைக்கிறியா?
நான் பொருக்கி, ரௌடி ந்னு போட்ட இடத்திலெல்லாம் தலித்,தலித் அப்டின்னு அர்த்தம் பண்ணியிருக்கியே , அவங்க உன் மேலதாண்டா கேஸ் போடனும்..
---
அன்னியன் ஓய்,
இதுக்கு என்ன அர்த்தம்னு தெரியுமா?
குறிப்பு: முடிந்தால் கருத்துக்கு பதில் சொல்ல முயற்சிக்கவும். அதை விட்டுவிட்டு நீர் வழக்கம் போல இந்த கமென்ட்டில் உள்ள (பொருத்தமிலாத) துண்டு துண்டான வரிகளை மட்டும் பொறுக்கி எடுத்து பதில் பின்னூட்டம் போட்டு, சொல்ல வந்த கருத்தின் மொத்த சாரத்தையும் மூடி மறைக்க முயன்று அசிங்கப் பட்டு நிற்க வேண்டாம்.
.......
அசிங்கப் பட்டுடீரே அன்னியன் ஓய். "கேஸ் போடுவேன், கேஸ்டிரபிலுக்கு மாத்திரை போடுவேன்" என்று காமெடி பண்றதை நீங்கள் எப்போதான் விடப் போறேளோ தெரியலை.
--குருஷேத்திர டுபுக்கு
எலித்தலைவன் , மகாகோழைன்னு சொன்ன ஒருத்தனுக்கு ஜால்ரா அடிச்சுண்டு சத்ரியன்னு பெருமையா சொன்ன என் மேல பழி சொல்றேளே, நீங்கோ குஞ்சாமணி மாதிரி ஒரு கொட்டைமணியா? நான் கரையேறிட்டேன்.. நீங்கோ கரை ஏறலையே ?
Quoting வால்டர் வணங்காமுடி:
நீ சொல்லி இருக்கற பதிவுல (எண் #86 ) நான் தலிதுன்கர வார்த்தையே உபயோகம் பண்ணலையேடா. நீ எழுதுனத படிச்சுட்டு எல்லாரும் பிராமணர்கள் மேல வெறி ஆகிடணும்னு எழுதறியா? நீ எழுதினத படிக்கற மத்த ஜாதிக்காரங்க எல்லாரும் பைத்தியகாரங்க, ஈசியா ஏமாத்திடலாம்னு நினைக்கிறியா?
நான் பொருக்கி, ரௌடி ன்னு போட்ட இடத்திலெல்லாம் தலித்,தலித் அப்டின்னு அர்த்தம் பண்ணியிருக்கியே , அவங்க உன் மேலதாண்டா கேஸ் போடனும்..
Quoting வால்டர் வணங்காமுடி:
I REQUEST SAVUKKU, NOT TO EXPECT ANYTHING GOOD FROM THIRUMA.
//இவனுங்க இப்ப ஆரம்பிச்சவங்க இல்ல.. எப்பவுமே மாமூல், ரவுடிசம் பண்றவங்கதான்.//
அந்நியன் ஒய்,
இதன் மூலம் தாங்கள் சொல்ல வருவது "விடுதலை சிறுத்தைகளும், புதிய தமிழகம் கட்சியிலும் உள்ள அனைத்து தலித்களும் ஆரம்பத்தில் இருந்தே ரவுடிகள். மேலும் அவர்களுக்கு இவர்களால் எந்த அந்தஸ்தும் கிடைக்கவில்லை." அப்படித் தானே? மோசமான சிந்தனை உமது சிந்தனை. இவர்கள் அனைவருமே கட்டபஞ்சாயத்து செய்பவர்கள் எனதற்கு என்ன ஆதாரம் நீர் வைத்திருக்கிறீர ்? உம்மை ஒரு தலித் ஆள் அடித்து விட்டார் என்பதற்காக அனைத்து தலித்களும் பொருக்கி என்று ஆகிவிடுமா? அப்படியானால் உம்ம ஆள் சுப்ரமணிய சாமி ஒரு தமிழின துரோகி என்பதால் நீரும் தமிழின துரோகியா? அவர்கள் கட்ட பஞ்சாயத்து செய்கிறார்கள் என்று சொல்லப் படுவது ஏன் என்று நான் சொல்லட்டுமா? இத்தனை காலம் நாம் தானே அதை செய்துவந்தோம், இப்போது இந்த கீழ்சாதி ஆள் செய்கிறானே என்ற எண்ணம் தானே? எங்கே உங்கள் மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள் பார்ப்போம். வி.சிக்கு முன்பு கட்ட பஞ்சாயத்து என்ற ஒன்று இல்லவே இல்லையா? இல்லை வி.சி மட்டும் தான் கட்ட பஞ்சாயத்து செய்கிறார்களா? நிரூபிக்க முடியுமா உங்களால்? எல்லா ஊரிலும் எல்லா கட்சியிலும் கட்ட பஞ்சாயத்து நடந்து கொண்டிருக்கிறது . அனைவரும் களையப் பட வேண்டியவர்களே. இதில் சாதி எங்கே இருந்து வந்தது? நீர் வழக்கம் போல உமது சாதி வெறியை காட்டி விட்டீர் ஒய்.
குறிப்பு: முடிந்தால் கருத்துக்கு பதில் சொல்ல முயற்சிக்கவும். அதை விட்டுவிட்டு நீர் வழக்கம் போல இந்த கமென்ட்டில் உள்ள (பொருத்தமிலாத) துண்டு துண்டான வரிகளை மட்டும் பொறுக்கி எடுத்து பதில் பின்னூட்டம் போட்டு, சொல்ல வந்த கருத்தின் மொத்த சாரத்தையும் மூடி மறைக்க முயன்று அசிங்கப் பட்டு நிற்க வேண்டாம்.
-- குருஷேத்திர டுபுக்கு
//ஒரு குண்டு பட்டு இறந்த ஷத்ரியனை//
அந்நியன் ஒய்,
என்ன தான் நீர் நடுநிலை வேஷம் போட்டாலும், சாவில் கூட "செத்தவன் சத்ரியன்" என்று பிரித்து பேசும் உங்கள் சாதி வெறி உங்களையும் மீறி பல் இளிக்கிறது. கார்கில் வீரனல்லவா நீர். எதிரியாள் பிராமணனாக இருந்தால் என்ன செய்வீர்? விட்டு விடுவீரோ? செத்தபிறகு அனைவரும் பிணம். இதில் கூட வர்ணம் பார்க்கும் நீரெல்லாம் என்ன பிறவியோ?
-- குருஷேத்திர டுபுக்கு
இந்த ரீல் எல்லாம் வேற எங்கயாவது பொய் சுத்துங்க.. விடுதலைச் சிறுத்தைகளுக்கு பூவை மூர்த்தியார்னு ஒருத்தன் தலைவர இருந்தப்பவே, அவன் பேரை சொல்லி கலாட்டா செஞ்ச பொறுக்கியை நான் அடிச்சிருக்கேன் . அதுக்கு எத்தனை ரவுடிகளை தெரியுமா அந்த மூர்த்தி அனுப்பினான்? இவனுங்க இப்ப ஆரம்பிச்சவங்க இல்ல.. எப்பவுமே மாமூல், ரவுடிசம் பண்றவங்கதான்.
Quoting கொக்கரக்கோ:
Excellent question.. When a person wants to split Tamilians by caste, how can we believe him to strengthen the Tamils? It is directly weakening us.
என்ன சொல்றீங்க? கருணாநிதி, அன்பழ்கன்லாம் கட்டைப் பஞ்சாயத்து பண்ணினது 40 வருடத்துக்கு முந்தி. அப்போ சவுக்கு பிறக்கவேயில்லை. அவர் பொய் அதை தட்டி கேட்டிருக்க வேண்டும் என்கிறீர்களா?
ஆர்.கே. நாராயணன் ஜனாதிபதியான போது தலித் என்று பயப்பட்டர்களா யாராவது? ராசா தலித் என்பதால் ஊழல் பழி சொல்கிறார்கள் என்று சொன்ன கருநாய்நிதிக்கு ம் உங்களுக்கும் என்ன வித்தியாசம்?
திரு . சவுக்கு ஆசிரியர் அவர்களுக்கு,
யாரோ ஒரு விஷமி என்னுடைய anniyan என்ற பெயரைப் பாவித்துக்கொண்ட ு எழுதியதால் நான் மாற்றிக்கொண்டு "கார்கில் வீரன்" என்ற பெயரில் எழுத ஆரம்பித்தேன். இவர் மீண்டும் இந்தப் பெயரையும் பாவிக்க ஆரம்பித்து இரண்டு பெயர்களையும் பதிவில் பிரயோகித்து எழுதுகிறார். இவரின் நோக்கம் தூற்றுவதும், நான் எழுதிய பதிவுகளுக்கு உள்நோக்கம் கற்பிப்பதுமாக இருக்கக் கூடும்.
எனக்கு விடுதலைப் புலிகளின் மேலும், தலைவர் பிரபாகரன் மேலும் மிகுந்த பிரியம் உண்டு. எ.கா. சமீபத்தில் எழுதிய பதிவில் கூட "சினிமாவில் ஒரு கொலை செய்த வில்லனையே ஹீரோ கொல்கிறான், நாம் கைதட்டுகிறோம், ஆயிரக்கணக்கில் தமிழர்களைக் கொன்ற ராஜீவைக் கொன்றதில் என்ன தவறு?" என்று கேட்டிருந்தேன்.
திரு. சவுக்கு அவர்கள் எளிதாக இந்த விஷமியை மூலம் கண்டு பிடிக்க இயலும். செய்வீர்களா? இதை தவிர்க்க உங்கள் யோசனை என்ன?
ஒரு குண்டு பட்டு இறந்த ஷத்ரியனை , மரணமில்லாப் பெருவாழ்வு பெற்ற வீரர்களை எலி, எலித்தலைவன் என்று சொல்லும் இந்த ஈனப் பிறவியின் பின்னூட்டங்களைப ் பதிவு செய்ய வேண்டாம்.
-கார்கில் வீரன்
Please watch the above interview of Thamizhariviman ian.... see the local politicians view on thamizh eezham....
If you are a true "Hindu" then you will agree the comment from Savukku regarding Saibaba (thiruttu saibaba). Still you don't agree then go to youtube and type "Saibaba Scam" and make a decission today. Always i am against of "Periyaar", but sometime i am thinking that, he has to come back to do little more work left.
ரஜினி ஓட்டுப் போட்டது மதியத்திற்கு மேல். அவர் ஓட்டு போட்டு, அதை டிவியில காட்டி, அதை பார்த்து ரசிகர்கள் ஓட்டு போட்டு...யப்பா தலையை சுத்துது, திருமா...
//எந்த அணியில் இருக்கிறோம் என்பதை நாங்கள் தீர்மானிப்பதை விட பெரிய கட்சிகள்தான் அதைத் தீர்மானிக்கின்ற ன.//
சொந்த அறிவு இல்லைங்கிறாரா?
//ஈழ விஷயத்தில் காங்கிரஸுக்கு என்ன கொள்கையோ அதே கொள்கைதான் பி.ஜே.பி.க்கும், அ.தி.மு.க.விற்கும். நாங்கள் தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணியில் இருந்தாலும், காங்கிரஸை எந்த இடங்களில் எல்லாம் விமர்சிக்க வேண்டுமோ, அங்கெல்லாம் விமர்சித்திருக் கிறோம்.//
அடங்கொன்னியா...வெக்கமே இல்லையா?
// ஷுட்டிங்குக்கு போவதை விட்டு விட்டு, கருணாநிதிக்கு ஜால்ரா போடும் விழாவுக்கு கட்டாயப் படுத்தி வரவழைத்தால், வந்து கை தட்டுவதற்கு அவர்கள் என்ன திருமாவளவனா ?//
அதானே...
கிட்டத்தட்ட அந்த மூணு நோய்க்கிருமிகளு ம் விரட்டுப்பட்டுவ ிட்டதாத்தான் தேர்தல் சொல்லியிருக்கு. இதுக்கு மரியாத குடுத்து இந்த நோய்கள் போயிட்டா மரியாதயா இருக்கும் இல்லாங்காட்டி நீங்க சொன்ன மாதிரி அடிசு வெரட்ட வேண்டியதுதான்.
நீ என்ன பெரிய மயிரா டா? ராஜபக்சே கால நக்குன ஈன பிறவி தான டா நீ? நாலு ரவுடிகள வெச்சு கட்சி நடத்தற நாயி.. நீ எல்லாம் தலித் களுக்கு தலைவனா..? நாயி நாயி...
1)கட்சியை மறு கட்டமைப்பு செய்ய வேண்டும்.
2) கூட்டணிகள் பா.ம.க. தனத்துடன் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
3)காணும் இடங்களில் எல்லாம் ஈழத்தின் தலை மகனே, வாழும் சே குவெராவே(??) போன்ற மொக்கை விளம்பிர தத்தை அமைக்கும் அம்பிகளை கண்டு தூர ஓட வேண்டும்.
--கார்கில் வீரன்
RSS feed for comments to this post