முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
மத்திய அரசின் மோசடி! தினமணி தலையங்கம் அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 16
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
திங்கட்கிழமை, 27 ஜூன் 2011 09:35



ஐந்தாண்டுக்கு ஒரு முறை தேர்தல் வரும், இந்த ஆட்சியைத் தூக்கி எறியலாம் என்கிற நம்பிக்கையை மக்களாட்சி முறை அளிப்பதால், மக்கள் மனதிற்குள் கொதித்தபடி விலைவாசி ஏற்றத்தைச் சகித்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையில் வெந்த புண்ணிலே வேலைப் பாய்ச்சும் விதமாக இப்போது சமையல் எரிவாயுவின் விலையையும், டீசல் மற்றும் மண்ணெண்ணெயின் விலையையும் உயர்த்தி ஒட்டுமொத்த நடுத்தர வர்க்க, வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள மக்களின் வயிற்றெரிச்சலையும் கொட்டிக் கொண்டிருக்கிறது மத்திய அரசு.

 

மே மாதம் இரண்டாவது வாரத்தில் பெட்ரோல் விலையை அதிகரித்த போதே, யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே என்கிற கதையாய் விரைவிலேயே பெட்ரோலியப் பொருள்களின் அடுத்த கட்ட உயர்வை எதிர்பார்த்தோம். அப்போதே நமது தலையங்கத்தில் இந்த விலைவாசி உயர்வு என்பது தனியார் பெட்ரோலிய நிறுவனங்களைக் காப்பாற்றுவதற்கும், அவர்கள் லாபம் சம்பாதித்துக் கொழிப்பதற்கும் மத்திய அரசால் நடத்தப்படும் நாடகம் என்பதையும் குறிப்பிட்டிருந்தோம்.

 

மே மாதம் பெட்ரோல் விலை உயர்வால் விற்பனை சற்றும் பாதிக்கப்படவில்லை என்கிற புள்ளிவிவரம் தந்த தைரியத்தில் இப்போது சமையல் எரிவாயு, டீசல், மண்ணெண்ணெய் விலையை உயர்த்தி இருக்கிறார்கள். இதனாலும் விற்பனை நிச்சயமாகக் குறையாது என்று நம்பலாம். ஆனால், இந்த உயர்வுகளால் ஏற்படும் அதிகப்படி செலவை ஈடுகட்ட மாதச் சம்பளம் பெறும் சராசரி நடுத்தரவர்க்கத்தினர் அனுபவிக்க இருக்கும் கஷ்டங்களைப் பற்றி ஏ.சி. அறைகளில் இருந்தபடி திட்டமிடும் அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் என்ன தெரியும்?

 

குறைந்த கட்டணத்தில் நவீன வசதிகளுடன் கூடிய பொதுப் போக்குவரத்தை உறுதி செய்துவிட்டு, இவர்கள் பெட்ரோல் கட்டணத்தை பத்து மடங்கு அதிகரித்தாலும் யாரும் கவலைப்படப் போவதில்லை. ஐந்து நிமிஷத்துக்கு ஒரு முறை எந்தப் பகுதிக்குச் செல்ல வேண்டுமானாலும் பஸ் வசதியோ, மெட்ரோ ரயில் வசதியோ இருந்தால் சொந்த வாகனம் ஏன் தேவைப்படப் போகிறது? இன்றைய நிலைமை அப்படியா இருக்கிறது?

 

சொந்த வாகனம் இருப்பது என்பது ஒரு சமுதாய அந்தஸ்தாகி விட்டிருக்கிறது. பத்தாம் வகுப்புத் தேர்வில் வெற்றி பெற்றதும் குழந்தைகளுக்குக் கைக்கடிகாரம் என்றிருந்தது போய் இப்போது இரு சக்கர வாகனம் என்கிற நிலைமைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம். இன்றைய நடுத்தர வருவாய்ப் பிரிவினர் குறைந்தபட்சம் ஒரு 50சிசி வாகனமாவது வைத்திருந்தால்தான் அலுவலகம் சென்று வரவோ, குழந்தைகளைப் பள்ளிக்கு அழைத்துச் சென்று கூட்டி வரவோ முடிகிறது.

 

இந்த வாகனங்களை வாங்கி அதற்கு மாதா மாதம் தவணை அடைப்பது போதாதென்று, இப்போது அதிகப்படியான பெட்ரோல் செலவும் என்று மனதிற்குள் அழுது கொண்டிருந்த நிலையில் சமையல் எரிவாயு எண்ணெய் விலையையும் கூட்டி, டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய உபயோகப் பொருள்களின் விலையையும் அதிகரித்து மத்திய அரசு தனது மக்கள் விரோதப் போக்கை வெளிப்படுத்தி இருக்கிறது. இதற்குக் காரணம் என்ன என்று ஆராய்ந்தால் பல விடை கிடைக்காத கேள்விகள் எழுகின்றன.

 

கச்சா எண்ணெய் விலை என்பது உலகில் உள்ள எல்லா நாடுகளுக்கும் ஒன்றாகத்தானே இருக்கும்? அப்படி இருக்கும்போது, அமெரிக்காவில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.45க்கு விற்கப்படும்போது இந்தியாவில் மட்டும் ரூ.70க்கு விற்கப்படுவானேன்? அரபு நாடுகள் அமெரிக்காவுக்கு சலுகை விலையில் கச்சா எண்ணெயை விற்பனை செய்கின்றனவா? நமது நட்பு நாடுகள் என்று அரபு நாடுகளைக் கூறுகிறோமே, ஆனால், இந்த விஷயத்தில் நாம் வஞ்சிக்கப்படுகிறோமா?

 

அது போகட்டும், தனியார் பெட்ரோலிய நிறுவனங்கள் உலகச் சந்தை நிலவரத்தில் அவர்களே கச்சா எண்ணெயை வாங்கி சுத்திகரித்து அவர்களுக்குக் கட்டுப்படும் விலைக்கு விற்றுக் கொள்ளட்டுமே, எதற்காக நமது அரசு அவர்களுக்காகக் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து கொடுக்க வேண்டும்? நமது எண்ணெய்க் கிணறுகளில் இருந்து எடுக்கப்படும் கச்சா எண்ணெய்க்கு உலக மார்க்கெட் விலையைத்தானே நாம் தனியார் நிறுவனங்களிடமிருந்து பெற வேண்டும்? ஏன், குறைந்த விலைக்குக் கொடுக்கிறோம்?

 

நாம் பெட்ரோலுக்கும், டீசலுக்கும், சமையல் எரிவாயுவுக்கும், மண்ணெண்ணெய்க்கும் தரும் விலையில் கணிசமான அளவு, ஏறத்தாழ 40%, சுங்க வரி, கலால் வரி, விற்பனை வரி, "செஸ்' எனப்படும் சிறப்புக் கட்டணம் என்று பெறப்படுகிறது. இப்போது மத்திய அரசு தாங்கள் எங்களுக்குக் கிடைக்கும் சுங்க வரி மற்றும் கலால் வரியிலிருந்து சற்று குறைத்துக் கொள்கிறோம், மாநில அரசுகள் தங்களது விற்பனை வரியைக் குறைத்துக் கொள்ளட்டும் என்கிறது. நன்றாக இருக்கிறது இந்த நியாயம்!

 

பெட்ரோலிய நிறுவனங்கள் தாங்களே விலை நிர்ணயம் செய்து கொள்ளலாம் என்கிற மத்திய அரசின் முடிவே ஒரு மிகப்பெரிய மோசடி. கச்சா எண்ணெயின் விலை உயர்ந்தால் பெட்ரோலியப் பொருள்களின் விலை உயரும், குறைந்தால் விழும் என்கிற ஆசை காட்டி மக்களை ஏமாற்றி விட்டு, தனியார் பெட்ரோலிய நிறுவனங்கள் லாபம் அடைய மத்திய அரசு செய்யும் சதிதான் இந்த விலை நிர்ணய முறை. முதலில், இப்போதைய விலை நிர்ணய முறைக்கு முற்றப்புள்ளி வைக்க வேண்டும்.

 

நமது பிரதமர் மன்மோகன் சிங்குக்கும், நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கும், திட்டக் கமிஷன் உறுப்பினர்களுக்கும் இப்போதெல்லாம் ஒரே ஒரு கவலைதான். இந்தியாவின் வளர்ச்சி விகிதம் இரண்டு இலக்கத்தில் இருக்க வேண்டும் என்பதுதான் அது. விலைவாசி உயர்வு 9.13% இருப்பதைப் பற்றியோ, அது மேலும் அதிகரிக்குமே என்றோ அவர்கள் கவலைப்படவில்லை. இவர்கள் என்ன பொருளாதாரம் படித்துத் தேர்ந்திருக்கிறார்களோ தெரியவில்லை.

 

பொருளாதார வளர்ச்சி உயர்வது கிடக்கட்டும். விலைவாசி குறைவதற்கு வழிகாணுங்கள். மக்கள் தெருவில் இறங்கிப் போராடத் தலைப்பட்டால், சட்டம் ஒழுங்குப் பிரச்னையை அரசு விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலைமை ஏற்படலாம்!

 

 

நன்றி தினமணி

 

Comments  

 
0 #19 Suryan 2011-07-04 17:01
இப்போ கவலைப் பட்டு ஒன்னும் பண்ண முடியாது. ஆட்சியில் உக்காரவைதது நாம்... தி.மு.கவுக்கு மட்டும் கொடுத்த அடியை இந்த ஆட்களுக்கு கொடுத்தால் மட்ட்டுமே தப்பிக்க முடியும்...
Quote
 
 
0 #18 Iyyavu 2011-07-03 09:49
ஏன் அடிமைப்பட்டது என்பது மிகவும் தெள்ளத்தெளிவு. புத்திசாலியோ இல்லையோ ஆனால் அவன் சொன்னதே வேதவாக்காக இந்த லாபம்.
Quote
 
 
0 #17 Iyyavu 2011-07-03 09:37
" செத்தாலும் பரவாயில்லை தங்களுக்கு நல்லா இருக்கனும் உலகின் பட்டியலில் பெயர் முன்னேர வேண்டும்" என்ற நயவஞ்சகத்தனத்தை வெட்ட வெளிச்சமாக்கியு ள்ளது
Quote
 
 
0 #16 leelavinoth 2011-07-02 22:57
Manmohan is sucking all the public money to curb inflation, it is a cheap monetary policy.
Quote
 
 
-1 #15 Annnathe 2011-06-29 10:46
இந்த நாடும் நாட்ட மக்களூம் நாசமாய் போகட்டூம்... ஹா ஹா ஹா...
Quote
 
 
0 #14 Krishnan_Singapore 2011-06-29 05:38
Hi Shankar,

Madras passport (many working persons are malayalis) office , for issue the passport they are asking money illegaly.
please can you write about this
Quote
 
 
0 #13 Vazhuthi 2011-06-28 22:52
2008 இல் கச்சா எண்ணை விலை 138 இருந்த போது இல்லாத விலை ஏற்றம் 2011 இல் ! நாம் முட்டாள்கள் ! சும்மா அன்னா அசாரெவின் படம் நமக்கு போதும் ! http://www.nyse.tv/crude-oil-price-history.htm
Quote
 
 
0 #12 Vazhuthi 2011-06-28 22:48
மககள் பாடு திண்டாட்டம் ! எந்த அரசு வந்தாலும் மக்கள் பிரச்சனைகள் தீராமல் இருப்பதற்க்கு காரணம் நமக்கு ஒரு நல்ல த்லைவர் கூட கிடையாது ! சிஙகபூருக்கு ஒரு லீ குவான் போல நமக்கு தலைவரும் கடசியும் கிடைத்தால் ஒழிய நமக்கு விடிவு கிடையாது !
Quote
 
 
-2 #11 துரை மணீ 2011-06-28 20:12
இந்த நாடும் நாட்ட மக்களூம் நாசமாய் போகட்டூம்... ஹா ஹா ஹா...
Quote
 
 
0 #10 prabha trichy 2011-06-28 17:41
ஸ்பெக்ட்ரமுக்கு ஒரு ராசா, காமன்வெல்த்துக் கு ஒரு கல்மாடி,ரிலையன் ஸுக்கு ?????

http://www.delhiscienceforum.net/telecommunications/433-from-2g-to-kg-india-mega-scams-a-neo-liberalism.html
Quote
 
 
-1 #9 jay 2011-06-28 12:18
I disagree. Indian govt doesn't have petroleum reserves like the US or the west to cause a dip in petrol prices. India is a tier-2 customer to Arab nations. How many people/corporations pay due taxes in India? Govt can't subsidize the petrol and even if they do can't sustain for more than few months/years. So petrol prices in India will closely follow the price of oil in the world markets. Govt should take this as an oppurtunity to invest in long term projects like drilling and exploration in large scale to bring self reliance to some level regarding oil prices.
Quote
 
 
0 #8 RajaMurugan. K 2011-06-28 12:18
Unless and until India is rid of the Chamchagiri Congress party and the dynasty rule of the Gandhi family,(either from the front or even more conveniently from the background without accountability, read... Sonia) India will never progress. What's even more worrisome is, with a weak and corrupt Congress at the helm, India will slowly be wiped out by losing territory to our hostile neighbours like Pakistan and China.
Quote
 
 
+3 #7 prabha trichy 2011-06-28 11:27
"நாட்டு மக்கள் செத்தாலும் பரவாயில்லை தங்களுக்கு கோடிகோடியாய் பணம் தரும் பெரும் தொழிலதிபர்கள் நல்லா இருக்கனும் உலகின் பணக்கார பட்டியலில் அவர்கள் பெயர் முன்னேர வேண்டும்" என்ற அரசியல் வாதிகளின் நயவஞ்சகத்தனத்தை வெட்ட வெளிச்சமாக்கியு ள்ளது
Quote
 
 
0 #6 காரியான் 2011-06-28 06:50
நம்மை ஏமாற்றுகிறான் என்று சொல்லாதிங்க நாம் ஏமாளிகளாக இருக்கிறோம்
Quote
 
 
+14 #5 Ravi 2011-06-27 21:46
இந்தியா ஏன் அடிமைப்பட்டது என்பது மிகவும் தெள்ளத்தெளிவு. வெள்ளைக்காரன் புத்திசாலியோ இல்லையோ ஆனால் அவன் சொன்னதே வேதவாக்காக இந்த ஜனநாயகத்திலேயே இத்தனை வாலாட்டிகள் இருக்கும் போது அந்த காலத்தில் எப்படி இந்த இந்தியன் இருந்திருப்பான் என்று விளங்குகிறது. வெள்ளையன் போய் கொள்ளையன் வந்ததுதான் இந்த சுதந்திரத்தின் லாபம். கொள்ளைக்கார காங்கிரஸ் ஒழிந்தாலொழிய இந்தியாவுக்கு விடிவே கிடையாது.
Quote
 
 
+3 #4 mughil 2011-06-27 20:20
(அகிலன்)இந்த மானங்கெட்ட காங்ரஸ் முதலாலிகலின் காலை சொரிவதர்கே முயர்ச்சிக்கிரத ு நடுத்தர வர்கமக்கலின் கஷ்டங்கலை கண்டுகொல்வதே இல்லை நன்றாக ஒன்ரை புரிந்து கொல்லுஙகல் தோழர்களே பெட்ரொலிய நிருவனம் என்ன சொல்கிரது என்றால் இவர்கலுக்கு நஷ்டம் இல்லை இழ்ப்பாம் ஒரு கலான்டிற்க்கு குரைந்தது 1000 கோடி லாபம்.ஆனால் இழப்பு என்றூ சொல்லி பொதுமக்கலின் வயிற்றீள் அடிக்கிறார்கல் இப்படியே போனால் கண்டீப்பாக மக்கள் மத்தியில் ஒரு போராட்ட குனத்தை இந்த மானங்கெட்ட கங்கிரஸ் உண்டு பன்னுவது உறூதி அதையே தான் நாம் எதிர்பார்கிரோம்
Quote
 
 
+15 #3 சாவுமணி 2011-06-27 12:34
"மண்" மோகன் சிங் & "பீ"சிதம்பரம்... "சாணி"யா !
Quote
 
 
+4 #2 Rajini venu 2011-06-27 11:45
INTHA CONGRESS NAYGAL AATCHIKKU VANTHALE ITHUTHAN PROBLEM. 65 VARUDANGALAGA KOLLAI ADITHA PANATHAI VELLAI PANAMAGA MATTRA ELLA PORULGALIN VILAI VASIYAYUM UYARTHIVIDUVARG AL. JUST THINK BEFORE 6 YEARS ALLTHE RATES OF THINGS AND LANDS COMMODITIES. BY INCREASING PETROLEUM PRICES THEY MAKING OTHER PRODUCTS PRICES. FCKG ASS HOLES
Quote
 
 
+34 #1 gs raaju 2011-06-27 09:55
அரசியல்வாதிகளுக ்கு கட்ச்சா எண்ணை மூலம் கிடைக்கக் கூடிய கமிஷன் தான் முக்கியம்.மக்களைப்பற்றிய கவலை ஏதும் அவர்களுக்கு இல்லை. தத்தம் மக்களின் சுயனலத்தை மட்டுமே பார்கிறார்கள்.பெட்றோலியம் அமைச்சராக சிறிது காலம் இருந்த்தாலே போதும்.கோடிகண்க்கில் சம்பாதித்து விடலாம்.சோனியாவுக்கு கொடுத்தது போக மிச்சம் எல்லாம் இவர்களுக்கு லாபம்.சுவிஸ்பேங்கில் போட்டு விடலாம். மக்களுக்கு ஓட்டுக்கு500 கொடுத்தால் ஓட்டுப்போட்டுவி ட்டு போய்விடப்போகிறா ர்கள்.மக்களுக்கு வேறு என்ன வேண்டும் அந்த 500+குவார்டர் போதுமானது.
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 78 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday7405
mod_vvisit_counterYesterday9398
mod_vvisit_counterThis week77146
mod_vvisit_counterLast week78106
mod_vvisit_counterThis month199746
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12721865